(வெளி 18:1-24)
“இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி, அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.”
விளக்கவுரை
வசனம் 1: இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
தம்முடைய செயல்களைச் செய்யும்படியாக கர்த்தர் இப்பூமிக்கு அனுப்பிய ஊழியர்களின் மூலமாக கர்த்தா¢ன் ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் குறித்த பிரசங்கங்களை மக்களால் கேட்க முடியும். ஆகவே தம்முடைய அனைத்து பாவங்களிலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபட கர்த்தா¢ன் ஊழியர்களால் பிரசங்கிக்கப்படும் ஆவிக்குâய ஆசீர்வாத வார்த்தையை உங்கள் இருதயங்களின் ஏற்று அதனை விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 2: அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
“மகா பாபிலோன் விழுந்தது!” என்ற சொற்றொடரில் பொதுவான உலகத்தைக் குறிப்பிட்ட பாபிலோன் என்ற வார்த்தை வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டள்ளது. பாபேல் கோபுரத்தைக் குறித்த வரலாற்றை பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். மக்கள் தம்முடைய பலங்களையெல்லாம் ஒன்று திரட்டி கர்த்தரை இழிவுபடுத்த மக்களால் இக்கோபுரம் கட்டப்பட்டது. இக்காரணத்திற்காக இக்கோபுரம் கர்த்தரால் தரைமட்டமாக்கப்பட்டது. மகாபாபிலோன் விழுந்தது என மேற்கண்ட வசனம் கூறும் போது இவ்வுலகம் விழுந்து போகும் என இது பொருள்படும் “இவ்வுலகம் இத்தனை அருமையாக நின்று கொண்டிருக்கிறது. இது எப்படி விழுந்து போகும்?” என சில மக்கள் எண்ணலாம். ஆனால் கர்த்தர் எப்படி பாபேல் கோபுரத்தை தரைமட்டமாக்கினாரோ அதுபோலவே ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றி இவ்வுலகை அழித்து விடுவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
அப்படியானால் ஏழு பாத்திரங்களின் வாதையினால் கர்த்தர் ஏன் இவ்வுலகை அழிக்க வேண்டும்? இதற்கான காரணம் கீழ்வருமாறு. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் மறுபடியும் பிறந்த பா¢சுத்தவான்களைக் கொலை செய்ய இவ்வுலகின் மக்கள் ஒன்று சேர்வதோடு முடிவு வரையும் அவர்கள் கர்த்தரை எதிர்த்து நிற்பர். இதற்கு மேலும் இப்பூமியானது “பிசாசுகள் வாழும் ஓâடம்” ஆகிவிடும்.
இது ஏன் இப்படி நடக்கிறது? அதாவது இவ்வுலகம் ஏன் பிசாசுகள் வாழும் இடமாகிப் போகிறது? உலகின் முடிவு காலம் வருகையில் அநேக மக்கள் அந்திகிறிஸ்துவிடம் சரணடைந்து சாத்தானின் குறியீட்டைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த தீயவனின் அடிமைகளாக அவர்கள் மாறுவர்.
வேத வசனங்களில் வலுசர்ப்பம் சாத்தானையும், பிசாசுகள் வலுசர்ப்பத்தின் ஊழியர்கள் என்பதையும் குறிக்கிறது. ஆகவே இவ்வுலகம் பிசாசுகள் வாழுமிடமாக மாறிவிட்டது என்பது வலுசர்ப்பத்தின் ஊழியனான அந்திகிறிஸ்து இவ்வுலகம் முழுவதையும் ஆட்கொள்ளுவான் என பொருள்படும். முடிவு காலத்தில் ஏழு பாத்திரங்களின் வாதைகள் உலகின் மீது ஊற்றப்படுகையில் இது மிகப் பயங்கரமான உபத்திரவங்களை அனுபவிக்கும் என பொருள்படும். இவ்வுலகம் வலுசர்ப்பத்தின் உலகமாக மாறுவதோடு இம்முழு உலகமும் பிசாசினுடையதாகிவிட்டதைப் போல் அவை முழு உலகத்திலும் ஓடித் திâயும். வேகமாக கீழே விழும் கர்த்தரால் ஊற்றப்படும் ஏழு பாத்திரங்களின் வாதைகளால் இவ்வுலகம் தரைமட்டமாகும்.
வசனம் 3: அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
இங்கு இந்த வசனம் கூறுவதைப் போல் உலகிலுள்ள “அனைத்து நாடுகளும்” பூமியின் காமவிகாரம் என்ற மதுவைக் குடித்தவையாகவே இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால் இவ்வுலகிலுள்ள மக்களனைவரும் உலகையே கர்த்தர் எனக் கருதி அப்படியே அதனை விசுவாசித்து உலகைப் பின்பற்றினர். கர்த்தரைவிட உலகையே அதிகமாய் விரும்பினர். இந்த உலகம் இப்படியாக பாவங்களின் தொட்டிலாகிற்று. இவ்வுலகிலுள்ள மக்கள் அதன் பாவத்தைக் குடித்து வாழ்ந்தனர்.
ஆகவே உலகின் வீழ்ச்சி பாவத்தினால் எடுத்து வரப்பட்டது. உலகின் மக்கள் கர்த்தரைவிட உலகினை அதிகமாக பின்பற்றியபடியால் அவர் தம்முடைய ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் அவர்களை அழிப்பார். கர்த்தரால் எடுத்துவரப்பட்ட ஏழு மகா வாதைகளினால் இவ்வுலகில் வாழும் அனைவரும் அழிக்கப்பட்டு நரகத்தினுள் வீசப்படுவர்.
தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்போது விசுவாசிக்காத அனைவரும் முடிவு காலத்தின் ஏழு பாத்திரங்களின் வாதைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என கர்த்தர் நம்மைத் தெளிவாக எச்சா¢க்கிறார். கர்த்தா¢ன் எச்சா¢க்கையையும் மீறி இந்நற்செய்தியை நீங்கள் விசுவாசிக்காமல் கர்த்தருக்கு எதிராக நின்றவர்களாகிய நீங்கள் ஏழு பாத்திரங்களின் வாதைகளை மட்டும் சந்திக்காமல் நித்தியமான நரகத் தண்டனையையும் பெறுவீர்கள்.
ஆகவே கர்த்தா¢ன் மிகக் கொடிய மகாவாதைகளிலிருந்து தப்பிப்பதற்கு இப்போதே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டுமென்பதை மக்கள் உணர வேண்டும். உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசத்திற்கு சீக்கிரமாக திரும்ப வேண்டும்.
உலகத்தின் அநேக ராஜாக்களும் தொழிலதிபர்களும் இவ்வுலகில் கொட்டிக் கிடக்கும் பொருட்களை கணக்கில்லாமல் சேர்த்தாலும் கர்த்தரால் அனுப்பப்பட்டாலும் கொடிய வாதைகளினால் தமது உலகம் நொருங்கிப் போவதைக் காணும் போது அவர்கள் அழுவதிலும், புலம்புவதிலும், துக்கப்படுவதிலும் கவலைப்படுவதிலும் முடிவடைவர்.
ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அனைவருக்கும் பிரசங்கிப்பதை நாம் மறக்கவே கூடாது. புதியதொரு ஆயிரவருட அரசாட்சியை நோக்கிப் பார்த்தவாறு நம் வாழ்வை நாம் வாழ வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு அனைவரையும் நாம் வழி நடத்த வேண்டும். ஆகவே எல்லா மனிதர்களும் மகாவாதைகளிலிருந்து தப்பிக்க முடியும்.
வசனம் 4: பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” கர்த்தருடைய பா¢சுத்தவான்களுக்கு கூறப்பட்ட அவா¢ன் வார்த்தை இதுவே. வேறு வார்த்தையில் கூறினால் முடிவுகாலத்தின் போது பா¢சுத்தவான்கள் இவ்வுலகிற்குâயவர்களாய் இருக்கக் கூடாது. மேலும் அதன் அடிமைகளாகவும் வாழக் கூடாது. ஏற்கனவே பா¢சுத்தவான்களாகியவர்கள் போல் உலகின் கடைசிகால பாவங்களில் அவர்கள் விழுந்து போனால் கர்த்தருடைய பயங்கரமான வாதைகளினால் தீர்க்கப்படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது. உலகின் அடிமைகளாகி அவருடைய கோபாக்கினையைப் பெற்று கொள்ள வேண்டாமென கர்த்தர் பா¢சுத்தவான்களிடம் கூறுகிறார்.
வசனம் 5: அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.
இவ்வுலகின் அனைத்து பாவங்களையும் அதன் செய்கைகளையும் கர்த்தர் தனது நினைவில் இருத்தி நியாயத் தீர்ப்பு நாளுக்காக காத்திருக்கிறார். ஒரு நாளில் அந்திகிறிஸ்து தோன்றுவதுடன் கர்த்தர் திட்டமிட்டபடி முழு உலகத்தின் மீதும் அழிவு வரும். இவ்வுலகம் அழியாதெனவும், அது வெகுகாலமாக நீடித்திருக்குமெனவும் விசுவாசிக்கும் சில மக்களும் இருக்கவே செய்கின்றனர்.
அவர்கள் நினைப்பதைப் போல் இவ்வுலகம் நீடித்திருக்காது. ஆனால் கர்த்தரால் அனுப்பப்படும் ஏழு எக்காளங்களின் வாதைகளினாலும் ஏழு பாத்திரங்களின் வாதைகளினாலும் திடீரென அழிந்து போகும். முடிவு நேரம் வருகையில் உலகெங்கும் கர்த்தர் உபத்திரவங்களை அனுப்பி அதனை அழிப்பார். ஆகவே கிறிஸ்துவின் ராஜ்யம் நிச்சயமாக வருமென்ற நமது விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு முடிவு வரை விசவாசத்துடன் நேர்த்தியான ஒரு வாழ்வை வாழ வேண்டும்.
கர்த்தர் தனது ஏழு து¡தர்களுக்கும் ஏழு பாத்திரங்களின் வாதைகளை இவ்வுலகில் ஊற்றும்படி கூறுவதற்கு முன்னால் உலகின் பாவங்கள் எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படும். இது கர்த்தா¢ன் நியாயத் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியானதே. கர்த்தர் அதன் பாவங்களை நினைவு கூறுகிறார். அதன் அழிவை அவர் நிறுத்தி வைப்பதில்லை. அதற்கும் மேல் அந்திகிறிஸ்துவும் உலக மக்களும் கர்த்தா¢ன் மக்களைத் துன்புறுத்துவர். தம்முடைய விசுவாசத்தை மறுக்கும்படி பா¢சுத்தவான்கள் வலியுறுத்தப்பட்டு அவர்களை இரத்த சாட்சியாக கொல்வார்கள். இவையெல்லாம் நடக்கும் போது இவ்வுலகம் ஏழு பாத்திரங்களின் வாதைகளைச் சந்திக்கும்.
வசனம் 6: அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
“அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்” என்று இங்கு எழுதப்பட்டுள்ளது. இங்கு “அவள்” என்பது யாரைக் குறிக்கிறது? இது உலகைக் குறிக்கிறது. அதாவது அதில் வாழும் பாவிகளையும், அந்திகிறிஸ்துவையும், சாத்தானையும் இது குறிக்கிறது. பா¢சுத்தவான்களுக்கு துன்பங்களையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் மரணத்தையும் அவர்கள் எடுத்து வந்தது போல் கர்த்தர் அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பார் என்று இது நம்மிடம் கூறுகிறது.
வசனம் 6 “அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்” என்றும் கூறுகிறது. பிசாசின் பொய்களைப் பரப்பி மக்களை நரகத்திற்கு வழிநடத்திய உலகின் அனைத்து தவறான மதங்களையும் தண்டிக்கும் படியாக கர்த்தர் தனது து¡தர்களுக்கு அளிக்கும் கட்டளை இதுவாகும். இன்றைய கிறிஸ்தவம் தவறான போதனைகளைப் போதிப்பதற்கும், கர்த்தா¢ன் வார்த்தையை சாத்தானுடைய போதனைகளுடன் கலப்பதற்காகவும் இப்படி செய்து மக்களை பிசாசிடம் வழி நடத்துவதற்காகவும் அதன் மீது கர்த்தர் தனது கோபாக்கினையை எடுத்து வருவார். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் உலக மக்கள் தம் பாவங்களுக்கு பெறும் தண்டனையைப் பெறுவர்.
வசனம் 7: அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
இந்த பெருமைப் பிடித்த மக்கள் துன்பங்களினாலும் பாடுகளினாலும் திரும்பக் கொடுக்கட்டும் என கர்த்தர் இங்கு கூறுகிறார். மறுபடியும் பிறவாத உலகின் அனைத்து மதச் சம்பந்தப்பட்ட மக்களையும், விசுவாசிக்காதவர்களையும் உலகின் மக்களையும் அவர்களின் பாவங்களைக் கேட்டு அதற்கேற்றவாறு தண்டிப்பார்.
ஆயினும் அவர்கள் பெருமைப்படைத்தவர்களாகவே இருப்பார்கள். “நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லை” என்று தமக்குத்தாமே கூறுவார்கள். ஆகவே அவர்களின் அழிவின் வாதையை கர்த்தர் அனுப்புவார். கர்த்தரால் எடுத்துவரப்பட்ட மகா வாதைகளினால் ஒரே சமயத்தில் தம்முடைய உலகச்சம்பந்தமான உடமைகளும் அவர்களுக்கு அன்பானவர்களும் இழந்து போகும் துன்பத்தைப் பெறுவர்.
வசனம் 8: ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
ஏழு வாதைகளும் வரும் போது மரணவாதை வரும் போது துக்கப்படுதலும் பஞ்சமும் இவ்வுலகிற்கு ஒரே நாளில் வரும். அந்திகிறிஸ்துவும் அவனின் உலகப்படியான பின்பற்றுபவர்களும் நரகத்தில் எப்போதும் எâயும் தண்டனையைப் பெறுவர்.
வசனம் 9: அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் உருவான அக்கினியினாலும் பூமியதிர்ச்சியினாலும் இவ்வுலகம் அழிந்து போவதை உலகின் அரசர்களும் மக்களும் தமது சொந்தக் கண்களால் காண்பர். ஆகவே உலகின் அரசர்கள் அழுது புலம்புவார்கள், தம்முடைய இழப்புக்காக துக்கப்படுவர்.
வசனம் 10: அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
இவ்வுலகம் விழுந்து போகும் என்பதை விசுவாசிக்காத மக்கள் முழு உலகமும் தம் கண்களுக்கு முன்னால் நொருங்கி விழுவதைக் காணும் போது பயத்தினால் வாயடைத்துப் போவர். தனது அழகினால் பளபளப்பாக இருக்கும் இவ்வுலகில் ஒருநாள் கர்த்தா¢ன் தீர்ப்பு இறங்கும் அதனால் அது முற்றிலுமாக அழிந்து போகும்.
வசனம் 11-13: பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
உலகின் அழிவு சமீபமாயிருக்கும் போது யாரால் வாங்கவோ விற்கவோ முடியும்? உலகின் வியாபாâகள் கூட தம்முடைய உலகத்தை இழந்து போனதால் அழுது புலம்புவார்கள். கர்த்தர் ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஊற்றும் போது, உலகிலுள்ள யாரும் எதனையும் வாங்கமாட்டார்கள். இவ்வுலகம் மீண்டும் எழும்பாது. அதன் அழிவுகளின் மீது கிறிஸ்துவின் ராஜ்யம் கட்டப்படும்.
இந்நாள்வரை மக்கள் உல்லாசமாக இருப்பதற்கு தம்மைத்தாமே அலங்கா¢த்துக் கொள்ள ஆடம்பரமாகச் செய்தவைகளின் பட்டியல் இது. இவையெல்லாம் ஒரே நாளிலேயே பயனற்றுப்போய்விடும். அதன் பிறகு யாரும் இத்தகைய உலகக் காâயங்களை ஏறிட்டும் பார்க்க மாட்டார்கள். இக்காâயங்களை விற்பனைச் செய்வது உலக மதங்களே. பணத்தை அவர்கள் நேசித்தமையால் உலக மதங்கள் கற்பனைச் செய்யக் கூடிய அனைத்தையும் செய்தன. பணத்திற்காக ஆத்துமாக்களை விற்கக் கூட அவர்கள் தயங்கவில்லை.
வசனம் 14-18: உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை. இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு.
ஆகவே மக்களால் தமது உலகப்படியான உடமைகளை இதன் பிறகு காண முடியாது.
இவ்வுலகின் மூலமாக செல்வந்தர்களாகிய வியாபாâகள் தமது உலகம் தமக்கு முன்பாக அழிந்து போவதைப் பார்த்து அழுது புலம்புவார்கள். மிகுந்த ஆதங்கத்துடன் அவர்கள் துக்கப்படுவார்கள். ஏனெனில் உலகம் விழுந்து போகும் போது அவர்களும் கூட அதனுடன் விழுந்து போவார்கள். மிகப் பொ¢ய உடமைகளெல்லாம் ஒரு நாளிலேயே மறைந்து போகும்.
உலகச் செல்வங்களின் மீது கட்டப்பட்ட மதங்கள் விழுந்து போகும் போது இவ்வுலகின் மக்கள் “ஐயோ, ஐயோ” எனப் புலம்புவார்கள். உலக நாடுகள் முழுவதிலும் வியாபாரம் செய்தவர்களும் உலகைப் பலமுறைக் கடந்தவர்களும் கூட துக்கப்படுவர். இம்மக்கள் ஆதங்கத்துடன் கூக்குரலிடுவார்கள் “இன்றைய தினத்துடைய நாகா£கத்துடன் ஒப்பிடும் போது மனிதர்களின் எந்த நாகா£கம் இத்தனைச் சிறப்பாய் இருந்தது?”
வசனம் 19: தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக் கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் உலகம் தரை மட்டமாக்கப்படுவதைக் கண்டு இவ்வுலகம் நித்தியமாக அப்படியே இருக்கும் என்று எண்ணியவர்கள் பெருந்துயரத்தினால் கதறுவார்கள். கர்த்தரால் அனுப்பப்பட்ட ஏழு பாத்திரங்களின் வாதைகளினால் மொத்த உலகமும் ஒரே நேரத்தில் அழிந்து போனதைக் கண்டு இவ்வுலகில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்போர் அழுது புலம்புவர். ஆனால் அவர்களின் அழுகையினால் எப்பயனும் இல்லை. ஏனெனில் அதற்கு முன்னதாகவே இவ்வுலகமும் அதிலுள்ள யாவையும் அழிந்து போயிருக்கும். அப்பொழுது அவர்களிடம் அழுவதற்கான பலமிருந்தால் அவர்கள் தம்முடைய பாவங்களுக்காக நரகம் செல்ல வேண்டியிருக்கும். தம்முடைய சொந்த நிலையைக் குறித்து மட்டுமே அவர்கள் அழ வேண்டும். அவர்கள் தம்முடைய நித்தியமான அழிவிலிருந்து தப்ப வேண்டுமானால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 20: பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
ஏழு பாத்திரங்களின் வாதைகள் எடுத்துவரப்படும் போது ஆகாயத்திலிருக்கும் எடுத்துக் கொள்ளப்பட்ட பா¢சுத்தவான்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏனெனில் இந்த வாதைகளினால் கர்த்தர் அவர்களை பலி தீர்ப்பார். பயங்கரமான மிகவும் கொடிய வாதைகளைக் கர்த்தர் தனது பகைவர்களின் மீது ஊற்றுவது மிகவும் சா¢யானதே.
வசனம் 21: அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
எந்திரக்கல்லானது கடலினுள் வீசப்பட்டதைப் போன்று, இவ்வுலகமும் மறைந்து போவதால் இதனை மீண்டும் காண முடியாது என கர்த்தர் கூறுகிறார். நம் தேவன் பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவைகளையும் புதிதாக்குவார். இப்படியாக இப்பூமியைக் கிறிஸ்துவின் ராஜ்யமாக மாற்றும் தனது செய்கையை நிறைவேற்றுவார்.
வசனம் 22: சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
ஏழு பாத்திரங்களின் வாதைகள் முடியும் போது முன்பு மக்கள் இவ்வுலகில் கேட்ட இசையை இனி எப்போதுமே அவர்களால் கேட்க முடியாது. அல்லது கலைஞர்களின் உளி எழுப்பும் ஓசைகளையும் இனிமேல் கேட்க முடியாது.
வசனம் 23: விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.
ஏழு பாத்திரங்களின் வாதைகளும் முடிவுறும் போது விளக்குகளினால் உருவாகும் வெளிச்சத்தை இவ்வுலகம் மீண்டும் காணவே காணாது, அல்லது மணவாளனின் மணவாட்டியின் சத்தங்களையும் கேட்கவே கேட்காது. சூன்யகாரர்களின் வஞ்சனைகள் முடிந்து போகும். ஏனெனில் உலகமே முடிந்து போயிற்று.
வசனம் 24: தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.
ஏழு பாத்திரங்களின் கொடிய வாதைகளை கர்த்தர் இப்பூமியின் மீது ஊற்றுவதற்கான காரணம் சாத்தானின் ஊழியர்கள், கர்த்தா¢ன் தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்கள் ஆகியோரின் இரத்தத்தைச் சிந்தியதே ஆகும்.