(வெளி 21:1-27)
“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்த நகரம் சதூரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது. அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள் அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.”
விளக்கவுரை
வசனம் 1: பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று.
முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற பரிசுத்தவான்களுக்கு நம்முடைய தேவனாகிய கர்த்தர் தனது புதியவானத்தையும், புதிய பூமியையும் கொடுக்கப் போவதாக இவ்வார்த்தைப் பொருள்படுகிறது. இந்நொடியிலிருந்து பரிசுத்தவான்கள் முதலாவது வானத்திலும் பூமியிலும் வாழப் போவதில்லை. ஆனால் புதிதான இரண்டாவது வானத்திலும் பூமியிலும் வாழ்வர். இந்த ஆசீர்வாதமானது கர்த்தரின் பரிசாகும். இதனை அவர் தனது பரிசுத்தவான்களுக்கு அளிப்பார். முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்ற பரிசுத்தவான்களுக்கு மட்டுமே கர்த்தர் இத்தகைய ஆசீர்வாதங்களை அளிப்பார்.
வேறு வார்த்தைகளில் கூறினால் இந்த ஆசீர்வாதத்தை அனுபவிக்கப் போகிறவர்கள், கிறிஸ்து அருளிய பரிசுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவ மன்னிப்பு பெற்ற பரிசுத்தவான்களாவர். பரிசுத்தவான்களின் மணவாளன் நமது தேவனாவார். இப்போதிலிருந்து மணவாளனுக்காக காத்திருக்கும் மணவாட்டிகள் அவரின் பாதுகாப்பு ஆசீர்வாதங்கள் மற்றும் வல்லமையினால் தரிப்பிக்கப்பட்டு மணவாளனாகிய ஆட்டுக் குட்டியானவரின் மணவாட்டிகளாக அவரின் மகிமையின் ராஜ்யத்தில் மகிமையுடன் வாழ்வர்.
வசனம் 2: யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப் பட்டிருந்தது.
பரிசுத்தவான்களுக்காக கர்த்தர் ஒரு பரிசுத்த நகரத்தை ஆயத்தம் செய்துள்ளார். இந்நகரமானது புதிய எருசலேமாகும். இது கர்த்தருடைய பரிசுத்தமான அரண்மனையாகும். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்காகவே இந்த அரண்மனை ஏற்படுத்தப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் இப்பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்னமே இவையெல்லாம் பரிசுத்தவான்களுக்காக இயேசு கிறிஸ்துவினுள் திட்டமிடப்பட்டது. அவர் தனது கிருபையின் ஈவாக இவை அனைத்தையும் நமக்கு அளித்தமைக்காக பரிசுத்தவான்களால் அவரைப் புகழாமல் இருக்க முடியாது என்பதுடன் தம்முடைய விசுவாசத்தினால் அனைத்து மகிமைகளையும் அவருக்களிப்பர்.
வசனம் 3: மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
இப்போதிலிருந்து பரிசுத்தவான்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடனே கூட எப்பொழுதும் வாழ்வர். இவை எல்லாம் நம் தேவனாகிய கர்த்தரின் கிருபையாகும். இவற்றை பரிசுத்தவான்கள், இரட்சிப்பின் வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு பெறுவர். தேவனுடைய ஆலயத்திற்குள் பிரவேசித்து அவருடனே வாழும் ஆசீர்வாதத்தால் தரிப்பிக்கப்பட்ட அனைவரும் தேவனாகிய கர்த்தருக்கு நித்திய காலமும் நன்றிகளையும் மகிமையையும் செலுத்துவர்.
வசனம் 4: அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இப்பொழுது கர்த்தர் பரிசுத்தவான்களுடன் வாசஞ்செய்வதால் அங்கு கவலைகளினால் உருவாகும் கவலையுமில்லை, தமக்கன்பானவர்களை இழந்து போனதிற்காக அழுவதுமில்லை அல்லது துயரத்தினால் அழுவதுமில்லை.
பரிசுத்தவான்களின் வாழ்விலிருந்து முதலாவது வானம் மற்றும் முதலாவது பூமியின் துயரங்கள் மறைந்து போகும். பரிசுத்தவான்களுக்காக காத்திருப்பவை தேவனாகிய கர்த்தருடன் அவருடைய புதிய வானம் புதிய பூமியில் ஆசீர்வதிக்கப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டதுமான ஒரு வாழ்வை வாழ்வதே. நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தவான்களின் சொந்தக் கர்த்தராக மாறுவதால் எல்லாவற்றையும், சுற்றியிருக்கும் அனைத்தையும் புதிதாக மாற்றுவார். எனவே அங்கு கவலையினால் உருவாகும் கண்ணீரோ, அழுதலோ, மரணமோ அல்லது துக்கப்படுதலோ, நோய்களோ அல்லது முதலாவது உலகம் அளித்த எவ்வித சிக்கல்களுமோ அங்கு இருக்காது.
வசனம் 5: சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
கர்த்தர் அனைத்தையும் புதியவைகளாக மாற்றுவார். மேலும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைப்பார். தம்முடைய படைப்பான முதலாம் வானத்தையும், முதலாம் பூமியையும் மறையச் செய்து புதியதான இரண்டாம் வானத்தையும் பூமியையும் உருவாக்குவார். கர்த்தர் பழையதிலிருந்து புதிதான ஒன்றை உருவாக்குவார் என இது கூறவில்லை. மாறாக புதியதொரு பிரபஞ்சத்தை அவர் உருவாக்குவார். இப்படியாக கர்த்தர் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்கி தம்முடைய பரிசுத்தவான்களுடன் வாழ்ந்திருப்பார். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற பரிசுத்தவான்கள் இந்த ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வர். இதனை மனிதர்கள் மனிதர்களால் உருவாக்கப்படக் கூடிய சிந்தனைகளாலும் கூட எண்ணிப் பார்க்க முடியாது. ஆனால் கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு இவற்றையே ஆயத்தம் செய்துள்ளார். ஆகவே பரிசுத்தவான்களும் மற்ற அனைத்தும் கர்த்தரின் பெரிதான செயலுக்காக சகல மகிமைகளையும், நன்றிகளையும், மா¢யாதைகளையும், துதிகளையும் கர்த்தருக்கு வழங்குவர்.
வசனம் 6: அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
தொடக்கத்திலிருந்து முடிவு வரை நமது தேவனாகிய கர்த்தர் இவற்றை எல்லாம் திட்டமிட்டு அவற்றையெல்லாம் நிறைவேற்றினார். தேவன் தான் செய்த அனைத்தையும் தனக்காகவும் தன்னுடைய பரிசுத்தவான்களுக்காகவும் செய்தார். இப்போது பரிசுத்தவான்கள் “கிறிஸ்துவினுடையவர்கள்” என்றழைக்கப்பட்டு கர்த்தரின் மக்களாக்கப்படுவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கிறிஸ்துவினுடைய பரிசுத்தவான்களாகியவர்கள் கர்த்தரை நித்திய நித்தியமாக இப்போது புகழ்ந்துக்கொண்டிருந்தாலும் தேவனாகிய கர்த்தரின் அன்பிற்கும் அவரின் செய்கைகளுக்கும் அது ஈடாகாது என்பதை உணர்ந்து கொள்வர்.
“தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.” புதிய வானிலும் புதிய பூமியிலும் நம் தேவன் ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றைப் பரிசுத்தவான்களுக்கு கொடுத்தார். கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு கொடுத்த பரிசுகளில் மிகப் பெரிய பரிசு இதுவேயாகும். இப்போது பரிசுத்தவான்கள் நித்தியமாக புதிய வானத்திலும் புதிய பூமியிலும் வாழ்ந்திருந்து ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலிருந்து குடிப்பார்கள். இதனால் அவர்கள் மீண்டும் தாகமடையவதேயில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால் பரிசுத்தவான்கள் இப்போது கர்த்தரின் பிள்ளைகளாகி விட்டதால் தேவனாகிய கர்த்தரைப் போல் நித்தியமாக வாழ்ந்து அவரின் மகிமையில் வாழ்வர். இந்தப் பெரியதான ஆசீர்வாதத்தை நமக்கு அளித்தமைக்காக நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளையும் மகிமைகளையும் செலுத்துகிறேன். அல்லேலு¡யா!
வசனம் 7: ஜெயங் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
“ஜெயங்கொள்ளுகிறவன்” என்று இங்கு குறிப்பிடப்படுவது தேவனால் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைப் பாதுகாத்தவர்களாகும். உலகையும் கர்த்தரின் எதிரிகளையும் மேற்கொள்ள இந்த விசுவாசம் பரிசுத்தவான்களை ஏதுவாக்குகிறது. தேவனாகிய கர்த்தர் மீதுள்ள நமது விசுவாசமும், அவரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள உண்மையான நேசமும், உலகின் எல்லாப் பாவங்களின் மீதும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் மீதும், நம்முடைய எதிரிகளின் மீதும், நமது பலவீனங்களின் மீதும், அந்திகிறிஸ்துவால் எடுத்து வரப்படும் துன்புறுத்தல்கள் மீதும் வெற்றியை எடுத்து வரும்.
இவை அனைத்தின் மீதும் வெற்றியைத் தந்த நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளையும் மகிமையையும் செலுத்துகிறேன். தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கும் பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தினால் அந்திகிறிஸ்துவை ஜெயங் கொள்குகிறார்கள். ஒவ்வொரு பரிசுத்தவான்களுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் இந்த விசுவாசத்தை அளித்துள்ளார். இதன் மூலமாக அவர்களால் தம் பகைவர்களுடனான போரில் வெற்றி பெற முடியும்.
இப்படியாக தமது விசுவாசத்தினால் உலகையும் அந்திகிறிஸ்துவையும் மேற்கொண்ட பரிசுத்தவான்கள் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சுதந்தரிப்பதை கர்த்தர் இப்போது அனுமதிப்பார். நம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது பரிசத்தவான்களுக்கு வெற்றி தரும் விசுவாசத்தை அளித்துள்ளமையால் அவர்களால் அவருடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியும். அந்திகிறிஸ்துவை மேற்கொள்ளும் விசுவாசத்தைக் கர்த்தர் நமக்கு கொடுத்துள்ளமையால் கர்த்தர் நமது கர்ததரானார். நாம் அவரின் பிள்ளைகளானோம். நம்முடைய அனைத்து எதிரிகளின் மீதும் வெற்றி கொள்ளும் விசுவாசத்தை நமக்களித்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றிகளையும் துதிகளையும் நான் செலுத்துகிறேன்.
வசனம் 8: பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் சத்தியத்தின் கர்த்தராகவும், அன்பின் கர்த்தராகவுமிருக்கிறார். அப்படியானால் கர்த்தருக்கு முன்பு நிற்க பயப்படுகிற இம்மக்கள் யார்? இவர்கள் தம் மூலப்பாவத்துடன் பிறந்து, தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் தம்முடைய சொந்தப் பாவங்கள் அனைத்தையும் கழுவாதவர்கள். அவர்களுடைய சாராம்சமாக கர்த்தரைவிட அதிகமாக தீமையானவைகளை ஆராதித்தமையால் அவர்கள் மிகத் தெளிவாக சாத்தானின் ஊழியர்களாயினர். அவர்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக தீமையை ஆராதிப்பதாலும், ஒளியைவிட இருளை அதிகம் நேசித்து அதனைப் பின்பற்றுவதாலும், தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக பயப்படுகிறவர்களாயிருப்பதை அவர்களால் தவிர்க்க முடியாது.
அடிப்படையில் கர்த்தர் ஒளியாயிருக்கிறார். ஆகவே யாரெல்லாம் தாமாகவே இருளாயிருக்கிறார்களோ அவர்கள் கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. சாத்தானுக்கு சொந்தமான ஆத்துமாக்கள் இருளை நேசிப்பதால் ஒளி பொருந்திய கர்த்தருக்கு முன்பாக நிற்க பயப்படுகின்றனர். இதனால் தான் அவர்கள் தமது தீமையான குணத்தையும் பலவீனத்தையும் கர்த்தரிடம் எடுத்துச் சென்று அவரிடமிருந்து பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவிசுவாசிகளான அவர்களின் இருதயங்கள், அடிப்படையில் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் அன்பையும் அவரின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் விசுவாசியாமலிருப்பதால் அவர்கள் அவரின் எதிரிகளானதோடு கர்த்தருக்கு முன் கொடிய பாவிகளுமானார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் அருவறுப்பிற்கு சொந்தமானவைகள். அவர்கள் கர்த்தரை எதிர்த்து நின்று ஒவ்வொரு பாவத்தையும் நேசித்து அவற்றைச் செய்து தவறான அடையாளங்களைப் பின்பற்றி எல்லாவிதமான சிலைகளையும் வணங்கி எல்லாவிதமான பொய்களையும் பேசுகிறார்கள். ஆகவே கர்த்தருடைய நீதியின் நியாயத் தீர்ப்பின் மூலம் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவர்கள். இது அவர்களின் இரண்டாம் மரணமாகிய தண்டனையாகும்.
தமக்கு முன்பாக நிற்கப் பயப்படுகிறவர்களையும், அவருடைய நற்செய்தி வார்த்தையாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிக்காதவர்களையும், சாத்தானின் ஊழியர்களாக மாறியவர்களையும் அருவெறுக்கத் தக்கவர்களையும் கர்த்தர் தன்னுடைய புதிய வானத்திற்கும், புதிய பூமிக்கும் அனுமதிப்பதில்லை. இதற்கு பதிலாக கர்த்தர் தன்னுடைய நித்திய தண்டனையை அவர்கள் (கொலை பாதகர், விபசாரக்காரர், சூனியக்காரர், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர் உட்பட) அனைவருக்கும் அளித்து அக்கினியும் கந்தமும் எரிகிற கடலில் தள்ளிவிடுவார். இப்படியாக அவர்களுக்கு கொடுக்கப்படும் நரகமானது இரண்டாம் மரணமாகும்.
வசனம் 9: பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி.
ஏழு பாத்திரங்களின் வாதைகளில் ஒருவாதை எடுத்து வந்த தேவதூதர்களில் ஒருவன் “ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன்” என்று யோவானிடம் கூறினான். இங்கு “ஆட்டுக் குட்டியானவருடைய மனைவி” என்பது இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தமது இருதயங்களால் விசுவாசித்து மணவாட்டியாகியவர்களைக் குறிப்பிடுகிறது.
வசனம் 10-11: பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
“எருசலேமாகிய பரிசுத்தநகரம்” என்பது பரிசுத்தவான்கள் தமது மணவாளனுடன் வாழப்போகும் பரிசுத்த நகரத்தைக் குறிக்கிறது. யோவான் கண்ட இந்நகரமானது மிகவும் அழகியதும் அதிசயமானதுமாகும். அதனுடைய அளவு மிகப் பெரியது அவற்றின் உட்புறங்களும் வெளிப்புறங்களும் விலையேறப்பட்டக் கற்களால் அழகுச் செய்யப்பட்டிருந்தன. அது சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிகள் தம் மணவாளனுடனே கூட எங்கு வாழ்வர் என்பதை தேவதூதன் யோவானிற்கு காட்டினான். பரலோகத்திலிருந்து இறங்கி வரும் பரிசுத்த எருசலேம் நகரம், ஆட்டுக் குட்டியானவரின் மனைவிக்கு கர்த்தரளிக்கும் பரிசாகும்.
எருசலேம் நகரம் பிரகாசமாயிருந்தது. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போலவும் பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக் கல்லைப் போலவும் இருந்தது. ஆகவே அதில் வசிக்கும் அனைவர் மீதும் கர்த்தருடைய மகிமையானது என்றென்றும் நிலைத்திருக்கும். கர்த்தருடைய ராஜ்யம் ஒளிமயமானது. ஆகவே தமது இருளையும், பலவீனங்களையும் பாவங்களையும் சுத்தப்படுத்தியவர்களாலேயே அதனுள் பிரவேசிக்க முடியும். நாம் இந்த பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமானால் நம்முடைய தேவன் நமக்கருளிய உண்மை வார்த்தையின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் கற்று அறிந்து, அதனை விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 12: அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
இந்நகரத்தின் வாசல்கள் பன்னிரண்டு தேவதூதர்களால் காக்கப்படுகின்றன. அவர்களின் மீது இஸ்ரவேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரத்தாரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. “இந்நகரம் மிகப் பெரிய உயரமான சுவருடையதாய் இருந்தது” என்பது இந்நகரத்திற்குள் பிரவேசிப்பது மிகவும் கடினமான ஒன்று என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தையில் கூறினால் கர்த்தருக்கு முன்பாக நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவது மனித முயற்சிகளாலேயோ அல்லது கர்த்தரின் படைப்புகளான உலகின் பொருட்களினாலேயோ சாத்தியமாகாத ஒன்று.
நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலையாகி கர்த்தருடைய பரிசுத்த நகரத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான ஒன்று, இயேசுவின் பன்னிரெண்டு சீடர்கள் பெற்றிருந்த அதே விசுவாசத்தை நாமும் பெற்றிருப்பதே இந்த விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையை விசுவாசிப்பதாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசமில்லாதவர்களால் நிச்சயமாக இந்த பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இதனால் தான் தேவனாகிய கர்த்தரால் நியமிக்கப்பட்ட பன்னிரண்டு தேவதூதர்களால் இந்நகர வாசல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மறுபுறம் “நாமங்களும் எழுதப்பட்டிருந்தன” என்ற சொற்றொடர் இந்நகா¢ன் சொந்தக்காரர்கள் யாரென்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதைக் குறிக்கிறது. இதன் சொந்தக்காரர்கள் கர்த்தரும் அவரின் மக்களுமாவர். ஏனெனில் இந்நகரமானது இப்போது கர்த்தரின் பிள்ளைகளாகிய அவரின் மக்களுக்குச் சொந்தமானது.
வசனம் 13: வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
அந்நகரத்தின் கிழக்கு மதிலில் மூன்று வாசல்கள் காணப்பட்டதைப் போன்று அதன் வடக்கு, தெற்கு, மற்றும் மேற்கு வாசல்களிலும் மும்மூன்று வாசல்கள் இருந்தன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தமது இருதயங்களால் விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றவர்கள் மட்டுமே இந்நகரத்திற்குள் செல்ல முடியுமென்பதை இது காட்டுகிறது.
வசனம் 14: நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக் குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.
பெரிய கற்கள் கட்டிடங்களுக்கு அத்திவாரமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. வேதாகமத்தில் உபயோகப் படுத்தப்படும் “கற்பாறை” என்பதன் பொருள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மீதுள்ள விசுவாசம் என்பதாகும். தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த நகா¢ற்குள் நாம் பிரவேசிக்க வேண்டுமானால் கர்த்தர் மனித குலத்திற்கு அருளிய விசுவாசத்தை நாம் பெற்றிருக்க வேண்டும் என இந்த வசனம் நம்மிடம் கூறுகிறது. இந்த நம்பிக்கையானது அவர் நமக்கருளிய நிறைவான பாவமன்னிப்பை விசுவாசிப்பதாயிருக்கிறது. பரிசுத்தவான்களின் விசுவாசமானது பரிசுத்த நகரத்தின் மதிப்புடைய கற்களைவிடவும் விலையேறப்பட்டது. இந்த பரிசுத்த நகரத்தின் மதில்கள் பன்னிரண்டு அத்திவாரங்களுக்கு மேல் கட்டப்பட்டுள்ளன எனவும், அவற்றின் மேல் ஆட்டுக் குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளன எனவும் இவ்வசனம் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களிடமும் இருந்த அதே விசுவாசத்தை பெற்றிருப்பவர்களினாலேயே கர்த்தரின் நகருக்குள் பிரவேசிக்க முடியுமென இது கூறுகிறது.
வசனம் 15: என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
கர்த்தரால் கட்டப்பட்ட இந்த நகருக்குள் பிரவேசிச்க வேண்டுமானால் அவரால் அங்கீகா¢க்கப்பட்ட விசுவாசத்தை ஒருவன் பெற்றிருக்க வேண்டுமென இவ்வார்த்தை பொருள்படுகிறது. இந்த விசுவாசம் அவனுக்கு/அவளுக்கு பாவமன்னிப்பை எடுத்து வருவதாயிருக்கிறது. யோவானிடம் பேசிய தேவதூதனிடம் இந்நகரை அளக்கக்கூடிய தங்கத்தினால் செய்யப்பட்ட அளவுகோல் இருந்ததாக இங்கு கூறப்பட்டுள்ளது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள் நமது தேவன் இந்த ஆசீர்வாதங்களை எல்லாம் அளித்துள்ளார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டுமென இது பொருள்படுகிறது “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரெயர் 11:1)” என கூறப்பட்டுள்ளதைப் போல் நாம் நம்பியவைகளை விடவும் மிகப் பெரியதான பரிசுத்த நகரத்தையும் புதிய வானம் மற்றும் புதிய பூமியையும் கர்த்தர் நமக்குக் கொடுத்தார்.
வசனம் 16: அந்த நகரம் சதூரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
இந்நகரம் சதுரமாக கட்டப்பட்டது. அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவைகள் சமமானவைகள். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் மக்களாக மறுபடியும் பிறக்க வேண்டுமென்ற விசுவாசமுடையவர்களாய் இருக்க வேண்டுமென இது கூறுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த இந்தத் தெளிவான நம்பிக்கையில்லாதவர்களை கர்த்தரின் ராஜ்யத்திற்குள் நம் தேவன் அனுமதிக்க மாட்டார் என்பது மிக முக்கியமான குறிப்பாகும்.
தம்மிடம் பாவங்களிருந்தாலும் தாம் கிறிஸ்தவர்களாயிருப்பதால் தம்மாலும் பரிசுத்த நகா¢னுள் பிரவேசிக்க முடியும் என்ற கருத்து அநேக மக்களிடம் இருக்கிறது. தம்முடைய ஞானஸ்நானத்தின் மூலமும் தம்முடைய இரத்தத்தின் மூலமும் நம் தேவன் நம்முடைய அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்று விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே அவர் பாவங்களிலிருந்து இரட்சிப்பையும், பரிசுத்த ஆவியானவரையும் அளித்து நம்மைத் தனது மக்களாக்கினார். நம் தேவன் நம்மிடமிருந்து கேட்கும் விசுவாசம் இத்தகையதே.
வசனம் 17: அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
வேதாகமத்தின் படி நான்காம் எண்ணின் பொருள் துன்பம் என்பதாகும். எல்லோரிடமும் இருக்கக் கூடிய விசுவாசத்தை நம் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த விசுவாசத்தைக் கர்த்தரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளுபவர்களால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். இதனுடன் அவர்களுடைய சொந்த யோசனைகள் பொருந்தி வராதது ஒரு பொருட்டல்ல. ஒரு கிறிஸ்தவனாக இருந்து இயேசுவின் சிலுவையையும், அவர் நம் தேவனாகிய கர்த்தரும் இரட்சகருமாவர் என மட்டும் விசுவாசித்தால் கர்த்தரின் பரிசுத்த நகரத்திற்குச் செல்வது சாத்தியமாகாது. “ஒருவன் ஜலத்தினலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என யோவான் 3:5இல் கர்த்தர் கூறியதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா? நம் தேவன் இப்பூமிக்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று உலகின் அனைத்துப் பாவங்களையும் சிலுவைக்குச் சுமந்து சென்று அங்கு அவர் இரத்தம் சிந்தியதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா? இக்கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடிந்தால் நான் கூறுவது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
வசனம் 18: அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
கர்த்தரின் பரிசுத்த நகருக்குள் நம்மை அனுமதிக்கும் நம்பிக்கையானது மிகவும் சுத்தமானது எனவும், அதற்கும் உலகிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் இவ்வசனம் நம்மிடம் கூறுகிறது.
வசனம் 19-20: நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
சுவர்களின் அத்திவாரமானது எல்லா விதமான விலையேறப்பட்டக் கற்களாலும் அழகு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய தேவனுடைய வார்த்தையின் வெவ்வேறு பகுதிகளாகிய விசுவாசத்தின் மூலம் நாம் போஷிக்கப்படலாம் என இது நமக்குக் கூறுகிறது. நம்முடைய கர்த்தர் தனது பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை இந்த விலையேறப் பட்டக் கற்கள் நமக்கு காட்டுகின்றன.
வசனம் 21: பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
வேதாகமத்தில் முத்து என்பது “உண்மையைக்” குறிக்கிறது (மத்தேயு 13:46) உண்மையைத் தேடும் ஒரு நபர், அவனுக்கு/அவளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக் கூடிய சத்தியத்திற்காக அவனின்/அவளின் உடமைகளை எல்லாம் விட்டு விடுவார். பரிசுத்த நகரத்திற்குள் செல்லக் கூடிய பரிசுத்தவான்கள் இப்பூமியில் இருக்கும் போது மிகவும் பொறுமையுடனும் தம்முடைய விசுவாசத்தின் நடுவில் நங்கூரம் பாய்ச்சி மிக உறுதியாக நிற்கக் கூடியவர்களாயும் இருக்க வேண்டுமென இந்த வசனம் நமக்குக் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் தேவனால் கூறப்பட்ட உண்மை வார்த்தைகளை விசுவாசித்தோருக்கு தம்முடைய விசுவாசத்தைக் காக்கும் பெரிதான தொடர் முயற்சி இருக்க வேண்டும்.
வசனம் 22-23: அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
ராஜாதிராஜாவான இயேசு கிறிஸ்துவின் கைகளினால் எல்லா பரிசுத்தவான்களும் அரவணைக்கப்படுவர் என இந்த வசனம் கூறுகிறது. பரிசுத்த நகரமாகிய எருசலேமிற்கு முதலாவது சூரியனோ அல்லது சந்திரனோ தேவையில்லை. ஏனெனில் உலகின் ஒளியாகிய இயேசு கிறிஸ்து அதனைப் பிரகாசிக்கச் செய்வார்.
வசனம் 24: இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்
ஆயிர வருட அரசாட்சியில் வாழ்ந்தவர்கள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் இப்போது பிரவேசிப்பார்கள் என இவ்வசனம் நமக்கு கூறுகிறது. “பூமியின் ராஜாக்கள்” என இங்கு குறிப்பிடப்படுபவர்கள் ஆயிர வருட அரசாட்சியில் வாழ்ந்தவர்களைக் குறிக்கிறது. இந்த பூமியின் ராஜாக்கள், “தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்” என இவ்வசனம் தொடர்ந்து கூறுகிறது. மகிமையின் சா£ரத்துடன் ஆயிர வருட அரசாட்சியில் வாழுபவர்கள் கர்த்தரால் புதிதாகப் படைக்கப்பட்ட புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் பிரவேசிப்பதைக் குறித்து இந்த வசனம் நமக்குக் கூறுகிறது.
இவ்வுலகில் இருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்கள் ஆயிரம் வருடங்களாக கிறிஸ்துவின் ராஜ்யத்தில் வாழும் படி எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசுத்த எருசலேம் நகரத்திற்குள் பிரவேசிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள்.
வசனம் 25: அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
பரிசுத்த நகரம் அமைந்திருக்கும் புதிய வானமும், புதிய பூமியும் பரிசுத்த ஒளியினால் நிறைந்திருப்பதால் அங்கு இரவும் இருப்பதில்லை அல்லது தீயவர்களும் இருப்பதில்லை.
வசனம் 26: உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
தேவனாகிய கர்த்தரின் ஆச்சரியமான வல்லமையின் மூலம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தவர்கள் பரிசத்த நகரம் அமைந்திருக்கும் ராஜ்யமாகிய புதிய வானம் மற்றும் புதிய பூமியின் ராஜ்யத்திற்குள் செல்லும் தகுதியைப் பெறுகின்றனர்.
வசனம் 27: தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
கிறிஸ்தவர்களோ கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோ அது யாராயிருந்தாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையை அறியாதவர்கள் அழிந்து போனவர்களும் அருவெறுப்பானவர்களும் பொய்யர்களுமானவர். ஆகவே அவர்களால் பரிசுத்த நகா¢னுள் பிரவேசிக்க முடியாது.
இப்பூமியிலிருக்கும் போது தேவன் நமக்கருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை வல்லமை உடையது என்பதை உறுதி செய்ய கர்த்தரின் வார்த்தை அனுமதிக்கிறது. இப்பூமியில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அநேக மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டிருந்தாலும் இந்நற்செய்தியானது அநேக சமயங்களில் கிறிஸ்தவர்களாலேயே அலட்சியம் செய்யப்பட்டு தூக்ஷிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே பரலோகத்திற்கான திறவு கோலாகும்.
இந்த உண்மையைக் குறித்து அநேக மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அவனுக்கு/அவளுக்கு பரலோகம் மற்றும் பாவமன்னிப்புகளின் திறவுகோலைப் பெற்று அவனின்/அவளின் பெயர்களை ஜீவ புத்தகத்தில் எழுதப் பெறுவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு அதனை விசுவாசித்தால் பரிசுத்த நகரத்திற்கு நீங்கள் செல்லும் ஆசீர்வாதத்தினால் தரிப்பிக்கப்படுவீர்கள்.