(யாத்திராகமம் 30:17-21)
"பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள். அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள். அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்."
ஆசரிப்புக்கூடார பிரகாரத்திலுள்ள வெண்கல பாத்திரம்
பொருள்: வெண்கலத்தினால் தயாரிக்கப்பட்ட இதில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும்.
ஆவிக்குரிய பொருள்: வெண்கலம் என்பது மனிதகுலத்தின் பாவங்களுக்கான தீர்ப்பைக் குறிக்கிறது. மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களுக்குமான தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்காக, யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் இயேசுவானவர் உலகின் எல்லாப் பாவங்களையும் பெற்றுக்கொண்டார். ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதை விசுவாசிப்பதின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட முடியும் என்று வெண்கல பாத்திரம் பொருள் படுகிறது. ஆசரிப்புக்கூடாரத்தினில் ஊழியம் செய்த ஆசாரியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தினுள் செல்லுவதற்கு முன்னதாக வெண்கல பாத்திரத்தில் தம் கைகளையும் கால்களையும் கழுவியதன் மூலமாக மரணத்தைத் தவிர்த்தனர். வெண்கலமானது பாவத்திற்கான தண்டனையைக் குறிக்கிறது, மேலும் அதிலிருந்த நீர் யோவானிடமிருந்து இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, மேலும் இதன் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமத்துவதற்கு அனுமதித்ததையும் அதற்கான தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதையும் வெண்கலப் பாத்திரம் கூறுகிறது. வெண்கலப் பாத்திரத்தில் உள்ள நீரானது, பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக்கூடாரத்தின் இளநீல நிற நூலையும், புதிய ஏற்பாட்டில் யோவானிடமிருந்து இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் குறிக்கிறது (மத்தேயு 3:15, 1 பேதுரு 3:21).
ஆகவே வெண்கலப் பாத்திரமானது இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, நம்முடைய சொந்தப்பாவங்கள் உட்பட எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்தார் எனவும், 2,000 வருடங்களுக்கு முன்னதாக யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக அவற்றை முற்றிலுமாக கழுவிவிட்டார் எனவும் நம் விசுவாசத்தை நிச்சயிக்கும் இடமாக இது இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததின் மூலமாக மறுபடியும் பிறந்ததின் மூலமாக நீதிமான்களாகிய அநேகர் இவ்வுலகில் இருக்கின்றனர். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவின் செயல்களால் தம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்பதை விசுவாசித்தமையால் தம் பாவங்களுக்கான மன்னிப்பு பெற்றவர்கள் இவர்களாவர். ஆயினும் கூட, பாவமன்னிப்பு பெற்ற நீதிமான்களும் கூட தம் மாமிசத்தில் குறைபாடுடையவர்களாகவே இருக்கின்றனர், அவர்களால் ஒவ்வொரு நாளும் பாவம் செய்யாதிருக்க முடியாது, இத்தகையப் பாவங்கள் சொந்தப் பாவங்கள் என அழைக்கப்படுகின்றன. நீதிமான்களின் சொந்தப் பாவங்களுக்குத் தீர்வான பாவமன்னிப்பு வரும் இடமாக இந்த வெண்கலப் பாத்திரம் இருக்கிறது. நீதிமான்கள் எப்போதெல்லாம் தம் சொந்தப் பாவங்களைச் செய்கிறார்களோ, அப்போது அவர்கள் இந்த ஆசரிப்புக்கூடாரத்தின் வெண்கலப் பாத்திரம் இருக்கும் இடத்திற்கு வந்து, தம் கைகளையும் கால்களையும் கழுவுவர், இதன் மூலமாக இயேசு தம்முடைய சொந்தப் பாவங்களை மன்னித்து விட்டார் என்பதினாலும், எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையை விசுவாசிப்பதின் மூலமாகவும் உறுதிபடுத்திக்கொள்வர்.
வேதாகமத்தில் சில இடங்களில் கர்த்தரின் வார்த்தையைக் குறிப்பிடவும் நீர் பயன்படுகிறது, ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் என்பதே மிக முக்கியமான பொருளாகும். எபேசியர் 5:26 கூறுகிறது, "தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்" மேலும் யோவான் 15:3 கூறுகிறது, "நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்." தம்முடைய மாமிசமானது எத்தனை குறைபாடுடையதாக இருந்தாலும், தம் பாவங்களிலிருந்து பாவமன்னிப்பு பெற்ற தூய பரிசுத்தவான்கள், தேவன் தம்முடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்தார் என்பதற்கான அத்தாட்சியைப் பெற்றுக்கொள்வதை வெண்கலப் பாத்திரம் ஏதுவாக்குகிறது.
1 பேதுரு 3:21 மற்றும் 22 ஆகியவை கூறுகின்றன, "அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது" இந்த வசனங்களுக்கு முன்னதாக நோவாவின் காலத்திய நீரின் ஆவிக்குரிய பொருளை பேதுரு விளக்கினான். வேறுவார்த்தைகளில் கூறினால், பாவத்தால் கட்டுண்டிருந்த பாவிகளுக்கு, வரபோகிற முதலாம் உலகத்தைக் கழுவக்கூடிய வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கைச் செய்தாலும், வெறும் எட்டு பேர் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர். கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்காத அனைவரையும் பெருவெள்ளம் அழித்துபோட்டது. இப்பொழுது, இந்த பெருவெள்ள நிகழ்விற்கு ஒப்பனையான நீரிற்கு இயேசுவின் ஞானஸ்நானம் ஒத்திருப்பதாக பேதுரு கூறுகிறான். நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னாலும் பின்னாலும், கர்த்தருக்கு முன்னதாக நம் இரட்சிப்பை உறுதி செய்யும் இடம் இந்த வெண்கலப் பாத்திரமாக இருக்கிறது.
வெண்கலப் பாத்திரத்தின் நீரையும் (இயேசுவின் ஞானஸ்நானம்), வெண்கலத்தையும் (எல்லாப் பாவங்களுக்குமான கர்த்தரின் நியாயதீர்ப்பு), இயேசு அவர்களை பாவங்களிலிருந்து விடுவித்தார் என்ற விசுவாசம் ஆகியவற்றை விசுவாசித்து தம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் கர்த்தருடைய கிருபையால் மூடப்பட்டார்கள். நம்மை நீதிமான்கள் என அறிந்துப்கொள்ளமுடியாத அளவிற்கு நாம் பலவீணமானவர்களாகவும், குறைபாடுடையவர்களாகவும் இருந்தாலும், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீதும் (நீரினால் நம் பாவங்களைச் சுமத்தல்), அவருடைய சிலுவை மரணத்தின் மீதும் (பாவத்திற்கான தண்டனை, வெண்கலம்), நம்முடைய விசுவாசத்தை மீண்டும் அர்ப்பணிப்பதன் மூலம் நாம் நீதிமான்களே என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்ளமுடியும். நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஏற்கனவே இரட்சித்தாயிற்று என்ற கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து நாம் இரட்சிக்கப்பட்டதால், நாம் பாவங்களற்ற நீதிமான்களாயினோம்.
யோவானிடமிருந்து இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் எனவும், நம்முடைய இடத்திலிருந்து பாவங்களின் தண்டனையை அடைய நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதையும், இதன் மூலம் அவர் நம்மை முற்றிலுமாக இரட்சித்தார் என்பதையும், நாம் விசுவாசிக்கும் கர்த்தரின் வார்த்தை நம்மிடம் கூறுகிறது. ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்தில் கர்த்தர் வெண்கலப் பாத்திரத்தை வைத்தார், இதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டவர்களாகிய நாம் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும், நம் இரட்சிப்பை உறுதிபடுத்திக் கொள்ள முடியும்.
உங்களுடைய அனைத்து சொந்தப் பாவங்களிலிருந்தும் நித்தியமாக விடுவிக்கப்பட்டீர்களா?
கடைசி இராபோஜனத்தின் போது, பஸ்காவின் அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் தன் சீடர்களுடன் பகிர்ந்து கொண்ட பிறகு, இயேசு தான் சிலுவையில் மரிப்பதற்கு முன்னதாக, பேதுருவினதும் மற்ற சீடர்களினதும் கால்களை நீரினால் கழுவ விரும்பினார். யோவானிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக, தம்முடைய சீடர்களின் அனைத்துப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், வெண்கலப் பாத்திரத்தின் சத்தியத்தை அவர்களுக்கு கூற விரும்பினார். ஞானஸ்நானம் பெற்ற பிறகு, தேவாட்டுக்குட்டியாகிய அவர், ஒரு மரத்தில் தொங்க விடப் படுவதின் மூலமாக பாவக் கிரயத்தை (மரணம்) செலுத்தவிருப்பதை அவர்களுக்கு போதிக்க விரும்பினார். இயேசுவின் பன்னிரு சீடர்களும், அவரை விசுவாசித்தப் பிறகும் கூட பாவமுள்ளவர்களாகவே விளங்கினாலும், அவர்கள் மீண்டுமாக பாவிகளாகவேயில்லை.
அதுபோலவே, சத்தியத்தின் வார்த்தை சாட்சி கூறியவற்றை இயேசு அவர்களின் கால்களைக் கழுவியது உறுதிபடுத்தியது - அச்சத்தியம் இயேசு ஏற்கனவே அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார் என்பதாகும். இதனால் தான் இயேசுவே இரட்சகர் என்று உலக மக்களுக்கு அவரின் சீடர்களால் போதிக்க முடிந்தது, மேலும் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் அவர்களால் கூற முடிந்தது (எபிரெயர் 10:1-20). சத்தியத்தை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்ட நீதிமான்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை நினைவு கூறுவதற்கு வெண்கலப் பாத்திரம் அனுமதிக்கிறது. கர்த்தர் தாமே அவர்களை விடுதலையாக்கினார் என்ற இரட்சிப்பின் உறுதியையும் அது அளிக்கிறது.
வெண்கலப் பாத்திரத்தின் அளவு வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை
ஆசரிப்புக் கூடாரத்தின் அனைத்துப் பொருட்களின் அளவுகளும் எழுதப்பட்டிருந்தாலும், வெண்கலப் பாத்திரத்தின் அளவு கூறப்படவில்லை. இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தினால் தன் மீது ஏற்றுக்கொண்ட அவரின் அன்பானது, எல்லையற்றதும் பெரிதுமானதும் ஆகும் என இது சுட்டிக்காட்டுகிறது. அளவிட முடியாத கர்த்தரின் பெரிதான அன்பை வெண்கலப் பாத்திரம் அறிவிக்கிறது. மனிதர்கள் தாம் வாழும் காலம் முழுவதும் பாவம் செய்து கொண்டேயிருப்பார்கள். யோவானிடமிருந்து தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்ட்தாலும், சிலுவையில் அறையப்பட்டு அங்கே தனது இரத்தத்தைச் சிந்தியதாலும், நம் எல்லாப் பாவங்களையும் நித்தியமாக அவர் துடைத்தார்.
ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்த பெண்களின் வெண்கல கண்ணாடிகளை உருக்கியதன் மூலம் இந்த வெண்கலப் பாத்திரம் செய்யப்பட்டது (யாத்திராகமம் 38:8). கர்த்தரின் வார்த்தை இரட்சிப்பின் ஒளியை பாவிகளின் மீது பாய்ச்சி அவர்களின் பாவங்களை அகற்றுகிறது என்பது இதன் பொருளாகும். கர்த்தர் வெண்கலப் பாத்திரத்தைத் தயாரித்தமையினால், அவராலே நமது பாவங்களையெல்லாம் கழுவ முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். இந்த சத்தியத்தின் வார்த்தையானது மக்களின் இருதயங்களின் ஆழத்திலிருந்த பாவங்களின் மீது ஒளி வீசி, அவர்களின் பாவங்களை நித்தியமாக கழுவி, பாவமன்னிப்பை அவர்களுக்கு வழங்கி, இதன் மூலமாக அவர்களை நீதிமான்களாக்கிற்று. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரின் வார்த்தையின் மூலமாக இயேசு கிறிஸ்து பாவிகளாகிய நம்மை முற்றிலுமாக இரட்சித்தார் என்ற சத்தியத்தை தெளிவாக சாட்சி கூறும் பணியை இந்த வெண்கலப் பாத்திரம் செய்கிறது.
வெண்கலப் பாத்திரமானது வெண்கலத்தினால் செய்யப்பட்டது
வெண்கலப் பாத்திரத்தை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வெண்கலத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா? நாம் சந்திக்க வேண்டியிருந்த பாவத்திற்கான தண்டனையையே வெண்கலப் பாத்திரம் குறிப்பிடுகிறது. இன்னும் தெளிவாகக் கூறினால், இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, நமக்காக நியாயம் தீர்க்கப்பட்டார் என்பதை அது நமக்கு கூறுகிறது. நம்முடையப் பாவங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டியது நாமே, ஆனால்நம் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்டது என்பதை வெண்கலப் பாத்திரத்தின் நீர் மூலமாக உறுதிப்படுத்தலாம். இதனை விசுவாசிப்பவர்கள் தம் விசுவாசத்தின் மூலமாக நியாயம் தீர்க்கப்பட்டவர்களாவர், ஆகவே மற்றும் ஒரு ஆக்கினையை அவர்கள் அடைவதில்லை.
"இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இயேசு உங்கள் பாவங்களை சுத்திகரித்து உங்களை உங்கள் பாவங்களிலிருந்து முற்றிலுமாக இரட்சித்தார்" என்பதை நீரால் நிரப்பப்பட்ட வெண்கலப் பாத்திரம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பாவமன்னிப்பு பெற்றதினால் நீதிமான்களாகியவர்களுக்கு தம்முடைய பாவங்கள் கழுவப்பட்டு இரட்சிப்படைந்தோம் என்பதற்கான அத்தாட்சி இந்த வெண்கலப் பாத்திரமேயாகும்.
சர்வாங்க தகன பலிபீடத்தின் பொருள் பாவத்திற்கான தீர்ப்பு என்பதாகும், அதே சமயத்தில் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களுடன் காணப்படும் வெண்கலப் பாத்திரமானது இள்நீல நிற நூலுடன் தொடர்புடையது, இது புதிய ஏற்பாட்டில் இயேசு தன் ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டதை நம்மிடம் கூறுகிறது.
ஆசரிப்புக் கூடார பிரகார வாசலைத் திறந்து அதனூடாகச் சென்று, சர்வாங்க தகன பலிபீடத்தைக் கடந்து, அதன் பிறகு காணப்படும் வெண்கலப் பாத்திரத்தையும் கடந்து செல்வதின் மூலம் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். சர்வாங்க தகன பலிபீடத்தையும் வெண்கலப் பாத்திரத்தையும் தம் விசுவாசத்தால் கடந்தவர்களால் மட்டுமே கர்த்தர் சஞ்சரிக்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்க முடியும். ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப் பிரகாரத்தில் இருக்கும் வெண்கலப் பாத்திரத்தின் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் பாவமன்னிப்பு பெற்றவர்களால் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
ஒருவர் அவனின்/அவளின் சொந்த பலத்தினால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயன்றால், பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அக்கினி வந்து அவனை எரிக்கும். ஆரோனின் மகன்களுக்கு கூட இதிலிருந்து விதிவிலக்கு இல்லை, இதன் பலனாக அவர்களில் சிலர் மரித்ததை நம்மால் காணமுடியும். (லேவியராகமம் 10:1-2). பாவங்களையும் அதற்கான ஆக்கினைகளையும் கொண்டிருக்கும் கர்த்தரின் நீதியை அறியாதவர்களும் இந்த சத்தியத்தை அலட்சியம் செய்பவர்களும் அவர்களின் பாவங்களின் நிமித்தம் மரண ஆக்கினையைப் பெறுவர். அவருடைய மிகச்சிறந்த விரிவான இரட்சிப்பை விசுவாசித்து பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படுவதற்கு பதிலாக தம்முடைய சொந்த சிந்தனைகளை விசுவாசித்து கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முயலும் போது அக்கினியின் ஆக்கினையை நிச்சயமாய் சந்திப்பார்கள். தவிர்க்க முடியாத பாவத்திற்கான தண்டனை இருப்பதினாலே, இவற்றின் விளைவுகளெல்லாம் நரகம் மட்டுமே.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இயேசு நமது இரட்சிப்பை நிறவேற்றியதால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் பட முடியும். படைத்தலுக்கு முன்பே மனிதகுலத்தை பாவங்களிலிருந்த்து இரட்சிக்க கர்த்தர் திட்டமிட்டார், மேலும் இளநீலம் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தாம்பரம் (கர்த்தர் மனிதாகினார்), சிகப்புநூல் (இயேசுவின் சிலுவை மரணம்) ஆகியவற்றால் இந்த சத்தியத்தை விளக்கமாக வேதாகமத்தின் மூலம் அறியச் செய்தார். இந்த திட்டத்தின்படியாக, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட இயேசுவின் செயல்களின் மூலமாக எல்லாப் பாவிகளையும் அவர்களின் பாவங்களிலிருந்தும் மீறுதல்களிலிருந்தும் இரட்சித்தார்.
1 யோவான் 5:4 கூறுகிறது, "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" இதனைத் தொடரும் வசனம் 10 கூறுகிறது, "தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்" இந்த இரட்சிப்பின் சாட்சியம் என்ன? நீர், இரத்தம், ஆவி ஆகிய தேவகுமாரனின் மீதுள்ள நமது விசுவாசத்திற்கான சாட்சியினால் நமக்கு கிட்டிய இரட்சிப்பே சத்தியத்தின் நற்செய்தியாகும் (1 யோவான் 5:6-8). வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் விசுவாசிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே, கர்த்தர் நம் பாவங்களையெல்லாம் கழுவி நம்மைத் தம் பிள்ளைகளாக்கினார் என்பதற்கான அத்தாட்சியாகும். நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படவும், பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கவும், கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஜீவ அப்பத்தை சாப்பிடவும், அவருடைய கிருபையினால் வாழவும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது மட்டுமே ஒரே வழியாகும். நம்முடைய பாவங்களைக் கழுவக் கூடிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக நாம் இரட்சிக்கப் பட்டு, கர்த்தரின் ஆலயத்துடன் இணைவதின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கைய வாழ வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தினால் மட்டுமே கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தரின் வார்த்தையால் போஷிக்கப்படவும், அதனுடனே ஐக்கியமாகவும், கர்த்தரால் கேட்கப்படும் ஜெபங்களை ஜெபிக்கும் நீதிமான்களாகவும் மாற முடியும். நாம் இந்தச் சத்தியத்தைக் கேட்கும் போது, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றின் மீது விசுவாசமுள்ள நீதிமான்களாகுவதுடன், அவருடைய சன்னிதானத்தில் கர்த்தருடைய கிருபையினால் தரிக்கப் பட்டவர்களாகவும் வாழ முடியும். கர்த்தரின் மக்களால் மட்டுமே வாழக்கூடிய விசுவாச வாழ்க்கையானது நீர், இரத்தம், ஆவி ஆகியவைகளை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே வருகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும், இயேசுவே கர்த்தர் என்பதையும் நம் இருதயங்களால் விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படமுடியும். கர்த்தரின் ஆலயத்தில் வாழும்படி உங்களை எதுவாக்கியது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசம் மட்டுமே.
"நாம் செய்ய வேண்டியதெல்லாம் இயேசுவை விசுவாசிப்பது மட்டுமே; ஏன் இப்படி குழப்பிக் கொள்ளவேண்டும்? பயனற்ற உரையாடல்களில் நம் நேரத்தை வீனடிக்க வேண்டாம், எது பொருத்தமாக தோன்றுகிறதோ அதனை விசுவாசிப்போமாக," என்று அனேக மக்கள் கூறுகின்றனர். அத்தகைய மக்களுக்கு நாம் கிறிஸ்தவத்தின் குழப்பவாதிகளாக மட்டுமே இருக்கிறோம், ஆனால் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ளாமல் இயேசுவை ஒருவர் விசுவாசித்தால் அவன்/அவள் நித்திய ஆக்கினையை அடைவர் என்பது மிகவும் தெளிவாகும். நற்செய்தியாகிய நீர் இரத்தம் மற்றும் ஆவி ஆகியவையை முழுமையாக விசுவாசிக்காத விசுவாசம் தவறானதும் கள்ள விசுவாசமுமாகும். குறிப்பாக, இது இயேசுவை தம் இரட்சகராக விசுவாசிக்காதமைக்கு ஒத்த ஒன்றாகும்.
ஒரு புதிய நபரிடம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமானால், நாம் கண்களை மூடிக்கொண்டு "நான் உங்களை நம்புகிறேன்" என்று கூறினால், "இந்த நபர் உண்மையாகவே என்னை நம்புகிறான்" என்று என்னை நம்பி, அதனைக் குறித்து மகிழ்ச்சி அடையமாட்டாரா? இதற்கு மாறாக, "உங்களுக்கு என்னைத் தெரியுமா? உங்களை எனக்குத் தெரியாதே" என்று அந்நபர் கூறுவார். "ஆயினும் கூட உங்களை நான் நம்புகிறேன்" என்று மீண்டுமாக அவரிடம் கூறியவாறு அவருடைய கண்களை நேர்மையுடன் நோக்கியவாறு, அவரை ஆசுவாசப் படுத்த முயன்றால், அதனால் அவர் மகிழ்ச்சி அடைவாரா? நான் முதுகெலும்பில்லாதவனென்றும், அவருடைய தயவை நான் வேண்டியிருக்கிறேன் என்றும் அவருடைய மனதை நான் படித்துக் கொண்டிருக்கிறேன் எனவும், அவர் என்னைக் காண்பார்.
ஆகவே கண்மூடித்தனமாக விசுவாசித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் கர்த்தரும் பிரியப்பட மாட்டார். "நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன். பாவிகளின் இரட்சகராக இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்" என்று நாம் கூறும்போது, பாவிகளின் மீறுதல்களையெல்லாம் இயேசு எப்படி சுமந்து தீர்த்தார் என்பதை அறிந்து விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே இதனை நாம் அறிவிக்க வேண்டும். நாம் ஒன்றுமேயில்லாதவர்களைப் போல், எந்த யோசனையும் இல்லாமல் குருட்டுத்தனமாக அவரை விசுவாசித்தால் நம்மால் இரட்சிப்படையவே முடியாது. நம்முடைய பாவங்களை இயேசு எப்படி மறையச் செய்தார் என்பதை முதலில் தெளிவாக அறிந்து கொள்வதின் மூலமே நம்மால் இரட்சிக்கப் படமுடியும். நாம் ஒருவரை விசுவாசிக்கிறோம் எனக் கூறும் போது, நாம் நம் முழு நம்பிக்கையையும் இவர்கள் மீது வைக்கிறோம், ஏனெனில் அவனை/அவளை நாம் முற்றிலுமாக அறிந்திருக்கிறோம், இதனால் நாம் இந்நபரை நம்பத்தகுந்தவராக கருதுகிறோம். நாம் நன்கு அறியாத ஒருவரின் மீது நம்பிக்கை வைப்பது நாம் பொய் கூறுகிறோம் என்பதையும், வஞ்சிக்கப்படுவதற்கு நாம் தகுதியானவர்கள் என்பதை மட்டுமே காட்டுகிறது. எப்படியிருந்தாலும், இயேசுவை நம் இரட்சகராக விசுவாசிக்கும்போது, இயேசு நமது எல்லாப் பாவங்களையும் எப்படி மன்னித்தார் என்பதை தெளிவாக நாம் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே கடைசி நிமிடத்தில் நாம் நம் தேவனால் கைவிடப்படமாட்டோம் என்பதுடன் மறுபடியும் பிறந்த கர்த்தரின் பிள்ளைகளாக பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும்.
நம்மை பரலோகத்திற்கு வழி நடத்தக் கூடிய உண்மையான விசுவாசம் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசமே. வேறு வார்த்தைகளில் கூறினால், உண்மையான விசுவாசம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும், அது நம்மை நீரினாலும் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தத்தினாலும் (இயேசுவின் மரணம்), மற்றும் பரிசுத்த ஆவியானவராலும் (இயேசுவே கர்த்தர்) இரட்சித்தது. நம்மை இரட்சித்த தேவனின் கிருபை எத்தனை பெரியது என நாம் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும், ஏனெனில் இந்த சத்தியத்தை விசுவாசிப்பது நம் இரட்சிப்பை நோக்கி நம்மை வழிநடத்துகிறது.
ஒரு நபருக்கு சத்தியம் தெரியுமா தெரியாதா என்பதை வைத்து அந்நபரின் விசுவாசம் முழுமையானதா இல்லையா என்பதை நாம் கண்டு கொள்ளலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயங்களால் அறிந்து விசுவாசிக்கும் போது மட்டுமே உங்களால் இயேசுவை உங்கள் இரட்சகராக விசுவாசிக்க முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நமக்கு பாவமன்னிப்பை வழங்கிய நம் இரட்சகராகிய இயேசுவின் மீதுள்ள இந்த நம்பிக்கையே, நம்மை நம் எல்லாப் பாவங்களிலுமிருந்து இரட்சித்த விசுவாசமாகும்.
நம் பாவங்களை மன்னித்தமைக்கான இரட்சிப்பின் உறுதிப்பாடு வெண்கலப் பாத்திரமேயாகும்
வெண்கலப் பாத்திரமானது நீரால் நிரப்பப் பட்டிருந்தது. பரிசுத்த ஸ்தலத்திற்கு நேர் எதிராக இது வைக்கப் பட்டிருந்தது. நாம் பாவமன்னிப்பு பெற்றோம் என்பதையும், அதனை நம் விசுவாசத்தால் பெற்றுக்கொண்டோம் என்ற உறுதிப்பாட்டையும் பெற்றுக் கொள்ளக்கூடிய இடமாக இந்த வெண்கலப் பாத்திரம் இருக்கிறது. விசுவாசிகளின் எல்லாப் பாவங்களையும் கர்த்தர் சுத்தப்படுத்தினார் என்பதற்கான உறுதிப்பாடு இதுவேயாகும். பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் தம் கைகளும் கால்களும் அழுக்கடையும் போது எப்படி அவற்றைக் கழுவினார்களோ, அது போலவே, பாவமன்னிப்பு பெற்றவர்களும் கூட, தாம் பாவம் செய்யும் போதெல்லாம் தம் பாவங்களை அங்கே கழுவினர், கர்த்தரின் வார்த்தையின் மூலமாக, அவர்களை அழுக்காக்கிய பாவங்களை எல்லாம் இயேசு ஏற்கனவே துடைத்து விட்டார் என்பதையும், அதற்கான பாவ நிவர்த்தியானார் என்பதையும், நம்மிடத்திலிருந்து ஆக்கினைக்குள்ளானார் எனபதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் இப்பூமியில் வாழுவதால் தொர்ந்து பாவம் செய்வதை தவிர்க்க இயலாதவர்களாக இருப்பதினால் நாம் அழிந்து போகிறோம். நம்மை அழித்துப் போடும் இப்பாவங்கள் அனைத்தையும் சுத்திகரிக்கக் கூடியது எது? ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து, பாவிகளை இரட்சிப்பதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக மனித சரீரத்தில் இப்பூமிக்கு வந்து, தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் அவர்களின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்து, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தி, பாவிகளை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னித்தார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக அவற்றை நாம் கழுவுகிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றதினால் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டார் என விசுவாசிக்கும் போது மட்டுமே, நம்மால் பாவமன்னிப்பைப் பெற்று அவற்றைக் கழுவ முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் நமது எல்லாப் பாவங்களையும் கர்த்தர் ஏற்கனவே கழுவி விட்டார் என்ற சத்தியத்தை விசுவாசிக்கும் போது மட்டுமே நம்முடைய சொந்தப் பாவங்களை கழுவ முடியும்.
வெண்கலப் பாத்திரத்தின் சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசம் நமக்குத் தேவை
வெண்கலப் பாத்திரத்தில் விசுவாசமில்லாமல், கர்த்தர் சஞ்சரிக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நம்மால் பிரவேசிக்கவே முடியாது. நம்முடைய செய்கைகளால் எப்போதுமே நிறைவானவையாக இருக்க முடியாது. நாம் குறைபாடுடையவர்களாய் இருப்பதினாலே, அவ்வப்போது பாவம் செய்கிறோம். கர்த்தரின் வார்த்தை நிறைவானது என்பதினாலே, கர்த்தர் நமக்களித்த இரட்சிப்பானது நிறைவானதாகும். கர்த்தர் நமக்களித்த நிறைவான இரட்சிப்பால் நம் குறைபாடுகளையெல்லாம் கழுவியதால், மிகவும் துனிவுடனே நம்மால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும். வெண்கலப் பாத்திரத்தின் மூலமாக செல்லாதவர்களால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இயேசுவானவர் 2,000 வருடங்களுக்கு முன் வந்தாரெனவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் துடைத்தார் எனவும், அது இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூலால் தீர்க்கதரிசனம் கூறப்பட்ட இரத்தமும் ஆவியுமாக இருக்கிறது என்பதையும் உள்ளடக்கிய சத்தியத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தினாலே, பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க நாம் தகுதி பெற்றவர்களானோம். தேவன் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே துடைத்து விட்டார் எனவும், அவர் நம்மை பாவமற்றவர்களாக்கினார் எனவும் விசுவாசிக்காமல் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியாது.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றை விசுவாசிக்காமல் கர்த்தரின் ஆலயத்திற்குள் எப்படிச் செல்ல முடியாதோ அப்படியே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காவிட்டால், அவருடைய ஆலயத்தின் அவருடைய வார்த்தையை விசுவாசித்து கர்த்தரின் கிருபாசனத்தின் அருகில் செல்லும் ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது, மேலும் அவரிடம் ஜெபிப்பதும் அவருடைய கிருபையைப் பெறுவதும், அவருடைய ஊழியர்களுடனும் பரிசுத்தவான்களுடனும் வாழ்வதும் முடியாது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் கர்த்தர் நம்மை இரட்சித்தார் என நாம் விசுவாசித்த பிறகு மட்டுமே, நம்முடைய உடன் விசுவாசிகளுடன் கர்த்தருடைய ஆலயத்தில், அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவரிடம் ஜெபிப்பதான ஒரு வாழ்வை நம்மால் வாழமுடியும்.
பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப் பட்டோம் என்பதற்கான இறுதி அத்தாட்சி வெண்கலப் பாத்திரமாகும். வெண்கலப் பாத்திரத்தை பரிசுத்த ஸ்தலத்திற்கு நேர் முன்னால் வைத்ததுடன் அத்னை நீரினாலும் நிரப்பினார், இதன் மூலம் பாவமன்னிப்பு நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் நம்பிக்கையை உறுதிப் படுத்துகிறார். விசுவாசிக்கும் நீதிமான்களின் அழிந்து போன மனசாட்சியை இந்த வெண்கலப் பாத்திரம் சுத்தப்படுத்துகிறது.
1 யோவான் 2:1-2 ஐ வாசிப்போமாக, "என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்." ஆமேன்.
நாம் பாவம் செய்தால், நமக்காக பரிந்து பேச நீதிபரராகிய இயேசு இருக்கிறார். நீதிமான்களின் அழிந்து போன இருதயங்களை நீரினாலே இயேசு கழுவுகிறார். தான் சிலுவையில் அறையப் படும் நாளுக்கு முந்திய நாளில், இராப்போஜனத்தின் போது இயேசு எல்லா சீடர்களையும் அங்கே அழைத்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அவர்களின் கால்களைக் கழுவத் தொடங்கினார். "நான் ஞானஸ்நானம் பெற்றபோது, நான் உங்கள் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டேன், அதில் நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவங்களும் கூட அடங்கும், மேலும் இதற்காக உங்களுடைய இடத்திலிருந்து சிலுவையின் தண்டனையை நான் பெறுவேன். நான் உங்கள் எதிர்காலப் பாவங்களையும் கூட ஏற்றுக்கொண்டு அதனைத் துடைக்கவும் செய்தேன். நான் உங்களின் இரட்சகருமாகினேன்."
இதனைத் தமது சீடர்களுக்குத் தெரிவிப்பதற்காக, பஸ்கா பண்டிகையின் கடைசி இராப்போஜனத்தின் போது இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவினார். இயேசுவினால் தன் கால்கள் கழுவப்படுவதை விரும்பாத பேதுருவிடம் இயேசு கூறினார், "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்" (யோவான் 13:7). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்போருக்கு நிறைவான இரட்சகராக இயேசு விரும்பினார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றை விசுவாசிப்போர்களுக்கு இயேசு நித்திய இரட்சகரானார்.
வெண்கலப் பாத்திரத்தின் பயன்கள்
ஆசாரியர்கள் கர்த்தருக்கு காணிக்கைகளை ஆசரிப்புக் கூடாரத்தில் வழங்குகையில் தம்மீது ஏற்படும் அழுக்குகளை எல்லாம் கழுவி விடுவதற்கு வெண்கலப் பாத்திரம் உபயோகிக்கப் பட்டது. இஸ்ரவேல் மக்களின் பாவங்களைக் கழுவி நிவர்த்தி செய்யும் பலிகாணிக்கைளை ஆசாரியர்கள் கொல்லும் போதும், அதன் இரத்தத்தை சேகரிக்கும் போதும், கர்த்தருக்கு கொடுப்பதற்காக அதனைத் துண்டங்களாக வெட்டும் போதும் அவர்கள் மீது படும் துகள்களை கழுவுவதற்கு இது தேவைப் பட்டது. காணிக்கைகளைச் செலுத்தும் போது ஆசாரியர்கள் அழுக்கடைந்ததினால், அதனைக் கழுவி விடுவதற்கு நீர் தேவைப் பட்டது, இந்த அழுக்கு அனைத்தையும் கழுவி விடு இடமாக வெண்கலப் பாத்திரம் இருந்தது.
ஆவிக்குரியபடியோ அல்லது மாமிசத்தின்படியோ, நாம் பாவங்களைச் செய்யும்போதும், கர்த்தருடைய கட்டளைகளை உடைத்து அதன் மூலம் அழிவைச் சம்பாதிக்கும் போதும், இந்த வெண்கலப் பாத்திரத்தின் நீரினால் நம் அழுக்கை நீக்கவேண்டும். ஆசாரியர்களின் சரீரத்தில் அசுத்தமானவைகளோ அல்லது அழுக்கோ படும்போது, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தம் அழுக்குப் பட்ட இடங்களை நீரினால் கழுவ வேண்டும்.
இதுபோல, கர்த்தரை விசுவாசிக்கும் யாராயிருந்தாலும், அழுக்கோ அல்லது அசுத்தமானவைகளோ படும்போது, அத்தகைய அழுக்குகளை நீக்குவதற்கு வெண்கலப் பாத்திரத்தின் நீர் உபயோகிக்கப் பட்டது. சுருக்கமாகக் கூறினால், மறுபடியும் பிறந்தவர்களின் அழுக்கை நீக்குவதற்காக வெண்கலப் பாத்திரத்தின் நீர் உபயோகிக்கப் பட்டது. வெண்கலப் பாத்திரத்தில் கர்த்தரின் கிருபை நிரம்பி இருக்கிறது. வெண்கலப் பாத்திரத்தின் பொருளானது, விசுவாசிக்கலாமா இல்லையா என தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒன்றல்ல, ஆனால் இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது அத்தியாவசியமானது.
ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் கர்த்தர் அவைகளின் அளவுகளைக் குறிப்பிட்டார், அவற்றின் உயரம் எவ்வளவு இருக்கவேண்டும், அதன் நீளம், அகலம் ஆகிய அனைத்தையும் அவர் கூறினார். ஆனால் வெண்கலப் பாத்திரத்தின் அளவை அவர் குறிப்பிடவில்லை. இத் வெண்கலப் பாத்திரத்தின் தனித் தன்மை ஆகும். அன்றாடம் பாவங்கள் செய்து கொண்டிருக்கும் நம்மீது மேசியா காட்டிய அளவில்லாத அன்பு இதுவாகும். இந்த மேசியாவின் அன்பில் அவருடைய ஞானஸ்நானம் காணப்படுகிறது, அது கைவைத்தலின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி விடுவதைப் போலிருக்கிறது. ஆசாரியர்கள் தம் ஊழியத்தைச் செய்யும்போது அதிக அளவு அழுக்கடைவதால், அதனைக் கழுவி விடுவதற்கு அதிக அளவு நீரும் தேவைப் பட்டது, இதனால் வெண்கலப் பாத்திரத்தில் எப்போதும் நீர் நிறைந்து இருக்கவேண்டும். ஆகவே வெண்கலப் பாத்திரம் அளவு இந்த தேவையினைப் பொருத்தது. வெண்கலப் பாத்திரம் வெண்கலத்தினால் தயாரிக்கப் பட்டதாகையால், ஆசாரியர்கள் அதன் நீரினால் கழுவும்போது, அவர்கள் பாவத்திற்கான ஆக்கினையைக் குறித்து சிந்தித்தார்கள்.
ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்த ஆசாரியரிகள் தம்முடைய கைகளிலும் கால்களிலும் படிந்த அசுத்தங்களை வெண்கலப் பாத்திரத்தின் நீரினால் கழுவவேண்டியிருந்தது. வெண்கலம் கர்த்தரின் நியாயத்தீர்ப்பைக் குறிப்பிட்டால், நீரானது பாவத்தைக் கழுவுவதைக் குறிக்கிறது. எபிரெயர் 10:22 கூறுகிறது. "சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும்" மேலும் தீத்து 3:5 கூறுகிறது "மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்" இந்த வசனத்தைப் போன்ற பல புதிய ஏற்பாட்டின் வார்த்தைகள் ஞானஸ்நான நீரினால் அழுக்கைக் கழுவுவதைக் குறித்து நம்மிடம் அனேக விஷயங்களைத் தெரிவிக்கின்றன.
ஆசாரியர்களால் தம் வாழ்வில் சேர்ந்த அழுக்குகளை வெண்கலப் பாத்திரத்தின் நீரால் கழுவக்கூடும் என்றால், இந்நாளின் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்வில் செய்யும் பாவங்களை எல்லாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலம் கழுவலாம். மேசியா உலகத்திற்கு வந்ததையும் யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் கழுவினார் என்பதையும் பழைய ஏற்பாட்டின் வெண்கலப் பாத்திர நீர் நமக்கு கூறுகிறது.
இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்கள் மட்டுமின்றி, மனித வரலாற்றில் உள்ள மனிதகுலம் முழுவதும் செய்த பாவங்களை இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் தன் மீது ஏற்றுக்கொண்டார் என்று வேதாகத்தின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெறும்போது அவர் மத்தேயு 3:15 இல் யோவானிடம் கூறினார், "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய யோவானிடமிருந்து கைவைத்தலைப் போன்ற தன் ஞானஸ்நானத்தைப் பெற்றதன் மூலம், மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் இயேசு தம் சரீரத்தில் பெற்றுக் கொண்டார்.
ஆகவே, ஞானஸ்நானத்தின் மூலமாக மேசியாவாகிய இயேசுவின் மீது நம்முடைய எல்லாப் பாவங்களும் சுமத்தப்பட்டது என்ற செய்தியை விசுவாசிப்பதின் மூலம், நம் இருதயங்களில் இருக்கும் அழுக்குகளை நம்மால் கழுவி விட முடியும். இந்த சத்தியத்தை விசுவாசித்ததின் மூலமாக நம் பாவங்களை எல்லாம் ஏற்கனவே இயேசுவின் மீது சுமத்தியதால், தேவ குமாரர் உலகின் பாவங்களை எல்லாம் சிலுவைக்கு எடுத்துச் சென்று, சிலுவையில் அறையப் பட்டு, எல்லா மனிதர்களுக்குமாக களங்கமில்லாத பலிமிருகம் ஆகியதுடன், நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்தார் என்பதை விசுவாசிக்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இதனை உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கிறீர்களா? மேசியா நம் சொந்த பலி காணிக்கையாகினார் என்று உண்மையாகவே விசுவாசிப்போர் நித்தியமாக இரட்சிக்கப் பட்டனர்.
இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலமும் அன்றாடப் பாவங்களின் பிரச்சினையத் தீர்க்கலாம்
நம்முடைய சொந்தப் பாவங்களை எப்படி கழுவுவது என்று வேதாகமம் நம்மிடம் கூறிகிறதா? பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் தம்முடைய அழுக்குகளை வெண்கலப் பாத்திரத்தின் நீரினால் கழுவியதைப் போல, புதிய ஏற்பாட்டில், யோவானிடம் இருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது எடுத்துக் கொண்டு கர்த்தரின் நீதியை நிறவேற்றினார் என்பதை விசுவாசிப்பதின் மூலம் நம் சொந்தப் பாவங்களுக்கான பாவமன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ளலாம். முடிவில் இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டன.
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு பலி காணிக்கையைக் கொடுப்பதற்காக, செம்மறியாடு அல்லது வெள்ளாடு போன்ற களங்கமில்லாத பலி காணிக்கையை ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதுத்து வந்து, அதன் தலை மீது தம் கைகளை வைத்து தம் பாவங்களை அறிக்கைச் செய்து அவற்றை அதன் மீது செலுத்தி, அப் பாவங்களை ஏற்றுக்கொண்ட அப் பலி காணிக்கையை கொன்றனர். அவர்கள் அதன் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தைச் சேகரித்து சர்வாங்க தகன பலிபீடத்திலுள்ள கொம்புகளிலும், மீதியைத் தரையிலும் கொட்டினர் (லேவியராகமம் 4). பாவ நிவர்த்தி நாளின் கொடுக்கப்பட்ட இந்த பலி காணிக்கையின் மூலம் ஒரு வருடத்தின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன (லேவியராகமம் 16). முடிவில் பார்த்தால், பழைய ஏற்பாட்டின் அதே பலியிடும் முறையின் மூலமாக நாம் பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்கிறோம் - அதாவது, நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்காக வந்த மேசியாவின் ஞானஸ்நானத்தையும் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலமாக பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறோம்.
பழைய ஏற்பாட்டின் கைவைக்கும் முறையானது புதிய ஏற்பாட்டில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தைப் போன்றது. யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம், மற்றும் சிலுவையின் இரத்தத்தின் மூலமாக நம் மேசியா நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கழுவினார். மேசியாவின் ஞானஸ்நானத்தின் மூலமும் அவரின் சிலுவை இரத்தத்தின் மூலமும் கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்திருக்கும் போது, பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு நாம் இன்னமும் என்ன செய்யவேண்டும்? நம்முடைய பலவீணத்தினாலே நாம் அன்றாடம் நம் வாழ்க்கையில் பாவம் செய்தாலும் கூட நீராலும் இரத்தத்தாலும் வந்த இயேசுவால் இப் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன என்பதை நாம் நினைவில் வைத்திருப்பதுடன் விசுவாசிக்கவும் வேண்டும். நாம் கர்த்தரை விசுவாசித்தாலும் கூட, நாம் குறைபாடுடையவர்களாய் இருப்பதினாலே, நாம் இன்னமும் பலவீணத்திலும் மீறுதல்களிலும் விழுந்து போகிறோம். ஆனால் இவை யாவற்றையும் அறிந்த கர்த்தர், மேசியாவை இப் பூமிக்கு அனுப்பி, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அவரின் ஞானஸ்நானத்தின் மூலம் சுமக்கச் செய்து, அவரை பலியாக்கியதின் மூலம் நம்மை இரட்சித்தார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சர்வாங்க தகன பலிபீடத்தையும் வெண்கலப் பாத்திரத்தையும் வைத்ததின் மூலமாக, கர்த்தரின் வீடாகிய அவருடை ஆலயத்திற்குள் நாம் செல்லும் முன் நாம் அன்றாடம் செய்யும் பாவங்களைக் கழுவும்படிச் செய்தார். அன்றாடம் மனந்திரும்பி ஜெபிப்பதன் மூலம் நம் சொந்தப் பாவங்களைக் கழுவ வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. இதற்கு மாறாக, மேசியாவின் ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவை இரத்தம் ஆகியவற்றில் உள்ள நமது விசுவாசம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டது. நீதிமான்கள் இயேசுவை விசுவாசித்த பிறகு, தவறுகளையும், பாவங்களையும், அக்கிரமங்களையும் செய்யும் போது, தேவனின் வெண்கலப் பாத்திரமாகிய மேசியாவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களையும் கழுவ வேண்டும்.
இயேசு பாவங்களைச் சுமந்ததையும், எல்லாப் பாவங்களுக்குமாக அவர் நியாயம் தீர்க்கப்பட்டதையும் ஒன்றாக நினைத்து, அவற்றை ஒரே பொட்டலமாக கட்டும் வேலையை அனேக மக்கள் செய்கிறார்கள். நாம் நம்முடைய பலவீணத்தினால் நம் சொந்தப் பாவங்களை அன்றாடம் செய்வதால். பாவங்களைக் கழுவுவதையும், பாவத்திற்கான நியாயத்தீர்ப்பையும் இரண்டாக பிரிக்கவேண்டும். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவை மரணம் ஆகியவை அவர் தன் மீது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொள்ளவும், இப்பாவங்களுக்காக நியாயம் தீர்க்கப்படவும், இவற்றின் மூலமாக் நம்மை இரட்சிக்கவும் ஆகும். இந்த நம்பிக்கையின் மூலமாக நம் பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பை ஒரேதரமாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மேசியாவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலமாக நாம் அன்றாடம் செய்யும் பாவங்களை நாம் தீர்க்கவேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகச் சேர்ப்பதின் மூலமாக, அதாவது ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் ஒன்றாகச் சேர்ப்பதின் மூலமாக, நிறைவான இரட்சிப்பு நிறைவேற்றப்படுகிறது. நிறைவான பாவமன்னிப்பைக் குறித்த சத்தியம் இதுவேயாகும். நம்முடைய பாவங்களுக்கான தீர்வைப் பொறுத்தவரையில், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவையையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து விசுவாசிக்க வேண்டும், என்பதை இதுவரை நாம் கண்டோம்.
ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்கள் பலி மிருகங்களைக் கொன்றபோது, தெளிக்கும் இரத்தத்தினாலும், மாமிசத் துகள்களாலும் அவர்கள் அழுக்கடைந்தார்கள். அவர்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. ஆசாரியர்கள் இந்த அழுக்கை கழுவ வேண்டும், ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் இந்த வெண்கலப் பாத்திரம் இல்லையென்றால், அவர்களால் அப்படிச் செய்திருக்க முடியாது. வருடாந்திர பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசாரியானாலும் சரி, சாதாரன ஆசரியனானாலும் சரி, அவர்கள் மீதுள்ள அழுக்குகளைக் வெண்கலப் பாத்திரத்தில் உள்ள நீரால் நேரடியாக கழுவி விடா விட்டால், தன் மீதுள்ள அழுக்குகளுடன் வாழ்வதைத் தவிர்க்க முடியாது.
தலைமை ஆசாரியனின் மீது எல்லா வகையான அழுக்குகள் இருந்தாலும் கூட, ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் வெண்கலப் பாத்திரம் இருந்ததால், அவனால் அதனைக் கழுவ முடிந்தது. ஒரு வருடம் செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரு ஆசாரியன் மன்னிக்கப்பட்டிருந்தும், அன்றாடப் பாவங்களை இப்படியாக கழுவுவதின் மூலமே இந் நபர் சுத்திகரிக்கப்படுவார். தனக்கு காணிக்கைச் செலுத்திய ஆசாரியர்கள் வெண்கலப் பாத்திரத்தில் இப்படியாகத் தம் அழுக்குகளைக் கழுவ வேண்டும் என்று கர்த்தர் நியமித்திருந்தார். இப்பொழுது கர்த்தர் ஏன் ஆசரிப்புக் கூடார பிரகாரத்தில் வெண்கலப் பாத்திரத்தை வைத்தார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. இந்த வெண்கலப் பாத்திரம் ஏன் சர்வாங்க தகன பலிபீடத்திற்கும் தேவன் இருக்கும் ஆலயத்திற்கும் இடையில் வைக்கப்பட்டிருந்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
வெண்கலப் பாத்திரம் நமக்கேன் தேவைப்படுகிறது?
வெண்கலப் பாத்திரத்தில் அடங்கியுள்ள சத்தியம் யோவான் 13 இல் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. பஸ்கா பண்டிகையின் போது தனது சீடர்களுடன் கடைசி இராப்போஜனத்தை முடித்து விட்டு, அவர்களின் கால்களைக் கழுவி விடும் போது பேதுருவின் முறை வந்தது. இயேசு அவனுடைய காலைக் கழுவும் நேரம் வந்தபோது, அவற்றைக் கழுவும் படியாக அவன் கால்களை வெளியே நீட்டுமாறு அவனிடம் கூறினார். ஆயினும் பேதுரு அவர் வேண்டுகேளை நிராகரித்தான், "நான் உம் கால்களைக் கழுவ வேண்டியதாயிருக்க, தேவனாகிய நீர் என் கால்களைக் கழுவலாமா?"
ஒரு ஆசிரியர் தன் சீடரின் கால்களைக் கழுவுவது சரியானதாக இருக்காது என பேதுரு எண்ணியதே இந்த நிராகரிப்புக்கு காரணமாகும். "நான் எப்படி என் ஆசிரியரை என் கால்களைக் கழுவும் படி கூறமுடியும்? என்னால் முடியாது."
பேதுரு தொடர்ந்து இயேசுவின் செயலை மறுத்துக் கொண்டேயிருந்தான். அப்போது இயேசு பேதுருவிடம் பேசியது மிகவும் முக்கியமானதாகும்.
"நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்" (யோவான் 13:7). இயேசு கீழ்க்கண்ட பொருள்வரும் படி பேசினார். "நான் உன் கால்களைக் கழுவுவதன் முக்கியத்தை இப்போது நீ அறியமாட்டாய். ஆனால் உன் சொந்தப் பாவங்களைக் தீர்ப்பதற்கான திறவுகோல் இதுவேயாகும். நீ இப்போதிலிருந்து அனேக சொந்தப் பாவங்களைச் செய்வாய், ஆனால் உன் எதிர்காலப் பாவங்களையும் கூட நான் ஏற்கனவே என் மீது ஏற்றுக் கொண்டுள்ளேன், மேலும் இந்த பாவங்களினால், நான் என் இரத்தத்தை சிலுவையில் சிந்த வேண்டும். ஆகவே உன்னுடைய எதிர்காலப்பாவங்கள் உட்பட எல்லாப் பாவங்களையும் பொறுப்பேற்றுக் கொண்ட மேசியா நான் என்பதை நீ அறிந்து விசுவாசிக்க வேண்டும்."
பேதுருவின் மனதில், மேசிய தனது கால்களைக் கழுவி விடுவது சரியானதாக தோன்றவில்லை, இதனால் தான் அவன் தொடர்ந்து மறுத்துக் கொண்டேயிருந்தான். "இதனைக் குறித்து நீ பின்னால் அறிந்து கொள்வாய்" என்று இயேசு பேதுருவிடம் கூறியவாறு அவனுடைய கால்களைக் கழுவினார்.
"நான் உன் கால்களைக் கழுவுவதின் மூலம் மட்டுமே உனக்கும் எனக்கும் உறவு இருக்க முடியும். நான் உன் கால்களை ஏன் கழுவுகிறேன் என்பதை இப்போது நீ புரிந்து கொள்ள மாட்டாய். ஆனால் நான் சிலுவையில் அறையப்பட்டு பரலோக ராஜ்யத்திற்கு ஏகிய பிறகு, நான் ஏன் உன் கால்களைக் கழுவினேன் என்பதைப் புரிந்துக் கொள்வாய். நான் உன் மேசியாவாக இருப்பதினால், என் ஞானஸ்நானத்தினால் உன் எதிர்கால பாவங்களையும் கூட நான் சுமக்கிறேன், நான் உன் பாவங்களுக்கான பலி காணிக்கையானபடியால், உன் இரட்சகருமாயினேன்."
நம் தேவன் கூறியதைப் போல, இவற்றைக் குறித்த எவற்றையும் பேதுரு புரிந்துகொள்ளவில்லை, ஆனால் நம் தேவன் பரலோகம் ஏகிய பிறகு, அதனை அவன் தெளிவாக புரிந்து கொண்டான். உண்மையாகப் பார்த்தால், இந்நொடியில் தான் அவனுடைய சொந்தப் பாவங்கள் யாவும் சுத்திகரிக்கப் பட்டன.
"உலகத்தில் என்னால் என் சொந்தப் பாவங்களைச் செய்வதைத் தவிர்க்க முடியாது என்பதால், தேவன் எனது கால்களைக் கழுவினார், இதன் மூலமாக மேசியாவாகிய இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக என் சொந்தப் பாவங்களை எல்லாம் தன்மீது சுமந்தார் என்பதை என்னால் விசுவாசிக்கமுடிகிறது! எதிர்காலத்தின் பாவங்களைக் கூட, மேசியாவின் ஞானஸ்நானம் பொறுப்பேற்றுக்கொண்டது! இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதுடன், இப்பாவங்களை சிலுவைக்கு எடுத்துச் சென்று, சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையப் பெற்றார்! அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தபடியால், உண்மையாகவும், முற்றிலுமாகவும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார்!"
சிறிது காலத்திற்கு பிறகே, தேவனை அவன் மூன்று முறை மறுதலித்ததற்குப் பிறகே, பேதுரு இதனைக் குறித்து அறிந்து அதனை விசுவாசித்தான். இதனால் தான் அவன் 1 பேதுரு 3:21 இல் கூறினான், "அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது" இங்கே `ஒப்பனையான` என்றச் சொல்லானது "இதற்கு முன்பு நடந்த ஒன்றுடன் தொடர்புடையது, அல்லது முன்பேயிருந்த ஒரு குறியீட்டுடன் அல்லது ஒருவகையுடன் தொடர்புடையது ஆகும், இது புதிய ஏற்பாட்டுடன் பழைய ஏற்பாட்டிற்கு உள்ள ஜோடியாகும்." ஆகவெ, சற்றுமுன் பார்த்த வசனம், இயேசுவின் ஞானஸ்நானமானது பழைய ஏற்பாட்டின் `நீரிற்கு` ஒப்பனையானது.
பழைய ஏற்பாட்டில், பாவ நிவர்த்தி நாளில், வருடாந்திரப் பாவங்களுக்கான பாவமன்னிப்பைப் பெறுவதற்காக பாவ காணிக்கையைச் செலுத்தும்போது, இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாகிய தலைமை ஆசாரியன், தன் கைகளை பலி மிருகத்தின் தலை மீது வைத்து, இஸ்ரவேலர் செய்த பாவங்கள் அனைத்தையும் அறிக்கைச் செய்ததின் மூலமாக, அவற்றை அதின் மீது செலுத்தினான். இந்த கைவைக்கும் முறையானது இயேசுவின் ஞானஸ்நானத்தினைப் போன்றதாகும். பழைய ஏற்பாட்டில், பலி மிருகமானது மரிக்கும் படியாக இரத்தம் சிந்த வேண்டியிருந்தது, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அனைவரின் பாவங்களையும் அது ஏற்றுக்கொண்டது. அதன் கழுத்து வெட்டப்பட்டு தன் இரத்தம் அனைத்தையும் சிந்தியது. ஆசாரியர்கள் அதன் தோலை உரித்து, துண்டு துண்டாக வெட்டி, அதனை தீயில் எரித்ததின் மூலமாக, அதன் மாமிசத்தைக் கர்த்தருக்கு காணிக்கையாக்கினர்.
பழைய ஏற்பாட்டின் பலியிடும் முறையின் மூலப் பொருளாகிய மேசியா இவ்வுலகிற்கு வந்து, கைவைப்பதின் மூலமாக நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, சிலுவையில் மரித்து நம்முடைய இடத்திலிருந்து மரித்தார். இன்று நீங்களும் நானும் இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை மரணத்தினாலும் பாவமன்னிப்பை முற்றிலுமாக பெற்றுக் கொண்டோம். நம்முடைய தேவன் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாகவும், நம்முடைய சொந்தப் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதை விசுவாசித்து நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் பாவங்களை எல்லாம் நாம் கழுவ வேண்டும். இந்த சத்தியத்தை நாம் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு அவற்றைத் தமது ஞானஸ்நானத்தினால் கழுவினார் என்பதை விசுவாசிக்கும் போது மட்டுமே நம்முடைய சொந்தப் பாவங்களிலிருந்து விடுதலையாக முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் நம்முடைய சொந்தப் பாவங்களைச் செய்யும் போதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தை உறுதி படுத்தவேண்டும். இயேசுவால் அவருடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவையினாலும் நம்முடைய சொந்தப்பாவங்களும் கூட ஏற்கனவே துடைக்கப் பட்டுவிட்டன என்ற சத்தியத்தை அசை போடுவதின் மூலம், நம் இரட்சிப்பை எந்த நிலையிலும் இழந்து போக மாட்டோம், மேலும் எப்போதெல்லாம் நமது இருதயம் குற்ற உணர்ச்சியால் தாக்கப்படும் போது அதிலிருந்து மீளவும் முடியும்.
தம்முடைய அன்றாட வாழ்விற்கான பாவமன்னிப்பைப் பெற்ற நீதிமான்களால் செய்யப்பட்ட அன்றாடப் பாவங்களையும் கூட இயேசு ஏற்கனவே கழுவி விட்டதால், வெண்கலப் பாத்திரத்தைக் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்தார், இதனால், நீர், இரத்தம் மற்றும் ஆவியால் வந்த பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்ட இந்த நீதிமான்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள விசுவாசத்தின் மூலமாக தம்முடைய சொந்தப் பாவங்களைக் கழுவ முடியும்.
இதனால்தான் ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்த பெண்களின் கைக்கண்ணாடிகளை சேகரித்து அவற்றை உருக்கி கர்த்தர் வெண்கலப் பாத்திரத்தைச் செய்தார், ஏனெனில் இக்கண்ணாடிகள் சுய பிரதிபலிப்பை உடையவை. நம்முடைய பலவீணங்களினால் நாம் சொந்தப் பாவங்களைச் செய்து, பாவத்தில் விழும்போது, வெண்கலப் பாத்திரதிடம் நாம் சென்று நம் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும். யோவானிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் தன் மீது ஏற்றுக் கொண்டார் என்பதை நமக்கு நினைவு படுத்தும் வேலையை வெண்கலப் பாத்திரம் செய்கிறது. பாவமன்னிப்பு பெற்ற நீதிமான்களுக்கு, இப்பெண்களின் கைக்கண்ணாடிகளை உருக்கி இந்த வெண்கலப் பாத்திரத்தை இஸ்ரவேலர்கள் உருவாக்கும் படி நம் தேவன் செய்து, அதனை நீரினால் நிரப்பி, ஆசாரியர்கள் தம் கைகளிலும் கால்களிலும் உள்ள எல்லா அழுக்குகளையும் இந்த நீரினால் கழுவுவதற்கு அனுமதித்தார் என்ற சத்தியத்தைப் போதிப்பதற்கே இது நிறுவப்பட்டது.
இயேசுவே தேவகுமாரரென்றும், படைப்பாளியென்றும், மனிதகுலத்தின் இரட்சகர் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். மேசியா இவ்வுலகிற்கு மனித மாமிசத்தினால் வந்தார் என்பதையும், யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் - அதாவது நாம் இந்த உலகில் சொந்த பாவங்களைச் செய்யும் போது, பலவீணத்தில் விழுந்து போகிறோம், அல்லது பலவீணம் அங்கே வெளிப்படுகிறது, அப்போது நாம், மேசியா மாமிசமாக வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப் பட்டதின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே துடைத்துப் போட்டார் என்பதை இன்னமும் அதிகமாக நினைவு கூறவேண்டும்.
நாம் பாவமன்னிப்பைப் பெற்றிருந்தாலும், நாம் இதனை நினைவு கூர்ந்து அதனை விசுவாசிக்கவில்லை என்றால், நாம் நமது சொந்தப் பாவங்களினால் மீண்டும் கட்டப்பட்டு, பழைய பாவ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். நம்முடைய பலவீணங்களினாலும் குறைபாடுகளினாலும் செய்யும் எல்லாப் பாவங்களும் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் அவரின் மீது சுமத்தியாயிற்று என்பதை ஒவ்வொரு நாளும் நாம் நினைவு கூறவேண்டும். யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக மேசியா நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டு, அவற்றைக் கழுவி விட்டார் என்பதை ஒவ்வொரு நாளும் நாம் நினைவு கூர்ந்து, மீண்டுமாக அதனை விசுவாசிக்க வேண்டும்.
யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களை இயேசு சுமந்து அவருடைய இரத்தத்தைச் சிந்தினார் என்பதை விசுவாசிக்காமல், இயேசுவை மட்டும் விசுவாசிப்பதினால், இந்த பூமியின் மீதுள்ள எந்த ஒரு மனிதனாலும் பாவ மன்னிப்பை பெற முடியாது. பாவமன்னிப்பை மக்கள் பெற்றிருந்த போதிலும் கூட, தன் சொந்த பாவத்தைச் செய்யாத ஒரு மனிதன் கூட இல்லை. எப்படியாயினும், இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காவிட்டால் அனைவரும் பாவம் நிறைந்தவர்களாகவே இருப்பர், இதனால் கர்த்தரின் சித்தம் அனைவரிடமும் நிறைவேறாது. இதனால்தான் கர்த்தர் தன் மகனை நம்மிடம் கொடுத்து, யோவானால் ஞானஸ்நானம் பெறச்செய்து, இரத்தம் சிந்தும்படி சிலுவைக்கு அளித்தார்.
இயேசு கிறிஸ்துவை நமது மேசியாவாக விசுவாசித்தால், யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் அவர் தன் மீது சுமந்து, உலகின் பாவங்களை எல்லாம் சிலுவைக்குச் சுமந்து சென்று அதன் மூலம் நியாயம் தீர்க்கப்பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலம் பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ளமுடியும். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களும் துடைக்கப்பட்டன. நம்முடைய இருதயங்களின் மூலமாக கர்த்தரின் அன்பை விசுவாசித்ததினால் நாம் நீதியை அடைந்தோம். நமது இருதயங்கள் பாவமற்றவையாகவும், சுத்தமானதாகவும், புள்ளிகள் இல்லாததாகவும் இருக்கின்றன. ஆனால் நமது இருதயங்களில் இன்னமும் குறைபாடுகள் இருக்கின்றன. இதனால் தான் இயேசுவின் ஞானஸ்நானத்தை தினந்தோறும் நாம் எண்ணி, இந்த விசுவாசத்தை எப்போதும் நாம் நினைவு கூறவேண்டும். எப்பொழுதெல்லாம் நமது குறைபாடுகளும் பலவீணங்களும் வெளிப்படுகின்றனவே, எப்பொழுதெல்லாம் நமக்குள் தீய சிந்தனைகள் உருவாகி நம்மை அழிக்கின்றனவோ, எபொழுதெல்லாம் நமது செயல்கள் நாசமடைகின்றனவோ, அப்போது யோவானிடமிருந்து இயேசு பெற்றுக்கொண்ட ஞானஸ்நானத்தின் மூலம் இந்த எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு, நமது இருதயங்களைச் சுத்தமாக்கினார் என்ற இந்த உண்மைய மீண்டும் விசுவாசிக்கும்போது நம் தேவன் பிரியப்படுகிறார்.
எப்பொழுதெல்லாம் பாவம் செய்கிறோமோ, அப்போதெல்லாம் கர்த்தர் முன்னதாக முதலில் அதனை ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த எல்லாப் பாவங்களும் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமாக ஏற்கனவே அவருக்குள் செலுத்தப் பட்டுவிட்டது என்பதை மீண்டும் நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நான செய்கையால் சுத்திகரிக்கப்பட்ட நாம், இந்த செய்கையை விசுவாசிப்பதின் மூலமாக தம் சொந்தப் பாவங்களை அன்றாடம் கழுவ வேண்டும். இதனால் தான் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் கழுவ முடியும் என்பதை நாம் நினைவில் வைத்திருந்து அதனை விசுவாசிக்கவேண்டும்.
சர்வாங்க தகன பலிபீடத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் கர்த்தர் ஏன் வெண்கலப் பாத்திரத்தை வைத்தார் என்பதைக் குறித்து இப்போது நாம் பார்த்தோம். சர்வாங்க தகன பலிபீடத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் கர்த்தர் வெண்கலப் பாத்திரத்தை வைத்ததின் மூலம், அவருக்கு முன்னால் நாம் செல்லும்போது, சுத்தமான சரீரத்துடனும் இருதயத்துடனும் நாம் செல்வோம். இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் சிலுவையினாலும் நாம் முழுமையான பாவமன்னிப்பை பெற்று அதன் மூலமாக நாம் நீதிமான்களாகியிருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களினால் நம்முடைய இருதயங்கள் அழிந்து போகும் நிலையிலேயே இருக்கின்றன. இதனால் தான் சர்வாங்க தகன பலிபீடத்தைக் கடந்து கர்த்தருக்கு முன்னதாக நாம் செல்லுகையில், வெண்கலப் பாத்திரத்தில் நம் அழுக்கை எல்லாம் கழுவவேண்டும். நம்மிடம் சிறிதளவு பாவம் இருந்தாலும் கூட, நம்மால் கர்த்தருக்கு முன்னால் போகமுடியாது என்ற காரணத்தினாலேயே, சர்வாங்க தகன பலிபீடத்திற்கும், பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே கர்த்தர் வெண்கலப் பாத்திரத்தை வைத்தார், இதனால் வெண்கலப் பாத்திரத்தின் நீரினால் சுத்திகரிக்கப்பட்டவர்களாய் கர்த்தரின் பிரசன்னத்திற்கு பரிசுத்தமாக செல்லலாம்.
எத்தகைய மனசாட்சி கர்த்தருக்கு முன்னதாக சிறந்த மனசாட்சியாகும்?
இயேசுவின் ஞானஸ்நானத்தை "தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சி" என்று 1 பேதுரு 3:21 வரையறுக்கிறது. யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நாம் அன்றாடம் செய்யும் பாவங்கள் உட்பட மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசு கழுவி விட்டார் என்பதை விசுவாசிக்கும் ஒன்றே "நல்மனச்சாட்சி" ஆகும். நம்முடைய பாவங்களைத் தன் மீது ஏற்றுக்கொள்வதற்காக யோவானால் நம் தேவன் ஞானஸ்நானம் பெற்று இதன் மூலம் நம் பாவங்களைத் தன்னுடைய சரீரத்தினுள் ஏற்றுக்கொண்டார். நம் எல்லாப் பாவங்களையும் இயேசு தன்னுடைய சரீரத்தில் சுமந்தமையால், அவர் சிலுவையில் மரிக்க வேண்டியதாயிற்று. அவர் செய்தவைகளையெல்லாம் நாம் அலட்சியம் செய்து அதனை விசுவாசிக்கவில்லை என்றால் நமது மனச்சாட்சி தீயதாகவே இருக்கும். இதனால் தான் நாம் இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்னதாக நம்மிடம் நல் மனச்சாட்சி இருக்க வேண்டும். நம்முடைய மாமிசத்தினால் 100 சதவீதம் நிறைவானவர்களாக வாழமுடியாவிட்டாலும், நமது மனச்சாட்சியிலாவது, கர்த்தரின் பார்வைக்கு முன்னதாக நல் மனச்சாட்சியுடன் இருக்க வேண்டும்.
அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கொரிய போரின் போது கொரியா எல்லாவற்றையும் இழந்து நின்றபோது, நாட்டின் சீரழிவைச் சமாளிக்க வெளிநாட்டு உதவிகள் குவிந்தன. அனாதைகள் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும், அப்படி நடப்பதற்கு பதிலாக, குரூரமான மனிதர்கள் அவற்றை தம்முடைய பாக்கெட்டை நோக்கித் திசைத்திருப்பி தம் செல்வத்தைக் கட்டி எழுப்பினர். அவர்களிடம் மனச்சாட்சி இருக்கவில்லை. பால் பவுடர்களையும், மாவையும், போர்வைகளையும், காலணிகளையும், ஆடைகளையும் மற்ற உதவி பொருட்களையும் வெளிநாடுகள் அனுப்பியபோது, ஆடைகளற்ற, பசியுடனான, தேவையுள்ள மக்கள் ஆடைகளை அணிந்து பசியாறுவார்கள் என்று இந்த உதவியாளர்கள் அவற்றை அனுப்பி வைத்தனர்; சில அரச ஊழியர்களும், சுரண்டல் பேர்வழிகளும், உதவிப் பொருட்களை கொள்ளையடிப்பர் என அவர்களால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
நல்மனச்சாட்சியுடைய மக்கள் அவற்றை ஏழைகளுக்கு மத்தியில் நேர்மையுடன் வினியோகித்தனர். வெளிநாட்டு உதவிகளை தமக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தாமல், பசியால் வாடும் ஏழைகளுக்கு நேர்மையுடன் வினியோகித்தவர்கள் கர்த்தருக்கு முன்னதாக வெட்கத்துடன் நிற்கவில்லை, ஏனெனில் அவர்கள் நல்மனச்சாட்சியுடன் வாழ்ந்தனர். ஆனால் அப்படிச் செய்யாதவர்களை அவர்களுடைய சொந்த மனச்சாட்சியே திருடர்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கும். ஆனால் இந்த திருடர்கள் கூட மனம் திரும்பி, இயேசுவின் ஞானஸ்நானத்தை இந்த நொடியில் விசுவாசித்தாலும் கூட அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவி விடலாம்.
நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ளவும் நம்முடைய சொந்தப் பாவங்களைத் துடைத்துப் போடவும் இயேசு இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றார். யோவானால் இப்படியாக ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசு ஒரேதரமாகக் கழுவினார். "அப்படியானால், அவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசிக்கச் செய்யாதபடியாக எது உங்களை இத்தனைக் கர்வமுள்ளவர்களாக்கிற்று? எந்த மனதைரியத்தினால் நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்? அவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் ராஜ்யத்திற்குள் உங்களால் நுழையமுடியுமா?" என ஞானஸ்நானத்தை விசுவாசிக்காத அவிசுவாசிகளை நான் கடிந்து கொள்கிறேன்.
நாம் நல்மனச்சாட்சியின் மக்களாக இருக்கவேண்டுமென உண்மையாகவே விரும்பினால், இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லா சொந்தப் பாவங்களையும் கழுவி விடவேண்டும். இப்படிச் செய்வதற்கு, நம் வாழ்நாள் முழுவதும் நாம் செய்யும் எல்லாப் பாவங்களையும் இயேசு தன்மீது சுமந்தார் என்றும் அதனை அவர் முற்றிலுமாக கழுவி விட்டார் என்றும் நாம் நம் இருதயங்களில் விசுவாசிக்கவேண்டும். இதனால் தான் மேசியாவாகிய இயேசு, சிலுவைக்குச் செல்லுவதற்கு முன் யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார்.
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு கூறினார், "நானும் உன்னைத் தண்டிக்கப் போவதில்லை. நான் உன்னை நியாயம் தீர்க்கப் போவதும் இல்லை." ஏன்? ஏனெனில், இப்பெண்ணின் விபசார பாவத்தையும் கூட இயேசு ஏற்கனவே தன்மீது சுமந்துக்கொண்டிருந்தார், மேலும் இயேசுவே இந்தப் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பையும் பெறவேண்டியவர். "உன்னுடைய பாவங்களுக்காக நியாயத்தீர்ப்பைப் பெறப்போவது நானே. ஆகவே என் ஞானஸ்நானத்தை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வாயாக. ஆகவே என்னை விசுவாசிப்பதின் மூலம் உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்படுவாயாக. விசுவாசத்தின் மூலமாக பாவத்தின் எல்லாத் தண்டனையிலிருந்தும் இரட்சிக்கப் படுவாயாக, மேலும் உன் எல்லாப் பாவங்களையும் கழுவுவாயாக. உன்னுடைய மனச்சாட்சியில் உள்ள பாவங்களைக் கழுவுவாயாக, மேலும் என்னிடமுள்ள ஜீவத் தண்ணீரைக் பருகுவாயாக, அது உன்னை மீண்டும் தாகமாக்காது" என்று அவர் கூறினார்.
நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தது என இன்று நீங்களும் நானும் விசுவாசிக்கிறோம். இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தினால் நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு அவர் அதனை முற்றிலுமாக கழுவிவிட்டார் என்று நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நம் தேவன் நம் பாவங்களைக் கழுவினார். இப்போது நம்மால் நல் மனச்சாட்சியுடனே கர்த்தருக்கு முன்னதாகச் செல்ல முடியும். ஏன்? ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், சிலுவைக்கு அதனை எடுத்துச் சென்றதன் மூலமாகவும், சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் நமக்காக தண்டனை அனுபவித்ததின் மூலமாகவு, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தமையாலும், நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைக் கழுவினார். வெகு காலத்திற்கு முன்னால், இயேசு இவ்வுலகிற்கு வந்தார், மேலும் அவருடைய 33 ஆண்டு வாழ்க்கையில், அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டு தன்னுடைய ஞானஸ்நானத்தினால் அவற்றைக் கழுவினார்.
நம்முடைய சொந்தப் பாவங்களையும் கூட அவர் தன்மீது ஏற்றுக்கொண்டு அதனைக் கழுவியதாலே, அவர் நம்மைக் கர்த்தருக்கு முன்செல்ல ஏதுவாக்கியதுடன் நம்மை நீதிமான்களுமாக்கினார், மேலும் இயேசு கிறிஸ்துவின் பலியினாலே நம் எல்லாப் பாவங்களுக்கும் தீர்ப்படைந்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த தேவனை விசுவாசிப்பதின் மூலமாகவே, கர்த்தரை நம் பிதாவே என்றழைத்து அவை முன்னால் செல்லமுடிகிறது. நீர், இரத்தம், மற்றும் ஆவி ஆகிய இயேசுவின் செயல்களை விசுவாசிப்பவர்களாலேயே நல் மனச்சாட்சியுடன் இருக்கமுடிகிறது. அதற்கு மாறாக, தேவனின் நீதியின் செயல்களாகிய அவரின் ஞானஸ்நானத்தையும், சிலுவை மரணத்தையும் விசுவாசிக்காதவர்களிடம் இருப்பது மோசமான மனச்சாட்சியே ஆகும்.
இந்நாட்களில், அனேக மக்கள் தம்முடைய மேலோட்டமான விசுவாசத்தினால், கர்த்தருடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
அனேக பொய்யர்கள், ஏதோ அணிகலன்களைப் போல் கர்த்தரின் வார்த்தையைக் கழற்றி வைத்துவிட்டு, பரலோக ராஜ்யம் செல்லுவதற்கு, கர்த்தர் மேலுள்ள நமது விசுவாசத்துடனே கூட நல்லவைகளையும் செய்ய வேண்டும் என்று பிரசங்கிக்கிறார்கள். இரட்சிப்பைக் குறித்து வரும்போது, சிலுவையின் இரத்தத்தைக் குறித்து மட்டுமே அவர்கள் பேசுகின்றனர், மேலும் கர்த்தரைச் சந்திக்க தம் சரீர உணர்வுகளை எதிர்பார்த்து, ஜெபிப்பதற்காக மலைகளின் மேல் ஏறவேண்டும் என்றும், உப்வாசம் இருக்கவேண்டும் என்றும் தவறாக எண்ணுகிறார்கள். இந்த விசுவாசத்தை விட வேறெதுவும் தவறானதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் அதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்றனர், "நான் எனது பாவங்களினால் அலைக்கழிக்கப் பட்டேன், அதனால் நான் முழு இரவு ஜெபத்தில் பங்கேற்றேன், `கர்த்தரே நான் பாவம் செய்தேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன், தேவனே` என ஜெபித்தேன். ஒரு நாள், நான் சாயங்கால வேளையில் மிக அதிகமாக அலைக்கழிக்கப் பட்டேன், ஆனால் நான் முழு இரவு ஜெபத்தில் பங்கேற்ற பிறகு, அதிகாலை வேளையில், ஒரு அக்கினிப் பந்து என்மீது தினிக்கப் பட்டதை நான் உணர்ந்தேன், அந்த நொடிப் பெழுதே எனது மனம் மிகவும் சுத்தமாயிற்று௮எனது இருதயத்திலிருந்த எல்லாப் பாவங்களும் பனியைப் போல வென்மையாயிற்று. இந்த சமயத்தில் தான் நான் மறுபடியும் பிறந்தேன். அல்லேலூயா!"
இத்தகைய சிந்தனைகள் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை, அவை அறிவீணமானவையும், முட்டாள்தனமான சிந்தனையும், கர்த்தரின் வார்த்தையை பயனற்றதாக்குவதுமாகும். இத்தகைய மாயவிசுவாசங்களைப் பற்றி கூறி, மக்களை வஞ்சித்து அவர்களை நரகத்தை நோக்கி வழிநடத்துபவர்களை கர்த்தர் பன்மடங்கு தண்டிப்பார் என்பதை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.
"என்னுடைய காதுகள் துன்பமடைந்தன. ஆனால், நாம் விசுவாசித்தால் சுகமடைவோம் என தேவன் கூறியதை நான் விசுவாசிக்கிறேன், ஆகவே, `தேவனே, நான் விசுவாசிக்கிறேன்` எனக்கூறி என் வலியைப் பொருத்துக் கொண்டேன். நான் இப்படியாக விசுவாசித்தபோது, என் எல்லா வலியும் மறைந்து போனது!"
"நான் வயிற்றுப் புன்னினால் கஷ்டப்பட்டேன், ஆகவே, எப்போதெல்லாம் எதையாவது சாப்பிடும்போது, வயிற்று வலியால் அவஸ்தைப் பட்டேன். ஆகவே நான் சாப்பிடுவதற்கு முன் இப்படியாக ஜெபித்தேன், `தேவனே, இங்கே எனக்கு வலியிருக்கிறது, ஆனால் விசுவாசத்துடன் எதைக் கேட்டு ஜெபித்தாலும் அதனைக் கேட்பதாக நீர் என்னிடம் கூறியிருக்கிறீர். உமது வார்த்தையை இன்னமும் நான் விசுவாசிக்கிறேன்.` இப்போது இந்த ஜீரன பிரச்சினை இல்லை!"
இவையெல்லாம் என்ன? வார்த்தையின் மூலமாக தேவனைச் சந்திக்காதவர்களின் கதைகள் இவையாகும். வார்த்தையின் மூலமாக விசுவாசிக்காத அவர்களின் தவறான நம்பிக்கையை இது விளக்குகிறது. இது அவர்கள் வார்த்தையின் மூலமாக ஜெபித்தமைக்கு கிடைத்த பதிலாயில்லாமல், தம்முடைய மாய விசுவாசத்தின் மூலம் பெற்ற பதிலாகும். அவர்கள் வார்த்தையின் மூலம் கர்த்தரை விசுவாசிக்கவில்லை, ஆனால் அவர்களின் சொந்த உணர்ச்சிகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் ஏற்பட்ட குழப்பத்தின் அடிப்படையில் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள். இன்றைய கிறிஸ்தவத்தில் இத்தகைய பல மாய விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதே மிகவும் மனம் வருந்தச் செய்வதாகவும், கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.
இது போலவே, கர்த்தரின் வார்த்தையை புறம்பேத் தள்ளி தம்முடைய உணர்ச்சிகளிலும் அனுபவங்களிலும் சார்ந்து இயேசுவை கண்மூடித்தனமாக விசுவாசிப்பது மேலோட்டமான விசுவாசமாக மட்டுமே கருதப்படுகிறது. வார்த்தையின் படி விசுவாசிக்காவிட்டாலும், இயேசுவைத் தாம் விசுவாசிப்பதாக கூறிக்கொள்ளும் மக்கள் தாம் பிசாசுகளினால் கட்டுண்டிருக்கிறோமா என்பதைக் கண்டுகொள்ள தம்மைத் தாமே சோதித்துக் கொள்ள வேண்டும். "ஜெபிக்கும் போது இயேசுவை நான் சந்தித்தேன். இயேசு என் கனவில் தோன்றினார். நான் இடைவிடாது தொடர்ந்து ஜெபித்தேன், என்னுடைய நோய் குனமாகியது." வாய்க்கோணலானவர்களால் மட்டுமே இத்தகையவற்றைக் கூற முடியும். இங்கு ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது, இது கர்த்தரால் கொடுக்கப் பட்ட விசுவாசமாயில்லாமல், சாத்தானால் கொடுக்கப் பட்ட விசுவாசமாக இருக்கிறது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக நம் தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்தினார். இன்றைய காலத்தில் புதிய முறைகளிலும், வேறு வழிகளிலும் நம் தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறாரா? ஒரு காட்சியிலோ அல்லது கனவிலோ அவர் நமக்கு முன்னதாக உண்மையாகவே தோன்றுகிறாரா? தன் கால்களில் பெரிய சங்கிலையை இழுத்தவாறு நடந்தார், அவர் சரீரம் முழுவதும் இரத்தம் வழிந்தது, முள்முடி அவர் தலையின் மேலிருந்தது, அவர் கூறினார், "இதனைப் பார், இப்படியாகத்தான் நான் உனக்காக பாடுகள் பட்டேன். இப்போது, நீ எனக்காக என்ன செய்வாய்?"௮இப்படித்தான் நம் தேவன் நமக்கு காட்சியளித்தாரா? இவை எல்லாம் பொருந்தாதவை!
இத்தகைய ஒரு கனவைக் கண்டதாக கூறிக்கொண்டு கர்த்தருக்கு முன்னதாக உறுதியளிக்கும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள், "தேவனே, நான் உம் ஊழியனாகி, எனது எஞ்சியிருக்கும் வாழ்நாள் முழுவதும், என் முழு இருதயத்துடனே ஊழியம் செய்வேன். நான் இங்கே ஒரு ஜெப வீட்டைக் கட்டுவேன். நான் அங்கே ஒரு ஆலயத்தைக் கட்டுவேன். நான் எனது எஞ்சியிருக்கும் நாள் முழுவதும் எனது சிலுவையைச் சுமந்து, எனது நாடு முழுவதும், உலகம் முழுவதும் உம்மைக் குறித்து அறிவிப்பேன்."
இத்தகைய அர்ப்பணிப்புள்ள பிரசங்கியாளர்களை தெருக்களிலோ, பொதுவிடங்களிலோ நம்மால் இலகுவாக சந்திக்க முடியும். இயேசுவைத் தமது கனவில் கண்ட பிறகோ அல்லது ஜெபிக்கும் போது தேவனின் சத்தத்தைக் கேட்ட பிறகோ, இப்படியாக தாம் வாழ விருபியதாக கூறும் இத்தகையவர்கள் அனைவரும் மாய விசுவாசிகளேயாவர். ஆனால், தன்னுடைய வார்த்தையால் மட்டுமே தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார்; கனவின் மூலமாக அவர் நம்முடனே பேசுவதில்லை அல்லது ஜெபிக்கும் போது நம்முடன் பேசுவதில்லை, குறிப்பாக அவரின் வார்த்தைகள் யாவையும் முழுமையாக மனிதகுலத்திற்கு கொடுக்கப்பட்ட இக்காலத்தில் இப்படி நடக்காது. மனிதர்களின் உள்மனதில் நிகழும் குழப்பமான நிலைகளினால் கனவுகள் தோன்றுகின்றன. அவர்கள் தம்முடைய வேண்டப்படாத அன்பின் மூலமாக இயேசுவை அதிகப்படியாக நினைப்பதின் மூலமாகவும், அவரைக் குறித்து எல்லாவிதங்களிலும் கற்பனை செய்வதினாலும், இந்த மக்களுக்கு இத்தகைய கனவுகள் வருகின்றன.
ஆழ்ந்த நித்திரைக்கு நாம் செல்லுவதற்கு முன்னதாக உங்கள் மனம் எதைக் குறித்தேனும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்கள் கனவுகளிலும் இந்த விஷயங்கள் மீண்டும் மீண்டும் வருவது அனேகமாக நடக்கக் கூடும். இது போல கனவுகள் உங்கள் உள்மனதுடன் தொடர்புடையது. இதனால் தான் நாம் அதிகமாக எண்ணும் போது, எல்லாவிதமான குழப்பமான கனவுகளும் நமக்குத் தோன்றுகின்றன. அவற்றிற்கும் விசுவாசத்திற்கும் தொடர்பில்லை, ஆனால் அவை சரீர மாறுபாடுகளின் அல்லது உள்மனதின் மாறுபாடுகளின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்கிறது.
இதனால் தான் மக்கள் இயேசு சிலுவையில் அறையப் பட்டு இரத்தம் சிந்தியதை மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, தலையில் முள்முடி சூட்டப்பட்டவராக அவர் அவர்களின் கனவுகளில் காட்சி தருகிறார். இத்தகைய கனவுகளில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இந்த கனவை மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொள்வதே மிகப்பெரிய தவறாகும். இரத்தம் வழிய, இயேசு அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, "நீ எனக்காக என்ன செய்வாய்? நீ எனக்காக உன் ஆயுள் காலம் முழுவதும் உன்னை மறுதலித்தவனாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் உன்னிடம் எந்த செல்வமும் இருக்கக்கூடாது" எனக் கூறினால் என்னவாகும்? இப்படியாக வாழும்படியாக தம்முடைய உடமைகளையெல்லாம் கொடுத்து விட்ட முட்டாள்களான மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒரு கனவினால், அதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதினால் நடுநடுங்கியவர்கள் அல்லது அதனால் தம் வாழ்வு மாறுதலடைந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? இது மாய விசுவாசத்தைத் தவிர வேறில்லை.
வார்த்தையின் மூலமாக கர்த்தர் நம்மைச் சந்திக்கிறார். நம் கனவின் மூலமாகவோ அல்லது நம் ஜெபத்தின் போது காணும் காட்சியின் மூலமாகவோ சந்திக்கக் கூடிய ஒருவர் அவரல்ல. கர்த்தரின் வார்த்தையானது புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் எழுதப்பட்டுள்ளது, நமக்கு பிரசங்கிக்கப்படும் இவ்வார்த்தைகளைக் கேட்பதாலும், அவற்றை நமது இருதயங்களில் ஏற்றுக்கொள்வதினாலும், நமது ஆத்துமாக்கள் அவரை வார்த்தையின் மூலம் காணலாம். வேறு வார்த்தைகளில் கூறினால், வார்த்தையின் மூலம் மட்டுமே நமது ஆத்துமாக்களால் அவரைக் காண முடியும்.
வார்த்தையின் மூலமாகவே, இயேசுவானவர் தனது ஞானஸ்நானத்தினாலே நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் அறிந்து கொண்டோம்; இந்த வார்த்தையை நாம் கேட்டதின் மூலம், இருதயங்களில் நாம் விசுவாசிக்கத் தொடங்கினோம். இயேசு சிலுவையில் ஏன் மரிக்க வேண்டும் என்பதும் வார்த்தையில் காணப் படுகிறது. ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக இயேசு நமது பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டதினால், அவர் சிலுவையில் மரித்து நம்மை இரட்சித்தார். வார்த்தையின் மூலம் கர்த்தரை நாம் அறிந்தோம், வார்த்தையின் மூலம், அவரை நாம் விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த இயேசு கிறிஸ்துவும் கர்த்தரே, இதனை வார்த்தையின் மூலமே நாம் அறிந்து விசுவாசிக்கத் தொடங்கினோம்.
கர்த்தரை நாம் எப்படி விசுவாசிக்கத் தொடங்கினோம்? எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையால் தானே அப்படியாயிற்று?
கர்த்தரின் வார்த்தை இல்லையென்றால், நம்முடைய எல்லாப் பாவங்களையும் மறையச் செய்த இயேசுவை நம்மால் எப்படி சந்தித்து விசுவாசிக்க முடியும்? கர்த்தரின் வார்த்தை இல்லை என்றால், நமது விசுவாசம் ஒன்றுமில்லாததாகியிருக்கும். "நான் நினைப்பது இதுவேயாகும்"௮நாம் நம்முடைய சிந்தனைகளைப் பேசுவதற்கு தலைப்படுவோம், ஆனால் இது உண்மையல்ல, உண்மையல்லாதவைகளால் நமது இருதயங்கள் நிறைந்திருக்கும் போது, உண்மையான சத்தியத்தால் நமது இருதயத்திற்குள் பிரவேசிக்க முடியாது. "நான் நினைப்பது இதுவேயாகும்" என்று கூறுவதற்கு பதிலாக "இதைத்தான் வேதாகமம் கூறுகிறது" எனக் கூறுவது மிகவும் சரியானது. நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, கர்த்தரால் போதிக்கப் பட்ட சத்தியம் நமது இருதயங்களுக்குள் பிரவேசித்து நம்முடைய சிந்தனைகளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த உங்கள் விசுவாசம் எத்தகையது? அது உங்கள் சொந்த சிந்தனைகளினால் உருவானதா? அல்லது வார்த்தையைக் கேட்டதினால் அதனை அறிந்து விசுவாசித்ததின் மூலம் அதனை விசுவாசிக்கத் தொடங்கினீர்களா? வார்த்தையின் மூலமாக மட்டுமே நாம் விசுவாசிக்கத் தொடங்கியதுடன், கர்த்தரை நமது இருதயங்களிலும் சந்தித்தோம். இதனால் தான் ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசல், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டிருந்தது.
இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ள உதவிய ஞானஸ்நானத்தை வெண்கலப் பாத்திரத்தில் இருந்த நீர் சுட்டிக் காட்டுகிறது. "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" (மத்தேயு 3:15). கர்த்தரின் வார்த்தையினால், உலகின் பாவங்களையெல்லாம் தன்மீது ஏற்றுக்கொள்ள உதவிய அவரின் ஞானஸ்நானத்தை நாம் அறிந்து கொண்டோம். வார்த்தையின் மூலமாக வந்ததினால் தான், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நீங்களும் நாமும் செய்யும் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொள்ள உதவிய இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் அறிந்ததினால், இந்த வார்த்தை நம்மிருதயங்களில் ஞானஸ்நானத்தின் மீது விசுவாசம் கொள்ளச் செய்தது. வார்த்தையின் மூலமாக வெண்கலப் பாத்திரத்தில் அறிவிக்கப் பட்ட சத்தியத்தை நாம் கண்டோம்.
கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக வெண்கலப் பாத்திரமானது வெண்கலத்தினால் உருவாக்கப் பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். வேதாகமத்தைப் பொருத்தவரை, வெண்கலம் என்பது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. நேரடியாக கூறினால், நம்மை பிரதிபலிக்கும் செயலைச் செய்யும் கண்ணாடியினால் இது உருவாக்கப் பட்டதினால், நாம் சட்டத்திற்கு முன்னாக நம்மைக் காணுகையில், நாம் ஆக்கினை அடைய வேண்டியவர்கள் என்பதை வெண்கலப் பாத்திரம் தெரிவிக்கிறது. இதனால் தான் ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்யும் பெண்களின் கண்ணாடியிலிருந்து வெண்கலப் பாத்திரம் தயாரிக்கப் பட்டது. நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் படவேண்டிய நம்மை தேவன் இரட்சித்தார், இதற்காக, அவர் பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்தார். எழுதப் பட்ட கர்த்தரின் வார்த்தையின் மூலமாக, இயேசுவே ஞானஸ்நானம் பெற்றார் எனவும், இதன் மூலமாக அவர் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டார் என்பதையும், சிலுவைக்குச் சென்று நம்முடைய பாவங்களுக்கான ஆக்கினையை அடைந்தார் எனவும் நாம் தெரிந்து கொண்டோம். இதனை நமது இருதயங்களில் ஏற்றுக் கொன்டதாலும், இந்த சத்தியத்தை நாம் விசுவாசித்ததினாலும், நாம் இரட்சிக்கப்பட்டோம். நீங்கள் எப்படி? நீங்கள் எப்படி இரட்சிக்கப்பட்டீர்கள்?
மாய விசுவாசத்தைப் பின்பற்றும் குழுவினரின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தம் உறுப்பினர்களுக்கு தாம் இரட்சிக்கப்பட்ட சரியான நாளான மாதத்தையும் தேதியையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இப்பிரிவினைச் சேர்ந்த போதகர் ஒருவர், தான் மலை ஒன்றின் மீது ஏறி ஜெபித்த போது தான் ஒன்றுமில்லாதவன் என்பதைக் கண்டதாகவும், அப்போது இயேசுவை விசுவாசித்து தான் இரட்சிக்கப்பட்டதாகவும், அனேக விசுவாசிகளுக்கு முன் சாட்சி கூறியதாக தெரிகிறது. தான் மறுபடியும் பிறந்த நாளையும் நேரத்தையும் தான் நன்கு நினைவில் வைத்திருப்பதாக அவர் பெருமையுடன் அறிவித்தார். இந்த உறுதிப்பாட்டிற்கும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை, இது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடேயாகும். இந்த போதகரின் விசுவாசத்திற்கும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தப் பிரிவினரால் போதிக்கப்படும் இரட்சிப்பிற்கும் கர்த்தரின் வார்த்தையால் போதிக்கப்படும் இரட்சிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, ஆனால் அது அவர்களின் சொந்தப் படைப்பாகும்.
ஒருவர் தன்னையே வசீகரிப்பது சாத்தியமான ஒன்றாகும். தாம் பாவமற்றவர்கள் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தாலும், இப்படியாக மீண்டும் மீண்டும் தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தாலும், அவர்கள் தம்மைத் தாமே வசீகரித்து, தம் சொந்தத்தில் பாவம் இல்லாதவர்கள் ஆகிவிடுவர். இந்த சுலோகத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் தம் பாவங்கள் அகன்று பாவமற்றவர்களாகியதைப் போல உணரத் தொடங்குவர், ஆனால் இத்தகைய உணர்வுகளால் அதிக காலம் நீடித்திருக்க முடியாது. ஆனால் வெகு சீக்கிரமாகவே, "நான் பாவமற்றவன், நான் பாவமற்றவன்" என்று மீண்டும் மீண்டும் கூறி தம்மைத்தாமே வசீகரிக்க வேண்டியதிருக்கும். இந்த விசுவாசம் எத்தனை சுயநலமிக்க, பொய்யான, அறிவீணமான, மூடத்தனமானதாக இருக்கிறது!
மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் என்பது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள கர்த்தரின் வார்த்தையாகும். ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலும், பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டிருந்தன என்பது, புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருக்கும்படி, இயேசு நமது இரட்சிப்பின் வாசலும், இரட்சகரும் ஆயினார் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றன. ஆகவே நான் உண்மையாகவே கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில், கர்த்தர் நம்மிடம் கூறிய இந்த இரட்சிப்பு எத்தனை நிச்சயமானது!
இதனால் தான் நான் ஜெபிக்கும் போது, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதும் இல்லை, அல்லது பெரிதாக காட்டிக் கொள்வதும் இல்லை. அவரை விசுவாசித்து அனைத்தையும் அவரிடம் ஒப்புக்கொடுத்து நான் ஜெபிக்கிறேன். "பிதாவே, தயவு செய்து எங்களுக்கு உதவும். முழு உலகிற்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கச் செய்யும். என்னுடைய உடன் ஊழியர்களையும், பரிசுத்தவான்களையும் பாதுகாத்தருளும். நற்செய்திக்கு ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்களை எங்களுக்குத் தாரும், இந்த நற்செய்தி பரவுவதை அனுமதித்தருளும், விசுவாசிகள் உம்முடைய வார்த்தையை அறிந்து அதனை விசுவாசிக்கச் செய்யும்." நான் ஜெபிக்கும் போது கூறுவதெல்லாம் இதுவே; என்னுடைய உணர்வுகளைக் கலக்கி அழுவதின் மூலம் ஜெபிப்பது இல்லை, மேலும் இத்தகைய காரியங்கள் என் ஜெபத்தில் பங்கேற்பதில்லை.
சில மனிதர்கள், தாம் எத்தனைக் கஷ்டப் பட்டும், தம்முடைய உணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப முடியாதவர்களாய் இருக்கும் போது, தம் கண்களில் கண்ணீரை வர வைக்க வெகு காலத்திற்கு முன்னதாக இறந்து போன தமது பெற்றோரை நினைத்து கண்ணீர் விடுவதின் மூலமாக, மற்றவர்கள் தம்முடைய ஜெபத்தைச் சிறந்ததாக கருதும் படிச் செய்கிறார்கள். இப்படி கண்டு பிடிக்கப்பட்ட ஜெபங்கள் அனைத்தும் குப்பைகளாகும், கர்த்தர் அவற்றை உமிழ்ந்து போடுவார். இயேசுவின் சிலுவைப் பாடுகளை எண்ணுவதின் மூலமாகவும், "தேவனே, உம்மை நான் விசுவாசிக்கிறேன்" என தொடர்ந்து சத்தமிடுவதின் மூலமாகவும், தம்முடைய உணர்ச்சிகளை மக்கள் உசுப்புகிறார்கள்.
இத்தகைய மக்களின் விசுவாசம் உறுதியானது என நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் உங்கள் பாவங்களை எண்ணி, "தேவனே, நான் பாவம் செய்தேன். நான் நீதியுடன் வாழ உதவும்" என உங்கள் உணர்வுகளைக் கலக்கிவிட முயற்சித்தீர்கள் என்றால், அப்போது நீங்கள் உணர்ச்சி பொங்க எழுவது சாத்தியமாகக் கூடிய ஒன்றே. இத்தகைய உணர்ச்சிகளின் அனுபவங்களும், அழுகைக் கூட்டங்களும், நம் மன அழுத்தத்தை குறைப்பதால், அனேக மக்கள் தாம் புத்துணர்ச்சி பெற்றதாக உணருகிறார்கள், விசுவாசம் என்பது இதுதான் என்று அவர்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் பிரச்சினைகள் நிறைந்திருப்பதால், இத்தகைய உணர்ச்சி அனுபவங்கள், சிறிது நேரத்திற்கு அவர்களை அமைதியாக்கும், ஆகவே இப்படியாக அவர்கள் தம்முடைய மதவாழ்வை வாழுகிறார்கள்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தேவன் நம்மிடம் வந்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கவேண்டும்
வார்த்தையின் மூலமாக நம் தேவன் நம்மிடம் வந்தார். ஆகவே நீங்கள் உங்கள் உணர்வுகளுக்காக காத்திருக்காதீர்கள், ஆனால் கர்த்தரின் வார்த்தை உங்களுக்கு கூறுவதைக் கேட்க வேண்டும். உங்கள் இருதயங்களில் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கிறீர்களா இல்லையா என்பதே மிகவும் முக்கியமானது. நீங்கள் ஜெபிக்கும் போது, உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். மாறாக, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழாக அதனைக் கட்டுப் படுத்த வேண்டும். ஏன்? உணர்ச்சிகள் கொந்தளிக்க வேண்டுமென விரும்புபவர்களை, அவர்களின் இந்த ஓட்டையின் பலவீணத்தைப் பயன்படுத்த விரும்பி, அவர்களை அனுகுவதற்கு பல்வேறு பொய்யர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். மக்கள் வெகுசீக்கிரமாக உணர்ச்சி வசப்பட்டு தம்முடைய அறிவை இழந்துவிடுவதால், "மிகப்பெரிய ஆவிக்குரிய கூட்டம்" என்ற தலைப்பில் எழுப்புதல் கூட்டங்கள் நடைபெறும் பொழுது, இவர்களின் எண்ணமெல்லாம், பங்கேற்பவர்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதாக மட்டுமே இருக்கிறது.
ஆயினும், நான் இப்போது மறுபடியும் பிறந்தவன், எனவே இத்தகைய எழுப்புதலை நான் கடினமாக முயன்றாலும் கூட என்னால் நிகழ்த்த முடியாது. ஏனெனில் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கிப்பது, மிகப்பெரிய ஆவிக்குரிய கூட்டம் என்ற பெயரில் மக்களைத் தூண்டி விடுவதில்லை. சத்தியத்தின் வார்த்தையினால் நாம் மறுபடியும் பிறந்ததினாலே, என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்து கொண்டிருக்கும் என்னுடைய உணர்ச்சி பூர்வமான பகுதிக்கு எப்போதோ பிரியாவிடைக் கொடுத்துவிட்டேன்.
கர்த்தரின் வார்த்தையைக் கேட்கும் நீதிமான்களாகிய நாம், அதனை நம் இருதயங்களில் விசுவாசித்து, நம்முடைய ஞானத்தைப் பயன்படுத்தி, உணர்ச்சி கொப்பளிப்பவர்களாக இருக்கக்கூடாது. ஒருவர் கர்த்தரின் வார்த்தையை நம்மிடம் சரியாகப் பேசுகிறாரா இல்லையா என்பதை சீக்கிரமாகவே நாம் கண்டு கொண்டு, சத்தியத்தை உடனடியாக நம்புகிறோம், மேலும், நம்முடன் பேசும் அந்நபர், அச் சத்தியத்தை விசுவாசித்து அதனை நம்முடன் பேசுகிறாரா என்பதையும் சீக்கிரமாகவே பிரித்துணர்கிறோம். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியங்களை நாம் அறிந்து அதனை விசுவாசிப்பதினால் பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயங்களில் இருக்கிறார், ஆகவே இந்த உணர்ச்சி பிரவாகங்கள் எல்லாம் சத்தியத்துடன் எச்சம்பந்தமும் இல்லாதவை என்பதை அறிந்து, உண்மையான சத்தியத்தை மட்டுமே நம் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்கிறோம்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இயேசு நம்மிடம் வந்தார். இந்த உண்மை எத்தனை ஆச்சரியமானது. உங்களை இரட்சித்த தேவனின் அன்பு எத்தனை ஆச்சரியமானது? கர்த்தரின் வார்த்தையில் எழுதப்பட்டுள்ள இயேசுவின் நான்கு செயல்களினால், அதாவது இயேசு தன் ஞானஸ்நானத்தினால் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, அவர் எல்லா நீதிகளையும் நிறைவேற்றியதின் மூலம், உங்களை இரட்சித்தார் என்பதை அறிந்து அவரை விசுவாசிக்கிறோம்.
இந்த சத்தியத்தை உங்கள் இருதயங்களால் விசுவாசிக்கிறீர்களா? நற்செய்தியை பிரசங்கிப்பவர்கள், மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூலின் உள்ளே அதனைப் பரப்ப வேண்டும், அதாவது அது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் கர்த்தரின் வார்த்தையாக இருக்கிறது, மேலும் அதிலுள்ளவைகள் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவைகளாக இருக்க வேண்டும். மேலும் இதனைக் கேட்பவர்கள் அதனைத் தமது இருதயங்களினால் ஏற்றுக் கொண்டு, முழு இருதயத்துடனும் அதனை விசுவாசிக்கவேண்டும்.
வெண்கலப் பாத்திரத்திலுள்ள நீர் நம் பாவங்களை எல்லாம் கழுவுகிறது
அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக, இயேசு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு அவற்றைக் கழுவிப் போட்டார். இயேசுவின் ஞானஸ்நானமானது வெண்கலப் பாத்திரத்தின் நீரைக் குறிக்கிறது; அது பாவங்களுக்காக நரகம் செல்ல வேண்டியிருந்த நம்மை சுத்தீகரித்தது, மேலும் கர்த்தருக்கு முன்னால் நிற்பதையும் ஏதுவாக்கியது. இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டதால், அவரால் சிலுவைக்குச் சென்று அதன் மூலமாக மரித்தமையால் அப்பாவங்களை கழுவ முடிந்தது.நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை இயேசு ஏற்றார் என்பதற்கு இயேசுவின் ஞானஸ்நானமும், அவரின் சிலுவையும் சாட்சியாக இருக்கின்றன. ஞானஸ்நானம் மற்றும் சிலுவையினால், இயேசு நம் இரட்சிப்பை நிறைவேற்றினார்.
மனந்திரும்பி ஜெபிப்பதினால் நம் பாவங்களை சுத்திகரிக்க முடியாது. இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், நம் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டன. இந்த வார்த்தையைக் கேட்பதின் மூலமாகவும், நமக்காக இயேசு செய்தவைகளை விசுவாசிப்பதின் மூலமாகவும், நம் எல்லாப் பாவங்களுக்கான தண்டனையில் இருந்தும் நாம் விடுதலையானோம். இயேசு பெற்றுக் கொண்ட தண்டனைக்காக நன்றிகள், அவருடைய ஞானஸ்நானத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தின் மூலமாக எல்லா பாவத்தண்டனையையும் நாம் ஏற்கனவே பெற்று விட்டோம். உண்மையாகவே நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப் பட்டோம். ஒரு வழியில் பார்த்தால் இரட்சிப்பு மிகவும் எளிதானது. இரட்சிப்பின் அன்பையும், வரத்தையும் நாம் விசுவாசித்தால், நாம் இரட்சிக்கப் படுவோம், நாம் விசுவாசிக்கவில்லை என்றால், நம்மால் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது.
கர்த்தரால் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பைத் தவிர, இரட்சிக்கப்பட நாம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை
கர்த்தராலேயன்றி, நம்முடைய இரட்சிப்பிற்காக நம்மால் செய்யக்கூடியது எதுவுமேயில்லை. படைப்பிற்கு முன்பே நம்மை இவ்வழியில் இரட்சிக்கத் திட்டமிட்ட நமது தேவன், நம் இரட்சிப்பை நிறைவேற்றினார், கர்த்தர் எதைத் திட்டமிடுகிறார் என்பதைப் பொருத்தே எல்லாம் அமையும். பிதாவாகிய கர்த்தர் தன் குமாரரின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் நம்மை இரட்சிக்கத் திட்டமிட்டார், அவர் குறிப்பிட்ட அந்த நேரம் வருகையில், அவர் தன்னுடைய ஒரேபேறான குமாரரை இப்பூமிக்கு அனுப்பினார். இயேசுவானவருக்கு 30 வயதாகும் போது, இந்த இரட்சிப்பின் செயல்களை நிறைவேற்றும் நேரம் அவருக்கு வந்தது, அப்பொழுது பிதா கிறிஸ்துவை ஞானஸ்நானம் பெறச்செய்து சிலுவையில் மரிக்கச் செய்தார், அதன் பிறகு அவரை உயிரோடெழுப்பி, அதன் மூலம் நம் அனைவரையும் இரட்சித்தார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தையின் மூலம் தேவன் நமக்குச் செய்தவைகளை எல்லாம் அறிந்து அதனைக் கற்றுக் கொண்டதினாலும், அதனை நம் இருதயங்களில் விசுவாசித்ததினாலும் நாம் இரட்சிக்கப் பட்டோம். நம் இருதயங்களில் விசுவாசித்து இரட்சிக்கப் படுவதென்பது, விசுவாசத்தை நமது இருதயங்களில் பெறுவது என்பதைத் தவிர வேறில்லை.
இந்த வேதாகமத்தின் வார்த்தையானது கர்த்தரின் வார்த்தை என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆதி காலத்திலிருந்தே இருக்கின்ற கர்த்தரின் வார்த்தை வேதாகமத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கர்த்தரின் வார்த்தையாகிய பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தையின் மூலம், கர்த்தரை நாம் அறிந்து அவரைச் சந்திக்கலாம். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அவர் நம்மை இரட்சித்தார் என்பதை பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தையினால் அறிந்து அதனை விசுவாசிக்கலாம். மேலும், இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் இரட்சிக்கப் பட முடியும் என்பதால், இந்த வார்த்தையில் நிச்சயமாக வல்லமை இருக்கிறது என்பதை சாட்சி கூறலாம். நம்முடைய குறுகிய எண்ணங்களினால் கர்த்தரின் வார்த்தையை நாம் அளக்கவோ நியாயம் தீர்க்கவோ கூடாது, மாறாக, கர்த்தர் எப்படி நம்மை இரட்சித்தார் என்பதைத் தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து, இளநீலம் (இயேசுவின் ஞானஸ்நானம்), இரத்தாம்பரம் (இயேசுவே ராஜாதி ராஜா), சிகப்புநூல் (சிலுவை), மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் (பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் கர்த்தரின் வார்த்தை) ஆகியவற்றை நீங்கள் அனைவரும் கேட்டு அதனை விசுவாசிப்பீர்கள் என்று விரும்பி ஜெபிக்கிறேன். கர்த்தரின் வார்த்தையை புறம்பேத் தள்ளிவிட்டு, அவருடைய வார்த்தையை உங்கள் சொந்த அளவுகோலினால் உங்கள் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அளந்து அதனை தீர்த்தீர்கள் என்றால், நீங்கள் இரட்சிப்படையவே மாட்டீர்கள்.
கர்த்தரின் வார்த்தை உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை எனை உணர்ந்தீர்கள் என்றால், உங்களின் விசுவாச மூதாதையர்கள் கூறியவற்றை மிகவும் கவனமாகக் கேளுங்கள். அவர்கள் போதகர்களாகவோ, வேலைக்காரர்களாகவோ அல்லது சாதாரண மனிதர்களாகவோ இருக்கட்டும், அவர்களால் கர்த்தரின் வார்த்தைப் பிரசங்கிக்கப் படுவதைக் கேட்கும்போதும், அவர்கள் பிரசங்கிப்பது கர்த்தருக்கு முன்னதாக சரியானதாக இருக்கும்போதும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் கூறுவது சரியென உணர்ந்து, அதனை உங்கள் இருதயங்களால் விசுவாசிப்பது மட்டுமே.
வார்த்தையைப் பரப்புபவர்கள் அது இலகுவாக இருப்பதினால் அப்படிச் செய்யவில்லை, ஆனால் கர்த்தருக்கு முன்னதாக அவர்கள் செய்வது சரியாக இருப்பதினால், அப்படிச் செய்கிறார்கள். இதனால் தான் அவர்கள் கர்த்தருக்கு முன்னதாக சரியான அறிவைப் பிரசங்கிக்கிறார்கள் - அதாவது, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் கூறப்பட்ட சத்தியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே அந்த அறிவாகும். அதனை நாம் யாரிடத்திலிருந்து கேட்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், அது உண்மையாகவே கர்த்தரின் வார்த்தையாக இருந்தால், அதனை விசுவாசிப்பதற்காக ஆமாம் எனக் கூறி, அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது, ஏனெனில், கர்த்தரின் வார்த்தையில் ஒரு புள்ளியிலோ, அல்லது ஒரு தலைப்பிலோ, சிறிய தவறு கூட இல்லை.
கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். `விசுவாசித்தல்` என்றால் என்ன? அது ஏற்றுக்கொள்வதாகும். அது ஒரு நம்பிக்கை. வேறு வார்த்தைகளில் கூறினால், நம் தேவன் நமக்காக ஞானஸ்நானம் பெற்றதினால், நாம் நமது எல்லாக் குறைபாடுகளையும் அவரிடம் ஒப்படைத்து அவரைச் சார்ந்திருப்போம். "இதனைச் செய்வதின் மூலம் தேவன் என்னை இரட்சித்தாரா? நான் இதனை நம்பி விசுவாசிக்கிறேன்." இப்படி விசுவாசிப்பதே உண்மையான நம்பிக்கையாகும்.
உலகத்தின் இறைவல்லுநர்களைப் பார்க்கும்போது, சரியாக அறிந்து விசுவாசிப்பவர்களைக் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. வெண்கலப் பாத்திரத்தை அவர்கள் நெருங்குவதற்கு முன்னரேயே, ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலில் நின்று போய் விட்டார்கள், அவர்களால் பிரகாரத்திற்குள் கூட செல்ல முடியவில்லை. ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து அவர்கள் பிரசங்கிக்கும் போது, அதன் பிரகாரத்தின் வாசலை மிகவும் கவனமாக குறுகலானதாக்கி விடுகிறார்கள், மேலும் ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து புத்தகங்களை வெளியிடும் போது பிரகார வேலியின் 9 மீட்டர் இடத்தைப் பிடித்திருக்கும் வாசலைத் தவிர்த்துள்ள படங்களையே வெளியிடுகிறார்கள்.
சிலவேளைகளில், ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலைக் குறித்து சிலர் துனிச்சலுடன் பேசுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு இளநீல நூலின் அடிப்படைக் கருத்து சரிவரத் தெரியாததால், "வானத்தின் நிறம் நீலம்" என்று மட்டுமே கூறுகிறார்கள். ஆகவே இளநீல நூலின் நிறமானது வானத்தின் நிறத்தைக் குறிக்கிறது எனவும், அது இயேசுவே ராஜா என்பதைக் கூறுவதாகவும், சிகப்பு நூல் இயேசு இவ்வுலகில் இருக்கும் போது சிலுவையில் சிந்திய இரத்தத்தைக் குறிப்பதாகவும் கூறி, ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலைக் மிகவும் கில்லாடித் தனமாக, குறுக்கி விடுகிறார்கள். இரத்தாம்பர நூலின் கதி என்னவாகிற்று? இயேசுவே ராஜாதி ராஜாவென்றும் அவரே கர்த்தர் என்றும் இரத்தாம்பர நூல் கூறுகிறது. இயேசுவின் தெய்வீகத் தன்மை இரத்தாம்பர நூலில் ஏற்கனவே நன்றாக காட்டப்பட்டுள்ளது, ஆகவே இன்னொரு நூலின் நிறத்தினால் சத்தியத்தைக் கூறவேண்டிய அவசியம் இல்லை.
இயேசு இவ்வுலகிற்கு வந்து, யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீடு ஒரேதரமாக சுமந்தார் என்பதை இளநீல நூலின் சத்தியம் தெரிவிக்கிறது. ஆனால் உலகின் இறையியலாளர்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தை ஏற்றுக் கொள்ளாததினால், அவர்களுக்கு அதனைத் தெரியாது, மேலும் அதனைப் பிரசங்கிக்கவும் மாட்டார்கள், ஆனால், வெறும் குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்துவார்கள். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வந்த இயேசுவை விசுவாசிக்காமல், மறுபடியும் பிறக்காதவர்களுக்கு, ஞானஸ்நானத்தினால் இயேசு எல்லா ஆக்கினைகளையும் சுமந்தார் என்பது தெரியாது. உண்மையாக பார்த்தால், அவர்கள் ஆவிக்குரிய குருடர்களாய் இருப்பதோடு வார்த்தைய ஆராய முடியாதவர்களாயும் இருக்கிறார்கள், ஆகவே அவர்கள் தம் சொந்த யோசனைகளுக்கு ஏற்றவாறு, கர்த்தரின் வார்த்தையை ஏனோதானோவென விளக்கி, அதனை மதமாக்கி விட்டார்கள். "இயேசுவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப் படுவீர்கள். இப்போதிலிருந்து நல்லவர்களாகவும் சாந்தமானவர்களாகவும் இருங்கள்" என்று அவர்கள் போதிக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தை வெறும் மதமாக மாற்றிவிட்டதால், அது நற்செயல்களை மட்டுமே வலியுறுத்துகிறது.
எத்தனைக் கஷ்டப்பட்டாலும் தம்மால் நல்லவர்களாக இருக்க முடியாது என்பது மக்களுக்கு தெரியுமாகையால், இத்தகைய வார்த்தைகள், நல்லவர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்று மனித சக்தியைத் தூண்டி விடுவதால், அவர்கள் இலகுவாக வஞ்சிக்கப் படுகிறார்கள். மதங்கள் பழைய முறையினையே பின்பற்றுகின்றன, "நீ முயற்சி செய்தால், உன்னால் அது முடியும்," அல்லது "பரிசுத்தவானாக உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்." நல்ல விதமான சிந்தனைகள், முயற்சிகள், மனித திடம் ஆகிய பொதுவான கருத்துக்கள் எல்லா மதங்களிலும் உயர்வாக மதிக்கப் படுகின்றன. உதாரணமாக, புத்த மதத்தைக் குறித்து என்ன? புத்த மதம் தொடர் முயற்சிகளையும், மனித திடத்தையும் முக்கியத்துவப் படுத்தி, தம்மைத்தாமே தூய்மைப் படுத்திக்கொள்ளுமாறு அதனைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுரைக் கூறுகிறது, "கொல்லாதே; சத்தியத்தைத் தேடு, நல்லவனாய் இரு." குறிப்பிட்ட சில வழிகளில் அதன் போதனைகள் கிறிஸ்தவ தத்துவங்களுடன் ஒத்துப்போகின்றன. கிறிஸ்தவமும் புத்த மதமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாக இருந்தாலும், அவை இரண்டும் நெருக்கமாக இருப்பதைப் போல் தோன்றுவதற்கான காரணம் அவை இரண்டுமே வெறும் மதங்களாக இருப்பதேயாகும்.
மதமும் நம்பிக்கையும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை. கர்த்தரின் நீதியினால் நம்மை முற்றிலுமாக இரட்சித்த நம் தேவன் அளித்த பரிசை நம் இருதயங்களுக்குள் ஏற்றுக்கொண்டு அதனை அங்கீகரிப்பது உண்மையான நம்பிக்கையாகும். தேவன் இப் பூமிக்கு வந்து, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப் பட்டதின் மூலமாக நம் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையையும் பெற்றார் என்பதை விசுவாசிப்பதினால் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வது விசுவாசமாகும். நீர் மற்றும் ஆவியின் மூலம் நம்மை இரட்சித்து, நம் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையிலிருந்தும் தேவன் நம்மை இரட்சித்தார் என்பதை நம்புவது விசுவாசமாகும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் உண்மையாகவே நம் இருதயங்களில் இதனை விசுவாசிக்கிறோம்.
உங்களையும் என்னையும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் இரட்சித்தார்
இதனை நம் இருதயங்களில் விசுவாசித்து அதனை ஏற்றுக் கொள்வதே நாம் செய்யவேண்டிய ஒன்றாகும். உண்மையாகவே கர்த்தருக்கு கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் அவருக்கு முன்பாக செய்ய வேண்டியது இதுவேயாகும், மற்ற எதுவுமே முக்கியமானவைகள் அல்ல. கர்த்தர் உங்களை நேசித்ததால், அவர் தனது ஒரேபேறான குமாரரை அனுப்பி, அவரை ஞானஸ்நானம் பெறச் செய்து அதன் மூலமாக உங்கள் பாவங்களை அவர் மீது செலுத்தி, சிலுவையில் அறைந்து இரத்தத்தைச் சிந்தச் செய்து, அவரை ஆக்கினைக்கு உட்படுத்தி அவரை மரணத்திற்கு உட்படுத்தி, மீண்டுமாக உயிரோடெழுப்பி, அதன் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களை இரட்சித்தார்.
அப்படியிருக்கும் போது, நீங்கள் இந்த சத்தியத்தை விசுவாசிக்கவில்லை என்றால், கர்த்தரின் உணர்ச்சி எத்தகையதாய் இருக்கும்? இப்போதும் கூட அவருடைய இருதயத்தைப் பிரியப்படுத்தக் கூடிய அவருடைய கீழ்ப்படிதலுள்ள மகனாகவும் மகளாகவும் வேண்டுமென்றால், கர்த்தர் தனது குமாரரின் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களையும் துடைத்து, அவற்றிலிருந்து அவர் உங்களை இரட்சித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கவேண்டும். நீங்கள் நன்றியறிதலுடனே கூட உங்கள் இருதயத்தில் இதனை விசுவாசித்தால், அதனை உங்கள் வாயாலும் அறிக்கைச் செய்ய வேண்டும். அவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும், ஆனால் உங்கள் இருதயத்தினால் விசுவாசிப்பது மிகவும் கடினமான ஒன்றாக உங்கலுக்குத் தோன்றுகிறதா? அப்படியானால், உங்கள் விசுவாசத்தை தெளிவாக உங்கள் வாயினால் அறிக்கைச் செய்யுங்கள். நீங்கள் விசுவாசிப்பதை இப்படியாக அறிக்கைச் செய்தால், விசுவாசம் பயிரிடப்பட்டு சிறிது சிறிதாக வளரும். துனிச்சலாக செயல்படுபவர்களிடமே விசுவாசம் காணப்படும்.
என்னிடம் நல்லதொரு வைரக்கல் மோதிரம் இருக்கிறது என கொள்க. அதனை நான் உங்களிடம் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் உங்களில் உள்ள ஒருவரில் அவனோ/அவளோ அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து, அது நல்ல வைரத்தால் செய்யப்பட்ட மோதிரம் அல்ல என கூறுகிறார். அந்த மோதிரமானது உண்மையான வைரக்கல் மோதிரமாக இருந்த போதிலும், அந்நபர் அதனை விசுவாசிக்காததால், அவனுக்கோ/அவளுக்கோ அது உண்மையான வைரக்கல் மோதிரமல்ல, அதனால் அவனோ/அவளோ அந்த உண்மையான வைரக்கல் மோதிரத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.
விசுவாசமும் இத்தகையதே. ஒரு சிறந்த வைரக்கல் நிபுனர் மக்களிடம் வந்து அந்த வைரக்கல் மோதிரமானது உண்மையான வைரக்கல்லினால் செய்யப்பட்டது என நிரூபித்து அவனோ/அவளோ எழுத்தினால் ஒரு சான்றிதழ் வழங்கினால், அவர்கள் அதனை விசுவாசிக்கத் தொடங்குவார்கள். கர்த்தர் தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையினால் தான் கொடுத்த இரட்சிப்பு உண்மையானது என விளக்கமாக நம்மிடம் கூறியுள்ளார். அவருடை வார்த்தை சாட்சி கூறுவதால், அவருடைய இரட்சிப்பை விசுவாசிப்பவர்களே விசுவாசத்தின் மக்களாவர். "அது உண்மையானது என விசுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஆனால் முற்றிலும் முழுமையானவரான நீங்கள் அது உண்மை எனக் கூறுவதினால், நான் அதனை விசுவாசிக்கிறேன்." இப்படியாக மக்கள் விசுவாசிக்கும் போது, அவர்களால் விசுவாசித்தின் மக்களாகமுடியும், மேலும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதைப் போல மிகவும் விலையேறப் பட்ட ஒன்று உங்களுடைய ஒன்றாகும்.
மறுபுறம், இன்னொரு விதமான விசுவாசமும் இருக்கிறது. ஒரு சுரண்டல் பேர்வழி ஒரு வைரக்கல் மோதிரத்தை போலியாக தயாரித்தான் எனக் கொள்க, அதன் பல்வேறு நிறங்களில் மயங்கி, அது உண்மையாகவே நல்லதுதான் என நினைத்து ஒருவர் அதனை வாங்கினார். இந்நபர் அவனோ/அவளோ தாம் வாங்கியது மிகவும் சிறந்தது என முற்றிலுமாக நம்பியிருக்கும் போது, உண்மையாகப் பார்த்தால், அவன்/அவள் ஏமாற்றப்பட்டார். வைரக்கல் மோதிரம் உண்மையானதாக இல்லாத போதிலும், அது உண்மையானது என்பதற்கு பல தவறான சாட்சிகள் இருந்ததினால், மக்கள் அதனை விசுவாசித்தனர், இந்த நிலையில் இந்த போலி வைரக்கல் மோதிரமானது இம்மக்களைப் பொருத்தவரை உண்மையான மோதிரமே, ஏனெனில் அவர்கள் கண்மூடித்தனமாக இந்த போலி வைரக்கல் மோதிரத்தை விசுவாசித்தனர். ஆனால் அவர்களிடம் இருப்பதோ போலியானது. அதுபோலவே, தவறான விசுவாசத்தையுடைய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் தம்முடைய விசுவாசத்தில் உறுதியாக இருந்தாலும், அது தவாறனதும், அடிப்படை இல்லாததும், மாயமானதும் ஆகும், ஏனெனில் இது கர்த்தருடைய வார்த்தையிலிருந்து வரவில்லை.
"என்னைத் தவிர வேறு தெய்வங்களை வணங்காதே" என்று கர்த்தர் கூறினார். கர்த்தருடைய வார்த்தை கர்த்தரேயாகும், மேலும், ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் (யோவான் 3:5) என்று வார்த்தை நம்மிடம் கூறுகிறது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் ஆகிய ஆசரிப்புக் கூடார பிரகார வாசலின் வழியாக நாம் முதலாவதாக செல்லாவிட்டால், ஆசரிப்புக் கூடார பிரகாரத்திற்குள் நம்மால் நுழையமுடியாது என்றும், வெண்கலப் பாத்திரத்தில் தம் கைகளையும் கால்களையும் முதலாவதாக கழுவாதவர்களால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியாது என்றும் கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இது மட்டுமே சத்தியமாக இருப்பதால், இதனைத் தவிர மற்ற அனைத்தும் போலியானவை ஆகும்.
சத்தியத்தின் மீதுள்ள விசுவாசமே விசுவாசமாகும், மற்ற எதன் மேலுள்ள விசுவாசமும் போலியாகும். மக்கள் எத்தனைத் தீவிரமாக விசுவாசிக்கிறார்கள் என்பது பொருட்டல்ல, கர்த்தருடைய வார்த்தை இல்லாத எதுவும், எந்நிலையிலும் கர்த்தருடைய வார்த்தை அல்ல. தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் இரத்தத்தினாலும் உங்கள் எல்லாப் பாவங்களையும் மறையச் செய்ததாக இயேசு உங்களிடம் கூறும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதனை விசுவாசிப்பது மட்டுமே. அதனைக் கூறுபவரே அவை யாவற்றையும் செய்தமையால், அவரின் வார்த்தையில் உள்ள இந்த விசுவாசமானது உண்மையாகும். நம் தேவன் இதனை உண்மையாகவே செய்திராவிட்டால், இது அவருடைய தவறான செய்கையாகும், ஆனால் உங்கள் விசுவாசம் தவறானதாகாது. மறுபுறம் பார்க்கும்போது, தேவன் நிச்சயமாகவே அப்படிச் செய்திருந்து, அதனை நீங்கள் விசுவாசிக்காததால் இரட்சிக்கப் படாமல் போனால், இதன் முழுப் பொறுப்பும் உங்களுடையதாகிறது. இதனால் தான், நாம் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசிப்பது மட்டுமாக இருக்கிறது. கர்த்தர் தனது சபையின் மூலம் கூறுவதை நாம் கேட்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
சபையினால் பேசப்பட்ட வார்த்தை என்ன? டூளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இயேசு கிறிஸ்து நம்மிடம் வந்தார் என்பதே அந்த வார்த்தையாகும். ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது பாவங்களை எல்லாம் இயேசு தன் மீது ஏற்றுக் கொண்டு, கர்த்தராக இருக்கும் இயேசுவே, நமது எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையை சிலுவையில் ஏற்றுக் கொண்டார் என்ற கர்த்தருடைய வார்த்தையை சபையானது பரப்புகிறது. இயேசு இப்படியாக நம்மை இரட்சித்தார் என்ற இச்சத்தியத்தில் உள்ள விசுவாசமே, கர்த்தரால் உத்திரவாதமளிக்கப் பட்ட உண்மையான வைரக்கல்லிம் மீதுள்ள விசுவாசமாகும்.
முதலாவது கர்த்தரின் சித்தத்தை நாம் அறிந்து, ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட ஆவிக்குரிய அர்த்தத்தையும் நாம் அறிந்து கொண்டு, அதனைப் பற்றி பேசினால், அது இலகுவானதாயிருக்கும். ஆனால் அவற்றை நாம் தேடவேண்டிய நிலையில் இருந்தாலோ, அவற்றைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தாலோ, அல்லது ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்புற அமைப்பைக் குறித்த மேலோட்டமான அறிவை மட்டுமே நாம் பெற்றிருந்தாலோ, அதற்கான மூல எபிரெய சொல்லை மட்டும் தெரிந்து வைத்திருந்தாலோ, அல்லது அதன் வரலாற்றுப் பின்னனியை தெரிந்து வைத்திருந்தாலோ, அவற்றின் மூலம் நமக்கு எந்த ஆதாயமும் இல்லை, தலைவலி மட்டுமே கிட்டும்.
இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசியுங்கள். இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக, நம்முடைய இருதயங்களிலிருந்த கருமையான, அழுக்கான பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டன. ஞானஸ்நானம் என்பதின் பொருள், பாவத்தைக் கழுவுதல், இடம் மாற்றுதல், புதைத்தல், கொடுத்தல், அல்லது மூடுதல் என்பதாகும். இத்தகைய ஞானஸ்நானத்தை இயேசு பெற்றதால், உங்கள் எல்லாப் பாவங்களையும் அவர் தன் மீது சுமந்தார். இப்போது இதனை விசுவாசிக்காத அனைவரும் மரணத்திற்குள்ளாக்கப்பட்டு நரகத்தினுள் தள்ளப்படுவர். "கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக...... அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும்" (யாத்திராகமம் 30:18, 21). விசுவாசிக்காமை சபிக்கப்படவேண்டிய ஒன்றாகும். விசுவாசிக்காமை நரகத்தினுள் தள்ளப்படவேண்டிய ஒன்று. நீங்கள் விசுவாசிக்காவிட்டால், யேகோவாவின் சாபமும் அழிவும் உங்கள் மீது இறங்கி, நித்திய அக்கினியில் நீங்கள் தள்ளப் படுவீர்கள்.
"அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்" தலைமை ஆசாரியனிடம் கர்த்தர் இதனைக் கூறினார், இது நித்தியமான கட்டளை என்றும் அவனும் அவன் சந்ததியினரும் இதனைத் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார். இயேசுவை அவனின்/அவளின் இரட்சகர் ஆக விசுவாசிக்க விரும்புகிறவர்கள், அவருடைய ஞானஸ்நானத்தையும் சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிக்க வேண்டும். துனிச்சலாக செயல்படுபவர்களுக்கே விசுவாசம் சொந்தமானதாகும். விசுவாசத்தின் மூலமாக அதனை உங்களின் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது இரட்சிப்பு உங்களுடையதாகிறது. சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது மட்டுமே அது நமக்கு பயனுள்ளதாயிருக்கிறது. கர்த்தர் நம்மிடம் கூறியவற்றை நாம் விசுவாசிக்க வேண்டும். அவிசுவாசத்தை விட பெரிதான இருதயத்திற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆசாரியர்கள் தமக்கு முன்னதாக வரும்போது, வெண்கலப் பாத்திரத்தில் தமது கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு வரவேண்டும் என கர்த்தர் கூறினார், அப்படியிருந்தும் கூட வெண்கலப் பாத்திரத்தில் உள்ள நீரால் தம் கைகளையும் கால்களையும் கழுவுவதற்கு எந்த விசுவாசமும் இல்லாத மக்கள் அனேகர் இருக்கின்றனர். வெண்கலப் பாத்திரத்தில் அறிவிக்கப் பட்ட இந்த விசுவாசத்தை விசுவாசிக்காத அனைவரும் கர்த்தருக்கு முன்பாக மரணமடைவர். உங்கள் இருதயத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து சுத்தமாக கழுவப்பட்டவர்களாய், கர்த்தருக்கு முன்னதாகச் சென்று உங்களுடைய மரணத்தைத் தவிர்த்து, அவருடைய ராஜ்யத்தை உங்கள் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப் பட்டபோது அதனை விசுவாசிக்காததினால் நிச்சயமாக நீங்கள் ஆக்கினைக்குள்ளாவீர்கள், அப்போது கர்த்தருடன் எத்தகைய வாதத்தில் ஈடுபட்டும் பிரயோசனம் இல்லை. சத்தியத்தை விசுவாசிக்காததினால் உங்களில் யாரும் மரணத்தைச் சந்திக்க கூடாது என விரும்பி ஜெபிக்கிறேன்.
இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் உங்கள் பாவங்களை அழித்த இரட்சிப்பின் சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் பெரிதும் துன்பப்படுவீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வெண்கலப் பாத்திரத்தின் மூலமாக நம் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் நம்மை இரட்சித்தமைக்காக கர்த்தருக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் மீதியிருக்கும் பகுதிகள் இப்புத்தக வரிசையில் கூறப்படும். இப் புத்தகங்களிலுள்ள செய்திகளின் மூலமாக கர்த்தரின் பிள்ளைகளாகும் உரிமை உங்களுக்கு கிடைக்குமென நம்புகிறேன்.