(வெளி 17:1-18)
“ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளுளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான். நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப் பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.”
விளக்கவுரை
வசனம் 1: ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே.
அதிகாரம் 17ஐ விளக்கமாக புரிந்து கொள்ள இவ்வசனங்களின் காணப்படும் மகவேசி யார், பெண் யார், மிருகம் யாரென தெரிந்து கொள்வது முக்கியமானதாகும். வசனம் 1 “மகாவேசி” எனக் குறிப்பிடுவது உலகின் மதங்களைக் குறிக்கிறது, “பெண்” என்பது உலகைக் குறிக்கிறது. மறுபுறம் “மிருகம்” என்பது அந்திகிறிஸ்துவைக் குறிக்கிறது “திரளான தண்ணீர்கள்” என்பது பிசாசின் போதனைகளைக் குறிக்கிறது “வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே” என்ற சொற்றொடர் சாத்தானின் அநேக போதனைகளின் மீது அமர்ந்திருக்கும் உலக மதங்களை கர்த்தர் நியாயந்தீர்ப்பார் என நம்மிடம் கூறுகிறது.
வசனம் 2: அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
முதல் வசனத்தில் “காமவிகாரம்” என்பது கர்த்தரை நேசிப்பதையும் விட உலகத்தை அதிகம் நேசிப்பது என்று பொருள்படும். உலகில் காணப்படுபவைகளைப் போல் உருவங்களைச் செய்து கர்த்தரைப் போல் அவற்றை ஆராதிப்பதும் நேசிப்பதும் காமவிகாரமாகும்.
“பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே” என்ற மேற்கண்ட சொற்றொடர் உலகின் தலைவர்கள் உலக மதங்களைப் பின்பற்றும் ஒரு வாழ்வை வாழந்தார்களெனவும், இத்தகைய உலக மதங்கள் அளிக்கும் பாவங்களைப் பின்பற்றி உலக சம்பந்தமான மனிதர்களாக அனைவரும் வாழ்ந்தனரெனவும் இது பொருள்படும்.
வசனம் 3: ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
“சிவப்புநிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்” என்ற சொற்றொடர் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி அவர்களைக் கொல்வதற்காக இவ்வுலகின் மக்கள் தம்மிருதயங்களை அந்திகிறிஸ்துவின் இருதயத்துடன் ஐக்கியமாக்குவர் என்று நம்மிடம் கூறுகிறது. உலகப்படியான மக்கள் கர்த்தரின் எதிரியின் ஊழியர்களாக மாறி அந்திகிறிஸ்து கூறுவதற்கேற்ப செயல்படுவர். கர்த்தருக்கெதிராக நிற்கும் அந்திகிறிஸ்துவே மிருகமாவான். அந்திகிறிஸ்து அநேக அரசர்களை ஆளுவான். அவன் உலகின் அநேக நாடுகளையும் ஆளுவான்.
அவன் மூர்க்கனாக இருப்பதினாலே கர்த்தரை து¡ஷிக்க மூர்க்கத்தனமான வார்த்தைகளைக் கூறி தானே கர்த்தர் என்றோ அல்லது இயேசு கிறிஸ்து என்றோ கூறுவதுடன் கர்த்தரைப் போலத் தன்னைத் தானே உயர்த்துவான். அவனுடைய வல்லமையானது உலகின் அனைத்து ராஜாக்களையும் நாடுகளையும் அடைந்து அவற்றை ஆளும்.
“ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும்” என்ற சொற்றொடரில் “ஏழுதலைகள்” என்பது உலகின் ஏழு தலைவர்களையும், “பத்து கொம்புகள்” என்பது உலகின் பத்து நாடுகளையும் குறிக்கிறது.
வசனம் 4: அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
“அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு” என்ற சொற்றொடரில் இவ்வுலகின் மதங்கள் அந்திகிறிஸ்துவுடனே கூட திட்டமிட்டு அவனைத் தமது ராஜாவாக எண்ணுவர். அவனை எதிர்த்து நிற்கும் அனைவரையும் மரணத்தண்டனைக்குள்ளாக்குவது சரியானது என எண்ணுவதுடன் பரிசுத்தவான்களுக்கு எதிரான செய்கையில் ஒன்றாக அவர்களைக் கொல்லுவர்.
இந்த உலகை சந்தோக்ஷத்தின் நித்தியமான ராஜ்யம் என அலங்கரித்து காட்ட உலகின் தங்கத்தினாலும் விலையேறப்பட்டக் கற்களாலும் முத்துக்களாலும் தம்மை மிகவும் அழகானவர்களாக அலங்கரித்துக் கொள்வர். இவ்வுலகில் வாழும்போது மாமிசப் படியான எத்தனை இன்பங்களை அனுபவிப்பது என்பதிலேயே அவர்களின் முழு விசுவாசமும் இருக்கும். கர்த்தர் இவ்வுலகின் மக்களைப் பார்க்கும் போது இவ்வுலகம் அழுக்கான பாவங்களால் நிறைந்திருப்பதைக் காணுவதால் அவர்களெல்லாம் மிகவும் அசிங்கமானவர்களாக காணப்படுவர்.
வசனம் 5: மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
இவ்வுலகின் மதச் சம்பந்தப்பட்ட மக்கள் தம்மை அழகிகளாக அழகுபடுத்த முயன்றாலும் அவர்கள் மகாவேசியாகவே வெளிப்படுத்தப் படுவார்கள். ஒருபுறம் அவளின் பெயர் “மகா பாபிலோன்” என அழைக்கப்படுவது மேன்மைப் பாராட்டுவதையும், வேசித் தனத்தையும், மகாவேசியின் நெருங்கும் தன்மையையும் காட்டுகிறது. அதே நேரம் மறுபுறம் “தாய்” என்ற சொல்லானது அந்திகிறிஸ்துவின் எல்லாப்படையினரும் உலகிலிருந்து உருவானதையும், உலகமே அனைத்து வேசித் தனங்களுக்கும் கெட்ட நடத்தைகளுக்கும் மூலமாகும் என்பதையும் காட்டுகிறது.
இவ்வுலகமானது அழகிய பளபளப்பான நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், கர்த்தருக்கு எதிராக நின்று உலக மக்களின் இருதயங்களில் செயல்புரியும் அந்திகிறிஸ்துவானவன் அவர்களின் தாயாக செயல்படுவான். நம்முடைய தேவனாகிய கர்த்தர் தனது ஏழு பாத்திரங்களின் வாதைகளால் அவர்கள் அனைவரையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளார்.
வசனம் 6: அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
இயேசு கிறிஸ்து அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை “பரிசுத்தவான்கள்” என்ற சொல் குறிப்பிடுகிறது. இத்தகைய விசுவாசமுடைய மக்களை ஆலய வரலாறு முழுவதும் காணலாம். “இயேசுவினுடைய சாட்சிகளின்” என்ற சொற்றொடர் பரிசுத்தவான்கள் அனைவரிலும் இயேசுவே தேவகுமாரனென்றும் தம்முடைய இரட்சகரென்றும் அழைத்தவர்களையும் தம்முடைய விசுவாசத்தைக் காக்க இரத்த சாட்சியாக மரித்தவர்களையும் குறிக்கிறது.
இவ்வுலகச் சம்பந்தமான மதவாதிகளே பரிசுத்தவான்களைத் துன்புறுத்தி அவர்களைக் கொல்லுவரென இவ்வசனம் கூறுகிறது. அந்திகிறிஸ்துவின் படைவீரர்களாக அவர்கள் இத்தகைய தீய காரியங்களைச் செய்வர்.
தான் அப்பெண்ணைக் கண்ட போது “நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என யோவான் இங்கு கூறுகிறான். இவ்வுலகம் ஆர்வமான உலகமாகும். இவ்வுலகிற்குத் தீங்கு விளைவிக்கும் எதனையும் பரிசுத்தவான்கள் செய்ததில்லை. ஆயினும் கூட இவ்வுலகம் அந்திகிறிஸ்துவுடன் சேர்ந்து அநேக பரிசுத்தவான்களைக் கொல்லும். இது ஆச்சரியமாயில்லை என்றால் இது எத்தகையது? இவ்வுலகின் மக்களால் இவையெல்லாம் பரிசுத்தவான்களின் மீது அமர்த்தப்படும். இவ்வுலகம் அந்திகிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மக்கள் அவனின் ஊழியர்களாய் இருப்பதாலும் அவர்கள் பரிசுத்தவான்களைப் பிடித்துக் கொல்லுவர்.
ஆகவே அவர்கள் முற்றிலும் புதிதானவர்களாக நமக்குக் காணப்படுவர். உலக மக்களை நாம் கூர்ந்து நோக்குகையில் அவர்கள் வித்தியாசமானவர்களாக உங்களுக்குத் தோன்றவில்லையா? கர்த்தரின் சாயலாக மக்கள் உருவாக்கப்பட்டிருக்கையில் அவர்கள் எப்படி அந்திகிறிஸ்துவின் ஊழியர்களாகவும் கொலை செய்யும் மக்களாயும் ஆயினர். எந்த மனிதராயிருந்தாலும் கர்த்தரை எண்ணிலடங்கா மனிதர்கள் விசுவாசிக்காதது ஏன்? இவ்வுலகம் சாத்தானின் ஊழியன் என்பதே இதன் காரணம்.
வசனம் 7: அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளுளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
இங்கு ஸ்திரீ என்பது இவ்வுலகின் மக்களைக் குறிக்கிறது. அந்திகிறிஸ்துவாகிய மிருகம் இவ்வுலகின் எல்லா அரசர்களையும் அதன் நாடுகளையும் ஆளுவான் என்றும், அவர்களின் மூலமாக கர்த்தரை எதிர்த்து நிற்பதையும் பரிசுத்தவான்களைத் துன்புறுத்துவதையும் அவர்களைக் கொல்லுவதையும் அவன் நிறைவேற்றுவான் எனவும் இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. “மிருகத்தினுடைய இரகசியத்தையும்” என்பது அந்திகிறிஸ்துவின் அடையாளத்தையும், அவன் சாத்தானின் கட்டளைகளுக்கேற்ப செயல்படுவதையும் குறிக்கிறது. இவ்வுலகின் நாடுகளை அவன் தனதாக்குவான்.
இவ்வுலகின் மக்கள் அந்திகிறிஸ்துவுடனே கூட திட்டமிட்டு சாத்தானின் கருவிகளாகி தேவனுடைய மக்களில் அநேகரைக் கொலை செய்வர். இவ்வுலகமும் அந்திகிறிஸ்துவும் சாத்தானின் கருவிகளாவர். இப்போது அவர்கள் நம் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மகா உபத்திரவத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்த பிறகு அவர்கள் தோன்றி பரிசுத்தவான்களைக் கொல்லுவார்கள்.
இவ்வுலகில் இத்தனை மனசாட்சியுடைய படித்த திறமையுடைய மக்கள் அதாவது அரசியல்வாதிகளிலிருந்து கல்விமான்கள் வரையிலும் தத்துவஞானிகளும், டாக்டர்களும் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும் என ஒருவர் ஆச்சரியப்படலாம். இவ்வுலகம் அந்திகிறிஸ்துவுடன் கூட்டு சேருவதால் பரிசுத்தவான்களைக் கொலை செய்வது உட்பட இவை அனைத்தும் சாத்தியமாகும். இந்த உலகம்; அந்திகிறிஸ்துவிடம் சரணடையும் என்பதும், அந்திகிறிஸ்து பரிசுத்தவான்களைக் கொல்வானென்பதும் அவனின் புதிரைத் தீர்க்கும் திறவுகோலாகும்.
வசனம் 8: நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
ஆதிகால அரசர்கள் மத்தியில் அந்திகிறிஸ்து காணப்பட்டான் என்றும, அவன் இப்போது இவ்வுலகில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அவன் வெளிவருவான் என்றும் இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. அந்திகிறிஸ்து இவ்வுலகில் தோன்றி பரிசுத்தவான்களைக் கொல்லும் போது இவ்வுலகத்தின் மக்கள் மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாவார்களென இது நம்மிடம் கூறுகிறது.
இவ்வுலகின் புதிய அரசியலில் பங்கேற்பதன் மூலம் அந்திகிறிஸ்து தனது நோக்கங்களை செயல்படுத்துவான். இவ்வுலகின் மக்களுக்கு அவன் தொடர்ந்தும் ஆச்சரியமானவனாகவே இருப்பான். ஆனால் ஆச்சரியத்தின் மையமாக அவனிருப்பான். அவன் அநேக அரசியல், பொருளாதார, கொள்கைகள் மற்றும் இவ்வுலகின் மதப் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு தன்னுடைய எல்லாத் திறமையினாலும் அவற்றைத் தீர்ப்பதால் அவனே முடிவு காலத்தில் திரும்பி வரும் கிறிஸ்து இயேசு என அநேக மக்கள் எண்ணி அவனைப் பின்பற்றுவர். ஆகவே அவன் உலக மனிதர்களின் கண்களுக்கு முன்னதாக ஆச்சரியமானவனாகவே இருப்பான்.
வசனம் 9: ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
இவ்வுலக மக்களை அரசாள அந்திகிறிஸ்து தனது சொந்தச் சட்டங்களை இயற்றி தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இச்சட்டங்களை அரசியலமைப்பாக்குவான் எனவும் இவ்வசனம் கூறுகிறது. சாத்தானின் ஆளுகையின் கீழ் வருவதற்கே உலக மக்கள் யாவரும் ஒன்றாவார்கள். அவர்கள் அந்திகிறிஸ்துவின் குறியீட்டைப் பெற்று கர்த்தருக்கு எதிராகவும் அவரின் ஊழியர்களுக்கு எதிராகவும் நின்று அந்திகிறிஸ்துவால் இயற்றப்பட்ட சட்டங்களின் வல்லமையின் மீது தமது நம்பிக்கையை வைப்பார்.
வசனம் 10: அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
கர்த்தருக்கு எதிராக இத்தகைய அரசர்கள் எழும்பியதைப் போல் இப்போதும் கூட அரசர்கள் எழும்பி இவ்வுலகிலிருந்து அவர்கள் தொடர்ந்து வருவார்கள் என இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. இறுதியான மகா உபத்திரவத்தின் காலம் வருகையில் அந்திகிறிஸ்து என்ற இவ்வுலகின் தலைவனொருவன் தோன்றி பரிசுத்தவான்கள் அனைவரையும் கொல்லுவான். ஆனால் அந்திகிறிஸ்துவாகப் போகும் இந்த உலகத் தலைவரின் துன்புறுத்தல் கர்த்தர் அனுமதித்த ஒரு சில காலமே நடைபெறும்.
வசனம் 11: இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப் போகிறவனுமாயிருக்கிறான்.
இவ்வுலகிற்கு வரப்போகும் அந்திகிறிஸ்துவே இவ்வுலகத்தின் கடைசி அரசனாக இருப்பான் என இது நமக்கு கூறுகிறது. உலகின் அரசர்களிலிருந்து அந்திகிறிஸ்து தோன்றும் போது வலுசர்ப்பத்தின் ஆவியைப் பெற்று, கர்த்தரைப் போல் அதிகாரம் செலுத்துவதாலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதாலும் உலகின் அநேக மக்கள் அவனைப் பின்பற்றுவர். கர்த்தரின் ஊழியர்களும், அவரின் பரிசுத்தவான்களும் அந்திகிறிஸ்துவால் கொல்லப்படுவர். ஆனால் இவையனைத்தும் கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைபெறும் இத்தகையவைகள் கடந்த பிறகு அந்திகிறிஸ்து பாதாளத்திற்குள் கட்டப்படுவான். பிறகு பயங்கரமான நரகத்தினுள் வீசப்படுவான்.
வசனம் 12: நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
இவ்வுலகை ஆளுவதற்காக பத்து நாடுகள் தமது வல்லமைகளை ஒன்று சேர்க்குமென இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. இப்படியாக ஒன்று சேர்ந்த இந்த பத்து நாடுகளும், ஒரு குறுகிய காலத்திற்கு அந்திகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து அதிகாரம் செலுத்தும்படி அவனிடம் ஒப்படைப்பர். அந்திகிறிஸ்துவால் ஆளப்படும் ராஜ்யத்தை இந்த உலகத்தின் அரசர்கள் இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லையெனவும் இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. ஆயினும் இன்னும் சிறிது காலத்தில் இருளின் அரசர்களாக அந்திகிறிஸ்துவுடனே கூட இவர்களும் அரசாளுவர். ஆனால் அவர்களின் ஆளுகை குறுகிய காலமே நடைபெறும். அப்படிபட்ட நிலையிலும் கூட இருண்ட பகுதியிலேயே இவர்களின் ஆளுகை குறுகிய காலத்திற்கு இருக்கும்.
வசனம் 13: இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
சமயம் வருகையில் இப்பூமியின் அரசர்கள் தம் வல்லமைகளையும் அதிகாரங்களையும் அந்திகிறிஸ்துவுக்கு கொடுப்பர். இந்நேரத்தில் கர்த்தரின் ஆலயமும் அதன் பரிசுத்தவான்களும் அதன் ஊழியர்களும் அந்திகிறிஸ்துவால் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டு இறுதியில் இரத்த சாட்சிகளாக்கப்படுவர். ஆனால் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலும் அதிகாரத்தினாலும் அவர் வாயிலுள்ள வார்த்தை எனும் பட்டயத்தாலும் அந்திகிறிஸ்துவே அழிந்து போவான்.
வசனம் 14: இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப் பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
இயேசு கிறிஸ்துவிற்கு எதிராக சாத்தான் போரிட்ட போதிலும் அவன் அவருக்கு இணையானவனல்ல. பரிசுத்தவான்களும் கூட அந்திகிறிஸ்துவுடனான போரில் அவனை வெல்லுவர். அந்திகிறிஸ்துவுடன் தமது விசுவாசத்தினால் போரிட்டு அவனை மேற்கொள்ளும் பலத்தை தேவனளிப்பார். அப்படியாயினும், அந்திகிறிஸ்துவினுடனான தமது போரிற்காக பரிசுத்தவான்கள் பயப்படுவதில்லை. ஆனால் தம்முடைய தேவனாகிய கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினால் முடிவு காலத்திலும் கூட அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்வர். தேவன் மீதுள்ள தமது விசுவாசத்தின் மூலமாக அவர்கள் தமது எதிரிகளை மேற்கொள்வர்.
பரிசுத்தவான்களின் வெற்றி என்பது அவர்கள் தமது விசுவாசத்தைக் காத்து இரத்த சாட்சியாக வேண்டும் என்பதாகும். நேரம் வருகையில் பரிசுத்தவான்கள் சாத்தானையும் அந்திகிறிஸ்துவையும் மேற்கொள்வார்கள். அப்படி செய்ய அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினாலும் பரலோக ராஜ்யத்தின் மீதுள்ள நம்பிக்கையினாலும் இரத்த சாட்சிகளாவர். அப்படி செய்வதனால் அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுவதோடு கிறிஸ்துவின் புதிய ராஜ்யத்தைப் பெற்று நித்திய மகிமையில் வாழ்வார்கள்.
வசனம் 15: பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம்.
உலக மதங்கள் சாத்தானுடைய போதனைகளைப் போதித்து உலக நாடுகளின் அனைத்து மக்களையும் வஞ்சித்தன. உலக மதங்களுக்கு நடுவில் செயல்புரியும் சாத்தானின் போதனைகள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் மொழிகளுக்கும் பரவி, மக்களின் ஆத்துமாக்களுக்கு மிகப் பெரிய அழிவை உருவாக்குமளவிற்கு வளர்ந்துள்ளதாக இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது.
வசனம் 16: நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
மதசம்பந்தப்பட்ட மக்களை கொல்வதற்காக உலகின் நாடுகள் அனைத்தும் அந்திகிறிஸ்துவுடன் அணி சேரும் என இந்த வசனம் இங்கு கூறுகிறது. வேறு வார்த்தைகளினல் கூறினால் அந்திகிறிஸ்துவும் உலகிலுள்ள அவன் மக்களும் மத சம்பந்தப்பட்ட மக்களை வெறுத்து உலகின் அனைத்து மதங்களையும் அதன் பரப்பிலிருந்து அழிப்பார்கள் என்று அது நம்மிடம் கூறுகிறது. அந்திகிறிஸ்துவின் ஆதரவுடன் பரிசுத்தவான்களைக் கொன்ற உலக மதங்களின் மக்கள் இப்போது சாத்தானாலும் உலக சம்பந்தமான மக்களாலும் இப்போது அழிக்கப்பட போகின்றனர். இறுதி காலத்தில் சாத்தான் உலக மதங்களை உபயோகப்படுத்தியதற்கான காரணம் அவனை கர்த்தராக உயர்த்துவதற்கே.
வசனம் 17: தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
இவ்வுலகின் மக்கள் தமது ராஜ்யத்தையும் வல்லமையையும் சாத்தானுக்கு வழங்குவர் என இது நம்மிடம் கூறுகிறது. அப்படியே அந்திகிறிஸ்துவின் குறியீட்டை விருப்பத்துடன் பெற்றுக் கொள்வதினால் அவர்கள் அந்திகிறிஸ்துவின் மக்களாவர். அவனின் ஊழியர்களாயிருப்பதில் பெருமை அடைந்து அவனின் குறியீட்டைப் பெறாதவர்களை அவர்கள் கொல்லுவர். ஆயினும் கர்த்தரின் வார்த்தை அனுமதித்த காலத்தின் போது மட்டுமே பரிசுத்தவான்களை அவர்கள் துன்புறுத்துவது அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட இக்காலத்தில் அந்திகிறிஸ்து தனது இருதயத்திலுள்ள தீமைகளை ஊற்றி கர்த்தருக்கும் அவரின் பரிசுத்தவான்களுக்கும் எதிராக நிற்பான்.
வசனம் 18: நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.
இவ்வுலகில் புதியதொரு சட்டத் தொகுப்பு அரசர்களை ஆளுவதற்காகவும் கட்டுப் படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டு இப்புதிய சட்டங்களின் கட்டுப்பாடுகளுக்குள்ளாக உலக அரசர்கள் அரசாளுவார்கள் என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். வல்லமையான சக்தி, யாரோ ஒருவர் இருந்து ஆளுவதைப் போல் உலகின் அனைத்து அரசர்களையும் அரசாளும். வேறுவார்த்தைகளில் கூறினால் உலகம் உருவாக்கும் சட்டமானது அரசர்களை இறுக்கமாக கட்டிப் போடும். அது ஏதோ கடவுள் அவர்களை ஆளுவதைப் போலிருக்கும்.
“மகா நகரம்” என்பது அந்திகிறிஸ்துவால் ஏற்படுத்தப்படும் ஒரு நிறுவனமாகும். அதன் மூலம் அவன் அரசாளுவான். உலகின் இந்த ஆளும் அமைப்பிற்கு உலக மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு அதுவே ஒரு கர்த்தர் என்பது போல் அதனால் அவர்கள் அரசாளப்படுவர். மனிதர்கள் சாத்தானின் ஊழியர்களாகிப் போனதால் அவர்கள் இப்படியாக அழிந்து போவர்.
சங்கீதம் 49:20 நம்மிடம் கூறுகிறது, “கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்து போகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.” அப்படியே சாத்தானின் திட்டம் எதுவென உலக மக்கள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆகவே இக்காலத்தின் பரிசுத்தவான்களால் போதிக்கப்படும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து சாத்தானின் ஊழியர்களாக மாறும் சாபத்திலிருந்து தப்பித்து கர்த்தரின் நித்தியமான ராஜ்யத்தில் அவரின் மக்களாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் வாழலாம்.