(யாத்திராகமம் 25:10-22)
“சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப்; பெட்டியிலே வைப்பாயாக. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக் கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளா யிருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின் மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.”
இன்றைய தலைப்பு சாட்சிப் பெட்டியாகும். சாட்சிப் பெட்டியின் 113 செ.மீட்டராகவும் (3.7 அடிகள்), அகலம் 68 செ.மீட்டரகாவும் (2.2 அடிகள்), உயரம் 68 செ.மீட்டராகவும் (2.2 அடிகள்) இருந்தது, இது சீத்திம் மரத்தினால் செய்யப்பட்டு சுத்தமான பொன் தகட்டால் மூடப்பட்டும் இருந்தது. இந்தப் பெட்டியின் உள்ளே, பத்துக் கடளைகளும் எழுதப் பட்ட இரண்டு கற்பலகைகளும், மன்னா நிரம்பிய ஒரு பொன் குவளையும் இருந்தன. அதன் பிறகு, ஆரோனின் கோலும் அதில் சேர்க்கப் பட்டது. அப்படியானால், சாட்சிப் பெட்டிக்குள் இருக்கும் இந்த மூன்று பொருட்களும் நமக்கு எதனைக் கூறுகின்றன? இந்த பொருட்களின் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் மூன்று ஊழியங்களைக் குறித்த விளக்கத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் இப்போது இந்த சாட்சிப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள மூன்று பொருட்கள் வெளிப்படுத்தும் ஆவிக்குரிய உண்மைகளைப் பார்ப்போமாக.
சட்டத்தினால் பொறிக்கப் பட்ட இரண்டு கற்பலகைகள்
சாட்சிப் பெட்டியினுள் வைக்கப் பட்டிருந்த சட்டத்தினால் பொறிக்கப் பட்ட இரண்டு கற்பலகைகளும், கர்த்தரே சட்டங்களை இயற்றுபவர் என்றும் அவரே தனது சட்டங்களை நமக்கு கொடுத்தார் என்ற்ம் கூறுகின்றன. ரோமர் 8:1-2 கூறுகிறது. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” இந்த வசங்களின் மூலமாக கர்த்தர் நமது இருதயங்களில் இரண்டு சட்டங்க¨ளை ஏற்படுத்தியிருப்பதை நாம் காணலாம்: அவை ஜீவ சட்டமும், ஆக்கினயின் சட்டமுமாகும்.
இந்த இரண்டு சட்டங்களின் மூலமாக, ஆக்கினையையும் இரட்சிப்பையும் கர்த்தர் எல்லா மனிதர்களுக்கும் எடுத்து வந்தார். முதலாவதாக, சட்டத்தின் மூலமாக நாம் பாவிகள் என்பதையும், நரகம் செல்லுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆயினும், தம்முடைய பாவ சுபாவத்தை அறிந்து கொண்டவர்களுக்கும், அழிந்து போன நிலையையும் அறிந்தவர்களுக்கு கர்த்தர் தன்னுடய இரட்சிப்பின் சட்டத்ததைக் கொடுத்துள்ளார், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்.” இந்த இரண்டு சட்டங்களையும் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்தமையால், அவர் நமது உண்மையான இரட்சகராயினார்.
பொன் குவளையில் உள்ள மன்னா
சாட்சிப் பெட்டியில் காணப்பட்ட பொன் குவளையில் மன்னா இருந்தது. இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்திலே 40 வருடங்களை செலவழித்தபோது, வானத்தில் இருந்து கர்த்தர் அவர்களுக்கு உணவை அளித்தார். மேலும் இஸ்ரவேல் மக்கள் மன்னாவை வெவ்வேறு வகையாக சமைத்து வாழ்ந்தனர். அது வெள்ளை கொத்துமல்லியைப் போல இருந்தது, மேலும் அதன் சுவையானது தேனினால் செய்யப் பட்ட தகடுகளைப் போலிருந்தது. இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் கொடுத்த இந்த மன்னாவானது அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும் வரை அவர்களை உயிர் வாழச் செய்தது. மேலும், இதனை நினைவுகூறும் விதமாக இந்த உணவு குவளையில் வைக்கப் பட்டது.
இன்றைய விசுவாசிகளும் ஜீவ அப்பத்தைச் சாப்பிடவேண்டும் என்று இது கூறுகிறது, கர்த்தரின் ஆவிக்குரிய பிள்ளைகள் பரலோகத்தினுள் பிரவேசிக்கும் வரை, இந்த உலகத்தில் வாழும் நாட்களில் அதனை உண்ண வேண்டும். ஆனால் உலகின் அப்பங்களைச் சாப்பிட நாம் விரும்பும் நாட்களும் இருக்கிறது, அதாவது கர்த்தரின் வார்த்தைக்கு பதிலாக இவ்வுலகத்தின் போதனைகளை விசுவாசிப்பவர்களாக இருக்கிறோம். ஆயினும், கர்த்தரின் மக்கள் ஆவிக்குரிய கானான் நாட்டிற்கு சேருவதற்கு முன்னால் அவர்கள், வானத்திலிருந்து இறங்கி வரும் உண்மை ஜீவனின் ஆவிக்குரிய அப்பமாகிய கர்த்தரின் வார்த்தையால் நாம் உண்மையாக வாழ வேண்டும்.
உண்மையான ஜீவனின் அப்பத்தை எப்போதும் சாப்பிடுவதால் ஒருவர் சலிப்படைந்து போவதில்லை. இந்த ஆவிக்குரிய அப்பத்தை அதிகமாக சாப்பிடுகையில், நமது ஆத்துமாகளுக்கு அது அதிகம் உண்மை வாழ்வை அளிக்கும். ஆனால் கர்த்தரின் வார்த்தைக்கு பதிலாக உலகின் போதனைகளின் அப்பத்தை சாப்பிட்டால், நமது ஆத்துமாக்கள் கடைசியில் மரித்து போகும்.
வானத்திலிருந்து விழும் மன்னாவை ஒரு குவளையில் இட்டு அதனை வைக்கும் படி கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் கட்டளை இட்டார். யாத்திராகமம் 16:33ல் கர்த்தர் கூறினார், “ஒரு குவளையை எடுத்து அதில் சிறிது மன்னாவை வைத்து, தேவனுக்கு முன்பாக இட்டு, உங்கள் சந்ததியினருக்காக வையுங்கள்.” வானத்திலிருந்து வந்த மன்னாவானது மக்களின் ஆத்துமாக்களுக்கான உண்மை ஜீவனின் அப்பமாகும். “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.” (உபாகமம் 8:3).
அப்படியானால் நமது உண்மையான ஜீவ அப்பம் யார்?
நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ளுவதற்காக இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானமும், அவருடைய சிலுவை மரணமும் நமது உண்மையான ஜீவ அப்பமாகும். தன்னுடைய மாமிசத்தையும் இரத்தத்தையும் கொடுத்ததின் மூலமாக, இயேசு கிறிஸ்து நமது நித்திய ஜீவனின் அப்பமானார். யோவான் 6:48-58 நம்மிடம் கூறுகிறது: “ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்”
நமது கர்த்தர் கூறினார், “வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” “வானத்திலிருந்திறங்கின அப்பம்” என்றால் என்ன? அது இயேசுவின் மாமிசமும் இரத்தமும் ஆகும். வேதாகமத்தில், யோர்தான் நதியில் இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தினால், அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட இயேசுவின் மாமிசத்தை இது குறிக்கிறது. இயேசு ஞானஸ்நானம் பெற்றதால், அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, சிலுவையில் அறையப் பட்டதின் மூலமாக ஆக்கினைகளைச் சுமந்தார் என்பதை இயேசுவின் இரத்தம் தெரிவிக்கிறது.
சாட்சிப் பெட்டியில் வைக்கப் பட்ட ஒரு குவளை மன்னாவானது இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் இருக்கும் போது அவர்களுக்கான ஜீவ அப்பமாக இருந்தது, ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில், அதனுடைய ஆவிக்குரிய அர்த்தமானது அது இயேசுவின் இரத்தம் என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த சத்தியமானது எல்லாப் பாவிகளினது மீறுதல்களையும் பெற்றுக் கொள்ள இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தையும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானத்தால் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டதால், தனது இரத்தத்தை சிந்தி, சிலுவையிலே மரித்தார், இதன் மூலமாக அவருடைய ஞானஸ்நானமும் இரத்தம் சிந்துதலும் புதிய வாழ்க்கைக்கான நித்தியமான ஊற்றின் வாயாகிற்று, இது விசுவாசிகளை மறுபடியும் பிறக்கச் செய்கிறது.
தனது ஞானஸ்நானத்தின் மூலமாக பாவிகளின் எல்லா மீறுதல்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ள இயேசு கொடுத்த மாமிசமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் ஜீவ அப்பங்களாகும், அது எல்லாப் பாவிகளையும் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்வதை ஏதுவாக்கியது. ஆகவே, “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” (யோவான் 6:53) என்று இயேசு கூறியதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியவர் யார்?
யோவான் 6 ஐ நாம் பார்க்கும் போது, அந்நாளில் இருந்த யூதர்கள் மோசேயை இயேசுவைக் காட்டிலும் பெரியவன் என்று கருதினார்கள். இயேசு இந்த உலகிற்கு வந்தபோது, அவர்கள் அவரிடம் கேட்டார்கள். “நீர் மோசேயை விடப் பெரியவரா?” மேசேயே எல்லோரையும் விட பெரியவன் என்று அவர்கள் கருதினர். இயேசுவே மேசியா என்பதை யூதர்கள் அறிந்து கொள்ளத் தவறியதால், அவர்கள் அவரைத் தமது கண்களின் உறுத்தலாக கண்டனர். ஆகவே அவர்கள் அவரை, “நீர் மோசேயை விடப் பெரியவரா?” என்று கேட்டதின் மூலம் அவரிடம் சவால் விட்டனர். இஸ்ரவேல் மக்கள் யெகோவா கர்த்தரை விசுவாசித்தனர், அப்போது அவர்களின் வழியாக 30 வயதே நிரம்பிய ஒரு வாலிபர் வலியுறுத்தத் தொடங்கினார், “இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்.” இதனால் தான அவர்கள் இயேசு மோசே ஆகிய இருவரின் வல்லமைகளையும் ஒப்பிடத் தொடங்கினார்கள்.
பின்னால் இயேசு அறிவித்தார், “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்,” மனித குலத்தின் முழு வரலாற்றிலும் காணப்பட்ட மனிதர்களில் அவரே பெரியவர்ம் ஏனெனில் எல்லோரையும் படைத்தது அவரே. வெறும் படைக்கப் பட்டவைகளால் படைத்தவரிடம் எப்படி சவால் விட முடியும்? இயேசு மிகப் பெரிய போதகர் மட்டுமே என்றும், மனித வரலாற்றில் தோன்றிய மிகப் பெரும் மதத்தலைவர்களில் ஒருவர் என்றும் சில மக்கள் இன்னமும் கூறுகின்றனர். எத்தகையதொரு தேவதூஷனம்! இயேசுவே கர்த்தர், ராஜாதி ராஜா, அவர் முழு உலகத்தையும் படைத்தவர். அவர் சர்வ வல்லமையுள்ளவராகவும், சதா காலங்களிலும் உள்ளவராக இருக்கிறார். ஆயினும் கூட, நமது உண்மையான இரட்சகராவதற்கும், உங்களையும் என்னையும் நமது எல்லாப் பாவங்களிலிருந்தும், நித்திய மரணத்தில் இருந்தும் இரட்சிப்பதற்கு, அவர் தன்னைத் தானே தாழ்த்தி, மனித சரீரத்தில் இந்த பூமிக்கு வந்தார்.
இயேசு கிறிஸ்து கூறினார், “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.” கடைசியாக, யூதர்கள் காத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவானவர் தாமே என்று இயேசு அவர்களிடம் கூறினார். ஆனால், இயேசு என்ன கூறுகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போனார்கள், அவர்களால் அதனை விசுவாசிக்கவும் முடியவில்லை, அல்லது அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, இது மிகவும் ஆபத்தான புரிந்துகொள்ளுதலை நோக்கி அவர்களை வழிநடத்தியது, “நீர் எப்படி உமது மாமிசத்தைப் புசிக்கும் படியாக கொடுக்கலாம்?” என்று அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். உம்முடைய இரத்தத்தைக் குடித்து உம்முடைய மாமிசத்தை நாம் சாப்பிட்டால் எங்களால் நித்திய ஜீவனை அடைய முடியும் என்று கூறுகிறீரா? நாம் மனித இறைச்சியை சாப்பிடும் காட்டுமிராண்டிகள் என்று எண்ணுகிறீரா?
ஆனால் இயேசுவின் மாமிசத்தைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடிப்பவர்கள் நித்தியமாக வாழுவர். இயேசுவின் மாமிசமானது ஜீவ அப்பமாகும். இந்த குவளையில் போடப் பட்ட உண்மையான மன்னாவின் பொருள் இயேசு கிறிஸ்துவின் மாமிசமும் இரத்தமும் என்பதாகும். இந்த பூமிக்கு வந்து தனது மாமிசத்தையும் இரத்தத்தையும் கொடுத்ததின் மூலமாக, ஜீவ அப்பத்தைச் சாப்பிட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள நம்மை ஏதுவாக்கினார்.
அப்படியானால், எல்லோராலும் எப்படி இயேசுவின் மாமிசத்தை சாப்பிட்டு அவரின் இரத்தத்தைக் குடிக்க முடியும்? இயேசுவின் மாமிசத்தை சாப்பிட்டு அவரின் இரத்தத்தைக் குடிப்பதற்கான ஒரே வழியானது இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பது மட்டுமே. விசுவாசத்தினால் இயேசுவின் மாமிசத்தை சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும். உங்களுக்கும் எனக்கும் பாவ மன்னிப்பைக் கொடுப்பதற்கும், பரலோக ராஜ்யத்தில் நாம் நித்தியமாக வாழ நம்மை ஏதுவாக்கவும், ஞானஸ்நானத்தினாலும் தனது இரத்தத்தைச் சிந்தியதாலும் நமது பாவங்களை ஒரேதரமாக நம் தேவன் துடைத்து விட்டதனாலே, நமது ஆத்துமாக்களுக்கான உணவாக அவர் மாறினார். இப்போது, கர்த்தரின் வார்த்தையாகிய நீரையும் ஆவியையும் விசுவாசிப்பதின் மூலமாக, இந்த ஆவிக்குரிய உணவை நாம் உண்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இயேசுவின் மாமிசத்தை சாப்பிட்டு அவரின் இரத்தத்தைக் குடிப்பது எப்பட் என்று இன்னமும் விளக்கமாக கூற நான் விரும்புகிறேன். இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தார், அவருக்கு 30 வயதாகும் போது யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், அதன் பிறகு, நமது பாவங்களுக்கான ஆக்கினைகளைச் சுமப்பதற்காக சிலுவைவையில் தனது இரத்தத்தைச் சிந்தி மரித்தார், இவைகளை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். இந்த சத்தியத்தை நாம் விசுவாசிப்பதின் மூலம் அவருடைய மாமிசத்தை சாப்பிட்டு அவரின் இரத்தத்தைக் குடிக்கலாம். இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக மனித குலத்தின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் சரீரத்தில் சுமத்தப் பட்டு பாவங்கள் கழுவப் பட்டதானது நிறைவேற்றப் பட்டது. அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பது, இயேசு ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தினார், அவர் சிந்திய இந்த இரத்தமானது நமது பாவங்களுக்கான ஆக்கினைகளைச் சுமந்தது என்பதாகும்.
மேலும், தமது இருதயங்களில் இயேசுவின் இரத்தத்தை விசுவாசிக்கும் யாவரும் தமது தாகத்தைத் தீர்க்கின்றனர், ஏனெனில் இயேசு சிலுவையில் பெற்ற தண்டனையின் மூலமாக அவர்கள் அனைவரின் பாவங்களுக்கான ஆக்கினைகளும் முடிவுக்கு வந்தன. இந்த சத்தியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதனை விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததினாலும், யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதினாலும், இந்த சத்தியத்தை விசுவாசித்ததின் மூலமாக, எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக சுத்திகரிக்கப் பட்டோம்.
விசுவாசத்தின் மூலமாக இயேசுவின் மாமிசத்தை சாப்பிடுமாறும் அவருடைய இரத்தத்தைக் குடிக்குமாறும் கர்த்தர் நம்மிடம் கூறினார். ஒருவருடைய மீறுதல்களையும் விட்டு விடாமல், யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக எல்லாப் பாவங்களையும் இயேசு தன்மீது ஏற்றுக் கொண்டதாலும், சிலுவையின் தண்டனைக்கு தனது சரீரத்தைக் கொடுத்து தனது விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தியதால், விசுவாசித்தவர்களின் இருதயங்கள் இப்போது சுத்தமானதாகவும் தாகம் இல்லாத வையாகவும் இருக்கின்றன, ஏனெனில் அவர்கள் தமது விசுவாசத்தினால் அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவி, எல்லா ஆக்கினைகளையும் ஏற்றுக் கொண்டது. இதனால் தான் இயேசு கூறினார், “என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது” (யோவான் 6:55).
மிகவும் நிச்சயமாக, இந்த இயேசுவே இரட்சகராவார், தேவ குமாரர் நமது பாவங்களைக் கழுவினார் மேலும் நமது பாவங்களுக்கான ஆக்கினைகளையும் ஏற்றுக் கொண்டார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று அறிவிக்கும் சட்டத்தில் இருந்து நம்மை விடுவிப்பதற்கும், நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மைக் கழுவுவதற்கும், நமது எல்லா ஆக்கினைகளில் இருந்தும் நம்மை விடுவிப்பதற்கும், இரட்சகரும் தேவகுமாரரும் ஆகிய இவர், தனது சொந்த சரீரத்தையே சிலுவைக்கும் கொடுத்து, தனது இரத்தத்தைச் சிந்தி, விசுவாசிப்பவர்களின் இருதயங்களை சுத்தப் படுத்தி, அவர்களின் தாகத்தை தனித்தார். இதுவே இயேசுவின் மாமிசத்தினதும் இரத்தத்தினதும் வல்லமையாகும்.
மனித குலத்தின் பாவங்களையும் ஆக்கினைகளையும் பெறுப்பேற்றுக் கொண்ட இயேசுவே இரட்சகருமாவார். தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் மனித குலத்தின் பாவங்களை ஏற்றுக் கொண்ட இரட்சகர் இயேசுவே, இந்த பாவங்களுக்கான ஆக்கினையை ஏற்றுக்கொள்ள அவர் சிலுவையில் அறையப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தினார். நம்மிடமிருந்து உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது இயேசு ஏற்றுக்கொண்டதாலேயே, சிலுவையில் அறையப் பட்டதின் மூலமாக அவர் பெற்றத் தண்டனையானது நமது சொந்தப் பாவங்களுக்குமான தண்டனை ஆகியது.
நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ளமுடியும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தம் சிந்துதலையும் உங்கள் சொந்த பாவமன்னிப்பாக நீங்கள் அனைவரும் விசுவாசிக்க வேண்டும். இந்த சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாகவே, ஆவிக்குரிய படி, இயேசுவின் மாமிசத்தை உண்டு, இரத்தத்தைக் குடிக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், தேவகுமாரராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார் என்றும், தனது ஞானஸ்நானத்தினால் நமது பாவங்களைத் தனது மீது சுமந்தார் என்றும், நமது பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளையும் சிலுவையில் ஏற்றார் என்றும் நாம் விசுவாசிப்பதின் மூலமே, அவருடைய மாமிசத்தை உண்பவர்களாகவும், அவருடைய இரத்தத்தை குடிப்பவர்களாகவும் மாற முடியும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும், நமது பாவமன்னிப்பின் உணவாக நாம் உண்பதின் மூலமாக, எல்லாப் பாவங்களையும் நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். இந்த விசுவாசத்தின் மூலமாகவே, பாவமன்னிப்பைப் பெறுவதும், கர்த்தரின் பிள்ளைகளாவதும், கர்த்தரின் ராஜ்யத்தில் நித்தியமாக வாழுவதும் நம்மால் முடியக்கூடிய காரியமாகிற்று.
ஆரோனுடைய தளிர்த்த கோள்
சாட்சிப் பெட்டியினுள் வைக்கப்பட்ட பொருட்களில் ஆரோனுடைய தளிர்த்த கோள் இருந்தது என்பது இயேசு கிறிஸ்துவே பரலோக ராஜ்யத்தின் நித்தியமான தலைமை ஆசாரியராக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. நித்திய ஜீவன் அவரில் காணப்படுகிறது என்பதையும் அது காட்டுகிறது. இதனை தெளிவாக புரிந்துகொள்ளுவதற்கு எண்ணாகமம் 16:1-2ஐ வாசிப்போமாக. “லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்கு முன்பாக எழும்பி.”
லேவிகளில் மிகவும் பிரபலமான தலைவர்களில் 250 பேர் சபையில் இருந்து எழுந்து, அவர்கள் ஒன்று கூடி மேசேக்கு எதிராக எழுந்து நின்றார்கள் என்பதை இந்த வசனங்கள் இங்கே கூறுகிறது. அவர்கள் கூரினர், “மோசேயே, ஆரோனே, எகிப்து நாட்டில் இருந்து எங்களைப் புறப்பட பண்ணி இப்போது என்ன செய்தீர்கள்? திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு கொடுத்தீர்களா? சோலைக்கு எங்களை அழைத்து வந்தீர்களா? நமக்காக என்ன செய்தீர்கள்? முடிவிலே பாலைவன மணலிலே நாம் மரிக்கும் படியாக எங்களை இங்கே அழைத்து வந்தீர்களா? கர்த்தரின் ஊழியர்கள் என்று உங்களை நீங்களே எப்படி அழைத்துக் கொள்ளலாம்? கர்த்தர் உங்கள் மூலமாக மட்டும் தான் செயல் புரிகிறாரா?” வேறு வார்த்தைகளில் கூறினால், மோசே மற்றும் ஆரோனின் தலைமைக்கு எதிராக ஒரு புரட்சி உருவாயிற்று.
அப்போது, அந்த புரட்சியைத் தலைமைத் தாங்கி நடத்திய சபையின் தலைவர்களான, கோராகு, தாத்தான், ஓன், ஆகியோரிடம் கர்த்தர் கூறினார், “அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக. லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.” கர்த்தர் மேலும் கூறினார், “அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன்” (எண்ணாகமம் 17:5), வசனம் 8இல் நாம் காண்கிறோம், “மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.”
அதன் பிறகு வசனம் 10 இல் நாம் காண்கிறோம், “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.” இதுவே ஆரோனின் தளிர் விட்ட கோளாகும், அது சாட்சிப் பெட்டிக்குள் வைக்கும் படியாக கொண்டு வரப்பட்டது.
லேவியின் சந்ததியினனாகிய, ஆரோன் இஸ்ரவேல் மக்களின் தலைமை ஆசாரியனாக அபிஷேகிக்கப் பட்டான் என்பதை இது கூறுகிறது. மோசே கர்த்தருடைய தீர்க்கதரிசியாவான், மேலும் ஆரோனும் அவனுடைய வமிசத்தாரும் இஸ்ரவேல் மக்களின் தலைமை ஆசாரியர்களாக இருந்தனர். பூலோகத்தின் தலைமை ஆசாரியனாகிய ஆரோன் செய்யவேண்டியவைகளை கர்த்தரே அவனிடம் ஒப்படைத்தார். கர்த்தர் மோசேயிடம் பலி காணிக்கை முறையினைக் காட்டினார், இஸ்ரவேல் மக்கள் தாம் பாவம் செய்த போது பலி காணிக்கையை அங்கே எடுத்து வந்து அவைகளைக் கொடுத்தனர், மேலும் பலி காணிக்கை முறைமையின் படி எல்லாம் நடக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளும்படி ஆரோன் நியமிக்கப் பட்டான்.
தலைமை ஆசாரியனாகிய ஆரோனிடம் எல்லா ஆசாரிய கடமைகளையும் கர்த்தர் சுமத்திய போதிலும், அவனுடைய ஆசாரியத்துவத்தை எதிர்த்த மக்கள் இன்னமும் இருக்கவே செய்தார்கள், இதனால் தான் ஆரோனின் கோளை அவர் துளிர்க்கப் பண்ணினார், இதன் மூலமாக அவனுடைய ஆசாரியத்துவம் கர்த்தரிடமிருந்து வந்தது என்பதை அவர் காட்டினார். இந்த பாடத்தினை நினைவு கூறும்படி, இஸ்ரவேல் மக்கள் இந்த கோளை சாட்சிப் பெட்டியினுள் வைக்கும் படி செய்தார். இப்படியாகவே சட்டத்தின் இரண்டு கற்பலகைகளும், மன்னாவைத் தாங்கிய குவளையும், துளிர் விட்ட ஆரோனின் கோலும் சாட்சிப் பெட்டியின் உள்ளே வைக்கப் பட்டன. ஆவிக்குரிய படி இந்த மூன்று பொருட்களும் எதனைக் குறிப்பிடுகின்றன? அவைகள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியங்களைக் குறிக்கின்றன.
நமது எல்லாப் பாவங்களையும் துடைக்க இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய ஊழியங்கள் யாவை?
முதலாவதாக, அவர் தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார். அவர் அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறார். அவருக்கு ஆதியும் அந்தமும் தெரியும், முதலாவதையும் கடைசியானதையும் அவர் நமக்கு கற்றுத் தந்தார். நாம் பாவத்திலே தொடர்ந்தும் இருந்தால், நீங்களும் நானும் உட்பட மனித குலத்திற்கு என்னவாகும் என்பதை நமது தேவன் அறிவார்.
இரண்டாவதாக, பரலோக ராஜ்யத்தின் நித்தியமான தலைமை ஆசாரியராக இயேசு மாறினார். அவர் நம் சொந்த இரட்சகராகி, நனது பாவங்களில் இருந்து நம்மை இரட்சிக்கும் பொருட்டு இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நம்மை முழுமையாக இரட்சிப்பதற்காக அவர் பரலோக ராஜ்யத்தின் உண்மையான தலைமை ஆசாரியராக வந்தார்.
மூன்றாவதாக, இயேசு கிறிஸ்துவே நமது ராஜா. வேதாகமம் அறிவிக்கிறது, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது” (வெளி 19:16). முழு உலகத்தையும் படைத்தது அவரே, ஆகவே அதில் உள்ள எல்லாவற்றையும் ஆளுகைச் செய்யும் அதிகாரம் அவரிடம் இருக்கிறது.
நமக்கு பாவத்திலிருந்து இரட்சிப்பு என்ற சத்தியத்தைப் போதித்த நம்முடைய உண்மையான ராஜாவும், பரலோகத்தின் நித்தியமான தலைமை ஆசாரியருமாகிய இயேசு கிறிஸ்து, இப்போது நம்முடைய உண்மையான இரட்சகரானார் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது தேவன் உங்களையும் என்னையும் பாவத்திலிருந்து விடுதலையாக்கி, நம்மைக் கர்த்தரின் மக்களும், அவருடைய பிள்ளைகளும், அவருடைய ஊழியர்களுமாக்கி, நற்செயல்களைச் செய்யும் படியாக நம்மை ஏதுவாக்கினார். நாம் இந்த பூமியிலும் கூட புதிய வாழ்வுடையவர்களாக இருக்கும் படி, நமது ஆத்துமாக்களை மறுபடியும் பிறக்கச் செய்தார், மேலும் அவர் நமக்கு புதிய வாழ்க்கையைக் கொடுத்தமையால், நேரம் வரும் போது, அவர் நமது சரீரங்களை எழுப்பி பரலோகத்தின் அவருடனே நித்தியமாக வாழ நம்மை அவர் ஏதுவாக்குவார். உங்களுக்கும் எனக்கும் இயேசு யார்? அவர் நமது உண்மையான இரட்சகர். இயேசு கிறிஸ்து நமது தீர்க்கதரிசி, நமது என்றென்றும் உள்ள தலைமை ஆசாரியர், நமது ராஜா.
கர்த்தருடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்க விரும்பாவிட்டாலும், நாம் மிகவும் குறைபாடுடையவர்களாயும் பலவீனமானவர்களாகவும் இருப்பதால், எப்போதும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. இப்படியாக நாம் தொடர்ந்து வாழ்ந்து, மரித்து, கர்த்தருக்கு முன்னால் நாம் நிற்கும் போது, நாம் செல்லுவதற்கான சரியான இடம் எதுவாக இருக்கக் கூடும்? அது பரலோகமாக இருக்குமா நரகமாக இருக்குமா? “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அறிவிக்கும் சட்டத்தின் படியாக நாம் நியாயம் தீர்க்கப் படவேண்டுமானால், நாம் எல்லாம் அழிந்து போக மாட்டோமா? நம்மைப் போன்ற மக்களை பாவத்திலிருந்தும் அழிவிலிருந்தும் இரட்சித்து நமது இரட்சகரானவர் இயேசு கிறிஸ்துவே ஆவார். அவர் தாமே இந்த பூமிக்கு வந்தார், நம்மை நேசித்தார், நம்மை நமது பாவங்களில் இருந்து விடுவித்த இரட்சகருமாயினார், அதன் மூலமாக அவர் தனது மந்தையின் பிரதான மேய்ப்பருமாகினார்.
யோவான் 3:16 கூறுகிறது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” உங்களையும் என்னையும் கர்த்தர் அதிகமாக நேசித்தபடியால் அவர் தாமே இந்த பூமிக்கு நமக்காக வந்தார், நம்மிடமிருந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளும் படியாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார், அவர் சிலுவையில் அறையப்பட்டு அதில் மரித்தார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார், மேலும் இவற்றின் மூலமாக அவர் உண்மையாகவே நமது இரட்சகராகினார். ஆகவே நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமது இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலமாக, நாம் பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டவர்கள் ஆனோம், இரட்சிப்பின் வரத்தைப் பெற்றவர்கள் ஆனோம், அவை நாம் கர்த்தரின் பிள்ளைகளாவதையும் நித்திய ஜீவவைப் பெற்றுக் கொள்ளுவதையும் ஏதுவாக்கின.
கர்த்தருக்கு முன்னதாக நாம் விசுவாசிக்கையில் ஒரு காரியத்தைக் குறித்து நாம் மிகவும் கவணமாக இருக்க வேண்டும். கர்த்தர் நம்மை நேசித்ததினாலேயே, நமது பாவங்களைக் கழுவுவதற்காக, அவர் இந்த பூமிக்கு மனித மாமிசமாக அவதாரம் எடுத்து வந்தார், அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, அதன் மூலமாக நமது உண்மையான இரட்சகராகினார். நமது இருதயத்தில் விசுவாசத்தின் மூலமாக இயேசுவின் மாமிசத்தை சாப்பிடுவதின் மூலமாகவும், அவரின் இரத்தத்தைக் குடிப்பதின் மூலமாகவும் நித்திய ஜீவனை நம்முடன் சேர்த்துக் கொள்ள முடியும். இவற்றை விட வேறு எதுவும் தெளிவாக இருக்க முடியாததால், இதனை ஏற்றுக் கொண்டு விசுவாசிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.
விசுவாசத்தின் மூலமாக இயேசுவின் மாமிசத்தை சாப்பிட்டு, அவரின் இரத்தத்தைக் குடிக்க வேண்டும். மேலும், இயேசுவால் நிறைவேற்றப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அங்கீகரித்து அதனை விசுவாசிக்கும் ஒரே விசுவாசத்தை மட்டுமெ ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். விசுவாசிப்பதைத் தவிர நாம் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது. கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்வதில் நான் மிகவும் வேகமாக இருக்கிறோம். அப்படி இருந்தும், உங்களையும் என்னையும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரே தரமாக அவர் இரட்சித்தார், ஏனெனில் அவர் நம்மை நேசிக்கிறார்.
பழைய ஏற்பாட்டின் காலத்தில் தன்னுடைய இரட்சிப்பைக் குறித்து கர்த்தர் எப்படி பேசினார்?
அப்படியானால், எந்த முறையின் மூலமாக தேவன் நம்மை இரட்சித்தார்? பழைய ஏற்பாட்டில், ஆசரிப்புக் கூடாரத்தின் கதவிலும் தலைமை ஆசாரியன் அணிந்த ஆடைகளிலும் உள்ள நிறங்களின் மூலமாக, இந்த இரட்சிப்பைக் குறித்து பேசினார். ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் நிறங்கள் நமது முழுமையான இரட்சிப்பை வெளிப்படுத்தின. மேலும் தலைமை ஆசாரியனின் ஆடையில், பொன்னால் ஆன நூலும் சேர்க்கப் பட்டது.
இளநீல நிற நூலானது, இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு நமது இரட்சகராக வந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது பாவங்களைச் சுமந்தார் என கூறுகிறது. இரத்தாம்பர நிற நூலானது இயேசு கிறிஸ்துவே ராஜாது ராஜா என்றும் உலகத்தைப் படைத்த படைப்பாளியாகிய கர்த்தர் என்றும் கூறுகிறது. தனது ஞானஸ்நானத்தினால் இயேசு கிறிஸ்து நமது பாவங்களை ஏற்றுக் கொண்டதால், அவர் உலகின் பாவங்களைச் ஏற்றதினால், உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததினால், சிலுவையிலே தனது இரத்தத்தை சிந்தி அதிலே அவர் மரித்ததின் மூலமாக அவற்றிற்காக ஆக்கினைக்குள்ளாக வேண்டியிருந்தது என்பதை சிகப்பு நிற நூல் கூறுகிறது, மேலும் இதன் மூலமாக நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்த இரட்சிப்பை நமக்குத் தந்தார்.
நமது தேவன் இப்பூமிக்கு வந்தார் என்பதையும், ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, அதன் மூலமாக உண்மையாக விசுவாசிக்கும் அனைவரின் பாவத்தையும் துடைத்து, அவர்களுடைய ஆவியை பனியைப் போல வெண்மையாக்கி, அவர்களை இரட்சித்தது என்பதை, மெல்லியதாக திரிக்கப் பட்ட பஞ்சு நூல் மூலமாக, புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டின் விளக்கமான வார்த்தைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இயேசு கிறிஸ்து நமக்காக செய்தவற்றை விசுவாசிக்கும் விசுவாசத்தை பொன்னால் ஆன நூல் தெரிவிக்கிறது. இதனால் தான் பொன்னால் ஆன நூல் பிரகாசிக்கிறது. பெருமைப் பாராட்ட உங்களிடமும் என்னிடமும் எதுவும் இல்லை, ஆனால் இயேசு கிறிஸ்து யார் என்று முழு இருதயத்துடன் நாம் விசுவாசிக்கும் போது, அதாவது அவரே கர்த்தர் என்றும் தேவகுமாரன் என்றும், அவர் நமக்காக செய்தவற்றையும் விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் அன்பினால் நாம் உண்மையாகவே தரிப்பிக்கப் பட்டு, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்று, அவர் செய்த நீதியின் செயல்களில் விசுவாசம் கொண்டவர்களாக அவரால் செழிக்கவேண்டும். இதைத் தான் ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே வைக்கப் பட்டுள்ள சாட்சிப் பெட்டியின் மூலமாக கர்த்தர் நம்மிடம் என்ன கூறுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தார் என்பதையும், மனித குலத்தின் பாவங்களையும் நமது பாவங்களையும் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பதையும், சிலுவையில் மரித்ததின் மூலமாக பாவத்திற்கான நமது ஆக்கினைகளையும் ஏற்று, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து மீண்டும் வாழுகிறார் என்பதை நாம் அறிந்து அதனை விசுவாசிக்க வேன்டும். சாட்சிப் பெட்டியின் மூலமாக, இயேசு கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராகவும், நமது சொந்த கர்த்தராகவும் நாம் உண்மையிலேயே விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் வெளிப்படுத்துகிறார். தமது பாவங்களை எடுத்துக் கொள்வதற்காக இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்றும், அவர்களின் பாவத்திற்கான ஆக்கினையாக இயேசுவின் சிலுவையின் இரத்தம் சிந்துதலையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தை தமது சொந்த மரணமாகவும், அவரது உயிர்த்தெழுதலை அவர்களின் சொந்த உயிர்த்தெழுதலாகவும் விசுவாசிப்பவர்களையே கர்த்தர் இரட்சிக்கிறார்.
ஆகவே, இந்த ஆசரிப்புக் கூடாரம் யாரைக் குறிக்கிறது? அது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. உங்களையும் என்னையும் இயேசு கிறிஸ்து இரட்சித்த இரட்சிப்பின் முறையைக் குறித்து அது கூறுகிறது. புதிய ஏற்பாட்டில், ஞானஸ்நானம் பெற்று மரித்தவர் இயேசு கிறிஸ்துவேயாவார், இதன் மூலமாக அவர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார், அவற்றைக் கழுவி விட்டார், நமது எல்லா மீறுதல்களுக்காகவும் ஆக்கினைக்குள்ளான அவர், எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை ஒரேதரமாக இரட்சித்தார்.
பழைய ஏற்பாட்டில், பலி காணிக்கையானது பாவிகளை இரட்சித்தது, அதற்கு அது அவர்களின் மீறுதல்களை எல்லாம் தன் தலையில் கைவைக்கப்படுவதின் மூலம் ஏற்றுக் கொண்டது, அதன் பிறகு தன் இரத்தத்தைச் சிந்தி மரித்தது. பலி காணிக்கையின் மரணம் எப்படியானது என்பதை பழைய ஏற்பாடு விவரிக்கிறது, அது முதலில் கைவைப்பதின் மூலமாக பாவிகளின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டது, அதன் பிறகு அவர்களுடைய இடத்திலிருந்து பாவநிவர்த்தியாக மரித்தது. பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப் பட்ட பாவநிவர்த்திக்கான பலி காணிக்கை முறையை, புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிடும் போது, அது ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் வந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.
அப்படியானால் இந்த இரட்சிப்பின் சட்டத்தை ஏற்படுத்தியது யார்? இரட்சகராகிய கர்த்தர் அதனை நியமித்தார். பாவிகளை பாவங்களில் இருந்து விடுதலையாக்கும் இரட்சிப்பின் சட்டத்தை கர்த்தர் நியமித்து, இந்த சட்டத்தை நம்மிடம் கொடுத்தார். சாட்சிப் பெட்டியில் சட்டத்தையுடைய இரண்டு கற்பலகைகளும், ஒரு குவளை நிறைய மன்னாவும், ஆரோனின் தளிர்ந்த கோலும் இருந்தன, இவை எல்லாப் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய ஊழியங்களைப் பற்றியும் கூறுகின்றன.
ஆவிக்குரிய வகையில், நம்முடைய பெரிதான மேய்ப்பரும், பரலோக ராஜ்யத்தின் தலைமை ஆசாரியருமாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும் போது கர்த்தர் நம்மை இரட்சிக்கிறார் என்பதை ஆரோனின் தளிர்ந்த கோளானது கூறுகிறது. குவளையில் வைக்கப்பட்டிருந்த மன்னாவானது, நமது ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் மாமிசத்தையும் இரத்தத்தையும் குறித்து கூறுகிறது. சட்டத்தை இயற்றுவது கர்த்தரே என்று இரண்டு கற்பலகைகளும் கூறுகின்றன. பாவம் மற்றும் மரணத்தைக் குறித்த சட்டம் மேலும் பாவமன்னிப்பு மற்று இரட்சிப்பைக் குறித்த சட்டம் ஆகியவௌ கர்த்தரால் நியமிக்கப் பட்ட சட்டங்களாகும். நம்முடைய கர்த்தராகிய இயேசு, ஜீவனுக்கான சட்டத்தையும், ஆக்கினைக்கான சட்டத்தையும் நமக்காக ஏற்படுத்தினார்.
இதைப் போல, சாட்சிப் பெட்டியும், அதிலுள்ள யாவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி நம்மிடம் பேசுகின்றன. இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகராக விசுவாசிப்பதின் மூலமாக, நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப் பட்டு நமது இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம். நாம் எத்தனைக் குறைபாடுடையவர் களாகவும் பலவீனர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்து நியமித்த இரண்டு சட்டங்களையும் நாம் பின்பற்றினால், ஒரு முறை நாம் பாவியாகி, மீண்டுமாக நமது எல்லாப் பாவங்களுக்குமான பாவ மன்னிப்பைப் பெற்று நீதிமான்களாக முடியும், மேலும் இதன் மூலமாக நம்மால் கர்த்தரின் சொந்த மக்களாகவும் முடியும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
இப்போதைய இந்த காலகட்டங்களில், உலகம் முழுவதிலும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களும் இயேசுவை வீனில் விசுவாசிப்பவர் களாகவே இருக்கிறார்கள், ஏனெனில் ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து தம்மால் பாவமன்னிப்பைப் பெறமுடியும் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு தனது சிலுவையின் இரத்தத்தால் மட்டுமே தம்மை இரட்சித்தார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். ஆனால் நமது இரட்சிப்பிற்காக இயேசு மரிக்க மட்டுமா செய்தார்? ஆனால், அதற்கு மாறாக, யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஒரேதரமாக ஏற்றுக் கொள்ளவில்லையா (மத்தேயு 3:13-15, 1 பேதுரு 3:21, 1 யோவான் 5:6)?
ஆயினும் கூட இன்றைய கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து, பாவமன்னிப்பை பாதி மட்டுமே பெற்றுக் கொள்ளுகின்றனர். இயேசு கிறிஸ்துவைத் தமது இரட்சகராக விசுவாசித்து தமது மூலப் பாவங்களை நிவர்த்தி செய்த அவர்கள், தமது சொந்தப் பாவங்களை கழுவ முயற்சி செய்து அன்றாடம் தமது மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுக்கின்றனர். இந்த இரட்சிப்பு எத்தனை குழப்பமானதாக இருக்கிறது? இது அவர்களின் பாதி பாவத்தை மட்டுமே விசுவாசத்தினால் கழுவியதையும், மற்றதை தமது சொந்த முயற்சிகளினால் கழுவ முயற்சி செய்ததையும் போன்றது.
இப்படியாக இருக்கும் போது, இயேசுவின் ஞானஸ்நானத் தையும் அவரின் இரத்தத்தையும் ஒன்றாக சேர்த்து தொடர்ந்து பிரசங்கிப்பதை என்னால் எப்படித் தவிர்க்க முடியும்? இது வரையில், ஆதிசபையின் காலத்தில் இருந்த கிறிஸ்தவர்களைத் தவிர்த்து, இந்த உலகத்துன் அநேக கிறிஸ்தவர்கள் அரைவாசி வெறுமையான இரட்சிப்பை மட்டுமே விசுவாசித்துள்ளனர். கிறிஸ்தவத்தை மக்கள் ஒரு உலகத்தின் மதமாக மக்கள் எண்ணுவதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ?
சில காலத்திற்கு முன்னால், இந்த ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த முதலாவது தொகுப்பை வாசித்து, அமெரிக்காவைச் சேர்ந்த வலேரியா ஜான் என்ற பெண் பாவமன்னிப்பைப் பெற்றார். இந்த புத்தகத்தை அவர் வாசிப்பதற்கு முன்னால், நம்முடைய மற்ற பல வெளியீடுகளையும் அவர் வாசித்துள்ளார். நம்முடைய புத்தகங்கள் கூறுவதை அவர் ஒத்துக் கொண்டாலும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த முழுமையான திருப்தி அடைந்த நிலைக்கு அவரால் வரமுடியவில்லை. தன்னிடம் இன்னமும் சில சந்தேகங்கள் இருப்பதாக அவர் கூறினார், “இது சரியானதாகவே தெரிகிறது, ஆனால் இதனை ஏன் அநேக மக்கள் பிரசங்கிப்பதில்லை?” என்றும் ஆச்சரியப்பட்டார். ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த வரிசையின் முதலாவது தொகுப்பை வாசித்து முடித்தபோது, இரட்சிப்பைக் குறித்த தெளிவான விசுவாசத்தைப் பெற்றதாகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது சரியானது எனவும், அதுவே ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியம் எனவும் அவர் அறிக்கைச் செய்தார்.
இந்த புத்தகத்தைப் படித்த பெனினைச் சேர்ந்த ஒரு வாசகர் எங்களுக்கு எழுதினார், “உங்களுடைய புத்தகத்தைப் படித்து நான் பாவ மன்னிப்பு பெற்ற பிறகு, நான் எனது ஆலயத்திற்கு செல்லுவதை நிறுத்தி விட்டேன் எனக் கூறுவதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். நான் இதுவரைச் சென்று கொண்டிருந்த ஆலயத்திற்கு செல்லுவதை நான் ஏன் நிறுத்தினேன்? அவர்கள் படிப்படியாக பரிசுத்தமாகும் கோட்பாட்டை பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள், அதனைக் குறித்து வேதாகமத்தில் எதுவும் குறிப்பிடப் படவில்லை. இந்த படிப்படியா பரிசுத்தமாதல் என்ற கோட்பாடு வேதாகமத்திற்கு முற்றிலும் புறம்பான ஒன்று. எனது மாமிசத்தால் பரிசுத்தமடையவே முடியாது என்ற நிலையில் நான் இருக்கும் போது, என்னால் பரிசுத்தமாக முடியும் என்று அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தனர், இத்தகைய பிரசங்கங்களைக் உட்கார்ந்து கேட்பது எனக்கு முடியாத ஒன்றாகியது.
இதனால் தான் இந்த ஆலயத்தை விட்டு நான் வெளியே வந்து அதிலிருந்து நான் விலகிவிட்டேன். உங்களுடைய புத்தகத்தை வாசித்து, பாவமன்னிப்பை நான் பெற்றுக் கொண்டதால், நான் சென்றுக் கொண்டிருந்த ஆலயத்தை விட்டு விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழித் தெரியவில்லை. இவற்ரை எல்லாம் அனுபவித்த நாம் இப்போது விசுவாசத்தின் மக்களாகியதால் நாம் அனைவரும் கர்த்தரின் ஆலயத்துடன் ஐக்கியமாகி விட்டோம், இந்த உலகத்திம் மக்கள் அனைவரும் சத்தியத்தை அறிந்தால் அவர்களும் மாறிவிடக் கூடும், ஏனென்றால் வார்த்தைக் கூறுகிறது, ‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.’”
ஆசரிப்புக் கூடாரத்தின் சாட்சிப் பெட்டியும் கூட இயேசு கிறிஸ்துவை அறிவிக்கிறது. இந்த சாட்சிப் பெட்டியானது ஆசரிப்புக் கூடாரத்தின் உள் பகுதியில் வைக்கப் பட்டுள்ளது. ஆசரிப்புக் கூடாரத்தின் திரையை உயர்த்தி அதனுள்ளே பிரவேசித்து மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலையையும் உயர்த்தி அதனுள்ளே பிரவேசிப்பதின் மூலமே அதனை ஒருவரால் பார்க்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடாரத்தின் கதவானது கிழக்குப் பக்கமாக இருந்தது, சாட்சிப் பெட்டியானது ஆசரிப்புக் கூடாரத்தின் மேற்கு கோடியில் வைக்கப்பட்டிருந்தது.
தண்டுகளை சாட்சிப் பெட்டியிலிருந்து அகற்றக் கூடாது
யாத்திராகமம் 25:14-15 கூறுகிறது, “அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.” இந்த வசனங்களின் பொருள் என்ன? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, நாம் நம்மை அவருக்கு அர்ப்பணித்து, அதற்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று இந்த் வசனங்களின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுகிரார். நாம் நம்மை அவருடைய வேலைக்காக அர்ப்பணிக்கும் போதே நற்செய்தியானது பரவும். நற்செய்திக்கு நம்மை அர்ப்பணித்தவர் களாய் தேவனுக்கு நாம் ஊழியம் செய்வது என்பது, நமக்கு முன்னதாக நமது நடந்து சென்ற சிலுவையின் பாதையில் நாம் நடக்க வேண்டும் என்பதாகும். அதனால் தான் அவர் தன் சீடர்களிடம் கூறினார், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மாற்கு 8:34).
உண்மையான நற்செய்தியை முழு உலகமும் பரப்புவதற்கு, அதிகமான தியாகங்களும், முயற்சிகளும், பாடுகளும் தேவைப் படுகின்றன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக அப்போஸ்தலனாகிய பவுல் எத்தனையாய் பாடுகளை அனுபவித்தான் என்பதின் மூலமாக இதனை நாம் கண்டு கொள்ளலாம். “அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” (2 கொரிந்தியர் 12:23-28).
ஆயினும், தம்மை தமது எல்லா ஆக்கினைகளிலிருந்தும் விடுவிக்க தன்னையே கொடுத்த தேவனுக்கும் மேலாக அவர்கள் தம்மைத் தாமே நேசித்தார்களானால், கர்த்தருடைய ராஜ்யத்திற்காக அவர்களால் தம்மை தியாகம் செய்ய முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்ய இலகுவான வழிகள் ஏதுமில்லை. கொஞ்சம் கூட வேர்வையை சிந்தாமல் ஒரு விவசாயியால் எப்படி நல்ல அறுவடையை எதிர்பார்க்க முடியும்?
இதைப் போல, சாட்சிப் பெட்டியை நமது தியாகங்களே தூக்கிச் செல்ல வேண்டும். அந்தப் சாட்சிப் பெட்டியை எப்படி தண்டுகளினால் மனிதர்கள் அதனைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டுமோ, அதற்கு மாறாக, இந்த சாட்சிப் பெட்டியை எருதுகள் பூப்டப்பட்ட மாட்டுவண்டியில் எடுத்து வர தாவீது ராஜா முயன்றான். அது செல்லும் வழியில், எருதுகள் தடுமாறின, ஊசா என்ற பெயருடைய மனிதன்ம் கர்த்தருடைய இந்த சாட்சிப் பெட்டியை எட்டிப் பிடித்தான். தேவனின் கோபம் இந்த மனிதன் மீது பற்றியெரிந்தது, கர்த்தர் அவனுடைய தவறுக்காக அவனைக் கடுமையாக தண்டித்தார். அவன் அந்த சாட்சிப் பெட்டியின் அருகிலேயே மரித்தான் (2 சாமுவேல் 6:1-7). ஆகவே இதனால் பயந்த தாவீது ராஜா, அந்நாளிலே கர்த்தருக்கு பயந்தவனாய், ஒபேத் ஏதோம் என்பவனின் வீட்டிற்கு கொண்டு சென்றான். மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த பெட்டியை அதற்கான முறைப் படி மனிதர்கள் தமது தோள்களில் தாங்கியவாறே அதனை அதன் இடத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. இந்த நிகழ்ச்சி கூறுவதைப் போலவே, கர்த்தர் நமக்கு கூறியபடியே மிகச் சரியாக, நமது வியர்வையாலும், இரத்தத்தாலும், நமது தியாகங்களினாலும், இந்த நற்செய்திக்கான நமது குறைவு படாத அர்ப்பணிப்புடனும் இந்த சாட்சிப் பெட்டியை நாம் தூக்கிச் செல்ல வேண்டும்.
அளவுக்கு அதிகமான நன்றிகளுடனே தமது பாவ மன்னிப்பைப் உண்மையாகவே பெற்றுக் கொண்டவர்கள், நமக்காக தன்னையே கொடுத்த தேவனுக்கு தம்மை அர்ப்பணிக்க அதிக மகிழ்ச்சியுடையவர்களாக இருக்கின்றனர். நமது இரட்சகரும் கர்த்தருமாகிய தேவனுக்கு நமது நன்றிகளை மீண்டும் மீண்டும் கொடுக்கிறோம். இந்த பூமியில் நற்செய்திக்கு ஊழியம் செய்ய அனுமதித்தமைக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்.
இந்த கனவு போன்ற விஷயத்தால் நாம் ஆச்சரியமுற்று அதிகம் மகிழ்ந்து போயிருக்கிறோம்., இந்த சத்தியத்தின் நற்செய்திக்கு ஊழியம் செய்ய கர்த்தர் நம்மைத் தேர்ந்தெடுத்தார், அவருக்கு பிரியப்படுத்தும் வாழ்வை வாழவும், அவரைப் பிரியப் படுத்தவும் நம்மை அனுமதித்தார். இரட்சிப்பின் சத்தியத்தை நாம் அறியச் செய்ததே, நாம் மகிழ்ந்து களிகூறுவதற்கு போதுமானதாக இருக்கிறது, அப்படியிருக்கும்போது, இந்த நற்செய்திக்கு ஊழியம் செய்யவவும் தேவன் நம்மை அனுமதித்தார். இத்தகைய பெரிதான ஆசீர்வாதங்களைக் கொடுத்த அவருக்கு நாம் எப்படி நன்றி கூறாமல் இருப்போம். நாம் நமது எல்லாப் நன்றிகளையும் அவருக்கு கொடுக்கிறோம். அதனால் தான் இந்த உண்மையான நற்செய்தியை பரப்புவதற்காக நம்மை பலியாக்க சித்தமுள்ளவர்களாய் இருக்கிறோம், இதற்காக நமது நேரங்களையும், முயற்சிகளையும், நமது உடமைகளையும் இந்த உலக நற்செய்தி முயற்சிக்கு செலவிடுகிறோம்.
குறிப்பாக கூறினால், பாவமன்னிப்பை நாம் பெற்றதற்கே நாம் முடிவில்லாத அளவிற்கு நன்றி கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் கர்த்தர் இத்துடன் நம்மை நிறுத்தவில்லை, ஆனால், சத்தியத்தின் நற்செய்தியாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அறிந்து அதனைப் பரப்பும் படி நம்மை ஏதுவாக்கினார் - இது நமக்கான எத்தனைப் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது?
இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு யாரால் ஊழியம் செய்யும் படி துனிய முடியும்? இந்த நற்செய்திக்கு யாராலும் ஊழியம் செய்து விட முடியாது. அரசியல்வாதி களால் ஊழியம் செய்ய முடியுமா? மேயர்கள்? ஜனாதிபதிகள்? ராஜாக்கள்? அத்தகைய மக்களின் சமுதாய பதவிகள் எத்தனை உயர்வானவையாக இருதாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தெரியாமலும், அதனை விசுவாசிக்காமலும் இருந்தால், அவர்களால் இந்த உண்மையான நற்செய்திக்கு ஊழியம் செய்யவே முடியாது. இந்த ஆசீர்வாதம் எத்தனைப் பெரிதானது?
என்னை இரட்சித்த கிருபைக்காக கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் அவர் என்னை நேசித்தார். சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தரும் இரட்சகருமானவர் என்று நாம் விசுவாசிக்கிறோம். நாம் கர்த்தரின் மக்களாவோம், நாம் நமது ஆவிக்குரிய விசுவாசத்தினால் இயேசுவின் மாமிசத்தை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடிக்கிறோம். இயேசு மரித்தோரின் தேவனாக இராமல் உயிருள்ளவர்களின் தேவனாக இருக்கிறார் (லூக்கா 20:38) என வேதாகமம் கூறுகிறது, இங்கே உயிருள்ளவர்கள் என்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டவர்களைக் குறிக்கிறது. இந்த நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிக்காதவர்கள் ஆவிக்குரியபடி இறந்தவர்களாவர், அதனை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் ஆவிக்குரிய படி உயிருள்ளவர்களாவர். குறிப்பாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு அவர் தேவனாயிருக்கிறார்.
சகோதர சகோதரிகளே, இயேசுவே தனது மாமிசம் மற்றும் இரத்தத்தின் மூலமாக பாவமன்னிப்பை நமக்கு கொடுத்துள்ளார். இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்காவிட்டால், உங்களுக்கும் இயேசுவுக்கும் பங்கில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து பரலோக ஆசீர்வாதங்களையும், நித்திய ஜீவனையும், உங்கள் பாவங்களுக்கான பாவ மன்னிப்பையும் உங்களுக்குத் தருகிறார். உங்களுக்கு மேய்ப்பனாக வந்தது யார், உங்களுக்கு என்றென்றும் இருக்கக்கூடிய ஆசீர்வாதங்களை அளித்தது யார், உங்களை வழிநடத்தி பாதுகாப்பது யார்? அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழுமைப் படுத்திய இயேசு கிறிஸ்துவேயாகும். இயேசுவே இந்த கர்த்தர். இந்த இயேசுவை நீங்கள் அனைவரும் உங்கள் கர்த்தராக விசுவாசிக்க வேண்டுமென விசுவாசத்துடன் ஜெபிக்கிறேன்.
என்னைப் பொருத்தவரையில், இப்போது மட்டும் இந்த சத்தியத்தை மட்டும் விசுவாசித்து கர்த்தருக்கு நான் ஊழியம் செய்யாமல், எதிர்காலத்திலும் கூட அப்படியே செய்வேன். உங்களைக் குறித்து என்ன? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தரின் ஆலயத்திலும், கிறிஸ்துவின் அன்பிலும் உங்கள் விசுவாசத்தினால் நீங்கள் வாசம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நமது தேவனைச் சந்திக்கும் அந்த நாள் வரையிலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் வாழ்வை நாம் வாழ்வோமாக.