• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-20] தூபபீடம் (யாத்திராகமம் 30:1-10)

(யாத்திராகமம் 30:1-10)
“தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக. அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும். அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக. அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய். சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம்.வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.”
 
 
தூபபீடமானது ஜெபிப்பதற்கான ஓரு இடமாகும்
 
தூபபீடமானது சித்தீம் மரத்தினால் செய்யப்பட்டது, அது சதுரவடிவமாக இருந்தது, அதன் அகலத்திலும் நீளத்திலும் ஒரு சதுரம் (45 செ.மீ. : 1.5 அடிகள்) இருந்தது, அதன் உயரம் இரண்டு சதுரமாகும். அது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப் பட்டிருந்தது, தூபபீடமானது முற்றிலுமாக பொன்தகட்டால் மூடப்பட்டிருந்தது, அதனை உருக்கி வார்த்திருந்தார்கள். அதனை தூக்கிச் செல்வதற்கு உபயோகப்படுத்தப்படும் கம்பைத் தினிப்பதற்காக நான்கு பொன் வளையங்களும் இணைக்கப் பட்டிருந்தன. இந்த தூபபீடத்தில் பரிசுத்த அபிஷேக எண்ணெய்யையும், தூபவர்க்கத்தையும் தவிர வேறெதையும் பயன் படுத்தக் கூடாது (யாத்திராகமம் 30:22-25).
கர்த்தருக்கு ஜெப காணிக்கைப் படைக்கப்பட்ட இடம் தூபபீடமாகும். ஆனால் இந்த தூபபீடத்திற்கு முன்னால் நின்று ஜெபிப்பதற்கு முன்னால், நாம் அப்படிச் செய்ய தகுதியானவர்களா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். பரிசுத்தமுள்ள கர்த்தரிடம் ஜெபிக்க விரும்புகிறவர்கள் அவனின்/அவளின் பாவங்களை முதலாவது விசுவாசத்தால் கழுவ வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவன்/அவள் தன் விசுவாசத்தால் சர்வாங்க தகன பலிபீடத்திலும் வெண்கலப் பாத்திரத்திலும் தம் பாவங்களைக் கழுவ வேண்டும்.
பாவிகளின் ஜெபத்தை கர்த்தர் கேட்பதில்லை (ஏசாயா 59:1-3). ஏன்? ஏனெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவியவர்களை மட்டுமே கர்த்தர் ஏற்றுக் கொள்ளுகிறார். இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் கழுவியதே இதற்கான காரணமாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கவே கர்த்தர் விரும்புகிறார் (சங்கீதம் 34:15, 1 பேதுரு 3:12).
 
 
அனைத்து மனிதர்களினதும் இயற்கைச் சுபாவம்
 
உங்களையும் என்னையும் உள்ளிட்ட அனைத்து மனிதர்களையும் நெருக்கமாக பார்க்கும் போது, நாம் அனைவரும் அடிப்படையில் பாவவித்தாக பிறந்தோம் என்பதையும், இதனால் அவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதையும் நாம் காணலாம். ஒவ்வொருவரும் தீமை செய்பவர்களாயுள்ளனர். மக்கள் பாவத்துடனே பிறந்தவர்கள் என்பதால், தீய செயல்களைச் செய்யாமல் அவர்களால் வாழமுடியாது. நீங்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை, உங்களைக் குறித்து சிறிது எண்ணிப் பாருங்கள். நாம் தீயவர்கள் என்பதையும், நரகம் செல்வதைத் தவிர்க்க முடியாதவர்கள் என்பதையும் கர்த்தருக்கு முன்னதாக நாம் ஒத்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருக்கு முன்னதாக நம் செயல்களை தீர்க்கும் போது, பாவத்தின் சம்பளம் மரணம் என அறிவிக்கும் கர்த்தரின் சட்டத்திற்கு ஏற்றவாறு நாம் உணர்ந்து கொள்வதால், அவருடைய நீதியின் நியாயத்தீர்ப்பிற்கு முன்னதாக நம்மால் தப்பமுடியாது.
மனிதர்களின் இருதயங்களில் இருந்து வருவது தீய சிந்தனைகளாகவும், கொலைகளாகவும், விபசாரமும், பெருமையும் முட்டாள்தனமுமாக இருப்பதால், அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இப்படிச் செய்கிறார்கள் (மாற்கு 7:21-27). சந்தர்ப்பம் கிட்டும் போது பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாத தீமைச் செய்பவர்களின் வித்தாக பிறந்தவர்களின் மனித இருதயங்களால் கர்த்தருக்கு முன்னதாக எப்படி வெட்கமில்லாமல் நிற்க முடியும்? மனித முயற்சிகளினால் இதற்கு சாத்தியமேயில்லை. ஆனால் ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே கர்த்தருக்கு முன்னதாக வெட்கமில்லாமல் நிற்க அனுமதிக்கிறது, அது இங்கே இருக்கிறது. இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவான சத்தியத்தை நாம் அனைவரும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும், இந்த விசுவாசம் நம் எல்லாப் பாவங்களையும் கழுவுவதுடன், கர்த்தருக்கு முன்னதாக வெட்கமில்லாமல் நிற்கவும் அனுமதிக்கிறது. எப்படியாயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி நமக்கு அவசியமாகிறது.
நம்முடைய பாவங்களுக்காக நாம் அனைவரும் நரகம் செல்லவேண்டியிருக்கிறது என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது, நம் நிலையை மட்டுமே ஒத்துக் கொள்ள முடியும். கர்த்தருக்கு முன்னதாக தாம் நரகம் செல்லவேண்டியிருப்பதை அறிந்து கொள்ளுபவர்களால், கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த இரட்சிப்பை தம் இருதயங்களில் விசுவாசிப்பது அத்தனைக் கடினமானது அல்ல. உண்மையுடன் நேர்மையுடனும் நாம் கர்த்தரைச் சந்திக்கும் போது, அவரிடமிருந்து நம்மிருதயங்களை வஞ்சனையுடன் மறைக்கமுடியாது, ஆகவே, கர்த்தரின் நீதியின் நியாயத்தை நாம் ஒத்துக் கொள்கிறோம். கர்த்தரின் நீதியின் நியாயத்தின் மூலம் தம் பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்கும் நிலையில் ஒவ்வொருவரும் நிற்கிறார்கள்.
கர்த்தரின் நீதியின் நியாயமானது பாவத்தின் சம்பளம் மரணம் என்று இருக்கிறது, இச்சட்டமானது எல்லாப் பாவிகளும் தம் சொந்த சிந்தனையுடனோ அல்லது மத நம்பிக்கையுடனோ சுற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. கர்த்தரின் சட்டமானது விளக்கமாகவும், தெளிவாகவும், நீதியாகவும் இருப்பதால், அதற்கு முன்னால் நிற்கும் அவனும்/அவளும் அவனுடைய/அவளுடைய பாவங்களுக்காக நரகம் செல்ல வேண்டியிருப்பதை ஒத்துக் கொள்ளச் செய்கிறது. பாவிகள் அனைவரும் தம் சிறிதான பாவத்திலிருந்தும் கூட கர்த்தரின் தீர்ப்பிற்கு தம்மால் தப்பிக்க முடியாது என்பதை அறிந்து கொள்வர்.
ஆகவே, நம்மனைவரையும் பாவத்திலிருந்து விடுதலைச் செய்யும் ஒரு இரட்சகர் நமக்குத் தேவை, மேலும் இந்த இரட்சகர் யார் என்பதை நாம் கண்டு பிடிக்க வேண்டும். இது இயேசு கிறிஸ்துவாகும், அவர் மனிதர்களின் இரட்சகராவார். அவர் இவ்வுலகிற்கு வந்த இரட்சகர், உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ள யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார், சிலுவையில் அறையப்பட்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக எல்லாப் பாவிகளின் மீறுதல்களுக்கான தண்டனையையும் அனுபவித்து, நம் எல்லாப் பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார்.
பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று என நாம் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வேதாகமத்தை முழுவதுமாக அறிந்தாலே நாம் இரட்சிக்கப் பட முடியும் என நாம் எண்ணினோம், அல்லது நமது இரட்சிப்பிற்கு சிலவகையான நற்செயல்கள் தேவை எனவும் எண்ணுகிறோம். ஆனால் இரட்சிக்கப் பட கர்த்தர் அளித்த சத்தியம் வித்தியாசமானது. இந்த இரட்சிப்பின் சத்தியமானது, கர்த்தரின் சட்டத்திற்கு முன்னதாக நம் மனசாட்சியை சோதிப்பதின் மூலம் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படுவதற்கான வழியைத் திறந்து காட்டியது, இதற்கு நம் இருதயத்தில் காணப்படும் எல்லாப் பாவங்களையும் அறிந்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். இந்த சத்தியமானது ஆசரிப்புக் கூடார வாசலில் முன்கூறப் பட்டது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் நிறைவேற்றப் பட்ட விலையேறப்பட்ட இரட்சிப்பின் சத்தியத்தால் மனிதகுலத்தின் பாவமன்னிப்பு வருகிறது. இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாகவே, எல்லோராலும் நித்திய பாவமன்னிப்பை ஒரேதரமாக பெற்றுக் கொள்ளமுடியும். அப்படிச் செய்வதற்கு, தம்முடைய பாவங்களின் நிமித்தம் தாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதையும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றில் கூறப்பட்ட நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலம் அவர்களின் பாவங்களுக்கு ஒரேதரமாக பாவமன்னிப்பு பெற வேண்டும் என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு கொடுத்த நற்செய்தியானது சத்திய நற்செய்தியில் காணப்படும் நற்செய்தியாகும், இது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் அடங்கியுள்ளது.
சத்திய நற்செய்தியை அனைவரும் விசுவாசிக்கவேண்டும், ஏனெனில், இந்த நற்செய்தியில் காணப்படும் சத்தியத்தை அவர்கள் விசுவாசிக்காவிட்டால், அவர்களால் தமது பாவங்களில் இருந்து விடுதலையாக முடியாது. ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தர் நிறைவேற்றிய இரட்சிப்பின் சத்தியத்தௌ விசுவாசிப்பவர்கள் தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப்படவும் கர்த்தரின் சொந்தப் பிள்ளைகளாகவும் தகுதியானவர்களே. மேலும், கர்த்தருக்கு முன்னதாக சென்று அவரிடம் ஜெபிப்பவர்கள் ஆவதற்கு, சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை முதலில் விசுவாசிக்க வேண்டும், அது பாவமன்னிப்பின் நற்செய்தியாக இருக்கிறது. உண்மையான நற்செய்தியை அறிந்து அதனை நம் நேர்மையான இருதயங்களால் விசுவாசித்து எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படும் போது, கர்த்தரிடம் ஜெபிப்பதற்கு நாம் தகுதியானவர்களாகிறோம். கர்த்தரின் நற்செய்தியாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது இருதயங்களால் விசுவாசிப்பதின் மூலமாக கர்த்தரிடம் ஜெபிக்கக் கூடிய விசுவாசம் நமக்கு கிட்டுகிறது.
ஆசரிப்புக் கூடார வாசலிலுள்ள திரைச்சீலையின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றில் உள்ள சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசம் இல்லாது கர்த்தரிடம் ஜெபிக்க முயல்வது தவறானது. இத்தகைய விசுவாசம் கர்த்தருக்கு எதிராக தேவதூஷனம் கூறுவதற்கும் பரியாசம் பண்ணுவதற்கும் ஒத்ததாகும். ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை விசுவாசிக்காமல் நாம் எப்படி கர்த்தரின் எதிரிகளாக முடியும்?
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் சத்தியத்தின் மூலம் வந்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்க மறுத்தால் அது நீங்கள் கர்த்தரின் எதிரியாவதற்கான குறுகிய வழியாகும். இது கர்த்தரை எதிர்த்து நிற்கும் பயங்கரமான அவிசுவாச செயலாகும். கர்த்தர் நிறைவேற்றிய இரட்சிப்பை விசுவாசிக்காமல், தம்முடைய சொந்த சிந்தனைகளின் படியும், தம் சொந்த செயல்களின் படியும் விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் பரிசுத்தத்தை தொடர்ந்து மாசுபடுத்தும் பாவத்தைச் செய்யும் ஆத்துமாக்களை உடையவர்களாயிருக்கிறார்கள். இத்தகைய ஆத்துமாக்கள் “கபட்டுத்தனம்” என்ற அத்தி மர இலைகளினால் ஆன ஆடைகளை அணிபவர்களாயும், கர்த்தரின் அன்பையும் இரக்கத்தையும் மாசுபடுத்துபவர்களாயும் இருக்கிறார்கள்.
இம்மக்களால் தம் இருதயங்களை வஞ்சிக்கமுடிந்தாலும், கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இத்தகைய அவிசுவாசத்தை உடையவர்கள் கர்த்தரின் நீதியின் சட்டத்தால் பாவத்திற்கான கடும் தண்டனையை அனுபவிப்பர். ஏன்? ஏனெனில், அவர்களின் பாவங்களைக் கழுவ தேவன் பயன்படுத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தெரிந்து கொள்ள அவர்கள் முயற்சிக்கவும் இல்லை, இந்த நற்செய்தியை விசுவாசிக்கவும் இல்லை.
நம்முடைய சொந்தக் கண்களுக்கு முன்னாலேயே நம் மனசாட்சி அழுக்காக இருக்கும் போது, பரிசுத்தமான கர்த்தரின் முன்னால் நம் பாவங்களை எவ்வாறு மறைக்கமுடியும்? இதற்கு சாத்தியமேயில்லை! யார் அவனின்/அவளின் பாவங்களை மறைக்க முயலுகிறாரோ அவர் கர்த்தரின் அன்பிலிருந்தும் இரக்கத்தில் இருந்தும் விடப்படுவார். தம்முடைய சொந்த இருதயங்களையே வஞ்சிப்பவர்கள் சாத்தானின் ஊழியர்களாக மாறி, கர்த்தரையும் தம் உடன் மனிதர்களையும் வஞ்சிப்பர். தம்முடைய சொந்தக் கண்களையே குருடாக்குவதன் மூலம் எப்படியாவது கர்த்தரை வஞ்சிக்கலாம் என்ற எண்ணமே, அவர்களின் மோசமான சிந்தனையில் இருந்து வரும் மூர்க்கத்தனமாக இருக்கிறது. தம்முடைய சொந்த சிந்தனைகளைச் சார்ந்திருப்பவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள், தமது விருப்பப் படியே சாத்தானின் ஊழியர்களாவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
தம்முடைய சொந்த இருதயங்களை வஞ்சித்தாலும், கர்த்தரை வஞ்சிக்க முடியாது என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். கர்த்தரின் வார்த்தையின் படி விசுவாசிக்கும் படியாக அவர்கள் தம் மனங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் எப்படி அவர்களால் தம் பாவங்களைக் கழுவ முடியும்? பாவத்தின் சம்பளம் மரணம் என எழுதப்பட்டுள்ளதைப் போல, அவனின்/அவளின் இருதயங்களைக் கர்த்தருக்கு முன்னதாக வஞ்சிப்பவர்களால் கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பவே முடியாது. கர்த்தரின் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் நமது பாவங்களுக்காக நரகம் செல்ல தயாராயிருப்பது தெளிவாகிறது. மேலும், கர்த்தருக்கு முன்னதாக வரவேண்டும் என விரும்புகிறவர்கள், ஆசரிப்புக் கூடார வாசலில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசித்து இரட்சிக்கப் படவேண்டும்
ஆயினும், அநேகர் தம்முடைய பாவங்களுக்காக ஆக்கினைக்குள்ளாக வேண்டும் என்பதை உணராதமையால், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் வந்த இரட்சிப்பின் நற்செய்தியை தமது இருதயங்களுக்குள் ஏற்க மறுத்தவர்களாயுள்ளனர், இதன் பலனாக, அவர்கள் நரகத்தை நோக்கிச் செல்லுகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களா இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காத அனைவரும் ஒரே ஆக்கினையையே அடைவர். மேலும், கர்த்தருக்கு முன்னதாக நம் மனசாட்சியை நாம் வஞ்சிக்கக் கூடாது, அதற்கு மாறாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் ஏற்றுக் கொண்டு, இந்த சத்திய நற்செய்தியை நாம் விசுவாசிக்கவேண்டும்.
 
 
சத்திய வார்த்தையை விசுவாசித்து நம் பாவங்களைக் கழுவி விட வேண்டும்
 
மனிதர்களிடம் இருவித மனசாட்சிகள் இருக்கின்றன: ஒன்று மாமிசத்தின் மனசாட்சியாகும், மற்றது சத்திய நற்செய்தியின் அடிப்படையில் அமைந்த விசுவாசத்தின் மனசாட்சியாகும். இந்த இரண்டு யதார்த்தங்களிலும் நாம் நேர்மையானவர்களாயிருக்க வேண்டும், குறிப்பாக, சத்திய நற்செய்தியின் அடிப்படையில் அமைந்த விசுவாசத்தின் மனசாட்சியை நம்மால் விட்டுவிட முடியாது. கர்த்தரின் வார்த்தைக்கு முன்னதாக நம் விசுவாசத்தின் மனசாட்சியை சோதித்துப் பார்க்கவேண்டும்; ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் இயேசு நமது பாவங்களை ஏற்றுக் கொண்டு, சிலுவையின் ஆக்கினைக்குள்ளாக்கப் பட்டு, அதன் மூலமாக நம்மை அவர் இரட்சித்தார் என்பதை விசுவாசித்து, இந்த விசுவாசத்தினால் நம் மனசாட்சியிலுள்ள பாவங்களைக் கழுவவேண்டும். இந்த சத்தியத்தை தவிர வேறெதுவும் சரியானதாக இருக்க முடியாது என்றிருந்தாலும், இந்த சத்திய நற்செய்தியை விசுவாசிக்காத மக்கள் இருக்கிறார்களே என்பது எனக்கு கோபத்தை அளிக்கிறது.
நம்முடைய மனசாட்சியை சுத்தப்படுத்துவதற்கு ஒரு விசுவாச ஒழுங்கு இருக்கிறது. முதலாவது, நாம் நரகம் செல்லவேண்டியவர்கள் என்பதை அறிந்து அதனை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும், இரண்டாவதாக, நம் இரட்சகர் இப்பூமிக்கு வந்து, நம்முடைய பாவங்களுக்காக யோவானால் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, இதன் மூலமாக எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்தார் என்பதை நம் இருதயப் பூர்வமாக விசுவாசிக்க வேண்டும். பாவிகள் தம் மீறுதல்களிலிருந்து இரட்சிக்கப்பட வேன்டும், மேலும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப் படவேண்டும் என்றிருந்தும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவை மூலமாக நிறைவேற்றப் பட்ட பாவமன்னிப்பை அறிந்தாலும், சில மக்கள் இன்னமும் விசுவாசிப்பதில்லை. அவர்கள் இதனை எப்படிச் செய்யலாம்? நிச்சயமாக அவர்கள் தம் அவிசுவாசத்தின் விளைவுகளுக்கு பதில் கூறியே ஆகவேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் அறிவிக்கப்பட்ட சத்தியத்தை அறிந்தும் நாம் அதனை விசுவாசிக்கவில்லை எனில், நாம் இன்னமும் பாவம் நிறைந்தவர்களாகவே இருப்போம், நாம் இன்னமும் பாவம் நிறைந்தவர்களாக இருந்தால், கர்த்தரின் சட்டத்தின் படி நம்முடைய பாவங்களுக்காக நாம் நியாயந்தீர்க்கப் பட வேண்டாமா? நாம் ஒவ்வொருவரும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் கர்த்தர் நிறைவேற்றிய இரட்சிப்பின் சத்தியத்தை இருதயத்தால் விசுவாசித்து பாவத்திலிருந்து இரட்சிக்கப் படவேன்டும்.
மக்களுக்கு தம் பாவங்களிலிருந்து தம்மை இரட்சிக்கும் விசுவாசம் தேவை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே விசுவாசிக்கும் விசுவாசம் அவர்களிடம் இருக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியை, அதாவது ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, தான் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் நம் அனைவரையும் இரட்சித்தார் என்பதை விசுவாசிக்கிறோமா? உங்களைக் குறித்து எண்ணுகையில், நீங்கள் நரகத்திற்கு செல்லவேண்டியவர்கள் என்பதை நீங்கள் முதலில் ஒத்துக் கொள்ளுகிறீர்களா? நாம் நரகத்திற்கு செல்லவேண்டியவர்களாக இருந்தாலும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் மூலம் நம்மை இரட்சித்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா?
நம்முடைய எல்லாப் பாவங்களையும் பொறுப்பெடுத்துக் கொள்ளவே, நம் தேவன் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தைச் சிந்தினார் என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களுடையதும் என்னுடையதுமான பாவங்களை துடைக்க, நம் தேவன் மனித சரீரத்தில் இப் பூமிக்கு வந்து, 30 வயதில் யோர்தான் நதியில் யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தினால் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சொந்த சரீரத்தில் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்டதின் மூலமாகவும் தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும் பாவத்திற்கான தண்டனையை ஒரேதரமாக பெற்றார். விசுவாசிப்பவர்களுக்கு அவர்களின் எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பை வழங்கினார்.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மால் இரட்சிக்கப் படமுடியும். இந்த சத்தியத்தின் மூலம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நாம் உண்மையாகவே இரட்சிக்கப் பட்டோமா என்பதை ஆராய்ந்து உறுதிசெய்யவேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்து வந்தார் என்பதை விசுவாசிக்கும் விசுவாசம் நமக்குத் தேவை. வேதாகமம் கூறுகிறது, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). ரோமர் 10:17 கூறுகிறது, “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.”
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப் பட்ட இரட்சிப்பை விசுவாசிப்பதின் மூலம் நாம் இரட்சிக்கப் பட்டோம் என்பதை கிறிஸ்துவின் வார்த்தைக் கூறுகிறது. நம்முடைய சொந்த சிந்தனைகளால் விசுவாசித்து பெற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று பாவ மன்னிப்பு அல்ல, ஆனால் அது இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வந்த இரட்சிப்பை நம் இருதயங்களின் மூலம் விசுவாசிப்பதினால் அது கிடைக்கிறது. பாவத்திலிருந்து உண்மையாக நம்மை விடுவிக்கக் கூடிய விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசமேயாகும்.
இந்த சத்தியத்தில் நம் விசுவாசத்தை வைத்து கர்த்தரிடம் நாம் ஜெபிக்க வேண்டுமா? அப்படியே செய்யவேன்டும்! ஆவியில் எளிமையுள்ளவர்களாயும், சத்தியத்தால் நம் இடை கட்டியவர்களாயும், எல்லா ஜெபங்களையும் நாம் ஏறெடுக்க வேண்டும் (எபேசியர் 6:14, 18). அப்படியானால், இந்த உண்மை என்பது என்ன?
நம்மை இரட்சிப்பதற்காக நம் தேவன் இப்பூமிக்கு வந்து, 30 வயதில் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று, உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டு, துப்பப் பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தி, அதன் மூலமாக நம் பாவங்களைக் கழுவினார் என்று நம்மிடம் கூறுவதே நற்செய்தியாகும். இந்த சத்தியத்தின் மீதுள்ள நமது விசுவாசத்தின் மூலமே நம் பாவமன்னிப்பு நிறைவேறியது என்பதை நாம் அறிக்கைச் செய்ய வேண்டும். நம் தேவன் தன் ஞானஸ்நானத்தினாலும், சிலுவையின் இரத்தத்தினாலும் உலகின் பாவங்களுக்கு தண்டளைப் பெற்று நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார்.
“தேவனே, நீர் என்னைக் கர்த்தரின் பிள்ளையாக்கும் அளவிற்கு என்னை இரட்சித்தீர்.” இப்படித்தான் நாம் நமது விசுவாசத்தை அறிக்கைச் செய்ய வேண்டும். நம்மிடம் பாவத்தைத் தவிர வேறெதுவும் இல்லாதபோது, தேவன் தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவை மரணத்தினாலும் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி பரலோக ராஜ்யம் செல்வதற்கு நம்மைத் தகுதிப் படுத்தினார். இந்த சத்தியத்தை நாம் அனைவரும் விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இந்த சத்தியத்தை விசுவாசிக்கக்கூடாத காரணம் என்ன இருக்கிறது? என்னைப் பொருத்தவரை, என்னுடைய பாவங்களுக்காக தேவன் ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால் என்னால் எதையும் கூறமுடிந்திருக்காது, ஆனால் எனக்காக அவர் ஞானஸ்நானம் பெற்று, தனது இரத்தத்தைச் சிந்தி, இதன் மூலமாக எனது பாவங்களிலிருந்து இரட்சித்தார். இப்படியாக நான் விசுவாசிக்கிறேன். இந்த நற்செய்தியை விசுவாசிக்கக்கூடாத காரணம் நம்மிடம் எதுவும் இல்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பாவிகள் விசுவாசிக்காவிட்டால், அவர்கள் நிச்சயமாக நரகத்தினுள் வீசப் படுவார்கள். ஆனால், இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியை விசுவாசித்து இரட்சிக்கப் படவேண்டும் என விரும்புகிறேன்.
நான் இயேசுவை விசுவாசிபதாக கூறிக்கொண்டு, பாவியாகவே என் நாட்களைக் கழித்த நேரன் ஒன்று இருந்தது. நல்லதொரு கிறிஸ்தவனாக இருக்க முயற்சி செய்ததினால், வானத்தின் கீழ் வெட்கப்படாமல் வாழ்வதற்கு கடும் முயற்சிகளைச் செய்தேன். ஆனால் எனது விருப்பங்களுக்கு மாறாக, ஒவ்வொரு நேரத்திலும் நான் பாவம் செய்து கொண்டேயிருந்தேன்; மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்க்கையில், அவர்களை விட நான் நல்லவனாக காணப்பட்டதே எனக்குக் கிட்டிய ஒரே ஆறுதலாகும். ஆயினும், என்னிடம் இன்னமும் பாவங்கள் இருக்கின்றன என என்னுடைய மனசாட்சி கூறியது, மேலும் கர்த்தரின் சட்டப்படி பாவத்தின் சம்பளம் மரணம் என்பதாலே, என்னுடைய மீறுதல்களுக்காக நரகம் செல்ல வேண்டியவனாக இருந்தேன்.
ஏறத்தாழ பத்தாண்டுகளாக என்னுடைய சட்டப்படியான வாழ்க்கைக்குப் பிறகு, ஆவிக்குரியபடி மரித்தவானேன். ஆயினும், இயேசு கிறிஸ்து எனக்காக ஞானஸ்நானம் பெற்று எனது சொந்தப் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்ற ஞானத்தை கர்த்தர் கிருபையாக எனக்குத் தந்தார். அவர் என்னுடைய பாவங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், உலகிலுள்ள எல்லோரினதும் பாவங்களையும் கூட எடுத்துக் கொண்டார். அப்பாவங்களைச் சிலுவைக்குச் சுமந்து சென்றதன் மூலம் அவற்றிற்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார், சிலுவையில் அறையுண்டு அதில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததின் மூலமாக, என்னுடைய உண்மையான இரட்சகராக மாறினார், அவர் இன்றும் ஜீவிக்கிறார். இந்த சத்தியத்தின் நற்செய்தியை அறிந்தபோது இதனை விசுவாசிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும், சிலுவையில் இரத்தம் சிந்தியதாலும் எனது இரட்சிப்பின் கர்த்தராகினார் என்பதை விசுவாசித்ததின் மூலம், என் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டன. விசுவாசத்தின் மூலமாக பாவமன்னிப்பை எனது இருதயத்தினுள் பெற்றுக் கொண்டேன்.
கர்த்தருடைய எல்லா வார்த்தையையும் நான் நன்கு அறிந்திருப்பதால் நான் என் பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலமாக இந்த பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன என்பதை அறிந்ததாலும், என் பாவங்களுக்கு கிரயம் செலுத்தும் விதமாக இயேசு சிலுவையில் ஆக்கினைக்குள்ளானார் என்பதை எனது இருதயத்தினுள் விசுவாசித்ததாலும், எனது மனசாட்சியின் படி எனது பாவங்கள் நிவர்த்திக்கப் பட்டன என்பதை அறிந்தேன். இந்த பாவமன்னிப்பை நான் பெற்றதாலேயே இப்போது நான் இந்த நற்செய்தியைப் பிரசங்கித்து வாழ்ந்து வருகிறேன். நீங்களும் நானும் ஒன்றே; உண்மையில் பார்த்தால் உங்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
உங்களைப் போலவே நானும் நரகத்திற்குச் செல்ல வேண்டியவனாயிருந்தேன், மேலும் உங்களைப் போலவே, அதே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்ததால், பாவமன்னிப்பை நான் பெற்றுக் கொண்டேன். நம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்துவிட்டார் என்ற நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாக நீங்களும் நானும் விசுவாசத்தினால் இரட்சிக்கப் பட்டோம். இந்த வழியாக நமக்கு, நீர் மற்றும் ஆவியின் மூலமாக நிறைவான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டதால் இப்போது நம்மிடம் விசுவாசத்தின் மனசாட்சி இருக்கிறது, இதனால் பாவமன்னிப்பு பெற்ற அவருடைய சொந்தப் பிள்ளைகளாக இப்போது நம்மால் கர்த்தரின் முன்னதாக சென்று அவரிடம் ஜெபிக்க முடிகிறது.
தூபவர்க்க பீடமானது, பரிசுத்த அபிஷேக எண்ணெய்யினாலும், தூபவர்க்கத்தினாலும் ஆனது என வேதாகமம் நம்மிடம் கூறுவதற்கேற்ப, பரிசுத்தமான சத்திய நற்செய்தியின் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் இயேசு கழுவி, நம்மைச் சுத்திகரித்தார். பழைய ஏற்பாட்டின் ஆதிகாலத்தில், இஸ்ரவேல் மக்கள், கர்த்தர் கட்டளையிட்ட படியே, இந்த பீடத்தில் தூபவர்க்கத்தை எரிக்க வேன்டியிருந்தது. ஆகவே பரிசுத்த ஸ்தலத்தின் உள்ளே, தூபவர்க்கம் எப்போதும் எரிக்கப் பட்டது, ஆகவே அனுதினமும் வாசனை அங்கிருந்தது. இந்த தூபவர்க்கத்தின் பொருள் கர்த்தரிடம் ஜெபிப்பதாகும்.
இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில், பரிசுத்த ஸ்தலத்தில் நீங்கள் தூபவர்க்கத்தை எரிப்பதற்கு, சத்தியத்தின் நற்செய்தியை முதலில் நீங்கள் விசுவாசித்து, பாவமன்னிப்பை உங்கள் இருதயத்தில் முதலில் பெற்றுக் கொள்ளவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமே ஒருவரால் ஜெப தூபவர்க்கத்தை ஏற்ற முடியும். பழைய ஏற்பாட்டில் காணப்பட்டபடியே, நம்மால் எப்படி தூபவர்க்கத்தை ஏற்ற முடியும்? ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள சர்வாங்க தகன பலிபீடமும், தூபப்பீடமும் நமக்கு முன்னால் இல்லாத போது, என்னாலும் உங்களாலும் எப்படி தூபவர்க்கத்தை அதன் பீடத்தில் ஏற்ற முடியும்? விசுவாசத்தின் மூலம் ஜெப தூபவர்க்கத்தை நம்மால் எரிக்க முடியும், ஏனெனில், இயேசு கிறிஸ்து நமது பாவங்களை எல்லாம் துடைத்து நம்மை இரட்சித்தார். பாவமன்னிப்பை நாம் பெறும் போது விசுவாசத்தின் மூலமாக நமது இருதயங்கள் சுத்திகரிக்கப் படுவதால், நம்முடைய இடைவிடாத ஜெபத்தின் மூலமாக கர்த்தரிடம் செல்லக் கூடிய தூபவர்க்கத்தை நம்மால் எரிக்க முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமது முழு இருதயத்தாலும் விசுவாசிப்பதின் மூலமாக நம்முடைய முழு பாவங்களும் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டது எனவும், நமக்கு பதிலாக இயேசு கிறிஸ்து நமக்காக ஆக்கினையை ஏற்றுக் கொண்டார் என்பதையும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் உங்கள் இருதயமும், என் இருதயமும் சுத்தமாயிற்று. நம்முடைய இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது விசுவாசத்தின் மூலம் சுமத்திவிட்டதால், ஒரே தரமாக அவை சுத்தமாயின. யோவானிடமிருந்து அவர் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப் பட்டிருக்கும் நிலையில், உங்கள் எல்லாப் பாவங்களும் ஒரேதரமாக கழுவப்பட்டு துடைக்கப்பட்டு விட்டன, எனவே உங்கள் இருதயங்களில் எப்பாவங்களும் இல்லை. நற்செய்தியை விசுவாசித்து நம் பாவங்கள் எல்லாம் கழுவப் பட்டதால், நம்மால் இப்போது பரிசுத்த கர்த்தரிடம் சென்று உதவி கேட்க முடியும். கர்த்தரிடம் நம்மால் இப்போது ஜெபிக்க முடிவதற்கான காரணம் நம் விசுவாசத்தில் அடங்கியிருக்கிறது, ஏனெனில் நற்செய்தியை விசுவாசித்ததின் மூலம் பாவ மன்னிப்பை மிக நிச்சயமாக நாம் பெற்றுக் கொண்டுள்ளோம், அது நமது நேர்மையான இருதயங்களின் பின்னணியாக இருக்கிறது.
சகோதர சகோதரிகளே, தூபப்பீடத்திற்குச் சென்று இடைவிடாது ஜெபியுங்கள். “பிதாவே, தயவு செய்து எனக்கு உதவும். நான் இத்தகைய நிலையில் இருக்கிறேன், எனக்கு வேண்டியது இதுவே. பிதாவே, உண்மையான நற்செய்தியைப் பரப்ப நான் விரும்புகிறேன், மேலும் நீதிமானாக வாழவும் விரும்புகிறேன். உண்மையாகவே பாவமன்னிப்பைப் பெற்ற ஒருவனைப் போல நல்லொழுக்கத்துடன் வாழுவதற்கு விரும்புகிறேன். நீதியின் கனிகளைச் சுமக்க நான் விரும்புகிறேன். உமக்குள் எனக்கு விசுவாசத்தைத் தாரும். உம்முடைய சித்தத்தின் படி வாழ நான் விரும்புகிறேன்.” இதைப் போல, ஒருவரின் தேவைகளுக்காக ஜெபிப்பதே ஜெபமாகும். கர்த்தருடைய நீதியின் படி அவரின் உதவியை வேண்டுவதே ஜெபமாகும்.
உங்களிடம் வெவ்வேறு விருப்பங்களும் ஆசைகளும் இருக்கலாம். நம்மை நீதிமான்களாக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நமது விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக்கப் பட்டோம், அது நம்மை கர்த்தரிடம் ஜெபத்தின் மூலமாக எல்லாவற்றையும் கேட்பதற்கு ஏற்றவர்களாக்கியது. உதவி கேட்டு கர்த்தரிடம் ஜெபிக்க முடிந்தவர்களே மகிழ்சியானவர்கள். இப்போது நாம் அனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற்றோம், ஆகவே நம்மால் கர்த்தரிடம் ஜெபிக்க முடியும் என்பதில் எச்சந்தேகமும் இல்லை.
கர்த்தர் மீதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுமுள்ள விசுவாசத்தினால் பாவமன்னிப்பைத் தமது இருதயங்களுக்குள் பெற்றவர்கள் பரிசுத்தமான கர்த்தருக்கு முன்னதாகச் சென்று அவரிடம் உதவி கேட்பதற்கு தகுதியானவர்களாயினர். ஒரு சிறுபிள்ளையானது அவன்/அவள் சிக்கலில் இருக்கையில் அவனின்/அவளின் பெற்றோரிடம் உதவி கேட்பதைப் போல, மறுபடியும் பிறந்த விசுவாசிகள் அனைவரும் பிதாவின் உதவி கேட்டு தீவிரிப்பர். அவர்களுடைய விசுவாசமானது பாவமன்னிப்பை அவர்களுக்கு பெற்றுத் தந்ததுடன் கர்த்தரை தம் பிதாவாக அழைப்பதை மட்டும் ஏதுவாக்காமல், எந்நேரட்திலும் அவரின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் அவரிடம் உதவி கேட்டு ஜெபிக்கச் செய்த விசுவாசமுமானது. நம்முடைய விசுவாசத்தினால் கர்த்தர் நமது சொந்த பிதாவாக மாறியதால், நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நமது ஜெபங்களின் மூலம் அவரிடம் உதவி கேட்க தகுதியுள்ளவர்களானோம்.
நீங்கள் பாவமன்னிப்பு பெற்ற பிறகு, உங்களின் தனிப்பட்ட ஜெபங்கள் எப்படி இருந்தன என்றோ, அல்லது கர்த்தர் உங்கள் தேவைகளை எப்படிச் சந்தித்தார் என்றோ எனக்குத் தெரியாது. ஆனால் நாம் கர்த்தரின் ஆலயத்தில் நம்மை ஐக்கியமாக்கும் படியும், நற்செய்தியைப் பரப்பும் படியும் நம்மை ஏதுவாக்க அவரிடம் ஜெபிக்கையில், அவர் நம் ஜெபத்திற்கு நிச்சயமாக பதிலளிப்பார். இந்த செய்கைகளின் மூலமாகவே நாம் மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். முதலாவதாக ஒவ்வொருவரும் அவனின்/அவளின் சரீரப்படியான தேவைகளுக்காகவே ஜெபிக்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் செயலாற்றுவதால், மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம், இதனால், மற்ற ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதும் பரப்புவதற்காகவும் ஜெபிக்கத் தொடங்குகிறோம். ஏன்? ஏனெனில் மறுபடியும் பிறந்தவர்களின் ஜெபங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப் படுகிறதுய். தேவன் நம்மிடம் கூறினார், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” (மத்தேயு 6:33).
ஆனால் மறுபடியும் பிறந்தவர்களின் நடுவே, ஆவிக்குரிய படி இன்னமும் வளராதவர்களுக்கு சரியான காரியங்களுக்கு ஜெபிப்பது இன்னமும் தெரியாததாகவே இருக்கிறது, ஏனெனில் அவர்களின் ஜெபங்களுக்கான கர்த்தரின் பதிலை அவர்கள் அனுபவித்தது இல்லை. இதற்கு காரணம் யாதெனில், கர்த்தரின் நீதியில் உள்ள விசுவாசமானது எத்தனை வல்லமையானது என்பதை இன்னமும் அவர்கள் உணரவில்லை. அற்ப விசுவாசிகளுக்கு தம்முடைய ஜெபத்திற்கான பதில் கிடைக்குமா கிடைக்காதா என்பது மட்டும் தெரியாது, ஆனால், அவர்கள் சந்தேகத்தினால் அலைக்கழிக்கப் படுவர்.
மேலும், அவர்கள் தமக்கு முன் விசுவாசிக்கத் தொடங்கியவர்களுடன் ஜெபிக்கவேண்டும். தம் விசுவாசம் இளமையாக உள்ளவர்கள் கர்த்தரிடம் ஜெபிக்கத் தயங்குபவர்களாக இருப்பர். அவர்கள் ஜெபிக்கும் போதெல்லாம், “தாரும், தாரும், தாரும்” என்று மட்டுமே ஜெபிக்கின்றனர். தம்முடைய விசுவாசம் இளமையாய் உள்ளவர்களும் கூட, கர்த்தரிடம் பெரிதும் விசுவாசம் இல்லாவிட்டாலும், ஆலயத்துடன் இணைய முடியும், உண்மையான ஜெபம் என்னவென்பதை அவர்களால் இன்னமும் கற்றுக்கொள்ள முடியும், ஏனெனில், ஆலயத்திலுள்ள அவர்களின் விசுவாச முன்னோடிகள் கர்த்தரின் நீதிக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சபையுடன் ஐக்கியமாக இருப்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் ஜெபத்திற்கான விசுவாசத்தைக் கொடுக்கிறார், ஆகவே அவர்கள் கர்த்தரின் நீதிக்காக ஜெபிக்கிறார்கள். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16).
கர்த்தரிடம் ஜெபிப்பதற்கு உரிமையுள்ள மறுபடியும் பிறந்தவர்கள் அதிகமானவற்றைப் பெற்றுக் கொள்வார்கள். கர்த்தர் மீது விசுவாசம் உள்ளவர்களின் ஜெபங்கள் அவரால் பதிலளிக்கப் படுகின்றன. மக்கள் கர்த்தரிடம் ஜெபிக்கும்போது, அவர்களுடைய ஜெபங்கள் பிதாவால் பதிலளிக்கப் படவேண்டுமானால், அவர்கள் முதலாவதாக கர்த்தரைத் தமது சொந்த பிதாவாக விசுவாசிக்க வேண்டும், அவர் அவர்களின் விசுவாசத்திற்குத் தக்கபடி பதிலளிக்கிறார். மேலும் விசுவாசத்தின் தந்தைகளாயிருப்பவர்கள் ஐக்கியமாக ஒன்றுகூடி அவர்களின் அடிகளில் நடப்பவர்களுடன் நற்செய்தியைப் பரப்பும் நீதியின் செயலுக்காக ஜெபிக்கும் போது, பெரிதான செயல்கள் நடைபெறுவதை அவர்கள் அனுபவிக்கின்றனர். கர்த்தரை விசுவாசிக்கும் ஒரு விசுவாசத்தின் தந்தைக்கு அருகே நீங்கள் நிற்கும் போது, உங்கள் விசுவாசத்தில் நீங்கள் பெரிதும் வளருவீர்கள். இரட்சிப்பின் கிருபையில் மட்டுமல்லாது வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் நமக்கு அதிக உதவி தேவைப் படுகிறது என்பதை கர்த்தர் அறிந்திருப்பதால், அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். இதனால் தான் கர்த்தரின் சபையுடன் ஐக்கியாமகவுள்ள விசுவாசம் நமக்குத் தேவைப் படுகிறது.
கர்த்தரைப் பிரியப் படுத்தும் காரியங்களுக்காக நாம் ஜெபிக்கையில் நமது விசுவாசம் உறுதியாகிறது. ஆவிக்குரிய பிள்ளைகள் அதற்கேற்ற விதமாக ஜெபிப்பதைப் போல, நாமும் பக்குவப்பட்ட விதமாக, அத்தகைய ஜெபத்தை ஏறெடுக்க விரும்புகிறோம், ஆகவே, பிதாவாகிய கர்த்தரிடம் நம் சொந்தப் பிரச்சினைகளைக் குறித்து பின்னால் ஜெபிக்கலாம். அப்படிச் செய்பவர்கல் உண்மையாகவே கர்த்தரை விசுவாசிக்கிறார்கள், ஆகவே உண்மையான சத்தியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் விசுவாசத்துடன் நடக்கின்றனர். நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான் என வேதாகமம் கூறுவதைப் போல, அவர்கள் தமக்காக மட்டுமே வாழ்வதில்லை, ஆனால் மற்ற ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காகவும் வாழுகின்றனர்.
கர்த்தரிடம் ஜெபிப்பதற்கான தகுதியை நாம் எப்படி பெறுகிறோம்? கர்த்தரால் அளிக்கப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நனது விசுவாசத்தினால் மறுபடியும் பிறந்ததின் மூலமாக நாம் அதனைப் பெற்றுக் கொண்டோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே பிதாவாகிய கர்த்தரிடம் ஜெபிப்பதற்கான தகுதி கொடுக்கப் பட்டுள்ளது. விசுவாசமானது கர்த்தரிடமிருந்து வரும் பரிசாகும். ஜெபிப்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு கர்த்தரிடமிருந்து விசுவாசம் என்ற பெரிதான ஆசீர்வாதத்தைப் பெறவேன்டும்.
இந்த பூமியில் உள்ள அநேக கிறிஸ்தவ விசுவாசிகளில், இத்தகைய விசுவாசத்தால் தகுதி பெற்றவர்கள் எத்தனைப் பேர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அதிகமானவர்கள் இல்லை! முதலாவதாக, கர்த்தரிடமிருந்து கிட்டிய மிகவும் ஆசீர்வாதமான பரிசானது, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் மூலமாக நம்மை நம் பாவங்களில் இருந்து இரட்சித்த விசுவாசம் நம்மிடம் கிட்டியதே. இரண்டாவதாக, கர்த்தருடைய சொந்த பிள்ளைகளாக அவரிடம் ஜெபிப்பதற்கான வல்லமையும் தகுதியும் நமக்குக் கிட்டியது; மூன்றாவதாக, கர்த்தரின் ஊழியர்களாக நம்மை அனுமதித்த விசுவாசத்தை நாம் பெற்றுக் கொண்டோம்.
 
 
பாவிகளின் ஜெபத்திற்கு கர்த்தர் பதிலளிப்பதில்லை
 
சில பாவிகள், தாம் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக் கொண்டாலும், மலை உச்சிகளுக்கு ஏறி தேவனின் பெயரை கூக்குரலிட்டு அழைத்து தம் பாவங்களைத் துடைக்கும் படி கர்த்தரிடம் ஜெபிக்கிறார்கள். அவர்கள் பயந்தாலும் கூட, குளிரான காற்று வீசும் இரவுகளில் மலை உச்சிகளுக்கு ஏறி, தமது உடம்பை பிளாஸ்டிக் சீட்டுகளினால் மூடிக்கொண்டு, தம் அத்தனை பக்தியையும் காட்டி இடைவிடாது ஜெபிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜெபங்கள் வெற்றிடத்தில் மட்டுமே எதிரொலிக்கின்றன.
அவர்கள் இரவு முழுவதும் ஜெபித்தாலும் கூட, கர்த்தர் அவர்களுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கத் தக்க விசுவாசம் அவர்களிடம் இல்லை. இந்த விசுவாசம் அவர்களிடம் இல்லாதிருந்தாலும் அவர்கள் இப்படி ஜெபிப்பதற்கு காரணம் மற்றவர்களுக்கு காட்டிக் கொள்ளவே, அவர்கள் கண்காட்சி நடத்துகிறார்கள். அவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்க முடியாத ஜெபங்களாயிருக்கின்றன. அவர்களுடைய இருதயங்களில் பாவங்கள் இருப்பதால், தம்முடைய பாவங்கள் கர்த்தரைச் சேருவதில்லை என்பது அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். அவர்கள் தம் பாவங்களுக்காக பாவமன்னிப்பைப் பெற வேண்டியிருப்பதால், அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை, அவர்கள் எத்தனையாய் ஜெபித்தாலும், அழுதாலும், கண்ணீர் விட்டாலும், தொண்டைக் கிழியக் கத்தினாலும், தமக்கு வேண்டியவைகளைக் கேட்டு கர்த்தரிடம் எப்படி ஜெபித்தாலும் அவற்றிற்கு பொருள் இல்லை.
பாவமன்னிப்பை முதலில் பெறுவதே கர்த்தரிடம் ஜெபிப்பதற்கான தகுது என்பதை அவர்க்ள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பல பாவிகளுக்கு வேறு வழிகள் இருப்பதில்லை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் அறிந்து கொள்ளும் வரை பாவிகளாக வாழும் விசுவாச வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ வேண்டியது தான். தேவனால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தமது இருதயங்களால் விசுவாசித்து ஒரேதரமாக மக்கள் சுத்தமாகாத போது, அவர்களுடைய ஜெபங்கள் அனைத்தும் வீனேயாகும். எப்பொழுதெல்லாம் பாவிகல் கர்த்தரிடம் ஜெபிக்க முயற்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களுடைய மனசாட்சி கூக்குரலிடும், “உன் ஜெபங்கள் கர்த்தரிடம் எட்டியது என நினைக்கிறாயா? கனவு காண்பாயாக! அவைகளெல்லாம் வீனே!” ஆகவே “இதைக் கொடும், அதைக் கொடும்” என்று தொடர்ந்து ஜெபித்தாலும், அவர்கள் ஜெபத்திற்கு பயனேதுமில்லை.
“நீ என்னிடத்தில் ஜெபிப்பதற்கு முன்னர், முதலாவது உன் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்.” இதுவே கர்த்தரின் சித்தமாகும். பாவமன்னிப்பு பெறாதவர்கள் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது, அவர்கள் கேட்பதற்கும் மனசாட்சி கூறுவதற்கும் பொருத்தமில்லாததை அவர்கள் அறிந்து கொள்வர். “இதனை எனக்குத் தாரும், அதனையும் கூட எனக்குத் தாரும்” என்று பாவிகள் ஜெபிக்கும் போது தொடர்ந்து கூறினாலும், அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் ஏதும் இல்லை. அதற்கு மேலும், அவர்களுடைய மனசாட்சி அவர்களிடம் கூறும், “இதற்கு வழியேயில்லை! நீ பாவியாயிருப்பதினால், உனது ஜெபங்களுக்கு பதில் கிட்டாது!” அவர்களுடைய் சொந்த மனசாட்சிக்கே அவர்களுடைய விசுவாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத போது, அவர்களால் எப்படி கர்த்தரை வஞ்சிக்க முடியும், அவரால் அவர்களை எப்படி அங்கீகரிக்கப் படமுடியும், மேலும் அவர்களுடைய ஜெபங்களுக்கு எப்படி பதில் கிடைக்கும்? பாவிகள் கர்த்தரிடம் ஜெபிப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். அதற்கு மேலும், அவர்களுடைய சொந்த இருதயம் கூட அவர்கள் ஜெபங்களை நம்பாது.
 
 
விசுவாசத்தின் மூலம் நம் நீதிமான்களாகும்போதே நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கத் தொடங்குகிறது
 
ஆசரிப்புக் கூடார இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றவுடனேயே, முன்பு பாவிகளாயிருந்தவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது. தம்மிருதயங்களின் ஆழத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் குறைபாடுடையவர்களாயிருக்கலாம், ஆனால் விசுவாசத்தின் மூலமாக கர்த்தரிடம் அவர்களால் செல்லலாம், மேலும் தம்முடைய தேவைகளைக் கேட்டு, விசுவாசத்தினால் அவர்கள் தைரியமாக அவரிடம் ஜெபிக்கலாம். கர்த்தருடைய சித்தப்படி, விசுவாசத்தினால் பாவமன்னிப்பு பெற்றவர்கள் அவரிடம் ஜெபிக்கும் போது, அவர்கள் மன உறுதியுடனே ஜெபிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தமது சொந்த சரீரத்திர்காக ஜெபிக்கும் போது, சில வேளைகளில் அதனைப் பொருத்தமில்லாததாக உணருகிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதைக் குறித்தும், மற்ற ஆத்துமாக்களுக்காகவும் நாம் ஜெபிக்கும் போது, நீதிமான்களாகிய நாம் அளவற்ற மகிழ்சியுடையவர்களாயிருக்கிறோம். நற்செய்தியை மாமிசத்தின் எந்த விதக் குறுக்கீடும் இல்லாமல், துரிதமாக பரப்புவதற்காக நாம் ஜெபிக்கும்போது, விசுவாசத்தின் ஜெபம் மூலமாக, நம்முடைய திறமைகளின் எல்லைகளினால் உருவாகும் தடைகளை நம்மால் மேற்கொள்ள முடியும். ஆனால் சில சமயங்களில், விசுவாசத்தினால் அத்தகைய தடைகளை மேற்கொள்ள முடியாத போது நாம் மிகவும் சோர்ந்து போகிறோம். இத்தகைய நேரங்களில், நம்மால் செய்யமுடிந்ததெல்லாம் ஜெபிப்பது மட்டுமே, மேலும் கர்த்தர் பதிலளிப்பார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஜெபிப்பதும் காத்திருப்பதுமே, ஏன் நம் ஜெபங்கள் உடனடியாக பதிலளிக்கப் படவில்லை என பொறுமையின்றி போகக்கூடாது. விசுவாசத்துடன் நாம் ஜெபிக்க வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார், நம்முடைய ஜெபங்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு ஒத்ததாக இருக்கும் போது, சமயம் வருகையில் அவர் அவற்றிற்கு பதிலளிப்பார் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். விசுவாசத்தின் மூலமாக பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ளும் போது, நமது அநேக ஜெபங்களுக்கு பதில் கிடைத்தது என்பதை நன்கு நமது அனுபவத்திலிருந்து அறிந்து கொள்வோம்.
ஆனால் இத்தகைய விசுவாசத்துடன் நீங்கள் வாழ்ந்தீர்களா? அப்படியானால், உங்களால் நிச்சயமாகவே கர்த்தரிடம் ஜெபிக்க முடியும். நாம் நம்மை ஒருமுறை ஆராய்ந்து பார்க்கும் போது, நாமெல்லாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறோம், மேலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, அதன் மூலமாக பாவமன்னிப்பைப் பெறுவதன் மூலமாகவே, நம்மால் ஜெபிப்பதற்கான தகுதியைப் பெறமுடியுமென்பதையும் அறிந்து கொள்கிறோம். மேலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் நம் முழு வாழ்நாட்களிலும் செய்த எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்து விட்டார் என்பதை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றவர்களால் மட்டுமே ஜெபிக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
மறுபடியும் பிறக்காதவர்களின் நடுவே, தம்மைக் குறித்து பெருமைப் பாராட்டும் அநேக மக்கள் இருக்கின்றனர். உங்களைக் குறித்தென்ன? உங்களிடம் பெருமைப் பாராட்டுவதற்கு ஏதேனும் இருக்கிறதா? உங்களுடைய கரங்கள் பலம் வாய்ந்தைவையா? உங்களுடைய கால்கள் பலம் வாய்ந்தைவையா? நம்முடைய சரீரம் எத்தனை உறுதியாயிருக்கிறது என்பது பொருட்டல்ல, அதனால் சாதாரண இருமலின் வைரஸ்ஸிற்குத் தாக்குப் பிடிக்க முடியாது, அவற்றால் சிறிது அதிக அளவு சரீர பலத்தையும் தாக்கு பிடிக்க முடியாது, அவற்றின் உண்மையான பலவீனம் வெளிப்படுகிறது. மனிதர்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? ஒரு கொசுவின் கடியில் மரித்துப் போவோம், அல்லது நடக்கும் போது ஒரு சிறிய கல் தலையில் விழுந்து சுருண்டு விழுந்து மாண்டு போகிறோம். நாம் ஒன்றுமேயில்லாதவர்கள். நம்முடைய பெருமையைக் குலைக்கும் சிறிய ஒரு வாக்கியத்தை யாராவது கூறினால், நாம் குற்றுயிராகும் அளவிற்கு நம் இருதயங்கள் காயப்படுகின்றன. இது அப்படியில்லையா? அப்படித் தான் என்பது வெளிப்படை!
60 வயதைக் கடக்கும் முன்னரேயே எத்தனை மக்கள் மரித்துப் போகின்றனர்? 30 வயதை நெருங்குவதற்கு முன்னரே எண்ணிலடங்காத மக்கள் மரித்துப் போகின்றனர். அத்தகைய பலவீனமான உயிரினங்களாக மனிதர்கள் இருக்கின்றனர். நித்தியமாக மனிதர்களிடம் இருக்கும் பலத்தை எங்கும் காணமுடியாது. இத்தகைய பலவீனமானவர்கள், தம்முடைய இருதயங்களைக் கடினமாக்கிக் கொண்டு, கர்த்தரின் வார்த்தையை இருதயத்தின் அடி ஆழத்தில் விசுவாசிக்கக் கூடாதா? எதிலுமே பெருமைப் பாராட்ட முடியாத, பலம் இருப்பதாக காட்டிக் கொள்ள முடியாத - ஒருவகை உயிரினம் மனிதகுலமாகும்.
மேலும், நாம் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து கொள்ள வேண்டும், நம்முடைய குறைபாடுகளையும் பாவங்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும், இதன் மூலமாக கர்த்தரிடம் ஜெபிப்பதற்கான தகுதியை நாம் பெறமுடியும். கர்த்தர் மீது விசுவாசம் வைக்கவேண்டும். இருதயத்தின் அடி ஆழத்தில், கர்த்தரை பிரியப்படுத்தும் இந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ள, மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும், ஆனால் அதனை விசுவாசிக்காத அநேகர் உள்ளனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர்த்து வேறெந்த நற்செய்தியையாவது விசுவாசித்ததின் மூலம் கர்த்தரிடம் ஜெபிப்பதற்கான உரிமையை நீங்கள் பெற்றீர்களா? இயேசு இப்பூமிக்கு வந்து உங்களுக்காக ஞானஸ்நானம் பெற்று உங்கள் பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டிராவிட்டால், உங்கல் பாவங்கள் துடைக்கப் பட்டிருக்குமா? இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல், உங்கள் இருதயத்தின் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப் பட்டு, அவை கழுவப்பட்டிருக்குமா?
இதற்கான பதில்கள் இல்லை, இல்லை, முற்றிலும் இல்லை என்பதாகும்! யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் இயேசு உலகின் பாவங்களைத் தனது தோல்களில் சுமந்ததினாலே, அவர் சிலுவையில் அறையப் பட்டு, எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை தன் சொந்த இரத்தத்தை சிந்தி அனுபவித்தார். அப்படியானால் இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவையும் இன்றி நீங்கள் இரட்சிக்கப் பட்டீர்களா? அப்படி இல்லை! நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொள்ளவும், அவற்றைக் கழுவவுமே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். நம்முடைய பாவங்களுக்கு ஆக்கினையாகவே அவர் சிலுவையில் அறையப் பட்டார். இந்த சத்தியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினாலேயே நாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவமன்னிப்பைப் பெற்றோம்.
ஆகவே, எந்நேரத்திலும் நாம் கர்த்தரிடம் சென்று தைரியமாக அறிக்கையிடலாம், “தேவனே, நான் குறைபாடுடையவன், ஆனால் நீர் என்னை உமது நீரினாலும் இரத்தத்தினாலும் இரட்சித்ததால், இப்போது நான் பாவமில்லாதவனாக இருக்கிறேன். நீர் இந்த உலகிற்கு வந்தீர், ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் ஒரேதரமாக எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டீர், இந்த உலகத்தின் பாவங்களை எல்லாம் சிலுவைக்கு எடுத்துச் சென்றீர், அவற்றிற்காக தண்டிக்கப் பட்டீர், மேலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தீர். தேவனே, நீர் அப்படிச் செய்ததினால், நீர் உண்மையாகவே எனது இரட்சிப்பின் கர்த்தரானீர். இந்த சத்தியத்தின் மீதுள்ள எனது விசுவாசத்தால் நான் உம்மை விசுவாசிக்கிறேன்.” வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் விசுவாசத்துடனிருந்தால், நம்மிடம் குறைபாடுகள் இருந்தாலும், நம்மால் எப்போதுமே கர்த்தரிடம் ஜெபிக்க முடியும். அவருடைய ராஜ்யம் பரவுவதற்காக நாம் ஜெபிக்கலாம், நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாம் ஜெபிக்கலாம், பாவ மன்னிப்பை இன்னமும் பெறாத மற்ற ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிக்கலாம்.
மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் போது மட்டுமே அவர்களால் வானத்திற்கு கீழே எந்த விதமான வெட்கமும் இன்றி வாழமுடியும். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைக்காமல், சில மக்கள் வெற்றிடத்தை வேறெதனாலோ நிரப்புவதற்கு முயற்சி செய்வதுண்டு - இத்தகைய முயற்சிகளுக்கு எத்தகைய பலனும் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். இதனால் தான் அவர்களின் இருதயம் சஞ்சலம் அடைந்து நொந்து போய் இருக்கிறது, அவர்களுக்குத் தம்முடைய வாழ்க்கைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாயிருக்கிறது. உண்மையோ பொய்யோ, எதையாவது ஒன்றை விசுவாசிப்பதையே மக்கள் விரும்புகின்றனர். உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்துடனே தேவனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்கவில்லையா என்பதை உங்களுக்கு நீங்களே சோதித்து அறியுங்கள். தேவன் உங்கள் பாவங்களை நீரினாலும் ஆவியினாலும் துடைத்தார் - நீங்கள் இதனை விசுவாசித்தால், உங்கள் இருதயங்களில் இன்னமும் பாவங்கள் இருக்குமா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கல் இருதயத்தின் ஆழத்திலும் முழு ஆத்துமாவோடும் விசுவாசித்தால், அப்போது நிச்சயமாக பாவம் இருக்காது. இந்த சத்தியத்தை முழு இருதயத்துடனும் விசுவாசித்து, உங்கள் பாவங்களுக்கான உண்மையான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தினால கர்த்தர் நமக்கு பாவமன்னிப்பை வழங்கியதால், இந்த நித்திய பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொண்டோம். இதனால், இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் சொந்தப் பிள்ளைகளானார்கள், மேலும் அவருக்கு முன்னால் செல்வதை ஏதுவாக்கும் கிருபையினாலும் அவர்கள் தரிப்பிக்கப் பட்டனர். ஆகவே, நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும், ஒவ்வொருவரின் குறைபாடுகளையும் புரிந்து கொள்ளவேண்டும், கர்த்தரின் செயல்களை முடிவுவரை செய்யவேண்டும், அதன் பிறகு அவருக்கு முன்னால் சென்று அவருடைய சன்னிதானத்தில் நிற்க வேண்டும்.
பாவமன்னிப்பைப் பெற்றவர்கள் எல்லாப் பாவிகளையும் நேசிப்பார்கள். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை எல்லாப் பாவங்களும் அறிந்து மறுபடியும் பிறக்க வேண்டுமென நீதிமான்களின் இருதயங்கள் விரும்புகின்றன. ஆனால் குறிப்பிட்ட சில மக்களால் மற்ற மக்களை நேசிக்க முடியாது. இவர்களே தொடர்ந்து பாவிகளாயிருப்பவர்கள் - இந்தக் கிறிஸ்தவர்கள் தம் மனசாட்சியையே வஞ்சித்து, தமக்குள் பாவங்கள் இருந்தாலும், தாம் கர்த்தரை விசுவாசிப்பதாக தமக்குள் எண்ணி தம்மைத் தாமே ஏமாற்றுகிறார்கள்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமும் பாவமன்னிப்பை நமது இருதயங்களுக்குள் பெறுவதின் மூலமும், நம்முடைய விசுவாச மனசாட்சியை நாம் பாதுகாக்க வேண்டும்.நம் மனசாட்சியின் விசுவாசத்தைப் பாதுகாத்து, நம் விசுவாசத்தை இழக்காமல் முடிவு வரை நாம் ஓடுவோமாக. ஆவிக்குரிய வகையில் ஒருவர் கஷ்டத்திற்குள் சென்று கொண்டிருந்தால், ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒருவரை ஒருவர் தாங்குங்கள். எது நடந்தாலும் கூட நீதிமான் ஆலயத்தை விட்டு வெளியேறக் கூடாது. நீதிமான் ஆலயத்தை விட்டுச் சென்றால், அவர்கள் உடனடியாக மரித்துப் போவர். கர்த்தருடைய ஆலயத்தை விட்டுச் செல்வது சொந்த குடும்பத்தை விட்டுப் போவதைப் போன்றது. உங்கள் குடும்பத்தை இழப்பது அடைக்கலத்தை இழப்பதாகும், ஆகவே உங்கள் இருதயங்களுக்கு இளைப்பாறுதலோ அல்லது சுகமோ எங்கும் கிடைக்காது, முடிவிலே நீங்கள் மரித்துப் போவீர்கள்.
கர்த்தருடைய ஆடுகள் உண்டு, களைப்பாறும், பாதுகாப்பாக இருக்கும் இடம் அவருடைய ஆலயமாகும். மேலும், ஆடுகள் தமது பலத்தை இழந்து அதிகமாக சோர்ந்து போகையில், வார்த்தையைக் கூறுவதின் மூலமாக அவர்களின் இருதயங்களை திடப்படுத்த முடியும். வார்த்தையை உங்களிருதயத்தில் விசுவாசிப்பதின் மூலமாக ஏற்றுக் கொள்ளும் போது, உங்களினுள்ளே உள்ள பரிசுத்த ஆவியானவர் மகிழ்ச்சியடைவார், உங்கள் இருதயங்கலும் திடப்படும், மேலும், இறுதியாக, நித்திய ஜீவனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
நீதிமான்களாகிய நாமனைவரும் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். ஜெபிப்பதற்கு நம்மைத் தகுதியாக்கியதற்காகவும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமக்குத் தந்தமைக்காகவும் தேவனுக்கு நாம் நன்றி கூறுகிறோம். அல்லேலூயா! அவரை விசுவாசிக்கவும், விசுவாசத்தினால் நாம் வாழவும் நம்மை ஏதுவாக்க உயிரோடுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.