• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-17] பாவமன்னிப்பிற்கான காணிக்கை கிருபாசனத்தில் கொடுக்கப்பட்டது (யாத்திராகமம் 25:10-22)

(யாத்திராகமம் 25:10-22)
“சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப்; பெட்டியிலே வைப்பாயாக. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.”
 
 
கிருபாசனம்
 
கையின் விரல் நுனியிலிருந்து முழங்கை வரை உள்ள நீளமானது ஒரு முழம் என அழைக்கப் படுகிறது. வேதாகமத்தில் ஒரு முழம் என்பது இக்கால் அளவில் 45 செ.மீட்டராகும். கிருபாசனத்தின் நீளமானது இரண்டரை முழங்களாகும், ஆகவே இதனை மெட்ரிக் முறைக்கு மாற்றினால் இதன் நீளம் 113 செ.மீட்டர்களாகும் (3.7 அடிகள்). இதனுடைய அகலமானது ஒன்றரை முழங்களாகும், இது ஏறத்தாழ 67.5 செ.மீட்டராகும் (2.2 அடிகள்). இது கிருபாசனத்தின் அளவு எவ்வளவு பெரியது என்பதைக் குறிக்கிறது.
சாட்சிப் பெட்டியானது சீத்தின் மரத்தினால் செய்யப் பட்டு உள்ளும் புறம்புமாக பொன்தகட்டால் மூடப்பட்டது. ஆனால் சாட்சிப் பெட்டியின் மீது வைக்கப்பட்ட கிருபாசனமானது சுத்தமான பொன்னால் தயாரிக்கப் பட்டது. இதன் இரண்டு முனைகளிலும், கேரூபீன்கள் செட்டையை விரித்தால் போல் அமைக்கப்பட்டு சாட்சிப் பெட்டியின் மூடியை மறைத்தன - அதாவது கிருபாசனம் - மேலும் கேரூபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தவாறு இருந்தன. கிருபாசனமானது, விசுவாசத்தால் தம்மிடம் வருவோருக்கு கர்த்தர் தனது கிருபையை அளிக்கும் இடமாகும்.
சாட்சிப் பெட்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பொன் வளையங்கள் இருந்தன. ஒரு பக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களும், இந்த வளையங்களினூடே ஒரு தண்டும் பாய்ச்சப் பட்டிருந்ததினால், இந்த சாட்சிப் பெட்டியை நகர்த்திச் செல்ல முடிந்தது. இந்த தண்டுகள் சீத்திம் மரத்தினால் செய்யப் பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தில் இருந்த இரண்டு வளையங்களின் வழியாக ஒரு தண்டையும் மற்ற பக்கதில் இருந்த மற்ற இரண்டு வளையங்களில் மற்றத் தண்டையும் பொருத்தியதின் மூலமாக, இரண்டு மனிதர்களால் அதனைத் தூக்கிச் செல்லும் படியாக கர்த்தர் செய்தார். மேலும் நமது தேவன் கூறினார், “அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்”
இஸ்ரவேல் மக்கள், சாட்சிப் பெட்டியினூடாக தண்டுகளைப் போடச் செய்து அதனுடனே சேர்த்து கிருபாசனத்தையும் சுமந்து செல்லுமாறு கர்த்தர் நியமித்தார். நற்செய்தியை நாம் முழு உலகமும் பரப்ப வேண்டுமென கர்த்தர் கூறுவதாக இது பொருள் படுகிறது. இதன் படியே தூபபீடத்திலும் நிகழ்ந்தது - அதாவது, அதன் இரு பக்கங்களிலும் வளையங்கள் பொருத்தப் பட்டன, இந்த வளையங்களினூடே தண்டுகள் பாய்ச்சப்பட்டன, இந்த பீடத்தை இரண்டு மனிதர்கள் தூக்கிச் சென்றனர். இதுவும் கூட, நாம் பாடுகளை அனுபவிக்கும் போது கர்த்தருடைய உதவியைக் கேட்க வேன்டும் என்று பொருள் படுகின்றன, மேலும், நாம் செல்லும் இடமெல்லாம், உலகம் முழுவதிலும் நற்செய்தியைப் பரப்பும் படியும் ஜெபிக்க வேண்டும்.
சாட்சிப் பெட்டியில், மூன்று பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன: மன்னாவால் நிரப்பப்பட்ட பொன் குவளை, துளிர் விட்ட ஆரோனின் கோள், மற்றும் உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகள். இவற்றின் பொருள் என்ன? விசுவாசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து புதிய வாழ்வை அளிக்கிறார் என்று மன்னாவால் நிரப்பப்பட்ட பொன் குவளை பொருள் படுகிறது. அவர் ஒரு முறை கூறினார், “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35).
இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலின் தேவன் என்றும், அவர் நித்திய ஜீவனைத் தருகிறார் என்றும் ஆரோனின் தளிர்ந்த கோளானது கூறியது. உடன்படிக்கையின் கற்பலகைகள் சட்டத்திற்கு முன்னதாக மரணத்தின் ஆக்கினைக்கு உள்ளாக வேண்டியவர்கள் என்பதை நமக்கு கூறுகிறது. ஆயினும், கர்த்தரின் கிருபை மிகவும் பெரியது, அது சட்டத்தின் சாபங்களினால் உருவான எல்லா ஆக்கினைகளையும் மூடியது. கிருபாசனமானது சாட்சிப் பெட்டியின் மீது மிகவும் சரியாக பொருந்தியது, இல்லாவிட்டால், சட்டத்தின் சாபம் வெளியே வந்து விடும். கர்த்தர் தனது குமாரராகிய இயேசுவின் மூலமான நிறைவான பலி காணிக்கையினால் கிருபாசனத்தை முழுமையாக்கினார். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் அவருடைய கிருபையின் சிங்காசனமாகிய கிருபாசனத்திற்கு முன்னால் தைரியமாக வரலாம்.
 
 
கிருபாசனத்தின் மீது தெளிக்கப் பட்ட விலையேறப்பட்ட இரத்தம்
 
கிருபாசனத்தின் மறைந்திருக்கும் இரகசியம் என்ன என்பதை முதலாவது நாம் கண்டு பிடிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை, பலி காணிக்கையின் இரத்தத்தை தலைமை ஆசாரியன் எடுத்துக் கொண்டு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தான். அந்த பலி காணிக்கையின் இரத்தத்தை கிருபாசனத்தின் மீது அவன் மிகச்சரியாக ஏழு முறைத் தெளித்தான். அப்போது தான் இஸ்ரவேல் மக்களை கிருபாசனத்தில் சந்திப்பதாக கர்த்தர் கூறினார். தலைமை ஆசாரியளை ஒத்த விசுவாசமுடையவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களைத் தான் சந்திப்பதாக கர்த்தர் கூறினார், அதாவது, பலி காணிக்கை முறையில் வெளிப்படுத்தப் பட்ட அவருடைய பாவமன்னிப்பின் மீதுள்ள விசுவாசமே அதுவாகும்.
கிருபாசனத்தில் தெளிக்கப் பட்ட பலி காணிக்கையின் இரத்தமானது கர்த்தரின் நீதியுள்ள நியாயத் தீர்ப்பையும், மனிதர்களின் மீதுள்ள அவரின் இரக்கத்தையும் தெரிவிக்கிறது. ஏழாம் மாத்தத்தின் பத்தாம் நாளிலே, பாவ நிவாரண நாளான அன்று, இஸ்ரவேல் மக்களின் ஒரு வருட பாவங்களை பலி காணிக்கையின் மீது செலுத்துவதற்காக தலைமை ஆசாரியனாகிய ஆரோன் தனது கைகளை அதன் மீது வைத்தான். அதனுடைய இரத்தத்தைப் பிடிக்குமாறு அவன் அதன் கழுத்தை அறுத்து, அந்த இரத்தத்துடன் திரைக்கு உட்புறமாக சென்று, அதனை கிருபாசனத்தின் மீது தெளித்தான் (லேவியராகமம் 16:11-16).
தெளிக்கப் பட்ட இரத்தத்தின் மூலமாக, கர்த்தர் இஸ்ரவேல் மக்களைச் சந்தித்து, பாவமன்னிப்பு என்ற ஆசீர்வாதத்தை அவர் அவர்களுக்கு கொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேல் மக்களின் மீது இரக்கமுடையவராக இருந்தமையால், அவர் அவர்களுக்கு பலி காணிக்கை முறையினைக் கொடுத்தார். பலி காணிக்கையின் மீது கைகளை வைப்பதின் மூலமாகவும் அதன் இரத்தத்தின் மூலமாகவும், அவர்களின் பாவங்களை நீதியுடனே துடைத்து அவர்களுக்கு தனது இரக்கத்தைக் காட்டினார், அது கிருபையி னால் ஆகிய அவர்களின் பாவமன்னிப்பு ஆகும்.
அப்படியானால், இந்த கிருபையை எப்படி பெற்றுக் கொள்வது? நம்முடை எல்லாப் பாவங்களையும் எந்த வார்த்தையி னால் கர்த்தர் துடைத்தார்? நம்மிடம் எத்தகைய விசுவாசம் இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக்கினார், அது நமக்காக ஏற்படுத்திய பலி காணிக்கை முறையில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை அறிந்து விசுவாசிப்பதாகும், இது அவர் நமக்கு அருளிய வரத்தைப் பெற்றுக் கொள்வதை நமக்கு ஏதுவாக்கியது. இந்த இரண்டு ஆதாரங்களினால் கர்த்தர் தன்னுடைய நீதியானது நிறைவேறுவதை ஏதுவாக்கினார்; அவை பலி காணிக்கையின் தலையின் மீது கைகளை வைப்பதும் அதன இரத்தமுமாகும். பழைய ஏற்பாட்டின் இந்த பலி காணிக்கை முறையானது இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தையும் குறிக்கிறது.
நம்முடைய சொந்தப் பாவங்களுக்காக, தேவ குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்று, இந்த பாவங்களுக்கு கிரயம் செலுத்துவதற்காக சிலுவையிலே நமது பலி காணிக்கையாகி, நமக்காக மரித்து, நம்மை உயிரோடு எழுப்புவதற்காக மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானமும் அவருடைய சிலுவையின் இரத்தமும் நமக்கு பாவமன்னிப்பாக கொடுக்கப் பட்டன, அவைகளே கிருபையின் உண்மையான ஆசீர்வாதங்கள் ஆகும் என்பதோடு அவையே இத்தகைய விசுவாசத்துடன் கர்த்தரைச் சந்திக்க நம்மை ஏதுவாக்குகிறது. இந்த சத்தியமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் நிழலாக இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ற சத்தியமே, கர்த்தரிடம் இருந்து பாவிகள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள அவர்களை ஏதுவாக்கும் உண்மை விசுவாசத்திற்கு அத்திவாரமாயிற்று. அவர் சத்தியத்திற்கான பாலமானார், அது நம்மை பரிசுத்த பிதாவாகிய கர்த்தரிடம் நாம் செல்லுவதை ஏதுவாக்கியது.
மீண்டுமாக, ஆசரிப்புக் கூடார வாசலில் பயன்படுத்தப் பட்டிருந்த நான்கு நூல்களின் நிறங்களில் வெளிப்படுத்தப் பட்ட இந்த சத்தியத்திற்கான தெளிவான ஆதாரத்தை நாம் காணலாம்: அவை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடார வாசலின் நான்கு நூல்களும், உண்மையான நற்செய்திக்கான தடயங்களை நமக்குத் தருகின்றன.
முதலாவது தடயமானது ஆசரிப்புக் கூடார வாசலில் வெளிப்படுத்தப் பட்ட இளநீல நிற நூலின் இரகசியமாகும். இந்த இரகசியமானது இயேசு கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பண்ணப் பட்டார் என்பதாகும், அதன் பொருள் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், யோவான் அவரிடம் சுமத்திய நமது எல்லாப் பாவங்களையும் நமது தேவன் ஏற்றுக் கொண்டார். இதனால் தான் அவர் தனக்கு ஞானஸ்நானத்தைக் கொடுக்கும் படி யோவானிடம் கேட்டார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15).
இரண்டாவது தடயமானது, ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப் படுத்தப் பட்ட இரத்தாம்பர நிற நூலாகும். “இரத்தாம்பர” நிறமானது ராஜாக்களின் நிறமாகும். இயேசு கிறிஸ்துவே ராஜாது ராஜா ஆவார், அவர் இந்த உலகத்திற்கு, மனிதகுலத்தை அதன் பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக வந்தார். நமது பாவங்களைத் துடைப்பதற்காக அவர் பரலோகத்தின் மகிமையை விட்டிறங்கி இந்த பூமிக்கு வந்தார். இயேசு கிறிஸ்து சாராம்சத்தில் கர்த்தரேயாவார், ஆனால் நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக, அவர் இந்த பூமிக்கு வந்து, தனது பிதாவின் சிந்தத்திற்கு கீழ்ப்படிந்து, ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப் பட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், நமது எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக, பரலோக சிம்மாசனத்தின் மகிமையை அவர் உதறித் தள்ளிவிட்டு, பாவிகளை இரட்சிப்பதற்காக கன்னி மரியாளின் சரீரத்தின் மூலமாக அவர் இப்பூமியில் பிறந்தார். கர்த்தர் தாமே கன்னி ஒருத்தியின் சரீரத்தின் மூலமாக பிறக்க வேண்டும் என்பதையும், அவர் ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தை சிலுவையில் சிந்த வேண்டும் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும், இவை எல்லாம் 700 வருடங்களுக்கு முன்னதாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக செய்யப் பட்ட வாக்குத்தத்தங்களின் படி நிறைவேறின.
மூன்றாவது தடயமானது சிகப்பு நூலாகும். அது இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தியதின் மூலமாக கர்த்தரின் இரட்சிப்பிற்கான ஊழியத்தை இயேசு நிறைவேற்றினார் என்பதை இந்த சத்தியம் அறிவிக்கிறது. கொடிய குற்றவாளிகளிலேயே மிகவும் தீமையானவர்களுக்காக நியமிக்கப் பட்டிருந்தது அவரின் சிலுவையில் இரத்தம் சிந்தும் ஆக்கினையாகும். இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலம் பெற்ற பாவங்களுக்கான ஆக்கினையின் மூலம், மனித குலத்தின் எல்லாப் பாவங்களும் தீர்க்கப் பட்டன. சிலுவையில் அறையப் பட்டு தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம், உலகின் எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினைகளை அவர் சுமந்து அதன் மூலமாக பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்கினார். தனது பிதாவிற்கு கீழ்ப்படிந்து, யோவானிடமிருந்து தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டு, மரித்ததின் மூலம், கர்த்தர் எல்லாப் பாவிகளையும் அவர்களின் மீறுதல்களில் இருந்து இரட்சித்தார்.
நம்முடைய சொந்த ஆக்கினைகளை எல்லாம் தன்னுடைய பாடுகளின் மூலமாகவும் சிலுவையில் அறையப் படுதலின் மூலமாகவும் சுமந்து, பாவத்திற்கான தண்டனையை முடிவு செய்து நம்மைக் கர்த்தரின் பிள்ளைகளாக்கினார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? நாம் இந்த சத்தியத்தை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவதற்காக கர்த்தர் இவை யாவற்றையும் செய்தார். முதலில் இயேசு ஞானஸ்நானம் பெற்று அதன் பிறகு அவர் சிலுவையில் ஆக்கினைக்குள்ளானார் என்பது அவர் நம்மை பாவத்திலிருந்து இரட்சித்தார் என்று பொருள் படுகிறது. இதனால் தான் அவர் தனது கடைசி மூச்சில் “முடிந்தது” (யோவான் 19:30). என கூக்குரலிட்டார். பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தின் படியாக, தான் நமது இரட்சிப்பை நிறைவேற்றியதை இயேசு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
கடைசியாக, இயேசுவானவர் வார்த்தையின் கர்த்தர் என்பதை, மெலிதாக திரிக்கப் பட்ட பஞ்சு நூல் தெரிவிக்கிறது. அவர் தன்னுடைய விரிவானதும் நீதியானதுமாகிய வார்த்தையினால் கர்த்தரின் சித்தத்தை வெளிப்படுத்தினார். பழைய ஏற்பாடு முழுவதிலும், அவர் இவ்வுலகத்திற்கு வரப்போவதையும், மனித் குலம் முழுவதையும் தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் இரட்சிப்பதாக அவர் முன்கூட்டியே தெரிவித்தார். அதன் பிறகு அவர் தன் வாக்குத்தத்த தீர்க்கதரிசனங்களை எல்லாம் துல்லியமாக நிறைவேற்றினார். இதனால் தான் வேதாகமம் கூறுகிறது, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:1, 14).
இந்த சத்தியமானது நமது எல்லாப் பாவங்களையும் கழுவி பனியைப் போல வெண்மையாக்கியது. இயேசு பெற்ற ஞானஸ்நானமும் அவருடைய இரத்தம் சிந்துதலும் பலி காணிக்கை முறையின் படியான கைவைக்கப் படுதலும் நியாயத் தீர்ப்பை நிவர்த்தி செய்வதுமேயாகும். இயேசு தன் சரீரத்தில் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததினால், அவர் தன்னுடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தினார். நமது சார்பாக நமது எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொள்வதற்காக இயேசு ஞானஸ்நானம் பெற்று, சிலுவைவக்குச் சென்று தனது இரத்தத்தை அங்கே சிந்தினார், இந்த சத்தியமானது நமது பாவங்களைக் கழுவும் பாவநிவர்த்தியாகிற்று.
நமது தேவன் இந்த பூமிக்கு மனிதனாக வந்தபோது அவர் பெற்ற ஞானஸ்நானத்தினாலும், அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும். இயேசு இந்த பூமியில் 2,000 வருடங்களுக்கு முன்னதாக பிறந்தார், ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், சிலுவையில் மரித்தார், மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார், அதன் பிறகு 40 நாட்கள் சாட்சியாக இருந்தார், அதன் பிறகு கர்த்தரின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் படியாக பரலோகம் ஏறினார் - இதுவே இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும். இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் படி கர்த்தர் நம்மிடம் கூறுகிறார், அவர் நமது எல்லாப் பாவங்களையும் துடைத்து நம்மை இரட்சித்தர் என்பதே அந்த சத்தியமாகும்.
நாம் இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் போது, கர்த்தர் நம்மிடம் கூறுகிறார், “இப்போது, நீங்கள் என்னுடைய பிள்ளைகள் ஆனீர்கள். நீங்கள் பாவிகள் இல்லை. நீங்கள் என்னுடைய மக்களாயிருப்பதினால் பாவிகளில்லை. உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும், ஆக்கினைகளிலிருந்தும், சாபங்களிலிருந்தும் நான் உங்களை இரட்சித்தேன். நான் என்னுடைய நிபந்தனையற்ற அன்பினாலே உங்களை இரட்சித்தேன். நீங்கள் எனக்கு இத்தனை அன்பானவர்களாக இருப்பதினாலே, நானே உங்களை இரட்சித்தேன். நான் உங்களை நேசித்ததோடு மட்டுமில்லாமல், இந்த வழியின் மூலமாக எனது அன்பையும் உங்களுக்கு விளக்கிக் காட்டினேன். எனது பலி காணிக்கையின் இரத்தத்தைப் பாருங்கள். எனது அன்பிற்கான அத்தாட்சி இதுவேயாகும். இந்த அத்தாட்சியை நான் உங்களுக்கு காட்டினேன்.”
ஆவியில் எளிமையானவர்களாக நாம் தேவனுக்கும் முன்னதாக நாம் வரும்போது, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நம்மை இரட்சித்ததாக அவர் நமக்கு காட்டினார். தேவன் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, அவமதிக்கப் பட்டு சிலுவையிலே மரித்து ஆக்கினைக்குள்ளானார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார், அதன் பிறகு பலோகத்திற்கு ஏறினார். கர்த்தர் தன்னுடைய இரட்சிப்பின் நேசத்தை விசுவாசிக்கு யாவரையும் சந்திக்கிறார்.
விசுவாசிப்பவர்களின் மீது கர்த்தர் தனது இரட்சிப்பின் கிருபையை அருளுகிறார். அவருடைய இரட்சிப்பானது சாதாரண படைப்புகளை கர்த்தரின் சொந்தப் பிள்ளைகளாக்கியது. கர்த்தர் நம்மிடம் சொல்லுகிறார், “இப்போது நீங்கள் என்னுடைய பிள்ளைகள். நீங்கள் என் குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் இனிமேலும் சாத்தானின் பிள்ளைகளாய் இல்லாமல் என்னுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். நீங்கள் இதற்கு மேலும் படைக்கப் பட்டவர்கள் அல்ல, ஆனால் என்னுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். என்னுடைய குமாரராகிய இயேசுவின் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தேன். நான் உங்களை எனது மக்களாக்கினேன், நீங்கள் என் விசுவாசத்தின் மக்களானீர்கள். கர்த்தர் பாவிகளை மட்டுமே இரட்சிக்கவில்லை, ஆனால் அவர்களைத் தனது சொந்த பிள்ளைகளாக்கியதின் மூலம அவர்களுக்கு தனது கிருபையை அருளினார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் சாட்சிப் பெட்டியின் மேல் மூடியை கிருபாசனம் என்று கர்த்தர் அழைத்தார். அவற்றைப் பார்க்கும் படியாக இரண்டு கேரூபீன்கள் வைக்கப்பட்டன. கிருபாசனத்தின் மீது இஸ்ரவேல் மக்களைத் தாம் சந்திக்கவிருப்பதாக கர்த்தர் ஏன் கூறினார்? தனது தலைகளில் கைவைக்கப்பட்டதினால், இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட பலி காணிக்கையின் இரத்தத்தின் மூலமாக கர்த்தர் அவர்களின் பாவங்களை நிவர்த்தித்ததே அதற்கான காரணமாகும்.
வேறு வார்த்தைகளில் கூறினால், இஸ்ரவேல் மக்களுக்கு அவர்களின் பாவங்களிலிருந்து பாவமன்னிப்பைக் வரமாக கொடுப்பதற்காகவே கர்த்தர் அப்படியாக கூறினார், அதற்கு அவர்கள் பலி காணிக்கையின் தலையின் மீது தமது கைகளை வைப்பதின் மூலமாக தமது எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தி, அவர்களின் சார்பாக இந்த எல்லாப் பாவங்களுக்குமான கிரயத்தை அந்த பலி காணிக்கையனாது செலுத்தும் படியாக செய்து, இவற்றின் மூலமாக தனது மக்களின் எல்லா மீறுதல்களையும் துடைத்தார். பாவநிவாரண பலி காணிக்கை இல்லாமல பாவிகளை அவர் சந்திக்க விரும்பாததினால், இந்த பலி காணிக்கையின் மூலமாக அவர்களிம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டு அவர் அவர்களைச் சந்தித்தார்.
ஆதாமின் சந்ததியினராக இருப்பதினாலே, எல்லோரும் இந்த உலகத்தில் பாவியாகவே பிறந்தனர். ஆகவே, எல்லோரிடமும் பாவம் இருக்கிறது, ஆகவே பலி காணிக்கை இல்லாது யாராலும் கர்த்தரைச் சந்திக்க முடியாது. இதனால் தான் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்த பலி காணிக்கையைத் தான் ஏற்றுக் கொண்டு அவர்களை கிருபாசனத்தின் மீது சந்திப்பதாக கர்த்தர் கூறினார்.
இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதம் பத்தாம் திகதியை பாவநிவாரண நாளாக அனுசரிக்கும் படி செய்தார். இஸ்ரவேல் மக்களின் ஒருவருடப் பாவங்களைத் தலைமை ஆசாரியன் அந்த பலி காணிக்கையின் மீது சுமத்தி அந்த பலி காணிக்கையின் இரத்தத்தை அவருக்கு கொடுக்கும் படிச் செய்தார். அந்த நாளிலேயே, இஸ்ரவேல் மக்களின் ஒரு வருட பாவங்கள் நிவர்த்தி செய்யப் பட்டன, இந்த நாளின் மூலமாக, தலைமை ஆசாரியன் அவர்களின் சார்பாக பலி காணிக்கையைக் கொடுத்தான்.
 
 
பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையானது பாவிகளை அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்கானது
 
லேவியராகமம் 1:4 கூறுகிறது, “அது தன் பாவநிவிர்த்திக் கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின் மேல் வைத்து,” பலி காணிக்கையின் தலையின் மீது தன் கைகளை வைத்ததின் மூலம் எல்லாப் பாவிகளாலும் தனது எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் மீது சுமத்த முடிந்தது. தனது வார்த்தையை உண்மையாகவே விசுவாசிக்கும் விசுவாசத்தினால் கொடுக்கப் பட்ட இத்தகைய காணிக்கைகளை கர்த்தர் விருப்பத்துடனே ஏற்றுக் கொள்ளுகிறார். கர்த்தர் தனது இஸ்ரவேல் மக்களுக்காக ஏற்படுத்திய பலி காணிக்கை முறையின் முதலாவது முக்கிய நடவடிக்கை இதுவாகும்.
அதன் பிறகு அந்த மனிதன் அதன் கழுத்தை அறுத்து, இரத்தத்தைப் பிடித்து, ஆசாரியர்களிடம் அந்த இரத்தத்தைக் கொடுத்தான். ஆசாரியர்கள் அந்த இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் ஊற்றி விட்டு, அதன் மாமிசத்தை பீடத்தில் வைத்து அதனை எரித்தார்கள், இதன் மூலமாக, அந்த பாவியின் பாவங்களுக்கான பலி காணிக்கையாக அதனை கர்த்தரிடம் கொடுத்தார்கள். ஒவ்வொரு பாவியினதும் பாவங்களை நிவர்த்தி செய்ய கர்த்தர் நியமித்த் இரட்சிப்பின் சட்டம் இதுவே.
ஆயினும், ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே வந்த பாவ நிவாரண நாலில், கர்த்தர் தனது மக்களை ஒரு பலி காணிக்கையை அளிக்க அனுமதித்தார், இதன் மூலமாக அவர்களால் கடந்த ஒரு வருடத்தின் பாவங்கலை நிவர்த்தி செய்ய முடிந்தது. அந்த நாளிலே, இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாகிய தலைமை ஆசாரியன், இரண்டு ஆடுகளை ஆயத்தம் செய்ய வேண்டியிருந்தது. “அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,” (லேவியராகமம் 16:8-9). முதலாவது ஆட்டின் தலையின் மீது அவன் தன் கைகளை வைக்க வேண்டியிருந்தது, ஆகவே இதன் மூலமாக இஸ்ரவேல் மக்களின் ஒருவருடத்தின் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் மீது அவனால் சுமத்த முடிந்தது. அதன் பிறகு அவன் அதனைக் கொண்டு இரத்தத்தைப் பிடித்து, அதனை எடுத்துக் கொண்டும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தான், அங்கே கிருபாசனத்தின் கிழக்குப் பக்கமாகவும் கிருபாசனதிற்கு முன் புறமாகவும் அந்த இரத்தத்தை தனது கைவிரல்களால் தெளித்தான். இந்த பலி காணிக்கையின் இரத்தத்தை ஏற்றுக் கொண்ட கர்த்தர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவி, அவர்களைத் தனது சொந்த மக்களாக அங்கீகரித்தார்.
இதன் பிறகு, தலைமை ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு வெளியே வந்து, மற்ற ஆட்டை இஸ்ரவேல் மக்களின் முன்னிலையில் கொடுத்தான். தனது மக்களின் பாவங்களை அதன் மீது உண்மையாகவே சுமத்த, பலி காணிக்கையின் தலையின் மீது தனது கைகளை மீண்டுமாக அவன் வைத்தான். அதன் பிறகு அவன் அறிக்கைச் செய்தான் “எனது மக்கள் கடந்த ஒருவருட காலமாக செய்த எல்லாப் பாவங்களையும் இந்த பலி காணிக்கையின் மீது சுமத்துகிறேன்.” இதன் பிறகு, பொருத்தமான ஒருவனின் மூலமாக இந்த பலி காணிக்கையை அவன் வனாந்தரத்திற்குள் அனுப்பி விட்டான்.
வறண்ட பாலைவனத்திற்குள் இந்த ஆடானது மரித்துப் போகும் படியாக அனுப்பப்பட்டது (லேவியராகமம் 16:20-22). பாவநிவாரண நாளில் பலி காணிக்கையாக கொடுக்காப் பட்ட காணிக்கையின் மூலம் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களும் ஒரேதரமாக நிவர்த்திக்கப் பட்டன என்பதை இது நமக்கு கூறுகிறது.
இந்த போக்காடுகள் இயேசுவை முன்னறிப்பவைகளாக இருந்தன. இந்த பலி காணிக்கையானது இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பின் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது, யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், சிலுவையில் அறையப் பட்டதினாலும் அவர் இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் அவர்களின் எல்லாப் பாவங்களையும் துடைத்தார். தலைமை ஆசாரியனின் மூலமாக சட்டப்படியான பலி காணிக்கையை இஸ்ரவேல் மக்கள் செலுத்தும் போது கிருபாசனத்தின் மீதிருந்து அவர்களைச் சந்திப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். இஸ்ரவேல் மக்கள் தலைமை ஆசாரியனையும் கிருபாசனத்தையும் மிகவும் முக்கியமானவை களாக கருதினர், ஏனெனில் அவர்களின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பலி காணிக்கை செலுத்தியது தலைமை ஆசாரியனே ஆகும், மேலும் அவர்களுடைய மீறுதல்கள் மன்னிக்கப் பட்ட இடம் கிருபாசனமாகும்.
இதைப்போல, நமக்கும் கர்த்தருக்கும் இயேசு சமாதானத்தை உண்டாக்கினார், இதற்கு அவர் தனது சரீரத்தின் மூலமாக, ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதல் மூலமாக, நமது பாவங்களுக்கு நித்தியமாக தன்னை பலி காணிக்கையாக்கினார். இதனால் தான் நம்மால் தேவனாகிய கர்த்தருக்கு நம்மால் போதுமான நன்றிகளைக் கூற முடியாது, மேலும் இதனால் தான் நாம் அவருடைய சிலுவை மரணத்துடனே கூட அவருடைய ஞானஸ்நானத்தையும் விசுவாசிக்க வேண்டியுள்ளது.
 
 
சாட்சிப் பெட்டியின் உள்ளே வைக்கப் பட்டுள்ள பத்துக் கட்டளைகளின் இரண்டு கற்பலகைகளையும் கிருபாசனம் முத்திரையிட்டது
 
பத்துக் கட்டளைகள் பொறிக்கப் பட்ட கற்பலைகைகளை சாட்சிப் பெட்டியின் உள்ளே வைத்து அந்த சாட்சிப் பெட்டியை கிருபாசனத்தினால் அடைக்கும் படி, சீனாய் மலையின் மீது, கர்த்தர் மோசேயிற்கு கட்டளையிட்டார். அப்படிச் செய்ததின் மூலம கர்த்தர் தன்னுடைய கிருபையின் அன்பை இஸ்ரவேல் மக்களுக்கு அருள அவர் விரும்பினார், ஏனெனில் அவர்களால் சட்டத்தைக் கடை பிடிக்க முடியாதிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், பாவத்தின் சம்பளம் மரணம் என்று அறிவிக்கும் அவருடைய நீதியின் சட்டத்தின் மூலமாக, அன்றாடம் பாவம் செய்த இஸ்ரவேல் மக்களை கர்த்தரால் சமாளிக்க முடியாததே இதன் காரணமாகும். இதுவும் கூட இஸ்ரவேல் மக்களுக்கு பாவமன்னிப்பைக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்டதேயாகும்.
வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தருடைய சட்டத்தைக் கடைப்பிடிக்க இஸ்ரவேல் மக்கள் அவருக்கு முன்னதாக மிகவும் பலவீனமானவர்களாக தமது செயல்பாடுகளில் இருந்தனர்.லாகவே சட்டத்தின் மூலமாக பலி காணிக்கை முறையினைக் கர்த்தர் கொடுத்தார். பலி காணிக்கை முறையின் மூலமாக அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுத்தமாக்குவது அதன் நோக்கமாகும். இஸ்ரவேல் மக்கள் தம்முடைய பாவங்களைத் துடைக்க வேண்டுமானால், அவர்கள தமது பாவங்களை பலி காணிக்கையின் மீது, அதன் தலைமீது தம் கைகளை வைப்பதின் மூலமாக சுமத்தி, அதன் கழுத்தை வெட்டி அதைக் கொன்று பலியிட வேண்டும் என்று கர்த்தர் அவர்களிடம் கூறியதை இது நமக்கு காட்டுகிறது. தனது நீதியின் கோபத்தின் சட்டத்துடனே, தனது இரட்சிப்பின் அன்பாலாகிய சட்டத்தையும் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்தார். மேலும், கர்த்தரின் இந்த இரண்டு முக்கியமான ஆதார சத்தியங்களையும் நாம் விசுவாசிக்க வேண்டும்; அவைகள் மேசியா யோவனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் ஆகும்.
பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கையாகிய பலி மிருகமானது புதிய ஏற்பாட்டு மேசியாவின் சரீரமாகும். வேதவசனங்களில் காணப்படும் பலி காணிக்கையானது நமது எல்லாப் பாவங்களையும் துடைக்கும் கர்த்தரின் அன்பின் கிருபையாக நமக்கு கொடுக்கப் பட்டது. முன்பைப் போலவே இப்போதும், நமது பாவங்களில் இருந்து நாம் நிவர்த்தி செய்ய வேண்டுமானால், நமக்கும் கூட பாவநிவர்த்தி செய்யும் பலி காணிக்கை தேவைப் படுகிறது. வெகு காலத்திற்கு முன்னால், மனிதகுலத்தின் பாவங்களைத் துடைக்க, கர்த்தரின் நீதியும் அவரின் இரக்கத்தின் அன்பும் இருந்திருக்க வேண்டும்.
நம்மிடம் பாவம் இருந்தால் கர்த்தரின் நீதியானது நம்மை நியாயம் தீர்க்க வேண்டியிருந்ததால், நாம் அவற்றை பலி காணிக்கையின் மீது சுமத்துவதின் மூலமாக அவற்றைக் கழுவி விட வேண்டும். கொரியாவில் ஒரு பழமொழி உள்ளது, “பாவத்தை வெறு, ஆனால் பாவிகளை வெறுக்காதே,” கர்த்தர் நமது பாவங்களை வெறுத்தார், ஆனால் அவர் நமது ஆத்துமாக்களை வெறுக்கவில்லை. கர்த்தர் நமது ஆத்துமாக்களில் உள்ள பாவங்களைக் கழுவ வேன்டுமானால், பலி காணிக்கையின் தலை மீது நமது கைகளை வைத்து, அதன் இரத்தத்தை எடுத்து அதனை அவரிடம் கொடுக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் மக்களின் பாவங்களைக் கர்த்தர் நிவர்த்தி செய்தார் என்பதின் பொருள், கர்த்தர் அவர்களின் பலிகாணிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன் மூலமாக அவர்களின் பாவங்களை நிவர்த்தி செய்தார் என்பதாகும்.
ஆனால் இஸ்ரவேல் மக்களுக்கு சட்டத்தை இயற்றுவது எல்லாம் கர்த்தரேயாகும். இஸ்ரவேல் மக்களுக்கு முன்னதாக தம்மை வெளிப்படுத்தைய யெகோவா, தானாகாவே இருக்கிறவராக இருக்கிறார். சட்டத்தை இயற்றும் ஒருவராக கர்த்தர் மட்டுமே இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதைப் போல, அவர் நமது கர்த்தர் என்பதையும் நமது எல்லாப் பாவங்களையும் துடைக்க அவர் ஏற்படுத்திய பலி காணிக்கை முறையினை அவர் ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தர் ஏற்படுத்திய பலி காணிக்கை முறையின் மூலமாக, கர்த்தர் நம்மை எத்தனையாக நேசித்தார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது, மேலும் அவர் நம்மை எத்தனை நீதியாய் பாவத்திலிருந்து விடுதலையாக்கினார் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கர்த்தரின் சட்டத்தின் மூலமாக, அவரிடைய சட்டங்களை நம்மால் கடைப்பிடிக்க முடியாது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படையில் பார்க்கும் போது, கர்த்தருக்கு முன்னதாக நாம் விபசாரிகளாக இருந்தோம், எல்லா மீறுதல்களையும் அக்கிரமங்களையும் செய்தோம். ஆகவே, நமது பாவங்களுக்காக எந்நேரத்திலும் நரகம் செல்லுவதைத் தவிர்க்க முடியாதவர்கள் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ளாமலிருக்க முடியாது. அதனால் தான் கர்த்தர் தாமே இரட்சகராக நம்மிடம் வரவேண்டியிருந்தது.
உலகின் பாவங்களுக்கான நித்தியமான பலி காணிக்கையாக இயேசு கிறிஸ்து தனது சரீரத்தைக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டில் எப்படி பலி காணிக்கை கொடுக்கப் பட்டதோ அதன் படியே அவர் தன்னைக் கொடுத்தார், குறிப்பாக பாவநிவாரண நாளைக் குறித்து கூறப்பட்டதைக் கூறலாம்: அது பலி காணிக்கையின் தலையின் மீது கைகளை வைப்பதாகவும் அதன் இரத்தம் சிந்துதலுமாகும். சாட்சிப் பெட்டியில் இருந்த இரண்டு கற்பலகைகளும் கிருபாசனமும் இஸ்ரவேல் மக்கள் தமது பாவமன்னிப்பைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் கர்த்தர் தன்னுடைய நீதியின் சட்டத்தையும் அவருடைய ஜீவனைக் குறித்த வாக்குத்தத்தையும் விசுவாசிப்பவர் கள் புதிய வாழ்க்கையைப் பெறுவதை கர்த்தர் ஏதுவாக்கினார். இன்று, பாவத்திலிருந்து நித்திய இரட்சிப்பை எடுத்து வரும் சத்தியத்தின் வார்த்தையும் கர்த்தரின் நீதியும் காட்டும் சட்டமானது, இஸ்ரவேல் மக்களை மட்டும் நித்திய ஜீவனையும், கர்த்தரைச் சந்திப்பதையும் ஏதுவாக்காமல், நம் அனைவரையும் கூட ஏதுவாக்குகிறது.
கர்த்தர் யாரென்பதையும் அவர் நம்மிடம் என்ன கூறுகிறார் என்பதையும், நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பை அவர் யார் மூலமாக நம்மைப் பெறச் செய்தார் என்பதையும், இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்களும் நானும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு ஆசரிப்புக் கூடாரத்தின் கதவின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் மூலம் கர்த்தர் உங்களையும் என்னையும் அழைத்து, நம்மை ஏற்றுக் கொண்டு, இதனை விசுவாசிக்கும் விசுவாசத்தை நமக்கு அளித்தார்.
 
 
இளநீல நிற நூலானது இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையே சுட்டிக் காட்டுகிறது
 
மத்தேயு 3:13-17 ஐ நாம் வாசிப்போமாக, “அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையின் மூலமாக கொடுக்கப் பட்ட காணிக்கைகளின் மூலமாக, பிதாவாகிய கர்த்தர் தனது ஒரே குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் மீது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமத்துவதை அவர் தெளிவாக கூறினார். கர்த்தரின் எல்லா நீதிகளையும் நிறைவேற்ற யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். யோவானால் ஞானஸ்நானம் பெறும் போது உலகத்தின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப் பட்டதால், இதனை விசுவாசிக்கும் அனைவராலும் தமது இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய முடியும்.
இயேசுவானவர் பெற்றுக் கொண்ட இந்த ஞானஸ்நானமானது, மக்கள் தாம் கிறிஸ்தவர்களாகும் போது பெற்றுக் கொள்ளும் சடங்காச்சாரமான நீரின் ஞானஸ்நானத்திலிருந்து முற்றிலுமாக வேறு பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்நாட்களில் மக்கள் பெற்றுக் கொள்ளும் நீரினால் ஆன ஞானஸ்நானமானது அவர் கிறிஸ்தவ மதத்தவர்களாகியதை குறிக்கும் வெளியரங்கமான அறிகுறி மட்டுமே. மனித குலத்தின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானன் கைவைத்ததின் மூலமாக, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்ற இயேசு கிறிஸ்து உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இயேசு பெற்ற ஞானஸ்நானமானது, நித்திய இரட்சிப்பைக் குறித்த கர்த்தரின் வாக்குத்தத்தை நிறைவேற்றிய ஞானஸ்நானமாகும், அது லேவியராகமத்தின் பலி காணிக்கை முறையின் மூலமாக கர்த்தர் நியமித்த பாவமன்னிப்பின் முறையாகும். இயேசுவானவர் தாமே நேரடியாக ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதும், இந்தப் பாவங்களுக்கான கிரயமாக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததும் கர்த்தர் மனிதர்களிம் மீது வைத்த அன்பும் முழுமையான பாவ மன்னிப்புமாக இருக்கிறது.
நம்மை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கவே பிதாவாகிய கர்த்தர் தனது குமாரரை யோவானால் ஞானஸ்நானம் பெறும் படிச் செய்தார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15). “இப்படி” என்று இங்கே கூறப்பட்டிருப்பது, இயேசு ஞானஸ்நானம் பெறுவதின் மூலமாக அனைத்து மனிதர்களின் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்வார் என்பதைக் கூறுகிறது. யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்ததினால், நமது பாவங்கள் அவர் மீது சுமத்தப் பட்டன. இயேசு தனது ஞானஸ்நானத்தினால் நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினாலே, நமக்கு பதிலாக அவர் தனது இரத்தத்தைச் சிந்தி நமக்காக சிலுவையில் மரித்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றது கர்த்தரின் பலி காணிக்கையின் அன்பாகவும் பாவமன்னிப்பாகவும் இருக்கிறது. நமது எல்லாப் பாவங்களும் தன்மீது சுமத்தப் படுவதை ஏற்றுக் கொண்ட அவர், நீருக்குள்ளாக முழுகினார். இப்படி அமிழ்த்தப் பட்டது அவரின் மரணத்தைக் குறிக்கிறது. அவர் நீரிலிருந்து வெளியே வந்தது அவரின் உயிர்த்தெழுதலை சுட்டிக் காட்டியது.
 
 
இயேசு நம்மைப் படைத்தவரும் இரட்சகருமாயிருக்கிறார்
 
நம்மிடம் வந்த இயேசு கிறிஸ்துவானவர் கர்த்தராக இருக்கிறார் என்பதும் அவர் இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தார் என்பதும் உண்மையே. ஆதியாகமம் 1:1 கூறுகிறது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” மேலும் ஆதியாகமம் 1:3 கூறுகிறது, “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.” யோவான் 1:3 கூறுகிறது, “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” பிதாவுடனும், பரிசுத்த ஆவியானவருடனும் சேர்ந்து இயேசு கிறிஸ்து முழு பிரபஞ்சத்தையும் படைத்தார்.
பிலிப்பியர் 2:5-8 கூறுகிறது, “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” உண்மையான படைப்பின் கர்த்தர் அவரே, அவர் இந்த உலகத்தையும் மனிதர்களாகிய நம்மையும் படைத்தார். நம்மை நமது பாவங்களிலிருந்து விடுவிக்க, இந்த தேவனே நம்மிடம் மனிதராக வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமந்த அவர், இந்த ஞானஸ்நானத்திற்காக தனது இரத்தத்தைச் சிந்தி, இதன் மூலமாக நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை நெய்து, ஆசரிப்புக் கூடாரத்தின் எல்லாக் கதவுகளையும் இஸ்ரவேல் மக்கள் தயாரிக்கும் படி மேசியா செய்தார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் ஆசரிப்புக் கூடாரத்தின் கதவுகளை அவர் செய்யச் செய்தது, மனிதர்களை அவர்களுடைய எல்லாப் பாவங்களிலிருந்து இரட்சிக்க அவர் விரும்பியதைக் காட்டுகிறது: யோவானிடமிருந்து பெற்றுக் கொள்ளும் இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு, தனது இரத்தத்தின் மூலமாக அவற்றிற்கான கிரயத்தை செலுத்த அவர் விரும்பினார்.
பழைய ஏற்பாட்டில், பாவிகள் தமது பலி காணிக்கைகளை ஆசரிப்புக் கூடாரத்திற்கு எடுத்து வந்து, சர்வாங்க தகன பலிபீடத்திற்கு முன்னதாக அதன் தலைமீது தமது கைகளை வைப்பதின் மூலமாக தம் பாவங்களை அதன் மீது சுமத்தினர். அதன் பிறகு அவன் அதன் கழுத்தை அறுத்து, அதன் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தான். ஆசாரியர்கள் சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் அந்த இரத்தத்தை ஊற்றி மீதியிருந்தவைகளை தரையில் கொட்டியதின் மூலமாக இந்த பலி காணிக்கையை அவர்கள் கர்த்தருக்கு செலுத்தினர்.
தான் கைவைத்த பலி காணிக்கையின் இரத்தத்தை எடுத்தவாறு, பாவநிவாரண நாளில், தலைமை ஆசாரியன், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மீது தெளித்தான், கர்த்தர் இந்த பலி காணிக்கையின் இரத்தத்தை தனது மக்களுக்கான நியாயத் தீர்ப்பாக ஏற்றுக் கொண்டார். பலி காணிக்கை மிருகம் ஏன் கொல்லப்பட வேண்டும்? தலைமை ஆசாரியன் தனது கைகளை அதன் தலை மீது வைக்கும் போது, அந்த பலி காணிக்கையானது இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டதே அதற்கான காரணமாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், கைவைக்கப் பட்டதே அதன் மரணத்திற்கான காரணமாகும். இப்படியாக, பலி காணிக்கை மிருகத்தின் இரத்தத்தைக் கர்த்தர் ஏற்றுக் கொண்டு, சர்வாங்க தகன பலிபீடத்தில் அதனுடைய மாமிசம் எரியும் போது உருவாகிய வாசனையை முகர்ந்தார், மேலும் இதன் மூலமாக இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தார்.
புதிய ஏற்பாட்டின் காலத்திலும் கூட, இப்படிச் செய்யவே இயேசு வந்தார். நமது பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொள்ளவும், பாவத்திற்கான ஆக்கினையைச் சுமக்கவும், நமது தேவன் கன்னி மரியாளின் சரீரத்தின் மூலமாக இந்த உலகத்தில் பிறக்க வேண்டியதாக இருந்தது, மேலும், யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும் தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தியதின் மூலமாகவும், அவர் அந்த இரட்சிப்பை நிறைவு செய்தார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகிய நற்செய்தியானது, இயேசுவே கர்த்தரென்றும், அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்தாரென்றும் அறிவிக்கிறது.
இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அவர் சிலுவையில் அறையப் பட்டு, தனது எல்லா இரத்தத்தையும் சிந்தி, மரித்து, மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்து, விசுவாசிப்பவர்களுக்கு இரட்சகராகி, கர்த்தரின் சிம்மாசனத்திற்கு வலது பாரிசத்தில் இப்போது வீற்றிருக்கிறார். கர்த்தருக்கு முன்னதாக தன்னை இரட்சகராக விசுவாசிப்பவர்கள், தம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ததால், கர்த்தரை அப்பா பிதாவே என்று கூப்பிட அவர் அவர்களை ஏதுவாக்கினார். இதுவே இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் இரகசியமாகும்.
அவரின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தத்தின் மூலமாக, நமது பாவங்களைக் கழுவி, நமக்காக, நமது பாவங்களுக்கானத் தண்டனையை அனுபவித்து அவற்றை முழுமைப் படுத்தினார். இப்போது அவர் உலகின் இரட்சகரானார். மேலும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடார கதவுகளை நாம் விசுவாசிக்க வேண்டும், மேலும் புதிய ஏற்பாட்டில், நமது இரட்சகராகிய மேசியா இந்த உலகத்திற்கு வந்து, தனது ஞானஸ்நானத்தினால் உலகின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் இந்த எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினைகளை பெற்றார் என்பதையும் இதன் மூலமாக நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம் என்பதையும் கூட நாம் விசுவாசிக்க வேண்டும்.
 
 
கிறிஸ்தவர்களாகிய நாம், அவருடைய வார்த்தைக்கு எப்படிப்பட்ட கவணத்தைக் கொடுக்கிறோம்?
 
யாத்திராகமம் 25:22 கூறுகிறது, “அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.” அப்படியானால், பாவநிவர்த்தியின் நற்செய்தியாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு எத்தனை அருகாக நீங்கள் இருக்கிறீர்கள்? இயேசுவைத் தமது இரட்சகராக விசுவாசிக்கும் உங்களுடனே எங்கேயிருந்து பேசுவதாக தேவன் கூறினார்? யாத்திராகமம் 25:22 இல், சாட்சிப் பெட்டியின் மீதுள்ள மூடியின் மேலிருந்து தமது எல்லாப் கட்டளைகளையும் கொடுப்பதாக அவர் நம்மிடம் கூறினார். பழைய ஏற்பாட்டுக் காலத்தின் இஸ்ரவேல் மக்களிடம், கிருபாசனத்தின் மீது அமர்ந்தவாறு அவர்களுடன் பேசுவதாக கர்த்தர் கூறினார்.
சட்டப்படியான பலி காணிக்கையின் மூலமாக உங்களுக்கு பாவ மன்னிப்பைக் கொடுத்த பிறகு, உங்களை தனது பிள்ளைகளாக்குவதின் மூலமாக உங்கள் வாழ்க்கையை வழி நடத்தப்போவதாக கர்த்தரின் வாக்குத்தத்தம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தை விசுவாசிப்பவர்கள் எத்தனையாய் தேவனால் வழிநடத்தப்பட முயற்சி செய்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து கொள்ளாமல் இயேசுவை வெறுமனே நீங்கள் விசுவாசித்தாலும், அவரால் உங்களை வழிநடத்த முடியாது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். மேலும், நீங்கள் உண்மையாகவே கர்த்தரால் வழிநடத்தப்பட வேன்டும் என விரும்பினால், உங்களுடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்த சத்தியத்தை நீங்கள் முதலில் அறிந்து அதனை ஏற்றுக் கொண்டு, அவருடைய வழிகாட்டுதலுக்காக காத்திருக்க வேன்டும்.
நாம் உங்களிடம் கூற வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது, அதாவது நீங்கள் கர்த்தரின் பிள்ளைகளாக விரும்பினீர்களானால், அவருடைய சபையில் நீங்களும் ஒரு அங்கத்தினாராக விரும்பினீர்களானால், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் இரகசியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் எல்லாப் பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டும். இதற்கு பிறகே, சாட்சிப் பெட்டியின் மேலேயிருந்து உங்களுடன் பேசும் தேவனின் கட்டளைகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
நமது பாவமன்னிப்பைப் பெறச் செய்ய நம்மை ஏதுவாக்கிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைத்திருக்கும் போது, தேவன் நமக்கு கட்டளையிட்டு நம் வாழ்க்கையை வழிநடத்துகிறார் என்பதை நினைவு கூர்ந்து அதனை விசுவாசிக்க வேன்டும். கிருபாசனத்தின் மீதிருந்து கொடுக்கப் படும் கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் இப்போது பெற்றுக் கொள்ளுகிறீர்களா? அல்லது உங்கள் சொந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் தேவனைப் பின்பற்றுகிறீர்களா?
உங்கள் சொந்த உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் உங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்ப முடியாது, அது குழப்பத்திற்கு மட்டுமே வழிநடத்தும். சாட்சிப் பெட்டியின் மேலேயிருந்து பேசுகின்ற கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் பின்பற்ற விரும்பினீர்களானால், ஆசரிப்புக் கூடாரத்தில் கூறப்பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை, கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பாவமன்னிப்பானது என்பதை அறிந்து விசுவாசிக்க வேண்டும்.
அல்லேலூயா! நம்மை நமது உலகத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்த தேவனின் ஞானஸ்நானத்திற்காகவும், அவரின் சிலுவை இரத்தத்திற்காகவும், அவரின் வல்லமைக்காகவும் அன்பிற்காகவும் நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.