(வெளி 22:1-21)
“பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக் குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர். அவர் தம்முடைய தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.”
விளக்கவுரை
வசனம் 1: பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக் குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.
யோவானுக்கு “பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி” காட்டப்பட்டதாக இங்கு கூறப்பட்டுள்ளது. இவ்வுலகில் நீர் என்பது உயிருக்கு சமமான சொல்லாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வானத்திலும், புதிய பூமியிலும் ஜீவத் தண்ணீர் ஓடுவதாகவும் இங்கு பரிசுத்தவான்கள் நித்தியமாக வாழ்வர் என்றும் இந்த வசனம் கூறுகிறது. ஆட்டுக் குட்டியானவருடைய சிங்காசனத்திலிருந்து ஓடும் இந்த ஜீவத் தண்ணீரானது பரலோக ராஜ்யத்தை ஈரப்பதமாக்கி அங்குள்ளவைகளை புதிதாக்குகிறது “தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை” என்ற சொற்றொடரில் “ஆட்டுக்குட்டியானவர்” என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவர் இப்பூமியில் இருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் மனிதர்களை இரட்சித்தார்.
கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு கொடுத்த புதிய வானம் மற்றும் புதிய பூமியில் ஜீவத் தண்ணீர் ஓடுகிறது. இத்தோட்டமானது ஒரு சிறந்த சித்திரத்தில் காணப்படும் தோட்டமானது எத்தனை அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறதோ, அது போல் இது மிகவும் ஆச்சரியமானது, மேலும் இது சாதாரண ஆறல்ல. அது அங்குள்ள அனைத்திற்கும் உயிரைக் கொடுப்பதாயிருக்கிறது. எதுவெல்லாம் இந்த ஆற்றினைத் தொடுகிறதோ அதுவெல்லாம் உயிர் பெறும். இந்த ஜீவத் தண்ணீர் ஓடும் ஆற்றின் கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிசுத்தவான்கள் இந்நீரை அருந்துவர். அதனால் அவர்கள் தம் நித்திய ஜீவனை அனுபவிப்பர்.
ஜீவத்தண்ணீர் ஓடுகின்ற நதியானது கர்த்தருடைய சிங்காசனத்திலிருந்தும் ஆட்டுக் குட்டியானவரின் சிங்காசனத்திலிருந்தும் புறப்பட்டு ஓடுகிறது. கர்த்தர் அவர்கள் மீது கிருபையாக நித்திய ஜீவனைக் கொடுத்ததால் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் இருக்கும் பரிசுத்தவான்களால் கர்த்தரின் கிருபையையும் ஆட்டுக் குட்டியானவரின் கிருபையையும் புகழாமல் இருக்க முடியாது. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து ஓடும் புதிய கிருபையின் வாழ்விற்காக நான் நன்றியறிதலுடையவனாக இருக்கிறேன்.
வசனம் 2: நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
பரிசுத்தவான்களுக்கு தேவன் அளிக்கப் போகும் அதிசயமான ஆசீர்வாதங்கள் அணிவகுத்து வருகின்றன. ஏனெனில் நதியின் இருபுறமுள்ள ஜீவவிருட்சங்களின் கனிகளையும் அவர்கள் சாப்பிடும் படி அனுமதியளித்தார் என்று வசனம் இங்கு கூறுகிறது. ஜீவ விருட்சமானது பன்னிரண்டு வகையான கனிகளைத் தருகிறது. அது ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு கனிகளைத் தந்து புதிய ஜீவன்களுக்கு உறுதியைத் தருகிறது. அதனுடைய இலைகள் நாடுகளைக் குணமாக்கும் எனவும் இங்கு கூறப்பட்டுள்ளது.
தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு அருளிய கிருபையானது மிகவும் பொ¢தானதாயிருப்பதால் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் அவரையும் பிதாவாகிய கர்த்தரையும் புகழ்வது மட்டுமே. இப்பொழுது பரிசுத்தவான்கள் தேவனுக்கு தமது சொந்தத்திலிருந்து எதையும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், புதிய வானத்தையும் புதிய பூமியையும் புதிய வாழ்வையும் கொடுத்த தேவனை நன்றி நிறைந்த இருதயத்துடன் போற்றுவது மட்டுமே “தேவனே, உமக்கு நன்றிகள்! அல்லேலூயா!” என்று பரிசுத்தவான்களின் இருதயங்களைச் சத்தமிட செய்த தேவனை நான் துதிக்கிறேன்.
வசனம் 3: இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
பரலோக ராஜ்யத்தில் வாழும் பரிசுத்தவான்கள் மீதிருந்த சாபங்களைக் கர்த்தர் முற்றிலுமாய் அழித்தார். கர்த்தருடைய சிங்காசனமும் தேவனுடைய சிங்காசனமும் பரிசுத்தவான்களுக்கு நடுவில் காணப்பட்டது என்பது பரலோக ராஜ்யத்தில் வாழும் பரிசுத்தவான்கள் தேவனைத் தமது இருதயங்களின் நடுவில் வைத்திருப்பதைக் காட்டுகிறது. ஆகவே பரிசுத்தவான்களின் இருதயங்கள் அழகினாலும் உண்மையினாலும் நிரம்பி வழிகிறது. அவர்களுடைய வாழ்வு ஆனந்தமயமாய் உள்ளது.
“அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து” என்ற சொற்றொடரின் மூலமாக பரலோக ராஜ்யத்தில் வாழும் பரிசுத்தவான்கள் தேவனுக்கு மிக அருகில் நின்று அவருக்கு ஊழியம் செய்யும் மகிமையை அணிந்திருப்பதை நாம் காணலாம். நம்முடைய தேவன் வசிக்கும் பரலோக ராஜ்யமானது மிகவும் அழகியதும் ஆச்சரியமானதுமான ராஜ்யமாகும்.
தேவனுக்கு மிக அருகிலிருந்து அவருக்கு ஊழியம் செய்யும் ஊழியர்கள் அவருடைய மகிமையை நெருக்கமாக நின்று அனுபவிக்கலாம். பரலோக ராஜ்யத்தில் கூட தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை இது நமக்குக் கூறுகிறது. ஊழியன் என்ற சொல் தாழ்மையைக் குறிக்கிறது. ஆனால் நமது தேவனுக்கு நெருக்கமாக நின்று மகிமையான அவருக்கு ஊழியம் செய்வது பரலோக ராஜ்யத்தின் மிகப் பொ¢ய ஆசீர்வாதமாகும். மேலும் அவர்களுடைய ஆடை அலங்காரங்கள் விவரிக்க முடியாத அழகுள்ளவை. பரலோக ராஜ்யத்தில் தேவனுடைய ஊழியர்கள் ஆனோரும் இவ்வுலகில் அவருடைய ஊழியர்கள் ஆனோரும் பரலோகத்தின் மகிமையை அணிந்திருப்பதோடு அவர்களே மிகவும் சந்தோக்ஷமானவர்கள்.
வசனம் 4: அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
பரிசுத்தவான்களும் தேவனின் ஊழியர்களும் யாருக்கு சொந்தமானவர்கள்? அவர்கள் தேவனுடையவர்கள். அவர்கள் தேவனின் மக்களாகவும் கர்த்தரின் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். ஆகவே பரலோக ராஜ்யத்தில் தேவனுக்கு ஊழியம் செய்பவர்களின் நெற்றியில் தேவனின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடையவர்களானதால் தேவன் அவர்களைப் பாதுகாத்து, அவர்களை என்றென்றும் ஆசீர்வதிப்பார். பரிசுத்தவான்கள் அவருடையவரானார்கள் என்பதன் பொருள் அவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்கள் என்பதையும், மிகவும் அழகான மகிமையின் ஆடைகளால் தரிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் பொருள்படும். தேவனுடையவர்களாகவும் அவரின் ஊழியர்களாகவும் இருக்க வெட்கப்படுகிறவர்கள் அவருடைய மகிமையை அறியாதவர்கள், அவர்களால் பரலோகத்தின் மக்களாகவே முடியாது.
பரலோகத்தில் வாழும் பரிசுத்தவான்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆசீர்வாதத்தை அளித்தது தேவனே. இந்நொடியிலிருந்து பரிசுத்தவான்கள் அவருடையவரானார்கள். தேவனுக்கு சொந்தமாகியவர்களை சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. பரிசுத்தவான்களும் தேவனும் பரலோகத்தில் நித்தியமாக மகிமையுடனிருப்பர். பரிசுத்தவான்கள் தேவனுடைய மகிமையான முகத்தை ஒவ்வொரு நாளும் காண்பார்கள் என்பது அவர்கள் அவருடைய அன்பினாலும் அதிசயமான ஆசீர்வாத்தினாலும் நித்தியமாக வாழுவர் என்பதாகும்.
இன்னொரு காரியத்தை பரிசுத்தவான்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேவனாகிய இயேசுவுடன் பிதாவாகிய கர்த்தரும் பரிசுத்த ஆவியானவரும் கூட அவர்களின் குடும்பமாக அங்கிருப்பர். பரலோக ராஜ்யத்தில் பிதாவாகிய கர்த்தரும் அவருடைய குமாரனாகிய இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும் பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் மற்ற அனைத்தும் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து சமாதானத்துடன் வாழ்வர் என்பதை நாம் மறந்து போகக் கூடாது. நம்மை அவருடையவர்களாக்கிய தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
வசனம் 5: அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
வேதாகமம் இங்கு நம்மிடம் கூறுவதைப் போல் பரிசுத்தவான்கள் தேவனுடனே கூட புதிய வானத்திலும் புதிய பூமியிலும் வாழ்வர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்களை அது தேவனுடன் பரலோகத்தை அரசாளவும், அவருடைய ஐசுவர்யத்தில் வாழவும், மகிமையுடனும் அதிகாரத்துடன் வாழ்வதையும் ஏதுவாக்குகிறது. இந்த நற்செய்தியின் மூலம் நாம் ஆச்சரியப்படுகிறோம். ஏனெனில் நம்மிடம் எத்தனை வல்லமையும் அதிகாரமும் உள்ள நற்செய்தி இருக்கிறது!
இந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் மகிமைக்காகவும் நம் திரியேகக் கடவுளை நான் போற்றுகிறேன். இப்பூமியிலிருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த பரிசுத்தவான்கள் பரலோக ராஜ்யத்தை ஆளுவார்கள். இந்த ஆசீர்வாதம் எத்தனை அதிசயமானது. தேவனை நம்மால் புகழாதிருக்க முடியாது.
பரிசுத்தவான்கள் வசிக்கும் புதிய வானம், புதிய பூமியில் விளக்குகளோ, மின்சார விளக்குகளோ அல்லது சூரியனோ தேவையில்லை. ஏன்? ஏனெனில் கர்த்தரே புதிய வானம் மற்றும் புதிய பூமியின் ஒளியானார். ஆகவே அங்கு இருளிருக்காது. கர்த்தர் பரிசுத்தவான்களைத் தமது பிள்ளைகளாக அங்கு அரசாள அனுமதித்தார். இந்த ஆசீர்வாதம் பரிசுத்தவான்கள் தேவனிடமிருந்து பெற்ற பொ¢தான கிருபையை இன்னுமொருமுறை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
நம்முடைய இரட்சிப்பிற்கு பிறகு நமக்களிக்கப்பட்ட பரலோக ஆசீர்வாதங்கள் எத்தனைப் பொ¢யவை என்பதை பரிசுத்தவான்களாகிய நாம் அறிந்து கொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய பரிசுத்தவான்களுக்கு அளித்த கிருபையானது வானத்தை விட உயரமானதும் பொ¢தானதுமாகும். தேவனருளிய இந்த அதிசயமான ஆசீர்வாதம் தம்மைக் கடந்து போக பரிசுத்தவான்கள் அனுமதிக்க கூடாது. தேவனுடைய மகத்துவத்திற்கும், மகிமைக்கும் அவர் அளித்த ஆசீர்வாதங்களுக்காகவும் பரிசுத்தவான்கள் எப்பொழுதும் நன்றிகளையும் புகழையும் கொடுத்து ஜசுவர்யத்தாலும் கம்பீரத்தினாலும் எப்போதும் வாழ வேண்டும். ஆமேன்! அல்லேலூயா! நம் கர்த்தரை நான் போற்றுகிறேன்!
வசனம் 6: பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர். அவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
“இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள்.” வெளிப்படுத்தலின் மூலமாக பரிசுத்தவான்களுக்கு தேவன் வெளிப்படுத்திய அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார். இதனால் தான் பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் ஊழியர்கள் மூலமாக பேசியதன் மூலம் தேவன் இவை அனைத்தையும் தனது பரிசுத்தவான்கள் முன்கூட்டியே அறியச் செய்தார். வெளிப்படுத்திய விசேஷத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை எது? வெளிப்படுத்தின விசேஷத்தில் அநேக ஆசீர்வாதமான வார்த்தைகள் உள்ளன. ஆனால் கர்த்தர் பரிசுத்தவான்களை புதிய வானம் புதிய பூமியில் தேவனுடனே கூட அரசாளச் செய்து அதிகாரத்தையும் மகிமை¨யும் அவர்களுக்கு அளிப்பதே மிகவும் ஆசீர்வாதமான வார்த்தையாகும்.
கர்த்தர் இப்பணியை வெகு சீக்கிரமாக செய்யப் போவதால் பரிசுத்தவான்களால் தமது விசுவாசத்தை விட்டுவிடவோ அல்லது பரிதவிப்பில் மாட்டிக் கொள்ளவோ முடியாது. பரிசுத்தவான்கள் தம்முடைய விசுவாசத்தின் நம்பிக்கையின் மூலமாக அனைத்து சோதனைகளையும் உபத்திரவங்களையும் மேற்கொள்ள வேண்டும். நமது தேவன் தனது பரிசுத்தவான்களுக்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் கூறிய தீர்க்கதரிசனங்களையும் அவர்கள் பேசும்படி செய்தார். இதன் மூலம் இந்த அனைத்து ஆசீர்வாதங்களையும் அவரால் தனது பரிசுத்தவான்களுக்கும் ஆலயத்திற்கும் கூற முடிந்தது.
வசனம் 7: இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகள் பரிசுத்தவான்களின் இரத்த சாட்சி மரணத்தைக் குறித்து நம்மிடம் கூறுகின்றன. அந்திகிறிஸ்துவால் பரிசத்தவான்கள் துன்புறுத்தப்படும் நேரம் வருமென்றும், அப்பொழுது அவர்கள் தம் மரணப் பரியந்தமும் தம் விசுவாசத்தைக் காக்க வேண்டுமென்றும் இது நமக்கு வெளிப்படுத்துகிறது. இரத்த சாட்சியானது கர்த்தரின் சித்தமாயிருப்பதால் பரிசுத்தவான்கள் அதனைத் தழுவ வேண்டும். அப்பொழுது அவர்கள் தம்முடைய உயிர்த்தெழுதலிலும் எடுத்துக் கொள்ளப்படுதலிலும் பங்கேற்று புதிய வானம் புமிய பூமியில் நித்தியமாக வாழ்ந்திருப்பர். தேவன் பரிசுத்தவான்களுக்காக பேசிய கர்த்தரின் வார்த்தையை அவர்கள் விசுவாசித்து அந்த விசுவாசத்தைக் காக்க வேண்டும். இறுதி காலத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தேவனின் வார்த்தையை விசுவாசித்து அந்த விசுவாசத்தினால் வாழ்பவர்களே.
தாம் சீக்கிரமாக வரப்போவதாக கர்த்தர் தனது பரிசுத்தவான்களிடம் கூறினார். தேவன் இனிமேலும் தாமதிக்காது நம்மிடம் வருவார். நீர் மற்றும் ஆவியின் வார்த்தையிலிருந்து ஓடும் எல்லா ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றவும், பரிசுத்தவான்களை பாவங்களிலிருந்து வார்த்தை மூலமாக இரட்சிக்கவும் நம் தேவன் இப்பூமிக்கு மிகவும் சீக்கிரமாக வருகிறார்.
இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாத வார்த்தைகளைப் பரிசுத்தவான்கள் பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் தமது விசுவாசத்தையும் காத்தல் வேண்டும். தேவனின் வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தை அவர்கள் இழந்தால் அனைத்தையும் அவர்கள் இழந்து போவர். இதனால் தான் அவர்கள் தேவனின் வார்த்தை மீதுள்ள தமது விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் தேவன் மீதுள்ள விசுவாசத்தைக் காக்குமாறு கர்த்தர் பரிசுத்தவான்களிடம் கூறினார்.
வசனம் 8: யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.
கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளை பரப்புவது தீர்க்கதரிசிகளும் பரிசுத்தவான்களுமாகும். கர்த்தர் அவர்கள் மூலம் பேசியபடி செயல்படுவதற்காக அவரைத் துதிக்க வேண்டும். அவரை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும். சில சமயங்களில் சில மனிதர்கள் தம்மைக் கர்த்தரின் அளவிற்கு உயர்த்துவர். அவர்கள் அத்தகைய விதமாக வணங்கவும்படுவர். அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாகவும் போலிகளாகவும் இருப்பதால் அப்படிச் செய்கிறார்கள். துதிகளையும், ஆராதனைகளையும், மகிமையையும் ஊழியத்தையும் பெற கர்த்தர் மட்டுமே தகுதியானவர்.
வசனம் 9: அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக் கொள்ளுகிறவர்களோடுங் கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசியாக நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் நமக்கு அருளிய நற்செய்தியின் அதிசயத்தை முதலில் நாம் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது நாம் கர்த்தரின் மக்களாகவும், பரிசுத்தவான்களாகவும் ஒவ்வொருவருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவோம். இதற்கு பிறகு தான் கர்த்தரால் அவர்களுக்கு தன் பணிகளை கொடுக்க முடியும். தேவனுடைய ஊழியர்களாகியவர்கள் கூட அவரின் வார்த்தையை விசுவாசித்து தம்முடைய நம்பிக்கையால் அதனைக் காக்க வேண்டும். இவர்கள் தான் மகிமையைத் தாமே வைத்துக் கொள்வதற்கு பதிலாக அனைத்து மகிமைகளையும் கர்த்தருக்கு கொடுப்பவர்கள். இவ்வுலகிலுள்ள எல்லோராலும் ஆராதிக்கப்படுவதற்கும், மகிமைப்படுத்தப்படுவதற்கும் நமது தேவன் தகுதியானவர். அல்லேலூயா!
வசனம் 10: பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
வெளிப்படுத்தலில் எழுதப்பட்டுள்ள வாக்குத்தத்த வார்த்தையானது மறைத்து வைக்கக் கூடிய ஒன்றல்ல. அது சீக்கிரமாகவே நிறைவேற்றப்படுவதால் அதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். ஆமேன், வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தையை நாம் விசுவாசித்து அதனைப் பிரசங்கிப்போமாக.
வசனம் 11: அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
தேவனுடைய நாள் நெருங்கி வரும் போது பாவம் செய்யவிழைகிறவர்களைத் தொடர்ந்து பாவம்செய்யவும், பரிசுத்தமாக இருக்க விழைகிறவர்களைத் தொடர்ந்து பரிசுத்தமாக இருக்கும்படியும் அழுக்கில் இருப்பவர்கள் தொடர்ந்தும் அழுக்கிலிருக்கவும் அவர் அனுமதித்தார். இறுதி காலம் வருகையில் தேவனுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமில்லாது போனவர்கள், இவ்வுலகில் நற்செய்திக்கு தொடர்ந்து பணியாற்றுவர். தேவனால் கொடுக்கப்பட்ட பரிசுத்தத்தைக் கடைப்பிடித்தவர்கள் தம் விசுவாச வாழ்வில் அப்படியே தொடர்ந்தும் வாழ்வர். நம்மிடம் இப்போதுள்ள விசுவாசத்தைத் தொடர்ந்து கடைபிடிக்குமாறு நம் தேவன் நமக்கு ஆலோசனைக் கூறுகிறார்.
வசனம் 12: இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால் நம் தேவன் சீக்கிரமாக வந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்ப பாடுபட்ட பரிசுத்தவான்களுக்கு பரிசளிக்க பூமியிலேயே பரதீசையும், புதிய வானத்தையும் புதிய பூமியையும் அவர்களுக்கு கொடுப்பார். வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை பரிசுத்தவான்கள் விசுவாசிக்கும் போது அவர்களால் தமது விசுவாசத்தை முடிவு வரை பாதுகாக்க முடியும். ஏனெனில் அவர்கள் தம்முடைய விசுவாசத்தை தேவன் மீது வைத்திருப்பர். நம்முடைய தேவன் மகிமையுடையவராகவும் இரக்கமிக்கவராகவும் இருப்பதால் பரிசத்தவான்களின் உழைப்புக்குத்தக்க சன்மானத்தை வழங்குவாரென நாம் உணர்ந்து அதனை விசுவாசிக்க வேண்டும்.
வசனம் 13: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
எல்லாவற்றினதும் தொடக்கமும் முடிவுமாக நமது தேவன் இருக்கிறார். அவர் நமது இரட்சகரும் கர்த்தருமாவார். அவராலே மட்டுமே கொடுக்கக் கூடிய இரட்சிப்பின் நிநைவேறுதலை அவர் எடுத்து வருவார். பிரபஞ்சத்தின் முழு வரலாறும், வானம் மற்றும் பூமியின் வரலாறும் தேவனாலே தொடங்கப்பட்டு அவராலே முடிவுற்றது.
வசனம் 14: ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களா வதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
தேவன் நம்மிடம் பேசிய அனைத்தும் உயிருள்ளவைகளால், பரிசுத்தவான்கள் அவர் வார்த்தையை விசுவாசித்து, அதனைப் பிரசங்கித்து பாதுகாப்பர். நம் தேவன் பரிசுத்தவான்களிடமும் இப்பிரபஞ்சத்தில் உள்ளவர்களுடனும் பேசிய அனைத்தும் உண்மையாக இருப்பதால் அவர்கள் அப்படிச் செய்வர். இதனால் தான் பரிசுத்தவான்களும் கர்த்தரின் ஊழியர்களும் தேவனின் வார்த்தையை தமது மனதில் வைத்திருக்கின்றனர். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து அவர்கள் தமது விசுவாசத்தை இன்னமும் உறுதியாக பாதுகாப்பர். இப்படிச் செய்வதால் புதிய வானம் புதிய பூமியில் நடப்பட்ட ஜீவ விருட்சத்தின் கனிகளை சாப்பிடும் உரிமை அவர்களிடமிருக்கிறது.
தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமற்றவர்களாகிய பரிசுத்தவான்கள் தமது விசுவாசத்தை பாதுகாக்க முயலுவர். ஏனெனில் பரலோகத்திலுள்ள ஜீவ விருட்சத்தின் கனிகளைச் சாப்பிடும் உரிமை அவர்களிடம் இருக்கிறது.
வசனம் 15: நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களாகையால் முடிவு காலம் வரை அவர்கள் மறுபடியும் பிறக்காதவர்களாயுள்ளனர். அந்திகிறிஸ்துவும் அவனைப் பின்பற்றுபவர்களும் தன்னுடைய அடையாளங்களாலும் அற்புதங்களாலும் மக்களை தவறாக வழிநடத்தி ஒவ்வொரு நேரத்திலும் அந்திகிறிஸ்துவே இரட்சகரென தவறாக அறிவித்து அவர்களை வஞ்சித்தனர். அந்திகிறிஸ்துவின் உருவத்தை வணங்கும்படி செய்துமக்களை அழிவிற்கு நேராக வழிநடத்தினர். இத்தகைய மக்களை தேவன் பரிசுத்த நகரத்தின் வாசல்களுக்கப்பால் வைத்துள்ளார். எனவே அவர்களால் புதிய வானத்திலும் புதிய பூமியினுள்ளும் எப்போதும் பிரவேசிக்க முடியாது. நற்¦ச்யதியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்பிக்கையைக் காத்த பரிசுத்தவான்களுக்கு மட்டுமே தேவனுடைய நகரம் திறந்திருக்கும்.
வசனம் 16: சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
கர்த்தரின் ஆலயம் மற்றும் அவரின் பரிசுத்தவான்களுக்காக நம் தேவன் கர்த்தரின் ஊழியர்களை அனுப்பி நடக்கப் போகிறவைகளைக் குறித்து அவர்கள் கூறும்படி செய்தார். அவர்கள் இப்படி கூறும்படி செய்தது இயேசு கிறிஸ்துவேயாகும். கர்த்தராகிய அவர் பரிசுத்தவான்களின் இரட்சகரானார்.
வசனம் 17: ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
கர்த்தருடைய நீதிக்காக பசியோடும் தாகத்தோடும் இப்பூமியில் இருக்கும் அனைவரையும் ஜீவத் தண்ணீர் ஓடும் உலகிற்கு வரவேற்கிறார். யாரெல்லாம் கர்த்தரின் நீதிக்காக பசியுடனும் தாகத்துடனும் இருக்கிறார்களோ அவர்களுக்கு தேவனிடம் வரும் ஆசீர்வாதத்தைக் கொடுத்து அவரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கும் போது ஜீவத் தண்ணீரைக் குடிக்கிறார்கள். இதனால் தான் இயேசுகிறிஸ்துவிடம் அனைவரையும் வரும்படி தேவன் கூறுகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை எல்லோராலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஆசை இல்லாதவர்களிடமிருந்து ஜீவத் தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தேவனால் அளிக்கப்பட்ட ஜீவத் தண்ணீரை உங்களாலும் குடிக்க முடியும்.
வசனம் 18: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
வேத வசனங்கள் கர்த்தரின் வார்த்தையாகும். இந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கும் போது இதில் எதனையும் சேர்க்கவும் கூடாது எதனையும் கழிக்கவும் கூடாது. வேத வசன வார்த்தைகள் கர்த்தரின் வார்த்தையாக இருப்பதால் எழுதப்பட்டுள்ள சத்திய வார்த்தையுடன் எதையும் சேர்த்தோ அல்லது கழித்தோ அவர்களால் விசுவாசிக்க முடியாதெனவும், எழுதப்பட்ட சத்தியத்தை விட்டுவிட்டும் விசுவாசிக்க முடியாதெனவும் இந்த வசனம் நம்மிடம் கூறுகிறது. ஆகவே நாம் கவனமாக இருக்க வேண்டும். கர்த்தரால் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானதாகும். எதையும் முக்கியமில்லாததாக விட்டுவிட முடியாது.
ஆயினும் கூட தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மக்கள் தொடர்ந்து அலட்சியம் செய்கிறார்கள். இதனால் அவர்கள் இன்னமும் பாவங்களிலிருந்து விடுபடாதிருக்கிறார்கள். தொடர்ந்தும் பாவிகளாயுள்ளனர். மேலும் இதனால் தான் அவர்கள் அழிவுக்குள் பிரவேசிக்கின்றனர். அவர்கள் இயேசுவே தம் இரட்சகர் என்பதால் எந்த பயனும் இல்லை. பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிக்க நம் தேவன் அவர்களுக்கு நீரையும் இரத்தத்தையும் கொடுத்தார் (1 யோவான் 5:4-5, யோவான் 3:3-7). ஆயினும் கூட, அநேக மக்கள் இயேசுவின் சிலுவை இரத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே அவர்கள் இன்னமும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாகவில்லை. ஆகவே வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்து வாதைகளையும் அவர்கள் சந்திப்பர்.
இயேசுவைத் தாம் விசுவாசிப்பதாகக் கூறிக் கொண்ட கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்பதை அலட்சியம் செய்பவர்கள் நரகத்தின் கொடிய தண்டனையைச் சந்திப்பர். ஏன்? ஏனெனில் அவர்கள் தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காததால் இன்னமும் அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை. தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அலட்சியம் செய்வோர் எரியும் அக்கினிக் கடலில் நித்தியமாகத் தள்ளப்பட்டு நித்தியமான துன்பத்தை அனுபவிப்பர் - இத்தகைய மக்களுக்கு இந்த மனம் வருந்தும் நாள் நிச்சயமாக வரும்.
வசனம் 19: ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் அனைத்துப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையிலறையப்பட்டதன் மூலம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவினார் என்னும் சத்திய வார்த்தையை விட்டுவிடும் விசுவாசம் நம் கிறிஸ்தவர்களிடையே இருக்கிறதா? அப்படியானால் இத்தகைய மக்கள் கர்த்தரின் பரிசுத்த நகரத்தினுள் பிரவேசிக்கும் உரிமையை இழந்து போவர். ஏனெனில் இயேசு தன் மீது மனித குலத்தின் பாவங்களை ஏற்றுக் கொள்ள உபயோகப்படுத்திய யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை. இவர்கள் தேவனால் அருளப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அலட்சியம் செய்த பாவத்திற்குள்ளாயினர்.
இயேசு யோவானிடமிருந்து பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொண்டார் என்ற உண்மையை கிறிஸ்தவர்கள் தமது இருதயங்களுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யாவிட்டால் தேவனருளிய பரிசுத்த நகரின் மகிமையிலிருந்து அவர்கள் தடுக்கப்படுவர். இயேசுவை உங்கள் இரட்சகராக நீங்கள் விசுவாசித்தால் இயேசு இவ்வுலகிற்கு வந்து யோர்தான் நதியில் யோவானிடமிருந்து மனித குலத்தை இரட்சித்து மனித குலம் செய்த பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொண்டு மனிதர்கள் செய்த அனைத்து பாவங்களையும் சுத்தமாக்கினார் என்பதை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து உங்கள் பாவங்களிலிருந்தும் கழுவப்பட வேண்டும். உங்கள் அழுக்குகளையெல்லாம் சுத்திகரிக்கப்படும் இடமானது தேவன் பெற்ற ஞானஸ்நானமாகும். நம்முடைய உலகின் பாவங்களை இப்படியாகப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் தனது மரணத்தினால் கிரயம் செலுத்தும் விதமாக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார்.
யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானமானது பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டதற்கான உறுதியான அத்தாட்சியாகும். 1 பேதுரு 3:21 நம்மிடம் கூறுகிறது “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.” நமக்கு பதிலாக நம்முடைய அனைத்துப் பாவங்களையும் சிலுவைக்குச் சுமந்து சென்று மனிதர்களின் பாவத்தின் கிரயமாக தன் இரத்தத்தைச் சிந்தி மரித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இதனால் தான் வசனம் 19இல் கர்த்தர் மீண்டுமொரு முறை தன்னுடைய எச்சரிக்கை வார்த்தையை மனித குலம் முழுமைக்கும் அளிக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அப்படியே விசுவாசிக்க வேண்டும். அதில் எதையும் சேர்க்கவும் கூடாது, கழிக்கவும் கூடாது.
வசனம் 20: இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
நம்முடைய தேவன் சீக்கிரமாக இவ்வுலகிற்கு வருவார். தேவனை விசுவாசித்து தம்முடைய பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்ட பரிசுத்தவான்கள் பரலோகத்தின் மகிமையை அணிந்தவர்களாக தேவனின் இரண்டாவது வருகைக்காக ஆவலுடன் காத்து நிற்கின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இப்போது தேவன் வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாயுள்ளனர். அவர்கள் தேவன் திரும்ப வருவதற்கும், பரிசுத்தவான்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அவரின் ஆசீர்வாதங்களால் தரிப்பிக்கப்படவும் காத்து நிற்கின்றனர். பரிசுத்தவான்கள் விசுவாசத்துடனும் நன்றிகளுடனும் தேவனுடைய இரண்டாம் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
வசனம் 21: நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
கர்த்தரால் கொடுக்கப்பட்ட பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்க ஆவலாயிருப்பவர்களோடு தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை இருக்க வேண்டுமென்ற ஆசீர்வாத ஜெபத்தோடு வெளிப்படுத்தின விசேஷத்தை அப்போஸ்தலனாகிய யோவான் நிறைவு செய்கிறான். இயேசு கிறிஸ்துவால் வழங்கப்பட்ட பரிசுத்த நகருக்குள் விசுவாசத்தின் மூலம் பிரவேசிக்கும் பரிசுத்தவான்களாக நாமிருப்போமாக.