(யாத்திராகமம் 27:9-21)
"வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டு பண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறு முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும். அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும். சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்க வேண்டும். வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும். குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக. ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது."
ஆசரிப்புக் கூடாரத்தின் செவ்வக பிரகாரத்தின் வேலியானது 100 முழம் நீளத்தில் இருந்தது. வேதாகமத்தில் ஒருவனின் முழங்கையில் இருந்து அவனுடைய விரல்களின் நுனி வரையிலான நீளமே ஒரு முழம் என்று அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய அளவில் 45 செ.மீ (18 அங்குலங்கள்) இருக்கும். இதைப் போலவே ஆசரிப்புக் கூடாரத்தினுடைய செவ்வக பிரகாரத்தின் வேலி 100 முழங்கள் நீளம் இருந்தது, அதாவது 45 மீட்டர்கள் (150 அடிகள்) இருந்தது. மேலும் அதனுடைய அகலம் 50 முழங்கள் அதாவது அது கிட்டதட்ட 22.5 மீட்டர்கள் (75 அடி) அகலம் இருந்தது. இதன் காரணமாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு இடையே தங்கியிருந்த பொழுது அவருடைய வீட்டின் அளவு இதுவாக இருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளிப்புற பிரகாரமானது வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது
நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மாதிரியை படத்திலோ, ஒவியத்திலோ எந்த சந்தர்பத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக பேசினால், ஆசரிப்புக் கூடாரம் கர்த்தர் தங்கும் வீடாகவும் அதாவது ஆசரிப்புக் கூடாரமாகவும் அதனுடைய பிரகாரமாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த கர்த்தருடைய வீட்டில் அதாவது ஆசரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலம் என்ற ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. பரிசுத்த ஸ்தலமானது நான்கு வித்தியாசமான போர்வைகளால் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு போர்வை மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலால் நெயப்பட்டிருந்தது. மற்றொன்று ஆட்டு ரோமத்தினாலும், மற்றொன்று சிவப்பு சாயம் அடிக்கப்பட்ட கன்றுகுட்டியின் தோலாலும் மேலும் மற்றொன்று மரநாயின் தோழாலும் செய்யப்பட்டிருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் கிழக்கு பகுதியில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றுடன் அதனுடைய வாசற்கதவு காணப்பட்டது. இந்த வாசற்கதவுக்குள் நுழைந்தால், தகன பலிபீடத்தையும், வெண்கல பாத்திரத்தையும் பார்த்திருக்க முடியும். வெண்கல பாத்திரத்தை கடந்துச் சென்றால் நாம் ஆசரிப்புக் கூடாரத்தையே பார்த்திருக்க முடியும். ஆசரிப்புக் கூடாரமானது பரிசுத்த ஸ்தலமென்றும் மகா பரிசுத்த ஸ்தலமென்றும் பிரிக்கப்பட்டிருந்தது.
இங்கு தான் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி காணப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் வேலியானது, மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் தொங்கல் கொண்ட 60 தூண்களுடன் கட்டப்பட்டிருந்தது. இன்னொரு புறம், ஆசரிப்புக் கூடாரமானது 48 பலகைகளையும் 9 தூண்களையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தின் மூலம் கர்த்தர் நம்முடன் என்ன பேசுகிறார் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளித் தோற்ற சிறப்புகளை குறித்ததான பொது எண்ணமாவது நமக்கு இருக்க வேண்டும்.
கர்த்தர் 48 பலகைகளால் கட்டப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்துக்குள் தங்கி இருந்தார். கர்த்தர், இஸ்ரவேல் மக்களுக்கு தன்னுடைய பிரசன்னத்தை, பகலில் ஆசரிப்புக் கூடாரத்துக்கு மேலே ஒரு மேகஸ்தம்பத்தின் மூலமாகவும் இரவில் அக்கினிஸ்தம்பத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் கர்த்தர் தங்கியிருந்த பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே, கர்த்தருடைய மகிமை நிறைந்திருந்தது. பரிசுத்தமான இடத்திற்குள், அப்பத்தினுடைய மேஜையும், விளக்குத்தண்டு மற்றும் தூபவர்க்க பலிபீடமும் இருந்தது. மேலும் மகா பரிசுத்தமான இடத்திற்குள் உடன்படிக்கைப் பெட்டியும் கிருபாசனமும் இருந்தது. இவை இஸ்ரவேலின் பொது மக்களுக்காக இருந்த பாதி அளவு இருக்கைகள்; ஆசரிப்புக் கூடாரத்தின் விதி முறைப்படி ஆசாரியரும் தலைமை ஆசாரியரும் மட்டுமே இந்த இடங்களுக்குள் நுழைய முடியும். "இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்" (எபிரெயர் 9:6-7) என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த வசனம் சொல்கிறது இன்றைய காலத்தில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது சரியான நம்பிக்கையுடையவர்களால் மட்டுமே கர்த்தருக்கு சேவைச் செய்துக் கொண்டே அவருடன் தங்கள் வாழ்க்கையை வாழ முடியும்.
அப்பத்தினுடைய மேஜையின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அப்பத்தின் பெயர் என்ன? அது கர்த்தருடைய வார்த்தை என்று அர்த்தம். வாசனையுடைய பலிபீடம் என்றால் என்ன? இது ஜெபங்களைக் குறித்து நமக்குச் சொல்கிறது மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள், உடன்படிக்கைப் பெட்டியும், சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட கிருபாசனமும், பேழையின் மேல் போடப்பட்டிருந்தது. தேவதூதர்கள் தங்களின் இறக்கையை மேலே விரித்து, இரக்கத்தின் இருக்கையை தங்களின் இறக்கைகளால் மூடி, கிருபாசனத்தைப் பார்த்தபடி, அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிருபாசனத்தின் இடத்தில் தான் கர்த்தருடைய கிருபை அளிக்கப்பட்டது. பத்துக் கட்டளைகள் செதுக்கப்பட்டிருந்த இரண்டு கல்வெட்டுக்களும், ஆரோனுடைய தளிர்விட்ட ஊன்று கோலும், மன்னாவால் நிறப்பட்ட ஜாடியும், உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. பேழை தங்க மூடியால் மூடப்பட்டிருந்தது. (கிருபாசனம்) மேலும் அதற்கு மேலே தேவ தூதர்கள் கிருபாசனத்தைப் பார்த்து கொண்டிருந்தனர்.
பாவ மன்னிப்பு பெற்றவர்கள் எல்லோரும் எங்கு வசிக்கிறார்கள்?
பரிசுத்தமான இடம் தான் பாவ மன்னிப்பு பெற்ற அனைவரும் இருக்கும் இடம். பரிசுத்தமான இடமானது 48 பலகைகளால் கட்டப்பட்டிருந்தது, இவை எல்லாமே தங்கத்தினால் பூசப்பட்டிருந்தது, இதைப் பற்றி நினையுங்கள். நீங்கள் ஒரு சில தங்கச் சுவர்களை பார்க்காமல், 48 தங்க பலகைகளைப் பார்க்கிறீர்கள் என்றால், அது எப்படி அருமையாக பிரகாசிக்கும்? பரிசுத்தமான இடத்தின் உட்புறம் அதனுடைய எல்லாப் பொருட்களும் இதே போல் சுத்தமான தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த காரணத்தினால், இவை அருமையாக பிரகாசித்தன.
நெருப்பில் இடப்பட்ட காணிக்கையின் பலிபீடமும் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளி பிரகாரத்தில் இருந்த வெண்கல பாத்திரமும் பித்தளையால் செய்யப்பட்டிருந்தது. மேலும் பிரகாரத்தினுடைய வேலி வெள்ளி மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலால் தயாரிக்கப் பட்ட துணியால் மூடப்பட்டிருந்தது. இதற்கு மாராக, பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கும் எல்லா பொருட்களும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. விளக்குத்தண்டு தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அதே போல அப்பம் வைக்கப்பட்டிருந்த மேஜையும் தங்கத்தில் செய்யப்பட்டிருந்தது. பரிசுத்தமான இடத்தில் இருந்த எல்லா பொருட்களும் மற்றும் அதன் மூன்று சுவர்களும் சுத்தமான தங்கத்தினால் செய்யப்பட்டிருந்ததால் பரிசுத்த இடத்தினுடைய உட்புறம் எப்பொழுதுமே தங்க பிரதிபலிப்புடன் அருமையாக பிரகாசித்துக் கொண்டிருந்தது.
பரிசுத்த ஸ்தலத்தினுடைய உட்புறம் தங்க பிரதிபலிப்புடன் அருமையாக பிரகாசித்துக் கொண்டிருந்தது, இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தங்களின் விலை மதிப்பு இல்லாத விசுவாசத்தின் வாழ்க்கையை கர்த்தருடைய ஆலயத்திற்குள் வாழ்ந்தார்கள் என்று நமக்கு சொல்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குள், தங்களுடைய விசுவாசத்திற்குள் வாழும் பரிசுத்தவான்கள், பரிசுத்த இடத்தில் காணப்படும் சுத்தமான தங்கத்தைப் போன்றவர்கள். பரிசுத்த இடத்திற்குள் வாழும் இப்படிப்பட்ட பரிசுத்தவான்களின் வாழ்க்கையானது ஆலயத்திற்குள் தங்கியிருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கையாக இருக்கிறது. இது கர்த்தருடைய வார்த்தையில் வாழ்கிறது, ஜெபித்து அவரை ஸ்தோத்தரிக்கிறது, கர்த்தருடைய ஆட்சிக்கு முன் செல்கிறது. மேலும் எல்லா நாளும் ஆலயம் முழுவதுமாக அவருடைய கிருபையினால் மூடப்பட்டிருக்கிறது. பரிசுத்தமான இடத்திற்குள் இருக்கும் விசுவாசமான வாழ்க்கை இது தான், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் இரட்சிக்கப்பட்ட நீதிமான்கள் மட்டுமே, பரிசுத்த இடத்திற்குள் விலை மதிப்பற்ற விசுவாசமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதனை உங்கள் இருதயங்களுக்குள் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
கர்த்தர் பரிசுத்தமான இடத்தினுடைய வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் தெளிவாக பிரித்தார்
பெரும்பாலான வீடுகள் வேலியுடன் இருப்பதைப் போல ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரமும் 60 தூண்களையும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் துணியின் தொங்கல்களால் சூழப்பட்டவாரு ஒரு வேலியை பெற்றிருந்தது. பிரகாரத்தின் கிழக்கு பகுதியில், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் செய்யப்பட்ட வாயில் கதவு எல்லோரும் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. இது 9 மீட்டர் (30 அடி) அகலம் உடையதாய் இருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி நாம் படிக்கும் பொழுது நம்மிடமிருந்து கர்த்தருக்கு தேவைப்படும் அருமையான விசுவாசம் என்ன என்பதையும் இரட்சிக்கப்பட்டவர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது, ஆசரிப்புக் கூடாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மூலமாக நம்முடைய தேவன் நம்மை எப்படி மீட்டுக்கொண்டார் என்பதை நாம் தெளிவாக உணர்ந்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த இடத்திற்குள் பிடிப்பட்டுள்ள அருமையான மற்றும் தங்கமான விசுவாசம் என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் நாம் முதலில் வெண்கல பாத்திரத்தையும், தகன பலிபீடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளி பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த வேலியையும் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட எல்லா பொருட்களையும் கவனமாக பார்க்க வேண்டும். இப்படி செய்வதின் மூலம், நாம் எந்த வகை விசுவாசத்தின் மூலமும் அருமையான தங்கமான பிரதிபலிப்புடைய பரிசுத்த இடத்தை நுழைய முடியும் என்பதனை நாம் கண்டு கொள்ள முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளி பிரகாரத்தில் என்னவெல்லாம் இருந்தது? அங்கு வெண்கல பாத்திரமும் தகன பலிபீடமும் இருந்தன. அது 60 மரக்கட்டை தூண்களால் சூழப்பட்டிருந்தது. மேலும் இந்த தூண்களின் மேலே, மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலினால் செய்யப்பட்ட தொங்கல்கள் பிரகாரத்தின் வெளியாக வைக்கப்பட்டிருந்தது. இந்த தூண்களுடைய வேலி மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. இந்த மரமானது மிகவும் கடினமாக இருந்த போதிலும், இலகுவானதாக இருந்தது. இந்த மரத்தால் செய்யப்பட்ட தூண்கள் கிட்டதட்ட 2.25 மீட்டர் (7.5 அடி) உயரமுடையதாய் இருந்தது. இது சராசரி உயரமுடைய பெரும்பாலான மக்களை வெளி பிரகாரத்தினுடைய வேலிக்கு வெளிப்புறம் இருந்து ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே எட்டிப்பார்ப்பதை சாத்தியமில்லாமல் ஆக்கியது. ஏறி நிற்பதற்காக எதையாவது ஒன்றை வைத்தால், ஒருவரால் பிரகாரத்திற்குள்ளே பார்க்க முடியும், ஆனால் இதைப் போல உதவி இல்லாமல், உள்ளே எட்டிப்பார்ப்பது சாத்தியமே இல்லை. நம்முடைய சொந்த மனித முயற்சியின் மூலம், கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்குள் நம்மால் எப்பொழுதுமே நுழைய முடியாது என்று இது நமக்கு சொல்கிறது.
வெளி பிரகாரத்தின் மரத்தூண்களின் அடி மூளையில், பித்தளை கூடு வைக்கப்பட்டிருந்தது, மேலும் அவற்றின் நுனி வெள்ளித் தலைப்பாகத்தால் மூடப்பட்டிருந்தது. தூண்கள் தமக்குத் தானே நிற்க முடியாததால் பக்கத்திலிருந்த ஒவ்வொரு தூண்களையும் வெள்ளி கயிறு பலமாக பற்றிக் கொண்டிருந்தது. மேலும் எதிர்கோணத்தில் இருக்கும் தூண்களைத் தாங்குவதற்காக தூண்களுடைய வெள்ளி உரையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி கொக்கிகள், கயிறுடன் இருக்கும் வெண்கல ஆப்புடன் கட்டப்பட்டிருந்தது (யாத்திராகமம் 35:18).
ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய நுழைவாயிலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் என்ன?
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவைதான் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவு வாயிலுக்காக உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாகும். நுழைவு வாயிலினுடைய உயரம் 2.25 மீட்டராகவும் (7.5 அடி), அதனுடைய அகலம் 9 மீட்டராகவும் (30 அடியாகவும்) இருந்தது. இது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரையாக இருந்தது. இது நான்கு தூண்களின் மேல் தொங்கவிடப்பட்டிருந்தது. இதனால், எப்பொழுதாவது யாராவது ஒருவர் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தை நுழைய முயற்சி செய்யும் பொழுது, அவனோ/அவளோ அதன் நுழைவாயிலை எளிதாக கண்டு பிடிக்க முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவு கதவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் பொருட்களின் மூலம், கர்த்தர் அவருடைய குமாரனாகிய இயேசுவின் நான்கு வேலைகளின் மூலம் நம்மை நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார் என்பதை தெளிவு படுத்துகிறார். எல்லா 60 மரத்தூண்களும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வேலியுடைய மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலும், கர்த்தர் அவருடைய குமாரனான இயேசுவின் மூலம் என்னையும் உங்களையும் நம்முடைய பாவத்திலிருந்து எந்த வகையில் மீட்டுக் கொள்வார் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளி பிரகாரத்தின் நுழைவு வாயில் மூலமாக, கர்த்தர் நமக்கு இரட்சிக்கப்படுதலின் இரகசியத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறார். நாம் மறுபடியும் ஒரு முறை ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய நுழைவு கதவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் பற்றி பார்ப்போம்: இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல். இந்த நான்கு நூல்களும், இயேசுவை விசுவாசித்து மீட்டுக் கொள்ளப்படுவதற்கு நமக்கு மிகவும் முக்கியமாயிருக்கிறது. இந்த பொருட்கள் எல்லாம் முக்கியமில்லை என்றால், வேதாகமம் இவற்றை அவ்வளவு விளக்கமாக எழுதியிருக்காது.
ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய நுழைவாயிலில் பயன்படுத்தப்பட்டுள்ள எல்லா பொருட்களுமே, கர்த்தர் என்னையும், உங்களையும் மீட்டுக்கொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனாலும், வாயில் கதவானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டிருந்தது என்ற உண்மை பாவிகளை மீட்பதற்கு இது கர்த்தருக்கு மிகவும் முக்கியமாயிருக்கிறது ஏனென்றால், இந்த நான்கு நூல்களும் கர்த்தருடைய சரியான இரட்சிக்கப்படுதலுக்கு வெளிப்படுத்துதலாக இருந்தன. இதனால் தான் சீனாய் மலையின் மேல் மோசேயிக்கு கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மாதிரியை காண்பித்ததுடன் ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய நுழைவாயிலை இதன் படி செய்யுமாறும் அவனிடம் கூறினார்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் பொருள் என்ன?
பரிசுத்தமான இடத்தினுடைய நுழைவு வாயில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரையினால் செய்யப்பட்டிருந்தது, மேலும் பரிசுத்த இடம் மற்றும் மகா பரிசுத்தமான இடத்திற்கு இடையில் இருக்கும் திரையும் இந்த நான்கு நூல்களால் தான் நெய்யப்பட்டிருந்தது. இது மட்டுமல்ல, ஆனால் தலைமை ஆசாரியனுடைய ஏபோதும் மார்புக் கவசமும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டிருந்தது. பின்பு இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை நமக்கு என்ன சொல்லுகின்றன? நம்மை மீட்டுக் கொள்வதற்காக தேவனுக்கு மிகவும் அவசியமான இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை நமக்கு சரியாக என்ன சொல்கின்றன? இந்த தலைப்பை நாம் விளக்கமாக ஆராய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம்.
முதலில், நீல நிற நூல் இயேசு கிறிஸ்துவுடைய ஞானஸ்நானத்தைப் பற்றி நமக்கு சொல்லுகிறது. ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அறியாமலிருக்கிறவர்களுக்கு நீல நிற நூல் இயேசு கிறிஸ்துவுடைய ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, என்பது அவர்களுக்கு தெரியாது. இதைப் போலவே மறுபடியும் பிறக்காதவர்கள் பொதுவாக நீல நிற நூலின் அர்த்தத்தை "இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் மேலும் மனிதனுடைய சரீரத்தின் மூலமாக இந்த பூமிக்கு அவர் வந்தார் என்று சொல்லுகிறார்கள்." வேறு வகையில் பார்ப்போமானால் மற்றவர்கள் நீல நிற நூல் என்பது வெறும் வார்த்தை தான் என்று முறையிடுகிறார்கள், ஆனால் வேதாகமம் நமக்கு சொல்லுகிறது `இளநீல நிற நூல்` என்றால் இயேசுவின் ஞானஸ்நானம் என்று அர்த்தம். இயேசு உலகத்திற்கு வந்த பிறகு இந்த உலகத்தினுடைய பாவத்தை எல்லாம் தன் மீது இந்த ஞானஸ்நானத்தின் மூலமாக தான் பெற்றுக்கொண்டார் என்றும் வேதாகமம் சொல்லுகிறது. யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைத் தான் இளநீல நிற நூல் குறிப்பிடுகிறது என்று வேதாகமம் தெளிவாக காண்பிக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிய வார்த்தையை படிக்கும் பொழுது, இயேசுவின் ஞானஸ்நானத்தில் இருக்கும் நம்முடைய விசுவாசத்தின் முக்கியதுவத்தை நமக்கு கர்த்தர் காண்பிக்க விரும்புகிறார் என்பதை நான் உணர தொடங்கினேன்.
காணிக்கைக் கொடுக்கும் பொழுது தலைமை ஆசாரியனால் அணியப்பட்டிருந்த அங்கியானதும் இளநீல நிற நூலால் நெய்யப்பட்டது தான். தலைமை ஆசாரியன் தன் தலையில் அணிந்திருந்த ஏபோதில் ஒரு தங்க தட்டு தொங்கவிடப்பட்டது. மேலும் ஏபோதில் கட்டிய மெல்லிய கயிரும் நீல நிறமாக தான் இருந்தது. மேலும் இந்த தங்க தட்டில் "கர்த்தருக்கே பரிசுத்தம்" என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. தலைமை ஆசாரியனின் ஏபோதின் மேலே தங்க தட்டை கட்டிய நீல நிற நூல் இயேசுவின் ஞானஸ்நானம் தேவனுக்கு பரிசுத்தத்தை தருகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த வழியில், ஏபோதின் தங்க தட்டை கட்டிய நீல நிற மெல்லிய நூல் மூலம், கர்த்தர் உண்மையான இரட்சிக்கப்படுதல் பற்றி நம்மிடம் பேசுகிறார். வேறு வார்த்தையில் கூற வேண்டுமானால் நமக்கு பரிசுத்தத்தைத் தரும் கடையாணியாக இருப்பது நீல நிறம் மேலும் இது தான் இயேசுவின் ஞானஸ்நானமாயிருக்கிறது. நீல நிறம் பொதுவாக நமக்கு நீல வானத்தைக் குறித்து ஞாபகப்படுத்தினாலும், நீல நிறம் கர்த்தரை மட்டுமே குறிப்பிடுவதில்லை. எல்லா இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவைகளில் நீல நிற நூல் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்று உறுதியாய் கூறுகிறது. வேறு வகையாக சொன்னால், இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், இந்த உலகத்தில் உள்ள எல்லா பாவிகளுடைய பாவத்தையும் எடுத்துக்கொண்டார் என்று நீல நிற நூல் சொல்லுகிறது. (மத்தேயு 3:15) இயேசு ஞானஸ்நானத்தை எடுத்துக் கொண்டதன் மூலம் எல்லோருடைய பாவத்தையும் ஏற்காமல் இருந்தால், விசுவாசிகளாகிய நாம் தேவனுக்கு பரிசுத்தத்தை தந்திருக்க முடியாது. இயேசு எடுத்துக் கொண்ட ஞானஸ்நானம் மட்டும் இல்லாமல் இருந்தால் கர்த்தருக்கு முன்பாக நாம் எப்பொழுதுமே பரிசுத்தத்தால் மூடப்பட்டிருக்க மாட்டோம்.
மோசேயிற்கு காண்பிக்கப்பட்ட முறைப்படி ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய நுழைவாயிலை நெய்யவேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையின் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கர்த்தர் தங்கியிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்துச் செல்லும் பிரகாரத்தினுடைய நுழைவாயில் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து இல்லாமல் யாராலும் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது. இயேசு கிறிஸ்துவை குறிக்கும் பிரகாரத்தினுடைய வாயில் கதவானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தெளிவாக நெய்யப்பட்டிருந்தது. ஏனென்றால் கர்த்தர், நம்முடைய இரட்சிக்கப்படுதலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று இருந்தார். `இரத்தாம்பர நிறம்` பரிசுத்த ஆவியானரை குறிக்கிறது. இது இயேசுவே ராஜாதி ராஜா என்று நமக்கு சொல்கிறது சிவப்பு நிறம் இயேசு கிறிஸ்து சிலுவையின் மீது சிந்திய இரத்தத்தைக் குறிக்கிறது. நீல நிறம், சற்று முன்பு சொன்னதைப் போல, யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை இயேசுவின் ஞானஸ்நானத்தையும், கர்த்தருடைய அவதாரத்தையும் மற்றும் சிலுவையின் மேலே அவருடைய மரணத்தையும் குறிக்கின்றன. இந்த மூன்று நூல்களிலும் தெரிவிக்கப்பட்ட இயேசுவினுடைய வேலைகள், "யெகோவா" முன்பாக நாம் பரிசுத்தமாய் செல்வதற்கான விசுவாசத்தை நமக்கு தருகிறது. இயேசு கர்த்தராக இருந்து, மனிதனுடைய சரீரத்தின் வழியாக இந்த பூமிக்கு வந்தார். ஞானஸ்நானத்தின் மூலம் பாவிகளுடைய பாவங்களை தன்னுடைய சரீரத்தின் மேல் எடுத்துக் கொண்டார், மேலும், தன் இரத்தத்தை சிந்தியதன் மூலம், மற்றவர்களுக்கு பதிலாக எல்லா பாவங்கள் மற்றும் சுபாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை மிகுந்த ஆவிக்குரிய இரகசியமாய் இருக்கிறது.
இள நீல நிற நூல் கர்த்தரையோ அல்லது அவருடைய வார்த்தையையோ வெளிப்படுத்துகிறது என்று நீங்கள் இதுவரை நினைத்திருக்கலாம். ஆனால் இள நீல நிற நூல் உண்மையில் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது என்பதனை நீங்கள் இப்போது தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசு நம்முடைய பாவங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அவற்றை அவர் மீது செலுத்தி கொண்ட ஞானஸ்நானமானது மிகவும் முக்கியமானது. மேலும் அவருடைய வேலையில் இருந்து இதை விடமுடியாது. பழைய ஏற்பாட்டின் ஆசாரிப்புக் கூடாரம் முதல் கர்த்தர் இதனுடைய முக்கியதுவத்தை நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஞானஸ்நானத்தின் வழியாக தான் நம்முடைய பாவங்களை இயேசு ஏற்றுக்கொண்டார்
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வேலியின் தூண்கள் அகேசியா மரத்தினால் செய்யப்பட்டிருந்தது, வெண்கல கூடு இந்த தூண்களுடன் கீழே வைக்கப்பட்டிருந்தது. மேலே, வெள்ளி தூண்களின் தலைப் பாகத்தால் மூடப்பட்டிருந்தது. பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்படவேண்டும் என்று இது சொல்லுகிறது. தங்களுடைய பாவங்களுக்காக ஒருமுறை நியாயம் தீர்க்கப்படாமல் இருந்து அதன் மூலம் இரட்சிக்கப்படாமல் இருப்பவர்கள், கர்த்தருக்கு முன்பாக செல்லும் பொழுது அவர்களின் பாவத்திற்கான நிரந்தர தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக தீர்க்கப்படுவார்கள்.
"பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்று எழுதியிருப்பது போல பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்காக கர்த்தரின் பயமுள்ள நீயாயத்தீர்ப்புக்காக நிச்சயம் அனுப்பப்படுவார்கள். இதனால் பாவிகள் ஒருமுறை அவர்களுடைய பாவங்களுக்காக கர்த்தரால் நியாயம் தீர்க்கப்படவேண்டும். பின்பு அவருடைய கிருபையால் மூடப்பட்டு மறுபடியும் வாழவேண்டும். இது தான் மறுபடியும் பிறப்பது என்பதாகும். ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது தானாகவே எடுத்துக்கொண்டார் என்று நீல நிற நூலின் விசுவாசமும் இயேசு சிலுவையின் மீது நியாயம் தீர்க்கப்பட்டதன் மூலம் எல்லா பாவிகளையும் விடுவித்தார் என்ற சிவப்பு நிற நூலின் இந்த விசுவாசத்தை விட எதுவும் நம்மை ஒரு முறை நம்முடைய எல்லாப் பாவங்களுக்காக மரிக்கச்செய்து மறுபடியும் பிறக்க செய்வதில்லை. தங்களுடைய விசுவாசமின்மையால், நியாயத்தீர்ப்பை விசுவாசத்துடன் கடந்து செல்ல முடியாதவர்களுக்கு நிரந்தர தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்.
கிறிஸ்து நம் எல்லோரையும் இரட்சிப்பதற்காக நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதற்கு இயேசுவின் ஞானஸ்நானம் தான் வழியாக இருந்தது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொள்வதற்காக, யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். இயேசு கர்த்தராக இருந்து, நம்மை மீட்டுக் கொள்ள வேண்டியுள்ளது, மனிதனுடைய சரீரத்தின் மூலமாக இந்த பூமிக்கு வந்தார். யோவான் ஸ்நானகனின் ஞானஸ்நானத்தின் மூலம் பாவிகளுடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுகொண்டார், மேலும் மனித குலத்தின் பிரதிநிதியாக பாவிகளுக்கு பதிலாக தன்னுடைய சரீரத்தை சிலுவையின் மேல் கொடுத்தும், தண்ணீரையும் இரத்தத்தையும் சிந்தியும் மற்றவர்களுக்கு பதிலாக தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் வாசல், மீட்பராக இருந்து இயேசு நிறைவேற்றிய வேலைகளைப் பற்றி நமக்கும் விரிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தின் வாசல் மூலமாக இயேசு பாவிகளுடைய மீட்பர் ஆகிவிட்டார் என்று கர்த்தர் நமக்கு தெளிவாக சொல்கிறார்.
மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தையைக் குறிக்கிறது. இது அதிக விளக்கமாகவும் மற்றும் ஒன்றை ஒன்று பொருந்துமாரும் இருக்கிறது. இந்த மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலை உருவாக்குவதற்கு ஒவ்வொரு கயிற்றுப் புரிகளும் எவ்வளவு சிக்கலாக பின்னப்பட்டிருக்கும், இந்த மெல்லிய பஞ்சு நூலின் மூலம் கர்த்தர் அவர் நம்மை எப்படி மீட்டுக்கொண்டார் என்பதை விளக்கமாக சொல்கிறார்.
நாம் தரை விரிப்புகளைப் பார்க்கும்பொழுது பல வகையான நூல்களால் அவை பின்னப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். இதைப் போலவே, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்துடைய வாசலைச் செய்யவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் சொன்னார் என இது சொல்லுகிறது. (தண்ணீரின் கர்த்தருடைய சிக்கலான வார்த்தைக்குள் ஒழிந்திருந்த ஞானஸ்நானம்) இரத்தம் (சிலுவை) மற்றும் பரிசுத்த ஆவி (இயேசு தான் கர்த்தர்) ஆகியவற்றின் மூலம் நம்மிடம் வந்த இயேசு, இரட்சிக்கப்படுதலின் கதவாக உள்ளார். கர்த்தருடைய மறைமுகமான வார்த்தையிலிருந்து வெளிப்படுத்தப்படும் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் உண்மையான விசுவாசத்தைப் பெற்றிருப்பதன் மூலமும் அவருடைய அன்பினால் மூடப்படுவதன் மூலமும் நாம் இப்பொழுது விசுவாசத்தினால் முழுமையாக இரட்சிக்கப்பட்டுள்ளோம்.
இயேசு கிறிஸ்து நம்மை தற்செயலாக இரட்சிக்கவில்லை. நாம் ஆசரிப்புக் கூடாரத்தை பார்க்கும் பொழுது பார்க்க முடியும். இயேசு பாவிகளை சரியாக மீட்டுள்ளார். வேலியினுடைய தூண்களை மட்டும் நாம் பார்க்கும் பொழுது அவர் எப்படி நேர்த்தியாக மீட்டுள்ளார் என்பதனை நாம் உணரமுடியும். வேலியினுடைய எல்லா தூண்களுடைய எண்ணிக்கை ஏன் 60-ஆக இருக்கிறது, ஏனென்றால் எண் 6 மனிதனைக் குறிக்கிறது. அதே சமயம் எண் 3 கர்த்தரைக் குறிக்கிறது வெளிப்படுதல் 13 ஆம் அதிகாரத்தில் 666 என்ற அடையாளம் எழுதப்பட்டிருக்கிறது, மேலும் இது தான் விலங்கினுடைய எண் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். கூடவே அறிவுள்ளவர்களுக்கு இந்த எண்ணினுடைய மர்மம் தெரியும். இதனால், 666 என்ற எண் மனிதன் கர்த்தரைப் போல நடக்கிறான் என்று அர்த்தம். மனித குலத்தின் விருப்பம் தான் என்ன? சரியான ஆவிக்குரிய உயிரைப் போல ஆகக்கூடாது என்பது தானா? நான் உண்மையில் ஆவிக்குரிய உயிரை போல ஆக வேண்டும் என்றால், நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் மீண்டுமாக பிறக்க வேண்டும் கூடவே கர்த்தருடைய பிள்ளைகளாக வேண்டும் 60 தூண்கள் இந்த கருத்தை விரிவாக குறிக்கின்றன.
ஆனாலும், விசுவாசத்தை உடையவர்களாய் இருப்பதைவிட, மக்கள் பெருமை பாராட்டுகிறார்கள், தங்களுடைய சொந்த முயற்சியின் மூலமாக ஆவிக்குரிய தன்மையின் பங்குதாரர்களாக இருப்பதற்கான கெட்ட செயலை முயற்சிக்கிறார்கள். மனிதனுடைய இச்சைக்கேற்பவும், தங்களுடைய சொந்தமாக மனிதனால் செய்யப்பட்ட எண்ணங்களின் மீது இருந்த விசுவாசமின்மையையும், மனிதன் ஏன் கர்த்தருடைய எல்லா வார்த்தையையும் மறுபடியும் விளக்குகிறான் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. இவர்களிடம் விசுவாசம் இல்லை. கர்த்தருக்கு எதிராக நிற்கும் இச்சை மட்டுமே இவர்களிடம் இருக்கிறது. தங்களுடைய மாம்சத்தில் சரிநிலைமை அடைவதற்கும், தங்களுக்குதானே முழுமையாக வேண்டும் என்று முயற்சிக்கும் மாம்சத்தின் இச்சை மூலமாகத்தான் கர்த்தருடைய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டவர்களாய் தங்கள் வாழ்க்கையை முடிக்கிறார்கள்.
இரட்சிக்கப்படுதலின் வார்த்தை ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லா பொருட்களிலும் வெளிப் படுத்தப்பட்டிருந்தது
பாவிகளை மீட்பதற்காகவும் அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் சேர்க்கவும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லா பொருட்களும் மற்றும் பாத்திரங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு அவசியமாயிருந்தன. சர்வாங்க தகன பலிபீடம் அவசியமாயிருந்தது, வெங்கல தட்டு அவசியமாயிருந்தது மேலும் தூண்கள், வெங்கலக் கூடு, வெள்ளி தூண் தலைப்பாகம், கொக்கி மற்றும் வெள்ளி கயிறு ஆகியவையும் அவசியமாயிருந்தன. இந்த எல்லாப் பொருட்களும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் காணப்பட்ட பொருட்கள் ஆகும். மேலும் இவைகள் எல்லாம் பாவியை நீதிமானாக மாற்றுவதற்கு அவசியமாயிருந்தன.
இவை எல்லா பொருட்களுமே பாவிகளை பரலோக இராஜ்ஜியத்தில் நுழைய செய்வதற்கும் அங்கு வாழச் செய்வதற்கும் மிகவும் அவசியமாயிருந்தன, ஆனால் இவற்றில் மிகவும் முக்கியமானது நீல நிற நூல் (இயேசுவின் ஞானஸ்நானம்) ஆகும். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டன. கர்த்தருக்குள் நாம் விசுவாசிக்கும் பொழுது நமக்கு தேவைப்படும் இயேசு கிறிஸ்துவினுடைய மூன்று வேலைகளையும் இந்த நூல்கள் குறிக்கின்றன. முதலாவதாக, இயேசு இந்த உலகத்திற்கு வந்து அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டார். இரண்டாவதாக இயேசு தான் கர்த்தர் (ஆவி). மூன்றவதாக, யோர்தான் நதியில் யோவான் மூலம் அவர் தனக்குள் எல்லாருடைய பாவத்தின் தண்டனையையும் ஏற்றுக் கொண்டதற்கு தண்டனையாக இயேசு சிலுவையின் மீது மரித்தார். பாவிகள் இரட்சிக்கப்படுவதற்கும் நீதிமானாவதற்கும் தேவைப்படும் உண்மையான விசுவாசத்தின் சரியான வரிசை இது தான்.
நாம் வேதாகமத்தை வாசிக்கும் பொழுது, நம்முடைய தேவன் எவ்வளவு மறைமுகமானவர் என்பதை நாம் உணரமுடியும். நம்மை இவ்வளவு விளக்கமாக, மெல்லிய பஞ்சு நூலில் உள்ள ஒவ்வொரு நூல் இழையைப் போல மீட்டுக் கொண்டவர் கர்த்தரை தவிர வேறு யாரும் இல்லை என்பதை நாம் தெளிவாக கண்டுக்கொள்ள முடியும். இன்னமும் அதிகமாக 9 மீட்டர் நீளம் கொண்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரை மூலம் கர்த்தர், இஸ்ரவேலர்களை ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வாயிற்கதவை கட்டும்படி செய்தார். இதைப் போலவே, மிகவும் தொலைவில் இருந்து யாராவது ஆசரிப்புக் கூடாரத்தை பார்த்தாலும் கூட ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வாயிற்கதவை மட்டும் பார்க்கமுடியும் என்பதையும் கர்த்தர் உறுதி செய்துக் கொண்டார்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய தூண்களில் தொங்கிக் கொண்டிருந்த தொங்கல்கள், கர்த்தருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தின. இதனால், பாவிகள் ஆசரிப்புக் கூடாரத்தை அணுகுவதற்கு பயப்படுவார்கள் என்பதையும், இயேசுவினுடைய ஊழியத்தை விசுவாசித்து அதன் மூலம் இரட்சிக்கப்பட்ட பிறகு தான் அவர்கள் பிரகாரத்திற்குள் நுழைய முடியும் என்பதையும் நாம் உணரமுடியும். இந்த இயேசுவின் ஊழியமானது, ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய வாயிற்கதவிற்குள் நெயப்பட்டிருந்த இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இயேசு கிறிஸ்து பாவிகளுடைய எல்லா பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைத் நீர், இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியின் மூலமாக மீட்டுக் கொண்டார் என்பதை அவர்களுக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார்.
இது மட்டும் அல்ல, ஆசரிப்புக் கூடாரத்தை அமைப்பதற்கு தேவைப்பட்ட எல்லா பொருட்களும், அதனுடைய பிரகாரத்தினுடைய நுழைவு கதவு உற்பட எல்லாமே பாவிகளை நீதிமான்களாக மாற்றுவதற்கு கர்த்தருக்கு தேவைப்பட்ட மறைமுகமான வார்த்தையை நமக்கு காண்பிக்கிறது. எல்லோரும் கண்டுபிடிக்கும் அளவிற்கு பெரியதாக ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வாயிற்கதவை அமைக்குமாறு இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் சொன்னதும் இந்த நுழைவு கதவானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் சிக்கலாக பின்னப்பட்டு செய்யப்பட்டிருந்ததாலும், பாவிகளை நீதிமான்களாக்கும் முக்கியமான வார்த்தையை நாம் எல்லோரும் தெளிவாக புரிந்துக் கொள்ளும்படி கர்த்தர் செய்தார்.
அகேசியா மரத்தைப் போல பாவத்தில் இருந்த நம்மை, இளநீலம் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தாம்பரம் (இயேசு தான் கர்த்தர்), சிகப்புநூல் (சிலுவையின் இரத்தம்) என்பதன் மூலமாக கர்த்தர் நம்மை முழுமையாக மீட்டுக்கொண்டார் என்பதனை ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வாசல் நமக்கு சொல்கிறது, இதை யார் முழுமையாக விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் தான் பரிசுத்த இடமாகிய, கர்த்தருடைய வீட்டிற்குள் நுழையமுடியும் என்பதனை கர்த்தர் தீர்மானித்து விட்டார்.
இயேசு கிறிஸ்து நம்மிடம் சொல்கிறார்
அருமையான பிரகாசிக்கும் விசுவாசத்தின் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் கழுவப்பட்டு தேவனுக்கு முன்பாக போக வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லுகிறார். இதனால் தான் கர்த்தர் தாமே ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மாதிரியை மோசேயிற்கு காண்பித்தார். மோசேயின் மூலமாக அதைக் கட்டினால், இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் அமைப்பு மூலமாக இஸ்ரவேல் மக்களை அவர்களின் பாவத்தின் தண்டனையை பெறும் படி செய்தார். பரிசுத்த இடத்திற்குள்ளேயும் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்திற்குள்ளேயும் நம்மை அழைத்துச் சென்ற விசுவாசத்தை நாம் திரும்ப பிடிப்போம். ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தின் மூலமாக, இயேசு நீர், இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியவற்றின் மூலமாக நம்மை மீட்டுக்கொண்டார் என்ற உண்மையில் நமக்கு இருக்கும் விசுவாசத்தைக் குறித்து கர்த்தர் தொடர்ந்து பேசுகிறார். நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூல்களின் மூலம் நெய்யப்பட்டுள்ள பிரகாரத்தினுடைய வாயிற்கதவில் இருக்கும் நம்பிக்கை, பலிகொடுக்கப்படும் ஆடு மற்றும் இந்த பலி ஆட்டினுடைய இரத்தம் ஆகியவற்றின் மேலே கைகளை வைக்கும் தலைமை ஆசாரியனிடம் இருக்கும் விசுவாசம், தலைமை ஆசாரியன் தன்னுடைய கைகளையும், கால்களையும் கழுவிய வெண்கல பாத்திரத்தின் மேல் இருந்த நம்பிக்கையும் தான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் நமக்கு இருக்கும் விசுவாசம் மட்டும் தான் சுத்தமான தங்கத்தின் விசுவாசம் என்று நமக்கு தெரியப்படுத்துகிறது, இது தான் நம்மை பரிசுத்த இடத்திற்குள்ளே அனுமதித்து அங்கு மகிமையுடன் வாழச்செய்கிறது.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூலம் கர்த்தர் மீட்பின் கிருபையையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் நாம் அனைவரும் பெற்றுக் கொள்வதற்கு அனுமதித்துள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக கர்த்தர் நமக்கு அளித்துள்ள ஆசீர்வாதங்களை நாம் தெரிந்துக் கொள்ள முடியும். நம்மை கர்த்தருடைய கிருபாசனத்திற்கு முன் செல்வதற்கும் எல்லோரும் ஒரே சமயத்தில் இரட்சிக்கப்படுவதற்கு சாத்தியப்படுத்திய மீட்பின் கிருபையை நாம் விசுவாசிக்கவும் உணரவும் முடியும் நீங்கள் இதை உணர்கிறீர்களா? ஆசரிப்புக் கூடாரத்தின் மூலம் நம்முடைய தேவன் உங்களையும் என்னையும் எவ்வளவு நேர்த்தியாக மீட்டுக்கொண்டுள்ளார், எவ்வளவு மறைவாக நம்முடைய இரட்சிக்கப்படுதலை அவர் திட்டமிட்டுள்ளார், இந்த திட்டத்தின்படி இதை எப்படி, அவர் நிறைவேற்றியுள்ளார் மேலும் பாவிகளாகிய நம்மை எப்படி நீதிமான்களாக மாற்றியுள்ளார் என்பதையும் நாம் பார்க்க முடியும்.
நீங்கள் எந்த வகையிலாவது, இந்த நேரம் வரையிலும் இயேசுவை மேலோட்டமாக விசுவாசித்திருந்தீர்களா? இள நீல நிறம் என்பதன் பொருள் வானம் என்பதை நீங்கள் விசுவாசித்தீர்களா? வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தின் விசுவாசமாகிய ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, சிலுவை மேலே நம்மை மீட்டுக்கொண்டார் என்பதை மற்றும் நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? மேலும் இதற்கேற்ப விசுவாசிக்கிறீர்களா? ஆமாம் என்றால், உண்மையான விசுவாசத்தை கண்டுப்பிடிப்பதற்கு இது தான் நேரம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும், நீல நிறத்தின் விசுவாசத்தையும் பற்றி உங்களுக்குத் தெளிவாக தெரியும் என்று நான் நம்புகிறேன் கூடவே இதனால் கர்த்தர் உங்களுக்கு கொடுத்துள்ள அளவிட முடியாத மீட்பின் கிருபையை விசுவாசித்து உணருங்கள்.
கர்த்தர் நம்மை இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டும் இரட்சிக்கவில்லை ஏன்? ஏனென்றால், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு ஆகிய நிறங்களைப் பற்றியும் இந்த மூன்று நிறங்களின் மூலமாக இயேசு நம்மை எப்படி மீட்பார் என்பதையும் கர்த்தர் தெளிவாக நம்மிடம் பேசுகிறார். ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக இயேசுவினுடைய இரட்சிக்கப்படுதலின் வேலையை விளக்கமாக, கர்த்தர் நமக்கு காண்பித்துள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தின் வழியாக நம்மை மீட்டுக்கொள்வார் என்று கர்த்தர் மோசேயின் மூலமாக வாக்குத்தத்தம் செய்தார். வாக்குத்தத்தம் செய்ததுப் போல இயேசு கிறிஸ்து மனிதனுடைய சரீரத்திற்குள் வந்து, யோர்தான் நதியின் நீரில் (நீல நிறம்) ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டார். இந்த ஞானஸ்நானத்தின் மூலமாக, இயேசு உண்மையில் பாவிகளை எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்டுக்கொண்டுள்ளார். எவ்வளவு உண்மையாக, எவ்வளவு சரியாக, எவ்வளவு மறைமுகமாக நம்முடைய மீட்பு இருக்கிறது.
பரிசுத்த இடத்திற்குள் நாம் நுழையும் பொழுது, விளக்குத்தண்டு, அப்பத்தின் மேஜை மற்றும் தூபவர்க்க பலிபீடத்தை நம்மால் பார்க்கமுடியும். மிகவும் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைவதற்கு முன்னால், தங்கத்தினால் அருமையாக பிரகாசிக்கும் பரிசுத்த இடத்தில் நாம் சிறிது நேரம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்த இடம் நம் இருதயங்களுக்கு வார்த்தையின் அப்பத்தைப் போஷிக்கிறது, இது எவ்வளவு ஆசீர்வாதமாய் இருக்கிறது? கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்து முழுமையாக இரட்சிக்கப்பட்டவர்களாய் அவருடைய ஆலயத்தில் நாம் இருக்கிறோம். ஜீவ அப்பத்தை தரும் கர்த்தருடைய ஆலயம் தான் பரிசுத்தமான இடம்.
பரிசுத்த இடத்தில், அதாவது கர்த்தருடைய ஆலயத்தில் விளக்குத்தண்டு, அப்பத்தின் மேஜை மற்றும் தூபவர்க்க பலிபீடம் ஆகியவை இருந்தன. பிடி, கிளைகள், கிண்ணங்கள், அலங்கரிக்கும் கைப்பிடி மற்றும் பூக்களுடன் இருக்கும் விளக்குத்தண்டானது சுத்தமான ஒரே தங்க கட்டியை தட்டி செய்யப்பட்டது. சுத்தமான தங்கத்தால் தட்டி செய்யப்பட்ட விளக்குத்தண்டானது, நீதிமான்களாகிய நாம் கர்த்தருடைய ஆலயத்துடன் இணைய வேண்டும் என்று நமக்குச் சொல்கிறது.
அப்பத்தின் மேஜையின் மேல், புளிக்காத அப்பம் வைக்கப்பட்டிருந்தது. உலகத்தின் அசுத்தமான மற்றும் தீய போதனைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் கர்த்தருடைய வார்த்தையின் தூய அப்பத்தை இது குறிக்கிறது. கர்த்தருடைய பரிசுத்த இடமாகிய கர்த்தருடைய ஆலயமானது புளிக்காமல் இருக்கும் கர்த்தருடைய வார்த்தையைப் போதிக்கிறது மேலும் கர்த்தருக்கு முன்பாக எந்த தீமையையும் செய்யாமல் உண்மையான விசுவாசத்தில் வாழ்கிறது.
பரிசுத்த இடத்திற்கு முன்னால் இருக்கும் திரைக்கு முன்னால் தூபவர்க்க பலிபீடம் இருந்தது. இதனால் தான் கர்த்தருக்கு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் பாத்திரங்களின் மூலம், கர்த்தருக்கு முன்பாக நாம் செல்லும் பொழுது ஒற்றுமை மற்றும் அவருடைய வார்த்தை மற்றும் ஜெபத்தில் விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லுகிறார். நீதிமான்களின் ஜெபத்தை மட்டுமே கர்த்தர் கேட்கிறார் (ஏசாயா 59:1-2; யாக்கோபு 5:16) கர்த்தருக்கு முன்பாக ஜெபிப்பவர்கள் மட்டுமே அவரை சந்திக்க முடியும்.
இதைப் போல, கர்த்தருடைய ஆலயத்தில் நாம் மீட்கப்படுவது நமக்கு எவ்வளவு சிறப்பானதாய் இருக்கிறது. என்று பரிசுத்த ஸ்தலம் சொல்கிறது. ஆசரிப்புக் கூடாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான பொருட்களாகிய இளநீல நிற நூல் (இயேசுவின் ஞானஸ்நானம்), சிவப்பு நூல் (இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார்) மற்றும் இரத்தாம்பர நிறநூல் (இயேசுவே கர்த்தர்) இவை எல்லாம் நாம் வைத்துக் கொள்வதற்கு தவறாமல் இருக்கும் விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த மூன்றும் நம்முடைய விசுவாசம் முழுவதையும் பொறுப்பேற்கிறது. இயேசு தான் தேவகுமாரன் என்றும் கர்த்தர் முக்கியமானவர் என்றும் அவர் நம்மை மீட்டுள்ளார் என்பதையும் நாம் விசுவாசிக்கும் பொழுது கர்த்தர் குடியிருக்கும், தங்கத்தில் பிரகாசிக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் நுழைய முடியும். இந்த மூன்று நூல்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ள இயேசுவை எந்த அளவிற்கு தீவிரமாக விசுவாசித்தாலும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் நுழைய முடியாது. எல்லா கிறிஸ்தவர்களாலும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியாது.
தவறாக புரிந்துக் கொண்ட விசுவாசத்துடன் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் தங்கியிருப்பவர்கள்
தங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து இருந்தாலும், பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைய முடியாத பல கிறிஸ்தவர்கள் இன்று இருக்கிறார்கள். இதை வேறு விதமாக சொல்ல வேண்டும் என்றால், தங்களுடைய குருட்டு விசுவாசத்தினால் தங்களை மீட்டுக் கொள்ள முயற்சிக்கும் பலர் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்படலாம் என்றும் அவரே தான் கர்த்தராக இருக்கிறார் என்றும் அவர் தான் இராஜாதிராஜா என்றும் நினைப்பவர்களை தவிர யாரும் சரியான மக்கள் இல்லை. அவர்கள் இயேசுவை சாதாரணமாக விசுவாசிக்கிறார்கள். இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பது, சர்வாங்க தகன பலிபீடத்தின் முன் நின்று கொண்டு, "தேவனே இன்றும் ஒரு பாவியாக உள்ளேன். என்னை மன்னியும் தேவனே. என்னுடைய இடத்தில் இருந்து கொல்லப்பட்டு மரித்ததற்காக, நான் என்னுடைய எல்லா நன்றியையும் உமக்கு தருகிறேன், தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன்!" என்று குருட்டுத்தனமாக ஜெபிப்பது போன்றது.
இதை காலையில் செய்து முடித்த பிறகு அவர்கள் திரும்பவும் அவர்களுடைய வாழ்க்கைக்கு போகிறார்கள். பிறகு சாயங்காலத்தில் மறுபடியும் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு போய் அதே ஜெபத்தை செய்கிறார்கள். ஒவ்வொரு காலையும், மாலையும், மாதமும் பலிபீடத்திற்கு அடிக்கடி சென்று வரும் மக்களால் திரும்பவும் பிறக்க முடியாது. ஆனால் அவர்களுடைய சுய எண்ணத்தின்படியான தவறான விசுவாசத்தில் விழுந்துவிடுவார்கள்.
சிவப்பு ஜுவாலையுடன் பிரகாசிக்கும் சர்வாங்க தகன பலிபீடத்தின் மேலே அவர்கள் தியாகத்தின் காணிக்கையைப் போட்டு கூடவே அவர்களின் காணிக்கையை நெருப்பின் மூலம் தருகிறார்கள். அங்கு இருக்கும் நெருப்பில் எரியும் மாமிசத்தின் காரணமாக, அங்கு எரியும் மாமிசத்தின் வாசனைப் பரவுகிறது. மேலும் சர்வாங்க தகன பலிபீடமானது, நாம் கர்த்தரிடம், நம்முடைய பாவங்களை மறையச் செய்யவேண்டும் என்று அழுது கேட்கும் இடம் அல்ல, ஆனால் உண்மையில், நரகத்துடைய பயமூட்டும் நெருப்பை நமக்கு ஞாபகமூட்டும் இடமாக உள்ளது.
இருப்பினும் ஒவ்வொரு காலையும், மாலையும் மக்கள் இந்த இடத்திற்கு போய் "தேவனே நான் பாவம் செய்து விட்டேன், தயவு செய்து என் பாவங்களை மன்னியும்" என்று சொல்லுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே, தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது போல தங்களுக்கு திருப்தியடைந்துக் கொண்டு, பிறகு வீட்டிற்கு திரும்பி போகிறார்கள். "♫நான் மன்னிக்கப்பட்டு விட்டேன், ♪நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள், ♫நாமெல்லோரும் மன்னிக்கப்பட்டு விட்டோம்" என்று பாடும் அளவிற்கு கூட மிகவும் சந்தோஷமாய் இருப்பார்கள். ஆனால் இத்தகைய எண்ணங்கள் வெறும் ஒரு நாள் வாழக்கூடியதாகவே இருக்கிறது. சிறிது நேரத்தில் அவர்கள் மறுபடியும் பாவம் செய்கிறார்கள். மறுபடியும் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு முன் நின்றுக் கொண்டு, `தேவனே` நான் ஒரு பாவி என்று அறிக்கையிடுவதை தங்களுக்கு தாங்களே பார்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு தொடர்ந்து போய் வந்துக் கொன்டிருப்பவர்களை, இயேசுவின் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறார்கள் என்று கருத முடியாது, அவர்கள் இன்னமும் பாவிகளாகவே உள்ளார்கள். இப்படிப்பட்ட மக்கள், கர்த்தருடைய பரிசுத்த இராஜ்ஜியத்தினுள் எப்பொழுதுமே நுழைய முடியாது.
பின்பு, யார் பாவத்தின் மீட்பை முழுமையாக பெற்றுக் கொண்டு, கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியும்? கர்த்தரால் அமைக்கப்பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் இரகசியத்தை அறிந்து விசுவாசிப்பவர்களால் மட்டும் தான் இது முடியும். இதை விசுவாசிப்பவர்களால், அவர்களுடைய பாவத்தை தன் மீது செலுத்தியதை ஏற்றுக்கொண்ட இயேசுவின் மீதும் அவருடைய மரணத்தின் மீதும் உள்ள விசுவாசத்தின் மூலம் சர்வாங்க தகன பலிபீடத்தைக் கடக்க முடியும். வெண்கல பாத்திரத்தில் தங்களின் கால்களையும், கைகளையும் கழுவ முடியும். இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் அவர்களுடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது சென்று விட்டன என்று தங்களுக்குத் தாங்களே நினைவூட்டிக் கொள்ள முடியும். மேலும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும். யாரேனும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் விசுவாசமுடையவர்களாய் இருந்து, பாவத்தின் மீட்பை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களின் விசுவாசத்தின் மூலம் அவர்களால் பரலோக இராஜ்ஜியத்தினுள் நுழைய முடியும் ஏனென்றால் அவர்களுடைய விசுவாசம் கர்த்தரால் அங்கீகரிக்கப்படுகிறது.
இளநீல நிற நூலின் வேதாகம பொருள் இயேசுவின் ஞானஸ்நானம் என்பதை நீங்கள் விசுவாசித்து உணருவீர்கள் என்பதை நான் நம்புகிறேன். இன்றுப் பலர், இயேசுவை விசுவாசிப்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் சிலர் மட்டுமே நீரை (இளநீல நிற நூல்) இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறார்கள். இது மிகவும் ஆழ்ந்த வருத்தமான விஷயம். இயேசு இந்த உலகிற்கு கர்த்தராக முழுமையாக வராமல் இருந்து சிலுவையின் மீது மரித்திருந்த போதிலும், பல மக்கள் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து மிகவும் முக்கியமான ஞானஸ்நானத்தின் விசுவாசத்தை விட்டுவிடுகிறார்கள் என்பது ஆழ்ந்த துயரத்திற்கு காரணமாயிருக்கிறது. இன்னமும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் விசுவாசத்தை அறிந்து விசுவாசிப்பதன் மூலம் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் நுழைபவர்களாக மாறுவீர்கள் என்பதை நான் விசுவாசித்து ஜெபிக்கிறேன்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நீலம், இரத்தாம்பரம் மற்றும் சிவப்பு நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவனையும், நம்மை இரட்சித்த அதன் உண்மையான பொருளையும் விசுவாசிக்க வேண்டும்
என்னையும் உங்களையும் தேவன் காப்பாற்றியுள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தை நாம் பார்க்கும் பொழுது எவ்வளவு நேர்த்தியான முறையின் மூலம் தேவன் நம்மை மீட்டுள்ளார் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். இதற்காக அவருக்கு போதுமான அளவு நன்றி செலுத்த முடியாது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக தேவன் நம்மை மீட்டுள்ளார் என்பதற்கும், இந்த இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் விசுவாசத்தை நமக்கு அவர் கொடுத்துள்ளார் என்பதற்கும் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.
பாவிகள், கர்த்தருடைய கிருபையினால் மூடப்படாமலும் அவர்களுடைய பாவங்களுக்காக கர்த்தருடைய பயமுள்ள நியாயத்தீர்ப்பை கடந்து வராமலும், அவர்களால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எப்பொழுதுமே நுழைய முடியாது. அவனுடைய/அவளுடைய பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்படாதவர்களால் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாயிற்கதவை திறந்து பரிசுத்த ஸ்தலத்திற்குள் எப்படி நுழைய முடியும்? அவர்களால் முடியாது! இப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் பொழுது, முதலில் அடிக்கும் ஒளியிலேயே அவர்கள் குருடராக மாறும்படி சபிக்கப்படுவார்கள். "ஆஹா! இங்கு எவ்வளவு பிரகாசமாயிருக்கிறது ஒ, என்னால் ஏன் எதையும் பார்க்க முடியவில்லை. நான் வெளியில் இருக்கும் பொழுது, பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் பொழுதே ஸ்தலத்தில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் என்னால் பார்க்க முடியும் என்று நினைத்தேன். ஏன் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை? மேலும் ஏன் இங்கு கருமை முழுமையாக உள்ளது? பரிசுத்த ஸ்தலத்திற்குள் வெளியே இருக்கும் பொழுது என்னால் நன்றாக பார்க்க முடிந்தது. பரிசுத்த ஸ்தலம் பிரகாசமாக இருக்கும் என்று எனக்கு சொல்லப் பட்டிருந்தது, பின்பு ஏன் இங்கு இன்னமும் இருட்டாக உள்ளது?" அவர்களால் பார்க்கமுடியாது ஏனென்றால், அவர்கள் ஆவிக்குரிய குருடாகி விட்டார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் விசுவாசம் அவர்களிடத்தில் இல்லை. இதை போல, பாவிகளால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எப்பொழுதுமே நுழைய முடியாது.
பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் குருடாகாமல் அவ்விடத்திலிருந்து எப்பொழுதிற்குமான வாழ்வின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு நம்முடைய தேவன் நமக்கு உதவியுள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக, நம்முடையீ இரட்சிக்கப்படுதலின் முறையை கர்த்தர் நமக்கு சரியாக சொல்லியுள்ளார். மேலும் இந்த தீர்க்கதரிசன வார்த்தையின்படி அவர் உண்மையில் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கியுள்ளார்.
நம்முடைய தேவன், நீர், இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மை மீட்டுள்ளார். (1 யோவான் 5:4-8) இதனால் நாம் குருடாக மாற மாட்டோம். ஆனால் அவருடைய பிரகாசிக்கும் கிருபையில் எப்பொழுதும் வாழ்வோம் அவர் நம்மை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக நம்மை மீட்டுள்ளார். நம்முடைய தேவன் கர்த்தருடைய மறைமுகமான வார்த்தையினால் நமக்கு வாக்களித்து கூடவே இந்த வாக்கை நிறைவேற்றியதன் மூலம் அவர் நம்மை மீட்டுள்ளார் என்று நமக்கு கூறியிருக்கிறார்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள இயேசுவின் மறைவான வேலையின் மூலம் நீங்களும் நானும் இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம்! நாம் தற்செயலாகத்தான் இரட்சிக்கப்பட்டுள்ளோமா? இல்லை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றில் விசுவாசமில்லாமல் நம்மால் இரட்சிக்கப் படமுடியாது.
இளநீல நிற நூலை, இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமலேயே சர்வாங்க தகன பலிபீடத்தின் முன் நிற்பது சாத்தியம். சர்வாங்க தகன பலிபீடத்திற்கு அடுத்து அதுதான் இருக்கும். ஆனால் கர்த்தர் குடியிருக்கும் பரிசுத்த இடத்திற்குள் அவர்களால் நுழைய முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழுமையாக விசுவாசித்து, அதன் மூலம் பாவத்தின் மீட்பை பெற்றுக் கொண்ட கர்த்தருடைய பிள்ளைகளால் மட்டுமே ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கதவை திறந்து பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும். பாவத்துடன் இருக்கும் யாராக இருந்தாலும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியாது. நம்முடைய மீட்பை அடைவதற்கு நாம் எவ்வளவு தூரம் நுழைய வேண்டியுள்ளது? ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்திற்குள் நுழைந்த உடனே நாம் இரட்சிக்கப்படுவதில்லை, ஆனால் கர்த்தர் தங்கியிருக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்தவுடன் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.
ஆசரிப்புக் கூடாரத்திற்கு உள் இருக்கும் விசுவாசத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியில் இருக்கும் விசுவாசத்திற்கும் உள்ள வேறுபாடு
ஆசரிப்புக் கூடாரத்தின் வெளி பிரகாரத்தில் இருக்கும் சர்வாங்க தகன பலிபீடமும் வெண்கல பாத்திரமும் முழுவதும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. மேலும் வேலியானது மரக்கட்டை, வெள்ளி மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நாம் நுழையும் பொழுது அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் முழுவதும் வித்தியாசமாய் இருக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தினுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால், அது ஒரு பொன் வீடு. மூன்றுப் புற சுவர்களும், தங்கம் பூசப்பட்ட 48 அகேசியா பலகைகளால் கட்டப்பட்டுள்ளது. அப்பத்தின் மேஜையும், தூபவர்க்க பலிபீடமும் கூட தங்கம் பூசப்பட்ட அகேசியா மரத்தால் தான் செய்யப்பட்டுள்ளது. கூடவே விளக்குத்தண்டானது தங்கக் கட்டியை தட்டியதன் மூலம் செய்யப்பட்டது. இதைப் போல, பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கும் எல்லா பாத்திரங்களும் சுத்தமான தங்கத்தாலோ அல்லது சுத்தமான தங்கம் பூசப்பட்டோ செய்யப்பட்டிருந்தன.
இன்னொரு புறம், பலகைக்கு அடியில் இருக்கும் கூடுகள் எதனால் செய்யப்பட்டுள்ளன? அவை வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வேலியினுடைய தூண்களின் கூடுகள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும் வேளையில், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலகைக்கான கூடுகள் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. பிரகாரத்தினுடைய வேலியினுடைய தூண்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் வேளையில், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலகைகள் தங்கம் பூசப்பட்ட அகேசியா மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கதவுகளுடைய ஐந்து தூண்களின் கூடுகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலகைகளுடைய கூடுகள் வெள்ளியால் செய்யப்பட்டிருந்த பொழுதிலும் அவற்றினுடைய கதவினுடைய தூண்களுடைய கூடுகள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இது என்ன சொல்கிறது? கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் யார் வருகிறார்களோ, அவர்கள் அவனுடைய/அவளுடைய பாவத்திற்காக மரணத்திற்கு நியாயம் தீர்க்கப்படுவதை இது கூறுகிறது. நாம் நியாயம் தீர்க்கப்பட்டு மரணத்திற்குள் எறியப்பட்டால், பிறகு நாம் எப்படி கர்த்தருக்கு முன்பாக போக முடியும்? நாம் நாமாகவே மறித்தால், கர்த்தருக்கு முன்பாக நம்மால் போக முடியாது.
ஆசரிப்புக் கூடார வாசலின் ஐந்து தூண்களுடைய கூடுகளுக்கு பயன்படுத்தபட்டுள்ள வெண்கலத்தின் மூலமாக, நம்முடைய பாவங்களுக்காக நாம் நியாயம் தீர்க்கப்பட வேண்டியிருந்தாலும் அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசு அவர் மீது எடுத்துக்கொண்டார். மேலும் இந்த பாவங்களுக்காக நம்முடைய இடத்தில் இருந்து தண்டிக்கப்பட்டார் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய பாவங்களுக்காக நாம் தான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நம்முடைய இடத்தில் இருந்து நம்முடைய எல்லா பாவங்களுக்கான தண்டனையை யாரோ ஒருவர் ஏற்றுக் கொண்டார். நமக்கு பதிலாக யாரோ ஒருவர் நமக்காக மரித்தார். நம்முடைய இடத்தில் இருந்து, பிறருக்கு பதிலாக தண்டிக்கப்பட்டு இறந்தவர் இயேசு கிறிஸ்துவை தவிர வேறு யாரும் இல்லை.
நீல நிற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விசுவாசமானது இயேசு கிறிஸ்து அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக்கொண்டார் என்பதின் மற்றும் நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து விட்டார் என்பதின் விசுவாசமாயிருக்கிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் அவரிடம் செலுத்தப்பட்ட நம்முடைய எல்லாப் பாவங்களின் தண்டனையாக இயேசு கிறிஸ்துவின் உயிரை கர்த்தர் எல்லாப் பாவங்களுக்குமாக தீர்த்தப்படியாலும், நம்முடைய பாவங்களுக்கான எந்த தண்டனையையும் நாம் சந்திப்பதில்லை. இரத்தாம்பர நிற நூலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விசுவாசமானது, இயேசு சிலுவையின் மீது சிந்திய இரத்தத்தில் இருக்கும் விசுவாசமாயிருக்கிறது. நாம் நம்முடைய பாவங்களுக்காய் சந்திக்க வேண்டியிருந்த தண்டனையை இயேசு கிறிஸ்து பிறருக்காய் ஏற்றுக் கொண்டார் என்பதை இந்த விசுவாசம் விசுவாசிக்கிறது.
இயேசுவினுடைய ஞானஸ்நானத்தில் விசுவாசமுடையவர்களாய் இருந்து அவர் மீது தங்களுடைய எல்லாப் பாவங்களையும் செலுத்தியவர்களாலும், இந்த எல்லாப் பாவங்களின் காரணமாக இயேசு தன்னுடைய சரீர மரணத்துடன் சிலுவையின் மீது சிந்திய இரத்தத்தில் விசுவாசமுடையவர்களாய் இருந்து, தங்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டவர்களால் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும். இதன் காரணமாக தான் ஆசரிப்புக் கூடார வாசலின் கூடுகள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இதைப் போல ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொண்டு நம்முடைய இடத்திலிருந்து தண்டிக்கப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் விசுவாசிக்க வேண்டும்.
தங்களை மீட்டுக் கொண்ட இயேசு கிறிஸ்துவே கர்த்தர் (இரத்தாம்பர நிறம்), இயேசுவின் ஞானஸ்நானம் (இளநீல நிற நூல்) மற்றும் இயேசு மற்றவர்களுக்காக அவர்களுடைய இடத்தில் இருந்து அவர்களின் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார் (சிகப்பு நூல்) என்ற உண்மைகளை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும் என்று கர்த்தர் தீர்மானித்துள்ளார். இயேசுவை விசுவாசிப்பதின் மூலம் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காக ஒரு முறை நியாயம் தீர்க்கப்பட்டவர்களையும், தங்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இயேசு மீட்டுக் கொண்டார் என்பதை விசுவாசிப்பவர்களையும் மட்டும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய கர்த்தர் அனுமதித்துள்ளார்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கதவினுடைய கூடுகள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆதாமுடைய சந்ததியினராய் பிறந்த பாவிகள் யாராக இருந்தாலும் இளநீல நிற நூல் (இயேசுவின் ஞானஸ்நானம்), சிகப்பு நிற நூல் (பாவிகளுடைய இடத்தில் இருந்து, மற்றவர்களுக்காக நியாயம் தீர்க்கப்பட்ட இயேசு) மற்றும் இரத்தாம்பர நிற நூல் (இயேசு தான் கர்த்தர்) ஆகியவற்றில் விசுவாசமுள்ளவர்களை அவர் தங்குமிடமாகிய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய கர்த்தர் அனுமதிக்கிறார். இந்த வார்த்தையையே வெண்கல கூடு கொண்டுள்ளது. கதவின் தூண்களினுடைய ஐந்து கூடுகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருப்பது கர்த்தருடைய நற்செய்தியை நமக்குச் சொல்கிறது. ரோமர் 6:23 இல் "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்" என்று எழுதியிருப்பதைப் போல நீர் இரத்தம் மற்றும் ஆவியினால் இயேசு நம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து விட்டார் என்று இது நமக்குச் சொல்கிறது.
கர்த்தரையும் வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டுமே தவிர அதை அலட்சியப்படுத்தக்கூடாது
இயேசுவை நீங்கள் விசுவாசிப்பது அல்லது நீங்கள் ஆலயத்திற்கு செல்வதுநிபந்தனையில்லாமல் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று பொருளாகாது. நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே கர்த்தருடைய இராஜ்ஜியத்தை பார்க்கவும் நுழையவும் முடியும் என்று யோவான் 3-இல் நம்முடைய தேவன் சொல்கிறார். நீ யூதர்களின் போதகராக இருந்தும் கூட இன்னமும் உனக்கு மறுபடியும் எப்படி பிறப்பது என்பது தெரியவில்லை என்று யூதர்களின் தலைவனும் கர்த்தருடைய உண்மையான விசுவாசியுமான நிக்கோதேமுவிடம் முடிவாக சொல்கிறார். ஒருவர் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த பிறகு தான் அவளோ/அவனோ கர்த்தருடைய இராஜ்ஜியத்தை பார்க்கவும் நுழையவும் முடியும். நீல நிற நூல் (இயேசு ஞானஸ்நானம் பெற்றபொழுது, அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரே தரமாக தன் மீது எடுத்துக் கொண்டார்), சிவப்பு நிற நூல் (இயேசுவே மீட்பர், கர்த்தர் மற்றும் தேவ குமாரன்) ஆகியவற்றில் விசுவாசமுள்ளவர்களால் இருக்கும் இயேசுவை விசுவாசிக்கும் மக்களால் தான் மறுபடியும் பிறக்க முடியும். இதைப் போலவே, ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக வந்த இயேசு கிறிஸ்துவே பாவிகளின் மீட்பர் என்று எல்லாப் பாவிகளும் விசுவாசிக்க வேண்டும்.
பல மக்கள் இந்த உண்மையை விசுவாசிக்காமல் இயேசுவை மட்டும் விசுவாசிக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் மறுபடியும் பிறக்கவும் முடிவதில்லை அல்லது மறுபடியும் பிறப்பது என்ற வார்த்தையைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் அவர்களால் முடிவதில்லை. நாம் இயேசுவை விசுவாசிக்கிறோம் என்று ஒப்புக்கொண்டாலும் கூட, நாம் மறுபடியும் பிறக்கவில்லை என்றால் நம்மால் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேயோ பிதாவின் இராஜ்ஜியத்திற்குள்ளேயோ நுழைய முடியாது என்றும், சரியான விசுவாச வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்றும் தேவன் நமக்கு தெளிவாக சொல்லியுள்ளார்.
நம்முடைய மனிதன் உண்டாக்கும் எண்ணங்களில், கிறிஸ்தவர்கள் எப்படி விசுவாசித்தாலும் மறுபடியும் பிறப்பதற்கான அங்கீகாரத்தை அவர்களுக்கு அளிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாம் ஆச்சரியப்படலாம். அது அப்படித்தானோ? இயேசுவின் நாமத்தைக் கூப்பிடுவதன் மூலமாகவும், மனித குலத்தை மீட்பதற்காக அவர் என்ன செய்தார் என்ற விவரங்களைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் அவரிடம் இருக்கும் விசுவாசத்தை வெறும் வார்த்தைகளில் தெரிவிப்பதன் மூலம் மட்டும் நாம் இரட்சிக்கப்பட்டு விடுவோம் என்றால், இயேசுவை விசுவாசிப்பது மக்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். நாம் எப்பொழுதாவது புதிய கிறிஸ்தவர்களை சந்திக்கும் பொழுது, "♫நான் மன்னிக்கப்பட்டுவிட்டேன், ♪நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள், ♫நாமெல்லாரும் மன்னிக்கப்பட்டுவிட்டோம்," என்று பாடிக்கொண்டே அவருக்கு நன்றி கூறலாம். "பல விசுவாசிகள் இருக்கின்ற காரணத்தால், சாட்சியாய் இருப்பதில் என்ன தான் பயன்? செயல்கள் நன்றாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கின்றன. இது அற்புதமாக இருக்கிறது அல்லவா?" உண்மையில் இந்த நிலை இருந்தால், தேவனுடைய நாமத்தை யார் அழைக்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்படலாம் என்ற காரணத்தால், மக்கள் இரட்சிக்கப்படுதலை மிகவும் சுலபமாக நினைப்பார்கள் மேலும் அவர்கள் விருப்பப்படி எப்படிபட்ட வாழ்க்கையை வாழ்ந்தாலும், இரட்சிப்பு அவர்களுக்கு வந்து விடும். ஆனால் இப்படிப்பட்ட குருட்டு விசுவாசத்துடன், நாம் மறுபடியும் பிறக்க முடியாது என்று கர்த்தர் நமக்கு சொல்லியிருக்கிறார். இதற்கு முரண்பாடாக யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தெரிந்துக் கொள்ளாமல் இரட்சிக்கப் பட்டுவிட்டோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் சத்தியமின்மையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தர் நமக்கு சொல்கிறார்.
மறுபடியும் பிறப்பது உங்களுடைய ஆவியே, சரீரம் அல்ல
இயேசு மனிதனாக மாறி, இந்த பூமிக்கு வந்து, கூடவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மை மீட்டுக்கொண்டார். இயேசுவின், மாம்சமான தந்தையாய் இருந்த யோசேப்பு ஒரு தச்சன் (மத்தேயு 13:55), இயேசு அவருடைய வாழ்க்கையின் முதல் 29 வருடங்களை ஒரு தச்சனாக வேலை செய்து, தச்சு வேலைச் செய்யக்கூடிய தன் தகப்பனுக்கு கீழ் இருந்த குடும்பத்திற்குச் சேவைச் செய்தார். ஆனால் அவருக்கு 30 வயது ஆகும் பொழுது, அவர் தன்னுடைய பரிசுத்த வேலையைத் தொடங்க வேண்டியிருந்தது, அதாவது மக்களுக்கான ஊழியத்தை அவர் தொடங்க வேண்டியிருந்தது.
இயேசுவிடத்தில் மனித மற்றும் தெய்வீக குணங்கள் இரண்டும் இருந்ததைப் போல, மீண்டுமாக பிறப்பிக்கப்பட்ட நீதிமான்களாகிய நம்மிடத்திலும் இரண்டு வித்தியாசமான குணங்கள் உண்டு. நம்மிடம் ஆவி மற்றும் மாம்சம் இரண்டுமே இருக்கிறது. ஆனால் அவனுடைய/அவளுடைய ஆவி மறுபடியும் பிறக்காமல் இருந்து இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று ஒருவர் சொல்லும் பொழுது, இந்த நபர் மறுபடியும் பிறக்கவில்லை என்று தான் அர்த்தம், அதாவது அவனிடத்திலே மறுபடியும் பிறந்த ஆவி இல்லை. அவனுடைய/அவளுடைய ஆவியில் மறுபடியும் பிறக்காமல் இருந்து, ஒருவர் இயேசுவை விசுவாசிக்க முயற்சி செய்தால், நிக்கோதேமுவைப் போல மாம்சத்தில் மறுபடியும் பிறக்க முயற்சி செய்யும் யாரோ ஒருவரைப் போல தான் இந்த நபர் இருக்கிறார், மேலும் எப்பொழுதும் அவர் மறுபடியும் பிறந்தவராய் இல்லை. தன்னுடைய சாரம்சத்தில் இயேசு கர்த்தராக இருந்தபோதிலும், அவர் பலவீனங்கள் நிறைந்த மனிதனுடைய மாம்சத்திலும் இருந்தார். இதைப் போல மறுபடியும் பிறந்து விட்டோம் என்று நாம் சொல்லும் பொழுது, நம்முடைய மாமிசம் அல்ல, நம்முடைய ஆவி தான் மறுபடியும் பிறந்து விட்டது என்று அர்த்தம்.
இயேசுவை விசுவாசிப்பதாக தெரிவிக்கும் எல்லோரும் எப்படியாவது மறுபடியும் பிறந்திருந்தால், நான் ஒரு சிறந்த போதகர் என்று தெரிந்துக் கொள்ளப்படுவதற்கு முயற்சி செய்திருப்பேன். ஏன்? ஏனென்றால் சத்தியத்தில் விசுவாசமில்லாதவர்களால் நான் இந்த அளவிற்கு கோபமடைந்திருக்க மாட்டேன், மேலும் அவர்கள் சத்தியத்தை தெரிய வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய போதனையில் இவ்வளவு மழுங்கி இருந்திருக்க மாட்டேன். நான் ஒரு நல்லொழுக்கம், புத்தியுள்ள, தயவுள்ள, மென்மையான மற்றும் வேடிக்கையான போதகராக அறியப்பட்டிருப்பேன், மேலும் மக்கள் தங்களின் மாம்சத்தில் எப்படி பரிசுத்தமாக முடியும் என்பதை விளக்கும் போதகராகவும் நான் இருந்திருக்கலாம். ஆமாம், அப்படி இருக்கும் படி என்னுடைய உருவத்தை நான் அழகுப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதை நான் ஒரு போதும் செய்வதில்லை. இந்த பரிசுத்தவான் உண்மையில் இயேசுவின் பரிசுத்தமான மற்றும் இரக்கமுடைய உருவத்தை எடுத்துக் கொள்கிறார் என்ற எண்ணத்தை உங்கள் மனங்களில் ஏற்படுத்தும் திறமை என்னிடம் இல்லை என்ற காரணத்தால் அல்ல, இதற்கு காரணம் மனிதனுடைய மாம்சம் மாற முடியாது என்பதாலும் மாம்சமாக சற்று அன்பாய், தயவாய், இரக்கமாய் இருப்பது, இந்த மனிதன் நீதிமானாய் மறுபடியும் பிறந்துவிட்டான் என்பதில்லை என்பதற்காகவும் தான். யாருமே மாம்சத்தில் மறுபடியும் பிறக்க முடியாது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதன் மூலம் மறுபடியும் பிறக்க வேண்டியது, மனிதனின் மற்றுமொரு பொருளான ஆவியே ஆகும்.
நீங்கள் இயேசுவை விசுவாசிக்கும் பொழுது சத்தியத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:32). கர்த்தருடைய சத்தியம் மட்டுமே நம்மை மறுபடியும் பிறக்கச் செய்வதுடன், பாவக் கட்டுகளில் இருந்து நம்முடைய ஆத்துமாவை விடுவித்து, நீதிமான்களாக நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிறது. வேதாகமத்தை நாம் சரியாக தெரிந்துக் கொண்டு விசுவாசிப்பதுடன் கூடவே போதிக்கும் பொழுது தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து, நம்முடைய உண்மையான விசுவாச வாழ்க்கையை வாழ்ந்து, மகா பரிசுத்த ஸ்தலத்தின் கிருபாசனத்திற்கு போக முடியும். நம்முடைய ஆத்துமாவை மறுபடியும் பிறக்கச் செய்யும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தான் சத்தியம், கூடவே இதில் நமக்கு இருக்கும் விசுவாசமானது நம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து, விசுவாசத்தின் இராஜ்ஜியத்தில் கர்த்தருடன் வாழுவதற்கு நம்மை அனுமதிக்கிறது. நம்முடைய இருதயங்களில் இருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆவிக்குரிய மற்றும் பிரகாசிக்கும் இராஜ்ஜியத்தில் இருக்கும் கர்த்தருடைய மறுபடியும் பிறந்த குழந்தைகளாக, தேவனுடன் மகிழ்ச்சியோடு வாழச் செய்கிறது.
இயேசுவை குருட்டுத்தனமாக விசுவாசிப்பது சரியான விசுவாசம் அல்ல. மனித கோணத்தில் இருந்து பார்க்கும் போது என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன. இதை என் உதடுகளால் மட்டும் சொல்வதில்லை, ஆனால் எப்பொழுதாவது நான் ஏதாவது செய்யும் பொழுது, என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்பதை உணர ஆரம்பிக்கிறேன். உதாரணமாக, ஒரு வேதாகம முகாமில் கலந்து கொள்ளும் பரிசுத்தவான்களும் புதிய கிறிஸ்தவர்களும் செளகரிகமாக வார்த்தையை கேட்பார்கள் என்பதற்காகவும், கர்த்தருடைய கிருபையினால் அவர்களுடைய இருதயங்களில் ஊக்கமடைவார்கள் என்பதற்காகவும் மறுபடியும் பிறந்ததற்கான ஆசீர்வாதத்தை பெறுவார்கள் என்பதற்காகவும், தங்களுடைய சரீரம் மற்றும் இருதயங்கள் ஆகிய இரண்டிலும் இளைப்பாறிய பின் திரும்புவார்கள் என்பதற்காகவும் ஒரு முறை நான் வேதாகம் முகாமிற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பே நினைத்து, செயல்படுத்தியிருக்க வேண்டிய பல காரியங்களில் நான் தவறியதைக் கண்டு பிடித்தேன். சிறிது கவணமாயிருப்பதின் மூலம் எளிதாக கவனிக்கப்பட்டிருக்க கூடிய காரியங்கள், தயாராகும் நேரம் முடிந்த பிறகும், முகாம் தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பும் தான் தோன்றும். இந்த காரியங்களைப் பற்றி ஏன் முன்பே யோசிக்கவில்லை என்றும் ஏன் அவைகளை முன் கூட்டியே தயாரிக்கவில்லை என்றும் எனக்கு நானே வியப்பு அடைந்து கொள்கிறேன். ஒரு வேளை, வேதாகம முகாமிற்கான என்னுடைய திட்டத்தில் நான் சற்று அதிக கவனத்துடன் அக்கரையுடனும் இருந்திருந்தால், பரிசுத்தவான்களும் புதிய ஆத்துமாக்களும், நன்றாக கேட்டிருப்பார்கள், இரட்சிக்கப்பட்டிருப்பார்கள், மேலும் நன்மையான நேரத்தை செலவு செய்திருப்பார்கள். நான் ஒரு நாள் முழுக்க வேலை செய்தாலும், என்னிடத்தில் சாமர்த்தியமின்மை காரணமாக என்னுடைய முயற்சிகளுக்கு கிடைக்கும் முடிவுகள் ஒத்துப்போகாத பல தருணங்கள் உண்டு. என்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்ற உண்மையைப் பற்றி எனக்கு நானே நன்றாக தெரிந்து வைத்துள்ளேன்.
"நான் ஏன் இதைச் செய்ய முடியாது? இதைப் பற்றி ஏன் நினைக்கவில்லை? நான் செய்ய வேண்டியது எல்லாம், சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது தான், இருந்தாலும் ஏன் இதை என்னால் செய்ய முடிவதில்லை?" நான் உண்மையில் நற்செய்திக்கு ஊழியம் செய்யும் பொழுது, என்னுடைய குறைகளை அடிக்கடி உணருகிறேன். இதனால் "இது தான் நான். இப்படி தான் நான் முழுமையாகமல் இருக்கிறேன்," என்று என்னை நானே அடையாளங் கண்டு ஒப்புக் கொள்கிறேன். இதை என் உதட்டினால் மட்டும் சொல்லவில்லை, கூடவே, அடக்கமுள்ளவனாய் நடிக்க முயற்சி செய்வதுமில்லை. ஆனால் உண்மையில், ஒரு சிறிய பிரச்சனைக்கு கூட ஒழுங்கான தீர்வு காண முடியாமல் மனம் போனப் போக்கில் போகும் ஒருவனாகவே உள்ளேன். என்னுடைய பல குறைகளை, என்னைப் பார்த்தே உணர்ந்துக்கொள்கிறேன்.
இளநீல நிற நூலின் மூலமாக நாம் பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்கிறோம்
மக்கள் அவர்களைப் பற்றி தாங்களே நினைக்கும் பொழுது, தவறுகள் எதுவும் இல்லாமல், எல்லா காரியங்களையும் நன்றாக செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, அவர்களுடைய உண்மையான திறமையும் குறைபாடுகளும் தெளிவாக வெளிப்படுகிறது. தாம் உண்மையில் குறைபாடுடையவர்கள் என்பதையும், பாவஞ் செய்வதைத் தவிர்க்க முடியாமல் தவறுகளைச் செய்வதையும் அவர்கள் அறிந்துகொள்வர். மேலும் தாங்கள் நன்றாக செயல்படுகிறோம். என்று மக்கள் நினைக்கும் போது தங்களுடைய விசுவாசம் எவ்வளவு நன்றாய் இருக்கிறது எனவும் இதனால் தாங்கள் கர்த்தருடைய இராஜ்ஜியத்துக்கு போகப் போகிறோம் எனவும் நினைத்துக் கொண்டு தங்களைத் தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
ஆனால் சரீரம் எப்பொழுதும் மாறுவதில்லை. குறையில்லாமல் எந்த சரீரமும் இல்லை, அது எப்பொழுதுமே தவறு செய்து அதனுடைய குறையை வெளிப்படுத்துகிறது. ஏதாவது ஒரு வகையில், உங்கள் சரீரம் சில நன்மைகள் செய்த காரணத்திற்காக நம்முடைய தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு போக முடியும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் சரீரம் எவ்வளவு நல்லது செய்திருந்தாலும் சரி, அது கர்த்தருக்கு முன் உபயோகமற்றது என்பதை நீங்கள் உணரவேண்டும், சத்தியத்தின் வார்த்தையில் உள்ள விசுவாசம் மட்டுமே நாம் தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு போவதற்கு உதவி செய்யும். தேவன் நம்மை மீட்டுக்கொண்டுள்ள நீல நிற, சாம்பல் நிற மற்றும் சிவப்பு நிற நூல் தான் சத்தியத்தின் வார்த்தையாக உள்ளது. நம்முடைய தேவன், நீல நிற, சாம்பல் நிற, சிவப்பு நிற நூல்களின் மூலமாக மீட்டுக்கொண்ட காரணத்தால் இதை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நம்மால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும்.
நீல நிற, சாம்பல் நிற மற்றும் சிவப்பு நிற நூல்கள் மூலமாக நம்மை கர்த்தர் டூரட்சிக்கப்வில்லை என்றால், நாமெல்லாரும் எப்பொழுதுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியாது. நம்முடைய விசுவாசம் எவ்வளவு உறுதியாய் இருந்தாலும், நம்மால் அதற்குள் நுழைய முடியாது. ஏன்? ஏனென்றால் இது தான் நிலையாக இருந்தால், ஸ்தலத்திற்குள் நாம் நுழைய வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் நம்முடைய சரீரத்தினுடைய விசுவாசம் நன்றாக் இருக்க வேண்டும் என்று இது பொருள் கொள்ளும். ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசம் நன்றாக இருந்தால் தான் நம்மால் கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைய முடியும் என்றால் இதைப் போன்ற பலவீனமான சரீரம் கொண்ட நம்மால் எப்படி, எப்பொழுதுமே ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தை நல்லதாக்கிக் கொண்டு, ஸ்தலத்திற்குள் நுழைய முடியும். பாவத்திற்கான மீட்பை நமக்கு நாமே பெற்றுக் கொள்ள எந்த வழியும் இல்லாத பொழுதும், ஒவ்வொரு நாளும் எப்பொழுதெல்லாம் நாம் பாவம் செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் திரும்பி பார்க்க நம்மிடம் விசுவாசம் இல்லாமல் இருக்கும் பொழுது கடவுளுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்காக எப்பொழுதும், நம்முடைய விசுவாசத்தை நல்லதாக்கிக் கொள்ள நம்மால் எப்படி முடியும்? இதைத் தொடங்குவதற்காக நம்முடைய சரீரங்கள் எப்பொழுதுமே பாவம் செய்யாத பரிசுத்த சரீரங்களாக இருக்க வேண்டும் அல்லது நம்முடைய உபவாசத்தையும் மனந்திருப்புதலின் ஜெபங்களையும் ஒவ்வொரு நாளும் ஏறெடுக்கவேண்டும். ஆனால் யாருடைய சரீரம் எப்பொழுதுமே பரிசுத்தமாய் இருக்கிறது மேலும் இதை யார் எப்பொழுதுமே செய்ய முடியும்?
கர்த்தர் நம்மை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றின் மூலம் இரட்சிக்கவில்லை என்றால் நம் யாராலும் பரலோக இராஜ்ஜியத்திற்குள் நுழைய முடிந்திருக்காது. நம்முடைய விசுவாசம் ஒரு சமயத்தில் நன்றாக இருக்கிறது ஆனால் அடுத்த சமயத்தில் அது மறைந்து விடுகிறது, இப்படித்தான் நாம் இருக்கிறோம். மறுபடியும் திரும்ப திரும்ப மறைவதற்காகத்தான் நம்முடைய விசுவாசம் இருக்கிறதா என்று குழுப்பமடைந்து விடுகிறோம். மேலும் முன்பு நமக்கு இருந்த விசுவாசத்தையும் நாம் தொலைத்து விடுகிறோம். இயேசுவை முதலில் விசுவாசித்த பிறகும் கூட உடனடியாக அதிக பாவம் நிறைந்தவர்களாய் நாம் மாறிவிடுகிறோம். ஆனால் இயேசு இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள அவருடைய மீட்பின் திட்டத்தின் படியாக, திறமையில்லாத பாவிகளாகிய நம்மை சரியாக மீட்டுள்ளார். நம்முடைய பாவங்களுக்கான மீட்பை அவர் நமக்கு கொடுத்துள்ளார்.
நமக்கு இந்த சாட்சி இருக்கும் பொழுதுதான, தலைமை ஆசாரியர்களைப் போல நம்முடைய தலைப்பாகையில் `கர்த்தருக்கே பரிசுத்தம்` என்ற தங்கதட்டை வைத்துக்கொள்ள முடியும் (யாத்திராகமம் 28:36-38). பின்பு நாம் நம்முடைய ஆசாரியத்துவத்தை வெளியில் கொண்டு வரலாம். இயேசுவுடைய ஆசாரியர்களாக இருந்து அவருக்கு ஊழியம் செய்யும் பொழுது மக்களிடத்தில் தங்களின் "கர்த்தருக்கே பரிசுத்தத்தை" சோதித்துக் கொள்ள முடிந்தவர்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக பாவத்தின் மீட்பை பெற்றுக் கொண்டதற்கான சாட்சியை தங்கள் இருதயங்களில் உடையவர்களாக இருக்கிறார்கள்.
தலைமை ஆசாரியனுடைய தலைபாகையில் ஒரு தங்கத் தட்டு இணைக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த தங்க தட்டை தலைபாகையுடன் கட்டியது ஒரு இளநீல நிற நூல் இழையாக இருந்தது. தலைப்பாகை இந்த இளநீல நிற நூல் இழையால் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னாரா? நம்மை மீட்ப்பதற்காக நம்முடைய தேவனுக்கு தேவைப்பட்டது இளநீல நிற நூலாகும், மேலும் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொள்வதற்காக இயேசு பெற்றுக்கொண்ட ஞானஸ்நானத்தை இந்த இளநீல நிற நூல் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டின் கைகளை கிடத்துவது போன்று புதிய ஏற்பாட்டில், தேவன், அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக்கொன்டதின் மூலம் அவற்றை துடைக்காமல் இருந்திருந்தால், நாம் இயேசுவை எவ்வளவு விசுவாசித்தாலும், யெகோவாவிடமிருந்து பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இதனால் தான் தங்கத்தட்டு, இளநீல நிற நூலால் தலைப்பாகையில் கட்டப்பட்டிருந்தது. மேலும், "கர்த்தருக்கே பரிசுத்தம்" என்று பதிக்கப்பட்டிருக்கும் தங்கத்தட்டுடன் இருக்கும் தலைமை ஆசாரியனை எல்லோரும் பார்க்கும் பொழுது அவர்களுடைய பாவங்களுக்கான மீட்பைப் பெற்றுக் கொள்வதன் மூலம் கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பதை அவனோ/அவளோ தனக்குள்ளேயே ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
நாம் எப்படி நீதிமான்களானோம் என்பதை நாமும் ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும். நாம் எப்படிநீதிமான்கள் ஆனோம்? மத்தேயு 3:15 யை வாசிப்போம் "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்." இயேசு ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம்மெல்லோரையும் நம்முடைய பாவங்களில் இருந்து மீட்டுள்ளார். இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை அவர் மீது ஏற்றுக்கொண்டார். இதனால் யாரெல்லாம் இதை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாவமற்றவர்கள் ஆவர். இயேசு ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால் நாம் பாவமற்றவர்கள் என்று எப்படி நம்மால் தைரியமாக சொல்ல முடியும்? சிலுவையின் மீதான இயேசுவின் மரணத்தில், உங்கள் கண்களில் உண்மையான கண்ணீருடன், உங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவது மூலமாக மட்டும்தான் நீங்கள் பாவத்தின் மீட்பை பெற்றுக் கொண்டீர்களா? இயேசுவுடன் எந்த உறவும் இல்லை என்பதால் அவருடைய மரணத்தில் துயரமடைவதற்கு கஷ்டப்படும் பல மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய தாத்தா, பாட்டியுடைய மரணத்தையோ அவர்கள் நோய் வாய்ப்பட்ட பொழுது அவர்கள் பட்ட கஷ்டத்தையோ அல்லது அவர்களுடைய கடந்த காலத்தின் கடினமான கஷ்டங்களையோ அல்லது துயரங்களையோ நினைப்பதின் மூலம் அவர்களுடைய கண்ணீரைச் சிந்துகின்றனர். நீங்கள் அதைப் போல நடிக்க முயற்சி செய்கிறீர்களோ அல்லது உண்மையாகவே இயேசுவின் மரணத்தில் கவலைப்படுகிறீர்களோ, அது பொருட்டல்ல, இந்த வழியில் உங்கள் பாவங்களை எப்பொழுதுமே அழிக்க முடியாது.
"கர்த்தருக்கே பரிசுத்தம்" என்ற பதிப்புடன் இருக்கும் தங்க தட்டானது, இளநீல நிற நூல் இழையின் மூலம் தலைமை ஆசாரியனின் தலைபாகிற்கு கட்டப்பட்டது தான், நம்முடைய பாவங்களை அகற்றி, நம்மை பரிசுத்தமாக்குகிற இயேசுவின் ஞானஸ்நானமாயிருக்கிறது. யெகோவா நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியதாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது செலுத்தப்பட்டதாலும், இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டதாலும், நம்முடைய இருதயங்கள் எவ்வளவு சூனியமான உணர்ச்சியுடன் இருந்தாலும் சரி, நம்முடைய செயல்களில் நாம் எவ்வளவு திறமையில்லாதவர்களாய் இருந்தாலும் சரி, நாம் நீதிமான்களாகி உள்ளோம். மேலும் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள இளநீல நிற நூலின் வார்த்தையின் மூலம் சரியாக இரட்சிக்கப்பட்டுள்ளோம். நாம் நம்முடைய சரீரத்தை பார்க்கும் பொழுது அதன்மூலம் பெருமைப் பாராட்டமுடியாது. ஆனால் நம்முடைய இருதயங்களில் உள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றில் உள்ள விசுவாசித்தின் காரணமாக அதாவது இயேசு நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஞானஸ்நானத்தின் மூலமாக தன் மீது ஏற்றுக்கொண்டு, நம்முடைய தண்டனைகளை சிலுவையின் மீது ஏற்றுக் கொண்டார் என்பதைச் சொல்லும் சரியான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால், நாம் தைரியமாகவும் பயமில்லாமலும் நற்செய்தியைப் பற்றி பேசலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி நம்மிடம் இருப்பதால் தான் நம்முடைய விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக வாழ முடியும், மேலும் இந்த நீதியான விசுவாசத்தை மக்களுக்கு போதிக்க முடியும்.
தேவனுடைய கிருபைக்காக நாம் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது. நம்முடைய மீட்பு தானாகவே வந்து விடாத காரணத்தால், நாம் இதற்கு இன்னமும் நன்றியுள்ளவர்களாய் உள்ளோம். நாம் பெற்றுக் கொண்ட மீட்பானது, அவனுக்கோ/அவளுக்கோ சரியான விசுவாசம் இல்லாமல் இருந்தும், யாராலும் பெற்றுக்கொள்ளக் கூடிய அற்பமான ஒன்றாக இல்லை. தேவனே, தேவனே என்று ஒருவனுடைய சொந்த விருப்பபடி தேவனைக் கூப்பிடுவது போல எல்லோரும் செய்தால் நாம் இரட்சிக்கப்பட்டுவிடுவோம் என்று பொருள் அல்ல. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் மறைந்துவிட்டன என்பதற்கான மற்றும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் தேவன் நம்மை நேர்த்தியாக மீட்டுள்ளார் என்பதற்கான சாட்சி நம்முடைய இருதயங்களில் இருப்பதால், இந்த சிறப்பான மீட்பிற்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் உள்ளோம்.
தேவக் குமாரனான இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லோரும் அவனுடைய/அவளுடைய இருதயத்தில் சாட்சியத்தை வைத்திருக்கிறார்கள் என்று வேதாகமம் சொல்கிறது (1 யோவான் 5:10). நம்முடைய இருதயங்களில் சாட்சியில்லை என்றால், நாம் கர்த்தரை பொய் பேசுபவராக மாற்றிக் கொண்டிருப்போம். மேலும் இதனால் நாமெல்லோரும் நம்முடைய இருதயங்களில் முடிவான சாட்சியத்தை வைத்திருக்க வேண்டும். நீங்கள் இரட்சிக்கப்பட்டதற்கான சாட்சியை எனக்கு காண்பியுங்கள் என்று சில மக்கள் உங்களிடம் சவால் விட்டு கேட்டால், இதற்காக பின் வாங்க வேண்டும் என்பதற்கு எக்காரணமும் இல்லை. "மக்கள் பாவத்திற்கான மீட்பைப் பெற்றுக் கொள்ளும் பொழுது, பரிசுத்த ஆவியை அவர்கள் பரிசாக பெறுவார்கள், மேலும் இரட்சிக்கப்படுதலுக்கான தெளிவான சாட்சி அங்கு உள்ளது, சாட்சியை எனக்கு காண்பியுங்கள் என்று அவர்கள் கேட்பார்கள்." "நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி எனக்குள் இருக்கிறது. இதன் மூலம் தான் இயேசு என்னை முழுமையாக மீட்டுக் கொண்டார். நான் அவரால் சரியாக இரட்சிக்கப்பட்டுள்ள காரணத்தால், என்னிடம் பாவம் இல்லை" என்று நீங்கள் சாட்சியை தைரியமாக காண்பிக்கலாம்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டதற்கான சாட்சி உங்கள் இருதயங்களில் இல்லை என்றால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்று அர்த்தம். எவ்வளவு ஆர்வத்துடன் மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும் சரி, இது இதற்குள்ளேயே அவர்களின் இரட்சிக்கப்படுதலுக்கு வழி வகுப்பது இல்லை. இது ஒரு திரும்பிக்கொடுக்கப்படாத அன்பாய் மட்டுமே இருக்கிறது, மற்ற நபர் எப்படி நினைக்கலாம் என்பதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத அன்பாக இது இருக்கிறது. நம்மால் நேசிக்கப்படமுடியாத ஒருவருக்கு குழப்பமான இருதயம் இருந்து, நம்மிடம் இருந்து அவர் எதிர்பார்த்து, அன்பை நினைத்து அவர்கள் நேசிக்கப்படுவதற்காக அவளோ/அவனோ ஏக்கத்துடன் நம்மை பார்த்தால், பதிலுக்கு இந்த நபரை நாம் நேசிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இதைப் போல், தங்களுடைய இருதயங்கள் கர்த்தருக்காக வாஞ்சையாய் இருக்கிறது என்பதற்காக தங்களின் பாவங்களுக்கான மீட்பைப் பெற்றுக் கொள்ளாதவர்களை கர்த்தர் தம்முடைய கரங்களுக்குள் அணைத்துக் கொள்வதில்லை. இதைத் தவிர தேவையில்லாத பாவிகளின் அன்பு கர்த்தருக்கு அவசியம் இல்லை.
நாம் கர்த்தரை நேசிக்கும்பொழுது, சத்தியத்தில் உள்ள அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் அவரை நேசிக்க வேண்டும். அவருக்கான நம்முடைய அன்பு ஒரு தலை நேசமாக மட்டுமே இருக்கக்கூடாது. அவருக்கான நம்முடைய அன்பை அவரிடம் சொல்ல வேண்டும். மேலும் அவரை நேசிப்பதற்கு முன், அவர் நம்மை உண்மையாய் நேசிக்கிறாரா இல்லையா என்பதை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். நம்மை உண்மையில் நேசிக்காத ஒருவரிடத்தில் நம்முடைய அன்பு முழுவதையும் கொடுத்தால், முடிவில் உடைந்த இருதயத்துடன் தான் நாம் இருப்போம்.
நம் தேவன் நம்முடைய பாவங்களை மறைத்து நம்மை மீட்பின் கிருபையினால் மூடியுள்ளார் இதனால் அவற்றிற்காக தண்டிக்கப்படமாட்டோம். கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்காகவும் கர்த்தருடன் இருப்பதற்காகவும் அவர் நம்மை அனுமதித்துள்ளார். மேலும் கர்த்தரின் கிருபையின் மூலம் பாவத்திற்கான மீட்பைப் பெற்றுக்கொள்ள உதவும் பரிசை அவர் நமக்குக் கொடுத்துள்ளார். கர்த்தருடைய மீட்பு, எண்ணமுடியாத பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நமக்கு கொண்டுவந்துள்ளது. கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள இந்த மீட்பானது, அவரிடமிருந்து இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள நமக்கு உதவியுள்ளது.
இயேசு நமக்கு கொண்டு வந்த இரட்சிப்பு
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் நம் தேவன் நம்மை மீட்டுள்ளார். மூன்று வித்தியாசமான நூல்களால் ஆன மீட்பை அவர் நமக்கு தந்துள்ளார். இந்த இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நூலானது, கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள மீட்பின் பரிசை தவிர வேறு எதுவும் இல்லை. இந்த மீட்பின் பரிசு தான் நம்மை பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து அங்கு வாழ உதவிச் செய்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி உங்களையும் என்னையும் நீதிமான்களாக மாற்றியுள்ளது. இது நம்மை கர்த்தருடைய ஆலயத்திற்குள் வரவும் தூய்மையான வாழ்க்கை வாழவும் நம்மை அனுமதித்துள்ளது. மேலும் உண்மையான நற்செய்தியான கர்த்தருடைய ஆவிக்குரிய வார்த்தையில் வாழவும், அவருடைய கிருபையை பெற்றுக் கொள்ளவும் நமக்கு உதவியுள்ளது. கர்த்தருடைய கிருபாசனத்திற்கு முன் சென்று ஜெபிக்கவும் இதன் மூலம் நம்மை இது அனுமதித்துள்ளது. மேலும் இதன் மூலம் நம்முடைய கர்த்தர் அளித்துள்ள அளவில்லா கிருபையை, நாம் எடுத்து கொள்ளக் கூடிய விசுவாசத்தை இது தந்துள்ளது. நம்முடைய விசுவாசத்தின் மூலம் மட்டுமே, கர்த்தர் இந்த சிறப்பான ஆசீர்வாதங்களை நம்முடையதாக்கியுள்ளார். இதனால் தான், இரட்சிக்கப்படுதல் அவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கிறது.
இயேசுவானவர் பாறையின் மேலே நம்முடைய விசுவாசத்தின் வீட்டைக் கட்டச் சொன்னார் (மத்தேயு 7:24). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் வரும் நம்முடைய மீட்பைத் தவிர இந்த பாறை வேறு எதுவும் இல்லை. இதைப் போல நாமெல்லாரும் இரட்சிக்கப்படுவதன் மூலம் விசுவாச வாழ்க்கை வாழவேண்டும். இரட்சிக்கப்படுவதன் மூலம் நீதிமான்களாக வேண்டும். இரட்சிக்கப்படுவதன் மூலம் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். மற்றும் இரட்சிக்கப்படுவதன் மூலம் பரலோகத்திற்குள் நுழையவேண்டும்.
இந்த உலகத்தினுடைய முடிவு நேரங்கள் நம்மை அனுகிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்த காலத்தில் சரியான வார்த்தை மூலம் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்கு மக்களிடம் இன்னமும் அதிக காரணங்கள் இருக்கின்றன. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நூலகளின் விசுவாசத்தை தெரிந்துகொள்ளாமலே, இயேசுவை விசுவாசிப்பதின் மூலம் ஒருவன் இரட்சிக்கப்படலாம் என்றும், விசுவாசத்தின் வாழ்க்கையைக் குறித்து பேசுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும், இந்த வழியில் இரட்சிக்கப்படுவதே போதுமானது என்றும் சொல்லக் கூடிய சில மக்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும் இதை நான் திரும்ப சொல்வதற்கு காரணம் என்னவென்றால் தங்கள் இருதயங்களில் பாவத்தின் மீட்பை பெற்றவர்களால் மட்டும் தான் கர்த்தர் அங்கீகரிக்கும் விசுவாசத்தின் வாழ்க்கையை வாழ முடியும். பாவத்தின் மீட்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களின் இருதயமும் பரிசுத்த ஆவியானவர் குடியிருக்கும் பரிசுத்த ஆலயமாக இருக்கிறது என்ற காரணத்தால் இந்த பரிசுத்தத்தை மாசுபடுத்தக் கூடாது என்பதற்காக அவனோ/அவளோ தங்களுடைய வாழ்க்கையை விசுவாசமாக வாழ வேண்டும்.
பாவிகள் வாழ்வதிலிருந்து ஒரு முழுமையான வித்தியாசமான கோணத்தில் தான் நீதிமான்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள். கர்த்தருடைய பார்வையில் பாவிகள் வாழ்வது முற்றிலும் அவர் தரத்திற்கு கீழே உள்ளது. அவர்களுடைய வாழ்க்கை கபடத்தால் மட்டும் நிறைந்திருக்கிறது. சத்தியத்தின்படி வாழ்வதற்கு அவர்கள் மிகவும் முயற்சி செய்கிறார்கள். தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்றும், தாங்கள் எப்படி பேச வேண்டும் என்றும் தாங்கள் எப்படி சிரிக்க வேண்டும் என்றும் தங்களுடைய சொந்த தரத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நீதிமான்கள் வாழும் விசுவாசத்தின் வாழ்க்கையிலிருந்து இது அகற்றப்பட்டுள்ளது. "உங்கள் முழு இருதயத்துடனும் பெலத்துடனும் உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசியுங்கள் மேலும் உங்கள் சொந்த சரீரத்தை நேசிப்பதுப் போல உங்கள் அயலாரை நேசியுங்கள்" என்று கர்த்தர் நீதிமான்களுக்கு விரிவாக சொல்லுகிறார். இது நீதிமான்களுக்கு கர்த்தர் கொடுத்துள்ள வாழ்க்கையின் மாதிரியாகும். நீதிமான்களாகிய நமக்கு நம் முழு இருதயத்துடன் கர்த்தரை நேசித்து நம்முடைய வாழ்க்கையை வாழ்வதும், நம் முழு பலத்துடனும் முழு விருப்பத்துடனும் அவருடைய சித்தத்தை தொடர்வதும் சரியாக இருக்கிறது. நம்முடைய அயலாரை மீட்பதற்கான அவருடைய வேலைகளில் எண்ண முடியாத முதலீடுகளை நாம் செய்ய வேண்டும். இது தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.
நாம் பாவம் செய்வதில்லை என்பது தான் முக்கியம் என்று நினைக்கும் நிலையில் நாம் இருந்தால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களின் விசுவாசமான வாழ்க்கையை நம்மால் பின்பற்ற முடியாது. நான் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு, முறை சார்ந்த பிரஸ்பைடேரியன் பிரிவில் நீதியான விசுவாசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன், மேலும் சத்தியத்தின் வாழ்க்கையைப் பொருத்தமட்டும் அதை முழுமையாக வைத்துக் கொள்ள நான் முயற்சி செய்தேன். இப்பொழுதெல்லாம், மக்கள் இதை ஒரு பொழுதும் செய்வதில்லை. நீண்ட காலத்தில் இருந்து என்னுடைய மத வாழ்க்கையை நான் மேற்கொண்டு வருவதால், என்னுடைய அன்றாட வாழ்க்கையில் சத்தியத்தை வைத்துக் கொள்வதில் நான் மிகவும் பொருத்தமானவனாக இருந்தேன். நான் சத்தியத்திற்கு முழுமையாக கீழ்படிந்தவனாக இருந்தேன். இதனால் நான் தேவனுடைய நாளில் வேலை செய்தது கிடையாது, ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் என்று வேதம் ஆணையிடுவதைப்ப் போல ஞாயிற்றுக்கிழமைகளில் காரிற்குள் கூட போகாத அளவிற்கு நான் இருந்தேன். நான் வாழ்ந்ததைப் போல நீங்களும் வாழ வேண்டும் என்று நான் உங்களைக் கேட்¡ல் இதைப் போன்ற நீதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள் ஒருவரும் உண்மையில் இருக்க மாட்டார்கள். நான் மறுபடியும் பிறப்பதற்கு முன், என்னுடைய வாழ்க்கை இப்படித் தான் நீதியாக இருந்தது, இருப்பினும், என்னுடைய மத நாட்களை எப்படி பக்தியுள்ளதாக நான் செலவு செய்திருந்தாலும் அது கர்த்தருடைய சித்ததுடன் ஒத்துப்போகவில்லை என்பதுடன் முற்றிலும் உபயோகம் இல்லாமல் இருந்தது.
வாசகர்களே, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவை மீது உங்களிடம் விசுவாசம் இருக்கிறதா? இயேசுவினுடைய மீட்பு இந்த மூன்று நூல்களிலும் அடங்கியிருப்பதால் நம்முடைய விசுவாசத்தினால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நம்மால் நுழைய முடியும். நம்முடைய மீட்பு 2000 வருடங்களுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே, அவர் ஏற்கெனவே ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது ஏற்றுக் கொண்டார். மேலும் சிலுவையின் மீது மரித்ததன் மூலம் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சுமந்தார்.
பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுதல் இயேசு கிறிஸ்துவுக்குள் அமைந்திருக்கிறது
மறுபடியும் பிறக்காதவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும் பொழுது, அதன் பிரகாரத்தின் நுழைவாயில் வழியாக அவர்கள் நுழைவதில்லை, ஆனால் சட்ட விரோதமாக வேலியை தாண்டுகிறார்கள். "வேலியினுடைய மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஏன் இவ்வளவு வெண்மையாக உள்ளது? இது மிகவும் களைப்பூட்டக்கூடியதாய் இருக்கிறது. அவர்கள் இதை சிகப்பு அல்லது இளநீல வண்ணத்தால் வண்ணம் தீட்டியிருக்க வேண்டும். இன்றைய நாட்களில் இது தான் நாகரீகமாயிருக்கிறது. ஆனால் இந்த வேலி மிகவும் வெண்மையாக இருக்கிறது! இது அதிகமாக ஒட்டுகிறது. மேலும் இது ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறது? இதன் உயரம் 2.25 மீட்டரை (7.5 அடி) விட அதிகமாக இருக்கிறது. என்னுடைய உயரம் 2 மீட்டரை கூட தொடுவதில்லை எனவிருக்கும்போது, நான் எப்படி இதற்குள் நுழைய முடியும்? சரி ஒரு ஏணியைப் பயன்படுத்தி இதை என்னால் தாண்டி விட முடியும்" என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
இப்படிப்பட்ட மக்கள் தங்கள் சொந்த செயல்களுடன் நுழைய முயற்சிக்கிறார்கள். தங்களுடைய கானிக்கைகளாலும் தரும செயல்களாலும் பொறுமையாலும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வேலியின் மேல் அவர்கள் ஏறி விடுகிறார்கள். மேலும் "என்னால் 2.25 மீட்டர் (7.5 அடி) உயரத்திலிருந்து குதிக்க முடியும்" எனக் கூறி கண்டிப்பாக கீழே குதித்து விடுகிறார்கள். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்திற்குள் குதித்த பிறகு அவர்கள் திரும்பி பார்த்து, சர்வாங்க தகன பலிபீடத்தைப் பார்க்கிறார்கள். பின்பு அவர்கள் பலிபீடத்திலிருந்து தங்கள் பார்வையை பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி திருப்புகிறார்கள், மேலும் அதற்கு முன்னால் இருக்கும் வெண்கலப் பாத்திரத்தையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வேலியின் தூண்களின் உயரம் 2.25 மீட்டர் (7.5 அடி) ஆக இருக்கிறது. ஆனால் கர்த்தர் குடியிருக்கும் பரிசுத்த ஸ்தலத்தின் கதவினுடைய திரை மற்றும் தூண்களுடைய உயரம் 4.5 மீட்டர் (15 அடி) ஆக உள்ளது. அவர்களிடத்தில் போதுமான அளவு தீர்மானம் இருந்தால் அவர்களால் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்திற்குள் நுழைய முடியும். ஆனால் ஒரு வேளை அவர்கள் 2.25 மீட்டர் (7.5 அடி) உயர வேலியை தாண்டி குதித்து ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்திற்குள் நுழைந்தாலும், கர்த்தர் குடியிருக்கும் இடத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் பொழுது, அவர்கள் 4.5 மீட்டர் (15 அடி) உயர தூண்களையும் பரிசுத்த ஸ்தலத்தின் கதவினுடைய திரையையும் எதிர்க்கொள்வார்கள். மக்கள் 2.5 மீட்டர் (8.3 அடி) உயரத்தை தங்களுடைய சொந்த முயற்சியின் மூலம் தாண்டி குதித்து விடலாம், ஆனால் கர்த்தரால் அமைக்கப்பட்டுள்ள 4.5 மீட்டர் (15 அடி) உயரத்தை தாண்டி குதிக்க முடியாது. இது தான் அவர்களுடைய எல்லை.
நாம் இயேசுவை முதலில் விசுவாசிக்கும் பொழுது வெறும் மதமாக மட்டுமே விசுவாசிக்க முடியும் என்று இது சொல்கிறது. கூடவே, தங்களுடைய சொந்த விருப்பப்படி இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக சில மக்கள் விசுவாசிக்கலாம், மேலும் மீட்பர் என்பவர் நான்கு சிறந்த அறிஞர்களில் ஒருவரே என்றும் விசுவாசிக்கலாம். மக்கள் எப்படி விசுவாசிக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய எந்த வகையில் வேண்டுமானாலும் அவர்கள் விசுவாசிக்கட்டும், அத்தகைய விசுவாசத்தின் மூலம் அவர்களால் மறுபடியும் பிறக்க முடியாது.
மறுபடியும் பிறக்க வேண்டுமானால் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் ஆன நுழைவாயிலை விசுவாசத்தின் மூலம் அவர்கள் கடக்க வேண்டும். இயேசு தான் நமது மீட்பரும், சத்தியத்தின் கதவுமாயிருக்கிறார் என்றும், நீர் இரத்தம் மற்றும் ஆவியின் மூலம் நம்மை மீட்டுள்ளார் என்று விசுவாசிக்கும் பொழுது கர்த்தருக்கு முன்பாக நாம் மறுபடியும் பிறக்கிறோம். மூன்று நூல்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ள இயேசுவின் வேலைகளை விசுவாசிக்கும் விசுவாசமானது, நீர், இரத்தம் மற்றும் ஆவி ஆகியவற்றின் விசுவாசத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. வேறு எதிலாவதில் விசுவாசமாயிருக்க மக்களுக்கு சுதந்திரமுண்டு ஆனால் அதை விசுவாசிப்பதின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்படலாம் என்பதற்கும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படலாம் என்பதற்கும் சரியான சாட்சியம் இல்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் நமக்கு இருக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கர்த்தருடைய ஒப்புதலையும் சிறந்த கிருபையையும், கர்த்தரின்ய இரட்சிக்கப்படுதலின் ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற முடியும். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள விசுவாசித்தின் குறிக்கோள் யாதெனில் கர்த்தருடைய கிருபையில் நம்மை மூடுவதே ஆகும்.
ஆசரிப்புக் கூடாரத்தை, ஒரு வீட்டுடன் இருக்கும் செவ்வக வடிவ பிரகாரமாக நீங்கள் கருதுகிறீர்களா? இது உங்கள் விசுவாசத்திற்கு எந்த பலனையும் கொண்டு வர முடியாது. ஆசரிப்புக் கூடாரம் முழு விசுவாசத்தைப் பற்றி நமக்கு சொல்லுகிறது, மேலும் இந்த விசுவாசம் என்ன என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ளாமல், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய உயரம் அதனுடைய வேலியின் உயரமான 2.25 மீட்டர் (7.5 அடி) உயரத்தில் இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இது உண்மையல்ல. நாம் வாசலுக்குள் நுழையாமல் இருந்து, வேலிக்கு வெளியில் இருந்து ஆசரிப்புக் கூடாரத்தைப் பார்த்தாலும் கூட ஆசரிப்புக் கூடாரமானது வேலியை விட இரண்டு மடங்கு உயரமுடையதாய் இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடியும். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய அடிப்பாகத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் நம்மால் இதனுடைய நுழைவாயிலை தெளிவாக பார்க்கமுடியும். ஆசரிப்புக் கூடார பிரகாரத்துடைய வேலியை விட ஆசரிப்புக் கூடாரம் உயரமாக நிற்கிறது என்பதை இது நமக்கு சொல்லுகிறது.
இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் பாவங்களின் மீட்பைப் பெற்றுக்கொண்டு இதன்படி ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தினுடைய நுழைவாயிலுக்குள் நுழைந்தவர்கள், சர்வாங்க தகன பலிபீடத்திலும் வெண்கல பாத்திரத்திலும் தங்களுடைய விசுவாசத்தை உறுதி செய்து கொண்ட பிறகு பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய வேண்டும். பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய ஆத்ம தியாகம் தவறாமல் இருக்க வேண்டும். பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கும் பாத்திரங்கள், பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளியில் காணப்படும் எல்லா பாத்திரங்களிலிருந்தும் வேறுபடுத்தி காண்பிக்கப் பட்டிருக்கவேண்டும்.
சாத்தான் எதை அதிகமாக வெறுக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா? பரிசுத்த ஸ்தலத்திற்கு உள்ளேயேயும் வெளியேயும் எல்லைக் கோடு வரையப்பட்டுள்ளதை அவன் வெறுக்கிறான். பரிசுத்த ஸ்தலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிரிப்பவர்களும் மத்தியில் கர்த்தர் வேலை செய்கிறபடியால் இப்படிப்பட்ட கோடு வரையப்பட்டிருக்கிறது என்பதை சாத்தான் வெறுக்கிறான். மேலும் இந்த கோடு வரையப்படுவதிலிருந்து மக்களை தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்: இந்த விசுவாச எல்லைக் கோட்டை யார் வரைகிறார்களோ அவர்களுள் கர்த்தர் தெளிவாக வேலைச் செய்கிறார், இந்த பிரிக்கும் கோட்டை வரையும் மக்களில் ஆண்டவர் பிரியமாயிருக்கிறார், மேலும் அவர்களுக்கு தன் ஆசீர்வாதத்தை அளிக்கிறார். இதனால் தங்களுடைய அருமையான விசுவாசத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் அவர்களால் வாழ முடியும்.
மக்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையாக ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள் அனைத்துப் பாத்திரங்களையும் பொருட்களையும் கர்த்தர் தயார் செய்து அவற்றை அங்கே வைத்திருந்தார் என்பதை நீங்கள் விசுவாசியுங்கள். இதனை விசுவாசிப்பதின் மூலம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது, கர்த்தர் தம்முடைய பெரிதான ஆசீர்வாதத்தையும் கிருபையையும் உங்களுக்கு நல்குவார்.
கிருபாசனமே இரட்சிப்பின் கிருபையை பெற்றுக் கொள்ளும் இடமாயிருக்கிறது
மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கைப் பெட்டியை மூடியிருந்த மூடிக்கு மேலே இருந்து, தங்களுடைய இறக்கைகளை விரித்தபடி இரண்டு தேவதூதர்கள் கீழே எட்டிப்பார்க்கிறார்கள். இரண்டு தேவதூதர்களுக்கும் இடையில் இருக்கும் இடம் தான் இரக்கத்தின் இருக்கை என்று அழைக்கப்படுகிறது. இரக்கத்தின் இருக்கையில் இருந்து தான் கர்த்தர் அவருடைய கிருபையை நம் மேல் அளிக்கிறார். இஸ்ரவேல் மக்களுக்கென்று கொடுக்கப்பட்ட காணிக்கையின் இரத்தத்தை தலைமை சாரிய இந்த கிருபாசனத்தின்மேலே ஏழு முறை தெளித்ததால், உடன்படிக்கைப் பெட்டியுடைய மூடி இரத்தத்தால் கரையாக்கப்பட்டிருந்தது. இப்படி தான் கர்த்தர் தீடீரென கிருபாசனத்தின்மேலே தோன்றி, இஸ்ரவேலின் மக்கள் மேலே அவருடைய இரக்கத்தை அளித்தார். இதை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம், பாதுகாப்பு மற்றும் துணை தொடங்கும் இதிலிருந்து, கர்த்தருடைய உண்மையான மக்களாய் அவர்கள் ஆகிறார்கள். மேலும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய தகுதியுடையவர்களாய் ஆகிறார்கள்.
உலகிலுள்ள பல கிறிஸ்தவர்களில் சிலரிடம் பரிசுத்த ஸ்தலத்திற்கு அனுமதிக்கக் கூடிய விசுவாசம் இருக்கிறது, ஆனால் மற்றவர்களிடம் பரிசுத்த ஸ்தலத்திற்கு அனுமதிக்கக் கூடிய விசுவாசம் இல்லை. உங்களிடம் உள்ள விசுவாசம் எத்தகையது? இரட்சிப்பிற்கான சரியானக் கோட்டை வரையக்கூடியதும், கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் அழைத்துச்செல்வதுமான விசுவாசம் நமக்குத் தேவை, ஏனெனில் இப்படிச் செய்வதின் மூலம் மட்டுமே கர்த்தரால் நாம் பெரிதும் ஆசீர்வதிக்கப் படுவோம்.
ஆனால் இத்தகைய விசுவாசத்தைப் பெற்றுக் கொள்வது இலகுவானது அல்ல. இரட்சிப்பிற்கான சரியானக் கோட்டை மக்கள் வரைவதை சாத்தான் வெறுப்பதுடன் இந்தக் கோட்டைத் தெளிவில்லாததாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் அவன் தொடர்ந்து செய்கிறான். "நீ அப்படியாக விசுவாசிக்க வேண்டியதில்லை. எல்லோருமே அப்படி விசுவாசிப்பதில்லை, ஆகவே நீ ஏன் அதன் மேல் இத்தனை முக்கியத்துவத்தை வைத்து அதனை மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்? இலகுவாக எடுத்துக்கொள், உலகத்தோடு ஒத்துப்போ." இப்படிக் கூறுவதின் மூலமாக இரட்சிப்பிற்கான சரியானக் கோட்டை மறைப்பதற்கு அவன் முயலுகிறான். மேலும் நம் மாமிசத்தின் பலவீணத்தை வெளிக்காட்டுவதன் மூலம் அவற்றினால் பிரச்சினை உருவாகும் படி அவன் செய்கிறான். கர்த்தரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் சாத்தானின் வஞ்சக வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் நபராக நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது உங்கள் இரட்சிப்பை அனுதினமும் நினைவு கூர்ந்து, கர்த்தரின் ஆலயத்துடனே ஐக்கியமாகி, கர்த்தரின் வார்த்தைகளைப் பின்பற்றி, ஜெபவாழ்க்கையை நடத்தி, கர்த்தர் உங்களுக்கு அருளிய கிருபையைப் பெற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை நடத்துவீர்களா?
உண்மையில், பாவமன்னிப்பு பெற்றவர்கள் தம்முடைய இரட்சிப்பைக் குறித்து நினைவு கூற விரும்புவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் சஞ்சரிக்க அவர்கள் விரும்புவர். நற்செய்தியைத் தியானிப்பது உங்களுக்கு நலமானதும் அவசியமானதுமாகும். நீங்கள் இப்படிப் பட்டவர்களாக இல்லையா? "கோஷ், அது மீண்டும் அதே கதையாயிற்று, நாம் எப்போது இரட்சிக்கப்பட்டோம்? நிகழ்ச்சியும் அதற்கான சூழ்நிலையும் வேறுபாடானதாக இருக்கலாம், ஆனால் அது அதே பழைய கதையே. அது என்னை மிகவும் வருத்துகிறது!"
இதனைக் கூறக்கூடிய யாரும் இருக்கிறார்களா? என்னைக் குறித்த அதே கதையை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் நம் இரட்சிப்பைக் குறித்து ஒவ்வொரு நாளும் அசை போட வேண்டுமென வேதாகமம் கூறும் போது, என்னால் என்ன செய்ய முடியும்? புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பற்றி நமக்கு கூறும் போது, கர்த்தருக்கு முன்பதாக இதனைப் பற்றிக் கூறுவது மக்களுக்கு எத்தகைய தீமையாக இருக்கமுடியும்? வேதாகமத்தின் அனைத்து வார்த்தைகளும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. "இரட்சிப்பு, விசுவாச வாழ்வு, விசுவாசம், ஆவிக்குரிய வாழ்வு, சாத்தானுக்கு எதிரான போர், நித்திய ஜீவன், நம்பிக்கை, மேலும் பரிசுத்த ஆவியானவர்"௮ஆகிய பரிசுத்தவான்களின் அனைத்து முக்கிய கருத்துக்களும் இந்த முக்கிய நற்செய்திக்கு தொடர்புடையவையாகும். டூதனைத் தவிர வேறெதையும் பேசுவது வேதப்புரட்டும் தவறான போதனையும் ஆகும். ஒரேவிதமாக தெரிந்தாலும், பொருளில் வேறுபாடு இருந்தால் அது தவறான போதனையாகும். வெளியில் ஒரே விதமாகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு உள்ளே வேறு விதமாகவும் இருக்கும் நற்செய்திகள் கள்ள மதங்களின் போலி போதகங்கள் ஆகும்.
கள்ள மதங்களின் வஞ்சக வார்த்தைகளை பரப்புவதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் கர்த்தரின் வார்த்தையை கர்த்தரின் ஆலயம் பரப்புவது எத்தனை ஆச்சரியமானது? கர்த்தரின் ஆலயத்தில் ஐக்கியமாகி கர்த்தரின் தெளிவான வார்த்தையைக் கேட்டு அதனை விசுவாசிப்பது ஆசீர்வாதமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எப்போதும் பிரசங்கிப்பதின் மூலமாக, கர்த்தரின் கிருபையை ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்கவும், அவரிடம் ஜெபிக்கவும், அவருக்கு மரியாதைச் செலுத்தும் படியாகவும், தீமையை விட்டு விலகி நடக்கும் ஒரு வாழ்க்கையை வாழ, பரிசுத்தவான்களை கர்த்தரின் ஆலயம் ஏதுவாக்குகிறது. நீங்கள் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள உங்களை அனுமதிக்கும் சத்திய வார்த்தையை மீண்டும் கேட்டு அதனை விசுவாசிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதல்லவா? நானும் கூட அதிக மகிழ்ச்சியுடனேயே இருக்கிறேன்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறெந்த நற்செய்தியையும் போதிக்க நான் சென்றிருந்தால், அதனால் நான் அதிகம் துன்பப்பட்டிருப்பேன். இரட்சிப்பின் வார்த்தைக்கு பதிலாக வேறொரு மனித போதனையை பிரசங்கிக்க சென்றிருந்தால், நான் தப்பிக்க விரும்பியிருப்பேன். பேசுவதற்கு என்னிடம் எதுவும் இருக்காது என்பதே இதற்கான காரணமாகும். மற்ற பல்வேறு மனிதர்களைக் குறித்த காரியங்களை என்னால் பேசமுடியும், ஆனால் இவை எல்லாம் தேவையற்றவைகளாகவும், மறுபடியும் பிறந்தவர்களாகிய நம்மை அழிக்கும் போதனைகளாகும்.
கர்த்தராகிய இயேசுவானவர் நம்மை இரட்சிக்க பயன்படுத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே கர்த்தரின் விலையேறப்பட்ட வார்த்தையாகும், அதனை நாம் மீண்டும் மீண்டும் அசைபோட்டாலும் அது இனிபாகவே இருக்கும். உங்களுக்கு கூறும்படியான அனேக கதைகள் எனக்குத் தெரியும், ஆனால் நம்மை இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி பேசவே நான் விரும்புகிறேன். அப்பொழுது நான் பேரானந்தம் அடைகிறேன். இந்த இரட்சிப்பைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் மகிழ்ச்சியுடையவனாய் இருக்கிறேன், இப்போது தான் எனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வரும், அப்போது தேவன் என்னை எப்படி இரட்சித்தார் என்பதை என்னால் நினைவு படுத்த முடியும், அப்போது அவருக்கு ஒருமுறை நன்றி கூறி, இரட்சிப்பின் அப்பத்தினால் மீண்டுமாக போஷிக்கப் படுவேன்.
இந்த இரட்சிப்பின் வார்த்தையை கேட்கும் போது நீங்களும் இதனை வெகுவாக விரும்புவீர்கள் என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதே கதையாக இருக்கிறதே என நீங்கள் புகார் கூறலாம், ஆனால் மனதிற்குள்ளே இவ்வாறு எண்ணுவீர்கள், "நான் இதனை, இப்போது, மீண்டுமாக கேட்டேன், இது இன்னமும் சிறந்தது. தொடக்கத்தில் இது அவ்வளவு சிறப்பானதை இல்லை, ஆனால் அதை கேட்க தொடரும் பொழுது, மற்ற கதையை கவனிப்பதை விட இதை கவனிப்பது உபயோகமாய் இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இன்றைய கதை ஒரளவிற்கு விசேஷமாய் இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் இது மறுபடியும் அதே கதை தான் என்று இதன் முடிவு எனக்கு சொல்கிறது. இருப்பினும், நான் இன்னமும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." இப்படி தான் உங்களுடைய இருதயங்களும் நினைக்கிறது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
சகோதர சகோதரிகளே நான் இங்கே பிரசங்கித்துக் கொண்டிருப்பது இயேசுவினுடைய வார்த்தையாகும். பிரசங்கிப்பவர்கள் இயேசுவின் வார்த்தையைப் போதிக்க வேண்டும். இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதையும், எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் நீர் மற்றும் ஆவியின் உண்மையை பரப்புவது தான் கர்த்தருடைய ஆலயம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. நாம் நம்முடைய விசுவாசத்தின் வாழ்க்கையை ஆலயத்தில் வாழ்கிறோம். பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதும், தங்க கட்டியை தட்டுவதன் மூலம் செய்யப்பட்ட ஏழு கிளைகளையுடைய விளக்குத்தண்டை ஏற்றுவதும், சுத்தமான தங்கத்தினுடைய வீட்டில் அப்பத்தை சாப்பிடுவதும், தூபவர்க்க பலிபீடத்தில் ஜெபிப்பதும், கர்த்தருடைய ஆலயத்திற்குள் போவதும், அவரை தொழுவதும், பொன் வீட்டில் இருப்பதும் நம்முடைய விசுவாசமான வாழ்க்கையாய் இருக்கிறதே தவிர வேறில்லை.
நீங்களும் நானும் கர்த்தர் கொடுத்த விசுவாசத்தின் வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாவத்தின் மீட்பை பெறுவதும் விசுவாசமான வாழ்க்கை வாழ்வதுமே, கர்த்தருடைய பொன் ஆலயத்திற்குள் இருக்கும் வாழ்க்கையாய் இருக்கிறது. "ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16) ஆசரிப்புக் கூடாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் இருக்கும் நம்முடைய விசுவாசத்தின் மூலம் பொன்னினால் பிரகாசித்து கொண்டிருக்கும் கர்த்தருடைய ஆலயத்தில் நம்முடைய ஆத்துமாக்கள் வாழ்கின்றன.
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் நம்மை மீட்டதற்காக கர்த்தருக்கு எப்பொழுதும் என் நன்றியை தெரிவிக்கிறேன். அல்லேலூயா!