• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-19] பொன் விளக்குத்தண்டு (யாத்திராகமம் 25:31-40)

2021.04.24 43
(யாத்திராகமம் 25:31-40)
“பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட வேண்டும். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். ஒவ்வொரு கிளையிலே வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.”
 
 
ஒரு தாலந்து சுத்தமான பொன்னினால் ஒரு பொன் விளக்குத்தண்டு செய்யப்பட்டது. அதனுடைய தண்டானது ஒரு தாலந்து பொன்னிலிருந்து அடிப்புவேலையாக செய்யப் பட்டது, அதன் இருபக்கங்களிலிருந்தும் மூன்று கிளைகள் வெளியே வந்தன, மேலும் தண்டின் மேலேயும் அதன் கிளைகளின் மேலேயும் ஏழு விளக்குகள் பொருத்தப் பட்டன. பொன் விளக்குத்தண்டானது ஒரு தாலந்து பொன்னினால் செய்யப்பட்டதால், அது மிகுந்த மாட்சி உடையதாகவும், மிக அழகிய காட்சிப் பொருளாகவும் இருந்தது.
பொன் விளக்குத்தண்டின் உச்சியில், எண்ணெய்யைப் பிடிக்கும் படி ஏழு விளக்குகள் இருந்தன, அது பரிசுத்த ஸ்தலத்தை எப்போதும் பிரகாசிக்கச் செய்யும் படியாக எரிந்தது. இதனை ஏற்றி, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் கதவைத் திறந்தே, ஒருவரால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் செய்கைகளை விசுவாசிப்பவர்களாலேயே இந்த இடத்திற்குள் பிரவேசிக்க முடியும். மேலும், இந்த விசுவாசம் இல்லாமல், வேறு யாராலும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாது, ஏனெனில் ஆசரிப்புக் கூடார திரைக் கதவில் உள்ள இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட இரகசியத்தை அறிந்தவர் களுக்கு மட்டுமே இதற்குள் செல்லும் அனுமதி இருந்தது.
ஆகவே, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவாக்கப் பட்ட ஆச்சரியமான இரட்சிப்பை விசுவாசிப்பவர் களால் மட்டுமே கர்த்தரின் ஆலயத்தின் உறுப்பினர்களாக முடியும். ஆசரிப்புக் கூடாரத்தின் திரைக்கதவில் உள்ள நான்கு நிற நூல்களும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் நிழலாகும், அது வரப்போகிற இயேசுவிற்கு மாதிரியாக இருந்தது, அவர் ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நமது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் நமது பாவங்களுக்கான ஆக்கினைகளைப் பெற்றார்.
தேவன் நமக்கு கொடுத்த நற்செய்தியாகிய உண்மை பாவமன்னிப்பானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு எதுவும் இல்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, பாவமன்னிப்பின் ஆசீர்வாதத்தை நமக்கு கொடுக்க, இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தாலும், அவர் சிலுவையில் பெற்ற நியாயத்தீர்ப்பினாலும் உருவானதாகும். மேலும், இந்த சத்தியத்தை முழு இருதயத்தினாலும் விசுவாசிப்பவர்களினாலேயே தமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தை விசுவாசிப்பவர்களை மட்டுமே, பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல கர்த்தர் அனுமதிக்கிறார்.
பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருந்த பொன் விளக்குத்தண்டானது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்ததைப் போல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரின் பிள்ளைகளானவர்களும், மக்களை அவர்களின் பாவங்களில் இருந்து இரட்சிக்கும் இரட்சிப்பின் ஒளியினால் உலகைப் பிரகாசிக்கச் செய்வர். வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக பாவமன்னிப்பு பெற்றவர்களினாலேயே, இரட்சிப்பின் ஒளியைக் கொடுக்கும் பொன் விளக்குத்தண்டின் செயலை நிறைவேற்ற முடியும், ஆகவே மற்றவர்களும் இந்த சத்தியத்தை அறிந்து தமது பாவங்களுக்கான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பொன் விளக்குத்தண்டில், மலர்களும், அலங்கார மொக்குகளும் பாத்திரங்களும் இருந்தன. விளக்குத்தண்டில் ஏழு விளக்குகள் இருக்கவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டதைப் போல, விளக்குத்தண்டு ஏற்றப் பட்டவுடனே, பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள இருள் எப்போதும் அகன்றதாக இருந்தது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தமது பாவங்களைக் கழுவிய நீதிமான்கள் ஒன்று கூடி, கர்த்தரின் ஆலயத்தைக் கட்டி எழுப்பி, இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்பவர்களாக இருப்பர் என இது பொருள் படும். பரிசுத்த ஸ்தலத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த பொன் விளக்குத்தண்டானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும், இது உலகத்தின் இருளை விரட்டி அடிக்கிறது.
நம்மை நமது பாவத்திலிருந்து இரட்சிக்க, மனித சாயலாக, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். மேலும் நமது பாவங்களைச் சுமக்க யோவானால் ஞானஸ்நானம் பண்ணப் பட்டார், நமது பாவங்களுக்கான ஆக்கினைகளைச் சுமக்க, அவர் சிலுவையில் அறையப் பட்டார். இதன் மூலமாக இயேசு இரட்சிப்பின் ஒளியானார். ஆசரிப்புக் கூடார பிரகாரத்தில், பாவிகள் தமது கைகளை பலி காணிக்கை மிருகத்தின் தலையில் வைத்து தமது பாவங்களை அதன் மீது சுமத்தி, இந்த பலி காணிக்கையைக் கொன்று தமது பாவங்களுக்கான ஆக்கினையை ஏற்றுக் கொள்ளச் செய்தார்கள்.
அதே போல, கர்த்தரின் சட்டத்திற்கேற்ப, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப் பட்டதின் மூலமாக நமது இரட்சிப்பை நிறைவேற்றி, எல்லா மனிதர்களுக்குமான இரட்சிப்பின் ஒளியாக மாறினார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட ஊழியத்தின் மூலமாக, மனிதகுலத்தின் இரட்சிப்பை இயேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இயேசு கிறிஸ்து நமக்கு அளித்த ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தாலாகிய நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் இப்படியாக நமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட்டோம். இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் இந்த சத்தியத்தின் ஒளியை கண்டு கொள்ள வேண்டும்.
இரட்சிப்பின் ஒளியினை இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் மீது பிரகாசிக்கச் செய்ததினால் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களால் மட்டும் கர்த்தரின் ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. மேலும், நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களால் மட்டுமே கர்த்தரின் ஆலயத்தின் உறுப்பினர்களாக முடிவதோடு, பிரகாசிப்பதற்கான தகுதியையும், உலகம் முழுவதும் நீர் மற்றும் ஆவியின் ஒளியை பரப்பும் தகுதியையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே விசுவாசித்து அதனைப் பரப்புவதால், இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர் அவர்களிடம் ஒப்படைத்து, உண்மை நற்செய்தியின் ஒளியை பிரகாசிக்கச் செய்ய அவர்களை அனுமதித்தார்.
மேலும், உலகம் முழுவதும் இந்த நற்செய்தியின் ஒளியைப் பரப்பும் வேலையை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உண்மையான சத்தியமாக விசுவாசிப்பவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பாவிகளால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆசரிப்புக் கூடார கதவின் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே அதனுள் பிரவேசிக்க முடியும். ஆகவே, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் சத்தியத்தை அறிந்து அதனைத் தமது இருதயங்களால் விசுவாசிப்பவர்களால் மட்டுமே ஆசரிப்புக் கூடாரத்தினுள் வர முடிவதோடு, இரட்சிப்பின் பிரகாசமான ஒளியினால் பிரகாசிக்கச் செய்யும் செயலைச் செய்ய முடியும்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலில் உள்ள இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்ட ஒரு திரைச்சீலையானது, வழியைக் காட்டியது. தமது காணிக்கைகளைக் கொடுப்பதற்காக ஆசரிப்புக் கூடாரத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காக, கர்த்தர் அந்த பிரகாரத்தின் வாசலையும் அதே நான்கு நிறங்களினால் உருவாக்கினார். ஆனால் பழைய ஏற்பாட்டு காலத்தின் மக்களால், இந்த அன்றாட பலி காணிக்கையின் மூலமாக நித்தியமாக முழுமையானவர்களாக முடியவில்லை. ஆகவே அவர்கள் தொடர்ந்து மேசியாவிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆயினும், மேசியாவாகிய இயேசு கிறிஸ்து வந்தபோது, இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் திரைச்சீலைக் கதவின் நான்கு நிறங்களினாலும் வெளிப்படுத்தப் பட்டபடியான நித்திய காணிக்கையைக் கொடுத்ததின் மூலம், அவர் உண்மையான மேசியாவானார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
இது இந்நாட்களின் கிறிஸ்தவர்களைப் போன்றது, அவர்கள் இயேசுவின் பெயரைக் கூறினாலும் கூட, அவர் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வந்தார் என்பதையும், அவர் நம்மை முழுமையாக இரட்சித்தார் என்பதையும் அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டு மக்கள், கைவைத்தலின் மூலமாகவும் காணிக்கையின் இரத்தத்தின் மூலமாகவும் அன்றாடம் பலி காணிக்கைச் செலுத்துகையில், அவர்களின் பலி காணிக்கையைப் போன்றே இரட்சகர் தோன்றுவார் என்பதை அவர்கள் விசுவாசிக்க வேண்டியிருந்தது.
அதைப் போலவே, இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கையின் முறையின் படியான கைவைத்தலையும் இரத்தத்தையும் போன்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தி, அதன் மூலமாக தனது மக்களைப் பாவத்தில் இருந்து இரட்சித்தார். ஆனால் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையினைக் குறித்து எதுவும் தெரியாததால், இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தாரா அல்லது சிலுவையின் இரத்தத்தினால் மட்டுமே வந்தாரா, அல்லது வெறும் இரட்சகராக மட்டுமே வந்தாரா என்று எதைக் குறித்தும் அவர்களுக்குத் தெரியாது.
கர்த்தருடைய கண்களில், இன்றைய கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையில் வைத்திருக்கும் விசுவாசமானது இஸ்ரவேல் மக்கள் செய்ததைப் போன்றே தவறாக இருக்கிறது. இந்த பலி காணிக்கை முறையினால் வெளிப்படுத்தப் பட்ட மேசியாவின் மீது அவ்ர்களுக்கு உண்மையான விசுவாசம் இல்லாதிருப்பதால், அவர்களால், மேசியா வந்தார் என்பதையும் ஞானஸ்நானம் பெற்றார் என்பதையும், தனது இரத்தத்தைச் சிந்தினார் என்பதையும் விசுவாசிக்க முடியாதிருக்கிறது. ஆனால் இஸ்ரவேல் மக்கள் உட்பட இந்த உலகத்தின் எல்லா மக்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும், அதாவது அவர் தனது ஞானஸ்நானம் மற்றும் சிலுவையில் அறையப்படுதல் ஆகிய ஊழியங்களின் மூலமாக இயேசு அவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்தர் என்பதை விசுவாசிக்க வேண்டும்.
நமது எல்லாப் பாவங்களிலிருந்தும், ஆக்கினைகளிலிருந்தும் உங்களையும் என்னையும் இரட்சிக்க, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தைச் சிந்தினார். ஆசரிப்புக் கூடாரத்தின் கதவிலுள்ள இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமானது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் நிழலாகும், ஆகவே இதன்மூலமாக இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த உண்மையான நற்செய்தியைத் தமது இருதயங்களில் விசுவாசித்து தமது பாவமன்னிப்பைத் தமது இருதயங்களில் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதே இந்த இரட்சிப்பின் சத்தியமாகும். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, சிலுவையில் மரித்து, அவர் நமக்கு கொடுத்த, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, உங்கள் இருதயத்தில் உங்களை இரட்சிக்கும் விசுவாசமுடையவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்த சத்தியமானது உங்களை, எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தது.
கர்த்தருடைய பரிசுத்தமான வீட்டில், மூன்று திரைக் கதவுகள் இருந்தன. இந்த அனைத்து கதவுகளும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நெய்யப்பட்டன. நான் மீண்டும் மீண்டுமாக உங்களிடம் கூறுவதைப் போல, இந்த நான்கு நிறங்களும் கர்த்தரின் இரட்சிப்பை வெளிப்படுத்தின: நமது பாவங்களில் இருந்து நம்மை இரட்சிப்பதற்கு, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றைப் பட்ட பாவமன்னிப்பின் சட்டத்தைக் கர்த்தர் நியமித்தார். ஆகவே, இந்த பாவமன்னிப்பின் சட்டத்தின் படியாக நாம் விசுவாசித்தால், அப்போது கர்த்தர் நமது விசுவாசத்தை ஏற்றுக் கொண்டு, நம்மை நமது பாவங்களில் இருந்து நித்தியமாக இரட்சிப்பார்.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக யார் வேண்டுமானாலும் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படலாம். கர்த்தரால் கொடுக்கப் பட்ட பலி காணிக்கையின் முறையின் முக்கியத்துவத்தை அறிந்து விசுவாசிப்பதின் மூலமாக, யாராலும் அவரிடத்திற்கு செல்ல முடியும். கர்த்தரின் வீடாகிய பரிசுத்த ஸ்தலத்தின் வாசலிலே, ஐந்து தூண்கள் இருந்தன, மேலும் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்ட திரைச்சீலை இந்த தூண்களிலிருந்து தொங்க விடப்பட்டது. கர்த்தரிடம் நம் செல்ல வேண்டுமானால், இந்த நான்கு நிறமுடைய திரைக் கதவில் வெளிப்படுத்தப் பட்ட விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.
இளநீல நிற நூலினால் காட்டப்பட்ட விசுவாசமானது, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதையும், சிகப்பு நிற நூலினால் காட்டப்பட்ட விசுவாசமானது, இயேசு சிலுவையில் அறையப் பட்டு தனது இரத்தத்தைச் சிந்தி ஆக்கினைகளை ஏற்றுக் கொண்டதையும் அறிவிக்கின்றன. இரத்தாம்பர நிற நூலினால் காட்டப்பட்ட விசுவாசமானது இயேசுவே கர்த்தர் என்பதைக் காட்டுகிறது, மேலும் மெல்லிய பஞ்சு நிற நூலினால் காட்டப்பட்ட விசுவாசமானது, மேற்கூறிய அனைத்து நிற நூல்களினாலும், அதாவது , இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து நம்மைப் பாவமற்றவர்களாக்கினார் என்பதை அவருடைய விரிவான வார்த்தை விளக்குகிறது. இந்த சத்தியமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்று அழைக்கப் படுகிறது. மேலும், நீரினாலும் ஆவியினாலும் இயேசு நம்மை இரட்சித்தார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக, கர்த்தரின் ராஜ்யத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும். இந்த விசுவாசத்தை உடையவர்களால் ஆசரிப்புக் கூடாரத்தின் கதவைத் திறந்து, பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் நெய்யப்பட்ட ஆசரிப்புக் கூடாரம் பிரகாரத்தின் வாசலானது நம்மை அவர் எப்படி இரட்சிப்பார் என்ற கர்த்தரின் திட்டத்தினை நாம் அறிந்து கொள்ள நம்மை ஏதுவாக்கியது, நமது இரட்சிப்பானது, கர்த்தரால் நியமிக்கப் பட்ட பாவமன்னிப்பிலிருந்து வருகிறது என்றும், அது மனிதர்களால் உருவாக்கப் பட்ட முயற்சிகளிலிருந்து வருவதில்லை என்றும் அது அறிவிக்கிறது. நமது பாவ மன்னிப்பிற்காக அன்றாடம் நாம் ஜெபித்தாலும், பாவ நிவர்த்திக்கான பலி காணிக்கை இன்றி, அதாவது கைவைத்தலின் மூலமாக பாவங்களைச் சுமத்துவதும், இரத்தம் சிந்துவதும் இல்லா விட்டால், நமது நித்திய பாவங்களில் இருந்து நம்மால் இரட்சிக்கப் படமுடியாது. நமது நித்தியமான உலகத்தின் பாவங்களில் இருந்து நம்மை இரட்சிக்க பலி காணிக்கையானது நம்மிடம் வந்ததினால், இந்த சத்தியத்தை விசுவாசித்து நம்மால் முற்றிலுமாக இரட்சிக்கப் படமுடியும், இதன் மூலமாக பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசமானது நமது இருதயங்களில் இருந்தால், அப்போது நம்மால், எல்லா இழந்து போன ஆத்துமாக்களுக்கும் நித்திய ஜீவனை அளிக்கும், இரட்சிப்பின் நற்செய்தியை பரப்ப முடியும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவின் ஊழி யத்தை விசுவாசிப்பதின் மூலமாக, பாவமன்னிப்பின் சத்தியத்தைக் குறித்த வார்த்தையினால் இந்த உலகத்தை நம்மால் பிரகாசிக்கச் செய்ய முடியும். பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த பொன் விளக்குத் தண்டில் ஏழு விளக்குகள் இருந்தன, ஆகவே இந்த விளக்குகள் ஏற்றப்படும் போது, பொன்தகட்டால் மூடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தின் சுவர்களில் அவை பிரதிபலித்தன, இதன் மூலமாக பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாப் பகுதியையும் அவை பிரகாசிக்கச் செய்தன. பரிசுத்த ஸ்தலத்திலே பொன் விளக்குத்தண்டு இல்லா விட்டால், அங்கே இருள் மட்டுமே இருந்திருக்கும். இதனால் தான் இந்த இருண்டு போன உலகிலே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் பரிசுத்தவான்களையும் அவரின் சேவகர்களையும் கர்த்தர் இங்கே நியமித்திருக்கிறார்.
 
 
பொன் விளக்குத்தண்டின் வேலை என்ன?
 
உலகிற்கு வெளிச்சமாக கூடிய சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தைக் கர்த்தர் நமக்கு கொடுத்தார் என்பதை பொன் விளக்குத்தண்டு நமக்கு காட்டுகிறது. இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தார் என்றும், ஞானஸ்நானம் பெற்றார் என்றும், தனது இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்றும் நமது விசுவாசி விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த விசுவாசத்துடனே பிரகாசிக்கும் படி கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இரட்சிப்பின் நற்செய்தியை நாம் நமது இருதயங்களில் வைத்து, இந்த விசுவாசத்தை நாம் பரப்புகையில், மக்கள் இந்த பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்து இதனை நோக்கி வந்து, கர்த்தர் தம்மை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமாக இரட்சித்தார் என்பதை அறிந்து, கர்த்தரின் சொந்த மக்களாவார்கள். இந்த சத்தியத்தின் வெளிச்சமானது பிதாவாகிய கர்த்தர், குமாரர், மற்றும் பரிசுத்த ஆவியானவரால் திட்டமிட்டு நிறைவேற்றப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும்.
இயேசு இந்த பூமிக்கு வந்தார் என்றும், ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும், தனது இரத்தத்தைச் சிந்து மரித்தார் என்றும், நமக்கு பாவமன்னிப்பை அளிப்பதற்கு மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார் என்றும், சத்தியத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தினால், இரட்சிக்கப் பட வேண்டியவர்களுக்கு நற்செய்தியைப் பரப்புகிறோம். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, நமக்காக பலி காணிக்கையாகி இராவிட்டால், உங்களாலும் என்னாலும், எப்பொழுதும் நமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப் பட்டிருக்க முடியாது.
இயேசு ஞானஸ்நானம் பெற்றதாலும், தனது இரத்தத்தைச் சிந்தியதாலும், நமக்காக பலி காணிக்கையானதாலும், பாவிகளை இரட்சிக்கும் விசுவாசத்தை அவர் அவர்களுக்கு கொடுத்தார். நாம் இங்கே சில வேடிக்கையான கோட்பாடுகளைப் பரப்பவில்லை. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் ஒளியை நாம் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவையின் பலி காணிக்கையையும் அறிந்த் விசுவாசத்தை நாம் பெற்றிருப்பதால், தம்முடைய இருதயங்கள் இருளாக இருப்பவர்களுக்கு இந்த ஜீவ வெளிச்சத்தை நாம் பரப்புகிறோம். இந்த வெளிச்சத்தினால் பிரகாசிக்கப் பட்ட அனைவரும், தமது இருதயங்களில் இருந்து அவர்களின் எல்லாப் பாவங்களும் மறையும் ஆச்சரியத்தை நேரடியாக காணமுடியும். உலகில் உள்ள எல்லா மக்களும் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும், நமது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைக்க அவர் பலி காணிக்கையாக கொடுத்த சிலுவையின் தியாகத்தையும் அவர்கள் அறிந்து, இவற்றைத் தமது சொந்த பாவமன்னிப்பாக விசுவாசித்து, இதன் மூலமாக சத்தியத்தின் வெளிச்சத்தை அவர்கள் கண்டு கொள்வர்.
இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வரவேண்டும்? அவர் ஏன் ஞானஸ்நானம் பெறவேண்டும்? அவர் ஏன் சிலுவையில் மரிக்க வேண்டும்? அவர் ஏன் மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழ வேண்டும்? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதில் இயேசு கிறிஸ்து மேசியா என்பதேயாகும். மேசியாவாக வந்த அவர் இரட்சிப்பின் எல்லா செய்கைகளையும் நிறைவேற்ற, இயேசு ஞானஸ்நானம் பெற்று தனது இரத்தத்தைச் சிந்தினார், இதன் மூலமாக அவர் இரட்சிப்பின் ஒளியை பாவிகளின் மீது பிரகாசிக்கச் செய்தார். ஆகவே, உலகம் முழுவதிலும் இரட்சிப்பின் வெளிச்சத்தைப் பரப்புவதின் மூலமாக, அநேகர் இந்த சத்தியத்தை அறிந்து, அதனை விசுவாசித்து, அதன் மூலமாக நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் படியாக அவர்களை ஏதுவாக்கலாம்.
நீங்களும் நானும் இந்த உலகை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெளிச்சத்தினால் பிரகாசிக்கச் செய்யும் பொன் விளக்குத்தண்டுகளாக இருக்கிறோம். நாம் பரப்பும் இந்த நற்செய்தியின் மூலமாக, தம்மை இரட்சிக்கும் சத்தியத்தின் வெளிச்சத்தை மக்கள் அறிந்து கொள்ளுவார்கள். இந்த இருண்டு போன உலகில் வெளிச்சத்தை தேடுகிறவர்கள் நாம் பரப்பிக் கொண்டிருக்கும் பிரகாசமான வெளிச்சத்தைக் காண்பார்கள், அவர்கள் இந்த சத்தியத்தின் வெளிச்சத்திற்கு வந்து, அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படுவார்கள். இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தை அறிந்து கொள்வதின் மூலம் எல்லா மனிதர்களாலும் இரட்சிக்கப் படலாம்.
இந்த நற்செய்தியானது கொள்கைப் படியான விஷயம் அல்ல. மேலும் நாம் இதனை உண்மையான இருதயங்களுடனே விசுவாசிக்க வேண்டும். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஊழியங்களை நாம் உண்மையாகவே விசுவாசிக்கும் போதே நற்செய்தியைப் பரப்ப நம்மால் செயல் பட முடியும். நாம் பாவமன்னிப்பைப் பெற்றவர்களாக் இருந்த போதிலும், எண்ணெய்யை ஊற்றக் கூடிய விளக்கு இல்லாவிட்டால், நம்மால் வெளிச்சத்தை எப்போதுமே கொடுக்க முடியாது, அதைப் போலவே நமது விளக்குத்தண்டாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கர்த்தர் நம்மிடம் கொடுத்துள்ளார். விளக்குத்தண்டின் ஒவ்வொரு கிளையிலும், ஒவ்வொரு பாத்திரம் இருந்தது, இந்த பாத்திரங்களுக்கு கீழே அலங்காரமான பூங் கொத்துகள் இருந்தன. இது விசுவாசத்தினால் கட்டப் பட்ட ஆலயத்தைத் தவிர வேறெதுவுமில்லை.
தம்முடைய இருதயங்களினால் விசுவாசித்ததின் மூலம் பாவமன்னிப்பை உண்மையாகவே பெற்றவர்கள் ஒன்று கூடும் இடமானது கர்த்தரின் உண்மையான ஆலயமாகும். ஆலயத்தின் தலைவர் இயேசு கிறிஸ்துவே, மேலும் ஆலயம் அவரின் சரீரமாக இருக்கிறது. தலை எதனைச் சொல்லுகிறதோ அதன் படியாக சரீரம் நகருவதைப் போல, இயேசு கிறிஸ்து கட்டளையிடுவதற்கேற்ப, ஆலயம் தனது கைகளையும் கால்களையும் அசைக்கிறது. இப்படியாகாவே நற்செய்தியானது ஆராதிக்கப் படுகிறது. அப்படியானால், கர்த்தரின் ஆலயம் எதனை எதிர்நோக்குகிறது? இருளான பாவங்களில் ஆழ்ந்து, முழு உலகமும் மரிக்கிறது, இத்தகைய ஒரு சூழ்நிலையில், நரகத்திற்கு செல்லுவதைத் தவிர்க்க முடியாத ஆத்துமாக்களை ஆலயமானது நோக்குகிறது. இதனைத் தான் நீங்களும் நானும், நமது நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்தினால், அவருடைய ஆலயத்தில் செய்கிறோம்.
கிறிஸ்தவம் அதிக நாட்களாக உள்ள நாடுகளில், மிகவும் அதிகமாக படித்தவர்களும், வேதாகமத்தைக் குறித்த அறிவுள்ளவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய மக்களில் உள்ள சிலர், உண்மையான சத்தியத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களாக உள்ளனர், அவர்கள் இந்த சத்தியத்தை சந்திப்பார்கள், இதன் மூலமாக அவர்கள் தமது பாவமன்னிப்பை ஒரேதரமாக பெறுவார்கள். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இத்தகைய மக்களுக்கு பரப்ப, விசுவாசத்துடனே, மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன்.
மற்ற மதங்களைப் போலில்லாமல், கிறிஸ்தவமானது, வார்த்தையின் மீதுள்ள விசுவாசத்தால் தனது அத்திவாரத்தை அமைத்ததால், இந்த வார்த்தையை நாம் சரியாக பரப்பினால், மக்கள் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுவர். ஆனால் இந்த சத்தியத்தை மிகவும் கோபத்துடன் எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள், அதனைக் குறைகூறி விசுவாசிக்காமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு அதனை எப்படி பிரசங்கித்தும் பயனில்லை. குறிப்பாக, கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்காத சில பிடிவாதமான மதவாதிகள் இருக்கின்றனர், அத்தகைய மக்கள் இந்த சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதேயில்லை. ஆனால், வேதாகமத்தைக் கர்த்தரின் வார்த்தையாக ஏற்றுக் கொள்ளுவோரைக் குறித்து என்ன? எண்ணிலடங்காத மக்கள் இந்த சத்த்தியத்தைக் கேட்டு விசுவாசிப்பதின் மூலமாக பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்கள்.
என்னிடம் இந்த விசுவாசம் இருப்பதினால், உங்களுடனே கூட சேர்ந்து, இது நாள் வரைக்கும், கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். வருகின்ற நாட்களில், இந்த நற்செய்தியானது அநேக மக்களிடம் பரவுவதால், நற்செய்தியின் பெரிதான் செயல்கள் எழும்பும். நம்மால் பார்க்க முடியாத இடங்கலிலும் கூட கர்த்தர் செயலாற்றி, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தம் பாவமன்னிப்பைப் பெறக்கூடும். உங்களையும் என்னையும் போன்ற, பெருந்திரளான மக்கள் விளக்குகளாக, முழு உலகத்திலுமுள்ள மக்களுக்கு, தமது இருதயங்களின் விசுவாசத்தைப் பரப்புவார்கள், அவர்களின் இருதயங்கள், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பை விசுவாசிப்பதாக இருக்கிறது. அவர்கள் முழு உலகையும் பிரகாசிக்கப் பண்ணுகையில், புதிய விசுவாசிகள் தொடர்ந்து உருவாவார்கள் என்றும், அவர்களும் கூட இந்த நற்செய்தியை வளர்த்து அதனைப் பரப்புவார்கள் என்றும் நான் விசுவாசிக்கிறேன்.
கர்த்தரின் விளக்குகளாக மாறிய நாமும் கூட, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்கும் நமது விசுவாசத்தினால் இரட்சிப்பின் ஒளியால் பிரகாசிக்கிறவர்களாக இருக்கிறோம். இள்நீல நிற நூலானது, இயேசுவின் ஞானஸ்நானத்தைக் குறித்த சத்தியத்தின் ஒளியைக் கொடுக்கிறது - அதாவது, யோவானால் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக முழு உலகத்தின் பாவங்களையும் இயேசு ஏற்றுக் கொண்டார் என்பதை அது தெரிவிக்கிறது; இரத்தாம்பர நிற நூலானது, இயேசு கிறிஸ்துவே ராஜாதி ராஜா என்ற சத்தியத்தின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறது; சிகப்பு நிற நூலானது, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு சிலுவைக்கு எடுத்துச் சென்று தனது இரத்தத்தை அதில் சிந்தினார் என்ற சத்தியத்தின் ஒளியை பிரகாசிக்கிறது; மேலும், மெலிதாக திரிக்கப் பட்ட பஞ்சு நூலானது, கர்த்தரின் வார்த்தை பாவிகளை நீதிமான்களாக்கியது என்ற சத்தியத்தின் ஒளியினால் பிரகாசிக்கிறது. கர்த்தரால் கொடுக்கப் பட்ட நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியானது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் ஒளியாகும்.
தன்னுடைய இரண்டாம் வருகையின் போது, தேவனாக அவர் திரும்பி வருவார் என்றும், நம்மை அவர் மீண்டும் உயிரோடெழுப்புவார் என்றும், ஆயிரவருட அரசாட்சியில், ஆயிரம் வருடங்களுக்கு நம்மை தம்முடனே ஆளச்செய்வார் என்றும், அதன் பிறகு நித்தியமான கர்த்தரின் ராஜ்யத்தில் என்றென்றும் வாழ நம்மை ஏதுவாக்குவார் என்றும் இந்த நற்செய்தியானது நம்மிடம் தெரிவிக்கிறது. நித்திய வாழ்வு என்னவென்பதை உங்களால் கற்பனைச் செய்து பார்க்க முடிகிறதா?
இந்த பிரபஞ்சமானது மிகவும் பெரிதானதாகவும் அகலமானதாகவும் இருப்பதால், மற்ற நட்சத்திரங்களைச் சுற்றிலும் சூரியக் குடும்பங்களும், அவை எண்ணிலடங்காத காலக்சிகளில் இருப்பதாகவும், அவை நமது சூரியக் குடும்பத்திற்கும், பால் வழித்திரளுக்கும் வெளியே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்த்தர் படைத்த பிரபஞ்சத்தின் ஆளுகைகளி மிகவும் பெரியவை. நமக்கு தெரிந்த பிரபஞ்சத்திற்கு அப்பால், நமக்குத் தெரியாத எத்தனையோ உண்மைகள், காலக்சிகளுக் கிடையே பரவியிருக்கின்றன. இப்போது விழுகின்ற எரி நட்சத்திரங்கள், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தொலை தூரத்தில் உள்ள காலக்சிகளில் உள்ள கோள்கள் வெடித்து சிதறி, அவை இப்போது பூமியின் காற்று மண்டலத்தை அடைந்து எரிகின்றன.
வேறு வார்த்தைகளில் கூறினால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவைகளை இப்போது தான் நாம் காண்கிறோம். இதைப் போல, கர்த்தரால் படைக்கப் பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு காரியங்கள் இன்னமும் நமக்குத் தெரியாதவைகளாகவே இருக்கின்றன. நமக்கு இந்த பிரபஞ்சத்தைக் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும், கர்த்தருகு அது உள்ளங்கை அளவே இருக்கிறது. கர்த்தர் எல்லாக் காலங்களிலும் இருப்பவராகவும், எல்லா வல்லமைகளையும் உடையவராகவும் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் படைத்து, பிரபஞ்சத்தின் ஒழுங்கை ஏற்படுத்தினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, எல்லோராலும் நித்தியமான பாவமன்னிப்பைப் பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சத்தியத்தின் ஒளியினால் நாம் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்கிறோம். கர்த்தரின் பிள்ளைகளிடம் ஜீவனுக்கான பிரகாசமான ஒளி இருக்கிறது, அது அவர்களை இயேசு கிறிஸ்துவுடனே கூட நித்தியமாக வாழ அனுமதிக்கிறது. கர்த்தர் நம்முடன் நித்தியமாக வாழுகிறார், தமது இன்பங்களை அவர்கள் அனுபவிக்க அனுமதிக்கிறார், தனது மகிமையினாலே நம்மைத் தரிப்பிக்கிறார். ஏன்? ஏனெனில் நாம் அவருடைய வல்லமையில் நற்செய்தியாகிய ஒளியை விசுவாசிக்கிறோம். சத்தியத்தை அறிய நம்மை ஏதுவாக்கிய ஒளியை நாம் கண்டு கொண்டால், இந்த ஒளியை மற்றவர்களுக்கு நம்மால் பரப்பாமல் இருக்க முடியாது.
முழு பிரபஞ்சத்திலும் செயலாற்றும் கர்த்தரின் அருளை நாம் பார்க்கும் போது, அவருடைய செயல்களினால் நம்மில் விசுவாசம் பொங்குவதை தவிர்க்க முடியவில்லை. சில நட்சத்திரங்கள் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்து விட்டன, ஆனால் அவற்றை நாம் இன்னமும் காண்கிறோம், ஏனெனில், அவைகள் இந்த கோளில் இருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்றன! இந்த பிரபஞ்சத்தின் முடிவில்லா தன்மையை எண்ணுகையில், “நித்தியம்” என்ற கோட்பாட்டை நம்மால் கற்பனை செய்து பார்க்கலாம்.
கர்த்தரின் ஆலயத்தின் உறுப்பினர்களாகிய நாம் உண்மை நற்செய்தியின் ஒளியைப் பரப்புகிறவர்களாக நம் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம், ஏனெனில் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நாம் விசுவாசிக்கிறோம். நமது பிதாவின் ராஜ்யத்தில் நித்தியமும் ஆசீர்வாதமுமான வாழ்க்கையை இந்த இரட்சிப்பானது உறுதி செய்வதாக நாம் விசுவாசிக்கிறோம். மேலும் எல்லா மனிதர்களும் இரட்சிக்கப் பட்டு, சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறதை நாம் அறிவோம் (1 தீமோத்தேயு 2:4). ஆகவே, இரட்சிப்பின் வெளிச்சத்தை அறிந்தவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதைத் தொடரவேண்டும், அந்த குறிக்கோளானது கர்த்தரால் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
இந்த வேலையைச் செய்யும்படியாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்துள்ளார். இந்த குறிப்பானது எத்தனைப் பெரிய ஆசீர்வாதம் என்பதை உணர்ந்தவர்களாக, விசுவாசித்தின் மூலமாக நம்மிடம் ஒப்படைக்கப் பட்ட வேலைகளைச் செய்வதே நாம் செய்ய வேண்டிய சரியான செயல்களாகும். கர்த்தரின் சத்தியத்தை அறிந்த ஒளியினால் உங்கள் இருதயங்களை நிரப்புவீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையினால், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் ஒளியாகிய ஊழியங்களை நீங்களும் நானும் விசுவாசிக்கத் தொடங்கினோம், மேலும் இந்த முழு உலகத்தினதும் இரட்சிப்பின் வெளிச்சமாகவும், முழு உலகத்தையும் பிரகாசிக்கச் செய்பவர்களுமானோம். அல்லேலூயா! நான் என் எல்லா நன்றிகளையும் கர்த்தருக்கு கொடுக்கிறேன்.