(யோவான் 13:1-11)
“பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் சுற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.”
இன்னமும் மறுபடியும் பிறக்காத கள்ளப் போதகர்களுக்கு வேதாகமத்தின் அனைத்து வார்த்தையும் இரகசியமாகவே இருக்கிறது. ஆகவே மனித சிந்தனைகளின் மூலமாக கர்த்தரின் வார்த்தையை அவர்கள் விளக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், தாம் போதிப்பதை அவர்களே ஏற்றுக்கொள்வதில்லை. இதன் பலனாக, இயேசுவை விசுவாசிக்கும் அநேகரிடம் தம் இரட்சிப்பைக் குறித்த நிச்சயம் இல்லை.
இது ஏன் இப்படியாக இருக்கிறது? அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாவிட்டாலும், தாம் இயேசுவை விசுவாசிப்பதாக கூறுவதே இதற்கான காரணமாகும். தாம் இயேசுவை விசுவாசிப்பதால் அழிந்துபோவதில்லை என அத்தகைய கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர். ஆனால் வேதாகமத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அவர்கள் மறுபடியும் பிறக்காவிட்டால், அவர்கள் அழிந்து போவர் என்பது மிகவும் நிச்சயமான ஒன்று.
தமக்கு சத்தியம் தெரியாவிட்டாலும், தாம் இயேசுவை எப்படியோ கண்மூடித்தனமாக விசுவாசிப்பதால், குறைந்தது தாம் அழிக்கப்படுவதில்லை என மக்கள் எண்ணுவது ஒரு பொதுவான விசுவாசமாயிருக்கிறது. ஆயினும், அவர்களுக்கு வேதாகம சத்தியம் தெளிவாகத் தெரியாததால், தாம் தவறாக விசுவாசிக்கிறோம் என்பதும், தாம் சரியாக இரட்சிக்கப் படவில்லை என்பதும், வார்த்தையிலிருந்து அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
ஆகவே மக்கள் வேதாகமத்தின் வார்த்தையை அப்படியே விளக்கி, தம்முடைய சொந்த சிந்தனைகளின் அடிப்படையில் சுய கோட்பாடுகளை உருவாக்கினால், இத்தகைய மக்கள், இயேசுவை விசுவாசித்தாலும் கூட, பாவமன்னிப்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது, மேலும் தமது பாவங்களுக்காக நரகத்தைச் சென்றடைவர். மேலும், வேதாகமானது, நமது சொந்த வழிகளில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றல்ல, சத்திய வார்த்தையின் மூலம் மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களால் அவை எடுத்து வரப்படுகின்றன.
இயேசு கூறினார், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:5). இந்த வசனத்தை தெளிவாக அறிந்து விசுவாசிப்பவர்களால் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாகி, பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கமுடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய இருதயங்கள் சுத்திகரிக்கப் பட்டவர்களினாலேயே பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்று இயேசு கூறினார். ஆனால் தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்து கொள்ளாமல் மக்கள் விசுவாசித்தால் - அதாவது, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை புரிந்து கொள்ளாமல் விசுவாசித்தால் - அவர்கள் தம்முடைய பாவங்களுக்காக அழிக்கப் படுவர்.
நாம் இயேசுவை விசுவாசித்தும் கூட, நம்முடைய பாவங்களுக்காக நாம் அழிக்கப்பட்டால், அது எத்தனை வியாகூலமாயிருக்கும்? இவ்வுலகில் உள்ள அநேக மக்கள் இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசித்தாலும், அவர்கள் தமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட்டார்களா என கேட்டால், உறுதியாக அவர்களால் பதில் கூற முடியாது என்பது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாயிருக்கிறது. தாம் இயேசு விசுவாசிக்கிறோம் அல்லது விசுவாசிக்கவில்லை என பாவிகள் அறிவித்தாலும், அவர்கள் தம் பாவங்களுக்காக அழிக்கப் படுவர் எனக் கூறுவது தவறாகாது. இயேசுவை விசுவாசித்தாலும் கூட எத்தனை மக்கள் நிச்சயமாகவே அழிந்து போவர்?
தேவனைத் தாம் விசுவாசித்து, தாம் தீர்க்கதரிசனம் கூறியதாகவும், பிசாசிகளை விரட்டியதாகவும், அவருடைய பெயரினால் அநேக அதிசயங்களைச் செய்ததாகக் கூறினாலும், அவர்கள் அவரால் கைவிடப்படுவர் என மத்தேயு 7 நம்மிடம் கூறுகிறது. “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” (மத்தேயு 7:23) என்று அத்தகைய மக்களிடம் கூறப்போவதாக இயேசு அறிவித்தார். தன் பெயரைக் கூப்பிட்ட அத்தனை பேரும் பரலோகத்தில் பிரவேசிப்பதில்லை என நம் தேவன் கூறினார். இதைப் பேல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவறாக புரிந்து கொண்ட அனைவரையும் தேவன் கண்டிப்பார்.
ஆயினும் தாம் தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைத் தவறாக விசுவாசித்ததை அநேக மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளாத இந்நிலையானது நம் தேவனுக்கு பெரும் துன்பத்தை அளிக்கிறது. அவர்களுடைய தவறான விசுவாசத்திற்காக தேவன் அவர்களை கண்டிக்கிறார் என்பதை அறியாத அநேக மக்கள், தம்முடைய அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இதனால்தான் இன்றைய சாதாரணக் கிறிஸ்தவர்களுக்காக நம்முடைய இருதயங்கள் புலம்புகின்றன. அவர்கள் இயேசுவை வெறுமனே விசுவாசிக்கிறார்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் தெளிவான வேதாகம கூற்றை இன்னமும் அறியாதவர்களாகவே உள்ளனர். இதனால் தான், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் அனைவருக்கும் அறிவிக்கும் முக்கியமான குறிக்கோளினை நாம் கொண்டிருக்கிறோம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. அப்படியானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அறிந்து கொள்வது எப்படி? கர்த்தரின் வார்த்தையில் உள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்தபோதனைகளைக் கேட்பதினாலேயே என்பது வெளிப்படை. நாம் நிச்சயமாக சத்தியத்தின் நற்செய்தியைத் தெரிந்து, அதனை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தரால் தன் பரிசுத்தவான்கள் என்றழைக்கப் படவேண்டும். இதனால் மட்டுமே கர்த்தரின் ராஜ்யத்தினுள் விசுவாசத்தினால் நம்மால் பிரவேசிக்க முடியும், விசுவாசத்தினால் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும், மேலும் விசுவாசத்தினால் அவருடைய பிள்ளைகளாகவும் முடியும்.
இதனால் தான் கிறிஸ்தவம் விசுவாசத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய இரட்சிப்பை மையப்படுத்துகிறது. உலக மதங்கள் ஒருவரின் சொந்தச் செய்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால் இரட்சிப்பானது கர்த்தரின் பரிசு என்றும், அது மனித செயல்களினால் கிடைப்பதில்லை எனவும், உண்மையான சத்தியம் கூறுகிறது, இதனால் யாரும் பெருமைப் பாரட்டக் கூடாது (எபேசியர் 2:8-9) நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பதின் மூலமே பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும் என் உண்மையான கிறிஸ்தவம் சுட்டிக் காட்டுகிறது.
இன்றைய முக்கியமான வசனமாகிய யோவான் 13 கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பற்றியதே. தான் சிலுவையில் மரிக்கும் நேரம் வந்து விட்டதை அறிந்த இயேசு தன் சீடர்களின் கால்களைக் கழுவத்தொடங்கினார். இது பஸ்கா பண்டிகைக்கு முதல் நாளில் செய்யப்படும் ஒன்றாகும். பஸ்கா பண்டிகை யூதர்களின் மிக முக்கியமான ஒன்றாகும். அந்நாள் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து தப்பி, அடிமைத்தனத்திலிருந்து மீட்கப் பட்டதால், மிகவும் முக்கியமான நாளாக யூதர்களுக்கு விளங்கியது. ஆகவே இஸ்ரவேல் மக்கள் பழைய ஏற்பாட்டின் பஸ்கா பண்டிகையை நினைவு கூர்ந்து, ஒன்றாக அதன் சடங்குகளில் ஈடுபட்டனர்.
இராப் போஜனத்தின் போது, இயேசு தன் சீடர்களை ஒன்று சேர்த்து மிக முக்கியமான ஒன்று காத்திருப்பதை அவர்களுக்கு கூற வகைத்தேடினார். இயேசு தான் சிலுவையில் மரிப்பதற்கு முன்னதாக, தன் சீடர்களின் கால்களைக் கழுவியதன் மூலமாக, அவர்களின் சொந்த பாவங்களைத் தான் கழுவிவிட்டதை அவர்களுக்கு போதிக்க அவர் விரும்பினார். பஸ்கா பண்டிகை நெருங்கியதால், தான் பஸ்காவின் ஆட்டுக்குட்டியாக பிடிபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழும்புவதை அவர் அறிந்திருந்தார். ஆகவே பலியாட்டுக்குட்டியாக, தான் அவர்களின் சொந்தப்பாவங்களையும் கூட கழுவி விட்டதாக சீடர்களுக்கு போதிக்க இயேசு விரும்பினார். வேறு விதமாக கூறினால், தான் சிலுவையில் மரிப்பதற்கு முன்னதாக தன் சீடர்களுக்கு முக்கியமான ஒன்றைத் தெரிவிப்பதற்காக, இயேசு அவர்களின் கால்களைக் கழுவினார்.
பேதுருவின் கால்களை தேவன் கழுவியதற்கான காரணம்
இயேசு தன் சீடர்களின் கால்களைக் கழுவ எத்தனிக்கையில் பேதுரு மறுக்கையில் அவர் என்ன கூறினார் என்பதை நாம் காணலாம். “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” (யோவான் 13:8). இந்த கூற்று எத்தனை முக்கியமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கிறது? ஆயினும், அவர்களுடைய சொந்தப் பாவங்களைக் கழுவ எத்தகைய விசுவாசம் தேவைப் படுகிறது என்பதையும், அது தனக்கும் தன் சீடர்களுக்கும் எத்தனை முக்கியானது என்பதையும் தன் சிலுவை மரணத்திற்கு முன் அவர்களின் கால்களைக் கழுவுவதின் மூலம் போதிக்க விரும்பினார்.
ஆகவே இயேசு இருக்கையை விட்டு எழுந்து, தன்னுடைய ஆடைகளை சரிசெய்து, தன்னைச் சுற்றி துடைக்கும் துணியைப் போட்டு, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, சீடர்களின் கால்களைக் கழுவலானார். அப்பொழுது சீமோன் பேதுருவின் முறை வந்தது, ஆனால் பேதுரு தொடர்ந்து மறுத்தான். அவன் இயேசுவிடம் கூறினான், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா?” இயேசு தன் கால்களைக் கழுவதில் அவன் நெளிந்தான். அவன் இயேசுவை விசுவாசித்ததுடன், தேவகுமாரராகிய அவருக்கு ஊழியமும் செய்தான், ஆகவே இத்தகைய ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்றுக் கொள்வது அவனுக்கு கடினமான ஒன்றாயிருந்தது. இதனால் தான் தேவன் எப்படித் தன் கால்களைக் கழுவுவது என பேதுரு கேட்டான், யாராவது கால்களைக் கழுவவேண்டுமானால், பேதுருவே தேவனின் கால்களைக் கழுவ வேண்டும் என அவன் எண்ணினான், மேலும், தேவன் தன் கால்களைக் கழுவ அனுமதிப்பது மரியாதை இல்லை எனவும் அவன் எண்ணினான். ஆகவே மிகவும் அதிர்ச்சியடைந்த பேதுரு, “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா?” எனக்கூறி கால்களைக் காட்ட மறுத்தான்.
எட்டாம் வசனத்தில் இயேசு கூறினார், “நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” “நான் ஏன் இதனைச் செய்கிறேன் என்பதை இப்போது நீ அறியமாட்டாய். ஆனால், நான் சிலுவையில் மரித்து, உயிரோடு எழுந்து பரலோகம் ஏறிய பிறகு, நான் உன் கால்களைக் கழுவியதற்கான காரணத்தை அறிந்து கொள்வாய்.” அதன் பிறகு இயேசு உறுதி வாய்ந்த குரலில் கூறினார், “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” இயேசு பேதுருவின் கால்களைக் கழுவியிராவிட்டால், இயேசுவுக்கும் பேதுருவுக்கும் எச்சம்பந்தமும் இருந்திருக்காது. இயேசுவுடன் பங்கில்லை என்பதின் பொருள் அவருடன் எத்தொடர்பும் இல்லை என்பதாகும், ஆகவே வேறு வழியில்லாமல், இயேசுவுக்கு முன்னதாக பேதுரு தன் கால்களை நீட்டினான். அதன் பிறகு இயேசு பேதுருவின் கால்களை பாத்திரத்தினுள் வைத்து, அவற்றைக் கழுவி, துடைக்கும் துணியினால் அவன் கால்களைத் துடைத்தார்.
“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” என தேவன் பேதுருவிடம் கூறியபோது, இதனால் அதிர்ந்த பேதுரு அவரிடம் கூறினான், “ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும், இதன் மூலமாக இன்னும் அதிகமாய் உம்முடன் பங்கடைவேன்!” இதனைக் கேட்ட பிறகு, இயேசு அவனிடம் கூறினார். “முழுகினவன் தன் கால்மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல.”
மக்களை எது குழப்பி, திசை தெரியாதவர்களாக்குகிறது என்பதை இயேசு அடிக்கடி குறிப்பிட்டார். இயேசு கூறியதை சரிவர புரிந்து கொள்ளாத மக்கள், அதனை தவறாக புரிந்து கொண்டு, தவறாக விசுவாசித்து குழப்பமான காரியங்களைச் செய்கின்றனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சரியாக விசுவாசித்து பாவமன்னிப்பு பெறாதவர்களால், பேதுருவிடம் இயேசு இங்கே என்ன கூறினார் என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஏன்? ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களால் கர்த்தரின் வார்த்தையின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளமுடியாது.
அவன் / அவள் எத்தனை அறிவாளியாய் இருந்தாலும், உலகப்படியான ஞானம் நிறைந்தவராயினும், வேதாகமத்தில் கூறப்பட்ட சத்தியங்களை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. இத்தகைய மனிதர்கள் வேத வார்த்தையின் எழுத்துப் பூர்வமான பொருளை தெளிவாக புரிந்துகொண்டாலும், சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை அறியாவிட்டால், அவர்களால் எல்லாப் புதிரையும் சரியாக பொருத்த முடியாது, மேலும் எத்தனைக் கடினமாக முயற்சி செய்தாலும், எத்தகைய விசுவாசத்தால் தம் பாவங்களைக் கழுவமுடியும் என்பதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியாது.
“முழுகினவன் தன் கால்மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல” (யோவான் 13:10). என்று தேவன் கூறினார். இந்நாட்களின் கிறிஸ்தவர்கள் பலருக்கு இந்த வசனம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான வசனமாயிருக்கிறது, ஏனெனிக் தாம் தமது சொந்தப் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்று விட்டோமா இல்லையா என்று அவர்களால் உணர்ந்து கொள்ளமுடிவதில்லை. நடப்பில், மனம் வருந்தி ஜெபிப்பது என்ற கோட்பாட்டிற்கு அடிப்படையாக இந்த வசனத்தைப் பற்றிக் கொள்கின்றனர், இது கிறிஸ்தவத்தின் பாரம்பரியக் கோட்பாடாயிருக்கிறது.
இந்த வசனத்தை அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள், “இயேசுவை நாம் நமது இரட்சகராக ஏற்றுக் கொண்டவுடனேயே, மூலப் பாவம் உட்பட நம் அனைத்துப் பாவங்களில் இருந்தும் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால், நாம் மிகவும் குறைபாடுடையவர்களாய் இருப்பதால், அன்றாடம் பாவம் செய்கிறோம், இதனால் நாம் மீண்டும் பாவிகளாகிறோம், எனவே இந்த சொந்தப் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற கர்த்தரிடம் நாம் வேண்ட வேண்டும். இப்படிச் செய்வதின் மூலம், நம் பாவங்களிலிருந்து சுத்தமாவதுடன், அவருடனான உறவையும் புதுப்பித்துக் கொள்ளமுடியும்.”
அபத்தம்! மனம் வருந்தி ஜெபிப்பதன் மூலம் உங்கள் சொந்தப் பாவங்களைக் கழுவி விடமுடியுமா? உங்கள் கவணக் குறைவால் பாவமன்னிப்புக் கேட்க மறந்து போகும் பாவங்களின் கதி என்ன? அப்படியானால் இந்த பாவங்கள் எப்படி மன்னிக்கப் படும்?
கர்த்தரின் சரீரமாகிய சபையானது, தேவனால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களின் கூட்டமாகும். ஆகவே, சரீரமானது முற்றிலுமாக சுத்தமாயிருக்கிறது என இயேசு கூறிய போது, எல்லா சீடர்களும் சுத்தமானவர்களாயில்லை என பொருள்படும் படிக் கூறினார், அவரை விசுவாசிக்காத யூதாவைக் குறித்தே அவர் இதனைக் கூறினார். யூதா தன்னை விசுவாசிக்கவில்லை என்பதை அவர் அறிந்திருந்ததினாலே, “நீங்கள் அனைவரும் அல்ல” என அவர் கூறினார்.
வேதாகமத்தின் முக்கியமான சத்தியமாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் தேவன் நம் அனைத்துப் பாவங்களையும் கழுவி விட்டார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆகவே வார்த்தையின் முக்கிய கருத்துக்களை அறியத் தவறி, கர்த்தரின் வார்த்தையை நாம் புரிந்து கொள்ள முயற்சித்தால், மிகப் பெரும் தவற்களுக்குள் நாம் விழுந்து போவோம். இன்றும் கூட அநேக மக்கள் தவறுகளுக்குள் விழுந்தவர்களாய், தம் உடமைகளை எல்லாம் விட்டு விட்டு, இயேசுவை சரியாக விசுவாசிக்காத போதிலும் கூட, இரத்தசாட்சிகளாக மரிக்கிறார்கள், ஆனால், முடிவில் அவர்கள் தம் பாவத்திற்காக அழிக்கப்படுவர்.
இயேசு நம் கால்களைக் கழுவவேண்டியதற்கான காரணம்
இயேசு பேதுருவின் காலைக் கழுவிய பிறகே அவர்களுக்குள் ஒரு உறவு ஏற்படும் என்பதற்கான காரணம் என்ன? பேதுரு அவனின் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை அவர் கழுவினால் மட்டுமே அவரால் பேதுருவின் உண்மையான இரட்சகராக முடியும் என்பதே அதற்கான காரணமாகும். இயேசு உலகிற்கு வந்தார், யோவானிடம் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் அனைத்துப் பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார், சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார், இதன் மூலமாக பேதுருவினதும், அவருடைய சீடர்களினதும் அனைத்துப் பாவங்களையும் அவர் கழுவினார். ஆனால் அது ஒரு சம்பிரதாயம் என சீடர்கள் எண்ணியமையால், இயேசு தம் கால்களைக் கழுவியதின் காரணம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் தம்முடைய நிகழ்கால பாவங்கள் மட்டுமின்றி, தாம் பிற்காலத்தில் செய்யப் போகும் பாவங்கள் கூட தம்மை ஆவிக்குரிய மரணத்திற்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆகவே தாம் எதிர்காலத்தில் செய்யப் போகும் பாவங்கள் கூட விசுவாசத்தின் மூலமாக ஏற்கனவே இயேசுவின் மீது சுமத்தப் பட்டுவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்படி நடக்காவிட்டால் பேதுருவுக்கும் இயேசுவுக்கும் எந்த உறவும் இருக்காது என்பதால், தனது காலையும் மற்ற சீடர்களின் கால்களையும் இயேசு கழுவியதின் பாடத்தை பேதுரு கற்க வேண்டியிருந்தது. பேதுரு தனது குறைபாடுகளாலும், பலவீனத்தினாலும் செய்த “அனைத்துப் பாவங்களையும்” தான் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக கழுவி விட்டதை இயேசு பேதுருவிற்கு போதிக்க வேண்டியிருந்தது. இதனால் தாம் இயேசு பேதுருவின் கால்களைக் கழுவ வேன்டியிருந்தது, மேலும் பேதுருவும் இயேசுவால் தன் கால்கள் கழுவப்பட வேண்டியவனாயிருந்தான். பேதுரு தனது குறைபாடுகளினாலும், பலவீனத்தினாலும் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களையெல்லாம், இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் கழுவி விட்டார் என்பதை அவன் விசுவாசித்தாலே, அவனுக்கும் கிறிஸ்துவிற்கும் பங்குண்டு.
கர்த்தரின் வார்த்தையைக் கேட்டு சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம் பாவங்களையெல்லாம் மன்னித்தது என்பதை அறிந்து அதனை விசுவாசிக்கும் போது மட்டுமே, நம் சொந்தப் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப் படமுடியும். “ஏற்கனவே குளித்தவன் தன் கால்களை மட்டும் கழுவினால் போதுமென இயேசு கூறினார். இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே கழுவி நம்மை சுத்திகரித்தமையால், இதனை விசுவாசிப்பவர்களே, தம் பாவங்கள் கழுவப்பட்டவர்கள் ஆவர்.
இயேசு கிறிஸ்து யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதால் நம் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டார். சிலுவைக்குச் சென்று, அதில் அறையப்பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலமும், மரித்ததின் மூலமும், மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிரோடெழுந்ததின் மூலமும், தேவன் நமது நிறைவான இரட்சகரானார். இது போல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம், அவரை விசுவாசிப்பவர்கள் தம் எல்லாப் பாவங்களும் கழுவப்பட அவர்களை ஏதுவாக்கினார்.
இந்த சத்தியத்தை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களால், தம்முடைய சொந்தப் பாவங்களுக்கு கூட பாவமன்னிப்பைப் பெற முடிந்தது. கர்த்தருடைய பார்வையில், இயேசுவின் நீதியின் செயலால் அனைத்து மனிதகுலத்தின் பாவங்கலும் கழுவப்பட்டன என்பது சத்தியமாகும். நம்முடைய எல்லாப் பாவங்களும் கழுவப்படும் இந்த கிருபையைப் இலவசமாகப் பெற நாம் செய்ய வேண்டியதெல்லாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைப்பது மட்டுமே. அப்படி இல்லையா? இது சரியானதே! இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம்முடைய நம்பிக்கையினால், நாம் ஏற்கனவே குளிக்கப் பட்டவர்களானோம்.
ஏற்கனவே குளித்தவர்கள் தம் கால்களை மட்டும் கழுவினால் போதுமென இயேசு கூறினார், ஏனெனில், நாம் அன்றாடம் பாவம் செய்தாலும் கூட, இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு நம்மை முழுமையாக இரட்சித்தார். ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக, நம் முழு வாழ்நாட்களிலும் செய்யும் எல்லாப் பாவங்களையும் அவர் இரட்சித்தார், இந்த சத்தியத்தை நாம் அன்றாடம் உறுதி செய்வதின் மூலமாக, நம் சொந்தப் பாவங்களிலிருந்து விடுதலையாகலாம்.
இந்த வசனங்கள் இதைத்தான் நம்மிடம் கூறுகின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றவர்களும் கூட - அதாவது, யோவானிடம் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு, உலகின் பாவங்களைத் தன்மீது சுமந்தவராக சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிரோடெழுந்ததை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றவர்களும் கூட - அவர்கள் மாமிசமாயிருப்பதினாலே, தம் வாழ்வில் அன்றாடம் பாவம் செய்தாலும் அவர்கள் இன்னமும் உயிரோடிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆயினும், ஆயினும், இயேசு மகத்துவமுள்ளவராய் இருப்பதினாலே, மக்கள் காலையிலும் மாலையிலும் செய்யும் சொந்தபாவங்கள் அனைத்தையும் கர்த்தர் எடுத்துப்போட்டார்.
பெருங்காலங்களாக, நித்தியகாலத்தில் இருந்து நித்தியகாலம் வரை, மனிதகுலத்தின் எல்லாப்பாவங்களையும் சுத்திகரிக்கும் இந்த செயலை கர்த்தர் ஒரேதரமாக நிறைவேற்றினார். இதுபோலவே, ஞானஸ்நானம் பெற்றபின் இயேசு யோவானிடமிருந்து நமது முழுவாழ்விலும் செய்யும் பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சுமந்தவாறு சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, இதன் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் கழுவினார். இப்படி இருந்த போதிலும் நாம் எப்படி விசுவாசிக்கிறோம்? இந்த சத்தியத்தை விசுவாசித்தாலும், நம்முடைய குறைபாடுகளால் நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் பாவங்களினால் நாம் துன்பமடைகிறோம்.
நாம் பூமியில் வாழுகையில், வாழ்நாள் முழுவதும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் இயேசு எடுத்துப் போட்டார் என்பதை, இதனால் தான் நாம் அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு ஒரேதரமாக கழுவிவிட்டார், ஆனால் நாம் இந்த உண்மையை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பேதுரு இயேசுவுடனே ஐக்கியமாக இருக்கவேண்டுமானால், அவர் தன் கால்களைக் கழுவியதை அவன் நினைவில் வைத்திருக்க வேண்டும், அது போல, நாமும் அவருடைய இரட்சிப்பில் நிலைத்திருக்க வேண்டுமானால், அவர் தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவையின் இரத்தத்தினாலும் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே துடைத்து விட்டார் என்பதை அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஆனால் இந்த நற்செய்தியை விசுவாசிக்காதவர்களால் தம் பாவங்களை நித்தியமாக கழுவ முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களையும் கழுவாதவர்களுக்கும் இயேசுவுக்கும் பங்கில்லை. தம் பாவங்களை தினமும் கழுவ அவர்கள் இடையறாது முயற்சி செய்தாலும், அவர்களின் பாவங்கள் கழுவப்படவில்லை, ஏனெனில் தம் மனம் வருந்தி கழுவ முயற்சி செய்யும் பாவங்கள் அத்தனை எளிமையானவை அல்ல. எல்லாப் பாவங்களையும் கர்த்தரின் பயங்கரமான ஆக்கினை பின்தொடர்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய பாவங்களைக் கழுவுவதற்கு பதிலாக தம்முடைய சொந்த மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலம் கழுவ முயற்சி செய்பவர்கள், ஒரு காசு பாவம் கூட கழுவப்படாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஒவ்வொரு நாளும் இத்தகைய ஜெபங்களை ஏறெடுப்பதால், நம் பாவங்களை நம்மால் கழுவ முடியுமா? நாம் நம் மனந்திரும்புதலின் ஜெபத்தினால் நம் பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டன என விசுவாசித்தாலும் கூட இப்பாவங்கள் முழுமையாக அப்படியே தானிருக்கின்றன.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய முழு சரீரத்தையும் நனைத்தவர்கள் மட்டுமே, தாம் வாழுகையில் தம் கால்கள் கழுவப்படத் தகுதியானவர்கள், மேலும் அவர்கள் கிருபையினால் தரிப்பிக்கப்படுவர், இது அவர்கள் தம் விசுவாசத்தினால் அன்றாடம் தம் பாவங்களைக் கழுவுவதை ஏதுவாக்கி, நித்தியமாக தூய்மையாக வைத்திருக்கும்.
ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக, நம்முடைய சொந்தப் பாவங்கள் அனைத்தையும் இயேசு ஒரேதரமாக சுமந்தார். ஆகவே, நாம் வாழுகையில் நம்முடைய குறைபாடுகளால் செய்யும் எல்லாப் பாவங்களையும், இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக தன் மீது ஏற்றுக் கொண்டு, அவற்றிற்கான ஆக்கினையைத் தன்மீது சுமந்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் சொந்த பலவீனத்தில் விழுந்து போவதின் மூலம் தடைபடுவதோ, மரிப்பதோ இனி இல்லை.
இயேசு தனது சீடர்களின் கால்களைக் கழுவிய பிறகு அவர் செய்ய வேண்டியவைகள் சிலுவையில் அறையப் பட்டு மரிப்பதும், மரித்தோரிலிருந்து உயிரோடெழும்புவதும், பரலோகத்திற்கு ஏறுவதும் மட்டுமே. இயேசுவால் இனிமேல் சீடர்களுடன் இருக்க முடியாது, ஆனால், எழுதப் பட்ட வார்த்தைகளுக்கு ஏற்றவாறு, பிதாவாகிய கர்த்தரின் வலது பாரிசத்தில் அவர் அமர்ந்திருப்பார்.
ஆனால் இவற்றைக் குறித்து தன்னுடைய சீடர்களுக்கு போதிக்காமல் இயேசு சிலுவையில் மரித்திருந்தால், அவர்களால் எப்படி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இவ்வுலகம் முழுவதும் பரப்பி வாழ்ந்திருக்க முடியும்? இயேசுவின் சீடர்கள் பலவீனமானவர்களாய் இருப்பதினாலே, தம் சொந்தப் பாவங்களைச் செய்கிறவர்களாக வாழ்ந்திருப்பர், மேலும் பொறாமை, வெறுப்பு, குரோதம், ஆகிய சொந்தப் பாவங்களைச் செய்யும் போது, அவர்களால் விசுவாசத்தினால் வாழமுடியாது போயிருக்கும். அப்படியானால் அவர்கள் நற்செய்தியை எப்படி மற்றவர்களுக்கு அறிவித்தனர்? அவர்களால் அது முடியாது போயிருக்கும். இதனாலேயே, இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவியதின் மூலமாக, அவர்களின் எல்லாப் பாவங்களையும் தான் கழுவி விட்டதை அவர் அவர்கள் உறிதிபட கூற வேண்டியிருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட பாவமன்னிப்பைப் போல
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், முதலாவது நாம் சர்வாங்க தகன பலிபீடத்தையும், வெண்கலப் பாத்திரத்தையும் காண்போம். ஆசரிப்புக் கூடாரம் நமது வாழ்க்கைக்கு அளிக்கும் முதலாவது பாடமானது, கர்த்தருக்கு முன்னதாக நம்மிடம் பாவம் இருக்கிறது என்பதும், பாவத்திற்கான ஆக்கினை நமக்காக காத்திருக்கிறது என்பதுவுமே. சர்வாங்க தகன பலிபீடம் குறிப்பிடுவதைப் போல, நம்முடைய விசுவாச வாழ்க்கை பாவ ஆக்கினையின் மூலமும், மரணத்தின் மூலமும் தொடங்குகிறது. நம்முடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக நாம் தண்டிக்கப் படவேண்டியவர்கள், ஆனால் நம்முடைய பாவங்களை எடுத்துக் கொள்வதற்காக தேவன் இப்பூமிக்கு வந்தார்.
கைவைத்ததின் மூலமாக பாவிகளின் அக்கிரமங்களை எல்லாம் பலி காணிக்கை ஏற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தி மரித்து, அதன் மாமிசம் சர்வாங்க தகன பலிபீடத்தில் வைக்கப்பட்டு நெருப்பினால் எரிக்கப்பட்டு, நெருப்பின் ஆக்கினையை பாவிகளுக்காக ஏற்றுக்கொண்டதைப் போல, இயேசுவும் இதனை நமக்காகச் செய்தார். நாம் மரிப்பதற்கு பதிலாக, யோவானிடமிருந்து கைவைக்கப் படுதலைப் பெற்றுக் கொண்ட இயேசு, தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்தார், இதன் மூலம் தன்னுடைய சொந்த மரணத்தின் மூலமாக நம் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினார்.
நாம் அன்றாடம் பாவம் செய்கிறோம், நாம் மரிக்கும் நொடி வரையிலும் பாவம் செய்கிறோம். நானும் நீங்களும் பாவத்திற்கு மரிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் நம்மைப் போன்றவர்களை பாவத்திலிருந்தும் ஆக்கினையில் இருந்தும் இரட்சிப்பதற்காக, நம் தேவன் பரலோக சிங்காசனத்தின் மாட்சிகளை விட்டிறங்கி, யோவனிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக நம் பாவங்களைத் தனது சரீரத்தில் சுமந்து, தனது சரீரத்தை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்து, சிலுவையில் அறையப்பட்டு, தனது விலையேறப் பட்ட இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, இவற்றின் மூலமாக நம் உண்மையான இரட்சகரானார். நாம் நமது பாவங்களுக்கு ஆக்கினையாக சாக வேண்டியவர்கள் என்பதை அறிந்து அதனை ஏற்றுக் கொள்வது விசுவாசத்திற்கான தொடக்கப்புள்ளியாகும்.
தாம் தம் பாவங்களுக்காக மரிக்க வேண்டியவர்கள் என்பதை அறிந்து அதனை விசுவாசிப்பவர்களால் மட்டுமே, விசுவாசத்தினால் இயேசுவின் மீது அனைத்துப் பாவங்களையும் சுமத்தி பாவமன்னிப்பைப் பெற்று தமது பாவங்களைக் கழுவும் முழுகுதலில் பங்கேற்க முடியும். உண்மையான விசுவாசம் இத்தகைய விசுவாசத்திலிருந்து உருவாகிறது. இத்தகைய விசுவாசத்திலிருந்து தொடங்கிய நாம், அன்றாடம் நம் வாழ்வில் செய்யும் பாவங்களை எல்லாம், எதிர்காலத்தில் நாம் செய்யப் போகும் பாவங்களையும் கூட இயேசு கிறிஸ்து துடைத்தார் என்று நிச்சயப்படுத்துவதின் மூலமும் அதனை முழுமைப் படுத்த முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள தலைமை ஆசாரியனும் அவனுடைய குமாரர்களும் கூட காலையிலும் மாலையிலும் ர்வாங்க தகன பலியைக் கொடுத்தனர். அவர்கள் தம் பலிகளைத் தினமும் எடுத்து வந்து, அதன் தலை மீது தம் கைகளை வைத்து, அதன் இரத்தத்தை பிடித்து, அதனைக் கர்த்தருக்கு படைத்தனர். இதனால் தான் ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசனங்கள் ஏது இருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் தொடர்ந்து பலிகொடுத்துக் கொண்டேயிருந்ததால், உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு நேரம் இருக்கவில்லை. இது போல, இடையறாது பாவம் செய்யும் மனிதர்களாய் நாம் இருக்கிறோம், மேலும் இப்பாவங்களுக்கான தண்டனையைத் தவிர்க்கமுடியாது, ஆனால் இயேசு கிறிஸ்து, தான் பெற்ற ஞானஸ்நானத்தாலும் அவருடைய இரத்தம் சிந்துதலினாலும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் முழுமையாக இரட்சித்தார்.
நம்முடையப் பாவங்களுக்காக நாம் எப்போதும் மரிக்க வேண்டியிருக்கிறது என்பதை விசுவாசிப்பதுடன் நம் விசுவாசத்தை தொடங்க வேண்டும். நம்மைப் போன்ற மனிதர்களுக்காக, இயேசு பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் நம் பாவங்களை எல்லாம் ஒரேதரமாக எடுத்துப் போட்டார். தன்னுடைய ஞானஸ்நானத்தினால் நம் பாவங்களை எடுத்துக் கொண்ட இயேசு கிறிஸ்து, எல்லாப் பாவங்களையும் சிலுவைக்குச் சுமந்து தம்முடைய இரத்தத்தையும் வாழ்வையும் கொடுத்து அவற்றிற்கான கிரயத்தைக் கொடுத்தார். மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்ததன் மூலமாக, அவர் நம் நித்திய இரட்சகரானார்.
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்” என்று ரோமர் 6:23 கூறுகிறது. நாம் நம்முடைய பாவங்களுக்காக நிச்சயமாக மரிக்கவேண்டியவர்கள், ஆனால் இயேசு கிறிஸ்து நம்மை முழுமையாக இரட்சித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாகவும், சிலுவையில் மரித்ததின் மூலமாகவும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததின் மூலமாகவும், பாவமன்னிப்பையும் நித்திய ஜீவனையும் நம் தேவன் கொடுத்தார். இதனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கிருந்து தான் விசுவாசம் தொடங்குகிறது.
“நான் மிகவும் குறைபாடுடையவனாய் இருப்பதால் இதற்கு மேலும் இயேசுவை என்னால் பின்பற்ற முடியாது” என நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் அற்பனாகவும் மாமிசத்திற்குரியவனாகவும் உங்களைக் குறித்து எண்ணுகிறீர்களா, நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தாலும் கூட முன்செல்வது கடினமாக இருக்கிறதா? இந்த விசுவாசமே நித்திய மரணத்திற்கு நம்மைத் தள்ளுகிறது.
எபிரெயர் 10:36-39ஐ வாசிப்போம: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” நாம் மரணத்திற்கு உள்ளானவர்கள் அல்லவென்று இது கூறுகிறது. இந்த சத்தியத்தை விசுவாசிக்கிறவர்கள் பெரிதும் துன்புறுத்தப் பட்டு, சீரழிந்து, அநேக கஷ்டங்களைச் சந்திப்பர். ஆனால் என்றென்றும் அழியாத பரலோகத்தின் மீதான நமது உரிமை காத்திருக்கிறது. பரலோகத்தில் உள்ள அனைத்தும் அதன் உடமையாளரான நமக்காக காத்திருக்கிறது.
எபிரெயர் 10:34-35 கூறுகிறது, “நான் கட்டப் பட்டிருக்கையில் நீங்கள் என்னைக் குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.” இது சரியானதே. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் உங்களுக்கும் எனக்கும் பரலோகத்தின் நித்திய உரிமைகள் காத்திருக்கின்றன. பாவமன்னிப்பு பெற்றவர்களுக்கு பரலோகத்தின் உரிமையைக் கர்த்தர் பரிசாக வழங்கினார்.
இதனால் தான் தன்னுடைய வாக்குத்தத்தத்திலுள்ள நம்பிக்கையை இழக்க வேண்டாம் என அவர் நம்மிடம் கூறினார். நம்முடைய விசுவாசத்திற்காக மிகப் பெரிய பரிசினைப் பெறுவதை அறிந்திருக்கும் நாம், நித்திய மரணத்திற்குள்ளாகக் கூடாது, ஆனால் நாம் நம் விசுவாசத்தை இன்னமும் உறுதிப் படுத்த வேண்டும், நம் மன உறுதியை இழக்கக் கூடாது. உண்மைச் சத்தியமாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்கவேண்டும், முடிவு வரை ஆவிக்குரிய போராட்டத்தைப் போராடி, ஆத்துமாக்களை இரட்சித்து, மேற்கொள்ளவேண்டும்.
பரிசுத்தவான்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தைப் பெற்றிருக்க வேண்டும். நம்மிடம் இத்தகைய விசுவாசம் இருக்கவேண்டும், நாம் குறைபாடுடையவர்களாயிருந்து, இப்பூமியில் வாழும் நாட்களில் எல்லாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டேயிருந்தாலும், யோவானிடம் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், நமக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததின் மூலமாகவும், நம்மை அவர் முழுமையாக இரட்சித்தார். இந்த விசுவாசத்தினாலேயே, இப்பூமியின் முடிவு வரை மன உறுதியுடனும், நீதியுடனும் நம்மால் வாழ முடியும். விசுவாசத்தின் மூலமாக கர்த்தருக்கு முன்னதாக நாம் வர வேண்டும், இந்த உண்மை நற்செய்தியுடன் விசுவாச ஓட்டத்தை ஓட வேண்டும், இந்த நற்செய்திக்கு ஊழியம் செய்து நம் வாழ்வை வாழ வேண்டும். இதனால் தான் வேதாகமம் இப்படி கூறுகிறது, “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” (எபிரெயர் 10:36).
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபிரெயர் 10:38-39). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து வாழும் நாமே, மற்றவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பவர்களாய் இருப்போம். இப்படியாக இருக்கும்போது, மற்றவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கும் விசுவாசம் இருந்தும், நாம் எப்படி நித்திய மரணத்திற்குள்ளாவோம்? நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பார்க்கவில்லையென்றால், நமது விசுவாசம் குறைபாடடையும், மேலும் மரணக் குழியினுள் விழுந்து விடுவோம். பாவமன்னிப்பைப் பெற்ற நம் குறிகோளானது கர்த்தரின் சித்தத்தைப் பின்பற்றி தொடர்ந்து ஓடுவதாயிருக்கிறதே தவிர, நம் பலவீனத்திற்குள் விழுந்து, நாம் இருக்கும் இடத்தில் இருந்து, மரணத்தில் முடிவோம் என்பதாயில்லை.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் நித்திய மரனத்திற்குள் பிரவேசிப்பவர்கள் இல்லை. மற்ற ஆத்துமாக்களையும் இரட்சிக்கக் கூடிய விசுவாசம் நம்முடைய விசுவாசமாகும். நாம் இத்தகைய மக்களாயிருக்கும் போது, நம்முடைய பலவீனத்தினால் நாம் எப்படி விழுந்து மரித்துப் போவோம்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் நித்திய மரனத்திற்குள் எப்போதும் பிரவேசிப்பவர்கள் இல்லை. நானும் நீங்களும் எத்தனை குறைபாடுடையவர்களாயும், பலவீனர்களாயும் இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள மிகப் பெரிய உறுதிப்பாட்டினால், விசுவாசத்தினால் வாழும் நீதிமான்கள் நாம் ஆவோம்.
நம்முடைய விசுவாசம் எங்கே தொடங்கியது எனவும், நித்திய மரணத்தில் இருந்து வெளியே வந்ததையும், விசுவாசத்தினால் வாழ்வதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அடிப்படையில், நம் பாவங்களுக்காக மரிப்பவர்களாக நாம் இருந்தோம், ஆனால், உங்களையும் என்னையும் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம் தேவன் இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, நாம் நம் நித்திய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டோம்.
வேறு வார்த்தைகளில் கூறினால், நம்முடைய பலவீனங்களையும், குறைபாடுகளையும், திறமையின்மைகளையும், தீமைகளையும் 100 சதவீதம் ஒத்துக் கொண்டு நம் விசுவாச வாழ்வைத் தொடங்கியமையால், பாவமன்னிப்பைப் பெற்று, பாவம் செய்கிறவர்களாய் பூமியில் நடந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக எல்லாப் பாவங்களையும் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தி, அவருடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் அவற்றைக் கழுவாவிட்டால், அவற்றை நாம் மேற்கொள்ள மாட்டோம். இதனாலேயே நாம் மரணத்திற்குற்படுபவர்கள் அல்லவென்றும், விசுவாசத்தினால் வாழ்பவர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
சில நேரங்களில், நம்முடைய சூழ்நிலைகளினாலும், சந்தர்ப்பங்களினாலும் கட்டுப்பட்டவர்களாய், அநேக சோதனைகளுக்குள்ளும் கஷ்டங்களுக்குள்ளும் விழுவோம், மேலும் நாம் பலவீனர்களாய் இருப்பதினாலே, நம் விசுவாச வாழ்க்கை சிதறிப்போய், மேற்செல்ல முடியாது போகலாம். ஆனால் நாம் மரிக்கவேண்டியதாயிருக்கிறது, இதனை பேதுருவுக்கு போதிக்கவே அவர் கூறினார், “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” பேதுருவின் எல்லாப் பாவங்களையும் இயேசு கழுவிவிட்டார். தேவன் ஞானஸ்நானம் பெற்று பேதுரு தன் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை தன் மீது எடுத்துக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து அவனை இரட்சித்ததைப் போலவே, நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும், ஆக்கினைகளில் இருந்தும், உங்களையும் என்னையும் தேவன் இரட்சித்தார்.
அவர் அப்படிச் செய்திருக்காவிட்டால் உங்களுக்கும் எனக்கும் இயேசுவிடம் என்னவிருக்கிறது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில்லாவிட்டால், நாம் எப்படி நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டிருக்க முடியும், மற்றவர்களை எப்படி இரட்சிப்பிற்கு நம்மால் வழிநடத்த முடியும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில்லாவிட்டால் நம்மால் இவற்றில் ஒன்றையும் செய்திருக்க முடியாது. இந்த சத்தியத்தையே இயேசு பேதுருவுக்கு போதிக்க விரும்பினார்.
நீங்களும் நானும் இந்த போதனைகளைக் கேட்டு புரிந்து கொண்டோம், ஆனால் உண்மை நிலை என்ன? நம்முடைய குறைபாடுகளினால் ஆவிக்குள்ளாக நாம் கலங்குவதில்லையா? அப்போது நாம் நம் சொந்த பலவீனங்களுக்குள் விழுந்து விடுவதில்லையா? நாம் குறைபாடுடையவர்களாயும், பலவீனர்களாயும் இருப்பதைக் காண்பதால், சுய ஆக்கினைக்கு நம்மை இலகுவாக உட்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம். “முடிவு வரை என்னால் எப்படி இயேசுவைப் பின்பற்ற முடியும்? இந்நேரத்தில் இருந்து அவரைப் பின்பற்றுவதை நான் நிறுத்தி விடுகிறேன்! கர்த்தரின் ஆலயத்தை நான் விட்டு விடுவதை அவரும் ஒத்துக் கொள்வார்.” என நீங்கள் உங்களுக்குள்ளே எண்ணலாம். இயேசு பெற்ற ஞானஸ்நான நற்செய்தி இல்லாவிட்டால், நித்திய மரணத்திற்குள் விழும் தண்டனைய நாம் அடைந்திருப்போம்.
நம்முடைய பாவங்களுக்காக நீங்களும் நானும் மரிப்பதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தாலும், நம் தேவன் நம்மை நம் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் ஏற்கனவே விடுவித்தார் என்ற சத்தியத்தை விசுவாசியுங்கள். நம்முடைய மாமிசம் பலவீனமானதாக இருப்பதால், நாம் பாவமன்னிப்பைப் பெற்றாலும் கூட, மீண்டும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது, இயேசு பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவற்றின் மூலம் இயேசு நிறைவாக்கிய நித்திய இரட்சிப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்களும் நானும் நம் விசுவாசத்தை அறிக்கைச் செய்ய வேண்டும், “அடிப்படையில் பார்த்தால், என் பாவத்திற்காக மரிப்பதை தவிர்க்க முடியாது. அது சரியானதே. ஆனால் எனக்காக தேவன் இப்பூமிக்கு வந்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் என் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் என் எல்லாப் பாவங்களும் தன்மீது சுமத்தப்படுவதை அவர் ஏற்கவில்லையா? அவர் சிலுவையில் மரிக்கவில்லையா? அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப வில்லையா, அவர் இப்போது உயிரோடில்லையா? என்னுடைய பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டதால், நான் எத்தனைக் குறைபாடுடன் இருந்தாலும், என்னுடைய குறைபாடுகள் எத்தனையாய் வெளிப்பட்டாலும், நான் இன்னமும் பாவமற்றவனாகவே இருக்கிறேன். ஆகவே நித்திய மரணத்திற்குள்ளாக விழுந்து மரிக்கப் போவது நானல்ல.” இப்படியாக விசுவாசிப்பதின் மூலமாக நம் பலவீனத்தை வெளியேற்ற வேண்டும்.
நாளை திரும்பவும் நம் குறைபாடுகள் வெளிப்பட்டாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலம், நம் பலவீனத்தை நம்மால் களைந்து விட முடியும். நம்முடைய விசுவாசத்தினால், நம் பலவீனத்தினால் வரும் ஆவிக்குரிய மரணத்தையும் சாபங்களையும் களைந்து விட முடியும்.
நம்மால் முடிந்தவரை இந்த சத்தியத்தை மீண்டும் மீண்டும் தியானிக்க வேண்டும், “தேவன் என்னை இரட்சித்தார். தேவன் மீது என் எல்லாப் பாவங்களும் சுமத்தப் பட்டுவிட்டதால், என்னிடம் இன்னமும் பாவங்கள் இருக்கின்றனவா இல்லையா? என்னிடம் பாவங்கள் இல்லை! இப்படியாக விசுவாசிப்பதின் மூலமாக, நம்முடைய பலவீனங்களயும், பாவங்களையும் களைந்து விட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மீண்டும் உறுதி படுத்துவதின் மூலம், நாம் விசுவாசத்தால் நிறைவாக இரட்சிக்கப் பட்டோமா என்பதை சரிபார்க்க முடியும். இப்படியாகவே கர்த்தரை நோக்கி நாம் அன்றாடம் ஓடவேன்டும்.
இயேசு மரித்தபோது எல்லாப் பாவங்களும் மறைந்தன
சகோதர சகோதரிகளே, இயேசு பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் பேசிய இந்த வார்த்தை எத்தனை முக்கியமானது? அவர் தன் மரணத்திற்கு பிறகும், குறிப்பாக, அவர்கள் தம் பலவீனங்களுக்குள் விழுந்த பிறகு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உறுதியாக இருக்கும்படியாக அவர்களின் கால்களைக் கழுவினார். பேதுருவின் கால்களையும் மற்ற சீடர்களின் கால்களையும் இயேசு கழுவியிராவிட்டால், அவர் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, கர்த்தரின் ராஜ்யத்திற்கு ஏறிய பின் சீடர்களின் கதி என்னவாகியிருக்கும்? தமது பலவீனங்கள் வெளிப்படும் போது, சீடர்கள் அவற்றை எப்படி சமாளித்திருப்பர்? இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தால் அதனை சமாளிக்க வேண்டும், அப்படி அவர்கள் விசுவாசிக்காவிட்டால், அவர்களின் பலவீனங்களை அவர்களால் சமாளிக்க முடியாது.
இயேசுவின் ஊழியங்களான, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசத்தால் நம்முடைய பலவீனங்கள் மற்றும் சொந்த பாவங்கள் ஆகியவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். தான் பெற்ற ஞானஸ்நானத்தின் வல்லமையை இயேசு தனது சீடர்களுக்கு போதித்திராவிட்டால், அவருடைய சீடர்களும் சஞ்சலப்பட்டு ஆவிக்குள் மரித்திருப்பர். நற்செய்திக்கு தம் முழு வாழ்வை அர்ப்பணித்து, மற்ற ஆத்துமாக்களை இரட்சிக்க தம் வாழ்வை ஒப்புவித்து, கடைசியில் தாம் இரத்தசாட்சிகளாக மரித்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய பலம் அவர்களுக்கு இருந்திருக்காது, மேலும் தம் விசுவாசத்தைக் காக்கத் தவறியதுடன் சஞ்சலத்திற்குள் ஆழ்ந்திருப்பர்.
நமக்கு கிடைத்த செவி வழி செய்திகளின் படி, இயேசுவின் அனைத்து பன்னிரு சீடர்களும் நற்செய்தியைப் பிரசங்கித்து, எல்லோருமே இரத்தசாட்சிகளாய் மரித்தனர். இயேசுவின் பன்னிரு சீடர்களில், அதிகப் படியான சந்தேகங்களை உடையவன் தோமா ஆவான். ஆனால் இந்த தோமாவும் கூட இந்தியாவிற்கு வந்து இரத்தசாட்சியாக மரித்தான்.
இயேசுவின் சீடர்களை இரத்தசாட்சிகளாகும் படி ஏதுவாக்கிய இந்த விசுவாசம் எங்கேயிருந்தது? இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவர்களின் முழு வாழ்வினதும் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்றும், அவர்களுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப்பட்டு விட்டது என்பதால் அவர்கள் மிகவும் சுத்திகரிக்கப் பட்டார்கள் என்றும் இந்த விசுவாசம் மன உறுதியால் நிரம்பியிருந்தது, ஆகவே அவர்கள் கர்த்தரின் சொந்தப் பிள்ளைகளாகினர், பரலோகம் அவர்களுடையதாயிற்று - அவர்களிடம் இத்தகைய விசுவாசம் இருந்தமையாலேயே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்பூமி முழுவதுமாக பரப்ப முடிந்தது, மேலும் கர்த்தர் அவர்களை அழைத்த போது அவரிடம் செல்லவும் முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், நாமனைவரும் கூட, கர்த்தர் விரும்பும் போது, இவ் விசுவாசத்துடனே இரத்தசாட்சிகளாக முடியும்.
பிலாத்துவின் நீதிமன்றத்திற்கு வெளியே இயேசுவை பேதுரு மூன்று முறை மறுதலித்தமைக்குப் பிறகு, இயேசு அவனுக்கு கூறியதின் பொருளை அவன் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டான், “நான் உன்னைக் கழுவாவிட்டால், உனக்கு என்னிடத்தில் பங்கில்லை” என அவர் கூறினார். இயேசு பரலோகத்திற்கு ஏறிய பிறகு, இயேசு ஏன் தம் கால்களைக் கழுவினார் என்பதை பேதுருவும் மற்ற சீடர்களும் புரிந்து கொண்டனர், மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அதிக உணர்த்துதலுடன் விசுவாசிக்கவும் பிரசங்கிக்கவும் தொடங்கினர்.
இயேசுவின் ஞானஸ்நானத்தில் உள்ள இந்த சத்தியத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளவில்லையெனில், விசுவாச வாழ்வை வாழுவது மிகக் கடினமானதாக உணர்வதுடன், அவரை விட்டு விலகவும் செய்வர். நாம் நமது பலவீனங்களால் கட்டப் பட்டிருந்தால், இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியாததால், நம் மனசாட்சியும் நம் திறமையின்மையால் அழிந்து போயிருக்கும், இந்த அழிந்து போன மனசாட்சியினால், நம்மால் சபைக்கு வருவது முடியாமல் போய்விடும். இது நம் குழந்தைகள் உட்பட அவருடைய சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்மையானதாகும்.
சகோதர சகோதரிகளே, நீங்கள் பாவத்தால் கட்டப் பட்டிருந்தால், உங்களால் கர்த்தரை ஆராதிக்க முடியுமா? இன்று, மறுபடியும் பிறவாதவர்கள் கூட ஆலயத்திற்குச் சென்று, தன் பாவங்களுக்காக மனம் வருந்தி ஜெபித்து, கர்த்தரை ஆராதிக்கிறார்கள், இயேசுவை அவர்கள் வெறும் மதமாக கருதுவதினாலேயே இப்படிச் செய்கிறார்கள்.
ஆனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள், தம் பலவீனத்தினால், தம் ஆத்துமாக்களில் பாவம் இருப்பதாக உணர்ந்தால் அதனால் கட்டப்பட்டவர்களாய், கர்த்தருக்கு முன்னதாக வந்து அவரை ஆராதிக்க முடியாது. இத்தகைய நேரங்களில், இயேசு பெற்ற ஞானஸ்நானத்தில் உள்ள வல்லமையை விசுவாசிப்பதுடன், தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக நமது ஆத்துமாக்களை கழுவ வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த அறிவில்லாத சாதாரன கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தின் பாதையும் தெரியாது, ஆகவே மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலமாக குருட்டுத் தனமாக தம் பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடுகிறார்கள். “நான் உன்னைக் கெஞ்சுகிறேன், என்பாவங்களை மன்னித்து, என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாயாக. நான் எதை வேண்டுமானாலும் செய்கிறேன்; நான் அதிக காணிக்கைகளைத் தருவேன், நான் நல்ல காரியங்களைச் செய்வேன்; தயவு செய்து என் பாவங்களை மன்னிப்பாயாக” என்று உலகின் மதங்களைப் பின்பற்றுபவர்கள் தம் தெய்வங்களுக்கு அடிபணிந்து கூறுகின்றனர். இத்தகைய சாதாரன கிறிஸ்தவர்கள் தாம் உருவாக்கிய ஒரு மதத்தினைப் பின்பற்றுகிறார்கள்.
இயேசு பேதுருவிடம் கூறினார், “நான் இப்போது செய்வதை நீ அறியமாட்டாய், ஆனல் பிறகு இதனை அறிந்து கொள்வாய். நான் உன்னைக் கழுவவில்லை என்றால், எனக்கும் உனக்கும் பங்கில்லை.” இந்த வார்த்தையில் மறைந்திருந்த சத்தியத்தை இயேசுவின் சீடர்கள் உணர்ந்திராவிட்டால் இயேசுவால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் அவர்கள் மறுபடியும் பிறந்திருக்க மாட்டார்கள், மற்றவர்களை பாவத்திலிருந்து இரட்சிக்கும் செயலையும் செய்திருக்க மாட்டார்கள். பேதுருவின் கால்களை இயேசு கழுவும் போது, அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் வல்லமையின் மூலம் கிட்டும் நிறைவான இரட்சிப்பைக் குறித்து இயேசு அவன் மனதில் விதைத்திருக்கா விட்டால், அவனால் இரத்தசாட்சியாக மரித்திருக்கவும் முடியாது, கர்த்தரின் ஆலயத்தின் தலைவன் என்ற பொருப்பையும் நிறைவேற்றியிருக்க முடியாது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகிய சத்தியம் இருந்திராவிட்டால், நம்மிடம் பாவம் இருப்பதால் கர்த்தருக்கு முன்னதாக நாம் வந்து அவரை ஆராதிக்கவும் முடியாது, ஏனெனில் நாம் தொடர்ந்து பாவம் செய்கிறவர்களாய் இருக்கிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களுக்கு சுத்தமாக மன்னிக்கப்பட்டவர்களால் அவருடைய ஆலயத்திற்கு வரமுடியும். அவர்கள் எங்கிருந்தாலும் விசுவாசத்தினால் தம் பாவங்களைக் கழுவமுடியும். தம்முடைய முழுச்சரீரமும் சுத்தமானவர்கள் தம் கால்களை மட்டும் கழுவினால் போதும் என்று தேவன் கூறியதைப் போல, நம்முடைய பலவீனங்களினால் பாவம் செய்யும் போது, அத்தகைய பாவங்களும் கூட, இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவரின் மீது சுமத்தப் பட்டது என்பதை நினைவு கூற வேண்டும்.
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்கள் அவரின் மீது சுமத்தப்பட்டன (மத்தேயு 3:15). நம்முடைய இருதயங்களில் உள்ள பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப் பட்டால், நம்மிடம் இன்னமும் பாவங்கள் இருக்குமா, இருக்காதா? நம்மிடம் பாவம் இல்லை. இயேசுவின் ஞானஸ்நானம் மூலமாக ந்ம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது ஒரே தரமாக சுமத்தப் பட்டதால், நாம் சுத்தமானவர்கள் ஆனோம், ஏனெனில் நமது பாவங்கள் விசுவாசத்தினால் துடைக்கப் பட்டன, நாம் சுத்தமானவர்களாய் இருப்பதினாலே, நாம் எத்தனைக் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும், கர்த்தருக்கு முன் நாம் ஆசாரியர்களாகவே இருக்கிறோம். இதனாலேயே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் தம் பலவீனத்தை விட்டு சீக்கிரமாக வெளியே வரமுடிவதுடன் விசுவாசத்துடன் கர்த்தருக்கு முன்னதாக செல்லமுடிகிறது, மேலும் அவருடைய செயல்களை விசுவாசத்துடன் செய்ய முடிகிறது, அவர் கொடுத்த இரட்சிப்பிற்காக அவருக்கு நன்றி கூற முடிகிறது, அவரைத் துதிக்கவும் மகிமை அளிக்கவும் முடிகிறது, மேலும் மற்றவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பரப்பவும் முடிகிறது.
“நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” நீங்கள் முதன் முதலாக பாவமன்னிப்பைப் பெற்றபோது இந்த சத்தியம் உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஆயினும், இந்த போதகத்தை நாம் அனைவரும் கேட்டும் அதனை அறிந்து கொண்டோம். நானும் நீங்களும் அன்றாடம் பாவம் செய்து, நமது குறைபாடுகல் வெளிப் பட்டாலும், பேதுருவின் கால்களை இயேசு கழுவியதைப் போல, நம்முடைய கால்களையும் கூட அவர் அனுதினமும் கழுவுகிறார்.
தொடக்கத்தில், நம்முடைய இருதயங்களில் உள்ள பாவங்களும், அன்மையில் நாம் செய்த பாவங்களும், இயேசுவின் மீது சுமத்தப் பட்டது என்பதை அறிந்து அதனை முதலில் விசுவாசித்த போது நாம் மிகவும் மகிழ்ந்தோம், நாம் பாவமன்னிப்பைப் பெற்ற பிறகும், நம்முடைய குறைபாடுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதையும், நம்முடைய பலவீனத்தால் எப்படிக் கட்டப் பட்டிருக்கிறோம் என்பதையும் நாம் கண்டோம். அத்தகைய சமயங்களில், இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலம் அத்தகையப் பாவங்களையும் கூட ஏற்றுக் கொண்டார் என்பதை அறிந்து விசுவாசிப்பதின் மூலம், நம்முடைய எதிர்காலத்தில் நாம் செய்யப் போகும் பாவங்களைக் கூட அவர் மீது சுமத்த முடியும்.
இப்படி இருப்பதினாலே நீதிமான்கள் எக்கவலையும் இன்றி பாவம் செய்யமுடியுமா? அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். ரோமர் 1:17 கூறுகிறது, “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” “நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக” (ரோமர் 3:8) என பொருளில்லாது கூறி சில மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எதிர்த்து நிற்கின்றனர். பாவமன்னிப்பு பெற்ற பிறகு மறுபடியும் பிறந்தவர்களால் கவலையற்று பாவம் செய்யமுடியுமா? அப்படி முடியாது!
சகோதரர்களே, சகோதரிகளே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மை நாமே பார்க்கும் போது, நம்மிடம் பாவங்கள் இருக்கின்றனவா, இல்லையா? நம்மிடம் இல்லை! மேலும் நாம் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும், விசுவாசத்தினால் நாம் நிறைவானோமா இல்லையா? நாம் நிறைவானோம். நம்முடைய சரீரங்கள் சுத்தமாயிருக்கின்றன என இயேசு நம்மிடம் கூறியபோது, அவருடைய ஞானஸ்நானம், இரத்தம், உயிரோடெழும்புதல் ஆகியவற்றின் மூலமாக நம்மை நன்கு சுத்தமாக்கியதாக பொருள்படும் படிக் கூறினார்.
இயேசுவை விசுவாசித்த பிறகு, நாமும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையை அறிந்தோம். மேலும், இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையை நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டும். இந்த விசுவாசத்தை நாம் அன்றாடம் கடைப் பிடிப்பதின் மூலம், இதனை எத்தனை நாட்கள் தொடருவது என குழம்பி, அதின் பொருட்டு களைப்படைவோம். ஆனால், இந்த நொடியில், நாம் எங்கு மீண்டுமாக திரும்பவேண்டும்?நம்மால் நம்முடையப் பாவங்களுக்காக மரிக்க முடியாவிட்டாலும் கூட, தேவன் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததின் மூலம் நம்மை இரட்சித்தார் என்பதை விசுவாசித்து நாம் தேவனிடம் திரும்பவேண்டும்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தில் ஆசாரியர்கள் அன்றாடம் சர்வாங்க தகன பலியைக் கொடுக்க வேண்டும் என்பதையும், ஒவ்வொருமுறையும் வெண்கலப் பாத்திரத்தைக் கடக்கும் போதும் அதில் தம் கைகளையும் கால்களையும் கழுவ வேண்டும் என்பதையும் நினைவில் வைத்திருங்கள். அவர்களைப் போல, தேவனின் முதலாவது அன்பை எண்ணியவர்களாய், நம் விசுவாசத்தினால் அதனை அசை போடவேண்டும். அடிப்படையாக நாம் மரிப்பதை தவிர்க்க முடியாது, ஆனால் நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு அவற்றைக் கழுவினார், மேலும், சிலுவையில் நமது பாவங்களுக்காக தீர்க்கப் பட்டதின் மூலமாக, பாவ ஆக்கினையை முடிவிற்கு எடுத்து வந்தார். இப்படியாக, தேவனின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மூலமாக, அவர் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும், ஆக்கினையில் இருந்தும் நிறைவாக இரட்சித்தார்.
மரிப்பதை தவிர்க்க முடியாத நம்மை இரட்சித்த இந்த அன்பை ஒவ்வொரு நாளும் நம் இருதயத்தில் பொறிக்க வேண்டும், மேலும் இதனை விசுவாசிக்கும் விசுவாசத்துடன் கர்த்தருக்கு முன்னதாக நாம் வரவேண்டும். மரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை, ஆனால், தேவனின் மூலமாக, நாம் நிறைவாக இரட்சிக்கப் பட்டு, கர்த்தரின் நிறைவான நீதியின் பிள்ளைகளும் ஆனோம். தேவன் நமக்கு இத்தகைய விசுவாசத்தைக் கொடுத்திருக்கையில், இந்த விசுவாசத்தை நாம் அன்றாடம் வைத்திருக்கக் கூடாதா?
பயணிகளாகிய நாம் இப்பூமியில் சிறிது காலம் தங்கியிருந்து விட்டு போய் விடுகிறோம். “பயணிகள்” என்ற சொல்லின் பொருள் பயணம் செய்பவர்கள் என்பதாகும். பயணம் செய்பவர்கள் என்பதன் பொருள் ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்பவர்கள் என்பதாகும். நாம் ஒரு குறுகிய காலம் மட்டுமே இருக்கும் பயணிகள் ஆவோம், அங்கே நம்முடைய கடமைகள் முடிந்தவுடன் இன்னொரு இடத்திற்குப் போய்விடுகிறோம். ஒரு குறுகிய காலம் இந்த உலகத்தில் வாழ்ந்த பிறகு, பரலோக ராஜ்யத்திற்கு திரும்ப வேண்டிய பயணிகள் நாம் ஆவோம். இந்த உலகத்தைக் கடந்து, பரலோக ராஜ்யத்திற்குச் செல்லவேண்டிய பயணிகளாக நாம் வாழும் போது, நாம் அதனை விட்டு விட்டு பூமியில் தலை குப்புற விழுகிறவர்களாய் இருக்கிறோம். நீங்களும் கூட, ஆவிக்குரிய படியும், மாமிசத்திற்குரிய படியும் தலை குப்புற விழுந்து முடிவுக்கு வர விரும்புவீர்கள். இத்தகைய நேரங்கள் வரலாம், ஏனெனில் நீங்கள் நல்லவராக இருந்தாலும் கூட, உங்கள் சூழ்நிலைகள் நல்லவையாக இல்லாமல் இருக்கலாம், அல்லது உங்கள் சூழ்நிலைகள் நல்லவையாக இருந்தாலும், உங்கள் மாமிசத்தின் சிந்தனைகள் உங்களைத் தொடர்ந்து வதைக்கலாம்.
இதனைப் போல இருப்பவர்களுக்கு நம் தேவன் ஒரு வார்த்தையைக் கொடுத்திருக்கிறார், அது நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. “நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய்” ஆம், நாம் இப்போது அறிவோம். நாம் பயணிகளைப் போல வாழுகையில், நம்முடைய அநேக குறைபாடுகள் வெளிப்படும் போதும், எப்போதெல்லாம் நமது பலவீனத்தாலும் சூழ்நிலைகளாலும் கட்டப் படும்போதும், இத்தகையவைகளையும் துடைத்த இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து முழுமையான பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதை நாம் நினைவு கூறவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததின் மூலமாக பாவமன்னிப்பை நாம் நிறைவாகப் பெற்றுக் கொண்டோம்.
ஆசரிப்புக் கூடாரத்தை நாம் பார்க்கும் போது, அது எத்தனை விரிவானது என்பதை நாம் கண்டு கொள்ளலாம். சர்வாங்க தகன பலிபீடம் அறிவிப்பதைப் போல, பாவத்தின் தண்டனை மரணமாகும். நாம் அன்றாடம் பாவம் செய்வதால், நாம் ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டு, இந்த நம் பாவங்களுக்காக அன்றாடம் நாம் மரணத்திற்குள்ளாக வேண்டும். இயேசு கிறிஸ்து பலியாட்டுக் குட்டியாக வந்து, கைவைக்கப்பட்டு, நம்முடைய இடத்திலிருந்து மரித்தார் என்பதை சர்வாங்க தகன பலிபீடம் அறிவிக்கிறது. சர்வாங்க தகன பலிபீடத்தைக் கடந்து செல்லுகையில் வெண்கலப் பாத்திரம் தோன்றுகிறது, நாம் அன்றாடம் செய்யும் நம்முடைய பாவங்களைக் கழுவ இங்கே நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அசைப் போட வேண்டும். நம்மை நம் மூல மற்றும் சொந்தப் பாவங்களில் இருந்து கழுவியது இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியான தெளிவான சத்தியமே.
நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவில் காணப்படும் கர்த்தரின் பரிசு என்ன? அது பாவமன்னிப்பும் நித்திய ஜீவனும் இல்லையா? தேவன் நம்மை நிறைவாக இரட்சித்தார். நம்முடைய பாவங்களினிமித்தம் எந்நேரமும் மரிக்க வேண்டியவர்களாகிய நம்மை முழுமையாக அவர் இரட்சித்தார். நீர் மற்றும் ஆவியில் உள்ள நமது விசுவாசத்தினாலும், வார்த்தையினாலும், நாம் நம் வாழ்நாள் முழுவதும் செய்த எல்லாப் பாவங்களையும் தேவன் கழுவி விட்டதால், அவர் நம் கால்களையும் கூட கழுவினார். தேவன் ஞானஸ்நானம் பெற்றபோது நம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டதால், இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களைச் சுமந்தவராய், சிலுவையிலே ஆக்கினைக்குள்ளாகி மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, அதன் மூலமாக நம் நிறைவான இரட்சகராயினார். இந்த இயேசு கிறிஸ்துவை நாம் முழுமையாக விசுவாசித்து நாமும் முழுமையானோம். நம்முடைய மாமிசம் குறைவுற்றதாயிருந்தாலும், நம்மிடம் நிறைவான விசுவாசம் இருப்பதினால், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுடைய வாழ்வைப் பெற்றவர்களாய், கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம்.
நீங்கள் இப்போது பேதுருவைப் போல இல்லையா?
இயேசு பேதுருவின் கால்களைக் கழுவியதைப் போல, உங்கள் கால்களையும் அவர் கழுவ வில்லையா? இயேசு நம் கால்களை ஒவ்வொருநாளும் கழுவுவது சரியானதே. இதனால் தான் இயேசு தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு, இப்பாவங்களுக்காக, நம்முடைய இடத்திலிருந்து அவர் சிலுவையில் மரித்தார். மேலும், அவர் மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். இதுபோலவே தன்னுடைய ஞானஸ்நானம், அவரின் சிலுவை இரத்தம், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக, இயேசு நமது நிறைவான இரட்சகரானார். நாம் இந்த இயேசு கிறிஸ்துவை முழுவதுமாக விசுவாசிக்கிறோம்.
விசுவாசத்தினாலேயே கர்த்தரை நாம் முழுமையாக ஆராதிக்கிறோம், மேலும் விசுவாசத்தினாலேயே அவருடைய செயல்களை முழுமையாக நாம் செய்கிறோம். நம்முடைய செயல்கள் நிறைவானவை அல்ல. நம்மை நிறவானவர்களாக்குவது நம்முடைய விசுவாசம் மட்டுமே. இதனாலேயே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்த இயேசுவின் சீடர்களைப் போல நாமும் வாழ வேண்டும். நாம் விசுவாசத்தின் நித்திய மரணத்திற்குள் செல்பவர்கள் அல்ல. நாம் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும், விசுவாசத்தினால் ஓடமுடியும், விசுவாசத்தினால் நாம் இன்னமும் அதிகமாக ஓடவேண்டும். “நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்.” “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” விசுவாசத்தினால் நாம் நல்லவர்களானோம் என்பதால் மற்ற மக்களின் ஆத்துமாக்களையும் இரட்சிக்கவேண்டியிருக்கும் போது, மற்றவர்களை இரட்சிக்கும் கர்த்தர் அளித்த செயலில் ஈடுபடாவிட்டால், மரணக் குழிக்குள் நாம் விழுந்து விடுவதோடு, சஞ்சலம் உள்ளவர்களாய், நம்முடைய பாவங்களில் மரித்துப் போவோம்.
அவருடைய நீதியின் செயல்களைச் செய்கையில் பாவமற்றவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மற்ற ஆத்துமாக்களை இரட்சிக்கும் கர்த்தரின் நற்செய்தியை பரப்புவதில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் பாவிகள் நல்லவற்றைச் செய்தாலும் அதில் மகிழுவதில்லை. ஏனெனில் பாவ மன்னிப்பைப் பெற்றவர்கள் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களும் அவர்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாகும். நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதே மற்ற ஆத்துமாக்களை இரட்சிக்கும் சரியான செயலாகும், ஆனால் அதே வேளையில், அதுவே நமது ஜீவ அப்பமுமாக இருக்கிறது. சரியானவைகளைச் செய்வதின் மூலமாக, நமது இருதயங்கள் ஆவியால் நிரம்புகின்றன, மேலும் புதிய பலம் நம்முள் ஊற்றெடுக்கிறது. நம்முடைய ஆத்துமாக்கள் வளர்ந்து பக்குவமடையும் போது, நாம் தைரியசாலிகளாகிறோம். ஆகவே ஆபிரகாமைப் போல வாழுவதற்கும், கர்த்தரால் ஆசீர்வதிக்கப் படுவதற்கும் இந்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கும், சரியானவற்றை நேசிப்பதற்கும், நற்செய்தியைப் பரப்புவதை நேசிக்கிறோம். நாம் பலவீனராயிருந்தாலும் நாம் இந்த நீதியின் காரியங்களைச் செய்யவில்லை எனில் நம்முடைய ஆத்துமாக்கள் சாகும். அவருடைய நீதியின் செயல்களைச் செய்வதை நிறுத்தினால், ஆவிக்குரிய விதமாக நாம் நிச்சயமாக மரிப்போம். இதனால் தான் இயேசு கூறினார், “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” (மத்தேயு 5:6).
இயேசு மேலும் கூறினார், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத்தேயு 5:8). பாவமன்னிப்பைப் பெற்று, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் முற்றிலுமாக கழுவி விட்டார் என்பதை விசுவாசிப்பவர்கள் கர்த்தரைக் காணுவார்கள். அவர்கள் கர்த்தரை விசுவாசித்து, அவரைப் பின்பற்றி, பரலோக ஆசீர்வாதங்களை முழு உலகமும் பரப்புவார்கள்.
விசுவாசத்தினால் நாம் நிறைவானவர்களானோம். நம்முடைய பாவங்களுக்காக மரணத்தைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தோம், ஆனால் தேவன் உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய இடத்திலிருந்து சிலுவையில் அறையப் பட்டு, இதன் மூலமாக நம்மை நிறைவாக இரட்சித்தார். இதுவே சத்தியமாகும், இதுவே பரலோக ராஜ்யத்திற்கான வழியுமாகும். இதனை அறிந்து கொள்வது, விசுவாசத்தின் பாதையை அறிந்து கொள்வதாகும். இதைத்தவிர வேறு வழிகளில்லை. நம்முடைய நற்செயல்களால் பரலோகத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியாது. தேவன் நமக்காக செய்தவைகளை அறிந்து அதனை விசுவாசிப்பதின் மூலமே, பரலோகத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும்.
பொதுவாக மக்களை இரண்டு விதமாக நாம் பிரிக்க வேண்டுமானால், நன்மைக்காக பயன் பட்டவர்கள் ஒரு பக்கத்திலும், தீமைக்காக பயன் பட்டவர்கள் ஒரு புறத்திலும் இருப்பர். தீமைக்காக பயன் பட்டவர்கள் பாவமன்னிப்பைச் சரியாக பெற்றவர்கள் அல்ல. தேவன் நமக்காக செய்தவற்றை விசுவாசித்ததின் மூலமாக, நீதியின் கருவிகளாக நாம் மாறினோம், ஆனால், பாவமன்னிப்பைச் சரிவர பெறாதவர்களால், தாம் விரும்பாவிட்டால் கூட, சாத்தானின் கருவிகளாக செயல் படுவதைத் தவிர்க்க முடியாது.
கர்த்தர் தன்னுடைய நிறைவான இரட்சிப்பையும், நிறைவான விசுவாசத்தையும், நிறைவான பாவமன்னிப்பையும் நமக்கு அளித்துள்ளார் என இந்த நேரத்தில் என்னால் உறுதியாக கூற முடியும். இந்த நற்செய்தியை நீங்கள் விசுவாசித்த போதிலும் உங்கள் செயல்கள் குறைபாடுடையதாக இருக்கிறதா, மேலும், ஏதேனும் காரணம் பற்றி உங்கள் இருதயம் இதனால் கவலை அடைகிறதா? அப்படியிருக்கத் தேவையில்லை, ஏனெனில் நீதிமான் விசுவாசத்தினால் பிழைக்கிறான். நம்முடைய குறைபாடுகளையும் பலவீனங்களையும் அறிந்துள்ள நமது தேவன், இவை அனைத்தையும் தன் ஞானஸ்நானத்தின் மூலம் தன்மீது ஏற்றுக் கொள்ளவில்லையா?
நாம் எத்தனைக் குறைபாடுடையவர்கள் என்பதைக் காட்டுவதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். சிலவேளைகளில் கால்பந்தை ஒன்றாக விளையாடுகிறோம். என்னுடைய குழுவினர் சிக்கலில் இருக்கும் போது, பந்து வேகமாக இலக்கை நோக்கி வருகையில், அதனைப் பற்றிக் கொள்வேன் அல்லது வேகமாக உதைத்து விடுவேன். நான் கோல் கீப்பரா? அப்படி இல்லை. வெற்றி பெற வேண்டும் அவ்வளவே. இத்தகைய ஒரு சூழ்நிலையில் நாம் அனைவரும், ஊழியர்கள் பரிசுத்தவான்கள், கர்த்தரின் சேவகர்கள் அனைவரும் வெற்றி பெறுவதையே நோக்கமாக கொண்டிருப்பர். இந்த விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், திருட்டுத்தனமாக விளையாடுகிறோம். இந்த விளையாட்டு மிகவும் பயங்கரமாக விளையாடப் படுகிறது, ஏனெனில் ஒவ்வொருவரும் வெற்றியை விரும்புகின்றனர், எனவே அனைவரும் வெற்றி பெறுவதற்கான அனைத்தையும் செய்கின்றனர், இது மனிதர்களின் பன்பை மிகவும் தெளிவாக காட்டுகிறது, இதற்கான சிறந்த உதாரணம் கால்பந்தாட்டத்தை விட வேறில்லை. நம் குழு சிக்கலில் இருக்கும் போது, தவறான நடவடிக்கைகளில் இறங்குவதை நாம் தவிர்க்கமாட்டோம், தந்திரங்கள் செய்வோம், நமது முறை சரியானது என்போம்.
நமக்கு இவைகள் எல்லாம் சரியெனத் தோன்றுகிறது, ஆனால் அடுத்த குழுவினர் தவறு செய்தால், நாம் கத்துகிறோம், மஞ்சள் அட்டையைக் கொடுக்கும் படி விளையாட்டின் நீதிபதியிடம் கூறுகிறோம், ஆனால், அவரின் தீர்ப்பிற்கு எவ்வித மதிப்பும் அங்கே இருக்கப் போவதில்லை. நாம் இப்படித்தான் இருக்கிறோம். நமக்கு எல்லாம் சாதகமாக இருப்பதையே நாம் விரும்புகிறோம், நமது குழு, நாம், ஆகிய நாம் மட்டுமே ஆதாயங்களைப் பெற விரும்புகிறோம். ஆயினும் நம்மைப் போன்ற மக்களையும் கர்த்தர் இரட்சித்தார். நாம் முழுக்க முழுக்க களங்கமுடையவர்களாயும், அக்கிரமச் செய்கைக் காரராகவும் இருந்தாலும், நம்முடைய விசுவாசத்தைப் பொறுத்தவரை, களங்கமில்லாத மறுபடியும் பிறந்தவர்களாக நாம் மாறினோம்.
நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நம் தேவன் நம்மை முற்றிலுமாக இரட்சித்தார். இதனால் தாம் தேவனை நாம் இரட்சிப்பின் கர்த்தர் என அழைக்கிறோம், அவர் இரட்சிப்பின் கர்த்தராகிய தேவன். தேவன் நம் இரட்சிப்பின் கர்த்தராவார். பேதுரு அறிவித்தான், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (மத்தேயு 16:16) அவனுடைய விசுவாசமானது கர்த்தரால் கொடுக்கப் பட்டது என தேவன் அதனை அங்கீகரித்தார். இங்கே கிறிஸ்து என்பதின் பொருள், பாவங்களைத் தனது சரீரத்தில் சுமந்து அவற்றை அழித்தவர் என பொருள்படும். இயேசு கிறிஸ்து வாழும் கர்த்தரின் குமாரராவார். கர்த்தரின் குமாரராகவும் நம்முடைய இரட்சகராகவும் இருக்கும் அவர், நம்மை நிறைவாக இரட்சித்தார். ஆகவே நற்செய்திக்கு ஊழியம் செய்ய நீங்கள் மிகவும் குறைபாடுடையவர்களாயும், பலவீனர்களாயும் உணர்ந்தாலும் உங்கள் இருதயம் திடமானதாய் இருக்கட்டும்.
உங்கள் ஆத்துமாக்களும், இருதயங்களும், சரீரங்களும் பின்னடைந்து நின்று விடக் கூடாது; மாறாக, அவற்றை விசுவாசத்தினால் செவ்வைப் படுத்தி உறுதியாக்குங்கள், மேலும் கர்த்தர் கொடுத்த நற்செய்தியை அகலமாகவும் உயரமாகவும் பரப்பும் பெரிதான நீதியின் மக்களாகுங்கள். என்னைப் பாருங்கள். காட்டிக் கொள்வதற்கு என்னுடைய மாமிசத்தில் எதுவும் இல்லை, ஆனால் நற்செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்கு நான் முயற்சி செய்யவில்லையா? நீங்களும் அதுபோல் செய்வதில்லையா? குறைபாடில்லாதவர்களாக தோன்றுகிறவர்களிடம் எத்தகைய குறைகளும் இல்லை என எண்ணாதீர்கள். பாவிகள் கபடர்களாயிருக்கிறார்கள். கபடர்களும் கூட உங்களைப் போன்ற மனிதர்களே, அப்படியிருக்க அவர்களின் மாமிசம் எப்படி நல்லதாகவும், மதிப்பு மிக்கதாகவும், சுத்தமானதாகவும் இருக்க முடியும்? எப்போதுமே குறைபாடுடையதாயிருப்பது மனிதர்களின் மாமிசம் மட்டுமே. குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தில் தாம் நல்லொழுக்கம் உடையவர்களாய் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், தம்முடைய கபட்டுத்தனத்தையும், ஏமாற்றுத் தனத்தையும் காட்டிக் கொள்கிறார்கள்.
நம் கர்த்தர் நம்மை நிறைவாக இரட்சித்தார். ஆகவே நம்மை நிறவானவர்களாக்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியும், அது நம்மை கர்த்தரின் நிறைவான நீதியினால் வல்லமையை அளித்தது. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட நம்மை ஏதுவாக்கிய கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம், பூமியின் தோற்றத்திற்கு முன்னரே இரட்சிப்பின் சத்தியத்தை அவர் திட்டமிட்டார். இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்திய போதே உங்கள் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இந்த சத்தியத்தை நீங்கல் எல்லாம் விசுவாசிப்பீர்கள் என நம்புகிறேன்.