• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-3] வாழுகின்ற கர்த்தராகிய யாவே (யாத்திராகமம் 34:1-8)

(யாத்திராகமம் 34:1-8)
"கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக் கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங் கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங் கூடாது என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டான்."
 
 
நாம் விசுவாசிக்கும் இந்த கர்த்தர் உண்மையில் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்
 
யாத்திராகமம் 3:13-16 ஐப் பார்ப்பதன் மூலம் நாம் தொடங்குவோம்: "அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்."
 
 
கர்த்தராகிய யாவே என்பது யார்?
 
எபிரெய மொழியில் தேவனுடைய பெயர் யாவே அல்லது யவ் என்றும் வழக்கமாக யேகோவா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் யேகோவா என்றால் அவராலேயே இருப்பவர் என்று பொருள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் கர்த்தர் ஒரு படைப்பு அல்ல. ஆனால் அவராகவே அவர் இருக்கிறார், முழு உலகத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உருவாக்கிய படைப்பாளர் அவர்.
நாம் 6:2-7 ஐப் பார்போம்: "மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன். ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்."
மேலே உள்ள 3ஆம் வசனம் கூறுகிறது, "சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை." ஜேம்ஸ் மன்னரின் மொழிப்பெயர்ப்பில் "என் பெயர் தேவனால்" என்பது "என் பெயர் யோகோவாவால்" என்று எழுதப்பட்டுள்ளது. எபிரெய மொழியில் யோகோவா என்றால் இருக்கும் ஒன்று அல்லது ஒரு உண்மையான கர்த்தரின் சரியான பெயர் என்று பொருள். கர்த்தர் தன்னுடைய பெயரான யேகோவா என்பதை மனித குலத்திற்கு தெரிவிக்கவில்லை. இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரை கர்த்தர் என்று மட்டுமே அழைத்தார்கள். ஆனால் இப்போது இஸ்ரவேலின் மக்களை காப்பாற்றுவதற்காக, கர்த்தர் அவருடைய பெயரான யோகோவா என்பதை இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறார். "நான் தான் யாவே, நான் தான் நானாக இருக்கிறேன், அவராலே அவர் இருப்பவர்," கர்த்தர் இப்படித் தான் அவர் தெரியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு உடைய கர்த்தர் அவராலே அவர் இருக்கிறார் மிகவும் பழமையான காலத்திற்கு முன்பே, எல்லாவற்றின் ஆதி தொடக்கத்திற்கு முன்பே கூட, அவர் ஜீவனோடு இருந்திருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கர்த்தர் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டும், இருந்துக் கொண்டும் இருக்கிறார். இஸ்ரவேலின் மக்களை, ஆபிரகாமின் குழந்தைகளை, எகிப்தில் 430 வருடங்கள் அடிமைகளாக இருக்க கர்த்தர் அனுமதித்துள்ளார். மேலும் பிறகு, அவர்களை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கூடவே கானான் தேசத்திற்குள் அழைத்து செல்வேன் என்று அவர் வாக்களித்திருந்தார். அவர் வாக்களித்தது போல, யோகோவா கர்த்தர் 430 வருடங்களுக்கு பிறகு தோன்றி, பாரோனின் துன்புறுத்தலில் இருந்து இஸ்ரவேல் மக்களை விடுவிக்குமாறு மோசேயிற்கு உத்தரவிட்டார். நான் யோகோவா, நான் நானாகவே உள்ளேன், உங்கள் கர்த்தர் என் மக்கள் போகட்டும். அவருடைய மக்களுக்காக அவர் மோசேயிற்கு முன் தோன்றி மேலும் அவருடைய மக்களை விடுவிக்குமாறு பாரோனிடத்தில் கட்டளையிட்டார், ஏனென்றால் யோகோவா கர்த்தருக்கு இஸ்ரவேல் மக்களுடைய கஷ்டங்கள் தெரிந்திருந்தது. ஏனென்றால், இவருடைய மக்கள் அவர்களின் துயரங்களுக்கு அடியில் புலம்பிக்கொண்டிருந்தது அவருக்குத் தெரியும். அவர்களை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன் என்று கர்த்தர் சொன்னார்.
ஆபிரகாமிற்கு வாக்கு கொடுத்ததிலிருந்து 430 வருடங்களுக்கு பிறகு கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடத்தில் வந்து தம்மைத்தான் அவர்களுக்கு முன்பு காண்பித்தார். நான் தான் யோகோவா, நான் தான் கர்த்தர், நான் தான் உங்கள் தகப்பனான ஆபிரகாமிற்கு, நான் உன் குழந்தைகளை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்குள் அழைத்து செல்வேன் என்று கொடுத்த வாக்கை நிறைவேற்ற நான் வந்திருக்கிறேன். மேலும் உங்களுடைய எல்லாத் துயரங்களும் எனக்குத் தெரியும். இதைத் தான் யோகோவா கர்த்தர் சொன்னார் என்று இப்போது பாரானிடம் போய்ச் சொல்லுங்கள்.
கர்த்தர் உண்மையில் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் கர்த்தராக உள்ளார் என்பதை நாம் உணர வேண்டும். கர்த்தர், என்னுடைய உங்களுடைய கர்த்தராகவும் உள்ளார். அப்படியானால் அவருடைய பெயர் என்ன? அவருடைய பெயர் யேகோவா, அவராலே அவர் இருக்கிறார் என்பது இதன் பொருளாகும். அவராலே அவர் இருப்பவராக இருந்து, இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே கர்த்தர் இருந்திருக்கிறார் அவருடைய தோற்றம் அவராலே வந்ததே தவிர வேறு யாராலும் வரவில்லை.
 
 
நாம் கர்த்தருடைய பெயரின் பொருளைப் புரிந்துக் கொள்ளவேண்டும்
 
கர்த்தர் உண்மையில் அவராலே அவர் இருக்கிறார் அவரே நம்மை படைத்தவர் அவரே நம் மீது ஆட்சி செய்பவர் மற்றும் அவரே நம்மை பாவத்திலிருந்து விடுவித்துள்ளார், என்பதை விசுவாசித்து உணருவது முக்கியமானதாக இருக்கிறது. யேகோவா கர்த்தரை நாம் உண்மையான கர்த்தராக விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால் இந்த யேகோவா கர்த்தர் தான் உண்மையில் இந்த உலகத்தை படைத்தார், மேலும் இன்னமும் கூட தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்.
இஸ்ரவேல் மக்களைப் போல, நீங்களும் நானும் கர்த்தரை விசுவாசிக்கிறோம், மேலும் அவருடைய பிரசன்னத்திற்கு முன்பாக அவருடைய கட்டளைகளையும் கூட பெற்றுள்ளோம். எல்லா சத்தியத்தையும் வைத்துக்கொள்வதற்கு இஸ்ரவேல் மக்கள் தவறியது போலவே, நாமும் கூடவே சத்தியத்தின் படி வாழ தவறிவிட்டோம். இதைப் போலவே, கர்த்தருக்கு முன்பாக நமக்கு இருக்கும் பாவங்களின் காரணமாக நாமும் தடுக்க முடியாத ஆனால் பாவத்தின் பயமூட்டும் நியாயதீர்ப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஒரு வகையான உயிராக இருந்துள்ளோம். வேறு வகையில் சொன்னால் நம்முடைய பாவங்களினால், நாம் உண்மையில் நம்முடைய பாவங்களுக்காக அவரால் தண்டிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இதனால் தான் நம்மில் ஒவ்வொருவரும் அவனுடைய/அவளுடைய சொந்த பாவங்களுக்கான பிராயச்சித்தமாக கர்த்தருக்கு ஒரு மீட்கும் விலையை கொடுக்க வேண்டும். பாவத்திலிருந்து நாம் மீட்கப்பட வேண்டுமானால், கர்த்தராகிய தந்தைக்கு விசுவாசத்துடன் நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு சமமான அளவு பிராயசத்தின் கூலியை நாம் கொடுக்க வேண்டும். அவருடைய நியாயத்தீர்ப்பை திருப்தி படுத்தவும், கர்த்தருடைய இரக்கமுள்ள அன்பையும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு சமமான தியாகத்தின் காணிக்கையை நாம் உண்மையில் கொடுக்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக உண்மையான வாழ்க்கையின் பிராயச்சித்தத்தைக் கொடுப்பதின் மூலம் மட்டுமே மனிதகுலமான நமக்கும் கர்த்தருக்கும் இடையே அமைதியை திரும்ப கொண்டு வரமுடியும். விசுவாசித்தின் மூலமாக மட்டும் தான் நாம் நம்முடைய பாவங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட முடியும்.
இது உண்மையான காரணமாய் இருப்பதால் எப்பொழுதாவது கர்த்தருக்கு முன் நாம் போகும் பொழுது, நாம் அவருக்கு முன் செய்த பாவங்களின் காரணமாக இந்த பாவங்களுக்காக நாம் நியாயந்தீர்க்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்பதில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கர்த்தரை நம் மீட்பராக நாம் விசுவாசிக்கும் பொழுது நம்முடைய பாவங்களுக்காக நாம் நரகத்தில் தள்ளப்படுவோம், என்பதையும் நம்முடைய பாவங்களுக்கான கூலியை செலுத்தி, நம்மை பாவத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாக்கியுள்ள மேசியாவை நம்முடைய சொந்த இரட்சகராக நாம் அடையாளம் கண்டு கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தருக்கு முன்பாக நாம் செல்லும் பொழுது நாம் ஞானஸ்நானத்தையும் இயேவின் இரத்தத்தையும், நம்முடைய பாவங்களுக்கான பலி காணிக்கையையும் விசுவாசிக்க வேண்டும். மேலும் அவரை மேசியாவாக விசுவாசித்து அவரை அப்படியே அடையாளங் கண்டு கொள்ள வேண்டும். கர்த்தருடைய கட்டளையை நாம் கைகொள்ள தவறிய காரணத்தால் அவருக்கு முன் நாமெல்லாரும் பாவியாகி உள்ளோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துதான் நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுவித்துள்ளார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருடைய பாவத்தின் தண்டனைக்கு ஆளாக்கப்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்படி நம்முடைய பாவத்தன்மையை ஒப்புக்கொள்வது முதல் கர்த்தர் நமக்கு தந்துள்ள பாவத்தின் மீட்பிற்கான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள நாம் தகுதியுடையவர்களாய் ஆகிறோம். மேலும் கர்த்தருடைய இரக்கத்தை சேர்த்து வைத்துக் கொள்ள கூடியதும் அவரின் பாவத்திற்கான மீட்பைப் பெற்றுக்கொள்ள கூடியதுமான நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை நம்மால் கட்ட முடிகிறது.
நம்மை அவருடைய சொந்த குழந்தைகளாக்க, கர்த்தர் நம்மை அவருடைய சொந்த சாயலில் படைத்தார், ஆனால் நம்மை பலவீனத்தில் பிறக்க அனுமதித்தார். ஆதாமின் சந்ததிகளாயிருந்து நாமெல்லாரும் பாவிகளாக பிறந்துள்ளோம், ஆனால் நம்மை அவருடைய குழந்தைகளாக்குவதற்கு கர்த்தரால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
நம்முடைய பாவங்களுக்கான நியாயதீர்ப்பை தடுக்க முடியாத உயிராக நாம் இருந்தோம், ஆனால் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக, கர்த்தர் அவருடைய சொந்த குமாரனை நம்மிடம் அனுப்பி, நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நம்மை மன்னித்துள்ளார். தேவகுமாரனான இயேசு, கர்த்தருடைய திட்டத்திற்கு கீழ்படியும் வகையில் அவருடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையின் மீது மரித்தார். யோவானிடமிருந்து இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தினால் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களும் அவருடைய குமாரன் மீது சென்று விட்டது. சிலுவையின் மீதான நம்முடைய இரத்தத்தினால் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை மீட்டுள்ளார் என்பதையும், இப்படித்தான் அவர் நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான தண்டனைகளையும் ஏற்றுக்கொண்டார் என்பதையும் நமக்குள் யார் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு யோகோவா கர்த்தர் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார்.
புதிய வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்கும் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலும் கர்த்தருடைய குழந்தைகளாக வேண்டும் என்று நாம் விசுவாசிக்கும் பொழுது இயேசுவின் ஞானஸ்நானமும் அவருடைய இரத்தமுமே நம்மை அனுமதிப்பதற்கு போதுமான தியாகத்தின் காணிக்கையாய் இருந்தது. விசுவாசிப்பதின் மூலம் நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்கப்படவேண்டும். மேலும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் இருக்கும் விசுவாசத்தின் மூலம் கர்த்தருடைய மக்களாய் ஆவதற்கு நம்மை அனுமதிக்கும் அந்த விசுவாசத்தினை நாம் பெற்றிருக்க வேண்டும். இது தான் உண்மை, உண்மையாய் இப்படிபட்ட விசுவாசத்தை உடையவர்களாய் மட்டுமே கர்த்தருடைய சொந்த மக்களாக ஆகமுடியும்.
 
 
இந்த உலகத்தினுடைய மதங்களுடைய எல்லா தெய்வங்களும் மனித குலத்தினுடைய சொந்த படைப்பினுடைய பொருளாக மாத்திரம் இருக்கின்றன
 
யோகோவா கர்த்தர், இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரை தவிர மற்ற எல்லா தெய்வங்களும் மனித குலத்தால் படைக்கப்பட்ட வெறும் உலக பிரகாரமான தெய்வங்கள் தான். கர்த்தரை தவிர அதனாலே அது இருக்கக் கூடிய எதுவும் இந்த உலகத்தில் கிடையாது. இதனால் தான் யேகோவா கர்த்தர் "நான் தான் நானாக இருக்கிறேன்" என்று கூறினார்.
உண்மையில் அவனாலே அவன் இருக்கக்கூடிய யாராவது இருந்தார்களா? புத்தர் அவருடைய தாயின் கருப்பையில் இருந்து பிறந்தார், ஆனால் அவர் வெறும் கர்த்தருடைய படைப்புதான். இதே போல கன்பூசியசும், முகமதுவும், பெற்றோர்களிடமிருந்து தான் பிறந்தார்கள், இதனால் இவர்களெல்லாம் கர்த்தரால் படைக்கப்பட்ட உயிர்களாய் மாத்திரமே இருக்கின்றனர். புத்தருடைய தொண்டர்கள் வடிவமைத்துள்ள அல்லது செதுக்கியுள்ள அவருடைய சிலைகளானது மனிதனுடைய சொந்த படைப்பாக மாத்திரமே இருக்கின்றன. கர்த்தர் படைத்துள்ள உலோகங்கள் மற்றும் கற்களாலேயே இச்சிலைகள் செய்யப்பட்டன. சூரியனிலிருந்து, சந்திரன் வரைக்கும், நட்சத்திரங்கள், நீர், காற்று, கூடவே இந்த பிரபஞ்சத்தின் நட்சத்திர கூட்டங்கள் எல்லாமே கர்த்தரால் படைக்கப்பட்டன. கர்த்தரால் படைக்கப்படாத எதுவும் இந்த உலகத்தில் கிடையாது தேவ தூதர்களும் ஆவிக்குரிய உயிரினங்களும் கூட கர்த்தரால் படைக்கப்பட்டது தான்.
நாம் விசுவாசிக்கும் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியவர்களுடைய கர்த்தராக இருக்கும் `யேகோவா` கர்த்தர் மட்டுமே `அவராலே அவர் இருக்கிறார்` யேகோவா கர்த்தர் வேறு யாராலும் படைக்கப்படவில்லை அவர் அவராலே மட்டும் இருக்கிறார், அவர் மட்டும் தான் இந்த முழு உலகத்தினுடைய படைப்பாளராக இருக்கிறார் மேலும் அவர் மட்டும் தான் என்னையும் உங்களையும் படைத்தவராக இருக்கிறார். நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுவித்து., நம்மை அவருடைய சொந்த மக்கள் ஆக்கி கொள்வதற்காக இந்த யேகோவா கர்த்தர் மட்டும் தான் அவருடைய சித்தத்தில் திட்டம் தீட்டி உள்ளார்.
கர்த்தர் இப்படி திட்டமிட்டப்படியால் அழுதுகொண்டே இந்த உலகத்தில் பிறக்கும் படியும், வெறுங்கையோடு திரும்பும் படியும் நம்மை படைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தினால் தான், அவர் நம்மை இந்த உலகத்தில் கஷ்டப்பட அனுமதித்துள்ளார். இதனால் கர்த்தரை தேடி அவரை சந்திப்பதை தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது.
கர்த்தரை நாம் விசுவாசிக்கிறோம் என்று நாம் சொல்லும் பொழுது நம்முடைய பாவங்கள் மற்றும் கர்த்தருடைய கட்டளையை செயல்படுத்த தவறியதாலும், கர்த்தருக்கு முன்பு மரணம், நரகம் மற்றும் கொடூர வேதனைகளின் தண்டனையை நாம் சந்திக்க வேண்டுயிருப்பதை தடுக்க முடியாது உயிர்களாக இருக்கிறோம் என்பதை நாம் உண்மையில் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவாகிய மேசியாவை நாம் விசுவாசிப்பதற்கு முன்னால், நரகத்தில் தள்ளப்படுவதையும் பாவத்திற்கான பயமூட்டும் நியாயத்தீர்ப்பை நாம் சந்திக்க வேண்டியிருப்பதையும் தடுக்க முடியாத பாவிகளாய் இருக்கிறோம் என்பதையும் எண்ணி முதலில் நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
 
 
யேகோவா கர்த்தர் எல்லாம் அறிந்தவராகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்
 
எல்லாம் அறிந்தவராகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும் இருக்கும் கர்த்தர் தான் உண்மையில் நம்மை படைத்த மற்றும் இந்த உலகத்தை ஆட்சி செய்யக் கூடிய ஒரே கர்த்தராக உள்ளார். நாம் எந்த வகையான பாவிகளாய் இருக்கிறோம் என்பதை கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொள்ள வேண்டும், அதாவது நம்முடைய பாவங்களுக்காக கர்த்தருடைய பயமூட்டும் கடுங்கோபத்துக்கு ஆளாக்கப்படுவதை நாம் தடுக்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க வந்த தேவ ஆட்டுக்குட்டியை விசுவாசிப்பதின் மூலமாகவும், நம்முடைய எல்லாப் பாவங்களையும் இந்த தியாக காணிக்கையின் மீது சுமத்துவதின் மூலமாகவும் நம்முடைய பாவத்தின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்ற சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். உண்மையில் நாம்தான் நம்முடைய பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்பட்டு மரித்திருக்க வேண்டும். ஆனால் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக இந்த பலி காணிக்கை நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்ட காரணத்தால் நம்முடைய பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டன. இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும் இந்த பலி காணிக்கை மூலமாக தனக்கு சாத்தியமில்லை என்பதே எதுவும் கிடையாது என்று இருக்கும் கர்த்தாதி கர்த்தர், நரகத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க முடியாத நம்மை, நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சித்துள்ளார் என்பதை நாம் உணரவேண்டும். இதை விசுவாசிப்பவர்கள் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகளாய் உள்ளனர்.
மேசியாவை மனம் போன போக்கில் விசுவாசிப்பது தவறு. நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோம் என்று சொல்லும் பொழுது, வேதாகமத்தின் ஆழமான அஸ்திபாரத்தினால் நம்முடைய விசுவாசம் நிறுவப்பட்டிருக்க வேண்டும், "நான் தான் நானாக இருக்கிறேன், நான் தான் யோகோவா" என்று சொல்லப்பட்ட அவருடைய வார்த்தையின் மீது நம்முடைய அஸ்திபாரத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று கர்த்தர் கொடுத்த கட்டளைகளை பின்பற்ற அவர்கள் தவறிவிட்டார்கள். இஸ்ரவேல்களுக்கு கர்த்தர் கொடுத்த கட்டளைகள், இக்காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்மெல்லாருக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் உண்மையில் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் என்றாலும் உங்கள் விசுவாசத்தின் மூலம் உண்மையில் நீங்கள் ஆபிரகாமின் குழந்தைகளாக வேண்டுமென்றாலும், கர்த்தர் 613 கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்கு மட்டும் அல்ல ஆனால் நமக்கும் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மற்றும் இந்த முழு உலகத்திற்கும் கொடுத்துள்ளார் என்பதை நீங்கள் அடையாளங்கண்டுக்கொள்ள வேண்டும். மேலும் இஸ்ரவேலர்களைப் போல நாமும் கட்டளைகளைக் கடைப்பிடிக்க தவறிவிட்டோம். மேலும் இதனால் நாம் முன் கூட்டியே தீர்க்கப்பட்டு விட்டோம், ஏனென்றால் "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) என்பதை நாம் அடையாளங் கண்டு கொள்ள வேண்டும்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னித்து விட்டார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். இப்படி செய்ய வேண்டும் என்றால், நாம் மீட்பின் சத்தியத்தை தேடி போக வேண்டும், இதன் மூலம் தான் நம்முடைய தேவன் நம்முடைய பாவங்களிலிருந்தும், நம்முடைய பாவத்திற்கான தண்டனையிலிருந்தும் நம்மை விடுவித்துள்ளார்.
கர்த்தருடைய கண்டிப்பான கட்டளைகளை பின்பற்ற நாம் தவறி இருக்கும் பொழுதிலும், நாம் பயங்கரமான பாவிகள் என்று உணராவிட்டாலும், நம்முடைய பாவங்களுக்காக நாம் நியாயம் தீர்க்கப்பட இருக்கிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளா விட்டாலும், நம்மால் மேசியாவை எப்பொழுதுமே விசுவாசிக்க முடியாது. கர்த்தர் மக்களின் பாவங்களை ஏற்கெனவே நியாய தீர்ப்பு புத்தகத்தில் எழுதி வைத்திருக்கும் பொழுது பாவத்தோடு இருந்தாலும் கூட அவர்களால் பரலோகத்திற்குள் நுழைய முடியாது என்று விசுவாசித்தால், கர்த்தருடைய சத்தியத்தை தாங்களாகவே மாற்றி, பிரோயஜனம் இல்லாமல் கர்த்தருடைய பெயரைக் கூப்பிடும் பாவத்தைச் செய்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட மக்களை எப்பொழுதுமே அவர்களுடைய பாவத்திலிருந்து மீட்க முடியாது. அவர்கள் அவர்களுடைய பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படுவார்கள், மேலும் கர்த்தரை விசுவாசிக்கிறார்களா இல்லையா என்று அவர்கள் அக்கரையில்லாமல் இருந்ததற்காக, நரகத்தின் தண்டனையால் தண்டிக்கப்படுவார்கள், அவர்கள் கர்த்தரை அடையாளங்கண்டுக் கொள்ளவில்லை இந்த மக்கள் ஒன்றாக மனம் திரும்பி, அவர்களுடைய அவிசுவாசத்திலிருந்து திரும்ப வேண்டும்.
இந்த வேளையிலும் கூட, கர்த்தர் நம்முடைய இருதயங்களில் இருக்கிறார், மேலும் இந்த எல்லா இடங்களிலும் அவரே இருக்கிறார். மேலும் நம்மைப் பற்றி எல்லாமும் அவருக்குத் தெரியும்.
கர்த்தர் உயிரோடு இருந்தாலும், அவரை விசுவாசிக்காத மக்கள் இருக்கிறார்கள், அவரை இகழ்பவர்களும் உண்டு. ஆனால் நம்மெல்லாருக்கும் நம்முடைய பாவங்களுக்காக பலி காணிக்கை தேவைப்படுகிறது. இதனால் தான் கர்த்தர் அமைத்திருந்த மீட்பின் வழியின் படி இஸ்ரவேல் மக்களை, ஆசரிப்புக் கூடாரத்தினுடைய தகன பலிபீடத்தின் பிராயசித்தத்தின் காணிக்கையை தரும்படி கர்த்தர் செய்தார்.
கர்த்தர் உண்மையில் அவராலே அவர் இருக்கிறார். முன்பு இருந்தவரும் இப்பொழுது இருப்பவரும் அவரே. நம்முடைய முப்பிதாக்களிடத்தில் வாழ்ந்து, தோன்றி, நீண்ட காலத்திற்கு முன்பே விசுவாசத்தைப் பற்றி பேசிய கர்த்தர் அவர். இப்போதும் அவர் வாழ்ந்து கொண்டும், தோன்றியபடியும், நம்மிடம் பேசுகிறார். அவர் நமக்கு மத்தியில் கிரியைச் செய்கிறார், நம்மை நடத்துகிறார் மேலும் நம்முடைய வாழ்க்கையின் மீது ஆட்சி செய்கிறார்.
 
 
நாம் மறக்க கூடாத சத்தியம்
 
நாம் மீட்கப்பட்டிருந்தாலும் எப்பொழுதுமே மறக்க கூடாத ஒரு விஷயம் இருக்கிறது. அது நாம் நிரந்தரமாய் நியாயந்தீர்க்கப்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்பதாகும். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையின் மீது அவர் சிந்திய இரத்தத்தின் மூலமாகவும், நம்முடைய தேவன் நம்மை இது போன்ற நம்முடைய எல்லாப் பாவங்களின் நியாயத்தீர்ப்பிலிருந்தும் விடுவித்துள்ளார். தேவனுக்கு முன்பு நாம் நிற்க போகும் நாள் வரையிலும் இந்த சத்தியத்தை ஒரு போதும் மறக்க கூடாது. மேலும் இதை நம்முடைய இருதயங்களில் எப்பொழுதுமே விசுவாசிக்க வேண்டும். கர்த்தரை ஸ்தோத்தரிக்கும் பரலோக இராஜ்ஜியத்தில் நாம் இருந்தாலும் கூட நாம் இதை விசுவாசிக்க வேண்டும். தங்களுடைய பாவங்களுக்காக நிரந்தரமாய் சபிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்படுவதை தடுக்க முடியாத மக்களை, நம்முடைய தேவனை மீட்பராக விசுவாசிக்க செய்ய, மக்களாகிய நம்மை அனுமதித்ததற்காகவும் மேலும் நமக்கு நித்திய வாழ்வை கொடுத்ததற்காகவும், நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக நாம் நிரந்தரமாக நியாயம் தீர்க்கப்பட இருக்கிறோம், என்பதை நாம் ஒப்புக்கொள்ள விட்டால் என்ன? கர்த்தரை ஸ்தோத்தரிப்பதற்கு நம்மிடம் எந்த காரணமும் இருக்காது. நம்முடைய பாவங்களுக்காக நிரந்தரமாய் நியாயம் தீர்க்கப்பட இருப்பதை தடுக்க முடியாத மனித உயிர்களாகிய நம்மை, உண்மையில் கர்த்தர் மீட்டுள்ளார். நம் தேவன் அவருடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, நமக்காக அவருடைய இரத்தத்தை சிந்திய காரணத்தால் நாம் அவரை விசுவாசித்து கூடவே அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். இதனால் தான் நீங்களும் விசுவாசிக்க வேண்டும். இதனால் தான் நாமொல்லாரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை போதிக்க வேண்டும். இயேசு பெற்றுக்கொண்ட ஞானஸ்நானத்தையும் மேலும் அவர்களுடைய பாவத்திற்காக அவர் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களிடத்தில் கர்த்தரை ஸ்தோத்தரிப்பதற்கான இருதயங்கள் இருக்கின்றன. தேவன் அவர்களை அவர்களுடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுகொண்டதால், ஒவ்வொரு நாளும் அவர்களுடைய விசுவாசத்துடன் அவரை ஸ்தோத்தரிக்கிறார்கள்.
பிரச்சனை என்னவென்றால், இயேசுவை சில மக்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள். அவரைப் பற்றிய அவர்களுடைய அறிவு ஒருதலையாகவும், பாதியளவு வெறுமையாகவும் இருக்கிறது. இந்த வகையான மக்கள் மனசாட்சி கெட்டுபோன மக்களாகவும், தாங்கள் பாவம் செய்கிறோம் என்பதையும் கூட உணராத மக்களாகவும் இருக்கிறார்கள், ஏன் என்றால் அவர்கள் எல்லோரும் அவர்களுடைய எல்லா வகையான பாவங்களாலும் நிரப்பப்பட்ட மக்களாகவும் இருக்கின்றர்கள். பாவம் செய்து விட்டு அதை பாவம் என்று அடையாளங் கண்டு கொள்ளாதவர்களைத் தவிர வேறு யாரும் பாவிகள் கிடையாது.
பாவம் செய்வதிலிருந்து தடுக்க முடியாத பலவீனமான உயிர்களாய் இருந்தாலும், நாம் ஒவ்வொரு முறை பாவம் செய்யும் பொழுதும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் நம்முடைய தேவனுடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் அதாவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கர்த்தருக்கு முன்பாக நாம் பாவிகளாக இருப்போம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் உண்மையாக விசுவாசிப்பதன் மூலம், நாம் விடுவிக்கப் பட்டபடியால் மூச்சுவிடலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசத்தின் மூலம் நாம் நம்முடைய சமாதானமான மனதைப் பெற்றுள்ளோம்.
நாம் பாவமின்மையைப் பற்றி பேசும் பொழுது நாம் உண்மையில் பாவம் செய்தாலும் கூட, நாம் நம்முடைய பாவங்களை அடையாளங் கண்டு கொள்ள முடியாது என்று இது சொல்வதில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் பாவத்தை பாவம் என்று அடையாளங் கண்டுக் கொள்ள வேண்டாம் என்று இது சொல்வதில்லை. நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் உண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், நாம் இன்னமும் நாம் செய்யும் பாவங்களையொல்லாம் அடையாளங் கண்டுக்கொள்கிறோம் ஏனென்றால் அவை நம்முடைய பாவங்களாக உள்ளன. நாம் நம்முடைய பாவங்களுக்காக நிரந்தரமாக நியாயந்தீர்க்கப் படுவதை நம்மால் தடுக்க முடியா விட்டாலும், நம் தேவன் அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவத்தின் தண்டனையிலிருந்தும் மீட்டுள்ளார் என்பதையும் சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தையும் அவருடைய உயிர்ப்பித்தலையும் நாம் எப்பொழுதும் மறக்க கூடாது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகிய நூல்களின் மூலமாக நம் தேவன் நம்மை மீட்டுள்ளார் என்பதை நாம் ஒரு போதும் மறக்க கூடாது, ஆனால் அதை விசுவாசித்து அதற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். நாம் முன்பு எப்படியிருந்தோம் என்பதை ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக நாம் நிரந்தரமாக நியாயந்தீர்க்கப்படுவதை தடுக்க முடியாத மோசமான உயிர்களாய் ஒரு சமயத்தில் இருந்தோம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தரால் கொடுக்கப்பட்ட பாவ மன்னிப்பின் மீட்பிற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும். மேலும் அவருடைய சிறந்த மீட்பின் கிருபைக்காக அவருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருக்கும் விசுவாசிகளின் விசுவாசமானது இதைத் தவிர வேறில்லை.
 
 
யேகோவா கர்த்தர் இன்னமும் உயிரோடிருக்கிறார்
 
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு கர்த்தராய் இருந்தது போல, இப்பொழுது அவர் எனக்கும் உங்களுக்கும் கர்த்தராக உள்ளார். "தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்" (1 கொரிந்தியர் 14:33). போலியான மற்றும் கண்ணைக் கவரும் செயல்களைச் செய்யும் கிறிஸ்தவர்களுக்கு அவர் கர்த்தர் அல்ல, ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு அவர் கர்த்தராக இருக்கிறார். "ஆம்" என்று கர்த்தருக்கு கீழ்ப்படிவதிலும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதிலும் நமக்கு விசுவாசம் உண்டு. கர்த்தர் நம்முடைய கர்த்தராக இருப்பார். "நீ நரகத்திற்காக முன் கூட்டியே தீர்மாக்கப்பட்டிருக்கிறாய்" என்று அவர் நம்மிடம் சொல்லும் பொழுது, "ஆம், நீங்கள் சரியாக தான் சொல்கிறீர்கள்" என்று நாம் அவரிடம் சொல்கிறோம். "நீ சாகும் நாள் வரையிலும் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருப்பாய்" என்று அவர் நம்மிடம் சொல்லும் பொழுது, "ஆம், நீங்கள் சொல்வது சரி தான்" என்று அவரிடம் சொல்லுகிறோம். மேலும் அவர் நம்மிடம், "ஆனால் நான் உங்களை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக உங்களை மீட்டுக் கொண்டேன்" என்று சொல்லும் பொழுது "ஆம், நீங்கள் சொல்வது மிகவும் சரி" என்று மட்டும் தான் மீண்டும் சொல்ல முடியும். இப்படித்தான் "ஆமாம்" என்று சொல்லி அவருக்கு கீழ்ப்படியும் கர்த்தருடைய மக்களாக ஆகியுள்ளோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் நம்மை மீட்டுக் கொண்ட அவருடைய கிருபைக்காக நம் கர்த்தருக்கு நன்றி செலுத்துக்கிறேன்.
நீர், இரத்தம் மற்றும் ஆவியின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம் தேவன் நம்மை மீட்டுள்ளார் என்பதையும் இதன் மூலம் கர்த்தருடைய இராஜ்ஜியத்தின் மக்களாக நம்மை மாற்றியுள்ளார் என்பதையும் நாம் நம்முடைய இருதயங்களில் விசுவாசித்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி தான் கர்த்தர் உங்களுக்கு அளித்துள்ள மீட்பின் பரிசு என்பதை விசுவாசித்து தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
என்னுடைய பாவங்களுக்காக நான் நரகத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க முடியாத என்னை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நிரந்தரமாக மீட்டுக்கொண்டதற்காக, என்னுடைய விசுவாசத்துடன் கர்த்தருக்கு எப்பொழுதும் ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். உண்மையில் நாம் முழுமையாக வெண்கலமாக இருந்தோம்,௮அதாவது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொண்டு இதனால் நம்மால் தப்பிக்க முடியாது, ஆனால் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நம்மை மீட்டுக்கொண்டதற்காக, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் ஒளிந்திருக்கும் நற்செய்தியின் உண்மையை விசுவாசித்து அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
யேகோவா கர்த்தர் மட்டும் தான் முழுமையான மனித குலத்தின் கர்த்தர். மேலும் அவர் முழு மனித குலத்தின் இரட்சிப்பின் கர்த்தராகினார். நாம் எல்லோரும் யேகோவா கர்த்தரை நம்முடைய சொந்த கர்த்தராக விசுவாசிக்க வேண்டும்.