• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-15] ஆசரிப்புக் கூடார பலகைக்கான இரண்டு வெள்ளிப் பாதங்களும் இரண்டு கழுந்துக (யாத்திராகமம் 26:15-37)

(யாத்திராகமம் 26:15-37)
“வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக. ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது. அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும், வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும். அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய். இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். சீத்திம் மரத்தினால் செய்து, பொன்தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும். மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக; திரைக்குப் புறம்பாக மேஜையையும் மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.”
 
 
ஆசரிப்புக் கூடாரமானது 48 பலகைகளால் கட்டப் பட்டிருந்தது: வடக்கு மட்டும் தெற்கு பக்கங்களுக்கு தலா 20 பலகைகளும், மேற்கு பக்கத்தில் 6 பலகைகளும், பின்பக்க மூலைகளுக்கு இரண்டு பலகைகளும் இருந்தன. ஒவ்வொரு பலகையும் 4.5 மீட்டர் (15 அடிகள்) உயரமுடையதாயும், 67.5 மீட்டர் (2.2 அடிகள்) அகலமுடையதாகவும் இருந்தன. ஒவ்வொரு பலகையும் நேராக நிற்பதற்கு, இரண்டு வெள்ளிப் பாதங்களும் இரண்டு கழுந்துகளும் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருத்தப் பட்டன. கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக, அவருடைய கிருபையினால் மட்டுமே கர்த்தரின் இரட்சிப்பு கொடுக்கப் படுகிறது என்பதை இது மீண்டுமாக காட்டுகிறது.
 
 
கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலமாக கிருபையினால் வரும் இரட்சிப்பு
 
எபேசியர் 2:8-9ஐ அநேக கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பார்கள், அந்த வசனங்களை சிலர் மனப்பாடமும் செய்திருப்பர், “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” ஆனால் துரதிருஷ்டவசமாக, அவருடைய கிருபை என்பது என்ன என்பதை அவர்கள் தெளிவாக அறியாதவர்களாய் இருக்கிறார்கள், மேலும் இரட்சிக்கப் படுவதற்கு எத்தகைய விசுவாசத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும் எனவும் அவர்களுக்குத் தெரியாது. இரகசியமாகிய ஒன்றுடன் ஒன்று சரியாக பொருந்திய இரண்டு வெள்ளிப் பாதங்களும் இரண்டு கழுந்துகளும் கர்த்தரின் இரட்சிப்பின் இரகசியத்தை தெளிவாக நமக்குக் காட்டுகிறது.
பலகையின் கீழ் வைக்கப் பட்ட “இரண்டு கழுந்துகளையும் இரண்டு வெண்கல பாதங்களையும்” குறித்த உண்மையை நாம் அறிந்து கொள்ள, நற்செய்தியின் அடிப்படை சத்தியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லா கதவுகளும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப் பட்டன. நமது பாவங்களில் இருந்தும் அழிவில் இருந்தும் நாம் இரட்சிக்கப் படுவதற்கு இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் அவசியம் என்பதை இந்த நான்கு நிறங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன. இயேசுவின் இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கவும், எந்த சந்தேகமும் இன்றி இருக்கவும் அவை நம்மை ஏதுவாக்குகின்றன. நம்மை இரட்சித்த இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தைக் குறித்த தெளிவான அறிவைப் பெற்று, அதனை விசுவாசிக்க வேண்டும்.
இயேசு கூறினார், “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). மேலும், ஆசரிப்புக் கூடாரத்தின் திரைச் சீலைக் கதவிலும் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரையிலும் உள்ள நான்கு நிறங்களிலும் மறைந்திருக்கும் ஆவிக்குரிய உண்மையை அறிந்து நமது பாவங்களில் இருந்து நிறைவான பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆசரிப்புக் கூடார கதவின் பொருட்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை ஆகும்.
வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்து நமது இரட்சகராக இருக்கிறார், விசுவாசிப்பவர்களுக்கு அவர் நமது ராஜாவாகவும் இருக்கிறார், யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது, நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் அவர் நம்மை இரட்சித்தார் அப்படிச் செய்ய நமது எல்லாப் பாவங்களையும் அவர் தனது சரீரத்தில் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார், மேலும் உலகின் பாவங்களை சுமந்து சென்று தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார். அந்த ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, ஞானஸ்நானம் பெற்றதாலும், சிலுவையில் அறையப் பட்டதாலும், நம்மை நமது பாவங்களில் இருந்து நிச்சயமாகவே இரட்சித்தார். ஆகவே, இளநீல நிற நூலும் சிகப்பு நிற நூலும் கூறும் தெளிவானதும் நிச்சயமானதுமான சத்தியத்தை, நாம் நமது பாவங்களில் இருந்து இரட்சிக்கப்பட வேண்டுமானால், அவற்றில் ஒன்றையும் விட்டு விட முடியாது. நமது பாவங்களை பெற்றுக் கொள்ள, இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்று, உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தியதால், நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் அவர் ஒரே தரமாக இரட்சித்தார், இதன் மூலமாக அவர் தனது இரட்சிப்பிற்கான செயல்களை நிறைவேற்றினார்.
இளநீலம் நிற நூல் (இயேசுவின் ஞானஸ்நானம்), சிகப்பு நிற நூல் (அவருடைய இரத்தம் சிந்துதல்), இரத்தாம்பர நிற நூல் (அவர் நம்முடைய ராஜா), மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் (விரிவான வார்த்தையின் கர்த்தராகிய அவர், நம்மை நீதிமான்கள் ஆக்கினார்) ஆகிய இந்த நான்கு குறிப்புகளையும் நமது இரட்சிப்பிற்காக பயன் படுத்தப் பட்ட பொருட்களாக நாம் விசுவாசிக்க வேண்டும். இவைகள் இப்படிப் பட்டவைகளாக இருந்தாலும், இவற்றில் ஒன்றை மட்டும் விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட முயற்சி செய்தால், அத்தகைய விசுவாசம் முழுமையானதாக இருக்காது. ஏன்? ஏனெனில், ஆசரிப்புக் கூடார பலகைகளின் ஒவ்வொரு அடிவாரத்திலும், பலகையைத் தாங்கும் படியாக, வெள்ளி பாதங்களில் பொருந்தும் படியாக இரண்டு கழுந்துகள் நீட்டிக் கொண்டிருந்தன.
வேதாகமத்தில் உள்ள வெள்ளியானது, கர்த்தரின் வரமாகிய, அவரின் கிருபையைக் குறிக்கிறது. மேலும் ரோமர் 5:1-2 இல் எழுதப் பட்டுள்ளது, “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினால் மேன்மைபாராட்டுகிறோம்.” நம்முடைய விசுவாசமானது கர்த்தரின் கிருபையுடன் சரியாக பொருந்தும் போதே, நமது இரட்சிப்பு அருளப் படும். ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பலகையின் அடியிலும் இரண்டு கழுந்துகள் இருந்தன, இவை பலகையைத் தாங்குவதற்காக, இரண்டு வெள்ளிப் பாதங்களில் பொருத்தப்பட்டிருந்தன, இதனைப் போலவே, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் நாம் விசுவாசிக்கும் போது மட்டுமே, நம்து இரட்சிப்பு முழுமையாகிறது என கர்த்தர் கூறுகிறார்.
ஒவ்வொரு பலகையில் இருந்தும் கழுந்துகள் ஏன் நீட்டிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான காரணத்தையும் அதன் பொருளையும் நாம் அனைவரும் விசுவாசிக்க வேண்டும்.
பலகையின் இந்த இரண்டு பாதங்களும் இரண்டு கழுந்துகளும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் நிழல்களாகும், அவை, புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசு கிறிஸ்து வருவார் என்பதையும், யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெறுவார் என்பதையும், சிலுவையில் அறையப் படுவார் என்பதையும், தனது இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரிப்பார் என்பதையும், இதன்மூலமாக, நமது இரட்சிப்பை முற்றிலுமாக நிறைவேற்றுவார் என்பதையும் அவைகள் அறிவித்தன.
வேறு வார்த்தைகளில் கூறினால், பாவமன்னிப்பின் கிருபையானது, இயேசு நிறைவேற்றிய நீதியின் இரட்சிப்பை உண்மையாகவே விசுவாசிப்பவர்களின் இருதயங்களுக்குள் கொடுக்கப் படுகிறது, இயேசுவானவர் யோவானால் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும், சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலமும் அவர்களின் பாவங்களைக் கழுவி அந்த இரட்சிப்பை அவர் நிறைவேற்றினார். மேலும், நமது பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட, இயேசுவின் இந்த இரண்டு செய்கைகளையும் விசுவாசிக்கும் விசுவாசம் நமக்குத் தேவை. ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களும், நம்மை நமது பாவங்களில் இருந்து இரட்சித்த இயேசுவின் விளக்கமான ஓவியத்தை நமக்குத் தருபவையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பலகையிலும், இரண்டு கழுந்துகளையும் இரண்டு பாதங்களையும் பயன் படுத்தும் படி வேறெந்த காரணங்களுக்காகவும் இஸ்ரவேல் மக்களிடம் கர்த்தர் கட்டளையிடவில்லை.
கர்த்தர் நமக்கு கொடுத்த ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகிய செயல்களின் மூலமாகவே, நமது எல்லாப் பாவங்களில் இருந்தும், எல்லா ஆக்கினைகளில் இருந்தும் நாம் விடுவிக்கப் பட்டு இரட்சிக்கப் பட்டோம். வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமே, கர்த்தரின் பிள்ளைகளாவதற்கான உரிமையை நாம் பெற்றோம். கர்த்தரின் இந்த பரிசை பெற்றதின் மூலமாக தூய பொன்னைப் போன்ற நமது விசுவாசம் கட்டப்பட்டது.
 
 
நீங்கள் இயேசுவை விசுவாசித்த போதிலும், நீங்கள் யாரென்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?
 
நீங்கள் உங்களை நல்லவராக கருதுகிறீர்களா? எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு வகையிலும் அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒர் நீதியின் பன்பு உங்களிடம் இருக்கிறது என நீங்கள் உங்களைக் குறித்து எண்ணுகிறீர்களா? கர்த்தரின் கட்டளைகளை உங்கள் இருதயத்தில் அன்றாடம் வைத்திருப்பதாலும், உங்கள் வாழ்க்கையில் அதனை அன்றாடம் கடைப்பிடித்து அவற்றை செயல்படுத்த முயற்சி செய்வதால் கர்த்தருக்கு முன்னதாக நீங்கள் எப்படியோ நீதிமான்களாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறீர்களா? நாம் நீதிமான்களாக இருப்பதைப் போல நடிக்கிறோம், ஆனால் தனிமையிலோ நாம் விபசாரிகளாகவும் காமவிகாரம் உடையவர்களாகவும் இருக்கிறோம்.
கேபிள் மற்றும் செயற்கைக் கோள் மூலமாக நூற்றுக் கணக்கான சேனல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு ஓடும் இந்த சேனல்கள் தம்முடைய சொந்த நிகழ்ச்சிகளின் மூலமாக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த சேனல்களிலேயே பொருளாதார ரீதியாக மிகவும் வெற்றிகரமாக செயல் படும் சேனல்கள், வயது வந்தோர்களுக்கான சேனல்களாகும். இத்தகைய வயது வந்தோர்க்கான சேனல்களை வெறுமனே திருப்புவதின் மூலம் எல்லா விதமான ஆபாச காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. ஆபாசகாட்சிகளை உடைய இணையத் தடங்களைக் குறித்து என்ன? சொல்லவே வேண்டாம், ஆபாச படங்களைத் தாங்கியவாறு ஈமெயில்களின் வெள்ளம் உலகம் முழுவதும் வலம் வந்தவாறு இருக்கின்றன. இத்தகைய ஆபாசமான இணையத் தடங்களை தீமையானவைகள் என்று எல்லோருமே சொல்லுகிறார்கள், ஆனால் “தேவைக்கேற்றவாறு தயாரிக்கப் படுகிறது என்ற சட்டத்தை” நாம் எண்ணிப் பார்க்கையில், அத்தகைய இணையத் தடங்களைப் எண்ணிலடங்காத பலர் தம் தனிமையில் அனுபவிக்கின்றனர் என்பதை அவற்றின் வெற்றியானது காட்டுகிறது.
இந்த சம்பவங்கள் மனிதகுலமானது அடிப்படையில் கெட்டதும் ஆபாசமானதுமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. விபசாரத்தையும், காமவிகாரத்தையும், ஆபாசத்தையும் மனித குலத்தின் பாவம் நிறைந்த இருதயங்கள் கொண்டிருக்கின்றன என வேதாகமம் சுட்டிக் காட்டுகிறது. இவைகளெல்லாம் மக்களின் இருதயங்களில் இருந்து வருகிறது என்றும், அவை அவர்களை அழிக்கும் என்றும் கர்த்தர் கூறினார், ஆகவே அவைகள் பாவங்கள் என்பது தெளிவாகிறது. அப்படியானால், நாம் அனைவரும் பாவங்களால் நிறைந்தவர்கள் இல்லையா? நமது உள்ளிந்திரியங்கள் பாவம் நிறைந்தவையாக இருக்கின்றன என கர்த்தர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.
ஆனால் நாம் உண்மையாகவே இவற்றை ஒத்துக் கொள்கிறோமா? அது எப்படி இருக்கிறது? நமது கண்களை மூடியவாறு, நமது காதுகளை மூடியவாறும் இருந்தாலும் உள்ளே இருந்து வரும் இந்த பாவங்களில் இருந்து நம்மால் தப்பிக்க முடியுமா? நமது மனதினதும் சிந்தனைகளினதும் கற்பனைகளினால் உருவாகும் எல்லாவித பாவங்களையும் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. இத்தகைய பாவங்களில் இருந்து நாம் விலகிச் செல்லவேன்டும் என்று நாம் எத்தனை முறை கூறிக் கொண்டாலும், அப்படிச் செய்ய நாம் எத்தனைக் கஷ்டப் பட்டு முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் வீனாகிப் போகும். குறிப்பாக கூறினால், மாமிசத்திற்குரிய எந்தப் பாவங்களையும் செய்யாத முழுமையான பரிசுத்தவான்களாக நாம் மாற முடியாத படியானது நமது மாமிசமாகும் என்பது மட்டும் இல்லாமல், பாவத்திலிருந்து விலகுவதற்கான எந்த ஆசையும் இல்லாமல், பாவத்துடன் வாழுவதை விரும்புகிறவர்களாக இருக்கிறோம். மனிதகுலத்தின் இருதயங்களும் மாமிசமும் பரிசுத்தமான காரியங்களில் இருந்து அதிக தொலைவில் இருப்பவையாக இருக்கின்றன, அது அப்படியே இருக்கிறது, மேலும், அவை பாவங்களுக்கு அருகில் இருப்பதை மட்டுமே விரும்பாமல், இன்னமும் பெரிய பாவங்களையும் செய்ய விரும்புகின்றன.
கிழக்கத்திய நாடுகளில், தம்முடைய பிறப்பிலிருந்தே அநேகர் கன்பூசியசின் போதனைகளைப் படிக்கத் தொடங்குகின்றனர், ஆகவே அவர்கள் இந்தப் போதனைகளைக் கடைப்பிடிக்க மிகவு தீவிரமாக முயற்சி செய்கின்றனர். மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை, அவற்றின் நிலப் பரப்பை கத்தோலிக்கம் அல்லது சட்டப்படியான கிறிஸ்தவ ஆலயங்கள் ஆதிக்கம் செலுத்தின, ஆகவே அநேக மேற்கத்திய மக்கள் கர்த்தரின் சட்டத்தை கைக்கொள்ள கடினமாக முயற்சி செய்தனர், மிகவும் தீவிரமாக முயற்சி செய்வதின் மூலமாக அவர்களால் அதிகமதிகமாக பரிசுத்தமாக முடியும் என அவர்கள் எண்ணினர். அவர்களுடைய மதப் பின்னணிகள் எப்படி இருந்தாலும் கூட, அவர்கள் தம்மைக் கர்த்தருக்கு முன்னதாக நிறுத்தி, தம்முடைய சொந்தத் தன்மைகளை பிரித்துப் பார்த்தால், அவர்கள் பாவக் குவியலாகவும் தீமை செய்பவர்களின் வித்தாக இருப்பதையும் நாம் காணலாம்.
மனிதகுலத்தினர் அநீதராகவும், முழுக்க களங்கம் உள்ளவர்களாகவும், குப்பையாளும் கூளத்தாலும் உருவான பாவக் குவியலாகவும் இருக்கிறார்கள். தோற்றத்தில் நல்லவர்களாக இருக்கும் நல்ல மக்கள் தமது நற்செயல்களை அங்கீகரிக்கப் படுவதற்காக செய்வதில்லை, ஆனால், அவர்கள் தமது நற்செயல்களை யாராவது புகழும்போது, அதனால் வெட்கப் படுபவர்களாக இருக்கிறார்கள், அவர்களுடைய அடிப்படை சாராம்சம் கர்த்தருக்கு முன்னால் எதிரொலிக்கப் படும் போது, தாம் பாவக்குவியல்களாகவும் தீமை செய்வோரின் வித்தாகவும் இருக்கிறோம் என்று குறிப்பிடப் படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது. மனிதகுலத்தின் நீதியைக் குறித்து பெரிதாக பேசுவது கர்த்தருக்கு முன்னதாக மிகப் பெரிய தீமையாகும், தம்முடைய பாவங்களுக்கான தண்டனையை அறிந்து கொண்டு, கர்த்தருடைய அன்பாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஏற்றுக் கொள்ளாவிட்டால், பாவத்திற்கான ஆக்கினையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடியாது. கர்த்தருக்கு முன்னதாக, மனிதகுலத்தின் எந்த முயற்சியையும் நன்மையானதாக கருத முடியாது, அதனைத் தூசியின் அளவும் கருத முடியாது, அவருக்கு முன்னதாக மனிதகுலத்தின் சித்தங்கள் வெறும் அழுக்காக மட்டுமே இருக்கின்றன.
வேதாகமத்தில், மனிதகுலத்தினர் மரமாக அடிக்கடி காட்டப் படுகிறார்கள். ஒரு சீத்திம் மரத்துண்டானது, கர்த்தரால் பொன் முலாம் பூசப்படாவிட்டால், தானாகவே அதனால் கர்த்தரின் ஆலயத்தின் வாசலிலுள்ள தூனாகி விடமுடியாது. கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் கிருபை இல்லாவிட்டால், மக்கள் வெறும் புழுதி மட்டுமே, அவர்களால் அக்கினியின் தீர்ப்பை தவிர்க்க முடியாது.
ஆயினும், மேசியாவாகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தை பெற்று மரிக்கும் படியாக இரத்தத்தைச் சிந்தியதால், நாம் பாவிகளாகவே மட்டுமே இருந்தாலும், கர்த்தர் நமது எல்லாப் பாவங்களையும் மீறுதல்களையும் நீக்கினார். அத்தகைய ஒரு இரட்சிப்பானது, மேசியா வருவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே தாவீது ராஜாவால் விளக்கமாக தீர்க்கதரிசனம் கூறப் பட்டது: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (சங்கீதம் 103:12-14).
கர்த்தரின் நீதியை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னராக, மனிதகுலத்தின் நீதியானது நமது வாழ்க்கைத்தரமாக இருந்தது. கர்த்தரின் இரட்சிப்பின் வரம் இல்லாதபோது, அவருடைய வார்த்தையிலும் விசுவாசம் இல்லாதிருந்ததால், நானும் கூட அப்படிப் பட்டவனாகவே இருந்தேன். குறிப்பாக கூறினால், எனக்கு சொந்தமான நீதி எதுவும் இருக்கவில்லை, ஆனால் என்னை நானே நல்லவனாக எண்ணினேன். ஆகவே, எனது சிறுவயதில் இருந்தே, என்னால் அநீதியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அநேக சந்தர்ப்பங்கள் இருந்தன, சிலவேளைகளில் என்னைவிட பலம் மிகுந்தவர்களிடமும் சண்டையிடப் போயிருக்கிறேன். “நீதிமானான ஒரு வாழ்க்கையை வாழ்” என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. இதைப் போல, கர்த்தருக்கு முன்னதாக என்னைக் காண்பதற்கு நான் தவறியதால், நான் என் சொந்த நீதி மிகுந்தவனாக இருந்தேன். ஆகவே என்னை நான் மற்றவர்களை விட மிகவும் உயர்ந்தவனாக எண்ணி நீதிமானாக வாழ கடும் முயற்சிகளைச் செய்தேன்.
ஆனால் இத்தகைய மனிதாக இருந்த நானே, கர்த்தரின் நீதிக்கு முன்னதாக வெறும் பாவக் குவியலாக மட்டுமே இருந்தேன். கர்த்தரின் பத்துக் கட்டளைகளில் ஒன்றையோ அல்லது அவரின் 613 சட்டங்களில் ஒன்றையோ கூட கடைப்பிடிக்க முடியாத ஒருவனாக இருந்தேன். நான் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பியதே ஒரு அநீதச் செயலாகும் என்பது குறிப்பிடத்தக்கது, பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவன் என்று பிரகடனம் செய்த கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக நான் எழுந்தேன், அவரை நான் எதிர்த்து நின்றேன். மனிதர்களின் எல்லா நீதிகளும் கர்த்தருக்கு முன்னதாக அநீதிகளே.
காமவிகாரத்தினாலும், கெட்டத்தனத்தாலும் கர்த்தரையும் அவருடைய சட்டத்தையும் இழந்து போன இந்த தலைமுறையினர் குற்ற உணர்ச்சியையும் கூட இழந்து போயினர். ஆயினும், மனித குலத்தினராகிய நாம் அன்றாடம் பாவம் செய்கிறவர்களாக இருக்கிறோம் என்றும், எந்த விதிவிலக்குமின்றி, நாம் நரகத்தில் அழிவோம் என்றும் நாம் அறிந்து கொள்ள வேன்டும்.
 
 
நாம் அநீதராகவும் பாவம் நிறைந்தவர்களாகவும் இருந்தோம், ஆனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது பாவங்களில் இருந்து நம்மை இரட்சித்ததின் மூலமாக தேவன் நம்மைத் தனது சொந்த மக்களாக்கினார்
 
நாம் எல்லாம் அநீதராக இருந்தோம், ஆனால் இரட்சிப்பின் சத்தியத்தினால், நம்மைப் போன்ற இத்தகையவர்களை நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் தேவன் இரட்சித்தார். பரிசுத்த ஸ்தலத்தின் ஒவ்வொரு பலகையும், 4.5மீட்டர் உயரம் உடையதாகவும், 67.5 செ.மீ அகலம் உடையதாகவும், சீத்திம் மரத்தில் உருவாக்கப் பட்டு பொன்முலாம் பூசப்பட்டதாகவும் இருந்தது, இவை பரிசுத்த ஸ்தலத்தின் சுவர்களாக சுற்றிலும் அமைக்கப் பட்டன. அந்தப் பலகையைத் தாங்குவதற்காக இரண்டு வெள்ளி பாதங்கள் அமைக்கப் பட்டன. இங்கே வெள்ளிப் பாதங்கள் என்பவை கர்த்தர் உங்களையும் என்னையும் தாமாகவே இரட்சித்தார் என்பதை அறிவிக்கின்றன.
பாவத்திலிருந்து கர்த்தர் இரட்சித்தார் என்ற சத்தியமானது அவருடையெ நேசமாகும், அதன் படி இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ளும் பொருட்டு ஞானஸ்நானம் செய்யப் பட்டு, சிலுவையில் மரித்ததின் மூலமாக நமது பாவங்களுக்கான ஆக்கினைகளை சுமந்தார், இதன் மூலமாக, உலகின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா ஆக்கினைகளில் இருந்தும் நம்மை இரட்சித்தார். நமக்கு அவர் கொடுத்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்ததின் மூலமாக நாம் மறுபடியும் பிறந்தோம். தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரமானது பொன்னைப் போல அழியாதது, அதனால் அது நித்தியமாக மாறாதது.
தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பானது, இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் இரத்தத்தினாலும் ஆனது, மேலும் அது நமது எல்லாப் பாவங்களையும் தெளிவாக துடைத்தது. உங்களையும் என்னையும் தேவன் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்ததால், நமது மனங்களாலும், சிந்தனைகளாலும், செயல்களாலும் செய்த நமது பாவங்களிலிருந்து நம்மால் முற்றிலுமாக விடுதலையாக முடிந்தது. நமது இருதயங்களில் கர்த்தர் கொடுத்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்ததின் மூலம், நாம் அவரின் விலையேறப் பட்ட பரிசுத்தவான்களானோம். ஆசரிப்புக் கூடாரத்தின் பலகையைத் தாங்கிய இரண்டு பாதங்களின் மூலமாக, நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பைக் கர்த்தர் நமக்கு கூறுகிறார். கர்த்தருடைய 100 சதவீத கிருபையினாலும் வரத்தினாலும் நாம் அவரின் பிள்ளைகளானோம் என்று அவர் நம்மிடம் கூறுகிறார்.
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தை வெளியே எடுத்து விட்டால், அதன் பிறகு நமக்குள் எதுவும் இருக்காது. நாம் அனைவரும் பாவங்களுக்காக தண்டிக்கப் படுபவர்களாக இருந்தோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று பிரகடனப் படுத்தப்பட்ட கர்த்தரின் சட்டத்தின் படியாக, நமது நிச்சயமான மரனத்திற்கு முன் விழுவதற்காக இருந்த சாதாரண அழிந்து போகும் மனிதர்களாக நாம் இருந்தோம், ஆகவே, நமக்காக காத்திருக்கும் நீதியின் தீர்ப்பாகிய அக்கினியை குறித்து நாம் அறிந்து துக்கிக்கிறவர்களாக இருந்தோம். இதனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விட்டு விட்டால் ஒன்றும் இல்லாதவர்கள் ஆகிவிடுவோம்.
இப்போது பாவத்தினால் அழுகிப் போன ஒரு காலத்தில் வாழும் நாம் தீர்ப்பின் அக்கினிக்கு காத்திருப்பதே நமது விதியாக இருந்தது என்பதை நாம் மறக்கவே கூடாது. நாம் இத்தகைய அழிந்து போகிறவர்களாக இருந்தோம். ஆயினும், கர்த்தருடைய கிருபை நம் மீது முற்றிலுமாக அருளப் பட்டது ஏனெனில் அவர் நமக்கு இரட்சிப்பாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்தார். மேசியா இவ்வுலகிற்கு வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றார், தனது இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார், அதன் மூலமாக, நமது எல்லா பாவங்களில் இருந்தும், எல்லா அநீதிகளில் இருந்தும், எல்லா ஆக்கினைகளில் இருந்தும், அவ்ர் நம்மை இரட்சித்தார். இந்த நிறைவான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம், மேலும் நமது விசுவாசத்தால் கர்த்தருக்கு நம்மால் நன்றி மட்டுமே கூறமுடியும்.
நாம் நமது மாமிசத்தில் மிகுந்த குறைபாடுடையவர்களாக இருந்தாலும், நமது ஊழியர்களும், போதகர்களும், நானும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதற்குமாக போதித்தி வருகிறோம். இந்த காலமானது இத்தனை மோசமானதாக இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதால், எந்த வித கபட்டுத்தனமும் இன்றி, பரிசுத்தத்துடனே தேவனுக்கு ஊழியம் செய்ய முடிகிறது. நமது சொந்த வல்லமையினால் இந்த மனம் நமக்கு கிடைக்கவில்லை, ஆனால், நம்மைத் தனது இரட்சிப்பின் கிருபையினால் தரிப்பித்து பரிசுத்தத்தை நமக்கு தேவன் கொடுத்ததினால் இப்படி ஆயிற்று.
பாவத்திலிருந்தும் ஆக்கினையிலிருந்தும் தேவன் நம்மை நிறைவாக இரட்சித்ததினால், இந்த இரட்சிப்பின் வல்லமையினால் நாம் தரிப்பிக்கப்பட்டிருக்கிறோம், மேலும் முற்றிலுமாக இதன் காரணத்தால் தேவனை நம்மால் தூய்மையுடனே ஆராதிக்க முடிகிறது. நீராலும் ஆவியாலும் தேவன் நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்ததினால், நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட அவரை நாம் ஆராதிக்கலாம் என்று நான் விசுவாசிக்கிறேன், மேலும் நமது பாவங்களாலோ, குறைபாடுகளாலோ, ஆக்கினைகளாலோ கட்டுப் படவும் இல்லை.
 
 
நான் நானாக இருப்பதற்கு கர்த்தரின் கிருபையே முழு காரணமாகும்
 
உண்மையாக, நமது தேவனின் கிருபை இல்லாவிட்டால், இவை எல்லாம் செய்வதற்கு சாத்தியமில்லாதவைகளாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு உலகத்திற்கும் பரப்புவதும், இந்த நற்செய்திக்கு தூய்மையுடன் ஊழியம் செய்வதும், கர்த்தரின் கிருபை இல்லாவிட்டால் அதற்கு சாத்தியமே இல்லை. கர்த்தர் நமக்குக் கொடுத்த 100 சதவீத இரட்சிப்பின் கிருபையின் மூலம் உங்களாலும் என்னாலும், நற்செய்திக்கு ஊழியம் செய்து அதனை பாதுகாக்கும் ஒரு வாழ்வை நம்மால் வாழ முடிகிறது..
விசுவாசத்தின் மூலமாக, கர்த்தருடைய தேவாலயத்தின் தூண்களாகவும் (வெளி 3:12), அவருடைய ராஜ்யத்தின் மக்களாகவும் நாம் ஆனோம். பொன் போன்ற ஒரு விசுவாசத்தை தேவன் நமக்கு கொடுத்தமையால், நாம் இப்போது கர்த்தரின் வீட்டில் இருக்கிறோம். பாவம் கரை புரண்டு வெள்ளக்காடாகிப் போன இக்காலத்தில், அநேக மக்கள் கர்த்தரை மறந்து அவரை இகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் சுத்தமான நீரினால் கழுவப்பட்டு சுத்திகரிக்கப் பட்டோம், மேலும் சுத்தமான நீரை நம்மால் குடிக்கவும், தேவனுக்கு தூய்மையாக ஊழியம் செய்யவவும் நம்மால் முடிகிறது ௭ இந்த ஆசீர்வாதத்திர்காக நான் எத்தனை நன்றியறிதலுடையவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது.
இப்படித்தான் நமது விசுவாசம் இருக்கிறது. நாம் எப்படி நீதிமான்களானோம்? நம்மிடம் எந்த நல்ல விஷயங்களும் இல்லாத போது, நம்மை நீதிமான்கள் என்று நம்மால் எப்படி அழைத்துக் கொள்ள முடிந்தது? உங்களையும் என்னையும் போன்ற பாவமான்வர்களால் எப்படி பாவமற்றவர்களாக முடிந்தது? உங்கள் மாமிசத்தின் நீதியினால், உங்களாலும் என்னாலும் பாவமற்றவர்களாகவும் நீதிமானாகவும் முடிந்ததா? உங்கள் மாமிசத்தின் சிந்தனைகள், உங்கள் சொந்த முயற்சிகள், உங்கள் சொந்த செய்கைகள் ௭ இவை எதினாலும் உங்களை பாவமற்றவர்களாக்கி, நீதிமான்களாக்க முடிந்ததா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தில் தானே நீங்கள் நீதிமான்களானீர்கள்? இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் இரட்சிப்பின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தில் தானே நீங்கள் நீதிமானானீர்கள்? மேசியாவால் நிறைவேற்றப் பட்டதும் கர்த்தரின் வார்த்தையால் வெளிப்படுத்தப் பட்டதுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த இரட்சிப்பை விசுவாசிக்காமல் உங்களால் நீதிமான்களாக முடிந்ததா? உங்களால் அப்படி ஆகியிருக்கவே முடியாது! சிகப்பு நிற நூலை மட்டுமே விசுவாசித்து நம்மால் நீதிமான்களாகவே முடியாது.
நமது இரட்சகரும் மேசியாவுமாகிய இயேசு கிறிஸ்து, நமது சார்பாக நமது எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக, யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம், நமது வாழ்நாள் முழுவதும் செய்யும் பாவங்கள் உட்பட உலகத்தின் அனைத்துப் பாவங்களையும் அவர் தனது தோலில் சுமந்ததால், நாம் விசுவாசத்தின் மூலம் நீதிமான்கள் ஆனோம். பழைய ஏற்பாட்டுக் கால பலி காணிக்கையானது தலைமை ஆசாரியன் தனது கைகளை அதன் தலைமீது வைக்கும் போது அது எப்படி பாவிகளின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததோ, அதுபோலவே, புதிய ஏற்பாட்டுக் காலத்தில், யோவானால் ஞானஸ்நானம் பெறும் போது, உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவன் தன்மீது சுமத்துவதை அவர் ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:15). மேலும் யோவான் அவரை “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று குறிப்பிட்டான்.
தனது ஞானஸ்நானத்தைப் பெற்ற பிறகு, நமது இரட்சிப்பிற்காக இயேசு மூன்று ஆண்டுகள் வாழ்ந்து, மயிர்க் கத்தரிக்கிறவனுக்கு முன்னால் நிற்கும் ஆட்டுக் குட்டியைப் போல, சிலுவைக்குச் சென்று தனது சரீரத்தைக் கொடுத்ததின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் ஆக்கினைகளையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததின் மூலம நமக்கு ஒரு புதிய வாழ்வைக் கொடுத்தார்.
யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டதால், அவர் தன்னை அமைதியாக ஒப்புக் கொடுத்து, தனது கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடிக்கப் பட்டு, ரோம போர்ச் சேவகர்களினால் சிலுவையில் அறையப் பட்டார். சிலுவையில் தொங்கி, தனது சரீரத்தில் இருந்த எல்லா இரத்தத்தையும் அவர் சிந்தினார். மேலும் அவர் நமது இரட்சிப்பிற்கான கடைசி வார்த்தையையும் கூறினார், “முடிந்தது” (யோவான் 19:30).
இப்படியாக மரித்த அவர் மரித்தோரிலிருந்து மூன்று நாட்களில் மீண்டும் உயிரோடெழுந்து, பரலோக ராஜ்யத்திற்கு ஏறி, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்ததின் மூலமாக நமது இரட்சகருமானார். யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களைச் சுமந்து, சிலுவையினாலும், உயிரோடெழுந்ததினாலும், பரலோகம் ஏறியதாலும், இயேசு நமது நிறைவான இரட்சகரானார். ஆகவே வேதாகமம் அறிவிக்கிறது, “இவைகள் மன்னிக்கப் பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே” (எபிரெயர் 10:18).
 
 
இயேசுவின் இரத்தத்தில் மட்டுமுள்ள விசுவாசமும் படிப்படியாக தூய்மையாகும் தத்துவமும் உங்களை பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்கவில்லை
 
இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து தம்மால் முழுமையாக இரட்சிக்கப்படமுடியாது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள வேன்டும். மக்கள் அன்றாடம் தமது கண்களாலும் செயல்களாலும் பாவம் செய்வதால், சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலமாக அவர்களின் பாவங்களைத் துடைக்க முடியாது. இக்காலத்தில் மக்கள் அதிகமாக செய்யும் மிகவும் பரவலான மீறுதலானது பாலியல் சம்பந்தப்பட்ட தீய ஒழுக்கங்களாகும். வெளிப்படையான, ஆபாசமான ஒரு பாலியல் கலாச்சாரம் உலகத்தில் பரவியுள்ளதால் இந்த பாவம் நமது மாமிசத்தில் நன்கு கலந்துவிட்டது. விபசாரம் செய்யாதே என்று வேதாகமம் கட்டளையிடுகிறது, ஆனால் இன்றைய காலத்தில் பார்த்தால், அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளினால், அவர்கள் பாவம் செய்ய விரும்பாவிட்டால் கூட, அநேக மக்கள் இந்த பாவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பெண்ணை இச்சையுடன் யார் பார்த்தாலும் அவன் ஏற்கனவே தனது இருதயத்தில் அவளுடன் விபசாரம் செய்து விட்டான் என்று அவர் அறிவிக்கிறார் (மத்தேயு 5:28), ஆனால் நாம் அன்றாடம் நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் ஆபாசக் காட்சிகளாகவே இருக்கிறது. ஆகவே மக்கள் இத்தகைய காம விகார பாவத்தை ஒவ்வொரு வினாடியிலும், ஒவ்வொரு நொடியிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது இப்படியாக இருக்கும் போது, அவர்கள் தம் மனம் வருந்திய ஜெபத்தை ஏறெடுத்து பரிசுத்தமாவதின் மூலமாக எப்படி கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியும்? அவர்களால் எப்படி நீதிமான்களாக முடியும்? அவர்கள் தம்மைத் தாமே நீண்ட காலமாக ஒழுங்கு படுத்திக் கொண்டு, அவர்கள் முதியவர்களாகும் போது எப்படியோ பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்வதின் மூலமாக அவர்களுடைய இருதயங்கள் நீதியாக முடியுமா? அவர்களுடைய குனங்கள் சாந்தமாகுமா? அவர்கள் அதிக சாந்தம் உள்ளவர்களாக மாறுவார்களா? அப்படியாகாது! அங்கு நடப்பது முற்றிலும் மாறானதாக இருக்கிறது.
பரவலாக காணப்படும் கிறிஸ்தவ கோட்பாடு “படிப்படியாக பரிசுத்தமாகும் கோட்பாடு” என்பதாகும். கிறிஸ்தவர்கள் நீண்ட காலமாக இயேசுவின் சிலுவை மரணத்தை விசுவாசிப்பதுடன், அன்றாடம் மனம் வருந்தி ஜெபித்து, தினமும் தேவனை ஆராத்தித்தால், அவர்கள் படிப்படியாக பரிசுத்தவான்களாகி, நற்குனமுள்ளவர்கள் ஆவர் என இந்த கோட்பாடு கூறுகிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கத் தொடங்கி அதிக காலமாகும்போது, நாம் பாவத்திற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லாதவர்களாக உருவாவோம் என்றும், நமது செய்கைகள் மிகவும் சிறந்தவைகளாக இருக்கும் என்றும், நமது மரணத்திற்கான சமயம் வரும்போது, நாம் முற்றிலுமாக பரிசுத்தமாகியிருப்பதினால், நம்மிடம் எந்தப் பாவங்களும் இருக்காது என்று இந்தத் தத்துவம் வலியுறுத்துகிறது.
நாம் அன்றாடம், எப்பொழுதும் மனம் வருந்தி ஜெபிப்பதினால், நமது ஆடைகளை அன்றாடம் கழுவுவதைப் போல, நாமும் அன்றாடம் கழுவப் படுவோம் என்றும், இப்படி இருப்பதினால், முடிவிலே நாம் மரிக்கும் போது, நாம் முழுமையாக நீதிமானாகியதைப் போன்று, கர்த்தரிடம் நாம் செல்வோம் என இது நமக்கு போதிக்கிறது. இப்படியாக் விசுவாசிக்கும் அநேகர் இருக்கின்றனர். ஆனால் இது மனித சிந்தனைகளால் உருவாக்கப் பட்ட, கற்பனை வளம் மிக்க தத்துவமாகும்.
ரோமர் 5:19 கூறுகிறது, “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள்.” ஒரு மனிதருடைய கீழ்ப்படிதலினாலே நாம் அனைவரும் பாவமற்றவர்களானோம் என்று இந்த வசனம் நம்மிடம் கூறுகிறது. உங்களாலும் என்னாலும் சாதிக்க முடியாதவைகளை, இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தபோது சாதித்தார். உங்களாலும் என்னாலும் பாவத்திலிருந்து தானாக விடுதலையாக முடியாது என்பதை நன்கு அறிந்த இயேசு, நமது சார்பாக பாவங்களுக்கு கிரயம் செலுத்தினார், அதனை உங்களாலோ என்னாலோ செய்ய முடியாது. இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றும், சிலுவையில் அறையப் பட்டு, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததின் மூலமாக, உங்களையும் என்னையும் அவர் இரட்சித்ததுடன், நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை ஒரே தரமாக சுத்தமாக்கினார்.
இயேசு கிறிஸ்துவால் தனது மக்களுக்கு பாவமன்னிப்பின் மூலமாக இரட்சிப்பைக் கொடுக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால் அவர் தனது தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார். மேசியாவாக கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்ததினாலே, இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானம், சிலுவை, மற்றும் உயிரோடெழும்புதல் ஆகியவற்றின் மூலம் இரட்சிப்பின் கிருபையை நமக்கு அருளினார். இப்படியாக நமக்கு இரட்சிப்பின் வரத்தைத் தந்ததினாலே, பாவமன்னிப்பை இயேசுவானவர் முழுமையாக நிறைவேற்றினார். மேலும் இப்போது, விசுவாசத்தினால், இந்த இரட்சிப்பின் கிருபையினால் நாம் தரிப்பிக்கப் பட்டிருக்கிறோம், பாவத்திலிருந்து நமதி இரட்சிப்பை தேவன் நிறைவேற்றியிருக்கா விட்டால், அதனை நமது முயற்சிகளினால என்றென்றும் சாதித்திருக்க முடியாது.
ஆயினும், அநேக கிறிஸ்தவர்கள் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதில்லை, அதற்கு மாறாக, அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து, தமது சொந்த செய்கைகளின் மூலமாக பரிசுத்தவானாக முயற்சி செய்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், இந்த சத்தியத்தை மக்கள் இன்னமும் விசுவாசிக்காதவர்களாக இருக்கிறார்கள். இயேசுவின் ஊழியமானது யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்துடன் தொடங்கியது என மத்தேயு 3ஆம் அதிகாரம் கூறுகிறது. இந்த சத்தியமானது நான்கு நற்செய்தி எழுத்தாளர்களாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
மனித குலத்தின் பிரதிநிதியும், பெண்களுக்குப் பிறந்தவர்களிலேயே மிகவும் பெரியவனுமாகிய யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்தார், ஆயினும் கூட அநேக மக்கள் இந்த விஷயத்தை அலட்சியம் செய்துவிட்டு அதனை விசுவாசிப்பதில்லை. அத்தகைய மக்கள் இயேசு ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல் அவரை மட்டுமே விசுவாசித்து, அவர் சிலுவையில் சிந்திய விலையேறப் பட்ட இரத்தத்தை மட்டுமே இடைவிடாமல் துதிக்கிறார்கள். இயேசு சிலுவையில் மரித்ததின் வேதனையால், தமது உணர்ச்சிகளை தட்டியெழுப்பி, அவர்களின் துதிகளில் எல்லாவிதமான ஆர்பாட்டங்களையும் சேர்க்கிறார்கள். “♫வல்லமையுண்டு, வல்லமையுண்டு, அற்புத வல்லமை♪ தேவாட்டுக் குட்டியின் இரத்தத்தில் வல்லமையுண்டு!♫” என்று கத்துகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் தமது உணர்ச்சிகளாலும், உத்வேகத்தாலும், பலத்தாலும் உந்தப் பட்டவர்களாக, கர்த்தரிடம் செல்ல அவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்கள் அதிகமாக முயற்சி செய்கையில் அதிக கபடர்களாக மாறுகிறார்கள் என்பதையும், அவர்கள் பரிசுத்தவான் போல தம்மைக் காட்டிக் கொண்டாலும், இரகசியமாக தம் இருதயங்களில் பாவங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
 
நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாமலே இயேசுவை எப்படி இரட்சகராக விசுவாசிக்கக் கூடும்?
 
ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து மக்கள் பேசிக் கொண்டிருப்பதை நாம் கேட்கும் போது, அவர்களுக்கு தாம் பேசிக்கொண்டிருப்பதைக் குறித்த சிறிய அறிவும் இல்லாதிருப்பதை நம்மால் காணமுடிகிறது. ஆசரிப்புக் கூடாரத்தை நாம் விசுவாசிக்க வேண்டும் என வருகையில், நமக்கு வசதியானதும் பொருத்த மானதுமான முறையில் அதனை நாம் எப்படி விசுவாசிக்கலாம்? நமது தேவன் நிறைவேற்றிய பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுதல் மிகவும் விரிவானதாலே, நமது இரட்சிப்பானது எத்தனை விரிவாகவும், எத்தனை உறுதியானதாகவும் நிறைவேற்றப் பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளும்படியாக நம்மை அவர் ஏதுவாக்கினார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக, நீரும் இரத்தமுமாகிய, இளநீல நிற நூல் மற்றும் இரத்தாம்பர நிற நூல் ஆகியவற்றின் மூலமாக தேவன் நம்மை இரட்சித்தார் என்பதை நாம் உணரும்படிச் செய்தார். நமது பாவங்களைக் கழுவுவதற்காக நமது தேவன், “ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்” (1 யோவான் 5:6). நாம் விசுவாசிக்கும் நீர், இரத்தம், ஆவி ஆகிய மூன்றும் ஒன்றே. அவர் மனிதராக வந்து, யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று, மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, இவைகளின் மூலமாக கர்த்தர் நம்மை இரட்சித்தார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக, இரட்சிப்பின் விளக்கமான ஓவியத்தை நம்மால் கண்டுபிடித்து, அதனை விசுவாசிக்க முடிகிறது. ஒவ்வொரு பலகையிலும் உள்ள இரண்டு கழுந்துகளையும் இரண்டு வெள்ளிப் பாதங்களையும் ஆராய்வதின் மூலமாக, இயேசு எப்படி நம்மை நமது பாவங்களில் இருந்து இரட்சித்தார் என்ற முறையினை நம்மால் அறிய முடியும். நாம் இப்படியாக சத்தியத்தைக் கண்டு கொண்டோம், மேலும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஊழியத்தை நாம் நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும்.
வேதாகமத்தில் மட்டுமல்லாமல், இந்த இரட்சிப்பானது வேறு எங்கும் தனது தோற்றத்தைக் காணாது. ஞானஸ்நானம் மற்றும் சிலுவை ஆகியா மூலப் பொருட்கள் அடங்கிய இரட்சிப்பின் வரம் நமக்குத் தேவைப் படுகிறது. இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களால், கர்த்தரால் பிறந்தவர்களாக முடியும். நீரினாலும் ஆவியினாலும் நம்மை நமது பாவங்களில் இருந்து கர்த்தர் விடுவித்ததால், அவர் நம் இரட்சிப்பை முழுமையாக நிறைவேற்றினார்.
வேறு வார்த்தைகளில் கூறினால், ஒவ்வொரு பலகையின் அடியிலும் இரண்டு கழுந்துகள் செய்யப்பட்டு அவை வெள்ளிப் பாதங்களில் பொருத்தப் பட்டன. இந்த சத்தியமானது முற்றிலும் அவசியமானதும், மிகவும் இன்றியமையாததும் ஆகும் மேலும் அது நமது பாவமன்னிப்பும் ஆகும். மிகவும் முக்கியமானதாக, கர்த்தர் நமக்காக நிறைவேற்றிய நமது இரட்சிப்பை நாம்விசுவாசிக்க வேண்டும், ஏனெனில், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நாம் விசுவாசிக்கா விட்டால், நம்மால் இரட்சிக்கப் பட முடியாது.
ஆசரிப்புக் கூடாரத்தின் ஒரு பலகை நேராக நிற்பதற்கு இரண்டு வெள்ளிப் பாதங்கள் தேவைப் பட்டதைப் போல, நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது, அவருடைய கிருபையின் இரண்டு சத்தியங்கள் மிகவும் முக்கியமானவை. அவைகள் என்ன? ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் இயேசு நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பதும் அவற்றை சிலுவைக்குச் சுமந்து சென்று அதில் அறையப் பட்டதினால், நமது பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளையும் சாபங்களையும் ஏற்றுக் கொண்டார் என்பதும் அந்த இரண்டு சத்தியங்கள் ஆகும். யாரெல்லாம் நீதிமான்கள் ஆனோர்களோ, அவன்/அவள் நிறைவான இரட்சிப்பின் இந்த இரண்டு கிருபைகளையும் முற்றிலுமாக விசுவாசித்ததினாலேயே நீதிமான்கள் ஆயினர். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையின் இரத்தம் ஆகியவை, இரட்சிப்பிற்கான இரண்டு ஆதாரமான பரிசுகளாகும், கர்த்தருடைய வீட்டிலே நாம் உறுதியாக நிற்பதற்கு அவை உதவுகின்றன. இரண்டு கழுந்துகளும் இரண்டு வெள்ளிப்பாதங்களில் சரியாக பொருந்துவ்வதால், ஒவ்வொரு பலகையாலும் நேராக நிற்க முடிந்தது.
இதைப் போல, அவருடைய இரட்சிப்பின் இந்த இரண்டு ஆதாரங்களையும் விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே, நாம் அவரின் உண்மையான களங்கமில்லாத மக்களானோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் இயேசு அளித்த இரத்தத்தையும் விசுவாசித்து, என்றென்றும் மாறாத பொன்னைப் போன்ற விசுவாசத்தைப் பெற்றோம். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, நிறைவான பாவமன்னிப்பின் இரட்சிப்பைப் பெற்ற பரிசுத்தவான்களாக நாம் ஆனோம்.
 
 
இதுவரை இருந்த இறையியலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் காலமும்
 
ஆதிசபையின் நாட்களைத் தவிர்த்து, கி.பி.313 இன் மிலான் பிரகடனத்தில் தொடங்கி, இன்றைய கிறிஸ்தவம் உட்பட, பொதுவாக கிறிஸ்தவமானது, இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டு விட்டு நற்செய்தியாகிய சிலுவையை மட்டுமே பரப்புகிறது. ஆதிசபையின் காலத்தில் இருந்து கி.பி.313 வரை, கிறிஸ்தவம் ரோம நாட்டின் அதிகார பூர்வமான மதமாகும் வரையிலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே பிரசங்கித்தது, ஆனால் அதன் பிறகு ரோமன் கத்தோலிக்க ஆலயமானது மதத்தை ஆளுகைச் செய்யத் தொடங்கியது. அதன் பிறகு 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, மனிதத்தனத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுதல் என்ற மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிந்தனைகள் எல்லாவற்றிலும் மையமாவது கலாச்சாரமாகி வளரத் தொடங்கியது, முதலில் இவை வடக்கு இத்தாலியின் செல்வமிக்க நகரங்களில் தொடங்கின. இது புத்துணர்ச்சியின் காலம் என அழைக்கப் படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில், இத்தாலியில் தோன்றிய இந்த கலாச்சாரத்தின் அடி ஒட்டமானது, மேற்கத்திய உலகம் முழுவதும் பரவியது, அக்காலத்தில், மனிதத்துவம், மனிதர்களால் உருவாக்கப் பட்ட தத்துவங்கள் ஆகியவற்றின் வல்லுனர்கள், இறையியலைப் படிக்கத் தொடங்கினார்கள். வேதாகமத்தைத் தமது சொந்த அறிவினால் விளக்கமளிக்க அவர்கள் தொடங்கிய போது, கிறிஸ்தவ கோட்பாடுகள் உருவாகத் தொடங்கின. ஆனால் அவர்களுக்கு சத்தியம் சரியாக தெரியாததினால், வேதாகமத்தை சரியாகவும், முழுமையாகவும், அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே தமது அறிவினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதவற்றை, தம்முடைய உலகப் படியான அறிவாலும், சிந்தனைகளாலும், மேற்கொண்டு, இதன் மூலமாக தமது சொந்த கிறிஸ்தவ கோட்பாடுகளை உருவாக்கினர்.
இதன் விளைவாக, கிறிஸ்தவ வரலாற்றில் பல்வேறு கிறிஸ்தவ கோட்பாடுகள் உருவாகத் தொடங்கின: லூத்தரனிசம், கால்வினிசம், அர்மீயனிசம், புதிய கோட்பாடு, கன்சர்வேடிசம், ரேஷனலிசம், முக்கிய கோட்பாடு, இரகசிய கோட்பாடு, விடுதலையின் கோட்பாடு, பெண்ணின கோட்பாடு, கருப்பு கோட்பாடு, மேலும் நாத்திக கோட்பாடு போன்றவைகளும் உருவாகின.
கிறிஸ்தவத்தின் வரலாறு மிகவும் நீண்டதாக தோன்றலாம், ஆனால் அது அத்தனை நீளமானதல்ல. ஆதிசபையின் காலத்திலிருந்து 300 வருடங்களுக்கு, மக்களால் வேதாகமத்தைப் படிக்க முடிந்தது, ஆனால் இதனை சீக்கிரமாக மத்திய காலம் தொடர்ந்தது, இது கிறிஸ்தவத்தின் இருண்ட காலமாகும். இக்காலத்தில் சாதாரண மனிதர்கள் வேதாகமத்தை வாசிப்பது கொடிய குற்றமாகும், தலையை வெட்டி மரண தண்டன வழங்கப் பட்டது. அது 1700கள் வரைத் தொடர்ந்தது, அப்போது கோட்பாடுகளின் காற்று வீசத்தொடங்கியது, 1800களிலும், 1900களிலும், கிறிஸ்தவம் வளருவதைப் போலத் தோன்றியது, அவ்வேளையில் புதிய கோட்பாடுகள் வேகமாகவும் தீவிரமாகவும் வளரத்தொடங்கின, ஆனால் இப்போதோ அநேக மக்கள் அதிசய கோட்பாடுகளுக்குள் விழத்தொடங்கி விட்டனர், தம்முடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் கர்த்தரை அவர்கள் விசுவாசிக்கத் தொடங்கினர். அவற்றின் கொள்கைப்படியான கிளைகள் பல இருந்தாலும், கிறிஸ்தவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு விசுவாசம் இருந்தது, இயேசுவின் இரத்தத்தை விசுவாசிப்பது மட்டுமே அதுவாகும்.
ஆனால் இதுதான் சத்தியமா? நீங்கள் இப்படியாக விசுவாசித்தபோது, உங்கள் பாவங்கள் உண்மையாகவே மறைந்தனவா? அன்றாடம் நீங்கள் பாவம் செய்கிறீர்கள். உங்கள் இருதயத்தாலும், சிந்தனைகளாலும், செயல்களாலும், குறை பாடுகளாலும் அன்றாடம் நீங்கள் பாவம் செய்கிறீர்கள். அப்படி இருக்கும் போது, இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து உங்களால் இந்தப் பாவங்களை நிவர்த்தி செய்ய முடியுமா? இயேசு ஞானஸ்நானம் பெற்று நமது பாவங்களைத் தனது தோலில் சுமந்து, சிலுவையில் மரித்தார் என்பதே வேதாகமம் கூறும் உண்மையாகும். ஆயினும், சிலுவையின் இரத்தத்தை விசுவாசிப்பதாலும், அன்றாடம் மனம் வருந்தி ஜெபிப்பதாலும் மட்டுமே தமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்திப்பதாக கூறும் அநேக மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். இத்தகைய மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலம் உங்களது இருதயங்களிலும், மனசாட்சியிலும் உள்ள பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டனவா? இதற்கு சாத்தியமேயில்லை.
நீங்கள் கிறிஸ்தவராயிருந்தால், இந்த சத்தியம் கூறும் இரட்சிப்பை நீங்கள் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நம்முடைய உலகின் பாவங்களை ஏற்றுக் கொண்டார். இப்படியிருந்தும் கூட நீங்கள் இந்த சத்தியத்தை அலட்சியம் செய்து, அதனை அறிய முயற்சி செய்யாமல், அதனை விசுவாசிக்காமல் இருக்கிறீர்களா? அப்படியானால், இயேசுவை கேலி செய்யும் பாவத்தைச் செய்கிறீர்கள், அவருடைய பெயரைத் தாழ்த்தி கேவலப் படுத்துகிறீர்கள், எனவே இயேசுவை உங்கள் இரட்சகராக உண்மையாக விசுவாசிக்கிறீர்கள் என்று உங்களால் கூறமுடியாது. இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய இந்த இரட்சிப்பில் இருந்து இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு, உங்களுக்கு தேவைப் படும் வகையில் எல்லாம் விசுவாசித்தீர்கள் என்றால், அவருடைய இரட்சிப்பின் சத்தியத்தினால் எப்போதுமே தரிப்பிக்கப்படமுடியாது.
ஆயினும் அநேக கிறிஸ்தவர்களால், இயேசு நமது பாவங்களைத் துடைத்துவிட்டார் என்ற சத்தியத்தை அப்படியே விசுவாசிக்க முடியாது, அதற்கு மாறாக தம்முடைய சொந்த சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர், மேலும் திரிக்கப்பட்ட விசுவாசத்தை அவர்கள் விரும்பியதைப்போல விசுவாசிக்கின்றனர். இந்நாட்களில், அவர்களுடைய தவறான கோட்பாட்டு விசுவாசங்களால், அவர்களுடைய இருதயம் மேலும் மேலும் இருகிப் போயிருக்கிறது, சிலுவையின் இரத்தத்தால் மட்டுமே விசுவாசித்து தமது எல்லாப் பாவங்களையும் கழுவமுடியும் என அவர்கள் விசுவாசிக்கின்றனர்.
ஆனால் கர்த்தர் திட்டமிட்ட இரட்சிப்பிற்கான பதில் கீழ்க்கண்டவாறாகும்: இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து நித்தியமான பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இந்த இரட்சிப்பின் சத்தியத்தில் இருந்து அவரின் ஞானஸ்நானத்தை அகற்றி விட்டு, கீழே வரும் சமன்பாடானாது அசைக்க முடியாத சட்டம் என்று தவறாக புரிந்து கொண்டு, தவறாக விசுவாசிக்கும் எண்ணிலடங்காத மக்கள் இருக்கின்றனர். “இயேசு (சிலுவை மற்றும் அவரின் உயிர்த்தெழுதல்) + மனம் வருந்தி ஜெபித்தல் + நற்செயல்கள் = படிப்படியாக பரிசுத்தமாகுதலின் மூலமாக இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளுதல்.” இப்படியாக விசுவாசிப்பவர்கள் தாம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டதாக தமது உதடுகளினால் மட்டுமே கூறிக் கொள்ளுகிறார்கள். ஆயினும், இன்னமும் தீர்க்கப் படாத பாவங்களின் குவியல்களினால் அவர்களின் இருதயங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதே உண்மையாகும்.
உங்கள் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருக்கின்றனவா? நீங்கள் இயேசுவை இப்போது விசுவாசித்தாலும், உங்கள் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருந்தால், உங்கள் விசுவாசத்தில் மிகவும் ஆபத்தான பிரச்சினை இருக்கிறது என்பது தெளிவாகும். இயேசுவை வெறும் மதச் சம்பந்தப்பட்டவராக மட்டுமே நீங்கள் விசுவாசிப்பதால் உங்களின் மனசாட்சி சுத்தமில்லாததாக இருக்கிறது என்பதுடன் உங்களிடம் பாவமும் இருக்கிறது. ஆயினும், உங்கள் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன என நீங்கள் உணர்ந்ததே மிகப் பெரிய நன்மைத் தரும் விஷயமாகும். ஏன்? தம்மிடம் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன என்பதை உண்மையாகவே அறிந்து கொள்ளுபவர்கள், தாம் இந்தப் பாவங்களுக்காக நரகம் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதையும் உணர்ந்து கொள்ளுகின்றனர், அவர்கள் அப்படிச் செய்யும் போது ஆவியில் எளிமை உள்ளவர்களாக மாறிவிடுகின்றனர், இதன் மூலமாக அவர்களால் உண்மை இரட்சிப்பின் சத்தியத்தைக் கேட்க முடிகிறது.
கர்த்தரிடமிருந்து பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், உங்கள் இருதயங்கள் ஆயத்தப் படவேண்டும். கர்த்தருக்கு முன்னதாக தமது இருதயங்கள் ஆயத்தமாக இருப்பவர்கள், “கர்த்தரே, நான் பாவமன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசுவை நான் பலவருடங்களாக விசுவாசித்து வருகிறேன், ஆயினும் இன்னமும் என்னிடம் பாவங்கள் இருக்கின்றன. பாவத்தின் சம்பளம் மரணம் என்று இருப்பதினாலே, என்னால் நரகம் செல்லுவதைத் தவிர்க்க முடியாது.” என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதைப் போல, தாம் முற்றிலும் பாவம் நிறைந்தவர்கள் என்பதை அவர்கள் கர்த்தருக்கு முன்னதாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள். கர்த்தரின் வார்த்தையை அங்கீகரிப்பவர்களும், கர்த்தரின் வார்த்தை எழுதப் பட்டபடி அப்படியே நிறைவேற்றப்பட்டது என்பதை விசுவாசிப்பவர்களும் - தம்முடைய இருதயங்களை ஆயத்தமாக வைத்திருப்பவர்களைத் தவிர வேறு யாருமில்லை.
இத்தகைய ஆத்துமாக்களை எந்த விதிவிலக்குமின்றி கர்த்தர் சந்திக்கிறார். அத்தகைய மக்கள் அவரின் வார்த்தையைக் கேட்கின்றனர், தம்முடைய சொந்த கண்களால் வார்த்தையைக் கண்டு அதனை நிச்சயப் படுத்துகிறார்கள், அப்படிச் செய்வதின் மூலம் அவர்கள் உணர்ந்து கொள்ளுகிறார்கள், “ஆ, நான் தவறாகப் புரிந்து கொண்டேன். மேலும் எண்ணிலடங்காத மக்கள் தவறாக அதனைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.” மற்றவர்கள் எதனைக் கூறினாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, அவர்கள் தம்முடைய பாவமன்னிப்பைப் பெற்றுள்ளார்கள்.
 
 
தம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் பட்டவர்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தமது விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும்
 
ஆயினும், இந்த உலகத்தில் எண்ணிலடங்கா தீய கோட்பாடுகள் இருக்கின்றன, அவை மறுபடியும் பிறந்தவர்களின் இருதயங்களில் படிந்து அவர்களை அழிக்கக் கூடும். தேவனாகிய இயேசு நம்மை எச்சரித்தார், “நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்” (மாற்கு 8:15). ஒரே ஒரு தரம் கேட்பதின் மூலமாக, மக்களின் இருதயங்களை அழிக்கக் கூடிய புளித்தமாவு போதனைகள் இக்காலத்தில் எத்தனை இருக்கின்றன என்பதை நம்மால் கணக்கிடக் கூட முடியாது. இந்த உலகமானது பாலியல் தீமைகளில் எத்தனையால் அல்லல் படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
விசுவாசிப்பவர்களாகிய நாம் வாழுகிற இப்போதுள்ள காலத்தைத் தெளிவாக அறிந்து நமது விசுவாசத்தைக் காக்க வேன்டும். இத்தகைய பாவம் நிறைந்த உலகில் நாம் வாழும் போதிலும், தேவன் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கினார் என்ற அசைக்க முடியாத சத்தியம் நமது இருதயங்களில் இருக்கிறது. நம்முடைய மாற்றமுடியாத இரட்சிப்பிற்கு சாட்சி கூறும் சாட்சியின் வார்த்தையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும். உலகத்தால் அசைக்க முடியாததும், அதனால் இழுக்கப் படகூடாததுமான சத்தியத்தின் மீதான விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.
இந்த உலகில் காணப்படும் எல்லாம் சத்தியம் அல்ல. நீதிமான் உலகத்தை மேற்கொள்ளுவான் என்று கர்த்தர் நம்மிடம் கூறினார். மாறாத சத்தியமாகிய நற்செய்தியின் மீதுள்ள அவர்களின் விசுவாசத்தின் மூலமாகவே, நீதிமான்கள் சாத்தானை மேற்கொண்டு, உலகத்தை ஜெயிப்பவர்களாய் இருக்கிறார்கள். நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட, நமது இருதயங்களும், நமது சிந்தனைகளும், நமது சரீரங்களும் கர்த்தரின் வீட்டிலேயே இருக்கின்றன, மேலும் விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பின் நற்செய்தியில் நாம் உறுதியாக நிற்கிறோம். நம் தேவன் நம்மை இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் நாம் உறுதியாக நிற்கிறோம்.
இதனால், நாம் கர்த்தருக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இந்த உலகத்தில் பாவங்கள் மலிந்திருந்தாலும், நீதிமான்களாகிய நம்மிடம் கரும்புள்ளி இல்லாத மனசாட்சியும், பொன்னைப் போன்று பிரகாசிக்கும் விசுவாசமும் நம்மிருதயங்களில் இருக்கின்றன. இந்த விசுவாசத்தினால் உலகை மேற்கொள்ளும் வாழ்க்கையை நீதிமான்களாகிய நாம் வாழுகிறோம். தேவன் திரும்பி வரும் நாள் வரையிலும், நாம் அவருடைய ராஜ்யத்தில் இருந்தாலும், இந்த விசுவாசத்தை நாம் அனைவரும் துதித்துக் கொண்டிருப்போம். நம்மை இரட்சித்த தேவனை நித்தியகாலமும் நாம் துதிப்பதுடன் இந்த விசுவாசத்தை நமக்கு கொடுத்த கர்த்தரை நாம் போற்றவும் செய்வோம்.
கர்த்தருக்கு முன்னதாக இருக்கும் இந்த உண்மை நிறைந்த விசுவாசமானது கற்பாறையில் கட்டப்பட்டதால், எந்தவொரு சூழ்நிலையிலும் அது அசைக்கப்படாது. நாம் தேவனுக்கு முன்னால் நிற்கும் நாள் வரையிலும், இந்த பூமியில் நாம் வாழும் போது நமக்கு என்ன நடந்தாலும், விசுவாசத்தினால் நாம் நமது இருதயங்களைப் பாதுகாக்கவேண்டும். இந்த உலகத்தில் உள்ள எல்லாம் அழிந்து போனாலும் கூட, இந்த உலகம் முற்றிலுமாக பாவத்தில் ஆழ்ந்து போனாலும் கூட, பழைய ஏற்பாட்டின் கால சோதோம் கொமேராவை விடவும் மோசமான நிலைக்குச் உலகம் மாறினாலும், நாம் இந்த உலகத்தைப் பின்பற்ற மாட்டோம், ஆனால் நாம் கர்த்தரை அதிகமாக விசுவாசிபோம், நாம் அவருடைய நீதியைக் கடைப்பிடிப்போம், மேலும் கர்த்தரின் உண்மையான கிருபைகளாகிய, இரட்சிப்பின் இந்த இரண்டு கிருபைகளையும் (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை மரணம்) பரப்பும் வேலைகளை தொடர்ந்து செய்பவர்களாக இருப்போம்.
 
 
உண்மை நற்செய்தியை விசுவாசிப்பதைப் போல நடிப்பவர்கள்
 
சில மக்கள் உண்மையாகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காவிட்டாலும் கூட, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப் படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதாக காட்டிக் கொள்வர். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நேர்மையுடன் விசுவாசிக்காததால் அத்தகைய மனிதர்களின் இருதயங்களில் பாவம் இருப்பதை நம்மால் காணமுடியும். பக்கத்து வீட்டாரிடம் இருந்து வாங்கிய இரும்பு கோடாலியைத் தண்ணீரில் தொலைத்து விட்டவர்களின் நிலமை அவர்களுடையதாகும் (2 ராஜாக்கள் 6:5).
அதைப் போல, தேவை ஏற்படுகையில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சிறிது காலத்திற்கு பயன்படுத்தும் படி வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சத்தியம் என விசுவாசிக்கா விட்டால், பிரசங்கிக்கும் போதோ அல்லது ஐக்கியத்தில் இருக்கும் போதோ, உண்மை விசுவாசத்துடன் அவர்களால் பேச முடியாது. இந்த சத்தியத்தில் விசுவாசம் இல்லாதவர்கள் தமது விசுவாச வாழ்வை இடையிலேயே கைவிட்டு விடுவர். ஆனால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியமானது மாறுவதே இல்லை, இதனால் தான் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேன்டும்.
ஆனால், “ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.” என்ற எபிரெயர் 7:12ஐ மேற்கோள் காட்டி சில மக்கள் கூறுகின்றனர், “நியாயப் பிரமாணம் மாறிவிட்டது. ஆகவே, இயேசு நிறைவேற்றிய ஞானஸ்நானமானது, பழைய ஏற்பாட்டின் அதே பிரகாரமாக நிறைவேற்றப் படவில்லை. ஒரு மாற்றப் பட்ட முறைமையின் படி, இயேசு கிறிஸ்து வந்து, சிலுவையில் மரித்ததின் மூலம் நம்மை இரட்சித்தார்.” வேறு சிலர் கூறுகின்றனர், “இயேசு சிலுவையில் மரித்தபோது, கர்த்தர் நமது எல்லாப் பாவங்களையும் இயேசு மீது சுமத்தியதைப் போல தெரிகிறது.”
ஆனால் அத்தகைய கூற்றுகள் எல்லாம் தவறானதும் அடிப்படை இல்லாததுமாகும். “அப்படியானால் பாவம் எதுவும் இல்லாத இயேசுவைக் கர்த்தர் சிலுவையில் அறைந்து அதன் பிறகு உலகின் பாவங்களை அவர் மீது சுமத்தினாரா?” என்று கேட்பதின் மூலம அவர்களின் கூற்றை நம்மால் மறுக்க முடியும். கர்த்தரின் வார்த்தையை நாம் விசுவாசிக்கும் போது, அதனை அப்படியே விசுவாசிக்க வேண்டும், நமது சொந்த சிந்தனைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது. நம்முடைய சொந்த வாதங்கள் இருந்தாலும் கூட, வேதாகமம் இந்த வாதங்களைத் தவறு என்று கூறும் போது, நாம் நமது சொந்த நீதிகளை உடைத்து விட்டு கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கத் தொடங்க வேண்டும்.
அதிகமான நேரம் செல்லுகையில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக தேவன் நம்மை இரட்சித்தது அதிக நன்றிக்குறியதாகவும், விலையேறப்பட்டதாகவும் மாறும். நம்முடைய சொந்த சிந்தனைகளின் படி விசுவாசிக்கையில், நமது விசுவாச வாழ்வு மிகவும் ஆபத்துக்குள்ளாகி, சபையில் இருந்து விழுந்து விடும் ஆபத்தைச் சந்திக்க வேண்டியதாகிவிடும். ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தின் பலகைகளை இரண்டு கழுந்துகள், வெள்ளிப் பாதங்களில் பொருந்தியதின் மூலம் தாங்கியதைப் போல, இயேசுவின் சத்தியத்தில் உள்ள நமது விசுவாசமானது, அதாவது, ஞானஸ்நானம் பெற்றதின் மூலமும், தனது இரத்தத்தையும் சிந்தி நமது தேவன் நமது பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்ற சத்தியமானது நம்மை உறுதியாக தாங்குகிறது. யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், சிலுவையில் அறையப் பட்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும், நமது தேவன் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார். மேலும், நமது விசுவாசம் என்றென்றும் மாறாததாகும்.
நீதிமொழிகள் 25:4 கூறுகிறது, “வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.” இந்த வசனத்தைப் போல, அநேக வில்லத்தனங்களும், தீமையானவைகளும், கெட்டவைகளும் நமது மாமிசத்தின் சிந்தனைகளில் இருந்து உருவானாலும் கூட, இயேசு தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும், அவருடைய இரத்தத்தினாலும், அவர் இந்த மனிதகுலத்தின் பாவங்களாகிய அழுக்குகளில் இருந்து நம்மைச் சுத்தப்படுத்தினார், மேலும், கர்த்தரின் நீதியின் ஊழியர்களாகவும் நம்மை மாற்றினார். உலகின் பாவங்களில் இருந்து இயேசு நம்மை சுத்திகரித்தார். யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் பட்டு தனது இரத்தத்தைச் சிந்தி அதன் மூலமாக் நமது பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளையும் சுமந்து, உலகின் பாவங்களில் இருந்து இயேசு நம்மை தெளிவாக இரட்சித்தார்.
மேலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு அவர்களுடைய நித்திய இரட்சிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. நம்முடைய செயல்கள் சிலவேளைகளில் கவலையளிப்பதாக இருக்கலாம், ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நமது விசுவாசத்தை இருக்கமாக பற்றியுள்ளது, அது வெள்ளிப்பாதங்கள் பலகையின் இரண்டு கழுந்துகளையும் பற்றிக் கொண்டு அதனை நிலைநிறுத்தியதைப் போன்றதாகும்.
 
 
நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கும் நித்தியமான இரட்சிப்பின் கிருபை
 
இப்போது, ஆசரிப்புக் கூடாரத்தின் பலகைகளை ஒன்றாக இணைக்கும் தாழ்ப்பாள்களைக் குறித்து நமது கவனத்தை திருப்புவோம். யாத்திராகமம் 26:26-27 கூறுகிறது, “சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.” ஆசரிப்புக் கூடாரத்தின் பொதுவான வடிவம் நீள்சதுரமாக இருந்தது. மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கும், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலும் தூண்கள் நிறுத்தப்பட்டிருந்தன, மற்றவைகளெல்லாம் பலகையினால் தயாரிக்கப் பட்டன. இந்த பலகைகளெல்லாம் ஐந்து தாழ்ப்பாள்களைச் சுற்றியிருந்தன.
இந்த தாழ்ப்பாள்களைத் தாங்குவதற்காக, ஒவ்வொரு பலகையிலும் ஐந்து பொன் வளையங்கள் பொருத்தப் பட்டிருந்தன, அந்தத் தாழ்ப்பாள்கள் சீத்திம் மரத்தினால் தயாரிக்கப் பட்டு, பொன் முலாம பூசப்பட்டிருந்தன. ஆசரிப்புக் கூடாரத்தின் வடக்கு, தெற்கு, மற்றும் மேற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் இருக்கும் எல்லாப் பலகைகளிலும் இந்த ஐந்து தாழ்ப்பாள்களும் வைக்கப் பட்டிருந்தன. பொன் வளையத்தினூடாக இந்த தாழ்ப்பாள்கள் நுழைந்ததால் எல்லாப் பலகைகளும் ஒன்றாக இணைக்கப் பட்டிருந்தன, மேலும் அவை இணைக்கப் பட்டவையாகவே இருந்தன. ஆகவே, அடிப்பாகத்தில் வெள்ளிப் பாதங்களால் தாங்கப் பட்டு, எல்லாப் பக்கங்களிலும் ஐந்து தாழ்ப்பாள்களால் இணைக்கப்பட்டு, பலகைகள் எல்லாம் உறுதியாகவும் அசையாமலும் இருந்தன.
48 பலகைகள் ஐந்து தாழ்ப்பாள்களால் இணைக்கப்பட்டு, ஒன்றுடன் மற்றொன்று தாங்கிப்பிடித்தவாறு இருந்ததைப் போல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தரின் மக்களும் ஒருவரோடொருவர் இணைக்கப் பட்டுள்ளனர். இரட்சிப்பாகிய நீர் மற்றும் ஆவியின் வரத்தினைப் பெற்றவர்கள் ஒன்று கூடி தம்முடைய விசுவாச வாழ்வை வாழும் இடம் கர்த்தரின் ஆலயமாகும். பேதுரு தனது ஆலயத்தைக் கற்பாறையின் மேல் கட்டுவான் என்று இயேசு கூறினார் (மத்தேயு 16:18-19). மேலும், பாவமன்னிப்பு பெற்றவர்கள் ஒன்று கூடி கர்த்தரின் ராஜ்யம் தோன்றிய இடம் கர்த்தரின் ஆலயமாக மட்டுமே இருக்க முடியும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் செயல்களின் மூலம் உலகின் பாவங்களில் இருந்து நம்மை முழுமையாக இரட்சித்தார் என்பதை கர்த்தர் நமக்கு காட்டுகிறார்.
யாத்திராகமம் 26:28 கூறுகிறது, “நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.” இந்த நடுத்தாழ்ப்பாள் மிக நீளமானதாக இருந்ததால், ஒரு பக்கத்தில் இருந்த எல்லாப் பலகைகளையும் ஒன்றாக இணைக்கும் படியான நீளத்துடன் இருந்தது. அப்படியானால், நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப் பட்டிருக்கவேண்டும், என்பதின் பொருள் என்ன? நீதிமான்கள் ஒருவருடன் ஒருவர் ஐக்கியமாக இருப்பார்கள் என்றும், அவர்களின் விசுவாசம் அவர்களை ஒன்று சேர்க்கும் என்றும் இது பொருள் படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், தேவனால் கொடுக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நிறைவேறிய இரட்சிப்பை விசுவாசிப்பதின் மூலமாக அவர்கள் ஒருவருடன் ஒருவர் விசுவாசத்தினால் ஒன்றாக இருக்க முடியும். நீதிமான்கள் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்கிறார்கள். இதனால் தான் நாம் நமது உடன் பரிசுத்தவான்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடனே ஐக்கியமாக இருக்கும் போது, இருதயங்கள் ஒன்றாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
 
 
“ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும்”
 
எபேசியர் 4:3-7ஐ நாம் பார்ப்போமாக: “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதை யாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத் தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.” சமாதானக் கட்டிலே ஆவிக்குரிய ஐக்கியத்தைக் கடைப் பிடிக்க முயற்சி செய்யும்படி அப்போஸ்தலனாகிய பவுல் நம்மிடம் கூறுகிறான். இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை - ஆகிய இந்த இரண்டினாலும் செய்யப் பட்ட இரட்சிப்பின் கிருபையை நாம் பெற்றுக் கொள்ளும் போது, சமாதானம் நமது இருதயங்களுக்குள்ளாக வருகிறது. பாவமன்னிப்பை நமது இருதயங்களுக்குள் பெற்றுக் கொள்ளும் போது, நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஒரே குடும்பத்தினராகிறோம். சுருக்கமாக கூறினால், நாம் ஒரே சரீரமானோம்.
“ஒரே கர்த்தரும்.” நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்து ஒன்றாக இருக்கிறார். “ஒரே விசுவாசமும்.” நீங்கள் எதனை விசுவாசிக்கிறீர்கள்? நீர், இயேசுவின் இரத்தம் மற்றும் ஆவியாகிய, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். “ஒரே ஞானஸ்நானமும்.” இயேசுவின் ஞானஸ்நானத்தை அப்போஸ்தலனாகிய பவுல் மீண்டுமாக வலியுறுத்துகிறான். சிலுவையைக் குறித்து அவன் இங்கே குறிப்பிடவில்லை, ஆனால் அதற்கு பதிலாக விசுவாசிகளின் எல்லாப் பாவங்களையும் நிபந்தனையின்றி சுத்திகரித்த இயேசுவின் ஞானஸ்நானத்தை அவன் வலியுறுத்துகிறான். அவருடைய ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிப்பது கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதையும் இப்படியாக கிறிஸ்துவுக்குள்ளானதையும் குறிக்கிறது (கலாத்தியர் 3:27). “ஒரே தேவனும்.” தேவன் ஒருவராயிருக்கிறார். கர்த்தர் தனது ஒரே குமாரரை நம்மிடம் அனுப்பியதின் மூலம் இரட்சித்தார்.
இவைகள் அனைத்தும் ஒரே நீர், ஒரேஇரத்தம், மற்றும் ஒரே ஆவி ஆகியவற்றையே குறிக்கின்றன (1 யோவான் 5:8). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசமிருக்கும் போது மட்டுமே, ஒருவரோடொருவர் ஒன்றாக இருக்க முடியும். பாவமன்னிப்பு பெற்றவர்களால் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்க முடிகிறது. ஒருவரை ஒருவர் முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் “நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருப்பதைப் போல, அவர்கள் பாவமன்னிப்பைத் தமது இருதயங்களின் அடி ஆழத்தில் பெற்றிருந்தால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக முடியும். “இந்த சகோதரரும் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டுள்ளார், ஆனால் அவரது மாமிசம் பலவீனமானது என்பதுடன் பல்வேறு மாமிசத்திற்குரிய சிந்தனைகள் அவர் இருதயத்தில் இருக்கிறது. மற்ற எல்லோரையும் போல அவரும் ஒரு தீமை செய்பவர்களின் வித்தே, ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தர் அவரின் பாவங்களையும் நிவர்த்தியாக்கினார்.” இதைப் போல, அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தேவனைப் புகழுகின்றனர்.
மக்கள் எத்தனைக் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் பாவமன்னிப்பைப் பெற்று ஆலயத்தில் தங்கி இருந்தால், அவர்களுடைய முகம் பிரகாசமானதாகும், அவர்களுடைய சிந்தனைகள் வளம் பெறும், அவர்களுடைய இருதயங்களும் பிரகாசிக்கும், மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றாக முடியும். நீதிமான்களால் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்கலாம். இவற்றை எது சாத்தியமாக்குகிறது? விசுவாசம் இதனை சாத்தியமாக்குகிறது. வேறு எந்த நிபந்தனைகளுமின்றி, விசுவாசத்தினாலேயே, அவர்களால் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்க முடிகிறது. அப்படியானல், வேறு சிலருடன் ஒன்றாக அவர்களால் ஏன் முடியவில்லை? கிறிஸ்துவுக்குள் இல்லாதவர்களுடன் நம்மால் நமது இருதயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது, அவர்கள் தமது இருதயங்களில், சத்தியமாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதில்லை. இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களால் நம்முடன் எப்போதும் ஒன்றாகவே முடியாது.
சகோதர சகோதரிகளே, கர்த்தரின் ஆலயம் என்பது என்ன? அது பரிசுத்தவான்கள் என்று அழைக்கப் படும் கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாகியவர்களின் கூட்டமாகும் (1 கொரிந்தியர் 1:2). ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக இயேசு கிறிஸ்து அவர்களின் பாவங்களைக் கழுவினார் என்றும், இந்த பாவங்ளைத் தனது தோல்களில் சுமந்து, சிலுவையில் அவற்றிற்கான எல்லா ஆக்கினைகளையும் ஏற்றுக் கொண்டு, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, அவர்களின் சொந்த இரட்சகராயினார் என்ற சத்தியத்தினை விசுவாசிக்கும் கூட்டத்தினர் அவர்களாவர். கர்த்தரின் ஆலயமானது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஒன்றாகியவர்களின் கூட்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.
இந்த விசுவாசமானது என்னுடய இருதயத்திலும் உங்களின் இருதயத்திலும் இருப்பதால், நாம் ஆலயத்தில் இருக்கும் போது, நம்மால் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்க முடிகிறது. கர்த்தர் நம்மைப் பார்க்கும் போது, நம்முடைய வெளித் தோற்றத்தைக் காணாமல், நம் இருதயங்களின் அடி ஆழத்தைப் பார்க்கிறார் என்பதைப் போல, பாவ மன்னிப்பு பெற்றவர்களாகிய நாமும் கூட வெளித் தோற்றத்தைப் பார்ப்பது இல்லை, ஆனால் நம் ஒவ்வொருவரின் விசுவாசத்தின் ஆழத்தையும் பார்த்து ஒருவருக்கொருவர் ஐக்கியமாக இருக்கிறோம். “இந்த நபர் உண்மையாகவே இருதயத்தால் சத்தியத்தை விசுவாசிக்கிறாரா?” - இதைத் தான் நாம் பார்க்கிறோம். அவனுடைய/அவளுடைய அழகு எப்படி இருக்கிறது என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல, “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு” என்பதை அவனும்/அவளும் விசுவாசிக்கும் வரை மற்றவைகள் ஒரு பொருட்டேயல்ல.
நாம் விசுவாசிப்பதினால், ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களும் பலகைகளுமாக நாம் இருக்கிறோம், மேலும் நாம் விசுவாசிப்பதால், நாம் கர்த்தரின் குடும்பத்தினரும் ஆனோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இரட்சிப்பின் ஒளியை உலகம் முழுவதும் பரப்புகிறோம் என்று நாம் விசுவாசிப்பதால், சுத்தமான பொன்னைப் (விசுவாசம்) போல, கர்த்தரின் வீட்டில் நாம் பிரகாசிக்கிறோம். அன்மைக் காலத்தில் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுடன் நமது இருதயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திலும் வாசம் செய்கிறார். நாம் பாவமன்னிப்பை மட்டுமே பெற்றவர்களாயிருந்தால், நம்மால் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக முடியும், ஆனால் பாவமன்னிப்பை நாம் பெற்றிராவிட்டால், அப்போது நம்மால் ஒருவரோடொருவர் ஒன்றாகவே முடியாது. மற்றவர்களின் வெளித் தோற்றத்தை வைத்து மக்களைப் பிரிக்கும் பாவிகள், அழகையும், செல்வத்தையும், பிரபலத்தையும் போன்ற வெளிப்படையான காரியங்களை வைத்து மட்டுமே ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள், ஆனால், நீதிமான்கள் இதனைத் நமது இருதயங்களில் செய்வதில்லை. நீதிமான்களின் மத்தியில் எந்த பாகுபாடும் இல்லை.
முதன் முறையாக மக்கள் பாவமன்னிப்பைப் பெறும் போது, அவர்களிடம் நான் அடிக்கடி கேட்பேன், “நீங்கள் உண்மையாகவே பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டீர்களா? உங்களிடம் இன்னமும் பாவங்களிருக்கிறதா, அல்லது உங்கள் எல்லாப் பாவங்களும் மறைந்து விட்டனவா? அதற்கு பிறகு, வேதாகமத்தைக் குறித்த பல்வேறு கேள்விகள் உங்களிடம் இருக்க வேண்டுமே, அப்படி இல்லையா? உங்கள் விசுவாச வாழ்க்கையில் பயணம் செய்யும் போது அவர்களிடம் கேளுங்கள். மேலும் உங்களின் குறைபாடுகள் வெளிப்படுத்தப் படலாம், மேலும் செல்லும் வழியில் சில தவறுகளையும் செய்வீர்கள். ஆனால் தலைவர்களும், உங்களுக்கு முன்னால் சென்ற ஆலயத்தில் இருப்பவர்களும் உங்களுக்கு உதவுவார்கள், ஆகவே எல்லாமே மிகவும் நல்லவையாக மாறும்.”
சகோதர சகோதரிகளே, நீதிமான்களாகிய நமக்கு ஆலயம் தேவை. ஆசரிப்புக் கூடாரத்தின் இன்னொரு பொருள் ஆலயம் என்பதாகும். நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்களால் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசித்து அதில் சஞ்சரிக்க முடியாது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதாவர்களால் அவருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவும் முடியாது அங்கே சஞ்சரிக்கவும் முடியாது. சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் மட்டுமே, ஆலயத்திற்குள் வாசம் செய்து, கர்த்தரின் மக்களாகவும் அவருடைய ஊழியர்களாகவும் முடியும் என்பதோடு, கர்த்தரின் மகிமையையும் பார்க்க முடியும். இரத்தத்தினால் மட்டுமோ அல்லது அவர்களின் மாமிசத்தின் தகுதியினாலோ மக்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியாது. சில போதகர்கள் எத்தனை வல்லமை உடையவர்களாக இருந்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கா விட்டால், அவர்கள் எல்லோரும் கர்த்தருடைய பிள்ளைகள் இல்லை.
 
 
நீரினாலும் இரத்தத்தினாலும் வந்த இயேசு நம்மை முழுமையாக இரட்சித்தார்
 
தேவன் இந்த பூமிக்கு வந்த போது அவர் எதைச் செய்தார் என்பதை அவரின் பிறப்பு, ஞானஸ்நானம், இரத்தம் சிந்துதல், உயிர்த்தெழுதல் என்று இங்கே சுருக்கமாக கூறலாம். பாவ மன்னிப்பை வழங்குவதற்கான இவைகள் அனைத்தும் அவருடைய ஊழியங்களாகும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றினாலான அவரின் ஊழியத்தின் மூலமாக, இயேசு தன் குறிக்கோளை நிறைவேற்றினார். ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவை பாவத்திலிருந்து நமது இரட்சிப்பிற்கானவைகளே. கர்த்தரின் இரட்சிப்பு மிகவும் விரிவானதாக இருப்பதால் நமது சொந்த வழிகளில் எல்லாம் அவரை நாம் விசுவாசிக்கமுடியாது. அங்கிருப்பதைப் போலவே நாம் அவரின் இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும்.
நமது விசுவாசமானது அவருடைய இரட்சிப்பின் இரண்டு சத்தியங்களுடன் சரியாக பொருந்த வேண்டும்: அது அவருடைய ஞானஸ்நானமும் அவரின் சிலுவையின் இரத்தமுமாகும். அதனால் தான் இரண்டு கழுந்துகளும் இரண்டு வெள்ளிப் பாதங்களின் துளைகளில் சரியாக பொருந்தின. இயேசு நமக்கு அளித்த சத்தியத்தை, அது உலகின் ஞானங்களில் ஒன்று எனக் கருதி, அதன் படியாக அதனை விசுவாசிக்க முடியாது. நீங்களும் நானும் கர்த்தருக்கு முன்னதாக பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டோம், இதற்காக இரண்டு வெள்ளிப் பாதங்களில் வெளிப் படுத்தப்பட்ட இரட்சிப்பிற்கான இயேசுவின் செய்கைகளை விசுவாசித்தோம்.
இயேசு நம்மை இரட்சித்த விரிவான முறையினை ஆசரிப்புக் கூடாரம் நம்மிடம் தெரிவிக்கிறது, மேலும் இந்த இரட்சிப்பானது ஏற்கனவே முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டது. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பின் இரண்டு வரங்களையும் விசுவாசியுங்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் பயன்படுத்தப் பட்ட பொன் விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த சத்தியத்தை அப்படியே விசுவாசித்தீர்களானால், இரட்சிப்பும் தேவனின் மகிமையும் உங்களுடையதாகும், நீங்கள் விசுவாசிக்கா விட்டால் அவை உங்களுடையதாகாது. விசுவாசத்தினால் ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே வாழ நீங்கள் விரும்புகிறீர்களா, ஆனால் தொடர்ந்தும் விசுவாசிக்க மறுத்து நித்தியமாக சபிக்கப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? சிலுவையின் இரத்தத்தை மட்டுமே நீங்கள் விசுவாசித்தால், உங்களால் இரட்சிக்கப் படவே முடியாது. சிலுவையின் இரத்தமும் ஞானஸ்நானமும் ஒன்றே என நீங்கள் விசுவாசிக்க வேண்டும். தேவனின் வரமானது இவை இரண்டினாலும் ஆனது.
இந்த இரண்டு ஆக்கப் பொருட்களையும் (இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவையின் இரத்தம்) நாம் விசுவாசிக்கும் போதே, கர்த்தரின் ஆவியானவர் நமது இருதயங்களில் வாசம் செய்கிறார். அவற்றை விசுவாசிக்காத வர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதே இல்லை. உங்கள் விசுவாசத்தை வெறும் உதட்டுகளினால் மட்டுமே அறிக்கைச் செய்து உங்களின் இருதயங்களினால் விசுவாசிக்கா விட்டாலோ, அல்லது உங்களின் அறிவானது ஞானியின் பயிற்சி ஆக மட்டுமாகவோ இருந்தால், உங்களால் இரட்சிக்கப் படவே முடியாது. இரட்சிக்கப் படுவதற்கு, உங்கள் இரட்சிப்பின் எல்லைகளை ஏற்படுத்தி, ஒரு தெளிவான கோட்டை வரைய வேண்டும்: “இது வரை நான் இரட்சிக்கப்படவில்லை. நான் இதுவரை விசுவாசித்த இரட்சிப்பானது உண்மையல்ல. ஆனால் நீரினாலும் இரத்தத்தினாலும் வந்த இயேசு விசுவாசித்து இப்போது இரட்சிக்கப் பட்டேன்.” குறைந்தது ஒருமுறையாவது பாவிகளானால் தான் மக்களால் நீதிமான்களாக முடியும். தாம் இரட்சிக்கப் படாதவர்களாக இருப்பதால். தாம் தமது பாவங்களுக்காக ஆக்கினைக்கு உள்ளாக்கப் படுவோம் என்பதை ஏற்றுக் கொண்டு, அதன் பிறது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து முழுமையாக இரட்சிக்கப் படவேண்டும்.
இளநீல மற்றும் சிகப்பு நிற நூல்களான, ஞானஸ்நானம் மற்றும் இயேசுவின் இரத்தம் ஆகியவற்றால், நிறைவான இரட்சிப்பை நாம் பெறவேண்டும். தன்னுடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால், முழுமையான இரட்சிப்பை தேவன் நமக்கு வரமாக வழங்கினார். நம்முடைய சொந்த சிந்தனைகளின் மூலமாக இவற்றை விசுவாசிப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்த இரட்சிப்பைக் கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்தில் தெளிவாக கூறியுள்ளார். இந்த இரட்சிப்பானது விலையேறப்பட்டதும், முழுமையானதுமாக இருப்பதால், அனைவரும் விசுவாசிக்க தகுதியானதே. அவருடைய இரட்சிப்பின் ஒரு பக்கமாகிய சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்காதீர்கள், மாறாக இயேசுவின் ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் ஒன்றாக சேர்த்து விசுவாசியுங்கள்! இதுவரை இரட்சிக்கப் படாதவர்கள் யாராவது நம் நடுவில் இருந்தால், இப்போதும் கூட, இந்த சத்தியத்தை விசுவாசித்து அவனும்/ அவளும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது எனது நேர்மையான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இப்படிப்பட்ட யாராவது நமக்கு நடுவே இருக்கிறார்களா? அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வாய்ப்புகள் நம்மில் எவருக்கும் நிகழக்கூடாது என்பதே எனது விருப்பமாக இருக்கிறது. இது நடந்தாலும் சரி, இரட்சிக்கப் படாதவர்களின் கூட்டத்திற்குள் என்னால் இருக்க முடியாது. இந்த இரண்டு காரியங்களையும் (இளநீலம் மற்றும் சிகப்பு நிற நூல்) விசுவாசித்து முற்றிலுமாக இரட்சிக்கப் பட்டவர்கள் நாமாவோம் - அதாவது, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் இரத்தத்தையும் விசுவாசித்தோம். தேவன் நம்மை இரட்சிக்க பயன்படுத்திய இந்த இரண்டு இரட்சிப்பின் வரங்களுக்காக கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன். கர்த்தர் எனது இரட்சிப்பை முழுமையாக நிறைவேற்றியதால், சாபங்களில் இருந்தும் தீர்ப்புகளில் இருந்தும் நான் ஏற்கனவே விடுவிக்கப் பட்டேன்.
உண்மையாகவே, இளநீலம் மற்றும் சிகப்பு நிற நூல்களினால் கிட்டிய நமது இரட்சிப்பானது, வார்த்தைகளால் கூற முடியாத அளவு விலையேறப் பட்டது. சிலுவையின் இரத்தத்தால் மட்டுமே உங்களுடைய இரட்சிப்பானது முழுமையாக்கப் படவில்லை என்பதையும், அது ஞானஸ்நானத்தாலும் சிலுவையின் இரத்தத்தாலும் நிறைவேறியது என்பதையும் நினைவு கூர்ந்து அதனை விசுவாசியுங்கள், இந்த இரண்டையும் விசுவாசிப்பதின் மூலமாக உங்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நித்திய ஜீவனை நாம் பெற்றுக் கொண்டோம், இந்த இரகசியமான்து ஆசரிப்புக் கூடார பலகையில் உள்ள இரண்டு கழுந்துகளிலும் இரண்டு வெள்ளி பாதங்களிலும் மறைந்துள்ளது.
உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்த நமது தேவனுக்கு எல்லா நன்றிகளையும் நான் கூறுகிறேன். அல்லேலூயா!