• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 17-2] அவருடைய சித்தத்திற்கு நம் கவனத்தை மையப்படுத்தல் (வெளி 17:1-18)

2021.04.23 96
(வெளி 17:1-18)
 
வெளி 17:1-5 கூறுகிறது “ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.”
உலகின் மதவாதிகளை மகாவேசி என மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது. தேவனருளிய பொருட்களினாலும், உலகத்தினாலும் இவ்வுலகிலுள்ள அனைத்து இன்பங்களிலும் அவர்கள் ஆழ்ந்திருப்பதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் எல்லாவிதமான உலக பொருட்களினாலும் ஆணந்தம் அடைந்தார்கள். தங்க கழுத்தணிகள் வைரத்தினால் உருவாக்கப்பட்ட காதணிகள், இவற்றுடன் கூட அனைத்து வாசனையான தைலங்களையும் உபயோகித்து தம்மை அழகு செய்தனர். அவளுடைய கையில் தங்கக்கோப்பை இருந்ததாகவும் அதில் அவளின் காமவிகார ஆபாசங்களும் அசிங்கங்களும் இருந்ததாகவும் இந்த வசனம் நம்மிடம் கூறுகிறது. இதனைத் தான் கர்த்தர் யோவானிற்கு காட்டினார்.
இவ்வுலகினுடையவைகளை உலக மக்கள் குடிக்கச் செய்து அதனால் அவர்களைச் சரணடைய செய்து சாத்தான் மக்களின் ஆத்துமாக்களை அழுத்துவதாக இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. உலகின் எல்லா அரசர்களும்கூட உலகினுடையவைகளால் குடிக்கப்படும்படி சாத்தான் செய்தான். உலகின் காமவிகார மதுவை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் குடித்தனர்.
மக்கள் இவ்வுலகின் கவர்ச்சியையும், அதன் உல்லாசங்களையும், அதன் பொருட்களையும் குடித்து குடிகாரர்களான போது சாத்தான் தன் இலக்கினை அடைந்தான். மக்கள் கர்த்தரை நோக்கிப் பார்ப்பதிலிருந்து தடுப்பது சாத்தானின் இலக்கு என்பது உண்மையாகும். சாத்தான் அப்படி செய்ய உலகினுடையவைகளால் மக்களின் ஆத்துமாக்கள் மதிமயங்கிப் போகுமாறு செய்கிறான். இந்த உண்மையை நாம் அறிய வேண்டும்.
உலகின் பொருட்களில் சிக்கிக் கொள்ளாதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. எல்லோருமே பொருளாசையில் விழுந்து போகின்றனர். இவ்வுலகத்தின் மதி மயக்கும் போக்குகளெல்லாம் சாத்தானால் உருவாக்கப்பட்டு அவனால் வழிநடத்தப் படுகின்றன. ஒவ்வொருவரும் அவனிடமும்/அவளிடம் தனிப்பட்ட அவனின்/அவளின் போக்கு இருப்பதாக எண்ணுகின்றனர். இதன் பின்னால் கட்டுப்படுத்துபவன் இருக்கிறான். இந்த கட்டுப்படுத்துபவன் சாத்தானாவான். இதனால் தான் பொருளாசையினால் நாம் ஊறிப் போகக் கூடாது. இதற்கு பதிலாக கர்த்தரின் வார்த்தையின்படி வாழ்ந்து அவரின் செயல்களைச் செய்ய வேண்டும்.
அப்போஸ்தலனாகிய யோவானின் மூலம் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திய வெளிப்படுத்தலின் வார்த்தையே சத்தியமாகும். இவ்வார்த்தையின் மூலம் நம்மிடம் எதைக் கூற கர்த்தர் முயற்சிக்கிறார்? இவ்வுலகினுடையவைகளால் நாம் முழுகிப் போகக் கூடாது என்றும், அதனை எதிர்த்து நிற்க வேண்டுமெனவும் நம் தேவன் நம்மிடம் கூறுகிறார். வேறு வார்த்தையில் கூறுவதானால் பரிசுத்தவான்களாகிய நாம் கர்த்தரை நமது இருதயங்களால் விசுவாசித்து அவரை எண்ணும்படி அவர் நம்மிடம் கூறுகிறார்.
1 யோவான் 2:15 கூறுகிறது “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” நம்முடைய இருதயங்கள் இவ்வுலகின் உடையவைகளை நேசிக்கும் போது கர்த்தரால் நமது இருதயங்களில் வாசஞ்செய்ய முடியாது. இவ்வுலகின் உடையவைகளை நமது இருதயங்கள் எறிந்து விடும் போது நம்முடைய இருதயங்களில் கர்த்தர் வாசம் செய்வார். இவ்வுலகினுடையவைகளால் ஆழ்ந்து போகும் ஒரு வாழ்வை நாம் வாழக் கூடாது. தேவனுடைய வார்த்தைக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் போது மட்டுமே அவருடைய வழிகாட்டுதலால் நடத்தப்படுவோம்.
நம்முடைய மனங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். இவ்வுலகினுடையவைகள் நமது இருதயங்களுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது எப்போதும் நாம் அவற்றை நிராகரிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய இருதயங்களிலிருந்து இவ்வுலகின் அனைத்து அசிங்கமான காரியங்களையும் நம்மால் வெளியேற்ற முடியும். மேலும் நமது இருதயங்கள் தேவனுடைய இருதயமாக மாறும். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன? நாம் எதைச் செய்ய வேண்டுமென அவர் கூறுகிறார்? இத்தகைய தேவனுக்குரிய சிந்தனைகள் நமது இருதயங்களிலிருந்து ஊற்றெடுக்க வேண்டுமானால் உலகப்படியான காரியங்களை நமது இருதயங்களிலிருந்து அகற்ற வேண்டும்.
கர்த்தர் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை அளித்தார். ஆகவே நம்முடைய எஞ்சியிருக்கும் நாட்களெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகிற்கும் பிரசங்கிக்க வேண்டுமென்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே நாம் சோர்ந்து போக வேண்டாம். அவருடைய சித்தப்படி செய்ய நமது கவனத்தை ஒருமனதாக்க வேண்டும். ஆவிக்குரிய செயல்களைச் சிந்திப்பதினால் நம்முடைய இருதயங்களில் காணப்படும் இவ்வுலகினுடையவைகளை நம்மால் விரட்டியடிக்க முடியும்.
பரிசுத்தவான்களாகிய நாம் இவ்வுலகினுடையவைகளை விரட்டியடிக்க வேண்டும். தேவன் மீண்டும் வரும் வரையில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை விசுவாசத்துடன் வாழ வேண்டும். நம்முடைய எஞ்சியிருக்கும் நாட்கள் முழுவதும் நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும் வரையிலும் தேவன் நமக்களித்த வேலைகளைச் செய்ய வேண்டும். தேவனை நாம் நேசித்து, விசுவாசத்தினால் வாழ்ந்து, அவர் அனுமதித்த அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.