• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-2] நமக்காக துன்பப்பட்ட நமது தேவன் (ஏசாயா 52:13-53:9)

(ஏசாயா 52:13-53:9)
"இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை."
 
 
முழு உலகமும் நற்செய்தியானது இப்போது பரவிக் கொண்டிருக்கிறது. இவ்வுலகம் முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அரசியலிலிருந்து பொருளாதாரம் வரை அனைத்தும் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடுகள் தமது செல்வாக்கை உலகம் முழுவதும் விரிவு படுத்த முயல்வதால் போர் மேகம் இன்னமும் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. என்னுடைய குடும்பத்திற்கு அருகேயுள்ள வடகொரியா, தான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க போவதாக அண்மையில் அறிவித்து, பன்னாட்டு சமுதாயத்திலும் பெரியதொரு கிளர்ச்சியை உருவாக்கிற்று. இத்தகைய பிரச்சினைகள் சூழ்ந்துள்ள உலகில், ஞானத்தினால் மட்டுமே தம்முடைய பிரச்சனைகளை இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவராலும் தீர்க்க முடியும் என்பதையும், அறிவீனத்தினால் அப்படிச் செய்யலாகாது என்பதையும் மட்டுமே என்னால் நம்பமுடிகிறது, மேலும் அனைவருடனும் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே, ஒன்றாக எல்லோராலும் வாழ முடியும்.
அனுதினமும் நாம் ஜெபிக்கவேண்டும், இதனால் கர்த்தர் அதிக காலத்தைத் தருவார், ஆகவே நற்செய்தியை இன்னமும் அதிகமாக நாம் பரப்ப முடியும். நான் மரிக்க விரும்பாததினால் இதனைக் கூறவில்லை. உண்மையான நற்செய்தி இன்னமும் போதிக்கப்படாத நாடுகள் இருப்பதோடு சரியான நற்செய்தி மலரக்கூடிய நாடுகள் இன்னமும் இருப்பதே இதற்கான காரணம். நற்செய்தி முளைவிட்டு பூ பூக்கத் தொடங்கும் போது, நற்செய்தி இன்னமும் அதிகமாக பரப்பப்பட வேண்டியிருப்பதால், உண்மை நற்செய்தியைப் பரப்பும் எனது ஆவல் மேலும் தொடருகிறது.
எல்லாம் நல்லதிற்காக செயலாற்ற கர்த்தர் அருளுகிறார் என்பது உண்மைதான், ஆனால் மனிதர்கள் இத்தனை முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே, எனது பெரும் கவலையாக இருக்கிறது. தம்முடைய மரணத்தை தாம் என்று அடைவோம் என்று அவர்களுக்கே தெரியாத போதிலும் மற்றவர்களின் வாழ்க்கையை மக்கள் பயமுறுத்துகிறார்கள்; எல்லோரையும் மொத்தமாக கொலை செய்யும் அளவிற்கு அவர்களில் சிலர் செயல்படுகிறார்கள்.
உலகின் அனைத்து தலைவர்களின் இருதயங்களையும் கர்த்தர் ஆளுகிறார் என நான் விசுவாசிக்கிறேன். நமக்கு அவர் சமாதானத்தை அருளுவார் எனவும் நான் விசுவாசிக்கிறேன்.
இந்த காலத்தில், தமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியாவிற்காக இஸ்ரவேல் மக்கள் இன்னமும் காத்திருக்கின்றனர். அவர்களின் மேசியா இயேசுவே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்கள் காத்திருக்கும் மேசியா இயேசுவே என அவர்கள் அங்கீகரிப்பதுடன் அவரை விசுவாசிக்கவும் வேண்டும். நம் தேவனை பிரியப்படுத்தும் நற்செய்தி இஸ்ரவேலிற்கு நுழையும் காலம் அதிகமில்லை, மேலும் நற்செய்திக்கான கதவுகள் இன்னமும் திறக்கப்படாத நாடுகள் அதிகம் இருக்கின்றன. முழு உலகமும், நற்செய்தியானது மிகவும் நன்றாக பரவியிருக்கிறது, இதனால் இந்த முடிவு காலத்தில் அது முற்றிலுமாக மலர்கிறது.
மாணவர்கள் தம்முடைய பட்டத்தைப் பெற வேண்டுமானால், அவர்கள் நமது ஆங்கில பதிப்புகளை முற்றிலும் படிக்க வேண்டுமென வங்காள தேசத்திலுள்ள ஒரு வேதாகம பாடசாலை ஏற்பாடு செய்திருப்பதாக என்னிடம் கூறினார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முதன்முதலாக சந்தித்த இந்த பாடசாலையின் மாணவர்கள், இதனைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு முன்னரே, தம் பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் பெறுவர்.
இப்படியாக, உலகிலுள்ள அனைத்து இறையியலாளர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிப்பதின் மூலம் பாவமன்னிப்பை பெறுவார்கள் என்று நான் முதலில் விசுவாசிக்கிறேன். அவர்களுக்கு முன்னதாக பாவ மன்னிப்பை பெற்ற நாம் இது நடைபெறுவதற்காக இடைவிடாது ஜெபித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஜெபிப்பது மட்டும் போதாது, ஆனால் விசுவாசித்தினால் நம் வாழ்க்கையை வாழவேண்டும்.
 
 
ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு 700 ஆண்டுகளுக்குப் பிறகு மேசியா இவ்வுலகிற்கு வந்தார்
 
இயேசு கிறிஸ்து இப்பூமியில் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாக வாழ்ந்தான். இயேசு கிறிஸ்து வருவதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பாக அவன் வாழ்ந்திருந்த போதிலும், மேசியாவைக் குறித்த பல செய்திகளை அவன் அறிந்திருந்தமையால், அவரைக் குறித்த எல்லாவற்றையும் ஏசாயா குறிப்பிட்டான், மேசியா எப்படி வருவார் இரட்சிப்பின் வேலையை அவர் எப்படிச் செய்வார் என்று தன் சொந்த கண்களால் நேரடியாக பார்த்ததைப் போல கூறினான். ஏசாயா 52:13 மற்றும் 53 மற்றும் 54 ஆம் அதிகாரங்கள் முழுவதும், விளக்கமாக, தொடர்ந்து, பாவத்திலிருந்து மனித குலத்தை மேசியா எப்படி இரட்சிப்பார் என தீர்க்கதரிசனம் கூறினான். இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வருவார் என்றும், தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொள்வார் என்றும், தன் இரத்தத்தை சிலுவையில் சிந்துவார் என்றும், இதன்மூலம் எல்லோருக்கும் இரட்சிப்பை எடுத்து வருவார் என்றும் இத்தனை துல்லியமாக தீர்க்கதரிசனம் கூறியிருப்பது மிகுந்த ஆச்சரியமான ஒன்றாகும். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் கூறப்பட்டு 700 வருடங்கள் கடந்த பிறகு, அவன் தீர்க்கதரிசனம் கூறியபடி இயேசு இவ்வுலகிற்கு வந்து எல்லாவற்றையும் நிறைவேற்றினார்.
மேசியா இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானத்தினால் செயல்படுவார் என தீர்க்கதரிசனம் கூறினான். ஏசாயா 52:13 இல் இப்படி தீர்க்கதரிசனம் கூறினார். "இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்." இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு மனித மாமிசத்தினால் வந்ததினாலும், தன் ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டதாலும், அவரால் தன் உயிரை சிலுவையில் கொடுக்க முடிந்தது. இதன் மூலமாக அனைத்து மனிதர்களின் பாவங்களுக்காகவும் தீர்க்கப்பட்டார். ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியதற்கினங்க, அனைத்தும் ஞானத்துடன் எதிர்கொள்ளப்பட்டது. இயேசு கிறிஸ்துவினால், மனித குலத்தின் அனைத்துப் பாவங்களும் மறைந்து போயிற்று, ஞானத்துடனே எதிர்கொள்ளப்பட்டது, அவருடைய பெயர் உயர்வடைந்ததுடன் மகத்துவமும் அடைந்தது, இவற்றையெல்லாம் ஏசாயா தீர்க்கதரிசனமாக கூறியிருந்தான். கிறிஸ்துவைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனம் கூறியது நனவாகியது.
ஆயினும், நம் தேவன் இப்பூமிக்கு வந்த போது, இஸ்ரவேல் மக்கள் அவரை சரியாக தெரிந்து கொள்ளவில்லை. நம் தேவன் இப்பூமிக்கு வந்து இஸ்ரவேலரின் பாவங்கள் உட்பட உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்த போதிலும், இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் ஞானஸ்நானத்தையோ அவரின் இரத்தத்தையோ விசுவாசிக்கவில்லை. இந்த மேசியா ஏற்கனவே அவர்களின் நாட்டில் பிறந்து விட்டதையும், அவருடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவையினாலும், இஸ்ரவேலர்களின் பாவத்தை மட்டுமல்லாது முழு மனிதகுலத்தின் பாவங்களையும் அவர் அழித்தார் என்பதை இஸ்ரவேலர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த இயேசு கிறிஸ்துவே தேவகுமாரான் என்பதையும், இஸ்ரவேல் மக்களின் மேசியாவும் இவரே என்று அவர்கள் உணரவில்லை. அவர்கள் இத்தனை வருடங்களாக காத்து கொண்டிருக்கும் மேசியா இயேசுவே என்பதை அவர்கள் இப்போது சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
 
உலகின் பாவங்களை மறையச் செய்யவே இயேசு பாடுகளை அனுபவித்தார்
 
இயேசு இவ்வுலகிற்கு வந்த போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடியான பெரும்பாடுகளை அனுபவித்தார். ஏசாயா 53 இல் காட்டப்பட்டவாறு மேசியா துக்கமுள்ள மனிதராயிருந்தார். நம்முடைய அநேக பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்ட அவர், பெரிதும் பாதிக்கப்பட்டார். நம்முடைய முகங்களை அவரிடமிருந்து மறைக்கும் அளவிற்கு நாம் மறைந்தோம் என்று வேதாகமம் கூறுகிறது.
ஆனால் இயேசுவை மேசியா என சிலர் ஏற்றுக் கொண்டனர். அவருடைய காலத்தின் மக்களால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமையால், இயேசு கிறிஸ்துவாகிய மேசியா தமது இரட்சகர் என ஏற்றுக் கொள்ளவும் விசுவாசிக்கவும் பலர் தவறினர். உலகின் பாவங்களிலிருந்து மனித குலத்தை இரட்சிக்கும் பிதாவின் செய்கையை நிறைவேற்ற அவரின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நம் தேவன் இப்பூமிக்கு வந்தார். இச்செயல்களை செய்யும் போது பெரிதும் நசுக்கப்பட்டார். கர்த்தர் தம்முடைய சாயலில் படைத்த மனிதனின் சரீரத்தில் அவர் தாமே உருவாகி இவ்வுலகிற்கு வந்தது மட்டும் போதாதற்கு, அவரை அடித்து, துன்புறுத்தி, நொருக்கி நசுக்கினர். இதனால் நாம் அவரிடமிருந்து நம் முகத்தை திரும்பிக் கொண்டோம், என வேதாகமம் நம்மிடம் கூறுகிறது. அதனைத் தாங்குவது நமக்கு மிகவும் கடினமாயிருந்தது. அவர் இப்பூமியிலிருக்கும் போது, அவரை மேசியா என மதிப்பதற்கு பதிலாக, அவரை ஏதோ பைத்தியம் பிடித்தவரைப் போல் பாவித்து நசுக்கினோம். அவருடைய தாழ்மையை வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாது. ஒருவர் தாழ்த்தப்பட்டு கேவலப்படுத்தப்படும் போது, அதனைக் காணவிரும்பாது நம் முகங்களைத் திருப்புவது போல், இஸ்ரவேலர்கள் தம்முடைய முகங்களை அவரிடமிருந்து திருப்பும் அளவிற்கு மேசியா தன் படைப்புகளுக்கு முன்னதாகவே நசுக்கப்பட்டார்.
இயேசு இப்பூமிக்கு வந்தப்போது, அவரின் உருவம் எப்படி இருந்தது? மேசியா இப்பூமிக்கு வந்தபோது, ஒரு புதிய செடியைப் போலவும், காய்ந்து போன நிலத்தில் உதித்த வேரைப் போலவும் இருந்தார். வேறு வார்த்தைகளில் கூறினார், அவருடைய வெளிப்புற தோற்றத்தை வைத்து அதிகம் கூறுவதற்கில்லை. நம்முடைய தேவனுடன் நம்மை ஒப்பிடும் போது, நம்மை விட சிறிதளவே இந்த மேசியா சிறிது அழகாகவோ கவரும்படியோ இருந்தார். அவருடைய வெளிப்புறத் தோற்றத்தைக் குறித்து பெருமைப் பாராட்டக் கூடாதபடி நம் மேசியா இருந்தார்.
மேசியா இப்பூமிக்கு வந்த போது, நாம் விரும்பக்கூடிய அல்லது மதிக்கக்கூடிய அழகுடைய வெளித்தோற்றம் அவரிடம் இருக்கவில்லை. ஆனால் அவருடைய இந்த தோற்றத்தையும் பொருட்படுத்தாது, நம்முடைய மேசியாவாக ஞானத்துடனே செயல்பட்டார், பலியிடும் முறைக்கு ஏற்றபடியாக, நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியாக, யோவானினால் கைவைக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு தன் இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து எழுந்து, நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்று நம் எல்லாப் பாவங்களையும் மேசியா தன்மீது ஏற்றுக் கொண்டதால், அவரால் சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக தன் இரத்தத்தைச் சிந்த முடிந்தது.
ஏசாயா 53:3 கூறுவதைப் போல "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." மேசியா இப்பூமிக்கு வரவேண்டியதாயிருந்ததாலும், கை வைக்கப்படுதலாலும் அதன்மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் மறையச் செய்ய வேண்டியிருந்ததாலும், இஸ்ரவேல் மக்களாலும் ரோமச் சேவகர்களாலும் இப்படியாக நசுக்கப்பட வேண்டியிருந்தது.
 
 
மேசியா நசுக்கப்படவேண்டியதைக் குறித்து 700 வருடங்களுக்கு முன்பே தீர்க்கதரிசனம் கூறப்பட்டது
 
இப்பூமிக்கு மேசியா வரவேண்டும் எனவும், யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டும் எனவும், சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்துவார் எனவும், மரித்தோரிலிருந்து மீண்டுமாக உயிரோடெழும்புவார் எனவும், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரேயே ஏசாயா தீர்க்கதரிசியால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. மேசியாவின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் கூறியபடி இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தார். அதாவது, மேசியாவாகிய இயேசு கன்னிப் பெண்ணிற்கு மாட்டுதொழுவத்தில் தாழ்மையுடன் பிறந்ததுடன், யோவான் ஸ்நானனிடமிருந்து அவர் பெற்ற தனது ஞானஸ்நானத்தினால் உலகின் பாவங்களை எல்லாம் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவைக்குச் சென்று, நமது இரட்சிப்பிற்காக தனது இரத்தத்தைச் சிந்தி மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்.
பாவ நிவிர்த்தி நாளிலே பலி காணிக்கையின் தலை மீது கைகள் வைக்கப்பட்டு அதன் இரத்தம் சிந்தப்பட்ட போது, (லேவியராகமம் 16) இப்படியாக ஒரு வருடப் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்பட்டதைப் போல, யோவனிடமிருந்து பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலமாக இயேசு நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு சிலுவையிலே, தீர்க்கதரிசன வார்த்தைக்கேற்றபடி மரித்தார். தன்னுடைய ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமந்த பிறகு, தன்னுடைய ஊழிய வாழ்வின் மூன்றரையாண்டுகளில் இயேசு வேதனைகளைஅனுபவித்தார். யோவான் ஸ்நானனிடம் பெற்ற தனது ஞானஸ்நானத்தின் மூலமாக, உலகின் அனைத்துப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது, இதனால் தான் அவர் இப்படியாக அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு எல்லோராலும் நசுக்கப்பட்டார்.
இயேசுவே மேசியா என்று மட்டும் மக்கள் மறுதலிக்கவில்லை, ஆனால் விளக்க முடியாத அளவிற்கு சில யூதர்களும் ரோமர்களும் இயேசுவை வெறுத்து அவரைத் துன்புறுத்தவும் செய்தனர். எத்தனை முடியுமோ அத்தனையாய் அவர் வெறுக்கப்பட்டு தள்ளப்பட்டார்.
யோர்தான் நதியில் யோவான் ஸ்நானனிடமிருந்து தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக, மனித குலத்தின் அனைத்து பாவங்களையும் இயேசு ஒரேதரமாக தன்மீது சுமந்து, அதன்பிறகு சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தினார். தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மேசியா யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் தன் இரத்தத்தை சிந்தினார். சிலுவையில் அவர் தொங்கும் போது ஆடைகள் அகற்றப்பட்டு, துப்பப்பட்டார். அந்நேரத்தில் இயேசுவை சுற்றியிருந்த மக்கள் அவரை கேலி செய்தனர், "நீர் தேவகுமாரர் என்பது உண்மையானால், கீழேயிறங்கி உம்மை இரட்சித்துக் கொள்ளும்."
இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக தன்னுடைய ஊழிய வாழ்வைத் தொடங்கியபோது, மனித குலத்தினால் கொண்டு வரப்பட்ட பல்வேறு துன்பங்களை அவர் அனுமதித்தார். மனித குலத்திற்காக தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்து தனது தோளில் சுமந்த போதிலும், அக்கால மக்கள் இதனைப் பொறுத்துக் கொள்ளாதவர்களால், அவர்களின் மேசியாவாக வந்த இயேசுவை வெறுத்ததுடன், அவரைத் தொடர்ந்து துன்பத்திற்குள்ளாக்கி அவரை வெட்கப்படுத்தினர். இயேசு இப்பூமியிலிருந்த போது புழுவைப் போல நடத்தப்பட்டார் என வேத வசனங்கள் கூறும் படியாக மேசியாவாகிய இயேசு வெறுக்கப்பட்டார்.
பரிசேயர்கள் இயேசுவை எத்தனையாய் வெறுத்தார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். தம்முடைய தலைமைப் பதவியையும் செல்வாக்கையும் அழித்துப் போடுவதாக தோன்றிய மேசியாவை பரிசேயர்களால் விட்டுவிட முடியவில்லை. ஆகவே அவர்கள் மேசியாவை வெறுத்தனர், அவரிடம் தவறு கண்டுபிடிக்க எப்போதும் முயன்றனர், அவர்களுடைய திட்டங்கள் தோற்றுப் போகும் ஒவ்வொரு நேரத்திலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது எல்லாவித தாக்குதல்களைத் தொடுக்கவும் அவர்கள் தயங்கவில்லை. மேசியாவானவர் எல்லாவித நகைப்புகளுக்கும் உள்ளானார். அதில் வெறுப்பும் தீமையும் கலந்த புறந்தள்ளுதல் நிறைந்திருந்தது. மேசியா எப்படியாக நொறுக்கப்படுவார் என ஏசாயா இப்படியாக தீர்க்கதரிசனம் கூறியிருந்தான். இவ்வுலகிலே இயேசுவிற்கு எந்த வகையான வரவேற்புக்கிடைக்குமென மேசியா வருவதற்கு 700 வருடங்களுக்கு முன்னதாக ஏசாயா தீர்க்கதரிசி கூறிய விளக்கமான தீர்க்கதரிசனத்தின் மூலம் இதனை நாம் உறுதிப்படுத்தலாம்.
 
 
நீரினாலும் இரத்தத்தினாலும் வந்த இயேசு கிறிஸ்துவை மக்கள் விசுவாசித்தார்களா?
 
ஆயினும் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, மேசியாவாகிய இயேசு தனது செயல்களை நிறைவு செய்தார். இந்த மேசியா இயேசு கிறிஸ்து என்பதை இஸ்ரவேல் மக்களும் உலகம் முழுவதும் உள்ள அனைவரும் அறிந்து அவரை விசுவாசிக்க வேண்டும். இஸ்ரவேலர்களினதும், உலகம் முழுவதிலுமுள்ள அனைவரினதும் ஞானஸ்நானத்தை மேசியா பெற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு, இப்படியாக படுமோசமான அளவிற்கு நசுக்கப்பட்டார். இப்படிச் செய்ததின் மூலமாக, அவருடைய ஊழியங்களை விசுவாசிக்கும் அனைவரையும் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நிறைவாக இரட்சித்து இந்த விசுவாசிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக அங்கீகரித்துள்ளார். மேசியா தாழ்மையின் சாயலாக இவ்வுலகத்திற்கு வந்தார் எனவிருந்தும், அவர் ஞானஸ்நானம் பெற்றார் எனவிருந்தும், சிலுவையில் மரித்து, ஒவ்வொருவருடைய பாவங்களையும் அழிப்பதற்கு மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதை விசுவாசிப்போர் மிகவும் குறைவானவர்களே. நாம் வாழ்வதற்கு, இயேசுவே உண்மையான இரட்சகர் எனவும் மேசியா எனவும் நாம் விசுவாசிக்க வேண்டும், ஏனெனில் அவர் இஸ்ரவேலரிற்கு மட்டுமின்றி முழு மனித குலத்திற்கும் மேசியாவாக இருக்கிறார்.
இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய சொந்த பாவங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக் கொண்டு நம்முடைய சொந்த துக்கங்களையும் நம் சொந்த நோய்களையும், நம் சொந்த சாபங்களையும் சுமந்திருந்தாலும், சில மக்கள் "இத்தனை நொறுக்கப்படும் அளவிற்கு அவர் என்ன பாவம் செய்தார்?" என எண்ணலாம். ஆனால் இயேசு, பாவங்களற்ற தேவகுமாரன். நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்தவராக, நம்முடைய இடத்திலிருந்து மேசியா துன்பமுற்றார், நமது பாவத்தின் எல்லாச் சாபங்களையும் துக்கங்களையும் நசுக்கப்படுதலையும் அவர் சுமந்தார். இயேசு இவ்வுலகிற்கு வந்து 33 வருடங்களாக வாழ்ந்திருந்தபோது அவர் அனுபவித்த நொறுக்கப்படுதலின் மூலமாக, நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை இரட்சித்தார்.
மீண்டுமாக பார்க்கும்போது, ஏசாயா தீர்க்கதரிசியால் கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தையின் மூலமாக நீர் மற்றும் ஆவியால் வந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை அக்கால மக்கள் விசுவாசித்தார்களா? இப்போது நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தது யார்? இப்போதும் கூட, தாம் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக்கொண்டாலும், அநேக மக்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது ஆர்வமில்லை.
இங்கு இந்த முக்கிய வசனங்களில், தேவகுமாரன் இப்பூமிக்கு வந்து, ஞானத்துடன் செயல்பட்டு, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, அவற்றிற்காக தீர்க்கப்பட்டு நம்மை இரட்சிப்பார் என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா தீர்க்கதரிசனம் கூறுகிறான். ஆனால் அவர் நிறைவேற்றிய சத்தியத்தை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், இப்போதிலிருந்து, அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவைத் தமது மேசியாவாக அங்கீகரித்து அவரை உயர்த்துவார்கள் என்று நிச்சயமாயிருக்கிறேன். இஸ்ரவேல் மக்களின் பாவங்களினாலும், உங்களதும் எனதும் பாவங்களினாலும், முழு மனித குலத்தின் பாவங்களினாலும், மேசியாவாகிய இயேசு நொறுக்கப்பட்டார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்களா? நீங்கள் இதனை விசுவாசிக்க வேண்டுமென ஏசாயா தீர்க்கதரிசி விரும்பியிருக்க வேண்டும், அதனால் தான் மேசியாவின் ஊழியத்தைக் குறித்து இப்படியாக அவன் தீர்க்கதரிசனம் கூறினான்.
 
 
வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போல மேசியா காணப்பட்டார்
 
மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வருவதைக் குறித்து இப்படித்தான் தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவித்தான், அவர் இப்பூமிக்கு வரும்போது இரங்கத்தக்கத் தோற்றத்தில் இருப்பார் என அவன் கூறினான், "இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" (ஏசாயா 53:2). என மேசியா இருப்பார் என ஏசாயா கூறினான், மனித மாமிசத்தினால் இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தபோது, மக்களால் விரும்பப்படக்கூடிய எவ்விதத் தோற்றமும் இல்லாமல் அவர் இருந்தார், "அர்னால்ட் சுவார்ஷநேகரைப்" போன்றோ, "சில்வர்ஸ்டர் ஸ்டாலினைப்" போன்றோ அவர் உயரமான சதைப்பிடிப்புள்ள பயில்வான் அல்ல. நாம் அவரை நோக்கிப்பார்த்தால், அவரைக் குறித்து இரங்குபவர்களாகவும், அவருடனே கூட பச்சாதாபப்படுகிறவர்களாகவும் இருக்கும்படி அவர் சாதாரணமாக இருந்தார். அப்படியிருந்தும், அவருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயமாயிருந்தது.
மேசியாவாகிய இயேசு கிறிஸ்து தோற்றத்தில் மட்டும் ஏழ்மையானவராக இருக்காமல், பொருள்வளத்திலும் ஏழ்மையானவராகவே இருந்தார். அவருடைய மாமிசப்படியான தந்தையாகிய யோசேப்பு வெறும் தச்சன். இப்போதைப் போலவே, ஒரு தச்சனால் பராமரிக்கப்படும் குடும்பமானது, செல்வத்துடன் வாழ முடியாது. மிகவும் கடினமான உழைப்பினால் மட்டுமே சிறிதளவு அவர்களால் வாழமுடியும்.
மேசியா இப்பூமிக்கு வந்தபோது, பாடசாலை எதற்கும் அவர் செல்லவில்லை. இதனைக் காரணம் காட்டி அவரை கவிழ்க்க பரிசேயர்கள் முயன்றனர், ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்களின் அம்முயற்சிகள் மேசியாவான இயேசு கிறிஸ்து தேவகுமாரர் என்பதையே வெளிப்படுத்தும். கமாலியேலின் பாடசாலையில் இயேசு காலடி எடுத்து வைக்கவில்லை, அது அக்காலத்தின் மிகச்சிறந்த பாடச்சாலையாக இருந்தது. அங்கு சட்டத்தைக் குறித்த மிகப்பெரும் அறிஞனாகிய கமாலியேல், சட்டத்தைப் போதித்து வந்தான். இப்பாடச்சாலையில், சட்டத்தைக் குறித்த மிகப்பெரிய ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் படிக்க முடிந்தது, இவ்வுலகின் அறிவில் மட்டும் பயிற்சி பெறாமல், சட்டத்தைக் குறித்தும் பயிற்சி பெற்றார்கள். இத்தகைய ஒரு பாடசாலையில் இயேசு பயிற்சி பெறவில்லை. அவர் பாடசாலை ஒன்றில் படித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியிருந்தும் கூட, பழைய ஏற்பாட்டின் சட்டத்தைக் குறித்து மேசியா அனைத்தையும் அறிந்தவராயிருந்தார், மேசியாவைக் குறித்து பழைய ஏற்பாடு குறிப்பிட்ட இடங்களில், அதனைக் குறித்து மற்றவர்களை விட அதிக ஞானம் உடையவராயும் பெரிதான விசுவாசமுடையவராயும் இருந்தார். அவர் கூறிய எதுவும் தர்க்கரீதியாக பொருந்தாமலும், கர்த்தரின் சட்டத்திற்கு மாறுபட்டதாகவும் இருக்கவில்லை.
 
 
மேசியா ஏன் இப்படி நொறுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, நசுக்கப்படவேண்டும்?
 
இஸ்ரவேல் மக்களின் உண்மையான மேசியாவாக மாறுவதற்கும் அவர்களை அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்து அவர்களை கர்த்தரின் மக்களாக்குவதற்கும், நம் மேசியா இவ்வுலகிற்கு வந்து தனது சித்தத்துடனே தன் எல்லா துன்பங்களையும், வெட்கக்கேடுகளையும், கொடுமைகளையும், கேவலப் பேச்சுகளையும் தழுவினார். இஸ்ரவேல் மக்களுக்காக மேசியா கடந்து சென்ற துன்பங்களும் தண்டனைகளும் மிக அதிக தியாகமும், நொறுக்கப்படுதலுமாகும். நமக்காக மேசியா அனுபவித்த நெருக்கப்படுதல்கள் மிகப்பெரிய துன்பமாக இருந்தபடியால், நாம் நமது முகத்தை அவரிடமிருந்து மறைத்துக் கொண்டிருக்கிறோம். நம் பாவங்களிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் நம்மை இரட்சிக்கக் கூடிய மேசியாவாக இயேசுவானவர் இருப்பதினலே, எல்லா வகையான மனிதர்களுக்கும் முன்னதாக விவரிக்க முடியாத அளவு நசுக்கப்பட்டதன் மூலமும் நொறுக்கப்பட்டதன் மூலமும், அவர் நம்மை நம் பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார். இயேசு இப்படியாக இவ்வுலகில் நசுக்கப்பட்டார்.
மேசியாவாகிய இயேசுவானவர் இத்தனையாய் நெருக்கப்பட்டு நொறுக்கப்பட்தினாலே, அக்காலத்தின் மக்களால் அவரைக் காணச் சகிக்கவில்லை. இயேசு உங்கள் மற்றும் எனது மேசியாவாகவும், எல்லா மனிதர்களின் மேசியாவாகவும் வந்தமையால், இந்த மேசியாவின் பாத்திரத்திற்கேற்ற செயல்களை நிறைவேற்றவும் முழுமைப் படுத்தவும் அவர் மிகவும் நசுக்கப்பட வேண்டியிருந்தது என்பதையும், அப்படி செய்ததினால் அவர் நம்மை பாவங்களிலிருந்தும் பாவத்தின் தண்டனையிலிருந்தும் விடுவித்தார் என்பதையும் நாம் மறக்கலாகாது.
மேசியா சிலுவையில் அறையப்பட்ட பிறகும் மக்கள் அவரை பரியாசம் செய்வதை நிறுத்தவில்லை: "நீர் ஏன் அங்கேயிருந்து கீழே இறங்கக் கூடாது? நீர் தேவகுமாரரானால், சிலுவையை விட்டு கீழே இறங்கும். நீர் எப்பட் தேவகுமாரராயிருக்க முடியும்? நீர் தேவகுமாரரேயானால், கீழே இறங்கி, உமக்கு அருகில் இருக்கும் கள்ளனைக் காப்பாற்றும்; அது ஏன் உம்மையே காப்பாற்றிக்கொள்ளும்!" அவர்கள் தொடர்ந்து கேலி செய்தனர்: "ஓ, நீர் ஏன் இந்த கற்களை அப்பமாக்கக் கூடாது? நீர் தேவகுமாரனாக இருந்தால் அதனை நிரூபியும்! நாம் நம்பும்படியாக அடையாளங்களைக் காட்டும். அதனைச் செய்யமுடியாவிட்டால் நீர் எத்தகைய மேசியாவோ? எத்தனைப் பரிதாபம்!"
மக்கள் இப்படியாக மேசியாவை அவமானப்படுத்தி, தாழ்மைப்படுத்தி முடிவில்லாது கேலி செய்தனர். அவர்கள் அவரின் ஆடைகளை அகற்றினர், முகத்தில் அறைந்தனர், அவர் மீது துப்பினர். கிறிஸ்து மிகப்பெரிய பரியாசங்களையும், அவமானங்களையும், தாழ்மையையும் சந்தித்தார். இந்த வகைக் கொடுமையை இதற்கு முன்னர் பார்த்திருக்கவும் முடியாது, இனிமேல் பார்க்கவும் முடியாது. அவருக்கு சிலுவை மரணம் தண்டனையாக வழங்கப்பட்டது, இத் தண்டனை அக்காலத்திய மிகமோசமான குற்றவாளிகளுக்காக நியமிக்கப் பட்டிருந்தது. நமது மேசியா சேவகர்களால் தாக்கப்பட்டார், அருடைய கைகளும், கால்களும் சிலுவையில் ஆணியால் அறையப்பட்டன, மேலும் அவரின் சரீரத்திலிருந்த எல்லா இரத்தமும் சிந்தப்பட்டது.
இத்தகைய தன்டனைகளையும், வேதனையையும், நசுக்கப்படுதலையும் இயேசுவானவர் சுமந்ததினாலே, நமக்காக, அவரால் அவரின் மேசியாவிற்குரிய ஊழியத்தை நிறைவேற்ற முடிந்தது. அவர் சிலுவையில் அறையப்பட்டதினாலே, நம்முடைய எல்லாப் பாவங்களையும், நமது பாவத்திற்கான எல்லாத்தண்டனைகளையும் சுமந்தார். நானும் நீங்களும் அனுபவிக்கவேண்டிய எல்லா நசுக்கப்படுதல்களையும் நம்முடைய இடத்திலிருந்து அவர் அனுபவித்ததுடன், நமக்காக தன்னுடைய சொந்த வாழ்வையே கொடுத்தார். இயேசுவே நமது இரட்சகர் என்று விசுவாசிக்கும் நமக்கு இப்போது இந்த மேசியா இரட்சகராயினார், அவர் தன் விருப்பத்துடனே நமது மேசியாவாகினார். அவர் தன்னுடைய பிதாவின் சித்தப்படி இப்பூமிக்கு வந்து நமது பாவங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்காக பாவத்தின் தண்டனையை சிலுவையில் சுமந்து சென்று மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழும்பினார்-இவற்றையெல்லாம் நம்மை இரட்சிக்கவே செய்தார்!
என் சகோதர சகோதரிகளே, இந்த வித்தியாசமானர்களுக்கு முன்பாக இத்தகைய துன்பங்களையும் தாழ்மையையும் அனுபவிப்பது இயேசுவிற்கு இலகுவாயிருந்தது என நீங்கள் எண்ணுகிறீர்களா? நாம் அவருடைய இடத்திலிருந்து இத்தகையத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்து, ஆடைகளில்லாமல் நிர்வாணிகளாய், அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டிருந்தால், அதுவும் நமது சொந்த குடும்பதாரோ அல்லது கணவர்களுக்கு முன்னதாகவோ அல்லது மனைவிகளுக்கு முன்னதாகவோ, அல்லது நமக்கு அன்பானவர்களுக்கு முன்னதாகவோ மட்டுமில்லாது நமது எதிரிகளுக்கும் முன்னதாக சிலுவையில் அறையப்பட்டிருந்தால் அப்படி அறையப்படுவதற்கு முன்னரேயே நாம் பைத்தியம் பிடித்தவர்களாகியிருப்போம். கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையப்பட்டதினாலே, அவரின் தாழ்மையை எல்லோராலும் காணமுடிந்தது. ஏதோ மறைவான இடத்தில் இல்லாமல், உயரமான இடத்தில் சிலுவையில் அறைந்ததினால், எல்லோராலும் அவரைச் சுட்டிகாட்டி துப்ப முடிந்தது.
கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக இன்னமும் பெரிய துன்பங்களும், துக்கங்களும், கஷ்டங்களும் அவருக்கு வந்தன. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக எல்லாவித துன்பங்களையும் மக்கள் அவருக்கு கொடுப்பதை நிச்சயப்படுத்தினர். பெருந்திரளான மக்களுக்கு முன்னதாக அவர் எடுத்து வரப்பட்டு அவர்கள் நடுவில் தீர்க்கப்பட்டார், அப்போது அவரை நோக்கித் துப்பினார்கள். அத்துடன் மட்டுமல்லாமல், தலைமை ஆசாரியனின் வேலைக்காரனால் தன் முகத்தில் அடிக்கப் பட்டார். அவரை உமிழ்ந்தார்கள்! மக்கள் அவருடைய முகத்தில் அறைந்தார்கள், அடித்தார்கள், கல்லை எறிந்தார்கள்! மேசியாவாகிய இயேசு வேறு எதற்காகவும் இல்லாது நமக்காகவே இந்த நசுக்கப்படுதலை அனுபவித்தார்!
நமக்காக அவர் நசுக்கப்பட்டார் என வேதவசனங்கள் கூறுகின்றன, அது கூறுகிறது "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5) மேசியா அத்தகைய பாடுகளினூடே சென்றதினால், இஸ்ரவேலர் உட்பட எல்லா மக்களையும் அவர்களின் பாவங்களிலிருந்தும், அப்பாவங்களுக்கான தண்டனையிலிருந்தும் அவரால் அவர்களை விடுவிக்க முடிந்தது. யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களையும் அப்பாவங்களுக்கான தண்டனையையும் இந்த மேசியா ஏற்றுக்கொண்டார், தன்னுடைய சொந்த மக்களாலும், ரோம படைவீரர்களாலும், உலகின் பல நாட்டு மக்களாலும் நசுக்கப்பட்டதின் மூலமாக மேசியாவாக தனது ஊழியத்தைச் செய்து முடித்தார்.
மேசியாவானவர் தன்னை எதிர்த்து நின்ற மக்களைக்கூட அவர்களின் எல்லாப் பாவங்களிலும் இருந்து இரட்சிப்பார் என்று கர்த்தர் தீர்க்கதரிசனம் கூறினார். அவர் முழு மனித குலமும் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பார் - இப்படியாக அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறப்பட்டதற்கினங்க, இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு மேசியாவாக வந்து, இத்தகைய அனைத்து நொறுக்கப் படுதல்களுக்கும் ஊடாகச் சென்று தன்னுடைய விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் நம்முடைய பாவங்களிலிருந்தும் அதற்கான தண்டனைகளிலிருந்தும் உங்களையும் என்னையும் இரட்சித்தார்.
மேசியாவை விசுவாசிப்பதின் மூலமாக பாவத்திலிருந்தும், பாவத்தின் தண்டனைகளிலிருந்தும் இரட்சிப்பானது, பலிக் கிரயத்தைக் கொடுக்காமல் நமக்கு கிட்டவில்லை. இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து எல்லா வித நொறுக்கப்படுதல்களையும் அனுபவித்ததினால் தான், நம்மால் பாவமற்றவர்களாக முடிந்தது, மேலும் நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நமது மேசியா தீர்க்கப்பட்டதினாலேயே, இதனை நமது இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலமாக, இரட்சிப்பின் வரத்தையும் பாவ மன்னிப்பையும் பெற்று கர்த்தரின் பிள்ளைகள் ஆனோம். நம்முடைய மேசியாவினாலேயே நம்மால் சந்தோஷத்தின் பிள்ளைகளாக முடிந்தது.
இந்த மகிழ்ச்சியை நமக்கு கொடுத்தமைக்காகவும் அவருடைய ஆசீர்வாதங்களினால் நம்மை நிரப்பியதற்காகவும் மேசியாவிற்கு நாம் நன்றியறிதலுடையவர்களாய் இருக்க வேண்டும். மேசியா நமக்கு கொடுத்த இரட்சிப்பானது நமது விசுவாசத்தின் மூலம் மட்டுமே நமக்கு வந்தது, நாம் நமது சொந்தத்திலிருந்து அவருக்கு எதையும் கொடுக்காவிட்டாலும், அவர் தாமே தன்னுடைய விலை மதிப்பில்லாத காணிக்கையை பிதாவாகிய கர்த்தரிடம் கொடுத்தார். இந்த நசுக்கப்படுதலினால் பாடுகள் பட்டதன் மூலம் கர்த்தர் தாமே நம்மை இரட்சித்தார் என விசுவாசித்து அதற்காக அவருக்கு நன்றி கூறவும் வேண்டும்.
 
 
இஸ்ரவேலே கேள், திரும்பி இயேசு கிறிஸ்துவை நீ விசுவாசி
 
இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பி மேசியாவாகிய இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசிக்க வேண்டும், இந்த நொடிப்பொழுது வரையிலும், தம் மேசியா ஏற்கெனவே வந்து விட்டார் என்பதை இஸ்ரவேலர்கள் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. தீர்க்கதரிசியாகிய ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்ததைப் போல, கர்த்தரின் ஊழியராகிய மேசியா இப்பூமிக்கு வருவார், மேலும் மேசியா இவ்வுலகிற்கு வந்து, தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு சிலுவையில் மரித்து நம்மை இரட்சித்தார் என்று இந்த தீர்க்கதரிசன வார்த்தைக் கூறியதைப் போல, இரட்சிப்பிற்கான அனைத்து செயல்களையும் இயேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இஸ்ரவேல் மக்கள் இப்போது திரும்பி இந்த சத்தியத்தை அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும். அவர்களுடைய சொந்த மனிதர்களே இயேசுவை சிலுவையிலறைந்த பாவத்தைச் செய்தார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும் அவர்கள் தம்மைத் தாமே அறிந்து கொள்ள வேண்டும். தாம் தம்முடைய பிறப்பிலிருந்து பாவக்குவியல்களே என்பதை ஏற்றுக் கொண்டு இப்போது இந்த மேசியாவை விசுவாசிப்பதின் மூலமாக, அவர்கள் தம்முடைய பாவங்களிலிருந்தும் பாவத்தின் தண்டனையிலிருந்தும் இரட்சிக்கப்படவேண்டும்.
இப்போது வேறு மேசியா இல்லை. இயேசு கிறிஸ்து ஏற்கெனவே மேசியாவாக வந்ததினால், வேறு மேசியா இல்லை. அங்கு எப்படி இன்னொரு மேசியா இருக்க முடியும்? அங்கு எப்படி இன்னொரு இரட்சகர் இருக்க முடியும்? எதிர்காலத்தில் இன்னும் பல கஷ்டங்களை இஸ்ரவேல் மக்கள் அனுபவிக்கும் போது, ஹாலிவுட் கதாநாயகனான சூப்பர்மேனைப் போன்று, யாராவது ஒருவர் வந்து, அவர்களின் மேசியா ஆவான் என்று இஸ்ரவேலர்கள் நம்பிக்கொண்டிருக்க முடியுமா?
இப்போதிலிருந்தாவது, இயேசு கிறிஸ்துவைத் தமது மேசியாவாக இஸ்ரவேலர்கள் அங்கீகரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தம்முடைய உண்மையான மேசியா என அவர்கள் விசுவாசிக்க வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்பு அவர்களின் மேசியா இப்பூமிக்கு வந்து விட்டார், அவர்களை ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகளாக்குவதற்காகவும் அவர்களுடைய பாவங்களை எடுத்துக் கொள்வதற்காகவும், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படுவதைப் போல் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டார், அவர்கள் ஆவிக்குரிய விருத்தசேதனம் பெற வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தார். யோவானிடம் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையைச் சுமந்து நசுக்கப்படுவதற்காக தன் இரத்தத்தைச் சிந்தியதாலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததாலும் அவர்களின் பாவங்களை எல்லாம் மறையச் செய்த உண்மையான இரட்சகராக இயேசு மாறினார்.
மேசியாவை விசுவாசிப்பதற்காக இஸ்ரவேலர்கள் மனந்திரும்ப வேண்டும். இப்போது இஸ்ரவேல் மக்கள் இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக ஏற்றுகொள்வது மட்டுமே நிறைவேறவேண்டிய ஒன்றாய் இருக்கிறது. ஏசாயாவால் தீர்க்கதரிசனம் கூறப்பட்ட மேசியாவானவர் இயேசு கிறிஸ்துவே என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டவர் இயேசுவே அன்றி வேறு யாரும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து அதனை விசுவாசிக்கவேண்டும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிறைவேறியது. அவர் அதில் சிறிதளவு விஷயங்களைக் கூட விட்டுவிடவில்லை. முக்கிய வசனங்களில், அவர் அநேக ஜாதிகளின் மேல் தெளிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏசாயா 52:14-15 கூறுகிறது "மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்."
இப்பூமிக்கு வந்ததின் மூலமாக இயேசு கிறிஸ்து மிகவும் கொடிய பாடுகளைப்பட்டார், இப்பூமியிலுள்ள கொடிய குற்றவாளிகள் மரண தண்டனைப் பெறும் போது அவர்கள் அனுபவித்த வேதனைகளை விட அவருடைய வேதனை அதிகமாயிருந்தது. இவ்வுலகின் கொடிய குற்றவாளிகளுக்கும் மேலாக அதிக வேதனையையும் நசுக்கப்படுதலையும் தன்மீது ஏற்றுக் கொண்டவராய் தன்னைத்தானே அவர் பலியாக்கினார். அவரை விசுவாசிப்பதின் மூலமாக பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் அவருடைய மக்களை அவர் இரட்சித்தார். இப்படியாகவே அவர் அவர்களை இரட்சித்தார்.
மக்கள் இரட்சிப்பைக் குறித்த ஆச்சரியமான செய்தியை கேள்விப் படுவார்கள், அதனை அவர்கள் இதுவரைக் கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதை இன்னமும் கேள்விப்படாத அனைவரும் அதனைக் கேள்விப்பட்டு அதனை விசுவாசிப்பார்கள்.
 
 
இயேசுவே மேசியா, அவர் ஒரு முறை வந்தார் மேலும் மீண்டும் அவர் வருகிறார்
 
இன்று நாம் இறுதி காலத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். அது மரணம் மற்றும் உபத்திரவத்தின் காலமாக இருக்க போகிறது, ஆயினும், மேசியாவை விசுவாசிப்பவர்களுக்கு மரணத்தைக்குறித்த பயமில்லை. அதற்கு மாறாக, அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் வரும் உயிர்தெழுதலுக்காகவும், பரலோகத்தின் சந்தோஷத்திற்காகவும் காத்திருக்கின்றனர். உலகின் மீது இருள் கவிழ்கிறது என்பதன் பொருள் நீதிமான்களாகிய நாமும் இருண்டுபோய் விடுவோம் என்பதல்ல, இந்த நற்செய்தி நன்கு பரவிய பிறகு, மேசியா நிச்சயமாக திரும்புவார்.
நம்முடைய மேசியாவாகிய இயேசு கிறிஸ்து, கர்த்தரின் ஆட்டுகுட்டியாகவும், பலி காணிக்கையாகவும் இவ்வுலகிற்கு வந்தார். மேலும் தன்னுடைய சரீரமானது யோவானால் ஞானஸ்நானம் பெறும்படி செய்து, அதனை சிலுவைக்கு கொடுத்தார். கத்தரிப்பவர்களுக்கு முன்னால் நிற்கும் செம்மறியாட்டைப் போல, மேசியாவாகிய இயேசு அமைதியாக நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நியாயத்தீர்ப்பிற்காக சிலுவையில் பெரிதான துன்பங்களையடைந்து, மூன்று நாட்களிலே மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, விசுவாசிக்கும் அனைவருக்கும் நிறைவான இரட்சகராயினார்.
அக்காலத்தில் இயேசு கிறிஸ்துவே மேசியா என்று அறிந்தவர்கள் மிகவும் சிலரே. 2000 வருடங்களுக்கு முன்னால் இவ்வுலகில் அமைதியாக பிறந்து, தன் ஞானஸ்நானத்திற்குப் பிறகு மூன்று வருடங்களுக்கு ராஜ்யத்தைக் குறித்த நற்செய்தியை அறிவித்து, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்று வெகு சிலருக்கே இயேசு கிறிஸ்து மேசியாவாகியது தெரியும். கர்த்தரை நோக்கிப் பார்த்து அவரை விசுவாசித்தவர்கள், நம் தேவன் அமைதியாக தன் கடமைகளை செய்து முடித்த மேசியா என்று அறிவித்தனர்.
மேசியா இப்பூமிக்கு வந்து நொறுக்கப்பட்டதின் மூலமாக நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என அக்கர்த்தரின் ஊழியர்கள் உலகம் முழுவதும் பரப்பினர். அச்சிடும் தொழில் நுட்பத்தை வளரச்செய்தும், உலகின் வரலாற்றினை மாற்றியமைத்தும், வல்லமையானதும் செல்வம் நிறைந்ததுமான நாடுகள் இந்த நற்செய்தியைப் பரப்புமாறு செய்து, கர்த்தர் தாமே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.
இயேசுவே மேசியா. இயேசுவே மேசியா. இயேசுவே மேசியா! இயேசுவை உங்கள் மேசியாவாக விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இயேசுவே தேவகுமாரர். இம்முழு பிரபஞ்சத்தையும் படைத்தவர் இயேசுவே. நம்முடைய இரட்சகராகிய மேசியா அவரே! இயேசுவே மேசியா என்பதையும், அவருடைய ஞானஸ்நானத்தைக் குறித்தும், அவருடைய சிலுவை மரணத்தைக் குறித்தும் உயிர்தெழுதலைக் குறித்தும், கர்த்தரின் ஊழியர்கள் தொடர்ந்து பிரசங்கித்து வருகின்றனர்.
2,000 வருடங்களுக்கு முன்னதாக, இயேசு என்ற இளைஞர் இவ்வுலகிற்கு வந்தார் என்பதையும், அவர் 30 வயதினராகும் போது, யோவானால் ஞானஸ்நானம் பெற்று மனிதகுலத்தின் பாவங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதையும், சில இஸ்ரவேலின் இளைஞர்கள் அறிந்தனர். அச்சமயத்தில் இயேசுவின் சொந்த சீடர்களுக்கு மட்டுமே, அவர் மேசியா என்பது தெரியும். உண்மையாகவே கர்த்தருக்கு பயந்த வெகு சில மக்களுக்கே இந்த ஞானமானது பகிர்ந்து கொள்ளப்பட்டது - மற்றவர்களுக்கு இச்சத்தியம் மறைக்கப்பட்டிருந்தது. மேசியா உலகின் பாவங்களையெல்லாம் சிலுவைக்கு எடுத்துச் சென்றார் என்பதையும் அவர் அதில் மரித்தார் என்பதையும், மரித்தோரிலிருந்து அவர் மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதையும், இஸ்ரவேல் நாட்டின் 500 இற்கும் குறைவான பரிசுத்தவான்களே (1 கொரிந்தியர் 15:6) அறிவர். மற்றவர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது.
இயேசு கிறிஸ்து மரித்து மீண்டும் உயிரோடு எழுந்த ஐம்பதாவது நாளில், பரிசுத்த ஆவியானவர் அவரின் சீடர்கள் மேல் அறையிலிருந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களின் மீது இறங்கினார். இதன்மூலமாக அவர்கள் அன்னிய பாஷைகளில் பேசி இயேசு கிறிஸ்துவே மேசியா என்பதை அறிவிக்கத் தொடங்கினர், அதன் பிறகு அவருடைய சீடர்கள் மரணபயம் ஏதுமின்றி "இயேசுவே மேசியா. மேசியாவே நம் இரட்சகர், உயிரோடெழும்பிய இயேசு நம் மேசியா" என்று துணிச்சலுடன் அறிவிக்கலாயினர். இப்போது அநேக மக்கள் விசுவாசிக்கத் தொடங்கினர்.
மேசியாவாகிய இயேசுவின் மூலமாக, நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும், அப்பாவங்களுக்கான தண்டனையிலிருந்தும் கர்த்தர் உங்களையும் என்னையும் இரட்சித்தார். நம்மை இவ்வாறாக நமது பாவங்களிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சிக்க இத்தனைப் பெரிதான நசுக்கப்படும் பாடுகளை அவர் அனுபவித்ததினால், நாம் முற்றிலுமாக அவரை விசுவாசிக்க வேண்டும்; விசுவாசிக்காதவர்கள் கூட மனம் வருந்தி, முற்றிலுமாக திரும்பி விசுவாசிப்பதுடன், இந்த சத்தியத்தை விசுவாசத்துடனே பரப்பவேண்டும்.
இப்போது கூறப்போனால், இஸ்ரவேல் மக்கள் மிகவும் தீவிரமான ஒரு நிலையில் பயந்தவர்களாய் உள்ளனர். ஆகவே கர்த்தர் அவர்களுக்கு உண்மையாகவே பேசிய ஆசரிப்புக்கூடார வார்த்தையை அவர்கள் கேட்கவேண்டும். நாமும் கூட இப்போது முடிவு காலங்களுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆசரிப்புக்கூடாரத்தில் காணப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நிச்சயமாக இஸ்ரவேல் மக்களைச் சென்றடையும். கர்த்தர் அவர்களுக்கு கூறிய மேசியாவானவர் இயேசு கிறிஸ்துவே என்று நிச்சயமாக அவர்கள் விசுவாசிப்பர்.
பலியிடும் முறையைக் குறித்து இஸ்ரவேல் மக்களிடம் கர்த்தர் ஏற்கெனவே பேசியுள்ளார். அதனை அவர்கள் விசுவாசித்தும் உள்ளனர், குறிப்பாக, இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் பலியிடும் முறைக்கு ஏற்றபடி காணிக்கைகளை செலுத்த இன்னமும் அவர்கள் விருப்பமுள்ளவர்களாய் உள்ளனர். வனாந்தரத்தில் வாழும் அடிப்படைவாதிகள் இஸ்ரவேலர்களின் நடுவில் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். இப்போதும் கூட, இத்தகைய வனாந்தரத்தில் வாழுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், முன்பு அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் காணிக்கை அளித்ததைப் போல் அதே விதமான காணிக்கைகளை இன்னமும் கொடுக்கின்றனர். அவர்கள் ஆரோனின் சந்ததியினராவர். தம்முடைய குடும்பங்களில் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவதற்காக நகரங்களில் வாழுவதற்கு பதிலாக வனாந்தரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்ரவேலராயிருந்தாலும், அவர்கள் தனித்து வாழும் கோத்திரமாக, சாதாரண மனிதர்களிடமிருந்து பிரிந்து வாழுபவர்களாகவே உள்ளனர். மேசியா ஏற்கெனவே நம்மிடம் வந்து விட்டார் என்பதையும் நமது விசுவாசித்திற்கேற்றபடி அவர் நம்மை இரட்சித்தார் என்ற ஆசரிப்புக்கூடார வார்த்தைகளையும் இம்மக்களுக்கும் கூட நாம் பிரசங்கிக்க வேண்டும்.
இயேசு இப்பூமிக்கு வந்து, இப்படியாக நசுக்கப்பட்டு, நம்முடைய இடத்திலிருந்து நியாயந்தீர்க்கப்பட்டதற்காக அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும். நமது இரட்சகராக, நம்முடைய பாவங்களில் இருந்தும் பாவத்தின் தண்டனையிலிருந்தும், உங்களையும் என்னையும் காப்பாற்றவே அவர் இவற்றைச் செய்தார்.
 
 
"நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது"
 
ஒரு தவறான அஞ்சலாக வந்ததைப் போல், நாம் அனைவரும் நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும், பாவத்திற்கான நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சிக்கப்பட்டது எதேச்சையானது அல்ல. நமக்கு சிலவேளைகளில், சங்கிலித் தொடராக, இந்தக் கடிதத்தை 20 பேருக்கு அறிவிக்க வேண்டுமெனவும், அப்படிச் செய்யாவிட்டால் நாம் அழிந்து போவோம் என்றும் கூறும் கடிதம் நம் இரட்சிப்பு அல்ல. நம்முடைய இருதயங்களில் ஆசையை வயிற்றுக்கு நிரப்ப ஒரு டெலிபோன் போதுமென்கும், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் எனக் கூறும் பிஸ்ஸா விளம்பரங்களைப் போன்று, நமது பாவங்களில் இருந்து இரட்சிப்பு வருவதில்லை.
கர்த்தர் தன்னுடைய குமாரரை அனுப்பி, நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர்மீது சுமத்தி, அவரைப் பாடுகளை அனுபவிக்கச் செய்து, நம்முடைய இந்த எல்லாப் பாவங்களுக்குமாக அவர் நொறுக்கப்பட்டதின் விளைவாக நம் இரட்சிப்பு வந்தது. இதனால் தான் நீங்களும் நானும் அவரை முழு இருதயத்துடனே விசுவாசித்து அவருக்கு நன்றியும் கூறவேண்டும். நம்முடைய இரட்சிப்பு எப்படி வந்தது என்பதை நன்கு அறிந்த பிறகு, கிழிந்து போன காலணிகளை போல அதனை எப்படி வீசி விட முடியும், உடைந்து போன தேவையில்லாத கருவியை போல் எப்படி எறிந்து விட முடியும், அல்லது அது வேறு யாருக்கோ சொந்தமானது என எப்படி நாம் அலட்சியமாக இருக்க முடியும்?
கர்த்தரின் ஆலயத்திற்கு சென்றும் கூட, உங்களில் யாராவது பாவ மன்னிப்பை இன்னமும் பெறாமல் இருக்கிறீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள் இன்னமும் இங்கே இருக்கிறார்களா? இங்கு அத்தகைய மக்கள் இருந்தால், காலம் மேலும் செல்லுவதற்கு முன்னதாக அவர்கள் மனந்திரும்பி மேசியாவை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் இழந்து போனவர்களாகவும், எப்பாதையின் வழியே செல்லுவது என்பதையும் அறியாதவர்களாய் இருந்தால், உங்கள் முழு இருதயத்துடனும் சத்திய வார்த்தையை விசுவாசியுங்கள், இதனை விசுவாசிக்கிறவர்கள் தேவகுமாரரின் அன்பை நிராகரிக்கிறார்கள், அவர்களுக்காகவே இப்பாடுகளினூடே சென்று அவர்களை இரட்சிக்க இந்த அன்பே காரணமாயிருந்தது.
அவருடைய அன்பை குறைவாக மதிப்பிட்டு அதனைத் தள்ளி விடுபவர்கள் சாபங்களினால் தொடரப்படுவர். வேத வசனம் நம்மிடம் கூறுகிறது, "நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது" (உன்னதப்பாட்டு 8:6). கர்த்தருடைய அன்பு வல்லமையுடையதாகவும் மகத்துவமானதாகவும் இருக்கிறது, ஆகவே அதனை நிராகரிக்கும் மக்கள் இறுதியில் கொடிய தண்டனையை அடைவர். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒருவன் பாவத்துடன் இருக்கும்போதே மரித்தானானால், அவன்/அவள் நரகத்தில் இரக்கமில்லாத வேதனையை அடைவான் என்று இது நமக்கு கூறுகிறது. வெறுப்பும் பாதாளத்தைப் போன்று கொடியது. இந்த அளவு மேசியா உங்களை நேசித்திருக்கும் போது, உங்களை இரட்சிப்பதற்காகவே அவர் ஞானஸ்நானம் பெற்று, தன்னுடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி, எல்லாவித நொறுக்குதல்களினாலும் பாடு பட்டிருக்கும் போது, இந்த அன்பை நீங்கள் விசுவாசிக்காமல் அதனைத் தள்ளிவிட்டால், நீங்கள் இந்த கொடிய வேதனையை நிச்சயமாக அனுபவிப்பீர்கள். அது நரகத்தை தவிர வேறில்லை.
கர்த்தர் இப்படியாக கூறினார், "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறபடியே" (எபிரெயர் 9:27). நாம் மரிக்கும் போது, நம் மாமிசம் அழிந்து போகும் ஆனால் கர்த்தருக்கு முன்னதாக அது நமது முடிவல்ல. கர்த்தரின் அன்பை நிராகரிப்பவர்களை கொடூரமாக விழப்பண்ணுவதற்காக, அவர்கள் மரித்து போகாமல் நித்திய காலமும் வாழும் படி அவர் செய்ததுடன், இரக்கமில்லா வேதனைகளை அவர் அவர்களுக்கு அளிப்பார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களை அவர் நித்தியமாக எரியும் நெருப்பில் போட்டு அதன் வேதனைகளை, தொடர்ந்து இடைவிடாது, என்றென்றும் அளிப்பார். இந்த கொடிய பாடுகள் கர்த்தரின் கொடிய வெறுப்பைத் தவிர வேறில்லை. இத்தகைய ஒரு காரியத்தைச் செய்ய கர்த்தரால் கூடாது என நீங்கள் எண்ணுகிறீர்களா? கர்த்தருக்கு சாத்தியமில்லாதது எதுவுமில்லை என்பதை மறந்து போகாதீர்கள்!
நம்மீதான மிகப்பெரும் கர்த்தரின் அன்பானது, நமக்காக அவரை பாடுகளை அனுபவிக்கச் செய்து, நம்முடைய எல்லா சாபங்களிலிருந்தும், நம் எல்லாப் பாவங்களிலிருந்தும், நம் எல்லாத் தண்டனைகளிலிருந்தும் நம்மை இரட்சித்தது, மேசியாவின் இந்த அன்பை உங்களின் எந்தப் பிரச்சனையால் கரைக்க முடியும். மேசியாவின் அன்பை விட பெரிதானது ஒன்றுமேயில்லை. இந்த மேசியாவின் மீது விசுவாசமில்லை எனில், கர்த்தரின் அன்பு நம்முடையதாகாது. இந்த அன்பு நமக்கு இந்த கர்த்தரால் மட்டுமே கொடுக்கப்பட்டது, நம்முடைய மேசியாவாகியவர் அவரே, அவரை நம்மிடம் அனுப்பியது அவருடைய பிதாவேயாகும். மகத்துவமுள்ள திரியேகக் கர்த்தர் இப்படியாக நம்மை அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் இப்படியாக நம்மை இரட்சித்தார். இதனால் தான் நாம் மேசியாவை விசுவாசிக்க வேண்டும், நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும், நாம் அவருக்கு மகிமைச் செலுத்த வேண்டும், என்பதுடன் இதனால் தான் நாம் இந்த மேசியாவின் மீதுள்ள நமது விசுவாசத்தில் திருப்தியடைய வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்த மேசியாவிற்கு நாம் எத்தனை நன்றி உள்ளவர்களாயிருக்கவேண்டும்? இந்த அன்பு எத்தனை பெறுமதியானதென்பதும், இவ்வுலகத்திலுள்ள எதுவும் இதற்கு ஈடாகாது என்பதும், ஒருவருக்கு தெரிந்திருந்தால் அவன்/அவள் நிச்சயமாகவும் அறிவீனமானவராகவும் முட்டாள் மனிதராகவும் இருக்க மாட்டார். நமக்காக நம் தேவன் எத்தகைய கொடிய பாடுகளையும் துன்பங்களையும் கடந்து சென்றார்? நாம் மிகுந்த குறைப்பாடுடையவர்களாயிருந்தாலும் அவருடைய அன்பிற்கு நாம் நன்றியறிதல் உடையவர்களாய் இருப்பதினாலே, அதனைக் குறித்த அறிவில்லாதிருப்பவர்களுக்கு இந்த அன்பைப் பரப்ப நம்மிடம் எஞ்சியுள்ள நம் பலத்தை அர்ப்பணிக்கிறோம்.
கர்த்தருடைய இந்த செயல்களைச் செய்வதற்கு, நாமும் கூட கஷ்டங்களையும் பாடுகளையும் சந்திக்க வேண்டும். நாம் மட்டும் செழித்திருக்க வேண்டுமென சிந்திக்கலாகாது. அவருடைய தியாகம் நிறைந்த அன்பைப் பெற்று அதனைத் தரித்தவர்களாய் நாம் இரட்சிக்கப்பட்டிருந்தால், இந்த அன்பை மற்றவர்களுடனே கூட நாம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். மாமிசத்தின் அன்பினால் அல்லாமல், அவருடைய உண்மையான அன்பினால், நம் பாவங்களை அழிப்பதற்கு இயேசு கிறிஸ்து எல்லாப் பாடுகளையும் அனுபவித்தது போல, நாமும் அவருடைய செயல்களைச் செய்ய வேண்டும். கஷ்டங்களையும், நசுக்கப்படுதலையும், வெறுப்பையும், பாடுகளையும், தள்ளி விடப்படுதலையும் நாம் விருப்பத்துடன் தழுவ வேண்டும். மற்றவர்கள் தம் பாவ மன்னிப்பை இதனால் பெறுவார்கள் என்றால் அவற்றை நாம் அனுபவிக்க வேண்டும். அன்பின் பெயரினால் இத்தகைய வெறுப்பின் பாடுகளை நாம் அனுபவிக்கவேண்டும். நீங்களும் நானும் உண்மையாகவே பாவ மன்னிப்பைப் பெற்றிருந்தால், அத்தகைய அன்பு நம்மிருதயங்களில் காணப்படும் என்பதை விசுவாசிக்கிறேன்.
தாம் முன்பு எப்படியிருந்தோம் என்பதை நன்றாக அறிந்த மறுபடியும் பிறந்தவர்களுக்கு, இயேசுவின் இரட்சிப்பின் அன்பைக் கொடுப்பது எத்தனைப் பெரிதானதும் உறுதியானதும் என்பது தெரியும் "மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்" (மத்தேயு 12:33), என்பதிற்கினங்க, இரட்சிப்பின் கனியைச் சுமப்பவர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன், முற்றிலுமாக உங்கள் பாவங்களில் ஆழ்ந்திருந்தீர்கள், அது எந்த அளவு என்றால் நீங்கள் நரகத்தில் எறியப்பட்டால் கூட, அதனைக் குறித்து முணுமுணுக்கமாட்டீர்கள். கர்த்தர் இப்பூமிக்கு மனித சரீரத்தில் வந்து, உங்களுக்காக நசுக்கப்பட்டதையும், உங்களின் சார்பாக அவர் பாடுகளை அனுபவித்ததின் மூலமாக உங்களை உங்கள் பாவங்களிலிருந்தும் நியாயதீர்ப்பிலிருந்தும் இரட்சித்ததையும் விசுவாசித்தீர்கள், இப்படி விசுவாசித்தினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இந்த அன்பை நீங்கள் பெற்றிருந்தால், மற்றவர்களுக்காக வாழக்கூடிய ஆசையுடைய இருதயங்களை நீங்களும் நானும் நிச்சயமாய் பெற்றிருப்போம்.
இத்தகைய இருதயம் ஒருவருக்கு இல்லையென்றால், அவன்/அவள் இன்னமும் பாவ மன்னிப்பை பெறவில்லை. சரியாக கூறவேண்டுமானால், பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டதைப் போல இந்நபர் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்து நம்மை நேசித்ததினாலே, நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சிப்பதற்காக கிறிஸ்து எல்லாப் பாவங்களையும் அனுபவித்ததைப் போல இந்த அன்பை விசுவாசித்து நாம் இரட்சிக்கப்பட்டிருந்தால் இத்தகைய அன்பு நம் சொந்த இருதயங்களிலும் கூட காணப்படும். ஏன்? கிறிஸ்து இப்போது நம்மிருதயங்களில் வாழ்வதே இதற்கான காரணம். நமக்காக அவர் நொறுக்கப்பட்டதைப் போலவும், நம்மை நேசித்ததைப் போலவும், மற்றவர்களுக்காக வாழும் ஆசையுடையவர்களாய், அவர்களுக்காக கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். பாவ மன்னிப்பு பெற்றவர்களாய் நாம் இருப்பதினாலே நம் இருதயங்களில் எப்பாவங்களும் விட்டுவிடப் படவில்லை, நம்முடைய இருதயங்களெல்லாம் மாறுதலடைந்து இயேசு கிறிஸ்துவின் இருதயத்தைப் போன்றதாயின.
இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தமைக்காகவும், ஞானஸ்நானம் பெற்று சிலுவையிலே தன்னுடைய இரத்தத்தைச் சிந்தியமைக்காகவும், நமக்காக பாடுகளைத் தழுவியமைக்காகவும், இப்படிச் செய்ததின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்கி நம் மேசியாவாகியமைக்காகவும் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.