• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 19-1] சர்வ வல்லமையுடையவரால் ராஜ்யம் ஆளப்படுதல் (வெளி 19:1-21)

(வெளி 19:1-21)
“இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப் பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத் தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம் பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத் தீர்க்கதரிசியுங் கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.”
 
 
விளக்கவுரை
 
வசனம் 1: இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
ஆட்டுக் குட்டியானவருடனான தமது திருமண நாள் வருகையில் தேவனாகிய கர்த்தரைப் பரிசுத்தவான்கள் போற்றுவதை இவ்வசனங்கள் விவா¢க்கின்றன. நம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு அவர்களின் இரட்சிப்பையும் மகிமையையும் வழங்கினார். ஆகவே அவர்கள் அவரைப் போற்றுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆகவே ஆகாயத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் தேவனாகிய கர்த்தரைத் தொடர்ந்து புகழுவர். ஏனெனில் அவர் அவர்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் கிருபையாக இரட்சித்ததுடன் ஆக்கினையிலிருந்தும் விடுவித்தார்.
“அல்லேலு¡யா” அல்லது “ஹல்லேலு¡யா” என்பது இரண்டு எபிரேய சொற்களால் உருவானது “ஹலால்” என்பது துதி என்றும் “யா” என்பது யொகோவா என்றும் பொருள்படும். ஆகவே இவற்றின் பொருள் “யெகோவாவிற்கு துதி” என்பதாகும். குறிப்பாக பழைய ஏற்பாட்டு சங்கீதம் 113-118 ஆகியவை “எகிப்தின் ஹலால்” என்றும், சங்கீதம் 146-150 ஆகியவை “சங்கீதத்தின் ஹலால்” என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த “சங்கீதத்தின் ஹலால்” என்பது யூத மக்களின் இன்பத்தையும் துன்பத்தையும் உள்ளடக்கிய சங்கீதமாகும். அது துன்பமான நேரங்களின் போதும் உபத்திரவங்களின் போதும் அவர்களுக்கு பலத்தை அளித்தது. மேலும் இரட்சிப்பின் நேரங்களிலும் வெற்றியின் போதும் ஆனந்தப் பாடல்களாகப் பாடப்பட்டன. கர்த்தருக்கு மட்டுமே “ஹல்லேலு¡யா” என்று பாடி புகழும் போதும் இப்பாடல்கள் பாடப்பட்டன. இவ்வுலகின் மீது ஊற்றப்பட்ட தேவனின் தீர்பாகிய மகாவாதைகள் உண்மையும் நீதியுமாயிருப்பதாலும் இரட்சிப்பு, வல்லமை, மற்றும் மகிமை ஆகியவை கர்த்தருக்கு மட்டுமே சொந்தமானவை.
 
வசனம் 2: தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
தேவனாகிய கர்த்தர் பரிசுத்தவான்களுக்காக பலிதீர்ப்பார். இதற்காக ஏழு பாத்திரங்களின் வாதைகளை பூமியின் மீதுள்ள அனைத்து மதவாதிகள் மீதும் அனைத்து அவிசுவாசிகளின் மீதும் ஊற்றுவார். இது உண்மையும் நீதியும் நிறைந்த கர்த்தா¢ன் தீர்ப்பாகும். இவ்வுலகின் மதவாதிகள் பாவமற்ற கர்த்தரின் நீதியின் ஊழியர்களைக் கொன்றதால் கர்த்தரால் அவர்கள் நித்தியமாக தீர்க்கப்பட தகுதியானவர்களே.
இவ்வுலக மதவாதிகளால் கொல்லப்படும்படி கர்த்தரின் ஊழியர்கள் இப்பூமியின் மீது தீங்கு எதையும் செய்தார்களா? இல்லை. ஆயினும் கூட தேவனாகிய கர்த்தா¢ன் பிள்ளைகளைக் கொல்வதற்காக உலகின் அனைத்து மதவாதிகளும் ஒன்று சேர்ந்தனர். ஆகவே இந்த கொலையாளிகளின் மீது கர்த்தர் ஏழு பாத்திரங்களின் வாதைகளை ஊற்றுவது நீதியாகும். இது கர்த்தா¢ன் நீதியை அறிவிக்கிறது.
 
வசனம் 3: மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
தேவனாகிய கர்த்தரை பரிசுத்தவான்கள் ஆகாயத்திலிருந்து போற்றுகிறார்கள். ஏனெனில் ஆட்டுக் குட்டியானவராகிய இயேசுவினுடனான திருமண நாள் வந்துவிட்டது.
“அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது” கர்த்தரால் ஊற்றப்பட்ட ஏழு பாத்திரங்களின் மகா வாதைகளினால் உலகம் அழிந்து எரிக்கப்படும் போது உருவாகும் புகையை இது இங்கு குறிக்கிறது. இப்பூமியின் அழிவு மிகவும் கொடூரமாகவும், நித்தியமாகவும் இருப்பதால் இப்பூமி மீண்டும் தனது பழைய நிலைக்கு வராது என்பதை இது காட்டுகிறது.
 
வசனம் 4: இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
பரிசுத்தவான்களுடான, தேவனாகிய இயேசுவின் திருமண நாள் வந்துவிட்டதாலும், அது ஒரு மகிமையான நிகழ்ச்சி என்பதினாலும் பரலோகத்திலுள்ள 24 மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனாகிய கர்த்தரைப் போற்றி ஆராதிக்கின்றனர். இதனால் தான் அனைத்து கர்த்தரின் ஊழியர்களும் தேவனாகிய கர்த்தரை ஆகாயத்தில் புகழுகின்றனர்.
 
வசனம் 5: மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
கர்த்தா¢ன் ஊழியர்களுக்கும், தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தமையால் இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கும், ஆட்டுக் குட்டியானவா¢ன் பரிசுத்தவான்களுடனான திருமணம், விவா¢க்க முடியாத மிகப் பெரிய ஆனந்தத்தை எடுத்து வருகிறது. சிங்காசனத்திலிருந்து வரும் ஒலி கர்த்தரைத் துதிக்கும்படி கட்டளையிடுகிறது. கர்த்தரின் ஊழியர்களுக்கும், அவரின் பரிசுத்தவான்களுக்கும் மகிழ்ந்து தேவனைத் துதிக்கும் நேரம் இப்போது வந்து விட்டது.
 
வசனம் 6: அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
தேவனாகிய கர்த்தர் ஆளுகைச் செய்யும் நேரம் வந்துவிட்டதால் கர்த்தா¢ன் பரிசுத்தவான்களும் அவரின் ஊழியர்களும் ஆற்றைப் போல் ஓடும் நித்தியமான சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரம் இதுவே. இதனால்தான் தேவனாகிய கர்த்தரை அவர்கள் புகழுகின்றனர். இந்த பூமியின் மீது கொடிய வாதைகள் ஊற்றப்பட்ட போதிலும் பரிசுத்தவான்கள் நம் தேவனைப் புகழுகிறார்கள். ஏனெனில் தேவனாகிய கர்த்தரால் தாம் ஆளப்படப் போகும் நேரம் வந்துவிட்டது. அதாவது கர்த்தர் தமது எல்லாப் பரிசுத்தவான்களையும் மகிமைப்படுத்தும் நேரம் இதுவே. இச்சமயத்தில் பரிசுத்தவான்களின் துதியின் ஒலியானது இடிமுழக்கங்களைப் போலவும் நீர் ஓடுவதைப் போலவும் இருக்கும். தேவனுடைய ராஜ்யத்தின் திருமணப் பந்தியானது பரிசுத்தவான்களின் அழகிய போற்றுதல்களுடன் இப்படியாகத் தொடங்கும்.
 
வசனம் 7: நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
கர்த்தரால் அனுப்பப்பட்ட ஏழு பாத்திரங்களின் வாதைகள் இப்போது முடிவுற்றன. அனைத்துப் பரிசுத்தவான்களும் மகிழ்ந்து கனி கூறும் நேரம் வந்துவிட்டது என இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது. பரிசுத்தவான்கள் நம் தேவனைத் திருமணம் செய்து அவருடனே கூட அவருடைய ராஜ்யத்தில் வாழும் நாள் இப்போது வந்துவிட்டதால் பரிசுத்தவான்கள் இங்கு மகிழ்ந்து களி கூறுகிறார்கள். பரிசுத்தவான்களுடன் வாழும்படியாக நம்முடைய தேவனாகிய கர்த்தர் தன்னுடைய புதிய வானத்தையும் புதிய பூமியையும், பரிசுத்த நகரத்தையும் அதன் தோட்டங்களையும், அனைத்து மகிமையையும் செல்வத்தையும் ஆயத்தம் செய்து அவர்களுக்காக காத்திருக்கிறார். இச்சமயமுதல் பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட நித்தியமாய் வாழ்ந்திருப்பர்.
 
வசனம் 8: சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
பரிசுத்தவான்களுக்கு தேவன் புதிய ஆடைகளைக் கொடுத்தார். இது மென்மையான பஞ்சினால் செய்யப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் யாவரும் இவ்வாடைகளால் அணிவிக்கப்படுவர். வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தர் பரிசுத்தவான்களைத் தமது பரலோகத்தின் ஆடைகளால் அணிவிப்பார். இந்த பரலோகத்தின் மென்மையான பஞ்சினால் செய்யப்பட்ட ஆடைகள் வேர்வையினால் ஈரமாகாது. தேவனாகிய கர்த்தர் அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தினாலே நாம் ஆட்டுக் குட்டியானவா¢ன் மணவாட்டிகளானோமே தவிர நம்முடைய மனித முயற்சியினாலும் முதலீடுகளினாலும் அல்லவென்று இது நமக்குக் கூறுகிறது.
அந்திகிறிஸ்துவால் அணியப்பட்ட இரத்தாம்பர ஆடைகளுக்கு மாறாக இந்த மெல்லிய பஞ்சு நு¡ல் விலையேறப்பட்டதாகும். இது ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்களின் ஆடைகளைத் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது. வேர்வை இல்லாத வெண்மையான பஞ்சு நு¡ல் என்பது கர்த்தரின் கிருபையினாலும் அவரின் நீதியினாலும் ஒரு காலத்தில் அணியப்பட்ட மக்கள் இப்போது கர்த்தா¢ன் மக்களானார்கள் என்பதை இது குறிக்கிறது.
“அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே” என்ற வாக்கியத்தின் மூலம் தேவனாகிய கர்த்தரால் அளிக்கப்பட்ட கிருபையின் இரட்சிப்பின் மூலம் பரிசுத்தவான்களாகியவர்கள் தம்முடைய விசுவாசத்தை காப்பதற்காக அந்திகிறிஸ்துவாலும் அவனைப் பின்பற்றுபவர்களாலும் இரத்த சாட்சிகளாக்கப்பட்டு கர்த்தருக்கு மகிமையளித்தனர் என்று பொருள்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நீதியின் செய்கை என்பது சட்டத்தின் நீதியைக் குறிக்காமல் தம்முடைய விலையேறப்பட்ட விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கான பரிசுத்தவான்களின் இரத்த சாட்சியைக் குறிக்கிறது. அது போலவே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிகளாய் இருக்கும் அனைவரும் இறுதி காலத்தில் இரத்த சாட்சியானவர்களே, அவர்கள் தேவன் மீதுள்ள தமது விசுவாசத்தைக் காப்பதற்காக இப்பூமியிலிருக்கும் போது அந்திகிறிஸ்துவுக்கும் அவனைப் பின் பற்றியோருக்கும் எதிராக நின்று போர் புரிந்தவர்களாவர்.
இரத்த சாட்சிகளாகும்படி தமது விசுவாசத்தை ஆயத்தம் செய்ய மகா உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் பரிசுத்தவான்கள் யாவரும் பலம் பெற வேண்டும், ஏனெனில் இந்த மூன்றரையாண்டுகள் முடியும் போது அவர்கள் இரத்த சாட்சிகளாக்கப்படுவர்.
 
வசனம் 9: பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
இவ்வுலகில் கர்த்தரின் வாதைகள் முடிவிற்கு வந்த பிறகு தேவனாகிய கர்த்தர் அனைத்துப் பரிசுத்தவான்களையும் ஆட்டுக் குட்டியானவா¢ன் திருமண பந்திக்கு வரும்படி அழைப்பார் (தேவனால் ராஜ்யம் கட்டப்பட்டு ஆளப்படும்). கிறிஸ்துவின் ராஜ்யத்தில் அவர்கள் வாழும்படி அவர் அனுமதிப்பார். ஆட்டுக் குட்டியானவரின் திருமணப்பந்திக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த வாக்குத்தத்த வார்த்தையை நிறைவேற்றத் தவற மாட்டேன் என நம் கர்த்தர் கூறினார். பரிசுத்தவான்கள் தேவனைத் திருமணம் செய்து கொள்ளும் நாள் சீக்கிரமாக வரும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கித்து தம்முடைய அனைத்து பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தப்பட்ட தமது மணவாட்டிகளை அழைத்து செல்ல நம்தேவன் வருவார். அவர் தன்னுடைய மணவாட்டிகளுடன் தனது ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்.
கிறிஸ்துவினால் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப் படுகையில் தேவனுடனான அவர்களின் ஐக்கியம் நிறைவாகும். அப்பொழுது அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவில்லாத மகிமையையும் பரிசுகளையும் பெறுவர். அல்லேலு¡யா, நம்மைத் தனது மக்களாக மாற்றிய தேவனாகிய கர்த்தருக்கு நான் நன்றி கூறி அவரைத் துதிக்கிறேன்.
 
வசனம் 10: அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
பரிசுத்தவான்கள் தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே இந்த மகிமைகளையெல்லாம் கொடுக்க வேண்டும். பரிசுத்தவான்களால் ஆராதிக்கப்படுவதற்கும் துதிக்கப்படுவதற்கும் தகுதி வாய்ந்த ஒரே ஒருவர் நமது திரியேகக் கர்த்தரே.
“இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது” என்ற சொற்றொடரின் பொருள் இயேசுவின் சாட்சியும் தீர்க்கதரிசனமும் பரிசுத்த ஆவியானவரின் மூலமாக வரும் என்பதாகும்.
 
வசனம் 11: பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
முடிவு காலம் வருகையில் வெள்ளைக் குதிரையில் வரும் நமது தேவனாகியக் கர்த்தர் தமது நீதியினால் சாத்தானுடன் போரிட்டு அவனைக் கட்டி பாதாளத்தின் எரிகிற அக்கினிக் கடலிலே எறிவார்.
இங்கு இயேசு கிறிஸ்துவின் பெயர் “விசுவாசமிக்கவர்” மற்றும் “உண்மை” என்பதாகும். “விசுவாசமிக்கவர்” என்ற சொல்லின் பொருள் அவர் விசுவாசிக்கப்படத்தக்கவர் என்று பொருள்படும். இது அவருடைய விசுவாசமாயிருக்கும் தன்மையைக் குறிக்கிறது. அதே சமயம் “உண்மை” என்ற சொல் அவர் பொய்களிலிருந்து தொலைவிலிருக்கிறார் என்றும் கர்த்தரின் நீதியின் தீர்ப்பால் கிறிஸ்து அந்திகிறிஸ்துவை மேற்கொள்வார் எனவும் இது நம்மிடம் கூறுகிறது.
 
வசனம் 12: அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
தேவனின் கண்கள் “அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன” என்பது எல்லோரையும் நியாயந்தீர்க்கும் வல்லமை அவரிடம் இருக்கிறது என்பதாகும் “அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன” என்ற சொற்றொடர் தேவன் தன்னுடைய போரில் சாத்தானை எப்போதும் மேற்கொள்வார் என்பதையும் அவர் எங்கும் இருக்கும் சர்வவல்லமை உடையவர் என்பதையும் குறிக்கிறது.
 
வசனம் 13: இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
அவருக்கு எதிராக எதிர்த்து நின்ற தனது பகைவர்களை தனது கோபாக்கினையின் மூலம் தீர்ப்பதின் மூலம் தேவன் பரிசுத்தவான்களின் பகைவர்களைப் பலி வாங்குவார். இந்த கர்த்தர் இயேசு கிறிஸ்துவேயாகும். அவர் தன்னுடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்ததைப் போல் அவர் இவ்வுலகிற்கு மனித சா£ரத்தில் வந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமக்குமாறு யோவானால் ஞானஸ்நானம் பெற்று அவற்றை சிலுவைக்கு எடுத்து சென்று அனைத்து மனிதர்களின் பாவங்களையும் மறைந்து போகும்படிச் செய்தார்.
“இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்.” இந்த இரத்தம் கிறிஸ்துவின் இரத்தத்தைக் குறிக்கவில்லை. அது தேவனுடைய அங்கியின் மீது தெளிக்கப்பட்ட பகைவர்களின் இரத்தத்தைக் குறிக்கிறது. அவர் தனது கொடிய நியாயத் தீர்ப்பின் வாதைகளை அவர்களுக்கு எடுத்து வந்து தனது வல்லமையான கால்களால் அவர்களை நசுக்கிப் போடுவார்.
“தேவனுடைய வார்த்தை” என்பது இயேசுவின் பண்புகளைக் குறிக்கிறது. தேவன் தம்முடைய வல்லமையான வார்த்தையால் எல்லாவற்றையும் செய்வதால் கர்த்தா¢ன் வார்த்தை என்ற பெயரும் அவருக்குண்டு.
 
வசனம் 14-16: பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
தேவனாகிய கர்த்தா¢ன் போர் வீரர்கள் அவரின் கிருபையின் மகிமையை தரித்தவர்களாய் எப்போது அவரின் பணிகளைச் செய்கின்றனர். தேவன் தனது வாயின் வார்த்தைகளினால் எப்போதுமே நமக்கு வாக்குத்தத்தம் செய்கிறார், மற்றும் அவர் தனது வல்லமையால் இந்த வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுகிறார். ராஜாதி ராஜாவும், தேவாதி தேவனுமாகிய இயேசு கிறிஸ்து உலகைத் தீர்த்து சாத்தானை அழிப்பார்.
 
வசனம் 17: பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
சாத்தானுடனும், அவனைப் பின்பற்றுவோர்களுடனும் இவ்வுலகமானது இயேசு கிறிஸ்துவால் அழிக்கப்படும். இவ்வுலகின் அழிவானது கர்த்தரின் விருந்து என வேதாகமம் விவா¢க்கிறது.
 
வசனம் 18: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
தேவனாகிய கர்த்தரின் மிகப் பெரிய வாதைகள் முடிவுறும் போது முழு உலகமும் அதில் வாழும் யாவரும் மரணத்திற்குள்ளாவதால் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் இந்த இறந்து போனவைகளின் சடலங்களை உண்டு தமது வயிற்றை அவற்றால் நிரப்பும் என்று வார்த்தை நம்மிடம் கூறுகிறது. கர்த்தர் ஏழு பாத்திரங்களின் வாதைகளை இப்பூமியின் மீது ஊற்றுவதால் இது நிகழும். நம் தேவன் நம்மிடம் கூறினார், “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் (மத்தேயு 24:28).” முடிவு கால உலகில் அழிவும் மரணமுமே இருக்கும். பாவிகளுக்கு நரகத் தண்டனையும் காத்திருக்கும். ஆனால் பரிசுத்தவான்களுக்கு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஆளுவதற்கான ஆசீர்வாதம் கிட்டும்.
 
வசனம் 19: பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
சாத்தானின் ஊழியனான அந்திகிறிஸ்துவும் அவனைப் பின்பற்றுவோரும் தமது முடிவு வரை கர்த்தா¢ன் ஊழியர்களுடனும் அவா¢ன் பரிசுத்தவான்களுடனும் எதிர்த்து நின்று அவர்களை வெற்றி பெற முயலுவான். ஆனால் நமது தேவன், ராஜாதி ராஜாவாக இருப்பதினாலே அந்திகிறிஸ்துவையும் கள்ளத் தீர்க்கதரிசியையும் பிடித்து அக்கினிக் கடலில் எறிவதோடு தமது வார்த்தையின் பட்டயத்தினால் அவர்களின் ஊழியர்களையெல்லாம் கொல்லுவார்.
 
வசனம் 20: அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம் போக்கின கள்ளத் தீர்க்கதரிசியுங் கூடப் பிடிக்கப் பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
“மிருகம்” என்பது அந்திகிறிஸ்துவைக் குறிக்கிறது “கள்ளத்தீர்க்கதரிசி” என்பவன் அந்திகிறிஸ்துவின் ஊழியனாவான். அவன் அதிசயங்களையும் அடையாளங்களையும் செய்து சத்திய வார்த்தையிலிருந்து மக்களைத் திருப்புவான். சாத்தானையும், மிருகத்தையும் (அந்திகிறிஸ்து) கள்ளத்தீர்க்கதரிசியையும், அந்திகிறிஸ்துவின் சிலையை ஆராதித்து கர்த்தரை எதிர்த்து நின்ற பரிசுத்தவான்களையும் எதிர்த்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் எதிர்த்த சாத்தானைப் பின்பற்றியவர்களையும் நம் தேவனாகிய கர்த்தர் அழிப்பார்.
இங்கு “கந்தகம் எரிகிற அக்கினிக் கடலிலே” என்பது நரகத்தைக் குறிக்கிறது. நரகம் வேறு, பாதாளம் வேறு. பாதாளத்தில் சாத்தானின் படையினர் தற்காலிகமாக கட்டப்பட்டிருப்பர். ஆனால் “அக்கினிக் கடலானது” அவர்கள் தம் நித்திய தண்டனையை அனுபவிக்கும் இடமாகும். குறிப்பாக கர்த்தரின் தண்டனை மற்றும் நியாயத் தீர்ப்பைக் குறிப்பிடும் போது அக்கினியும் கந்தகமும் வேதாகமம் முழுவதும் கூறப்படுகிறது.
இவ்வுலகம் அழிக்கப்பட்ட பிறகு நம் தேவன் இவ்வுலகிற்கு தனது பரிசுத்தவான்களுடன் திரும்பி வந்து முதல் காரியமாக சாத்தானையும் அவனது ஊழியர்களையும் அழித்து பிறகு கிறிஸ்துவின் ராஜ்யத்தைத் திறப்பார். அதன் பிறகு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஆயிரம் வருடங்களாக பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட வாழ்வர்.
 
வசனம் 21: மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
தேவனாகிய கர்த்தரின் வாயிலிருந்து வெளி வந்த வார்த்தையினால் இவ்வுலகம் படைக்கப்பட்டது. அதுபோலவே அவரின் வாயிலிருந்து வெளி வரும் நியாயத் தீர்ப்பின் வார்த்தையால் கர்த்தரின் எதிரிகள் யாவரும் அழிக்கப்படுவர். அதன் பிறகு கிறிஸ்துவின் ராஜ்யம் இப்பூமியில் நிறுவப்படும். ஆகவே பரிசுத்தவான்கள் தமது நம்பிக்கையை கிறிஸ்துவின் ராஜ்யத்தின் மீது வைத்து சாத்தானையும், அந்திகிறிஸ்து மற்றும் அவனின் கூட்டாளிகளையும் எதிர்த்துப் போராடி விசுவாசத்துடனே இரத்த சாட்சிகளாக வேண்டும்.