• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-12] பரிசுத்த ஸ்தலத்தின் திரைகளும் தூண்களும் (யாத்திராகமம் 26:31-37)

(யாத்திராகமம் 26:31-37)
“இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும். மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக; திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.”
 
 
பரிசுத்த ஸ்தலம்
 
பரிசுத்த ஸ்தலத்தின் தூண்கள் மற்றும் அதன் திரைச்சீலையின் நிறங்கள் ஆகியவற்றிலுள்ள ஆவிக்குரிய பொருளை தியானிக்க நான் விரும்புகிறேன். இங்கு நாம் காணும் ஆசரிப்புக் கூடாரத்தின் நீளம் 13.5 மீட்டர்களாகவும் (45 அடிகள்), அகலம் 4.5 மீட்டராகவும் (15 அடிகள்) இருந்தது, மேலும் இது இரண்டு அறைகளக பிரிக்கப்பட்டிருந்தது, ஒன்று பரிசுத்த ஸ்தலமாகும், மற்றது மகா பரிசுத்த ஸ்தலமாகும். பரிசுத்த ஸ்தலத்தினுள் விளக்குத் தண்டும், அப்ப மேஜையும், தூபபீடமும் இருந்தன, அதேசமயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப் பெட்டியும் கிருபாசனமும் இருந்தன.
பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் உடைய இந்த ஆசரிப்புக் கூடாரமானது 70 செ.மீட்டர் (2.3 அடிகள்) அகலமும் 4.5மீட்டர் (15 அடிகள்) உயரமும் உடைய சீத்திம் மரப் பலகைகளினால் சூழப் பட்டிருந்தது. ஆசரிப்புக் கூடார வாசலில் சீத்திம் மரத்தூண்கள் ஐந்து பொன்னினால் மூடப்பட்டு அங்கே வைக்கப்பட்டிருந்தன. வெளிப்பிரகாரத்தில் இருந்து இந்த ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையப் பயன் பட்ட கதவும் கூட, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரைச்சீலையால் உருவாக்கப் பட்டது.
ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்தில், ஒவ்வொன்றும் 2.25 மீட்டர் (7.5 அடிகள்) உயரமுடைய அறுபது தூண்கள் நின்றிருந்தன. கிழக்குப் பக்கத்தில் ஒருந்த வெளிப்பிரகாரத்தின் வாசலும் கூட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்தது, இந்த வெளிப்பிரகாரத்தின் ஒரே வாசலின் மூலமாகவே ஒருவனால் ஆசரிப்புக் கூடார பிரகாரத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது. இந்த ஆசரிப்புக் கூடார பிரகாரத்திலேயே சர்வாங்க தகன பலிபீடமும் வெண்கல பாத்திரமும் இருந்தன.
இவை இரண்டையும் கடந்தபிறகு, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு வரமுடியும், இதன் உயரம் 4.5 மீட்டர் (15 அடிகள்) ஆக இருந்தது. ஆசரிப்புக் கூடார கதவில் ஐந்து தூண்கள் இருந்தன, அவற்றின் பாதங்கள் வெண்கலத்தால் ஆனவை. ஆசரிப்புக் கூடார வெளிப்பிரகாரத்தின் வாசலைப் போலவே, இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் கதவும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு, ஐந்து தூண்களுக்கு மேலே உள்ள பொன் கொக்கிகளில் தொங்கவிடப்பட்டது. இந்த திரைச்சீலையானது ஆசரிப்புக் கூடாரத்தின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இரண்டாக பிரித்தது.
 
 
ஆசரிப்புக் கூடார கதவின் தூண்களை நாம் முதலாவதாக காண வேண்டும்
 
ஆசரிப்புக் கூடார கதவிலுள்ள ஐந்து தூண்களின் உயரமானது 4.5 மீட்டராய் (15 அடிகள்) இருந்தது. இந்த தூண்களின் மீது, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரைச்சீலைத் தொங்கவிடப்பட்டது.
முதலாவதாக, ஆசரிப்புக் கூடார வாசலில் இருந்த ஐந்து தூண்களின் உயரமானது 4.5 மீட்டர் (15 அடிகள்) உயரமாயிருந்தது என்பதைக் குறித்து ஆராய்வோம். இதன் பொருள் என்ன? நம்முடைய பாவங்களைத் துடைத்து நம்மை அவரின் பிள்ளைகளாக்குவதற்கு, கர்த்தரே மிகப்பெரிய பலி காணிக்கையைக் கொடுத்தார் என்பதே இதன் பொருளாகும். அடிப்படையில் பார்க்கும்போது, நீங்களும் நானும் குறைபாடுடையவர்களாயும், பலவீனர்களாயும் இருப்பதினால், அநேக மீறுதல்களைச் செய்பவர்களாக நாம் வாழ்ந்து வருகிறோம். நீங்களும் நானும் பாவிகளாய் இருப்பதினாலும், நாம் இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நொடியிலும் பாவம் செய்வதைத் தவிர்க்கமுடியாததினாலும், நம்மிடம் பல களங்கங்களும், மீறுதல்களும் இருக்கின்றன. இத்தகைய களங்கங்களிலிருந்தும், உலகின் பாவங்களிலிருந்தும் நம்மை விடுதலைச் செய்ய, கர்த்தர் தனது ஒரே பேறான குமாரரை, நமது பாவங்களுக்கான கிரயமாக பலி காணிக்கை கொடுத்தார் என்பதையும், இதன் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களில் இருந்தும் அவர் நம்மை விடுதையாக்கினார் என்பதையும், ஆசரிப்புக் கூடாரத்தின் இந்த தூண்கள் நமக்குக் காட்டுகின்றன.
வேறு வார்த்தைகளில் கூறினால், நமது களங்கங்களுக்கும், இப்பூமியில் நாம் செய்யும் பாவங்களுக்கும், கர்த்தருக்கும் முன்பாக, தனது சொந்த சரீரத்தையே, இயேசு கிறிஸ்து பலி காணிக்கையாக கொடுத்து, பாவத்திற்கான கிரயத்தை தேவைக்கு அதிகமாகவே கொடுத்து, இதன் மூலமாக நம்மை இரட்சித்தார். ஒரு மனிதன் ஒரு மீறுதலைச் செய்து, தேவனுடைய பரிசுத்த காரியங்களில் தற்செயலாக ஒரு பாவத்தைச் செய்யும்போது, அவன் ஒரு ஆட்டுக் கடாவை மீறுதல்களின் காணிக்கையாக எடுத்து வர வேண்டியிருந்தது, மேலும் அதனுடன் ஐந்தில் ஒன்றைச் சேர்த்து ஆசாரியர்களிடம் கொடுக்க வேண்டியிருந்தது (லேவியராகமம் 5:15-16). இதன் பொருள் என்னவெணில், உங்களையும் என்னையும் பாவங்களிலிருந்து இரட்சிக்க இயேசு கிறிஸ்து தன்னையே கொடுத்து, தேவைக்கு அதிகமாகவே நமது பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்திவிட்டார். நமது பாவங்களைத் துடைக்கவும், நமது எல்லாப் பாவங்களுக்குமான மீறுதலின் காணிக்கையைச் செலுத்த தம்மைக் கொடுக்கவும் நம் தேவன் இப்பூமிக்கு வந்தார்.
தகன காணிக்கை, பாவ காணிக்கை, சமாதான காணிக்கை போன்ற வேதாகமத்தின் பலி காணிக்கைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டதின் மூலம், மக்களால் தமது பாவங்களை அழிக்க முடிந்தது, இப்படிச் செய்ய பலி காணிக்கை மீது கைகளை வைத்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தினர். இத்தகைய காணிக்கைகளில், மீறுதல்களின் காணிக்கையானது ஒருவனின் களங்கங்களை துடைப்பதற்காக கொடுக்கப்படும் பலி காணிக்கையாகும். அறியாமையினால் மற்ற ஒருவரைத் துன்பத்திற்குள்ளாக்கியதற்காக, பாதிக்கப் பட்டவருக்கு ஈடு செய்யவும், அவர்களின் உறவை சீர்படுத்தவும் மீறுதலின் காணிக்கைக் கொடுக்கப் பட்டது. மேலும் மீறுதலின் காணிக்கையில் 20 சதவீத சேதாரத்திற்கான விலையும், சேதாரமும், தண்டமும், ஈடும் உள்ளடங்கியது. மீறுதல்களின் காணிக்கைக்கான அடிப்படைத் தேவை இதுவேயாகும். ஒருவன் இன்னொருவனை துன்பப்படுத்திய களங்கத்தை நிவர்த்திக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்த மீறுதலின் காணிக்கைக் கொடுக்கப் பட்டது (லேவியராகமம் 5:14-6:7).
நீங்களும் நானும் பாவத்திலிருந்து அதிகத் தொலைவில் இருக்கிறோமா? பாவம் செய்தவாறே நாம் நம் முழுவாழ்வையும் செலவு செய்வதில்லையா? நீங்களும் நானும் ஆதாமின் சந்ததியினராக இருப்பதினாலே, பாவம் செய்வதை உங்களாலும் என்னாலும் தவிர்க்க முடியாது. நம்மிடம் எத்தனைக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதும், இத்தனைப் பாவங்களைச் செய்தவாறே நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் நமக்கேத் தெரியும். ஒருவருக்கொருவர் எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் எத்தனை தீமைகளை நாம் செய்துள்ளோம்? இந்த தீமைகளை பாவங்கள் என்று உணர்ந்து கொள்ளுவதற்கு ஏற்ற அறிவில்லாதவர்களாக நாம் இருப்பதினாலே, நாம் வாழுகையில், அவற்றை அடிக்கடி மறந்து போகிறோம். ஆனால் ஒருவருக்கொருவர் எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் எத்தனைப் பாவங்களைச் செய்துள்ளோம் என்பதைக் கர்த்தருக்கு முன்னதாக உணர்ந்து கொள்வதை என்னாலும் உங்களாலும் தவிர்க்க முடியாது, ஏனெனில் நாம் அவருக்கு முன்னதாக பாவிகளாயிருக்கிறோம்.
இத்தகைய பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக, அவர்களின் மீறுதல்களின் காணிக்கையாக கர்த்தர் இயேசு கிறிஸ்துவை அனுப்ப விரும்பினார். நம்முடையப் பாவங்களுக்கான ஆக்கினையை இயேசு கிறிஸ்துவைச் சுமக்கச் செய்தும், அவர் அதற்கு கிரயம் செலுத்தியதின் மூலமாகவும், இரட்சிப்பின் ஈவைக் கர்த்தர் நமக்கு வழங்கினார். நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கவும், நம்மை தன்னுடைய சொந்த மக்களாக்கவும், பிதாவாகிய கர்த்தர் தனது குமாரரை இப்பூமிக்கு அனுப்பியதின் மூலமும், அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டதின் மூலமும், அவர் கிரியை செய்திருக்கும் போது, நம்மையும் இந்த விலையேறப்பட்ட பலி காணிக்கையையும் எப்படி நம்மால் ஒப்பிடக்கூடும்? பாவிகளாகிய நம்மை நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க, எல்லாப் பாவங்களுக்குமான கிரயத்தைச் செலுத்த நமது தேவன் பலி காணிக்கையாகி, நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். கர்த்தருடைய ஆச்சரியமான கிருபையைத் தவிர இது வேறெதுவாக இருக்க முடியும்? ஆசரிப்புக் கூடார வாசலிலிருந்த தூண்களின் உயரமானது 4.5 மீட்டர் (15 அடிகள்) இருந்தது, இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கொடுக்கப் பட்ட கர்த்தரின் அன்பைக் கூறுகிறது.
இத்தகைய ஒன்றுக்கும் உதவாத நம்மை பாவத்தின் ஆக்கினையிலிருந்து விடுவிக்க, நமது தேவன் சொந்த பலி காணிக்கையின் மூலம் இரட்சித்தார் - இந்த சத்தியத்திற்காக அவருக்கு நன்றிகள். நமது பாவங்களுக்கு ஆக்கினையாக நரகத்திற்குச் செல்வதை நம்மால் தவிர்க்க முடியாதபோது, இந்தப் பாவங்களில் இருந்து நம்மை இரட்சிப்பதற்காக தேவன் தனது சொந்த சரீரத்தையே நமக்கு கொடுத்திருக்கும்போது, அவருக்கு நன்றி கூறாமல் எப்படி இருக்க முடியும்? நாம் அவருக்கு நன்றி கூறுகிறோம்! யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலம், இயேசு நமது பாவங்களைத் தனது விலையேறப்பட்ட சரீரத்தில் ஏற்றுக் கொண்டு, சிலுவையின் இரத்தத்தின் மூலம், நமது பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி, இதன் மூலமாக நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் இரட்சித்தார். ஆகவே இந்த நற்செய்தியின் மீதுள்ள இரட்சிப்பின் மூலம் அவருக்கு நன்றி மட்டுமே கூறமுடியும். ஆசரிப்புக் கூடார வாசலிலுள்ள தூண்களில் அடங்கியுள்ள இரட்சிப்பின் பொருள் இதுவேயாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் ஐந்து தூண்களில் ஒவ்வொன்றின் உயரமும் 4.5 மீட்டராக இருந்தது. வேதாகமத்தில் “5” என்ற எண், “கர்த்தரின் கிருபையைக்” குறிக்கிறது. ஆகவே, அங்கே ஐந்து தூண்கள் இருந்தன என்பது கர்த்தர் நமக்குக் கொடுத்த இரட்சிப்பின் ஈவைக் குறிக்கிறது. நம்மை நேசித்ததின் மூலமாகவும், அவருடைய இரட்சிப்பின் அன்பினால் நம்மைத் தரிப்பித்ததின் மூலமாகவும், நாம் அவரின் சொந்தப் மக்களாக எதுவும் குறைவு படாதவாறு செய்தார். வேதாகமத்தில் பொன் என்பது கர்த்தரை விசுவாசிக்கும் நமது விசுவாசத்தைக் குறிக்கிறது, கர்த்தர் நம்மை அவரின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் இரட்சித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் தாமே இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, நம்மை முற்றிலுமாக நீதிமானாக்கினார் என்ற் விசுவாசிக்கும் “விசுவாசத்தை” பொன் என்பது குறிக்கிறது. இதனால் தான் பரிசுத்த ஸ்தலத்தின் தூண்கள் பொன் தகட்டினால் மூடப்பட்டன.
தேவன் நமக்காக ஆக்கினைக்குள்ளாகி, நமது பாவங்களுக்காக நரகம் செல்வதையும், பாவம் செய்வைதையும் தவிர்க்க முடியாத நம்மை, தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவையின் இரத்தத்தினாலும் இரட்சித்ததை, ஆசரிப்புக் கூடார தூண்களுக்கான பாதங்கள் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டன என்பது வெளிப்படுத்துகிறது. நாம் முழுக்க முழுக்க களங்கம் உடையவர்களாய் இருப்பதினாலே, நாம் எதற்கும் பெறாதவர்களாக இருந்தோம், மேலும் நம்மால் மரிப்பதையும் தவிர்க்கமுடியாது, ஆனாலும் நம்மைத் தனது மக்களாக்க, நிறைவான் பரிசுத்த கர்த்தர் தன்னையே பலி காணிக்கையாக்கினார், அவர் நம்மை விட மதிப்பு மிக்கவர், அவர் இவற்றைச் செய்ததின் மூலம், நம்மை பிதாவாகிய கர்த்தரின் பிள்ளைகளாக்கினார். இதனால் தான் இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தை பொன்னானது குறிக்கிறது. ஆசரிப்புக் கூடார வாசலின் நிறங்களை இப்படியாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும், அதனை தியானிக்க வேண்டும், அதற்கு நன்றி கூற வேண்டும், மேலும் அதனை நமது இருதயங்களின் ஆழத்தில் விசுவாசிக்க வேண்டும்.
 
 
ஆசரிப்புக் கூடார தூண்களின் வெண்கல பாதங்கள்
 
ஆசரிப்புக் கூடாரத்தில், அதன் கதவின் தூண்களுக்கான பாதங்கள் மட்டுமே வெண்கலத்தால் செய்யப்பட்டன. இப்பூமியில் நீங்களும் நானும், ஒருவருக்கு ஒருவர் எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் பாவம் செய்தோம் எனவும், அதனால் இப்பாவங்களுக்கான தண்டனையில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது எனவும் இது பொருள்படுகிறது. இந்த வெண்கல பாதங்களில் அடங்கியுள்ள சத்தியமானது சர்வாங்க தகன பலிபீடத்தைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது. ஆசரிப்புக் கூடார பிரகாரத்திற்குள் ஒரு பாவியானவன் பிரவேசிக்கும் போது, அவன் முதன் முதலாக கடந்து செல்வது, சர்வாங்க தகன பலிகள் கொடுக்கப்படும் சர்வாங்க தகன பலிபீடத்தையே ஆகும்.
“பீடம்” என்று இங்கே கூறப்படும் சொல்லின் பொருள் “ஏறுதல்” ஆகும். சர்வாங்க தகன பலிபீடமானது, பாவிகளாகிய நம்மனைவரின் பாவங்களையும் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டு, நமக்காக அவர் சிலுவையில் மரித்தார் என்பதையே குறிப்பிடுகிறது. கைவைத்ததின் மூலமாக பாவங்களை ஏற்றுக் கொண்ட பலி காணிக்கையானது அப்பாவங்களுக்குத் தண்டனையாக மரித்த இடம் இந்த சர்வாங்க தகன பலிபீடமேயாகும். சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் இந்த பலி காணிக்கைகளின் இரத்தத்தை ஆசாரியர்கள் ஊற்றினர், மீதியிருக்கும் இரத்தத்தை, கீழே உள்ள மணல்தரையில் கொட்டினர், அதன் பிறகு அவற்றின் மாமிசத்தை பீடத்தில் வைத்து நெருப்பினால் எரித்தனர். பாவங்களை ஏற்றுக் கொண்ட பலி காணிக்கை கொல்லப்பட்ட மரணத்தின் இடம் இதுவேயாகும்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலுக்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் நடுவிலே, சர்வாங்க தகன பலிபீடமானது வைக்கப் பட்டது. மேலும், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் யாரெல்லாம் பிரவேசிக்க விரும்புகிறார்களோ, முதலாவது அவர்கள் சர்வாங்க தகன பலிபீடத்தை முதலில் கடக்கவேண்டும். சர்வாங்க தகன பலிபீடத்தின் வழியாக செல்லாமல், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிப்பதற்கான வேறுவழிகளில்லை. சர்வாங்க தகன பலிபீடமானது மிகச்சரியாக இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை ஆகியவற்றின் நிழலாயிருக்கிறது என்பதை இங்கே கூறியே ஆகவேன்டும். மேலும் நமது தேவனின் ஞானஸ்நானமும் சிலுவையுமே கர்த்தருக்கு முன்னதாக பாவிகளின் மீறுதல்களை நிவர்த்தி செய்கின்றன.
எப்படி இருந்த போதிலும், முதலாவது அவர்கள் தம் பாவங்களை எடுத்து வந்து சர்வாங்க தகன பலிபீடத்தின் முன்னால் நிற்காமலும், பலி காணிக்கையானது கைவைத்தலினால் அவர்களின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டு, தனது இரத்தத்தை அவர்களுக்காக சிந்தியதின் மூலம் அவர்களை இரட்சித்தது என்பதையும் விசுவாசிக்காமலும், எந்த ஒரு பாவியாலும் கர்த்தருக்கு முன்னதாக செல்ல முடியாது. கர்த்தருக்கு முன்னதாக செல்வதற்கான விசுவாசம் இதுவேயாகும், அதே நேரத்தில், நமது பாவ மன்னிப்பிற்கான ஆசீர்வாதத்திற்கும் பாவத்திற்கான ஆக்கினையிலிருந்து விடுதலைக்கும் (அதாவது, பாவத்திற்கு மரித்தல்) இது நம்மை வழிநடத்துகிறது.
இஸ்ரவேல் மக்கள் தம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய பலி காணிக்கையை எடுத்து வந்தபோது, முதலாவதாக அவர்கள் தம் கைகளை பலி காணிக்கையின் தலைமீது கைவைத்து தமது பாவங்களை அதன் மீது சுமத்தி, அதனைக் கொன்று பலி காணிக்கையின் இரத்தத்தை எடுத்து, சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் இரத்தத்தை ஊற்றி, மீதி இருக்கும் இரத்தத்தை பீடத்திற்கு கீழே ஊற்றவேண்டும். சர்வாங்க தகன பலிபீடத்தின் அடிப்பாகம் தரையாகும். இங்கே தரை என்பது மனிதர்களின் இருதயங்களைக் குறிக்கிறது. மேலுமாக, இரட்சிப்பின் சட்டத்தின் படியாக பலி காணிக்கையான்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களின் இடத்தில் இருந்து மரித்தது என்பதை தமது இருதயங்களினால் விசுவாசித்து பாவிகள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று இது இங்கே நம்மிடம் கூறுகிறது. நியாயத்தீர்ப்பின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பாவங்களை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகள் ஆவிக்குரிய விதமாக இங்கே கூறுகின்றன.
பலி காணிக்கையின் மீது தமது கைகளை வைத்ததின் மூலம், அதனால் தமது பாவங்களை அதன் மீது சுமத்தியதையும், இந்த பலி காணிக்கையானது தனது இரத்தத்தைச் சிந்தி அதன் பிறகு சர்வாங்க தகன பலிபீடத்தில் எரிக்கப்பட்டது என்பதை விசுவாசிப்பதின் மூலம், பழைய ஏற்பாட்டு கால பாவிகள் தமது பாவங்களுக்கான பாவமன்னிப்பை பெறமுடிந்தது. பாவிகளின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த, கைவைத்தலும் பலி காணிக்கையின் மரணமும் எரித்தலும் இல்லை என்றால், கர்த்தருக்கு முன்னதாக அவர்கள் செல்லக் கூடிய வழியானது முற்றிலுமாகத் தடைப் பட்டிருக்கும், மேலும், அவர்களால் பரிசுத்தமுள்ள கர்த்தரால் எப்போதுமே சென்றிருக்க முடியாது. சுருக்கமாக கூறினால், இந்த பலி காணிக்கை முறையைத் தவிர வேறெதுவும் நாம் கர்த்தருக்கு முன்னால் செல்வதை ஏதுவாக்கவில்லை.
இதைப் போல, இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம், அவரின் மரணம், அவரின் பாவநிவர்த்திக்கான பலி காணிக்கை ஆகியவற்றின் மீது விசுவாசம் இல்லாமல், நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பைப் பெறுவதற்கும் கர்த்தருக்கு முன்னதாக செல்லுவதற்கும் வேறு எந்த வழிகளும் இல்லை. இஸ்ரவேல் மக்கள் எத்தனை அழகானதான, நிறைவான, கவரக்கூடிய, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியை எடுத்து வந்திருந்தாலும், அவற்றின் தலைமீது கையை வைக்காவிட்டாலும், அதன் மூலமாக அவர்களின் பாவங்களை அது ஏற்றிராவிட்டால், அது இரத்தம் சிந்தவும் மரிக்கவும் தேவையில்லை என்பதால், இதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
நமது விசுவாசத்தைப் பொறுத்தவரை, யோவானிடம் இருந்த்ய் இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய விலையேறப்பட்ட இரத்தம் ஆகியவை நமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தன என்பதை விசுவாசிக்காவிட்டால், நாம் நிறைவான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டோம் என்பதை நம்மால் கூறமுடியாது. இயேசு பெற்ற ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமும், பாவிகளுக்கும் பிதாவாகிய கர்த்தருக்கும் நடுவில் இருக்கிறது, எனவே இவைகள் பாவிகளை அவர்களின் மீறுதல்களில் இருந்து இரட்சிக்கும் காரணிகளாயின.
பரலோகத்தில் உள்ள மகத்துவமிக்க கர்த்தரே திட்டமிட்டு, ஏற்படுத்தி இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றிய அவரின் இரட்சிப்பின் திட்டத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் மாதிரி உள்ளடக்கியுள்ளது. இரட்சிப்பின் முறையின் படியும், சீனாய் மலையின் உச்சியில், கர்த்தர் அவனுக்கு காட்டிய திட்டத்தின் படியும், மோசே ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினான். நாம் வேதாகமத்தைப் பார்க்கும் போது, இந்த கட்டளை மீண்டும் மீண்டும் கொடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். யாத்திராகமம் 25:40 கூறுகிறது, “மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.”
ஒரு சிலுவையைச் செய்து, இயேசு கிறிஸ்துவை அதில் தொங்கவிட மட்டுமே மக்களால் முடிந்தது, இதற்கு மேல், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அவர்கள் அவரின் கைகளைக் கட்டி கல்வாரியை நோக்கி அவரை இழுத்துச் செல்ல முடிந்தது. கர்த்தருக்கு முன்னதாக தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பாவிகளால் இத்தனையும் செய்யமுடிந்தது, ஏனெனில் கர்த்தர் ஏற்கனவே திட்டமிட்டபடி, இவை எல்லாம் அப்படியே நிறவேற வேண்டியிருந்தது. ஆயினும், தனது ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் இரத்தத்தினாலும் ஒரேதரமாக எல்லாப் பாவிகளையும் ஒரேதரமாக இரட்சித்தது இயேசுவேயாகும், அவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானம் பெற்று அதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, அவற்றை எல்லாம் ஒரேதரமாக கழுவி, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
மேலும், தேவனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு முன்னதாக, அவர் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம்மே நமது இரட்சிப்பிலிருந்து பிரிக்கவே முடியாத மிகவும் முக்கியமான ஒன்றாகும். படைப்பிற்கு முன்னரேயே, இயேசு பாவங்களைச் சுமப்பதும், அவற்றிற்கான ஆக்கினையும் கர்த்தரால் முடிவு செய்யப் பட்டது. யோவான் மூன்றில் இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்று இயேசு நிக்கொதேமுவிடம் கூறினார். ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானமும் சிலுவையும் கர்த்தரின் அருளினுள் திட்டமிடப் பட்டவையாகும் மேலும் இவையெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னரேயே முடிவு செய்யப்பட்டது.
இயேசு தாமே கூறினார், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). மேலும் இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்து பேதுருவும் கூறினான், “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, - நம்மையும் இரட்சிக்கிறது;” (1 பேதுரு 3:21). அப்போஸ்தல நடபடிகளிலும் இப்படியாக எழுதப் பட்டுள்ளது, “அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்” (அப்போஸ்தலர் 2:23).
மகத்துவமுள்ள கர்த்தரின் திட்டத்தின்படியேயும் நோக்கத்தின் படியேயும், இயேசு பெற்ற ஞானஸ்நானமும் சிலுவையின் இரத்தமும் சரியாக நிறைவேறின. மேலும், இந்த சத்தியத்தை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு அதனை விசுவாசிக்காமல், யாராலும் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியாதாகையால், இந்த விசுவாசத்தைக் கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டு, அதன் படிச் செய்யவேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசம் இல்லாமல் யாராலும் இரட்சிக்கப் படமுடியாது. தனது சொந்த சித்தத்தின் படியாக யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு முடிவு செய்யாமல், தன்னை பாவிகளின் கைகளில் ஒப்புக் கொடுத்து, சிலுவையில் இரத்தம் சிந்த விரும்பியிருந்தால், இந்தப் பாவிகளால் அவரை சிலுவையில் அறைந்திருக்க முடியாது. மற்றவர்கள் இயேசுவை கல்வாரியை நோக்கி இழுத்தபோது அவர் அதற்கு எதிர்த்து நிற்கவில்லை, ஆனால் அவர் தன்னுடைய விருப்பத்துடனேயே ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் உலகின் பாவங்களை ஏற்றுக் கொண்டு, தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி, அதன் மூலமாக பாவிகளை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
ஏசாயா 53:7 கூறுகிறது, “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” ஆகவே, தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமும் அவருடைய சொந்த சித்தப்படியே நடந்தன, அவற்றின் மூலமாக, அவரின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பவர்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக இரட்சித்தார். தேவனின் இந்த செயல்களைக் குறித்து எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளன் எழுதுகிறான், “அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்” (எபிரெயர் 9:26).
கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை மரணத்தையும் நிழலாக காட்டும் சர்வாங்க தகன பலிபீடத்தில், பரலோகத்தின் இரட்சிப்பாகிய ஆவிக்குரிய ஈவை நம்மால் உண்மையாகவே காணமுடியும். சர்வாங்க தகன பலிபீடத்தில் மரித்த பலி காணிக்கையின் மரணமானது எல்லோருடைய பாவத்திற்கும் அவசியமாக தேவைப்பட்ட இயேசுவின் ஞானஸ்நானத்தையே சுட்டிக்காட்டியது. பழைய ஏற்பாட்டில், கைவைத்தலின் மூலமாக பாவிகளின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட பலி காணிக்கை, அவர்களின் இடத்தில் இருந்து மரித்ததின் மூலமாக அவர்களின் மீறுதல்கள் அனைத்தும் நிவர்த்திக்கப் பட்டன. அதேபோல, புதிய ஏற்பாட்டில், கொடியவர்களின் கைகளினால் தேவகுமாரர் கொல்லப்படுவதற்கு முன்னால், யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதின் மூலம் அவர் முதலாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், இதனாலேயே இயேசு சிலுவையில் அறையப் பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தி மரிக்கவேண்டியிருந்தது.
மேலும், இயேசுவின் மீது கைவைத்தலையும் மரிக்கும்படியாக சிலுவையில் அறையப்படுதலையும் கர்த்தர் திட்டமிட்டு முன்குறித்தார், இவை எல்லாம், அவரின் குமாரரைக் கொன்ற இந்த கொலையாளிகளுக்கும் தனக்கும் இடையே சமாதானத்தை உருவாக்கவே ஆகும். கைவைத்தல் மற்றும் மரணத்தின் மூலமாக கர்த்தர் இரட்சிப்பின் சட்டத்தை திட்டமிட்டார், இந்தச் சட்டத்தின் படியாக, பலி காணிக்கைகளைக் கொடுப்பதின் மூலமாக தமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இஸ்ரவேல் மக்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுவதைக் கர்த்தர் அனுமதித்தார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், பாவிகளை இரட்சிப்பதற்காக கர்த்தர் தாமே முழுமையான சமாதான பலியாயினார். இந்த கர்த்தரின் இரட்சிப்பானது எத்தனை நீதியும், ஞானமும், அளவிடமுடியாத ஆழமான அறிவுமாகும்! அவருடைய ஞானமும் சத்தியமும் மிகப்பெரிய ஆச்சரியங்களாகும், இதன் ஆழத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. சர்வாங்க தகன பலிபீடத்தில் வெளிப்படுத்திய கைவைத்தலையும் இரத்தம் சிந்துதலையும் உள்ளடக்கிய அவருடைய இரட்சிப்பின் அருளை யாரால் கற்பனைச் செய்யவும் முயற்சிக்க கூடும்? பவுலைப் போல ஆச்சரியப்பட மட்டுமே நம்மால் முடியும், “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” (ரோமர் 11:33). கர்த்தர் பாவிகளை நிறைவாக இரட்சித்த நீதியின் நற்செய்தியானது, நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவி மட்டுமே ஆகும்.
 
 
சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகள்
 
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள சர்வாங்க தகன பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும், வெண்கல கொம்புகள் இணைக்கப் பட்டிருந்தன. வேதாகமத்தில், இந்தக் கொம்புகள் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பைக் காட்டுகின்றன (எரேமியா 17:1; வெளி 20:11-15). இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் அடிப்படையில் சிலுவையின் நற்செய்தி அடங்கியிருப்பதை இது காட்டுகிறது. ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16). மேலும் 1 கொரிந்தியர் 1:18 இல் இப்படியாக எழுதப் பட்டுள்ளது, “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.”
இயேசுவின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், மற்றும் உயிரோடெழும்பியது ஆகியவற்றின் மூலம் கர்த்தரின் நீதியும் இரட்சிப்பும் முற்றிலுமாக நிறைவேறியது என்பதை சர்வாங்க தகன பலிபீடத்தின் அந்த கொம்புகள் அறிவித்தன.
 
 
சர்வாங்க தகன பலிபீடத்தின் வளையத்தில் போடப்பட்ட இரண்டு தண்டுகள்
 
வனாந்தரத்தில் கட்டப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லா பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடியவை. இஸ்ரவேல் மக்களின் நாடோடித்தனமான சுபாவத்திற்கு இந்த முறையானது பொறுத்தமானதாக இருந்தது. கானான் தேசத்திற்குள் குடியேறுவதற்கு முன்னர் வனாந்தரத்தில் அவர்கள் சுற்ற வேன்டியிருந்தது. அவர்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த போதிலும், அவர்களின் புனித பயணத்திற்கான வாழ்க்கை தொடர்ந்ததால், அந்த சர்வாங்க தகன பலிபீடத்தைச் சுமந்துச் செல்வதற்கு ஏற்றவிதத்தில் இரண்டு தண்டுகளை கர்த்தர் உருவாக்கினார், இதனால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களை அங்கிருந்து நகரும்படி கட்டளையிட்டபோது அவர்களின் ஆசாரியர்களால் இந்த பீடத்தை தூக்கிச் செல்லமுடிந்தது.
யாத்திராகமம் 27:6-7 கூறுகிறது, “பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடுவாயாக. பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப் பட்டிருக்கவேண்டும்.” சர்வாங்க தகன பலிபீடத்தின் இரண்டு பக்கத்திலும் உள்ள நான்கு வெண்கல வளையத்தினூடே இரண்டு தண்டுகள் போடப்பட்டிருந்தன, ஆகவே இஸ்ரவேல் மக்கள் நகரும் போது லேவியர்களால் அதனைத் தமது தோல்களின் தாங்கி, சுமந்து செல்ல முடிந்தது. கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் சர்வாங்க தகன பலிபீடம் வெளிப்படுத்துகிறது. மேலும், சர்வாங்க தகன பலிபீடத்தை லேவியர்கள் இரண்டு தண்டுகளின் மூலமாக வனாந்தரத்தில் தூக்கிச் சென்றதைப் போல, அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் நற்செய்தியானது அவருடைய ஊழியர்களால் இந்த உலகத்தின் எல்லா வனாந்தரங்களுக்கும் அறிவிக்கப் பட்டது.
நாம் மேலே செல்லுவதற்கு முன்னால் இன்னொரு விஷயத்தை ஆராய்வதற்காக எடுத்துக்கொள்ளவேண்டும், அங்கே இரண்டு தண்டுகள் சர்வாங்க தகன பலிபீடத்தை இஸ்ரவேலர்கள் தாம் போகும் இடத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படுத்தினர். அதுபோலவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியும் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானம் ஒன்று, மற்றது இயேசு கிறிஸ்து சிலுவையில் பெற்ற அதற்கான தண்டனை. இவை இரண்டும் ஒன்று சேரும் போது, பாவமன்னிப்பின் இரட்சிப்பு முழுமை அடைகிறது. சர்வாங்க தகன பலிபீடத்தில் இரண்டு தண்டுகள் இருந்தன. வேறு வகையாக கூறினால், அதில் கைப்பிடிகள் இருந்தன. ஒரு தண்டு மட்டும் போதாது, ஏனெனில், ஒரேயொரு தண்டை மட்டும் வைத்து, பீடத்தை சமனிலையாக நகர்த்த முடியாது.
இதைப் போலவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியும் கூட இரண்டு பகுதிகளால் ஆனது. அவை இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானமும், அவரிர்ன் சிலுவை மரணமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமும் நீதியின் சத்தியத்தை ஒன்றுக்கொன்று சமன் படுத்துகின்றன. இயேசுவின் ஞானஸ்நானமும் இரத்தமும் பாவிகளின் பாவமன்னிப்பை நீதியாக நிறைவேற்றின. இவை இரண்டில் (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம்), ஒன்றை அலட்சியம் செய்தாலும், அது மற்றதையும் அலட்சியம் செய்வதற்கு சம்னாகும். கிறிஸ்துவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தம் சிந்துதலும் இல்லாமல் இரட்சிப்பு கிடையாது.
அவருடைய உயிர்த்தெழுதலும் கூட முக்கியமானதே. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லாமல், அவருடைய மரணத்திற்கு பயனின்றி போயிருக்கும், அதற்கு எந்த விளைவுகளும் இல்லாது போயிருக்கும். மரித்து போன கிறிஸ்துவை மட்டுமே நாம் விசுவாசிக்க வேண்டுமானால், அவரால் யாரையும் இரட்சிக்க முடியாது, அது ஏன், அவரால் தன்னைக் கூட இரட்சிக்க முடியாது. ஆனால் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்து, மரிக்கும் படியாக சிலுவையில் இரத்தம் சிந்தினார், அதன் பிறகு மரணத்தை வென்று உயிரோடே எழுந்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தருக்கு முன் வருபவர்களுக்கு உண்மையான இரட்சகராகினார். அவர் அவர்களின் நித்திய இரட்சிப்பின் தேவனாகவும் அரணாகவும் மாறினார்.
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றி கூறாமல், அவரின் மரணத்தைப் பற்றி மட்டுமே கூறுவது முரன் பாடானதாகவும், பொருந்தாததாகவும் இருக்கும். மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், அவரின் சிலுவை கர்த்தரின் பலவீனமாகியிருக்கும். அது இயேசுவை ஒரு சாதாரண குற்றவாளியாகவும் மாற்றியிருக்கும். இது மட்டுமில்லை, அது கர்த்தரை பொய்யராகவும் மாற்றியிருக்கும், மேலும் இதன் பயனாக வேதாகமத்தின் வார்த்தை கேலிக்குரிய ஒன்றாகியிருக்கும். கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையிலே மரித்தார், மரிதோரிலிருந்து மீண்டும் உயிரேடெழுந்தார், இதன் மூலமாக அவரை விசுவாசிப்பவர்களுக்கு உண்மையான இரட்சகராக அவர் மாறினார்.
இந்நாளின் அநேக கிறிஸ்தவர்கள் பின்பற்றும், இயேசுவின் ஞானஸ்நானத்தை, முழுமையான நற்செய்தியிலிருந்து அகற்றிய நற்செய்தியானது, கர்த்தரை மறுதலிக்கிறது, இது மக்களை வஞ்சித்து அவர்களின் ஆத்துமாக்களை நரகத்திற்கு வழிநடத்துகிறது. இத்தகையதொரு நற்செய்தியை விசுவாசிப்பதானது கர்த்தரின் நித்திய சத்தியமான வார்த்தையை அலட்சியம் செய்து அதனை தள்ளிவிடுவதாகும். கிறிஸ்துவின் சிலுவையை மட்டுமே போதிக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகள் கிறிஸ்தவத்தை உலகத்தின் மற்ற மதங்களில் ஒன்றாக மாற்றுகின்றனர். இதனால் தான் அவர்கள் விசுவாசிக்கும் நற்செய்தியானது உண்மையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருந்து வேறுபாடானதாயிருக்கிறது.
ஒரே கத்தரையும் இயேசுவையும் விசுவாசிக்கும் ஒரே மதமானது கிறிஸ்தவம் மட்டுமே. ஆயினும், மற்ற எல்லா மதங்களையும் விட சிறந்ததாக கிறிஸ்தவ மதம் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அதுவே சத்தியம் என்று பிரகடனப் படுத்திக் கொண்டாலும், அது தனது ஒரே கர்த்தர் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள விசுவாசத்தைக் கைவிட்டால், அது அன்பும் சத்தியமும் நிறைந்த விசுவாசமல்ல, ஆனால் மூர்க்கத்தனமான ஒரு மதமாக மட்டுமே இருக்கும்.
 
 
சர்வாங்க தகன பலிபீடத்தின் இருப்பிடம்
 
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தில் சர்வாங்க தகன பலிபீடம் எங்கே வைக்கப்பட்டிருந்தது என்பதைக் குறித்து மீண்டும் ஒரு முறை பார்ப்போமாக. ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களிலேயே மிகவும் பெரியது சர்வாங்க தகன பலிபீடமேயாகும். மேலும் ஆசாரியர்கள் ஆராதனைக்கான பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு முன் செய்ய வேன்டிய சடங்குகளில் முதலாவது வருவது இதுவேயாகும். கர்த்தரை விசுவாசிக்கத் தொடங்க வேண்டிய முதலாவது இடம் சர்வாங்க தகன பலிபீடமேயாகும், மேலும் மக்கள் தன்னிடம் வருவதற்கு முன் அவருடைய சூத்திரத்தை அவர்கள் பின்பற்றவேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், சர்வாங்க தகன பலிபீடம் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. யோவனிடமிருந்து இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் விசுவாசிக்காமல் அவிசுவாசியாவதற்கு பதிலாக, அவற்றை விசுவாசித்து விசுவாசியாகி தமது எல்லாப் பாவங்களையும் தீர்க்காவிட்டால் யாராலும் வாழும் கர்த்தருக்கு முன்னதாக செல்ல முடியாது என்ற சத்தியத்தை அது வெளிப்படுத்துகிறது.
தேவ குமாரரின் ஞானஸ்நானத்தையும் அவரின் மரணத்தையும் விசுவாசித்ததின் மூலமாகவே நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோமே தவிர, விசுவாசிக்காமல் அல்ல. தேவ குமாரரின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தம் சிந்துதலையும் விசுவாசித்ததின் மூலமாகவே நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டோம். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மிகவும் முக்கியமானதும், அடிப்படையானதும், மிகவும் நிறைவானதுமாக இருப்பதால், அதனை நாம் தொடர்ந்து நமது இருதயங்களில் தியானிக்க வேன்டும். இந்த நற்செய்தியை நாம் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். நாம் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்தோம் என்பதை நாம் நமது இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும், மேலும் இந்த விசுவாசத்துடனேயே, தேவன் தனது ஞானஸ்நானத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் ஏற்று, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்பதையும் விசுவாசிக்கவேண்டும்.
சர்வாங்க தகன பலிபீடத்துடனே கூட, ஆசரிப்புக் கூடார வாசலிலுள்ள தூண்களின் பாதங்களும் வெண்கலத்தினால் தயாரிக்கப் பட்டது என்பது நம்மிடம் நாம் நமது களங்கங்களுக்காக நரகத்தினுள் வீசப் படுவதற்கு தகுதியானவர்கள் என்பதைக் கூறுகிறது. மேலும் “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அறிவிக்கும் கர்த்தரின் தீர்ப்பின் படி, நாம் நமது பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்கள் என்பது தெளிவாகிறது.
உண்மையாகவே நரகத்திற்குச் செல்ல வேண்டிய, நம்மைப் போன்ற தாழ்மையான நிலையிலுள்ளவர்களை, நமது எல்லாப் பாவங்களுக்குமான தீர்ப்பிலிருந்து இரட்சிக்க, நமது தேவன் அவதாரம் எடுத்து இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்று, இந்த உலகத்தின் பாவங்களை சிலுவைக்கு எடுத்துக் சென்று, தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் தண்டிக்கப் பட்டு, அதன் மூலமாக நம்முடைய பாவங்களிலிருந்தும் ஆக்கினைகளிலிருந்தும் நம்மை நிறைவாக இரட்சித்தார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரின் ஆலயத்தின் இணைந்து அவருடைய பிள்ளைகளாக முடியும். ஆசரிப்புக் கூடார வாசலின் தூண்களும் திரைச்சீலையும், இந்த விசுவாசமுடையவர்கள் மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாக முடியும் எனவும் அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும் எனவும் கூறுகிறது.
 
 
ஆசரிப்புக் கூடார திரைச்சீலை வாசலின் நான்கு நிறங்கள் வெளிப்படுத்திய சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும்
 
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் தனது ஊழியத்தின் மூலம், இவ்வுலகிற்கு வந்த நம் தேவன், நம்மை இரட்சித்தார் எனபதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இரத்தாம்பர நூல் என்பது இயேசுவே கர்த்தர் என்பதை அறிவிக்கிறது; இளநீல நூல் என்பது கர்த்தராகிய இயேசு, இந்த பூமியில் மனிதராக உருவெடுத்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதை அறிவிக்கிறது; மேலும் சிகப்பு நூல் என்பது, நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதின் மூலம் தனது சரீரத்தை பலி காணிக்கை ஆக்கினார் என்பதைக் கூறுகிறது. ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து அதன் மூலமாக உங்களையும் என்னையும் நிறைவாக இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பது மிகவும் முக்கியமானது.
இந்த சத்தியத்தை உண்மையாக விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரின் ஆலயத்தில் ஊழியர்களாக முடியும். ஆசரிப்புக் கூடார கதவின் தூண்கள் ஊழியர்களைக் குறிக்கின்றன. இந்த வழியில் விசுவாசிப்பவர்கள் மட்டுமே கர்த்தரின் மக்கள் என்பதை அவைகள் நமக்கு காட்டுகின்றன, மேலும் இத்தகைய மக்களை மட்டுமே கர்த்தரால் தனது ஊழியர்களாகவும், தூண்களாகவும் பயன் படுத்த முடியும்.
வெள்ளையான, மெல்லியதாக திரிக்கப் பட்ட பஞ்சானது, கர்த்தரின் மக்களாகவும், நீதிமான்களுமாகியவர்கள் மட்டுமே தமது இருதயங்களில் எந்த பாவங்களும் இல்லாதவர்கள் என்பதை நம்மிடம் கூறுகிறது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற்றவர்களே நீதிமான்களாவர். நமது தேவன் இப்பூமிக்கு வந்து யோவனிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தினாலும், சிலுவையின் இரத்தத்தினாலும், எல்லாப் பாவிகளையும் இரட்சித்தார். தனது சொந்த விலையேறப்பட்ட ஜீவனையே கொடுத்து தேவன் நம்மை இரட்சித்ததால், நீரினாலும் இரத்தத்தினாலும் வந்த அவரை நம்மால் விசுவாசிக்காமல் இருக்க முடியாது (1 யோவான் 5:6).
இயேசுவே ராஜாதி ராஜா என்பதை இரத்தாம்பர நிற நூல் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், தாழ்மையாகவும், முழுக்க முழுக்க களங்கத்துடனும் இருந்த நம்மை, தனது விலையேறப்பட்ட ஜீவனையே கொடுத்து தேவன் இரட்சித்தார் என்பதையும், அதன் மூலமாக அவர் நம்மை கர்த்தரின் மக்களாக்கினார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேன்டும். இப்போது, நாம் இந்த சத்தியத்தை மட்டுமே நமது இருதயங்களினால் விசுவாசித்தால், இந்த நிறைவான இரட்சிப்பில் உள்ள நமது விசுவாசத்தினால், நாம் அனைவரும் பாவமற்ற நீதிமான்களாக மாறலாம். இந்த விசுவாச ஈவை நமக்கு கொடுத்த கர்த்தருக்கு நாம் நன்றி கூறவேண்டும், இதனால் நம்மிடம் அத்தகைய விசுவாசம் இருக்கும்.
குறிப்பாக கூறினால், இந்த சத்தியத்தை நாம் அறிந்து அதனை விசுவாசிப்பதே கர்த்தரால் கொடுக்கப் பட்ட ஒரு ஈவு. பாவத்திலிருந்து நமக்கு கிட்டிய இரட்சிப்பும் ஒரு ஈவே. நம்மை விட மிகவும் விலையேறப்பட்ட தனது ஜீவனையே கொடுத்து கர்த்தர் நம்மை நமது பாவங்களில் இருந்து விடுவிக்கவில்லையா? இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றதாலேயே, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, அதன் மூலமாக் இரட்சிப்பின் ஈவினை நமக்குக் கொடுத்ததினால், இந்த நற்செய்தியை விசுவாசிக்கும் அனைவராலும் இந்த இரட்சிப்பின் வரத்தைப் பெற்று கர்த்தரின் சொந்த மக்களாக முடியும். இரட்சிப்பைப் பொறுத்தவரை, அதற்காக நாம் செய்ய வேண்டியது எதுவுமேயில்லை. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைத் தவிர நாம் செய்ய வேன்டியது எதுவுமேயில்லை. இந்த இரட்சிப்பி நமக்கான கர்த்தரின் பரிசாகும்.
“நாம் உண்மையாகவே நரகம் செல்ல வேண்டியவர்களா இல்லையா” என்பதை முதலாவதாக எண்ணுவதின் மூலமே இயேசுவின் மீதுள்ள விசுவாசம் தொடங்குகிறது. ஏன்? நம்முடைய பாவம் நிறைந்த தன்மையை முதலாவது அறிந்து அதனை ஒத்துக் கொள்ளுகையில், நமது பாவங்களுக்கான மீறுதலின் பலி காணிக்கையாக இயேசு மாறினார் என்பதை விசுவாசிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. நம்மால் செய்யமுடிந்ததெல்லாம் பாவம் செய்வது மட்டுமே என்றிருந்த நாம் இரட்சிக்கப் படுவதை, தேவன் அளித்த இரட்சிப்பின் வரம் சாத்தியமாக்கியது, இதற்கு அவர் தன்னையே நமக்காக பலி காணிக்கையாக்கினார். அவரை வெறுமனே விசுவாசிப்பதின் மூலமாக நாம் இரட்சிக்கப்பட்டோமா? அதன் மூலமாக நாம் விசுவாசத்தினால் கர்த்தரின் மக்களானோமா? நம்மிடம் உண்மையாகவே அத்தகைய விசுவாசம் இருக்கிறதா? நமது இரட்சிப்பானது கர்த்தரின் வரமென்றும், அது நமது செயல் அல்லவெண்ரும் அறிக்கைச் செய்ய நம்மால் முடியுமா? கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரத்தை நாம் விசுவாசிப்பதற்கு முன்னால் நாமனைவரும் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்தோம் என்பதை உண்மையாகவே நாம் ஏற்றுக் கொள்வோமா? இவற்றைக் குறித்து நம்மை இன்னொரு முறை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
 
 
ஆசரிப்புக் கூடாரமானது இயேசுவைக் குறித்த விளக்கமான ஓவியமாகும்
 
ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியம் கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாய்களை அடைக்கிறது. ஆசரிப்புக் கூடார வார்த்தையை நாம் திறந்து, அதனை அவர்களுக்கு முன்னால் பேசுகையில், அவர்களின் வஞ்சனை வெளியே வருகிறது.
ஆசரிப்புக் கூடார வாசலின் தூண்கள் அனைத்தும் பொன்னினால் மூடப்பட்டிருந்தன. இதன் பொருள் என்னவெனில், ஆசரிப்புக் கூடாரத்தில் மனித நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை என்பதாகும். ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருந்த அனைத்தும் பொன்னால் மூடப்பட்டிருந்தது. கதவின் தூண்கள் அனைத்தும் பொன்னினால் மூடப்பட்டிருந்தன, தூண்களுக்கு மேலிருந்த மூடுதிரைகளும் கூட பொன்னினால் மூடப்பட்டிருந்தன. ஆயினும், தூண்களின் பாதங்கள் வெண்கலத்தால் செய்யப் பட்டிருந்தன. நம்முடைய பாவங்களினாலும் களங்கங்களினாலும், நீங்களும் நானும் நரகம் செல்ல வேன்டியவர்கள் என்பதை இது நம்மிடம் கூறுகிறது. இது உண்மையில்லையா? இது இப்படிப் பட்ட ஒரு காரியம் இல்லையா? நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்யும் பாவத்திற்காகவும் களங்கத்திற்காகவும் நரகம் செல்லவேண்டிவர் என்பதை உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் பாவத்திற்காக நரகம் செல்ல வேண்டியது கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட நீதியின் நியாத்தீர்ப்பாகும். அப்படியானால் இந்த நியாயத் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இது வெறும் அறிவிற்கு மட்டுமல்ல, ஆனால் அதனை நீங்கள் விசுவாசிப்பதின் மூலம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வேதாகமம் கூறுகிறது, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). நாம் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்கள் என்பதை நமது இருதயங்களுக்குள் அறிந்து கொள்ளும் போது, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட அவரின் ஊழியத்தினால் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்ததின் மூலம் தேவன் நம்மை இரட்சித்தார் என்ற சத்தியத்தை விசுவாசிக்கும் போது, நம்மாக் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து அங்கே வாழமுடியும். தேவன் இப்பூமிக்கு வந்தார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம், நம்மை விட மதிப்பு மிக்க அவர், ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது பாவங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அவர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து, இப்படியெல்லாம் செய்ததின் மூலம் நமது எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டு, நமது ஆக்கினையில் இருந்து நம்மை இரட்சித்தார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நம்மை இரட்சித்த தேவன், நம்மை நீதிமான்களுமாக்கினார்.
நமது இருதயத்தின் அடி ஆழத்தில் இதை நாம் உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இந்த சத்தியத்தை இருதயத்தின் அடி ஆழத்தில் விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரின் மக்களாகவும் அவரின் ஊழியர்களாகவும் முடியும். இந்த சத்தியத்தை மனித சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக ஏற்றுக் கொள்வது உண்மையான விசுவாசமாகாது. “ஓ, ஆசரிப்புக் கூடாரத்திற்கு இப்படி ஒரு பொருள் இருக்கிறதா, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றைக் குறித்து அடிக்கடி எனது ஆலயத்தில் கூறுவதைக் கேட்டிருக்கிறேன், அதன் பொருளை இப்படியாக விளக்கலாம்!” இது வரை உங்கள் யோசனைகளில் இந்த சத்தியத்தை இவ்வாறானதாக விசுவாசித்திருந்த போதிலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயங்களில் நேர்மையாக விசுவாசிப்பதற்கான நேரம் இதுவே.
ஆசரிப்புக் கூடார கதவினுடைய தூண்களின் பாதமானது வெண்கலத்தால் ஆனது. ஆனால் வெண்கல பாதங்கள் ஆசரிப்புக் கூடார கதவின் ஐந்து தூண்களில் மட்டுமே பயன் படுத்தப் பட்டுள்ளது; அதற்கு மாறாக, மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையின் தூண்களில் வெண்கல பாதங்கள் இல்லை, ஆனால் இந்த நான்கு தூண்களுக்கான பாதங்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டன. வேதாகமத்தில், வெள்ளியானது கர்த்தரின் வரத்தையும் கிருபையையும் குறிக்கிறது, அதே நேரம் பொன் என்பது இருதயத்தின் ஆழத்தில் விசுவாசிக்கப் படும் உண்மை விசுவாசித்தைக் குறிக்கிறது. மறுபுறம், வெண்கலமானது, பாவத்திற்கான நியாயத் தீர்ப்பைக் குறிக்கிறது. நமது பாவங்களுக்காக கர்த்தரின் தீர்ப்பிற்க்கு நாம் ஆளாக மாட்டோமா? கர்த்தருக்கு முன்னதாகவும் மனிதர்களுக்கு முன்னதாகவும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்காகவும் களங்கங்களுக்காகவும் தீர்க்கப் படவேண்டும். இது சரியானதாக இல்லையா? நீங்கள் மட்டுமே இப்படி இருக்கிறீர்கள் என்று நான் கூறவில்லை. மாறாக, நானும் கூட இப்படித்தான் இருந்தேன் என கர்த்தருக்கு முன்னதாக ஒத்துக் கொள்கிறேன். வேறு வார்த்தைகளில் கூறினால், இதனை நான் உங்களிடம் மட்டும் கேட்கவில்லை, என்னிடமும் கேட்கிறேன். என்னைப் பொறுத்த வரை, எனது களங்கங்களுக்காக அவரால், அவரின் சட்டத்திற்கேற்ப தீர்க்கப் பட வேண்டியவனாகவும், எனது பாவங்களுக்காக நரகம் செல்ல வேன்டியவனாகவும் நான் இருப்பதை கர்த்தருக்கு முன்னதாக முற்றிலுமாக ஏற்றுக் கொள்கிறேன். இதனை நான் தெளிவாக ஒத்துக் கொள்ளுகிறேன்.
என்னைப் போன்ற ஒருவனுக்காக தேவன் இப்பூமிக்கு வந்தார். மனித சரீரத்திலேயே அவர் வந்தார், ஞானஸ்நானம் பண்ணப்பட்டதின் மூலம், எனது எல்லாப் பாவங்களையும் அவர் தனது சொந்த சரீரத்தில் ஏற்றுக் கொண்டார், சிலுவையில் மரித்ததின் மூலமாக எனது பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளையும் ஏற்றுக் கொண்டார், மேலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழும்பியதின் மூலமாக என்னுடைய முழுமையான மீட்பராகவும் மாறினார். இதனைத்தான் நான் விசுவாசிக்கிறேன். நான் இப்படி விசுவாசித்ததின் மூலமாக படைப்பிற்கு முன்னரேயே கர்த்தர் திட்டமிட்ட எனது இரட்சிப்பி நிறைவேறியது. எனது இருதயத்தின் ஆழத்தில் இதனை விசுவாசித்ததினால் அது நிறைவேறியது.
உங்களுடைய இருதயங்களும் கூட இத்தகையவைகளே. இந்த சத்தியத்தை விசுவாசித்ததினால், இயேசு கிறிஸ்துவுக்குள், இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்னரேயே கர்த்தர் திட்டமிட்ட உங்கள் இரட்சிப்பும் கூட உங்கள் இருதயங்களில் நிறைவேறின. உங்களைத் தனது மக்களாக்கும் கர்த்தரின் திட்டத்தை உங்கள் இருதயங்களின் ஆழத்தில் விசுவாசிக்கும் போது அது நிறைவேறுகிறது. இருதயங்களால் நீங்கள் விசுவாசிக்கும் போதே உண்மையான இரட்சிப்பு உங்கள் இருதயங்களின் ஆழத்தில் உண்டாகிறது, இரட்சிப்பானது நமது மாமிசத்தின் சிந்தனைகளால் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இரட்சிப்பானது இறையியல் கொள்கைகளால் வரக்கூடிய ஒன்றல்ல. மாறாக, சத்தியத்தின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமே அது வருகிறது.
 
 
படைப்பிற்கு முன்னரேயே இந்த இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவுக்குள் திட்டமிடப்பட்டது
 
இரட்சிப்பானது ஒரு வரமாகும் அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தத்தால் கொடுக்கப் பட்டது. இந்த இரட்சிப்பானது இப்பூமியில் ஏறத்தாழ 2,000 வருடங்களுக்கு முன்னதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இரட்சிப்பின் வரத்திலிருந்து யாரும் தள்ளிவைக்கப் படவில்லை, ஏனெனில் ஒவ்வொருவரின் பாவத்தையும் துடைக்கும் இரட்சிப்பிற்கான கர்த்தருடைய திட்டதை இயேசு நிறைவேற்றினார். மேலும், இந்த இரட்சிப்பைத் தமது இருதயங்களிம் அடி ஆழத்தில் விசுவாசித்த அனைவரும் கர்த்தரின் பிள்ளைகள் ஆகினர். அவர்களின் எல்லாப் பாவங்களும், பனியைப் போல வென்மையாகத், துடைக்கப் பட்டன, அவர்கள் அனைவரும் அவர்களுடைய பாவங்களுக்கான பாவமன்னிப்பை இலவசமாக பெற்றுக் கொண்டார்கள்.
ஆயினும் கூட பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளாத அநேக மக்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இந்த மக்கள் யார்? சத்தியத்தை அறிந்தாலும், அந்த சத்தியத்தை விசுவாசிக்காத மக்களே அவர்களாவர். தாம் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்கள் என்பதை தமது இருதயங்களின் அடி ஆழத்தில் அறிக்கைச் செய்யாதவர்களும், நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியை அங்கீகரிக்காதவர்களும், அத்தகைய மக்களாவர் - அவர்களுக்கும் தேவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தம்முடைய சொந்த பாவ சுபாவத்தை அறிந்து கொண்டவர்களுக்கும், தமது பாவங்களுக்காக தாம் ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டு நரகத்தில் வீசப் பட வேண்டியவர்கள் என்பதை அறிந்தவர்களுக்கும் மட்டுமே கர்த்தரின் இரட்சிப்பு கொடுக்கப்படுகிறது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டு, எல்லாமே எழுப்பப் பட்ட ஆசரிப்புக் கூடார கதவின் ஐந்து தூண்கள் எங்கே இருக்கின்றன? அவைகள் வெண்கல பாதங்களின் மீது எழுப்பப்பட்டன. நமது பாவங்களின் நிமித்தமாக நீங்களும் நானும் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்தோம். நாம் இந்த காரியத்தை ஒத்துக் கொள்ளும்போது மட்டுமே நமது இரட்சிப்பானது இதன் மீது எழுப்பப்பட முடியும். “இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” உங்களுக்காகவும் எனக்காகவும் தேவன் இப்பூமிக்கு வந்து, யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தி பலி காணிக்கையானார், இதன் மூலம் அவர் நமது பாவங்களிலிருந்து நமக்கு இரட்சிப்பைக் கொடுத்தார்.
மேலும், நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயத்தின் ஆழத்தின் உண்மையாகவே விசுவாசிக்க வேண்டும். குறைந்தது ஒருமுறையாவது நமது இருதயங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும், “நான் உண்மையாகவே நரகம் செல்ல வேண்டியவன், அப்படி இருந்தும் கூட நீரினாலும் ஆவியினாலும் தேவன் என்னை இரட்சித்தார்.” அதன் பிறகு இரட்சிக்கப் பட நமது இருதயங்களால் விசுவாசிக்க வேண்டும். ரோமர் 10:10 கூறுகிறது, ““நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”
நாம் உண்மையாகவே நமது இரட்சிப்பை நமது இருதயங்களின் ஆழத்தில் விசுவாசித்து அதனை நமது வாய்களால் அறிக்கைச் செய்ய வேண்டும்: “இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் தேவன் என்னை இரட்சித்தார். நான் நரகத்தில் எறியப்பட்டு ஆக்கினைக்குள்ளாக வேண்டியவனாக இருந்தேன், ஆனால் தேவன் எனது பாவங்களை எனது சார்பாக கழுவிவிட்டார், எனது பாவங்களைச் சுமந்தார், எனக்காக எனது ஆக்கினைகளை எல்லாம் அவரே ஏற்றுக் கொண்டார், இதன் மூலமாக என்னை முழுமையாக இரட்சித்தார், அவர் என்னை முழுமையான கர்த்தரின் பிள்ளையாக மாற்றினார்.” இப்படியாக, நாம் நமது இருதயங்களின் ஆழத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கைச் செய்ய வேண்டும். இதனை விசுவாசிக்கிறீர்களா?
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நீங்கள் விசுவாசித்தும், இந்த வழியின் மூலமாக தேவன் உங்களை இரட்சித்தார் என விசுவாசித்தும், நீங்கள் நரகம் செல்லுபவராக இருக்கவில்லை என்று ஏதேனும் காரணம் பற்றி அதனை ஒத்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறீர்களா? வேதாகமம் கூறுகிறது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” (ரோமர் 3:23). எல்லாரும் பாவம் செய்து நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும், தேவன் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, அதன் மூலமாக நம்மை நீதிமான் ஆக்கினார் என்பதை விசுவாசிப்பதே உண்மையான விசுவாசமாகும்.
இந்த இரட்சிப்பு எத்தனை ஆச்சரியமானது? இது மிகவும் அதிசயமானதாக இல்லையா? ஆசரிப்புக் கூடாரம் தாறு மாறாக கட்டப் படவில்லை, ஆனால் விரிவான கர்த்தரின் வார்த்தைக்கு ஏற்ப அது கட்டப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக, தனது விலையேறப் பட்ட ஜீவனைக் கொடுப்பதின் மூலமாக நம்மை இரட்சிப்பதாக கர்த்தர் விளக்கமாக முன்னறிவித்தார். இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையின் மரித்ததின் மூலம் அவர் நமக்கு விலையேறப் பட்ட இரட்சிப்பைத் தந்தார் என ஆசரிப்புக் கூடாரத்தின் மூலம அவர் நம்மிடம் கூறுகிறார், நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதனை நமது இருதயங்களின் ஆழத்தில் விசுவாசிப்பது மட்டுமே. உங்களுக்காக யாரால் இரட்சிப்பைக் கொடுக்க முடியும்? உங்களைப் போலவே மனித சரீரத்தை உடையவராய் இப்பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக உங்களால் இரட்சிக்கப் பட முடியும்.
யாராவது ஒருவர் உங்கள் பாவங்களை ஏற்றுக் கொண்டு, உங்கள் இடத்தில் இருந்து உங்களுக்காக ஆக்கினைக்குள்ளானால் அவருக்கு நன்றி கூற உங்களுக்கு அநேக காரணங்கள் இருக்கின்றன, ஆனால் தேவனாகிய இயேசு நம்மை விட பல கோடி மடங்கு சிறந்தவர், அவர் நமக்காக விலையேறப்பட்ட பலி காணிக்கையானார் - இதற்கு எத்தனை நன்றி மிக்கவர்களாக நாம் இருக்க வேண்டும்? தனது இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக மகத்துவமான தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பானது எத்தனை விலையேறப் பட்ட வரமாக இருக்கிறது? இந்த வரமானது விலையற்றதாயில்லையா? இதனை நம்மிருதயங்களால் எப்படி விசுவாசிக்காமல் இருக்க முடியும்?
இதனால் தான், தாம் பாவம் நிறைந்தவர்கள் என்பதை அறிந்தவர்கள் இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேன்டும். தாம் நரகம் செல்லுவதை தவிர்க்க முடியாதவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளுபவர்கல் மட்டுமே இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் தகுதியைப் பெற்றவர்கள். தாம் உண்மையாகவே பாவிகளாய் இருக்கிறோம் எனவும், நிச்சயமாக தாம் நரகத்திற்கு செல்ல் வேன்டியவர்கள் எனவும் தம்மைக் குறித்து ஒத்துக் கொள்ளுபவர்கள் மட்டுமே கர்த்தரின் விலையேறப் பட்ட இரட்சிப்பை விசுவாசிக்க தகுதியானவர்கள் ஆவர். இந்த சத்தியத்தை தமது இருதயங்களால் விசுவாசிப்பவர்களால் கர்த்தரின் ஆலயத்தின் ஊழியர்களாக முடியும்.
நாம் நம்மை இவ்வுலகின் மிகவும் பிரபலமானவர்களுடன் ஒப்பிட்டு அவர்களுடை குறுகிய திறமைகளுடன் ஒப்பிட்டு பார்த்தாலும் கூட, எந்த ஒரு காரியத்திலும் பெருமை பாராட்ட முடியாத தாழ்தவர்களாக நாம் இருக்கிறோம். இப்படி இருக்கும் போது, பரிசுத்தமும், நிறைவும், சர்வ வல்லைமையும் நிறைந்த கர்த்தருக்கு முன்னதாக நம்மைப் பெருமைப் பாராட்டிக் கொள்ள எப்படி துனிய முடியும்? நம்முடைய களங்கங்களினிமித்தம் நாம் மரிப்பதை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, தேவன் நம்மை இரட்சித்தார் என்பதை ஏற்றுக் கொள்ளுவதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.
வேதாகமம் நம்மிடம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்” (ரோமர் 6:23). நமது பாவங்களுக்கான சம்பளமாகிய மரணத்தை நாம் கொடுத்தாக வேண்டும். ஆனால், நரகத்திற்கு செல்லவேண்டியவர்களாய் இருந்த நம்மை நமது தேவன் இரட்சித்ததால், இந்த விசுவாசத்துடனே பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். இந்த விசுவாசத்தை நாம் அகற்றிவிட்டால், நாம் நரகத்திற்கு பல முறை செல்ல வேண்டியவர்களாவோம். இது இப்படியாக இல்லையா? ஆம் அப்படித்தான் இருக்கிறது. நாம் அனைவரும் நரகத்தில் வீசப்பட வேன்டியவர்களே.
ஆனால் மகத்துவமுள்ள தேவன் தனது அளவிட முடியாத அன்புடனே இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தி ஆக்கினைக்குள்ளாகியதால், நாம் நிச்சயமாக செல்லவேண்டியிருந்த நரகத்தில் இருந்து தப்பினோம். நமக்காக நமது தேவன் தனது விலையேறப்பட்ட ஜீவனைக் கொடுத்ததால், பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம். இப்படி நடந்திருக்கும் போது, தேவன் நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்பதையும், இதன் மூலமாக அவர் இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார் என்பதையும் நாம் எப்படி விசுவாசியாதிருப்போம்? நீதிமான்களாவதற்கு நாம் எப்படி மறுப்பு தெரிவிக்கலாம்? உங்களால் இதனை எப்படி விசுவாசிக்காதிருக்க முடியும்? ஆசரிப்புக் கூடார திரைச்சீலை கதவானது பொன்னால் மூடப்பட்டிருந்ததைப் போல, நமது இருதயங்களையும் கூட நாம் விசுவாசத்தால் முற்றிலுமாக மூட வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயங்களின் ஆழங்களில் நாம் விசுவாசிக்க வேண்டும். இந்த உண்மையான நற்செய்தியை நமது இருதயங்களின் ஆழங்களில் விசுவாசிக்காமல், கர்த்தருக்கு முன்னதாக நம்மால் செல்ல முடியாது.
உண்மையாகவே நரகத்திற்கு செல்லாத பாவிகளாக விசுவாசித்தினால் முடிந்தது. இந்த விசுவாசித்தினாலேயே கர்த்தருக்கு முன்னதாக நம்மால் நீதிமானாக முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், விசுவாசத்தினாலேயே பாவிகளால் தமது எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவமன்னிப்பை பெறமுடியும் - அதாவது தேவன் தனது நீரினாலும் சிலுவையின் இரத்தத்தாலும் நம்மை இரட்சித்தார் என்பதை விசுவாசிக்க வேண்டும். இப்படியாகவே, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிற படியே,” (எபிரெயர் 9:27) என்ற நம் தேவனின் வார்த்தை நிறைவேறிற்று.
நாம் இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கும் போதே, நாம் நமது பாவங்களுக்காக ஏற்கனவே ஆக்கினையடைந்தோம். ஆயினும், நமது தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பின் வரத்தை கர்த்தர் நமக்கு கொடுத்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயங்களின் அடி ஆழத்தில் விசுவாசிப்பதின் மூலம், கர்த்தரின் பிள்ளைகளாக நம்மால் மாற முடிந்தது. விசுவாசிக்கும் அனைவருக்கும் கர்த்தர் தனது நிபந்தனையற்ற இரட்சிப்பின் அன்பைக் கொடுத்தார். ஆனால் இந்த நற்செய்தியை விசுவாசிக்காதவர்களுக்கு அவர்களின் அவிசுவாசத்திற்காக நியாயம் தீர்த்து ஆக்கினைக்குள்ளாக்குவார் (யோவான் 3:16-18).
 
 
இரட்சிப்பின் இரண்டு குறிப்புகளையும் நாம் விசுவாசிக்க வேண்டும்
 
நாம் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு நமது பாவங்களுக்காக மரிக்க வேண்டிய பாவிகளாயிருந்தோம், ஆனால் கர்த்தர் தான் திட்டமிட்டு நமக்குக் கொடுத்த இரட்சிப்பாகிய இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை விசுவாசித்ததின் மூலம் நமது பாவங்களுக்கான மன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ள வேன்டும். உண்மையாகவே கர்த்தரிடம் நாம் அறிக்கை செய்ய வேண்டும், “நான் உண்மையாகவே நரகம் செல்ல வேண்டியவன்,” இதற்கு மேலும் நாம் அறிக்கை செய்ய வேண்டும், “ஆனால் தேவன் தனது நீரினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்தார் என்பதை விசுவாசிக்கிறேன்.” நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும்; அதாவது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். நமது இருதயத்தின் அடி ஆழத்தில் இந்த சத்தியத்தை விசுவாசித்ததின் மூலமே நாம் இரட்சிக்கப் பட்டோம். இந்த நற்செய்தியை நாம் விசுவாசித்ததின் மூலமே நாம் இரட்சிக்கப் பட்டோம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததின் மூலம் நாம் இரட்சிக்கப் பட்டோம். நரகத்திற்கு செல்ல வேண்டிய மனிதர்களாகிய நம் அனைவரையும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் தேவன் இரட்சித்தார் என்பதை மக்கள் விசுவாசிக்கும் போது மட்டுமே அவர்களால் கர்த்தரின் சொந்த மக்களாக முடியும். இதனை விசுவாசிக்கிறீர்களா? இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசமே உண்மையான விசுவாசமாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் திரைச்சீலை வாசலில் வெளிப் படுத்தப்பட்ட ஆவிக்குரிய அர்த்தம் இதுவேயாகும். நீங்கள் இதனை விசுவாசிக்கிறீர்களா? இந்த சத்தியத்தை மக்கள் தமது இருதயங்களில் விசுவாசிக்கும் போது சரியான விசுவாசத்தைக் குறித்து அவர்களால் பேச முடியும். இருதயத்தில் விசுவாசிக்காமல் உதடுகளால் மட்டும் அறிக்கைச் செய்வது உண்மையான விசுவாசமாகாது, ஆனால் இருதயத்தின் அடி ஆழத்தில் விசுவாசித்தவாறே, உதடுகளினால் அவனின்/அவளின் விசுவாசத்தை அறிக்கைச் செய்வதே சரியானதாகும். உங்களை முற்றிலுமாக இரட்சித்த இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை நீங்கள் அனைவரும் விசுவாசிக்க வேண்டும்.
நாம் அவருக்கு எத்தனைக் கஷ்டப் பட்டு உழைத்தாலும் கூட போதுமான அளவு நம்மால் அவருக்கு நன்றி கூற முடியாது. அப்படியானால் நமது இரட்சிப்பை எப்படி நம்மால் மறக்க முடியும்? நரகத்திற்கு செல்வதைத் தவிர்க்க முடியாத உங்களையுன் என்னையும் நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்த தேவனை நம்மால் எப்படி மறக்க முடியும்? நமது களங்கங்கள் அன்றாடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம்மால் எப்படி மறக்க முடியும்? இந்த நற்செய்தியைத் தவிர வேறெந்த வழிகளிலும் நம்மால் இரட்சிக்கப் பட முடியாது என்றிருக்கும் போது, இந்த நற்செய்தியை நம்மால் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? நாம் எப்போதும் நன்றி உடையவர்களாய் இருக்கிறோம். நாம் மகிழ்ந்து களி கூறுகிறோம். அவரை எப்போதும் புகழுவதை நம்மால் தவிர்க்க முடியாது.
கர்த்தர் மனிதர்களை பொம்மைகளாக உருவாக்கியதாகவும், அவர்களை அவர் கேலிசெய்வதாகவும், இந்த சத்தியத்தைக் குறித்து எதுவும் அறியாதவர்கள் கூறுகிறார்கள். கர்த்தரை எதிர்த்து நின்று அவர்கள் கூறுகின்றனர், “கர்த்தருக்கு பொழுது போகாமல் இருந்திருக்க வேண்டும். அவர் நம்மைத் தனது பொம்மைகளாகச் செய்து நம்முடனே விளையாடுகிறார். நாம் பாவன் செய்வோம் என்பது அவருக்குத் தெரியும், அப்படியிருந்தும் நாம் பாவம் செய்வதை அவர் வெறுமனே பார்க்கிறார், அவர் அந்த பாவிகளை இரட்சித்ததாக இப்போது கூறுகிறார். அப்படியானால் அவர் நம்முடன் விளையாட வில்லையா?” எண்ணிலடங்காத மக்கள் இவ்வாறாக எண்ணுகின்றனர். கர்த்தருக்கு எதிராக அவர்கள் முணுமுணுக்கின்றனர், அவர் அவர்களை உண்மையாகவே நேசித்தால், அவர்களை அவர் நிறைவானவர்களாக படைத்திருக்க வேண்டும் எனவும், அதற்கு மாறாக தம்மை குறையுள்ள்வர்களாக படைத்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். கர்த்தரின் இருதயத்தை அறியாமல் அவரை எப்போதும் குற்றம் சாட்டும் அநேக மனிதர்கள் இருக்கின்றனர்.
 
 
நாம் கர்த்தரால் படைக்கப் பட்டவர்கள்
 
செடிகளையும் விலங்குகளையும் போல, மனிதர்களும் கர்த்தரால் படைக்கப் பட்டவர்களே. ஆனால் செடிகளையும் விலங்குகளையும் போல, மனிதர்கள் கர்த்தரால் படைக்கப்படவில்லை. அவர் நம்மைப் படைப்பதற்கு முன்னரேயே, தனது குமாரராகிய இயேசு கிறிஸ்துவினுள் நம்மைத் தனது சொந்த மக்களாக்கி, தனது மகிமையில் அவர்களை அனுமதிக்க அவர் தீர்மானித்தார், இந்த நோக்கத்திற்காகவே அவர் நம்மைப் படைத்தார். மற்ற படைப்புகள் படைக்கப் பட்ட நோக்கத்திலிருந்து மனிதர்கள் படைக்கப் பட்டதன் நோக்கம் வித்தியாசமானது. அப்படியானால், எந்த நோக்கத்துடன் கர்த்தர் மக்களைப் படைத்தார்? கர்த்தரின் மகிமையை பறை சாற்றுவதற்காக மட்டுமே படைக்கப் பட்ட செடிகளையும் விலங்குகளையும் போலில்லாமல், மகிமையினாலும் மாட்சிமையினாலும் நிறைந்தவர்களாக மக்கள் அவருடைய ராஜ்யத்தில் நித்தியமாக வாழும்படியாகவே அவர் அவர்களைப் படைத்தார். தம்முடைய தன்மைகள் பாவம் நிறைந்தவை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதை ஏதுவாக்குவதே அவர்களைக் கர்த்தர் படைத்ததற்கான நோக்கமாகும், மேலும் அவர்களை இரட்சித்த தேவனைத் தமது படைப்பின் தேவனாக ஏற்றுக் கொண்டு அவரை விசுவாசிக்கவும், இதன் மூலமாக அவர்கள் நிறைவானவர்களாகி எதிர்காலத்தில் கர்த்தரின் ராஜ்யத்தில் பிரவேசிக்கவே அவர் அவர்களைப் படைத்தார்.
கர்த்தர் நம்மை இயந்திர மனிதனாகவோ அல்லது பொம்மைகளாகவோ படைக்கவில்லை, ஆனால் படைத்தவரை ஏற்றுக் கொண்டு, இரட்சகரை விசுவாசித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து மறுபடியும் பிறப்பதின் மூலமாக அவரின் பிள்ளைகளாகும் படி அவர் நம்மைப் படைத்தார். மேலும், நமது படைப்பின் நோக்கத்தைப் பின்பற்றுவதின் மூலம், நாம் மகிமை அடைந்து அதனை அனுபவிப்போம். இந்த பூமியில் மற்ற ஆத்துமாக்களை நற்செய்தியின் மூலமாக இரட்சிப்பதற்காக நாம் நம்மை பலி கொடுத்தாலும், கர்த்தரின் ராஜ்யத்தில் நாம் ஆசரிக்கப் படுவோம். மனித குலத்திற்கான கர்த்தரின் அடிப்படை நோக்கப் என்னவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? கர்த்தரின் மாட்சிமையையும் அவரின் மகிமையையும் நித்தியமாக அனுபவிக்க அனுமதிப்பதே அந்த நோக்கமாகும். மனித குலத்தை தனது மக்களாக்குவதும், அவருடைய மாட்சிமையிலும் அவரின் மகிமையையிலும் பங்கு பெறச் செய்வதே அவர்களைக் கர்த்தர் படைத்ததின் நோக்கமாகும்.
நாம் ஏன் பிறந்தோம்? வாழ்வின் நோக்கம் என்ன? எங்கிருந்து நாம் வந்தோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இத்தகைய தத்துவக் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்க வில்லை, மேலும், இந்த பிரச்சினையைத் தீர்க்க மனிதர்கள் ஆதங்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த எதிர்காலத்தையே அறிந்து கொள்ளாத சில மக்கள் குறி சொல்லுபவர்களாகவும் மந்திரவாதிகளாகவும் மாறிவிட்டனர். நம்மைப் படைத்த கர்த்தரை அறிந்து கொள்ள மனித குலம் தவறியதும், அவர்களுக்கு கொடுத்த இரட்சிப்பை விசுவாசிக்கத் தவறியதுமான மனித குலத்தின் தவறுகளே இவற்றிற்கான காரணம்.
ஆயினும், நம்மைத் தனது சொந்த பிள்ளைகளாக்க, மற்ற படைப்புகளில் இருந்து கர்த்தர் நம்மை வித்தியாசமாக படைத்தார். படைத்தலுக்கு முன்னரேயே நமது இரட்சிப்பைத் திட்டமிட்ட அவர், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் ஆன நீரினாலும் ஆவியினாலும் நம்மை இரட்சித்தார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சட்டத்தின் மூலமாக நம்மை இரட்சித்ததின் மூலமாக, நமக்கான தனது நோக்கத்தை அவர் நிறைவேற்றினார்.
ஆகவே இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை நமக்களிக்கும் கர்த்தரின் நோக்கத்தை நாம் இப்போது அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். இதனை நாம் அறிந்து கொள்ளாவிட்டால், வாழ்வின் இரகசியமானது எப்போதும் மறைவானதாகவே இருக்கும். இந்த உலகத்தில் எதற்காக நாம் பிறந்தோம்? நாம் ஏன் வாழவேன்டும்? நாம் ஏன் உண்ண வேண்டும்? நாம் ஏன் இந்த வாழ்வை இப்படியாக வாழவேண்டும்? வாழ்வு, மரணம் மற்றும் வயது முதிர்தல், நோய் ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? நமது பாவங்களுக்காக நாம் ஏன் நரகத்திற்கு செல்ல வேண்டும்? வாழ்வு ஏன் இத்தனைக் கொடுமையானதாய் இருக்கிறது? வாழ்வு ஏன் இத்தனைக் வேதனையானதாய் இருக்கிறது? நம்மை இயேசு கிறிஸ்துவுக்குள் இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தரிடத்திலிருந்து இந்த கேள்விகளுகான பதில்களைப் பெறலாம்.
கர்த்தர் நம்மை இப்பூமியில் பிறக்க அனுமதித்தார் மேலும் நமது கடினமானதும் களைப்பானதுமான இவ்வாழ்வுக்கு நடுவே பரலோக ராஜ்யத்திற்கான விசுவாசமுடையவர்களாய் இருக்கும்படி நம்மைப் படைத்தார், இதன் மூலமாக, நரகத்திற்கு செல்ல வேண்டிய உங்களையும் என்னையும், நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பார், ஆகவே நம்மால் நித்திய ஜீவனை நம்மால் பெற்றுக் கொள்ளலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கும் போது, வாழ்வின் இரகசியங்கள் எல்லாம் தீர்க்கப்படும்.
 
 
உங்களுக்கும் எனக்குமான மாட்சிமையான திட்டம் கர்த்தரிடம் இருந்தது
 
கர்த்தர் தான் திட்டமிட்டதைப் போலவே, தனது குமாரராகிய இயேசு கிறிஸ்துவை இப்பூமிக்கு அனுப்பி, அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்ததின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் அவரின் விலையேறப்பட்ட சரீரத்தில் செலுத்தி, நமக்காக அவரை ஆக்கினைக்கும் மரனத்திற்கும் உட்படுத்தி, இதன் மூலமாக, நித்திய அழிவை எதிர்நோக்கியிருந்த நம் அனைவரையும், நம் எல்லாப் பாவங்களில் இருந்தும், ஆக்கினைகளில் இருந்தும், சாபங்களில் இருந்தும் இரட்சித்தார். இப்போது நாம் இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேன்டும், நம்மால் தவிர்க்க முடியாத அழிவில் இருந்து கர்த்தரின் குமாரரின் ராஜ்யத்திற்கு நம்மை இடம் மாற்றியதற்கும், நித்திய ஜீவனை நாம் அனுபவிப்பதை ஏதுவாக்கியதற்கும், கர்த்தருக்கு நம்மால் நன்றி கூறாமல் இருக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரின் இரட்சிப்பின் சத்தியமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும், இது, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்ட திரைச்சீலையில் வெளிப்படுத்தப் பட்டு, ஆசரிப்புக் கூடார கதவில் தொங்கவிடப்பட்டது.
ஆசரிப்புக் கூடார கதவிலிருந்த தூண்களின் வெண்கல பாதங்கள் நமது அடிப்படையான பாவ சுபாவத்தைக் காட்டுகின்றன, மேலும் இதன் மூலம நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கவும் நம்மை ஏதுவாக்குகின்றன. ஆசரிப்புக் கூடார கதவின் தூண்களும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட திரைச்சீலையும், நரகத்திற்கு செல்லவிருந்த நம்மை இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பட்ட பலி காணிக்கையினால் நமது ஆக்கினையிலிருந்து கர்த்தரின் கிருபை நம்மை இரட்சித்ததை வெளிப்படுத்தின. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்படியாக விசுவாசித்ததின் மூலமாக, எனது எல்லாப் பாவங்களிலிருந்தும் நான் இரட்சிக்கப் பட்டேன். நீங்களும் இப்படியாக விசுவாசிப்பீர்களா?
ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்களும் நானும் அதிர்ஷ்டசாலிகள். அநேக மக்கள் நேராக நரகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, நாம் சத்தியத்தைக் கண்டு பிடித்து இப்போது இயேசு கிறிஸ்துவுடன் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மையாகவே பெரிதான ஆசீர்வாதமாகும். நாம் பிறந்த இந்த உலகத்தில் பெறுமதியற்றவர்களாகவும் பயனில்லாதவர்களுமாக இருந்தோம், நம்மால் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாமல் நரகத்திற்குச் செல்லுபவர்களாயிருந்தோம், கோழைகளாக வாழ்ந்து நரகத்திற்குள் வீசப்படுபவர்களாக நாம் வாழ்ந்தோம். அப்படி இருந்தும் கூட, நமது தேவன் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, அதன் மூலமாக நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை நித்தியமாக இரட்சித்தார். நரகத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற செய்தியினால் ஆச்சரியப்படுவது மட்டுமின்றி, மதிப்புடைய, பயனுள்ள நீதியின் செயல்களைச் செய்ய ஏதுவாக்கப் பட்டோம் என்பதினாலும் ஆச்சரியப் படுகிறோம்.
தமது பாவங்களுக்காக ஒரே தரமாக பாவமன்னிப்பு பெற்றவர்களாலேயே. பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும். நமது தேவன் நம் கடந்த கால பாவங்களை மட்டுமே துடைக்கவில்லை, ஆனால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக, நாம் நமது வாழ்நாள் முழுவதும் செய்யும் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, நமது எல்லாப் பாவங்களையும் நித்தியமாக துடைத்து விட்டார். ஆகவே, இப்படியாக ஒரேதரமாக நிறைவேற்றப் பட்ட இரட்சிப்பை விசுவாசிப்பவர்கள் ஆசாரியர்களின் விசுவாசத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதால், இத்தகைய மக்களால் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
கண்டிப்பாக கூறவேண்டுமானால், ஆசரிப்புக் கூடார முறையைப் பொருத்தவர, சாதாரன ஆசாரியர்களால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாது, அங்கே தலைமை ஆசாரியனால் மட்டுமே பிரவேசிக்க முடியும். அந்த நித்தியமான தலைமை ஆசாரியர் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமல்ல. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இப்படியாக இரட்சிக்கப் பட்டவர்களால் மட்டுமே, கர்த்தருடைய வீட்டிற்குள்ளும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும் இயேசு கிறிஸ்துவுடனே பிரவேசிக்க முடியும்.
“இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்” (எபிரெயர் 10:18-22). தம்மை தீயவர்களாகவும் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாகவும் தம்மை அறிந்து கொண்டவர்கள் தூய்மையான நீரினாலும் (இயேசுவின் ஞானஸ்நானம்), இயேசுவின் இரத்தத்தினாலும், தம் எல்லாப் பாவங்களையும் கழுவி பாவ மன்னிப்பைப் பெற்று, கர்த்தருடைய ராஜ்யத்தில் அவருடனே என்றென்றும் வாழும் படியாக அங்கே பிரவேசிக்க முடியும்.
நாம் அன்றாடம் மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டிருந்ததால் நமது பாவங்கள் சுத்திகரிக்கப் படவில்லை, தேவன் இந்த பூமிக்கு வந்ததாலும், ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது உலகித்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமந்து சிலுவையில் ஆக்கினைக்கு உள்ளாகியதாலு, அவர் நமது எல்லாப் பாவங்களையும் துடைத்ததால் நமது பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டன. “இப்படி கர்த்தருடைய நீதியை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.” இயேசு ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார், இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் சிலுவைக்கு சுமந்து சென்று அவர் மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, நம்மை நித்தியமாக ஒரேதரமாக இரட்சித்தார். இந்த சத்தியத்தை தமது இருதயங்களின் அடி ஆழங்களில் விசுவாசிப்பவர்களால் மட்டுமே, பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும். நமது வாழ்நாள் முழுவதும் செய்யும் எல்லாப் பாவங்களையும், முழு பிரபஞ்சத்தின் எல்லாப் பாவங்களையும் அழித்து, நமது தேவன் ஒரேதரமாக நம்மை இரட்சித்தார் என விசுவாசித்ததின் மூலமாக நாம் பாவமன்னிப்பைப் பெற்றோம்.
ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் தேவன் நமது பாவங்களை ஒரேதரமாக எடுத்துப் போட்டார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தனது தோலில் சுமந்து, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, நமது நிறைவான இரட்சகராக ஒரேதரமாக மாறினார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தன்னுடைய 33 வருட வாழ்க்கையின் மூலமாக, நமது தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்தார். ஒரு சிறு புள்ளியைக் கூட விடாமல், அவை அனைத்தையும் மறையச் செய்தார். எனது இருதயத்தின் அடி ஆழத்தில் இதனை நான் விசுவாசிக்கிறேன். அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, உலகின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக சுமந்து, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தி எனது எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை அவர் ஏற்றுக் கொண்டு, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து மீண்டும் வாழுகிறார் என்பதை விசுவாசிக்கிறேன். இந்த விசுவாசத்தின் மூலமாகவே எனது பாவங்களில் இருந்து நான் இரட்சிக்கப் பட்டேன்.
இதனை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, பரலோக ராஜ்யத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும், மேலும் நாம் இப்பூமியில் வாழும் போது, இந்த விசுவாசத்தை ஒவ்வொரு நாளும் தியானிக்க முடியும். ஏன்? ஏனெனில் நாம் இனிமேல் செய்யப் போகும் பாவங்களைக் கூட அவர் எடுத்துப் போட்டார். ஆனால் நாம் பாவம் செய்யும் போதெல்லாம் அறிக்கைச் செய்ய வேண்டும். இந்தப் பாவங்களையும் கூட தேவன் தனது ஞானஸ்நானத்தால் சுமந்தார் என்பதை இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து நாம் விசுவாசிக்க வேண்டும். மீண்டுமாக விசுவாசிப்பதின் மூலமாக தேவன் உலகின் பாவங்களைப் பெறுப்பெடுத்துக் கொண்டார் என்பதை நாம் அங்கீகரிக்க வேன்டும். ஏன்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டிரா விட்டால். நமது இருதயங்கள் அழிந்துவிடும். நாம் இன்னமும் செய்யாத பாவங்களைக் கூட நமது தேவன் எடுத்துப் போட்டு விட்டதால், நமது பலவீனங்கள் வெளிப்படும் போது, அவரிம் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகிய அவரின் ஊழியத்தில் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.
தேவன் இந்த பூமிக்கு வந்து நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக சுமந்தார் என்பதை நாம் அனைவரும் விசுவாசிக்க வேண்டும். நமது எல்லாப் பாவங்களும் ஒரேதரமாக இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டன, ஏனெனில் தனது ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார். ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், சிலுவையில் மரித்ததின் மூலமாகவும் இயேசு கிறிஸ்து நமக்கு நித்திய இரட்சிப்பைக் கொடுத்ததால், இந்த சத்தியத்தை நாம் உறுதியாகவும், தைரியமாகவும் விசுவாசிக்க வேண்டும். யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, பரலோக ராஜ்யத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என நமது தேவனாகிய இயேசு கூறினார், “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்” (மத்தேயு 11:12). இந்த விசுவாசத்தின் மூலமாகவே, நமது சரீரத்தினதும், சிந்தனையினதும், மனதினதும், மாமிசத்தினதும் எல்லாப் பாவங்களையும் களங்கங்களையும் நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். அவரின் ஞானஸ்நானத்தின் மூலமாக தேவன் இந்த எல்லாப் பாவங்களையும், அவற்றிற்கான ஆக்கினையையும் ஏற்றுக் கொண்டார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக, கர்த்தரின் ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் இரட்சிக்கப் படவேண்டும்.
நீங்கள் எத்தனை குறைபாடுடையவர்களாய் இருந்தாலும் பரவாயில்லை, இந்த விசுவாசம் உங்களிடம் இருந்தால், நீங்கள் விசுவாசத்தின் மக்களாவீர்கள். நீங்கள் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும், தேவன் உங்களை நிறைவாக இரட்சித்தார், ஆகவே நீங்கள் இதனை விசுவாசிக்க வேண்டும். நமது தேவன் நித்தியமாக வாழுவதைப் போல, நமது இரட்சிப்பும் நித்தியமாக நிறைவானதாய் இருக்கும். நாம் செய்யவேண்டியதெல்லாம் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த நமது இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டியது மட்டுமே. அது சரியானதே! அவரை நமது இருதயங்களில் விசுவாசித்ததின் மூலம் நாம் இரட்சிக்கப் பட்டோம்.
தேவன் நம்முடைய நிறைவான இரட்சகராக இருப்பதினாலே, நமது பாவப் பிரச்சினைகள் அனைத்தையும் அவர் சரிசெய்தார். நமது தேவன் ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி, ஒருமுறை மரித்து, மரித்தோரிலிருந்து மறுபடியும் எழுந்து, அதன் மூலம் நித்திய இரட்சிப்பைக் கொடுத்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த இரட்சிப்பு எத்தனை ஆச்சரியமானது? நமது செய்கைகளில் நாம் எத்தனைக் குறைபாடுடையவர்களாக இருந்தாலும், இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக கர்த்தரின் ராஜ்யத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும். இந்த சத்தியத்தினாலேயே கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடிவதுடன் கர்த்தரின் எல்லா மகிமையான கம்பீரத்தையும் மாட்சிமையையும் அனுபவிக்க முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் அவற்றை அனுபவிக்க தகுதி பெற்றவர்களாவர். ஆனால் இந்த விசுவாசம் இல்லாமல், ஒருவரால் கூட கர்த்தரின் ராஜ்யத்தில் ஒரு காலடியையும் வைக்க முடியாது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் நம்மை இரட்சித்த சத்தியமானது படைப்பிற்கு முன்னரே இயேசு கிறிஸ்துவினுள் கர்த்தரால் திட்டமிடப்பட்டது. நம்மை இரட்சிக்க கர்த்தர் திட்டமிட்டதினாலே, அவர் இந்த உலகிற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றார், அதன் பிறகு உலகின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு எடுத்துச் சென்று அவை அனைத்திற்குமான தண்டனையை ஒரேதரமாக பெற்று, ஒருமுறை மரித்து, மரித்தோரிலிருந்து ஒருமுறை உயிரோடெழுந்து, இதன் மூலமாக நமக்கு நித்திய ஜீவனை வழங்கினார். இந்த இரட்சிப்பானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அவர் செய்த ஊழியங்களால் உருவாக்கப்பட்ட இரட்சிப்பாகும், நாம் இந்த இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே விசுவாசத்தினால் கர்த்தரின் நிறைவான மக்களாக முடியும். அப்பொழுது மட்டுமே விசுவாசத்தினால் கர்த்தரின் ஊழியர்களாக முடியும். நாம் கர்த்தருடைய நிறைவான ராஜ்யத்தில் பிரவேசித்து என்றென்றும் வாழமுடியும்.
நிறைவான கர்த்தர் நம்மை நிறைவாக இரட்சித்தார், ஆனால் அன்றாட வாழ்வில் நாம் இன்னமும் குறைபாடுடையவர்களாகவே இருக்கிறோம், ஏனெனில் நமது மாமிசம் குறைபாடுடையது. ஆனால் அது எப்படிப் பட்டது? நமது தேவன் முற்றிலுமாக ஞானஸ்நானம் பெற்றபோது, அவர் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டாரா இல்லையா? அவர் அப்படித்தான் செய்தார்! நமது தேவன் தனது ஞானஸ்நானத்தால் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டதால், நமது எல்லாப் பாவங்களும் அவரது ஞானஸ்நானத்தால் அவர் மீது சுமத்தப் பட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். உங்கள் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப் பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? இப்படிச் செய்வதின் மூலமாக, இயேசு நமது பாவங்களயும் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு சுமந்து சென்று, அங்கே சிலுவையில் அறையப்பட்டு, அவற்றின் மூலமாக கர்த்தரின் இரட்சிப்பின் திட்டத்தை முற்றிலுமாக நிறைவேற்றினார். நாம் குறைபாடுடையவர்களாய் இருந்தாலும் கூட, விசுவாசிப்பதின் மூலமாக கர்த்தரின் ராஜ்யத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். எதனை விசுவாசிப்பதனால்? இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகிய அவரின் ஊழியங்களை விசுவாசிப்பதின் மூலம் கர்த்தரின் ராஜ்யத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும்.
பாவமன்னிப்பை நாம் பெற்ற பிறகு, குறைபாடுடையவர்களாக இருந்த நாமே நல்விசுவாசம் உடையவர்களாக ஆலயத்தில் சிறந்தவர்களாக உள்ளனர். கர்த்தரின் ஆலயமானது வலிமையானவர்கள் ஆளும் இடமல்ல, அது குறை பாடுடையவர்களாக இருந்தவர்கள் ஆளும் இடமாகும். ஏன்? ஏனெனில் நாம் குறைபாடுடையவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருப்பதாலேயே, தேவனை இன்னமும் நம்மால் விசுவாசத்துடன் பின்பற்ற முடிகிறது. அது காயங்களை ஆற்றுவதற்கும், இளைப்பாறுவதற்குமான இடமாகும். “கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்” (ஏசாயா 11:8) இடமாக பரலோக ராஜ்யம் இருப்பதைப் போல, இந்த பூமியில் உள்ள பரலோகம் கர்த்தரின் ஆலயத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. கர்த்தரின் சபையைக் குறித்த ஆச்சரியமான இரகசியம் இதுவாகும்.
விசுவாசத்தினாலே நாம் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறோம். பலவந்தமான விசுவாசத்தினால் பரலோக ராஜ்யத்தை அவர்கள் பிடித்துக் கொள்ளுகிறார்கள். இந்த சத்தியத்தை உங்கள் இருதயங்களால் விசுவாசிக்கிறீர்களா? நானும் கூட, இதனை விசுவாசிக்கிறேன், மேலும், இதனால் தான் நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
நான் கர்த்தருக்கு நன்றியறிதல் உடையவனாக இருப்பதினாலே நான் இந்த நற்செய்திக்கு ஊழியம் செய்கிறேன். நான் இந்த சத்தியத்திற்காகவும், அதற்கு ஊழியம் செய்யவுமே வாழுகிறேன், ஏனெனில், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை அறியாத அநேக மக்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ, மற்றவர்கள் நற்செய்திக்கு ஊழியம் செய்கிறார்களா இல்லையா என்ற கேள்வியை ஒதுக்கித் தள்ளிவிடுங்கள், உங்களுக்குத் தேவையானது எல்லாம் நீங்கள் விசுவாசிப்பதேயாகும்.
இயேசு உங்களை ஒரேதரமாக இரட்சித்தர் என்ற சத்தியத்தை நீங்கள் அனைவரும் விசுவாசித்து, உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என நம்பி ஜெபிக்கிறேன்.