• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 18-2] என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளைவிட்டு (வெளி 18:1-24)

2021.04.23 136
(வெளி 18:1-24)
 
மகா நகரமாகிய பாபிலோனை தனது மகாவாதைகளால் அழிக்கப் போவதாக அதிகாரம் 18இல் கர்த்தர் கூறுகிறார். ஏனெனில் முடிவு காலத்தில் இவ்வுலகமானது கர்த்தா¢ன் கண்களில் அருவருப்பானதாயும் பாவம் நிறைந்ததாயும் இருக்கும். கர்த்தர் தாமே இப்பூமியைப் படைத்திருந்தாலும் அதனை அழிப்பதை தவிர வேறு வழிகளில்லாததால் மிகப் பொ¢ய கொடிய வாதைகளை அவர் அனுமதிப்பார். அவை பூமியை முடிவுறச் செய்யும். அதன் பிறகு இப்பூமியானது தான் முற்றிலுமாக அழிந்து போகும் வரை இடிபாடுகளைச் சுமந்திருக்கும்.
கர்த்தர் இவ்வுலகினை அழிப்பதற்கான உண்மையான காரணம் அவர் தம்முடைய தீர்க்கதரிசிகள் மற்றும் பா¢சுத்தவான்களின் இரத்தத்தைக் கண்டிருப்பதேயாகும். அதற்கு கர்த்தர் கொடுத்த எல்லாவற்றுடனும் இவ்வுலகம் அநேக மிகப் பொ¢ய பாவங்களைச் செய்திருப்பதால் கர்த்தரால் பொறுக்க முடியாத அளவிற்கு அது அறுவறுப்பானதாகியிருக்கும். கர்த்தர் படைத்த கோள்களிலேயே மிகவும் அழகான கோள் இப்பூமியாகும். கர்த்தர் தாமே மிகுந்த ஆர்வத்துடன் இப்பூமியில் செயலாற்றி இருப்பதாலும், இயேசு கிறிஸ்துவினுள் பாவிகளை இரட்சிக்கும் தனது திட்டங்களும் செயல்களும் இப்பூமியில் நிறைவேற்றப்பட்டிருப்பதாலும் இப்பூமி அழகு நிறைந்ததாகும்.
இருந்தாலும் கூட இப்பூமியை எப்படி அழிப்பது எனவும், கிறிஸ்துவின் ராஜ்யத்தை எப்படி உருவாக்குதெனவும் கர்த்தர் ஏற்கனவே திட்டமிட்டுள்ளார். எல்லா அசிங்கங்களினாலும் இவ்வுலகம் நிறைந்திருக்கும் போது வாதைகள் நிரம்பிய ஏழு பாத்திரங்களைப் பிடித்திருக்கும் தூதர்களின் மூலமாக அதனை அழிப்பார். எல்லாவற்றையும் அவர் புதிதாக்கி அவரின் இந்த புதிய உலகை தனது பரிசுத்தவான்களால் ஆளச் செய்வார்.
 
 
விழுந்து போன பாபிலோன் நகரம்!
 
பூமியின் ராஜாக்கள் உலகின் பொருட்களை இச்சித்து உல்லாசமாக வாழ்ந்தனர். அதே சமயம் எல்லா வியாபாரிகளும், கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த எல்லாப் பொருட்களையும் வாங்குவதிலும் விற்பதிலும் மும்முரமாய் இருந்தபடியால் அவர்களுடைய பேராசையினால் கர்த்தரை இழந்து போயினார். கர்த்தர் எல்லாவற்றையும் அழித்துப் போடுவார். கட்டிடங்கள், மதங்கள், மதங்களினுள் காணப்படும் வியாபாரங்கள், மதத்தினால் தம்மை செழிப்பாக்கிய மக்கள், அரசர்கள், அரசியல்வாதிகள், செல்வத்தினால் கொழுத்துப்போன மக்கள் இவை யாவும் கர்த்தரால் தரைமட்டமாக்கப்படும்.
இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு கட்டிடங்களையும் கர்த்தர் உதறிப் போடுவார். ஒரு கட்டிடத்தைக் கூட அவர் விடமாட்டார். எல்லாவற்றையும் அவர் அழித்துப் போடுவார். மக்களிலிருந்து காடுகள் வரையிலும் மரங்களையும், தனது நெருப்பினால் அழித்துப் போடுவார். இப்படி இப்பூமியிலுள்ள அனைத்தும் வீழ்ந்து போகும் போது மக்கள் அழுது புலம்புவார்கள். மிகக் குறிப்பாக மதத்தின் மூலமாக தம்மை வளமைப்படுத்தியவர்களை கர்த்தர் அழிக்கத் தவறவே மாட்டார். கர்த்தர் தாமே உருவாக்கிய இந்த அழகிய உலகை இப்படியாக அழிப்பார் என்பதை நாம் அறிந்து அதனை விசுவாசிப்பது மிகவும் முக்கியமானது.
இச்சமயத்தில் இயேசு கிறிஸ்துவினுடைய முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்ற மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் இப்பூமியை ஆயிரம் வருடங்கள் அரசாளும்படி கர்த்தர் அவர்களை அனுமதிப்பார். பரிசுத்தவான்கள் இப்பூமியிலிருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்து தம்முடைய விசுவாசத்தைக் காப்பதற்கு இரத்த சாட்சியாகியமைக்கு ஈடு செய்யும் விதமாக கர்த்தர் தேவனுடைய ராஜ்யத்தைக் கொடுப்பார். பத்து நகரங்களின் மீதும் ஐந்து நகரங்களின் மீதும் இரண்டு நகரங்களின் மீதும் கர்த்தர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆயிரம் வருடங்கள் அரசாளும்படி செய்வார். இதன் பிறகு புதிய வானத்தையும் புதிய பூமியையும் அவர்களுக்கு நித்தியமாக வழங்குவார்.
அப்படியானால் முழு பிரபஞ்சத்திலும் மிகவும் அழகிய கோளான பூமியை கர்த்தர் ஏன் அழிக்கப் போகிறார்? இந்த கோளாகிய பூமியில் மட்டுமே மீன்களால் ஆறுகளில் நீந்த முடியும். காட்டு மிருகங்களால் காடுகளில் திரிய முடியும். மேலும் மனிதர்களால் வாழ முடியும். இவ்வுலகில் பாவம் மிகுதியாகிப் போவதால் கர்த்தரால் அதனைப் பொறுக்க முடியாது. ஆகவே அவர் தனது வாதைகளின் மூலமாக இப்பூமியை முற்றிலுமாக அழித்துப் போடுவார். உலகை அழிப்பதற்கு கர்த்தர் தீர்மானித்து விட்டார்.
இரட்சிக்கப்பட்டவர்களைத் தவிர இப்பூமியில் வாழும் ஒவ்வொருவரும் ஏழு பாத்திரங்களின் வாதைகளால் அழிக்கப்படுவர். முடிவு காலத்தின் அனைத்து நீதிமான்களும் இரத்த சாட்சிகளாவதாலும் இவ்வுலகினால் துன்பறுத்தப்பட்டு நசுக்கப் பட்டமையாலும், இவ்வுலகின் கொடிய செயல்களுக்கு பதிலாக கர்த்தர் இதனை நசுக்கிப் போடுவார். இந்நேரம் வரும் போது மதத் தலைவர்களும் மக்களின் ஆத்துமாக்களை விற்பனைச் செய்த வியாபாரிகளும் அழிக்கப்படுவர். மறுபடியும் பிறக்காமல் மதத் தலைவர்களாகச் செயல்பட்டவர்கள் அனைவரையும் கொல்வது மட்டுமின்றி பிசாசுடனே கூட அவர்களையும் சேர்த்து அக்கினியும் கந்தகமும் எரிகிற நரகத்தில் வீசுவார்.
கர்த்தர் மிக நிச்சயமாக இவ்வுலகை அழிப்பார். இவ்வுலகம் அழிக்கப்படும் என்பதை நாம் உணர்ந்து சந்தேகத்தின் சிறிய அளவு சாயல்கூட இன்றி அதனை நம்ப வேண்டும். தம்முடைய மதத்தின் மூலமாக மக்களின் ஆத்துமாக்களை பண்ட மாற்றுச் செய்து தாம் மிகப் பெரியவைகளைச் செய்ததாக பெருமை பாராட்டும் அனைத்து வியாபா¢களையும் கர்த்தர் கொன்று போடுவார். கர்த்தருடைய வாதைகள் இத்தனை அருகில் இருந்தும் கூட மக்கள் தமது மன உறுதியில் மூர்க்கத்தனம் நிறைந்தவர்களாகவே உள்ளனர். இவ்வுலகின் மதத் தலைவர்களைக் கூர்ந்து பாருங்கள். கர்த்தருக்கு முன்பாக தாம் ஏதோ சரியான செயலை செய்வதைப் போல் அவர்கள் பெருமை பாராட்டுபவர்களில்லையா? இத்தகைய மக்கள் செய்வதைக் கர்த்தர் நிச்சயமாக அங்கீகரிப்பாரா?
இம்மக்களின் பாவங்களுக்காக இவ்வுலகை அழிக்கப் போகிறேன் என்று கர்த்தர் கூறினால் அதனை நாம் அப்படியே விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் கர்த்தர் கூறியவைகளெல்லாம் அந்தப்படியே நிகழும். நாம் நம்முடைய விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டும். தம்முடைய சொந்த இறையியல் தத்துவங்களை உருவாக்கி வரப் போகிற பேரழிவுகளைக் குறித்து பேசி மா¢க்கச் செய்யும் மதத் தலைவர்களைப் போல் நானிதனை இங்கு கூறவில்லை. வேத வசனங்களில் கர்த்தர் கூறியிருப்பவைகளை நாம் நம்ப வேண்டுமென்பதால் இதனைக் கூறுகிறேன். அதாவது உயிரோடிருக்கும் கர்த்தர் தனது ஏழு பாத்திரங்களின் மகா வாதைகளினால் இவ்வுலகை மிக நிச்சயமாய் அழிப்பார்.
 
 
சீக்கிரமாக அழிந்து போகும் இவ்வுலகினுள் நாம் ஆழ்ந்து போகக் கூடாது
 
சீக்கிரமாகவே அழிந்து போகும் இவ்வுலகின் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் நாம் தடித்துப் போகக் கூடாது. கர்த்தர் நமக்குக் கொடுத்ததில் நாம் திருப்தியடைய வேண்டும். கர்த்தர் விரும்புவதைப் போல் அவற்றைப் பயன்படுத்தி பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வுலகின் செல்வம் கர்த்தருக்கு ஊழியம் செய்ய மட்டுமே தேவைப்படுகிறது. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு கர்த்தர் நமக்கு கொடுத்தவைகளை சிறப்பாக பயன்படுத்தி விசுவாசமிக்க ஊழியர்களாய் நாம் வாழ வேண்டும். உலகின் செல்வங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்களாயிருக்கக் கூடாது. ஏனெனில் கர்த்தர் இவ்வுலகை அழிப்பார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம்.
இவ்வுலகின் செல்வமும் மதிப்புகளும் நித்தியமாக இருக்கும் என்றெண்ணி நம்மை நாமே முட்டாளாக்கக் கூடாது. உலகின் அனைத்து மதத்தலைவர்களையும் அவர்களைப் பின்பற்றுபவர்களையும் கர்த்தர் அழித்து போடுவார் என்பதை நாமறிந்திருப்பதால் தேவனுடைய வருகையின் நாளுக்காக நாம் காத்திருப்புடன் வாழ வேண்டும். இல்லையெனில் சீக்கிரமாக அழியப் போகும் உலகில் நாம் விழுந்து போவோம். தன்னுடைய அழிவை எதிர்பார்த்திருக்கும் உலகில் விழாமலிருக்க இப்பூமியானது அழிந்து போகும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
இந்நொடியில் கர்த்தர் உயிரோடிருக்கிறார். நேரம் வரும் போது அவர் கூறியவைகளை எல்லாம் நிறைவேற்றுவார். மறுபடியும் பிறந்தவர்களின் மத்தியில் சிலா¢ன் விசுவாசம் இன்னமும் வளர்ச்சி பெறாததாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் இவற்றை நாம் எவ்வித சந்தேகமும் இன்றி விசுவாசிக்க வேண்டும். நாம் மீண்டும் எழுந்திருக்க வேண்டும். சீக்கிரமாக அழிந்து போகும் இவ்வுலகிற்கு நம் இருதயங்களை இழக்கக் கூடாது. அதற்கு மாறாக கர்த்தா¢ன் வார்த்தை மீத தவறில்லாத அசைக்க முடியாத விசுவாசத்தை நம் வாழ்வில் வைத்து வாழ வேண்டும். சில சமயங்களில் நமது இருதயங்கள் பலவீனமடையும். ஆனாலும் உறுதியான விசுவாசத்துடன் நாம் வாழ வேண்டும்.
கர்த்தர் இவ்வுலகில் செய்யப் போகும் இவை அனைத்தும் நமக்கு அதிசயமானவை. கர்த்தர் இந்த உலகை அழித்து புதியதான கிறிஸ்துவின் ராஜ்யத்தை இங்கு கட்டாவிட்டால் நீதிமான்கள் மன வருத்தத்திற்குள்ளாவார். இதனால் தான் கர்த்தா¢ன் திட்டம் இத்தனை அதிசயமானதாயிருக்கிறது. மேலும் இதனால் தான் நீதிமான்களாகிய பா¢சுத்தவான்களுக்கு இது நம்பிக்கையளிக்கிறது.
அவிசுவாசிகள் தமது மூர்க்கத்தனத்தில் தொடர்ந்து வாழ்ந்து இப்பூமியில் அவர்கள் வாழும் நாட்களெல்லாம் இன்பத்துடன் வாழ்ந்து இதன் பிறகு அவர்கள் பரலோகத்தினுள் பிரவேசித்தால் அது நமக்கு நீதியாகத் தொ¢யாது என்பதோடு கர்த்தர் இப்படி நிகழுவதை அனுமதிக்கமாட்டார். நீதிமான்களை துன்புறுத்தி தம்முடைய பொய்களினால் அவர்களைப் பாடுபட செய்து பா¢சுத்தவான்களின் இரத்தத்தை சிந்தியவர்களை அவர் தீர்த்து அழிப்பது நீதியானதும் சா¢யானதுமாகும்.
இவ்வுலகின் பாவிகளுக்கு கர்த்தருடைய நியாயத் தீர்ப்பு வரவில்லையெனில் எத்தனையோ பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் சந்தித்தாலும் தேவனுக்காய் பற்றுதலோடு தொடர்ந்து வாழ்ந்தவர்களாகிய நீதிமான்களுக்கு இது சா¢யானதாக தோன்றுமா? ஆகவே இவ்வுலகை கர்த்தர் நியாயம் தீர்ப்பது மிகவும் சா¢யே. நோவாவின் காலத்தினுடையதைப் போல் இவ்வுலகம் மாறுகையில் கர்த்தர் முழு உலகத்தையும் தலைகீழாக்கி அதனை அழித்துப் போடுவார்.
தேவனை நாம் விசுவாசிப்பதால் உலகின் மக்கள் மீது நாம் பொறாமைப்படவே கூடாது. இவ்வுலகை நியாயந்தீர்த்து சாத்தானை எறிந்து விடுவதாகவும் அந்திகிறிஸ்துவையும் அவனைப் பின்பற்றியவர்களையும் நரகத்தின் நெருப்பில் எறிந்து விடுவதாகவும் தேவன் கூறியதால் நாம் பற்றுதலோடிருந்து காத்துமிருக்கலாம்.
இவ்வுலகம் அழிந்து போவதற்கு இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே இருக்கிறது. இவையெல்லாம் கர்த்தா¢ன் வார்த்தையாகிய தீர்க்கதா¢சனங்களின் படி நிகழ்கிறது. உலகம் முழுவதும் இறுதி காலத்தின் வாதைகள் வந்து கொண்டிருப்பதற்கான அநேக அடையாளங்களை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
வானிலைக் சீர்கேடுகளான எல் நினோ போன்றவைகளும் புதிய நோய்களான பசுவின் பைத்தியம் போன்ற நோய்களும் இன்றைய உலகை ஆட்டுகின்றன. வல்லமையில்லாத மனிதர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள் உலகைக் கவ்வி வருகின்றன. அவை மிகப் பெரும் அளவில் வருகின்றன. முன்பு கற்பனை செய்தும் பாராத அழிவுகளான பொ¢ய பஞ்சங்களும், பேரழிவுகளை உண்டாக்கும் பூமி அதிர்ச்சிகளும் உலகம் முழுவதும் ஏற்படுகின்றன.
இவையெல்லாம் நடக்கும் போது கர்த்தர் இருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். இப்பூமியில் வாழும் போது தம்முடைய பொருள் சேகா¢ப்பில் மட்டும் இச்சையுடனிருப்பவர்கள் அனைவா¢ன் மீதும் கர்த்தர் தன் தீர்ப்பை அளித்து அவர்களைத் தரைமட்டமாக்குவார் என்பதை அறிந்து வாழ வேண்டும். இன்றைய உலகில் பாவம் மிகவும் பெருகி விட்டது. இவ்வுலகம் உல்லாச புரியாகிவிட்டது. திருமணம் செய்து கொள்வதிலும் உண்பதிலும் குடிப்பதிலும் தம்முடைய வீடுகளைக் கட்டுவதிலும் மக்கள் மும்முரமாக இருப்பதால் தம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் குறித்து அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இன்றைய உலகம் ஆண் இன்னொரு ஆணுடன் பாலியல் உறவு கொள்ளும் உலகமாயிருக்கிறது. பெண்களும் ஒருவா¢லொருவர் இச்சையுடைவர்களாயுள்ளனர் (ரோமர் 1:27)
இன்றைய உலகம் நோவாவின் கால உலகைப் போல் இல்லையா? “சோடோமைட்” என்ற சொல்லின் மூலத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். சோதோம் மற்றும் கொமோரா என்ற நகரங்கள் அழிக்கப்பட்ட போது நாம் வாழும் உலகின் இன்றைய கலாச்சாரத்தைப் போன்ற கலாச்சாரமே அப்போதும் இருந்தது. இவ்வுலகம் அழுக்கும் பாவங்களும் நிறைந்த உலகாகிவிட்டது. கர்த்தர் அக்கினியை அனுப்பி அதனைச் சாம்பலாக்கும் வகையில் இது உள்ளது. அது முற்றிலும் பிசாசுகளால் பிடிக்கப்பட்ட உலகாகிவிட்டது.
 
 
கள்ளத் தீர்க்கதரிசிகள் கொல்லப்படுவார்கள்
 
கள்ளத்தீர்க்கதரிசிகள் செல்வம் சேர்ப்பதையே பின்பற்றுவர். கள்ளத்தனமாக செல்வம் சேர்ப்பர். தம்முடைய மத நிறுவனங்களுக்கு பின்னால் இவர்கள் ஒளிந்து கொள்வர் “நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் நீங்கள் செல்வந்தர்களாவீர்கள், நன்கு வாழுங்கள், உங்கள் நோய்களை குணமாக்குங்கள்” இத்தகைய ஒவ்வொரு பொய்களுக்கும் பின்னால் பொருள் சேர்க்கும் மறைவான திட்டங்கள் எப்போதும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கொரியாவில் கூட கிறிஸ்தவம் தன்னுடைய அடிப்படை விசுவாசத்தைத் தொலைத்து அழிவுக்குள்ளாகி அதிக காலமாகிவிட்டது. இயேசுவின் பெயரால் அநேக பிசாசுகளின் சக்திகள் எங்கும் பெருகியிருக்கின்றன. இன்றைய கிறிஸ்தவத்தின் உண்மை நிலை இதுவே. ஆனால் உலகின் பொருட் செல்வங்களின் மூலம் விசுவாசத்தை அளக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும், கர்த்தரின் வார்த்தையை வைத்து மந்திரம் போடுபவர்களுக்கும், கர்த்தரின் பயங்கரமான நரகத் தண்டனையும் ஏழு பாத்திரங்களின் கொடிய வாதைகளும் காத்திருக்கின்றன.
மக்களை வஞ்சிப்பவர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளால் வஞ்சிக்கப்பட்டவர்களும் ஒரே மாதிரியாகத் தீர்க்கப்படுவர் என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நாம் இவ்வுலகை பார்த்து அதனைப் பின்பற்றக் கூடாது. அதற்கு பதிலாக கர்த்தர் உயிரோடிருப்பதால் இயேசுவை விசுவாசிக்காதவர்களும் அவருக்கு எதிராக நின்றவர்களும் நீதிமான்களும் துன்புறுத்தியவர்களும் தீர்க்கப்பட்டு நித்திய மரணத்தை தண்டனையாக பெறுவர் என்பதை விசுவாசிக்க வேண்டும். இப்படியாக உலகைத் தீர்த்த பிறகு கிறிஸ்துவின் பெயரிற்காக துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்த பரிசுத்தவான்களுக்கு மிக நிச்சயமாக அவற்றிற்கேற்ற பரிசுகளை வழங்குவார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்.