• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 10 : வெளிப்படுத்தின விசேஷம் (வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்த விளக்கவுரை)

[அத்தியாயம் 22-2] மகிமைக்கான எதிர்பார்ப்புடன் ஆனந்தமாகவும் உறுதியுடனுமிருங்கள் (வெளி 22:1-21)

2021.04.24 25
(வெளி 22:1-21)
 
வெளி 22:6-21 பரலோகத்தின் மீதான நம்பிக்கையை நமக்குக்காட்டுகிறது. அதிகாரம் 22 வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரமாகும். அது வேதவசனங்களின் தீர்க்கதரிசன நம்பிக்கையை உறுதிப் படுத்துவதைக் குறித்து கூறுவதோடு புதிய எருசலேமிற்கான கர்த்தரின் அழைப்பையும் கூறுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட பரிசு புதிய எருசலேமாகும் என்று இந்த அதிகாரம் நமக்குக் கூறுகிறது.
கர்த்தரின் வீட்டில் மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்கள் தன்னைப் போற்றும்படி கர்த்தர் செய்தார். இதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். நம்மைப் பரிசுத்தவான்களாக அனுமதித்தமைக்கான நமது நன்றிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தேவனுக்கு முன்பாக நமது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு பரிசுத்தவான்களானோம். நாம் பெற்ற ஆசீர்வாதத்தைவிட பெரிதான ஆசீர்வாதத்தை இவ்வுலகிலுள்ள யாரால் பெற முடியும்? அங்கு யாருமில்லை!
இன்றைய முக்கிய வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரமாகும். ஆதியாகமத்தில் கர்த்தர் செய்யப் போகிறவைகளைக் குறித்த விபரங்களைக் காணலாம். வெளிப்படுத்தின விசேஷத்தில் நம் தேவன் இத்திட்டங்களை நிறைவேற்றுவதைக் குறித்து நாம் காணலாம். வெளிப்படுத்தலின் வார்த்தையைக் கர்த்தரின் திட்டப்படி மனிதர்களுக்கான அவரின் செய்கைகள் முடிவு பெறும்படி இவ்வுலகை அழிக்கும் செயலின் வர்ணனை என கூறலாம். வெளிப்படுத்தலின் வார்த்தை மூலமாக கர்த்தர் வெளிப்படுத்திய பரலோக ராஜ்யத்தை நாம் முன்கூட்டியே காணலாம்.
 
 
கர்த்தரின் நகரத்தின் அமைப்பும் அதன் தோட்டமும்
 
அதிகாரம் 21 கர்த்தரின் நகரத்தைப் பற்றிக் கூறுகிறது. வசனங்கள் 17-21 நம்மிடம் கூறுகின்றன, “அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்று நாற்பத்து நான்கு முழமாயிருந்தது. அதின் மதில் வச்சிரக் கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.”
கர்த்தர் தம்முடைய மறுபடியும் பிறந்த மக்களுக்குக் கொடுக்கப் போகும் புதிய எருசலேமை வெளிப்படுத்தலின் வார்த்தை விவரிக்கிறது. இந்த பரலோகத்திலுள்ள எருசலேம் நகரமானது பன்னிரண்டு வகையான விலையேறப்பட்டக் கற்களால் கட்டப்பட்டு முத்துக்களால் ஆன பன்னிரண்டு வாசல்களைப் பெற்றிருந்தது.
எருசலேம் நகரத்தில் காணப்பட்ட தோட்டத்தின் இயற்கையைக் குறித்து அதிகாரம் 22 கூறுகிறது. வசனம் 1 கூறுகிறது “பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.” ஆதியில் கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் உருவாக்கிய நான்கு ஆறுகளைப் போல் காத்தரின் நகரத்தின் தோட்டத்திலிருந்து பளிங்கு போன்றதொரு ஆறு ஓடும் படி செய்தார். நீதிமான்கள் எதிர்காலத்தில் அனுபவிக்கப் போகும் தோட்டம் இதுதானென கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
ஜீவ விருட்சம் இத்தோட்டத்தில் இருப்பதாக முக்கிய வசனங்கள் கூறுகின்றன. ஒரு மாதத்திற்கு ஒரு கனி வீதம் அது பன்னிரண்டு வகையான கனிகளை அளிக்கிறது. அதனுடைய இலைகள் நாடுகளைக் குணமாக்குகிறது. பரலோகத்தின் சுபாவமானது, அதன் கனிகளை மட்டும் சாப்பிடாமல் அதன் இலைகளுக்கு குணமாக்கும் வல்லமை இருப்பதால் அதன் இலையையும் சாப்பிடும் படியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
 
 
நீதிமான்கள் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதங்கள்
 
கர்த்தரின் நகரமானது கீழ்கண்டவாறு இருக்குமென வேதாகமம் கூறுகிறது, “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.” தம்முடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள் நம்மை இரட்சித்த கர்த்தருடனே கூட நித்திய காலமும் அரசாளுவார்கள் என இது நமக்குக் கூறுகிறது.
இப்பூமியில் வாழ்ந்த போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், தம்முடைய அனைத்துப் பாவங்களும் மறைக்கப்பட்ட ஆசீர்வாதத்தை மட்டும் பெறாமல் கர்த்தருடைய சொந்த பிள்ளைகளாகவும், கர்த்தரின் ராஜ்யத்தில் தமக்குப்பணிவிடை புரிய அநேக தூதர்களைப் பெற்றும் தேவனுடனே கூட நித்தியமாக ஆளவும் செய்வர். ஜீவ நதியின் அருகில் நிற்பதும் அதனுடைய ஜீவ கனிகளை சாப்பிடுவதும், அந்த ஆசீர்வாதங்களின் ஒரு பகுதியாக எந்த நோயுமின்றி வாழும் நித்திய ஆசீர்வாதத்தை அவர்கள் கர்த்தரிடமிருந்து பெறுவர் என இந்த வசனம் கூறுகிறது.
அவர்கள் இப்பூமியினுடைய வெளிச்சத்தையோ அல்லது சூரியனின் வெளிச்சத்தையோ எதிர்பார்ப்பதில்லை என இது கூறுகிறது. ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய மகிமையான ராஜ்யத்தில் நித்தியமாக வாழ்ந்திருப்பர். அங்கு கர்த்தரே ஒளியாயிருக்கிறார். வேறு வார்த்தையில் கூறினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தமது பாவங்களிலிருந்து பாவ மன்னிப்புப் பெற்ற கர்த்தரின் பிள்ளைகள் கர்த்தரைப் போலவே வாழ்வர். நீதிமான்கள் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதம் இதுவே.
வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான அப்போஸ்தலனாகிய யோவான், யோவானின் நற்செய்தியையும் புதிய ஏற்பாட்டின் மூன்று நிருபங்களையும் அதாவது முதலாம் இரண்டாம் மூன்றாம் யோவானின் நிருபங்களையும் எழுதினான். ரோம சக்கரவர்த்தியைக் கடவுள் என்று ஏற்றக் கொள்ள மறுத்ததால் பத்மூ என்ற தீவிற்கு அவன் நாடு கடத்தப்பட்டான். இப்படி நாடு கடத்தப் பட்டிருக்கையில் கர்த்தர் தனது தூதனை யோவானிடம் அனுப்பி இப்பூமியில் நிகழப் போகிறவைகளை அவனுக்கு காண்பித்து இவ்வுலகம் அழிவதையும் இதன் பிறகு பரிசுத்தவானகள் நித்தியமாக வாழப்போகும் இடத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தினார்.
ஆதியாகமத்தை படைத்தலின் திட்டம் என நாம் விவரித்தால் வெளிப்படுத்தின விசேஷத்தை அத்திட்டத்தின் முடிவுரை என நாம் கூறலாம். இவ்வுலகின் பாவங்களை இயேசு கிறிஸ்துவின் மூலம் அழித்துப் போடுவதாக கர்த்தர் மனிதர்களிடம் 4,000 வருடங்களாக கூறி வந்தார். இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் இரட்சகராகிய இயேசுவை இப்பூமிக்கு அனுப்பி யோவானால் அவர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் சிலுவை இரத்தம் மூலமாக உலகின் பாவங்களை அழிக்கப் போவதாக கர்த்தர் கூறிய வாக்குத்தத்தங்களை அவர் சமயம் வந்த போது நிறைவேற்றினார்.
மனித குலம் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தினால் அது தன் அழிவில் சிக்குண்டபோது அதன் பாவங்களிலிருந்து அதனை விடுதலைச் செய்வதாக தேவன் வாக்குத்தத்தம் செய்தார். அதன் பிறகு அவர் இயேசு கிறிஸ்துவை அனுப்பி அவரை ஞானஸ்நானம் பெற செய்து இரத்தம் சிந்தி, மனித குலத்தை அதன் பாவங்களிலிருந்து முற்றிலுமாக இரட்சித்தார்.
வெளிப்படுத்தலின் வார்த்தையின் மூலமாக பாவ மன்னிப்பு பெற்றவர்களுக்கு எத்தகைய மகிமைக் காத்திருக்கிறது என்பதையும் பாவிகளுக்கு எத்தகையத் தண்டனைக் காத்திருக்கிறது என்பதையும் கர்த்தர் விபரமாக எழுதினார். வேறு வார்த்தையில் கூறினால் அவரை அதிகம் விசுவாசித்ததாக கூறினாலும் கூட அநேக மக்கள் நரகத்திற்கு சென்றடைவார்கள் என கர்த்தர் நம்மிடம் கூறுகிறார் (மத்தேயு 7:21-23).
நம்முடைய தேவன் பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார். அவர் நீதிமான்களுக்காக ஏற்பாடு செய்த ஆசீர்வாத வார்த்தைகளை மூடி வைக்க வேண்டாமென்று தேவன் நம்மிடம் கூறினார்.
 
 
அநீதரும், அழுக்கானவர்களும் யார்?
 
வசனம் 11 கூறுகிறது “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” இங்கு அநீதர் எனப்படுவது யார்? தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அன்பை விசுவாசிக்காதவர்கள் அநீதர் என்பவர்கள் ஆவர். மக்கள் எந்நேரத்திலும் பாவம் செய்து கொண்டிருப்பதால் தேவன் அவர்களுக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரை மகிமைப்படுத்தும் ஒரு வாழ்வை வாழ வேண்டும். மனிதர்களிடமிருந்து மகிமையப் பெறக் கூடிய ஒருவர் கர்த்தர் மட்டுமே என்பதாலும் அவர் மட்டுமே நம்மை இரட்சிப்பின் கிருபையினால் தரிப்பித்தவர் என்பதாலும் கர்த்தருக்கே அனைத்து மகிமைகளையும் கொடுக்கும் ஒரு வாழ்வை நாம் வாழ வேண்டும். கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்கள் அழுக்கானவர்கள். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிவதில்லை.
வெறும் உதடுகளினால் மட்டும் அவரை அறிவிக்கும் மதவாதிகளைக் குறித்து மத்தேயு 7:23 இல் நம் தேவன் கூறினார் “அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” நம்முடைய தேவன் அவர்களை “அக்கிரமச் செய்கைக்காரரே” என்றழைத்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு இருதயத்துடனும் விசுவாசிப்பதற்கு பதிலாக தம்முடைய செயல்களின் மூலம் இயேசுவை விசுவாசிக்கும் இம்மக்களை அவர் கடிந்து கொண்டார். கர்த்தரின் வார்த்தையை ஒருவன் தனது இருதயத்தால் விசுவாசிக்காத அக்கிரமச் செய்கையானது ஒரு பாவமாகும். ஆகவே மக்கள் கர்த்தருக்கு முன்பாக அக்கிரமங்களைச் செய்யும் போது கர்த்தர் அவர்களுக்கு வழங்கிய அன்பின் இரட்சிப்பாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கவில்லையென பொருள்படுகிறது. ஒருவன் தன் திமிரின் மூலம் கர்த்தரின் வார்த்தையை மாற்றி அதனைத் தான் விரும்புவது போல் எப்படியோ விசுவாசிப்பது அக்கிரமச் செய்கையாகும்.
இயேசுவை உண்மையாக விசுவாசிப்பவர்கள் கர்த்தர் ஏற்படுத்தியவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் இயேசுவை விசுவாசிக்கிறோம். ஆனால் இது கர்த்தரின் திட்டங்களையும் அவருடைய இரட்சிப்பின் நிறைவேறுதலையும் மாற்ற அனுமதிப்பதில்லை. கர்த்தர் அளித்த இரட்சிப்பை அப்படியே விசுவாசிப்பவர்களுக்கு அவர் நித்திய வாழ்வை அருளுவார் என்றும் கர்த்தரின் சட்டங்களை மாற்றி அவர்களின் ருசிக்கேற்றவாரு அவற்றை விசுவாசிப்பவர்களை நரகத்திற்கு அனுப்புவார் என்றும் முக்கிய வசனத்தின் செய்தி கூறுகிறது.
“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்” இத்தகைய மக்கள் பிடிவாதக்காரர்களாய் இருப்பதால் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட இரட்சிப்பை இவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் அநீதராயிருக்கிறார்கள். இதனால் தான் பாவிகள் எப்போதும் அநீதராகவே இருக்கிறார்கள்.
இந்த வசனம் தொடர்கிறது “அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்” இது அவர்கள் பாவியாயிருந்தாலும் இயேசு தனது நீர் மற்றும் ஆவியினால் அவர்களின் பாவங்களை மறைய செய்திருந்தாலும் அவர்கள் தம்முடைய பாவங்களைக் கழுவ மனதில்லாதிருக்கிறார்கள் என்று இது கூறுகிறது. இப்படிப்பட்ட விசுவாசமில்லாத மக்களைக் கர்த்தர் அப்படியே விட்டுவிட்டு பின்னால் அவர்களை நியாயந்தீர்க்கிறார். கர்த்தர் மனிதர்களுக்கு மனசாட்சியைக் கொடுத்தமையால் அவர்களின் இருதயங்களிலுள்ள பாவங்களை அவர்கள் உணருமாறு செய்தார். ஆனாலும் தமது இருதயங்களிலுள்ள பாவங்களைக் கழுவுவதற்கான எந்த ஆர்வமும் இவர்களிடமில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியும் ஆர்வமும் இவர்களிடமில்லை. இம்மக்களை இப்படியே விட்டுவிடுவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
நீதிமொழிகள் 30:12 கூறுகிறது, “தாங்கள் அழுக்கற கழுவப்படாதிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு” இன்றைய கிறிஸ்தவ மதவாதிகள் தமது பாவங்களைக் கழுவும் விருப்பமில்லாமல் வாழுகிறார்கள். ஆயினும் கர்த்தராகிய இயேசு பாவிகளை இரட்சிக்க இப்பூமிக்கு வந்து தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் அனைத்துப் பாவங்களையும் ஒரே தரமாக தன் மீது ஏற்றுக் கொண்டு சிலுவையிலறையப்பட்டதின் மூலமாக இந்த அனைத்துப் பாவங்களுக்கும் நியாயந்தீர்க்கப்பட்டு இதனை விசுவாசிப்போராகிய நம்மைப் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க பயன்படுத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை யாரெல்லாம் அறிந்து அதனை விசுவாசிக்கிறார்களோ அவர்களை அவனின்/அவளின் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்டவர்களாக நம் தேவன் அனுமதித்தார். அவன்/அவள் எத்தகைய பாவி என்பது ஒரு பொருட்டல்ல. ஆனாலும் கூட விசுவாசத்தின் மூலம் இந்த பாவ மன்னிப்பைப் பெறாத அநேக மக்கள் இருக்கின்றனர். இத்தகைய மக்கள் தம் பாவங்கள் கழுவப்பட வேண்டாமெனத் தீர்மானம் செய்தவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் அப்படியே இருக்குமாறு கர்த்தர் விட்டு விடுவார்.
இது கர்த்தரின் நீதியை நிறைவேற்றுவதாகும். இது கர்த்தரே நியாயத் தீர்ப்பின் கர்த்தர் என்று காட்டுவதற்காகும். இவர்கள் நித்தியமாக எரிந்து கொண்டிருக்கும் கந்தகத்தின் அக்கினியில் தள்ளப்படுவர். நீதியின் கர்த்தர் யாரென அவர்கள் அப்போது அறிந்து கொள்வர். அவர்கள் இயேசுவைத் தமது இரட்சகராக அறிக்கைச் செய்த போதிலும் அவர்கள் தம்முடைய மனசாட்சியை மட்டும் ஏமாற்றாது, மற்றவர்களின் மனசாட்சியையும் அழிக்கிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் நிராகா¢த்தமையால் அவர்கள் செய்ததற்கேற்ப கர்த்தர் அவர்களுக்கு திரும்பச் செலுத்துவார். அவருடைய கோபாக்கினையைப் பெறவேண்டியவர்களின் மீது நேரம் வரும் போது கர்த்தர் கோபாக்கினையை எடுத்து வருவார்.
 
 
அவனுடைய செய்கைக்குத் தக்கபடி கொடுக்கப்படும்
 
இப்பூமியில் இரண்டு வகையான மக்கள் இருக்கின்றனர். தேவனைச் சந்தித்தவர்கள் ஒரு வகை. அவரைச் சந்திக்காதவர்கள் இன்னொரு வகை. அவனுடைய/அவளுடைய செயலிற்கேற்ப கர்த்தர் ஒவ்வொருவருக்கும் திரும்பச் செலுத்துவார்.
அவனாலோ/அவளாலோ தன்னைத் தானே தீர்க்க முடியாது. தீர்ப்பானது இயேசுவிடமிருந்து வருகிறது. இயேசு தம்முடைய ஞானஸ்நானத்ததின் மூலம் மனிதர்களின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஒரே தரமாக ஏற்றுக் கொண்டு உலகின் பாவங்களையெல்லாம் சிலுவைக்கு எடுத்துச் சென்று மனித குலம் சந்திக்க வேண்டிய நியாயத்தீர்ப்பை சிலுவையில் சந்தித்தார். இந்த உண்மையை விசுவாசிப்பதன் மூலம் மனித குலம் நீதியுடையதாக முடியும். இந்த சத்தியத்தை நம்புகிறவர்கள் தேவனைச் சந்தித்தவர்களாவர்.
இந்த உண்மையை அறிந்து அதனை விசுவாசிக்கும் பாவமற்றவர்கள் நற்செய்தியை உலகம் முழுவதும் பிரசங்கித்து வாழும் போது தன்னுடைய பரிசுத்த வார்த்தையைக் கடைபிடிக்குமாறும் கர்த்தர் கூறுகிறார் “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” என்று கர்த்தர் கூறுகிறார். இந்த கட்டளையை நம் இருதயங்களில் வைத்திருக்க வேண்டும். நம்முடைய தூய விசுவாசத்தைப் பாதுகாக்க வேண்டும். நிறைவான நற்செய்தியை எப்போதும் பிரசங்கிக்க வேண்டும். ஏன்? இவ்வுலகிலுள்ள அநேக மக்கள் இந்த நற்செய்தியை குறித்த அறிவில்லாதவர்களாய் இருப்பதால் அவர்களுடைய விசுவாசம் தவறானதாக இருப்பதே இதற்கான பதிலாகும்.
படிப்படியாக பரிசுத்தமாவதைக் குறித்து இப்பூமியிலுள்ள அநேகர் நிபந்தனைகளின்றி ஆதரிக்கிறார்கள். நம் தேவன் ஏற்கனவே நம் பாவங்களை மறையச் செய்துவிட்டாலும் இம்மக்கள் தம் பாவங்களை மன்னிக்கும்படி அனுதினமும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கூட ஜெபிக்கிறார்கள். மனம் வருந்தி அன்றாடம் ஜெபிப்பதின் மூலம் அவர்கள் தம்முடைய பாவங்களை சுத்திகா¢க்க முயல்கிறார்கள். அவர்கள் படிப்படியாக பரிசுத்தமடைவதன் மூலம் நீதிமானாகி இறுதியில் எப்பாவங்களும் செய்ய மாட்டார்கள் என்பதால் இயேசுவிற்கு சமமானவர்களாக தம்மை எண்ணுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து தேவகுமாரரும், ராஜாவும், தீர்க்கதரிசியும் தலைமை ஆசாரியருமாவார்.
கர்த்தரின் உண்மையான ஊழியர்கள் எல்லோருமே பாவங்களிலிருந்து உண்மையாக மன்னிக்கப்பட செயல்புரிகிறார்கள். அவர்கள் கர்த்தரின் உடன் பணியாளர்களாய் இருந்து ஒவ்வொருவரையும் சத்தியத்திற்கு வழிநடத்துகின்றனர். கர்த்தரின் ஊழியர்கள் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாக வரப் போகிறவைகளைக் குறித்த அறிவுள்ளவர்களாயுள்ளனர்.
வசனம் 12-13 கூறுகிறது, “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.” நமது தேவன் அல்ஃபாவும், ஒமேகாவும், தொடக்கமும் முடிவும், முதலும் கடைசியுமாக இருக்கிறார். தேவன் நம்முடன் பேசிய அனைத்தையும் பயத்துடனே நாம் விசுவாசிக்க வேண்டும்.
நம் தேவன் பரிசுத்தவான்களுக்கு ஆசீர்வாதங்களைப் பரிசளிப்பார். அது அவர்களுடைய செய்கைகளை விட பெரிதாயிருக்கும். ஏனெனில் அவர் மகிமையும் கிருபையும் நிறைந்தவர். அவர் இரக்கமும் ஆறுதலும் நிறைந்தவர். அவர் நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். மேலும் வெளிப்படுத்தலின் வார்த்தைக் கூறுவதைப் போல் அவர் வல்லமை மற்றும் நீதியின் கர்த்தராயிருக்கிறார். அவரால் அவரின் இரட்சிப்பின் செய்கையை முடிவுற செய்ய முடியும். சீக்கிரமாக வரப்போகும் இந்த இரட்சிப்பின் முடிவானது, புதிய எருசலேம் நகருக்குள் பரிசுத்தவான்கள் மகிமையுடன் பிரவேசிப்பதை சாத்தியமாக்குகிறது. இது நம் தேவன் அவர்களுக்கு அளித்த பெருந்தன்மையான அதிகப்படியான சன்மானமாகும்.
 
 
அவருடைய கட்டளையின் படி செய்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
 
வசனம் 14இலிருந்து முக்கிய வசனங்கள் தொடர்ந்து நம்மிடம் கூறுகின்றன “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகார முள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.” இந்த வசனத்தின் அடிப்படையில் தம் செய்கைகளைப் பொறுத்து இரட்சிப்பு வருகிறது என அநேக மக்கள் வலியுறுத்துகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் கர்த்தரின் கட்டளைகளை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
ஆனாலும் “அவருடைய கட்டளையின் படி செய்வது” என்பது எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையை விசுவாசத்துடன் கடைப்பிடித்து அதனை நம்புவதாகும். அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினான், “நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது (1 யோவான் 3:23).” ஆகவே உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து உலக முழுவதுமுள்ள இழந்து போன ஆத்துமாக்களை இரட்சிக்கும் படி நற்செய்தியை பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்கும் போது நாம் அவருடைய கட்டளைகளை அவர் சன்னிதானத்தில் கடைப்பிடிக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் செய்யும் பாவங்களை யோவான் ஸ்நானனிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு ஏற்கனவே துடைத்து விட்டார். இந்த ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து வந்த நம் தேவனின் சிலுவை இரத்தம் அவரின் உயிர்த்தெழுதல் அவரின் பரலோகம் ஏறுதல் ஆகியவை நம்மை மறுபடியும் பிறக்கச் செய்து அவருடைய சத்தியத்தில் நம்மை புதியதாக வாழச் செய்தது.
மறுபடியும் பிறந்த பிறகு நாம் பாவத்திற்குள் விழும் பொழுதெல்லாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்தமாக்கிய சத்திய வார்த்தையிடம் நாம் திரும்பி வர வேண்டும். நம்முடைய அடிப்படை அப்படிப்பட்டதால் நம்மால் பாவஞ்செய்யாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் நம்முடைய அனைத்து பலவீனங்களையும், குறைபாடுகளையும், பாவங்களையும் நம் தேவன் தன் மீது ஏற்றுக் கொண்ட யோர்தான் நதியின் விசுவாசத்திற்கு திரும்பி இயேசுவின் ஞானஸ்நானத்துடன் நாமும் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மா¢த்த கிறிஸ்துவுடனே கூட நாமும் மா¢க்க வேண்டும். நாம் அப்படிச் செய்யும் போது மறுபடியும் பிறந்த பிறகு நாம் செய்த பாவங்களிலிருந்து சுத்தமாக கழுவப்படுவோம். நம்முடைய நித்தியமான இரட்சிப்பிற்கான பாவ நிவாரணத்தை உறுதி செய்தவாறு கர்த்தரின் நீதியைப் பற்றிக் கொள்ள வேண்டும். மேலும் அவருடைய நிரந்தரமான குறைபாடுகள் இல்லாத இரட்சிப்பிற்காக அவருக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
உலகின் அனைத்துப் பாவங்களையும் இயேசு ஏற்கனவே கழுவிவிட்டார். நம்முடைய பிரச்சனை மனசாட்சியிலிருக்கிறது. நம்முடைய தேவன் உலகின் பாவங்களையெல்லாம் தன்னுடைய ஞானஸ்நானத்தினால் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் தேவன் இப்படியாக நமது எல்லாப் பாவங்களையும் தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவை மரணத்தினாலும் கழுவிட்டார் என்று மனிதர்களாகிய நாம் அறியாததினால் நம்முடைய மனசாட்சி நம்மைப் பாவிகளென்று துன்புறுத்துகிறது. ஆகவே நமக்குள் இன்னமும் பாவமிருக்கிறது என நாம் சிந்திக்கத்தலைப்படுகிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இயேசு கிறிஸ்து அருளிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நமது எல்லாப் பாவங்களும் ஏற்கனவே கழுவப்பட்டுவிட்டது என நம்புவது மட்டுமே.
நம்முடையப் பாவங்களால் நம்மிருதயங்கள் காயப்படும் போது எந்த உண்மையின் மூலம் இந்தக் காயங்களைக் குணமாக்க முடியும்?
இந்தக் காயங்களும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதன் மூலம் குணப்படும். அதாவது யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது உலகின் எல்லாப் பாவங்களையும் நம் தேவன் தன் மீது ஏற்றுக் கொண்டார் எனவும், கல்வாரிச் சிலுவைக்கு இப்பாவங்களையெல்லாம் எடுத்துச் சென்றதன் மூலம் அவற்றைக் கழுவினார் எனவும், அதில் அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார் எனவும் நாம் விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் பாவமன்னிப்பு பெற்ற பிறகு பாவஞ்செய்தாலும் அவற்றையும் கூட இயேசு கிறிஸ்து நம் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே கழுவிவிட்டார் என்ற நற்செய்தியை நம்புவதன் மூலம் கழுவிவிட்டார்.
இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தைப் பெற்று சிலுவையில் அறையுண்ட போது உலகின் எல்லாப் பாவங்களும் ஒரே தரமாகக் கழுவப்பட்டன. உலகின் பாவங்களோ அல்லது நமது சொந்தப் பாவங்களோ அவை தொடர்ந்து கழுவப்படுவதைப் போல் இருமுறையோ மூன்று முறையோ கழுவப்பட வேண்டியதில்லை. பாவமன்னிப்பு சிறிது சிறிதாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என யாராவது பிரசங்கித்தால் அவன்/அவள் பிரசங்கிக்கும் நற்செய்தியானது கள்ள நற்செய்தியாகும்.
உலகின் எல்லாப் பாவங்களும் ஒரே தரமாக மறையும்படி கர்த்தர் செய்தார். எபிரெயர் 9:27 நம்மிடம் கூறுகிறது, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே.” பாவத்தினால் நாம் ஒருமுறை மா¢ப்பதைப் போன்று நம்முடைய பாவ மன்னிப்பை ஒரே தரமாக நாம் பெற்றுக் கொள்வதும் கர்த்தரின் சித்தமாயிருக்கிறது. இயேசு இவ்வுலகிற்கு வந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஒரே தரமாக சுமந்து ஒருமுறை மா¢த்து நம்முடைய இடத்திலிருந்து ஒருமுறை மா¢த்தார். அவர் இதனை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கவில்லை.
இயேசு கிறிஸ்துவை நமது இருதயங்களினால் விசுவாசித்து பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ளும் போது ஒரே தரமாக விசுவாசிப்பதின் மூலம் நமது எல்லாப் பாவங்களுக்குமான நிரந்தரமான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதும் சரியானதே. அப்பொழுதிலிருந்து நாம் செய்யும் பாவங்கள் நமது இருதயங்களை அவ்வப்போது உறுத்துவதால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இரட்சிப்பின வார்த்தைக்கு முன் செல்ல வேண்டியதே. நம் தேவன் நமது பாவங்களை ஒரே தரமாக கழுவியதால் அவர் நமது இருதயங்களை விசுவாசம் மூலம் சுத்திகா¢த்து குணப்படுத்துவார். “தேவனே நான் குறைபாடுகள் நிறைந்தவன். நான் மீண்டும் பாவம் செய்தேன். உம்முடைய சித்தத்தின்படி என்னால் முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால் நீர் யோவானால் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் இரத்தம் சிந்திய போது என்னுடைய இந்த பாவங்களையெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லையா? அல்லேலு¡யா! தேவனே உம்மைத் துதிக்கிறேன்!”
இத்தகைய விசுவாசத்தினால் நம் பாவமன்னிப்பை இன்னுமொருமுறை உறுதி செய்து எப்போதும் தேவனுக்கு நன்றி செலுத்தலாம். ஜீவ விருட்சமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன் செல்வதின் மூலமும், தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே கழுவிவிட்டார் என்பதை விசுவாசிப்பதன் மூலமும், பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் தம் விசுவாசத்தின் மூலமாக பரிசுத்த நகரமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் உரிமையைப் பெற்றார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி அதிகாரம் கூறுகிறது.
கர்த்தரின் நகரத்தினுள் பிரவேசிக்க வேண்டுமென யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானத்தைப் பெற்று தனது இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் மனித குலத்தின் பாவங்களுக்கு நித்திய பாவ நிவாரணத்தை அளித்தார் என்பதை விசுவாசிக்க வேண்டும். நாமனைவரும் செயல்பாடுகளில் குறைபாடுடையவர்களாயிருந்தாலும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்தால் நமது விசுவாசம் உண்மையானது என கர்த்தரால் அங்கீகா¢க்கப்பட்டு நாமெல்லாம் ஜீவ விருட்சத்திடம் செல்ல முடியும்.
புதிய எருசலேம் நகரத்தில் ஓடும் ஜீவத்தண்ணீரைக் குடிக்கும் உரிமையைப் பெறவும் ஜீவ விருட்சத்தின் கனிகளை சாப்பிடவும் வேண்டுமானால் கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் மட்டும் விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் புதிய வானம், புதிய பூமிக்குள் பிரவேசிக்கும் தகுதியை யாரும் தட்டிப் பறித்து செல்வதை அனுமதிக்கக் கூடாது. அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மட்டுமே வருகிறது. நாம் நமது விசுவாசத்தைப் பாதுகாப்பதோடு அநேகருக்கு இதனை பிரசங்கிக்கவும் வேண்டும். அது போலவே “அவருடைய கற்பனைகளைச் செய்வது” என்ற சொற்றொடரானது விசுவாசத்தினால் நாம் உலகை மேற்கொள்வதைக் குறிக்கிறது - அதாவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதுடன் அதனைக் கடைபிடித்து உண்மை நற்செய்தியை முழு உலகிற்கும் பிரசங்கிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
மத்தேயு 22இல் திருமணப் பந்தியைக் குறித்த உவமாணக் கதையை இயேசு நமக்கு கூறுகிறார். இக்கதையின் முடிவு நமக்கு என்ன தொ¢விக்கின்றதெனில் திருமண ஆடை அணியாதவர்கள் இருட்டுக்குள் தூக்கி எறியப்படுவார்கள் என்பதே (மத்தேயு 22:11-13). ஆட்டுக் குட்டியானவரின் திருமண விருந்தில் பங்கேற்கும் போது எப்படி நம் திருமண ஆடையை அணிவது? திருமண ஆடை எப்படிப்பட்டது? ஆட்டுக் குட்டியானவரின் திருமணப் பந்தியில் நாம் பங்கேற்பதை ஏதுவாக்கும் திருமண ஆடையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் கர்த்தர் கொடுத்த அவரின் நீதியேயாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அவரின் நீதியினால் அழகாகத் தரிப்பிக்கப்பட்டவர்கள் நீங்கள் தான். எனவே குமாரனின் பாவமற்ற மணவாட்டியாக உங்களால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
மறுபடியும் பிறந்தவர்களாகிய நாமும் கூட ஒவ்வொரு நாளும் பாவம் செய்கிறோம். ஆயினும் கர்த்தருக்கு முன்பாக தமது பாவங்கள் கழுவப்பட்ட நீதிமான்கள் மட்டுமே, தமது நீதியின் ஆடையின் மீதுள்ள அன்றாட பாவங்களை விசுவாசத்தினால் கழுவ தகுதியானவர்கள். தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாதவர்கள் தம்முடைய பாவங்களை கழுவும் தகுதியைப் பெறாததால் அவர்களுடைய அனுதினமும் செய்யப்படும் மனம் வருந்தி ஜெபித்தலின் மூலம் தம் பாவங்களைக் கழுவவே முடியாது. தேவன் இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தி நமது எல்லாப் பாவங்களையும் கழுவிப் போட்டார் என்பதை அறிந்து விசுவாசிப்பதே, தேவனை விசுவாசித்து உலகின் பாவங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்படுவதை ஏதுவாக்கிற்று.
வேறு வார்த்தைகளில் கூறினால் அவருடைய உண்மையான நற்செய்தியின் மூலம் நம்முடைய அன்றாட பாவங்கள் ஏற்கனவே கழுவப்பட்டு விட்டன என்பதை உறுதி செய்யலாம். நீர் மற்றும் இரத்தத்தின் வார்த்தையினால் தேவனிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்கள், தம் வாழ்வில் அன்றாடம் செய்யும் பாவங்களிலிருந்தும் இரட்சிப்படைவதை உணர்ந்து கொள்ளலாம்.
நம்முடையப் பாவங்களை நமது தேவன் ஒரே தரமாக மறையச் செய்ததினால் நம்முடைய சொந்த செய்கையினால் செய்யும் பாவங்களையும் கூட நித்திய பாவ நிவாரண இரட்சிப்பை விசுவாசிப்பதின் மூலம் கழுவிவிடலாம். வேறு வார்த்தையில் கூறினால் இது இப்படி இல்லாமல் நம் தேவன் ஒரே தரமாக நம்முடைய பாவங்களை எல்லாம் கழுவியிராவிட்டால் நாமெப்படி பாவமற்றவர்களாக முடியும்?
அப்படியானால் பரலோகத்தின் பரிசுத்த நகரத்திற்குள் நாம் பிரவேசிப்பது எப்படி? ஜீவ விருட்சமான இயேசு கிறிஸ்துவின் முன்னால் நாமெப்படிச் செல்ல முடியும்? நம்முடைய அனைத்துப் பாவங்களையும் மறையச் செய்த நமது தேவனை விசுவாசிப்பதின் மூலம் சுத்தமாகவும் கரும்புள்ளியில்லாதவர்களாகவும் பரலோக ராஜ்யத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும். நாம் எப்போதெல்லாம் பாவம் செய்கிறோமோ அப்பொழுது அவருக்கு முன்பாக அவர் நமது பாவங்களையெல்லாம் மறைந்துவிட்டார் என்ற நம்பிக்கையுடன் சென்றால் அத்தகைய பாவங்களிலிருந்து நம்மால் விடுதலையாகலாம். இதனால் தான் மறுபடியும் பிறந்தவர்களுக்கு தம்முடைய பாவங்கள் விசுவாசத்தால் மன்னிக்கப்ப பெறும் வசதி இருக்கிறது என நான் உங்களுக்கு கூறுகிறேன்.
தாவீது ராஜா, கர்த்தருடைய ஊழியனாய் இருந்தாலும், கர்த்தருக்கு முன் அவன் அநேக பாவங்களைச் செய்தான். திருமணம் செய்த ஒரு பெண்ணிடம் விபசாரம் செய்தான். அவனுடைய விசுவாசமிக்க பிரஜையாகிய அவளின் கணவனைக் கொன்றான். ஆயினும் கூட கர்த்தருடைய இரக்கமிக்க மன்னிப்பை இவ்வாறு புகழ்ந்தான்.
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் (சங்கீதம் 32:1-2)”
இவ்வுலகத்தில் கர்த்தருக்கு முன்பாக மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர் யார்? மறுபடியும் பிறந்தவர்களே அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் தம் வாழ்வில் எப்போதெல்லாம் பாவம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் தேவன் நமது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்பதைப் பார்த்து தினந்தோறும் ஜீவ ஊற்றின் அருகில் செல்லும்போது அவர்களுடைய கறைபடிந்த இருதயங்கள் சுத்தமாகக் கழுவப்படுகின்றன. இது நம்முடைய விடுதலையை அசைபோடுவதாயும் நம் தேவனின் பெரிதான இரட்சிப்பின் கிருபையை உறுதி செய்வதாயும் இருக்கிறது.
நீதிமான்கள் மட்டுமே பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டவர்கள், அவர்களுடைய குறைபாடுகளை கர்த்தர் முழுமையாக்கினார். அவர்களுடைய செய்கைகள் நிறைவானவை அவர்களுடைய இருதயங்களும் அப்படிப்பட்டவையே. இப்படியாக களங்கமில்லாமல் நீதிமானாகியப் பிறகு கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ராஜ்யமான கர்த்தரின் ராஜ்யத்திற்குள் நாம் பிரவேசிக்க முடியும். இரட்சிப்பின் வாசலும் ஜீவ விருட்சமுமான இயேசு கிறிஸ்து நமக்குச் செய்தவைகளை ஏற்றுக் கொண்டால் அவருடைய வல்லமை வெளிப்படும் அப்பொழுது நாம் பாவ மன்னிப்பை பெற்று பரலோகம் செல்லலாம்.
 
 
ஜீவ விருட்சத்திற்கு முன்பாக செல்பவர்கள்
 
பாவமன்னிப்பு பெற்றவர்களாகிய நாமனைவரும் தேவனுக்கு முன்பாக செல்வதற்கான காரணம் அவர் நம்முடைய அனைத்து பாவங்களையும் மறையச் செய்தார் என்பதை உறுதிப்படுத்தவும் இரட்சிப்பின் கிருபையை இன்னுமொருமுறை அசைபோடவும், அதனை நினைவுபடுத்தவும், அதற்காக தேவனைத் துதிக்கவுமாகும். இதன் மூலமாக நம்மால் பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல முடியும்.
வேதாகமத்தைச் சரியாக போதிக்கும் கர்த்தரின் ஊழியர்களை சந்திக்க முடியாத எண்ணிலடங்கா கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் தம்முடைய வார்த்தையைக் குறித்த தப்பர்த்தங்களுடனும், தவறான நம்பிக்கைகளினாலும் ஸ்தம்பித்து போயுள்ளனர். இப்போதும் கூட தம் செய்கைகளில் மாட்டிக் கொண்ட அநேக மக்கள் உள்ளனர். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டுள்ளனர். இவற்றை எதற்காக செய்கிறார்கள்? இப்படிச் செய்வதினால் தமது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதே இதன் காரணம். தவறான தத்துவங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருப்பதால் இப்படி விசுவாசிக்கிறார்கள். ஆனால் கர்த்தருக்கு முன் இது அநீதியின் செய்கையாகும். இத்தகைய மக்கள் பரிதாபமானவர்கள். இவர்களுக்கு கர்த்தரின் நீதியையும் தொ¢யாது அவருடைய நிபந்தனையற்ற அன்பும் தொ¢யாது.
வேதாகமம் இலகுவாக எடுத்துக் கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல. ஒருவர் தனக்கேற்ற விதமாகவெல்லாம் இதில் உள்ளவைகளுக்கு பொருள் கற்பிக்கக் கூடாது. ஆயினும் கூட மனித சிந்தனைகளால் அவர்கள் இதனை விளக்கி கற்பித்து அதன்படி விசுவாசித்தமையால் அதன் முடிவு மேற்கண்டவிதமாகியது - அதாவது, அவர்கள் கர்த்தரின் நீதியையும் அவரின் அன்பையும் குறித்து அறியாதவர்களாயுள்ளனர். வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வசனத்திற்கும் சரியான பொருளுள்ளது. இதனைத் தமது பாவங்களுக்கு பாவ மன்னிப்புப் பெற்ற தீர்க்க தரிசிகளாலேயே சரியாக விளக்க முடியும்.
ஜீவ விருட்சத்திற்கு முன் நாம் செல்வதென்பது நாம் இப்பூமியில் இருக்கையில் நம்முடைய தேவன் நம்முடையப் பாவங்களை மறையச் செய்தார் என்றும், அவரைத் துதிப்பதும் இந்த நற்செய்தியை அனுதினமும் பிரசங்கிப்பது என்றும் விசுவாசிப்பதாகும். அவர் நமது பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டாரெனவும், இந்த உண்மையை ஒவ்வொரு நாளும் உறுதி செய்யவும், நன்றிகூறும் மகிழ்ச்சியுடன் அவரை ஆராதிக்கவும் நமது தேவனுக்கு முன்பு செல்வதையும் மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ஆயினும்கூட இவ்வுலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இந்த வசனத்திற்கு தவறான பொருளைக் கற்பித்து அனுதினமும் மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலம் தம்முடைய பாவங்களை கழுவ செய்வதன் மூலம் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியுமென தவறாக விசுவாசிக்கவும் செய்கின்றனர் என்றால் இது மிகையாகாது. இவ்வசனம் பொருள்படுவது இப்படியல்ல.
நாம் பாவமன்னிப்பு பெற்ற பிறகு நம்முடைய செய்கைகளின் மூலமாக செய்யும் அனைத்து பாவங்களையும் நமது தேவன் மறையச் செய்தார் என உறுதிபடுத்துவதன் மூலம் நமது இருதயங்கள் சமாதானமாக இருக்க முடியும். நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான மன்னிப்பை பெற்றுவிட்டோமென நாம் உறுதி செய்தால் நாம் பாவத்தினால் கட்டப்பட்டவர்களல்ல. பரலோகத்தின் ஜீவ விருட்சத்திற்கு முன் செல்வதற்கான வழி இதுவே.
வேத வசனங்கள் மனித சிந்தனைகளிலிருந்து முழுவதும் வேறுபட்ட பரிமாணத்தை உடையது. சத்தியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் மறுபடியும் பிறந்த கர்த்தரின் ஊழியர்களிடமிருந்து உண்மையைக் கேட்டு அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
 
நகரத்திற்கு வெளியே இருப்பவர்கள்
 
வசனம் 15 கூறுகிறது, “நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.” இந்த வார்த்தை இறுதி காலத்திலுள்ள மறுபடியும் பிறவாதவர்களைக் குறிக்கிறது. இம்மக்களை இத்தனை துல்லியமாக கர்த்தர் பிரிப்பார் என்பது ஆச்சரியமானது.
நாயிடம் உள்ள ஒரு பண்பானது வாந்தி பண்ணிப் போடுவதாகும். அதாவது அவை சாப்பிட்டதை வெளியே துப்பும் அதனை மீண்டும் உண்ணும், மீண்டுமாக அதனைத் துப்பும், இப்போது தான் வாந்தி பண்ணிதை மீண்டும் உண்ணும். இத்தகைய “நாய்களால்” நகரத்திற்குள் பிரவேசிக்க முடியாதென நம் தேவன் இங்கு கூறுகிறார்.
இந்நாய்கள் யாரைக் குறிப்பிடுகின்றன? அங்கு கூக்குரலிடும் மக்கள் இருக்கின்றனர் “தேவனே நானொரு பாவி, தயவு செய்து எனது பாவங்களைக் கழுவும்” இதன் பிறகு அவர்கள் கர்த்தரைப் புகழந்து பாடுவர் “நான் மன்னிக்கப்பட்டேன், நீ மன்னிக்கப்பட்டாய், நாம் மன்னிக்கப்பட்டோம்” ஆனால் அடுத்த நொடியில் இவர்கள் கூக்குரலிடுவர், “தேவனே நானொரு பாவி, இன்னுமொருமுறை என்னை நீர் மன்னித்தீரானால் நான் மீண்டும் பாவஞ்செய்யவே மாட்டேன்” பிறகு அவர்கள் மீண்டும் பாடுவர் “கல்வாரியின் இரத்தத்தால் நான் மன்னிக்கப்பட்டேன்.”
இந்த மக்கள் முன்னும் பின்னுமாக அடிக்கடி போய் கொண்டிருப்பர். அவர்கள் மன்னிக்கப்பட்டவர்களா இல்லையா என்ற நிச்சயம் யாரிடமும் இல்லை. வேதாகமம் “நாய்கள்” என குறிப்பிடுவது இவர்களைத் தவிர வேறு யாரையுமில்லை. நாய்கள் தினமும் குலைக்கின்றன. அவை காலையிலும் குலைக்கின்றன, நன்பகலிலும் குலைக்கின்றன. சாயங்காலமும் குலைக்கின்றன. இம்மக்கள் இதுபோன்று குலைப்பதில்லை. ஆனால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாயிருந்தாலும் தாம் பாவிகளென கூக்குரலிட்டு கொண்டேயிருப்பார்கள். இந்நொடியில் அவர்கள் நீதிமான்களாயிருக்கிறார்கள், அடுத்த நொடியில் அவர்கள் பாவிகளாகி விடுகின்றனர்.
இப்படியாக அவர்கள் நாய்களைப் போல் உள்ளே உள்ளவைகளை வாந்தி பண்ணி அதனை மீண்டும் சாப்பிடுகிறார்கள். பிறகு மீண்டும் அதனைச் சாப்பிடுவதற்காக வாந்தி பண்ணுகிறார்கள். சுருக்கமாக கூறினால் தம்முடைய இருதயங்களில் இன்னமும் பாவங்களிருப்பவர்களை “நாய்கள்” என்று வேதாகமம் கூறுகிறது. இந்நாய்களால் பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியாது. அவைகள் நகரத்திற்கு வெளியே இருக்கும்.
அடுத்து “சூனியக்காரர்கள்” என்பது யார்? அறிவில்லாத ஆலயஞ்செல்வோரின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தம்முடைய அழகான பேச்சினால் அவர்களின் பணத்தைக் கொள்ளையடித்து கள்ள அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து அவர்களின் நோய்களை குணமாக்குவதாக கூறி மக்களை வஞ்சிப்பவர்கள் சூனியக்காரர்களாவர். கர்த்தரின் பெயரை அவர்கள் வீணில் வழங்குவதால் பரிசுத்த நகா¢னுள் அவர்களால் பிரவேசிக்க முடியாது.
மேலும் விபச்சாரிகளாலும், கொலைபாதகர்களாலும், விக்கிரகாராதனைக் காரர்களாலும், பொய்களைப் பேசி அதனை நேசிப்பவர்களாலும் நகரத்தில் நுழைய முடியாது. இறுதி காலம் வருகையில் நாய்களும், சூனியக்காரர்களும் மக்களை வஞ்சிப்பர். அப்போது அந்திகிறிஸ்து தோன்றுவான். அந்திகிறிஸ்து தனது கள்ள அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அநேக மக்களை வஞ்சித்து அவர்களின் ஆத்துமாக்களைத் திருடுவதோடு கர்த்தருக்கு எதிராக நிற்பான். மேலும் கர்த்தருக்கும் மேலானவனாக முயற்சி செய்து தன்னை எல்லோரும் ஆராதிக்கச் செய்வான். அவனைப் பின்பற்றும் அனைவராலும் நகரத்தினுள் பிரவேசிக்க முடியாது.
நம்மிடம் இன்னமும் பாவங்களிருக்கின்றன என கூறுபவர்களின் வஞ்சனையில் நாம் விழுந்தாலோ அல்லது நமது உணர்வுகளைத் தூண்டிவிடும் அடையாளங்கள் அற்புதங்களின் வஞ்சனையில் விழுந்தாலோ அந்திகிறிஸ்துவுடனும் சாத்தானுடனும் நகா¢ற்கு வெளியே நிற்போம். வார்த்தை நம்மை எச்சரிப்பதைப் போன்று அங்கு துக்கமும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
வசனம் 16-17 கூறுகிறது, “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”
உங்கள் பாவமன்னிப்பை இலவசமாகப் பெற்றுக் கொண்டீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் தேவன் பரிசுத்த ஆவியானவர் மற்றும் கர்த்தரின் ஆலயத்தின் மூலமாக நமக்கு கொடுத்தார். நாம் ஜீவ தண்ணீரைக் குடிப்பதை இது ஏதுவாக்குகிறது. யாரெல்லாம் கர்த்தரின் நீதிக்காக பசியுடன் இருக்கிறார்களோ, யாரெல்லாம் சத்திய வார்த்தைக்காக பசியுடன் இருக்கிறார்களோ, யாரெல்லாம் பாவமன்னிப்பை பெற கடும் முயற்சிகள் செய்கின்றனரோ இத்தகைய அனைத்து மக்களையும் தனது கிருபையினால் தரிக்க கர்த்தர் விரும்புவதுடன் அவரின் வார்த்தைக்குள்ளும் தனது இரட்சிப்பின் ஜீவ தண்ணீருக்கும் அவர்களை வரவேற்கிறார். கர்த்தரின் இந்த வரவேற்பை உபயோகப்படுத்தி ஜீவ தண்ணீர் ஓடும் புதிய வானம் மற்றும் புதிய பூமிக்கு செல்வதற்கான ஒரே வழி பாவ மன்னிப்பைப் பெற்று கொள்வதே.
 
 
ஆமேன், தேவனாகிய இயேசுவே வாரும்!
 
வசனம் 19 கூறுகிறது, “ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.” நம்முடைய சிந்தனைகளின் அடிப்படையில் நாம் விரும்பும் படியெல்லாம் கர்த்தருக்கு முன் விசுவாசிக்க முடியாது. கர்த்தருடைய வார்த்தையில் அது எழுதப்பட்டிருந்தால் நம்மால் கூற முடிவதெல்லாம் “ஆமாம்” என்பதே ஏனெனில் யாராவது வார்த்தைக்கு “இல்லை” என்று கூறினால் கர்த்தரும் “நீ எனது பிள்ளை இல்லை” என்று அவனை/அவளை எடுத்துப் போடுவார். இதனால் தான் வார்த்தையின்படி நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் வார்த்தையிலிருந்து நம்மால் எதனையும் கழிக்கவும் முடியாது. அத்துடன் எதனையும் சேர்க்கவும் முடியாது. ஆனால் எழுதப்பட்டபடி அதனை விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தரின் ஊழியர்களைப் பற்றிக் கொள்வதும், கர்த்தரின் ஆலயத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் பேசுவதை விசுவாசிப்பதுமே உண்மையான விசுவாசமாகும். ஆனாலும் கூட அநேக மக்கள் தம் விசுவாசத்திலிருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீக்கிவிட்ட படியால் அவர்களின் இருதயங்களில் இன்னமும் பாவங்களிருக்கின்றன. பாவமில்லாதவர்களினாலேயே கர்த்தரின் பரிசுத்த நகரத்திற்குள் பிரவேசிக்க முடியுமென வார்த்தை அவர்களிடம் மீண்டும் மீண்டும் கூறினாலும் அவர்கள் தம் விசுவாசத்திலிருந்து இயேசுவின் ஞானஸ்நானத்தை அகற்றி விட்டு அதற்கு பதிலாக தம் சொந்த செய்கைகளான மனம் வருந்தி ஜெபிப்பதையும், பொருள் காணிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசிப்பவர்களால் யோர்தான் நதியில் இயேசு யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டது என அறிக்கைச் செய்ய முடியும். இயேசுவின் ஞானஸ்நானத்தை நீங்கள் தவிர்த்தீர்களானால் அது உங்கள் சொந்த விசுவாசத்தை கைவிட்டதாகும். வேறு வார்த்தையில் கூறினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்காத போது சிலுவையின் இரத்தம் பொருளற்றதாகிவிடும். உங்களைப் பொறுத்தவரை இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பந்தமில்லாதது. கர்த்தர் அவர்களுடைய பாவங்களையெல்லாம் இலவசமாக மறையச் செய்தார் என விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே இயேசுவின் உயிர்த்தெழுதல் சம்பந்தம் உள்ளதாய் இருக்கிறது. அவர்களால் மட்டுமே அப்போஸ்தலனாகிய யோவான் வசனம் 20இல் சத்தமிடுவதைப் போல் தேவனாகிய கர்த்தரின் வருகையை குறித்து சத்தமிடமுடியும்.
வசனம் 20 கூறுகிறது, “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” நீதிமான்களால் மட்டுமே இதனைக் கூற முடியும். நீதிமான்களின் ஜெபத்தின் படி நம் தேவன் வெகு சீக்கிரமாக இப்பூமிக்கு வருவார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நிறைவான பாவ மன்னிப்பை பெற்ற நீதிமான்கள் மட்டுமே தேவனின் துரிதமான வருகைக்காக காத்திருந்து அதனால் மகிழுவார்கள். இது ஏனெனில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் ஆடை அணிந்தவர்களே, அதாவது பாவமற்றவர்களே தேவனை வரவேற்க ஆயத்தமாயிருப்பவர்கள்.
நீதிமான்கள் காத்திருப்பதற்கு பதிலளிக்கும் வகையில் நம் தேவன் இப்பூமிக்கு வரும் அந்நாளுக்காக அவர் காத்திருக்கிறார். ஆயிர வருட அரசாட்சியினை நமக்கு பரிசளித்து நீதிமான்களாகிய நம்மை ஜீவ தண்ணீர் ஓடும் புதிய வானம் புதிய பூமிக்கு பிரவேசிக்கக் கூடிய அவரின் மிகப் பெரிய ஆசீர்வாதத்தினால் தரிப்பிப்பார். தேவன் காத்திருப்பது அதிக நாட்களுக்கு அல்ல. நாம் செய்யக் கூடியதெல்லாம் “ஆமென், தேவனாகிய கர்த்தரே வாரும்” என்பது மட்டுமே. நம்முடைய விசுவாசத்தினாலும் நன்றியறிதலினாலும் தேவனுடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இறுதியாக வசனம் 21 கூறுகிறது “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.” அனைவருக்குமான ஆசீர்வாத ஜெபத்துடன் வெளிப்படுத்தின விசேஷத்தை அப்போஸ்தலனாகிய யோவான் முடிவு செய்கிறான். எல்லோரும் இயேசுவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டு கர்த்தரின் நகரத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமென்ற தனது இருதயத்துடன் தனது ஆசீர்வாத ஜெபத்தை இறுதியில் கூறினான்.
எனக்கன்பான பரிசுத்தவான்களே நாம் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டோம் என்பதற்கான பொருள் அவர் நம்மை நேசித்து நம்மை நமது அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மை தனது பிள்ளைகளாக்கிக் கொண்டார் என்பதாகும். நாம் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்கும் விதமாக அவர் நம்மை நீதிமான்களாக்கினார் என்பத அதிசயமானதும் நன்றி கூற வேண்டியதுமாகும்.
வேதாகமம் நம்மிடம் கூறும் முக்கிய கரு இதுவே. நம்மைத் தனது ராஜ்யத்தில் நித்தியமாக வாழச் செய்யும் பொருட்டு இந்த உண்மையான நற்செய்தியைக் கேட்பதின் மூலம் நீங்களும் நானும் மறுபடியும் பிறக்கச் செய்து நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நியாயத் தீர்ப்பிலிருந்தும் விடுதலையாக்கினார். அவரின் இரட்சிப்பிற்காக தேவனைப் போற்றி நன்றி கூறுகிறேன்.
நம்முடைய பாவ மன்னிப்பை எவ்வித பிரச்சனையுமின்றி நாம் பெற்றுக் கொண்டது மிகவும் அதிர்ஷ்டமானதாகும். நாம் கர்த்தரால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள். நாமெல்லாம் அவரின் தீர்க்கதரிசிகள். இந்த நற்செய்தியை இதுவரை கேட்காத அனைத்து ஆத்துமாக்களுக்கும் பாவ மன்னிப்பின் நற்செய்தியை நாம் போதிக்க வேண்டும். மேலும் நற்செய்தியின் நிறைவேறுதலாகிய வெளிப்படுத்தலின் வார்த்தையையும் அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும்.
நம்மைப் படைத்தவரும், இரட்சகரும், நீதிபதியுமான இயேசுவை எல்லோரும் விசுவாசித்து இறுதிகாலம் வருகையில் தேவன் அருளம் பரிசுத்த ஸ்தலமாகிய புதிய வானம் புதிய பூமிக்குள் பிரவேசிக்க வேண்டுமென விரும்பி அதற்காக ஜெபிக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.