(ஆதியாகமம் 15:1-21)
"இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்."
கர்த்தருடைய வார்த்தையில் இருந்த ஆபிரகாமின் விசுவாசம்
வேதாகமத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஆபிரகாமின் விசுவாசத்தின் மீது நான் மிகுந்த மதிப்பையும், இரசிப்பையும் வைத்துள்ளேன். ஆபிரகாமுடைய விசுவாசத்தைப் பார்க்கும் பொழுது, அவனுடைய விசுவாசத்தின் எல்லா கஷ்டமான பாடுகளையும் நம்மால் பார்க்க முடியும். இதன் மூலம் தான் யேகோவாவினுடைய வார்த்தைகளை அவன் பின்பற்றினான். மேலும் ஆபிரகாமுடைய இந்த விசுவாசத்தை இரசிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆதியாகமம் 12:3 இல் "உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளதைப் போல், ஆபிரகாமை கர்த்தர் சிறப்பாக ஆசீர்வாதித்தார்; இங்கு கர்த்தர் சொல்லியிருக்கிறார், இந்த சிறந்த ஆசீர்வாதம் ஆதியாகமம் 15:1 யிலும் காண்பிக்கப்பட்டுள்ளது, "நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" என்று இங்கு ஆபிரகாமிற்கு கர்த்தர் தெரிவித்துள்ளார். கர்த்தர் ஆபிரகாமிற்கு இது போன்ற சிறந்த அன்பை வைத்திருந்ததால் அவர் அவனுடைய சொந்தமான கர்த்தர் ஆனார்.
சால்டியர்களின் ஊர் இல் இருந்து ஆபிரகாமை வழி நடத்தியதற்கு பிறகு கர்த்தர் அவனுக்கு முன்பாக தோன்றி "நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" என்று அவனிடம் சொன்னார். கர்த்தர் இதைச் சொன்ன பொழுது, "நீர் எனக்கு என்ன தருவீர்" என்று ஆபிரகாம் பதிலுக்கு அவரிடம் கேட்டான். ஆபிரகாமினுடைய இந்த வார்த்தைகள், கர்த்தரால் எனக்கு என்ன தரமுடியும், என்று அவனுடைய சந்தேகமான இருதயத்திலிருந்து வரும் அவிசுவாச வார்தைகளுடைய கேள்விகள் இல்லை. ஆனால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற ஆபிரகாமினுடைய ஆர்வமுள்ள வாஞ்சையை இவை அடக்கியிருந்தன. அப்படியானால் கர்த்தரிடமிருந்து ஆபிரகாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதம் இதுதானா? "நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்? ஏனென்றால் நான் குழந்தையில்லாமல் இருக்கிறேன், என்னுடைய வேலைக்காரனான எலியாசர் என்னுடைய வாரிசாக உள்ளான், அவன் என்னுடைய தத்தெடுக்கப்பட்ட மகனாக இருப்பதால், என்னுடைய எல்லா சொத்துக்களையும் உரிமையோடு பெற்றுக் கொள்வான், நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் சொன்னதில் இது வெளிப்பட்டிருக்கிறது. இங்கு அவனுடைய சொந்த மகனுக்காக அவன் எப்படி ஆவலோடு காத்திருந்தான் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். சொந்த குழந்தைகள் இருக்கக் கூடாது என்று வேண்டுமென்றே முடிவெடுத்தவர்களால் ஆபிரகாமினுடைய ஆர்வமுடைய வாஞ்சையுடன் ஒத்துணர்வு கொள்ள முடியாது. ஆனால் அவனுடைய சொந்த மகனே தன் வாரிசாக இருக்க வேண்டுமென அதிகமாக விருப்பப்பட்டான்.
கர்த்தருடைய சாயலால் படைக்கப்பட்ட அவருடைய குழந்தைகளுக்கு அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பது போல, மக்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்ற ஆவலான விருப்பம் இருக்கிறது. இதைப் போல "என்னுடைய வேலைக்காரன் என் வாரிசாய் இருப்பான்" என்று கர்த்தரிடத்தில் ஆபிரகாம் சொன்ன பொழுது, கர்த்தரால் அவன் எவ்வளவு ஆசீர்வதிக்கப் படவேண்டும் என்று விரும்பினான் என்பதை நாமெல்லாரும் உணரவேண்டும். இதனால் அவனுடைய சொந்த குழந்தையை அவனுடைய சொந்த வாரிசாக பெற்றுக்கொள்ள முடியும். பின்பு கர்த்தர் ஆபிரகாமிடத்தில் சொன்னார். "அது உண்மையல்ல. உன்னுடைய சொந்த சரீரத்தில் இருந்து வரும் ஒருவனே உன்னுடைய வாரிசாக இருப்பான். உன்னுடைய வேலைக்காரனாகிய தமஸ்குவின் எலியாசர் அல்ல. உன்னுடைய மனைவியினுடைய சரீரத்தில் இருந்து பிறக்கும் ஒருவனே உன்னுடைய வாரிசாக இருப்பான்."
பின்பு கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து வந்து வானத்தைப் பார்த்து நட்ச்சத்திரங்களை எண்ணும்படி சொன்னார். அதனால் ஆபிரகாம் மேலே உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தான், எண்ணமுடியாத நட்சத்திரங்களும் அழகான நட்சத்திர கூட்டங்களும் வான்கோட்டிற்கு அருகே தொங்கிகொண்டிருந்தன. நட்சத்திரங்களை எண்ணி, அவற்றினுடைய எண்ணிக்கையை சொல்ல முடியுமா? என்று கர்த்தர் ஆபிரகாமிடத்தில் சொன்ன பொழுது, எண்ண முடியாத அளவிற்கு, மிகவும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று ஆபிரகாம் பதிலளித்தான். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல அதிகமான சந்ததிகளை தருவேன் என்று கர்த்தர் ஆபிரகாமிற்கு வாக்களித்தார்.
கர்த்தர் அவனுக்கு கொடுத்த இந்த சத்திய வார்த்தையை ஆபிரகாம் விசுவாசித்தான். இப்படித்தான் கர்த்தருடைய எல்லா வார்த்தையை விசுவாசித்து, விசுவாசித்தின் தகப்பனாக ஆனான். இதனால் கர்த்தர் அவனிடத்தில் சொன்னார், "உன்னுடைய விசுவாசம் சரியானது. நீ உண்மையில் என்னுடைய வார்த்தையை விசுவாசிக்கிறாய். இதனால் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல அதிகமான சந்ததிகளை கொடுத்து நான் உன்னை ஆசீர்வதிப்பேன்."
ஆபிராகமுடைய பலி காணிக்கையும் கானான் தேசத்தைப் பற்றிய கர்த்தரின் வாக்குத்தத்தமும்
கர்த்தர், ஆபிரகாமை சால்டியர்களின் தேசத்திலிருந்து வெளியே நடத்தி வந்துடன் அவனுக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் கானான் தேசத்தை தருவேன் என்று அவனுக்கு வாக்களித்தார். கர்த்தர் இந்த சத்தியத்தை நிறைவேற்றுவார் என்பதற்கு சாட்சி இருந்ததா? "மூன்று வயதுடைய செம்மறி கடாவையும், புறாவையும் மற்றும் ஒரு இளம் புறாவையும் என்னிடம் கொண்டு வா. உன்னுடைய சந்ததியினருக்கு கானான் தேசத்தை தருவேன், என்று உன்னிடம் நான் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு இவை தான் சாட்சிகள்" என்று கர்த்தர் ஆபிரகாமிற்கு சொன்னதில் இது காண்பிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமின் சந்ததியினர், தங்களுடைய பாவங்களிலிருந்து கழுவப்படுவதற்கு, கர்த்தருக்கு பலி காணிக்கையை கொடுப்பார்கள் என்று இது நமக்கு காண்பிக்கிறது. மேலும் இந்த விசுவாசத்தின் மூலமாக அவர்கள் கானான் தேசத்திற்குள் நுழைவார்கள் என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தமாகவும் இது இருந்தது.
பலி கொடுக்கும் வேளையில் ஆபிரகாம் ஆழ்ந்த நித்திரைக்கு சென்ற பொழுது, கர்த்தர் அவனுக்கு முன்பாக தோன்றி, அவனுக்கு வாக்களித்தார், "அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை" (ஆதியாகமம் 15:13-16).
வேறு வார்த்தைகளில் கூறினால், எகிப்து தேசத்தில் இஸ்ரவேல் மக்களை விருத்தியடைய செய்வேன் என்றும் பின்பு அவர்களை கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்வேன் என்றும் கர்த்தர் வாக்களித்தார். மேலும் இப்படி செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்களுடைய பாவங்களை அகற்றும் காணிக்கைகளை கொடுக்கும்படி செய்ய கர்த்தர் முடிவெடுத்ததால் இந்த வாக்கை நிறைவேற்றுவேன் என்று ஆபிரகாமிற்கு காண்பிப்பதற்காக, ஆபிரகாமின் பலி காணிக்கையின் வெட்டப்பட்ட மாம்ச துண்டுகளுக்கு இடையே ஒரு எரியும் ஒளி கடந்து செல்லும் படி கர்த்தர் செய்தார்.
இந்த வழியில், ஆபிரகாமையும் அவனுடைய சந்ததியினரையும் அவருடைய சொந்த மக்கள் ஆக்குவேன் என்ற ஆபிரகாமிற்கான கர்த்தருடைய வாக்கு, பலி காணிக்கையில் உணர்த்தப்பட்டுள்ள பாவ கடனின் காணிக்கையிலிருந்து வந்தது, கர்த்தர் ஆபிரகாமிற்கு வாக்கு கொடுத்தார், "எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன்." பலி காணிக்கையின் மூலமாக ஆபிரகாம் மற்றும் அவனுடைய சந்ததியினரின் பாவங்களை தேவன் கழுவுவார் என்பதைக் காண்பிப்பதற்காக தான் கர்த்தர் இதை வாக்களித்தார். கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த இந்த வாக்கை நிறைவேற்றியதின் செயல் முறை பழைய ஏற்பாட்டின் வரலாறு முழுவதிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.
கர்த்தர் யோசேப்பை எகிப்தினுடைய முதலமைச்சராக ஆக்கியதுடன் யாக்கோபுவினுடைய எல்லா குடும்பத்தையும், அவர்களை பெருக செய்வதற்காக எகிப்து தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (ஆதியாகமம் 41:37-45; ஆதியாகமம் 47). ஆனால், காலங்கள் கடந்து செல்கையில், யோசேப்பினுடைய, எகிப்திற்கான குறிப்பிடத்தக்க பொது சேவையை அறியாத ஒரு புதிய பர்வோன் தோன்றி அந்த தேசத்தில் அப்பொழுது விருத்தியாகி கொண்டிருந்த இஸ்ரவேல் மக்களை அடிக்கடி துன்புறுத்தத் தொடங்கினான். சீக்கிரமாகவே இஸ்ரவேலர்கள் அடிமைகளாக்கப்பட்டனர், எகிப்திற்காக அடிமைகளாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் (யாத்திராகமம் 1:8-14). இருந்த போதிலும், இஸ்ரவேல் மக்கள் விருத்தியடைந்தார்கள். இதனால் பர்வோன், இன்னமும் அதிகமான அடிமைச் சுமைகளை அவர்கள் மீது சுமத்தினான். எகிப்தில், இஸ்ரவேல் மக்கள் 400 வருடங்கள் அடிமைகளாக இருந்து துயரப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தான் கடைசியாக ஒரு மீட்பரைத் தேட ஆரம்பித்தார்கள்.
மோசேயின் மூலமாக, அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க, எகிப்து தேசத்திலிருந்து அவர்களை வெளியே அழைத்து வந்தார் (யாத்திராகமம் 14:21-25). எகிப்து தேசத்திலிருந்து தப்பித்து வந்த இஸ்ரவேல் மக்களுக்கு மோசேயின் மூலமாக ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலிமுறையை கர்த்தர் அவர்களுக்கு கொடுத்து, அவர்களுடைய பலியை கொடுக்கச் செய்து அவர்களுடைய பாவங்களை கழுவினார். இஸ்ரவேல் மக்கள் இப்படிதான் கர்த்தரிடமிருந்து சட்டத்தையும் (யாத்திராகமம் 20) ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையையும் (லேவியராகமம் 1-4) பெற்றுக் கொண்டார்கள். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய சட்டத்தின் மற்றும் பலி முறையின் மூலமாக, இஸ்ரவேலர்கள், அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும் பலி காணிக்கையைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். மேலும் இந்த சத்தியத்தை விசுவாசித்தவர்களை கர்த்தர் அவருடைய சொந்த மக்களாக்கினார். மேலும் இஸ்ரவேலை மதகுருக்களின் இராஜ்ஜியமாகவும் கர்த்தருடைய பரிசுத்த தேசமாகவும் ஆசீர்வாதித்தார் (யாத்திராகமம் 19:6).
கடைசியில், பலி காணிக்கையின் மூலமாக, ஆபிரகாமிற்கு வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல அதிகமான சந்ததிகளை தருவேன் என்றும் கானான் தேசத்தை அவர்களுக்கு தருவேன் என்றும் கர்த்தர் கொடுத்த வாக்கை அவர் நிறைவேற்றினார் என்பதை நாம் கண்டு பிடிக்க முடியும். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு சென்ற பொழுது, 20-வது வயதிற்கு மேல் இருந்த ஆண்கள் மற்றும் போரில் சண்டையிடக் கூடியவர்களின் எண்ணிக்கை 600,000 ஆக இருந்தது. கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்கை நிச்சயமாக கடைப்பிடித்தார்.
கர்த்தருடைய சத்தியத்தின் வாக்கை விசுவாசித்தான் என்ற ஆபிரகாமுடைய விசுவாசத்தைப் பார்த்து அவனுடைய இந்த விசுவாசத்தை அங்கீகரித்தார். ஆபிரகாமின் விசுவாசத்தின் காரணமாக கர்த்தர் அவனை ஆசீர்வாதித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் ஏன் ஆபிரகாமை நேசித்து, ஆசீர்வாதித்தார் என்பதற்கான காரணம் அது கர்த்தருடைய வார்த்தையில் அவனுக்கு இருந்த விசுவாசமேயாகும். கர்த்தருடைய வார்த்தையை ஆபிரகாம் விசுவாசித்ததால் அவர் அவனுடைய விசுவாசத்தினால் சந்தோஷமடைந்தார். ஆதலால் ஆபிரகாமிடமிருந்து அவனுடைய சந்ததியினரால் கொடுக்கப்பட்ட பலி காணிக்கையின் மூலமாக கர்த்தருடைய விருத்தசேதனத்தின் சத்தியத்தை நிறைவேற்றவும், இஸ்ரவேல் தேசத்தை கட்டவும் நினைத்தார்.
ஆபிரகாம் அவனுடைய பலி காணிக்கையை கர்த்தருக்கு கொடுத்ததினால் அவனுடைய விசுவாசம் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டது என்று நாம் பார்க்கிறோம். நம்முடைய செயல்களினால் அல்ல, ஆனால் கர்த்தருடைய வார்த்தையில் நமக்கு இருக்கும் விசுவாசத்தின் மூலம் இந்த விசுவாசம் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்க அனுமதித்துள்ளது. ஆபிராகம் செய்தது போல, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் அவர்களுடைய பாவங்களை பலி காணிக்கையினால் வெட்டியெறியக்கூடிய ஆவிக்குரிய விருத்தசேதனத்தை பெற்றவர்களுக்கு கர்த்தர் கானான் தேசத்தை அவருடைய ஆசீர்வாதமாக அனுமதித்துள்ளார். இதைப் போலவே ஆபிரகாம் வைத்திருந்த அதே விசுவாசத்தை கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கிறார். இன்று உங்களையும் என்னையும் ஆபிரகாமைப் போல அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் நம்முடைய இருந்தயங்களுக்குள் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இதனால் கர்த்தருடைய இராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கர்த்தர் நினைக்கிறார். பிதாவாகிய கர்த்தர் நம்முடைய பாவங்களையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலம் அவருக்குள் செலுத்தி, முழு மனிதகுலத்திற்கான தேவ ஆட்டுக்குட்டியாய் அவரை ஆக்கினார். ஆபிரகாம் செய்தது போல இந்த சத்தியத்தை விசுவாசிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இப்படிப் பட்ட விசுவாசிகளை நிரந்தரமாக அவருடைய சொந்த மக்கள் ஆக ஆக்கி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
கர்த்தருடைய வார்த்தையில் ஆபிரகாமிற்கு இருந்த விசுவாசத்தினால் அவன் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டதைப் போல, இன்றும் கூட ஆபிரகாம் வைத்திருந்த விசுவாசத்தை நீங்களும் நானும் வைப்பதின் மூலம் கர்த்தருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம். கர்த்தர் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்து சட்டத்தையும் பலிக் காணிக்கையையும் அவனுக்கு கொடுத்தார். மேலும் அவருடைய வார்த்தையை விசுவாசித்தவர்களை அவருடைய சொந்த மக்கள் ஆகும்படி ஆசீர்வாதித்தார்
கர்த்தருடைய சட்டத்தை கடைப்பிடிக்க நாம் தவறியிருந்தாலும் ஆசரிப்புக் கூடாரத்தில் உணர்த்தப்பட்டுள்ள பாவத்தின் கடன் மூலம், நம்மையும் அவருடைய மக்களாக கர்த்தர் மாற்றியுள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப் படுத்தப்பட்டுள்ள நம்முடைய சத்தியத்தில் இருக்கும் விசுவாசத்தின் மூலம் கர்த்தர் நம்மை அவருடைய நிரந்தர ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி செய்துள்ளார். இதைப் போல் ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் நாமெல்லாரும் கர்த்தருடைய மக்களாக வேண்டும். கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நமக்கு காண்பித்து, ஆசரிப்புக் கூடாரத்தின் மூலம் நம்முடைய மீட்பை நமக்கு கொடுத்துள்ளார் என்று நம்முடைய இருதயங்களில் நாம் விசுவாசிக்கும் பொழுது மட்டுமே அவருடைய அதிகமான ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தது போல, அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவரை நாம் விசுவாசிக்க வேண்டும்
ஆபிரகாம், அவனுடைய நல்ல செயல்களுக்காக அல்லாமல் கர்த்தருடைய வார்த்தையில் அவனுக்கு இருந்த விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டான். சட்டத்தின் மூலம் கர்த்தர் நம்மை நம்முடைய பாவங்களை தெரிந்து கொள்ள செய்துள்ளார். மேலும் அவருடைய ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை பரிசுத்தமான பலி காணிக்கைக்குள் செலுத்தியும் அதனுடைய இரத்தத்தை கர்த்தருக்கு கொடுக்க செய்ததன் மூலமாகவும், நம்முடைய எல்லா பாவமன்னிப்பையும் பெற்றுக்கொள்ளும்படி அவர் செய்துள்ளார். இதே வழியில் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, சிலுவையின் மீதான அவருடைய மரணத்தினாலும், மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்தது மூலமும் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னித்துள்ளார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் மட்டும் தான் நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளாக முடியும். இந்த சத்தியத்தை தங்களுடைய இருதயங்களினால் விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் பெற முடியும் என்று வேதம் நமக்கு சொல்கிறது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் அவருடைய மீட்பின் வார்த்தையை, இந்த முழு உலகத்திலும் எங்கும் காணப்படாத மிகவும் பொக்கிஷமான நம்முடைய சொந்த ஆசீர்வாதமாக நாம் ஆக்க வேண்டும்.
ஆபிரகாம் கர்த்தரிடம் இருந்து அதிகமான ஆசீர்வாதங்களை ஏன் பெற்றான்? கர்த்தர் அவனுக்கு சொன்னதை விசுவாசித்ததினால் அவன் ஆசீர்வாதிக்கப்பட்டான். இன்றும் கூட வேதாகமத்தில் எழுதியுள்ள கர்த்தருடைய வார்த்தையை நீங்களும் நானும் விசுவாசித்தால், ஆபிரகாமுடைய அதே விசுவாசத்தை நாம் பெற்றுக் கொண்டு பரலோகத்தினுடைய அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியும். இதனைச் செய்வது அவ்வளவு கடினமானதல்ல. நாங்கள் கர்த்தருடைய மக்கள் என்று காண்பிக்கும் சாட்சியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டியது நம்முடைய ஜெப செயல்கள் மூலமாக அவரை சந்தோஷப்படுத்த முயற்சி செய்யாமல் நம்முடைய இருதயங்களினால் அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும்.
ஆபிரகாமுடைய சந்ததியினருக்கு கானான் தேசத்தைத் தருவேன் என்று கர்த்தர் அவருடைய வார்த்தையினால் அவனுக்கு வாக்களித்தார். இன்றைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அனைவரும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய தீர்க்கதரிசனத்தினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவினுடைய நான்கு ஊழியங்களும் நம்மை நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் மீட்டுள்ளது என்று நாம் விசுவாசிக்க வேண்டும். மேலும் இப்படி விசுவாசிப்பதின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான கடனை நாம் பெற்றுக் கொண்டு கர்த்தருடைய பிள்ளைகளாகி, பரலோகத்தின் இராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய ஒரு வார்த்தையும் பயணற்றவை அல்ல, அவருடைய எல்லா வார்த்தையும் உண்மையாய் இருப்பதால் அவருடைய வார்த்தையை நாம் கண்டிப்பாக விசுவாசிக்க வேண்டும். நாம் அவருடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும், அதனை தவறாமல் விசுவாசிக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் இது தான் முற்றிலுமான உண்மை. நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் சத்தியத்தை விசுவாசித்து, உங்கள் வாயினால் அறிக்கையிடுவீர்களானால் நீங்கள் கர்த்தரால் அங்கீகரிக்கப் படுவீர்கள். "நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்" (ரோமர் 10:10). இதனால் தான் விசுவாசம் அவ்வளவு முக்கியமாயிருக்கிறது, மேலும் நம்முடைய முழு இருதயங்களுடனும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டியது மிகவும் முக்கியமாய் இருக்கிறது. மனிதன் சொல்லும் வார்த்தையை அல்ல ஆனால் கர்த்தருடைய எழுதப்பட்ட வார்த்தையை விசுவாசிப்பதற்கு நமக்கு கஷ்டமாய் இருக்கிறது. மேலும் நம்முடைய சொந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சியினால் வார்த்தையை விசுவாசிக்காமல், அதை உள்ளபடியே நம்முடைய உண்மையான இருதயங்களினால் விசுவாசிப்பது தான் நமக்கு முக்கியமாய் இருக்கிறது. இதனால் தான் கர்த்தருடைய ஊழியக்காரரும் முன்பு மீட்கப் பட்டவர்களும் கர்த்தருடைய வார்த்தையை உள்ளபடியே போதிக்கிறார்கள்.
விருத்த சேதனத்தின் அடையாளம் மூலம் ஆபிரகாம் மற்றும் அவனுடைய சந்ததியினரிடம் கர்த்தர் அவருடைய உடன்படிக்கையை ஏற்படுத்தி ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையை அவர்களுக்கு கொடுத்தார். இதனால் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வருவார் என்று அவர்களால் விசுவாசிக்க முடிந்தது. இவர் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும் சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தின் மூலமாகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னிப்பார். மேலும் இதனால் இந்த விசுவாசத்தின் மூலமாக கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்குள் அவர்களால் நுழைய முடியும்.
கர்த்தருடைய உடன்படிக்கையின் வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்ததின் மூலம் ஆபிரகாம் மட்டும் ஆசீர்வதிக்கப் படவில்லை, ஆனால் அவனைப் போல, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம் நாமும் கூட ஆசீர்வதிக்கப்படலாம். நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை மீட்பதற்காக தான் கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார் என்று நான் விசுவாசிக்கிறேன். இதனால் தான் கர்த்தர் ஆபிரகாமினுடைய சந்ததியினரை சீனாய் மலைக்கு அழைத்துச் சென்று ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பலி முறையையும் சட்டத்தையும் அவர்களுக்கு கொடுத்தார். இந்த சத்தியம் தான் கர்த்தருடைய கிருபை ஆக இருக்கிறது என்பதை நாமெல்லாரும் உணரவேண்டும்.