• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-7] விசுவாசத்திற்கான அத்திவாரத்தை அமைத்த ஆசரிப்புக் கூடாரத்தின் கட்டுமான ப (யாத்திராகமம் 25:1-9)

2021.04.24 30
(யாத்திராகமம் 25:1-9)
"கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிகப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும், சிகப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக."
 
 
பரிதாபமான வாழ்க்கைகள்
 
"ஒரு வாழ்வின் கவிதை" என்ற தலைப்புடைய கவிதையில், ஹென்றி வேட்ஸ்வேர்த் லாங்ஃபெல்லோ, "துன்பமான எண்களில் எனக்கு சொல்லாதீர்கள், `வாழ்க்கை ஒரு காலியான கனவு!`" என்று எழுதியிருந்தான்.
இருப்பினும், அதைப் பற்றி நீங்கள் உண்மையில் நினைத்தால், மனிதர்களுடைய வாழ்க்கை உண்மையில் மிகவும் பரிதாபமானது தான். இந்த உலகத்தினுடைய பண்படுத்தப்படாத பூமியில் இருக்கும் ஒரு தனிமையான தற்காலிகமான வாழ்க்கைக்குப் பிறகு எல்லோருடைய வாழ்க்கையும் பயனற்ற குப்பைக்கு திரும்புவது போல தெரிந்தாலும் கூட, பூமி முடிவாக சேரும் இடம் கிடையாது. பாவத்தின் காரணமாக எல்லா நபர்களுடைய வாழ்க்கையும், நிரந்தரமாக இருக்கக் கூடிய நரகத்தினுடைய பயங்கரமான பாடுகளாகவே இருக்கும்.
கல்லறைக்கு அப்பால் உள்ள உலகத்திற்கும், அவர்களுடைய சொந்த மரணத்திற்கும், இன்னமும் மக்கள் அலட்சியம் காட்டுபவர்களாகவே உள்ளனர். இந்த உலகத்தில் வாழும் பொழுது மக்கள், எந்த பயனும் இல்லாமலும், நரகத்திற்கு நோக்கியும் சென்றுக் கொண்டிருக்கும் தங்களை மீட்ட கர்த்தரை சந்திக்க முடியாமல் வாழ்கிறார்கள். இது தான் வாழ்க்கை. ஆனால், வாழ்க்கைக்கு சேர வேண்டியது இதுவாக இருந்தால், நாம் எத்தனை பரிதாபமானவர்களாகவும், இரங்கத் தக்கவர்களாகவும் இருப்போம்?
இப்படிப்பட்ட வாழ்க்கைகளுக்காக மேசியா காத்துக் கொண்டிருக்கிறார். இந்த திறந்த உலகத்திற்குள், குறிக்கோள் இல்லாமல் சுற்றுவதற்கும், இருட்டுக்குள் மறைவதற்கு மட்டும் கவனமில்லாமல் வீசப்பட்டிருந்தால், அவர்கள் ஒரு பரிதாபமான கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நம்மை சுற்றியிருப்பவர்களை பார்த்து நாமெல்லாரும் இதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அன்று ஒரு நாள், நான் காரில் இருக்கும்பொழுது, சாலையை ஒட்டி நடந்துக்கொண்டிருந்த 60 வயது மதிக்கதக்க ஒரு முதியவரைக் கண்டேன். எனக்கு பின்னால் முதுகை காட்டி அவர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவருடைய தலை கீழே சாய்ந்தவாரும், அவருடைய தோல்கள் வளைந்தவாரும், அவரிடமிருந்த இருந்த எல்லாமே பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருப்பது போல இருந்தது. நான் சத்தம் போட்டு அழைத்த பொழுது அவர் திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய முகம் துயரத்தால் நிறைந்திருந்தது. இந்த முதியவருடைய பாவனையைப் பார்த்து சற்று நேரத்திற்கு நான் ஆழ்ந்து யோசித்தேன். இந்த முதியவர் அவருடைய வாழ்க்கையை எவ்வளவு அர்த்தமில்லாதது என்று நினைத்து கொண்டிருப்பார். தனிமையாக அவர் விழுந்தது, இந்த அர்த்தமில்லாமையின் உணர்விற்கு இன்னமும் அதிக அர்த்தமில்லமையை சேர்த்து, இது அவரை அவருடைய வாழ்க்கையின் இன்னமும் அதிகமான பயனற்ற நிலையை நினைக்கச் செய்தது. இந்த மனிதருடைய வாழ்க்கை மட்டும்மல்ல, ஆனால் எல்லோருடைய வாழ்க்கையுமே பரிதாபமானதாகும்
நேரம் அவர்களை கடந்துச் செல்கையில், திடீரென அவர்களைச் சுற்றி ஆழமான சுறுக்கங்களை மக்கள் காணும் வரை, அவர்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணருவதில்லை. நின்று சுற்றி திரும்பிப் பார்த்து, தாம் எங்கே நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு கூட சந்தர்ப்பம் கிடைக்காத அளவிற்கு, பலர் தங்களுடைய வாழ்க்கையில் அதிகமான கஷ்டங்களைச் சந்தித்துள்ளார்கள். எல்லாப் பெற்றோர்களும் வாழ்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் கடினமாக உழைத்திருந்தாலும், தங்களுடைய சொந்த வாழ்க்கையின் முடிவை சந்திக்கும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் ஒன்றும் இருப்பதில்லை என்று சோகத்தை வார்த்தைகளால் கூற இயலாது.
அவர்களுடைய உணர்ச்சிகளால் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் விரைவில் தங்களுடைய கண்ணீரால் நிறைகிறார்கள். அதிக நேரம் கடந்த பிறகும், பல வருடங்கள் சென்ற பிறகும், திரும்பி பார்ப்பதற்கு கடைசியாக அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. இதை அவர்கள் செய்யும் பொழுது இந்த கடைசியாக விழுந்த தனிமையின் காட்சி எவ்வளவு புரியாத வகையில் தங்களுடைய சொந்த பிரதிபலிப்புகளுக்கு பொருந்துகிறது என்பதைத்தான் அவர்களால் நினைக்க முடியும். அந்த விழுதலுடன் எல்லா இலைகளும் விழுந்து போய், துன்புறுத்துகின்ற குளிர்காலத்தை சந்திக்கும் பொழுது, இதே முறையில் அவர்களுடைய வாழ்க்கையும் விரைவில் மறைந்துவிடும் என்பதை அவர்கள் காணுகிறார்கள். இதை உணர்வதற்கு இவ்வளவு காலம் பிடித்தது என்பதைக் குறித்து உண்மையில் அவர்கள் வருத்தப்படலாம். தேவனைச் சந்திக்காமலேயே தாம் இறந்து விட இருக்கும் பொழுது இந்த மக்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? மேசியாவை சந்திக்காமல் தங்களுடைய முடிவிற்கு வந்த இது போன்ற மக்கள் எப்பொழுதும் பரிதாபமாயிருக்கிறார்கள்.
தேவனை நான் சந்திக்காமல் இருந்தால் நானும் ஒரு பரிதாபமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். நீங்கள் எப்படி? நீங்கள் தேவனை சந்திக்கவில்லை என்றால், இப்பொழுது நீங்கள் எங்கே முட்டிக் கொண்டிருப்பீர்கள்? தேவனை சந்திக்க முடியாமல் இருந்ததால் தங்களுடைய சொந்த துக்கத்தை சேர்த்து வைத்துள்ள அநேக மக்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
தங்களுடைய சொந்த துக்கத்தை சேர்த்து வைத்துள்ள அநேக மக்களைப் பற்றி நினைக்கும் பொழுது அது என் இருதயத்தை உடைக்கிறது. இந்த பன்றிகள் எல்லாம் அவைகளின் முடிவை சந்திக்கும் வரை தங்களுக்கு தங்களே போஷித்து கொள்ளும். ஆனால் நம்முடைய வாழ்க்கை இந்தப் பன்றிகளிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் நாம் ஆழ்ந்து யோசித்து, நிகழ்காலத்திற்கு அடுத்துள்ள முடிவில்லாத எதிர்காலத்தை பார்க்க வேண்டும். அநேக மக்கள் தங்களுடைய கடைசி நாளை நிறைய வருத்ததுடன் சந்திக்கிறார்கள். நிரந்தரமான பரலோக ராஜ்ஜியம் உண்டு என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதற்குள் நுழைவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் பாவத்தோடு இருந்திருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் இது போன்ற வருத்தங்கள் இருக்க கூடிய பலர் இருக்கிறார்ள். அவர்களுடைய இந்த வருத்தப்படக் கூடிய தலை எழுத்து என்னை விசனப்படவும் புலம்பவும் செய்கிறது.
கர்த்தரால் அமைக்கப்பட்டுள்ள நல்ல இடத்திற்கு இவர்களால் செல்ல முடியாமல் இருப்பதும், அவர்களுடைய வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றாமல் இந்த உலகத்தில் இருந்து மறைந்து விடப் போகிறார்கள் என்று இந்த வாழ்க்கையைப் பற்றி நாம் நினைக்கும் பொழுதும் இந்த ஆத்துமாவுக்காக பரிதாபப்படவும் அவர்களுடைய தலையெழுத்திற்காக வருத்தப்படவும் தான் முடியும். இதனால் தான் ஒரு கடுமையான கஷ்டமான கடல் பயணத்திற்கு வாழ்க்கை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் பொழுது, மனித உலகத்தினுடைய கசப்புணர்வில் வாழ முயற்சி செய்வது, இப்படிப்பட்ட கடலில் வாழ்வது போன்றது என்று மக்கள் சொல்லுகிறார்கள். ஏனென்றால் தங்களுடைய பிறப்பிலிருந்து இறப்புவரை, வாழ்வதற்காக உதையையும் கூச்சலையும் அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை இதுதான் என்று நமக்கு நாமே ஞாபகப்படுத்தி கொள்ளும் பொழுது இந்த ஆசரிப்புக் கூடாரத்தினுடைய சத்தியத்தை எல்லா மக்களுக்கும் விளக்குவதும் தேவனை சந்திப்பதற்கு அவர்களுக்கு உதவுவதும் முக்கியமான அவசர வேலை என்பதை நாம் நிச்சயத்துடன் உணர்கிறோம். ஏன்? ஏனென்றால் பலி காணிக்கையின் மூலமாக கர்த்தர் அவருடைய சொந்த வீட்டில், அவர்களைச் சந்திப்பதின் மூலம் இந்த பாவமான மக்களுக்கு அவர்களுடைய மீட்பைத் தருகிறார். ஆசரிப்புக் கூடாரம் வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட கர்த்தருடைய வீடு. கர்த்தருடைய வீடாகிய இந்த ஆசரிப்புக் கூடாரத்தில் பலி காணிக்கையினால் நிறைவேற்றப்பட்டுள்ள பாவ மன்னிப்பின் கிருபையின் மூலம் கர்த்தர் பாவிகளை சந்திக்கிறார். "நான் தங்கும் இடமாகிய என் வீட்டை உங்களால் கட்டுவேன். மேலும் இந்த ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருக்கும் கிருபாசனத்திர்கு மேலே நான் உங்களைச் சந்திப்பேன்" என்று கர்த்தர் நமக்குச் சொல்லுகிறார். ஆசரிப்புக் கூடாரமாகிய கர்த்தருடைய வீட்டில் தான் கர்த்தரை சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய சத்தியத்தில் இருக்கும் இந்த விசுவாசமானது இந்த உலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும் மாற்றப்பட முடியாது. மேலும் இது எந்த விலையைக் கொண்டும் வாங்க முடியாத அதிக பொக்கிஷமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நம்முடைய மீட்பராக விசுவாசிக்கும் கிறிஸ்தவ விசுவாசம் உடையவர்களாய் இருக்கும் நான் இன்னமும் அதிக ஆசீர்வாதமான சாலையில் கால் வைப்பதற்கு இந்த ஆசரிப்புக் கூடாரத்தை பற்றிய சரியான ஞானமும் விசுவாசமும் தான் வழி என்று நான் விசுவாசிக்கிறேன்.
 
 
நாம் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம்
 
நாம் வாழ்வது போல, ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுபவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டு கொண்டு என் இருதயம் மகிழ்ச்சியான நினைவால் நிறைந்திருக்கிறது. வாழ்க்கை, இத்தனை பரிதாபமான வாழ்வாக இருந்தாலும், பல மக்கள், அவர்களுடைய சொந்த தலை விதியை முழுமையாக அறியாமல் இருக்கும் பொழுதே அவர்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து நடத்துகிறார்கள். ஆனால், கர்த்தருக்கு முன்பாக அவர்களுடைய வாழ்க்கை எப்படி பிடிப்பாக இருந்தது என்பதை அவர்கள் அடையாளம் காணவேண்டும் என்றும், அவர்களுடைய இருதயங்களை மனந்திரும்ப செய்ய வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். மற்றொருபுறம், கர்த்தர் இலவசமாக அவர்களுக்கு கொடுத்துள்ள நற்செய்தியை கவனிக்காமலும் தங்களுடைய இருதயங்களில் ஒரு சிறிய இடத்தைக் கூட திறக்காமலும் தங்களுடைய வாழ்க்கையை இன்னமும் வாழ முயற்சி செய்கிறார்கள்.
கர்த்தர் பர்வோனிற்கு கொண்டு வந்த பத்து கொள்ளை நோய்களை குறித்து யாத்திராகமம் நமக்கு சொல்லுகிறது. எகிப்து தேசத்திற்கு மொத்தமாக பத்து கொள்ளை நோய்கள் கொண்டு வரப்பட்டன. எகிப்தில் இருக்கும் தன்னுடைய மக்களை விடுவிக்குமாறு கர்த்தர் பர்வோனிடத்தில் கட்டளைக் கொடுத்தார். அவன் அவருக்கு கீழ்ப்படியவில்லை என்றால் பத்து கொள்ளை நோய்களை கொண்டு வருவேன் என்று பர்வோனிடத்தில் கர்த்தர் சொன்னார். ஆனால் பர்வோன் கர்த்தர் அவனுக்குச் சொன்னதைக் கவனிக்காமல் பிடிவாதமாக அவருடைய கட்டளையை தடுத்து, கர்த்தர் வாக்களித்திருந்த பத்து கொள்ளை நோய்களையும் பெற்றான். பர்வோனுடைய வீண்பிடிவாதம் தவறான நோக்கமுடையதாக இருந்தது. கர்த்தருடைய எல்லாத் தண்டனைகளையும் பெற்றுக் கொண்டு, சாத்தானால் பிடிக்கப்பட்டிருந்தது, இஸ்ரவேல் மக்களை அவன் கடைசியாக விடுவித்ததற்கு காரணாமாயிருந்தது. இது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் காணப்படும் தவறான பிடிவாதத்தைக் குறிக்கிறது.
இருந்த போதிலும், இது போன்ற மக்கள் கர்த்தருடைய ஆசரிப்புக் கூடாரத்தில் அவரால் அமைக்கப்பட்டுள்ள பாவத்தின் மீட்பை பெற்றுக்கொண்டு விசுவாசத்துடன் அவருடன் வாழலாம். ஒரு கழுதையினுடைய பிடிவாதத்துடன் கர்த்தருடைய சத்தியத்தை விசுவாசிக்காமல், தொடர்ந்து இதை நிராகரிக்க கூடிய அளவிற்கு இந்த மக்கள் இன்னமும் பிடிவாதமாயிருக்கிறார்கள். இதனால் தான், கர்த்தருடைய சத்தியத்தை சந்திக்கமுடியாமல் அவர்களுடைய வாழ்க்கையை பாவிகளாக வாழ்ந்து, அவர்களுடைய சொந்த அழிவை சந்திக்கும் அநேக மக்கள் இருக்கிறார்கள். இது என்னைத் துன்பத்தை விட அதிகமாக வேதனைப்படுத்துகிறது. கர்த்தருக்கு முன்பாக பல மக்கள் பிடிவாதமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்கள் பெரும் கஷ்டத்தை சந்திக்கும் பொழுது சிறிது நேரத்திற்கு வளைந்து கொடுத்தாலும், கர்த்தருடைய விருப்பத்தை நிராகரிப்பதற்கு முன் எங்கு இருந்தார்களோ அங்கு திரும்பவும் போகிறார்கள். மறுபடியும் அவர்களுடைய பிடிவாதமான வழிகளைப் பெற்றுக் கொள்வதால், இரண்டாவது கொள்ளை நோயை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த இரண்டாவது கொள்ளை நோயினால், அவர்கள் சற்று வளைந்து கொடுப்பார்கள். ஆனால் இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது, ஏனென்றால் திரும்பவும் கர்த்தருக்கு கீழ்ப்படியாமையைத் தொடங்கி அவரிடம் சவால் விடுவார்கள். மேலும் அவர்கள் மூன்றாவது கொள்ளை நோய்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பது கொள்ளை நோய்களுக்கும், கடைசி கொள்ளை நோய்க்கும் பிறகு முடிவாக சரணடையும் வகையில் ஆளாக்கப்படுகிறார்கள், பிறகு அழிக்கப்படுகிறார்கள்.
கடைசி கொள்ளை நோய் வரும்பொழுது, மேசியா அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை விசுவாசிக்காததற்காக, நரகத்தினுடைய பாடுகளை ஏற்றுக் கொள்ள கூடிய அநேக மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்களுடைய வாழ்க்கை எத்தனை முட்டாள் தனமானது? இதனால் தான் எல்லோருடைய வாழ்க்கையுமே அவ்வளவு பரிதாபமாக இருக்கிறது.
கர்த்தருக்கு முன்பாக மக்களுடைய வாழ்க்கை பரிதாபமானதாக இருந்தாலும், ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தரை சந்திப்பது உங்களுக்கு ஆசீர்வாதமானது என்பதை நீங்கள் உணரவேண்டும். மேலும் இந்த உணர்தலுடன் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய இந்த வார்த்தையின் மேல் சஞ்சரிக்க வேண்டும்.
 
 
கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கும் காணிக்கைகள்
 
சீனாய் மலைக்கு வந்து, அவருடைய முழு சட்டத்தின் வரிசையையும் அவருக்கு கொடுக்குமாறு மோசேயிற்கு கர்த்தர் கட்டளையிட்டார். "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்; ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம், நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக; கொலை செய்யாதிருப்பாயாக; விபசாரம் செய்யாதிருப்பாயாக; களவு செய்யாதிருப்பாயாக; பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக" என்று மோசேயிக்கு அவர் பத்து கட்டளைகளைக் கொடுத்தார். மேலும் இஸ்ரவேலர்கள் தங்களுடைய அன்றாட வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற சட்டங்களைப் பற்றியும் அவர்களிடம் பேசினார். மொத்தமாக கர்த்தருடைய 613 கட்டளைகளும் சட்டங்களும் அங்கு இருந்தன.
இஸ்ரவேலர்கள் கால்நடையை தொலைத்தால் என்ன செய்யவேண்டும், மற்ற ஒருவனுடைய கால்நடை குழியில் விழுந்து விட்டால் என்ன செய்யவேண்டும், அவர்கள் தகாப் புணர்ச்சி கொள்ளாமல் இருக்க வேண்டும், அவர்களிடம் வேலையாட்கள் இருந்தால், அவர்களை ஏழாவது வருடம் விடுவிக்க வேண்டும். தங்களுடைய பெண் வேலைக்காரியை தங்களுடைய ஆண் வேலைகாரனுடன் திருமணம் செய்ய அனுமதித்து, அவர்களுக்கு குழந்தை இருந்தால், அந்த ஆண் வேலையாளை ஏழாவது வருடம் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும், இதைப் போன்ற 613 கட்டளைகள் அதில் அடங்கியிருந்தன. இஸ்ரவேலர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் கர்த்தரின் பார்வையில் விசுவாசத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய இதைப் போன்ற எல்லா சட்டங்களையும் கர்த்தர் மோசேயிற்கு சொன்னார்.
மோசேயை மலைக்கு கீழே சென்று, பெரியவர்களை ஒன்று திரட்டி, அவருடைய கட்டளைகளை அறிவிக்குமாறு அவனிடம் கூறினார். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு இஸ்ரவேல் மக்கள் ஏற்றுக் கொண்டு, அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம் என்று அவர்களுடைய இரத்தத்தால் சத்தியம் கொண்டார்கள் (யாத்திராகமம் 24:1-4).
பின்பு கர்த்தர், மோசேயை மறுபடியும் ஒரு முறை மலைக்கு அழைத்து, இந்த முறை ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுமாறு கட்டளை கொடுத்தார்.
கர்த்தர் மோசேயிடம் பேசினார், "இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக" (ஆதியாகமம் 25:2). பின்பு அவருடைய காணிக்கையைப் பட்டியலிட்டார்: "நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிகப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும், சிகப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே" (யாத்திராகமம் 25:3-7).
கர்த்தர் இந்த காணிக்கையை கொண்டு வர சொல்வதற்கு பின்னால் ஒரு உறுதியான நோக்கம் இருந்தது. பாவம் இல்லாத கர்த்தர் தங்கக் கூடிய ஒரு பிரகாசிக்கும் கர்த்தருடைய வீட்டை இந்த பூமியின் மேல் கட்டி, இதனால் அவர் இஸ்ரவேல் மக்களைச் சந்தித்து, அவர்களுடைய பாவங்களை மறை செய்வது அந்த நோக்கமாய் இருந்தது. ஆனாலும் இன்றைய ஆலயங்களைப் போல ஒரு ஞாபகார்த்த மாளிகை கட்ட, கர்த்தர் அவர்களிடம் பணம் கொண்டு வர சொன்னார் என்று இது சொல்லவில்லை. இன்றைய கிறிஸ்தவத்தின் தவறான தீர்க்கதரிசிகள், தங்களுடைய சொந்த ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்களுடைய ஆலய கட்டிடங்களை கட்ட முயற்சி செய்யும் பொழுது, இந்த பகுதியை அடிக்கடி தவறாக பயன்படுத்துகிறார்கள்.
இதற்கு எதிராக, கர்த்தர் இஸ்ரவேலர்களிடத்தில் இந்த காணிக்கைகளை கொண்டுவரச் சொன்னார். ஏனென்றால் அவருடைய சொந்த வீட்டை கட்டுவதற்கு அவற்றை பயன்படுத்தி அங்கு அவர்களை அதிகமாக ஆசீர்வதிப்பதற்காகவும் நம்முடைய நியாயத்தீர்ப்பில் இருந்து நம்மை மீட்பதற்காகவும், நம்மை நம்முடைய பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காகவும், கர்த்தர் இந்த காணிக்கைகளை பெற்றுக் கொண்டார். கர்த்தர் பரிதாபமான நம்மை சந்திப்பதற்காகவும், நம்முடைய பாவங்களை கழுவுவதற்காகவும், நம்முடைய பாவங்களை மறையச் செய்வதற்காகவும், நம்மை அவருடைய சொந்த மக்களாக்குவதற்காகவும் இதை அவர் பெற்றுக் கொண்டார்.
 
 
காணிக்கை கொண்டு வரவேண்டும் என கர்த்தர் அவர்களிடத்தில் கட்டளையிட்டதில் மறைந்துள்ள ஆவிக்குரிய பொருள்
 
நாம் மேலே செல்வதற்கு முன்னால், கர்த்தர் அவரிடத்தில் கொண்டுவரும் படி கட்டளையிட்ட பொருட்களின் ஆவிக்குரிய அர்த்தத்தை பற்றி சிந்திக்க சிறிது நேரத்தை செலவழிப்போம். இதன் பிறகு அதனுடைய வெளிச்சத்தில் நம் விசுவாசத்தை ஆராய்வோம்.
 
 
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம்
 
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் எங்கு உபயோகப்படுத்தப்பட்டது என்று முதலில் நாம் கண்டு பிடிக்கவேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலத்திலும், மகா பரிசுத்த ஸ்தலத்திலும் மற்றும் அவற்றுள் காணப்பட்ட பொருட்களான விளக்குத் தண்டு, அப்பத்தின் மேஜை, தூபவர்க்க பலி பீடம், கிருபாசனம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி ஆகியவற்றில் தங்கம் பயன்படுத்தப்பட்டது. தங்கம், கர்த்தருடைய வார்த்தையில் உள்ள விசுவாசத்தைக் குறிக்கிறது, மேலும் மீட்பின் கிருபையை வெள்ளி குறிக்கிறது. மேசியாவால் மட்டும் கொடுக்கப்பட்டுள்ள மீட்பின் பரிசை விசுவாசிக்கும் விசுவாசத்தை உடையவர்களாகவும், நம்முடைய தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்து, நமக்காக நியாயந் தீர்க்கப்பட்டார் என்பதை விசுவாசிக்கும் விசுவாசத்தை உடையவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும் இது நமக்குச் சொல்லுகிறது.
இதற்கு பதிலாக, ஆசரிப்புக் கூடாரத்தினுடைய தூண்களின் குழிவிலும், அதனுடைய ஆப்பிலும், வெண்கல பாத்திரத்திலும் சர்வாங்க தகன பலிபீடத்திலும், வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. எல்லா வெண்கல பாத்திரங்களும் பூமிக்கு மேலே வைக்கப்படவோ அல்லது புதைக்கப்படவோ வேண்டும். இது, மக்களுடைய பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது, மேலும் நம்முடைய பாவங்களுக்காகவும் சட்டத்தை கைக்கொள்ள தவறியதற்காகவும் நாம் தண்டிக்கப்பட உள்ளோம் என்று வெண்கலம் நமக்கு சொல்லுகிறது.
அப்படியானால், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகியவற்றின் ஆவிக்குரிய பொருள் என்ன? கர்த்தரால் கொடுக்கப்படும் மீட்பின் பரிசை பெற்றுக் கொள்வதற்கான விசுவாசத்தின் அஸ்திபாரத்தை அவை அமைக்கிறது நாமெல்லாரும் சட்டத்தை முழுமையாக கைக்கொள்ள முடியாத பாவிகள் என்றும், நம்முடைய பாவங்களுக்காக பதிலாக, தேவன் இந்த உலகத்திற்கு வந்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொடுக்கப்படும் பாவ காணிக்கையின் பலி காணிக்கையாகி நம்முடைய இடத்திலிருந்து நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார் என்றும் வேதம் நமக்கு சொல்லுகிறது.
பாவிகள் அவர்களுடைய பாவ பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஒரு பரிசுத்தமான மிருகத்தை கொண்டு வந்தார்கள், மேலும் பலி முறைக்கு ஏற்ப, தங்கள் கைகளை அதன் தலையின் மேல் வைப்பதின் மூலம் தங்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தினார்கள். அவர்களுடைய பாவங்களை ஏற்றுக் கொண்ட பலி காணிக்கை தன் இரத்தத்தை சிந்தி, கொல்லப்பட்டது. இப்படி செய்வதின் மூலம், நரகத்திற்கு தள்ளப்பட (வெண்கலம்) வேண்டிய இஸ்ரவேல் மக்கள், தங்களுடைய பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும் (வெள்ளி). மேலும் விசுவாசத்தின் மூலம் பாவத்திற்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் (தங்கம்).
 
 
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல்
 
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகிய இவை தான் அடிக்கடி பயன்படுத்தப்படும் மற்ற பொருட்களாகும். ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வாயிற்கதவிலும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய நுழைவாயிலிலும், பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரைக்கு இடையிலும் இந்த நூல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவன் ஒரு ஸ்திரியினுடைய குழந்தையாக வருவார் என்றும், நம்முடைய தேவன் இந்த உலகத்திற்கு உண்மையில் வந்து ஞானஸ்நானம் எடுத்தும் கொள்ளப்பட்டும் பாவிகளை தங்களுடைய பாவங்களிலிருந்து என்று மேலும் கர்த்தரே நம்மை மீட்பார் என்றும் ஆதியாகமம் 3:15 யில் தீர்க்கதரிசக்கப்பட்டுள்ளது போல இந்த நான்கு நூல்களும் நமக்கு சத்தியத்தை சொல்லுகின்றது.
இந்த நான்கு நூல்களும் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவாயிலுக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் தலைமை ஆசாரியனுடைய துணிகளுக்கும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய திரைச் சீலைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, நீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் அவருடைய வேலையை நிறைவேற்றுவதன் மூலம் நம்மை நம்முடைய பாவங்களில் இருந்து மீட்பார் என்பதின் கர்த்தருடைய உடன்படிக்கையாக இது இருந்தது. நம்முடைய தேவன் இந்த வாக்கை கைக் கொண்டு, உலகத்தினுடைய பாவங்களிலிருந்து நம்மை உண்மையில் மீட்டுள்ளார்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவாயிலுடைய கஷ்டமான பகுதி நீல நிற நூல் தான் இயேசு கிறிஸ்து, மேசியாவாக இந்த பூமிக்கு வந்து, ஏன் சிலுவையின் மீது மரிக்க வேண்டும். இதற்கு காரணம் அவர் ஞானஸ்நானம் எடுக்கப்பட்டிருந்தது தான். நீல நிற நூல் இயேசுவின் ஞானஸ்நானத்தை குறிக்கிறது, இரத்தாம்பர நிற நூல இயேசு தான் இராஜா என்று நமக்கு சொல்லுகிறது. சிகப்பு நூல் அவருடைய கொள்ளப்படுதலையும் இரத்தம் சிந்துதலையும் குறிக்கிறது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தேவையான கட்டும் பொருட்களாய் இருக்கிறது, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு மேசியாவாக வந்து நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டு நமக்கு கொடுத்த மீட்பின் பரிசை இது அமைக்கிறது.
உலகத்தில் உள்ள பல மக்கள், இயேசு கிறிஸ்து தான் தேவமைந்தன் என்றும் மேலும் அவர் தான் அடிப்படையில் கர்த்தர் என்றும் அழுத்தி சொல்லுகிறார்கள். ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக இது போன்ற போதனைகள் முழுமையன சத்தியமாக இருக்க முடியாது என்று கர்த்தர் நமக்கு சொல்லுகிறார்.
1 பேதுரு 3:21 இல் அப்போஸ்தலனாகிய பேதுரு கூறினான், "அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன் படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது."
இயேசு கிறிஸ்து அவருடைய மீட்பின் சத்தியத்தை நிறைவேற்றினார் என்றும், நம்மை மீட்கக்கூடிய எதிர் வகையாகிய விசுவாசத்திற்கு அவருடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளவது மூலம் முழுமையான அஸ்திபாரத்தை அமைத்தார் என்று இது நமக்கு தெரியப்படுத்துதியது. நம்முடைய மேசியா யார்? மேசியா என்றால் மீட்பர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து, நம்முடைய எல்லா பாவங்களையும், உலகத்தினுடைய எல்லா பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொள்வதற்காக ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டால் என்றும் உண்மையில் அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக அவற்றை எல்லாம் அவர் மீது எடுத்துக் கொண்டார் என்று இது நமக்கு சொல்லுகிறது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் யினால் நெயப்பட்டது மூலம் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலை காட்டும்படி கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சொன்னார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் யின் சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு தான் ராஜாதி, ராஜாவாகவும் பரலோகத்தின் தேவனாகவும் இருக்கும் நம் தேவன் இந்த உலகத்திற்கு மனித சரீரத்தின் மூலம் வந்தார். நம்முடைய தேவன் மனித் சரீரத்தின் மூலம் வந்தார், கர்த்தருடைய எல்லா நீதிகளையும் நிறைவேற்றக்கூடிய ஞானஸ்நானத்தை மனித குலத்தின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
தலைமை ஆசாரியன் பலி காணிக்கையின் தலையின் மேலே அவனுடைய கைகளை வைப்பதின் மூலம் இஸ்ரவேலர்களின் பாவங்கள் அதற்குள் செலுத்தப்பட்டு அது அவர்களுடைய இடத்தில் இருந்து அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கையுடன் இது ஒத்துப் போகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பழைய ஏற்பாட்டினுடைய பலி காணிக்கையை போல புதிய ஏற்பாட்டில், எல்லா பாவிகளுடைய பாவங்களுக்காக ஞானஸ்நானம் பெற்று, இதனால் உலகத்தினுடைய பாவங்களுக்காக தண்டனையும் ஏற்றுக்கொண்டு பலி காணிக்கையாக இயேசு வந்தார். கர்த்தருடைய பலி ஆடாக, யோவானால் ஞானஸ்நானம் பெற்று நீல நிற நூலினுடைய சத்தியத்தை இயேசு நிறைவேற்றினார். இந்த ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தினுடைய பாவங்களை ஒரே தரமாக அவர் தன் மீது எடுத்துக் கொண்டார். கிறிஸ்தவர்கள், இளநீல நிற நூலில் இருக்கும் சத்தியத்தையும் இயேசுவினுடைய ஞானஸ்நானத்தையும் தெரிந்துக் கொள்ளவும் விசுவாசிக்கவும் முடியாமல் இருந்ததால் ஒரே தரமாக அவர்களுடைய பாவத்திற்கான மீட்பை பெற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மற்ற உலக பிரகரமான மதங்களின் மக்களை விட மோசமான மக்களாக பல கிறிஸ்தவர்கள் மாறி உள்ளார்கள். நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொள்ளுவதற்காக இயேசு பெற்றுக் கொண்ட இந்த ஞானஸ்நானத்தைப் பற்றிய சரியான கருத்து கிறிஸ்தவர்களிடம் இல்லாமல் இருக்கும் பொழுது அவர்களுடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் முதலில் இருந்து சரியாக அமைக்கப்பட முடியாது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், மேசியா இந்த உலகத்திற்கு வந்து, நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டதற்கான முறையும் சத்தியமுமாய் இள நீலநிற நூல் இருக்கிறது. மேலும் சிகப்பு நிற நூல் அவருடைய இரத்தத்தை குறிக்கிறது. இயேசுவினுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களும் அவருக்குள் செலுத்தப்பட்டதன் காரணமாக தான் அவர் கொல்லப்பட்டு அவருடைய இரத்தத்தைச் சிந்தி, சிலுவையின் மீது இறந்தார். இயேசு, யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை அவர் மீது ஏற்றுக்கொண்டதாலே சிலுவையின் மீது அவர் மரித்தார். மேலும் இந்த உண்மையினால் தான், நமக்காக சிலுவையின் மீதான அவருடைய பலி உபயோகமற்றதாக இருக்கவில்லை. மேசியாவாகிய, இயேசு கிறிஸ்து அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை முழுமையாக சுமந்து, கொல்லப்பட்டதன் மூலமாகவே, அவர் நம்முடைய மீட்பை நிறைவேற்ற முடிந்தது.
இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் என்றும் அவர் தான் ராஜாதி ராஜா என்றும் இரத்தாம்பர நிற நூல் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாக இரத்தாம்பர நிற நூல் இருந்தாலும், யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெறாமலும், யோவான் மனித குலத்தினுடைய பிரதிநிதியாக இல்லாமலும், இதனால் அவர் தன் மீது நம்முடைய பாவங்களை எடுத்துக் கொள்ளாமலும் இருந்து (இளநீல நிற நூல்), எவ்வளவு துயரத்துடனும் வேதனையுடனும் அவர் சிலுவையின் மீது மரித்திருந்தால் (சிகப்பு நூல்), அவருடைய மரணம் உபயோகமற்றதாக மட்டுமே இருந்திருக்கும். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் பேசிய தீர்க்கதரிசன வார்த்தையெல்லாம் புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் நமக்கு சொல்லுகிறது.
 
 
இன்றைய கிறிஸ்தவம் இளநீல நிற நூலின் அர்த்தத்தை தொலைத்து விட்டது
 
இன்றைய கிறிஸ்தவத்தின் நான்கு நூல்களில் இளநீல நிற நூலை நிராகரிப்பதற்கும், ஒருவருடைய சொந்த விருப்பத்திற்கேற்ப கர்த்தருடைய வார்த்தையை விளக்குவதற்கும், இன்னமும் ஒரு குறிக்கப்பட்டுள்ள சுபாவம் இருக்கிறது. இந்த பெரிய பாவம் கண்டிப்பாக தண்டிக்கப்படும்.
நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்பதற்கு, நம்முடைய மேசியாவாகிய இயேசு கிறிஸ்து மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று கொல்லப்பட்டார் என்று இரட்சிப்பின் சத்தியத்தை ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தின் நுழைவாயிலுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை நமக்கு சொல்லுகின்றன. இயேசு நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டார்.
இயேசு நம்முடைய பாவங்களை அவர் மீது எப்படி எடுத்துக் கொண்டார்? யோவானிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் நம் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டதன் மூலமாக தான் இயேசு கிறிஸ்து நம்முடைய உண்மையான மீட்பர் ஆனார். இதனால் தான் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய நுழைவாயில் இந்த நான்கு நூல்களால் நெய்யப்பட வேண்டியிருந்தது. இயேசு இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தை சிந்தி, மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிரோடு எழுந்ததால், அவர் கர்த்தராக இருக்கிறார் என்று இது நமக்கு சொல்லுகிறது.
இதைப் போல ஆசரிப்புக் கூடா பிரகாரத்தினுடைய வாசலில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அமைக்கப் பட்டிருந்தது. பரலோக இராஜ்ஜியத்திற்குள் நம்மை அழைத்து செல்லும் இரட்சிப்பின் கதவாக இயேசு இருக்கிறார். இந்த கதவு இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டது. இயேசு தான் பாவிகளுடைய மீட்பர். இயேசுவினுடைய ஞானஸ்நானமும் அவருடைய மரணமும், பாவிகளை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்ட அவருடைய மீட்பின் பரிசாய் இருக்கிறது.
இன்றைய கிறிஸ்தவம், இயேசுவினுடைய ஞானஸ்நானத்தை சரியாக புரிந்து கொள்ள தவறியதால் தான் அதனால் உண்மையான கர்த்தரைச் சந்திக்க முடியாமல் போயிற்று. மாறாக, உலகப்பூர்வமான மதங்களில் ஒன்றாக மாறுவதில் முடிந்துள்ளது. நம்முடைய விசுவாசத்தை பொருத்தவரை இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் சத்தியத்தின் மேல் விசுவாசத்தின் பிடிப்பான அஸ்திபாரத்தை நாம் அமைக்கவேண்டும். இந்த விசுவாசத்தின் அஸ்திபாரமானது, நம்முடைய தேவன் இந்த உலகத்திற்கு வந்து, அவருடைய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக உலகத்தினுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னையும், உங்களையும் மீட்டுள்ளார் என்பதின் உண்மையாக இருக்கிறது.
இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையின் மீதான அவருடைய இரத்தத்தின் மூலமாகவும், நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்டுள்ள மீட்பின் பரிசை நிறைவேற்றியுள்ளது. இன்னமும் குறிப்பாக கூறினால், இயேசு இந்த உலகத்திற்கு மனித சரீரத்தில் வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தினுடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டு, சிலுவையின் மீதுள்ள அவருடைய இரத்தத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் பிராயச்சித்தமானார். இதனால் சிலுவையின் மீது மரித்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையைச் சுமந்தார் (1 யோவான் 5:4-8). நீர் மற்றும் இரத்தத்தின் மூலமாக நம்மை மீட்ட இந்த இயேசு அடிப்படையாக நம்மை படைத்த கர்த்தராகவும், நம்மை இரட்சித்த இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்தவராகவும் இருக்கிறார். நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தன்டனைகளிலிருந்தும் நம்மை மீட்ட இந்த இயேசு, நம்முடைய உண்மையான மீட்பராகியுள்ளார். இதைத் தான் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கட்டும் பொருட்கள் நமக்கு சொல்லுகின்றன.
இதைப் போல, இந்த பொருட்களை விசுவாசிப்பதின் மூலம் நாம் நம்முடைய விசுவாசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த மீட்பராகவும், மேசியாவாகவும் வந்த இந்த இயேசுவை விசுவாசிக்கும் பொழுது, அவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும், சிலுவையின் மீது அவர் நமக்காக ஏற்றுக்கொண்ட எல்லாத் தண்டனைகளையும், மரணத்தில் இருந்து அவருடைய உயிர்தெழுதலையும் நாம் நம் முழு இருதயங்களுடனும் தெளிவாகவும் கண்டிப்பாகவும் விசுவாசிக்க வேண்டும். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும் சிலுவையின் மீது சிந்திய அவருடைய இரத்தத்தின் மூலமாகவும் நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் நமக்கு மீட்பின் பரிசை கொடுத்துள்ள மீட்பரானவர் ஒரு மனிதனாக இருக்கவில்லை ஆனால் மனித குலத்தையும் முழு உலகத்தையும் படைத்த படைப்பாளராக இருந்தார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலில் நம்முடைய விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும். இப்படிப்பட்ட விசுவாசத்தின் அறிக்கையில்லாமல் இயேசுவை நம்முடைய மீட்பராக விசுவாசிப்பது நிரூபிக்க முடியாதது.
நீங்கள் எப்பொழுதாவது அமைதி அஞ்சல் வார்த்தை விளையாட்டை விளையாடியிருக்கிறீர்களா? ஒரு வாக்கியம் எழுதப்பட்டுள்ள அட்டை ஒரு நபருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த நபரில் இருந்து விளையாட்டு தொடங்குகிறது. முதலாம் நபர் அந்த வாக்கியத்தை யாருக்கும் தெரியாமல் வாசிக்கிறார், பிறகு உதட்டினுடைய அமைப்பைக் கொண்டு, இந்த வார்த்தையை தெரிவிக்கிறார். பின்பு உதட்டினுடைய அசைவை வாசிக்கும் மற்ற நபர், அதை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கிறார், இந்த உதட்டசைவை அடுத்த நபர் கவனிக்கிறார், இதே முறையில் நான்காவத் நபருக்கு இதை சொல்லுகிறார். இதை கடைசி நபரை அடையும் வரை செய்கிறார்கள். முதலில் சொல்லப்பட்ட வாக்கியத்தை கடைசி நபர் சரியாகச் சொன்னால் அவருக்கு இந்த விளையாட்டினுடைய புள்ளி போய் சேரும். உண்மையான வாக்கியம் தவறாக கூறப்படுவதால் தான் இந்த விளையாட்டு வேடிக்கையாக உள்ளது. உதாரணத்திற்கு, "பேனைப் போடுங்கள்" என்ற வாக்கியத்தால் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டிருந்தால், பல நபர்களுக்கு இது அஞ்சல் செய்யப்பட்ட பிறகு, இது மாற ஆரம்பித்து விடுகிறது. `கடைசியில்` "கழுதையைத் திருப்புங்கள்" என்று கடைசி நபர் சொல்லலாம். இது முற்றிலும் வித்தியாசமான வாக்கியத்தில் முடிகிறது.
இந்த கடைசி நபர் முற்றிலும் வித்தியாசமான வாக்கியத்தை சொல்வது போல, அமைதி அஞ்சல் வார்த்தை விளையாட்டை விளையாடுவது போல, இன்றைய கிறிஸ்தவர்கள் முற்றிலுமாக விசுவாசத்தை தவறாக அமைத்து விட்டார்கள். ஏன் இந்த நிலமை? ஏனென்றால் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிறத்தினுடைய விசுவாசத்தின் மீது தம் விசுவாச அஸ்திபாரத்தை அமைக்க இன்றைய கிறிஸ்தவம் தவறிவிட்டது. இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற விசுவாசத்தின் மேல் இதனுடைய அஸ்திபாரம் அமைக்கவில்லை. விசுவாசத்தினுடைய அஸ்திபாரம் பொய்யாக இருக்கும் பொழுது, நாம் எவ்வளவு ஆர்வமாக இயேசுவை விசுவாசித்தாலும், அவருடைய போதனைகளை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த எவ்வளவு முயற்சித்தாலும், நம்மால் இதைச் செய்ய முடியாது.
நம்முடைய தேவன், ஆசரிப்புக் கூடாரத்தை கட்டுவதற்காக அவர்களுடைய காணிக்கைகளை அவரிடம் கொண்டு வர வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு சொன்ன பொழுது, முதலில் தங்கம், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றையும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை பிறகும் கொண்டு வரும்படி அவர்களிடம் சொன்னார். இயேசு கிறிஸ்து யோவானிடம் இருந்து பெற்றுக்கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும், அவருடைய சிலுவை இரத்தத்தின் மூலமாகவும், அவருடைய உயிர்தெழுதலின் மூலமாகவும் நம்மை மீட்டுள்ளார் என்றும் இந்த கட்டிட பொருட்கள் நமக்கு காண்பிக்கின்றன.
இளநீல நிற நூல், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லா நுழைவாயிகளுக்கும் மட்டும் பயன்படுத்தப் படாமல், தலைமை ஆசாரியனுடைய அங்கியிலும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவன் எப்படி இந்த உலகத்திற்கு வந்தார் என்றும், எப்படி சரியாக, அவர் என்னையும் உங்களையும் மீட்டுக்கொண்டார் என்றும் நமக்கு சொல்லும் நற்செய்தி இதுதான். இதைப் போன்ற விசுவாசத்தினுடைய இந்த நான்கு அமைக்கும் பொருட்களாகிய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை எவ்வளவு முக்கியமானவை என்று இது நமக்குச் சொல்லுகிறது. இவை உண்மையில் நம்முடைய விசுவாசத்திற்காக இருக்கின்றன. இந்த வார்த்தையின் அடிப்படையில் நாமெல்லாரும் நம்முடைய விசுவாசத்தின் பிடிப்பை அமைக்க வேண்டும். இதற்கு பிறகு தான் கர்த்தரை விசுவாசித்து நாம் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக்கொள்ளவும், இந்த வார்த்தைக் கூறும் அவருடைய வேலையாளாகவும் முடியும். மேலும் தேவன் திரும்பி வரும் பொழுது, இந்த விசுவாசத்துடன் கர்த்தருக்கு முன்பு நம்பிக்கையுடன் நிற்கக் கூடிய விசுவாசத்தின் மக்களாகவும் முடியும்.
கொரியாவில், அந்நிய பொருட்களை சிறந்தது என்று கருதக்கூடிய இச்சகம் பேசுவது இன்னமும் இருக்கிறது என்பது உண்மைதான். இந்த இயல்பானது என் நாட்டினுடைய போதகர்களுக்கு மத்தியிலும் இருக்கிறது. இவர்கள், மேற்கத்திய நாட்டு போதகர்கள் கூறியதில் அதிக நம்பிக்கை வைக்கிறார்கள். மேலும் கர்த்தருடைய வார்த்தையை விட இவர்களுடைய வார்த்தையை அதிகமாக சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இந்த அறியாமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவரை விசுவாசித்தும், சார்ந்தும், கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய தேவனின் ஞானஸ்நானத்தினுடைய சத்தியமும், அவருடைய இரத்தமும், அவர் தான் கர்த்தர் என்று உண்மையும், அடிப்படையாக நம்முடைய இரட்சிப்பின் கதவாகியும் உள்ளது.
"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" (மத்தேயு 16:16). என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறியதைப் போல, நீங்கள் விசுவாசித்தால், நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்பதற்கு, தேவன் இந்த பூமிக்கு வந்தார் என்பதை நீங்கள் விசுவாசிப்பதுடன், தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்து கொண்டதன் மூலமாகவும், சிலுவையின் மீது மரித்ததின் மூலமாகவும், மரணத்திலிருந்து மறுபடியும் எழுந்ததின் மூலமாகவும் தேவன் நம்முடைய உண்மையான மீட்பின் கர்த்தராக ஆனார் என்பதையும் நீங்கள் தெரிந்துக்கொண்டு விசுவாசிக்க வேண்டும். நம்முடைய தேவனுடைய ஞானஸ்நானமும், சிலுவையின் மீதான இரத்தமும் தான் நம்மை இரட்சிப்பின் பரிசை பெற்று கொள்ளச் செய்யும் உண்மையான விசுவாசத்தின் அஸ்திபாரமாகவும் இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்ப இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகிய விசுவாசத்தை நாம் விசுவாசிக்காவிட்டால், இதை உண்மையான விசுவாசம் என்று நாம் எப்படி அழைக்க முடியும்?
 
 
சட்டம் வரவிருக்கும் நல்லவைகளின் நிழலாகும்
 
தேவன் இந்த உலகத்திற்கு மனித சரீரத்தில் வந்து, அவருடைய மரணத்தின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டு, மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்து, இதன் மூலம் நம்முடைய இரட்சகர் ஆனார் என்று ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கட்டுமானப் பொருட்கள் நமக்கு காண்பிக்கின்றன. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மூலமாக நம் தேவன் நமக்கு மீட்பின் பரிசை தருவேன் என்று பழைய ஏற்பாட்டில் வாக்களித்துள்ளார். ராஜாதி ராஜாவாக இருந்து ஞானஸ்நானம் எடுத்து, பாவிகளுக்காக கொல்லப்பட்ட இயேசு கிறிஸ்துவை தவிர இந்த உடன்படிக்கையை யாரும் நமக்கு தரவில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த கர்த்தர், நம் கர்த்தராகிய மேசியாவாக நம்மிடத்தில் வந்தார். இதைப் போல, இந்த சத்தியத்தை முழுமையாக தெரிந்துக் கொள்வதின் மூலமாகவும், விசுவாசிப்பதின் மூலமாகவும், நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை நாம் அமைக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலம், நாமெல்லாரும் மீட்பின் பரிசை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகியவை ஆசரிப்புக் கூடாரத்திற்காக பயன்படுத்தப்பட்டன. இந்த பொருட்கள் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தைக் குறிக்கின்றன. கர்த்தருக்கு முன்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்குள் தள்ளப்படுவதை நாம் தடுக்க முடியாது. ஆனால் இதைப் போன்று நம்மை போன்ற விசுவாசிக்கும் மக்களுக்கு, மீட்பின் பரிசை நம் தேவன் கொடுத்துள்ளார். மனித குலத்தினுடைய பலி காணிக்கையாக இயேசு யோவானால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இதன் மூலம் நம்மை முழுமையாக நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ளார். நரகத்தைத் தடுப்பதற்கு நம்மிடம் எந்த வழியும் இல்லை. ஏனென்றால் நம்முடைய பாவங்களுக்காக நாம் தண்டிக்க படவுள்ளோம் என்பது நமக்குத் தெரியும். மேலும் நம்முடைய எல்லாப் பாவங்களையும் மறையச் செய்யும் விசுவாசத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கர்த்தரில் இரட்சிப்பின் பரிசு இருந்தது. இயேசு உலகத்திற்கு வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லா பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து இதன் மூலம் நம்முடைய பாவங்களின் பிரச்சினைகளையும் தண்டனைகளையும் தீர்த்தார். இது தான் இரட்சிப்பின் பரிசு.
கர்த்தர் தம்முடைய இரட்சிப்பின் வேலையை நிறைவேற்றி, நமக்கு இரட்சிப்பின் பரிசை கொடுத்துள்ளார் என்பதை விசுவாசிப்பதின் மூலம், நாம் நம்முடைய விசுவாசத்தினால் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதனால் தான் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தின் விசுவாசத்தை, கர்த்தர் தன்னிடத்தில் கொண்டு வரச் சொன்னார். ஏனென்றால் நரகத்திற்கு தள்ளப்படுவதை தடுக்கமுடியாத அவர்களை இரட்சிப்பின் பரிசை கொடுத்ததின் மூலம் முழுமையாக மீட்டுள்ளார். உண்மையில், தேவன் இந்த பூமிற்கு வந்து, நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் மீது எடுத்து கொண்டு, நம்முடைய எல்லா தண்டனைகளையும் ஏற்றுக்கொண்டு, நம்மை மீட்டதால் தான் இந்த இரட்சிப்பின் பரிசை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தருக்கு முன்பாக நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம்.
இயேசு கிறிஸ்து, இப்பொழுது நம்முடைய நிறைவான இரட்சகராகியுள்ளார். இதனால் நாம் அவருடைய இரட்சிப்பின் பரிசில் நம்முடைய விசுவாசத்துடன் பிடிப்பாக நிற்க வேண்டும். ஏனென்றால் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை விசுவாசத்தின் பரிசாய் இருக்கின்றன. சொந்த கருத்தின் படி நாம் விசுவாசிக்கக் கூடாது என்று கர்த்தர் விரும்புகிறார்.
 
 
ஆட்டின் மயிர், சிகப்பு சாயம் பூசப்பட்ட செம்மறி ஆட்டுகடாவின் தோல் மற்றும் மரநாய் தோல்கள்
 
இவை ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசல்களைச் செய்வதற்கு பயன்படுத்தப் பட்டன. முதலாம் வாசல் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டிருந்தது. இதன் மீது ஆட்டினுடைய ரோமத்தால் ஆன இரண்டாவது திரை வைக்கப்பட்டிருந்தது. பிறகு இது, செம்மறி ஆட்டுக்கடாவினுடைய சிகப்பு சாயம் பூசப்பட்ட தோலால் மூடப்பட்டிருந்தது. கடைசியாக மரநாயினுடைய தோல் மேலே வைக்கப்பட்டிருந்தது. இந்த முறையில், ஆசரிப்புக் கூடாரத்தை நான்கு வித்தியாசமான பொருட்களாலான மூடிகள் மூடின.
ஆசரிப்புக் கூடாரத்தின் மேல் போடப்பட்டிருந்த மூடியானது மரநாயின் தோலால் செய்யப்பட்டிருந்தது. இதனால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மூடியின் மேல் பரப்பில் இந்த கருப்பு மரநாய் தோல்கள் தான் இருந்தன. மரநாய் ஒரு வகைக் கீரி, அதனுடைய தோலின் அளவு, மனிதனுடைய தோலின் அளவோ அல்லது சற்று சிறிதாகவோ இருக்கும். மேலும் நீரைத் தடுக்கும் வகையிலும் இருந்தது. இதனால் தான் மரநாய் தோல்கள், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மேல் பகுதிக்கு மூடியாக உபயோகப் படுத்தப்பட்டன. இதன் காரணமாக, ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வெளிதோற்றம் கவரக்கூடிய வகையில் இல்லாமலும் பார்ப்பதற்கு அழகில்லாமலும் இருந்தது. இயேசு நமக்காக உலகத்திற்கு வந்த பொழுது அவர் இப்படிப்பட்ட ஏழ்மையான தோற்றத்திலும், அவருடைய தோற்றத்தில் எதையும் விரும்பத்தகாதவாரும் வந்தார் என்று இது நமக்கு சொல்லுகிறது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, நமக்காக பலியானர் என்று சிகப்பு சாயம் பூசப்பட்ட செம்மறியாட்டு தோல் நமக்கு சொல்லுகிறது. அதே சமயம், நம்முடைய பலி காணிக்கையாக ஞானஸ்நானம் எடுத்து, இதன் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது ஏற்றுக்கொண்டும், சிலுவையின் மீது பலியாகியும் அவர் நம்மை மீட்டார் என்று ஆட்டினுடைய ரோமம் சொல்லுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய மூடியினுடைய பொருட்கள், நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கின்றன. இந்த சத்தியங்கள் நிச்சயமாக தொலைந்து போக முடியாத, விசுவாசத்தின் கட்டுமானப் பொருட்களாக இருக்கின்றன. இரட்சிப்பின் பரிசை நமக்கு கொடுப்பதற்கு, இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு நம்முடைய பலி காணிக்கையாக வந்தார். பரிசுத்தமான பலி மிருகங்கள் (ஆடு, செம்மறியாடு மற்றும் காளைகள்) இஸ்ரவேலர்களின் பாவங்களை, கைகளை அவற்றின் தலைகள் மீது வைத்து அவற்றிற்குள் செலுத்துவதின் மூலம் ஏற்று கொண்டன, மேலும் அவர்களுடைய இடத்தில் இருந்து அவைகள் கொல்லப் பட்டன. இவை தங்களுடைய இரத்தத்தைச் சிந்தியும் எரிக்கப்பட்டும், அவர்களை அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்டது. இந்த பலி முறையானது இஸ்ரவேலர்களின் பாவ மன்னிப்புக்காக கர்த்தரால், பழைய ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்தது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பலி ஆடாக வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம், அதாவது கைகளை வைப்பதின் மூலம் நம்முடைய பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார். தன்னுடைய இரத்தத்தை சிந்தியபடி பலி காணிக்கை கொல்லப்பட்டதைப் போலவும், கைகளை வைப்பதின் மூலம் இஸ்ரவேலர்களின் பாவங்களை ஏற்றுக்கொள்வதற்காக சர்வாங்க தகன பலிபீடத்தில் எரிக்கப்பட்ட பலி காணிக்கையைப் போலவும், ஞானஸ்நானத்தைப் பெற்று சிலுவையின் மீது மரித்து இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் ஏற்றுக் கொண்டார். மேலும் இதன் மூலம் உலகத்தினுடைய பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார்.
சர்வாங்க தகன பலிபீட கொம்புகளின் மேல் தெளிக்கப்பட்ட பலி காணிக்கையினுடைய இரத்தத்தால் நியாயதீர்ப்பு புத்தகத்தில் இருந்த பெயர்கள் அகற்றப்பட்டன. இதனால் தான் இயேசு ஞானஸ்நானம் பெற்று, அவருடைய இரத்தத்தைச் சிந்தி, அதன் மூலமாகநம்முடைய நிரந்தர பிராயச் சித்தத்தை நிறைவேற்றினார். மேலும் இந்த உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் அகற்றினார். இதைப் போல ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லாப் பொருட்களும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய ஊழியத்தை பற்றியும் நம்மிடம் பேசுகின்றன. உலகத்தினுடைய பாவங்களிலிருந்து இதன் மூலம் நம்மை மீட்டுள்ளார் என்று இது நமக்கு சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாடு வரை, இயேசு நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ளார் என்ற வார்த்தை முழுமையான உண்மை, இது எந்த தவறுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு, நம்முடைய பலி காணிக்கையாக வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டார் என்பதை அநேகமாக இன்றைய கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை. ஆனால் இதற்கு பதிலாக அவர்கள், சிலுவையின் மீதான அவருடைய மரணத்தை மட்டும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் விசுவாசிக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ விசுவாசமானது, இளநீல நிற நூலை விட்டுவிட்டு, சிகப்பு மற்றும் இரத்தாம்பர நிற நூல்களால் மட்டும் நெய்யப்பட்டுள்ள ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய சட்டமில்லாத நுழைவாயிலாய் இருக்கிறது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் செய்யப்பட்ட மூடியின் எந்த அவசியத்தையும் பார்க்காத, தவறாக புரிந்து கொண்ட விசுவாசத்தை மட்டுமே அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மேலும் இதற்கு பதிலாக, சிகப்பு சாயம் பூசப்பட்ட செம்மறி ஆட்டினுடைய தோல் மற்றும் மரநாயினுடைய தோலின் இரண்டு மூடிகள் மட்டும் தான் அவர்களுக்கு தேவைப்படுகிறது என்று விசுவாசிக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் வரையப்பட்டுள்ள ஆசரிப்புக் கூடாரத்தினுடைய அநேக ஒவியங்களை நாம் பார்க்கும் பொழுது, இளநீல நிற நூலின் சிறு அடையாளத்தைக் கூட நாம் கண்டுப்பிடிக்காத வகையில் அவைகள வரையப்பட்டுள்ளன. இந்த படங்களை வரைந்த மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாமலிருப்பதால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தில் இருக்கும் வாசல்கள் எல்லாம் சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களால் மூடப்பட்டுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட விசுவாசம் கர்த்தருக்கு முன்பாக எப்பொழுதுமே சரியான விசுவாசமாய் இருக்கமுடியாது.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலுக்கு அதிகமாக உபயோகப் படுத்தப்பட்ட நூல் இளநீல நிற நூல் தான். இதனை தொடர்ந்து இரத்தாம்பர நிற நூலும், பிறகு சிகப்பு நிற நூலும் அதன் பிறகு வெள்ளை நிற நூலும் பயன்படுத்தப்பட்டன. இதனால், பிரகாரத்தினுடைய வாசலைப் பார்க்கும்பொழுது, இந்த நான்கு நிறங்களும் ஒரே சமயத்தில் பார்வைக்கு வர வேண்டும். அதனால் இயேசுவினுடைய ஞானஸ்நானத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லாத விசுவாசத்தை உடைய அதிக மக்கள் இந்த உலகத்தில் இருப்பதால், ஆசரிப்புக் கூடாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு நிற நூல்களை அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். மேலும் இதற்கு பதிலாக ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலை இரண்டு நூல்களால் மட்டுமே கட்டியுள்ளார்கள்.
இப்படிச் செய்வதின் மூலம், பல மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இந்த மக்களிடம் கர்த்தரை பற்றிய குறைந்த அறிவே இருக்கிறது. மேலும் அவருடைய வார்த்தையை பற்றி சற்றும் அறியாமல் இருக்கிறார்கள். இவை எல்லாம் தவறான தீர்க்கதரிசனங்கள். இந்த மக்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது, கோதுமைக்கு மத்தியில் சாத்தான் விதைத்த களைகள் என்று இயேசு விளக்குகிறார் (மத்தேயு 13:25). வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலில் இருக்கும் அவர்களுடைய ஒவியங்களில் இளநீல நிற நூலை விட்டு, தவறான பொய்களைப் பரப்பும் மக்களாகியுள்ளார்கள். இதனால் தான், அநேக மக்கள் இயேசுவை விசுவாசித்தாலும், பாவமுடையவர்களாய் இருக்கிறார்கள். மேலும் இயேசுவின் மீது அவர்களுக்கு விசுவாசமிருந்தாலும் அவர்களுடைய பாவங்களின் காரணமாக, அழிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாய் இருக்க வேண்டும். சட்டமில்லாத விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் கட்டப்படும் பொழுது, உங்கள் ஆத்துமா நீண்ட கால மத வாழ்வை வாழ்தற்கு இது எந்த நன்மையைத் தரும்? தவறான விசுவாசம் ஒரே அறிவிப்பில் உடைந்து போய் விடும். நம்முடைய வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும், இதனை வெடித்த விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் கட்டினால், இது என்ன நன்மையைத் தரும்? நீங்கள் கர்த்தரை எவ்வளவு சுறுசுறுப்பாக தொழுதிருந்தாலும், உங்கள் வீட்டை மணல் மீது தான் கட்டியுள்ளீர்கள். புயல் வரும் பொழுதும், காற்று எழும் பொழுதும், புயல் உருவாகும் பொழுதும், அது ஒரேயடியாக உடைந்து போய் விடும்.
ஆனால், உறுதியான விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உடையவர்கள் பற்றி என்ன? அதை எவ்வளவு அசைத்தாலும் கீழே விழுவதில்லை. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்திய பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு எப்பொழுதுமே கீழே விழாது என்று கர்த்தர் நமக்குச் சொன்னார். இது தான் உண்மையான நிலை. பாறையின் விசுவாசம் என்றால் என்ன? இது தான் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசத்தில் வீட்டைக் கட்டியுள்ளவர்களின் விசுவாசம் எப்பொழுதுமே உடையாது. இதனால் தான், நம்முடைய விசுவாசம் திடமான மற்றும் உறுதியான அஸ்திபாரத்தில் இருக்க வேண்டியது அவசியம். கர்த்தர் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை சரியாக நாம் விசுவாசிக்காவிட்டால், இப்படிப்பட்ட விசுவாசம், கர்த்தரால் வேண்டப்படாத தவறான மத விசுவாசமாக மாறிவிடும்.
 
 
சீத்தீம் மரம், எண்ணெய் மற்றும் வாசனைப் பொருட்கள்
 
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய தூண்கள், சர்வாங்க தகன பலிபீடம், பலகைகள் மற்றும் பரிசுத்த ஸ்தலத்தினுடைய பொருட்கள் எல்லாம் சீத்தீம் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. வேதாகமத்தில் இருக்கும் மரமானது மனிதர்களைக் குறிக்கிறது. (நியாயதிபதிகள் 9:8-15; மாற்கு 8:24) இங்கே மரமானது நம்முடைய மனித குணங்களுடன் இருக்கும் நம்மை குறிக்கிறது. இந்த சீத்தீம் மரத்தினுடைய மரக்கட்டைகள் தூண்களுக்கும், சர்வாங்க தகன பலிபீடத்திற்கு மேலும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீத்தீம் மரத்தினுடைய வேர்கள் எப்பொழுதும் பூமிக்கு அடியில் புதைந்து இருப்பதைப் போல, எல்லா நேரமும் நாம் பாவம் செய்வதை நம்மால் தடுக்க முடியாத அளவிற்கு நம்முடைய அடிப்படைகள் இருக்கின்றன என்று இது நமக்கு சொல்லுகிறது. அநீதியாய் தொடர்ந்து இருப்பதையும் எப்பொழுதும் பாவம் செய்வதையும் தடுக்க முடியாது என்று மக்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதே சமயத்தில், சீத்தீம் மரம் இயேசு கிறிஸ்துவினுடைய கருணையை குறிக்கிறது. மனித சரீரத்தில் வந்த மேசியா உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, மனித குலத்திற்காக பிரதிநிதியாக இருந்து நியாயந்தீர்க்கப் பட்டார். அவர் தான் கர்த்தர். இதனால் உடன்படிக்கைப் பெட்டி, அப்பத்தின் மேஜை, தூபவர்க்க பலி பீடம் மற்றும் பலகைகள் எல்லாம் சீத்தீம் மரக் கட்டையால் செய்யப்பட்டன. இதன் மேல் சுத்தமான தங்கம் வைக்கப்பட்டிருந்தது.
விளக்கிற்கு தேவையான எண்ணெய்யும் அபிஷேகம் செய்யும் எண்ணெய்க்கான மற்றும் நல்ல வாசனை பொருளுக்கு தேவையான வாசனை பொருட்கள், ஆகியவை இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கிருக்கும் நம்முடைய விசுவாசத்தைக் குறிக்கின்றன. இயேசு என்ற பெயரிற்கான பொருள் தன்னுடைய மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து மீட்கும் ஒருவர் என்பதாகும். அபிஷேகிக்கும் ஒருவர் என்பது கிறிஸ்து என்ற பெயரின் பொருள். இது இயேசு கிறிஸ்து தான் கர்த்தர் என்றும் நம்மை மீட்ட பரலோகத்தின் தலைமை ஆசாரியன் இவர் தான் என்றும் நமக்கு சொல்லுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, மனித சரீரத்தில் நம்முடைய தேவன் இந்த பூமிக்கு வந்து, நமக்காக சிலுவையின் மீது பலியாகி, இதன் மூலம் இரட்சிப்பின் பரிசை நமக்கு கொடுத்துள்ளார். தலைமை ஆசாரியனின் பாத்திரத்தை இயேசு எடுத்து, நமக்கு நம்முடைய இரட்சிப்பைக் கொடுத்துள்ளார், இதுவே உண்மையில் மிகவும் அழகான வேலையாகும்.
 
 
தலைமை ஆசாரியனுடைய மார்பு தட்டிலும் ஏபோதிலும் வைக்கப்பட உள்ள கோமேதகக் கற்களும் இரத்தினங்களும்
 
ஏபோது மற்றும் தலைமை ஆசாரியனுடைய மார்பு தட்டில் வைக்கப்பட உள்ள பன்னிரெண்டு வித்தியாசமான விலையுயர்ந்த கற்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. தலைமை ஆசாரியன் முதலில் உள் சட்டையை அணிந்தான், பின்பு இளநீல நிற அங்கியை அணிந்தான் பிறகு அங்கிற்கு மேலே ஏபோதை அணிந்தான், அதன் மீது மார்பு தட்டு வைக்கப்பட்டது. இது பலி சடங்கின் பொழுது அணியப்பட்டது. மேலும் இந்த மார்பு தட்டின் மீது பன்னிரெண்டு விலையுயர்ந்த கற்கள் வைக்கப்பட்டன. இஸ்ரவேல் மக்களையும் மற்ற எல்லா மக்களையும் அவனுடைய மார்பிற்குள் அனைத்து கொண்டு கர்த்தருக்கு முன்பாக போய், அவருக்கு அவர்களுடைய பலி காணிக்கைகளைக் கொடுப்பது தான் தலைமை ஆசாரியனின் பங்காய் இருந்தது என்று இது நமக்கு காண்பிக்கிறது.
பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசுவும், அவருடைய மார்புக்குள் உலகத்தினுடைய எல்லா தேசங்களையும் அனைத்து கொண்டு, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்து கொள்வதற்கு அவருடைய சொந்த சரீரத்தை கொடுத்தார். மேலும் நம்முடைய சார்பாக பலியாவதற்கு இதன் மூலம் பிதாவாகிய கர்த்தருக்கு அவருடைய மக்களை அர்ப்பணித்தார். மார்பு தட்டின் மீது வைக்கப்பட்டிருந்த பன்னிரெண்டு கற்களும், இந்த உலகத்தினுடைய எல்லா தேசங்களையும் குறிக்கிறது, மேலும் அவற்றை அணிந்த தலைமை ஆசாரியன், இதைப் போல உலகத்தினுடைய எல்லா தேசங்களையும் அவருடைய மார்புக்குள் அணைத்து கொண்டு மீட்டுள்ள இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
நம்முடைய கர்த்தர் தனக்காக ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு இஸ்ரவேலர்களை கொண்டு வரச் சொன்ன காணிக்கைகள் இவையே, கர்த்தர் அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தையும் அவருடைய தங்கும் இடத்தையும் இந்த காணிக்கையின் மூலமாக கட்ட சொன்ன உண்மைக்கு ஒரு ஆவிக்குரிய பொருள் இருக்கிறது. கர்த்தர் அவருக்கு கொடுத்த சட்டத்தை கைக்கொள்ள முடியாததால், இஸ்ரவேல் மக்கள் எப்பொழுதுமே பாவத்துடன் இருந்தார்கள். இதனால் தான் மோசேயின் மூலமாக கர்த்தர் அவர்களிடம் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டச் சொன்னார். மேலும் பலி காணிக்கையால் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வீட்டை கட்டுவதற்கு இந்த எல்லா காணிக்கைகளையும் பயன்படுத்தி, பலி முறையின் தேவைகளுக்கு ஏற்ப, அவர்களை பலி காணிக்கையைக் கொடுக்கச் செய்தும், கர்த்தர் இஸ்ரவேலர்களின் எல்லா பாவங்களையும் அகற்றினார். இப்படித்தான், ஆசரிப்புக் கூடாரத்தில், இஸ்ரவேல் மக்களுடன் கர்த்தரால் தங்க முடிந்தது.
இருந்தபோதிலும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை விசுவாசிக்காத அநேக கிறிஸ்தவர்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தைக் கொண்டு வர சொன்னபோது, இந்த காணிக்கைகளால் கூறப்பட்டுள்ள சத்தியத்தை அவர்கள் ஏன் விசுவாசிப்பதில்லை?
நம்முடைய பாவங்களுக்காக, நாமெல்லோரும் நரகத்திற்கு தள்ளப்பட வேண்டியவர்களாய் இருக்கவில்லையா? நீங்கள் நரகத்திற்கு தள்ளப்படுவீர்கள் என்பதை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இந்த உலகத்திலுள்ள பல மதங்களுள் ஒன்றாக கிறிஸ்தவத்தை விசுவாசித்தீர்கள் அல்லவா? இதுவரை இப்படி நீங்கள் விசுவாசித்திருந்தால் நீங்கள் மனந்திரும்பி இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் விசுவாசத்திற்கு திரும்பவேண்டும். நீங்கள் பாவத்தின் மாமிசம் என்றும் உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் நரகத்திற்கு தள்ளப்பட உள்ளீர்கள் என்றும் கர்த்தருடைய கட்டளைகளுக்கு முன்பாக உணர்ந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
நீங்கள் நரகத்திற்கு தள்ளப்படவிருந்தாலும், நம்முடைய தேவன் மேசியாவாக இந்த உலகத்திற்கு வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் உங்களுடைய பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டு, இந்த பாவங்களை சிலுவைக்கு சுமந்து, அதன் மீது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம், அவர் பலியாகி இதன் மூலம் என்னையும் உங்களையும் நம்முடைய பாவங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் இரட்சித்துள்ளார் என்ற நற்செய்தியின் சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் நாம் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை எப்பொழுதும் அமைக்க முடியாது.
 
 
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தைப் பற்றி நினைக்க வேண்டும்
 
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நமக்குச் சொல்லுகிறார். இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசம் உண்மையில் நம்மிடம் இருக்கிறதா என்றும். அல்லது இளநீல நிற நூலை விட்டு விட்டு, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலிகளில் மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மையை விசுவாசிக்கிறோமா என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
நம்முடைய சொந்த விருப்பங்களுக்கு மட்டும் பொருந்தும் தவறான விசுவாசத்தைக் கர்த்தரிடம் நாம் எடுத்துச் சொல்லுகிறோமா இல்லையா என்று நமக்கு நாமே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களை அவரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லும் பொழுது, ஏதாவது ஒரு வகையில் நாம் அவருக்கு கறுப்பு நிறமுடைய நைலான் நூலை கொடுப்பதில்லையா? "கர்த்தவே நீர் கேட்ட நூல் ஆசரிப்புக் கூடாரத்திற்கு உபயோகமில்லாதது போல் தோன்றுகிறது. இது மழையினால் அழுகிப் போய் விடும், மேலும் இதை தேடுவதற்கும், எடுத்து வருவதற்கும் சோர்வாக இருக்கிறது. இதற்கு பதிலாக இந்த நைலான் நூலை பயன்படுத்தி பாரும். நீர் இதை நன்கு பராமரித்தால் 50 வருடங்களுக்கோ, 100 வருடங்களுக்கோ கூட நீடிக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். மேலும் இதை நீங்கள் மண்ணில் புதைத்து வைத்தாலும் 200 வருடங்களுக்கு மேல் ஆனாலும் கூட மக்கிவிடாது. இது அருமையானதாக இல்லையா?"
இதைத் தான் நாம் கர்த்தரிடத்தில் ஏதாவது ஒரு வகையில் சொல்லுகிறோம் இல்லையா? நம்மை நாமே நன்றாக பார்த்து, இந்த வகையான மோசமான மற்றும் மூட பழக்க வழக்கமான விசுவாசத்தை கர்த்தரிடத்திற்கு கொண்டு செல்வதில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த வகையான விசுவாசம் நம்மிடம் இருந்தால் நாம் இப்பொழுதே மன்னிப்பு கேட்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் திரும்பவேண்டும்.
நாம் உண்மையிலேயே நல்ல கிறிஸ்தவர்கள், என்று தமக்குத் தாமே நினைத்து கொள்பவர்கள் நம்முள் அநேகர் உண்டு. ஆனால் ஒரு பார்வையில், அவர்களுடைய ஞானமும், விசுவாசமும் தவறாக உள்ளதைக் காணலாம்.
 
 
இன்றைய கிறிஸ்தவத்தை ஊடுருவியுள்ள விசுவாசம்
 
கிறிஸ்தவர்கள் அநேகமாக விசுவாசிப்பது மெய்ஞானத்தைத் தான். கர்த்தருடைய வார்த்தை உண்மையில் என்ன சொல்லுகிறது என்பதை பற்றி இந்த மக்களுக்கு எந்த எண்ணமும் கிடையாது. ஏனென்றால் மேசியா அவர்களுக்கு கொடுத்துள்ள சத்தியத்தின் வார்த்தை அவர்களுக்கு தெரியாது. அவர்களுடைய சொந்த எண்ணத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தேவனை விசுவாசித்து அவரைப் பின்பற்றுகிறார்கள். மேலும் இது போன்ற உணர்ச்சிகள் உண்மையானவைகள் என்று அவர்கள் நம்பியுள்ளார்கள். தமக்குத் தாமே கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணுவதாலும் அவர்களுடைய ஜெபத்தின்போது அவர்கள் உணரும் சொந்த உணர்ச்சியையும் எண்ணத்தையும் விசுவாசத்துடன் பின்பற்றுவதாலும் கர்த்தரிடத்தில் இருக்கும் உண்மையான விசுவாசம் என்ன என்பதை அவர்களால் சரியாக பிரித்துணர முடியாது.
இதைப் போல, தங்களுடைய சொந்த யோசனைககளில் அதிகமாக அசைபோடும் தங்களுடைய சொந்த எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கர்த்தரை விசுவாசிப்பதே விசுவாசத்தின் விசுவாசம் என்றும் உபவாசம் இருக்கும் பொழுதும், ஸ்தோத்திரம் செலுத்தும் பொழுதும், விசுவாசிக்கும் பொழுதும், காலை வேளையில் ஜெபங்கள் ஏறெடுக்கும் பொழுதும், ஜெபம் பண்ணுவதற்காக மலையின் மேல் ஏறும் பொழுதும், பாவம் செய்யும் பொழுது மனந்திரும்புதலின் ஜெபம் பண்ணும் பொழுதும், மற்றும் இதை போன்ற காரியங்கள் செய்யும் பொழுதும் அவர்களுக்கு கிடைக்கும் எண்ணங்களினால் கர்த்தரை விசுவாசித்து வாழும் மக்கள் எல்லோரும் குழப்பவாதிகளேயாவர். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒருவருடைய சொந்த எண்ணங்களைப் பற்றி கொண்டு வாழும் விசுவாசத்தின் வாழ்க்கையானது மேசியா கூறிய இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசம் கிடையாது.
இன்றைய கிறிஸ்தவர்களில் அநேகமாக 99.9% சதவிகிதத்தினர் வரலாற்று பூர்வமாக குழப்பவாதிகளாக இருந்திருக்கலாம்.. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஆதி கால ஆலயங்களை தவிர, முழு கிறிஸ்தவமும் இத்தகைய விசுவாசத்தைப் பின் தொடர்ந்து வந்தது என்றால் அது மிகையல்ல. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களில் விசுவாசம் இல்லாதவர்கள், தங்களுடைய சொந்த எண்ணங்கள் விசுவாசமாயிருக்கிறது என்ற எண்ணத்திற்கு ஏமாறுகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஜெபங்களில் கர்த்தரை பார்த்து சந்தித்தாக கூறுகிறார்கள். அவர்கள் ஸ்தோத்தரிக்கும் பொழுதெல்லாம் சிறப்பாக உணருவதாக நம்மிடம் சொல்லுகிறார்கள்.
"நாம் இந்த ஸ்தோத்தரிக்கும் கூட்டத்தில் ஒன்று கூடினோம். எங்கள் கைகளை உயர்த்தி எங்களுடைய பாவங்களை ஒன்றாக அறிக்கையிட்டோம். நாங்கள் சிலுவையைப் பற்றி அதன் காலடியில் சில சடங்குகளை செய்தோம், பின்பு எங்களுடைய இருதயங்களெல்லாம் அக்கினியால் நிரப்பப்பட்டது. மேலும் கிறிஸ்து சிறப்பாக நேசிக்கும்படியானார். கிறிஸ்து சிந்திய இரத்தத்திற்காக எங்களுடைய இருதயங்களில் மிகவும் நன்றியுள்ளவர்களானோம். இதனால் தான் அவர் இரத்தம் சிந்தினார் என்பதை இன்னமும் அதிகமாக உணர்ந்து தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார் என்பதை நாங்கள் இன்னமும் அதிக ஆர்வமாக விசுவாசித்தோம். இந்த ழுழு அனுபவத்தையும் நாங்கள் நேசித்தோம்" என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு நாள் அவர்களுடைய உணர்ச்சிகள் குறையும் பொழுது. "எல்லா எண்ணங்களும் வற்றி போய் விட்டது என்றும், எங்களுடைய இருதயங்களில் நாங்கள் பாவம் உள்ளவர்களாக உள்ளோம் என்றும்" அவர்கள் கூறுகிறார்கள். இந்த வகையான விசுவாசம் குழப்பத்தின் விசுவாசத்தைத் தவிர வேறில்லை.
ஒருவருடைய பிரிவு மற்றும் வேறுபாட்டின் வித்தியாசங்களை கருதாது இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசத்தை கர்த்தருக்கு தருவதில்லை. ஆனால் நைலான் நூலின் விசுவாசத்தை தருகிறார்கள். அவர்கள் கர்த்தரிடத்தில் தம்முடைய மாயமான விசுவாசத்தைக் கொண்டுவருகிறார்கள் வேறு வார்த்தைகளில் கூறினால் இது வெகு தூரத்திற்கு முன்பு விழுந்து விட்ட ஒன்றாகவும், கர்த்தர் பார்க்க விரும்பாத ஒன்றுமாக இருக்கிறது.
துறைமுக கம்பங்களில் படகுகளை கட்ட பயன்படுத்தப்படும் தடியான கயிறுகளை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? மாயக்காரர்கள் கர்த்தருக்கு இந்த வகையான பொருளைத் தாத் கொடுப்பார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை கொண்டு வரும்படி நம்முடைய தேவன் நமக்கு சொன்ன பொழுது. "தேவனே இந்த விசுவாசத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கர்த்தரிடத்தில் சொல்லி சில மக்கள் இந்த தடி கயிறை அவரிடத்தில் கொண்டு போகிறார்கள். கப்பல் நிற்கும் இடத்திற்கும் பெரிய கப்பல்கள் ஒவ்வொன்றிற்கும் இடையில் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு சங்கிலிகளையும் கூட, சில மக்கள் அவரிடம் கொண்டு செல்கிறார்கள். இந்த தடியான இரும்பு சங்கிலிகளை சுற்றிய பிறகு இதனை ஏற்றுக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டு, கர்த்தருடைய பாதத்தில் இதை வைக்கிறார்கள்.
ஆனால் இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசத்தை கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் நம்மிடம் கூறி இருக்கிறார். இரும்பு சங்கலிகளை கொண்டு வர வேண்டும் என்று நமக்கு சொல்லவில்லை. தங்களுடைய கண்களில் எது சிறப்பாக இருக்கிறதோ அல்லது கண்டுபிடிப்பதற்கு எது அவர்களுக்கு எளிதாக இருக்கிறதோ அவற்றை அவரிடம் பலர் கொண்டு செல்கிறார்கள். இரும்பு சங்கிலிகள், கயிறுகள், நைலான் நூல்கள் அல்லது அம்புவேர் கொடியுனும் கூட கர்த்தரிடத்திற்கு போகும் மக்கள் இருந்தாலும், கர்த்தர் உண்மையில் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற காணிக்கைகளை மட்டுமே பெற்றுக் கொள்கிறார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசத்தை மட்டுமே அவர் ஏற்றுக் கொள்வார் என்று கர்த்தர் நியமித்துள்ளார். இதைப் போல இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய விசுவாசத்தைக் கர்த்தருக்கு முன்பு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.
 
 
மேசியா எந்த காணிக்கையும் பெற்றுக் கொள்வதில்லை
 
ஏபோது மற்றும் மார்பு தட்டில் பொருத்தப்படுவதற்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகியவைகளை இஸ்ரவேலர்கள் கர்த்தரிடத்திற்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது. ஆனாலும் சிலர் பித்தளைகளையும், இரும்பையும் கர்த்தரிடத்திற்கு எடுத்து வருகிறார்கள். எல்லா வகையான பொருட்களையும் ஏற்றுக் கொள்ள கூடிய மறுபடியும் சுழற்சி முறையில் உருவாக்கும் கிடங்கை அவர் வைத்திருக்கிறாரா? நிச்சயமாக இல்லை!
எந்த வகையான குப்பையையும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இயேசு இல்லை. அவரிடத்திற்கு நீங்கள் எடுத்து செல்லும் எந்த உபயோகமற்ற பொருளையும் எடுத்துக் கொண்டு, மறுபடியும் உருவாக்கும் கிடங்கை நடத்தவில்லை. நம்முடைய பாவங்களை மன்னிக்கும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களுடைய அவருடைய இரக்கத்தை நம்மீது அருள வேண்டிய மேசியாவாக இயேசு இருக்கிறார். மேலும் அவருடைய உண்மையான அன்பை நமக்கு தர வேண்டுபவராகவும் இருக்கிறார். இதனால் தான் இயேசு அன்பின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். நம்முடைய மேய்ப்பர் உண்மையில் அன்பின் ராஜாவாக இருக்கிறார். இயேசு தான் உண்மையில் நம்முடைய உண்மையான மேசியா. முற்றிலுமாக தேவைப்படும் சில சிறப்புகளை விளக்கி, நம்மிடமிருந்து தேவைப்படும் விசுவாசத்தை இந்த மேசியா அமைத்துள்ளார். இந்த விசுவாசத்துடன் கர்த்தருக்கு முன்பாக நாம் போகும் பொழுதுதான் நமக்கு அவர் வாக்களித்துள்ளதைக் கொடுப்பார்.
மேசியாவின் மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு மத்தியில், அவரைப் பற்றி தவறாக புரிந்துக் கொண்ட ஞானத்தின் அடிப்படையில், விளக்க முடியாத அளவிற்கு பிடிவாதம் உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நாம் இன்னமும் பார்க்கிறோம். கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய வீண் பிடிவாதத்தின் வழியை அமுல்படுத்திய பர்வோனைப் போல அதிகமாக மோசக்காரர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். "யேகோவா தன்னை வெளிப்படுத்தியுள்ளார்; அவருடைய மக்களை போக விடு" என மோசே அவனிடம் சொன்ன பொழுது "யார் அந்த யேகோவா?" என்று பர்வோன் பதிலளித்தான்.
கர்த்தருடைய பிரசன்னம் அவனுக்கு விளக்கப்பட்ட பொழுது அவனுடைய கீழ்ப்படியாதமையின் விலையையும் நன்மையையும் கணக்கிட்ட பிறகு, அவன் நிச்சயமாக அவரிடத்தில் சரணடையவும் வளைந்து கொடுக்கும்படியும் இருந்திருப்பான். அவன் இன்னமும் முற்றிலுமாக விசுவாசிக்க முடியாமலும், அவனுடைய பிடிவாதத்தை வலியுறுத்த வேண்டியிருந்தாலும் அவன் சற்று நேரம் அதைப் பற்றிக்கொள்ள முயற்சி செய்திருக்கலாம். ஆனால் இரண்டு கொள்ளை நோய்களுக்கு பிறகு அவன் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். பர்வோன் தன்னுடைய முழு தேசமும் தவளைகளால் மூடப்பட்டு கொள்ளை நோய்வாய் பட்டிருந்தாலும் பிடிவாதத்தை இன்னமும் பற்றி கொண்டான், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்தது, அவனுடைய முட்டாள் தனத்தையும் பரிதாபத்தையுமே குறிக்கிறது.
தவளைகள் மட்டும் அல்ல, ஆனால் பேனும் பர்வோனுடைய அரண்மனையை தொற்றியது. ஒருவர் வலது புறமும் இடது புறமும் திரும்பினால் முழு எகிப்து தேசத்தில் எங்கும் பார்த்தாலும் பேன் நிரப்பப்பட்டு இருந்தாலும், பர்வோன் இன்னமும் சரணடைய வில்லை. எல்லா இடமும் பேன் நிரப்பப்பட்டு இருக்கும் பொழுது எப்படி ஒருவர் இருக்க முடியும்? இந்த சூழ்நிலையில், "கர்த்தருக்கு நான் கீழ்ப்படியாததால் உண்மையான ராஜா யார் என்று அவர் எனக்கு காட்டுகிறார். நான் இந்த உலகத்தில் இருக்கும் என்னுடைய சாம்ராஜ்ஜியத்தின் ராஜாவாக இருக்கலாம் ஆனால் அவருடனும் ஒப்பிடும் பொழுது நான் ஒன்றுமில்லை. இந்த உலகத்தின் பரப்பின் மேல் இருக்கும் சிறந்த தேசத்தினுடைய ராஜாவாக நான் இருந்தாலும், இந்த உலகம் முழுவதும் எனக்கு அதிகாரம் இருந்தாலும், கர்த்தர் என்னை விட இன்னமும் சக்தி வாய்ந்தவர். மேலும் என்னுடைய கீழ்ப்படியாமையினால் அவர் எனக்கு இந்த கொள்ளை நோய்களை கொண்டு வருகிறார்" என்று அவன் உணர்ந்து சரண் அடைந்திருக்க வேண்டும்.
அவனுடைய எதிர்ப்பின் விலை என்னவாக இருக்கும் என்று அவன் பார்த்த பிறகு, விரைவாக சரணடைவதே பர்வோனிற்கு ஞானமுள்ள விஷயமாக இருந்திருக்க வேண்டும். பர்வோன் தான் எவ்வளவு சக்தியுள்ளவன் என்பதைக் கருதாமல், கர்த்தருக்கு எதிராக நிற்பதற்கு எந்த வழியும் இல்லை என்ற முடிவை அவன் அடைந்திருந்தால், "சரி, கர்த்தாவே நீர் முதல் இடத்தை எடுத்துக்கொள்ளும்; நான் இரண்டாவது இடத்தை எடுத்துக் கொள்கிறேன்" என்று கூறி அவரிடம் சரணடவதே அவன் செய்யக் கூடியதாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படி கீழ்ப்படிவதற்கு பர்வோன் மறுத்ததால் அவனுடைய முழு தேசமும் மக்களும் பேனால் கொடிய நோய் பட்டனர்.
இதனால், எந்த எகிபதியனாலும் எதுவுமே செய்ய முடிய வில்லை. எல்லோரும், போனால் தொடர்ந்து வேதனை படுத்தப்படும் பொழுது, பேனிலிருந்து வெளியே வருவதை தவிர ஒருவரால் வேறு என்ன செய்ய முடியும்? தம் சொந்த வீடுகளை எரிக்கவும், கிராமங்களை நிரப்பியுள்ள பேன்களின் துர்நாற்றத்தை எரிக்கவும் தீப்பந்தத்துடன் சுற்றி ஒடும் இந்த பரிதாபமான எகிப்தியர்களைப் பற்றி நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும்.
மனிதன் செய்யக்கூடிய காரியங்கள் உண்டு, மனிதனால் செய்யக் கூடாத காரியங்களும் உண்டு. கர்த்தர் மகத்துவமுள்ள தேவனாய் இருக்கிறபடியால், வாழ்வையும், மரணத்தையும், சந்தோஷத்தையும், துக்கத்தையும், ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் கர்த்தர் தான் நிர்வகிக்கிறார். இது தான் சூழ்நிலையாக இருக்கும் பொழுது, நம்மில் நாம் நம்பிக்கையை வைத்து கர்த்தருக்கு எதிராக நிற்பதை விட, நாமெல்லாரும் பகுத்தறிவுடன் யோசித்து நம்முடைய பிடிவாதத்தை ஒழிப்பதற்கான நியாயமான முடிவை அடைய வேண்டும். நமக்கு மத்தியிலேயே ஒருவருடைய சொந்த வழியை அமுல்படுத்தி, மற்றவர்களை பணிய செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் மேசியாவுடன் செயாலாற்றும் பொழுது இதற்கு சாத்தியமில்லை.
கர்த்தருக்கு முன்பாக எந்த வகையான நபராக நாம் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். கர்த்தருக்கு எதிராக நாம் பற்றிக் கொள்ள வேண்டுமா, அல்லது நம்முடைய இருதயங்கள் நேர்மையாகவும் தாழ்மையாகவும் இருக்க வேண்டுமா, என்பதைப் பற்றி நாம் மனப்பூர்வமாக கருத வேண்டும். மேலும், கர்த்தருக்கு முன்பாக நாலெல்லாரும் தாழ்மையோடு இருக்க வேண்டும் என்ற கண்டிப்பான முடிவை நாம் அடைய வேண்டும். மனிதனுக்கு முன்பு, நாம் நம்முடைய பிடிவாதத்தைப் பற்றிக் கொள்ளலாம், மேலும் சிலவேளைகளில் அதனுடைய விளைவுகளையும் சந்திக்கலாம். ஆனால் கர்த்தருக்கு முன்பாக, நம்முடைய இருதயங்கள் முற்றிலுமாக தாழ்மையாக இருக்க வேண்டும்.
"கர்த்தாவே, நான் தவறு செய்து விட்டேன்"௮என்று ஒப்புக் கொள்பவர்கள் தான், சரியான வழியை தேர்ந்தெடுப்பவர்களாக உள்ளனர். தங்களுடைய சபிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து மீட்கப்படக் கூடிய மக்கள் இவர்களேயாவர். தங்களுடைய பாவங்களினால், கர்த்தரை விட்டவர்களுக்கு, கர்த்தருடைய கரங்களில் அணைக்கப்படுவதற்கும், அவருடைய வாழ்வு கொடுக்கும் நீரில் வாழ்வதற்குமான வழி, நீர் மற்றும் ஆவியில் மறுபடியும் பிறப்பது தான். இப்படிப்பட்ட வாழ்க்கை, இந்த உலகத்தின் வானந்தரத்தில் கனியில்லாமல், பூமியின் காலியான மற்றும் வறண்ட நிலத்தில் மிதந்து கொண்டு, ஒரு கைப்பிடி தூசுக்கு திரும்பும்படி இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் இருந்து நாம் எதை எதிர்ப்பார்க்க முடியும்?
தூசுக்கு திரும்பும்படியும் அக்கினி கடலுக்குள் தள்ளப்படும்படியும் இருக்கும் நமக்கு மீட்க்கப்படுவதற்கான ஒரே வழி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது தான். மேலும் இதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக்கொள்ளலாம். இது கர்த்தருக்கு எதிராக நின்றதற்கும், நிரந்தர அழிவிற்கு அனுப்ப வருபவர்களின் பயமில்லாத மற்றும் நம்பிக்கையில்லாத வாழ்க்கைக்கும், கர்த்தருடைய அன்பின் இரக்கத்தினுடைய இரட்சிப்பின் அன்பின் மூலம் அவருக்கு முன்பாக, அவர்களுடைய பாவங்களுக்காக அற்புதமாக மறுபடியும் புதுப்பிப்பதற்கும் நாமெல்லாரும் இந்த இரட்சிப்பினால் மூடப் படவேண்டும்.
ஒருவன் முற்றிலுமாக இறக்கக்கூடியவனாய் இருந்து, கர்த்தரிடத்தில் எப்படி சவால் விட முடியும்? இதைப் போன்ற காணிக்கைகளை கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் நமக்குச் சொல்லும் பொழுது நாம் எல்லோரும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். கர்த்தருக்கு நாம் எந்த காணிக்கையை கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் நமக்கு சொல்லும் மேலே உள்ள முக்கியமான வசனத்தைப் பார்த்து "இந்த வகையான விசுவாசத்தை தான் தம்மிடத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறுகிறாரா" என்ற உணர்விற்கு நாமெல்லோரும் வர வேண்டும்.
தலைமை ஆசாரியனுடைய மார்பு தட்டிற்கு மேல், பன்னிரெண்டு விலையுயர்ந்த கற்களும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் நியாயத்தீர்ப்பின் மார்பு தட்டிற்கு கீழே, ஒளிகள் மற்றும் மேன்மைகள் என்று பொருள் கொள்ளும் ஊரிம்மும் தும்மிம்மும் வைக்கப் படவேண்டியிருந்தது, இதனால் இஸ்ரவேல் மக்கள் மீது, தலைமை ஆசாரியனால் உண்மையான நியாயத்தீர்ப்பை பெற முடிந்தது.
கர்த்தருடைய ஊழியர்களால் மட்டுமே அவர்களிடம் தங்கியிருக்கும் பரிசுத்த ஆவியின் ஒளியையும், கர்த்தருடைய வார்த்தையை சிந்துவதின் மூலம் அவர்களுடைய ஆவிக்குரிய பிள்ளைகள் மீது நீதியான நியாயத்தீர்ப்பையும் அளிக்கமுடியும் என்ற உண்மையைத் தவிர வேறு எதையும் இது குறிப்பதில்லை.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் சத்தியம் தான் உண்மையான சத்தியம் என்றும் உண்மையான இரட்சிப்பு என்றும் கர்த்தருக்கு முன்பாக, நாமெல்லோரும் இப்பொழுது உணர வேண்டும். இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் சத்தியம் தான் நம்மை வாழ்க்கைக்கு கொண்டு வரும் உண்மையான இரட்சிப்பாகும். மேலும் இதை தவிர நம்முடைய இரட்சிப்பை எதுவும் தருதில்லை. இது தெளிவாகவும் உண்மையாகவும் கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாப் பொருட்களும், பாவத்திலிருந்து மனிதன் இரட்சிக்கப்படுவதற்கானது
 
இன்னமும் முட்டாள் தனத்தினால் பிடிவாதமாக, மக்கள் விசுவாசிக்க மறுக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆகும்? அவர்கள் எப்பொழுதும் இரட்சிக்கப் படமாட்டார்கள், நாம் நம்முடைய முட்டாள் தனத்தை தூக்கி எறிய வேண்டும். மேலும் நாம் நம்முடைய சொந்த எண்ணங்களையும் பிடிவாதத்தையும் தூக்கி எறிய வேண்டும். மேலும் இதற்கு பதிலாக அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருக்கு நம்முடைய இருதயங்களை தர வேண்டும். நம்முடைய சொந்த கீழ்ப்படியாத வழியை வற்புறுத்தி கொண்டு கர்த்தருக்கு எதிராக நிற்க கூடாது. இப்படி நாம் அடுத்த மக்களுக்கு முன்பாக செய்யலாம், ஆனால் கிறிஸ்தவர்களாக இருப்பதால், கர்த்தருக்கு முன்பாக இருக்கலாகாது. ஆனால் முட்டாள் மனிதர்கள் கர்த்தருக்கு எதிராக நின்று, மற்ற மனிதர்களுக்கு முன்பாக தாழ்மையாக இருக்கிறார்கள். இது தான் அவர்களிடத்தில் இருக்கும் தவறு. கர்த்தருக்கு முன்பாக நாம் முகம் மண்ணில் படும்படி எறிய வேண்டும், மேலும் கர்த்தர் நம்முடன் பேசியது எல்லாம் சரி என ஒப்புக்கொள்ள வேண்டும்.
மேலும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் வார்த்தையை நம்பி விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் என்பது கர்த்தருடைய வார்த்தையை நம்புவதாகும். கர்த்தருடைய பாதங்களில் நாம் விழுந்து, அவருக்கு முன்பாக நம்முடைய எல்லா உபத்திரவங்களையும் அறிக்கையிடும் பொழுது, கர்த்தர் நிச்சயமாக நமக்கு பதிலளிப்பார். அவர் நமக்காக செய்துள்ளதை நாம் நன்றியுடன் பிறகு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தான் விசுவாசம். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களைத் தவிர, எந்த அர்த்தமில்லாத மற்றும் பைத்தியக்கார தனத்தில் கர்த்தருக்கு நம் விசுவாசத்தைக் காண்பிக்க முடியும்? நாம் அவருக்கு மீன் பிடிக்கும் கயிரையோ அல்லது உலோக சங்கிலியையோ தான் கொண்டு செல்கிறோமா? கர்த்தருக்கு முன்பு சில உபயோகமற்ற நூல்களைக் கொண்டு வந்து, "இது தான் என்னுடைய சொந்த விசுவாசம், இப்படித் தான் இவ்வளவு உறுதியாக நான் விசுவாசித்தேன். இது தான் குறிப்பாக நான் வைத்த உறுதியான விசுவாசம்" - என்று அவரிடம் சொல்லுவது விசுவாசம் இல்லை, ஆனால் கர்த்தருக்கு முன்பாக ஒருவன் தன்னை முட்டாளாக்கி கொள்வதாய் இருக்கிறது.
மேசியாவிற்கு முன்பாக ஒருவன் அவனுடைய/அவளுடைய பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒருவன் அவனுடைய, அவளுடைய விருப்பத்தைக் கர்த்தருக்கு முன்பாக வளைந்து கொடுக்க வேண்டும். கர்த்தருக்கு முன்பாக நாம் எல்லோரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு என்ன சொல்லுகிறார் மற்றும் அவர் நமக்காக என்ன முடிவெடுக்கிறார் என்பதற்கு ஏற்ப நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதைத் தவிர கிறிஸ்தவர்களின் சரியான விசுவாசம் ஏதுவும் கிடையாது. கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்ப கீழ்ப்படிவதும் விசுவாசிப்பதும் தான் சரியான நிலையும், விசுவாசமான இருதயமுமாய் இருக்கிறது. இதை தான், கர்த்தருக்கு முன்பாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக நமக்கு மத்தியில், ஒருவருடைய சொந்த சாதனையை நாம் பெருமைப்படுத்தலாம், ஒருவருக்கொருவர் ஒற்றுப் பார்க்கலாம், ஒருவருக்கு ஒருவர் போட்டிபோடலாம், மற்றும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுக்கலாம். இதுவும் கர்த்தருக்கு முன்பாக ஒரே மாதிரியாக இருப்பதை அளவிடும் உபயோகமற்ற செயலாக இருந்தாலும் மனிதர்களுக்கு மத்தியில் குறைந்த விருப்பம் உடைய ஒன்றாகவும் ஆனால் தொடர்ச்சியாக ஈடுபடும் படியாகவும் இருக்கிறது.
நாய் குட்டிகளும் கூட அவர்களுடைய எஜமானன் யார் என்று அடையாளம் கண்டு கொண்டு அவற்றினுடைய எஜமான்களுக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களுக்கு கீழ்ப்படிகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நாய்களும் கூட அவற்றினுடைய எஜமானர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களுடைய குரல்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றினுடைய எஜமானர்களை மட்டும் பின்பற்றுகிறது. நாய்கள் அவற்றினுடைய எஜமான்களால் சோதிக்கப்படும் பொழுது, அவை அவற்றினுடைய தவறான செயல்களை அடையாளம் கண்டு கொண்டு கீழ்படும் படியாக அவற்றினுடைய தலைகளைக் குணிந்து, மேலும் எல்லா வகையான அழகான சிறு தந்திரங்களை செய்வதின் மூலம் அவற்றினுடைய எஜமான்களின் நல்ல கிருபைக்கு திரும்ப முயற்சி செய்கிறது. மிருகங்கள் கூட இதைச் செய்யும் பொழுது, தங்களுடைய சொந்த எண்ணங்களின் விசுவாசத்தைக் காட்டுவதின் மூலம், இன்னமும் மக்கள் கர்த்தரிடத்தில் சவால் விடுவதைத் தொடருகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், தங்களுடைய சொந்த வழிகளையும் சொந்த எண்ணங்களையும் வற்புறுத்தினாலும் கர்த்தரிடத்தில் பற்றி கொள்வதைத் தொடருகின்றனர்.
அவருடைய இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் மூலம், மனித குலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் மறையும் படி கர்த்தர் செய்துள்ளார். மேலும் நம்முடைய தேவனுடைய வேலைகளை, விசுவாசிக்கும் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும், என்று மட்டுமே அவர் நமக்கு சொல்லி இருக்கிறார். இருந்தாலும் இன்னமும் மக்கள் கீழ்ப்படியாமலும் கர்த்தருக்கு சவால் விடுமாறும் இருக்கின்றனர்.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவரிம் கொண்டுவரும்படி நம் தேவன் கூறி இருக்கிறார். மேலும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மூலம் அவற்றை எல்லாம் மறையச் செய்ததின் மூலம், அவர் நமக்கு பாவத்தின் மீட்பைக் கொடுத்துள்ளார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசத்தை கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லி இருக்கும் பொழுது, மக்கள் இதை இன்னமும் விசுவாசிப்பதில்லை. மேலும் தங்களுடைய சொந்த எஜமானனிடம் எதிர்க்கிறார்கள் இந்த மக்கள் சபிக்கப்படுவார்கள்.
மேசியாவிடத்திற்கு, அவர்களிடம் இருந்து அவர் கேட்கும் விசுவாசத்தை கொண்டு வராமல், அவர்களிடமிருந்து அவர் கேட்காத விசுவாசத்தை கொண்டு வரும் பொழுது, அவர் கோபம் மட்டுமே படுவார். அவர்கள் கர்த்தருக்கு முன்பு அவர்களுடைய பிடிவாதத்தை கொண்டு வந்து, "இந்த வகையிலும், இந்த அளவிற்கும் என்னுடைய விசுவாசத்தை நான் வைத்திருக்கிறேன். நன்கு செய்யப்பட்ட இந்த வேலைக்காக என்னைப் பாராட்டுங்கள்" என்று அவரிடம் சொல்லுகிறார்கள். உண்மையில் இந்த விசுவாசத்தில் இந்த காலம் முழுவதும் அவர்களுடைய விசுவாசத்தை வைத்த படியால், கர்த்தர் அவர்களைப் புகழுவாரா?
நம்முடைய வாழ்க்கையில், பிடிவாதம் தேவைப்படும் நேரங்கள் இருக்கலாம். ஆனால் தவறான விசுவாசத்தின் பிடிவாதம் கர்த்தருக்கு முன்பு முற்றிலும் உபயோகமற்றது. நம்முடைய பாவங்களை மறையச் செய்வதற்கு கர்த்தர் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலைப் பயன்படுத்தினார். இரத்தாம்பர நிற நூலை அல்லது சிகப்பு நிற நூலை மற்றும் உலோக சங்கிலிகளை மட்டும் அவர் பயன்படுத்தினார் என்று வேதாகமம் சொல்லவில்லை. இதைப் போல நைலான் நூலைப் பயன் படுத்தியதையும் குறிப்பிடவில்லை. கர்த்தருடைய வீட்டிற்குள்ளேயும் நமக்கு கொடுக்கப் பட்டுள்ள அவருடைய சட்டத்திற்குள்ளேயும், மேசியா, நம்மிடமிருந்து இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசத்தை மட்டும் கேட்டுள்ளார்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பின் தொடர்பவர்களே கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள். நாமும் கிறிஸ்தவர்கள் தான் ஆனாலும் இயேசுவை தங்களுடிய சொந்த இரட்சகராக விசுவாசித்த பொழுதிலும் மறுபடியும் பிறக்காத பாவத்தின் மீட்பை பெற்றுக் கொள்ளாத இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசம் இல்லாத அநேக மக்கள் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் நரகத்திற்க் போய் சேரும் பெயர் கிறிஸ்தவர்கள் தான் எனென்றால், அவர்களுடைய சொந்த வழிகளுக்கு ஏற்ப விசுவாசிக்கிறார்கள் உண்மையான கிறிஸ்தவர்களாய் இல்லாமல் மத வாதிகளாய் மட்டும் இருக்கிற படியால் இந்த மக்களை கர்த்தர் தண்டிப்பார்.
கர்த்தருக்கு முன்பாவது நாமெல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் மேலும் எப்படி நாம் உண்மையாக இருக்கிறோமோ அப்படியே நம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும், நம்முடைய பாவங்களுக்காக நாம் நரகத்திற்கு தள்ளப்பட உள்ளோம் என்பதை நாம் அறிக்கை விட வேண்டும். மேசியாவிற்கு முன்பு இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலின் விசுவாசத்தை நாமெல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி விசுவாசிப்பதுவே சரியான செயலாகும். மேலும் எப்பொழுதெல்லாம் நாம் அறிக்கையிடுகிறோமோ அப்போது, மேசியா நமக்கு என்ன செய்தார் என்பதையும், நம்மை பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக அவர் ஞானஸ்நானம் எடுத்தார் என்பதையும், அவருடைய மரணத்தின் மூலம் நம்முடைய பாவங்களுக்காக அவர் நியாயந்தீர்க்கப் பட்டார் என்பதையும், நமக்கு நாமே ஞாபகம் படுத்திக் கொண்டு எல்லா முறையும் நம்முடைய மீட்பை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும், இந்த விசுவாசத்தைத் தான் கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கிறார்.
மேசியா இப்படியாக செய்யவேண்டும் என்று சொன்னது போல நாம் செய்யும் வரைக்கும் நம்மால் கர்த்தரை சந்தோஷப்படுத்த முடியாது. ஏன்? ஏனென்றால் அவருடைய இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மூலம் அவர் நம்முடைய நிரந்தர மீட்பராகியுள்ளார். கர்த்தர் நமக்கு என்ன செய்துள்ளார் என்பதை நாம் ஒவ்வொரு தருணமும் விசுவாசிக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசம் உண்மையாய் இருப்பதால் ஓவ்வொரு நாளும் நாம் செய்யும் நம்முடைய பாவங்களிலிருந்து மீட்கப்படுவதற்கு அது இன்னமும் அதிகமாக தேவைப்படுகிறது.
 
 
நம்முடைய சொந்த முயற்சியின் பலன்களை கர்த்தருக்கு கொடுப்பதாக இருந்தால் அவர் அதில் பிரியப்படுவாரா?
 
பூமியின் பொருட்களை நாம் கர்த்தருக்கு கொடுப்பதாக இருந்தால், கர்த்தருடைய கோபத்தை மட்டும் நாம் நம்மீது சேர்த்து வைத்துக் கொண்டிருக்க மாட்டோம், ஆனால் அவருக்கு எதிராக ஒரு சவாலை விடுத்து, நாம் ஒரு பெரும் பாவத்தையும் செய்து கொண்டிருப்போம். இப்படிப்பட்ட விசுவாசம் துரோகமானது, ஏனென்றால் இது கர்த்தருக்கு எதிராக நிற்கிறது, இந்த உலகத்தில் உள்ள எந்த பொருளும் அது எவ்வளவு விலையுயர்ந்ததாகவும், விலை அதிகமாகவும் இருந்தாலும், அவற்றால் கர்த்தரை சந்தோஷப்படுத்த முடியாது. இந்த உலகத்தினுடைய இப்படிப்பட்ட பொருட்களை கர்த்தரிடத்தில் கொண்டு செல்வது எப்பொழுதுமே கர்த்தரால் புகழப்படும் சரியான விசுவாசம் இல்லை. உலகப்பூர்வமான காரியங்களில் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கர்த்தர் இப்படிப்பட்ட பொருள் விஷயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. கர்த்தர் நம்மிடம் இருந்து கேட்கும் உண்மையான விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்த விசுவாசத்தையும் அவருக்கு கொடுக்க வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையில் இருப்பதைப் போலவே அதை விசுவாசிக்கும் விசுவாசமாய் நம்முடைய விசுவாசம் இருக்க வேண்டும். கர்த்தர் நம்மிடமிருந்து கேட்டுள்ள காணிக்கைகளை அப்படியே எடுத்துக் கொள்ளும்படி அது இருக்க வேண்டும். எல்லா வேளையிலும் ஒவ்வொரு தருவாயிலும் நமக்காக கர்த்தர் என்ன செய்துள்ளார் என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மேலும் நாம் நம்முடைய சொந்த பலவீனத்தையும் குறைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு அருளியுள்ள அதிகமான ஆசீர்வாதங்களை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், அவர் விருப்பத்துடன் நம்மைச் சந்தித்துள்ளார் என்பதையும் நாம் சரியாக தெரிந்து கொண்டு விசுவாசிக்க வேண்டும்.
மாயையின் எல்லா விசுவாசத்தையும் நாம் தூக்கி எறிய வேண்டும், மேலும் கர்த்தரால் பேசப்பட்ட வார்த்தையை விசுவாசிக்கும் விசுவாசத்தை மட்டுமே நாம் பெற்றுக் கொள்ளவேண்டும். கர்த்தருக்கு நாம் கொடுக்க வேண்டியது இந்த விசுவாசத்தின் காணிக்கைகள் தான். கர்த்தருக்கு, நாம் சரியான விசுவாசத்தின் காணிக்கைகளை கொடுக்கும் பொழுது தான் அவர் சந்தோஷப்படுவார், நம்மைச் சந்தித்து நம்முடைய விசுவாசத்தை ஏற்றுக் கொள்வார். மேலும் இதைச் செய்யும் பொழுது தான், கர்த்தர் நமக்காக அமைத்து தயாரித்து வைத்துள்ள ஆசீர்வாதங்களை எல்லாம் நமக்குக் கொடுப்பார்.
வார்த்தையில் நாம் சஞ்சரிக்கும் பொழுது "நம்மிடம் இருந்து கர்த்தர் கேட்கும் விசுவாசம் என்ன? எந்த வகையான ஜெபம் அவருக்கு வேண்டும்?" என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும். இதற்கு பிறகு தான் விசுவாசத்தில் இருக்கும் ஜெபத்தைத் தவிர வேறு எதையும் கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கவில்லை என்பதை உணருகிறோம். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மீட்பின் விசுவாசத்திற்குள் கர்த்தர் நமக்கு என்ன கொடுத்துள்ளார் என்பதை ஏற்றுக் கொண்ட விசுவாசத்திற்குள் வழங்கப்படும் ஜெபங்களை நம்முடைய தேவன் நம்மிடமிருந்து கேட்கிறார். கர்த்தர் நம்மிடமிருந்து கேட்பதெல்லாம், விசுவாசத்திற்குள் இருக்கும் இந்த நன்றியுள்ள ஜெபம் தான். அவருடைய பாதங்களில் வைக்க அல்லது அவருக்கு கொடுக்க முயற்சி செய்யும் நம்முடைய சொந்த தயாரிப்புகள் எதையும் அவர் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்வதில்லை. இதைச் செய்யக் கூடாது என்பதை நாமெல்லோரும் உணர வேண்டும்.
"இல்லை, இல்லை, உங்களிடமிருந்து எனக்கு வேண்டிய விசுவாசம் அது அல்ல. உங்களுக்காக நான் ஞானஸ்நானம் பெற்றேன். உங்களுடைய எல்லாப் பாவங்களையும் மறையச் செய்ய, இந்தப் பாவங்களுக்காக நாம் நியாயந் தீர்க்கப்பட்டு, சிலுவையின் மீது மரிப்பதற்கு முன்னர், உங்களுடைய பாவங்களை என் மீது எடுத்து கொள்வதற்கு தான் இதைப் பெற்று கொண்டேன். உங்கள் மீட்பர் நானே. ஆனால் அடிப்படையாக நான் உங்கள் கர்த்தர். நான் தான் ராஜாதி ராஜா. ஆனால் நான் உங்கள் கர்த்தராய் இருப்பதால் நான் இந்த பூமிக்கு வந்து எல்லாவற்றையும் நிறைவேற்றினேன். உங்களுடைய இருதயங்களில் என்னுடைய அதிகாரத்தை அடையாளம் கண்டு கொள்வதற்கும், நான் தான் உங்களுடைய உண்மையான கர்த்தர் என்று முழுமனதுடனும் அறிக்கையிட நீங்கள் என்னை உண்மையாக விசுவாசிக்க வேண்டும்." என்று கர்த்தர் நமக்கு சொல்லுகிறார். கர்த்தர் நமக்கு இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். மேலும் கர்த்தர் நம்மிடமிருந்து கேட்கும் விசுவாசம் இது தான்.
இந்த இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் விசுவாசத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். "நல்லது, இது இன்னமும் சற்று நினைவிலிருக்கிறது. இன்னமும் நான் சற்று சரியாக செய்து கொண்டிருக்கிறேன், மேலும் காரியங்கள் நன்றாக போய் கொண்டிருக்கின்றன. இது உடையவில்லை என்றால் ஏன் ஒட்ட வைக்க வேண்டும். இதே வழியில் நான் ஏன் இதனை விசுவாசிக்க வேண்டும்? நான் இந்த வழியில் விசுவாசிக்கிறேன் அல்லது அந்த வழியில் விசுவாசிக்கிறேன், அவை எல்லாம் ஒன்று தானே?" என்று உங்களுக்கு நீங்களே நினைத்துக் கொள்ளலாம். இல்லை, அவை ஒன்றல்ல! உங்களுடைய இருதயங்களில் இதைத் தவிர வேறு ஏதாவது விசுவாசம் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக இரட்சிக்கப் படவில்லை. இது போன்ற இருதயங்களில் பாவம் இன்னமும் இருப்பதால் நீங்கள் உங்களுடைய இருதயங்களை மாற்றி கொண்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்திற்கு திரும்ப வேண்டும்.
உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் இருதயங்களும், விசுவாசிக்காதவர்களின் இருதயங்களும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாயிருக்கிறது. கர்த்தருக்கு இது தெரியும். மேலும் மறுபடியும் பிறந்துள்ள நமக்கும் இது தெரியும். உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் பொழுது உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். "கர்த்தாவே நான் உண்மையில் பாவமுள்ளவன். என்னை இரட்சியும்." இப்படி நீங்கள் உங்கள் இருதயங்களை மாற்றி கொண்டு உங்களுடைய மீட்பை கேட்கும் பொழுது கர்த்தர் அவருடைய சத்தியத்தினால் உங்களைச் சந்திப்பார்.
 
 
நம்முடைய தேவன் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்டார்
 
நம்முடைய தேவன் நமக்காக ஞானஸ்நானம் பெற்று, அதன்பிறகு கொல்லப்பட்டார். மத்தேயு 3 இல் எழுதியிருப்பதைப் போல, இதைத் தான் தேவன் நமக்காக செய்துள்ளார். இதை நாம் விசுவாசிக்கும் பொழுது இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட பொழுது நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டன. அவர் கொல்லப்பட்ட பொழுது நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டதால் தான் இந்தப் பாவங்களை சிலுவைக்கு அவரால் சுமந்து செல்ல முடிந்தது. நம்முடைய சொந்த பாவங்களுக்காக மட்டும் அல்ல, ஆனால் முழு உலகத்தினுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் அவர் நியாயம் தீர்க்கப்பட்டார்.
நம்முடைய தேவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கான கட்டுமானப் பொருட்களின் காணிக்கைகளை அவரிடம் கொண்டு வரும்படி நமக்கு சொல்லும்பொழுதோ, அல்லது நமக்கு அவர் ஏதாவது சொல்லும் பொழுதோ அவர் ஒரு இடைவிடா வரிசையுடன் செல்கிறார். "இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களை" என்னிடம் கொண்டு வாருங்கள் என்று அவர் கூறுகிறார். இளநீல நிறம் முதலில் வருகிறது. மேலும் அவருடைய மெல்லிய பஞ்சு நூலின் குறிப்பு மூலம் இதை பின் தொடருகிறார். இதன் மூலம் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க சொல்லுகிறார். சிலுவையின் இரத்தத்தை முதலில் விசுவாசிப்பதும், அதன் பின் இயேசுவினுடைய ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதும், முதலில் நன்றாகத் தெரியும். ஆனால் இது தவறு. இயேசு ஞானஸ்நானம் பெற்றதால் தான் சிலுவையின் மீது அவரால் இரத்தம் சிந்த முடிந்தது. சிலுவையின் இரத்தத்தை முதலில் விசுவாசிப்பதும், அதன் பின் இயேசுவினுடைய ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதும் சரியல்ல என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கர்த்தர் இப்படிப்பட்ட விசுவாசத்தை அனுமதிப்பதேயில்லை.
மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்த நம்முடைய தேவன் 30 வயது ஆகும் பொழுது நம்முடைய பாவங்களை தன் மீது எடுத்துக் கொள்வதற்கு, அவர் முதலில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இப்படிச் செய்த பிறகு அவர் இந்த உலகத்தினுடைய பாவங்களை சிலுவைக்கு எடுத்துச் சென்று அவருடைய மரணத்தின் மூலம் நியாயந்தீர்க்கப்பட்டு, பிறகு மரணத்தில் இருந்து மறுபடியும் எழுந்து இதன்மூலம் நம்முடைய இரட்சகர் ஆனார். இதைப் போல அவர் நிறைவேற்றிய அவருடைய வேலைகளின் வரிசைக்கு ஏற்ப கர்த்தர் நமக்குச் செய்துள்ளதை நாம் விசுவாசிக்க வேண்டும். இப்படித்தான் நாம் விசுவாசிக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது தான் குழப்பமடையாத அளவு அல்லது எப்பொழுதும் அசைக்க முடியாத அளவு நம்முடைய விசுவாசம் முழுமையாக நிற்க முடியும், மேலும் நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு பரப்பும் போது இதற்கு ஏற்ப நாம் செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரை எது சந்தோஷப்படுத்துகிறதோ அதற்கு ஏற்ப நாம் விசுவாசிக்க வேண்டும்.
விசுவாசத்தின் எந்த காணிக்கையை அவரிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்? இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் விசுவாசத்தை கொண்டுவர வேண்டும் என்று அவர் உங்களிடம் சொல்லுகிறார் அல்லவா? உங்களிடம் இந்த விசுவாசம் இருக்கிறதா? நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது பின்வரிசையில் இதை விசுவாசிக்கிறீர்களா? "நான் இந்த வழியில் விசுவாசிக்கிறேனோ அல்லது அந்த வழியில் விசுவாசிக்கிறேனோ அது ஒரு பொருட்டு அல்ல, நான் இன்னமும் விசுவாசிக்கிறேன் அதுதான் முக்கியம். சிகப்பு நூலை முதலிலும், இளநீல நிற நூலை பிறகும் இரத்தாம்பர நிற நூலை அதற்கு பிறகும் நான் விசுவாசிக்கிறேன்." இப்படியாக நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் மறுபடியும் விசுவாசிக்க வேண்டும். உங்களுடைய இந்த வரிசையாக இல்லாத விசுவாசத்தை தேவன் அங்கீகரிப்பதேயில்லை.
நம்முடைய தேவன் நியாயந்தீர்ப்பின் கர்த்தரும் சத்தியத்தின் கர்த்தருமாய் இருக்கிறார். இதைப் போல தவறான விசுவாசத்தை அவர் அங்கீகரிப்பதில்லை. விசுவாசத்தினுடைய வரிசை கலந்து இருக்கும் பொழுது, விசுவாசம் சரியாக நிற்க முடியாத காரணத்தால் கர்த்தர் இந்த விசுவாசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவரால் முடியாது. வீட்டைக் கட்டி முடித்த பிறகு அஸ்திபாரத்தை அமைக்க முயற்சி செய்யமுடியாது என்பதைப் போல இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை எடுத்துக் கொண்டதால் தான் பின்னால் அவர் கொல்லப்பட முடிந்தது.
ஆகவே கர்த்தர் நமக்கு என்ன சொல்லி இருக்கிறார் என்பதற்கு ஏற்ப நாம் விசுவாசிக்க வேண்டும். சரியான விசுவாசத்திற்கான மூலைக்கல்லை நடுவது இதுவே. கர்த்தர் நம்மை சரியாகவும் நியாயமாகவும் நீதியாகவும் மீட்டுள்ளபடியால் நம்மீதுள்ள அவருடைய உத்தரவை நம்மால் மாற்றமுடியாது. நாம் சிலுவையினுடைய இரத்தத்தையும் பின்பு இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானத்தையும் விசுவாசித்தால் இந்த விசுவாசமானது தவறு. மேலும் இப்படி விசுவாசிப்பவர்களின் இருதயங்களில் பாவம் இன்னமும் காணப்படுகின்றன. ஏனென்றால் அவர்களுடைய பின்வாங்கிய கட்டளைகளின் விசுவாசத்தின் காரணமாக அவர்களுடைய பாவங்கள் கழுவப்பட வில்லை. இது உண்மையில் அருமையானது. இதை தவிர ஆச்சரியமூட்டும் விசுவாசம் வேறு எதுவும் இல்லை.
மேசியாவிற்கு முன்னர் சிலுவையின் மீதான இயேசுவினுடைய இரத்தத்தை மட்டுமே நம்முள் பலர் விசுவாசித்தோம். இயேசு என்னுடைய எல்லா நியாயத்தீர்ப்பையும் சுமந்தார், இதனால் நாம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளோம். நம்முடைய இரட்சிப்பானது நமக்காக சிலுவையின் மீது மரித்த இயேசுவிடம் இருந்து வந்தது. இதை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் இப்பொழுது இரட்சிக்கப்பட்டுள்ளார்கள் என்று நாம் விசுவாசித்தோம். பிறகு நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்தோம். இதனால் நம்முடைய தவறான விசுவாசத்திற்கு மேலே உண்மையான விசுவாசத்தை சேர்த்துள்ளோம். பின்பு என்ன ஆனது? நம்முடைய பாவங்கள் உண்மையில் மறைய வில்லை. இந்த வகையான விசுவாசம் முழுமையாக அறிவிற்குரியதாகவும், போதனைக் குரியதாகவும் இருக்கிறதே தவிர, நம்முடைய இருதயங்களுக்கான உண்மையான விசுவாசமாய் இருக்க முடியாது.
உங்களுடைய விசுவாசம் இப்படி இருந்தால் நீங்கள் உடனடியாக அதை மாற்ற வேண்டும். முதலில் உங்களுடைய விசுவாசம் சரியாக இருக்க வில்லை என்பதை நீங்கள் தெளிவாக ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு ஒரே சமயத்தில் உங்களுடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டளையை மறுபடியும் மாற்றுவது தான். "இந்த உலகத்திற்கு வந்து யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகனால், நம்முடைய தேவன் ஞானஸ்நானம் எடுத்த பொழுது அவர் என்னுடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார். இயேசு ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டபடியால் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது செலுத்தப் பட்டபடியால், என்னுடைய எல்லா பாவங்களும் கூட இயேசுவின் மீது செலுத்தப் பட்டது. அதன் பிறகு என்னுடைய எல்லாப் பாவங்களின் கூலியை கொடுப்பதற்காக சிலுவையின் மீது அவர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினார்." இப்படி தான் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.
"நான் இந்த வழியில் விசுவாசிக்கிறேனோ அல்லது அந்த வழியில் விசுவாசிக்கிறேனோ யார் கவனிக்கப் போகிறார்கள்? தேவனுடைய இந்த நான்கு ஊழியங்களையும் விசுவாசிப்பது தான் முக்கியமானது. ஏன் இந்த வரிசையில் அவ்வளவு அழுத்தமாகவும் பிடிவாதமாகவும் இருக்க வேண்டும்?" நீங்கள் எந்த வகையிலாவது இந்த யோசனையை இன்னமும் பற்றி இருக்கிறீர்களா? இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதற்கு பிறகு தான் சிலுவையின் மீது மரித்தார் என்ற இந்த உண்மையை நீங்கள் உங்கள் இருதயங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். மேலும் நீங்கள் விசுவாசிக்க வேண்டிய சத்தியம் இது தான்.
பரிசுத்த ஆவியானவர் அநியாயத்தை ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த உலகத்தில் உள்ளது போல நமக்காக மேசியா என்ன செய்துள்ளார் என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது மட்டும் தான் பரிசுத்த ஆவியாகிய கர்த்தர் நம்முடைய விசுவாசத்தை அங்கீகரிக்கிறார். "இயேசுவினுடைய இந்த நான்கு செயல்களையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஆமென். நீங்கள் சரியாக விசுவாசிக்கிறீர்களோ அல்லது பின் வரிசையில் விசுவாசிக்கிறீகளோ, நீங்கள் இந்த வழியில் விசுவாசிக்கிறீகளோ அல்லது அந்த வழியில் விசுவாசிக்கிறீகளோ விசுவாசித்தால் சரி, ஆமென். நீங்கள் என் குழந்தைகள்." என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லவில்லை.
பிதாவாகிய கர்த்தருடைய விருப்பத்திற்கு ஏற்ப மேசியாவாகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்து பிதாவினுடைய கட்டளையைச் செய்தார். இப்படி தான் அவருடைய 33 வருட வாழ்க்கையை இந்த பூமியில் வாழ்ந்தார். இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானத்தின் மூலமாகவும், மரணத்தின் மூலமாகவும், உயிர்தெழுதலின் மூலமாகவும் அவர், அவருடைய வேலையாகிய நம்முடைய மீட்பை நிறைவேற்றி, அதன் பிறகு பரலோகத்திற்கு ஏறினார். அதன் பிறகு அவர் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்பி வைத்தார்.
பாவத்திற்கான மீட்பை பெற்றுள்ள நம்முடைய இருதயங்களில், பரிசுத்த ஆவியாகிய கர்த்தர் குடியிருக்கிறார். மேலும், தேவன் அவர்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தை அவர் அங்கீகரித்தார். இதனால் தான் நாம் நம்முடைய சொந்த எண்ணங்களுக்கு ஏற்ப விசுவாசிக்க முடியாது. நீங்களும் நானும் இயேசுவை விசுவாசித்தாலும், ஏதாவது வகையில் நீங்கள் பின் வரிசையில் தலைகீழாக விசுவாசிப்பதில்லையா? இப்படி இருந்தால் நீங்கள் மறுபடியும் சரியாக விசுவாசிக்க வேண்டும்.
நீங்கள் இதைச் செய்யும் பொழுது பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயங்களில் செயலாற்றுகிறார். நாம் முழுமையாக குறைபாடுடையவர்களாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயங்களை உறுதியாக பற்றிக் கொள்கிறார், நம்முடன் எப்போதும் இருக்கிறார். மேலும் அவருடைய கிருபையை நமக்கு அளிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நமக்கு சக்தியைத் தருகிறார். நமக்கு பலத்தைத் தருகிறார். நம்மை ஆறுதல் படுத்துகிறார். நம்மை ஆசீர்வதிக்கிறார். அவர் நமக்கு அருமையான எதிர்காலத்தை வாக்களிக்கிறார். மேலும் விசுவாசிப்பவர்களாகிய நம்மை, விசுவாசத்திலிருந்து அவருடைய நிரந்தர ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கான தகுதியை இழக்க வைக்காத விசுவாசம் வரை அவர் நம்மை நடத்துகிறார்.
தேவன் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுதோ அல்லது நம்முடைய காணிக்கைகளை அவரிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் சொல்லும் பொழுதோ, இது தான் நமக்கு தேவை. அதாவது நீர் மற்றும் ஆவியினால் அவர் நம்மை மீட்டுள்ளார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருக்கும் எல்லா பொருட்களும் முக்கியமானவை, ஏனென்றால் நீர் மற்றும் ஆவியில் மறுபடியும் பிறக்கும் இரகசியத்தை அவை நமக்கு தொடர்ச்சியாக கூறுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பல பொருட்களின் மூலம் கர்த்தர் நமக்கு ஒன்றைச் சொல்ல நினைக்கிறார் - அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும்.
 
 
நம்முடைய விசுவாசத்திற்கு, அதனுடைய அஸ்திபாரம் மிகவும் முக்கியம்
 
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை முதலில் உறுதியாக அமைக்காமல், நாம் விசுவாசத்தின் வீட்டை கட்டினால், எவ்வளவு காலம் நாம் இயேசுவை விசுவாசிக்கிறோமோ அவ்வளவு அதிக பாவங்களை நாம் சேகரிக்கிறோம். அதிக மனந்திரும்புதலின் ஜெபங்களை நாம் ஏறெடுக்க வேண்டும். மேலும் அதிக ஏமாற்றுக்கார பாவிகளாகிறோம். ஆனால் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தேவன் நம்மை மீட்டுள்ளார் என்ற மீட்பின் பரிசை விசுவாசிக்கும் பொழுது, நாமெல்லோரும் கர்த்தருடைய பிள்ளைகளாக முடியும். அதனால் நாமெல்லோரும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும், மற்றும் நாமெல்லோரும் இப்படி கர்த்தருடைய பிள்ளைகளாக வேண்டும்.
விசுவாசத்தின் அஸ்திபாரத்தை முழுமையாக உடையவர்கள் எப்பொழுதுமே அவர்களுடைய ஆசாரிய தன்மையை பிரகாசிக்கும் ஒளியில் தொடர முடியும். இதனை அவர்கள் குறைபாடுகள் இருக்கும் பொழுது கூட தொடரமுடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசாரிய தன்மையின் வேலைகளான இந்த உலகத்தினுடைய எல்லா மக்களையும் அவர்களுடைய மார்புக்குள் அனைத்துக் கொள்ளுவது, அவர்களுடைய பாவ மீட்பிற்காக சுவிசேஷத்தை ஊழியம் செய்வது, ஆகியவற்றை அவர்களால் நிறைவேற்ற முடியும்.
இதற்கு மாறாக விசுவாசத்தின் அஸ்திபாரம் தெளிவாய் இல்லாதவர்கள் அதிக நேரம் செல்லச் செல்ல அதிக கபடர்கள் ஆகிறார்கள். அவர்கள் கெட்டவர்கள் ஆகிறார்கள். அவர்கள் அதிக ஏமாற்றுகார மதவாதிகளாகிறார்கள். ஒரு மரத்தை அதனுடைய கனியால் நாம் அறியலாம் என்று நம்முடைய தேவன் நமக்குச் சொல்லியுள்ளது போல, இது போன்ற மக்களால் சுமக்கப்படும் பழங்கள் எல்லாம் வெறுப்புள்ளதாகவும், அசுத்தமாகவும், ஏமாற்றக் கூடியதாகவும் இருக்கின்றன. ஆனால் மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் ஒரு போதும் ஏமாற்றுக்காரர்கள் அல்ல. அவர்கள் எல்லோரும் உண்மையானவர்கள். அவர்களிடம் தம் குறைபாடுகள் இருந்தாலும், அவர்களெல்லோரும் உண்மையானவர்கள். அவர்களிடம் தம் குறைபாடுகள் இருந்தாலும், அவர்களெல்லோரும் நேர்மையுள்ளவர்கள். அவர்கள் அவர்களுடைய சொந்த பலவீனங்களையும் தவறான செயல்களையும் அடையாளம் கண்டு கொண்டு, பிரகாசிக்கும் ஒளியின் மையத்தில் வாழ்கிறார்கள். நம்முடைய எல்லாப் பாவங்களையும் அகற்றுவதற்காக நம்முடைய தேவன் ஞானஸ்நானம் பெற்றதாலும், மரித்ததாலும், இதன்மூலம் அவர் நம்முடைய எல்லா பாவங்களையும் மறையச் செய்துள்ளார், என்ற இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமும் நாம் நம்முடைய பாவங்களுக்கான மீட்பைப் பெற்றுள்ளோம். நாம் முழுமையாக இல்லாத பொழுதிலும், நாம் பாவம் செய்தாலும், நாம் பலவீனமாய் இருந்தாலும், நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாய் இருப்பதால் நம்முடைய வாழ்க்கை இன்னமும் பிரகாசமாய் இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய இருதயங்கள் எப்பொழுதும் பாவமில்லாமல் இருக்கின்றன. நம்முடைய குறைபாடுகளால் சில நேரங்களில் நாம் தவறான வழியில் போகலாம், ஆனாலும் மற்றவர்களை அழிவிற்கு அழைத்துச் செல்லும் தவறான வழிக்குப் போவதில்லை. நாம் முழுமையாக இல்லாவிட்டாலும், கர்த்தர் பிரியப்படும் வழியிலே நாம் நடக்கிறோம், படிபடியாக முன்னேறி, நற்செய்தியை இன்னமும் அதிகமாக தாங்கிக் கொண்டு கர்த்தரை மகிழ்ச்சியூட்டும் பாதையில் நாம் செல்லுகிறோம். இயேசு நம்மை சரியாக மீட்டுக் கொண்டதால் இது சாத்தியமாக்கப் பட்டுள்ளது.
நமது மேசியாவும் நமது மீட்பருமான இயேசு கிறிஸ்து இப்படி நம்மை முழுமையாக நான்கு நூல்களினால் இரட்சித்திராவிட்டால் நம்மால் மீட்கப்பட்டிருக்க முடியாது. அவர் நம்மை மீட்டுள்ளபடியால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். மேலும் இதனால் தான் நாம் விசுவாசிக்கிறோம், நற்செய்தியை பரப்புகிறோம், மற்றும் நம்முடைய விசுவாசத்துடன் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம். நம்முடைய விசுவாசத்தின் மூலம் தான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம், நம்முடைய விசுவாசத்தின் மூலம் தான் அவருக்கு ஊழியம் செய்கிறோம். மேலும் நம்முடைய விசுவாசத்தின் மூலம் தான் அவரை பின் தொடர்கிறோம். இப்படிப்பட்ட ஒருவராக நாம் மாறியுள்ளோம். வேறு வார்த்தைகளில் கூறினால், நம்முடைய விசுவாசத்தின் மூலம் கர்த்தரை சந்தோஷப் படுத்துபவர்களாகியுள்ளோம். விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாய் நிற்கக் கூடியவர்களாகியுள்ளோம்.
விசுவாசத்தின் அஸ்திபாரத்தை சரியாக அமைக்காதவர்கள் அதைச் சரியாக அமைக்க வேண்டும். இதனால் தான் எபிரெயர் 6:1-2 சொல்லுகிறது, "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக."
மேலும், இந்த வசனங்கள் என்ன கூறுகின்றன? "இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார்?"; "இந்த ஞானஸ்நானமானது பழைய ஏற்பாட்டின் கைகளை வைப்பதற்கு ஒப்பனையானதா?"; "நாம் மறுபடியும் வாழ்வோமா?"; மேலும் "நிரந்தர நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?"; போன்ற கேள்விகளுக்கு அஸ்திபாரத்தை உறுதியாக அமைக்கச் சொல்லுகிறது. முழுமையான விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதனுடைய அஸ்திபாரத்தை முதலில் இருந்தே உறுதியாக அமைக்கவும் நமக்கு இது சொல்லுகிறது. இதனால் நாம் அசைக்கப்படவோ அல்லது இந்த விஷயங்களால் மறுபடியும் நம்முடைய அஸ்திபாரத்தை அமைக்க கட்டாயப் படுத்தப்படவும் மாட்டோம். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் விசுவாசம் தான் நம்முடைய தேவன் நம்முடைய மீட்பை சரியாக நிறைவேற்றியுள்ளார் என்பதை விசுவாசிக்கும் முழுமையான விசுவாசமாகும். இந்த விசுவாசத்தின் அஸ்திபாரத்தில் நாம் உறுதியாய் நிற்க வேண்டும், மேலும் நாம் அங்கிருந்து ஒட வேண்டும். நாம் விசுவாசத்தின் பந்தயத்தை ஒடவேண்டும்.
எபிரெயரிலிருந்து எடுக்கப் பட்டுள்ள மேலே உள்ள பகுதியை வைத்து, இயேசுவினுடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்கள் அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டன என சொல்ல முடியாது என்றும், விசுவாசத்தின் அஸ்திபாரத்தை மறுபடியும் கட்ட வேண்டாம் என இந்தப் பகுதி நமக்கு சொல்லுகிறது என்றும் கூறி, சில மக்கள் விளக்கம் தருகிறார்கள். ஆனால் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் முதலிலேயே சரியாக கட்டப்பட்டிருந்தால் அதை மறுபடியும் கட்ட வேண்டாம் என்று கர்த்தர் நமக்கும் சொல்லி இருப்பாரா? சரியான விசுவாசத்தின் அஸ்திபாரம் இல்லாதவர்கள் இந்த அஸ்திபாரத்தை அமைக்க வேண்டும் என்றும் மேலும் விசுவாசத்தின் அஸ்திபாரம் சரியாக உள்ளவர்கள் அதை இன்னமும் உறுதியாகவும் பலமாகவும் ஆக்கி கொண்டு முன்னால் ஒட வேண்டும் என்று இந்த பகுதி நமக்கு சொல்லுகிறது.
நம்மை மீட்பதற்காக ஆசரிப்புக் கூடாரத்தை கட்டும்படியும் அவருடைய மக்களிடமிருந்து காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படியும் கர்த்தர் மோசேயிற்கு கட்டளையிட்டார். தங்கம், வெள்ளி, வெண்கலம், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல், ஆட்டு ரோமம், சிகப்பு சாயம் பூசப்பட்ட செம்மறியாட்டு தோல், மர நாயின் தோல் மற்றும் சீத்தீம் மரத்தினுடய மரக்கட்டையை அவரிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார். இந்த பொருட்களில் வைக்கப்பட்டுள்ளது போல உங்களையும் என்னையும் இந்த உலகத்தினுடைய பாவங்களிலிருந்து விடுவித்ததன் மூலம் நம்முடைய தேவன் நமக்கு மீட்பின் பரிசைக் கொடுத்துள்ளார். இந்த வழியில் தான் இந்த காணிக்கைகளை அவரிடத்தில் கொண்டு வர வேண்டும் என்றும், ஆசரிப்புக் கூடாரத்தை கட்ட வேண்டும் என்றும், அதனுடைய பலி முறையை அமைக்க வேண்டும் என்றும், கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு சொன்னார். மேலும் இந்த பலி முறையின் தேவைகளுக்கு ஏற்ப, அவருக்கு அவர்களுடைய பலி காணிக்கைகளை கொடுத்த இஸ்ரவேலர்களின் பாவங்களை மன்னித்தார்.
 
 
இயேசு கிறிஸ்துவால் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ள நம்முடைய மீட்பை, முன்கூறப்பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை விசுவாசிப்பது முழுமையாக்குகிறது
 
இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட சரியான சத்தியத்தை நம்மால் விசுவாசிக்க முடியாவிட்டால், ஒரே சமயத்தில் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை அமைக்காவிட்டால், நம்முடைய விசுவாசம் தொடர்ச்சியாக அசைக்கப்படும். நம்முடைய தேவன் நம்மை முழுமையாக மீட்டுள்ளார் என்ற உண்மையில், அறிவும், உணர்தலும், விசுவாசமும் இல்லாமல், நாமெல்லோரும் நம்முடைய சொந்த முயற்சியின் மூலம் நம்முடைய மீட்பை அடைய முயற்சி செய்யத் தொடங்கிவிடுவோம். இப்படிப்பட்ட விசுவாசம் முழுமையானது அல்ல, ஆனால் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது.
நாம் எபிரெயர் 10:26-31 ஐப் பார்ப்போம். "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப் பாருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே."
சத்தியத்தின் ஞானத்தை பெற்றுக் கொண்ட பிறகு, நாம் வேண்டுமென்றே பாவம் செய்தால், பாவத்திற்கென்று பலி ஒரு போதும் இருப்பதில்லை ஆனால் பய மூட்டும் நியாயதீர்ப்பு மட்டும் தான் இருக்கிறது என்று வசனம் நமக்கு சொல்லுகிறது. இங்கு சத்தியத்தின் ஞானத்தை பெற்றுக் கொண்ட பிறகு, வேண்டும் என்றே பாவம் செய்பவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தெரிந்து கொண்ட பிறகும் கூட அதை விசுவாசிக்காதவர்களுக்கு ஒப்பிடப் படுகிறார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் கர்த்தர் நம்மை மீட்டுள்ளார் என்ற உண்மையையும், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தின் மூலம் நம்மை அவர் மீட்டுள்ளார் என்பதையும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல், ஆட்டு ரோமம், சிகப்பு சாயம் பூசப்பட்ட செம்மறியாட்டு தோல், மற்றும் மர நாயின் தோல் ஆகியவற்றின் மூடிகள் மூலம் அவர் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய கூரையை அமைத்துள்ளார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். நாமெல்லோரும் இந்த விஷயங்களைத் தெளிவாக தெரிந்துக் கொண்டு, நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உறுதியாக அமைக்க வேண்டும். நம்மை முழுமையாக இரட்சிப்பார் என்று நம்முடைய தேவன் நமக்கு வாக்களித்தார்.
மேலும் நேரம் வந்த பொழுது, அவர் மீது நம்முடைய பாவங்களை பெற்றுக் கொள்வதற்கு அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையின் மீது மரித்து, மரணத்தில் இருந்து மறுபடியும் எழுந்து, இதன் மூலம் நம்மை முழுமையாக மீட்டுள்ளார். நம்முடைய மீட்பின் அஸ்திபாரத்தை முழுமையாக அமைத்த இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்ததின் மூலம் நாம் இதனால் சரியாக மீட்கப் பட்டுள்ளோம்.
ஆனால் இந்த சத்தியத்தை அறிந்து அதை விசுவாசிக்க மறுப்பவர்களெல்லோரும் அவர்களுடைய கடைசி நியாயதீர்ப்பின் நாள் வரும் பொழுது கண்டிப்பாக கர்த்தருடைய பயமூட்டும் நியாயதீர்ப்பைச் சந்திப்பார்கள். அவர்களுக்கு பயமூட்டும் கோபம் மட்டுமே இருக்கும் என்றும் வேதாகமம் சொல்லுகிறது. மேலும் அவர்களுடைய நரகத்தின் வேதனை நெருப்பால் பக்குவபடுத்தப்பட்டது போல அவ்வளவு அதிகமாக இருக்கும் என்று அது விளக்குகிறது (மாற்கு 9:49). ஒரு சில பயமூட்டும் நியாயத்தீர்ப்பின் கோபம் மட்டுமே அங்கு இருக்கும் என்று அது நமக்குச் சொல்லுகிறது.
சட்டத்தைக் கடைப்பிடிக்க தவறியது இந்த பயமூட்டும் நியாயத்தீர்ப்பிற்கு அழைத்து செல்லும் என்றால் கர்த்தருடைய குமாரனால் கொடுக்கப் பட்டுள்ள அவர்களுடைய மீட்பை விசுவாசிக்காதவர்களுக்கு நியாயத்தீர்ப்பு எவ்வளவு அதிகமாக இருக்கும்? மனிதனுடைய சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்த தேவனை, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, இந்த உலகத்தினுடைய பாவங்களை சிலுவைக்குச் சுமந்து சென்று, அவருடைய மரணத்தின் மூலம் பாவங்களுக்கான எல்லா தண்டனையையும் பெற்று, மரணத்தில் இருந்து மறுபடியும் எழுந்து இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கும் நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை நாமெல்லோரும் விசுவாசிக்க வேண்டும்.
 
 
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாக அமைக்கப் படவேண்டும்
 
ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்ட வேண்டும் என்று கர்த்தர் ஏன் மோசேயினிடத்தில் கூறினார்? ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்கும் பொழுது, இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனித சரீரத்தில் வந்து, யோவான் ஸ்நானகனிடமிருந்து பெற்றுக் கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது ஏற்றுக் கொண்டு உலகத்தினுடைய பாவங்களை சிலுவைக்கு சுமந்துச் சென்று, அதன் மீது மரித்து, மரணத்திலிருந்து மறுபடியும் எழுந்து, பரலோகத்திற்கு மறுபடியும் சென்று, பிதாவாகிய கர்த்தருடைய் சிங்காசனத்தின் வலது பக்கம் உட்கார்ந்து, இப்பொழுது நம்முடைய நிரந்தரமான கர்த்தராக ஆகியுள்ளார் என்ற சத்தியத்தை அவைத் தெரிவிக்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடியும். அதனுடைய வாசலிருந்து, அதனுடைய தூண்கள் மற்றும் அதனுடைய வெண்கலப் பாத்திரம் வரைக்கும், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லா பொருட்களும் நற்செய்தியின் சத்தியத்தை நமக்கு காண்பிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், முழு பழைய ஏற்பாடும் இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானம், அவருடைய மரணம், அவருடைய அடையாளம் மற்றும் அவருடைய மீட்பின் வேலைகளை நமக்குச் சொல்லுகின்றன.
பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடு வரை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, அதாவது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை பற்றி அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுதெல்லாம் கூறுகிறார்கள். அவர்கள் போதிக்கப்பட்டு அடிக்கடி கேட்டதால் இந்த சத்தியம் எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை நாம் மறந்து விட கூடும். ஆனால் இந்த சத்தியம் எவ்வளவு முக்கியமானது? சாலமோன் ராஜா காலத்தில் தங்கமும், வெள்ளியும் அதிகமாக இருந்ததால், அவை கற்களைப் போல கருதப்பட்டது. இப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்வது போல, கர்த்தருடைய ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் இந்த சத்தியத்தின் வார்த்தையை நாம் கேட்பதால் நாம் சில நேரங்களில் இந்த மீட்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கர்த்தருடைய ஆலயத்திற்கு வெளியில் இந்த உண்மையை எங்கும் கேட்கமுடியாது என்றும், இந்த இரட்சிப்பு இல்லாமல் யாரும் மீட்க்கப் படமுடியாது என்றும், விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உறுதியாக அமைக்க முடியாது என்றும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்பு மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் ஆகிய நான்கு நூல்களினால் நம்முடைய தேவன் நம்மை முழுமையாக மீட்டு நம் விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உறுதியாக அமைத்துள்ளார் என்ற உண்மையை நீங்களும் நானும் மீட்க்கப்பட்டுள்ள விசுவாசமானது விசுவாசிக்கிறது. நாமெல்லோரும் இதை நம்முடைய இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும் என்று நான் மறுபடியும் ஒரு முறை அறிவுறுத்துகிறேன். கர்த்தர் நமக்கு வாக்களித்தார், மேலும் அவர் நமக்கு வாக்களித்தது போல, இந்த உலகத்திற்கு ஒரு பெண்ணின் வித்தாக வந்தார் (ஆதியாகமம் 3:15). அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்து கொண்டு, சிலுவையின் மீது நம்முடைய எல்லா பாவங்களுக்கான தன்டனையைப் பெற்று, மரணத்தில் இருந்து மறுபடியும் எழுந்து இதன் மூலம் நம்மை சரியாக மீட்டுள்ளார். இந்த சத்தியம் விளக்குவதற்கும் புரிந்து கொள்வதற்கும் சுலபமான சத்தியமாய் இருப்பதால், நாம் இந்த நற்செய்தியை உலகம் முழுவதிலும் எல்லா நாட்களிலும் போதிக்கலாம். உண்மையை இன்னமும் அறியாத பல பாவிகள் இருக்கிறார்கள், இருப்பினும் இந்த சத்தியத்தை அறியாதவர்களை விட கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தும் கூட விசுவாசிக்காதவர்கள், இன்னமும் அதிக பரிதாபமானவர்கள்.
உங்களுடைய பாவங்களுக்கான மீட்பை நீங்கள் பெற்றிருந்தாலும், உங்களுடைய எண்ணங்கள் இன்னமும் கெட்டதாக இருக்கும். ஆனால் உங்களுடைய இருதயங்கள் தாழ்மையாக மாறியுள்ளது. ஆனால் இப்படி இல்லாத ஏமாற்றுக்காரர்கள் வெளிதோற்றத்தில் தம்மை சாதுவானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும், ஒவ்வொரு நாளும் கர்த்தரையும் எண்ணற்ற மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்களுக்கு உள்ளே அவ்வளவு தீமை இருக்கிறது. நீங்களும் நானும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உறுதியாக அமைக்க வேண்டும் நம்முடைய தேவன் நமக்கு இவ்வளவு உறுதியாக அமைத்துள்ள இரட்சிப்பின் மீது அதை விசுவாசித்து நாம் கர்த்தருக்கு முன்பாக நிற்க வேண்டும்.
 
 
ஆசரிப்புக் கூடார பொருட்களைப் போன்ற உறுதியான விசுவாசம்
 
இப்படிப்பட்ட காணிக்கைகளை கொண்டு வந்து அவருடைய ஆசரிப்புக் கூடாரத்தை கட்ட வேண்டும் என்று கர்த்தர் நமக்குச் சொன்னார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து இதன் மூலம் நம்மை ஆவிக்குரியதாக மீட்டுள்ளார் என்பதை விசுவாசிக்கும் விசுவாசத்தின் மக்களாக நீங்களும் நானும் ஆக வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்திற்கு பயன் படுத்தப்பட்டுள்ள கட்டிட பொருட்களை போல விசுவாசத்தை பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக நாம் உறுதியாய் நிற்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த வகையான விசுவாசம் உண்மையில் உங்களிடம் இருக்கிறதா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இன்னமும் கர்த்தருடைய ஆலயத்தினால் போதிக்கப்படுகிறது. இது உண்மையான விசுவாசத்தின் அஸ்திபாரமாய் இருப்பதினால், இதை போதுமான அளவு என்னால் வலியுறுத்த முடியாது.
இந்த உலகத்தினுடைய பல ஆலயங்களும் பிரிவுகளும், இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்து கொண்டார் என்ற சத்தியத்தை இன்னமும் அறியாமலிருக்கின்றன. மேலும் இதற்கு பதிலாக சிலுவையின் மீதான இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கின்றன. இந்த சூழ்நிலைகளிலும் கூட, நம்முடைய தேவன் இன்னமும் நாம் சத்தியத்தை கண்டுபிடிக்க அனுமதித்துள்ளார். யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றதினலேயே அவர் சிலுவையின் மீது ஆணியடித்து அறையப்பட்டார். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதால் தான் அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
இதைப் போல சிலுவையினுடைய இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலம் பாவத்திற்கான இரட்சிப்பை பெற்று கொண்டுள்ளதாக கூறுபவர்களின் விசுவாசம் தவறான விசுவாசமாய் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாக இருந்தாலும் அவ தானாகவே விழுந்து விடும். இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று எவ்வளவு சத்தமான குரலில் மக்கள் கூட்டத்திற்கு சோர்வில்லாமல் போதித்தாலும், அது பொருட்படுத்தப் படாமல் சிலுவையினுடைய இரத்தத்தை மட்டும் விசுவாசிக்கும் அவர்களுடைய விசுவாசமானது மனந்திரும்புதலின் ஜெபங்களை மட்டுமே ஏறெடுக்கிறது. மேலும் அவர்களுடைய சொந்த பாவத்தின் பிரச்சினையைக் கூட தீர்க்கமுடியாது இது மழை பெய்யும் பொழுதும், காற்று வீசும் பொழுதும், புயல் வரும் பொழுதும், விழுந்து விடக் கூடிய வெடிப்புள்ள அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டுள்ளதாக இருக்கிறது.
இயேசுவை நான் விசுவாசிக்கத் தொடங்கி 10 வருடங்களுக்கு மேல் இயேசுவினுடைய ஞானஸ்நானத்தைப் பற்றி விளக்கமாக கேட்டதில்லை. இருப்பினும் இயேசு அவருடைய சத்தியத்தின் வார்த்தை மூலம் என்னைச் சந்தித்தார். மேலும் நான் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறக்க முடிந்தது. இப்பொழுது உலகம் முழுவதிலும் சத்தியத்தைத் தேடிக் கொண்டு ஆனால் அதை இன்னமும் அடையாத பல மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்கள் எல்லோரிடமும் பேச வேண்டும், இதனால் நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை அவர்கள் கேட்கக்கூடும். மேலும் அவர்களுடைய இருதயங்களில் இதை விசுவாசிப்பதின் மூலம் அவர்களுடைய பாவங்களுக்கான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மறுபடியும் பிறப்பதற்கு முன்னால், நீங்களும் கூட மத வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள். அந்த சமயத்தில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள். அது மட்டுமல்ல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையோ அல்லது இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொழுது நம்முடைய பாவங்கள் அவருக்குள் செலுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் நீங்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியம் இருப்பது போலவே அதை தெரிந்துக் கொண்டு விசுவாசிப்பது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாய் இருக்கிறது. விசுவாசத்தின் அஸ்திபாரம் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அமைக்கப்படும் பொழுது தான் நாமெல்லோரும் நம்முடைய விசுவாசத்தில் உறுதியாகவும் பலமாகவும் நிற்க முடியும். நீங்கள் இது வரை இப்படி விசுவாசிக்கவில்லை என்றால் இன்னமும் தாமதமாகவில்லை, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இப்பொழுதே இப்படி விசுவாசிக்க வேண்டும். நீங்கள் இப்படி விசுவாசிக்கும் பொழுது மட்டுமே உங்களால் முழுமையாக மீட்கப்படவும் உங்களுடைய அஸ்திபாரத்தை உறுதியாக அமைக்கவும், இந்த அஸ்திபாரத்தின் மீது உங்களுடைய விசுவாசத்தை அமைக்கவும் முடியும்.
 
 
கர்த்தருடைய ஆலயத்தில் இருப்பவர்களும் விசுவாசத்தின் அஸ்திபாரத்தை உறுதியாய் அமைக்க வேண்டும்
 
"இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப் படுவான்" என்று மத்தேயு 24:40 சொல்லுகிறது. நாமெல்லோரும் ஒரே சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும் என்று போதித்து, கர்த்தருடைய ஆலயத்தில் ஒன்றாக அதே நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது, நம்முள் சிலர் விடப்பட்டு விட்டால் அதை விட எது அதிக வருந்ததக்கதாக இருக்கும்?
கர்த்தருடைய வார்த்தை அறிவுடையதாகவும் பணிவாகவும் இருப்பதால், கட்டாயத்தினால் யார் மீதாவது விசுவாசத்தைத் திணிக்க முடியாது. உங்களுக்கு போதிக்கப்பட்டுள்ள கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் இப்படி பணிவாய் கேட்கும் பொழுது நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கிறீர்கள் என்ற உண்மையை மனதில் மையப்படுத்தி இதை சரியான மனதுடன் விசுவாசிக்க வேண்டும். மோசே இஸ்ரவேல் மக்களுக்கு என்ன சொன்னான் என்பதை அவர்கள் கேட்ட பொழுது அவர்கள் அதை அவனுடைய சொந்த வார்த்தைகளாக கருதாமல் கர்த்தருடைய வார்த்தையாக கருதினர். அதுபோல கர்த்தரின் வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு சொல்லும் பொழுது கர்த்தருடைய இந்த வார்த்தைக்கு ஏற்ப நீங்கள் விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். நீங்கள் வார்த்தையை அமைதியுடன் கருத வேண்டும். மேலும் அது உங்களுக்கு என்ன சொல்லுகிறதோ அதனை விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையை பற்றிய தம்முடைய சரியான மனநிலைக்காக பெரோயா விசுவாசிகள் வேதாகமத்தில் பாராட்டப் பட்டார்கள். பெரோயாவில் இருக்கும் விசுவாசிகள், "மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்" (அப்போஸ்தலர் 17:11). சுருக்கமாக கூறினால், அவர்கள் அவருடைய வார்த்தையை அவர்களுக்கு போதிக்கப்பட்டதைப் போலவே விசுவாசித்தார்கள்.
உண்மையான விசுவாசமானது கர்த்தருடைய வார்த்தையை தேடும் நியாயமான மற்றும் சரியான மனநிலை உடைய இருதயத்தில் இருந்து வருகிறது. உங்கள் விருப்பத்திற்கு எதிராக விசுவாசிக்க கட்டாயப் படுத்துவது ஏதாவது அர்த்தமாகுமா? ஒருவர், வேறொருவரை விசுவாசிக்க கட்டாயப்படுத்துவாரானால் இது உண்மையில் முழுமையாக பயனற்றதாக இருக்கும். ஏனென்றால் இப்படி கட்டாயப்படுத்தப்பட்ட ஒருவரும் அவனுக்கோ/அவளுக்கோ விசுவாசிக்க வேண்டும் என்று சொன்னதை அவசியமாக விசுவாசிக்க மாட்டார்கள். கர்த்தருக்கு முன்பதாக ஒருவர் அவனுடைய/அவளுடைய சுதந்திர விருப்பத்தில் என்ன விசுவாசிக்கிறார் என்பதையே எல்லா பொருட்களும் சார்ந்துள்ளது. அவனுக்கோ/அவளுக்கோ அதே கதை மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டும் கூட, அவர் விசுவாசிக்கவில்லை என்றால் நரகத்தில் முடிவதை தவிர இந்த நபருக்கு வேறுவழியில்லை.
இதனால், இந்த உலகம் முழுவதும் இருக்கும் எல்லாப் பாவிகளும் நமது பரிதாபத்தை பெறுகின்றார்கள். ஆனால் நாமெல்லோரும் கர்த்தருடைய ஆலயத்தின் ஒரே கூரைக்குள் இருந்தும் கூட அவருடைய வார்த்தையில் இருப்பதைப் போலவே நம்முள் சிலர் விசுவாசிக்க வில்லை என்றால், அவர்கள் இன்னமும் அதிக பரிதாபமானவர்களாய் இருக்கிறார்கள். ஒரே கர்த்தருடைய ஆலயத்தில் நம்முடன் சரீர பூர்வமாக அவர்கள் இருந்தும் கூட நரகத்தில் முடிந்து போகிற நம்மை விட அதிக பரிதாபமானவர்கள் யாராக இருக்க முடியும்?
இயேசுவிற்கு பன்னிரெண்டு சீடர்கள் இருந்தார்கள், அவர்களுள் யூதாஸ் மட்டுமே இயேசுவை மேசியா என்றும் மீட்பரென்றும் விசுவாசிக்கவில்லை. இதனால் யூதாஸ் இயேசுவை எப்பொழுதுமே போதகர் என்று அழைத்தான். பேதுருவும் சில வேளைகளில் இயேசுவை போதகர் என்று தான் அழைத்தான். ஆனால் அவன் இயேசுவை முடிவில் விசுவாசிக்கத் தொடங்கி, "தேவனே, நீர் தான் கிறிஸ்துவும், கர்த்தருடைய மகனுமாய் இருக்கிறீர். நீர் தான் கர்த்தருடைய மைந்தன். என்னுடைய பாவங்களை மறையச் செய்ய வந்த மீட்பர். நீர் தான் மீட்பின் கர்த்தர்." என்று அறிக்கையிட்டான்.
வேறு வார்த்தைகளில் கூறினால், பேதுருவின் விசுவாசம் யூதாஸின் விசுவாசத்தில் இருந்து வேறுப்பட்டிருந்தது. யூதாஸ் இயேசுவைக் காட்டிகொடுத்த பிறகு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். யூதாஸ் மற்ற பதினொரு சீடர்களிடம் இருந்திருந்தாலும், இறுதியில் இயேசு கிறிஸ்து உண்மையில் யார் என்பதை அடையாளங்கண்டு கொள்ள தவறி, இதனால் நரகத்தில் முடிந்தான். இதற்கு எதிராக பேதுரு அதிக குறைகளையுடைய, பொறுமையில்லாத மனிதனாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவை அடையாளம் கண்டு கொண்டதாலும், அவனுடைய சொந்த மீட்பராக அவரை விசுவாசித்ததாலும் மீட்கப்பட்டான்.
இதைப் போல ஒருவர் சத்தியத்தை அறிந்து, அவனுடைய/அவளுடைய இருதயத்தில் விசுவாசிக்கிறாரா இல்லையா என்பதை பொருத்து இரட்சிப்பு அமைந்திருக்கிறது. அவனோ/அவளோ சத்தியத்தை அறிந்தும் கூட அதை விசுவாசிக்கவில்லை என்றால், அவர்கள் இன்னமும் அதிகமான தண்டனைகளை சந்திப்பார்கள் (லூக்கா 12:48). இதனால் தான் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாகவும் நேராகவும் இருக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லுகிறார்.
 
 
நம்முடைய விசுவாசம் எப்படி இருக்கிறது?
 
நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் இப்பொழுது உறுதியாக்கப்பட்டுள்ளதா? அது உறுதியாக இருக்கிறதா? தேவன் உங்களை இரட்சித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீர் மற்றும் ஆவியின் மூலம் நம்முடைய தேவன் நம்மை இரட்சித்துள்ளார். நம்முடைய பிரிவு மட்டும் போதிக்கும் வேறுப்பட்ட போதனை இதுவல்ல. கர்த்தர் பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் செய்ததும், புதிய ஏற்பாட்டில் இயேசு நிறைவேற்றியதுமாய் இது இருக்கிறது. அதாவது இப்படித் தான் கிறிஸ்து நம்மை மீட்டார் என்பதாய் இருக்கிறது.
மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்து அவருடைய ஞானஸ்நானத்தின் (இளநீல நிற நூல்) மூலம் இந்த உலகத்தினுடைய பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு இந்தப் பாவங்களை சிலுவைக்கு எடுத்துச் சென்று, மரித்து (சிகப்பு நிற நூல்), மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்து, இதன் மூலம் நம்மை மீட்டுள்ள இயேசு தான் ராஜாதி ராஜா (இரத்தாம்பர நூல்). பழைய ஏற்பாட்டில் உள்ளது போல செய்வார் என்று அவர் வாக்களித்துள்ளார். மேலும் புதிய ஏற்பாட்டில் இந்த சத்தியத்தை நிறை வேற்றியதின் மூலம் உண்மையில் நம்மை மீட்டுள்ளார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதைத் தவிர உறுதியான விசுவாசத்தின் அஸ்திபாரத்தை அமைப்பது வேறு எதுவும் இல்லை.
உலகம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் அநேகருக்கு அவர்களுடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் மெல்லியதாகவே இருக்கிறது. இப்பொழுது கிடைக்கும் பல கிறிஸ்தவ புத்தகங்களை படிப்பதின் மூலம், மக்களுக்கு சரியான விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும். இந்த புத்தகங்களின் எழுத்தாளர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தின் தலைவர்களாக இருக்கக்கூடும் மேலும் அவர்களுடைய புத்தகங்களை படிப்பதின் மூலம், அவர்களுக்கு சத்தியத்தில் சரியான ஞானம் இருக்கிறதா, இல்லையா என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அவனுக்கோ/அவளுக்கோ சத்தியத்தைப் பற்றி தெரிந்த அளவிற்கு இந்த தலைவர்களில் ஒருவருக்கு தெரியாமல் இருந்தாலோ அல்லது விசுவாசிக்காமல் இருந்தாலோ, இந்த தலைவரை பின்பற்றுபவர்கள் எல்லோரும் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள். பல ஆயிர மக்களில் ஒருவர் என்று குறைந்த அளவு மக்களுக்கே சத்தியத்தைப் பற்றி தெரியும் என்பது தான் சோகமான உண்மை. இதனால் சத்தியத்தை அறிந்த சிலர் நற்செய்தியை முழு உலகம் முழுவதிலும் உண்மையாய் பரப்ப வேண்டும்.
கர்த்தர் நம் மூலம் செயலாற்றுகிறார், நீங்களும் நானும் நற்செய்தியை போதிப்பதை தடுக்க முடியாது. உலகம் முழுவதிலும் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்காமல் இருப்பது கர்த்தருக்கு முன் பெரிய பாவம் செய்வதற்கு ஒப்பாயிருக்கிறது. உண்மையில் நாம் இந்த வேலையை விசுவாசத்துடன் தாங்கி பின் தொடர வில்லை என்றால் கர்த்தருக்கு முன்பாக பெரிய பாவம் செய்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தடுக்க முடியும் என்று நமக்குத் தெரிந்தாலும் மக்களை நரகத்திற்கு அனுப்பும் பாவம் இது தான். சத்தியத்தை அறிந்த நாம், நம்முடைய வாயை மூடி வைத்ததால், மக்களை அவர்களுடைய அறியாமையால் நரகத்தில் அனுப்பிய மன்னிக்க முடியாத பாவமாய் இது இருக்கிறது.
நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நாம் நிறைவேற்றவில்லை என்றால், இந்த மக்கள் நம்மை எதிர்பார்கள், ஏனென்றால் இது நம்முடைய அவசியமான வேலையாய் இருக்கிறது. "காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப் பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்" (எசேக்கியேல் 33:6), என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. முதலில் அறிந்து முதலில் விசுவாசித்த நாம் இந்த காவல்காரனின் வேலையைச் செய்ய வேண்டும்.
இந்த நற்செய்தியை நமக்கு கொடுத்ததற்காகவும் இந்த சத்தியத்தை நாம் அறிந்து கொள்ள உதவியதற்காகவும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இந்த உலகத்தில் இந்த சத்தியத்தை அறிந்து, இந்த நற்செய்தியை விசுவாசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராக நாம் இருக்கிறோம் என்பதை நான் உணரும்பொழுது, நான் அவருக்கு இன்னமும் அதிகமாக நன்றி செலுத்துகிறேன். இந்த உலகம் முழுவதிலும் பல போதகர்களுக்கும் பாமர விசுவாசிகளுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாங்கள் போதித்துள்ளோம். ஆனால் இந்த நற்செய்தியை முன்பு உண்மையில் தெரிந்து கொண்டு விசுவாசித்த யாரும் இல்லை என்ற உண்மையை ஒவ்வொரு நாளும் நாங்கள் உறுதி செய்து கொண்டோம். எங்கள் மூலம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினுடைய சத்தியத்தின் போதகர்கள், உலகம் முழுவதிலும் தோன்றி கொண்டிருக்கிறார்கள். எங்களைப் போல அவர்களும் கூட விசுவாசித்தின் உறுதியான அஸ்திபாரத்தை உடையவர்களாக இருந்து, இந்த உறுதியான விசுவாசத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நற்செய்தியை பரப்பக்கூடிய இது போன்ற மக்கள் அநேகர் இருந்தால், நாங்கள் சற்று எளிதாக சுவாசித்து, நற்செய்தியைப் போதிப்பதிலிருந்து சற்று ஒய்வு எடுக்க முடியும். ஆனால், கவலைப்படும்படி இந்த உலகத்தில் இந்த விசுவாசத்தை தெரிந்து விசுவாசிக்கும் அநேக மக்கள் இன்னமும் இல்லை. இந்த உலகத்தினுடைய வரலாற்றில், சீர்திருத்தத்தின் சாதனைகளை பலர் அதிகமாக மதிப்பிட்டுள்ளார்கள். நாம் இதை விளக்கமாக ஆராயும் பொழுது சீர்த்திருத்தத்தின் பொழுது வேதாகம அஸ்திபாரத்தினுடைய முதல் இலக்கை சீர்த்திருத்தவாதிகள் மாற்றி வைத்திருந்தார்கள் என்பதை நாம் கண்டு பிடிக்க முடியும். மற்றும் அதை பின் தொடர்ந்த எல்லா பொருளுமே மாற்றி வைக்கப்பட்டிருந்தது. இந்த தவறுகள் திருத்தப்பட்டது கருதப்படாமல் இருந்தும், முதலாம் இலக்கு இன்னமும் மாற்றி வைக்கப்பட்டிருந்தும், இது இன்னமும் குறைவுடையதாகவே இருக்கிறது. இதைப் போல கிறிஸ்தவத்தின் வரலாறும் மாற்றி எழுதப்பட வேண்டும்.
நீங்கள் எல்லோரும் உங்களுடைய உறுதியான விசுவாசத்தின் அஸ்திபாரத்தினால் கர்த்தருக்கு முன்பாக நிற்பீர்கள் என்றும், இந்த விசுவாசத்தின் அஸ்திபாரத்தின் மேல் உண்மையான நற்செய்தியை தாங்கும் நோக்கத்திற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள் என்றும் நான் விசுவாசித்து ஜெபிக்கிறேன். நீங்கள் நற்செய்திக்காக வாழும் பொழுது, உங்களுடைய இருதயங்கள் இயற்கையாக சந்தோஷத்தால் நிரப்பப்படும். ஒருவர் நர்செய்திக்காக வாழும் பொழுது அவனுடைய/அவளுடைய இருதயம் ஆவிக்குரிய ஒன்றாக மாற்றப்படுகிறது. மேலும் உங்களுடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் நிரம்பி அவற்றில் வேலையும் செய்யும் பொழுது, அவை எல்லாம் சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.
ஆனால், நீங்கள் நற்செய்திக்காக வாழாமல், பாவத்தின் மீட்பை பெற்றுக் கொண்டும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்துக் கொண்டும், உங்களுடைய மாம்சங்களின் வாஞ்சைகளை மட்டும் ஏற்றுக்கொள்வீர்களானால் பின்பு நீங்கள் பொருளற்ற, வெற்று வாழ்க்கையில் முடித்துக் கொள்வீர்கள்.
இந்த விலைமதிப்பற்ற நற்செய்தியையும், நம்முடைய மீட்பை இலவசமாக நமக்கு கொடுத்ததற்காகவும். கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் எல்லோரும் உங்களுடைய விசுவாசத்தை மறுபடியும் ஒரு முறை ஆராய்ந்து, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் சரியான இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பது என்னுடைய ஜெபமும் விசுவாசமுமாயிருக்கிறது.