• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 20-2] மரணத்திலிருந்து வாழ்க்கைக்குள் எப்படிச் செல்வோம்? (வெளி 20:1-15)

2021.04.24 34
(வெளி 20:1-15)
 
கர்த்தர் இவ்வுலகத்தை அழித்து அதற்கு பதிலாக புதிய வானத்தையும், புதிய பூமியையும் நமக்கு அளிக்கையில் இவ்வுலகில் வசித்த ஒவ்வொரு பாவியையும், அவனுடைய/அவளுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டவர்களையும் உயிருடன் எழுப்பப்போவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இங்கு வசனம் 13 கூறுகிறது “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” தண்ணீரில் போடப்பட்ட ஒருவனின் சரீரத்தை மீன்கள் சாப்பிட்டிருக்கும். அதே வேளை எரிக்கப்பட்ட ஒருவனின் உருவத்திற்கு எவ்விதமான தடயமும் இருக்காது. ஆயினும் முடிவு காலம் வருகையில் கர்த்தர் எல்லோரையும் உயிரோடெழுப்பி அவர்களை பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பும்படி தீர்ப்பார் என வேதாகமம் இங்கு கூறுகிறது. அவர்கள் சாத்தானால் முழுங்கப்பட்டவர்கள் அல்லது பாதாளத்தினால் மரணத்திற்குள்ளாகியவர்கள் அல்லது கருகிச் செத்தவர்கள் என்பது பொருட்டல்ல.
கர்த்தருக்கு முன்பாக ஜீவ புத்தகம் இருக்கிறது. அதில் நித்தியமான பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கப் போகிறவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அங்கு செய்கையின் புத்தகமும் இருக்கிறது. இதில் நரகத்திற்குள் எறியப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த செய்கையின் புத்தகத்தில் ஒருவர் இப்பூமியில் வாழ்ந்த போது செய்த பாவங்கள் யாவும் எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாம் கர்த்தரின் அருளின்படி தீர்மானிக்கப்படுகின்றன.
 
 
கர்த்தரிடம் இரண்டு வகையான புத்தகங்கள் உள்ளன
 
கர்த்தர் மனிதர்களைத் தனது சொந்த வரையறைகளின்படி இரண்டு குழுக்களாகப் பிரித்துள்ளார். மரித்தவர்கள் அனைவரும் உயிரோடெழுப்பப்பட்டு அவருடைய இரண்டு புத்தகங்களுக்கு முன்னால் நின்று நியாயந்தீர்க்கப்பட வேண்டுமென கர்த்தரால் தீர்மானிக்கப்பட்டது. உலகில் இருக்கும் போது இயேசுவை விசுவாசித்து தம்முடையப் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பரலோக ராஜ்யம் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். வேறு வார்த்தையில் கூறினால் பரலோக ராஜ்யத்திற்குள் செல்வது யார் மற்றும் நரகத்திற்குள் எறியப்படப்போவது யாரென கர்த்தர் ஏற்கனவே நியமித்துள்ளார்.
ஆகவே மரித்துப் போன அனைவரையும் கர்த்தர் உயிரோடெழுப்பி தம்முடைய புத்தகங்களைத் திறந்து இவை இரண்டு புத்தகங்களில் எப்புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்ப்பார். ஜீவ புத்தகத்தில் யாருடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்புவார். அதற்கு மாறாக எவருடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் காணப்படவில்லையோ அவர்கள் நரகத்திற்குள் வீசி எறியப்படுவர். கர்த்தரால் நியமிக்கப்பட்ட இவைகளை நாமறிந்து அவற்றை விசுவாசிப்பது அவசியமானது.
யாரைப் பரலோகத்திற்கு அனுப்புவது மற்றும் யாரை நரகத்திற்கு அனுப்புவது என்பதைத் தீர்மானிக்கும்படி மரித்துப் போன அனைவரையும் உயிரோடெழுப்பி அவர்களைத் தீர்ப்பார். ஜீவ புத்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவா அல்லது செய்கையின் புத்தகத்தில் (நியாயத் தீர்ப்பின் புத்தகம்) அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பதைப் பொறுத்து அவர்களைத் தீர்க்கப்போவது கர்த்தரால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
தனக்கு முன்பாக நிற்கப் போகும் அனைவருக்காகவும் கர்த்தர் இரண்டு இடங்களை ஆயத்தம் செய்துள்ளார். அவை பரலோகமும் நரகமுமாகும். நரகம் என்பது அக்கினிக் கடலாகும். அங்கு அக்கினியும் கந்தகமும் எரிந்துக் கொண்டிருக்கும். ஜீவ புத்தகத்தில் தம் பெயர்கள் எழுதப்படாதவர்கள் அக்கினிக் கடலில் எறியப்படுவார்களெனவும், தம்முடையப் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டவர்கள் பரலோகத்தினால் வரவேற்கப்படுவார்கள் எனவும் கர்த்தர் தீர்மானித்துள்ளார்.
பரலோகத்தில் ஜீவத் தண்ணீர் ஓடும் ஆற்றின் அருகில் ஜீவ விருட்சம் இருக்கிறது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு பன்னிரண்டு வகையான கனிகளை அது தரும். இந்த அழகிய பரலோகத்தில் பரிசுத்தவான்களிடம் நோயும் இருக்காது, வேதனையும் இருக்காது. அவர்கள் கர்த்தருடனே கூட மகிழ்ச்சியுடனிருப்பர். இந்த பரலோகத்தைப் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கும் படியாக கர்த்தர் தீர்மானித்துள்ளார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
மறுபுறம் இயேசுவை விசுவாசிக்காதவர்களின் பெயர்கள் செய்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. பாவிகள் இவ்வுலகில் வாழும் போது செய்த அனைத்துச் செய்கைகளும் இப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளதால் இதில் எழுதப்பட்டுள்ள பாவங்களுக்காகவும் இயேசுவை விசுவாசிக்காதமைக்காகவும் அவர்களைத் தண்டிக்க, எரியும் கடலில் தள்ளிவிடப் போவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இங்கு மிகவும் முக்கியமானது நம் பெயர்கள் எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதில் இருக்கிறது.
இப்பூமியில் நாம் வாழும் போது இப்பூலோக வாழ்வில் தான் அனைத்துமிருக்கிறது என நாம் எண்ணக் கூடாது. சங்கீதம் 90:10 நம்மிடம் கூறுகிறது “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” நாம் இவ்வுலகில் 70 அல்லது 80 ஆண்டுகளுக்கு வாழ நோ¢ட்டாலும், சீக்கிரமாகவோ அல்லது சிறிது காலம் பொறுத்தோ கர்த்தரின் முன்பாக நிற்க வேண்டும். இறுதியாக நாம் தேவனுக்கு முன்பாக இப்படி நிற்கையில் நம்முடைய பெயர்கள் எல்லாம் எப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதே மிகவும் முக்கியமானது. அது ஜீவப் புத்தகமாகவுமிருக்கலாம், செய்கையின் புத்தகமாகவும் (நியாயத் தீர்ப்பின் புத்தகம்) இருக்கலாம். இதுவே நாம் பரலோகத்திற்கு வரவேற்கப்படுவோமா அல்லது அக்கினிக் கடலில் தள்ளி விடப்படுவோமா என்பதைத் தீர்மானிக்கிறது. இப்பூலோக வாழ்வு அனைத்துமல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
 
ஜீவபுத்தகத்தில் தமது பெயர்கள் எழுதப்பட்டவர்கள்
 
லு¡க்கா 16:19-26ஐ நோக்குவோமாக, “ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப் படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.”
இந்த வசனங்களின் மூலமாக பரலோகமும் நரகமும் உண்மையாகவே இருக்கின்றன என இயேசு நமக்கு போதிக்கிறார். இவ்வசனங்களில் காணப்படும் ஐசவா¢யவானைப் போல் அநேக மக்கள் பரலோகம் மற்றும் நரகம் ஆகியவை இருப்பதை விசுவாசிப்பதில்லை. ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை ஆவான். பிச்சைக்காரனாகிய லாசரு ஆபிரகாமின் மடிக்கு எடுத்துச செல்லப்பட்டான் என்று இங்கு கூறுவதன் மூலம் ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்ததைப் போன்று லாசருவும் கூட இயேசுவைத் தனது இரட்சகராக விசுவாசித்து தனது பாவங்களுக்கு மன்னிப்¨ப் பெற்று அதன் மூலமாக பரலோக ராஜ்யத்திற்கு சென்றான் என பொருள்படுகிறது. இவ்வுலகில் நாம் வாழும் போது லாசருவின் முடிவையும், ஐசுவரியவானின் முடிவையும் நாம் தியானிக்க வேண்டும்.
இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் இப்பூலோக வாழ்வு அனைத்துமல்ல என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஒருவர் இப்பூமியில் எத்தனைப் பாடுகளுடன் வாழுகிறார் என்பது பொருட்டல்ல. மிஞ்சிப் போனால் 70-80 வருடங்களால் அவனால்/அவளால் வாழ முடியும் என்பது மட்டும் பொருட்டல்ல. முடிவில் அவனிடம்/அவளிடம் இருக்கப் போவது வருத்தமும் சஞ்சலமுமே.
ஆகவே நாம் வாழும் போது மரணத்திற்கு பின்வரும் வாழ்விற்கும் ஆயத்தம் செய்ய வேண்டும். நாம் நம்முடைய விசுவாசத்தை பிள்ளைகளுக்கும் ஊட்ட வேண்டும். இப்படி செய்வதால் அவர்களாலும் நல்லதொரு இடத்திற்குச் செல்ல முடியும். இப்பூமியில் ஒரு மனிதன் வாழ்ந்து கர்த்தருக்கு முன்பாக நின்று அவரால் தீர்க்கப்பட்டு அக்கினி கடலிற்குள் வீசப்படுவது எத்தனைத் துயரமானதாயிருக்கும்.
செய்கையின் புத்தகத்தில் யாருடைய பெயர்களெல்லாம் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் அக்கினிக்கடலில் தள்ளி விடப்பட வேண்டும் என கர்த்தர் தீர்¡மானித்ததை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது. அக்கினிக் கடலை நாம் தவிர்ப்பதற்கு ஒரேயொரு வழிதானிருக்கிறது. அது நம்முடைய பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும். அக்கினி கடலிலிருந்து நாம் தப்பிப்பதற்கான ஒரே வழி நம் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாகும்.
அப்படியானால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்படுவது எப்படி? லாசருவை ஆபிரகாமின் மடிக்கு எடுத்துச் சென்றதைப் போல் கர்த்தரின் வார்த்தை மூலமாக கர்த்தரின் நீதியின் செய்கையை (ரோமர் 5:18) விசுவாசித்து நமது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். ஜீவ புத்தகத்தில் நமது பெயர் எழுதப்பட வேண்டுமானால் நாம் இயேசுவை விசுவாசிக்க வேண்டும். இயேசுவே கர்த்தராவார். நமது மேசியாவும் அவரே. மேசியா என்பதின் பொருள் பாவத்திற்குள் விழுந்தவர்களை இரட்சிப்பவர் என்பதாகும். இயேசுவால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும். அவா¢ல்லாவிட்டால் நம்முடைய பாவங்களினிமித்தம் கர்த்தரால் தீர்க்கப்பட்டு அக்கினிக் கடலில் தள்ளப்படுவோம்.
கர்த்தருக்கு முன்பாக இப்பூமியில் பாவம் செய்யாமல் இருப்பவன் யார், மேலும் நமக்கு மத்தியில் 100 சதவீகிதம் செய்கைகளில் பரிசுத்தமுள்ளவர்கள் யார்? யாருமேயில்லை. நாம் அனைவரும் குறைபாடுகளை உடையவர்களாதலால் நம்மால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாது. இந்த நம்முடையப் பாவங்களுக்காக நாமனைவரும் அக்கினிக் கடலிற்குள் தள்ளப்பட வேண்டியவர்கள்.
நம்முடைய பாவங்களுக்காக அக்கினிக் கடலினுள் தள்ளப்பட வேண்டிய நம்மை இரட்சிக்க கர்த்தர் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார் “இயேசு” என்ற பெயா¢ன் பொருள் “தமது மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பவர்” என்பதாகும் (மத்தேயு 1:21). ஆகவே இயேசு இவ்வுலகிற்கு வந்து தமது நீதியின் செயலால் நம்மை நமது அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்ற உண்மையை விசுவாசிப்பதின் மூலமே நம்மால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
 
 
அக்கினிக் கடலிற்குள் தள்ளிவிடப்படுபவர் யார்?
 
அக்கினிக் கடலிற்குள் யார் தள்ளிவிடப்படுவர் என வெளி 21:8 நம்மிடம் கூறுகிறது “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.”
முதன்முதலாக “பயப்படுகிறவர்கள்” என்ற வார்த்தையின் மூலம் வேதாகமம் யாரைக் குறிப்பிடுகிறது? இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக தம்முடைய அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்புப் பெறத் தவறிய சாதாரன கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. இவர்கள் எப்படியோ இயேசுவை விசுவாசித்த போதிலும் கர்த்தருக்கு முன்பாக நிற்க இவர்கள் பயப்படுவர். இத்தகைய மனிதர்கள் அக்கினிக் கடலில் தள்ளிவிடப்பட வேண்டும் என கர்த்தர் தீர்மானித்துள்ளார். அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலை பாதகர்களும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட வேண்டுமென கர்த்தர் தீர்மானித்துள்ளார்.
கலாச்சாரப்படி கொரியாவில் அநேக விக்கிரகாராதனைக்காரர்கள் இருந்தனர். இப்பொழுதும் கூட கர்த்தரால் படைக்கப்பட்டவைகளுக்கு முன்னால் மக்கள் வணங்குவதையும் அவைகளைப் பூஜிப்பதையும் நாம் சாதாரணமாகக் காணலாம். மக்கள் அறிவற்றவர்களாகவும் முட்டாள்களாகவும் இருப்பதால் அப்படி செய்கிறார்கள். மக்கள் உயிரற்ற உருவங்களை தெய்வங்களாக எண்ணி அவற்றை வணங்குவதை கர்த்தர் வெறுக்கிறார்.
கர்த்தர் மனிதனைத் தனது சாயலாகவே படைத்தார் (ஆதியாகமம் 1:27). படைக்கப்பட்ட அனைத்திற்கும் மனிதனே எஜமானன். இதனால்தான் நாம் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரைப் போன்ற சாயலுடையவர்களாக நாம் இருப்பதனால், அவரைப் போன்றே நாமும் சதாகாலமும் உயிரோடிருப்போம். நம்முடைய மரணத்திற்கு பிறகு நிரந்தரமான உலகம் நமக்குண்டு. இதனால் தான் நித்தியமான கர்த்தராகிய தம்மை வணங்கும்படி அவர் நம்மிடம் கூறினார். அப்படியானால் கர்த்தரின் படைப்புகளை நாம் வணங்கினால் என்ன நடக்கும்? கர்த்தருக்கு முன்பாக மிகப் பெரிய பாவத்தை செய்தவர்களாவோம். ஏனெனில் கர்த்தர் மிகவும் வெறுக்கும் சிலை வணக்கத்தை நாம் கடைபிடிக்கிறோம். மக்கள் இத்தனை முட்டாள்களாகவும் மூர்க்கர்களாகவும் இருக்க முடியும். இத்தகைய இடம் மாறிய விசுவாசத்தினை உடையவர்கள் அக்கினிக் கடலில் தள்ளிவிடப்படுவர் என கர்த்தர் தீர்மானித்துள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நரகத்தினுள் எறியப்படும் மக்கள் இரண்டுமுறை மரிப்பர். கர்த்தர் தீர்மானித்திருப்பது இதுவேயாகும். முதலாவது மரணமானது இவ்வுலகின் பாடுகளினால் உருவான வாழ்க்கைக்கு பிறகு இவ்வுலகில் இளைப்பாறும் வாழ்க்கைக்கு பிறகு வருகிறது. ஒருவர் முதலில் நான்கு கால்களுடனும் பிறகு இரண்டு கால்களுடனும் கடைசியாக மூன்று கால்களுடனும் நடந்து இறுதியில் மரித்துப் போவர் எனக் கூறப்டுவது மனிதர்களேயாகும்.
இப்படியாக ஒருமுறை மரித்த பிறகு கர்த்தருக்கு முன்பாக மனிதர்கள் பாவிகளாய் இருக்கையில் அவர்கள் அனைவரும் தமது நியாயத் தீர்ப்பை சந்திப்பர். இப்போது தான் இரண்டாவது மரணம் நிகழும். இது என்றென்றும் நிகழும். அவர்களை நோக்கி வரும் இது அக்கினிக் கடலில் தள்ளப்படுவதாகும். இந்த அக்கினிக் கடலில் மரித்துப் போனால் இந்தத் துன்பத்திலிருந்து விடுதலைக் கிட்டும். ஆனால் இந்த இடத்தில் அவர்கள் மரணத்தை வாஞ்சையோடு தேடினாலும் அது அவர்களை விட்டு ஓடிப்போகும்.
நித்தியமாக வாழும் ஆசை அனைவா¢டமும் இருக்கிறது. யாரும் மரிப்பதை விரும்புவதில்லை. மக்கள் விரும்புவதைப் போன்று மனிதர்களின் வாழ்க்கையானது நிரந்தரமானதாகும். இதனால் தான் ஒருவா¢ன் மரணத்தை வேதாகமம் மரணம் எனக் கூறாமல் தூங்குகிறார் எனக் கூறுகிறது. எனவே நம்மை அக்கினிக் கடலில் தள்ளிவிடச் செய்யும் இரண்டாம் மரணத்திலிருந்து நாமனைவரும் தப்ப வேண்டும். நம்முடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்படுவதற்கு நாமனைவரும் எதனைச் செய்ய வேண்டுமென நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட வேண்டுமானால் இயேசுவை நாம் மிகச் சரியாக விசுவாசிக்க வேண்டும்.
இயேசு, புத்தர், கன்பூசியஸ், முகம்மது ஆகிய அனைவரும் மனிதர்களெனவும், நல்ல மனிதர்களாக வாழ்வது போதுமெனவும் அநேகர் எண்ணி அதனைக் கூறுகிறார்கள். இதனால்தான் இயேசுவை மட்டும் அவர்கள் ஏன் விசுவாசிக்க வேண்டுமென நாம் கூறுவதைப் புரிந்து கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் தவறான சிந்தனைகளாகும். நீங்களும் நானும், மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்தும் கர்த்தருக்கு முன் வெறும் படைக்கப்பட்ட மனிதர்களாவோம். ஆனால் நம் இயேசுவின் பிறப்பையும் அவர் இவ்வுலகில் வாழும் போது நிறைவேற்றியவைகளையும் அறிந்தால் அவர் மற்ற நான்கு பெரியவர்களை போன்று வெறும் மனிதர் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவரே கர்த்தராவார். அவர் மனித குலத்தை இரட்சிக்க மனித சாயலாக இப்பூமிக்கு வந்து தனது ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு நம்முடைய அனைத்துப் பாவங்களுக்குமான தண்டனையை நமது இடத்திலிருந்து பெற்று மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை செய்யும் தனது பணியை நிறைவேற்றினார்.
கிறிஸ்துவின் பிறப்பானது சாதாரண மனிதர்களின் பிறப்பிலிருந்து வேறுபட்டது. ஆணும், பெண்ணும் ஐக்கியமாகும் போது குழந்தைகள் பிறக்கின்றன. இப்படித் தான் அனைவரும் இவ்வுலகில் பிறந்தனர். ஆனால் எந்த ஆண்களையும் அறியாத கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்தார். மனிதர்களாகிய நம்மை இரட்சிக்க ஏசாயாவினால் 700 ஆண்டுகளுக்கு முன்பாக முன்கூறப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையை நிறைவேற்ற கர்த்தராகிய இயேசு மனித சரீரத்துடன் இவ்வுலகினுள் கன்னி மரியாளின் சரீரத்தின் மூலமாகப் பிறந்தார் (ஏசாயா 7:14). அவர் இவ்வுலகில் வாழ்ந்த போது மரித்தோரை உயிரோடெழுப்பியது மற்றும் சுகமில்லாதவர்களையும், முடவர்களையும் குணப்படுத்தியது மட்டுமின்றி உலகின் எல்லாப் பாவங்களையும் மறையச் செய்தார்.
முழு பிரபஞ்சத்தையும் படைத்த படைப்பின் தேவனாகிய கர்த்தர் இவ்வுலகிற்கு வந்து சிறிது காலத்திற்கு மனிதனாக சஞ்சரித்து மனித குலத்தை அதன் பாவங்களிலிருந்து இரட்சித்தார். முதன் முதலாக இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டியதற்கான காரணம் அவர் கர்த்தராக இருப்பதுவேயாகும். இரண்டாவதாக அவர் நம்முடைய அனைத்து பாவங்களையும் எடுத்துப்போட்டதால் நம்முடைய பெயர்களை ஜீவ புத்தகத்தில் எழுதும்படி செய்து நம்மை கர்த்தரின் பாவங்களற்றப் பிள்ளைகளாக்கினார். இவ்வுலகில் பிறந்த பிறகு நாம் எல்லாம் ஒருமுறை மரிக்க வேண்டும். மேலும் நமது மரணத்திற்கு பிறகு நாமெல்லாம் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்.
ஆனால், இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நமது எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு நமது இடத்திலிருந்து சிலுவையில் தீர்க்கப்பட்டு அவரை விசுவாசிப்போராகிய நம்மை நித்தியமான பரலோக ராஜ்யத்தில் வாழுவதற்கு ஏதுவாக்கினார். வேறு வார்த்தையில் கூறினால் நம்முடைய பாவங்களுக்கான நியாயத் தீர்ப்பிலிருந்து நம்மை விடுதலையாக்க கர்த்தர் தாமே நம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் நம்மை சுத்தமாக்கினார். இதனால் தான் நமது இரட்சகராகிய இயேசுவை நாமனைவரும் விசுவாசிக்க வேண்டும்.
இயேசு மனிதரல்ல. மனித குலத்தை இரட்சிப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தபடியால் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் பொருட்டு கன்னி மரியாளின் சரீரத்தினால் அவர் இவ்வுலகிற்கு வந்து நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நம்மை அவர் இரட்சித்ததால் கர்த்தராகிய இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவை நாம் சரியாக விசுவாசிக்கும் போது நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும். நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே ஒரு மனிதனால் பரலோக ராஜ்யத்தைக் காணவும் அதனுள் பிரவேசிக்கவும் முடியுமென கர்த்தர் நம்மிடம் கூறினார். நாமனைவரும் இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.
 
 
பரலோகத்தின் வழியாகிய இயேசு
 
பிறகு நாம் இயேசு எப்படி எல்லாப் பாவங்களையும் மறையச் செய்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு வந்து யோர்தான் நதியில் யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:13-17) மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் (அதில் உங்களுடையதும் என்னுடையதும் அடங்கும்) ஏற்றுக் கொள்ளும் விதமாக யோவானிடமிருந்து தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார். அனைத்து மனிதர்களின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானனின் கைகளின் மூலமாக மனித குலத்தின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டன. யோவானின் மூலமாக உலகின் அனைத்துப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட இயேசு சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தி அதில் மரித்தார். அதன் பிறகு மரித்தோரிலிருந்து மூன்று நாட்களில் உயிரோடெழுந்தார்.
தன்னை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என நம் தேவன் வாக்குத்தத்தம் செய்தார். இயேசு அவனின்/அவளின் அனைத்து பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு இப்பாவங்களுக்காக அனைத்து தண்டனைகளையும் சிலுவையில் ஏற்றுக் கொண்டாரெனவும் விசுவாசிக்கும் எவரையும் அக்கினிக் கடலில் தள்ளிவிடாமல் அவனின்/அவளின் பெயரை ஜீவப் புத்தகத்தில் எழுதும்படியாக கர்த்தர் தீர்மானித்தார்.
யோவான் 14:6இல் இயேசு கூறுகிறார் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” பரலோகத்திற்கான வழியாக மாறிய இயேசுவை மனித குலம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவே நமது இரட்சகர். இயேசுவே நமது கர்த்தர். இயேசுவே இவ்வுலகிலுள்ள ஒரே உண்மையான சத்தியம். மேலும் இயேசுவே ஜீவனுடைய தேவன். நம்முடைய பெயர்களெல்லாம் ஜீவ புத்தகத்தில் எழுதப்படவும், இப்படியாக பரலோக ராஜ்யத்தினுள் வரவேற்கப்படவும் இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும்.
யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதால் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். அவர் நமது இரட்சகரானார். நம்முடையப் பாவங்களுக்குத் தண்டனையாக இயேசு சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தியதின் மூலம் அவர் நமது இரட்சிப்பை முழுமைப்படுத்தியதால் இப்போது உங்களாலும் என்னாலும் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடிகிறது.
அக்கினிக் கடலில் தள்ளப்படப் போவது யாரென இயேசு தீர்மானித்துள்ளார். இதனை விசுவாசிக்காதவர்களும், பயப்படுகிறவர்களும் அக்கினிக் கடலில் தள்ளப்படுவர். அவர்களுடைய அவிசுவாசத்தினால் அவர்கள் மட்டும் அக்கினிக் கடலில் தள்ளப்படாமல் அவர்களுடைய பிள்ளைகளும் சந்ததியினரும் கூட அங்கு தள்ளப்படுவர். ஒருவருடைய ஆவிக்குரிய சரீர சம்பந்தமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொருவரும் இயேசுவை முற்றிலுமாக விசுவாசிக்க வேண்டும்.
 
 
இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றிராவிட்டால் என்னவாகியிருக்கும்?
 
மனிதர்களுக்கு தனது ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ கொடுப்பது கர்த்தர் மட்டுமே. இதனால் தான் நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். அநேக மக்களின் வாழ்வு துயரமாயிருப்பதற்கும், இவ்வுலகின் நாடுகள் விழுந்து போவதற்குமான காரணம் உங்களுக்குத் தெரியுமா? யார் அவரை வெறுத்து சிலைகளை வணங்குகிறார்களோ அவர்களை மூன்று நான்கு தலைமுறைக்கு சபிப்தாக கர்த்தர் கூறியதே இதற்கான காரணம். கர்த்தரை நேசித்து அவருக்கு ஊழியம் செய்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோரை ஆயிரந்தலைமுறையாக ஆசீர்வதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார் (யாத்திராகமம் 20:5-6).
இயேசுவை எப்படியோ ஒருவர் விசுவாசித்தால் அவன்/அவள் எவ்வித நிபந்தனையுமின்றி ஆசீர்வதிக்கப்படுவார் என்பது இதன் பொருளல்ல. கிறிஸ்துவைக் குறித்த சரியான அறிவுடன் ஒருவர் இயேசுவை விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவே கர்த்தரென்றும், அவர் இப்பூமிக்கு வந்தாரென்றும் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு அவர்களின் பாவங்களை சுத்திகா¢த்தாரென்றும், அவர்களுடைய இடத்திலிருந்து சிலுவையிலறையப்பட்டு அவர்களின் உண்மையான இரட்சகரானார் எனவும் மக்கள் விசுவாசித்தால் அதாவது இயேசுவே தமது கர்த்தரெனவும் தம் சொந்த இரட்சகரெனவும் அவர்கள் விசுவாசித்தால் அப்படி விசுவாசிப்போரின் ஆயிரந்தலைமுறையினரை ஆசீர்வதிக்கப்போவதாக கர்த்தர் கூறினார்.
அதே சமயம் இயேசுவை விசுவாசிக்காதவர்களின் மூன்று நான்கு தலைமுறையினரைச் சபிக்கப் போவதாகவும் கர்த்தர் நம்மிடம் வாக்குத்தத்தம் செய்தார். இதனால் தான் அவன்/அவள் யாரென்பதைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இயேசுவை விசுவாசிக்க வேண்டும். மேலும் இதனால் தான் நீர் மற்றும் ஆவியால் மறுபடியும் பிறப்பதைக் குறித்து அனைவரும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். இத்தகைய விசுவாசமுள்ளவர்கள் தமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற்று பரலோக ராஜ்யம் செல்வதோடு இப்பூமியிலிருக்கையில் கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த அனைத்து ஆசீர்வாதங்களையும் கூடப் பெற்றுக்கொள்வர்.
கர்த்தர் நமக்காகத் திட்டமிட்டுள்ள இவ்வார்த்தைகள் மீது நாம் சஞ்சரிக்க வேண்டும். எழுதப்பட்ட வார்த்தைக்கேற்ப நம் விசுவாசம் இருக்க வேண்டும். கர்த்தரை விசுவாசிக்காத மக்கள் அக்கினிக் கடலினுள் தள்ளப்படுவர் என்பதையும் அதற்கு மாறாக அவரை விசுவாசிப்பவர்கள் தம் பெயர்களை ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டு புதிய வானம் புதிய பூமிக்கு வரவேற்கப்படுவார்கள் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இதனை விசுவாசிக்கும் நாம் மறுபடியும் வாழுவோம் என்பதையும் நாம் விசுவாசிக்கிறோம். நாம் மறுபடியும் பிறப்பதைச் சாத்தியமாக்கியது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே.
நீரில்லாமல் யாராலும் வாழ முடியாது என்பதற்கிணங்க நற்செய்தியாகிய நீரும், நற்செய்தியாகிய இரத்தமும் நமது இரட்சிப்பிற்கு மிகவும் முக்கியமானவையாகும். இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது நம்முடைய அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார். அவர் நீரினுள் அமிழ்த்தப்பட்டு மீண்டும் வெளியே வந்தார். இதன் பொருள் அவா¢ன் சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலுமாகும். வேறு வார்த்தையில் கூறினால் நம்முடைய இடத்திலிருந்து நமது பாவங்களுக்காக நியாயத் தீர்ப்பினைப் பெற்றார். நீரிலிருந்து தேவன் வெளியே வந்தது அவா¢ன் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது. இது இதனை விசுவாசிக்கும் நமது உயிர்த்தெழுதலையும் சுட்டிக் காட்டுகிறது.
இயேசு தமது ஞானஸ்நானத்தின் மூலம் நமது அனைத்துப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்பதை முற்றிலுமாக நாம் விசுவாசிக்கிறோம். இயேசு தம்முடைய ஞானஸ்நானத்தைப் பெற்றிராவிட்டால் நமக்கு என்னவாகியிருக்கும்? அக்கினிக் கடலிலிருந்து தப்பிக்க எந்த வழியும் நமக்கு இல்லாது போயிருக்கும். எப்படி மழை இல்லாத இவ்வுலகில் யாராலும் வாழமுடியாதோ அதுபோல இப்பூகோளமானது நீரினால் உண்டானதாயிருக்கிறது. இது போலவே இயேசுவின் ஞானஸ்நானம் நமக்கு இத்தனை முக்கியமானது. அதுபோலவே அவா¢ன் சிலுவை மரணமானது நமக்கு அதே அளவு முக்கியமானது. ஏனெனில் நமக்கு பதிலாக அவர் தீர்க்கப்பட்டதை இது குறிக்கிறது. கர்த்தருடைய சாபத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் நாம் விடுவிக்கப்பட வேண்டுமானால். இயேசுவை நாம் முற்றிலுமாக விசுவாசிக்க வேண்டும். நாம் நம்முடைய பாவங்களிலிருந்து சுத்திகா¢க்கப்பட வேண்டுமானால் இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது நம்முடைய அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
மக்களைப் பயத்தினால் நடுங்கச் செய்யும் மதங்களின் விசுவாசத்தைப் போன்றதல்ல கிறிஸ்தவ விசுவாசம், எல்லோரும் இயேசுவை விசுவாசிக்க வேண்டும். மறுபடியும் பிறந்தவர்கள் விசுவாசத்தில் வளரும்பொருட்டு மறுபடியும் பிறந்த ஆலயத்திற்கு வந்து வார்த்தையைக் கேட்க வேண்டும்.
சில மக்கள் இயேசுவை விசுவாசிப்பதுடன், ஆசீர்வாதங்களைப் பெறும் பொருட்டு நற்செயல்களையும் செய்ய வேண்டுமெனக் கூறுகிறார்கள். இவையெல்லாம் பொய்யர்களின் பொய்க் கூற்றுகளாகும். நாம் நல்ல கிறிஸ்தவர்களாக இருக்கும்படி நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் தான், ஆனால் நம்முடைய இரட்சிப்பைக் குறித்த அடிப்படைப் பிரச்சனையைப் பொருத்தவரை நம்முடைய சுபாவம் தீமையானதாயிருப்பதால் சரீரப்படியான வாழ்வில் யாராலும் 100 சதவீதம் நிறைவானவர்களாய் நம்மில் யாராலும் வாழ முடியாது. இதனால் தான் நற்செயல்களின் மூலமாக ஒருவர் இரட்சிக்கப்பட முடியுமென்பவர்கள் பொய்யராவர். அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாததுடன் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அடிப்படையில் நாம் பாவம் செய்ய வேண்டியவர்கள் என்பதை நாம் உணர்ந்தால் இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானம் மற்றும் நமக்காக அவர் சுமந்த சிலுவை ஆகியவற்றை எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தை மூலமாக அறிந்து கொண்டு இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் நீதிமான்களாக முடியும். அவர்களின் இருதயங்களில் பாவங்களில்லை. ஆகவே அவர்கள் பரலோகம் செல்லும் தகுதியைப் பெற்றனர். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்து நமக்கு வழிகாட்டும்வரை நாம் எத்தனைக் கடினமாக முயன்றாலும் நம்மால் நல்லவர்களாக முடியாது.
நம்முடையப் பாவங்களை மறையச் செய்ததின் மூலம் கர்த்தர் நம்மை இரட்சித்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அக்கினிக் கடலினுள் நம்மை தள்ளிவிடுவதற்கு பதிலாக நமது பெயர்களை ஜீவ புத்தகத்தில் எழுதி புதிய வானத்தையும், புதிய பூமியையும் நமக்குக் கொடுத்து மணவாளனுக்காகத் தம்மை அழழு படுத்திக் கொண்ட மணவாட்டிகளைப் போல் மிகவும் அழகிய சுத்தமான வீடுகளையும், தோட்டங்களையும், மலர்களையும் நமக்காகக் கொடுத்தார். அவர் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் எடுத்துப் போட்டு நம்முடனே கூட தன்னுடைய ராஜ்யத்தில் நிரந்தரமாக வாழ்வார். மரணத்திற்கு பிந்திய நமது வாழ்க்கைக்காக இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆனால் நம்முடைய தற்போதைய வாழ்க்கைக்காகவும் அவரை நாம் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளின் பொருட்டும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
பரலோகத்தினால் நீங்கள் வரவேற்கப்பட வேண்டுமா அல்லது அக்கினிக் கடலினால் நீங்கள் தள்ளப்பட வேண்டுமா? உங்கள் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான செல்வத்தை அளித்துச் செல்லுகிறீர்கள்? இயேசுவின் மீதுள்ள உங்கள் விசுவாசத்திற்காக சில துன்பங்களையும் பிரச்சனைகளையும் நீங்கள் சந்தித்தாலும், இன்னமும் நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். இப்படி செய்வது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் பெரிதான ஆசீர்வாதத்தை எடுத்து வரும்.
எனக்கன்பான பரிசுத்தவான்களே கர்த்தர் தம் வார்த்தை மூலமாக நாம் ஏன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டுமெனவும் நம்முடைய குடும்பங்களும் ஏன் இரட்சிக்கப் படவேண்டுமெனவும் கூறினார். என்னுடைய நன்றிகளைக் கர்த்தருக்குத் தெரிவிக்கின்றேன்.