• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-14] கிழிந்து போன திரைச்சீலை (மத்தேயு 27:50-53)

(மத்தேயு 27:50-53)
“இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.”
 
 
கர்த்தர் வாசம் செய்த இடம் மகா பரிசுத்த ஸ்தலமாகும். மகா தலைமை ஆசாரியனால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்க முடியும், அந்த பாவ நிவாரண நாளில், இஸ்ரவேல் மக்களின் பாவமன்னிப்பிற்காக பலி காணிக்கையான ஆட்டின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு, அவன் அங்கே பிரவேசித்தான். அவன் அப்படிச் செய்ததற்கு காரணம் என்னவென்றால், ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலமானது, கர்த்தரின் வீடாகும், அது மிகவும் பரிசுத்தமான ஒரு இடமாக இருப்பதால், பலி காணிக்கையின் இரத்தம் இல்லாமல் அவனால் அங்கே பிரவேசிக்க முடியாது, அந்த இரத்தமானது பலியான மிருகத்தின் இரத்தமாகவும், அது அடிக்கப் படுவதற்கு முன் கைகள் வைக்கப்பட்டு, பாவிகளின் மீறுதல்களை ஏற்றுக் கொண்டதாயிருந்தது. வேறு வகையாக கூறினால், கர்த்தருடைய சந்நிதிக்கு முன்னதாக செல்லுவதற்கு முன்னர், பலி காணிக்கை ஒன்றைக் கொடுத்து பாவமன்னிப்பைப் பெறாவிட்டால், தலைமை ஆசாரியனால் கூட அதற்கான ஆக்கினையைத் தவிர்க்க முடியாது.
தேவாலயத்தின் திரைச்சீலை எப்போது கிழிந்தது? இயேசு தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்தபோது அப்படியாகிற்று. மரிப்பதற்காக அவர் ஏன் மரிப்பற்காக சிலுவையில் இரத்தத்தைச் சிந்தினார்? தேவகுமாரராகிய இயேசு, மனித சரீரத்தில் இந்த பூமிக்கு வந்து, யோர்தான் நதியில் யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக பாவிகளின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதே அதற்கான காரணமாகும். தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக் கொண்டதினால், சிலுவையில் இரத்தம் சிந்து மரித்ததின் மூலமே, அப்பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளையும் அவரால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. இதனால் தான் கர்த்தரின் தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் இருந்த திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாய் கிழிந்தது. மனிதகுலத்தை கர்த்தரிடம் இருந்து பிரித்த பாவச்சுவர் ஒரேதரமாக கீழே விழுந்தது என இது பொருள்படுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு பெற்ற ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தாலும், எல்லாப் பாவங்களையும் மறையச் செய்தார். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும், பிதாவாகிய கர்த்தர் நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து பரலோகத்திற்கான வாசலைத் திறந்தார், ஆகவே, இயேசுவின் இந்த ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தம் சிந்தலையும் விசுவாசிக்கும் எவராலும் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடிந்தது.
இயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் இருந்த இடத்தில் மூன்று மணி நேரங்களுக்கு இருள் கவிழ்ந்தது. யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தோலில் சுமந்த இயேசு, சிலுவையில் அறையப் பட்டபோது, மரணம் நெருங்குகையில், அவர் சத்தமிட்டார், “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்” (மத்தேயு 27:46). அதன் பிறகு அவர் தனது கடைசி வார்த்தையான “முடிந்தது” என்பதைக் கூறி, அதன் பிறகு மரித்தார். மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, 40 நாட்களாக சாட்சி கூறி, அவருடைய அநேக சீடர்களுக்கு முன்னதாகவும் பின்பற்றுவோர்களுக்கு முன்னதாகவும் பரலோகத்திற்கு ஏறினார்.
 
 
இயேசுவை பிதா உண்மையாகவே கைவிட்டாரா?
 
இயேசு அனுபவித்த பாடுகளின் அளவு மிகவும் வேதனையாய் இருந்தபடியால், தனது பிதா தன்னைக் கைவிட்டு விட்டதாக அவர் உணர்ந்தார். பாவத்திற்கான ஆக்கினையின் வேதனை அத்தனைப் பெரிதானது. யோவானால் ஞானஸ்நானம் பெற்றதாக் உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு தன்மீது ஏற்றுக் கொண்டதால், அவர் சிலுவையில் பாவத்திற்கான ஆக்கினையை சுமந்தபோது, பிதாவானவர் அவரை ஒரு நொடி வெறுத்தது உண்மையே ஆகும். பாவம் உள்ள யாவரையும் பிதாவாகிய கர்த்தர் தண்டித்தேயாக வேண்டும், மேலும் உலகத்தின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப் பட்டதால், இந்த பாவங்களுக்குத் தண்டனையாக இயேசு குத்தப்பட்டு சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்த வேண்டியதிருந்தது.
சாராம்சத்தில் பார்க்கும் போது கர்த்தராக இருக்கும் இயேசு, ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதால், உலகின் எல்லாப் பாவங்களும் அவருடைய பரிசுத்தமான சரீரத்தில் சுமத்தப்பட்டன. ஆகவே, உலகின் பாவங்களை ஏற்றுக் கொண்ட இயேசு, ஒரு நொடிப் பொழுது பிதாவாகிய கர்த்தரால் வெறுக்கப் பட வேண்டியிருந்தது, அவர் நமது எல்லாப் பாவங்களுக்குமான கிரயத்தை செலுத்துவதற்காகவும், அதன் மூலம் மனிதகுலத்தை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காகவும் சிலுவையில் பாடுபட்டு மரித்தார். இதனால்தான் பாவ ஆக்கினையின் கொடிய பாடுகளுக்கு அவர் உள்ளாக்கப் படவேண்டியிருந்தது, மேலும் இதனால் தான் பிதாவாகிய கர்த்தர் ஒரு நொடிப் பொழுது தனது குமாரரிடமிருந்து தனது முகத்தை திருப்ப வேண்டியிருந்தது.
இயேசு பிதாவால் என்றென்றும் கைவிடப்பட்டார் என்பது இதன் பொருளாகாது. மாறாக, நமக்கு பதிலாக நமது பாவங்களுக்கான ஆக்கினைகளை அவர் ஏற்றுக் கொள்ள வேன்டியதிருந்தது எனவும், இதன் காரணமாக பிதாவினால் அவர் ஒரு நொடிப்பொழுது கைவிடப்பட வேண்டியதிருந்தது என இது பொருள்படும். ஆனால் இயேசு தனது வலியினால், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கத்தியதற்கு காரணம் இயேசு மிகக் கொடிய வேதனையை சந்தித்ததே ஆகும், இதன் மூலமாகவே பாவத்தின் ஆக்கினையில் இருந்து நாம் இரட்சிக்கப் பட்டோம். நமது பாவங்களின் பொருட்டு கர்த்தரால் கைவிடப்பட வேண்டியவர்களாக நாம் இருந்தோம், ஆனால் இயேசு நமது பாவங்களைச் சுமந்து, பாவத்தின் ஆக்கினைக்கான வேதனையை சிலுவையில் அனுபவித்தார், மேலும், நமக்காக பிதாவினால் அவர் ஒரு நொடிப்பொழுது கைவிடப்பட்டார்.
சாலமோன் ராஜா அரசாண்ட போது தேவாலயம் கட்டப் பட்ட பிறகு, ஆசரிப்புக் கூடாரமானது தேவாலயத்தால் ஈடு செய்யப் பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தின் அதே அடிப்படைகள் முன்பிருந்ததைப் போலவே இப்போதும் புதிய தேவாலயத்தில் செயல் படுத்தப் பட்டன. ஆகவே இங்கும் கூட பரிசுத்த ஸ்தலத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திடம் இருந்து பிரிக்கும் திரைச்சீலை ஒன்று இருந்தது. “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” என்று நமது தேவன் சிலுவையில் இருந்து கூக்குரலிட்ட அந்த நொடிப் பொழுதேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது. இந்த சம்பவம் ஒரு சத்தியத்தைக் கூறுகிறது, தேவன் தான் பெற்ற ஞானஸ்நானத்தினால் நமது பாவங்களைக் கழுவி விட்டதாலும், தனது விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியதாலும், இப்போது பரலோகத்தின் வாசல் முற்றிலுமாக திறந்து விட்டது, இதனால், விசுவாசிக்கும் அனைவராலும் உள்ளே பிரவேசிக்க முடியும். இபோது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, விசுவாசத்தால் நாம் பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்படுத்தலின் மூலமாக, பழைய ஏற்பாட்டின் மக்கள் கூட வரப்போகிற மேசியாவாக இயேசுவை விசுவாசித்தனர், மேலும் இதன் மூலமாக அவர்கள் கூட தமது பாவங்களுக்கான பாவமன்னிப்பைப் பெற்று, கர்த்தரின் பிள்ளைகள் ஆனார்கள். புதிய ஏற்பாட்டில், நமது தேவன் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்ததின் மூலமாக பாவ மன்னிப்பைக் குறித்த கர்த்தரின் எல்லா நீதிகளும் நிறைவேறப் பட்டன. தேவன் நமக்குக் கொடுத்த நற்செய்தியாகிய பாவ மன்னிப்பைக் கேட்டு அதனை விசுவாசித்த நாம் நன்றியுடைய இருதயம் உடையவர்களாய் இருப்பதற்கான காரணம், நம்மிடம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி இருப்பதேயாகும்.
நம்முடைய சொந்தத்தில் முயற்சி செய்து பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாது, ஆனால் நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் சத்தியத்தின் மூலமாக, இந்த சத்தியத்தை விசுவாசித்து நமது பாவங்களில் இருந்து பாவமன்னிப்பு பெறமுடிகிறது. இயேசு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, நமது பாவங்கள் மறைந்ததால், விசுவாசத்தினால் நம்மால் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இப்படி இருக்கும் போது, கர்த்தருக்கு எப்படி நம்மால் நன்றி கூறாமல் இருக்க முடியும்? நமது தேவன் மரித்தபோது பரலோகத்தின் வாசல் மேலிருந்து கீழாக உடைந்து நொருங்கியது என்பதை நாம் இப்போது அறிவதால், அவருக்கு நம்மால் நன்றி கூறாமல் இருக்க முடியாது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும், தேவன்
இயேசு சிலுவையில் மரித்தபோது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது என்ற குறிப்பானது, இந்த காலத்திலும், யாரெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களோ அவர்கள் அனைவராலும் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதைக் கூறுகிறது. தேவன் நமக்கு அனுமதித்த இரட்சிப்பின் சத்தியத்திற்கான உறுதியான அத்தாட்சி இதுவேயாகும். நாம் பாவிகளாக இருந்தமையால், நம்மைத் தடுத்த பாவச்சுவர் இருந்தது, கர்த்தருக்கு முன்னதாக நாம் வருவதை அது தடுக்கிறது, ஆனால் அவரின் ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும், இந்த பாவச்சுவற்றை இயேசு ஒரேதரமாக மறையச் செய்தார். தேவகுமாரர் பாவிகளின் எல்லா மீறுதல்களையும் தன் மீது எடுத்துக் கொண்ட ஞானஸ்நானத்தையும், அவரது சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிக்கும் யாராலும் அவர்களுடைய பாவங்களில் இருந்து முழுமையாக சுத்திகரிக்கப் படுவதுடன், அவர்கள் பரலோக் செல்வது நிச்சயப்படுத்தப்பட்டது என்பதை, தேவாலயத்தின் திரைச்சீலையைக் கர்த்தர் மேலிருந்து கீழாக கிழித்த இந்த சம்பவமானது முக்கியத்துவப் படுத்துகிறது. இப்படியாக கர்த்தர் நம்மை பாவங்களில் இருந்து இரட்சித்தார்.
இயேசு தான் நிறைவேற்றிய இந்த இரட்சிப்பின் செயல்களுக்கு அத்தாட்சியாக தேவாலயத்தின் திரைச்சீலையை மேலிருந்து கீழாக கிழித்தார். ஆகவே, எபிரெயர் 10:19-22 கூறுகிறது, “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.”
இயேசு சிலுவையில் மரித்தபோது, மகா பரிசுத்த ஸ்தலத்தின் நுழைவாயிலாகிய அதன் திரையானது கிழிந்தது, மேலும் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திறந்த கதவானது பரலோகத்திற்கான புதிய ஜீவ வழியைத் திறந்தது என்பதற்கான கர்த்தரின் நற்செய்தி வார்த்தையாகும். அவருடைய ஞானஸ்நானத்தினாலும் (சுத்தமான நீர்) அவருடைய இரத்தத்தாலும் நமது இருதயத்தினதும், சரீரத்தினதும் எல்லாப் பாவங்களும் துடைக்கப் பட்டன என வேதாகமம் இங்கே கூறுகிறது, இதனால், அவருடைய முழுமையான ஞானஸ்நானத்தில் உள்ள விசுவாசத்தினால், மிகவும் நிச்சயமாக நம்மால் சுத்திகரிக்கப் படமுடியும்.
இதற்காக, எனது எல்லா நன்றிகளையும் கர்த்தருக்கு கொடுக்கிறேன். நாம் எத்தனை முயன்றும் பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியவில்லை, அத்தகைய மக்களாகிய நம்மை, இயேசு தனது நீதியின் செயல்களாகிய ஞானஸ்நானத்தின் மூலமும், அவரின் சிலுவை மரணத்தின் மூலமும் நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்ததுடன், பரலோகத்தின் வாசலை முற்றிலுமாக திறந்தார், அதனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களால் மட்டும் பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் நமது பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப் பட்டு பரலோகம் செல்லுவது நமக்கு சாத்தியமாகியது.
ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டதனாலே நமக்காக பரலோகத்தின் கதவுகளை தேவன் திறந்ததினாலே, நமது பாவங்களை இப்போது கழுவி இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடிகிறது. அப்படியானால் நம்மாக் எப்படி கர்த்தருக்கு நன்றி கூற முடியாது? அவருடைய பலி காணிக்கையின் அன்பிற்காக போதுமான அளவிற்கு அவருக்கு நம்மால் நன்றி கூற முடியாது. நமது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளுவதற்காக இயேசு பெற்ற ஞானஸ்நானத்தினாலும், இந்த நம்முடைய பாவங்களுக்காக ஆக்கினைக்குள்ளாவதற்கு நம் சார்பாக தனது சரீரத்தை பலி காணிக்கையாக அளித்தமையாலும், மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கதவு இரண்டாக கிழிந்தது.
 
 
பரலோகத்தினுள் பிரவேசிக்க ஒரேவழி மட்டுமே இருக்கிறது
 
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிப்பதால், நாம் பரலோகத்தினுள் பிரவேசிப்போம். இந்த சத்தியத்தின் நற்செய்தியைத் தவிர பரலோகத்திற்கு செல்ல வேறு எந்த வழியும் இல்லை. இயேசுவின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் இத்தனைச் செயல்களை செய்திருப்பதால், இயேசு நமக்காக செய்தவைகளை விசுவாசிப்பதின் மூலமே பரலோகத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும்.
இதனால் தான் தமது சொந்த முயற்சிகளாலும், பக்தியினாலும், மற்ற கபட்டுத்தனமான முயற்சிகளாலும் கிறிஸ்தவர்களால் பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியாது. இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசித்து தமது பாவங்களை சுத்திகரித்தவர்களுக்கே பரலோகத்திற்குள் பிரவேசிப்பதை அனுமதிக்க கர்த்தர் முடிவு செய்தவராயிருக்கிறார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்கள், இயேசு தேவகுமாரர் என்பதையும், அவரே கர்த்தர் என்பதையும், அவர் தனது ஞானஸ்நானத்தாலும், இரத்தம் சிந்துதலாலும் அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பவர்களாவர். இத்தகைய மக்களுக்கே தமது பாவங்களைக் கழுவும் ஆசீர்வாதத்தைக் கர்த்தர் அருளினார். இயேசு பெற்ற ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளினாலும், பிதாவாகிய கர்த்தர், இவற்றை விசுவாசிப்பவர்களை விசுவாசத்தினால் பரலோக ராஜ்யம் செல்ல ஏதுவாக்கினார்.
பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமா? இது உண்மையானதாயிருந்தால், நாம் பணம் செலுத்துவதின் மூலமாக நமது இரட்சிப்பைப் பெறுகிறவர்களாக இருப்போம், ஆகவே இது தேவனால் இலவசமாக கொடுக்கப் பட்ட இரட்சிப்பாக இருக்க முடியாது. பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தைத் தவிர வேறொன்றும் தேவையில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க, பணம் செலுத்துவதோ, செயல்களோ, நமது சொந்த முயற்சிகளோ எப்போதும் தேவையே இல்லை. பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க, மனிதத்தனமான எதுவுமே அவசியமில்லை. பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க தகுதியாவதற்கு, எத்தகைய முயற்சிகளையோ, செயல்களையோ, சித்தத்தையோ, ஈடுகளையோ, அல்லது நற்குனங்களையோ கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது இல்லை.
பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க ஒன்றே ஒன்று மட்டுமே மிகவும் முக்கியமானதாகும், இது நமது பாவங்களைக் கழுவிய, இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தையும், நமது பாவமன்னிப்பாக அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக அவர் செலுத்திய பலி காணிக்கையை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது. வேறு வழிகள் இல்லை. நற்செய்தியாகிய ஞானஸ்நானத்தையும் இயேசுவின் இரத்தத்தையும் விசுவாசிக்கும் விசுவாசமே நமக்குத் தேவைப்படும் ஒன்றாகும். இதனால் தான் பாவமன்னிப்பை நாம் பெற்று பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க, இயேசு நிறைவேற்றிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பது அவசியமானதாகும்.
அன்பின் தேவனாகிய இயேசு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது முழுமையான இரட்சிப்பை நிறைவேற்றினார். இயேசு ஏற்கனவே பாவ மன்னிப்பு இரட்சிப்பை முழுமையாக்கியதால், இந்த சத்திய நற்செய்தியை மட்டும் பாவிகள் முழுஇருதயத்துடன் விசுவாசித்து, அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களால் இரட்சிக்கப் படமுடியும். நம்மிடம் அநேக பாவங்கள் இருக்கின்றனவோ அல்லது சில பாவங்கள் இருக்கின்றனவோ, நமது எல்லாப் பாவங்களையும் அவர் நிவர்த்தி செய்தார், மேலும் விசுவாசித்தின் மூலமாக எல்லோரையும் பரலோகத்திற்குள் நாம் பிரவேசிக்க ஏதுவாக்கினார்.
பரலோகத்தின் வாசல்களை இயேசு திறந்தார், ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவிகளால் அதில் பிரவேசிக்க முடியும், இந்த இரட்சிப்பின் கிருபையானது உண்மையாகவே விசேஷமானது. “எனது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ள தேவன் ஞானஸ்நானம் பண்ணப் பட்டு என்னிடத்திலிருந்து அவர் சிலுவையில் மரித்தார்! அவர் எனது பாவங்களை கழுவி எனக்காக பரலோகத்தின் வாசலைத் திறந்தார்! அவர் என்னை மிகவும் நேசித்ததினாலே, ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தைச் சிந்தி, இப்படியாக எனது பாவமன்னிப்பை நிறைவேற்றினார்!” இப்படியாக, இந்த இரட்சிப்பின் சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கும் போது, விசுவாசத்தினால் நீங்கள் பரலோகத்தினுள் பிரவேசிப்பீர்கள்.
மக்கள் இயேசுவை தமது இரட்சகராக விசுவாசிப்பது அத்தனைக் கடினமான ஒன்றல்ல, ஆனால், கூறப்போனால், அது மிகவும் எளிதான ஒன்றாகும், அவர்கள் செய்ய வேண்டிய தெல்லாம் இயேசு இப்பூமிக்கு வந்தபோது அவர் சாதித்தவைகளை தனது இருதயங்களில் ஏற்றுக் கொண்டு, அவற்றை விசுவாசிக்க வேண்டியது மட்டுமே. யோவான் ஸ்நானனிடம், யோர்தான் நதியில் அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தின் மூலமாகவும் ஆவியின் மூலமாகவும் இயேசு நமது எல்லாப் பாவங்களையும் துடைத்து, அவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்கியதால், நாம் அனைவருக் இரட்சிக்கப் பட்டோம்.
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). நம்முடைய பாவங்கள் பெரியவைகளோ அல்லது சிறியவைகளோ, தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சிலுவையில் இரத்தம் சிந்தியதாலும் அவர் அவைகளை மறையச் செய்தார். நம்மை நமது பாவங்களில் இருந்து விடுதலையாக்கும், இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதின் மூலமே, நமது நித்திய இரட்சிப்பைப் பெற்று இந்த உண்மை இரட்சிப்பு அளிக்கும் விடுதலையைப் பெறலாம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிறைவேற்றியதின் மூலமாக பரலோகத்தின் வாசல்களை நமது தேவன் முற்றிலுமாக திறந்தார். நமது தேவன் இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் - இந்த சத்தியமாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, நம்மைக் கர்த்தருக்கு அருகாக கொண்டு சென்றது, மேலும் எதிர்காலத்தில் பரலோகத்தை நம்முடையதாக பெற்றுக் கொள்வதையும் அது ஏதுவாக்கியது. இப்போது நீங்கள் பரலோகத்தினுள் பிரவேசிக்க வேண்டுமானாலோ, அல்லது பாவத்திலிருந்து விடுதலையாகி கர்த்தரின் பிள்ளைகளாக வேண்டும் என்றாலோ, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசித்து உங்களின் பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசுவாசமே நீங்கள் பாவமன்னிப்பைப் பெற உங்களை ஏதுவாக்கி, பரலோகத்தின் வாசலுக்கு உங்களை வழிநடத்துகிறது.
நம்மைக் குறித்து நமது தேவனுக்கு எல்லாம் தெரியும். நாம் என்று பிறந்தோம் என்று அவருக்குத் தெரியும், நாம் இதுவரைச் செய்த பாவங்களையும் அவர் அறிவார், இனிமேல் நாம் செய்யப் போகும் பாவங்களையும் அவர் அறிவார். நாம் எத்தனைக் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், நமது சொந்தத்தில் நமது பாவங்ளை நம்மால் அழிக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். நம்மைக் குறித்து தேவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால், தனது ஞானஸ்நானத்தாலும், சிலுவையின் இரத்தத்தாலும் அவர் நமது எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார்.
 
 
இயேசு ஏன் இந்த பூமிக்கு வந்தார்?
 
இயேசு என்ற பெயரின் பொருள் இரட்சகர் என்பதாகும். நமது பாவங்களில் இருந்து கிடைக்கும் இரட்சிப்பானது மனிதர்களால் நிறைவேற்றக் கூடிய ஒன்றல்ல என்பதாலும், அது தெய்வீக வல்லமையின் எல்லைக்குட்பட்ட ஒன்று என்பதாலும் இயேசு இப்பூமியில் பிறந்தார். இதைப் போல, இயேசுவின் பிறப்பிற்கு ஒரு நோக்கம் இருந்தது. இதனால் தான் மனிதகுலத்தை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க, கன்னியின் சரீரத்தின் மூலமாக இயேசு இப்பூமியில் பிறந்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆதாம் மற்றும் ஏவாளின் மீறுதலினால், பாவத்தை சொந்தமாக்கி கொண்ட பாவிகளுக்காக, பெண்ணின் சரீரத்தின் மூலமாக இயேசு பிறந்தார். இந்த உலகத்தின் எல்லாப் பாவிகளையும் அவர்களின் எல்லா மீறுதல்களிலிருந்து இரட்சிக்கும் இரட்சகராக, நமது தேவன் கர்த்தரின் வல்லமையினால் கன்னிப்பெண்ணின் சரீரத்தில் கர்ப்பமாகி, இந்த உலகத்திற்கு வந்தார்.
அவருடைய ஒரு சொந்தப் படைப்பான ஒரு சரீரத்தின் மூலமாகவே நமது தேவன் இந்த உலகத்தில் பிறந்தார், இதனால் அவரால் களங்கமில்லாத பலி காணிக்கையாக முடிந்தது. நேரம் வந்தபோது, ஒவ்வொரு நிலையாக, நமக்கு இரட்சிப்பை எடுத்து வரும் தனது திட்டத்தைச் செயல் படுத்தினார். நமது தேவனுக்கு 30 வயதாகும் போது, யோர்தான் நதியில் அவர் ஞானஸ்நானம் பெற்றார். இந்த உலகத்தில் அவர் பிறந்ததற்கான நோக்கத்தை எட்டுவதற்கு, ஞானஸ்நானம் பண்ணப்படுவதின் மூலம் இயேசு உலகத்தின் பாவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, ஆகவே இதனை நிறைவேற்றுவதற்கு யோவானிடமிருந்து அவர் ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:13-17).
இப்படியாக உலகின் எல்லாப் பாவங்களையும் தனது ஞானஸ்நானத்தால் ஏற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் சிலுவையில் அறையப் பட்டார். நமது தேவன் ஞானஸ்நானத்தைப் பெற்று உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதால், நமது பாவங்களுக்கான தண்டனையை நம்முடைய இடத்திலிருந்து பெற்றார். யோவான் ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானத்தின் மூலமாகவும் அவரின் சிலுவையின் இரத்தத்தின் மூலமாகவும், எல்லாப் பாவங்களையும் தேவன் மறையச் செய்ததுடன், விசுவாசிப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து இரட்சிக்கப்படும் படியும் செய்தார்.
மக்கள் தாம் எதில் அறிவில்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த பலவீனத்தில் கட்டுண்டு இருந்தாலும், அவர்கள் எத்தகைய பாவிகளாக இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக விசுவாசிகளாகிய நாம், தேவனுடைய ராஜ்யமான பரலோகத்தினுள் பிரவேசிப்பதை ஏதுவாக்கினார். பாவத்திற்கான கிரயத்தௌச் செலுத்தவே இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தினார். நமது பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தியதின் மூலமாகவும் தன்னை பலி காணிக்கையாக்கியதின் மூலமாகவும் இயேசு நமது இரட்சிப்பை நிறைவேற்றியதால், விசுவாசிப்பவர்களாகிய நம்மால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது பாவங்களைக் கழுவ முடியும். இது கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியமும், பாவமன்னிப்பின் கருப் பொருளும் ஆகும்.
இந்த உலகத்தின் எல்லாப் பாவிகளினதும் இரட்சகராவதற்காக தேவன் இந்த உலகத்திற்கு வந்தார். மேலும் தேவன் பாவங்களிலிருந்து நம் அனைவரையும் இரட்சித்தார். யாராக இருந்தாலும், தனது செயல்களை விசுவாசிப்பதின் மூலமாக, எல்லாப் பாவிகளும் பரலோகத்தினுள் பிரவேசிப்பதை நமது தேவன் ஏதுவாக்கினார்.
இது தேவனின் அன்பாகும். நமது தேவன் நம்மை இத்தனையாய் இரட்சித்ததால் நம்மை இரட்சிக்க அவர் ஞானஸ்நானம் பெற்று தனது இரத்தத்தைச் சிந்தினார். தனது சொந்த சரீரத்தில் அன்பு கூறுவதைப் போல நம்மில் அன்பு கூர்ந்த அவர், நம்மைப் பாவங்களில் இருந்து விடுதலையாக்க, ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும் இரட்சிப்பை அவர் நிறைவேற்றினார். நாம் மரிக்கும் நாள் வரையிலும் தொடர்ந்து பாவங்களைச் செய்யும் பாவிகளாக இருந்தோம். நமது பாவங்களினால் துன்புற்ற நாம் அதிகமதிகமாக கர்த்தரிடமிருந்து தொலைவாகச் சென்றோம். நம்மைப் போன்ற மக்களை இரட்சிக்க, இரட்சிப்பின் செய்கைகளை தேவன் முழுமையாக்கினார், இது அவர்கள் அவருடன் ஐக்கியமாவதை ஏதுவாக்கியது.
பாவிகளாகிய நம்மை கர்த்தருடைய அன்பினாலே, நமது தேவன் இரட்சித்தார். நமது மீறுதல்களில் இருந்து பாவிகளாகிய நம்மை இரட்சிப்பதற்காக, தனது ஞானஸ்நானத்தைப் பெற்றதுடன் தன்து இரத்தத்தையும் சிந்தியதின் மூலம், கர்த்தரின் நீதியையும் அன்பையும் அவர் நிறைவேற்றினார். நற்செய்தியை விசுவாசிக்கும் நாம், நமக்காக தேவன் செய்தவற்றிற்காக நன்றியறிதல் உடையவர்களாய் இருக்கிறோம், நாம் அவருக்கு முன்னதாக குணிந்து வணங்குகையில், நமது விசுவாசத்தின் நன்றியை அவருக்கு கூறுவதற்கு வார்த்தைகளால் முடியவில்லை. நமது தேவன் நமக்குக் கொடுத்த பாவமன்னிப்பின் சத்தியமானது மிகவும் உயர்வானதாகவும், முழுமையான அன்பாகவும் இருக்கிறது, அதனை தர்க்கத்தின் வார்த்தைகளாலோ அல்லது இனிப்பான வார்த்தைகளாலோ விவரிக்க முடியாது.
2,000 வருடங்களுக்கு முன்னதாக, அந்நேரத்தில் நாம் யாரும் பிறக்கவில்லை. 2,000 வருடங்களுக்கு முன்னதாக உலகத்தின் தேவாலய திரையும், கர்த்தரின் ராஜ்யத்தின் பரலோக தேவாலயத்தின் திரையும் திறந்தன. அந்நேரத்தில் நாம் தாயின் கர்ப்பத்தில் கூட இருக்கவில்லை, ஆனால் நம்மைக் குறித்து நமது தேவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் பிறக்கப் போகிறீர்கள் என்பதும், உங்களுடைய சொந்த தனிப்பட்ட வழிகளில் வளரப் போகிறீர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். தேவன் என்னை நேசித்தார் - என்னை மட்டுமல்ல, உங்களையும் மற்ற அனைவரையும் கூட ஒரே மாதிரியாக நேசித்தார். தேவன் நம்மை மிகவும் அதிகமாக நேசித்ததினாலே, நமக்காக இயேசு நிறைவேற்றிய, நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியை விசுவாசித்து, எல்லாப் பாவிகளும் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதை ஏதுவாக்கினார். நீர் மற்றும் ஆவியின் மூலமாக (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம்), பாவங்களில் இருந்து இரட்சிப்பை இயேசு முழுமையாக்கினார்.
தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது உண்மையாகவே ஆச்சரியமூட்டும் ஒரு நிகழ்ச்சியாகும். இயேசு சிலுவையில் மரித்ததின் மூலமாக, இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையால் எப்படி கிழிய முடியும்? இந்த திரைச்சீலையானது இன்றைய கார்பெட்டுகளைப் போன்றது. அது மிகவும் தடிமனாகவும் உறுதியாகவும் நெய்யப் பட்டது. கார்ப்பெட்டுகளைப் போல நெய்யப் பட்ட அத்தகைய திரைச் சீலைகளை இன்னமும் நம்மால் பாலஸ்தீன நாட்டிலே பார்க்க முடியும். அவைகள் மிகவும் நெருக்கமாக நெய்யப் பட்டிருப்பதினாலே, நான்கு குதிரைகளை நான்கு மூலைகளிலும் கட்டி எதிர் எதிர் திசையில் இழுத்தாலும் அது கிழியாது என்று கூறப்படுகிறது. ஒரு குதிரையின் பலம் என்ன? ஆயினும் கூட இயேசு சிலுவையில் மரித்த போது, அந்த திரைச் சீலையை மேலிருந்து கீழாக கிழிக்க வேண்டுமானால், குறைந்தது நான்கு குதிரைகள் தேவைப் பட்டிருக்கும்.
திரைச்சீலை ஏன் கிழிந்தது? மனிதகுலத்தின் இருதயங்களில் இருந்த எல்லாப் பாவங்களையும் இயேசு கழுவி விட்டதனாலேயே அவை கிழிந்து போயின. ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும் மரிக்கும் படியாக சிலுவையில் அறையப்பட்டதினாலும் எல்லா நீதியையும் அவர் நிறைவேற்றியதாலே அது கிழிந்து போனது. ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களை ஏற்றுக் கொண்டதாலும், சிலுவையில் அறையப் பட்டதாலும், விசுவாசிப்பவர்கள் பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கான வழியை இயேசு திறந்து விட்டார். இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசிப்பது மட்டுமே. விசுவாசிப்பதின் மூலமாக நீங்கள் அனைவரும் பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கு ஏதுவாக, பரலோகத்தின் வாசலை தேவன் திறந்து விட்டார்.
 
 
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் ஆகிய இரண்டும் நமது இரட்சிப்பிற்கு அவசியமானதா?
 
பழைய ஏற்பாட்டு காலத்திற்கு முன்னரேயே திட்டமிடப்பட்ட இரட்சிப்பிற்கான முறையின் மூலமாக, இயேசுவின் தலை மீது கைகள் வைக்கப் பட்டன, இந்த சடங்கானது பலி காணிக்கைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. கைவைத்தலின் மூலமாக, பலி காணிக்கையானது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, மரிக்கும் இந்த சடங்கானது கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சட்டமாக இருப்பதினாலே, நம்மை நித்தியமாக இரட்சிப்பதற்காக பலி காணிக்கையாக நம்மிடம் வந்த இயேசுவால், கைவைத்தலின் ஒரு முறையான தனது ஞானஸ்நானத்தைப் பெற்று, அதன் மூலமாகவே நமது எல்லாப் பாவங்களையும் துடைக்க முடிந்தது. இதனால் தான் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், தலைமை ஆசாரியன் பிரவேசிப்பதற்கு கூட, தனது கைகள் வைக்கப் பட்டதினால் பாவங்களை ஏற்றுக் கொண்ட பலி காணிக்கையின் இரத்தத்தை தன்னுடனே கூட எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
அப்படியானால், இந்த இடத்திற்குள் தலைமை ஆசாரியன் ஏன் இரத்தத்துடனே பிரவேசிக்க வேண்டியிருந்தது? மாமிசத்தின் ஜீவன் இரத்தத்தில் இருப்பதினால், தனது சந்நிதானத்திற்குள் வருவதற்கு முன்னதாக, தலைமை ஆசாரியன் தனது ஆத்துமாவில் உள்ள பாவங்களை நிவர்த்திப்பதற்காக அவர் அதனை அவன் கைகளில் கொடுத்தார் (லேவியராகமம் 17:11). தமது பாவங்களுக்காக எல்லாப் மக்களும் மரிக்க வேண்டியவர்களாக இருந்தனர், ஆனால் யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக (ஞானஸ்நானத்தின் மூலமாக எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டன) மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டு, அதனைத் தனது தோல்களில் சுமந்ததினாலே, இயேசு சிலுவையில் அறையப் பட்டு, தான் சிந்திய இரத்தத்தின் மூலமாக அவர் நம்மை தனது சொந்த ஜீவனின் மூலமாகவே இரட்சித்தார். பாவிகள் கர்த்தருக்கு முன்னதாக வருகையில், நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தை அவர்கள் எடுத்து வர வேண்டும் என்று இது நம்மிடம் கூறுகிறது. இயேசுவின் ஞானஸ்நான நீறையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் முழு இருதயத்துடன் விசுவாசிக்கும் போதே, நமது பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.
இப்போது, இயேசு எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார், ஆகவே யாரும், அவனின்/அவளின் பாவமன்னிப்பிற்காக மனம் வருந்து ஜெபிக்கவே, அல்லது உபவாசம் செய்யவே, அல்லது காணிக்கைகளைக் கொடுக்கவோ தேவை இல்லை. நாம் மனம் வருந்தி ஜெபிக்க வேண்டியதும் இல்லை, அல்லது நமது பாவங்களுக்காக ஆக்கினைக்குள்ளாகவும் வேன்டியதில்லை, ஏனெனில், இயேசு ஏற்கனவே பாவமன்னிப்பிற்கான பலி காணிக்கையைத் தனது ஆக்கினையின் மூலம் கொடுத்து விட்டார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பை விசுவாசிப்பது மட்டுமே.
பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப் பட்ட இளநீல நிற நூலைப் போன்று இயேசு பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விசுவாசித்து, அதன் சிகப்பு நிற நூலைப் போன்ற அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை விசுவாசிப்பதே, ஒருவர் செய்ய வேண்டிய அனைத்துமாகும். ஆசரிப்புக் கூடார வாசலில் பயன்படுத்தப் பட்ட இரத்தாம்பர நிற நூலில் வெளிப் படுத்தப் பட்ட, அடிப்படையில் இயேசுவே ராஜாதி ராஜா என்பதே சத்தியமாகும். மேலும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட பாவ மன்னிப்பை விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டு, நமது எல்லாப் ஆக்கினைகளும் ஏற்கனவே முடிந்து விட்டன என்பதை விசுவாசித்தால், நம்மில் யாராலும் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும். இந்த நற்செய்தி, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும்.
 
 
இயேசு சிலுவையில் மரித்தபோது தேவாலயத்தின் திரைச்சீலை ஏன் இரண்டாக கிழிந்தது? இதனை இன்னுமொரு முறை பார்ப்போமாக
 
பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப் பட்ட இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவை நற்செய்தியாகும், அது விசுவாசிப்பவர்களுக்கு பாவமன்னிப்பின் ஆசீர்வாதத்தையும், பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்கக்கூடிய ஆசீர்வாதத்தையும் அளிக்கிறது. இதனால் தான் இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தபோது திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. இயேசுவை விசுவாசிப்பதற்கு இதுவே கர்த்தரால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். “என்னுடைய இடத்திலிருந்து இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றதால், அவர் தனது இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்தார், அதன் மூலமாக பாவத்தின் சம்பளமான மரண சம்பளத்தை அவர் கொடுத்தார். சிலுவையில் மரிக்கையில் இயேசு கூறினார், “முடிந்தது” இந்த நொடிப் பொழுதில், பரலோக ராஜ்யத்திற்கு நாம் செல்வதற்கான வழியை அவர் நமக்காக திறந்தார்.
தொடர்ந்து உயர்ந்து கொண்டே போவதைத் தவிர்க்க முடியாத பாவச்சுவரின் மூலம் கர்த்தரிடம் இருந்து பிரிபட்டவர்களை இரட்சிக்கவே இயேசு இப்பூமிக்கு வந்தார். இது இயேசுவின் சொந்த சித்தமாகும், அதே நேரம் அது பிதாவாகிய கர்த்தரின் கட்டளையும் நமக்கான அன்பும் ஆகும். பிதாவின் சித்தத்திற்கு கீழ்படிந்தவராக, தனது சொந்த சரீரத்திற்குள் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமத்திய ஞானஸ்நானத்தை அவர் பெற்றார். தனது ஞானஸ்நானத்தினால் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன் தோல்களின் மீது ஏற்றுக் கொண்டதால், அவர் சிலுவைக்குச் சென்று, சிலுவையில் அறையப்பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தி மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, தனது இரட்சிப்பின் செய்கைகளை இவ்வாறாக அவர் முழுமையாக்கினார். இவை இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட ஊழியங்களாகும், அது பாவிகளை அவர்களின் மீறுதல்களிலிருந்து விடுவிக்கும் பாவமன்னிப்பாகும், மேலும் இதுவே பலி காணிக்கை முறையின் முடிவுமாகும்.
இயேசு தனது ஊழியங்களால இரட்சிப்பை நிறைவேற்றியதால், இதுவரை எந்த மனிதர்களாலும் பிரவேசிக்கக் கூடாததாக இருந்த பரலோகத்தின் வாசல்கள் இப்போது திறந்தன. பழைய ஏற்பாட்டின் முறைப்படியான, கைவைத்தலினாலும், பலி காணிக்கையாக பயன் படுத்தப் படும் மிருகத்தின் இரத்தத்தினாலும், இரட்சிப்பின் கதவு இனிமேல் திறக்கப் படாது என்பதையும், இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிக்கும் விசுவாசத்தினாலுமே அது திறக்கப் படுகிறது என்பதையும் அது விளக்கிக் கூறுகிறது. திரைச் சீலை கிழிந்தது என்பது இரட்சிப்பு நிறைவேறியதை அறிவிக்கிறது, எனவே தேவனால் நிறைவேற்றப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உன்மையாகவே அறிந்து அதனை விசுவாசிக்கும் எவரும் பரலோகத்தினுள் பிரவேசிக்க கர்த்தர் அவர்களை ஏதுவாக்கினார். இதனால் தான் தேவாலயத்தின் திரைச் சீலை இரண்டாக கிழிந்தது.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்கும் விசுவாசத்தினால் பரலோக ராஜ்யத்தினுள் நீங்கள் பிரவேசிக்க வேண்டும். எந்தப் பாவங்களும் இல்லாத இயேசு மனித ரூபமெடுத்து, நமது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்வதற்காக யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:15). மேலும், நமது பாவங்களுக்கு சம்பளமாக அவரின் சரீரத்தின் ஜீவனையே கொடுத்து, நாம் கர்த்தருக்கு முன்னதாக வரும்போது நாம் நம்முடனே எடுத்துச் செல்லவேன்டிய நித்தியமான பாவ நிவாரண பலியானார். ஆகவே, தனது ஞானஸ்நானத்திற்கு பிறகு இயேசு சிந்திய இந்த இரத்தத்தை நாம் அனைவரும் நமது இரட்சிப்பாக விசுவாசிக்க வேன்டும். மனிதர்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கவும் அவர்களை கர்த்தருடைய சொந்த மக்களாக்கவும், தனது சொந்த சரீரத்தைக் கிழித்து பரலோகத்தின் வாசலை இயேசு திறந்தார்.
இயேசு நம்மை இரட்சித்தார் என்பதை அறிந்து கொள்ளும் போது, அவர் சிலுவையில் வெறுமனே இரத்தம் சிந்தவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளவேன்டும். சிலுவையில் மரிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னதாக, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று நமது எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். ஆகவே, முழு மனித குலத்தின் நன்மைக்காக இயேசு யோவானிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்று, ரோம போர்சேவகர்களால் சிலுவையில் அறையப் பட்டார். இந்த உலகத்தில் நீங்களும் நானும் பிறப்பதற்கு முன்னரே, இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தனது இரத்தத்தை சிந்தியதின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் அவர் சுத்தப் படுத்தி விட்டார்.
இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானமானது இரட்சிப்பிற்கான முறையாகும், நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக முன்னதாக தன்மீது ஏற்றுக் கொள்வதை அவர் நிச்சயப் படுத்த வேன்டியிருந்தது. அவர் சிந்திய இரத்தமானது இந்த எல்லாப் பாவங்களுக்குமான கிரயம் செலுத்துதலாகும். இயேசுவே கர்த்தராக இருப்பதால், அவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தாலும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தாலும், நமது பாவமன்னிப்பிற்கு நிச்சயமான ஆதாரங்களாகின. இந்த நமது தேவனின் நிறைவான பலி காணிக்கையை அவர் முழு மனிதகுலத்தின் இரட்சிப்பிற்காக செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நமது பாவங்களை கழுவி நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் ஆக்கினைகளிலிருந்தும் நம்மை இரட்சித்தது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
 
 
இயேசுவின் ஞானஸ்நானத்தாலும் அவரின் சிலுவை இரத்தத்தாலும், மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களும் இப்போது கழுவப் பட்டன
 
மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவுவதற்காகவே இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். இரட்சிப்பிற்கான இயேசுவின் ஊழியத்தை நாம் பார்க்கையில், அவருடைய ஊழிய வாழ்விலிருந்து அவருடைய ஞானஸ்நானத்தை அகற்றிவிட்டால், உலகம் தோன்றுவதற்கு முன்னரே இயேசு கிறிஸ்துவுக்குள் திட்டமிடப்பட்ட மனித குலத்தின் இரட்சிப்பானது வெறும் பொய்யாக மாறிவிடும். உலகம் தோன்றுவதற்கு முன்னரேயே, மனித குலத்தின் பாவங்களை எடுத்துக் கொள்ள ஞானஸ்நானம் பெறுவதற்கும், தனது இரத்தத்தைச் சிந்தவும் இயேசு ஆயத்தமாக இருந்தார்.
இதனால் தான் அனைத்து மனிதர்களினது பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானனால் இயேசு ஞானஸ்நானம் பண்ணப் பட்டார், இதன் மூலமாக எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 11:11-12; மத்தேயு 3:15). இயேசு பாவிகளின் பாவங்களை ஏற்றுக் கொண்டு, அவற்றை சுத்தப்படுத்தினார், நாம் நமது பாவங்களுக்காக மரிப்பதற்கு பதிலாக, நமது இடத்திலிருந்து அவர் மரித்து, அப்படிச் செய்ததின் மூலமாக, விசுவாசிப்பவர்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும், ஆக்கினைகளிலிருந்தும் அவர் விடுதலையாக்கினார். இந்த முறையின் மூலமாக (ஞானஸ்நானம் பண்ணப் படும் முறையின் மூலமாக), மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது இயேசுவால் ஏற்றுக் கொள்ளமுடிந்ததுடன் தனது சிலுவையின் இரத்தத்தால் பாவத்திற்கான எல்லா ஆக்கினைகளையும் கூட அவரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15). இயேசுவானவர் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார் என்பது பாவிகளாகிய நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார் என பொருள்படுகிறது.
சகோதர சகோதரிகளே, 2,000 வருடங்களுக்கு முன்னதாக இயேசு இப்பூமிக்கு வந்தார் என்பதையும், அவருக்கு 30 வயதாகும் போது அவருக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டது என்பதையும், உங்களுக்காக சிலுவையில் இரத்தத்தைச் சிந்தினார் என்பதையும், உங்கள் சொந்த கண்களால் பார்க்கவில்லை என்பதற்காக அவற்றை விசுவாசிக்க முடியாமலிருக்கிறதா? ஆனால், நமது குறைபாடுகள் அனைத்தையும் தெரிந்த கர்த்தர் நமது இரட்சிப்பை, உலகம் உருவாவதற்கு முன்னரேயே, நீரினாலும் இரத்தத்தினாலும் அளிக்க திட்டமிட்டு, இயேசு கிறிஸ்துவையும் யோவான் ஸ்நானனையும் அத்திட்டத்தின் படி அனுப்பி, நம் அனைவரின் இரட்சிப்பையும் நிறைவேற்றினார். இந்த சத்தியத்தை நாம் அறிந்து அதனை விசுவாசிக்க நம்மை ஏதுவாக்குவதற்காக, கர்த்தர் தனது ஊழியர்கள் தனது வார்த்தையை எழுதி வைக்கும் படிச் செய்தார். எழுதப் பட்ட அவரின் வார்த்தையின் மூலமாக, முழு மனிதகுலத்திற்கான இரட்சிப்பின் திட்டத்தையும், அதன் நிறைவேறுதலையும் குறித்த எல்லா காரியங்களையும் வெளிப்படுத்தினார். சத்தியமாகிய எழுதப் பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையின் மூலமாக, நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ளும் படியாக இயேசுவானவர் யோவானால் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை நாம் அறிந்து கொள்ள நம்மை அவர் ஏதுவாக்கினார்.
இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் நமது சொந்த இரட்சிப்பாக நாம் ஒவ்வொருவரும் இப்போது விசுவாசிக்க வேண்டும். நமது மாமிசத்தின் கண்களால் அவற்றை நாம் காணாவிட்டாலும் கூட, நமது இருதயங்களால் விசுவாசிக்க வேன்டும். அவருடைய வார்த்தையின் அடிப்படையாக கொண்ட விசுவாசத்தை நாம் விசுவாசிக்கும் போது உண்மையான விசுவாசம் வருகிறது. தோமாவிடம் இயேசு கூறினார், “காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (யோவான் 20:29). இயேசு தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகவும், தான் சிந்திய இரத்தத்தின் மூலமும் உங்களையும் என்னையும் இரட்சித்தார். இதனை விசுவாசிப்பவர்கள் பரலோகத்தினுள் பிரவேசிப்பதை அவர் ஏதுவாக்கினார்.
இதனால் தான் இயேசுவானவர் சிலுவையில் மரிக்கும்போது, தேவாலயத்தின் திரைச்சீலையைக் கர்த்தர் கிழித்து போட்டார். மனிதகுலமாகிய நம்மை கர்த்தரிடமிருந்து தடுத்த பாவச்சுவற்றை இயேசு நொருக்கிப் போட்டார். பாவத்தின் எல்லாச் சுவர்களையும் நொருக்கிப் போடுவதற்கு, இயேசு செய்தவைகள் தேவைக்கும் அதிகமானவையாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தனது இருதயத்தில் விசுவாசிப்பவர்கள் பரலோகத்தினுள் எந்த தடையும் இன்றி பிரவேசிப்பதை அவர் அவர்களுக்கு சாத்தியமானதாக்கினார். இந்த சத்தியத்தைக் கொடுத்தமைக்காக கர்த்தருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன், இதனால் நாம் நமது இருதயங்களில் விசுவாசித்தாலே நம் அனைவராலும் பரலோகத்தினுள் பிரவேசிக்க முடியும்.
பாவிகளை இரட்சிப்பதற்காக, வெறும் படைப்பின் சாயலாக இயேசு இந்த உலகத்தில் பிறந்தது எத்தனைப் பெரிய நிகழ்ச்சியாகும்? அவர் இந்த உலகத்தைப் படைத்த நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டாலும் கூட அது உண்மையிலேயே, பெரியதொரு நிகழ்ச்சியாகும். எல்லாவற்றையும் படைத்த சிருஷ்டிகருக்கு தனது படைப்புகளைப் படைக்க சிறிதளவு நேரமே போதுமானது, ஆனால் படைப்பின் கர்த்தர் படைக்கப் பட்ட ஒன்றாகி, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் பட்டது, இரட்சிப்பிற்கான பெரிதான நிகழ்ச்சியாக இருக்க முடியுமே தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.
படைப்பின் கர்த்தராலேயே தாம் படைத்தவைகளின் சாயலாக எப்படி மாறமுடியும்? ஆயினும், கர்த்தராகிய இயேசு, தன்னை எந்த அளவி தாழ்த்தினார் என்றால், மனித குலத்தின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானனால் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெறுமளவுக்குத் தன்னைத் தாழ்த்தினார். இது எத்தனை ஆச்சரியமான சம்பவம்? ஆனால் இதுவே முடிவாகி விடவில்லை, ஏனெனில், இயேசு இன்னமும் தன்னைத் தாழ்த்தினார், தனது மரணப் பரியந்தமும் கீழ்ப்படிந்து, சிலுவையின் அநேக பாடுகளை தொடர்ந்து ஏற்றுக் கொண்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார். இவை எல்லாம் கர்த்தரின் அன்பு, அவரின் கிருபை மற்றும் அவரின் பெரிதான இரக்கம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது.
தேவனின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவையின் இரத்தத்தினாலும் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களும் ஒரேதரமாக முற்றிலுமாக சுத்தமாக்கப் பட்டன. தேவாலயத்தின் திரைச்சீலையை கிழித்த இயேசு, மூன்று நாட்களிம் மரித்தோரில் இருந்து மீண்டும் உயிரோடெழுந்து, இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவரையும் இந்த சத்தியத்தினாலே விசுவாசிக்க விரும்புகிறார். இதைப் போல, இந்த பிரபஞ்சத்தையும் இதிலுள்ள யாவையையும் படைத்த அவரின் படைப்பின் செய்கைகளை விட பாவிகளை இரட்சித்த தேவனின் செயல்கள் மிகவும் பெரிதானவையும் மகத்துவமானவையுமாகும். இயேசுவின் பிறப்பு, அவரின் ஞானஸ்நானம், அவரின் சிலுவை மரணம், அவரின் உயிர்த்தெழுதல், பரலோகத்திற்கு ஏறியதும் மீண்டும் வருவதுமான அனைத்தின் மூலமாகவும் அவர் நம்மை தனது பிள்ளைகளாக்கியது கர்த்தரின் அன்பின் செயல்களாகும்.
நமது தேவன் உங்களையும் என்னையும் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உங்களையும் என்னையும் நமது தேவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக விடுதலையாக்கினார். அதனால் நாம் நீதிமான்களாகி கர்த்தருக்கு நன்றி கூற முடியும். கர்த்தர் தனது இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை முற்றிலுமாக நமக்குத் தந்தார். இதனை விசுவாசிக்கிறீர்களா?
சகோதர சகோதர்களே, நானும் நீங்களும் நரகத்திற்குள் வீசப்படுவதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தோம். நமது பாவங்களுக்காக அழிந்து போகிறவர்களாகவும், கவலையுடனே நமது வாழ்க்கையை வாழுபவர்களாகவும் நாம் இருந்தோம், ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் திட்டமிட்ட இரட்சிப்பின் மூலமாக தேவன் நம்மை பாவத்திலிருந்து இரட்சித்தார். நமது பாவத்தின் நடுவே உட்கார்ந்து, அழுது கொண்டு, மனம் கசந்து, நமது விதியை எண்ணி சபித்துக் கொண்டு, நமது வாழ்க்கையை வாழ்வதைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை, ஆனால் இத்தகைய மக்கள் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிப்பதை ஏதுவாக்க, தேவன் நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை விடுதலைச் செய்தார். இப்படியாக நமது தேவன், நம் இரட்சிப்பின் தேவனாகினார்.
இயேசு நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்து, நமது பாவமன்னிப்பையும் உறுதி படுத்தினார். இயேசு தாமே இரட்சிப்பின் தேவனாக மாறினார். நம்முடைய இடத்தில் இருந்து உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு தன்மீது ஏற்றுக் கொண்டு, நமக்கு பதிலாக மரித்து, அதன் மூலமாக நமது நிறைவான இரட்சகராயினார்.
 
 
இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிந்திய இரத்தத்தையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
 
இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலமாக பாவத்திலிருந்து நாம் விடுதலையாவது முழுமை அடைகிறது. இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசித்து பாவிகள் இரட்சிக்கப் படுவதற்கு, அவர்கள் அவரின் ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் வரிசைப் படி பொருட்படுத்தி, இவை இரண்டும் ஐக்கியமாகியதாலேயே, முழுமையான இரட்சிப்பு நிறைவேறிற்று என்பதை விசுவாசிக்க வேன்டும்.
எக்காரணத்தைப் பற்றியாவது, இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்ததை நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கிறீர்களா? இயேசு யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தை அலட்சியம் செய்து, அதனை விசுவாசிக்க மறுக்கிறீர்களா? கர்த்தரின் நீதி நிறைவேறியது, ஏனெனில் இயேசு பெற்ற ஞானஸ்நானமானது அவர் பாவிகளின் எல்லாப் மீறுதல்களையும் தன்மீது ஏற்றுக் கொள்வதற்கு பயன்படுத்திய ஒரு முறையாகும், அவர் தனது விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தி பாடுபட்டு மரித்தது நமது பாவங்களுக்கான ஆக்கினையாகும். மேலும், நீங்களும் நானும் இயேசு நாம் விசுவாசிப்பதாக அறிவிக்கும் போது, அவருடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் ஒரே இரட்சிப்பாக நாம் விசுவாசிக்க வேண்டும்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றிற்கான அவசியத்தை கர்த்தர் தனது வார்த்தையில் எழுதினார், அப்படி இருந்தும் கூட, இரட்சிக்கப் பட சிலுவையின் இரத்தத்தை மட்டுமே தாம் விசுவாசித்தால் போதுமானது என அநேக மக்கள் இன்னமும் வலியுறுத்துகின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தால் உங்கள் விசுவாசத்தை மீண்டுமாக ஆராய்ந்து பார்த்து, திரும்பி, இந்த இரண்டு முக்கியமான கூறுகளை விசுவாசியுங்கள். அப்படிச் செய்யாமல், சிலுவையின் இரத்தத்தை மட்டுமே நீங்கள் விசுவாசித்தால், தேவனின் ஊழிய வாழ்வில் செய்த தூய்மையான காரியங்களை நீங்கள் வீனடிக்கிறீர்கள். உங்களிடம் அத்தகைய விசுவாசம் இருக்குமானால், இந்த தவறான விசுவாசத்திலிருந்து முற்றிலுமாகத் திரும்பி, வேதாகமம் முழுவதுமாக கூறப்பட்டுள்ள உண்மையான சத்தியத்தை விசுவாசிக்கத் தொடங்குவீர்களாக. அவருடைய ஞானஸ்நானம் இல்லாவிட்டால், அவருடைய சிலுவையின் மரனத்திற்கும் நமக்கும் என்னவிருக்கிறது? யோவான் ஸ்நானனால் இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்றிருக்காவிட்டால், நமது பாவங்களை அவருடைய மரணமானது எதுவும் செய்திருக்காது.
சகோதர சகோதரிகளே, உங்கள் பெயரை கடன் அட்டவனையிலிருந்து நீக்க வேண்டுமானால், நீங்கள் காசை எடுத்து வந்து கடன் கொடுத்தவனுக்கு திருப்பி செலுத்த வேண்டாமா? கடன் பட்டவர்கள் தமது கடன் பட்டத் தொகையை திரும்ப செலுத்த வேண்டும், அப்போது மட்டுமே அவர்களால் தமது பெயர்களை அட்டவனையில் இருந்து நீக்க முடியும். இதைப் போல, நமது பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்த, தனது ஞானஸ்நானத்தின் மூலமாக இயேசு நம்முடைய இத்தகைய பாவங்களையும்ம் மீறுதல்களையும் ஏற்றுக் கொண்டு, தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் அவற்றைத் துடைத்தார்.
அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக, தேவன் நமது எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டார், இதனால் தான் அவரால் நமது எல்லாப் பாவங்களையும் தனது இரத்தத்தைச் சிந்துவதின் மூலம் ஆக்கினைக்குள்ளாக முடிந்தது. ஒரு கடனைக் கட்டுவதற்கு, அதற்கான தொகையை எடுத்து வர வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவாகும். கடன் பட்டவர்கள் பணம் எதையும் எடுத்து வராமல், தமது கடன்களை எல்லாம் தாம் கொடுத்து விட்டதாக கூறி, தமது பெயரை அட்டவனையில் இருந்து நீக்கிவிட வேன்டும் என வலியுறுத்தினால், அவர்களின் பெயர் உண்மையாகவே அகற்றப் படுமா? தம்முடைய பெயர் பட்டியலில் இருந்து அகற்றப் பட்டு விட்டது என அவர்கள் எத்தனைத் தீவிரமாக விசுவாசித்தாலும், அவர்களுடைய பெயர்கள் இன்னமும் அட்டவனையில் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கடன்கள் உண்மையாகவே திரும்பச் செலுத்தப் பட்ட பிறகே கடன் வாங்கியவர்கள் விடுதலையாக முடியும் என்பதற்கினங்க, பாவிகளாகிய நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள, இயேசு தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நமது எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டன என்று விசுவாசிக்கும் இருதயம் நம்மிடம் இருக்க வேண்டும். இயேசுவின் தலையில் நமது பாவங்களை சுமத்திய இந்த ஞானஸ்நானத்தை நாமே கொடுக்கவில்லை.
ஆனால் யோவான் ஸ்நானன் என்ற இடைப்பட்ட ஒரு மனிதனாலு நமது எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது நம்மால் சுமத்த முடிந்தது. யோவான் ஸ்நானனின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட இயேசு, சிலுவைக்குச் சென்று, தனது இரத்தத்தைச் சிந்தி மரித்தார். இரட்சிப்பின் ஒப்பனையாகவும், ரசீதாகவும் இருக்கும் அவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலமாக, இயேசு நமது பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு நம்மை இரட்சித்ததால், நமது இரட்சிப்பிற்கான அத்தாட்சியை நம்மால் பெறமுடியும். நமக்காக நம் தேவன் செய்தவைகளை நமது இருதயங்களினால் விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் இப்போது பாவமன்னிப்பை பெறமுடிகிறது. ஏன்? ஏனெனில் அவரது ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால், நமது தேவன் புதிய வாழ்வை நமக்குத் தந்தார்.
இயேசு சிலுவையில் மரித்தபோது, மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது, பூமி அதிர்ந்தது, கற்கள் உருண்டன, கல்லறைகள் திறந்தன, நித்திரையாயிருந்த அநேக பரிசுத்தவான்களின் சரீரங்கள் மீண்டும் உயிரோடெழுப்பப் பட்டன. இந்த சம்பவங்களின் மூலமாக, தனது வார்த்தையை விசுவாசிக்கும் அனைவரையும் எழுப்பப் போவதாக கர்த்தர் கூறுகிறார், இயேசு கிறிஸ்து வந்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் துடைத்து விடுவார் என்பது அவரின் வார்த்தையாயிருந்தது. இயேசு மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்பதை அவர் காட்டினார், மேலும் இயேசுவை விசுவாசிப்போர் மீண்டுமாக உயிருடன் எழுப்பப் படுவர். இயேசு நம்மை பாவத்திலிருந்து மட்டும் இரட்சிக்கவில்லை, ஆனால் ஆவிக்குரிய படி மரித்த நமக்கு புதிய வாழ்க்கையையும் கொடுத்தார். நமக்கு புதிய வாழ்வைக் கொடுக்கவே அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மீண்டும் வாழுகிறார். கர்த்தர் தனது பரிசுத்த நகருக்குள் நாம் பிரவேசித்து அதில் நித்தியமாக வாழ நம்மை ஏதுவாக்கினார். நான் அவருக்கு என்னுடைய விசுவாசத்தின் மூலமாக நன்றிகளைக் கூறுகிறேன்.
பாவமன்னிப்பு பெற்றவர்கள் வாழப்போகும் இடத்தின் பெயர் பரலோகம் என்பதாகும். ஆகவே, இந்த பூமியில் வாழுகையில் பாவமன்னிப்பு பெறுகிற எல்லோருன் பரலோகத்தினுள் பிரவேசித்து அதில் வாழுவர் என்பதை விசுவாசியுங்கள். பரலோகமானது பாவமன்னிப்பு பெற்றவர்களின் உடமையாகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதும் மறுபடியும் பிறப்பதும் இரண்டு வெவ்வேறான செயல்கள் அல்ல, அவைகள் இரண்டும் ஒன்றேயாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எந்த ஒரு நபராவது விசுவாசித்தால், அந்த நபர் விசுவாசித்த நொடியே அவன்/அவள் மறுபடியும் பிறந்தவராகிறார். பாவிகள் பாவமன்னிப்பைப் பெறும் போது, அவர்கள் கர்த்தரின் சொந்தப் பிள்ளைகள் ஆகின்றனர், அவருடைய பிள்ளைகளுக்கு பரலோகத்தை ஒரு பரிசாக அவர் கொடுக்கிறார். நமது சரீரத்தில் நாமாக செய்த எந்த செயலும் இல்லாவிட்டாலும், இரட்சகரை நாம் விசுவாசிக்கும் அந்த ஒரு செயலைப் பார்த்து பாவமன்னிப்பையும் பரலோகத்தையும் நமக்கான ஒரு பரிசாக நம் தேவன் நம்க்கு வழங்கினார்.
நமது தேவன் இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, அவர் தனது இரத்தத்தைச் சிந்தியது எல்லாம் உண்மையே. டூயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டவராயிருந்தார். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னரேயே, யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக, அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்கனவே சுமந்து கொண்டிருந்தார். ஆகவே இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் தோள்களில் சுமந்ததாலேயே, பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறப்பட்டிருக்கும் சட்டத்திற்கான ஆக்கினையை ஏற்க வேன்டியதிருந்தது. இயேசு மனிதர்களை பாவங்களில் இருந்து இரட்சிக்க வேண்டுமானால், அவர் தனது ஞானஸ்நானத்தினால் தன் மீது ஏற்றுக் கொண்ட உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலே அவர் மரிக்க வேண்டியிருந்தது.
இயேசு சிலுவையில் அறையப் பட்டபோது, அவரை ஆணியால் அறைந்த மக்கள் யூதர்கள் அல்ல, அவர்கள் ரோம போர்சேவகர்கள் ஆவர். இயேசு புறஜாதியாரின் போர் சேவகர்களால் சிலுவையில் அறையப்பட்டார். நமது பாவங்களுக்காக தனது முழு இரத்தத்தையும் சிந்திய இயேசு “முடிந்தது” எனக் கூக்குரலிட்டு தனது மூச்சை விட்டார். அந்த நொடிப் பொழுதே, தேவாலயத்தின் திரைச் சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது. அதற்கும் மேல், பூமி அதிர்ந்தது என்றும், கற்பாறைகள் பிளந்தன என்றும், கல்லறைகள் திறந்தன என்றும், நித்திரையில் ஆழ்ந்திருந்த பல பரிசுத்தவான்களின் சரீரங்களும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுப்பப் பட்டன என்றும் வேதாகமம் நம்மிடம் கூறுகிறது (மத்தேயு 27:51-52). இயேசு சிலுவையில் மரித்தபோது நடந்தவைகளைப் பார்த்த நூற்றுக்கு அதிபதியும், ரோம போர்சேவகர்களும், “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” (மத்தேயு 27:54) என்று கூறினார்கள். இயேசுவானவர் வாழுகின்ற கர்த்தரின் குமாரர” என இந்த புறஜாதியாராகிய போர்சேவகர்களின் வாயின் மூலமாகவே கூறும் படிச் செய்தார்.
இப்போது, உலகம் முழுவதும் உண்மையான நற்செய்தியைப் பற்றிக் கூறவேண்டியவர்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விசுவாசிகளாகிய நம்மைத் தவிர வேறு யாருமில்லை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாகவே எல்லோரும் மாறினார்கள். இயேசுவிடமிருந்து மக்கள் பாவமன்னிப்பைப் பெறும் போது, அவர்கள் எந்த முயற்சிகளையும் செய்யாமல், தாமாகவே மாறிவிடுகிறார்கள், ஏனெனில் அவர்களின் இருதயங்களில் வாசம் செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் வருகிறார். மறுபடியும் பிறந்த நீதிமான்களின் இருதயங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக்கப் படுகின்றன, ஏனெனில் கர்த்தரின் ஆலயத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை அவர்கள் இடைவிடாது கேட்கலாம். அவர்கள் வார்த்தையைக் கேட்டு, இயேசுவைத் துதிப்பதற்காக வருகிறார்கள், அவர்கள் துதிக்கையில், அந்த சொற்கள் அவர்களின் இருதயங்களில் ஒவ்வொருநாளும் பொறிக்கப் படுகிறது, இதன் மூலமாக அவர்களின் இருதயங்கள் அன்றாடம் புதுப்பிக்கப் படுகின்றன. நீதிமான்கள் தமது இருதயங்களை தொடர்ந்து சீர்ப்படுத்துகின்றனர், அத்தகைய மிகப் பெரும் மாற்றங்களை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
நீதிமான்களாக நாம் மாறியதை நாமே பார்க்கையில், அவிசுவாசிகள் நம்மைக் குறித்து சாட்சி கூற வருவார்கள், “அவர்கள் உண்மையாகவே இரட்சிக்கப் பட்டவர்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள், அவர்கள் கர்த்தரின் மக்கள்.” இதைப் போல, நமது பாவமன்னிப்பானது நம்மால் மட்டுமே நிரூபிக்கப் பட்ட இரட்சிப்பின் வகை அல்ல. ரோம நூற்றுக்கு அதிபதியும், போர்சேவகர்களும் இந்த சத்தியத்தைக் குறித்து சாட்சி கூறினார்கள், தேவ குமாரராகிய இயேசு சிலுவையில் அறையப் பட்டபோது, உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவிகளை அவர் இரட்சித்தார் என அவர்கள் சாட்சி கூறினர். இதைப் போல, நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இயேசு நம்மை இரட்சித்தார் என்பதற்கு, அந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் தாமே சாட்சி கொடுக்கிறார்.
 
 
சாத்தானையும் சரணடையச் செய்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி
 
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே இரட்சிப்பாகும், அதற்கு சாத்தானும் கூட சரணடைந்தான். “முடிந்தது” என தனது மரணத்தின் போது இயேசு கூறிய போது, சாத்தான் இவ்வாறு கூறியிருப்பான், “ஆ! இது கேவலத்தை ஏற்படுத்துகிறதாக இருக்கிறது, ஆனால் அதனைக் குறித்து என்னால் எதனையும் செய்ய முடியாது! அவர் சரியாக் கூறினார். இப்போது இந்த உலகத்தில் எந்த பாவமும் இல்லை. எந்த விதிவிலக்கும் இன்றி இப்போது எல்லோரும் பாவமற்றவர்களாக இருக்கிறார்கள்! அது எனது இருதயத்தை எரிக்கிறது, ஆனால் அதனை மாற்ற என்னால் எதையும் செய்ய முடியாது!”
வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு நிறைவேற்றிய இந்த இரட்சிப்பை, சாத்தானாலும் கூட ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் பாவமன்னிப்பு பெற்றவர்கள் விசுவாச வாழ்வை வாழக் கூடாதபடிக்கு அவன் தடுக்கிறான். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறவர்கள் கர்த்தரின் பிள்ளைகளாக இருப்பதால், அவர்கள் அவருக்காக வாழ முயற்சி செய்கிறார்கள். ஆனால் சாத்தானுக்கு இந்த நிலமை மோசமானது, இதன் பொருள் அவனிடம் பாவத்திற்கு கட்டுப் பட்ட வெகு சில ஊழியர்களே இருப்பார்கள் என்பதாகும், ஆகவே கர்த்தரின் ஊழியர்கள் இந்த சத்தியத்தை உலகம் முழுவதும் பரப்புவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறான்.
பாவமன்னிப்பு பெற்றவர்களாகிய நாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்தால், பாவமன்னிப்பு பெற்ற மக்கள் இன்னமும் அதிகமானவர்களாய் இருப்பார்கள். இதனால்தான் சாத்தான் தனது பற்களை மக்களின் பலவீனத்தின் ஆழமாக பதித்து அவர்களை விடாமல் வைத்துள்ளான், அவர்களை மறைத்தும் வைத்துள்ளான், இதனால் ஒரு மனிதனால் கூட இயேசுவைப் பின்பற்றி வரமுடியாது.
“இயேசுவை கொலை செய்யுங்கள்!” என்று மக்களின் இருதயங்களைத் தூண்டிவிட அவன் கூறினான், அவர்கல் இயேசுவை சிலுவையில் அறையும் படி அவன் செய்தான். இதன் மூலமாக எல்லாம் முடிந்தது என சாத்தான் எண்ணிக் கொண்டிருந்த போது, சிலுவையில் அறையப் பட்டு மரித்துக் கொண்டிருக்கும் இயேசு சத்தமிட்டார் “முடிந்தது!” இதனால் சாத்தான் அதிர்ச்சியடைந்தான். தூக்கி எறியப்படுவதற்கு பதிலாக, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட இயேசு, நீதியின் படி இரட்சிப்பை நிறைவேற்றினார், அது மனித குலத்தை பாவத்திலிருந்தும் ஆக்கினையிலிருந்தும் விடுதலைச் செய்தது. கர்த்தரின் இந்த ஞானத்தைக் குறித்து சாத்தானுக்கு எதுவும் தெரியாது. இயேசுவை சிலுவையில் கொன்றால், எல்லாமே முடிந்து விடும் என்று மட்டுமே அவன் நினைத்திருந்தான், ஆனால் அவன் எண்ணியபடி எதுவுமே நடைபெறவில்லை. தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட இயேசு, தனது சரீரத்தை சிலுவைக்கு ஒப்புவித்து பாவிகளுக்கான பாவமன்னிப்பை முழுமையாக்கினார்.
தனது சரீரத்தின் மரணத்தின் மூலமாக, பாவத்திற்கான எல்லா கிரயத்தையும் அவர் செலுத்தி விட்டார். மேலும், மக்களிடம் எந்த பாவத்தையும் பார்க்கமுடியாது. ஏன்? பாவத்தின் சம்பளம் என்று அறிவிக்கும் சட்டத்தின்படி, பாவிகளுக்கு பதிலாக இயேசு ஏற்கனவே மரித்துவிட்டார். யோர்தான் நதியில் இயேசு நமது எல்லா மீறுதல்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என நாம் விசுவாசிக்க வேன்டியதாயிருப்பதால், பாவிகளாகிய நமக்காக அவரால் மரிக்க முடிந்தது.
“முடிந்தது!” இயேசு தன்னுடைய கடைசி மூச்சுடனே கூட சிலுவையில் கூக்குரலிட்டது இதைத்தான். இயேசு மரித்ததினால், சாத்தானால் இனிமேலும் நம்மிடம் இப்படியாக கூறமுடியாது, “உன்னிடம் பாவங்கள் இருக்கின்றன, இல்லையா?” இயேசுவின் பிறப்பினாலும், அவருடைய ஞானஸ்நானத்தினாலும், அவரின் சிலுவை மரணத்தினாலும், அவருடைய இரத்தம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றினாலும், இயேசுவுக்கு முன்னதாக சாத்தான் ஒரு படுதோல்வியைச் சந்தித்தான். நம்மை எப்போதும் பாவம் செய்யச் செய்து, கர்த்தருடனான நம்முடைய உறவை எப்போதுமே சீர்குலைத்து வந்தாலும், முடிவிலே, தேவகுமாரராகிய இயேசுவின் அறிவினாலே, அவர் பாவங்களைக் கழுவி ஆக்கினைகளை அனுபவித்ததாலே, கடைசியில் அவனால் படு தோல்வி அடைவதை தவிர்க்க முடியவில்லை.
இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நீங்கள் விசுவாசிக்கும்போது, உங்களிடம் இன்னமும் பாவங்கள் இருக்கின்றனவா? அப்படி இல்லை! என்னிடம் பாவங்கள் இல்லை என்பதை, நமது மாமிசத்தில் உள்ள உணர்வுகளின் அடிப்படையில் கூறமுடியாது. ஆனால், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதின் மூலமாக, நாம் பாவமற்றவர்கள் என்பதை மிகவும் தைரியமாக நம்மால் இப்போது அறிவிக்க முடிகிறது. இயேசு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்று நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, நமது இடத்திலிருந்து சிலுவையில் அறையப்பட்டதின் மூலமாக நம்மை இரட்சித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த சத்தியட்தின் மீதுள்ள நமது விசுவாசத்தினால், நம்மிடம் பாவமில்லை என்பதை நம்மால் இப்போது கூறமுடியும். மேலும் குறிப்பாக, நமது இருதயங்களில் எந்த பாவங்களும் இருக்க முடியாது, ஒரு சிறிய கடுகளவு பாவமும் கூட இருக்க முடியாது. இதனால் தான் நம்முடைய நன்றியுள்ள இருதயங்கள் கர்த்தருக்கு முன்னதாக ஊற்றெடுக்கின்றன, விசுவாசத்தினால் அவை நமது நன்றியைக் கூறுகின்றன.
“கர்த்தாவே, எனது விசுவாசம் பெரிதாக இருக்காது, ஆனால் கடுகின் விதை அளவு எனது விசுவாசம் சிறிதாக இருந்தாலும், நான் எனது நன்றிகளை உமக்குத் தெரிவிக்கிறே. உம்முடைய பெரிதான அன்பை என்னால் தாங்கிக் கொள்ளக் கூட முடியாது, ஆனால் இன்னமும் நீர் எனது இருதயத்திற்குள் வந்தீர், அதைப் போலவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசமும் இருக்கிறது, நான் இப்போது உமது அன்பை எனது இருதயத்தில் தாங்குகிறேன். எனது இருதயம் அன்றாடம் உமக்கு நன்றி கூறுவதாக இருக்கிறது, ஏனெனில் தேவன் எனது இருதயத்தில் வாசம் செய்வதுடன் அவர் என்னுடனே இருக்கிறார். இந்த இருதயத்தை எனக்குக் கொடுத்தமைக்காக, எனது எல்லா நன்றிகளையும் உமக்கு கொடுக்கிறேன்.” இதைப் போன்ற நன்றியுள்ள இருதயங்களைக் கர்த்தர் நமக்கு கொடுத்துள்ளார். மேலும் நமது தேவன் நம்மை அன்றாடம் நேசிக்கிறார்.
ஆகவே நான் மட்டும் அல்ல, அவருடைய முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தைக் கேட்டு அதனை விசுவாசிக்கும் அனைவரும் கூட, நமது எல்லாப் இருதயங்களையும் பாவமில்லாததாக பெற்றுள்ளோம். சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதால், கர்த்தரின் சொந்த பிள்ளைகளாகும் படியான, இரட்சிப்பின் ஆசீர்வாதத்தை நாம் பெற்றோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் விசுவாசிக்காமல், இரட்சிக்கப்படுவதற்கு வேறு எந்த வழிகளும் இல்லை என்பதை அனைவரும் தமது முழு இருதயங்களாலும் விசுவாசித்து, கர்த்தரிடம் திரும்பி இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.
அப்போஸ்தலர் 4:12 அறிவிக்கிறது, “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப் படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப் படவும் இல்லை என்றான்.” இயேசுவை நமது இரட்சகராக நாம் விசுவாசிக்கிறோம். இதனை விசுவாசிக்கும் அவர்களில் நன்றியால் நிரம்பிய இருதயங்கள் ஊற்றெடுக்கும். ஆகவே நம்மிடம் தேவனுக்கு நன்றி கூறும் இருதயங்கள் இருக்கின்றன. தேவன் நமக்கு இரட்சிப்பைத் தந்தார், அவர் நமக்கு நன்றியால் நிறைந்த இருதயங்களையும் தந்தார். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்தார். இந்த அனைத்து அளவில்லாத ஆசீர்வாதங்களையும் தேவன் நமக்கு கொடுத்ததால், அவரை நம் நன்றிகளால் மகிமைப் படுத்துவதை நம்மால் தவிர்க்க முடியாது.
நம்முடைய விசுவாசமானது கடுகு விதையைப் போல சிறியதாக இருந்தாலும், இயேசு நமக்கு செய்தவைகளை இன்னமும் நமது இருதயங்களால் விசுவாசித்தால், நாம் அனைவரும் இரட்சிக்கப் படுவோம். நமது இரட்சிப்பிற்காக நம்மால் செய்யக் கூடியது விசுவாசத்தைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை நீங்கள் அனைவரும் உணரவேன்டும் என்பதை கூறிக் கொள்கிறேன், கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்த இந்த இரட்சிப்பை அறிந்து அதனை நாம் விசுவாசிக்க வேண்டும். நமது சொந்த முயற்சிகளால் பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்த்தர் தாமே நமது எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் மேலும், இதனை விசுவாசிக்கும் அனைவருக்கும் இந்த இரட்சிப்பைக் கொடுத்தார். இப்போது, நாம் செய்வதற்காக மிச்சமிருக்கும் ஒரே வேலையானது, விசுவாசத்தினால் இந்த பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்வதேயாகும்.
கொரியாவில் ஒரு பழமொழி இருக்கிறது, “இலவசமாக கிடைப்பதை அதிகம் விரும்பினால், மொட்டையாவீர்கள்” என்று அது கூறுகிறது. ஆங்கிலத்தில் அதனைக் கூற வேண்டுமானால், “இலவச சாப்பாடு என்ற எதுவும் கிடையாது” என்பது அதற்கு சமமானதாக இருக்கும். அது நிச்சயமாகவே சரியானது; நமது வாழ்க்கையில் எதுவுமே இலவசமாக கிடைக்காது. எந்த ஒன்றையும் திருப்பித் தராமல், பரிசுகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்களை குறை கூறுகிறோம். ஆயினும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததால் இரட்சிக்கப் பட்டு பரலோகத்திற்கு செல்வது, முற்றிலுமாக இலவசமாக கொடுக்கப் பட்டது. அநேக இலவச பொருட்களைப் பெறுவதின் மூலமாக நமது தலை மொட்டையாவதை நாம் பார்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால் கர்த்தரின் பரிசைப் பெற்றுக் கொண்டும் ஆவிக்குரிய மொட்டையைப் பெறுவது கர்த்தருக்கு முன்னதாக ஆசீர்வாதமாகும். நமது பாவமற்ற இருதயங்களைக் கண்டு நமது கர்த்தர் மகிழ்கிறார் என்றும், இதனைக் காணும் போது, அவர் நம்மைத் தனது கரங்களில் அரவணைக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.
நாம் கர்த்தரின் இலவச கிருபையில் ஆர்வமானவர்களாக இருக்கிறோம். தேவனுக்கு நன்றி கூறாமல் நம்மால் இருக்க முடியாது: நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், தனது ஞானஸ்நானத்தை நீரினால் பெற்றார், தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார், அதன் மூலமாக பரலோகத்தின் வாசலைத் திறந்தார். மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையை மேலிருந்து கீழாக இரண்டாக கிழித்ததின் மூலமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததின் மூலமாக மறுபடியும் பிறந்த அனைவரையும் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க அவர் ஏதுவாக்கினார். நீங்களும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பரலோகத்தினுள் பிரவேசிக்க வேண்டும்.
ஞானஸ்நானம் பெற்றதற்காகவும், தனது இரத்தத்தைச் சிந்தியதற்காகவும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தமைக்காகவும், நமக்காக பாவமன்னிப்பின் கதவைத் திறந்ததற்காகவும் தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.