• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-6] கர்த்தரின் வாக்குத்தத்தம் ஏற்படுத்திய விருத்தசேதன உடன்படிக்கை இன்னமும் ந (ஆதியாகமம் 17:1-14)

2021.04.24 34
(ஆதியாகமம் 17:1-14)
"ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படுவது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்."
 
 
ஆதியாகமம் புத்தகம் 17-ஆம் அதிகாரத்தில், கர்த்தர் ஆபிரகாமுடன் ஏற்படுத்தின விருத்த சேதன உடன்படிக்கையானது நமக்கு ஆவிக்குரிய விருத்த சேதனத்தை காண்பிக்கிறது. இதன் மூலம் தான் ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கும் பலி காணிக்கையின் தலையின் மேல் அவர்களுடைய கைகளை வைத்து, பாவங்களை அங்கு செலுத்தியதால், எல்லாப் பாவங்களும் இஸ்ரவேலர்களிடமிருந்து துண்டிக்கப் பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் ஆபிரகாமுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையானது, பாவ காணிக்கை மற்றும் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு முன் கொல்லப்பட்ட ஒன்றாக இருந்தது. கர்த்தர் ஆபிரகாம் மற்றும் அவனுடைய சந்ததியினரின் கர்த்தராக இருப்பார் என்றும் ஆசரிப்புக் கூடாரத்தை கருத்தில் கொண்டு, ஆபிரகாமினுடைய சந்ததியினர் தங்களுடைய கைகளை பலி காணிக்கையின் தலையின் மேல் தங்கள் வைத்து, அவர்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தவேண்டும் என்று கூறியது தான் கர்த்தர், விருத்தசேதனத்தினால் ஆபிரகாமுடன் செய்த சத்தியம். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தினுடைய எல்லா பாவங்களையும் எடுத்துக் கொள்வார் என்பதை இது நமக்கு காண்பிக்கிறது என்பதை நாம் உணர்ந்து விசுவாசிக்க வேண்டும்.
ஆபிரகாமிற்கு கர்த்தர் வாக்களித்தார் "அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்" (ஆதியாகமம் 15:5). ஆபிரகாமிற்கு முன்பாக கர்த்தர் மறுபடியும் தோன்றி, மீண்டும் ஒரு முறை வாக்களித்தார், "உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்" (ஆதியாகமம் 17:6-7).
ஆபிரகாமிற்கும் அவனுடைய சந்ததியினருக்கும் கர்த்தர் செய்த சத்தியம் விருத்தசேதனத்தின் மூலமாக வந்தது. கர்த்தருக்கு இஸ்ரவேலர்கள் பலி காணிக்கையைக் கொடுக்கும் பொழுது நடத்தப்படும் பலியின் மீது கைகளை வைப்பதோடு இந்த விருத்த சேதனம் சரியாக ஒத்துப்போனது. இயேசு யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தினால் உலகத்தினுடைய பாவங்களை தன் மீது எடுத்துக் கொண்டதினால் பாவத்தின் கடன் நிறைவேற்றப்பட்டது என்று புதிய ஏற்பாட்டு காலத்திற்கு முன்பே இது கூறியது. ஆபிரகாமிற்கு கர்த்தர் வாக்களித்த பழைய ஏற்பாட்டினுடைய விருத்த சேதனமானது இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள ஆவிக்குரிய விருத்தசேதனமாகிய பாவத்தைக் கழுவுதல் புதிய ஏற்பாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தில் பலி காணிக்கையை கொடுக்கும் பொழுது, ஆபிரகாமினுடைய விசுவாசம் இஸ்ரவேலர்களுக்கு தேவைப்பட்டது என்று இது மேலும் நமக்குச் சொல்லுகிறது.
கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார், "உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்" (ஆதியாகமம் 17:11-12). வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததியினருக்கும் விருத்த சேதனத்தின் மூலமாக வாக்களித்தார். ஆபிரகாமிற்கும், அவனுடைய சந்ததியினருக்கும் கர்த்தராக இருப்பேன் என்று கர்த்தர் வாக்களித்தார், ஆனால் பதிலுக்கு ஆபிரகாமும் அவனுடைய சந்ததியினரும் விருத்த சேதனம் செய்யவேண்டியிருந்தது. "உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படுவது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது" (ஆதியாகமம் 17:13).
இதனால் தான், உலகத்தில் உள்ள எல்லா மக்களிலும், இஸ்ரவேல் ஆண்கள் மட்டும், ஆபிரகாமினுடைய நாட்களிலிருந்து அவர்களுடைய முன்தோலை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம், விருத்தசேதனம் அதனுடைய ஆரோக்கிய பயன்களின் காரணமாக மிகவும் அதிகமாக பரவி விட்டது, ஆனால் அக் காலத்தில், இஸ்ரவேல் ஆண்கள் மட்டுமே விருத்தசேதனம் செய்து இருந்தார்கள். கர்த்தர் ஆபிரகாமிற்கு செய்த சத்தியத்தின் அடையாளமாக இது இருந்தது. மற்றும் ஆபிரகாமையும் அவனுடைய சந்ததியினராகிய இஸ்ரவேல் மக்களையும் கர்த்தர் அவர்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கையை அவர்களுடைய மாம்சத்தில் சுமக்கும்படி செய்தார்.
ஆதியாகமம் 17:11 கூறுகிறது, "உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்." உடன்படிக்கையின் அடையாளமாக விருத்த சேதனம் இருந்தது. இதனை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காக கர்த்தர் இப்படியாக வாக்குத்தத்தம் செய்தார். "நீங்கள் என் மக்கள் என என்னால் எப்படி அறிந்து கொள்ள முடியும்? உங்கள் விருத்த சேதன தழும்புகளைக் கண்டு அதனை அறிந்து கொள்வீர்கள். இப்போதிலிருந்து உங்களுக்குள் பிறந்த ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்ளவேண்டும். இதன் மூலமாக எனது உடன்படிக்கையானது நித்திய உடன்படிக்கையாக உங்கள் மாமிசத்தில் எப்போதும் இருக்கும். நான் உங்களின் கர்த்தராகவும் உங்கள் சந்ததியினரின் கர்த்தராகவும் இருப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்கிறேன். நான் உங்களை ஆசீர்வதிப்பேன் என்றும், பெருகப் பண்ணுவேன் என்றும், கானான் தேசத்திற்குள் உங்களைப் பிரவேசிக்கச் செய்து, அதில் உங்களை வாழச் செய்வேன் என்றும், உங்களிடமிருந்து தேசங்களை உருவாக்குவேன் என்றும், உங்களிலிருந்து ராஜாக்களை உருவாக்குவேன் என்றும் வாக்குத்தத்தம் செய்கிறேன்" (ஆதியாகமம் 17:4-14).
ஆபிரகாமுடனும் அவனுடைய சந்ததியினரிடமும் கர்த்தர் ஏற்படுத்தின உடன்படிக்கை அவர்களுடைய மாம்சத்தில் காணப்படும் என்று அவர் சொன்னார். வேறு வார்த்தைகளில் கூறினால், இஸ்ரவேல் ஆண்களுடைய விருத்த சேதனத்தில் இருந்த தழும்புகளில் கர்த்தருடைய சத்தியம் முத்திரையிடப்பட்டிருந்தது. விருத்தசேதனத்தின் மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் அவருடைய வாக்குத்தத்தத்தைச் செய்தார். மேலும் இதன்படி ஆண்கள் விருத்தசேதனம் செய்துள்ளார்களா இல்லையா என்பதைப் பொருத்து அவர்கள் ஆபிரகாமினுடைய சந்ததிகளா, இல்லையா என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக, விருத்தசேதனம் செய்தவர்கள், கர்த்தரால் அடையாளங் காணப்பட்டு ஆபிரகாமின் சந்ததிகளாக ஆசீர்வதிக்கப்பட்டனர். அதே சமயம் விருத்தசேதனம் செய்யாதவர்கள் இப்படி அடையாளங் கண்டு கொள்ளப்படவில்லை.
 
 
ஆபிரகாம் இஸ்ரவேல் மக்களின் மிகவும் முக்கியமான மனிதனாக இருக்கிறான்
 
இஸ்ரவேல் மக்களுக்கு சட்டத்தின் தந்தையாகிய மோசேயை விட மிகவும் முக்கியமான மனிதனாக இருப்பது விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாம் ஆகும், அவனை விட பெரியவன் வேறு யாரும் இல்லை. நோவாவை ஞாபகம் வைத்து கொள்ளாத இஸ்ரவேல் மக்கள் பலர் இருந்தாலும், ஆபிரகாமை ஞாபகம் வைக்க தவறியவர்கள் சில பேர் தான் இருப்பார்கள். சேம், சேத் அல்லது மெதூசலா ஆகியவர்களை சில மக்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆனால் ஆபிரகாமை, இஸ்ரவேல் மக்களுடைய மறக்க முடியாத விசுவாசத்தின் தந்தையாக அடையாளங் கண்டு கொண்டு, விசுவாசித்து, பின் தொடர்கிறார்கள். இதைப் போல், கர்த்தர் ஆபிரகாமின் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் இன்னமும் பயனுள்ளதாக இருக்கிறது.
"நாம் ஆபிரகாமுடைய சந்ததிகள், நம் மக்கள் நம்முடைய சரீரத்தில் விருத்தசேதனத்தின் அடையாளத்தைச் சுமக்கிறார்கள். இதனால் கர்த்தர் நம்முடைய கர்த்தர் என்பதுடன் நாம் அவருடைய சொந்த மக்களுமாயினோம்" என்று விசுவாசித்து இஸ்ரவேல் மக்கள் அவர்களுக்கு அவர்களே முழுமையாக புரிந்துக் கொண்டுள்ளார்கள். கர்த்தர், விருத்தசேதனத்தின் மூலமாக ஆபிரகாமுடன் ஏற்படுத்தின உடன்படிக்கையை, இஸ்ரவேல் மக்கள் இன்னமும் விசுவாசிக்கும் காரணத்தால் தான் அவர்கள் தங்களை தாங்களே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக கருதுகிறார்கள்.
ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்: அவனுடைய சட்டப்படியான மனைவி சாராள், இவள் சாரா என்று கர்த்தரால் பின்பு பெயர் சூட்டப்பட்டாள், கூடவே சாராளுடைய வேலைக்காரியாக இருந்த அவனுடைய இரண்டாவது மனைவியான ஆகர் ஆவாள். சாராள் ஆபிரகாமிற்கு பிள்ளைகளைப் பெற்று தர மாட்டாள் என்பது போல அவனுக்கு தோன்றியதால், ஆபிரகாம் அவனுடைய சொந்த எண்ணத்தில், ஆகரின் மூலம் பிள்ளை பெற விரும்பினான் (ஆதியாகமம் 16:1-4). ஆனால், சாராள் ஆபிரகாமுடைய சட்டப்படியான மனைவியாக இருப்பதால், அவளுடைய சொந்த பிள்ளையின் மூலம் தான், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல, அதிகமான சந்ததியினரை ஆபிரகாமிற்கு கர்த்தர் தருவார் என்று அவர் தெளிவாக சொன்னார். சாராளினுடைய சரீரத்திலிருந்து பிறந்தவர்களை மட்டும் தான் தன்னுடைய சொந்த மக்களாக அடையாளம் கண்டுக் கொள்வேன் என்று கர்த்தர் வாக்களித்த காரணத்தால், இரண்டாவது மனைவியான ஆகரிடமிருந்து பிறந்த இஸ்மவேலின் சந்ததியினர் கர்த்தருக்கு முன்பாக அவருடைய மக்களாக அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை.
இஸ்ரவேல் மக்கள் விருத்த சேதனம் செய்து கொள்ள வில்லை என்றால் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்கு பயனற்றதாகி விடும். கர்த்தர் அவருடைய உடன்படிக்கையின் அடையாளமாக அவர்களை விருத்த சேதனம் பண்ணச் சொன்னார். இதனால் இந்த விருத்த சேதனம் அவர்களுடைய மாம்சங்களில் இருக்கும். இதைப் போல, இஸ்ரவேலர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளுவதில் உறுதியாய் இருந்தார்கள். ஏனென்றால் விருத்த சேதனம் செய்யாமலிருப்பது கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை பயனில்லாதது ஆக்கி விடும். இஸ்ரவேல் மக்களுள் விருத்த சேதனம் பண்ணாமல் இருப்பது, கர்த்தருடைய வாக்கை உண்மையாக கருதாத புறஜாதியாரைப் போன்றது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
 
ஆவிக்குரிய விருத்தசேதனம்
 
கர்த்தர், ஆபிரகாம் மற்றும் அவனுடைய சந்ததியினரிடம் ஏற்படுத்திய உடன்படிக்கையானது, இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த பொழுது, யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் மனித குலத்தினுடைய பாவங்களை தன் மீது எடுத்துக்கொண்டு நிறைவேற்றிய பாவ மன்னிப்பின் மூலம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் வாயிலையும், அதன் திரைச்சீலையையும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்ததின் மூலம் செய்யவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் கூறினார். இந்த ஆசரிப்புக் கூடாரத்தினுடைய விளக்கமான அமைப்பின் மூலம், இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் மீட்பை கர்த்தர் நமக்கு போதித்துள்ளார். தேவன் இந்த உலகத்திற்கு வந்து, தன்னுடைய 30-வது வயதில் யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக மனித குலத்தினுடைய பாவத்தை ஏற்றுக்கொண்டார் என்றும், சிலுவையின் மீது மரித்து, மரணத்திலிருந்து மீண்டும் எழுந்து, இதன் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிட்டார் என்றும் இந்த உண்மையை விசுவாசிப்பவர்கள் அனைவரும் ஆபிரகாமினுடைய சந்ததிகள்தான். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் மக்களுடைய கர்த்தராக அவர் ஆகியுள்ளார்.
இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலம், நாமெல்லாரும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தை செய்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களும் அவருக்குள் செலுத்தப்பட்டு விட்டது என்பதை விசுவாசித்து நம்முடைய இருதயங்களிலிருந்து பாவங்களை துண்டிப்பதைத் தவிர இந்த ஆவிக்குரிய விருத்தசேதனம் என்பது வேறில்லை (ரோமர் 2:29).
இதைப் போல் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம் பாவமன்னிப்பை பெற்றவர்கள் எல்லோரும் கர்த்தருடைய இராஜ்ஜியத்தின் ராஜாக்களாகவும், அவருடைய பிள்ளைகளாகவும் உள்ளனர். "உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்" (ஆதியாகமம் 17:6) என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்ததைப் போல, அவருடைய மக்கள் உண்மையில் உலகம் முழுவதிலும் எழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஆபிரகாமின் சந்ததியினராக வேண்டும் என்றால், இயேசு இந்த பூமியில் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவையின் மரணத்தையும் விசுவாசிக்க வேண்டும். இதைப் போல, இயேசுவினுடைய ஞானஸ்நானத்தை தெரிந்துக் கொண்டு விசுவாசிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் போதுமான அளவு வற்புறுத்தி கூறமுடியாது. இயேசு கிறிஸ்து தான் இராஜாதி இராஜா இரத்தாம்பர நிறத்தை அணிந்து வந்த "ராஜாதி ராஜா" அவர்தான் (யோவான் 19:5) இயேசு கிறிஸ்து தான் உலகத்தினுடைய ராஜாவாகவும் அதன் சிருஷ்டிகருமாயிருக்கிறார். அவர் மட்டும் தான் கர்த்தரால் உருவாக்கப்பட்ட மகனாக இருப்பதால், பிதாவினுடைய விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தார். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரெ நேரத்தில் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை எடுத்துப் போடுவதற்காக, நம்முடைய இருதயங்களில் இருந்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் வெட்டி எடுத்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக அவற்றை அவருடைய சரீரத்திற்குள் ஏற்று, சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தை சிந்தியதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நியாயந்தீர்க்கப்பட்டார். இதைப் போல, இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் எல்லோராலும் ஆபிரகாமுடைய சந்ததிகளாக முடியும்.
ஆபிரகாம், அவனுடைய குடும்பத்தார் மற்றும் அவனுடைய சந்ததிகள் எல்லோரும் உடல்ரீதியாக விருத்தசேதனம் செய்யப்பட்டனர். புறஜாதியாரிடமிருந்து காசு கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளும் கூட விருத்த சேதனம் செய்யப்பட்டனர். உடன்படிக்கையை அவர்கள் விசுவாசித்து, விருத்த சேதனம் செய்து கொண்ட பிறகு இந்த புறஜாதி அடிமைகளும் கூட ஆசீர்வதிக்கப் பட்டு, கர்த்தர் அவர்களுடைய கர்த்தர் ஆனார். இதைப் போல, விசுவாசத்தின் மூலம் தான் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் ஆகிறோம், விசுவாசத்தின் மூலம் நாம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுக்கிறோம், விசுவாசத்தின் மூலம் நாம் பரலோகத்திற்குள் நுழைகிறோம், மேலும் விசுவாசத்தின் மூலம் தான் நாம் இந்த பூமியில் ராஜாக்களாக வாழ்கிறோம். இந்த விசுவாசமானது, புதிய ஏற்பாட்டுக் காலத்தில், இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக இந்த உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார் என்று விசுவாசிப்பவர்களின் விசுவாசமாயிருக்கிறது.
இருந்த போதிலும், இயேசுவினுடைய இந்த ஞானஸ்நானம் அந்த அளவிற்கு முக்கயமானது இல்லை என்று சில மக்கள் முறையிடுகிறார்கள். ஏனென்றால், சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தை விசுவாசிப்பதின் மூலம் மட்டும் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய காலத்தில் செய்யப்பட்ட பலி காணிக்கையினுடைய தலையின் மீது கைகளை வைப்பதை அவர்கள் விசுவாசித்திருந்தாலும் இயேசுவினுடைய சொந்த ஞானஸ்நானத்தின் மீது அவர்கள் குறைந்த முக்கியத்துவத்தை முதலாம் வருகைக்கு முன்னதாகவும், மோசேயினுடைய ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்னதாகவும் ஆபிரகாமினுடைய விசுவாசம் அங்கீகரிக்கப்பட்டதால், இயேசுவினுடைய ஞானஸ்நானத்தின் தெளிந்த வார்த்தையை விசுவாசிக்காமலும் கூட சிலுவையினுடைய இரத்தத்தின் வார்த்தையை மட்டும் விசுவாசிப்பதின் மூலம் அவர்கள் இன்னமும் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று இதனால் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கர்த்தர் ஆபிரகாமிடம், மூன்று வயது காளை, மூன்று வயது பெண் ஆடு, மூன்று வயது செம்மறிகடா, ஒரு மணி புறா மற்றும் ஒரு இளம் புறா ஆகியவற்றைக் கொண்டு வரச் சொன்னார். ஆபிரகாமிற்கும், அவனுடைய சந்ததியினருக்கும் கானான் தேசத்தை அவர்களுடைய உரிமையாக கொடுப்பார் என்பதை அவன் உணரவேண்டும் என்பதற்காக தான் கர்த்தர் இப்படிச் சொன்னார். இதைச் சொன்ன போது, சர்வாங்க தகன பலிபீட பலி காணிக்கையை தன் மனதில் கர்த்தர் நினைத்திருந்தார் என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். "சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின" என்று ஆதியாகமம் 15:17 சொல்லுகிறது. ஆபேலுடைய சர்வாங்க தகன பலி காணிக்கையும் அவனுடைய விசுவாசத்தையும் கர்த்தர் அங்கீகரித்தார். ஆனால் சர்வாங்க தகன பலிபீட பலி காணிக்கையை விசுவாசிக்காத காயீனுடைய விசுவாசத்தைக் கர்த்தர் அங்கீகரிக்கவில்லை.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு மத்தியில், விசுவாசத்துடன் ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்யாமலும் கூட, இயேசுவைக் குருட்டுத்தனமாக விசுவாசிப்பதின் மூலம் அவர்கள் மீட்க்கப்படுகிறார்கள் என்று தவறாக புரிந்துக்கொள்ளும் பல கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இயேசுவினுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்களுடைய எல்லாப் பாவங்களும் அவருக்குள் செலுத்தப்பட்டது என்ற சத்தியத்தை விசுவாசிக்காமல் இயேசுவினுடைய மரணத்தை மட்டும் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். இந்த மக்கள் கர்த்தருடைய சொந்த மக்களாகவே முடியாது, ஏனென்றால் இந்த வழியில் விசுவாசிப்பது, அவர்களுடைய இருதயங்களிலிருந்து அவர்களுடைய பாவத்தை அகற்றாது. விருத்தசேதனம் செய்யப்பட்ட மாம்சத்தில் தான் அவருடைய உடன்படிக்கையின் அடையாளம் இருக்கிறது என்று கர்த்தர் சொன்னதால் விருத்தசேதனம் செய்யாதவர்கள், கர்த்தருடைய இந்த சத்தியத்துடன் சம்பந்தம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.
யோவான் ஸ்நானகனிடமிருந்து இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் மக்கள் அவர்களுடைய பாவத்தில் இருந்து மீட்கப்பட முடியுமா? இப்படிப்பட்ட மக்கள் கர்த்தருடைய பிள்ளைகளாக முடியுமா? அவர்கள் பரலோகத்திற்குள் நுழைய முடியுமா? அவர்கள் அவருடைய ராஜ்ஜியத்தின் ராஜாக்கள் ஆக முடியுமா? இந்த கேள்விகளுக்கான பதில் இல்லை என்றே ஒலிக்கிறது! இன்று நாம் வாசித்த முக்கியமான இந்த வசனத்திற்கான பதிலை இந்த சாட்சி அளிக்கிறது. இன்று ஆபிரகாமிற்கு கர்த்தர் கொடுத்த வாக்கானது, இயேசு கிறிஸ்துவை நம்முடைய மீட்பராகவும் அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் மீதான அவருடைய இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்ததன் மூலம் பாவ மன்னிப்பை பெற்றுக் கொண்ட உங்களிடமும் என்னிடமும் கொடுத்த வாக்குத்தத்தமாய் இருக்கிறது. இப்படி விசுவாசிப்பவர்களுக்கு, கர்த்தர் ஆபிரகாமுடன் பேசிய அதே ஆசீர்வாதத்தின் வார்த்தை பொருந்தும்.
 
 
இயேசுவின் உண்மை விசுவாசிகள் தம் சொந்த தத்துவங்களை பின்பற்ற மாட்டார்கள்
 
வேதாகமத்தில் உள்ள கர்த்தருடைய வார்த்தை மீட்கப்படுதலின் முழுமையானதும் தெளிவானதுமான சத்தியமாயிருக்கிறது. நாம் எவ்வளவு அதிகமாக வாசித்து, எவ்வளவு அதிகமாக சிந்திக்கிறேமோ அந்த அளவு தெளிவாகும். இன்றைய கிறிஸ்தவர்கள் தம்முடைய சொந்த எண்ணங்களின் அடிப்படையில் கர்த்தரை விசுவாசித்து பின்பற்றுவதின் மூலம் அவர்களுடைய விசுவாசம் தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. மேலும் அவர்கள் விசுவாசித்துக் கொண்டிருப்பது உண்மையில் பொய்யானது என்பதை இன்னமும் அறியாமலிருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுடைய விசுவாசத்தின் அஸ்திபாரமே தவறு. இயேசு அவர்களை எப்படியோ மீட்டுள்ளார் என்பதைக் குருட்டுத் தனமாக விசுவாசிப்பது அவர்களுடைய மனசாட்சியை திருப்திபடுத்துவதற்கு போதுமானதாக இருக்கும், ஆனால் கர்த்தர் அவர்களுடைய குருட்டு விசுவாசத்தை அங்கீகரிப்பதில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
நம்முடைய தேவனை பின்பற்ற வேண்டும் என்பவர்கள் முதலில் அவனோ/அவளோ தங்களையே வெறுத்து அவனுடைய/அவளுடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்று அவர் சொன்னார். கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பவர்கள், அவனுடைய/அவளுடைய சொந்த எண்ணங்களை விட்டு விட வேண்டும், மேலும் கர்த்தருடைய வார்த்தை உண்மையில் என்ன சொல்கிறது என்பதிற்கேற்ப விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து அவருடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தை சிந்தியதன் மூலமாகவும் மரணத்திலிருந்து மீண்டும் எழுந்ததின் மூலமாகவும் நமக்கு பாவமன்னிப்பைக் கொடுத்துள்ளதாக, நீங்களும் நானும் இன்று விசுவாசிக்க வேண்டும்.
இந்த நாட்களில், இப்படி விசுவாசிக்காமல் வேறுவகையாக விசுவாசிப்பதற்கு தங்களுடைய சொந்த வழிகள் அவர்களிடமிருக்கின்றன என்று கூறி இயேசுவின் பெயரை குருட்டுத்தனமாக பற்றி கொள்ளும் பல மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுடைய விசுவாசம், இயேசுவால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியுடன் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. உதாரணத்திற்கு, இப்படித்தான் அவர்கள் மீட்க்ப்பட்டார்கள் என்று வலியுறுத்தும் வகையில், ஆழ்ந்த மலைகளில் அவர்கள் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் பொழுது இயேசு இதனைக் காண்பித்தார் என்று கூறும் சில மக்கள் இருக்கிறார்கள். மற்றுமொரு உதாரணத்தில், ஆலயத்திற்கு சென்றதாலும் உபவாசம் இருந்ததாலும் முழு இரவு ஜெபத்தில் பங்கேற்றதாலும் அவர்களுடைய எல்லாப் பாவங்களும் மறைந்து விட்டன என்று கூறும் மக்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய மனந்திரும்புதலின் ஜெபங்களினால், அவர்களை துன்பப்படுத்திய அவர்களுடைய பாவங்களிலிருந்து வெளிவர முடியாதது தான் இதற்கு காரணம்.
நம்முடைய தேவனால் கொடுக்கப்படும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் கிட்டும் உண்மையான மீட்கப்படுதலுடன், இந்த வகையான விசுவாசம் தொடர்பில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசம் நம்மிடம் இருந்தால், கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்று அவருடைய வார்த்தையில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? எங்கும் இல்லை. கர்த்தர் முற்றிலுமான ஒருவர் என்றும் இயேசு தான் கர்த்தர் என்றும் இந்த மக்கள் குருட்டு தனமாக தெரிந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் கிறிஸ்துவின் பெயரை எடுத்து அவர்களுடைய கர்த்தரை பற்றியதான அற்பமான, நிச்சயமில்லாத ஞானத்தை அவர்களுடைய விசுவாசமில்லாத விசுவாசத்துடன் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்களுடைய சொந்த பாவங்களை மறந்துவிட்டு, கர்த்தருடைய நாமத்தை உபயோகமில்லாமல் அழைத்து, கர்த்தருடைய கடுங்கோபத்தை இன்னமும் அதிகமாக சேர்த்துவைக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த போலியான இயேசுவையும் தங்களுடைய சொந்த மீட்பின் வசனத்தையும் அமைத்து, தம்முடைய சொந்த கற்பனையிலிருக்கும் இந்த கட்டுகதைகளை விசுவாசிக்கிறார்கள்.
ஆதியாகமம் 17:14 சொல்கிறது, "நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண் பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்" ஆவிக்குரிய விருத்த சேதனத்தின் மூலமாக நம்மை நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் கர்த்தர் இரட்சிப்பார் என்று அவர் தெளிவாக நமக்கு வாக்களித்துள்ளார். நீர் மற்றும் ஆவியினால் மீண்டும் பிறந்தவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளாவர்கள் என்று கர்த்தர் நமக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வாக்களித்துள்ளார். இதைப் போல, இயேசுவினுடைய ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தை மட்டும் விசுவாசிப்பவர்கள் எப்பொழுதுமே கர்த்தருடைய பிள்ளைகள் ஆக முடியாது. இப்படிப்பட்ட மக்கள் கர்த்தரை மறுதலித்துள்ளார்கள், ஏனென்றால் கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட நற்செய்தியை அவர்கள் விசுவாசிக்கவில்லை, மேலும் இதனால் கர்த்தருடைய மக்களில் இருந்து அவர்கள் அகற்றப்பட்டு, அவரால் சபிக்கப்படுவார்கள்.
நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்கக்கூடிய விசுவாசத்தின் அஸ்திபாரமானது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி, நம்முடைய அஸ்திபாரமாக அமைக்கப்படும் பொழுது மட்டுமே நாம் பலமாகவும் முழுமையாகவும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். தங்களுடைய இருதயங்களில் ஆவிக்குரிய புறஜாதியாரால் கர்த்தருடைய வார்த்தையை அவர்களுடைய இருதயங்களுக்குள் எப்படி எடுத்துச் செல்ல முடியும்? இதை அவர்களால் எப்பொழுதுமே செய்யமுடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மை ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்வதற்கு, இந்த கண்டிப்பான அஸ்திபாரம் இல்லாமல், நம்மை கர்த்தருடைய பிள்ளைகளாவதற்கு அனுமதிப்பதால், கர்த்தருடைய வார்த்தை, நமக்கு புத்தியுள்ள ஞானமாக மட்டுமே வருகிறது.
இதனால் தான் மீண்டும் பிறந்த ஊழியகாரர்களின் ஆவிக்குரிய போதனைகள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதுடன் அவர்களால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே கர்த்தருடைய வார்த்தையை கேட்டு புரிந்து கொள்ள முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பற்றி ஒன்றும் அறியாத மக்களை நாம் சந்திக்கும் பொழுது, நாங்கள் எல்லோரும் ஒரே கர்த்தரை விசுவாசிக்கிறோம், முற்றிலும் வேறு பட்ட கர்த்தரைப் பற்றி பேசுவதுபோல நாங்கள் ஒரு போதும் நினைப்பதில்லை என்று அவர்கள் கூறினாலும், சிலுவையினுடைய இரத்தத்தின் மூலமாக மீண்டும் பிறந்துள்ளோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையான கர்த்தர் இங்கே யார்? ஆபிரகாமிற்கு தன்னுடைய வாக்குத்தத்தத்தைக் கொடுத்த கர்த்தர் தான் உண்மையான கர்த்தர்.
"இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது" (ஆதியாகமம் 17:13) என்று ஆபிரகாமிற்கும் அவனுடைய சந்ததியினருக்கும் வாக்குத்தத்தம் செய்தார். நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம் என்று சொல்லும் அடையாளம் எங்கே? இது நம்முடைய இருதயங்களில் காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை நம்முடைய இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலமும் உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமும் ஆவிக்குரிய விருத்தசேதனத்தைப் பெற்று கொண்ட இருதயமுடைய கர்த்தருடைய பிள்ளைகளாகியுள்ளோம். நம்முடைய பாவங்களுக்காகவும், அவற்றை எல்லாம் தன் மீது பெற்றுக் கொள்வதற்காக தேவன் ஞானஸ்நானம் பெற்றார் என்றும், இதனால் நாம் ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்யப்பட்டுள்ளோம் என்றும் நம்முடைய இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலம் நாம் அவருடைய பிள்ளைகளாகிறோம்.
இந்த சத்தியத்தில் நமக்கு இருந்த விசுவாசத்தின் மூலமாகத் தான் நாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசு கிறிஸ்துவுக்குள் செலுத்தியுள்ளோம், இதனால் இயேசு இந்த பாவங்களை சிலுவைக்கு சுமந்து, நம்முடைய இடத்தில் கொல்லப்பட்டு, மரணத்தில் இருந்து மீண்டும் எழுந்து, இதன் மூலம் நம்மை நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், விசுவாசத்தின் மூலம் தான் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகி உள்ளோம். விசுவாசத்தின் மூலம் தான் நாம் பாவமற்றவர்களாக ஆகியுள்ளோம் பின்பு நம்மிடம் ஏதாவது பாவம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! நம்மிடம் எந்த விதமான பாவமும் இல்லை! அற்புதமான நற்செய்தியின் சத்தியத்தின் மூலம் இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
 
நீங்களும் நானும் ஆபிரகாமுடைய சந்ததிகள் ஆகமுடியுமா?
 
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு நூல் ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டுள்ள இயேசுவினுடைய செயல்களை விசுவாசித்து ஆவிக்குரிய விருத்த சேதனத்தை நாம் செய்து கொண்டபடியால், நாம் ஆபிரகாமுடைய சந்ததிகளாகியுள்ளோம். இயேசுவினுடைய ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவை இரத்ததையும் நாம் விசுவாசித்ததால் தான் ஆவிக்குரியதாக விருத்த சேதனம் செய்யப்பட்டு, கர்த்தருடைய பிள்ளைகளாகியுள்ளோம். இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு, நம்முடைய எல்லாப் பாவங்களுக்காகவும் நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதை விசுவாசிப்பதாலேயே பாவமன்னிப்பை நாம் பெற்றுள்ளோம். இப்படித்தான் நீங்களும் நானும், ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாக ஆகியுள்ளோம்.
நீர் மற்றும் ஆவியால் மீண்டும் பிறந்துள்ளவர்கள், தாம் யார் என்பதை இப்பொழுது அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நீங்களும் நானும், விசுவாசத்தின் மூலம் ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்யப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகளாகவும், அவருடைய சொந்த மக்களாகவும் உள்ளோம்.
கர்த்தருடைய எல்லாப் படைப்புகளையும் ஆட்சி செய்யக்கூடியவர்களும் அவருடைய முழு சிறப்பையும் அனுபவிக்க கூடியவர்களுமாகிய நாம் வரும் ஆயிரம் வருட இராஜ்ஜியத்தின் இராஜாக்களாக இருக்கிறோம். இப்படிதான் நம்முடைய தகுதி மாறியுள்ளது. இந்த உலகத்தில் இருக்கும் மக்களுக்கு உண்மையில் நாம் யார் என்று தெரியுமா? அவர்களுக்குத் தெரியாது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்ததின் மூலம் ஆவிக்குரிய தகுதி மாறியவர்களாய் நாம் இருக்கிறோம். இதைப் போல, நம்மைப் பற்றி நாம் இப்பொழுது தெளிவாகவும் நம்பிக்கையுடனும் தெரிந்துகொள்ள முடியும்.
கர்த்தருடைய வார்த்தையால் மீண்டும் பிறந்தவர்களுக்குத் தாம் யார் என்பது நன்கு தெரியும். தங்களுடைய உலகப் பிரகாரமான மத சமுதாயங்களில் தங்களுக்கு தாமே விளம்பரப்படுத்திக் கொள்ளுவதற்கு அடிமையான அவர்கள், முற்றிலுமாக ஒன்றும் அறியாதவர்களாய் இருந்தாலும், இத்தகைய தவறான தத்துவங்களைப் போதிப்பவர்கள், கர்த்தருடைய உண்மையான மக்களாகிய மீண்டும் பிறந்தவர்களை ஆர்வமின்றி பார்க்க கூடியவர்கள், அவர்களிடமிருந்து நாம் அடிப்படையாகவே வித்தியாசமாக உள்ளோம். இஸ்ரவேல் மக்கள் தம்மை தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாக விசுவாசித்து, இஸ்மவேலுடைய சந்ததியினரை வித்தியாசமாக கருதுவதால், ஆபிரகாமினுடைய ஆவிக்குரிய சந்ததிகளாகிய நமக்கும், நம்மை நாமே கர்த்தருடைய தேர்தெடுக்கப்பட்ட மக்களாக கருதுவதற்கு உரிமை இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், விசுவாசத்தின் மூலம் ஆபிரகாமினுடைய சந்ததியினராகியுள்ளோம். ஆசரிப்புக் கூடாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் நற்செய்தியில் நமக்கு இருக்கும் விசுவாசத்தின் மூலம், பரலோக இராஜ்ஜியத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும்.
வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல அதிகமான சந்ததிகளை உருவாக்குவேன் என்று ஆபிரகாமிற்கு வாக்களித்தது போல நமக்கான இந்த உடன்படிக்கையின் நிறைவேற்றுதலை நாம் நம் கண்களால் பார்க்க முடியும். கர்த்தர் நம்மீது அருளிய ஆசீர்வாதம் இதுதான்.
நம்முடைய இருதயத்தின் விருத்த சேதனங்களின் மூலமாக, உலகத்தினுடைய பாவங்களிலிருந்து கர்த்தர் நம்மை மீட்டுள்ளார். ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவாயில் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இந்த விசுவாசத்தின் விருத்தசேதனம் செய்யப்பட்டுள்ளது.