• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-9] தகன பலிபீடத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விசுவாசம் (யாத்திராகமம் 27:1-8)

2021.04.24 29
(யாத்திராகமம் 27:1-8)
"ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக. அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும். அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக. வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி, அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக. பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக. பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும். மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்."
 
 
தகன பலி பீடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விசுவாசத்தை பற்றி நான் கூற விரும்புகிறேன். இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கர்த்தருடைய சட்டமும் கட்டளைகளுமான 613 உடன்படிக்கைகளை உடைத்த பொழுது, அவர்கள் தங்களுடைய பாவங்களை அடையாளம் கண்டு கொண்ட பொழுது, கர்த்தரால் அமைக்கப்பட்டிருந்த பலி முறைக்கு ஏற்ப அவர்கள் அவருக்கு அவர்களுடைய பரிசுத்தமான பலிகளை கொடுத்தார்கள். தகன பலி பீடத்தில் தான் அவர்கள் இந்த பலிகளை கொடுத்தார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் இஸ்ரவேல் மக்கள், பரிசுத்தமான பலி மிருகத்தின் மேல் தங்களுடைய கைகளை வைத்து அதனுடைய தொண்டையை அறுத்து, அதிலிருந்து அதனுடைய இரத்தத்தை எடுத்து, தகன பலி பீடத்தின் கொம்புகளின் மேல் சிறிது இரத்தத்தை ஊற்றி, மீதியுள்ள இரத்தத்தை பூமியின் மீது கொட்டி, இந்த பலியினுடைய மாமிசத்தை பலி பீடத்தின் மேல் எரிப்பதின் மூலம் அவர்களுடைய பாவங்களுக்கான மீட்பைப் பெற்றுக்கொண்டார்கள்.
 
 
தகன பலி பீடத்தின் ஆவிக்குரிய பொருள் என்ன?
 
2.25 மீட்டர் (7.5 அடி) நீளமும், அகலமும் மற்றும் 1.35 மீட்டர் (4.5 அடி) உயரமும் கொண்ட தகன பலி பீடமானது சீத்தீம்மரத்தினுடைய கட்டையால் அமைக்கப்பட்டு வெண்கலத்தால் பூசப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் இந்த தகன பலி பீடத்தை பார்த்த பொழுதெல்லாம் அவர்களுடைய நியாயதீர்ப்பில் பிடிப்பட்டுள்ளவர்களாகவும், அவர்களுடைய தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது இருப்பவர்கள் அவர்கள் தான் என்றும் அடையாளம் கண்டு கொண்டார்கள். பலி மிருகம் மரணத்திற்கு தள்ளப்பட்டது போல, அவர்களும் அவர்களுடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். மேசியா இந்த உலகத்திற்கு வந்து தண்டிக்கப்படுவதின் மூலம் அவர்களுடைய பாவங்களை அகற்றி, அவர்களுடைய பாவங்களுக்காக பலி காணிக்கையை போல மரணத்திற்கு தள்ளப்படுவார்கள் என விசுவாசிக்கத் தொடங்கினார்கள்.
தகன பலி பீடமானது நம்முடைய மீட்பரான இயேசு கிறிஸ்துவின் நிழலாய் இருந்தது. பலி மிருகமானது கைகளை வைப்பதின் மூலமும் அதனுடைய இரத்தத்தை சிந்துவதின் மூலமும் பலியாக்கப்பட்டது போல, இயேசு கிறிஸ்து நம்மிடத்திற்கு தேவ குமாரனாக வந்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார். பழைய ஏற்பாட்டினுடைய பலி காணிக்கைகள் கைகளை வைப்பதின் மூலமும் அவற்றினுடைய இரத்தத்தை சிந்துவதின் மூலமும் எல்லா பாவங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது போல, யோவானால் ஞானஸ்நானம் பெற்று, உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தப்பட்டதன் மூலம் ஏற்றுக்கொண்டார். மேலும் சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தை சிந்தியதின் மூலம் இந்த பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
இந்த வகையில் இயேசு கிறிஸ்து அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் மீது எடுத்துக்கொண்டு, சிலுவையின் மீது மரித்து மரித்தோரில் இருந்து மீண்டும் எழுந்து, இதன் மூலம் இரட்சித்துள்ளார் என்று தகன பலி பீடம் நமக்கு தெரிவிக்கிறது.
 
 
இஸ்ரவேலர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட தகன பலி பீடத்தில் அவர்களுடைய பலி காணிக்கைகளைத் தர வேண்டியிருந்தது
 
லேவியராகமம் புத்தகத்தின் 4-ஆம் அதிகாரத்தைப் பார்க்கும் பொழுது அபிஷேகிக்கப்பட்ட ஆசாரியர்கள் இஸ்ரவேலின் முழுச் சபை, அரசன், அல்லது பொது மக்கள் யாராகிலும் எப்பொழுதாவது பாவம் செய்தால் நாம் கர்த்தரிடத்தில் பலி காணிக்கையை கொண்டு வந்து, அதனுடைய தலை மீது அவனுடைய கைகளை வைத்து, அதனைக் கொன்று அதனுடைய இரத்தத்தை எடுத்து, அதனைத் தகன பலி பீடத்திற்கு எடுத்துச் சென்று, கர்த்தருக்கு அதை படைப்பதின் மூலம் தான் அவர்களுடைய பாவங்களுக்கான மீட்பை பெற்றுக் கொண்டார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
இஸ்ரவேலர்கள், தங்களுடைய பலி காணிக்கைகளை ஒவ்வொரு நாளும் இந்த தகன பலி பீடத்தில் கொடுத்ததாலும் ஒரு நாளும் கூட இதற்கு வேலையில்லாமல் கடக்காததாலும் இது ஒரு உண்மையான விஷயமாய் இருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக பரிசுத்தமான மிருகத்தை தயார் செய்து, அவர்களுடைய பலி காணிக்கையாக தகன பலி பீடத்தின் மேல் அதை கர்த்தருக்கு கொடுத்தார்கள். பாவிகள் பலி மிருகத்தின் தலையின் மீது தங்களுடைய கைகளை வைப்பதின் மூலம் தங்களுடைய எல்லாப் பாவங்களையும் அதற்குள் செலுத்தினார்கள், மேலும் இந்த பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பாக, அதனுடைய தொண்டையை அறுத்து இரத்தத்தை எடுத்தார்கள். பின்பு ஆசாரியன் இந்த பலி காணிக்கையின் இரத்தத்தை தகன பலி பீடத்தின் கொம்புகளில் ஊற்றி, இதனுடைய மாமிசத்தையும், கொழுப்பையும் பீடத்தின் மீது எரித்தான். இப்படித் தான் இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றார்கள்.
பாவம் செய்தது யார் என்று கருதப்படாமல், இஸ்ரவேல் மக்களின் தலைவராக இருந்தாலும், முழு சபையாக இருந்தாலும், அல்லது பொது மக்கள் யாராக இருந்தாலும், கன்று, ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பலி மிருகத்தை கொண்டு வந்து, அதைக் கர்த்தருக்கு பலி காணிக்கையாக கொடுத்து அவர்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.
பாவிகள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அதைக் கொன்று அதனுடைய இரத்தத்தை தகன பலி பீடத்தின் கொம்புகளின் மேல் போட்டு, மீதி இருக்கும் இரத்தத்தை நிலத்தின் மீது ஊற்றி, மேலும் இதன் மூலம் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க கூடிய பலி காணிக்கையின் கொழுப்பை எரிக்க வேண்டும். இதனால், பலர் அவர்களுடைய பலி மிருகங்களை தகன பலி பீடத்திற்கு கொண்டு வந்து, அவர்களுடைய கைகளை பலிகளின் தலையின் மீது வைத்து அதனுடைய இரத்தத்தை எடுத்து ஆசாரியர்களுக்கு அதைக் கொடுக்க வேண்டியிருந்தது.
தகன பலி பீடத்தில் காணிக்கைகள் கொடுக்கப்படும் பொழுது, இந்த பலி காணிக்கைகள் பரிசுத்தமாக இருக்க வேண்டியிருந்தது. பாவிகள் கர்த்தருக்கு காணிக்கைகள் கொடுத்த பொழுது கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மிருகத்தை கொண்டுவர வேண்டும் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த பரிசுத்தமான பலி காணிக்கையின் மீது அவர்களுடைய கைகளை வைப்பதின் மூலம் மட்டுமே அவர்களுடைய பாவங்கள் அதற்குள் செலுத்தப்பட்டது. இதைப் போல பலி காணிக்கை கொடுக்கும் பொழுது ஒன்றும் விடப்படக்கூடாது.
வழக்கமாக பாவம் செய்த ஒருவர், தன்னுடைய கைகளை அவருடைய பலி மிருகத்தின் தலையின்மீது வைக்கவேண்டும். ஆனால் முழு இஸ்ரவேல் கூட்டத்தினர் பாவம் செய்த பொழுது அதனுடைய மூத்த பிரதிநிதிகள் பலி காணிக்கையின் மீது அவர்களுடைய கைகளை வைக்க வேண்டும் (லேவியராகமம் 4:15). கைகளை தலையின் மீது வைக்கப்பட்ட பலி மிருகமானது, அதனுடைய கழுத்து அறுபட்டு, இரத்தத்தை எடுத்தப்படி கொல்லப்படவேண்டும். மேலும் இறுதியாக பலி பீடத்தின் மேலே சுட்டெரிக்கப்பட வேண்டும்.
எரிந்து கொண்டிருக்கும் மாமிசம், கொழுப்பு மற்றும் மரக்கட்டையினுடைய புகை, தகன பலி பீடத்தைச் சுற்றியுள்ள இடத்தை எப்பொழுதும் நிரப்பியது. மேலும் அதனுடைய கொம்புகளும், அதற்கு கீழே இருந்த நிலமும் பலி மிருகங்களின் இரத்தத்தால் நிறைந்திருந்தது. சர்வாங்க தகன பலிபீடமானது பாவ மன்னிப்பின் இடமாயிருந்தது. இங்கு தான் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை கழுவுவதற்கு கர்த்தருக்கு பலி காணிக்கைகள் கொடுக்கப்பட்டன.
புகை எப்பொழுதும் எழும்பிக் கொண்டிருக்கும், இந்த தகன பலி பீடமானது 2.25 மீட்டர் (7.5 அடி) அகலமும் மற்றும் 1.35 மீட்டர் (4.5 அடி) உயரமும் உடைய சதுரமாய் இருந்தது. வெண்கலத் தீத்தட்டின் தொடர்ச்சி அதனுடைய நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அதனுடைய தீத்தட்டில் இருந்த மரக்கட்டையின் நெருப்பால் சுடப்பட்ட காணிக்கைகளிலிருந்து புகை தொடர்ச்சியாக எழும்பி கொண்டிருந்தது. இதைப் போல, காணிக்கைகள் எரிக்கப்பட்டு, கர்த்தருக்கு கொடுக்கப்பட்ட இடமானது தகன பலி பீடமாய் இருந்தது.
 
 
தகன பலி பீடத்தின் பாத்திரங்கள் எல்லாம் வெண்கலத்தால் செய்யப் பட்டிருந்தன
 
சாம்பல்களை அகற்றி வெளியே போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட தகன பலி பீடத்தின் பாத்திரங்கள் எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. தகன பலி பீடமானது சீத்திம் மரக்கட்டையின் மீது வெண்கலம் பூசப்பட்டு செய்யப்பட்டிருந்தது. மேலும் இதனால் பலி பீடமும் அதனுடைய பாத்திரங்கள் எல்லாமும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.
இந்த வெண்கல தகன பலி பீடம் ஒரு கண்டிப்பான ஆவிக்குரிய அர்த்தம் உடையதாய் இருக்கிறது. கர்த்தருக்கு முன்பாக பாவத்திற்கான நியாயதீர்ப்பை வெண்கலம் குறிக்கிறது. இதைப் போல, தகன பலி பீடமானது, பாவிகள் அவர்களுடைய பாவங்களுக்காக அதிக நிச்சயமாய் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நமக்கு காண்பிக்கும் இடமாய் இருக்கிறது. கர்த்தர், தவறாமல் மக்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார். பாவிகளுக்காக, பலி காணிக்கைகள் எரிக்கப்பட்டுவதின் மூலம் பிரதிநிதியாக இருந்து நியாயந்தீர்க்கப்படுகிற இடமாய் இருந்தது இந்த தகன பலி பீடமேயாகும். மேலும் இந்த பலி பீடமும், இதனுடைய எல்லாப் பாத்திரங்களும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இதைப் போல ஒவ்வொரு பாவமும் அதுனுடைய விளைவாக அதிக நிச்சயமாக அதனுடைய நியாயந்தீர்ப்பை கொண்டு வருகிறது என்பதை இந்த விஷயங்கள் நமக்கு சொல்கின்றன.
மக்கள் அவர்களுடைய பாவங்களுக்காக தண்டனைக்கு தள்ளப்பட உள்ளார்கள் என்றும், மரணத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும், ஆனால் அவர்களுடைய பலி மிருகத்தை தகன பலி பீடத்திற்கு கொண்டு வந்து கர்த்தருக்கு கொடுப்பதின் மூலம் அவர்கள் அவர்களுடைய பாவங்களிலிருந்து கழுவப்பட்டு பாவத்திற்கான மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு இதன் மூலம் மீண்டும் வாழலாம் என்று பலி பீடம் காண்பிக்கிறது. இங்கு இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானமும் அவருடைய இரத்தம் சிந்துதலும் விசுவாசிகளின் பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டன என்று தகன பலி பீடத்தின் மீது பலியாக்கப்பட்ட காணிக்கைகள் எல்லாம் நமக்குச் சொல்கின்றன. இதனால் தகன பலி பீடத்தில் பலி காணிக்கையை கொடுத்த இந்த விசுவாசமானது, ஞானஸ்நானத்தில் உள்ள விசுவாசமாகவும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தமாகவும் புதிய ஏற்பாட்டிற்குள் தொடரப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவை நம்முடைய சொந்த இரட்சகராக நாம் விசுவாசிக்கும் பொழுது, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் நம்முடைய பாவத்தின் மீட்பராகவும் விசுவாசிக்கும் விசுவாசத்தை நாம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட ஆசரிப்புக் கூடார பிரகாரத்தினுடைய வாயிலுக்குள் நுழையும் விசுவாசமாக இந்த விசுவாசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
 
தகன பலி பீடத்தில் பலியாக்கப்பட்ட எல்லா பலிகளும் இயேசு கிறிஸ்துவை எடுத்துக்காட்டுகின்றன
 
இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த பொழுது என்ன செய்தார்? நாம் பாவம் நிறைந்தவர்களாய் இருந்தோம்; கர்த்தருக்கு எதிராக நாம் பாவம் செய்திருந்தோம். மேலும் அவருடைய சட்டத்தையும் கட்டளைகளையும் உடைத்தோம். நம்முடைய இந்த பாவங்களை எல்லாம் அகற்றுவதற்காக இயேசு கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, உலகத்தினுடைய பாவங்களை அவர் மீது எடுத்துக்கொண்டு இதன் மூலம் சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தைச் சிந்தினார். பலி காணிக்கையில் கைகளை வைப்பதின் மூலம் இஸ்ரவேலர்களின் பாவங்கள் செலுத்தப்பட்டு அது அவர்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் கொல்லப்பட்டு, மேலும் தகன பலி பீடத்தில் சுடப்பட்டதைப் போல, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு பரிசுத்தமான பலி காணிக்கையாக வந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டதால், பிறகு, அவர் சிலுவையின் மீது அவருடைய பலி இரத்தத்தை சிந்தி நம்முடைய இடத்திலிருந்து அதன் மீது மரிக்க முடிந்தது. அவருடைய இரு கைகளிலும் பாதங்களிலும் ஆணியடிக்கப்பட்டு அவருடைய இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் நாம் நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் படவேண்டியதற்கு பதிலாக நம்முடைய எல்லாப் பாவங்களுக்கான தண்டனைகளை நம்முடைய தேவன் ஏற்றுக் கொண்டார். இப்படி நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் அவர் மீட்டுள்ளார்.
இந்த தகன பலி பீடத்தின் உண்மையான பொருளாகியுள்ள இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த பொழுது என்ன செய்தார்? இயேசு கிறிஸ்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாகவும், கொல்லப்பட்டு சிலுவையின் மீது மரித்ததின் மூலமாகவும், மேலும் மரணத்திலிருந்து மீண்டும் எழுந்ததின் மூலமாகவும் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக் கொண்டு நம்மை அவர் மீட்டுள்ளார். நம்முடைய தேவன் இந்த உலகத்திற்கு வந்து, நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்றி, பின்பு பரலோக இராஜ்ஜியத்திற்குச் சென்றார்.
 
 
ஒவ்வொரு நாளும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாத நாம்
 
தகன பலி பீடத்திற்கு வேறு ஒரு பொருளும் இருக்கிறது. அது "மேலே போவது" என்பதாகும். நீங்களும் நானும் பாவம் செய்வது ஒரு உண்மையான விஷயம். ஆதலால் நாம் எப்பொழுதும் நம்முடைய பலி காணிக்கையை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். இதனால் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையின் புகை எப்பொழுதும் கர்த்தரிடத்திற்கு உயர போய் கொண்டிருக்கிறது. நீங்கள் பாவம் செய்யாமல் சரியாக வாழும் நாள் ஏதாவது இருக்கிறதா? இஸ்ரவேலர்களின் எண்ணமுடியாத பாவங்களை மன்னித்த இந்த காணிக்கைகளை கொடுப்பதின் மூலம் ஆசாரியர்கள் அதிக களைப்படைந்து அவற்றை தொடர்ந்து செய்ய முடியாத வரைக்கும் இஸ்ரவேல் மக்களுடைய பலி காணிக்கைகள் கொடுக்கப்பட்டன. இஸ்ரவேல் மக்கள் சட்டத்தை உடைத்து, கர்த்தருக்கு விரோதமாக ஒவ்வொரு நாளும் பாவம் செய்ததால், ஒவ்வொரு நாளும் அவர்களுடைய பலி காணிக்கையை தர வேண்டியிருந்தது.
இஸ்ரவேலர்களின் பிரதிநிதியாக இருந்த மோசே கர்த்தருடைய சட்டம் மற்றும் கட்டளைகளின் 613 பிரிவுகளை இஸ்ரவேலர்களுக்கு தெரிவித்தார். "இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார்." (யாத்திராகமம் 19:5-6).
"கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்" (யாத்திராகமம் 19:8) என பின்பு இஸ்ரவேல் மக்கள் வாக்களித்தார்கள், இதனால், மோசேயிற்கு முன் தோன்றி, தங்களுடைய உண்மையான கர்த்தராக இருந்து அவர் மூலம் அவர்களிடம் பேசிய இந்த கர்த்தரை அடையாளம் கண்டு கொண்டு, விசுவாசிக்க வேண்டும் என்று இஸ்ரவேல் மக்கள் நினைத்தார்கள். மேலும் இந்த கர்த்தர் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். கர்த்தர் அவர்களிடம் பேசிய எல்லாவற்றையும் வைத்து கொண்டு அவருக்காக சிறந்த பொக்கிஷமாக வேண்டும் என்று அவர்கள் நினைக்காமல், ஆசாரியர்களின் ராஜ்யமாகவும் கர்த்தருக்கு சேரும் ஒரு பரிசுத்த நாடாகவும் வேண்டும் என்று நினைத்தார்கள். இதைப் போல, கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த அவருடைய கட்டளைகளையும் கடைப்பிடிக்க முயற்சி செய்தார்கள்.
இஸ்ரவேலர்கள் பாவம் செய்வார்கள் என்று கர்த்தருக்கு ஏற்கெனவே தெரியுமா? நிச்சயமாக தெரிந்து வைத்திருந்தார். இதனால் தான் கர்த்தர் மோசேயை சீனாய் மலைக்கு அழைத்து, தரிசனத்தில் ஆசரிப்புக்கூடாரத்தை அவனுக்கு காண்பித்து, அதனுடைய முறையை விளக்கமாக விளக்கி, அதைக் கட்ட வேண்டும் என்று அவனிடம் சொல்லி, அதற்கு ஏற்ப அவனை அதை கட்ட வைத்தார். மேலும் இந்த ஆசரிப்புக் கூடாரத்தில், காணிக்கைகள் கொடுக்கப்படுவதற்காக பலி முறையையும் அமைத்தார்.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு பலி காணிக்கையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது, களங்கமில்லாத காளை, ஆடு, செம்மறி ஆடு, மணிப்புறா அல்லது புறா ஆகியவற்றில் ஒன்றை கொண்டுவந்து, சில விதி விலக்குகளுடன், தங்களுடைய கைகளை வைப்பதின் மூலம், பலி காணிக்கைக்குள் அவர்களுடைய பாவங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். (லேவியராகமம் 1:1-4). மேலும் அதனுடைய கழுத்தை அறுப்பதின் மூலம் அதனுடைய இரத்தத்தை எடுத்து அதனை ஆசாரியர்களுக்கு தர வேண்டும். அதன் பின் அவர்களுடைய ஆசாரியர்கள் இந்த இரத்தத்தை எடுத்து தகன பலி பீடத்தின் கொம்பின் மேல் ஊற்றி மீதியுள்ள இரத்தத்தை தரையின் மேல் ஊற்றி, பலி காணிக்கைகளை துண்டுகளாக வெட்டி இந்த துண்டுகளை பலி பீடத்தின் மேல் போட்டு அவற்றைச் சுட்டெரிப்பதின் மூலம் கர்த்தருக்கு படைத்தார்கள்.
இப்படித்தான், இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கப்பட முடிந்தது. பலி சுட்டெரிக்கப்பட்ட பொழுது, அதனுடைய மாமிசத்தை மட்டும் எரிக்காமல், ஈரலிலிருந்தும், குடலிலிருந்தும் எல்லா கொழுப்புகளையும் கூட நீக்கி அவர்கள் அதைச் சுட்டெரிக்க வேண்டியிருந்தது. இந்த வழியில் கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை மன்னித்தார்.
 
 
எல்லாப் பாவங்களுக்கான பாவமன்னிப்பையும் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி
 
நம்மை நாம் பார்க்கும்பொழுது, எப்போதும் பாவம் செய்வதை நம்மால் தடுக்க முடியாது என்பதை நாமெல்லோரும் உணரமுடியும். நாம் எப்பொழுதும் பாவம் செய்தவாறே நம்முடைய வாழ்க்கையை வாழ்கிறோம். நாம் பலவீனமாய் இருப்பதினாலேயோ, அதிகமான அசுத்தங்கள் இருப்பது அல்லது சக்தி இருப்பது போன்ற பல காரணங்களுக்காக நாம் எண்ணிலடங்கா, பாவங்களைச் செய்கிறோம். இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக விசுவாசிப்பவர்களிலும் கூட பாவம் செய்யாதவர்கள் யாருமில்லை.
நாம் கர்த்தரை விசுவாசித்தாலும் கூட, இது போல எப்பொழுதும் பாவம் செய்யும் நாம், இந்த எல்லாப் பாவங்களிலிருந்தும், கழுவப்படுவதற்கும் மீட்க்கப்படுவதற்கும், நமக்கு இருக்கும் ஒரே வழி இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானத்தை விசுவாசிப்பது தான். நீர் மற்றும் இரத்தத்தின் மூலம் வந்த அவர் தான் கர்த்தர் (யோவான் 5:6). இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தகன பலி பீடத்தின் பலி காணிக்கையையாக அவர் இந்த உலகத்திற்கு வந்தார். இந்த இயேசு, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக் கொண்டு சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான கூலியை செலுத்தியிருக்கும் பொழுது விசுவாசத்தின் மூலம் பாவத்திற்கான மன்னிப்பை நாம் ஏன் பெற்றுக்கொள்ள முடியாது? நம்முடைய மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பினால் விசுவாசத்தின் மூலம் நீங்களும் நானும் ஒரே சமயத்தில் பாவத்திற்கான நம்முடைய பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் எப்பொழுதும் பாவம் செய்தாலும் கூட இயேசு இந்த உலகத்திற்கு வந்த பொழுது இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மீட்பினால் நாம் நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கப்படலாம். நம்முடைய தேவன் அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துக்கொண்டு உலகத்தினுடைய பாவங்களை சிலுவைக்கு சுமந்து சென்று, மரித்து, இதன் மூலம் நம்முடைய பாவங்களிலிருந்து முழுமையாக விடுதலையாக்கியுள்ளார். நம்முடைய பாவங்களுக்காக மரித்ததின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களுக்கான தண்டனையையும் ஏற்றுக் கொண்டு மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்தனின் மூலம் இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம்மை முழுமையாக மீட்டுள்ளார். நாம், நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்படுவதை தடுக்க முடியாததால், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மூலம் இயேசு நமக்கு கொடுத்துள்ள இரட்சிப்பின் அன்பு மற்றும் இரக்கத்தின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நீங்களும் நானும் இரட்சிக்கப்பட்டுள்ளோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், கர்த்தர் நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ளார். அவரை விசுவாசித்ததின் மூலம் தான் நாம், நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டுள்ளோம். இதைத் தான், தகன பலி பீடம் நமக்கு காண்பிக்கிறது.
ஆசரிப்புக்கூடாரத்திற்குள் எல்லாமே அழகாக இருந்தது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதன் பிரகாரத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு எதிர்பாரத வெறுப்பூட்டும் காட்சியை சந்திப்பீர்கள். செவ்வகமாக, வடிவமைக்கப்பட்ட வெண்கல தகன பலி பீடம், புகையையும் நெருப்பையையும் எந்த நேரத்திலும் வெளியேற்றி கொண்டிருக்கும். பயமுறுத்திக் கொண்டிருக்கும் வெண்கல பலி பீடம் பாவிகளுக்காக காத்துக்கொண்டிருக்கும். அதனுடைய தரை இரத்தத்தில் ஊறி இருக்கும். மேலும் பாவத்திற்கான தண்டனையின் இடம் இது தான் என்று யார் வேண்டுமானலும் உணரலாம். ஒவ்வொரு நாளும் பலி காணிக்கை கொடுக்கப்பட்ட இடம் இதுவாக இருந்ததால் எரியும் மாமிசம் மற்றும் கட்டையின் துர்நாற்றத்தால் நீங்கள் நசுக்கப்படுவீர்கள்.
தகன பலி பீடத்திற்கு கீழ், இரத்தம் ஆறை போல வழிந்து கொண்டிருக்கும். இஸ்ரவேலர்கள் பாவம் செய்த பொழுதெல்லாம் அவர்களுடைய பலி மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வந்து, அவர்களுடைய கைகளை வைப்பதின் மூலம் அவர்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தி அதனுடைய கழுத்தை அறுத்து, அதனுடைய இரத்தத்தை எடுத்து, இந்த இரத்தத்தை ஆசாரியர்களுக்கு கொடுத்தார்கள். பின்பு ஆசாரியர்கள் இந்த இரத்தத்தை தகன பலி பீடத்தின் கொம்புகளின் மேல் ஊற்றி மீதியுள்ளதை தரையில் ஊற்றினார்கள்.
பின்பு அவர்கள் பலிகளை துண்டுகளாக வெட்டி, அதனுடைய சிறு நீரகம் மற்றும் கொழுப்பை அதனுடைய மாமிசத்துடன் சேர்த்து தீத்தட்டில் இட்டு அவற்றைச் சுட்டெரித்தார்கள். இரத்தம் எடுக்கப்படும் பொழுது சிவப்பாக வழிந்து அது முதலில் திரவமாக இருக்கிறது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அது உரைந்து போய் பசையாக ஆகிவிடுகிறது. ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் இந்த பயமுறுத்தும் இரத்தத்தைப் பார்த்திருப்பீர்கள்.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய கட்டளைகளை உடைத்த பொழுதெல்லாம் தகன பலி பீடத்தின் மூலம் பலி பீடத்தின் மேல் அவர்களுடைய பலி காணிக்கையை போல மரிக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஏன்? ஏனென்றால் கர்த்தர் இரத்தத்தினால் அவருடைய உடன்படிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தினார்கள். "நீங்கள் என் சட்டத்தை கடைபிடித்தீர்களானால் நீங்கள் என்னுடைய மக்களாகவும் இராஜ்ஜியத்தின் ஆசாரியர்களாகவும் ஆவீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கடைப்பிடிக்கத் தவறினால் மரணத்திற்கு தள்ளப்படும் இந்த பலி காணிக்கைகளை போல நீங்கள் மரிக்க வேண்டும்." இப்படித்தான் கர்த்தர் இரத்தத்தினால் அவருடையு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இதைப் போல, அவர்கள் பாவம் செய்து சட்டத்தை உடைத்தால், அவர்கள் தம் இரத்தத்தைச் சிந்த வேண்டும் என்பதை இஸ்ரவேல் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
ஒரு உண்மையான விஷயம், இஸ்ரவேலர்கள் மட்டும் அல்ல, ஆனால் கர்த்தரை விசுவாசிப்பவர்கள் எல்லோரும் கூட, அவர்களுடைய பாவங்களுக்கான பலி இரத்தத்தைத் தர வேண்டும். கர்த்தருக்கு முன்பாக ஒருவர் பாவம் செய்து இதன் மூலம் அவனுடைய/அவளுடைய இருதயத்தில் பாவம் இருந்து, அது சிறியதோ அல்லது பெரியதோ என்று கருதப்படாமல், இதன் விளைவாக இந்த பாவத்திற்கான தண்டனையை சந்திக்க வேண்டும். சட்டத்தின் நியாயத்தீர்ப்பு அதாவது பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கர்த்தருக்கு முன்பு எல்லோருக்கும் பொருந்தினாலும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு பயப்படும் அநேக மக்கள் இல்லை. மேலும் கர்த்தருடைய பலி முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய சட்டத்தின் மீட்பிற்கு தங்களை தாங்களே ஒப்புகொடுக்க முயற்சி செய்கிறார்கள்.
பாவத்தின் சம்பளத்தை மரணமாக அமைக்கும் சட்டத்திற்கு ஏற்ப, ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வாயிலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை, நம்முடைய பாவங்களிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் மீட்டுள்ளார் என்று தகன பலி பீடம் நமக்குச் சொல்லுகிறது. எப்பொழுதும் பாவம் செய்து, நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்களாகிய நமக்காக இயேசு கிறிஸ்து மனிதனுடைய சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் வழங்கப்பட்டதின் மூலம் மனித குலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் தன்னுடைய சொந்த சரீரத்தின் மீது எடுத்துக் கொண்டு உலகத்தினுடைய இந்தப் பாவங்களைச் சிலுவைக்குச் சுமந்து சென்று, மரித்து, அதன் மேல் அவருடைய இரத்தத்தைச் சிந்தி அதிகமான துயரங்களையும், வலிகளையும் ஏற்றுக்கொண்டு, தன்னையே பலியாக்கி, இதன் மூலம் உங்களையும் என்னையும் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்டுள்ளார்.
கிறிஸ்து அவருடைய சொந்த சரீரத்தைப் பலியாக்கி, இதன் மூலம் நம்மை மீட்டுள்ளதால், விசுவாசத்தின் மூலம் நீங்களும் நானும் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட முடிந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் தங்களுடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டியதை தங்களால் தடுக்க முடியாதவர்களுக்காக இயேசு கிறிஸ்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக்கொண்டு, மரணத்திற்கு கொல்லப்பட்டு மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்து, இதன் மூலம், அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும் மீட்டுள்ளார்.
இந்த தகன பலி பீடத்தை நாம் பார்க்கும்பொழுது இந்த விசுவாசத்தை பெற்றுக்கொள்கிறோம். பலி பீடத்தில், எல்லா நேரமும் பலி காணிக்கை கொடுக்கப்படுவதைப் பார்த்து, நம்முடைய அன்றாட பாவங்களுக்காக மரிக்க வேண்டியது நாமாக இருந்தாலும் கர்த்தர், நம்மை அவருடைய பலி காணிக்கையாக மாற்றாமல், அதற்கு பதிலாக நம்முடைய தேவனே இந்த உலகத்திற்கு வந்து, நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்றினார் என்பதை நாம் உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொன்டு, சிலுவையின் மீது அவருடைய இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்து, இயேசு நம்மை இரட்சித்தார்.
இதனால் தான், பிதாவாகிய கர்த்தர், இஸ்ரவேலர்களின் பலி காணிக்கையை ஏற்றுக்கொண்டு, பாவம் செய்ததற்காக அவர்களைத் தண்டிப்பதற்கு பதிலாக, அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்ததால் இஸ்ரவேல் மக்கள், தங்களுடைய கைகளை பலி மிருகத்தின் தலை மீது வைப்பதின், மூலம் தங்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தச் செய்தும், அவர்களை அதை கொல்லும்படிச் செய்தும், அதனுடைய இரத்தம் மற்றும் மாமிசத்தையும் அவருக்கு அளிக்கச் செய்தும், இஸ்ரவேலர்களின் பாவங்களை கர்த்தர் மன்னித்தார். இந்த பலி காணிக்கையின் மூலம், நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் கழுவியுள்ளார். இதைத் தவிர எதுவும் கர்த்தருடைய இரக்கமாகவும் அவருடைய அன்பாகவும் இருக்கவில்லை.
 
 
சட்டத்தினால் மட்டும் கர்த்தர் நம்முடன் பேசவில்லை
 
கர்த்தர் அவருடைய சட்டத்திற்கு ஏற்ப உங்களையும் என்னையும் மற்றும் எல்லா இஸ்ரவேல் மக்களையும் நியாயந்தீர்ப்பதாக இருந்தால், இந்த உலகத்தில் எத்தனை பேர் இன்னமும், உயிரோடிருப்பார்கள்? கர்த்தர் அவருடைய சட்டத்தினால் மட்டும் நம்மை அளந்து நியாயந்தீர்ப்பதாக இருந்தால், நம்மில் ஒருவரும் கூட ஒரு நாளைக்கு வாழமுடியாது. நம்மில் அநேகர் 24 மணி நேரங்களுக்கு கூட இருக்க முடியாது. ஆனால் சில நிமிடங்களில் மரித்துவிடுவோம். நம்மில் சிலர் ஒரு மணி நேரத்தில் இறந்து விடலாம். அதே சமயம் மற்றவர்கள் 10 மணி நேரங்களுக்கு இருக்கக் கூடும். ஆனால் இரண்டிலுமே வித்தியாசம் அற்பமாக இருக்கிறது. நாமெல்லோரும் மரிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளோம். மக்கள் 60, 70, 80 மற்றும் அதற்கும் மேலே அ இப்பொழுது நீண்டகாலம் வாழ்வது போல அவர்களால் வாழ முடியாது.
இந்த காலையில் என்ன நடந்தது என்பதை நினைத்து பாருங்கள். முழு இரவும் விருந்து அளிப்பதில் தங்கியிருந்ததால் படுக்கையிலிருந்து எழுவதற்கு உங்கள் மகன் இன்னமும் கஷ்டப்படுகிறான். உங்கள் மனைவி அவனை எழுப்ப முயற்சி செய்கிறாள். உங்கள் மகனை எழுப்பியதற்காக அவனுடைய தாயிடத்தில் அவன் சத்தம் போடுகிறான். மேலும் உங்கள் மனைவி அவளிடம் கத்தியதற்காக உங்கள் மகனிடம் சத்தம் போடுவதின் மூலம் ஒரு சத்தம் போடும் போட்டி உருவாகின்றது. இப்படி காலைச் சண்டைத் தொடங்குகிறது. முடிவில் இங்கு தாயும் மகனும் கர்த்தருக்கு முன்பாக பாவம் செய்கிறார்கள். மேலும் இருவரும் ஒரு நாளைக்கு கூட இருக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்த பாவத்திற்காக இருவரும் தண்டிக்கப்படுவார்கள்.
ஆனால், கர்த்தர் அவருடைய நீதியின் சட்டத்தின் மூலமாக மட்டும் நம்முடன் பேசவில்லை. "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்" (சங்கீதம் 103:10).
நீதியின் சட்டத்தினால் நம்மை நியாயந்தீர்ப்பதை விட்டு, இதற்கு பதிலாக இந்த நீதியின் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நம்முடைய இடத்தில் பலி காணிக்கையை ஏற்படுத்தினார். நம்முடைய கைகளை இந்த பலி காணிக்கையின் மீது வைப்பதின் மூலம் நம்முடைய பாவங்களை அதற்குள் செலுத்தச் செய்து, நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு பதிலாக, இந்த காணிக்கையின் இரத்தத்தை நாம் அவருக்கு கொடுக்கும்படிச் செய்து, நம்முடைய சொந்த உயிருக்கு பதிலாக பலி காணிக்கையின் உயிரை கர்த்தர் ஏற்றுக்கொண்டு, நம்முடையது மற்றும் இஸ்ரவேலர்களுடையதையும் சேர்த்து மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் மன்னித்து, அவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை மீட்டு, நம்மை மீண்டும் வாழச் செய்துள்ளார். மேலும் விசுவாசிகளை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்டதன் மூலம், கர்த்தர், அவர்களை அவருடைய சொந்த குழந்தைகளாக ஆக்கியுள்ளார். இப்படிதான் இஸ்ரவேல் மக்களை கர்த்தருடைய இராஜ்ஜியத்தின் ஆசாரியர்களாக அவர் ஆக்கியுள்ளார்.
இங்கு பலி காணிக்கை என்பது இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. நம்முடைய பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து, இந்த பலி காணிக்கையாக ஆனார். மேலும் பாவத்தின் தண்டனையைச் சந்தித்த நம்மை மீட்பதற்காக அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது ஏற்றுக்கொண்டு அவருடைய இரத்தத்தைச் சிந்தி, சிலுவையின் மீது மரித்தார். நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்பதற்காக கர்த்தருடைய படைக்கப்பட்ட ஒரேகுமாரன் மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்து, பிதாவினுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் பலி காணிக்கையானார். யோவானிடமிருந்து பெற்றுக்கொண்ட அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தினுடைய பாவங்களை அவர் மீது ஏற்றுக்கொண்டு, உலகத்தினுடைய இந்த பாவங்களைச் சிலுவைக்கு சுமந்து சென்று, அவருடைய இரத்தத்தைச் சிந்தி மரித்தார். இதன் மூலம் அவரையே பலியாக்கி, மரித்தும், மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்து, இயேசு என்னையும் உங்களையும் முழுமையாக இரட்சித்தார்.
இயேசு, நம்முடைய இடத்திலிருந்து, ஞானஸ்நானம் பெற்று, மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் எழுந்தார் என்று நமக்குச் சொல்லும் இந்த மீட்பின் வார்த்தையை நாம் கேட்கும் பொழுது, நம்முடைய இருதயங்கள் ஊக்கமடைகின்றன. ஏனென்றால், பாவமற்றிருந்த அவர் நமக்கு பதிலாக, எல்லாப் பாவங்களையும் அவருக்குள் செலுத்திய ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டு, இந்த பாவங்களின் கூலியாக எல்லா வகையான தண்டனை, துன்புறுத்தல், துயரங்கள், முடிவில் மரணம் ஆகியவற்றை ஏற்றார். இவை எல்லாமே, முதலில் நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம், கிறிஸ்து நம்மை, நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ள பொழுது இந்த சத்தியத்தை விசுவாசிக்காததை தவிர வேறு எதுவுமே அதிக தீயதாக இருக்காது.
 
 
நீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல்களின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள இரட்சிப்பை நாம் விசுவாசிக்க வேண்டும்
 
நமக்காக, இயேசு கிறிஸ்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களையும், இந்த பாவங்களுக்கான தன்டனைகளையும் ஏற்றுக்கொண்டு, நம்முடைய இடத்திலிருந்து, அவரையே பலியாக்கி, உங்களையும், என்னையும் நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டுள்ள பொழுது "நன்றி, தேவனே!" என்று சொல்லக் கூடிய விசுவாசத்தை நாமெல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். மனதைத் தொடும் காதல் கதைகள், வாழ்க்கை கதைகள், அல்லது மற்ற வகையான உண்மையான கதைகளால் அநேக மக்கள் எளிதில் உணர்ச்சியடைந்தாலும், அவர்களுடைய இருதயங்கள் கர்த்தருடைய தாராளமான அன்பிற்கு நேராக வரும்பொழுது, அவர்கள் பனியைப் போல் குளிராக இருக்கிறார்கள். அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, நமக்காக சிலுவையின் மீது மரிக்கும் அளவிற்கு நம் தேவனுடைய கிருபை அவ்வளவு அதிகமாக இருந்தாலும், இந்த கிருபையை உணராமல், இதற்காக, அவருக்கு நன்றி சொல்லாமல் இருக்கும் மிருகத்தனமான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
தேவகுமாரனான இயேசு கிறிஸ்து, இந்த உலகத்திற்கு வந்து, நமக்காக பலி காணிக்கை ஆனார். அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய சொந்த சரீரத்திற்குள் ஏற்றுக்கொண்டு, அவருடைய சரீரத்தை சிலுவையின் மீது கொடுத்ததின் மூலம் அவரையே பலியாக்கி கொண்டார். நமக்காக அவர் அறையப்பட்டும், நிர்வாணமாக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும், துன்புறுத்தவும் பட்டு பாடுகளை அனுபவித்தார். இப்படித் தான் அவர் நம்மை மீட்டுள்ளார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் தான் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாகியுள்ளோம். எல்லாவற்றிலும் சிறந்த உணர்ச்சியும், வார்த்தைகளால் விளக்க முடியாத கர்த்தருடைய சிறந்த கிருபையும் இதுவே. இப்படியாக கிறிஸ்து நம்மை மீட்டுள்ள பொழுது, இதைக் கேட்ட பிறகும், அநேக மக்கள் இன்னமும் அவரை விசுவாசிக்கமலும் நன்றி செலுத்தாமலும் இருப்பதைப் பார்க்கும் பொழுது, இது என்னை அதிகமாக துன்பப்படுத்துகிறது.
இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவருடைய ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டு, அவரையே பலியாக்கியதால் நீங்களும் நானும் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளோம். இதனால் (ஏசாயா 53:5) சொல்லுகிறது. "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்."
நாம், நம்முடைய வாழ்க்கை முழுவதும் பாவம் செய்கிறோம். தண்டிக்கப்படுவதை தடுக்க முடியாத நம்மை, நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் தண்டனைகளிலிருந்தும், அழிவு மற்றும் சாபங்களிலிருந்தும் மீட்பதற்கு நம்முடைய தேவன், பரலோக இராஜ்ஜயத்தினுடைய சிம்மாசனத்தை விட்டு விட்டு, இந்த உலகத்திற்கு கீழே இறங்கி வந்தார். அவர், யோவானுக்கு முன்பாக அவருடைய தலையைக் குனிந்து, இந்த பாவங்களைச் சிலுவைக்குச் சுமந்து சென்று, அதிகமாக துன்பப்பட்டு அவருடைய இருதயத்தின் எல்லா இரத்தத்தையும் தரையில் சிந்தி, மரணத்திலிருந்து மீண்டும் எழுந்து, நமக்காக பலி காணிக்கையாகி, நம்முடைய இரட்சிப்பின் கர்த்தராகியுள்ளார்.
இந்த உண்மையை பற்றி நீங்கள் நினைத்து இதை உங்கள் இருதயங்களில் ஆழமாக வைக்கிறீர்களா? நீங்கள் வார்த்தையைக் கேட்கும் பொழுது, இயேசு கிறிஸ்து, மனித சரீரத்தில் இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, மரித்து, அவருடைய மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு உயிர்த்தெழுந்தார் என்பதை நீங்கள் விசுவாசித்து, உங்களுடைய இருதயங்களில் அதிகமாக உணர்ச்சியடைவது சரியானதாகும். நாமெல்லோரும் நரகத்திற்கு தள்ளப்படவுள்ளோம் என்பதை உணர்ந்தால், இந்த இரட்சிப்பு எத்தனை உணர்ச்சியூட்டக் கூடியதாகவும் நன்றியுள்ளதாகவும் இருக்கிறது என்பதை நம்முடைய இருதயங்களில் நாம் ஆழமாக உணரலாம். கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் என்றும், அவருடைய மக்களாக வேண்டுமென்றும் நாம் நினைத்திருந்தாலும், இதை அடைவதற்கு நமக்கு எந்த வழியும் இருக்கவில்லை. ஆனால், நம்முடைய பாவமன்னிப்பைத் தேடிய உங்களையும் என்னையும், கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, சிலுவையின் மீது மரித்து, மூன்று நாட்களில் மரணத்திலிருந்து மீண்டும் எழுந்த சத்தியத்தின் வார்த்தை மூலம் நம்மை சந்தித்துள்ளார்.
இயேசுவினுடைய இந்த பலி இல்லை என்றால், நம்முடைய இரட்சிப்பை எப்படி பெற்றுக்கொண்டிருப்போம்? நாம் எப்பொழுதும் பெற்றிருக்க முடியாது. இயேசுவினுடைய ஞானஸ்நானமும் சிலுவையின் மீதான இரத்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஆசரிப்புக்கூடாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் இரட்சிப்பு இல்லாமல் இருந்திருந்தாலும் இரட்சிப்பு என்பது ஒரு கோடை இரவின் கனவாக மட்டுமே நமக்கு இருந்திருக்கும். அவருடைய பலி இல்லாமல் இருந்திருந்தால், நாம் எப்பொழுதும், நம்முடைய பாவங்களிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கவோ, தண்டனையை தவிர்த்திருக்கவோ முடிந்திருக்காது. ஆனால் நிரந்தரமாக நரகத்தின் நிரந்தர நெருப்பிற்குள் தள்ளப்பட்டு துன்பப்டுத்தப் பட்டிருப்போம். இருப்பினும் பழைய ஏற்பாட்டினுடைய பலி காணிக்கையை போல நமக்காக இயேசு அவரையே பலியாக்கி நம்மை மீட்டுள்ளார்.
 
 
புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிவப்பு நிற நூல்களின் இரட்சிப்பு
 
என்னுடைய அன்புள்ள வாசகர்ளே, ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை நீங்கள் எப்பொழுதுமே மறக்க கூடாது. மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டினுடைய வார்த்தையாய் இருக்கிறது. இது நீண்ட காலமாக கர்த்தர் நம்மிடத்திற்கு நம்முடைய சொந்த மீட்பராக வருவார் என்ற அவரின் வாக்குத்தத்தத்தின் வார்த்தையாக இருக்கிறது. மேலும் இந்த வாக்கிற்கேற்ப, இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக்கொண்டார் என்று நீல நிற நூல் நமக்குச் சொல்லுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் அவர் நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்டு, நம்மை நம்முடைய தண்டனைகளிலிருந்து விடுவிப்பார் என்ற சத்தியத்திற்கு ஏற்ப அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை எடுத்துக்கொள்வதற்காகவும், இந்த உலகத்திலிருக்கும் எல்லோருடைய பாவங்களை எடுத்துக்கொள்வதற்காகவும், யோவானால் அவர் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டு உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். நாம் இதை எப்பொழுதும் மறக்ககூடாது, ஏனென்றால் இயேசு நம்முடைய பலி காணிக்கையாக வந்து, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது எடுத்துக்கொண்டார் என்பதை நாம் மறந்தால் இரட்சிப்பு இருக்காது.
மிகவும் அதிகமாக இல்லாமல், இந்த உலகத்தில் நமக்கு அதிக சுய-முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு யாராவது, பெருமையடித்து கொண்டிருப்பதை கேட்டு சகித்துக்கொள்ள முடியாவிட்டாலும், அவர்கள் தங்களுக்கு தாங்களே பெருமையடித்து கொள்வதை விரும்பும்படி மக்களுடைய இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் என்னைப்பற்றி அல்ல, வேறு ஒருவரைப் பற்றி பெருமையடிக்கத் தொடங்குவதற்கு ஒரு காலம் வந்தது, இந்த காலத்தை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் என்னை விடுவித்ததற்காக இயேசுவிற்கு நான் நன்றியுள்ளவனான பொழுது என்று கூறலாம். நம்முடைய பாவங்களை அகற்றுவதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார், ஞானஸ்நானம் பெற்றுகொண்டதின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக்கொண்டார். எனவே, அவருடைய ஞானஸ்நானத்திற்காக இயேசு மரிக்கலாம். மேலும் இப்படித்தான் தேவன் நம்மை மீட்டுள்ளார் என்று, இப்பொழுது அடிக்கடி நான் சொல்லிக்கொண்டு பெருமை பாராட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த சத்தியத்தை பெருமை பாராட்டவும், இதைப் போதிக்கவும் மற்றும் எல்லா மகிமையையும் கர்த்தருக்கு கொடுக்கவும் நான் தவறுவதில்லை.
இருப்பினும், இயேசுவை விசுவாசிப்பதாக அறிவித்தாலும், அவருடைய ஞானஸ்நானத்தை விட்டு விட்டு வார்த்தையை போதிக்கும், அல்லது அவருடைய பெயரை பெற்றுக்கொண்டு தங்களைத் தாங்களே பெருமையடித்துக் கொண்டிருக்கும் அநேக மக்கள் இருக்கிறார்கள். தன் வாழ்வுக்காக மாதத்திற்கு $300 மட்டும் செலவு செய்வதாக சொல்லும் ஒரு போலி ஊழியர் இருந்தார். ஒரு சிறந்த வேலையாக $300 களுக்குள் ஒரு மாதத்தை ஒட்டிவிடமுடியும் என்றும், அவர் பயணம் செய்கையில் எந்த பணமும் எடுத்து செல்ல தேவை இல்லை, ஏனென்றால் அவருடைய சீடர்கள் அவருடைய எல்லா செலவையும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் பெருமையடிப்பது உண்டு. விசுவாசிகளுடைய பணம், பணம் இல்லையா? இந்த பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லையா? அதே சமயம் அவருடைய சொந்த பணத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கிறதா? அவருக்கு ஏதாவது தேவைப்படும் பொழுது, அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஜெபிப்பது தான் என்று இந்த கிறிஸ்தவ தலைவர் கூறினார், "கர்த்தாவே என்னுடைய பயண செலவுக்கு உதவும், தேவனே நான் உம்மை விசுவாசிக்கிறேன்!" இந்த ஜெபத்தின் மூலம் சில பரிசுத்தவான்கள் உற்சாகமடைந்து, ஒரு சுமை நிறைய பணத்தை கொடுத்தார்கள் என்று அவர் சாட்சியளித்தார்.
அவர்கள் புகழப்படுவதற்கு ஒரு பொருளைப் போல இந்த விஷயங்களைச் சொல்லும் இந்த மக்களைப் பார்க்கும் பொழுது, உங்கள் மனதிற்கு எந்த வகையான எண்ணங்கள் வருகின்றன?
"அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது" என்று மத்தேயு 3:13-17 சொல்லுகிறது. இயேசு ஞானஸ்நானம் எடுத்து கொண்ட பொழுது என்னவானது என்று இந்த பகுதி விளக்குகிறது. யோர்தான் நதியில், யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்ற பொழுது பரலோகத்தினுடைய வாயில் திறந்தது. மேலும் "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்ற பிதாவாகிய கர்த்தருடைய குரல் கேட்டது. அந்த சமயத்தில் யோவான் ஸ்நானகன் அதிர்ச்சியடைந்தான்.
இந்த யோர்தான் நதியில் யோவான் ஸ்நானகன் இரண்டு முறை ஆச்சரியமடைந்தான். இயேசு அவனிடத்திற்கு வந்து அவனால் ஞானஸ்நானம் பெற்றுகொள்ள வேண்டும் என்று சொன்னபொழுது முதலில் அவன் அதிசயத்தான். மேலும் இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தபிறகு பரலோகத்தின் கதவு திறக்கப்பட்ட பொழுது "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" என்று சொன்ன பிதாவாகிய கர்த்தருடைய குரலை கேட்ட பொழுதும் அவன் ஆச்சரியமடைந்தான்.
யோவான் ஸ்நானகனால், இயேசு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு காரணம் என்ன? இங்கு மத்தேயு 3:15 நமக்கு பதிலைத் தருகிறது. நாம் மீண்டும் ஒரு முறை 15 மற்றும் 16 ஆம் வசனத்தை வாசிப்போம், "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்."
யோவான் ஸ்நானகனால் இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றார் என்ற காரணத்தை மத்தேயு 3:15 சொல்லுகிறது. இயேசு பரலோக இராஜ்ஜியத்தின் தலைமை ஆசாரியராகவும், கர்த்தரால் அளிக்கப்பட்ட ஒரே குமாரனாக இருந்தாலும், அவருடைய மக்களாகிய நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து மீட்பதற்கு அவர் இந்த உலகத்திற்கு வந்தார். வேறு வார்த்தையில் கூறினால் இயேசு, நம்முடைய இடத்திலிருந்து பலியானதின் மூலம் நம்முடைய பாவங்களுக்கான கூலியை கொடுக்கும் பலி காணிக்கையாக இந்த உலகத்திற்கு வந்தார். இதனால் தான் யோவானிடமிருந்து இயேசு ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள விழைந்தார்.
ஆனால், யோவான் ஸ்நானகனை தவிர வேறு யாரிடமிருந்தும் இயேசு ஏன் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை? ஏனென்றால் ஸ்திரீயிடமிருந்து பிறந்தவர்களுள் அவன் தான் சிறந்தவனாக இருந்தான். இதனால் யோவான் ஸ்நானகன் மனித குலத்தின் பிரதிநிதியாக இருந்ததால் "ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை" என்று மத்தேயு 11:11 சொல்லுகிறது. "இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்" (மல்கியா 4:5) என்று பழைய ஏற்பாட்டு காலத்தில் மல்கியா காலத்தில் தீர்க்கதரிசனம் கூறப்பட்ட கர்த்தருடைய ஊழியகாரனாக யோவான் ஸ்நானகன் இருந்தான். கர்த்தர் அனுப்புவேன் என்று வாக்குத்தத்தம் செய்த இந்த எலியா, யோவான் ஸ்நானன் ஆவான்.
கர்த்தர் யோவான் ஸ்நானனை எலியா என்று ஏன் அழைத்தார்? இஸ்ரவேலர்களின் இருதயங்களை கர்த்தரிடத்திற்கு திரும்பவும் கொண்டு வந்த ஒரு தீர்க்கதரிசி எலியா. அந்த சமயத்தில் இஸ்ரவேல் மக்கள் பாகாலை தங்களுடைய தெய்வமாக வணங்கினார்கள். ஆனால் பாகாலா அல்லது யோகோவாவா யார் தெய்வம் என்று எலியா அவர்களுக்கு காண்பித்தான். தன்னுடைய பலி காணிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலமும், வாழும் கர்த்தர் உண்மையில் யார் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு விளக்கி காண்பித்தான். மேலும் இதன் மூலம் விக்கிரகங்களை வழிப்பட்டுக் கொண்டிருந்த அவர்களை உண்மையான கர்த்தரிடத்திற்கு திரும்பவும் நடத்தி சென்ற ஒரு தீர்க்கதரிசி அவன். இதனால் தான் பழைய ஏற்பாட்டினுடைய முடிவில் எலியாவை நான் உங்களுக்கு அனுப்புவேன் என்று கர்த்தர் வாக்களித்தார். கர்த்தருடைய சாயலில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் விக்கிரக வழிபாடு மற்றும் பிசாசை வணங்குதல் என்னும் தவறான பாதையில் இருந்ததால், கர்த்தரிடத்திற்கு திரும்பவும் அழைத்து செல்லும் அவருடைய ஊழியக்காரனை அனுப்புவேன் என்று கர்த்தர் சொன்னார். இப்படி வரப்போகும் ஒருவனாக இருந்தவன் யோவான் ஸ்நானகன் தான்.
"நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்" என்று மத்தேயு 11:13-14 குறிப்பிடுகிறது. வரப்போகும் இந்த எலியா, யோவான் ஸ்நானனைத் தவிர வேறு யாரும் இல்லை 11-12 வசனத்தில் "ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
"ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை" என்று இங்கு சொல்லும் பொழுது யோவான் ஸ்நானனை, எல்லா மனித குலத்தினுடைய பிரதிநிதியாக கர்த்தர் உயர்த்தினார் என்று இது நமக்குச் சொல்லுகிறது. இந்த பூமியில் இயேசுவினுடைய பிறப்பிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு யோவான் ஸ்நானன் பிறக்கும்படி கர்த்தர் செய்தார். மேலும் கடைசி தீர்க்கதரிசியாகவும் பழைய ஏற்பாட்டினுடைய ஆசாரியனாகவும் அவனை கர்த்தர் உருவாக்கினார். இதனால் பூமியினுடைய தலைமை ஆசாரியனாக யோவான் ஸ்நானகன் இயேசு கிறிஸ்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து, இதன் மூலம் மனித குலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் அவருக்குள் செலுத்தினான். வேறு வார்த்தைகளில் கூறினால் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் அவருக்குள் செலுத்துவதற்காக தான் யோவான் ஸ்நானன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் அளித்தான். இயேசு அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் மனிதகுலத்தினுடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொள்வதற்காகத் தான், இயேசு யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்.
இதனால் தான் "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" என்று இயேசு மத்தேயு 3:15 இல் சொன்னார். உலகத்தினுடைய எல்லா பாவங்களையும் ஏற்றுக்கொள்வதற்காக, யோவான் ஸ்நானனிடமிருந்து அவருடைய ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ளும் பொழுதே எல்லா நீதியும் நிறைவேற்றப்படும் என்பதால் அது பொருந்துகிறது என்று இயேசு சொன்னார்.
 
 
நம்முடைய தேவன் இந்த முறையின் மூலம் இப்படியாக பாவிகளை இரட்சித்துள்ளார்
 
யோவானிடமிருந்து இயேசு பெற்றுக்கொண்ட இந்த ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டினுடைய கைகளை வைப்பது போலவே இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருவருடைய பாவங்களை பலி காணிக்கைக்குள் செலுத்துவதற்கு தகன பலி பீடத்திற்கு முன் கைகளை வைப்பது நடத்தப்பட்டது. இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதன் மூலம் இயேசு கிறிஸ்து, கைகளை வைக்கும் சத்தியத்தை நிறைவேற்றினார். எப்பொழுதெல்லாம், அன்றாட பலிகள் கொடுக்கப்பட்டனவோ அங்கு பலி காணிகையின் தலையின் மீது தங்களுடைய கைகளை வைப்பதின் மூலம் பாவிகள் அவர்களுடைய பாவங்களை அதற்குள் செலுத்தியபோது செய்த சத்தியமாக இருந்தது. மேலும், பாவ நிவர்த்தி நாளாகிய, ஏழாவது மாதத்தின் 10 ஆம் நாள் அன்று வருடாந்திரபலி கொடுக்கப்பட்டது. இதன்மூலம், தலைமை ஆசாரியன், பலி காணிக்கையின் தலையின் மீது அவனுடைய கைகளை வைத்து, எல்லா இஸ்ரவேலர்களுடைய அவ்வருட பாவங்களை அதற்குள் செலுத்தும் பொழுதெல்லாம் செய்த சத்தியமாகவும் இது இருந்தது.
பழைய ஏற்பாட்டினுடைய கைகளை வைப்பதைப் போல, இயேசு, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தினுடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக்கொண்டதால், இந்தப் பாவங்கள் எல்லாவற்றையும் கழுவினார். மேலும் அவர் மனித குலத்தினுடைய, இந்த எல்லா பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொண்டதால், நம்முடைய இடத்திலிருந்து இந்தப் பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படித் தான், இயேசு கிறிஸ்து, நம்முடைய மீட்பின் உண்மையான கர்த்தராக முடிந்தது.
இதைப் போல, நம்முடைய பாவங்களுக்காக நாம் நிச்சயமான மரணத்தைச் சந்தித்து, தண்டிக்கப்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இதை நாம் தெரிந்து கொண்டு உணரவேண்டும். நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்து, இந்த உலகத்திற்கு வந்ததின் மூலம், நம்மை மீட்டுள்ளார் என்றும், நமக்காக பலியானார் என்றும் அதாவது, அவருடைய ஞானஸ்நானத்தின் மீட்பின் வேலையின் மூலமும், கொல்லப்படுதலின் மூலமும், உயிர்த்தெழுதலின் மூலமும், இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவியுள்ளார் என்றும், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை முழுமையாக இரட்சித்த்¡ர் என்றும் நாம் உணரவேண்டும். இயேசு நமக்கு இரட்சிப்பின் பரிசை கொடுத்துள்ளார் என்றும் அவர் நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்றியதால், நமக்காக இந்த நிறைவேற்றிய இரட்சிப்பை அவருடைய பரிசாக கொடுத்துள்ளார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றினார், இதனால் ஒருவர் விசுவாசிப்பதாக மட்டும் இருந்தாலும், மேலும் ஒருவர் ஏற்றுக்கொள்வதாக மட்டும் இருந்தாலும், அவனோ/அவளோ நிச்சயமாக இரட்சிக்கப்படுவார்கள்.
இதை நாம் உணரவேண்டும் என்பதற்கு, ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகாரத்தினுடைய வாயில் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டு இருந்தது. இந்த ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வழக்கு மன்றத்தினுடைய வாயிலை நாம் திறந்து அதற்குள் நுழைந்தால், தகன பலி பீடத்தை நாம் ஏன் முதலில் காண்போம் என்பதற்கு இதுவும் காரணம். தகன பலி பீடத்தில் கொடுக்கப்பட்ட காணிக்கைகள், இயேசு கிறிஸ்து நம்மை இரட்சித்துக்கொண்ட இரட்சிப்பின் முறையின் முன் நிழலாய் இருந்தது. தகனபலி பீடத்தின் மீது பலியாக்கப்பட்ட காணிக்கைகள், கைகளை வைப்பதின் மூலம் பாவிகளுடைய பாவங்களைத் தம் மீது ஏற்றுக்கொண்டு பாவிகளுடைய இடத்திலிருந்து மரணத்திற்கு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. பின்னர், பலி காணிக்கையினுடைய இரத்தம் பலி பீடத்தினுடைய கொம்புகள் மீது ஊற்றப்பட்டு மீதியுள்ளது தரையின் மீது தெளிக்கப்பட்டது. பின்பு, மிருகத்தினுடைய மாமிசத்தையும், கொழுப்பையும், சுட்டெரிக்கப்பட்ட காணிக்கையாக, பலி பீடத்தின் மீது அவர்கள் இட்டார்கள். இந்த முறைகள் மூலமாக தான், பலி காணிக்கைகள் கர்த்தருக்கு கொடுக்கப்பட்டன. பலி காணிக்கையினுடைய இந்த எல்லா அம்சங்களும், இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சகரான முறையைப் போலவே சரியாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பலி காணிக்கையின் மூலம் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, இந்த வழியில் நம்மை மீட்பார் என்று கர்த்தர் நமக்கு காண்பித்துள்ளார்.
தகன பலி பீடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பலி மிருகத்தின் மீது பாவிகளுடைய கைகள் தவறாமல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் தான், ஆசரிப்புக்கூடாரம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றி நமக்குச் சொல்லுகிறது. இந்த உலகத்திற்கு வந்து மனித குலத்தினுடைய பாவங்களை தன் மீது எடுத்துக் கொள்வதற்காக இயேசு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். பிதாவாகிய கர்த்தருக்கு முன்பு, உலகத்தினுடைய எல்லா பாவிகளுக்காகவும் பலி காணிக்கையாக ஆவதற்கு கிறிஸ்து பெற்றுக்கொண்ட ஞானஸ்நானமானது இரட்சிப்பின் ஒப்பனையாக இருக்கிறது.
இந்த ஆசரிப்புக்கூடாரத்தின் மூலம், நாம் தெளிவான விசுவாசத்தை பெற்றுக்கொள்ள முடியும். தலைமை ஆசாரியன் கைகளை வைப்பதின் மூலம், பாவநிவர்த்தி நாளன்று பலி காணிக்கை இஸ்ரவேல் மக்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவும், அவர்களுடைய எல்லாப் பாவங்களும் (லேவியராகமம் 16), இப்பொழுது அதற்குள் செலுத்தப்பட்டுள்ளதால், அவர்களுடைய இடத்தில் இருந்து அது பலியாக்கப்பட வேண்டியிருந்ததைப் போல, நம்முடைய பாவங்களை அவர் மீது எடுத்துகொள்வதற்காகவும், இந்த பாவங்களுக்காக நம்முடைய சொந்த பலி காணிக்கை ஆவதற்காகவும், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, நம்முடைய பலி காணிக்கையாகி, இதன் மூலம் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் இரட்சித்துள்ளார். இப்பொழுது நாம் இந்த அன்பின் இரட்சிப்பை முழுமையாக விசுவாசிக்கலாம். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமே கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள, இந்த அன்பின் மீட்பிற்காக, நாம் நன்றி கூறி, அவருக்கு நம்முடைய கடனைத் திரும்பத் தர முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி ஒருவர் எவ்வளவு ஞானமுள்ளவராக இருந்தாலும் சரி, அவனோ/அவளோ விசுவாசிக்க வில்லை என்றால், பின்பு எல்லா ஞானமும் பயனற்றது, இதைப் போல, இயேசு கிறிஸ்துவினுடைய ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது என்று நாம் உணர்ந்து, விசுவாசிக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்திற்கு மூன்று வாயில்கள் இருந்தன. இவை எல்லாமே இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டிருந்தன. மக்கள், அவர்களுடைய அறியாமையால், ஆசரிப்புக் கூடாரத்தினுடைய ஒவ்வொரு வாயிலைப் பற்றியும் வித்தியாசமாக வெளிப்படுத்தலாம்.
நூல்களை வரிசைப் படுத்தும் போது முதலாவது வரும் நூல் இளநீலமாகும், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை இதனைத் தொடர்ந்து வருகின்றன. இப்படி இதனை அமைத்தால் மட்டுமே அதனை ஆசரிப்புக் கூடார வாசல் என்று நம்மால் அழைக்க முடியும், ஏனெனில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இப்படியாவே ஆசரிப்புக் கூடாரதை அமைக்க வேண்டும் என கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டார்.
வாயில்கள் இப்படியாக அமைக்கப் படவேண்டும் என்பதற்கு ஒரு காரணம் இருந்தது. கன்னி மரியாளின் மூலமாக, மனித் சரீரத்திலே, மனித குலத்தின் இரட்சகராக இயேசு கிறிஸ்து இப்பூமியில் பிறந்திருந்தாலும், முதலாவதாக, அவர் நம்முடைய பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொள்ளும்படியாக ஞானஸ்நானம் பெற்றிருக்காவிட்டால், அவர் சிலுவையில் அறையப் பட்டிருக்கவும் மாட்டார், மரித்திருக்கவு மாட்டார். இளநீல நூல் முதலாவதாக நெய்யப் பட்டிருக்க வேண்டும், ஆகவே அதன் முக்கியத்துவமும் பெரியது.
 
 
நாம் யாரை விசுவாசிக்க வேண்டும்?
 
ஆகவே, நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்த இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்க வேண்டும். தேவகுமாரரும், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அளித்த இரட்சிப்பை நாம் விசுவாசிக்கும் போதே நம்மால் மறுபடியும் பிறக்க முடியும். தேவ குமாரரை நமது இரட்சிப்பின் தேவனாக விசுவாசிப்பதுடன், அவர் இப் பூமிக்கு வந்தார் எனவும், நமக்காக அவர் ஞானஸ்நானம் பெற்றபோது நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார் எனவும், நமது ஆக்கினைகளை அவர் சிலுவையில் பெற்றார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது மட்டுமே நம்முடைய இரட்சிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
தன்னுடைய ஞானஸ்நானத்தைத் தவிர வேறு எந்த வழிகளிலும் நமது பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொள்வதற்கு இயேசு கிறிஸ்துவிடம் வேறு வழிகளிருக்க வில்லை, இந்த மிகச் சரியான முறையின் மூலமாக நம் பாவங்களைச் சுமந்த பிறகே, அவரால் சிலுவைக்குச் சென்று, தன் இரத்தத்தைச் சிந்தி அங்கே மரிக்க முடியும். அவர் தேவ குமாரராயிருந்தாலும், நமது இரட்சகராக இப்பூமிக்கு வந்திருந்தாலும், தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம் பாவங்களை அவர் தன் மீது பெற்றிருக்கவில்லையென்றால், நம் இரட்சிப்பை இவ்வுலகில் கண்டிருக்க முடியாது.
ஆகவே, வேதாகமம் விளக்கமாகக் கூறும் சான்றுகளை வைத்து உங்கள் பாவங்கள் ஏற்கனவே துடைக்கப்பட்டு விட்டன என முற்றிலுமாக உணர்த்தப்படுவது அவசியமாகும்.
நீங்கள் நன்றாக கடன்பட்டிருப்பதாக கருதுவோமாக. அப்பொழுது உங்களிடம் ஒருவர் கூறுகிறார். "கவலைப் படாதீர்கள்; நான் உங்களுக்காக செலுத்திவிடுகிறேன். எனவே கவலைப் பட வேண்டியதில்லை; நான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறேன்." நீங்கள் இந்த நபரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் இதனையே தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார், "கவலைப் பட வேண்டியதில்லை என நாம் உங்களிடம் கூறவில்லையா? நான் அதனைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேனே!" அவரை நாம் ஏன் விசுவாசிக்கவில்லை என்று அந்நபர் கோபப்படுகிறார். "நான் அதனைச் செலுத்தி விட்டேன்; என்னை நம்பினால் போதும்," என்று இந்த நபர் ஒவ்வொரு நாளும் உங்களிடம் கூறினாலும், அவர் உண்மையாகவே உங்கள் கடனை செலுத்தியிராத போது, அவரை விசுவாசிப்பதின் மூலம் உங்கள் கடன் தீர்க்கப் பட்டு விட்டதா? அப்படி இல்லை!
"நீ என்னை நம்பினால், உன் கடனெல்லாம் அடைக்கப் பட்டுவிடும்" என்று அவர் எத்தனை உறுதியாகக் கூறினாலும், அவர் உண்மையாகவே உங்கள் கடனை செலுத்தியிராத போது, உங்கள் கடன் அப்படியே தானிருக்கிறது, இந்நபர் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், "நீங்கள் என் கடனை அடைத்து விட்டீர்களா?" அவர் உங்களிடம் திரும்பத் திரும்பக் கூறுகிறார், "நீ ஏன் இவ்வளவு சந்தேகப்படுகிறாய்? என்னை நிபந்தனையின்றி விசுவாசி! நான் அதனைச் செலுத்தி விட்டேன் என்று உன்னிடம் கூறினேனே. நீ செய்ய வேண்டியதெல்லாம் என்னை விசுவாசிக்கவேண்டியது மட்டுமே, ஆனால் நீ இன்னமும் சந்தேகம் உள்ளவனாகவே இருக்கிறாய்! இப்படி இருக்காதே!" ஆகவே, உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள் எனக் கொள்வோம். ஆனால் நீங்கள் எத்தனையாக விசுவாசித்தாலும், அவர் உங்கள் கடனைத் தீர்க்கவில்லை எனில், அவர் கூறிய எல்லாமே பொய்யாகும்.
 
 
இன்றைய கிறிஸ்தவர்களின் விசுவாசம் இப்படித்தானிருக்கிறது
 
"இயேசு தன்னுடைய விலையேறப்பட்ட இரத்தத்தை சிலுவையில் சிந்தி உங்களை இரட்சித்தார். உங்கள் பாவங்களுக்கான தண்டனையை அவர் பெற்றுக்கொண்டார். இப்படித்தான் அவர் உங்களை இரட்சித்தார்," என்று இன்றைய கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அநேக போதகர்கள் தம்முடைய சபையாரிடம் இப்படியாகத்தான் பிரசங்கிக்கிறார்கள். சபையிலுள்ள ஒருவர் எழுந்து நின்று "ஆனால் நான் இன்னமும் பாவியாக இருக்கிறேனே" என்று கூறினால், அவர்கள் பதில் கூறுகிறார்கள், "உங்களிடம் சிறிதளவு விசுவாசம் இருப்பதே இதற்கான காரணம். விசுவாசியுங்கள்! உங்கள் சந்தேகமே மிகப் பெரியப் பாவமாயிருக்கிறது!" "ஐயா, நானும் கூட விசுவாசிக்க விரும்புகிறேன். ஆனால் எத்னால் விசுவாசிக்க முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை." "நான் விசுவாசித்தாலும் கூட ஏன் பாவம் நிறைந்தவனாக இருக்கிறேன் என்ற் எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன்." "உங்களிடம் போதுமான விசுவாசம் இல்லை. நீங்கள் இன்னமும் அதிகமாக விசுவாசிக்கவேண்டும். ஒரு மலையின் மீது ஏறி உபவாசமிருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உணவைத் தவிர்த்து விசுவாசியுங்கள்." "உணவைத் தவிர்க்காமல் என்னால் விசுவாசிக்க முடியாதா?" "இல்லை, நீங்கள் உபவாசிக்கும் போது, விசுவாசிக்க முயற்சி செய்யவேண்டும்."
இன்றைய போதகர்களில் அநேகர் விசுவாசிக்கும் படி உங்களிடம் கூறுகிறார்கள், ஆனால அவை உங்கள் பாவப் பிரச்சினைகளைத் தீர்க்காத போது, விசுவாசிக்காததற்காக உங்களைக் கடிந்து கொள்வார்கள். நீங்களும் விசுவாசிக்க முயற்சி செய்கிறீர்கள் ஆனால் விசுவாசிப்பது இன்னமும் கடினமானதாக இருக்கிறது, அல்லது நீங்கள் கண்மூடித்தனமாக விசுவாசிக்கலாம், ஆனால் உங்கள் பாவப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இங்கு நிகழ்ந்த தவறு என்ன? இதனை எதனால் விளக்க முடியும்? ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக இயேசு கிறிஸ்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாததால், உண்மையானதும் உறுதியானதுமான ஒரு விசுவாசத்தை அவர்களால் பெற முடியாது. அவர்கள் வெறும் மாயையை மட்டுமே விசுவாசிப்பதால், அதனை எத்தனையாய் விசுவாசித்தாலும், அதனால் அவர்களின் பாவப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாமல் விசுவாசம் வந்து விடுகிறதா? அப்படி இல்லை! பாவப் பிரச்சினையானது எவ்வாறு தீர்க்கப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து அதனை விசுவாசிப்பதின் மூலமே, முழு நம்பிக்கையும் வருகிறது. "நான் உம்மைச் சந்தேகித்தாலும், நீர் என் பாவப் பிரச்சினையை ஏற்கனவே தீர்த்து விட்டீர் என்பது எனக்கு தெளிவாகிறது. விசுவாசிக்கக் கூடாது என நான் முயன்றாலும், உம்முடைய இரட்சிப்பை விசுவாசிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை, ஏனெனில் இந்த இரட்சிப்பு நிச்சயமானதாயிருக்கிறது. என்னுடைய பிரச்சினையைத் தீர்த்தமைக்காக உமக்கு நன்றிகள்." வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் முதலில் சந்தேகப் பட்டாலும் கூட, நம்முடைய இரட்சிப்பின் அத்தாட்சி மிகவும் உறுதியானதாக இருப்பதால், நம்மால் தொடர்ந்து சந்தேகிக்க முடியாது. நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாகவும் அதன் அத்தாட்சியாகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ற சான்றிதலை இயேசு நமக்கு வழங்கியுள்ளார். "இப்படியாக உன் கடன்களை எல்லாம் அடைத்து தீர்த்தேன்." இந்த சான்றிதழை நாம் பார்க்கும் போது மட்டுமே, நம்முடைய எல்லாப் கடன்களும் அடைக்கப்பட்டன என்பதை நம்மால் அறிந்து உண்மையான விசுவாசத்தைப் பெற முடியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது இரட்சகர் என்றும், இரட்சகரை நாம் விசுவாசிப்பதாக நாம் கூறிக்கொண்டாலும், அவர் நம்மை எப்படி இரட்சித்தார் என்பதற்கும் எப்படி நம் பாவங்கள் கழுவப்பட்டன என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லாத போது, கர்த்தரை நாம் விசுவாசிப்பதாக அறிவித்தாலும் கூட, அதன் படி நம்மால் விசுவாசிக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் முழுப் பாவங்களுக்குமான கிரயம் கொடுக்கப்பட்டதற்கான அத்தாட்சியை நாம் கண்டிராவிட்டால், அதன் மீது முழு நம்பிக்கை வைக்க முடியாது. இந்த சான்றிதழைப் பார்க்காமல் விசுவாசித்த மக்களிடம் உறுதியான விசுவாச உணர்ச்சி இருப்பதாக முதலில் தெரிகிறது, ஆனால் அவர்களுடைய விசுவாசம் கண்மூடித்தனமானது. இது மதவெறியுள்ள விசுவாசம் மட்டுமேயாகும்.
 
 
மதவெறியுள்ள விசுவாசத்தை நல்ல விசுவாசமாக நீங்கள் கருதுகிறீர்களா?
 
மதவெறியுள்ள விசுவாசத்தை உடைய போதகர் ஒருவர் மற்றவர்களிடமிருந்தும் இத்தகைய மதவெறியுள்ள விசுவாசத்தை எதிர்பார்த்தால் அவரை எப்படி விரும்புவீர்கள்? "விசுவாசியுங்கள்! அக்கினியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! அக்கினி, அக்கினி, அக்கினி! பரிசுத்த ஆவியானவர் அக்கினியைப் போன்றவர், அக்கினியால் எங்களை நிரப்பும்! தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று விசுவாசிக்கிறேன்! அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறேன்! அவர் உங்கள் அனைவரையும் செல்வந்தர்களாக்குவார் என்று விசுவாசிக்கிறேன்! அவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று விசுவாசிக்கிறேன்! அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறேன்!" இத்தகைய ஒரு போதகர் இத்தகைய ஒரு காட்சியை ஏற்படுத்தும் போது, சபையாரின் காதுகளில் ஒலியேற்படுகிறது, இருதயம் வேகமாகத் துடிக்கிறது. "அக்கினி, அக்கினி, அக்கினி!" என்று அவர் கத்துவது, ஒரு சிறந்த ஒலி அமைப்பின் மூலம் அருமையாக அக்கட்டிடத்தில் பரப்பும் போது, அவருடைய கம்பீரமான குரலினால் இருதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. அவர்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டப்பட்டன, அது ஏதோ பெரியதொரு விசுவாசம் இறங்கியதைப் போலிருக்கிறது, "தேவனாகிய இயேசுவே, வாரும்! ஓ, பரிசுத்த ஆவியானவரே வாரும்!"
இந்நேரத்தில், "நாம் இப்போது ஜெபிப்போமாக. டூப்போது பரிசுத்த ஆவியானவர் இறங்கி நம்மை நிரப்பிகிறார் என நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுவதின் மூலம், சபையோரின் உணர்வுகளை இன்னமும் அதிகமாகத் தூண்டி விடுகிறார். இசைக் குழுவினர் கீர்த்தனைய அதனைத் தொடர்ந்து இனிமையாக இசைக்கிறார்கள், மக்கள் தம் கைகளை மிக உயரமாக உயர்த்துகிறார்கள், ஆர்வத்தினால் அதிகம் உந்தப் படும் வேலையில், அதன் பெரிய வெளிப்பாடு முடிவில் வருகிறது. "நாம் இப்போது நம் காணிக்கைகளைக் கொடுப்போம். குறிப்பாக, இந்த சாயங்காலத்தில், உங்களிடமிருந்து ஒரு சிறப்புக் காணிக்கையை கர்த்தர் விரும்புகிறார். இந்த சிறப்பு காணிக்கையை நாம் அனைவரும் கொடுப்போமாக," என்று வரிசையில் நிற்பவர்களிடம் கூறுகிறார்.
உணர்ச்சி வசப்பட்ட மக்கள் தம் பைகளைக் காலி செய்யத் தொடங்குகிறார்கள். சேகரிக்கப் பட்ட எல்லா பணத்தையும் அடைத்து வைக்கவும், பூச்சி வலைகளைப் போன்ற மிகப்பெரிய பல காணிக்கைப் பைகளையும் வைக்கும்படியான மிகப்பெரிய பிரசங்கப் பீடத்தை கள்ளப் போதகர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளார். அப்போது இசைக் குழுவினர் கீர்த்தனைகளை இசைக்கத் தொடங்குகிறது, மேலும் மக்களின் இருதயம் பேருவகை அடைந்திருக்கிறது, இந்நிலையில், பூச்சிப் பிடிப்பவர்களை (காணிக்கைப் பைகளை வைத்திருக்கும் ஊழியர்களை), கூட்டத்திற்குள் அனுப்புகிறார்.
அதிக காணிக்கை அதிக ஆசீர்வாதம் என பொய்கூறுவதின் மூலம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, இத்தகைய கள்ளப் போதகர்கள் அவர்களின் இருப்பை காலி செய்து, அவர்களைக் கண்ணீர் கடலுக்குள் தள்ளி விடுகிறார்கள். அதற்கான காரணங்களையும், திட்டங்களயும் தெரிவிக்காமல், அவர்களை உணர்வுகளால் முழுகடித்து, தாம் கொடுப்பதைக் கூட அறியாமல், அவர்களிடம் உள்ள எல்லா காசையும் கொடுத்து விடச் செய்கிறார்கள். இது கர்த்தரின் வார்த்தையின் அடிப்படையில் அமைந்ததும் அல்ல, அல்லது பிரசங்கதின் அடிப்படயில் அமைந்ததும் அல்ல, இது வெறிப்பிடித்த குருட்டுத்தனமான திருட்டாகும். இதைப் போல், மதவெறிப் பிடித்த போதகர்கள் தம்முடைய குறிக்கோளை அடையும் படி, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறார்கள்.
நம் தேவன் தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்பதயும், இயேசு கிறிஸ்துவே நமது இரட்சகர் என்றும் நாம் விசுவாசித்தால், நாம் அசைக்கப்படாமல், சமாதானத்துடனேயே இருப்போம். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் தன் தோல்களில் சுமந்து, சிலுவையில் மரித்தார் என்பதே நம்மை ஊக்கப் படுத்துவதாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசுவே நம் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக தன் மீது ஏற்றுக் கொண்டு, இப்பாவங்களுக்கான கிரயம் செலுத்துவதற்காக மரித்தார் என்பதை நாம் எண்ணும்போது, நாம் மிகவும் நன்றியறிதல் உடையவர்களாகிறோம், நம்முடைய இருதயங்கள் பெரிதான மகிழ்ச்சியால் நிரப்பப் படுகிறது. ஆயினும், நம்மிருதயங்களிலுள்ள இந்த அமைதியான உணர்வுகள் இந்த உலகில் உள்ள வேறெதுவை விடவும் மிகப் பெரியது; எந்த ஒரு நேசமோ, அல்லது இப் பூமியில் உள்ள மிகவும் உயர்ந்த வைரக்கல் பரிசோ, இதனை விட அதிகமாக ஊக்கப்படுத்தமுடியாது.
இதற்கு மாறாக, மதவெறியர்களின் உணர்ச்சியூட்டும் உணர்வுகளால் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது. அவர்கள் இந்த உணர்வுகளினால் சிறிது காலம் சஞ்சரித்தாலும், அவர்கள் அன்றாடம் பாவம் செய்யும் போது, அந்த பாவங்களினால் குத்தப் பட்டவர்களாய், வெட்கத்தினால் தம் முகத்தை மறைப்பதை தவிர்க்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள். "நமக்காக இயேசு நம் பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து சிலுவையில் மரித்திருக்கும் போது, இன்னமும் நான் ஏன் அனுதினமும் பாவம் செய்து கொண்டிருக்கிறேன்?" ஆகவே அவர்கள் தம் தன்மையை இழந்து, காலம் சிறிது செல்லும்போது, எவ்வித உணர்தலும் இல்லாதவர்களாகி விடுகிறார்கள்; இதற்கு மேலும், அதிக வெட்கமுடையவர்களாய், கர்த்தருக்கு முன் செல்வதையும் நிறுத்தி விடுகிறார்கள்.
இதனால் தான் கர்த்தர் நமக்கு சர்வாங்க தகன பலிபீடத்தைக் காட்டினார். பலியிடும் முறைக்கு ஏற்றபடி சர்வாங்க தகன பலிபீடத்தில் கொடுக்கப்படும் பலி காணிக்கையானது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறேதுமில்லை. சர்வாங்க தகன பலிபீடமானது, இயேசு இப்பூமிக்கு வந்தார் என்பதையும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நம்மை ஒரேதரமாக இரட்சித்தார் என்றும் அறிவிக்கிறது. சர்வாங்க தகன பலிபீடத்தைக் நாம் காணும்படிச் செய்து, அதனை விசுவாசிப்பதின் மூலம் நாம் இரட்சிப்படையும் படிச் செய்தார்.
 
 
இக் காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
 
மறுபடியும் பிறந்தவர்களாகிய நமக்கு இக் காலத்தில் செய்ய வேண்டியவைகள் அநேகம் இருக்கின்றன. முதலாவதாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதும் நாம் பிரசங்கிக்கவேண்டும். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றைக் குறித்த எந்த அறிவும் இல்லாதவர்களுக்கு சத்தியத்தை நாம் அறிவிக்க வேண்டும், இதன் மூலமாக எரியும் நரகத்தண்டனையிலிருந்து அவர்கள் இரட்சிக்கப் பட நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். ஏன்? ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து கொள்ளாமலேயே, இயேசுவை பின்தொடரும் மக்கள் இருப்பதே இதற்கான காரணம்.
இந்த் சத்தியத்தை அவர்களுக்கு பரப்புவதற்கு முன்னர், நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. உலகம் முழுவதும் அனுப்பப்படும் புத்தகங்களை முதலாவதாக நாம் வெளியிட வேண்டும். மொழிப்பெயர்த்தல், சரிபார்த்தல், திருத்துதல் ஆகியவற்றுடன், இதனை அச்சடிப்பதற்கும், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதற்கும் பணத்தை ஆயத்தம் செய்ய வேண்டும், இத்தகைய பல செயல்கள் இருக்கின்றன.
ஆகவே நம் உடன் ஊழியர்களையும் போதகர்களையும் பார்க்கும் போது, அவர்கள் எத்தனை வேலைகளைச் செய்கிறார்கள் என்பதை நம்மால் காணமுடிகிறது. கர்த்தரின் ஆலயத்தில் உள்ள பரிசுத்தவான்களும் ஊழியர்களும் இப்படியாக கடினமாக உழைப்பதினாலே, சரீரப்படியாக அவர்கள் களைத்துப் போகிறார்கள். மரத்தான் ஓட்டப்பந்தயத்தின் 42.195கி.மீ. தூரத்தை ஓட்ட வீரர்கள் சுற்றி ஓடுகையில், ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு, அவர்கள் மிகவும் களைப்படைந்து விடுவதால் தாம் ஓடுகிறோமா, அல்லது வேறு எதையோ செய்கிறோமா எனக் குழம்பி விடுவதாக கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால், மிக அழுத்தமான சூழ்நிலைகள் மனச்சூனியத்தை உருவாக்கும். நாம் நற்செய்திப் பணியாகிய ஓட்டத்தின் இந்நிலையை நாம் அடைந்து விட்டோம். நற்செய்திக்காக நம் வாழ்க்கையை வாழுவது மரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் செய்வதைப் போல் அதிகத் தூரம் உள்ள் இலக்கை நோக்கி விடாமல் ஓட வேண்டிய ஓட்டமாகும். தேவன் திரும்பி வரும் வரையில், நற்செய்திக்காக நாம் தொடர்ந்து ஓட வேண்டிய நிலையில் இருப்பதால், நாம் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.
தேவன் நம்முடனே இருப்பதாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி நம்முடனே இருப்பதாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தேவன் நம்மை இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பதாலும், மிக நிச்சயமான சத்தியத்தை நாம் விசுவாசிப்பதாலும், புதிய பலத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இயேசு நமக்கு இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்ததினாலே, நீங்களும் நானும் வரத்தைப் பெற்றுக் கொண்டோம். ஆகவே மாமிசத்தின் துன்பங்களால் நம்மைத் தடுக்க முடியாது. மாறாக, அதிக கஷ்டத்தை நாம் அனுபவிக்கும் போது, நீதிமான் அதிக உறுதியையும் பெறுவான். தேவனுக்கு நாம் உண்மையாகவே நன்றி கூறுகிறேன்.
ஆவிக்குரியபடி, நமது இருதயங்களிலும், நம் சிந்தனைகளிலும், நம் சுற்றுமுற்றத்திலும், நம் தேவன் நமக்குக் கொடுத்த புதியபலத்தை நம்மால் உணரமுடியும், தேவன் நம்முடனே இருக்கிறார். அவர் நமக்கு உதவி செய்வதையும், நம்மை அவர் தாங்குவதையும், அவர் நம்முடனே இருப்பதையும் நம்மால் உணர முடிவதால், அவருக்கு இன்னமும் அதிகமாக நன்றி கூறுகிறோம். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13). ஆகவே, தேவன் நமக்கு பலமளிக்காவிட்டால் நம்மால் எதையுமே செய்ய முடியாது என்று ஒவ்வொருநாளும் அறிக்கைச் செய்கிறோம். இயேசு கிறிஸ்து நமக்காக ஞானஸ்நானம் மட்டுமே பெறவில்லை, ஆனால் சிலுவையில் அறையப்பட்டதின் மூலமாக நமக்காக பலியானார், மேலும் அவர் தன் மரணத்தைச் சந்தித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, அதன் மூலமாக நம் இரட்சகரானார். சர்வாங்க தகன பலிபீடத்தை நாம் காணும் போதெல்லாம், இந்த சத்தியத்தை நம்மால் நினைவு படுத்த முடியும்.
சர்வாங்க தகன பலிபீடமானது சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டதுடன், ஒரு தடிப்பான வெண்கலத் தகட்டால் மூடப்பட்டிருந்தது. அதன் உயரம், நடுப்பாகத்தில் 1.35 மீட்டராக இருந்தது, அதன் உட்புறத்தில், 68 செ.மீ. உயரமுடைய வெண்கலச் சட்டங்கள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப் பட்டிருந்தன. பலி காணிக்கையின் மாமிசம் இந்த சட்டங்களில் இடப்பட்டு எரிக்கப்பட்டது.
சர்வாங்க தகன பலிபீடத்தை நாம் காணும் போது, நாம் எப்படி இருக்கிறோம் என்று நமக்கு நாமே பார்க்க வேண்டும். இயேசு கிறிஸ்து தன் மாமிசத்தில், ஞானஸ்நானத்தின் மூலமாக நம் பாவங்களை ஏற்றுக் கொண்டதையும், அதனால் சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தி, நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை அவர் அடைந்ததையும் நாம் பார்க்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்காகவும் அதற்கான ஆக்கினைகளுக்காகவும், கர்த்தருக்கு முன்னதாக மரிப்பதை உங்களாலும் என்னாலும் தவிர்க்க முடியாது. நம்முடைய பாவங்களாலும் அதற்கான ஆக்கினையினாலும், மரிப்பதையும், சபிக்கப் படுவதையும் உங்களாலும் என்னாலும் தவிர்க்க முடியாது. ஆனால, இவ்வுலகிற்கு நித்திய பாவநிவர்த்தியாக வந்த இயேசு கிறிஸ்து, ஞானஸ்நானம் பெற்று, நமக்காக மரித்ததினாலே, பழைய ஏற்பாட்டு பலிமுறையைப் போல, நாம் அனைவரும் இரட்சிக்கப் பட்டோம்.
பலி மிருகமானது, உயிருடனிருக்கும் போது, பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருந்தாலும், அது கைவைப்பதின் மூலம் பாவங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, அதன் கழுத்தறுப்பட்டு, இரத்தம் சிந்தி மரிப்பது எத்தனைக் கோரமானது? இப்படி நாம் கோரமாக மரிக்க வேண்டியதிருக்க, நம்முடைய ஆக்கினையிலிருந்து தப்பிக் கொண்டது, எத்தனை பெரிதான ஆசீர்வாதாமாயிருக்கிறது. தேவன் நமக்கு இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்ததினாலேயே இந்த ஆசீர்வாதம் சாத்தியமாகியது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டதைப் போல், இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு மனித சரீரத்தில் வந்து, தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும், சிலுவை இரத்தத்தினாலும் உங்களையும் என்னையும் இரட்சித்து, இரட்சிப்பின் வரத்தை நமக்கு வழங்கினார். இப்படியாக நம் தேவன் இரட்சிப்பின் வரத்தை நமக்கு வழங்கினார்௮இதனை உங்களிருதயத்தினால் விசுவாசிக்கிறீர்களா? இயேசுவின் நேசமாகிய இந்த இரட்சிப்பின் வரத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நம் அனைவரிடமும் இந்த விசுவாசம் இருக்க வேண்டும்.
சர்வாங்க தகன பலிபீடத்தை நாம் காணும் போது, இயேசு கிறிஸ்து நம்மை இவ்வழியாக இரட்சித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு இரட்சிப்பின் வரத்தை வழங்க இப்படியாக பலியானார். பலி காணிக்கையின் மீது கைகள் வைக்கப் பட்டு, அந்த பலி மிருகம் மரிக்கும் படியாக இரத்தம் சிந்துவதைப் போல, இப்படியாக பாடுபட்டு, இயேசு நமக்கு இரட்சிப்பை வழங்கினார். இப்படியாகவே அவர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். நாம் இதனை கண்டு, கர்த்தருக்கு முன்னதாக இதனை விசுவாசித்து, நம் முழு இருதயத்துடனே அவருக்கு நன்றி கூற வேண்டும்.
கர்த்தர் நமக்கு வழங்கிய இரட்சிப்பின் வரத்தையும் அன்பையும் விசுவாசத்தின் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார். நீரினாலும் ஆவியாலும் வந்து அவர் நிறைவேற்றிய ஞானஸ்நானத்தின் இரட்சிப்பையும் சிலுவையின் இரத்தத்தையும் நம்மிருதயங்களில் நாம் விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நம் தேவனின் அன்பை உங்கள் இருதயங்களினால் விசுவாசிப்பீர்கள் என்றும், அவற்றை அவரின் இரட்சிப்பின் வரமாக ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இதனை நீங்கள் உண்மையாகவே உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்வீர்களா?
 
 
உங்களுக்காக இவ்வழியில் பலியானது யார்?
 
ஒருமுறை ஒரு சாட்சி கூறும் துண்டு பிரசுரத்தைப் பார்த்தேன், "உனக்காக மரிக்கப்போவது யார்? உன்னை மகிழ்வித்த யாரை இன்று சந்தித்தாய்? இயேசு கிறிஸ்து உனக்காகப் பலியானார். உன்னிருதயம் இதனால் மகிழவில்லையா?" உங்களுடைய பாவங்களைத் துடைத்துவிட, ஞானஸ்நானம் பெறுவதின் மூலம் உங்கள் பாவங்களைச் சுமந்து, உங்களிடத்திலிருந்து மரிக்கப் போவது யார்? அவனின்/அவளின் அன்பினை உங்களுக்கு காட்ட, எவன்/எவள் தன் இரத்தத்தைச் சிந்தி உங்களுக்காக மரிப்பார்? உங்களால் எப்போதாவது இத்தகைய பலியாக முடியுமா? உங்கள் உறவினர்களா? உங்கள் பிள்ளைகளா? உங்கள் பெற்றேர்களா?
அவர்கள் யாருமே இல்லை! உங்களைப் படைத்தது கர்த்தரே. உங்களைக் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு, மனித மாமிசத்தில் கர்த்தர் இப்பூமிக்கு வந்து, உங்கள் பாவங்களை தன்மீது ஏற்றுக்கொள்வதற்கு ஞானஸ்நானம் பெற்று, உங்கள் பாவங்களுக்கான ஆக்கினையைப் பெற்றுக் கொள்ள சிலுவையில் அறையப் பட்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் உங்கள் இரட்சகராகி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, உங்களுக்கு இரட்சிப்பின் வரத்தையும் அன்பையும் வரமாகக் கொடுத்ததுடன், இன்னமும் வாழ்ந்து கொன்டிருக்கிறார். இந்த அன்பின் இரட்சிப்பை நீங்கள் உங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் இருதயங்களில் விசுவாசிப்பீர்களா?
விசுவாசிக்கும் யாவரும் தேவனைப் பெற்றுக் கொள்வார்கள், அவரைப் பெற்றுக் கொள்ளும் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். அவரைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதின் பொருள், கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பின் இரட்சிப்பை நீங்கள் பெற்றுக் கொள்வதாகும். பாவமன்னிப்பும், பாவங்களைச் சுமத்தலும், பாவங்களின் ஆக்கினையைப் பெற்றுக் கொள்வதுமாகிய இந்த அன்பை நமது இருதயங்களினால் விசுவாசிப்பதின் மூலம், நாம் இரட்சிக்கப் பட்டோம். இந்த விசுவாசமே அன்பின் இரட்சிப்பை பெற்றுக் கொள்கிறது.
ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் இயேசு கிறிஸ்துவை அறிவிக்கின்றன. கர்த்தர் நம்மிடமிருந்து எந்தப் பலியையும் எதிர்பார்க்கவில்லை. அவர் நமக்குக் கொடுத்த அன்பின் இரட்சிப்பை நாம் நம் இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதையும் அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. "உனக்கு அன்பின் இரட்சிப்பைக் கொடுப்பதற்கு, நான் இந்த பூமிக்கு வந்தேன். பழைய ஏற்பாட்டு பலி காணிக்கைகளைப் போல, கை வைத்தலின் மூலம் உன் எல்லாப் பாவங்களையும் என் மீது சுமத்துவதை நான் ஏற்றுக் கொண்டேன், மேலும் இந்த பலி காணிக்கையைப் போல, உன் பாவத்திற்கான கொடூரமான ஆக்கினையை நான் பெற்றுக்கொண்டேன். இப்படித்தான் நான் உன்னை இரட்சித்தேன்." ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுவது இதுவேயாகும்.
இப்படியாக கர்த்தர் நம்மை இரட்சித்திருந்த போதிலும், அவர் நம்மை இத்தனையாய் நேசித்திருந்த போதிலும், நிறைவான அன்பு இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்திருந்தாலும், விசுவாசிக்காவிட்டால், இவற்றினால் எப்பயனும் இல்லை. உங்கள் உணவு உப்புள்ளதாக இருக்கவேண்டுமானால், உப்புச் சட்டியிலிருந்து சிறிது உப்பை முதலில் எடுக்க வேண்டும்; அது போலவே, நீங்கள் உங்கள் இருதயங்களினால் விசுவாசிக்கவில்லை எனில் நிறைவான அன்பு இரட்சிப்பும் முற்றிலுமாக பயனற்றதாகிவிடும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயத்தால் நன்றி கூறி, அதன நம் சொந்த இருதயங்களில் ஏற்றுக் கொள்ளாவிட்டால், இயேசுவின் பலி ஒன்றுமில்லாததாகி விடுகிறது.
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கொடுத்த பலியையும் அன்பையும் நீங்களி அறிந்து, அதன உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டு அதற்காக அவருக்கு நன்றி கூறும் போது மட்டுமே இரட்சிப்பு உங்களுடையதாகிறது. கிறிஸ்துவின் நிறைவான அன்பு இரட்சிப்பை உங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்ளாமல், அதனைத் தலையினால் மட்டுமே புரிந்து கொண்டீர்களானால், அதனால் எப்பயனும் இல்லை.
 
 
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சத்தியத்தைப் பற்றிக் கொள்வது மட்டுமே
 
உங்கள் குழம்பு எவ்வளவு நேரம் அடுப்பில் கொதித்துக் கொண்டிருகிறது என்பது பொருட்டல்ல: நான் அதில் சிறிது உப்பை அதில் போடவேண்டும் என்று மனதால் எண்ணியும், அதனை நீங்கள் செய்யாதிருந்தால், உங்கள் குழம்பில் உப்பிருக்காது. சர்வாங்க தகன பலிபீடத்தில் பலி காணிக்கைகள் கொடுக்கப்பட்டதைப் போல, நம் தேவன் ஞானஸ்நானம் பெற்று பலியானதின் மூலம் உங்கள் பாவங்களிலிருந்து நம் தேவன் உங்களை இரட்சித்தார் என்று உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு அதனை விசுவாசிக்கும் போது மட்டுமே உங்களால் இரட்சிக்கப் படமுடியும். கர்த்தர் இரட்சிப்பின் வரத்தை உங்களுக்குக் கொடுக்கும்போது, நன்றியுடனே அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களை முற்றிலுமாக இரட்சித்தேன் என நம் தேவன் நம்மிடம் கூறும்போது, அதனை விசுவாசிப்பது மட்டுமே நமக்கு இலகுவான ஒன்றாயிருக்கும்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தரின் அன்பு வேண்டா விருப்புடன் கொடுக்கப்பட்டதா? அப்படி இல்லை! நம் தேவனின் அன்பு நிறைவானது. வேறு வார்த்தைகளில் கூறினால், உங்களையும் என்னையும் நம் தேவன் முற்றிலுமாகவும் நிறைவாகவும் இரட்சித்தார். அவர் தன்னுடைய ஞானஸ்நானத்தினால் நம்முடைய பாவங்களைத் தன் மீது நிறைவாக ஏற்றுக்கொண்டதினாலும், நிச்சயமாக அவர் சிலுவையில் மரித்ததினாலும், இந்த அன்பின் மீது எச் சந்தேகமும் நமக்கிருக்க முடியாது. அவர் நம்மை நிறைவாக இரட்சித்து அன்பின் இரட்சிப்பை நமக்கு வரமாக வழங்கினார். கர்த்தர் நமக்குக் கொடுத்த இந்த இரட்சிப்பின் வரத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மிகவும் விலை உயர்ந்த மானிக்கக் கற்களால் செய்யப் பட்ட மிகவும் விலை உயர்ந்த ஒரு அணிகலனை நான் வைத்திருக்கிறேன் என எண்ணவும். அதனை நான் உங்களுக்கு ஒரு பரிசாக கொடுத்தால், நீங்கள் செய்ய வேன்டியதெல்லாம் அதனை உடனே பெற்றுக்கொள்வது தான். அப்படியாவதில்லையா? அதனை உங்களானதாக்குக் கொள்வது எத்தனை எளிதானதும் இலகுவானதுமாயிருக்கிறது? இந்த அணிகலன் உங்களுடையதாவதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அதன் அருகே சென்று அதனைப் பற்றிக் கொள்வது மட்டுமே. அவ்வளவு தான்.
நீங்கள் உங்கள் இருதயத்தைத் திறந்து, ஞானஸ்நானத்தின் மூலமாக எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்திவிட்டீர்களென்றால், உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, உங்கள் வெறுமையான இருதயங்களை சத்தியத்தால் நிரப்ப முடியும். இரட்சிப்பை இலவசமாக கொடுப்பதாக இப்படியாகத் தான் தேவன் கூறினார். அருகே சென்று அதனைப் பற்றிக் கொள்வதினால் இரட்சிப்பு உங்களுடையதாகும்.
எதுவும் கொடுக்காமலேயே, இரட்சிப்பை நமது பரிசாக நாம் பெற்றோம். யார் இதனைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதனைக் கொடுக்க கர்த்தர் விருப்பமுள்ளவராய் இருப்பதினாலே, நன்றியுடனே அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மகிழ்ச்சியுடனே கூட கர்த்தரின் அன்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அவருடைய அன்பினாலே தரிப்பிக்கப்படுவர், இப்படி பெற்றுக் கொண்டவர்கள், அதனைப் பெற்றுக் கொண்டதாலே, அதனைக் கொடுத்தவரின் இருதயத்தைப் பிரியப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்த வரத்தை பெற்றுக் கொள்வதே சரியான செயல். உங்களுக்கு கர்த்தர் கொடுத்த நிறைவான அன்பின் இரட்சிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளும்போது, இந்த உண்மையான இரட்சிப்பின் வரம் உங்களுடையதாகும். ஆனால் இதனை உங்கள் இருதயங்களினால் ஏற்றுக்கொள்ளவில்லை எனில், நீங்கள் எத்தனைக் கடினமாக முயற்சித்தாலும், இரட்சிப்பின் வரம் உங்களுடையதாகவே முடியாது.
நானும் கூட இந்த இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுள்ளேன். "ஆ! இவ்வழியில் நம் தேவன் ஞானஸ்நானம் பெற்றார். இப்படியாக அவர் ஞானஸ்நானம் பெற்றதினால், நம் எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்தார். எனக்காகவே அவர் இறுதியாக ஞானஸ்நானம் பெற்றார். தேவனே, உமக்கு நன்றிகள்!" இதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். ஆகவே, இப்போது, நான் பாவமற்றவன். நிறைவான பாவமன்னிப்பை நான் பெற்றுக் கொண்டேன். நீங்களும் கூட இந்த நிறைவான பாவமன்னிப்பை பெற்றுக் இரட்சிக்கப் பட விரும்பினால், இப்போதே ஏற்றுக் கொள்ளுங்கள்.
அப்போதிலிருந்தே இந்த இரட்சிப்பின் வரத்தைக் குறித்து எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் கூட அதனைக் குறித்து மீண்டுமாக எண்ணும் போது, எனது இரட்சிப்பிற்காக தேவனுக்கு நன்றி கூறுவதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்யமுடியாது என உணர்கிறேன். இந்த இரட்சிப்பின் அன்பு என் இருதயத்தில் இருப்பதினால், அதனை என்னால் மறக்கவே முடியாது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்றுக்கொண்டு அதனால் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டபோது, நான் கர்த்தருக்கு பெரிதும் நன்றியுடையவனாகினேன். இப்படி நடந்து பல ஆண்டுகளாகியும், இன்றும் கூட, அதே நன்றியுடைய இருதயம் என்னிடமிருக்கிறது, அதனை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்கிறேன்.
என்னை இரட்சிப்பதற்காக இயேசு நிச்சயமாக பூமிக்கு வந்து, எனது பாவங்களை எல்லாம் தன்மீது ஏற்றுக்கொள்வதற்காக ஞானஸ்நானம் பெற்று, எனது பாவங்களுக்கான தண்டயாக சிலுவையில் மரித்தார். இவை எல்லாம் எனக்காக செய்யப்பட்டது என்பதை அறிந்தபோது, உடனடியாக அவற்றை ஏற்றுக் கொண்டு, எனதாக்கினேன். என்னுடைய வாழ்க்கையில் நான் செய்தவைகளில் இதுவே மிகவும் சிறப்பானதும், அறிவானதும், மிக நேர்தியானதுமான செயல் என்று நான் அறிந்தேன். ஆகவே, தேவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறார் என்பதையும், என்னை அவர் கவனித்துக் கொள்கிறார் எனவும், விசுவாசிப்பதுடன், அவர் என்னை நேசித்தமையினாலேயே, இவை அனைத்தையும் எனக்குச் செய்தார் என விசுவாசித்து அதனை அறிக்கைச் செய்கிறேன். "தேவனே, நான் என் எல்லா நன்றிகளையும் உமக்கே கொடுக்கிறேன். நீர் என்னை நேசித்ததைப் போல, நானும் உம்மை நேசிக்கிறேன்." இப்படியாக அறிக்கைச் செய்வது மறுபடியும் பிறந்தவர்களுக்கு பெரிதான மகிழ்ச்சியை அளிக்கிறது.
நம்முடைய தேவனின் அன்பு என்றென்றும் மாறாதது, அவர் மீதான நம்முடைய அன்பும் என்றென்றும் மாறாதது. சில சமயங்களில், நாம் துன்புறும் போதும், கஷ்டங்களைச் சந்திக்கும்போதும், நம் இருதயங்கள் மோசம் போய், இந்த அன்பை உதறித் தள்ளும் அள்விற்கு போகலாம். நமது வேதனைகள் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தும், நம் அறிவு நம்மைக் கைவிட்டிருந்தும், நம்மால் நினைக்க முடிந்ததெல்லாம் நம்முடைய சொந்த வேதனைகளே என்றிந்தாலும், கர்த்தர் இன்னமும் நம்மைத் தாங்குவதாலே, நம்முடைய இருதயங்கள் இந்த அன்பை மறக்கவே மறக்காது.
கர்த்தர் நம்மை நித்தியமாக நேசிக்கிறார். நமக்காக நம் தேவன் படைக்கப் பட்டவைகளில் ஒன்றாக வந்தார், ஏனெனில் அவர் தன் மரணம் வரையிலும் கூட நம்மை நேசித்தார். இந்த கர்த்தரின் அன்பை விசுவாசிக்கும் படி உங்களுக்கு நான் கூறுகிறேன். அதனை உங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்ளுங்கள். இதனை இப்போது விசுவாசிக்கிறீர்களா?
இந்த அன்பினாலே, நம்மை நமது பாவங்களிலிருந்து நிறைவாக இரட்சித்தமைக்காக தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.