(யாத்திராகமம் 19:1-6)
"இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள். மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்."
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் ஏன் தேர்ந்தெடுத்தார்?
முக்கியமான பகுதி யாத்திராகமம் 19:1-6 இலிருந்து வருகிறது. இந்த பகுதி பெரிதாக இல்லையென்றாலும் இதைப் பற்றி நான் சொல்வதற்கு அதிகம் இருக்கிறது. இந்த பகுதியில், யாத்திராகமம் 19-ஆம் அதிகாரத்திலிருந்து 25 ஆம் அதிகாரம் வரையிலும் வெளிப்பட்டுள்ள சத்தியத்தைப் பற்றியும் நான் பேச ஆசைப்படுகிறேன். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து தப்பித்து சீனாய் காட்டு பகுதிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கிறது. கர்த்தர் அவர்களை சீனாய் மலைக்கு முன் தங்க வைத்து, மலைக்கு மேலே வரும்படி மோசேயை அழைத்தார்.
இப்படி மோசேயை வரவழைத்த பிறகு இஸ்ரவேலர்களிடத்தில் கர்த்தர் அவருடைய வார்த்தையை பேசினார். "இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள்." கர்த்தர் இஸ்ரவேல் மக்களை அவருடைய விசேஷமான பொக்கிஷம் ஆக்குவதற்கும் மேலும் அவருடைய இராஜ்ஜியத்தின் ஆசாரியர்களாக அவர்களை மாற்றுவதற்காக தான் கர்த்தர் அவர்களை அழைத்து உயர்த்தினார்.
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்ததற்கும் இது தான் நோக்கமாயிருந்தது. இஸ்ரவேல் மக்களை தன்னுடைய விசேஷமான பொக்கிஷம் ஆக்கி கொள்வதற்கு அவர்களுக்கு அவருடைய சத்தியத்தையும், அவர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக ஆசரிப்பு கூடாரத்தினுடைய தியாகத்தின் முறையையும் கொடுத்தார். இதுவே அவர்களை தன்னுடைய விசேஷ பொக்கிஷமாக கர்த்தர் பயன்படுத்திய முறை இதன் மூலம் அவர் அவர்களுடைய எல்லா பாவங்களையும் கழுவுவார், அவர்களை தன்னுடைய சொந்த மக்களாக ஆக்கி கொள்வார் மற்றும் நாட்டினுடைய ஆசாரியர்களாகவும் அவர்களை கண்டுகொண்டார். இதைப் போல இஸ்ரவேலர்கள் இதை தெளிவாக உணரவேண்டும். மேலும் கர்த்தருக்கு அவர்களிடமிருந்து தேவைப்படும் விசுவாசத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய ஆசாரியர்களின் இராஜ்ஜியமாக அவர்கள் தேசத்தை ஆக்குவதற்காக ஒருபுறம் கர்த்தர் அவர்களுக்கு 613 கட்டளைகள் எழுதப்பட்ட சத்தியத்தை அவர்களுக்கு கொடுத்தார் மற்றும் மறுபுறம் அவர் அவர்களை ஆசரிப்பு கூடாரத்தை கட்டச் செய்தார்.
இதனால் இஸ்ரவேலர்கள் தங்களுடைய மேசியாவாக வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கா விட்டால், அவர்கள் தங்களுடைய இருதயங்களுடன் மனந்திரும்பி அவரை விசுவாசிக்க வேண்டும். ஆசரிப்பு கூடாரத்தினுடைய தியாக முறையின் பாவ காணிக்கையின் பொருளாக இருக்கும் இயேசு யோவானிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும் சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தின் மூலமாகவும் அவர்களுடைய எல்லா பாவங்களையும் கழுவி விட்டார். இதைப் போல, ஆபிரகாமின் சந்ததியாராகிய தங்களை எகிப்துக்கு வெளியே அழைத்து வந்ததன் மூலம் அவருடைய சொந்த மக்களாக ஆக்கி கொண்டார் என்ற உண்மையையும் ஆசரிப்பு கூடாத்தினுடைய காணிக்கைகள் மூலமாகவும் அவர்களுடைய எல்லா பாவங்களையும் கழுவி விட்டார் என்ற உண்மையையும் இஸ்ரவேல் மக்கள் சந்தேகமில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் கர்த்தருடைய சட்டத்தை இஸ்ரவேல் மக்கள் கடைப்பிடிக்க முடியாமல் இருந்ததால், கர்த்தரால் அமைக்கப்பட்டிருந்த பலி முறைக்கு ஏற்ப அவருக்கு பலி காணிக்கைகள் கொடுப்பதன் மூலம் அவர்கள் அவர்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கப்பட வேண்டியிருந்தது. இந்த பலி காணிக்கைகளெல்லாம், மனித குலத்தை தன்னுடைய பாவங்களிலிருந்து இப்போது மீட்ட மீட்பரான இயேசு கிறிஸ்துவை முன் கூட்டியே சொல்வதாக இருந்தது.
இன்னமும் கூட இஸ்ரவேலர்கள் மோசேயை சிறந்த தீர்க்கதரிசியாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் இதில் சரியாக இருக்கிறார்கள், ஏனென்றால் தங்களுடைய பாவங்களிலிருந்து மீட்ட இயேசு கிறிஸ்துவை மேசியாவாக அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் புதிய ஏற்பாட்டை கர்த்தருடைய வார்த்தையாக கருதுவதில்லை ஆனால் பழைய ஏற்பாட்டையே கர்த்தருடைய வார்த்தையாக கருதுகிறார்கள். இயேசு மோசேயை விட சிறந்த தீர்க்கதரிசி மட்டும் அல்ல, ஆனால், பரலோக இராஜ்ஜியத்தின் தலைமை ஆசாரியராகவும், இஸ்ரவேலர்கள் காத்துக் கொண்டு நம்பியிருந்த மேசியாவாகவும் இருக்கிறார் என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆசரிப்பு கூடாரத்தினுடைய பலி காணிக்கையின் பொருளாக இருந்தது மேசியாவை தவிர வேறு யாரும் இல்லை என்பதை விசுவாசத்தினால் இஸ்ரவேலர்கள் இப்பொழுது உணரவேண்டும்.
இஸ்ரவேலர்கள் மோசேயை மரியாதையான இடத்தில் வைக்கும்படி கர்த்தர் செய்தார், ஆனால்...
இஸ்ரவேலர்களுக்கு முன்பாக கர்த்தர் மோசேயை ஏன் அவ்வளவு உயரமாக உயர்த்தினார்? மோசேயின் மூலமாக பேசப்பட்ட கர்த்தருடைய எல்லா வார்த்தையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கவே அப்படிச் செய்தார். வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் மோசே இஸ்ரவேலர்களிடம் என்ன பேசினானோ அவையெல்லாம் கர்த்தருடைய சொந்த வார்த்தைகள் என்று அவர்களை விசுவாசிக்கச் செய்யவே கர்த்தர் இப்படிச் செய்தார். இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக அவனை உயர்த்துவதற்காக கர்த்தர் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்தார். இது இஸ்ரவேலர்களை மோசேயிக்கும், கர்த்தருக்கும் பயப்படச் செய்தது. மேலும் இஸ்ரவேலர்கள், மோசே கர்த்தரிடம் பேசியதைப் பார்த்து, அவனை விசுவாசிக்க முன் வந்தனர், ஏனெனில் கர்த்தர் மோசேயிடம், அவருடைய நண்பனிடம் பேசுவதைப் போல பேசினார்.
இதைப் போல, இஸ்ரவேல் மக்களுக்கு மோசே வெளியிட்ட கர்த்தருடைய வார்த்தையை கர்த்தர் அவர்களிடம் பேசிய வார்த்தையால் இஸ்ரவேலர்களால் முழுமையாக விசுவாசிப்பட்டது. ஆனாலும், மோசேயை மிகவும் உயர்வாக கருதி, தங்களுடைய இருதயங்களுக்குள் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் இஸ்ரவேல் மக்கள் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டார்கள் உடனடியாக இஸ்ரவேலர்கள் தங்களுடைய மேசியாவை அடையாளங்கண்டு கொள்ள தவறிவிட்டார்கள். மேலும் இதனால் அவருடைய மீட்பின் அன்பை நிராகரித்தனர். அவர்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியம் இப்பொழுது இருக்கிறது-அது மோசேயை விட சிறந்த தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக தம் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்வதாகும்.
கர்த்தர் தமக்கொரு ஆசரிப்புக் கூடாரத்தை அமைக்குமாறும் அவருக்கு பலி காணிக்கையைக் கொடுக்குமாறும் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார்
மோசேயின் மூலமாக கர்த்தர் அவருடைய சத்தியத்தையும் கட்டளையையும் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தார். மேலும் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி அவர்களிடம் சொன்னார். ஆசரிப்புக் கூடாரத்தில், இஸ்ரவேலர்களின் பாவத்தை உண்மையில் அகற்றிய கர்த்தருடைய இரக்கத்தின் அன்பு அதனுடைய பலி முறையின் மூலம் வெளிப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தினுடைய இந்த பலி அமைப்பின் மூலமாக, ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியினருக்கும் கர்த்தர் பாவத்தின் மீட்பையும் கொடுத்துள்ளார். மேலும் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் அவர் கழுவி விட்டார். இதனால் கர்த்தருடைய சொந்த மக்கள் ஆவதற்காக அவர்களிடம் எந்த குறையும் இருக்காது.
கர்த்தர் அவருடைய பத்து கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு கல் பலகைகளை இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தார். பத்து கட்டளைகள், கர்த்தருக்கும் மனித குலத்திற்கும் இடையே வைக்கப்பட வேண்டிய முதல் நான்கு கட்டளைகளாலும் மனித உறவுகளுக்குள் வைக்கப்பட வேண்டிய மற்ற ஆறு கட்டளைகளாலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பத்து கட்டளைகளைத் தவிர, இஸ்ரவேல் மக்களுக்கு அவர்களுடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நூற்று கணக்கான கட்டளைகளைக் கர்த்தர் கொடுத்துள்ளார்.
இஸ்ரவேலர்களின் இருதயங்களில் கர்த்தர் மட்டுமே தனித்துவமும், சரியான பரிசுத்தமானதுமான உயிரோடிருப்பவர் என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர்களுக்கு இவ்வளவு சத்தியத்தையும் கட்டளையையும் கொடுத்தார். இஸ்ரவேலின் ஆவிக்குரிய மக்களுக்கு, அதாவது இயேசுவை தங்கள் மீட்பராக விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தரை தவிர வேறு எந்த பரிசுத்தம் நிறைந்தவரும் இருக்க முடியாது. அவர் தான் யோகோவா என்ற சத்தியத்தை கானான் தேசத்திற்குள் நுழைவதற்கு முன் இஸ்ரவேல் மக்களுக்கு தெளிவாக போதிக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய சத்தியத்தை அவர்களிடம் கொடுப்பதற்காக சீனாய் மலையில் மோசேயிடம் கர்த்தர் பேசினார். மேலும் எப்பொழுதெல்லாம் கர்த்தருடைய கட்டளைகளை முறித்து அவர்கள் பாவம் செய்தார்களோ, அப்பொழுதெல்லாம், அவர் அமைத்து வைத்துள்ள பலி முறைக்கு ஏற்ப, ஆசரிப்பு கூடாரத்தில் பலி காணிக்கையை கொடுப்பதின் மூலம் அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களை மன்னிக்கவும் செய்தார்.
இஸ்ரவேல் மக்கள் சத்தியத்தையும் கட்டளையையும் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்
யாத்திராகமம் 24:3-8ஐ நாம் பார்க்கலாம்: "மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்களெல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்."
மோசேயின் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு சத்தியத்தை கொடுக்கும் பொழுது தன்னுடைய இரத்தத்தினால் கர்த்தர் உடன்படிக்கைச் செய்தார். கர்த்தருடைய சத்தியம் தான் வாழ்க்கையின் சத்தியம் என்று இது சுருக்கமாக சொல்லுகிறது. இஸ்ரவேலர்களிடத்தில் கர்த்தர் அவருடைய வாழ்க்கையின் சத்தியத்தைப் பேசினார். மேலும் இஸ்ரவேல் மக்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டியிருந்தது.
இதைப் போலவே தகன பலியின் இரத்த காணிக்கையையும், அமைதி காணிக்கையும் கொண்டு வரும்படி இஸ்ரவேலர்களிடத்தில் மோசே சொன்னான். மோசே அவனுடைய மக்களைக் கூட்டி, சட்டத்தையும், கட்டளைகளையும், கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவர்களுக்கு வாசித்து காட்டும்படி கர்த்தர் செய்தார். அதன் பிறகு, மோசே அவர்களிடம் "கர்த்தர் உங்களுக்கு கட்டளையிட்ட படி நீங்கள் கீழ்ப்படிவீர்களா?" என்று கேட்டான். தாம் எல்லோரும் அவருக்கு கீழ்ப்படிவோம் என்று இஸ்ரவேலர்கள் ஒரே குரலில் கர்த்தருக்கு பதிலளித்தார்கள்.
"நான் உங்களை பாதுகாத்து இராஜ்ஜியத்தின் ஆசாரியர்களாக உங்களை ஆக்குவேன்" என்று கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரவேலர்களுக்கு வாக்களித்தார். பின்பு மோசே தகன பலியின் இரத்தத்தையும் அமைதியையும் அவர்கள் மேலே தெளித்தான். ஒருவன் பாவம் செய்யும் பொழுது, அவளோ/அவனோ பலி காணிக்கையின் மூலமாக மன்னிக்கப்பட வேண்டும் என்று இது காண்பித்தது. கர்த்தர் பேசியதை, வாழ்வின் வார்த்தையாக நாம் ஏற்று கொள்ள வேண்டும். மோசே காணிக்கையின் இரத்தத்தை எடுத்து அவனுடைய மக்களின் மேல் தெளித்து பிறகு "இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே" எனக் கூறினான். கர்த்தருடைய வார்த்தை வாழ்க்கையுடைய வார்த்தையாய் இருப்பதால், அதை நாம் கைக்கொள்ளவில்லை என்றால் பின்பு நாம் பலி காணிக்கையின் தலையின் மேல் நம்முடைய கைகளை வைப்பதின் மூலம் நம்முடைய பாவங்களை அதற்குள் செலுத்த வேண்டும், அதை கொன்று நம்முடைய பாவங்களுக்காக அதனுடைய பலி காணிக்கையை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும்.
இந்த கர்த்தருடைய சட்டத்தில் நம்முடைய பாவங்களுக்கு தண்டனை இருக்கிறது, ஆனால் அதே சமயத்தில் நம்முடைய பாவங்களை கழுவி விடும் பலி முறையும் அங்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிய வேண்டும். இதனால், கர்த்தருடைய சட்டத்தையும் கட்டளையையும் நாம் கையாளும் பொழுது, இந்த சட்டத்திலும் கட்டளைகளிலும், நம்முடைய பாவங்களுக்கு மீட்பை நமக்கு தரக் கூடிய காணிக்கை காணப்படுகிறது என்பதை நாம் அடையாளங் கண்டுகொள்ளும்பொழுதே, அவற்றை நாம் நம்முடைய இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த விசுவாசம் கண்டிப்பாக தேவை. கர்த்தருடைய சட்டத்தை நாம் கடைப்பிடிக்கும் பொழுது நாம் ஆசீர்வதிக்கப்படுவதால், நம்முடைய பலி காணிக்கையின் மூலம், நாம் நம்முடைய பாவங்களைக் கழுவ வேண்டும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இதைப் போல பாவம் செய்தவர்கள், பலி காணிக்கையின் தலையின் மேலே கைகளை வைத்து அவர்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தி கூடவே அதனுடைய பலி இரத்தத்தை எடுத்து கர்த்தருக்கு படைப்பதின் மூலமாகவும் அவர்களுடைய பாவங்களுக்கான மீட்பை பெற்றுக் கொள்ள வேண்டும். சட்டமும் பலி முறையும் தான் வாழ்க்கையின் சட்டம் என்பதையும், இதன் மூலம் தான் கர்த்தரிடம் இருந்து புதிய வாழ்வை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் நாம் எல்லோரும் உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
இதனால், கர்த்தருடைய சட்டம் நம்முடைய பாவங்களைக் குறித்து நமக்கு போதிக்கும் வேளையில், இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாகவும் சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தின் மூலமாகவும் நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்று நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இதற்கு எதிராக நமக்கு காண்பிக்கிறது இதனால் தான் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை மீட்டுள்ள சத்தியமாக இது உள்ளது.
பழங்காலங்களில், கோத்திரத்தார் ஒருவருகொருவர் சத்தியம் செய்து கொள்ளும் பொழுது சில வகையான பலி காணிக்கையை கொண்டு வந்தார்கள். அவர்கள் ஆடு செம்மறியாடு மற்றும் காளைகளை கொண்டு வந்து, அவற்றினுடைய தொண்டையை அறுத்து அதிலிருந்து எடுக்கப்படும் இரத்தத்தினால், ஒப்பந்தத்தைக் குறித்துக் கொண்டார்கள். ஒப்பந்தத்தினுடைய முக்கியமான நிபந்தனைகளை இது சுட்டிக்காட்டியது, ஏனென்றால், என்னுடன் நீ செய்து கொண்ட உடன்படிக்கையை நீ கைக்கொள்ளவில்லை என்றால் பிறகு நீ கண்டிப்பாக இந்த முறையில் இறப்பாய் என்று இது குறிப்பிட்டது. சுருக்கமாக கூறினால் இரத்தத்தினால், அவர்களுடைய ஒப்பந்தம் அமைக்கப்பட்டது.
இதைப் போல, கர்த்தர் இரத்தத்தினால் அவருடைய சட்டத்தை அமைத்துள்ளார். அவருடைய 613 சட்டங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க நாம் தவறினால், நம்முடைய பாவங்களுக்காக நாம் கொல்லப்படுவோம் என்று அவர் நமக்கு வேறு விதமாக சொன்னார். ஆனால் அதே சமயத்தில், ஆசரிப்பு கூடாரத்தினுடைய பலி காணிக்கையின் மூலமாக, விசுவாசத்துடன் அவருக்கு காணிக்கை கொடுப்பதின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான மீட்பை பெற்றுக் கொள்ளும் படி அவர் நமக்கு சொல்லி இருக்கிறார்.
கர்த்தருடைய சட்டத்தின் வார்த்தையை முக்கியமானதாக எடுத்து கொள்ளவில்லை என்றால் நம்முடைய பாவங்களுக்காக, கர்த்தரிடமிருந்து வரும் பெருங்கோபத்திலிருந்து நாம் எப்பொழுதும் தப்பிக்க முடியாது. ஆனால் நமக்காக அவர் அமைத்து வைத்துள்ள பலி காணிக்கைகளை நாம் அவருக்கு கொடுத்தால், கர்த்தர் இந்த எல்லாப் பலி காணிக்கைகளையும் பெற்றுக் கொண்டு நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிப்பார். நாமெல்லாரும் இந்த வாழ்க்கையின் சட்டத்தை விசுவாசிக்க வேண்டும். இஸ்ரவேல் மக்கள் தம் எல்லோருடைய பாவங்களையும் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையின் மூலம் கர்த்தர் மன்னிப்பார் என்றும், இதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கான மீட்பை இருதயங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த மீட்பின் சட்டம் சொல்லுகிறது. யாரெல்லாம் கர்த்தருடைய சட்டத்தை வெறுக்கிறார்களோ அவர்களெல்லோரும் கர்த்தருடைய அன்பின் இரக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர், மேலும் இதைப் போல சட்டத்தையும் பலி முறையையும் மீட்பின் சத்தியமாக நம்முடைய சொந்த வாழ்க்கையை போல் நாமெல்லோரும் விசுவாசிக்க வேண்டும்.
இதனால் தான் மோசே இரத்தத்தால் ஒப்பந்தத்தை வாசித்தான், மேலும் இஸ்ரவேல் மக்கள் மீது தெளிக்கப்பட்ட இந்த இரத்தத்தினால், கர்த்தருக்கு அவர்களுடைய உடன்படிக்கையை இரத்தத்தினால் செய்தார்கள். இதனால் நாம் இந்த சட்டத்தை இரத்தத்தினால் அமைத்து கைக்கொள்ளவில்லை என்றால் நாமெல்லாரும் இறக்க வேண்டும் என்பதை உணர்ந்து, சட்டத்துடன், கர்த்தருக்கான நம்முடைய தகன காணிக்கை மற்றும் அமைதி காணிக்கையின் பலி ஆக இருக்கும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களுக்கான மீட்பையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறைக்கு ஏற்ப கர்த்தருக்கு நம்முடைய பலி காணிக்கைகளை கொடுப்பதின் மூலம் நாமெல்லாரும் நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிக்கப்படுவோம் என்ற சத்தியத்தை நாமெல்லாரும் அறிந்து விசுவாசிக்க வேண்டும். டூளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் மனித குலத்தின் பாவ மீட்பைக் குறித்து கர்த்தர் நமக்கு தெளிவாக போதித்துள்ளார். அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு, பலி காணிக்கையின் தலையின் மீது தங்களுடைய கைகளை வைத்து தம் எல்லாப் பாவங்களையும் அதன் மேல் செலுத்த வேண்டும். மேலும் இந்த பலி, தன்னுடைய இரத்த காணிக்கையை, தகன காணிக்கையின் பலி பீடத்தினுடைய கொம்புகள் மீது சிந்த வேண்டும். மேலும் எஞ்சியுள்ள அதனுடைய இரத்தம் நிலத்தின் மீது ஊற்றப்பட வேண்டும்.
பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திற்கு முற்றிலும் தேவைப்பட்ட பலி காணிக்கை இது தான், எனவே, நம்முடைய விசுவாசத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அகற்றி போடும் பலி காணிக்கையால் சத்தியம் செய்யப்பட்டுள்ள பாவத்தின் மீட்பை நாமெல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் பலி முறையை நமக்கு கொடுத்ததன் மூலம் கர்த்தர் நமக்கு மீட்பின் சட்டத்தைக் கொடுத்துள்ளார். இதனால் நாம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்போம். மேலும் நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் மன்னிக்கப்படுவோம். சட்டமும் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையும் கர்த்தர் மனித குலத்திற்கு கொடுத்துள்ள இரண்டு சட்டங்கள் ஆகும். இவ்விரண்டு சட்டங்களையும் நம்முடைய இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்வதின் மூலம் கர்த்தர் கொடுத்துள்ள பாவத்தின் மீட்பின் ஆசீர்வாதத்தை நாமெல்லாரும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் எப்படி மீட்கப்படுவோம்?
கர்த்தர் மோசேயிற்கு கொடுத்த பலி முறையின் மூலமாக, அவர்களுடைய பலி காணிக்கையின் மூலமாக அவர்களுடைய பாவ மன்னிப்பில் இருக்கும் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பு சாத்தியம் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு அவன் காண்பித்தான்.
கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட பலி காணிக்கையில் விசுவாசம் இருக்கும் நம்முடைய விசுவாசத்தை நாம் அவருக்கு கொடுக்கும் பொழுது, அவர் நம்முடைய விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சிப்பார். ஏன்? ஏனென்றால் கர்த்தர் ஏற்கெனவே முழு மனித குலத்தையும் அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ளார் மேலும் யார் விசுவாசிக்கிறார்களோ, அவர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து புனிதப்படுத்தும் அவருடைய ஆசீர்வாதத்தை அவர் தருகிறார். தனித்துவத்துடன் இருக்கும் ஒருவரால் அமைக்கப்பட்ட பலி முறையின் மூலமாக இரட்சிப்பின் சட்டத்தை நாம் அறிந்து கொள்ளும்படி கர்த்தர் செய்துள்ளார். இயேசு கிறிஸ்து அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையின் சிந்திய அவருடைய இரத்தத்தின் மூலமாகவும் அவனுடைய/அவளுடைய பாவங்களையெல்லாம் நிரந்தரமாக கழுவி விட்டார் என்ற உண்மையை ஒருவர் விசுவாசிக்காமலோ, அறியாமலோ இருந்தால், அவனோ/அவளோ கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். கர்த்தருடைய அன்பின் இரக்கத்தை நாமெல்லாரும் விசுவாசிக்க வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையின் மூலமாக கர்த்தர் நம்மை மீட்டுள்ளார். பலியின் தலையின் மீது நம்முடைய கைகளை வைத்து அதன் மீது நம்முடைய பாவங்களை செலுத்தும்படி அவருடைய இரட்சிப்பின் முறை இருந்தது. இதைப் போல இந்த சத்தியத்தை யார் விசுவாசிக்கிறார்களோ, அவர்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து கழுவ அனுமதித்துள்ள கிருபையின் நற்செய்தியை நாமெல்லாரும் விசுவாசிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்பாக பலி முறையையும் சட்டத்தையும் அடையாளங் கண்டு கொள்ளாதவர்களால் நிரந்தரமாக எப்பொழுதுமே பாவத்தின் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கிருபையின் நற்செய்தியை விசுவாசிக்கும் எல்லோராலும் நிரந்தரமாக அவர்களுடைய பாவத்தின் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
கர்த்தர் நம்மை பாவம் செய்யக்கூடாது என்று மட்டும் சொல்ல வில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் பாவம் செய்வதை தடுக்க முடியாத, பாவம் செய்யும் பாவமுள்ள உயிர்களாக நாம் இருக்கிறோம் என்று அவர் நமக்கு போதித்தார். ஆதலால் இந்த பாவங்களுக்கான இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்காக நம்முடைய பலி காணிக்கையை அவருக்கு தரும்படி நமக்கு சொன்னார். ஒரு பாவி எப்பொழுது பலி காணிக்கையை தர வேண்டும் என்று இதனால் தான் கர்த்தர் கூறினார், "மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." (யாத்திராகமம் 20:24)
இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு கொடுத்த பலி காணிக்கையானது பலியினுடைய தலையின் மீது தம் கைகளை வைத்து தங்களுடைய பாவங்கள் அதற்குள் செலுத்தப்பட்டு, அதனுடைய இரத்தத்தை எடுத்து தகன பலி பீடத்தின் மேல் ஊற்றி காணிக்கையை கொடுக்க வேண்டியிருந்தது. கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள இரட்சிப்பின் சட்டம் கர்த்தருக்கு வேண்டியிருந்த காணிக்கை சடங்குகள் சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்க வில்லை. ஆனால் கர்த்தருடைய கிருபையில்லை என்றால் நிச்சயமாக அவர்கள் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பதை விசுவாசித்து, தங்களுடைய எல்லாப் பாவங்களையும் விசுவாசத்துடன் பலி காணிக்கைக்குள் செலுத்தும் ஒரு உத்திரவாதமுள்ள ஒன்றாக இருந்தது.
நம்முடைய தேவன் யோவானால் ஞானஸ்நானம் செய்யப்பட்டார் மேலும் நம்முடைய பாவங்களை மறைய செய்வதற்காக அவருடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இதே மாதிரியான பலி காணிக்கையின் மூலமாக நம்முடைய பாவங்களை அகற்ற முடிவு செய்தார். இந்த விசுவாசமான காணிக்கையானது இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பின் காணிக்கையை முன் கூட்டியே கூறியது. அதாவது இயேசு இந்த உலகத்திற்கு வந்தார், யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தினால் இந்த உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். சிலுவையில் மரித்தார், மேலும் இதன் மூலம் முழு மனித குலத்தையும் அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சித்தார். நம் எல்லோருடைய இருதயங்களில் இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகிறோம்.
இறையியல் விசுவாசத்தை நாம் விட்டு விட வேண்டும்
யாத்திராகமம் 20:25-26 கூறுகிறது, "எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்க வேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய். என் பலிபீடத்தின் மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்." இந்த வசனத்தில் கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக் காண நாம் கவனம் செலுத்த வேண்டும். இஸ்ரவேலர்கள் கல்லினால் பலி பீடத்தை கட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதை உருவம் கொடுக்கப்பட்ட கல்லால் கட்ட கூடாது என்றும், ஆனால் உண்மையான வடிவத்திலும் உருவத்திலும் இருக்கும் கற்களால் தான் கட்ட வேண்டும் என்றும் கர்த்தர் கூறினார். பலி பீடத்தைக் கட்டவேண்டும் என்றால் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சொன்னார். இது என்ன சொல்லுகிறது? அவருடைய மீட்பில் நமக்கு இருக்கும் விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளும் போது கர்த்தர் மகிழ்கிறார் என்றும் இது மனித எண்ணத்தால் எப்பொழுதுமே கூட்டவே மாற்றியமைக்கவே முடியாது என்றும் இது சொல்லுகிறது.
"என் பலிபீடத்தின் மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்" என்ற வார்த்தையின் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட மத விசுவாசத்தின் மூலம் அவரைத் தொழுது கொள்ள வேண்டாம் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார். உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், மனிதனால் அமைக்கப்பட்ட விசுவாச அமைப்பே தவிர வேறில்லை. மக்கள் தங்களுடைய விசுவாசமான மத வாழ்க்கையை வாழும்போதே படிப்படியாக பரிசுத்தமாக முயற்சி செய்வது குறித்து சொல்லும் பொதுவான மற்றும் அடிப்படையான தத்துவத்தை தங்களுடைய சொந்த மதத்திற்குள்ளேயே அமைத்துக் கொள்கிறார்கள். இதனை கர்த்தருடைய சட்டத்திற்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். கர்த்தருடைய சட்டத்திற்கேற்ப நேர்மையான வாழ்க்கை வாழும் பொழுதே அவர்கள் அதிகமாக புனிதப்படுத்தபடுவார்கள் என்று கிறிஸ்துவ மத வாதிகளும் கூட முறையிடுகிறார்கள்.
ஆனால் இது உண்மையா? கண்டிப்பாக இல்லை! மக்கள் ஆதாமின் சந்ததியாராக பிறப்பதினால், அவர்களுடைய பாவங்களுக்காக கர்த்தருடைய சட்டத்தை பின்பற்ற முடியாமல் இருப்பதுடன், தம் பாவங்களின் காரணமாக அவர்கள் சந்திக்க வேண்டிய நிச்சயமான மரணத்தை தவிர்க்க முடியாது. இதனால் உலகத்தினுடைய எல்லா பாவங்களிலிருந்தும் இது போன்ற எல்லா மக்களையும் மீட்பதற்காக ஆசரிப்பு கூடாரத்தின் பலிமுறையை கர்த்தர் அழைத்தார், மேலும் அவர்கள் எல்லோரையும் அவர் மீட்டுள்ளார்.
இதனால் ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வாயிற்கதவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால், கர்த்தர் நமக்காக அமைத்துள்ள நம்முடைய மீட்பையும் நம்முடைய பாவ மன்னிப்பையும், நற்செய்தியின் கிருபையையும் நாமெல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து கர்த்தருடைய வார்த்தையாக உலகத்திற்கு வந்தார். ஆசரிப்பு கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால், முன்னறிவிக்கப்பட்டதைப் போல அவருடைய வேலையைச் செய்தார், என்றும் இதற்கேற்ப நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்துள்ளார் என்றும் வேத வசனத்தில் எழுதப்பட்டுள்ளதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
ஆனால் மதம் மற்றும் இறையியல் விசுவாசம் மட்டுமே உடைய மக்களைப் பற்றி என்ன? அவர்களுடைய அன்றாட பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவதற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? மனத்திரும்பி ஜெபிப்பதின் மூலமாகவும், கடைசியில் அதிகமாக புனிதபடுத்தும் போதனையின் மூலமாக நீதிமானாக முயற்சி செய்வதின் மூலமாகவும் அவர்களுடைய பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள இது போன்ற மக்கள் முயற்சி செய்கிறார்கள். மனிதனுடைய சொந்த படைப்பான போதனை விசுவாசம் மாயையாய் இருக்கிறது. ஒருவருடைய சொந்த முயற்சியால் கர்த்தரை சந்திக்க முயற்சி செய்வது கர்வமிகுந்ததாய் இருக்கிறது. மேலும் இது ஒருவருடைய சொந்த படைப்பான மத தீமை என்ற உண்மையை தவிர வேறில்லை.
கர்த்தருக்கு முன்பாக தங்களுடைய எல்லாப் பாவங்களையும் மறைய செய்வதற்கு அவர்களால் செய்ய கூடியது ஒன்றும் இல்லை என்பதை மக்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் இந்த உலகத்தில் பிறந்த பொழுது நம்முடைய சொந்தப் பாவங்களைச் செய்ய கூடியதிலிருந்து தடுக்க முடியாத, ஆனால் பாவம் செய்யக் கூடியவர்களாக நாமெல்லாரும் பிறந்துள்ளோம். இதனால் நாம் எப்பொழுதுமே அதிக பாவங்களைச் செய்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் அவருடைய சட்டத்தின் மூலம், நம்மை பாவம் செய்ய வேண்டாம் என்று எத்தனையாய் கூறினாலும் அவருக்கு முன்பாக பாவம் செய்யக்கூடியவர்களாகவும் அவருடைய சட்டத்தின் முழு அமைப்பையும் உடைப்பதை தவிர்க்க முடியாதவர்களாகவுமே இருக்கிறோம். ஆகவே நாம் பாவமானவர்கள் என்று கர்த்தருடைய சட்டத்திற்கு முன்பாக நாம் அறிக்கை செய்ய வேண்டும். மேலும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்டுள்ள நம்முடைய தேவனாகிய இயேசுவின் செயல்களின் மூலம் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் மீட்டுள்ளார் என்ற இரட்சிப்பின் உண்மையை நம்முடைய முழு இருதயங்களுடன் நாம் விசுவாசிக்க வேண்டும்.
உலகத்தினுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலையாக்குவதற்காக தேவனே அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய சொந்த பலி காணிக்கை ஆனார் என்பதையும் இதன்படி உலகத்தினுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை மீட்டுள்ளார் என்ற கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. யேகோவாவைத் தவிர வேறு எந்த கர்த்தரும் கிடையாது என்றும் கிறிஸ்துவின் மூலமாய் இல்லாமல் யாரும் பிதாவினிடத்தில் வர முடியாது என்றும் வேதாகமம் நமக்கு சொல்லுகிறது (யோவான் 14:6). கர்த்தருடைய சட்டத்தின் வார்த்தையை விசுவாசித்து அதனை ஏற்றுக் கொள்வதின் மூலம் நாம் பாவிகளாகிறோம், மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் நாம் நம்முடைய பாவங்களிலிருந்து மீட்கப்படுகிறோம். இது தான் சத்தியமும் கர்த்தருக்குள் நமக்கு இருக்கும் விசுவாசமுமாயிருக்கிறது.
இதைப் போல அவருடைய இரட்சிப்பை நாமெல்லாரும் விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பதற்காக நம் தேவன் அமைத்து வைத்துள்ள பாவ மன்னிப்பின் சட்டத்திற்கேற்ப இது இருக்கிறது. கிறிஸ்தவம் என்பது உலகில் உள்ள பல மதங்களுள் ஒன்றில்லை. ஆனால் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தோன்றிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திவாரத்தில் கட்டுப்பட்டுள்ள மீட்பின் சத்தியம் இது.
மேலே உள்ள முக்கிய வசனத்தின் மூலம் நம்மை ஏன் கர்த்தர் அழைத்துள்ளார் என்பதை உணர வேண்டும்
என்னையும் உங்களையும் அவருடைய சிறப்பான ஜனமாவதற்கு கர்த்தர் அழைத்துள்ளார் என்பதை நாமெல்லாரும் உணரவேண்டும். நம்முடைய சொந்த செயல்களாலும் முயற்சிகளாலும் நீங்களும் நானும் கர்த்தருடைய மக்களாக எப்பொழுதுமே ஆக முடியாது. ஆனால் நரகத்தினுடைய அழிவு மற்றும் தண்டனையிலிருந்தும் சட்டத்தினுடைய சாபத்திலிருந்தும் நம்மை விடுவிக்க இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார் என்ற சத்தியத்தை விசுவாசித்ததனால் நீங்களும் நானும் கர்த்தருடைய பிள்ளைகளாகி உள்ளோம். யோவானால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதையும் சிலுவை மீது அவருடைய இரத்தத்தைச் சிந்தியதையும் விசுவாசிக்கும் நம்மை முழுமையாக அவர் மீட்டுள்ளார். தேவகுமாரனாகிய மேசியா, மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக ஒரே சமயத்தில் மனித குலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டார், நம்முடைய பாவங்களுக்கு கூலி கொடுப்பதற்காக, மரணத்தின் மூலம் நமக்காக அவரையே பலியாக்கினார், மீண்டும் மரணத்திலிருந்து எழுந்தார். இதனைத் தங்களுடைய முழு இருதயங்களுடன் விசுவாசிப்பவர்களுக்கு மீட்பராகியுள்ளார்.
கர்த்தருடைய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் மனித குலத்திற்கு சரியான பாவமன்னிப்பைக் கொடுத்துள்ளார் என்று அவர் நமக்கு சொல்லுகிறார் "நான் இந்த உலகத்திற்கு வந்தேன், யோவானால் ஞானஸ்நானம் செய்யப்பட்டேன், மேலும் என்னுடைய இரத்தத்தை சிலுவையின் மீது சிந்தி உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை அளித்துள்ளேன் என்ற என்னுடைய செயலை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" என்று தேவன் நம்மை கேட்கிறார். கர்த்தருக்கு முன்பாக நாம் சொல்லக்கூடியது எல்லாம் "ஆமாம்" தான். நாம் இரட்சிக்கப்படுவதற்காக, கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள பாவ மன்னிப்பை விசுவாசிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பழைய ஏற்பாட்டு நாட்களின் இஸ்ரவேலர்கள் மட்டும் அல்ல, இன்றைய நீங்களும் நானும் முழு உலகத்தினுடைய எல்லா மக்களும் கர்த்தர் ஏன் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்து முக்கியமான வசனத்தினுடைய இந்த வார்த்தையை ஏன் பேசவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்திருந்தார். கூடவே அவர்களுடைய பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக விசுவாசத்துடன் ஒரு மண் பலிப்பீடத்தை கட்டும்படி அவர்களிடம் கூறினார் (யாத்திராகமம் 20:24). இதைப் போல, கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருக்கும் நம்முடைய விசுவாசத்தின் மூலமாக, நாமும் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்கப்படவேண்டும்.
கர்த்தருடைய பெயர் என்ன? அவருடைய பெயர் `யாவே` அப்படியென்றால் `நான் நானே தான்` அதாவது அவராலே அவர் இருப்பவர் தான் கர்த்தர். பின்பு எப்படி அவர் நம்மிடம் வந்தார்? நீர் மற்றும் ஆவியின் மூலமாக அவர் நம்மிடம் வந்தார் (யோவான் 3:5). நம்முடைய தேவன் மனித சரீரத்தினால் இந்த உலகத்திற்கு வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலம் மனித குலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார், மேலும் சிலுவை மரணத்தின் மூலம் நமக்காக அவர் பலியானார். இது எல்லாம் சத்தியமாக இருப்பதால் ஆசரிப்பு கூடாரத்தினுடைய பிரகாரத்தின் நுழைவு வாயிலில் இருக்கும். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசுவாசத்தை உடையவர்களாய் இருக்கும்படி கர்த்தர் நமக்கு கூறியுள்ளதை நாமும் அப்படியே விசுவாசிக்க வேண்டும். கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள பாவமன்னிப்பை அறிந்து, நம்முடைய சொந்த எண்ணங்களை நிராகரிக்கும் பொழுது தான் உண்மையான விசுவாசம் வருகிறது. இப்படிப் பட்ட தாராளமான அன்பை நமக்கு கொடுத்ததற்கு நம்மால் அவருக்கு போதுமான அளவு நன்றி கூற முடியாது, ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக நாம் பெருமைப் பாராட்டக் கூடிய ஒன்றும் நம்மிடம் இல்லை.
கர்த்தருடைய வேதாகமத்தின் ஆழ்ந்த அறிவில் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை நாம் வைக்க வேண்டும். இந்த விசுவாசத்தின் அஸ்திபாரத்தைக் குறித்து கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடத்தில் பேசினார், மேலும் அவர் நம்மிடமும் பேசினார். இன்னமும் கூட ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் நுழைவு வாயிலின் நிறங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்தை நீங்கள் எல்லோரும் உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசத்தின் அஸ்திபாரத்தை அமைக்கும் நிறங்களாக இவை இருக்கின்றன. நாம் உண்மையான கர்த்தரை விசுவாசிக்க வேண்டும். நம்முடைய பாவங்களிலிருந்து உங்களையும் என்னையும் மீட்டு கொள்வதற்கு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை கர்த்தர் தாமே எடுத்துக் கொண்டு சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தைச் சிந்தினார்.
இஸ்ரவேலின் ஆவிக்குரிய மக்களாக வேண்டும் என்ற நீங்களும், மதமாக்கப்பட்ட கிறிஸ்தவத்தால் அழிக்கப் பட்ட பலி முறையை திரும்ப அமைப்பதின் மூலம் உங்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படுவதற்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்களும் நானும் தெரிந்து கொண்டு கூடவே மீண்டும் ஒரு முறை நம்முடைய பாவ மன்னிப்பின் விசுவாசத்திற்கான அஸ்திபாரத்தை அமைக்க வேண்டும். இதனால் இது உறுதியாகவும் நன்றாகவும் நிற்கக் கூடும்.
நம்முடைய விசுவாசத்துடன் இயேசுவுக்கு நன்றி சொல்ல வேண்டும். நரகத்திற்கு தள்ளப்படுவதை தடுக்க முடியாத நம்மை அவர் காப்பார். பிதாவாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நமக்காக அனுப்பினார், அவருடைய சத்தியத்தின் வார்த்தையின் மூலம் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகிய நூலாக அவர் வந்தார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய நான்கு ஊழியங்களினால் நம்முடைய தேவன் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்துள்ளார் என்ற இந்த சத்தியத்தை முழுமனதாக விசுவாசிப்பதின் மூலமாகவும், நம்முடைய எல்லா நன்றியையும் நாம் கர்த்தருக்கு செலுத்துகிறோம். மோசேயை சீயோன் மலைக்கு கர்த்தர் ஏன் அழைத்தார் என்ற காரணத்தை நாம் நன்றாக தெரிந்து கொண்டு விசுவாசிக்கும் பொழுது மட்டுமே உண்மையான பாவ மன்னிப்பின் மேல் சரியான விசுவாசத்தின் அஸ்திபாரத்தை அமைத்தவர்கள் என்று நம்மால் அழைக்கப்பட முடியும். சீனாய் மலையிலிருந்து கர்த்தர் ஏன் நம்மை அழைத்தார், என்ற காரணத்தை நீங்களும் நானும் உணர்ந்து அதை விசுவாசிக்க வேண்டும். இது பலி காணிக்கையின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை மன்னிப்பதற்காகவும் நம்மை அவருடைய சொந்த பிள்ளைகளாக்குவதற்குமேயாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகார நுழைவு வாயிலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சத்தியத்தில் இருந்து, கர்த்தரின் இரக்கத்தின் அன்பை இன்னமும் அதிகமாக உங்களால் சந்திக்க முடியும். நீங்கள் எல்லோரும் இந்த கர்த்தருடைய இரக்கத்தின் அன்பை விசுவாசித்து, அவற்றை உங்கள் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்வீர்கள் என்பது என்னுடைய நேர்மையான விசுவாசமும் ஜெபமுமாய் இருக்கிறது.