• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 21-2] கர்த்தரால் அங்கீகரிக்கப் பட்ட விசுவாசத்தை நாம் பெற்றிருக்க வேண்டும் (வெளி 21:1-27)

2021.04.24 29
(வெளி 21:1-27)
 
கர்த்தர் நமக்கு புதிய வானத்தையும், புதிய பூமியையும் தந்தார். இப்போது நீங்கள் காணும் முதலாவது வானமும் பூமியும், அவற்றிலுள்ள யாவும் அழிந்து போகுமென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். அவற்றிற்கு பதிலாக புதிய வானத்தையும் புதிய பூமியையும், புதிய கடலையும் நமக்கு கொடுத்து, புதிதாகப் படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் அனைத்தையும் புதிதாக்குவார். இதன் பொருள் என்னவெனில் முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்ற பரிசுத்தவான்களுக்கு தேவனாகிய கர்த்தர் புதிய வானத்தையும், புதிய பூமியையும் தன் பரிசாக அளிப்பார் என்பதாகும். இந்த ஆசீர்வாதங்களைப் பாவமன்னிப்பு பெற்ற தனது பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் பரிசாக அளிப்பார்.
ஆகவே முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்ற பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் இந்த ஆசீர்வாதத்தை அளிப்பார். இந்த ஆசீர்வாதமானது இயேசு கிறிஸ்து வழங்கிய பரிசுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்ற பரிசுத்தவான்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. நமது தேவன் இப்படியாக பரிசுத்தவான்களின் மணவாளன் ஆவார். இதற்கு பிறகு மணவாட்டிகள் செய்யவேண்டியதெல்லாம், ஆட்டுக் குட்டினயானவரின் மனைவியாக மணவாளனின் பாதுகாவலையும், ஆசீர்வாதத்தையும், வல்லமையையும் அணிந்து கொண்டு அவருடைய மகிமையான ராஜ்யத்தில் மகிமையுடன் வாழ்வது மட்டுமே.
பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததாக இவ்சனம் நம்மிடம் கூறுகிறது. இது சாதாரண நகரமல்ல. ஏனெனில் மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல் இந்நகரம் அழகு மிக்கதாக பரலோகத்திலிருந்து இது இறங்கி வந்தது என இங்கு கூறப்பட்டுள்ளது.
பரிசுத்தவான்களுக்காக கர்த்தர் ஒரு பரிசுத்த நகரத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்நகரம் கர்த்தரின் ஆலயமாகிய எருசலேம் நகரமாகும். இந்த ஆலயமானது கர்த்தரின் பரிசுத்தவான்களுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தேவனாகிய கர்த்தர் இப்பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்னரே இயேசு கிறிஸ்துவினுள் இவைகளெல்லாம் பரிசுத்தவான்களுக்காக திட்டமிடப்பட்டது. ஆகவே தேவனாகிய கர்த்தருக்கு தமது நம்பிக்கையால் நன்றி கூறி இந்த கிருபையின் ஈவிற்காக அவருக்கு மகிமைச் செலுத்துவதை பரிசுத்தவான்களால் தவிர்க்க முடியாது.
இவை அனைத்தும், அதாவது பரிசுத்தவான்கள் கர்த்தரின் மக்களாகியதும் அவர் அவர்களின் கர்த்தராகியதும் கர்த்தர் அருளிய கிருபையாகும். பரிசுத்தவான்கள் இரட்சிப்பின் வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இதனை ஒரு ஈவாகப் பெற்றுக் கொண்டார்கள்.
ஆகவே தேவனின் ஆலயத்திற்குள் சென்று அவருடனே வாழும்படி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், கர்த்தருக்கு என்றென்றும் நன்றி கூறுபவர்களாயும் மகிமை அளிப்பவர்களாகவும் இருப்பர். ஏனெனில் கர்த்தர் அவர்களின் கண்ணீரைத் துடைத்து விடுவதால் அங்கு மரணமோ, அழுகையோ, துன்பங்களோ இருக்காது எனவும் பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின எனவும் வேதவசனங்கள் கூறுகின்றன. இப்போது இந்த உலகில் கவலை, கண்ணீர், வேதனை, மரணம், துக்கம் மற்றும் துயரம் ஆகியவை பெருமளவில் இருந்தாலும் புதிய வானம், மற்றும் புதிய பூமியில் இவையெல்லாம் மறைந்து போகும். தேவன் அருளிய புதிய வானம் மற்றும் புதிய பூமியில் வாழுபவர்கள் துக்கத்தினால் கண்ணீர் விடுவதோ தமக்கன்பானவர்கள் இறந்து போனதற்காக துயரத்தினால் அழுவதோ இல்லை.
புதிய வானம் மற்றும் புதிய பூமியில் பரிசுத்தவான்கள் பிரவேசிக்க வேண்டிய நேரம் வருகையில் முதலாவது வானமும், முதலாவது பூமியும் அவர்களின் துயரங்களும் மறைந்து போகும். பரிசுத்தவான்களுக்காக காத்திருப்பதெல்லாம் மகிமையுடன் வாழுவதும் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் கர்த்தரின் ஆசீர்வாதங்களுடன் நித்தியமாக வாழ்ந்திருப்பதும் மட்டுமே. முதலாம் உலகத்தின் குறைபாடுகளைக் அகற்றி இப்புதிய உலகை அவர் செய்திருப்பார்.
21ஆம் அதிகாரத்தின் முக்கிய வசனங்கள் புதிய வானத்தையும் புதிய பூமியையும் குறித்து கூறுகின்றன. இவை இவ்வுலகம் முற்றிலும் அழிக்கப்பட்டு அதிகாரம் 20இல் விவரிக்கப்பட்டுள்ள ஆயிர வருட அரசாட்சிக்கு பிறகு வரும். அதிகாரம் 20இல் இப்பூமியும் இதனுடன் தொடர்புடைய அனைத்தும் மறைந்து போகும். அந்திகிறிஸ்துவின் காலம் (மிருகம்) கள்ளத்தீர்க்கதரிசி அவனைப் பின்பற்றுவோர் மற்றும் கர்த்தரை விசுவாசிக்காமல் இவ்வுலகில் அவரை எதிர்த்து நின்ற அனைவரும் கடந்து போயினர். ஆயிர வருட அரசாட்சிக்கு பிறகு அவர்களெல்லாம் அக்கினிக் கடலுக்குள் தள்ளிவிடப்படுவதால் அவர்களை இப்போது நரகத்தில் தான் காண முடியும்.
ஆகவே அதிகாரம் 21இல் கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப் போகும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் குறித்து கூறுகிறார். அது எந்த பாவிகளையும் காணக்கூடாத குறைவற்ற இடமாகும். நீங்கள் மிருகங்களைக் காண வேண்டுமானால் எப்படி ஒரு மிருககாட்சி சாலைக்கு செல்லுகிறீர்களோ அதுபோலவே அந்நேரத்தில் சாத்தானையும் அவனைப் பின்பற்றுபவர்களையும் காண மக்கள் நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
புதிய வானத்தையும் புதிய பூமியையும் கர்த்தர் நமக்கு அளிக்கும் இடத்தில் நம் தேவனும் கூட நம்மோடே வாழுவார். பரிசுத்த நகரத்தில மிக அழகிய இயற்கை காட்சிகளையும் பசுமையான தோட்டங்களையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார். புதிய வானமும், புதிய பூமியும் வருகையில் முதல் உலகின் அனைத்து காரியங்களும் அதன் குறைபாடுகளும் மறைந்து போயிருக்கும், உண்மை மட்டுமே அங்கிருக்கும். நிறைவான பரிசுத்தவான்கள் முழு பரலோக ராஜ்யத்தையும் நித்தியமாக ஆளுவார்கள்.
 
 
இன்றைய நிலையைக் குறித்து மனந்தளர வேண்டாம்
 
இன்றைய காலமானது இருண்டுபோன நம்பிக்கையற்ற காலமாகும். இக்காலத்தில் நம்பிக்கையை காண முடியவில்லை. இதனால் தான் சில சமயங்களில் நாம் நற்செய்தியைப் பிரசங்கித்தாலும் கூட தளர்ந்து போனவர்களாய் காணப்படுகிறோம். எனக்கு கூட சில சமயங்களில் இருதயம் நொந்து போய் விடுகிறது. ஆனால் வெளிப்படுத்தலின் வார்த்தையை வாசித்து அதனை விவரிக்கையில் பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் இறுதி காலத்தை சந்திக்கும் போது கவலைப்பட எதுவுமில்லை என கண்டு கொண்டேன். இப்போதைய உபத்திரவங்களும் துன்பங்களும் தற்காலிகமானவை என என்னை உணரச் செய்து என் கண்களுக்கு முன்னால் பிரகாசமான உலகைக் காட்டி மீண்டுமொருமுறை கவலைப் படாத வகையில் கர்த்தர் என் இருதயத்தை பலப்படுத்தினார்.
நாம் நம்முடைய தற்போதைய நிலைமையைப் பார்க்கும் போது நம்முடைய வாழ்வு மன அழுத்தத்தை உருவாக்குவதாயிருக்கிறது. நாம் நற்செய்திக்கு பணியாற்றும் போது தொடர்ந்து வரும் பிரச்சனைகளினால் மனந்தளர்ந்து போகிறவர்களாக இருக்கிறோம். நம் மாமிசத்தின் கண்களால் காணமுடியாவிட்டாலும் தேவனுடைய அனைத்து ஆசீர்வாதங்களும் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதால் நம்முடைய இருதயங்கள் இலக்குகளிலிருந்து தவறாமல் மிகப் பெரிய நம்பிக்கையினாலும் ஆனந்தத்தினாலும் நிரம்பியிருக்கின்றன. நாம் துன்பத்துடன் வாழ வேண்டாம் என்பதற்கான மிக முக்கியமான காரணம் நமது கர்த்தர் ஏற்கனவே தமது புதிய வானத்தையும் புதிய பூமியையும் நமக்குக் கொடுத்திருப்பதுவே.
புதிய வானத்தையும், புதிய பூமியையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதனை அனுபவித்திராவிட்டாலும் அதனுடன் நீங்கள் பொருந்தியிருக்கிறீர்களா?
இவ்வுலகிலும் கூட மிக அழகிய இடங்கள் உள்ளன. இவ்வுலகில் நன்றாக வாழும் சூழ்நிலை என்பதைக் குறித்து பேசும் போது வழக்கமாக மரங்களையும் ஆறுகளுக்குப் பின்னாலிருக்கும் புல்வெளிகளையும், மலர்களால் சூழப்பட்டிருக்கும் தரைகளையும் நல்ல மக்களையும் பற்றி பேசுகிறோம். அங்கு தெளிவான நீரோட்டம் இருக்கவேண்டும். அங்கு மோசமான மனிதர்கள் இருக்கக் கூடாது. அதில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. இத்தகைய அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் போது இது ஒரு அருமையான சூழ்நிலை என்கிறோம். ஆனால் பரலோகத்தில் எல்லாமே நிறைவானவை. இம்முழு உலகமும் பெருமைப்பாராட்டும் அதன் மிக அழகிய இடத்தைவிட இது சிறந்தது.
இப்பொழுது எழும் கேள்வியானது இப்படி செவ்வையாகக் கட்டப்பட்ட பரிசுத்த நகரத்தைக் கர்த்தர் யாருக்காகப் பரலோகத்திலிருந்து இறங்கி வரச் செய்தார் என்பதாகும். கர்த்தர் பரிசுத்தவான்களுக்காகவே இந்நகரத்தை உருவாக்கினார். இதனால் தான் முதல் உலகத்தின் அனைத்தையும் நம்மால் மறக்க முடியும். மறு உலகில் ஆயிர வருட அரசாட்சியில் நாம் மகிமையுடனே கூட வாழ்வோம். அதாவது கர்த்தர் உண்மையாகவே நமக்கு கொடுக்க விரும்பும், அதிகாரம் 21இல் விவரிக்கப்பட்ட புதிய வானம் புதிய பூமியில் தேவனுடனே கூட பெரிதான மகிமையுடன் நாம் வாழ்வோம். இப்படிச் செய்வதற்கு இயேசு கிறிஸ்துவை நம்மிடம் அனுப்பி நம்மை இரட்சித்ததுடன் நம்மை உயிரோடெழுப்பி எடுத்துக் கொள்ளவும் செய்வார். உயிரோடெழுப்பப்பட்ட இயேசுவின் சரீரத்தைப் போன்ற சரீரங்களுடன் நாமும் வாழுவோம் என்ற ஒரு சித்திரக் காட்சியானது நமக்காக காத்திருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கையைக் காட்டுகிறது.
புதிய வானம் புதிய பூமி ஆகிய இராஜ்யத்தை நமக்குக் கொடுக்க கர்த்தர் உங்களையும் என்னையும் இப்பூமியில் பிறக்க செய்து அவர் நம்மை இரட்சித்தார். கர்த்தர் அருளப் போகிற அனைத்தையும் உணர்ந்தவர்களாய் பரிசுத்தவான்கள் வாழ்ந்தால் எவ்வித கஷ்டங்களையும் சந்திக்காமல் துன்பங்களை அனுபவிக்காமல், மன அழுத்தங்களைச் சந்திக்காமல் அவர்களால் நன்கு வாழ முடியும். தேவன் நமக்கு செய்தவற்றைப் பார்த்து எதிர்காலத்தில் அவர் நமக்கு செய்யப் போகிறவைகளை அறிந்தால் நம்மால் பயனுள்ளவர்களாகவும் சிறந்தவர்களாகவும் வாழ முடியும்.
ஆனால் நாம் நம்முடைய நிலையைப் பார்த்தால் நம்பிக்கையில்லாத அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புகள் தோன்றி நம்மை பரிதவிப்பில் விழச் செய்கின்றன. கர்த்தர் நமக்கு புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொடுத்தார் என்பதையும் பரலோகமானது நம்முடையது என்பதையும் நாம் மறக்கவே கூடாது. இதுவே உண்மையாகும். இது தான் நடக்கப் போவதாகும். இவ்வுலகம் உங்களை கவலையானவராக்க முயற்சி செய்தாலும் கவலைப்படாதிருங்கள் அல்லது கோபப் படாதவர்களாகவும் இருங்கள், தேவனை மட்டுமே நோக்கிப் பாருங்கள். தேவன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் தனது பரிசுத்தவான்களுக்கு கொடுத்தார் என்பதை விசுவாசித்து உங்கள் வாழ்வை நம்பிக்கையுடன் வாழுங்கள்.
எல்லாவற்றையும் புதிதாக்கப்போவதாக கர்த்தர் கூறினார். தான் எல்லாவற்றையும் புதிதாக்குவேன் என்ற இவ்வார்த்தைகளை எழுதும்படி அவர் யோவானிடம் கூறினார், “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்” முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கேற்ற யாவரும் கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கிய இடத்தில் வாழும் இந்த ஆசீர்வாதங்களிலும் பங்கேற்பர். இதனை நம்முடைய மனித சிந்தனைகளாலும் எண்ணிப்பார்க்க முடியாது. ஆனால் இவற்றைக் கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த பெரிதான செய்கையை நிறைவேற்றியமைக்காக பரிசுத்தவான்கள் எல்லா மகிமைகளையும், நன்றிகளையும், மரியாதையையும் புகழையும் கர்த்தருக்கே என்றென்றும் அளிப்பர்.
வேதாகமம், “விசுவாசமானது நம்பப் படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1) என கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் இவற்றை இப்போது நமது கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் அவையெல்லாம் உண்மையே. நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட வேண்டுமென ஏங்கினோம். அப்படியே நம் இரட்சிப்பை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டோம். இரட்சிக்கப்பட்ட பிறகு எந்த குறைகளும் இல்லாத முற்றிலும் நிறைவான ஓர் உலகில் நாம் நித்தியமாக வாழ விரும்பியதால் இந்த நமது ஏக்கத்தையும் கூட கர்த்தர் நமக்காக நிறைவேற்றினார். நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் உண்மையானவையாக இருப்பதால் நாம் விரும்பும் அனைத்தும் உண்மையாக நிகழும்.
வெளிப்படுத்தின விசேஷம் 10ஆம் அதிகாரத்தில் கடலிலும் பூமியிலுமாக நின்று கொண்டிருந்த தனது தூதன் மூலமாக தேவன் யோவானுடன் பேசியபோது அவன் அதனை எழுத முயன்றான். அப்பொழுது கர்த்தர் அவனை எழுத வேண்டமென்றார். தேவன் பேசிய அனைத்திலும் சில காரியங்களை எழுத அவர் யோவானை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இந்த புதிர்களை கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு மட்டுமே விளக்குவார்.
இந்தப் புதிரானது நம்முடைய எடுத்துக் கொள்ளப்படுதலாகும். நம்முடைய எடுத்துக் கொள்ளப்படுதல் எப்போது நிகழும் என நாம் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டுமானால், கர்த்தரின் ஏழாவது எக்காளமே இந்தப் புதிரை விடுவிப்பதற்கான குறிப்பு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் ஏழாவது எக்காளம் எப்போது ஊதப்படும்? மகா உபத்திரவ காலமாகிய ஏழாண்டு காலத்தின் முதல் மூன்றரையாண்டுகள் கடந்து சிறிது நேரமாகும் போது ஏழாவது எக்காளம் ஊதப்படும். இப்போது தான் பரிசுத்தவான்களின் உயிர்த்தெழுதலும் எடுத்துக் கொள்ளப்படுதலும் நிகழும். இந்த எடுத்துக் கொள்ளப்படுதல் முடியும் போது ஏழு பாத்திரங்களின் வாதைகள் தொடரும்.
சில வருடங்களுக்கு முன் “சிறிய ஆசியாவின் ஏழு சபைகள்” என்ற தலைப்பில் ஒரு எழுப்புதல் கூட்டத்தில் பேசினேன். சிறிய ஆசியாவின் இந்த ஏழு சபைகளையும் குறித்த ஒரு புத்தகத்தையும் எழுதினேன். அதனுடைய பொருளடக்கமானது இப்போது நான் விளக்கிக்கொண்டிருக்கும் வசனங்களுடன் தொடர்புடையது. அந்த புத்தகத்திலுள்ள பிரசங்கங்களைக் காணுகையில் காலம் வெகுவாகக் கடந்திருப்பதை நான் உணர்ந்தாலும் எத்தனைக் காலம் கடந்த போதிலும் கர்த்தரின் வார்த்தை சிறிதும் மாறாததை உணர்ந்தேன்.
கர்த்தர் உங்களுக்காகவும், எனக்காகவும் ஏற்பாடு செய்துள்ள புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நீங்கள் வாழ வேண்டுமா? இவ்வுலகின் குறைபாடுகளை அங்கு காண முடியாது. கர்த்தர் எல்லாவற்றையும் புதிதாக்கப் போவதாக கூறினார். சிலர் இதனை இப்போதுள்ள முறையான, மீண்டும் மீண்டும் பொருட்களை அழித்து புதியவற்றை உருவாக்குவதைப் போல் அவர் இவற்றை மாற்றுவார் எனக் கூறுகின்றனர். ஆனால் அதிகாரம் 21 முதல் இது முற்றிலும் ஒரு புதிய உலகம். இது பழையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முற்றிலும் புதிதாகப் படைக்கப்பட்ட புதிய வானம் மற்றும் புதிய பூமியில் மறுபடியும் பிறந்தவர்கள் பங்கேற்பர். ஏனெனில் அவர்கள் தான் இதற்கான தெய்வீகத் தன்மைகளைப் பெற்றுள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறினால் அவர்கள் தெய்வீகமாவதில் பங்கேற்றனர்.
நம்முடைய சிந்தனைகளை உலகிற்குரியவைகளாக்காமல் ஆவிக்குரிய பரிமாணங்களில் அவற்றைப் பார்க்க வேண்டும். கர்த்தர் நமது ஆத்துமாக்களுக்கு கொடுத்தவற்றை விசுவாசிக்கும் பரிசுத்தவான்களாகவும் ஊழியர்களாகவும் நீங்கள் அனைவரும் இருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். மேலும் இவையெல்லாம் நிறைவேற்றப்படாவிட்டாலும் அவை உண்மையாகும் என்று நம் ஆத்துமாக்கள் விசுவாசத்துடன் நம்ப வேண்டும். கர்த்தர் நமக்கு பெரிதான ஆசீர்வாதங்களை அளித்தார்.
தாகமாயிருப்பவர்களுக்கு ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றைக் கொடுக்கப் போவதாக கர்த்தர் கூறினார். இந்த வார்த்தையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறிப்பிடவில்லை. இவ்வுலகில் இருக்கும் போது அவர்கள் தாகத்திற்கு தனது நற்செய்தியைக் கொடுத்து கர்த்தர் தம்மை விடுவித்தார் எனவும், அவர் தம்மை பாவத்திலிருந்து இரட்சித்தார் எனவும் மக்கள் விசுவாசிப்பது ஜீவத் தண்ணீரைக் குடிப்பதற்கு ஒத்ததே. ஆனால் இந்த வசனம் இதனை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் இது புதிய வானத்திலும், புதிய பூமியிலும் குடிக்கப்படக் கூடிய ஜீவத் தண்ணீரையே குறிக்கிறது. இங்கு இந்த ஜீவத் தண்ணீரைக் குடிப்பவர்கள் மரிப்பதில்லை. அவனின்/அவளின் சரீரம் கர்த்தருடையதைப் போலாகும். மேலும் அவன்/அவள் அவருடனே கூட நிரந்தரமாக வாழுவர்.
தொடக்கத்திலிருந்து முடிவு வரை நம் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றினார். தேவன் செய்த அனைத்தும் அவருக்காகவும் அவரின் பரிசுத்தவான்களுக்காகவும் செய்யப்பட்டன. கர்த்தர் பரிசுத்தவான்களை கிறிஸ்துவுடையவர்கள் என அழைப்பார். அவரின் திட்டப்படி அவர்கள் கர்த்தரின் உண்மையான பிள்ளைகளாயினர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரிசுத்தவான்களாகியவர்கள் கர்த்தரின் மிகப் பெரிய அன்பையும் அவரின் அதிசயமான செயல்களையும் உணர்ந்து தமக்கு என்றென்றும் எதுவும் குறைவுபடாது என்பதினால் தேவனுக்கு நன்றி கூறி அவரைப் புகழ்வர்.
தேவன் “தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்” எனக் கூறியதைப் போன்று அவர் தனது பரிசுத்தவான்களுக்கு ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றை அளித்து நித்திய ஜீவனை அவர்கள் அனுபவிக்கும்படி அனுமதித்தார். கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு அருளிய மிகப் பெரும் ஈவு இதுவே. இப்போது பரிசுத்தவான்கள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நித்தியமாக வாழ்ந்து ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலிருந்து குடிப்பதால் அவர்கள் எப்பொழுதும் தாகமடைவதேயில்லை. வேறு வார்த்தையில் கூறினால் பரிசுத்தவான்கள் இப்போது கர்த்தரின் பிள்ளைகள் ஆனதால் தேவனாகிய கர்த்தரைப் போன்றே நித்திய ஜீவனைப் பெற்று மகிமையுடன் வாழ்ந்திருப்பர். இத்தகைய பெரிதான ஆசீர்வாதத்தை நமக்கருளிய தேவனாகிய கர்த்தருக்கு எனது நன்றிகளையும் மகிமையையும் செலுத்துகிறேன்.
 
 
உண்மை நற்செய்தியிலுள்ள விசுவாசம் உலகை மேற்கொள்ளச் செய்கிறது
 
அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய காலத்திற்கு திரும்புகிறான். வசனம் 7 கூறுகிறது “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” இங்கு “ஜெயங்கொள்ளுகிறவன்” என்பது தேவனருளிய விசுவாசத்தைக் காத்தவர்களைக் குறிக்கிறது. இந்த விசுவாசமானது பரிசுத்தவான்கள் எல்லாத் துன்பங்களையும் இச்சைகளையும் மேற்கொள்ள உதவுகிறது. தேவனாகிய கர்த்தர் மீதுள்ள நமது விசுவாசமும் அவரால் கொடுக்கப்பட்ட உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள உண்மை நம்பிக்கையுமே உலகின் பாவங்களையும், கர்த்தரின் நியாயத் தீர்ப்பையும் நமது பகைவர்களையும் நமது பலவீனங்களையும், அந்திகிறிஸ்துவின் துன்புறுத்தல்களையும் மேற்கொள்ளச் செய்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் வெற்றியைக் கொடுத்த நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நான் எனது நன்றிகளையும் மகிமையையும் செலுத்துகிறேன். தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கும் பரிசுத்தவான்களால் அந்திகிறிஸ்துவை தமது விசுவாசத்தால் வெற்றி கொள்ள முடியும். ஏனெனில் அவர்களில் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் இந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் தம்முடைய அனைத்துப் பகைவர்களையும் அவர்களுடனான போரில் வெற்றி பெற முடியும். தம்முடைய விசுவாசத்தினால் உலகையும் அந்திகிறிஸ்துவையும் மேற்கொண்ட பரிசுத்தவான்கள், தம்முடைய புதிய வானம் மற்றும் புதிய பூமியைச் சுதந்தரிப்பதைக் கர்த்தர் இப்போது அனுமதித்தார். இந்த உறுதியான விசுவாசத்தை அளித்த கர்த்தருக்கு எனது நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறேன்.
வெற்றி பெறுபவர்களுக்கு தனது புதிய வானத்தையும் புதிய பூமியையும் கொடுக்கப் போவதாக கர்த்தர் கூறினார். அங்கு கண்ணீருமில்லை, கவலையுமில்லை, துக்கமுமில்லை. வெற்றி பெறுபவர்களே இதனைப் பெறுவதற்கான தகுதி உடையவர்கள். இந்த வெற்றிக்கான விசுவாசமானது தேவன் நமக்கருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமாகும். இந்த விசுவாசத்தினால் உலகையும், நமது பாவங்களையும், நம்முடைய பலவீனங்களையும் அந்திகிறிஸ்துவையும் நம்மால் வெற்றி பெற முடியும்.
அந்திகிறிஸ்துவை வெற்றி கொள்ளும் நமது விசுவாசத்திற்கு பரிசாக மிகச் சீக்கிரமாக கர்த்தரிடமிருந்து புதிய வானத்தையும், புதிய பூமியையும் பெறுவோம். நம்முடைய விசுவாசத்தின் பொருட்டு இந்த அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் பெறுவதால் அந்திகிறிஸ்து நமக்கெதிராக நின்று நமது விசுவாசத்தை எடுத்துப் போட முயற்சித்தாலும் நமது விசுவாசத்தினால் நமது எல்லாப் பகைவர்களின் அனைத்துத் திட்டங்களையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும். மற்றவர்கள் எதனைக் கூறினாலும் வெற்றி பெற்றவர்கள் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பதோடு தேவன் தம்முடைய அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்ற உண்மையின் மீதுள்ள விசுவாசத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். இறுதி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்ற பிறகு மறுபடியும் பிறந்தவர்களாக அந்திகிறிஸ்துவின் திட்டங்களை விசுவாசத்தால் மேற்கொள்ள வேண்டும்.
தேவன் நமக்குத் தன்னுடைய புதிய வானத்தையும் புதிய பூமியையும் செல்வங்களையும் நல்வாழ்க்கையையும் மகிமையையும் கொடுத்தார் என்ற விசுவாசத்தினால் குறுகிய காலமே இருக்கும் உபத்திரவங்களை மேற்கொள்ள முடியும். சிறந்ததொரு உலகம் நமக்காக காத்திருக்கையில் இந்த நற்செய்தியின் விசுவாசத்திற்கு நாம் துரோகம் செய்வோமா? நாளை அருமையானவைகள் நமக்கு வரும் போது ஒரே ஒரு நாள் மட்டுமே நாம் காத்திருந்தால் ஆச்சரியமானவைகள் நமக்காக காத்திருக்கும் போது இன்றைய தினத்தின் கஷ்டங்களை நம்மால் சகிக்க முடியாதா? நம்மால் காத்திருக்க முடியும்.
விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு, ஆகியவற்றை மிகச் சிறந்த கொள்கைகளாக பரிசுத்தவான்கள் தமது மனதில் வைத்திருக்க வேண்டுமென வேதாகமம் அடிக்கடி நமக்கு கூறுகிறது. நம்பிக்கை உடையவர்களால் இப்போதைய உபத்திரவங்களை மேற்கொள்வது அதிக சாத்தியமே. இது கர்த்தர் அருளிய இந்த ஆசீர்வாதங்களெல்லாம் தமக்குரியானது என விசுவாசிப்பதினாலேயே ஆயிற்று. இறுதி காலத்தின் வாதைகள் சிறிது காலமே இருக்கும் என்பதாலும் இவற்றிலிருந்து பரிசுத்தவான்கள் தப்பிக்கும் வழியைக் கர்த்தர் காட்டுவார் என்பதாலும் இதனு¡டே நம்மால் வாழ்ந்திருக்க முடியும். இந்த நொடி முதலே நீங்கள் அனைவரும் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் பிரவேசித்து வாழுகிறீர்களென நான் நம்புகிறேன்.
விசுவாசத்தின்படி இந்த எல்லா வார்த்தைகளும் உங்கள் தோளையும் மாமிசத்தையும் தொடுவதற்கு பதிலாக உங்கள் இருதயத்தை விசுவாசத்தினால் தொட வேண்டும். அப்படி நடக்கும் போது உங்கள் இருதயம் புதிய பலத்தைப் பெற்று நம்பிக்கையுடனிருக்கும்.
இறுதி காலத்தில் எல்லா பரிசுத்தவான்களும் இரத்த சாட்சிகளாவர். புதிய வானம் மற்றும் புதிய பூமியின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையைப் பார்க்கும் போது புதிய பலத்துடன் இரத்த சாட்சியாகும் திறமை அதிகமுடையவர்களாயிருப்போம்.
அடிப்படையில் பார்த்தால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் உண்மையின் கர்த்தராகவும், அன்பின் கர்த்தராகவும் உள்ளார். அப்படியானல் கர்த்தருக்கு முன்பு நிற்கப் பயப்படுகிறவர்கள் யார்? தம் மூலப் பாவத்துடன் பிறந்து தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை விசுவாசித்து தமது எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்தமாகாதவர்கள் இவர்கள். அவர்கள் அடிப்படையில் கர்த்தரை ஆராதிப்பதைவிட தீமைகளை ஆராதிப்பதால் அவர்கள் மிகத்தெளிவாக சாத்தானின் சேவகர்களாயினர். தேவனுக்கு முன்பாக அவர்கள் தீமைகளை ஆராதிப்பதாலும் ஒளியைவிட இருளை பின்பற்றுவதை அவர்கள் விரும்புவதாலும் தேவனாகிய கர்த்தருக்கு முன் நிற்க பயப்படுகிறவர்களாயுள்ளனர். கர்த்தருக்கு முன் நிற்க பயப்படுகிறவர்கள் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவர்.
தம்முடைய இருதயங்களிலே உள்ள தமது பாவங்களினால் தாமே இருண்டு போன இம்மக்களுக்கு கர்த்தருக்கு முன்பு பயப்படுவதைத்தவிர வேறு வழிகளில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு குறிப்பாகும். சாத்தானுக்கு சொந்தமான ஆத்துமாக்கள் இருளை விரும்புவதால் ஒளியாக இருக்கும் இயேசுவிற்கு முன் வர அவர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தான் அவர்கள் தமது தீமைகளையும் பலவீனங்களையும் கர்த்தரிடம் எடுத்துச் சென்று தம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை அவரிடமிருந்து பெற வேண்டும். தேவனருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதாவர்கள் கர்த்தருக்கு முன் மிகப் பெரிய பாவிகளாயிருப்பதோட அவரின் பகைவருமாவர்.
அவர்களுடைய ஆத்துமாக்கள் அருவெறுப்புக்கு சொந்தமாகியிருப்பதாலும் அவர்கள் கர்த்தருக்கு எதிராயிருந்ததாலும் எல்லாப் பாவங்களையும் நேசித்து அவற்றைச் செய்து தவறான அடையாளங்களைப் பின்பற்றி எல்லாவிதமான சிலைகளையும் வணங்கி எல்லாவிதமான பொய்களையும் பேசியதால் அவர்கள் கர்த்தரின் நீதியின் நியாயத் தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவர். இது அவர்களுடைய இரண்டாம் மரணமாகிய தண்டனை.
நரகத்திற்கு அனுப்பப்படப் போகும் மக்களுக்கு இரண்டாவது மரணம் விதிக்கப்படுகிறது. இவர்கள் பயப்படுகிறவர்களாகவும், அவிசுவாசிகளாகவும், அருவருக்கத்தக்கவர்களாகவும், கொலை பாதகராகவும், விபசாரகாரர்களாகவும், பில்லி சூன்யக்காரர்களாகவும், விக்கிரகாராதனைக்காரர்களாகவும், அந்திகிறிஸ்துவுடனே சேர்ந்து கர்த்தரின் அன்பை இப்போது ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் உள்ளனர். அவரை விசுவாசிக்காதவர்களே மிகவும் தீமையானவர்கள். அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் இவர்கள் அனைவரும் தள்ளிவிடப்படுவர் என வேதாகமம் நம்மிடம் கூறுகிறது. இதனால் தான் இதனை இரண்டாவது மரணம் என்று வேதாகமம் கூறுகிறது.
இரண்டாவது உயிர்த்தெழுதலில் பங்கேற்றவர்களை நெருப்பில் தள்ளினாலும் அவர்கள் மரிப்பதில்லை. இப்படி அக்கினியில் தள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே அழியாத சரீரத்துடன் அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டனர்.
கர்த்தரை விசுவாசிக்காதவர்களும், அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினிக் கடலில் எரியப்பட உயிரோடெழுப்பப்படுவர். நம்பாத மக்களுக்காக, மரணமில்லாது, எரியும் நரகத்தில் நித்திய வேதனையை எடுத்து வர இரண்டாவது உயிர்த்தெழுதல் நியமிக்கப்பட்டுள்ளது.
ஏழு வாதைகளைக் கொண்டிருக்கும் ஏழு பாத்திரங்களை ஊற்றிய பிறகு ஆயிர வருட அரசாட்சி நிறைவேற்றப்படும். இந்த ஆயிரம் வருடங்கள் முடிந்த பிறகு பரிசுத்தவான்கள் புதிய பூமிக்கும் புதிய வானத்துக்கும் கடந்து செல்வர். “ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன்” என்ற சொற்றொடரில் ஆட்டுக் குட்டியானவரின் மனைவி என்பது இயேசு கிறிஸ்து வழங்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதன் மூலம் இரட்சிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது.
 
 
பரிசுத்த நகரத்தின் மகியையும் அழகையும் விவரிக்க முடியாது
 
எருசலேம் நகரம் என்பது பரிசுத்தவான்கள் தமது மணவாளனுடன் வாழப்போகும் பரிசுத்த நகரத்தைக் குறிக்கிறது. யோவான் கண்ட இந்த நகரமானது மிகவும் அழகியதும் அருமையானதுமாகும். அதன் அளவு மிகப் பெரியது. அதன் உட்புறமும் வெளிப்புறமும் விலையேறப்பட்டக் கற்களால் அழகு படுத்தப்பட்டதும், மிகவும் சுத்தமானதாகவும் இருந்தது. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிகள் தம்முடைய மணவாளனுடன் எங்கு வாழ்வர் என்பதை தேவதூதன் யோவானுக்கு காட்டினான்.
விலையேறப்பட்டக் கற்களினால் கட்டப்பட்ட மாளிகையில் வாழுவதை எண்ணிப் பாருங்கள். இந்நகரமானது பன்னிரண்டு வகையான விலையேறப்பட்டக் கற்களால் கட்டப்பட்டது. இங்கு ஆட்டுக் குட்டியானவரின் மணவாட்டிகள் நித்தியமாக வாழுவர். இந்நகரமானது கர்த்தரின் பரிசாகும். இதனை அவர் ஆட்டுக் குட்டியானவரின் மனைவிக்கு அளிப்பார். எருசலேம் நகரம் ஒளிமயமாக இருப்பதாகவும், அதன் வெளிச்சம் விலையேறப்பட்டக் கல்லின் வெளிச்சமாகவும் பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லை போலவும் இருந்தது.
ஆகவே கர்த்தருடைய மகிமையானது அந்நகரத்துடனும் அதில் வாழுபவர்களுடனும் இருக்கும். கர்த்தரின் ஆளுகை வெளிச்சத்தில் இருக்கிறது. ஆகவே தம்முடைய இருளையும், பலவீனங்களையும், பாவங்களையும், சுத்திகரித்தவர்களாலேயே இந்நகரத்தினுள் பிரவேசித்து இதில் வாழ முடியும். ஆகவே இந்நகரத்தினுள் நாம் பிரவேசிக்க வேண்டுமானால் நம் தேவன் நமக்கருளிய உண்மை வார்த்தையை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
இந்நகரத்தில் பெரிய உயரமான மதில் சுவரும் அதில் பன்னிரண்டு வாசல்கள் இருந்ததாகவும் இவ்வசனம் கூறுகிறது. இந்த வாசல்களில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், இப்பெயர்கள் இஸ்ரவேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரத்தாரின் பெயர்கள் எனவும் இது கூறுகிறது. மிகப் பெரியதும் உயரமான மதில் சுவருடையதுமான இந்நகரத்தைத் தனது பரிசுத்தவான்களுக்காக எற்படுத்தியதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
இந்த பரிசுத்த நகரத்தினுள் பிரவேசிப்பது இத்தனைக் கடினமானது என்ற ஆவிக்குரிய உண்மையை இது குறிப்பிடுகிறது. வேறு வார்த்தையில் கூறினால் நம்முடையப் பாவங்களிலிருந்து கர்த்தருக்கு முன்பாக இரட்சிக்கப்படுவது மனித முயற்சிகளினாலோ அல்லது கர்த்தரால் படைக்கப்பட்ட உலகிலுள்ளவைகளாலோ இயலாது என்பதை நமக்குக் கூறுகிறது. நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு இந்த பரிசுத்த நகருக்குள் பிரவேசிக்க வேண்டுமானால் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களிடமிருந்த அதே விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். அவர்களின் விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை விசுவாசிப்பதாய் இருந்தது. இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் இல்லாவதவர்களாய் பரிசுத்த நகரத்திற்குள் செல்லவே முடியாது.
இந்த நகரத்தை தேவனாகிய கர்த்தாரால் நியமிக்கப்பட்ட பன்னிரண்டு தேவதூதர்கள் காத்து வருகின்றனர் “வாசல்களில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன” என்ற சொற்றொடர் இந்நகரத்தின் உரிமையாளர்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்மிடம் கூறுகிறது. அது கர்த்தரும் அவருடைய மக்களுமாகும். அவருடைய பிள்ளைகளாகிய கர்த்தரின் மக்களுக்கு இந்நகரம் சொந்தமாகும்.
பரிசுத்த நகரத்தின் நான்கு பக்கங்களான வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய சுவர்களில் மும்மூன்று வாசல்கள் இருந்தன. நாம் நம்பும் நற்செய்தியுடன் இந்த மூன்று வாசல்களைத் தொடர்புபடுத்தவே தேவன் இவற்றை இங்கு கூறினார் என உறுதியாக நம்புகிறேன். உண்மை நற்செய்திக்கு பரலோகத்திலும் பூமியிலும் சாட்சியிடுகிறவைகள் மூன்று இருப்பதாக 1 யோவான் 5:7-8 கூறுகிறது. பரலோகத்திலும் பூமியிலும் உள்ள இந்த மூன்று சாட்சிகளையும் விசுவாசிப்பவர்களால் மட்டுமே பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் திரியேகக் கடவுளையும், நீர், இரத்தம், மற்றும் ஆவி ஆகியவையின் மூலம் நம்மை இரட்சிக்க அவர் செய்த நீதியின் செய்கையையும் விசுவாசிக்கிறோம்.
நகர சுவர்களின் பன்னிரண்டு அத்திவாரங்களிலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன என்பது கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த படி அதனை நிறைவேற்றினார் என நம்மிடம் கூறுகிறது. அவர் அவர்களின் பெயரை ஜீவப் புத்தகத்திலிருந்து அழிக்காமல் அதில் எழுதுவதாக வாக்குத்தத்தம் செய்தார்.
ஒரு ஃபர்லாங், கிரேக்கத்தில் “ஸ்டேடியன்” என அழைக்கப்படுகிறது. இது நீளத்தை அளக்கும் ஒரு அளவாகும். இது இன்றைய அளவின்படி 600 அடிகள் (185 மீட்டர்) நீளமுள்ளது. சதுரமான இந்நகரத்தின் ஒவ்வொரு பக்கமும் 12,000 ஃபர்லாங் நீளமுள்ளது என வேதாகமம் கூறும் போது அதன் ஒரு பக்கத்தின் நீளம் 2,220 கி.மீ. (1,390 மைல்) என்பதைக் கூறுகிறது. அதனுடைய நீளமும் அகலமும் உயரமும் சமமானது என்று கூறுப்பட்டுள்ளது. இந்நகரத்தின் மிகவும் பெரிதான அளவு கர்த்தரின் ராஜ்யம் எத்தனை மகிமையானது என்பதை நமக்குக் காட்டுகிறது.
வேதாகமத்தைப் பொறுத்தவரை நான்காம் எண் துன்பத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் இந்த விசுவாசத்தினை எல்லோராலும் பெற்றிருக்க முடியாது. கர்த்தரின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களிடமே இவ்விசுவாசம் இருக்கும். இதனுடன் தம்முடைய சொந்த மனித சிந்தனைகள் பொருந்தாதது ஒரு பொருட்டல்ல.
ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இயேசுவின் சிலுவையை மட்டும் விசுவாசிப்பதாலும், தேவனே கர்த்தரென்றும் அவரே இரட்சகரென்றும் விசுவாசிப்பதாலும் கர்த்தரின் பரிசுத்த நகரத்திற்குள் நுழைய முடியாது. நம்முடைய தேவன் கூறிதைப் போல் ஒருவன் நீராலும் ஆவியாலும் மறுபடியும் பிறவாவிட்டால் அவனால்/அவளால் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் பாவங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன என்றும், அவர்களுடைய இடத்திலிருந்து அவர்களுடைய பாவங்களை நிவர்த்திக்கும் பொருட்டு அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார் என்பதையும் விசுவாசிக்கும் போதே மக்கள் மறுபடியும் பிறக்கிறார்கள்.
“நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது” என்ற சொற்றொடர் தங்கத்தைப் போன்ற விசுவாசமுடையவர்களாலேயே அதாவது, கர்த்தரை உண்மையாக விசுவாசித்தவர்கள் மட்டுமே அதனுள் பிரவேசிக்க முடியுமென்பதைக் கூறுகிறது. எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசமும் எல்லா உலக காரியங்களுக்கும் அப்பாற்பட்ட விசுவாசமுமே தேவனின் பரிசுத்த நகரத்திற்குள் அனுமதிக்கும் விசுவாசமாகுமென இது நமக்கு கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மறுபடியும் பிறப்பதைக் குறித்த கர்த்தரின் வார்த்தையாகிய நீரையும் ஆவியையும் அப்படியே ஏற்றக் கொண்டு இந்த வார்த்தையை உண்மையாக விசுவாசித்து அவனுடைய/அவளுடைய விசுவாசத்தை செவ்வைப்படுத்த வேண்டுமென இது கூறுகிறது.
நகர சுவர்களின் அத்திவாரம் எல்லாவிதமான விலையேறப்பட்டக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டதானது, நம் தேவனின் வார்த்தையிலுள்ள வெவ்வேறு வகையான விசுவாசங்களால் போஷிக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. நம்மிடம் ஒழுங்கான விசுவாசமிருக்க வேண்டும். அது வெறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதான விசுவாசமோ அல்லது பரலோகம் மற்றும் ஆயிர வருட அரசாட்சி ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையாக மட்டுமோ இருக்கக் கூடாது. இப்போதைய துன்பங்களைச் சகிக்கும் போது கர்த்தரின் வார்த்தையின் மூலம் இத்தகைய விசுவாசம் வருகிறது.
கர்த்தர் தமது பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு என்ற ஆசீர்வாதத்தை மட்டும் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களின் நம்பிக்கை நிறைவேற்றப்படும் ஆசீர்வாதத்தையும் கொடுத்தார். அது தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் ஆயிர வருட அரசாட்சி மற்றும் பரலோகத்திற்குள் செல்லுதல் ஆகியவையாகும். பரிசுத்தவான்களாகிய நம்மை புதிய வானத்திற்கும் புதிய பூமிக்கும் செல்ல தகுதியாக்கிய கர்த்தருக்கு நன்றி மட்டுமே கூற முடியும். அங்கு கவலையோ துன்பமோ இருக்காது.
பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்கப்போகும் பரிசுத்தவான்கள் இப்பூமியிலிருக்கும் போது அதிக பொறுமையுடனிருக்க வேண்டும். அவர்கள் தம்முடைய விசுவாசத்தின் நடுவில் உறுதியான நங்கூரம் பாய்ச்சியவர்களாய் இருக்க வேண்டும். வேறு வார்த்தையில் கூறினால் தேவனால் கூறப்பட்ட சத்திய வார்த்தைகளைப் பேசுபவர்களிடம் தமது விசுவாசத்தைப் பாதுகாக்கும் விடா முயற்சி இருக்க வேண்டும். முடிவு காலம் வருகையில் விசுவாசத்தை எதிர்க்கும் அந்திகிறிஸ்துவின் காலம் வரும்.
சாத்தானின் ஊழியனாகிய அந்திகிறிஸ்து விசுவாசத்தின் மக்கள் மீது அநேக துன்பங்களை எடுத்து வந்து அவர்கள் தமது விசுவாசத்தை மறுதலிக்குமாறு செய்வான். மக்கள் அந்திகிறிஸ்துவின் பக்கத்திற்கு சென்று தம்முடைய விசுவாசத்தைக் கைவிட்டால் அவர்களுக்கு ஆயிர வருட அரசாட்சியும் பரலோகமும் தொலைவாகி விடுவதோடு சாத்தானுடனே நரகத்தினுள்ளும் தள்ளப்படுவர்.
ஆகவே சோதனைகள், துன்பங்கள், மற்றும் இறுதி காலத்தின் வாதைகள் ஆகியவற்றின் நடுவிலும், நாம் விடா முயற்சியுடையோராய் இருக்க வேண்டும். அது நம் விசுவாசத்தைக் காக்கச் செய்யும். இந்த விடா முயற்சியே புதிய வானத்தையும் புதிய பூமியையும் நமதாக்கும்.
இந்த புதிய வானம் மற்றும் புதிய பூமியில் வாழ்வது தேவனின் கரங்களால் அரவணைக்கப் பட்டதைப் போன்றது. ஏனெனில் இயேசு கிறிஸ்து புதிய உலகின் ஒளியாகியதால் இந்த புதிய பூமியைத் தனது ஒளியினால் ஒளிரச் செய்கிறார். இங்கு இதனை பிரகாசிக்க செய்ய சூரியனோ, சந்திரனோ தேவையில்லை. இயேசு கிறிஸ்து நமது இரட்சகரும், படைப்பாளியும், நியாயாதிபதியுமாவார். மேலும் புதிய வானம் புதிய பூமியில் அவர் நமது கர்த்தராக நம்முடனே இருப்பார். அவர் மூலமாக பரலோகம் செல்கிறோம். அவரிடமிருந்து ஆசீர்வாதங்கள் ஓடுகின்றன். இந்த தேவனைத் துதிப்பதைத் தவிர வேறு வேலைகள் பரிசுத்தவான்களுக்கில்லை.
தமிழ் வேதாகமத்தில் வசனம் 24 இவ்வாறு எழுதப்பட்டுள்ளது “இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்” பூமியின் மகிமையானது பரலோகத்திற்கு எடுத்து வரப்படும் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. முதலாவது பூமியை ஆண்டவர்கள் செல்வம் நிறைந்தவர்களாய் இருந்தமையால் அவர்கள் தம்முடைய ஐசுவர்யங்களை புதிய வானம் புதிய பூமிக்கு எடுத்து வருவார்கள் என இது பொருள்படாது. இங்கு பூமி என்பது ஆயிரவருட அரசாட்சி நடைபெறும் பூமியாகும்.
பரிசுத்தவான்கள் இரட்சிக்கப்பட்டு ஒரே மாதிரியாகவே ஆயிர வருட அரசாட்சியினுள் பிரவேசித்தாலும் அவர்களுக்கு வெவ்வேறு விதமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். சிலர் பத்து நகரங்களை ஆளுவார்கள். சிலர் ஐந்து நகரங்களை ஆளுவார்கள். இது அவர்கள் முதலாம் உலகில் வசித்த போது நற்செய்தியைப் பிரசங்கிக்க அவர்கள் எடுத்து முயற்சிகளைப் பொறுத்தது.
வெவ்வேறு விதமான அதிகாரங்கள் உள்ள இந்த ராஜாக்கள் புதிய வானம் மற்றும் புதிய பூமிக்கு செல்வார்கள் என வசனம் 24 இங்கு நம்மிடம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் ஆயிர வருட அரசாட்சியில் ஆளுகைப் புரிந்தவர்கள், புதிய வானம் புதிய பூமிக்கு வருவார்கள். அப்பொழுது அவர்கள் தம்முடனே கூட தேவன் மீதுள்ள விசுவாசத்தையும், தம்முடைய எல்லா மகிமையையும் மரியாதையும் எடுத்து வருவர். ஆகவே நாமெல்லாம் வசிக்கும் இந்த முதல் உலகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பரிசுத்த நகரம் இருக்கும் புதிய வானமும், புதிய பூமியும், ஏற்கனவே பரிசுத்த ஒளியால் நிரப்பப்பட்டிருப்பதால் அங்கு இரவும் இருக்காது, தீமையும் இருக்காது. இவ்வுலகிலுள்ள கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை அறியாதவர்களாயிருந்தால் அவர்கள் அழிந்து போனவர்களும், அருவருக்கத்தக்கவர்களும், பொய்யர்களுமாவர். ஆகவே அவர்களால் பரிசுத்த நகரினுள் பிரவேசிக்க முடியாது. ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் பரிசுத்த ஆவியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே பரரேலாகத்தினுள் பிரவேசிக்க முடியும். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே பரலோகத்தின் திறவுகோலாகவும் பாவமன்னிப்பின் திறவுகோலாகவும் இருக்கிறது. கர்த்தர் உங்களிடம் இந்த திறவுகோலைக் கொடுத்ததை உணர்ந்த போது உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டது என்பதை அறிவீர்கள். இந்த நற்செய்தியின் சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கும் போது இந்த பரிசுத்த நகரத்ததிற்குள் பிரவேசிக்கும் ஆசீர்வாதத்தினால் தரிப்பிக்கப்படுவீர்கள்.
இந்த பரிசுத்த நகரம் நமக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டது என்பதை விசுவாசியுங்கள் நம்பிக்கையுடன் அதற்கேற்றவாரு வாழுங்கள்.
இக்காலத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொன்றும் உலக அளவின்படி அளக்கப்படுகிறது. ஆகவே உண்மையான மகிழ்ச்சி எது என்று காண முடியாது. ஆனால் கர்த்தரின் அளவுகோலால் அளக்கும் போது பரலோகத்தைத் தமது உடமையாக்கிக் கொண்டவர்கள் உண்மையான மகிழ்ச்சியுடையவர்கள் என்பதை அறியலாம். ஏன்? சீக்கிரமாகவோ தாமதமாகவோ, இவ்வுலகிலுள்ள அனைத்தும் மறைந்து போகும். நம்முடைய நம்பிக்கையை எங்கும் வைக்க முடியாது. கர்த்தரின் திட்டப்படி உபத்திரவங்களும் வாதைகளும் முடிவில் வரும் போது அவை யாவும் அழிந்து போகும். அழுகிப் போகும் மாமிசத்தின் மீதும் சாம்பாலாகிப் போகும் மாமிசத்தின் மீதும் நம்முடைய நம்பிக்கையை வைப்பதை விட முட்டாள் தனமான செய்கை வேறில்லை.
அதற்கு மாறாக, நம்முடைய நம்பிக்கையை நித்தியமான பரலோக ராஜ்யத்தில் வைத்தால் அவை அழுகிப் போவதுமில்லை, சாம்பலாகிப் போவதுமில்லை. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பாவமில்லாதவர்களாலேயே கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த எருசலேம் நகரத்திற்குள் பிரவேசிக்க முடியும். இவ்வுலகிலேயே சந்தோஷமான மக்கள் தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுத்தமாகி பரலோகத்தை தமது சொந்தமாக்கி கொண்டவர்களே.
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை நாம் வாழ வேண்டும். புதிய வானம் புதிய பூமியை நமக்கு கொடுத்தமைக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆத்துமாவையும் பரலோகத்தினுள் செல்ல ஏதுவாக்கும் உண்மை நற்செய்தியை பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
இத்தகைய ஆசீர்வாதங்களோடு நாம் வாழ்வோமாக. கர்த்தரால் நாம் நேசிக்கப்படுவோமாக. நாம் நம்முடைய தேவனின் சன்னிதானத்தில் நிற்கையில் அவருடைய கரங்களால் தழுவப்பட்டவர்களாய் என்றென்றும் வாழ்வோமாக.