(லேவியராகமம் 16:1-34)
“ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்த்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும். அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன். பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங் குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி; பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து, தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன் பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் ன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன் அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன். ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு, பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்தஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள். அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.”
பாவநிவர்த்தி நாளில் இஸ்ரவேல் மக்களுக்காக பலி காணிக்கையைச் செலுத்தியது தலைமை ஆசாரியனேயாகும். இஸ்ரவேலரின் நாட்காட்டியின் ஏழாம் மாதம் பத்தாம் திகதியில் இந்த பலி காணிக்கை கொடுக்கப் பட்டது. இந்த நாளிலே தலைமை ஆசாரியனாகிய ஆரோன் இஸ்ரவேல் மக்களின் சார்பாக பலிகாணிக்கையைக் கொடுத்தான், அவர்களுடைய மீறுதல்களெல்லாம் இந்த பலி பலிகாணிக்கையின் மீது சுமத்தப் பட்டு அவர்கள் சுத்திகரிக்கப் பட்டனர். ஆகவே பாவநிவர்த்தி நாளானது, இஸ்ரவேல் மக்களின் மிகப் பெரும் பண்டிகை நாளாயிற்று.
மற்ற காணிக்கைகளைப் போலவே, பாவநிவர்த்தி நாளின் காணிக்கைகளையும் மூன்று தரங்களாக பிரிக்கப் பட்டது: களங்கமில்லாத பலி மிருகங்கள், கைவைத்தல், மேலும் பலி மிருகங்களின் இரத்தம் சிந்துதல். இந்த முறைப்படி கொடுக்கப் பட்ட பலி காணிக்கையை கர்த்தர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். மற்ற பலி காணிக்கைகளுக்கும் இந்த பலி காணிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், தலைமை ஆசாரியன் பலி காணிக்கையின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல வேண்டியிருந்தது. தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலி காணிக்கை செலுத்திய பிறகு தலைமை ஆசாரியனாகிய ஆரோன் இஸ்ரவேல் மக்களுக்காக இரண்டு ஆடுகளைக் பலி காணிக்கையாக்கினான். முதலாவது, அவற்றில் ஒன்றை தேவனாகிய கர்த்தருக்கு அளித்தான், ஒரு காளையை எப்படி பாவ பலி காணிக்கையாக கொடுத்தானோ அப்படியே இதனையும் கொடுத்தான். இரண்டாவது ஆட்டை போக்காடாக பலி காணிக்கையாக்கினான். இஸ்ரவேல் மக்களுக்கு முன்னதாக தனது கைகளை அந்த ஆட்டின் தலையின் மீது வைத்து, அவர்களின் எல்லாப் பாவங்களையும் அந்த போக்காட்டின் மீது செலுத்தினான், அவர்களுடைய பாவங்களையெல்லாம் சுமந்த அந்த ஆடானாது பொருத்தமான ஒருவனால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டது.
பாவநிவாரண நாளின் பலி காணிக்கையின் மூலமாக இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களும் சுத்திகரிக்கப் பட்டன
பாவநிவாரண நாளில், தலைமை ஆசாரியன், இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக நின்று, பலி காணிக்கையின் தலையின் மீது தன் கைகளை வைத்து அவர்களின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது செலுத்தினான். அவன் இரண்டு ஆடுகளை எடுத்து வந்தான், அவற்றிற்காக சீட்டையும் போட்டான்௮அவற்றில் ஒன்று கர்த்தருக்கானது, மற்றது இஸ்ரவேல் மக்களுக்கானது.
இங்கே கைவைத்தல் என்பது பலி காணிக்கையின் தலையின் மீது கைவைப்பதின் மூலம் எல்லாப் பாவங்களையும் சுமத்துதல் என்பதாகும். இந்த கைவைத்தலானது பாவங்களைக் கழுவுவதற்கு கர்த்தரால் ஏற்படுத்தப் பட்டது, மேலும் புதிய ஏற்பாட்டின் காலத்திலும் கூட, மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவுவதற்கான இதே கைவைக்கும் முறை நடைமுறைப் படுத்தப் பட்டது. தலைமை ஆசாரியனின் சொந்தப் பாவங்களையும், அவன் குடும்பத்தாரின் சொந்தப் பாவங்களையும், இஸ்ரவேல் மக்களின் ஒரு வருடப் பாவங்களையும் நிவர்த்திக்க, அவன் தன் கைகளை அந்த ஆட்டின் தலைமீது கைவைத்து அதன் மீது அவைகளைச் செலுத்துவது அவசியமானதாயிற்று. இஸ்ரவேல் மக்களின் பாவங்களையெல்லாம் தலைமை ஆசாரியன் பலி காணிக்கையின் தலைமீது தன் கைகளை வைத்து அதன் மீது சுமத்தியதால், இஸ்ரவேல் மக்களின் ஒருவருடத்திற்கான பாவங்கள் யாவும் துடைக்கப் பட்டன. இதனைப் போல, பாவநிவாரண நாளின் பலி காணிக்கை மூலமாக இஸ்ரவேல் மக்கள் தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் தம்மை இரட்சித்த கர்த்தருக்கு நன்றி கூறினர்.
பாவமுள்ள அனைவரும் ஆக்கினை அடைவதை தவிர்க்க முடியாது. மக்களின் பாவங்களுக்காக ஒரு பலி காணிக்கை ஆக்கினை அடைவதற்கு, அது முதலில் அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன் தலையில் தலைமை ஆசாரியன் கைவைக்காமல் அதனை பலி காணிக்கையாக செலுத்தினால் அது கர்த்தருக்கு முன்னதாக தேவ தூஷனம் செய்ததாகும், ஆகவே அப்படிச் செய்யக் கூடாது.
பாவிகளாக மாறிய அனைத்து மனிதர்களையும் இரட்சிக்க, கைவைக்கும் முறையின் மூலம் நிறைவேறிய இரட்சிப்பின் திட்டத்தை கர்த்தர் ஏற்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் துடைக்க, தலைமை ஆசாரியனை கர்த்தர் நியமித்து தனது மக்களின் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் தலையின் மீது கைவைத்து அவர்களின் பிரதிநிதியாக நின்று அதன் மீது சுமத்தும் படிச் செய்தார். மேலும், ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு பலி காணிக்கையாக்கப் பட்ட அனைத்து மிருகங்களும் கைவைத்தலின் மூலம் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் தம்மீது சுமந்து, தம் இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்கு பதிலாக ஆக்கினைக்குள்ளாகின.
கர்த்தரின் நீதியையும் அவரின் நேசத்தையும் முழுமையாக நிறைவேற்ற, வருடத்திற்கு ஒருமுறை பலி மிருகத்தின் தலை மீது தலைமை ஆசாரியனின் கைகளை வைத்து, அதன் கழுத்தை அறுத்து, இஸ்ரவேல் மக்களின் இடத்திலிருந்து, தன் இரத்தத்தைச் சிந்த வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த பலி காணிக்கையின் மூலம் இஸ்ரவேல் மக்களின் ஒருவருடத்திற்கான எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட கர்த்தர் விரும்பினார். கர்த்தருடைய இரக்கத்தையும் அவருடைய நீதியையும் திருப்திப் படுத்திய கர்த்தரின் அன்பின் சட்டம் இதுவேயாகும். கர்த்தர் நீதிபரராயிருப்பதினாலே, அவருடைய நீதியின் சட்டப் படி தன் மக்களின் பாவங்களை ஒரேதரமாக துடைத்து விடுவதற்கு, ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவை கர்த்தர் ஆயத்தப் படுத்தினார், கைவைத்தலின் மூலம் பாவங்களை அவர் சுமக்குமாறு செய்து, சிலுவையிலே அவரை இரத்தம் சிந்தச் செய்தார்.
நித்திய பலி காணிக்கையாக தம்மை ஒப்புவித்த இயேசு, இந்த முறையின் மூலமாக எல்லோரினதும் பாவங்களையும் ஒரேதரமாக சுமந்து, ஒரு முறை இரத்தம் சிந்தி, பாவங்களிலிருந்து அவர்களின் இரட்சிப்பை இதன் மூலம் நிறைவு செய்தார். மேலும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்துடன் கர்த்தருக்கு முன்னதாக வரவேண்டும். இந்த விசுவாசத்துடனேயே ஒரேதரமாக எல்லாப் பாவங்களையும் நிவர்த்திக்க முடியும். ஆகவே, ஒரேதரமாக பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்துடன் கர்த்தரிடம் வரவேண்டும்.
கைவைத்தல் என்பதின் பொருள்
கைவைத்தல் என்பதின் பொருளானது, “சுமத்துதல், இடம் மாற்றுதல், அல்லது அடக்கம் செய்தல்” என்பதாகும் (லேவியராகமம் 1:3-4). எப்போதெல்லாம் இஸ்ரவேல் மக்கள் அறியாமல் பாவம் செய்து விட்டு, பின்னால் அதனைக் குறித்து உணரும் போது, அவன் கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியைக் கொடுக்க வேண்டியிருந்தது (லேவியராகமம் 4:27-29). அவன் முதலில் களங்கமில்லாத பலி காணிக்கை மிருகத்தை எடுத்து வர வேண்டியதாயிருந்தது, அதன் பிறகு தன் கைகளை அதன் தலைமீது வைப்பதின் மூலம் அவனுடைய பாவங்களை அதன் மீது சுமத்தவேண்டும். அதன் பிறகு அவன் அதன் கழுத்தை அறுத்து, அதன் இரத்தத்தைப் பிடித்து, அந்த இரத்தத்தை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும் (லேவியராகமம் 4:27-28). அதன் பிறகு ஆசாரியன் அதன் இரத்தத்தில் சிறிதை தனது கைகளால் எடுத்து, சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் ஊற்றி, மீதியிருக்கும் இரத்தத்தை பீடத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும். அவன் அதன் கொழுப்பை பீடத்தில் எரிக்க வேண்டும், இந்த பலி காணிக்கையின் கொழுப்பை எரித்த போது உண்டான வாசனையை கர்த்தர் சுகந்த வாசனையாக கருதினார்.
இஸ்ரவேல் மக்களின் பாவங்களைத் துடைப்பதற்கு, பாவநிவாரண நாளின் பலி காணிக்கையை கர்த்தர் நியமித்தார், இந்நாளின் போது, பலி காணிக்கை மிருகத்தின் மீது கைகள் வைக்கப் பட்டு, அதன் இரத்தம் சிந்தப் பட்டது. இந்த காரியத்திலும் கூட, கர்த்தரால் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும், பலி காணிக்கை மிருகத்தின் தலையின் மீது கைவைக்காமல் கழுவ முடியவில்லை. இதைப் போலவே, பழைய ஏற்பாட்டின் பாவநிவாரண நாளின் போது கொடுக்கப் பட்ட பலி காணிக்கையை, புதிய ஏற்பாட்டு கால இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் இரத்தமும் ஒத்திருக்கின்றன.
பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை எப்படி ஒரு களங்கமில்லாத மிருகமாக இருக்க வேண்டுமோ அதைப் போலவே, புதிய ஏற்பாட்டின் காலத்தில், இயேசுவானவர் களங்கமில்லாத தேவாட்டுக் குட்டியாக வந்தார், எல்லாப் பாவிகளையும் அவர்களின் மீறுதல்களிலிருந்து கழுவ அவர் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் இரத்தம் சிந்தினார். பழைய ஏற்பாட்டில் பலி காணிக்கையானது பாவிகளின் பாவங்களை கைவைத்தலின் மூலம் ஏற்றுக் கொள்ளவேண்டியிருப்பதைப் போன்று, யோர்தான் நதியில், யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கையில் அவர் தலையில் கைவைத்தபோது உலகின் எல்லாப் பாவங்களும் இயேசுவின் மீது சுமத்தப் பட்டன (மத்தேயு 3:15). பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கைகளும், புதிய ஏற்பாட்டின் இயேசுவும் ஒரேவிதமாக கைவைக்கப் பட்டு மரிக்கும் படி இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. கைவைக்கப் படுதலும், இரத்தம் சிந்துதலும், புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் ஒரே விதமாக பாவிகளுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தது.
மனிதகுலத்தின் பாவங்களை கர்த்தரின் ஆக்கினை விடாது பின்தொடர்கிறது
கர்த்தருக்கு முன்னதாக நாம் பாவிகளாயிருந்தோம், நம்முடைய பாவங்களுக்காக மரிப்பதை நம்மால் தவிர்க்க முடியாதிருந்தது, பாவங்களை ஏற்றுக் கொண்ட அந்த பலி காணிக்கையானது மரிக்கவேண்டியதைப் போன்றது இதுவாகும். இந்த பலி காணிக்கை துண்டு துண்டாக வெட்டப் பட்டு, சர்வாங்க தகன பலிபீடத்தின் நெருப்பினால் எரிக்கப்படுவதை நாம் கற்பனை செய்து பார்க்கையில், கீழ்க்கண்டவற்றை நம்மால் உணர்ந்து கொள்ளலாம், கர்த்தருக்கு முன்னதாக நாமும் கூட அழிக்கப்பட வேண்டியவர்களே, ஆயினும் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும் தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும் தேவன் நம்மை இரட்சித்தார். ஆகவே, இன்னமும் உண்மையாகவே மறுபடியும் பிறக்காதவர்கள் தம்மை பாவிகள் என்றும் கர்த்தருக்கு முன்னதாக தாம் தம் பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஏற்றுக் கொண்டு, தேவனுடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் தம்முடைய இரட்சிப்பாக உடனடியாக விசுவாசிக்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக நம்மைத் தண்டிப்பதற்கு பதிலாக நம்மை அவற்றில் இருந்து இரட்சிக்க, கர்த்தர் களங்கமில்லாத இரட்சிப்பின் காணிக்கையை ஆயத்தம் செய்து, நம்முடைய எல்லாப் பாவங்களையும் இந்த நித்தியமான பலிகாணிக்கையின் மீது சுமத்தி, அவரை இரத்தம் சிந்தச் செய்து, இதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக நிவர்த்தி செய்தார் (லேவியராகமம் 16:1-34, ரோமர் 8:3-4, எபிரெயர் 10:10-12). இன்னமும் உங்களுடைய இருதயத்தில் பாவங்கள் இருக்கிறதா? அப்படியானால், முதலாவதாக நீங்கள் கர்த்தருடைய பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாக அவரிடம் நீங்கள் ஒப்புக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் மூலமாக, கர்த்தர் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார் என்றும் இதனை அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே திட்டமிட்டார் என்றும் விசுவாசிக்க வேண்டும்.
சரியான கிரயத்தைச் செலுத்தாமல் பாவத்தை நிவர்த்தி செய்ய முடியாது. இதனால் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு பலி காணிக்கை முறையக் கொடுத்தார். இந்த பலி காணிக்கை முறையில், கைவைத்தலையும், இரத்தத்தைச் சிந்துதலையும் கூடவே கொண்டிருக்கும் பலி காணிக்கையே விசுவாசத்தின் உண்மையான காணிக்கையாகும், மேலும் இதனால் மட்டுமே இஸ்ரவேலர்களின் பாவங்களைக் கழுவ முடிந்தது.
வேதவசனங்களில் எழுதப்பட்டுள்ள கைவைத்தலையும், இரத்தத்தைச் சிந்துதலையும் கூடவே கொண்டிருக்கும் பலி காணிக்கையே கர்த்தருக்கு நாம் கொடுக்கவேண்டும். தன்னுடைய ஞானஸ்நானத்தினால் நம் எல்லாப் பாவங்களையும் தேவன் ஏற்றுக் கொண்டதாலேயே, அவர் இரத்தம் சிந்தவேண்டியதிருந்தது, மேலும் நம்முடைய இடத்திலிருந்து நமக்காக பாவத்திற்கான ஆக்கினையைப் பெற்றார், இதன் மூலமாக, நமது இந்தப் பாவங்களை துடைத்தார் (மத்தேயு 3:15; யோவான் 1:29; ஏசாயா 53:1-7). வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்கையிலும், நம்முடைய பலி காணிக்கையாகிய இயேசுவின் மீது நம் கைகளை வைக்கையிலும், இதன் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் அவர்மீது சுமத்துவதினால், நம் எல்லாப் பாவங்களையும் தேவன் தன்மீது ஏற்றுக் கொண்டு, நம்மிடத்தில் இருந்து அதற்கான ஆக்கினையைப் பெற்றார் என்பதையும் விசுவாசித்து பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ளமுடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, நம்முடைய பலி காணிக்கையாகிய தேவனின் மீது நம் எல்லாப் பாவங்களையும் சுமத்த முடியும், மேலும் இதன் மூலம் அவருடனே கூட மரித்து, அவருடனே கூட வாழவும் முடியும் (ரோமர் 6:1-11; கலாத்தியர் 3:27).
பாவநிவாரண நாளின் பலி காணிக்கையின் மூலமாக சில பாடங்களை நாம் கற்க வேண்டும், முதலாவது, நம் பாவங்களையும், அவற்றிற்கானத் தண்டனையையும் அறிந்து கொள்ள வேண்டும், அதன் பிறகு கர்த்தர் பெற்றுக் கொள்ள விரும்பும் விசுவாச பலி காணிக்கையை நாம் கொடுக்க வேண்டும்௮அதாவது, தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் நம் இரட்சிப்பை இயேசு நிறைவேற்றினார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசித்து அவரின் தலையில் நம் கைகளை வைக்கவேண்டும். ஏன்? ஏனெனில், விசுவாசத்தினால் பலி காணிக்கையின் மீது நம் கைகளை வைத்து அதன் இரத்தத்தைச் சிந்தும் போது மட்டுமே, நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் படமுடியும்.
இதைப் போல, கர்த்தருக்கு முன்னதாக தன் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் அவனும்/அவளும் உயிரின் மூலமாக கிரயம் செலுத்த வேண்டும், ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணம் ஆகும். ஏழையாயிருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஒருவனுடைய பாவங்களுக்கான கிரயமாகவும், ஒரு ஜீவனின் பாவநிவர்த்தியாகவும், ஒரு பலி காணிக்கை இருக்கவேண்டும். இப்படி நடைபெறாத வகையில், விசுவாசத்தினால் யாராலும் பாவ மன்னிப்பைப் பெறமுடியாது.
பாவநிவாரண நாளில் பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை
லேவியராகமம் 16:6-10 ஐ வாசிப்போமாக: “ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி, போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி.”
இஸ்ரவேல் மக்கள் விசுவாசத்தின் மூலமாக பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதை ஏதுவாக்கும் படி, தலைமை ஆசாரியன், அவர்களின் சார்பாக, கைவைத்தலும் இரத்தம் சிந்துதலும் உள்ள பலி காணிக்கையை அவன் கொடுத்தான். அப்படியானால் இன்று உள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் எத்தகையதாயிருக்கிறது? அவர்கள் தமது பாவங்களை சுமத்தாமல் பாவமன்னிப்பை பெற முயற்சு செய்து பலி காணிக்கை கொடுப்பவர்களின் விசுவாசம் அடிப்படையில்லாததும், கற்பனையானதும் இல்லையா? கைவைத்ததின் மூலம் இயேசு கிறிஸ்துவின் மீது பாவங்களை சுமத்திய விசுவாசம் உங்கள் விசுவாசமாக இல்லாவிட்டால், உங்களுக்கு பிரச்சினைக் காத்திருகிறது. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசிக்காத விசுவாசம் உங்களுடையதாக இருந்தால், அது ஒரு உண்மை விசுவாசமாக இருக்க முடியாது.
கர்த்தருக்கு முன்னால் அவருடைய சட்டத்தை கடைப்பிடிக்க முடியாதவர்களாய் கடந்த வருடம் முழுவதும் எல்லா வகையான பாவங்களையும் செய்தோம். ஆகவே நாம் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தோமானால், நம்முடைய சார்பாக தலைமை ஆசாரியன் செய்த பாவபலி காணிக்கையை விசுவாசித்து நம் பாவ மன்னிப்பைப் பெறவேண்டியதிருக்கும். கர்த்தருக்கு விசுவாசத்தின் பலி காணிக்கையைக் கொடுக்க, முதலாவது, நம்முடைய பாவங்களுக்காக நாம் அழிக்கப் படவேண்டியவர்கள் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும், அதன் பிறகு, கர்த்தர் நமக்காக ஏற்படுத்திய பலி காணிக்கையின் மீது கைவைத்து எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தியதையும், அந்த பலி காணிக்கை சிந்திய இரத்தத்தையும் விசுவாசிக்க வேண்டும்.
பலி காணிக்கையின் மீது கைவைத்தலுக்கும் அதன் இரத்தம் சிந்தலுக்கும் வல்லமை இருப்பதால், கர்த்தர் ஏற்படுத்திய பலி காணிக்கையின் முறைப்படி தலைமை ஆசாரியன் கொடுத்த இந்த காணிக்கையின் மூலமாக பழைய ஏற்பாட்டு மக்களால் பாவ மன்னிப்பைப் பெற முடிந்தது. பலி காணிக்கையின் மீது தனது கரங்களை வைத்ததின் மூலம் அவன் தனது மக்கள் கடந்த ஒரு வருடங்களாக செய்த எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தினான், பிறகு அதன் கழுத்தை அறுத்து இரத்தத்தை எடுத்து, கிருபாசனத்திற்கு முன்னதாக இந்த இரத்தத்தை மூன்று முறையும், அதற்கு கிழக்குப் பக்கமாக ஏழு முறையும் தெளித்தான். இப்படிச் செய்ததினால், ஒவ்வொரு வருடமும் கர்த்தருக்கு தான் கொடுக்க வேன்டிய காணிக்கைகளை அவன் நிறுத்தவில்லை. இப்படியாகத் தான், அக்காலத்து இஸ்ரவேல் மக்களால் நிறைவான பாவமன்னிப்பைப் பெறமுடிந்தது.
இதைப் போல, தலைமை ஆசாரியன் கொடுத்த பலி காணிக்கையின் மூலமாக, தம்முடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டன என இஸ்ரவேல் மக்கள் விசுவாசித்து தமது இருதயங்களில் நிச்சயப் படுத்திக் கொண்டனர். பழைய ஏற்பாட்டின் பாவநிவாரண நாளின் பலி காணிக்கை நமக்கு எதனைக் கூறுகிறது என்றால், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக் கொண்டார் எனவும், இயேசு கிறிஸ்து நமது இரட்சகராக விசுவாசித்து விசுவாசத்தினால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதேயாகும். தம்முடைய பாவங்களினால் அலைக்கழிக்கப் பட்டு தமது இருதயங்களில் துன்புறுபவர்களின் ஆத்துமாக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக நித்திய பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிந்து கொண்டு, இதனை அவர்கள் தம்மிருதயங்களில் விசுவாசிக்க வேண்டும். இதைப் போல, முன்னதாகவே எல்லாப் பாவங்களுக்குமான பாவமன்னிப்பிற்கான பலி காணிக்கையானது கர்த்தரால் ஏற்படுத்தப் பட்டது, மேலும் இந்த இரட்சிப்பின் வாக்குத்தத்தமானது ஆசரிப்புக் கூடாரத்தில் உபயோகப் படுத்தப் பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்டது.
பாவநிவாரண நாளின் பலி காணிக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் நிறைவேற்றப் பட்டது
பாவநிவாரண நாளில், இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் பொறுப்பேற்றுக் கொள்ளும் விதமாக, இஸ்ரவேலர்களின் முன்னதாக, பலி காணிக்கையின் தலையின் மீது தலைமை ஆசாரியன் தன் கைகளை வைத்தான் (லேவியராகமம் 16:1-23). அவர்களுடைய சார்பாக அவர்களின் பாவங்களைச் சுமத்த பலி காணிக்கையின் தலையின் மீது தன் கைகளை வைப்பது அவனுக்கு மிகவும் அவசியமானதாயிருந்தது. இஸ்ரவேல் மக்களுக்காக தலைமை ஆசாரியனாகிய ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்தினுள்ளே பாவநிவாரண நாளின் பலி காணிக்கையைக் கொடுத்தபோது, யாராலும் ஆசரிப்புக் கூடாரத்தினுள்ளே நுழைய முடியாததாயிருந்தது. அது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும், ஏனெனில் பாவநிவாரண நாளைத் தவிர மற்ற நாட்களில் பல்வேறு ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருப்பர்.
தலைமை ஆசாரியன் தன்னுடைய கைகளை பலி காணிக்கையின் தலையின் மீது வைப்பதின் மூலமாக இஸ்ரவேல் மக்களின் பாவங்களை எல்லாம் அதன் மீது சுமத்தினான், அதன் பிறகு இந்த பலி காணிக்கையின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்துச் சென்றான், மேலும் தனது விரல்களினால் அதன் கிருபாசனத்தின் மீதும், கிழக்குப் பக்கத்திலும் தெளித்தான்; மேலும், கிருபாசனத்திற்கு முன்னதாக ஏழு முறைத் தெளித்தான் (லேவியராகமம் 16:14). இந்நேரத்தில், தலைமை ஆசாரியனின் மேலங்கியின் பலி ஓரங்களில் இணைக்கப் பட்டிருந்த பொன் மணிகள் ஒலிக்கலாயின, கிருபாசனத்திற்கு முன்னதாக அவன் ஒவ்வொரு முறையும் இரத்தத்தை தெளிக்கும் போதும், அப் பொன் மணிகள் ஒலித்தன, ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே குழுமியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கும் இந்த மணியோசைக் கேட்டது. இந்த மணி ஓசையை இஸ்ரவேல் மக்கள் கேட்டபோது, தலைமை ஆசாரியன் தம் சார்பாக கர்த்தருக்கு பலி காணிக்கையைக் கொடுப்பதை அறிந்து கொண்டனர். ஏழு முறை மணி ஓசைக் ஒலிப்பதைக் கேட்டபோது, அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர், ஏனெனில் இப்போது பாவநிவாரண நாளின் பலி காணிக்கை கொடுக்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் அறிவர், இது அவர்களின் ஒரு வருட பாவங்கள் யாவும் மன்னிக்கப் பட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியது.
இதன் பிறகு, தலைமை ஆசாரியனாகிய ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து, அங்கே இருக்கும் மற்ற ஆட்டை இன்னொரு பலி காணிக்கையாக எடுத்து, பாவநிவாரண நாளின் பலி காணிக்கையாக இஸ்ரவேல் மக்களுக்கு முன்னதாக கொடுத்தான். பாவநிவாரண நாளின் போது வேறெதையும் செய்யக்கூடாது என கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார் (லேவியராகமம் 16:20-21, 29). இந்த பலி காணிக்கையைக் காண்பதற்காக ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் இஸ்ரவேல் மக்கள் சூழ்ந்திருக்கையில், தலைமை ஆசாரியன் தனது கைகளை பலி காணிக்கையான ஆட்டின் தலைமீது தன் கைகளை வைத்து தனது கடமையை நிறைவேற்றியவனாக, பொருத்தமான ஒருவனின் கரங்களில் அதனைக் கொடுத்து வனாந்தரத்திற்கு அனுப்பி வைத்தான்.
பாவநிவாரண நாளில் தலைமை ஆசாரியன் ஆட்டை இஸ்ரவேல் மக்களின் முன்னதாக எடுத்து வந்து, தன் கைகளை அதன் தலை மீது வைத்து, இஸ்ரவேலின் பிள்ளைகளின் மீறுதல்களையும் அக்கிரமங்களையும் அறிக்கைச் செய்து, அவற்றை அதன் மீது சுமத்தினான். “தேவனே, கடந்த ஒரு வருடமாக இஸ்ரவேல் மக்கள் செய்த பாவங்களை எல்லாம் அறிக்கைச் செய்கிறேன். எல்லாச் சட்டங்களையும் முழுமையாக கடைப் பிடிக்கத் தவறினோம், உமக்கு விரோதமாகவும் மற்றவர்களுக்கு விரோதமாகவும் பல பாவங்களைச் செய்தோம், நீர் கட்டளையிட்டபடி வாழத் தவறினோம். கடந்த வருடத்தில் உம்முடைய பல கட்டளைகளை உடைத்தோம். நாம் பொய் கூறினோம். நாம் கொலை செய்தோம். நாம் விபசாரம் செய்தோம். நாம் திருடினோம்.” இதைப் போல, தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கை ஆட்டின் தலைமீது தன் கைகளை வைத்து அதன் மீது சுமத்தி, பொருத்தமான ஒருவனின் கைகளில் அதனைக் கொடுத்து வனாந்தரத்திற்கு அனுப்பினான்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்றிருப்பதினாலே, பலி காணிக்கையான ஆடு இஸ்ரவேல் மக்களின் பாவங்களை ஏற்றுக் கொண்ட பிறகு வாழுவதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. வனாந்தரத்திலே கைவிடப் பட்ட ஆடு, இஸ்ரவேல் மக்களின் எல்லா அக்கிரமங்களையும், களங்கங்களையும், மீறுதல்களையும் தன்மீது சுமந்து கொண்டிருப்பதால், வனாந்தரத்தில் பாடுகளை அனுபவித்து மரிக்க வேண்டியிருந்தது. இப்போது, இஸ்ரவேல் மக்கள் அனைவரும் ஆசரிப்புக் கூடார விருந்தை உண்ணத் தொடங்கினர் (லேவியராகமம் 23:34) ஏனெனில், கடந்த வருடம் முழுவதும் அவர்களைக் கட்டி வைத்திருந்த பாவங்களை பாவநிவாரண நாளின் பலி காணிக்கையின் மூலமாக அழித்து விட்டிருந்தனர்.
கைவைத்தல் என்பதின் மூலமாக எல்லா மக்களினதும் பாவங்கள் பலி காணிக்கையின் மீது சுமத்தப் பட்டன. பலி காணிக்கை மிருகத்தின் மீது தலைமை ஆசாரியன் தன் கைகளை வைத்தபோது, கடந்த ஒரு வருடமாக இஸ்ரவேல் மக்கள் அனைவரும் சேர்த்த எல்லாப் பாவங்களும் அதன் மீது ஒரே தரமாக சுமத்தப் பட்டது. ஒவ்வொருத் தனிப்பட்ட இஸ்ரவேல் மனிதனின் பாவங்களும், தலைமை ஆசாரியனின் கைவைத்தலின் மூலமாக பலி காணிக்கையின் மீது சுமத்தப்பட்டது.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களின் எல்லா மீறுதல்களையும் தலைமை ஆசாரியன் கைவைப்பதின் மூலம் சுமத்தியதைப் போல, இக்கால மக்களின் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் மீது கைவைப்பதின் மூலம் சுமத்த முடியுமா? இதற்கு இப்போது சாத்தியமில்லை என்றால் இப்போதுள்ள மக்களால் எப்படி பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும்? இன்றைய மனிதர்களின் பாவங்களைச் சுமத்தியது யார், எப்படி, மற்றும் யாரின் மூலமாக செலுத்தப் பட்டது? பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலி காணிக்கைச் செலுத்தும் முறைக்கு ஏற்ப, புதிய ஏற்பாட்டில் யோவான் ஸ்நானனிடம் இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு வருடம் முழுவதும் செய்த பாவங்களை பலி காணிக்கை ஆட்டின் மீது ஒரேதரமாக, பாவநிவாரண நாளில் தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சார்பாக சுமத்தியதைப் போல, கடைசி தலைமை ஆசாரியனாகிய யோவான் ஸ்நானனின் மூலமாக நம் பாவங்களும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக சுமத்தப் பட்டது. அப்படியானால், இன்றைய மக்களின் எல்லாப் பாவங்கலும் எங்கே இருக்கின்றன? அவை இயேசு கிறிஸ்துவின் தலையில் இருக்கின்றன.
தலைமை ஆசாரியன் கைவைப்பதின் மூலமாக இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் போக்காடு ஏற்றுக் கொண்டதைப் போல, இக்காலத்தில் வசிக்கும் நம் அனைவருக்குமான பாவமன்னிப்பிற்கான நித்திய பலி காணிக்கையாக இயேசு மாறினார். நமது போக்காடாகிய இயேசு நமது பாவங்களுக்கான பலி காணிக்கையாக கர்த்தரிடம் தன்னை ஒப்புவித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்து, பழைய ஏற்பாட்டில் நடை பெற்றதைப் போல, அவரை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தான், இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் பலி காணிக்கையை ஏற்படுத்தி, அந்த பலி காணிக்கை மிருகத்தின் மீது அவர்களின் பாவங்களைச் சுமத்தி, அதனை ஆக்கினைக்குட்படுத்தினார்.
வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்ட போக்காட்டால் பிழைத்திருக்க முடியவில்லை, ஏனெனில் அங்கே நீரிருக்கவில்லை, சுட்டெரிக்கும் சூரியனும் மணலும் மட்டுமே அந்த பாலைவனத்தில் இருந்தன. அது போல, இயேசுவாலும், சிலுவையில் அறையப் படுவதை தவிர்க்க முடியவில்லை, ஏனெனில் அவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக மனித குலத்தின் எல்லா உலகப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டிருந்தார். உயிரில்லாத வனாந்தரத்திர்குள் போக்காடு வழி நடத்தப்பட்டதைப் போல, உலகின் பாவங்களை சுமந்த இயேசுவானவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு பாடுகளை அனுபவித்தார். போக்காடானாது வனாந்தரத்திர்குள் வழிநடத்தப் பட்டு, எதுவுமில்லாத, ஜீவனில்லாத மண்ணில் விடப்பட்டால், அது அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து, தாகத்தினால் மரித்துப் போகும் இல்லையா?
இதே போல, நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்ட இயேசுவானவர் அநேக மக்களால் புறக்கனிக்கப் பட்டார், நம்முடைய பாவங்களுக்கு ஆக்கினையாக அவர் சிலுவையில் அறையப் பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தி, மரிக்க வேண்டியிருந்தது. நமக்கு உண்மையான இரட்சிப்பாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய இரட்சிப்பு இதுவே.
பாவ நிவர்த்திக்கான வழிமுறைகளை இஸ்ரவேல் மக்கள் தமது கண்களால் நேரடியாக கண்டு, தமது இருதயங்களால் அதனை விசுவாசித்தனர். அவர்களைப் போலவே, நாமும் கூட, இயேசு கிறிஸ்துவின் நீதியின் செயல்களைப் பார்த்து கேட்டு, நமது இருதயங்களால் விசுவாசித்து நமது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளலாம். இயேசு கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்றும், உலகின் பாவங்களைச் சுமக்க வேண்டும் என்றும், சிலுவையில் அறையப் படவேண்டும் என்றும், மரித்து, மரித்தோரிலிருந்து மூன்றாம் நாளிலே உயிரோடெழும்ப வேண்டும் என்றும், இவற்றை நாம் நம்முடைய ஆவிக்குரிய கண்களால் பார்த்து அவற்றை நம் இருதயங்களில் விசுவாசிக்கவேன்டும் எனவும் இது நம்மிடம் கூறுகிறது.
இஸ்ரவேல் மக்கள் வாழும் நாட்கள் முழுவதும் இந்த பாவநிவாரண நாளின் பலி காணிக்கை தொடரும். அவர்களுடைய நாள்காட்டியின் ஏழாம் மாதம் 10ஆம் திகதியில், பாவநிவாரண நாளின் பலி காணிக்கை இன்னமும் கொடுக்கப் படுகிறது, ஏனெனில், “இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது” (லேவியராகமம் 16:34) என்று கர்த்தர் கூறினார். இப்படியாக பாவநிவாரண நாளில் இஸ்ரவேல் மக்களை பலி காணிக்கைச் செலுத்தச் செய்ததின் மூலமாக, கர்த்தர் அவர்கள் மீது கிருபைச் செய்தார், இதன் மூலமாக அவர்களின் எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டு, இப்பாவங்களுக்கான தண்டனைக்கும் தப்புவர்.
இதைப் போலவே, இன்றைய மக்களுக்கும் கூட, யோவானால் இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் சுமந்து, சிலுவையில் அறையப் பட்டு, இதன் மூலமாக, பாவத்தை நித்தியமாக கழுவுவதை அவர் முற்றிலுமாக நிறைவேற்றினார் என்பதை அறிந்து கொள்வதற்கு அவர்களை ஏதுவாக்கினார். தனது ஞானஸ்நானத்தினால் மனிதர்களின் பாவங்களைச் சுமந்த இயேசு கிறிஸ்து பரலோகத்தின் நித்திய தலைமை ஆசாரியராகினார். இப்போது நம்முடைய இரட்சிப்பிற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த சத்தியத்தை விசுவாசிப்பது மட்டுமே.
மேசியா தனது சொந்த சரீரத்தின் மூலம் பிதாவாகிய கர்த்தருக்கு கொடுத்த மகத்தான பாவநிவாரண காணிக்கை
பாவநிவாரண நாளில் தமக்கு பலி காணிக்கை கொடுக்கும்படி கர்த்தர் ஏன் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்டார்? இதனைச் செய்வதின் மூலம் அவர்கள் தம் விசுவாசத்தின் மூலம் எதிர்பார்த்திருப்பர், அந்நாளிலே, பிதாவாகிய கர்த்தர் தனது குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றின் மூலமாக, மனித குலத்தின் எல்லாப் பாவங்களுக்குமான மகத்தான பாவநிவாரணத்தை நல்குவார். இதனால் தான் பிதாவாகிய கர்த்தரின் ஒரே பேறான குமாரரும் மனிதகுலத்தின் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு, எல்லோருடைய எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக வந்து, கர்த்தரின் அன்பினாலே அனைத்தையும் நிறைவேற்றி, மனித குலத்திற்கு இரட்சிப்பை நிறைவேற்றினார். மனிதகுலமாகிய நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ள யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்ற இயேசு, சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக, உலகத்தின் எல்லாப் பாவங்களையும் மீறுதல்களையும் துடைத்து, அவற்றிற்காக ஆக்கினைகுள்ளாகி, இதன் மூலமாக நமது உண்மை இரட்சகரானார்.
முதலாவதாக கர்த்தர் மேசேயை அழைத்து அவனிடம் சட்டத்தைக் கொடுத்தார். அதன் பிறகு இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுமாறு அவனுக்கு கட்டளையிட்டார், மேலும் அவனுக்கு பலியிடும் முறையையும் கொடுத்தார். அப்படிச் செய்ததின் மூலமாக, கைவைத்தலின் முக்கியத்தையும், இரத்தம் சிந்துதலின் முக்கியத்தையும் இஸ்ரவேல் மக்கள் புரிந்து கொள்ள அவர்களை ஏதுவாக்கினார், அதன் பிறகு அவர் இயேசுவைக் காட்டினார், அவர் ஆசரிப்புக் கூடாரத்தில் முன்கூறப்பட்ட இரட்சிப்பின் வாசலாயினார், அவர் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெறுவதின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் பட்டு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. கர்த்தர் நமக்கு கொடுத்த பாவங்கள் கழுவப் படுதலாகிய இரட்சிப்பு, ஆசரிப்புக் கூடார வாசலில் உபயோகப் படுத்தப் பட்ட பொருட்களில் தெளிவாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆசரிப்புக் கூடார வாசலில் உபயோகிக்கப் பட்ட பொருட்களில், இளநீல நிற நூலானது இயேசுவானவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது; இரத்தாம்பர நிற நூலானது இயேசுவே ராஜாதி ராஜா என்றும் கர்த்தாதி கர்த்தர் என்றும் குறிக்கிறது, ஏனெனில் அவரே பிரபஞ்சத்தைப் படைத்தவர்; சிகப்பு நிற நூலானது, இயேசு ஞானஸ்நானம் பெற்றதால், அவர் பாவிகளின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததால் அதற்காக சிலுவையில் அறையுண்டு தன் இரத்தத்தைச் சிந்தி எல்லாப் பாவிகளுக்குமான ஆக்கினையையும் சுமந்தார் என்பதை இது குறிக்கிறது; மேலும், மெல்லிய பஞ்சு நூலினால் தயாரிக்கப் பட்ட நூலானது, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை வேதகாமானது தெளிவாக விளக்குகிறது என்பதைக் கூறுகிறது, மேலும் தனது வார்த்தையை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் பாவமன்னிப்பை வழங்கினார் என்பதையும் அது கூறுகிறது.
இப்போது, எல்லோரும் இந்த உண்மையை மீண்டுமாக நினைவு கூர்ந்து அதனை விசுவாசிக்க வேன்டும்௮அதாவது, இயேசு கிறிஸ்துவே இரட்சகர் மேலும் யோவானிடமிருந்து தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும், சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும் அவர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவினார்௮இது ஆசரிப்புக் கூடார பொருட்களாகிய, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது, ஆகவே அவர்கள் இதன் மூலம் பாவ மன்னிப்பைப் பெறவேண்டும். மோசேயின் மூலமாக கர்த்தர் இரட்சிப்பின் சட்டத்தை ஏற்படுத்தினார், மேலும் நேரம் வந்தபோது, இந்த பூமிக்கு அவர் இயேசு கிறிஸ்துவை அனுப்பி யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறச் செய்து, சிலுவையில் இரத்தம் சிந்தச் செய்தார், இதன் மூலமாக உலகின் பாவங்களைக் கழுவித் தீர்த்த பலி காணிக்கையாக இயேசு மாறினார். இப்படிச் செய்ததின் மூலமாக, விசுவாசிப்பவர்கள் அனைவரும் தம் எல்லாப் பாவங்களையும் விசுவாசத்தினால் கழுவுவதற்கு அவர்களை ஏதுவாக்கினார். ஆகவே இயேசு கிறிஸ்து நமது இரட்சகராக நாம் அறிவிக்கும் போது, இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் இரத்தம் சிந்தியதையும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும். கைவைத்தலின் மூலமாக பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலி காணிக்கைகள் பாவிகளின் அக்கிரமங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதிலாக இரத்தம் சிந்தி ஆக்கினைக்கு உள்ளானதைப் போன்று, இந்த பூமியில் வாழும் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து பலி காணிக்கையாக வந்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் உலகின் பாவங்ளைத் தன்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அறையப் பட்டு தன் விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தினார், இதன் மூலமாக, விசுவாசிப்பவர்களின் பாவங்களை ஒரேதரமாக நித்தியமாக துடைத்து விட்டார்.
எழுதப் பட்டுள்ள வார்த்தையின் சத்தியத்தை நாம் அப்படியே விசுவாசிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் தலைமை ஆசாரியன் தன் மக்களுக்கு பலி காணிக்கை கொடுத்த அதே முறையின் படியே, இயேசு இப்பூமிக்கு வந்து, நம்மை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக இரட்சிப்பதற்காக ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறையப் பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தினார் என்பது வேதாகமச் சத்தியமாகும். ஆகவே நாம் வேதாகமத்தை எழுதப்பட்டுள்ளபடி அப்படியே விசுவாசிக்க வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக நித்தியமாக ஆக்கினைக்குள்ளாவதை தவிர்க்க முடியாது, ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்து தனது ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் நம் அனைவரையும் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார்.
இப்படியாக கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னித்திருந்தும் இதனை விசுவாசியாமல் இருப்பது, கர்த்தரால் மன்னிக்கமுடியாத ஒரு பாவமாகும். ஒரு பாவத்தைத் தவிர அவர் எல்லாப் பாவங்களையும் துடைத்தார், அது “பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷனமாகும்” (மாற்கு 3:28-29). மேலும், உண்மையாகவே பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள், இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதையும், தனது இரத்தத்தைச் சிந்தியதையும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்ததையும், இதன் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் நம்மை விடுவித்தார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். இத்தகைய விசுவாசத்தைத் தவிர, பாவமன்னிப்பிற்காக வேறெந்த நற்செயல் தேவைப் படுகிறது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்பது என்ன என்பதைக் குறித்தும், இந்த சத்தியத்தை விசுவாசிப்பதற்கு மான நேரம் இப்போது வந்து விட்டது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே என்பதை அனைவரும் அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும், அது வரப்போகிற இயேசு கிறிஸ்துவின் நிழலாயிருந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைப் பொருத்த வரை, அவர் பெற்ற ஞானஸ்நானமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் நமது இரட்சிப்பிற்கு அவசியமானவை, ஆகவே நாம் அவற்றை விசுவாசித்தேயாக வேண்டும். இயேசு தனது ஞானஸ்நானத்தையும், தான் சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதையும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததையும், இவற்றையெல்லாம் நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக அவர் செய்தார் என்பதையும் விசுவாசிப்பவர்களை அவர் இரட்சிக்கிறார் என்பது மறுக்கமுடியாத, சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையாகும்.
பிதாவாகிய கர்த்தர் எதிர்பார்த்த குமாரரின் பலி காணிக்கை
எபிரெயர் 10:5-9 ஐ வாசிபோமாக: “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.”
பலியையும் காணிக்கையையும் கர்த்தர் விரும்புவதில்லை என இந்த வசனங்கள் கூறுவதின் பொருள் என்ன? இந்த வசனங்கள் சங்கீதம் 40:6-7 ஐ மேற்கோள் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டின் அன்றாட பலிகளின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் முற்றிலுமாக துடைக்க முடியாது என்றும், நித்தியமான பலி காணிக்கையைக் கொடுப்பதற்கு, இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தார் என்றும், ஞானஸ்நானம் பெற்றார் என்ம், தனது இரத்தத்தைச் சிந்தினார் என்றும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்றும், அதன் மூலம் அவர் நம் அனைவரின் இரட்சகர் ஆனார் என்றும் இவ்வசனங்கள் பொருள்படுகின்றன. “அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது,” எனக் கூறும் சங்கீதம் 40:7 இன் பொருளானது, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து, தனது கைகளை வைத்ததின் மூலமாகவும் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும், எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்பதாகும்.
பழைய ஏற்பாட்டின் நாட்களில், பாவநிவாரண நாளில் தலைமை ஆசாரியன் பலி காணிக்கையின் மீது தன் கைகளை வைத்ததின் மூலமும், பலி காணிக்கையின் இரத்தத்தைச் சிந்தியதாலும், இஸ்ரவேல் மக்களின் பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப் பட்டன. அதுபோலவே, மனித குலத்தின் நித்திய பலி காணிக்கையாக இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து, கைவைத்தலைப் போன்ற ஞானஸ்நானத்தைப் பெற்றதன் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டு, இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு எடுத்துச் சென்று, தன்னுடைய விலையேறப்பட்ட இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும், மரித்ததின் மூலமாகவும் இப்பாவங்களுக்கான ஆக்கினையைப் பெற்றார். இப்படிச் செய்ததின் மூலமாக, விசுவாசிப்பவர்கள் அனைவருக்கும் நித்திய இரட்சிப்பை அவர் வழங்கினார்.
ஆசரிப்புக் கூடார முறையின் படி கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த படியே, புதிய ஏற்பாட்டில் இயேசு இப்பூமிக்கு வந்து, அதன் மூலமாக இரட்சிப்பை ஒரேதரமாக நிறைவேற்றினார். ஆகவே விசுவாசித்த அனைவரும் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் பட்டனர். இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று இரத்தத்தைச் சிந்துவதின் மூலமாக மக்களின் எல்லாப் பாவங்களையும் அவர் நித்தியமாக துடைப்பார் என ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். மேலும், இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் மூலமும் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமும் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட இரட்சிப்பை அவர் நிறைவேற்றினார், மேலும் இதன் மூலமாக கர்த்தரின் வார்த்தையை அவர் அருமையாக நிறைவேற்றினார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரின் இரட்சிப்பைக் குறித்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்குள் நிறைவேறியது.
பழைய ஏற்பாட்டு சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் சொற்களும் கர்த்தருடைய வார்த்தைகள் என இஸ்ரவேல் மக்கள் விசுவாசிக்கின்றனர். ஆனால் நமது கர்த்தராகவும் இரட்சகராகவும் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. இஸ்ரவேல் மக்கள் உட்பட இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும், இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்பதையும், வரப்போகிற மேசியா அவரே என்றும் தம் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இயேசு எதற்காக வந்தார்?
பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக வந்த இயேசு, அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சகரானார், மேலும் அவர்களின் எல்லாப் பாவங்களையும் நித்தியமாக கழுவ அவர் இவ்வுலகிற்கு வந்தார். எபிரெயர் 10:10 கூறுகிறது, “இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.” இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தது பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தின் படியே என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும், மேலும் பிதாவின் சித்தத்தின் படியே அவர் ஞானஸ்நானம் பெற்று, இதே சித்தத்தினால் சிலுவையில் அறையுண்டு, தனது இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததன் மூலமாக, விசுவாசிப்பவர்களுக்கு இரட்சகரானார். பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தின் படி நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்க, அவர் பெற்ற ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றின் மூலமாக எல்லாப் பாவங்களையும் இயேசு துடைத்ததின் மூலமாக மனிதர்களின் இரட்சிப்பை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது. மேலும் தன்னை பலி காணிக்கையாக அவர் விருப்பத்துடனே ஒப்புக்கொடுத்தார், இதன் மூலம் அவர் நமக்கு நிறைவான இரட்சிப்பை அருளினார்.
இஸ்ரவேல் மக்களின் பாவங்களை மட்டுமல்லாது, முழு மனிதகுலத்தின் பாவங்களையும் துடைப்பதற்காக இயேசு கிறிஸ்து தன்னைத்தானே பலி காணிக்கையாக்கியதினாலே, இதனை நாம் ஒவ்வொருவரும் நம் இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே, நம்மால் இரட்சிக்கப் படமுடியும். அவருடைய 33 வருட வாழ்க்கையில், இயேசு ஒருமுறை ஞானஸ்நானம் பெற்றார், ஒரு முறை பலி காணிக்கையானார், மேலும் இவற்றின் மூலமாக உலகின் எல்லாப் பாவிகளையும் ஒரே தரமாக இரட்சித்தார். இதுவே ஒரே நிறைவான இரட்சிப்பாகும்.
உலகம் தோன்றியதிலிருந்து அது அழியும் வரை மனிதகுலம் செய்த எல்லாப் பாவங்களையும் இயேசு ஒரேதரமாக துடைத்ததன் மூலம், விசுவாசத்தின் மூலம் நாம் ஒரே தரமாக இரட்சிக்கப் படுவதையும் ஏதுவாக்கினார். அவர் தன்னுடைய சொந்த சரீரத்தை ஒரே தரமாக பலியாகியதால், இயேசு கிறிஸ்து நம்மை நித்தியமாக நிறைவானவர்களாக்கினார். அவர் யோவானால் ஞானஸ்நானம் செய்யப் பட்டதாலும், தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி நமது எல்லாப் பாவங்களுக்கும் ஆக்கினையடைந்ததாலும், இந்த நற்செய்தியை நாம் சந்தோஷத்துடனே நமது இருதயங்களில் விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்படைய வேண்டும். பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக இப்பூமிக்கு வந்த இயேசு, நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, பாவக் கிரயத்தைத் தனது ஜீவனின் மூலமாக கொடுக்க வேண்டியிருந்தது, மேலும், அவர் தன்னுடைய உண்மையான இரட்சிப்பை வெற்றிகரமாக வெளிப் படுத்தினார், அது பிதாவின் சித்தப்படியான கர்த்தரின் அன்பாகும்.
இந்த நவீன உலகில் வாழும் நீங்களும் நானும் விசுவாசிக்க வேண்டிய சத்தியம் நிச்சயமாக இந்த வார்த்தையே ஆகும். இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதையும் ஒன்றாகச் சேர்த்து அவற்றை ஒரே சத்தியமாக கருத்தில் கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும், அது நம்மை நிறைவாக இரட்சிக்கும். அப்படிச் செய்வதற்கு நாம் தவறினால், நாம் நித்தியமான பாவமன்னிப்பை இழந்தவர்களாவோம். எப்படியாயினும், எழுதப்பட்டுள்ள கர்த்தரின் வார்த்தையின் படி நாம் விசுவாசிக்க வேன்டும், அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இரட்சிப்பின் ஒளியினால் பிரகாசிக்கிறது, ஆனால் நாம் கர்த்தரை விசுவாசிக்கும் போது, இந்த உண்மையான நற்செய்தியுடன் எதையாவது சேர்த்தாலோ, அல்லது கழித்தாலோ, அல்லது இந்த சத்தியத்தை அப்படியே விசுவாசிக்கா விட்டாலோ, இந்த இரட்சிப்பின் ஒளியானது காணாமற் போய்விடும், அது ஒளிந்து மறைந்து போய்விடும்.
சத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியும் கூட ஒரு உலகப் படியான கோட்பாடே என்ற மாயையினுள் நாம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது, அன்றாடம் மனம் வருந்தி கர்த்தரிடம் ஜெபித்து, எப்படியோ பாவமன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென அது போதிக்கவில்லை. எபிரெயர் 10:11 இல் கர்த்தர் தெளிவாக கூறினார், “அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.” வேறு வார்த்தைகளில் கூறினால், சிலுவையின் இரத்தத்தின் மீதுள்ள விசுவாசத்தைக் கொண்டு, நம்முடைய அன்றாடப் பாவங்களை மன்னிக்குமாறு நாம் கர்த்தரிடம் வேன்டுவதால் மட்டுமே நாம் அன்றாடம் செய்யும் பாவங்களைக் கழுவ முடியாது என அவன் கூறினான்.
யோவானால் ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் மரித்து பிதாவாகிய கர்த்தருக்கு இயேசு கிறிஸ்து அளித்த பலி காணிக்கை இரட்சிப்பிற்கான நிறைவான இரட்சிப்பாக இருப்பதாலே, இந்த பலி காணிக்கையை விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே நம்மால் முழுமையாக இரட்சிக்கப் படமுடியும். யோவானால் இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெறும் போது உலகின் எல்லாப் பாவங்களும் அவர்மீது ஒரேதரமாக சுமத்தப் பட்டதால், இயேசுவால் அப்பாவங்களைச் சிலுவைக்குச் சுமந்து சென்று, அவர்களின் பாவங்களுக்கு கிரயமாக மரிக்க முடிந்தது, மேலும் இதனாலேயெ, அவருடைய ஞானஸ்நானத்தையும் இரத்தத்தைச் சிந்தியதையும் விசுவாசிப்பவர்களால் தம் பாவங்களைக் கழுவ முடிகிறது.
இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் இரத்தம் சிந்தியதையும் விசுவாசிப்பதின் மூலமாக, நம்மாலும் கூட இயேசு கிறிஸ்துவுடனே மரித்து, அவருடனே கூட விசுவாசத்தினால் உயிரோடு எழும்ப முடியும். ரோமர் 6:23 கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.” அது எதுவாயிருந்தாலும் பாவத்தின் சம்பளம் மரணமாகும், ஆகவே அதன் கிரயத்தை ஜீவனின் மூலம் கொடுக்கவேண்டும். இதனால் தான் மனித சரீரத்தில் இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து, யோவானால் ஞானஸ்நானம் பெற்று, தன் இரத்தத்தை சிலுவையில் சிந்துவது அவசியமாயிருந்தது. உங்கள் எல்லாப் பாவங்களும் இயேசுவின் சரீரத்தின் மீது சுமத்தப் பட்டது ஞானஸ்நானத்தின் மூலம் நிறைவேற்றப் பட்டது, மேலும், இந்தப் பாவங்களைச் சுமந்து மரித்ததினால், இயேசு உங்கள் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி, அவை அனைத்தையும் ஒரேதரமாக துடைத்து விட்டார். அப்படி இருந்தும் கூட, இந்த சத்திய நற்செய்தியை கர்த்தர் நம் அனைவருக்கும் கொடுத்தும் கூட, தம்முடைய அன்றாடப் பாவங்களை மன்னிக்கும் படி தினமும் ஜெபிக்கும் மக்கள் இருக்கின்றனர்௮அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவுமே தெரியாது.
மக்களின் இருதயங்களில் பாவமிருக்கும் போது, இந்த பாவத்தினால், கர்த்தருக்கு முன்னால் பயந்து நடுங்குவதைத் தவிர்க்க முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தெரியாமல், இன்னமும் தம் பாவங்களைக் கழுவாத அநேக மக்கள், தம்முடைய மனசாட்சியிலுள்ள பாவங்களினிமித்தமாக பயந்து நடுங்குகின்றனர். ஆயினும், அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைக் கழுவவே இயேசு பூமிக்கு வந்தார், அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதின் மூலம் அவர்களை நிறைவாக இரட்சித்தார். கர்த்தரின் இரட்சிப்பின் நற்செய்தியாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம்மை முற்றிலுமாக இரட்சித்து, நமது பாவ ஆக்கினைகளைப் பொறுப்பெடுத்திருக்கும் போது, நாம் கலங்குவதற்கான காரணம் என்ன?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இயேசு அவர்களின் எல்லாப் பாவங்களையும் துடைத்துவிட்டார் என்பதை அறிந்து அதனை உண்மையாகவே விசுவாசிப்பவர்களால், கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தபடி நிச்சயமாகவே இரட்சிக்கப் பட முடியும், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” (ஏசாயா 1:18). நம்மால் விசுவாசத்தின் மூலமாக இரட்சிக்கப் படமுடியும், ஏனெனில், இயேசுவின் ஞானஸ்நானம் இருக்கிறது, கை வைத்தலின் மூலம் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் மீது சுமத்திய பழைய ஏற்பாட்டின் கர்த்தர் ஏற்படுத்திய சட்டத்தின் படியாக இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார். இயேசு யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லாப் பாவங்களையும் தன் மீது சுமந்ததாலேயே, அவரால் சிலுவையில் மரிக்க முடிந்தது, மேலும் பழைய ஏற்பாட்டில் கர்த்தர் கூறிய இரட்சிப்பு நிறைவேறியதாலேயே, விசுவாசத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் பட முடிகிறது.
இது தவறில்லாத உண்மையாக இருந்தாலும், ஏதோ கடமை போல இயேசுவை சில மக்கள் விசுவாசிப்பதை நம்மால் காணமுடியும். தம்முடைய விசுவாசத்தை அதிகரிக்க அவர்கள் அன்றாடம் விக்கி அழுகின்றனர், ஏனெனில் இயேசு சிலுவையில் பட்ட மரணப் பாடுகளின் அடிப்படையில் இயேசுவின் மீது பரிதாபப்படுவது அவர்களின் விசுவாசத்தின் அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய மக்களின் இருதயங்கள் முற்றிலும் விகாரமாயிருக்கிறது, ஆகவே அவர்கள் இந்த தவறான விசுவாசத்தைக் கைவிடவேன்டும். உங்களுக்கும் எனக்குமே நம் இரட்சகராகிய இயேசுவின் ஞானஸ்நானமும் இரத்தமும் வேண்டும், இயேசுவிற்கு நமது பச்சாதாபமோ அல்லது அர்ப்பணிப்போ வேண்டியதில்லை. சாதாரண உண்மை யாதெனில், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தான் தேவைப் படுகிறார், ஆயினும், எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாது பலர் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள், கர்த்தருக்கு ஏதோ குறையிருப்பதைப் போலவும், தன்னை விசுவாசிக்கும் படி அவர் அவர்களிடம் கெஞ்சுவதைப் போலவும் அவர்கள் தமக்குத் தாமே எண்ணிக் கொள்ளுகின்றனர். ஆனால் இப்படி தனிப்பட்ட விதமாக விசுவாசிக்கும் விசுவாசத்தையே கர்த்தர் வெறுக்கிறார்.
ஏதோ அவருக்கு ஒரு நன்மையைச் செய்பவர்களைப் போல, இயேசுவிடம் தாம் அவரை விசுவாசிப்பதாக மமதையுடன் கூறுபவர்களின் இருதயமானது, கர்த்தரை விட உயரத்தில் இருக்கிறது, ஆகவே, அவர்கள் தம்முடைய மூர்க்கத்தனத்தினால், அவர்களைப் பாவத்திலிருந்து நிறைவாக இரட்சிக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தம்மிருதயங்களில் ஏற்றுக் கொள்வதில்லை. கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை, அது தம் அயலார் கூறுவதிலிருந்து வேறுபாடானது என மட்டுமே எண்ணுகின்றனர், அதனை தம்வசப் படுத்துகிறார்கள், தமது இரக்கத்தால் அவரை விசுவாசித்து அவருக்கு நன்மைச் செய்வதாக அவர்கள் எண்ணுகின்றனர். கடைசியில், இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் தன் இரத்தத்தைச் சிந்தியதையும் தமது பாவமன்னிப்பாக ஏற்றுக் கொள்ளாமல் கர்த்தருக்கு எதிராக நிற்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல், கஷ்டப் பட்டு மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலமாக தம் பாவங்களைக் கழுவலாம் என அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் கர்த்தரின் பெயரை வீனில் வழங்குவதால், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தம் பாவங்களை முற்றிலுமாக துடைத்தார் என்பதை அறியாததாலும், விசுவாசிக்காததாலும், அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது.
கர்த்தர் கூறினார், “எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன்” (ரோமர் 9:15). தனது இரக்கத்தின் மிகுதியினால் பாவிகளை இரட்சிப்பின் சட்டத்தினால் இரட்சிக்க கர்த்தர் முடிவு செய்தால், தான் முடிவு செய்தபடி அப்படியே செய்வார். ஆகவே நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உண்மையான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காதவர்கள், கர்த்தரின் கோபாக்கினை எத்தனைக் கொடூரமானது என்பதை தனிப்பட்ட முறையில் கண்டு கொள்வர். மறு பக்கத்தில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் கர்த்தரின் அன்பு எத்தனை பெரிதானதும் இரக்கமுமானது என்பதைக் காண்பர். கர்த்தருக்கு முன்னதாக யாரெல்லாம் அவனின்/அவளின் பாவங்களை அறிந்து கொண்டு, கர்த்தரின் நிறைவான இரட்சிப்பின் நற்செய்தியான, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களோ, அவர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவார்கள்.
இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலம், அவர்களின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார் என்பதை விசுவாசிப்பவர்கள், தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவர். மாறாக, இந்த சத்தியத்தை அலட்சியம் செய்பவர்கள், தம்முடைய பாவங்களுக்காக, பயங்கரமான ஆக்கினையைப் பெறுவர். ஆகவே, உண்மை சத்தியமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகிலுள்ள அனைத்து மக்களும் விசுவாசிக்கவேண்டும். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்கு பயப்படாமலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமலும் இருப்பவர்கள் தம் பாவங்களுக்காக ஆக்கினைக்குள்ளாவர். ஆனால் இயேசு பாவங்களைக் கழுவியதை விசுவாசிப்பவர்கள் தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படுவர்.
தம்முடைய மனசாட்சியில் பாவமிருப்பவர்கள் சுதந்திரமாக இருப்பதில்லை, ஆகவே, அவர்கள் இல்லாத, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத இரட்சிப்பின் கோட்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள், அவை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது, இதன் மூலம் அவர்கள் தம் நோய்வாய் பட்ட மனசாட்சியை சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். “நான் இயேசுவை விசுவாசிப்பதால், எனது இருதயத்தில் பாவம் இருந்தாலும் பரவாயில்லை” எனக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தம் இருதயங்களில் பாவங்கள் உள்ள அனைவரும் கர்த்தரின் நரகத்தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்பதை நாம் மறக்கவே கூடாது, ஏனெனில், கர்த்தர் தனது நியாயத் தீர்ப்பை அம்மக்களின் பாவங்களுக்காக அளிப்பார். அவர்கள் சாத்தானுடன் சேர்ந்திருப்பதால், கர்த்தரால் அவர்களை அப்படியே விட்டு விட முடியாது.
ஆனால் பாவத்திற்கான கர்த்தரின் நியாயத் தீர்ப்பு இருக்கிறது என்ற கர்த்தரின் நீதியைக் குறித்து தெரிந்து கொண்டவர்கள் அவரிடம் இரக்கமிக்க அன்பைக் கேட்டு, எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் பட, சத்தியத்தைத் தேடி, கர்த்தருடன் இருப்பதை விரும்புவர். இத்தகைய மக்களுக்கு, சத்தியம் இங்கே இருக்கிறது, அது இயேசு ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் மனித குலத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்பதாகும். எல்லாப் பாவிகளும் அதனை விசுவாசித்து பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தன்து ஞானஸ்நானத்தின் மூலம், இயேசு கிறிஸ்து முழு உலகத்தினதும் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, எல்லாப் பாவங்களையும் கழுவி நம்மை நீதிமான்களாக்கினார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நமது உண்மை இரட்சிப்பு என்னவென்று நாம் அறிந்து கொண்டு, இந்த விசுவாசத்தை உண்மையாகவே விசுவாசிக்கும் விசுவாசத்தை நம்மிருதயங்களில் பெற்றிருக்க வேண்டும். இந்த சத்தியத்தை தமது இருதயங்களில் விசுவாசிப்பவர்கள், தாம் எத்தகைய பாவங்களைச் செய்தாலும் கூட, விசுவாசத்தினால் தமது எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டவர்களாய் உண்மையான பாவமன்னிப்பைப் பெற்று, நித்திய வாழ்வை அடைவர். உங்கள் இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் மறையச் செய்த இந்த நற்செய்தி வார்த்தையை ஏற்று, விசுவாசத்தினால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பெற்றுக் கொள்வீர்களா? கர்த்தருக்கு முன்னதாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கல் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்வர்.
மனம் வருந்தி ஜெபிப்பதினால் உங்களை இரட்சிக்கமுடியாது
இன்று, அநேக கிறிஸ்தவர்கள் தம்முடைய மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுத்து, தம்முடைய பாவங்களை மன்னிக்கும் படி கர்த்தரிடம் கேட்கின்றனர். பழைய ஏற்பாட்டின் காலத்தைப் போல அன்றாடம் கர்த்தருக்கு தம்முடைய பலிகாணிக்கையை செலுத்தி அவர்கள் தம் விசுவாச வாழ்வை வாழுகின்றனர். ஆனால் இது அவர்கள் விரும்பும் விசுவாச வாழ்க்கை அல்ல. நீங்கள் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுக்கும் போது மட்டுமே உங்களுடைய பாவங்களை கழுவும் படியாகத் தான் இயேசுவானவர் தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தினாரா? இப்படி நடக்க முடியாது. இயேசு கிறிஸ்துவுடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதலின் வல்லமை என்றென்றும் இருக்கிறது என்று விசுவாசித்து நீங்கள் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் கழுவ வேண்டும் என்பதே சத்தியமாகும். ஒவ்வொரு நாளும் தம் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுத்து தம் பாவங்களை கழுவ முயற்சி செய்கிறவர்களால் நித்தியமான பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் முடியாது, அல்லது அவர்களை உண்மையான இரட்சிப்பை பெற்றுக் கொள்ளச் செய்யும் விசுவாசத்தையும் அடைய முடியாது.
மனம் வருந்தி ஜெபிப்பதின் மூலமாகவே அல்லது மனிதர்களால் உருவாக்கப் பட்ட சடங்குகளினாலோ, எல்லோராலும் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றால், பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறும் சட்டத்தைக் கர்த்தர் ஏற்படுத்தியிருக்க மாட்டார். மக்கள் தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற வேண்டுமானால், விசுவாசத்தினால் இயேசுவின் சரீரத்தில் தம் பாவங்களைச் சுமத்தும் பலி காணிக்கையை அவர்கள் கொடுக்க வேண்டும். அன்றாடம் மனம் வருந்து ஜெபித்து பாவமன்னிப்புக் கேட்கும் விசுவாசம் நம்முடையதல்ல, ஆனால் அது ஆசரிப்புக் கூடார வாசலில் பயன் படுத்தப் பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உண்மையாகவே விசுவாசிக்கும் விசுவாசத்தினாலேயே, உண்மையாக பாவங்கள் கழுவப் பட முடியும், ஆகவே இதனை நாம் இருதயப் பூர்வமாக விசுவாசிக்க வேண்டும்.
பழைய ஏற்பாட்டு பாவிகள் பலி காணிக்கைக் கொடுக்கும் போது, தம்முடைய கைகளை பலி காணிக்கை மிருகத்தின் தலையில் வைப்பதைப் போன்றே, இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலம் அவர் மீது சுமத்த வேண்டும், மேலும் அவருடைய ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவையின் இரத்தம் சிந்துதலையும் விசுவாசிக்கும் விசுவாசத்துடன், நாம் கர்த்தரிடம் வந்து நித்திய பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளவேண்டும். கர்த்தர் கூறினார், “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” மற்றும் “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:10,17).
யோவான் 1:29 கூறுகிறது, “மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த மறுநாளிலே யோவான் ஸ்நானன் அவரைக் குறித்து சாட்சி கூறியதை இந்த வசனம் விளக்குகிறது. இயேசு தன்னை நோக்கி வருகிறதைக் கண்ட யோவான் ஸ்நானன், “பாருங்கள் மக்களே! அங்கே அவர் போகிறார்!” யோவானைச் சுற்றியிருந்த மக்களிடம் இது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. யோவான் சத்தமிட்டுக் கூறினான், “இதோ! தேவாட்டுக்குட்டியானவர் வருகிறார்! அவர் தேவகுமாரரேயன்றி வேறொருவரும் இல்லை, என்மூலமாக மனித குலத்தின் பாவங்களைச் சுமந்த தேவாட்டுக் குட்டியானவர் இவரே. அவரே நமது இரட்சகர்.” அவர் இயேசு கிறிஸ்து, தேவாட்டுக் குட்டியானவர். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” ஏனெனில், யோவான் ஸ்நானனே இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியவனாயிருந்தான், ஆகவே அவனால் இயேசுவைக் குறித்து சாட்சி கூற முடிந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் செய்வித்ததின் மூலமாக நம் பாவங்களை அவர் மீது சுமத்தியதால், இயேசு கிறிஸ்து பலியாகும் ஆட்டுக்குட்டியானார், அவர் தனது பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தின் படி, நம் பாவங்களை எல்லாம் சுமந்தார்.
பழைய ஏற்பாட்டில், கர்த்தருக்கு பலி காணிக்கை கொடுத்ததின் மூலமாக பாவமன்னிப்பு பெறப் பட்டது, ஆனால் புதிய ஏற்பாட்டிலோ, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவர் சிலுவையில் இரத்தத்தைச் சிந்தியதையும் முழுமையாக விசுவாசிக்கும் விசுவாசத்தினாலேயே பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ளமுடியும். காளை, ஆட்டுக்குட்டிகள், வெள்ளாடுகள் போன்ற கால்நடைகளை பலி காணிக்கையாகப் பெற்று இஸ்ரவேல் மக்களின் பாவங்களை கர்த்தர் துடைத்ததால், எண்ணிலடங்காத மிருகங்கள் இரத்தம் சிந்தி, துண்டு துண்டாக வெட்டப்பட்டு, சர்வாங்க தகன பலிபீடத்தில் எரிக்கப் பட்டன. மக்களின் பாவங்களினால், பல்லாயிரக் கணக்கான பலி காணிக்கைகள் கொல்லப் பட்டன.
ஆனால் புதிய ஏற்பாட்டின் காலத்தில், இயேசு அத்தகைய பலி காணிக்கைகளைக் கொடுக்கவில்லை, ஆனால் அவர் தன் சரீரத்தையே நமக்காக கொடுத்தார். தேவாட்டுக் குட்டியாக இயேசு இப் பூமிக்கு வந்து, தனது ஞானஸ்நானத்தின் மூலம், உலகின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டு, தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்தியதின் மூலம், இதனை விசுவாசிக்கும் அனைவரும் அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக இரட்சிக்கப் படுவதை ஏதுவாக்கினார். நமது பாவங்களை நித்தியமாக முடிவுக்கு கொண்டு வரவே நீராலும், இரத்தத்தாலும் இயேசு நம்மிடம் வந்தார்.
உண்மை இரட்சிப்பின் இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் படி உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் இப்போது கட்டளையிடுகிறார். அவர் நம்மிடம் கூறுகிறார், “நான் உங்களை நேசித்ததினால், உங்கள் எல்லாப் பாவங்களையும் துடைத்தேன். நான் உங்களை இப்படியாக இரட்சித்தேன். ஆகவே விசுவாசியுங்கல்! எனது குமாரரை உங்களுக்கான பலி காணிக்கையாக கொடுத்ததின் மூலம் உங்கள் பாவங்களைத் துடைத்தேன். நான் எனது குமாரரை 33 வருடங்கள் பூமியில் வாழச் செய்தேன், அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்தேன், உங்களுக்காக சிலுவையில் இரத்தத்தைச் சிந்தச் செய்தேன், அப்படி செய்ததின் மூலமாக உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும், ஆக்கினைகளிலிருந்தும் நான் உங்களை முற்றிலுமாக விடுதலையாக்கினேன். இப்போது இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக நான் நேசிக்கும் என் பிள்ளைகள் ஆனீர்கள், உங்களை என் கரங்களால் அரவனைப்பேன்.” இதனை அறிந்து உங்கல் இருதயங்களில் விசுவாசியுங்கள்௮இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவர் சிந்திய இரத்தத்தையும் விசுவாசிப்பவர்கள் தம் பாவங்களிலிருந்து மட்டும் விடுவிக்கப் படாமல், கர்த்தரின் பிள்ளைகளாகும் உரிமையையும் பெறுவார்கள்.
இயேசு இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தாரா?
எபிரெயர் 10:14-18ஐ வாசிப்போமாக: “ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்: அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.”
இந்த வசனம் தெளிவு படுத்துகிறது: “இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.” இந்த ஆசீர்வாதமான செய்தியைக் கேளுங்கள், நம்முடைய எல்லாப் பாவங்களும் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் அவர் மீது சுமத்தப் பட்டுவிட்டது! நீங்களும் நானும் நம் வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்கள் மட்டும் இயேசுவின் மீது சுமத்தப் படவில்லை, ஆனால் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களும் கூட அவர் மீது சுமத்தப் பட்டு விட்டது. கர்த்தரின் நீதியை நிறைவேற்றுவதற்காக, நீரின் உள்ளேயும் வெளியேயும் ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் கைவைக்கப் பட்டு, அதன் மூலமாக எல்லாப் பாவங்களும் தன்மீது சுமத்தப் படுவதை அனுமதித்தார். அதற்கு மேலும், எல்லாப் பாவங்களையும் சுமந்தவராக, அவர் சிலுவையிலறையப் பட்டு, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை அடைந்தார், ஆகவே விசுவாசிக்கும் அனைவரும் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுதலை அடைந்தனர். தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் பலி காணிக்கையின் மீது தனது கைகளை அதன் தலை மீது வைத்து சுமத்தியதைப் போல, யோவான் ஸ்நானன் நம் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததின் மூலம் சுமத்தினான். மேலும், அதற்கு ஏற்றாற் போல, இந்த பாவங்களைச் சுமந்த இயேசு சிலுவையில் அறையப் பட்டார், இதன் மூலமாக தன்னை விசுவாசிக்கும் அனைவரையும் பாவங்களிலிருந்து விடுதலைச் செய்தார். ஆகவே, இதனை விசுவாசிப்பவர்களால் கர்த்தரின் சொந்த பிள்ளைகளாகும் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ரோமர் 10:10 கூறிகிறது, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” கர்த்தருடைய நீதியை இருதயத்தினால் விசுவாசிப்பதின் மூலமே எல்லோராலும் நீதிமானாக முடியும், இரட்சிப்பின் சத்தியத்தை இருதயத்தினால் விசுவாசிப்பதின் மூலமே அவர்களால் பாவமன்னிப்பைப் பெற்று பரலோகத்தில் பிரவேசிக்க முடியும். சகோதர சகோதரிகளே, “கர்த்தருடைய நீதி,” “இரட்சிப்பின் சத்தியம்,” “பாவமன்னிப்பின் நற்செய்தி” ஆகியவற்றின் ஆக்கப் பொருள்களாக இயேசுவின் ஞானஸ்நானமும், அவரின் இரத்தமும் இருக்கின்றன என உங்கல் நாவினால் அறிக்கைச் செய்து, இருதயத்தினால் விசுவாசித்ததின் மூலமாக் இரட்சிக்கப் பட்டீர்களா? பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையின் படி, அம்மிருகத்தின் மீது பாவங்களைச் சுமத்தும் கைவைக்குதல் இல்லாமல் பலி காணிக்கை மிருகம் கொல்லப்பட்டதன் மூலம் இஸ்ரவேல் மக்களின் பாவங்கள் துடைக்கப் படவில்லை. அது போலவே, இயேசுவின் சிலுவை இரத்தத்தை விசுவாசித்து, இயேசு பெற்ற ஞானஸ்நானத்தை விட்டு விட்டால், நம் பாவங்கள் கழுவப் படாது.
“அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே” (எபிரெயர் 10:17-18). நம்முடையப் பாவங்களை இனி நினைப்பதில்லை என கர்த்தர் ஏன் இங்கே கூறுகிறார்? நாம் மரிக்கும் நாள் வரையிலும் பாவம் செய்வதைத் தவிர்க்க முடியாத நிலையில் நாம் இருந்தாலும் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன் மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டதால் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற்றப் பட்டது, இது நித்தியமானதாக இருக்கும், இதனை விசுவாசிப்பவர்கள் பாவமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் நம் பாவங்களை இனிமேல் கர்த்தர் நினைக்க வேண்டியதில்லை.
கர்த்தரின் நீதி என்பது அவரின் நியாயமாகும். கர்த்தர் எப்படி பரிசுத்தராக இருக்கிறாரோ, அது போலவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களும் பரிசுத்தராயும் பாவமற்றவராயும் இருப்பதாக பிதாவாகிய கர்த்தரின் நியாயம் கூறுகிறது. தொடக்கக் காலம் முதலே, கர்த்தர் நம்மை நேசித்து நம்மை தன் பிள்ளைகளாக்க விரும்பினார். ஆனால் அவர் எத்தனை விரும்பினாலும் அது நிறைவேறவில்லை, ஏனெனில் நம்மிடம் பாவங்கள் இருந்தன. ஆகவே இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க பிதாவாகிய கர்த்தர் ஒரு தீர்வைக் கண்டார்.
கர்த்தர் களங்கமில்லாத பலி காணிக்கையை ஏற்படுத்தியதினாலும், அது நமது சார்பாக பலியாக மரிக்க வேண்டியதிருந்ததாலும், அந்த பலி காணிக்கையின் மீது நம் எல்லாப் பாவங்களையும் சுமத்தி நமது பாவங்களை கழுவ முடிவு செய்ததினால், ஞானஸ்நானம் பெற இயேசு தயங்கவில்லை, அவர் நமது சொந்த பலி காணிக்கை ஆகினார், நம்முடைய இடத்திலிருந்து நமக்காக ஆக்கினைக்குள்ளாகினார், இதன் மூலம் நித்திய பலி காணிக்கையைக் கொடுத்தார். மேலும் இந்த பலி காணிக்கையின் மூலமாக, விசுவாசிப்பவர்களை அவர்களின் பாவங்களில் இருந்து மன்னித்து அவர்களைத் தமது பிள்ளைகளாக்கும் படியான கிருபையைக் கர்த்தர் நிறைவேற்றினார். இப்போது, இந்த சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் கர்த்தருக்கு முன்னதாக பாவமன்னிப்பைப் பெற்றனர். ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் இயேசு ஏற்கனவே பூமியின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டதால், நமக்காக ஆக்கினைக்குள்ளான இந்த இயேசுவை நாம் விசுவாசித்தால், நமது பாவங்களுக்கான பலி காணிக்கையை இனிமேலும் செலுத்த வேண்டியதிருக்காது. சகோதர சகோதரிகளே, நான் நமது பாவங்களுக்காக பலி காணிக்கையை இன்னமும் கொடுக்க வேண்டுமா? இல்லை, முற்றிலுமாக இல்லை!
இயேசு கிறிஸ்து பாவமில்லாதவராகவும், பரிசுத்தராகவும் இருந்தாலும் இயேசு ஏன் சிலுவையில் அறையப் பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு சிலுவையில் அறையப் பட்டாலும், அவர் எந்தத் தவறையும் செய்ததேயில்லை. யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசு பெற்றுக் கொண்டதினாலேயே, அவர் நம்மிடத்திலிருந்து மரிக்க வேண்டியிருந்தது. அவர் சிலுவையில் மரிக்கவேண்டியதற்கான காரணம், அவர் தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமத்தியதை ஏற்றுக் கொண்டு எல்லா நீதியையும் நிறைவேற்ற ஆயத்தமாயிருந்ததேயாகும். தேவகுமாரர் இப்படியாக எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்காக ஞானஸ்நானம் பெற்றபோது, நம்மால் நன்றி கூறாமல் எப்படி இருக்க முடியும்? அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதாலேயே, மயிர் கத்தரிப்பவனுக்கு முன்னால் நிற்கும் ஆட்டைப் போல, சிலுவையின் பாடுகளை அவர் அனுபவித்தார். நாம் எப்போதும் அவருடைய ஞானஸ்நானத்தையும் சிலுவையையும் நினைவு கூற வேண்டும், ஏனெனில் அவர் சிலுவையில் அறையப்பட்டு ஆக்கினைக்குட்பட்டிருக்கவில்லை என்றால், நிச்சயமாக நாம் தான் ஆக்கினைகளை அனுபவித்திருக்க வேண்டும்.
நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் மட்டுமின்றி அப் பாவங்களுக்கான எல்லாத் தண்டனைகளையும் கூட ஏற்றுக் கொண்டார். வேறுவகையாக கூறினால், இரட்சகராகிய இயேசு, நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, நமது பலி காணிக்கையாகி, அமைதியாக சிலுவையின் ஆக்கினையை ஏற்றுக் கொண்டு, நம்மை பாவங்களிலிருந்து இரட்சித்ததுடன் கர்த்தரின் சித்தத்தையும் நிறைவேற்றினார். இதனால் தான் வேதாகமம் கூறுகிறது, “இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்” (எபிரெயர் 10:18-19).
இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்ளுகிறீர்களா? இயேசுவின் சிலுவை இரத்தத்தை மட்டுமே நாம் விசுவாசித்துக் கொண்டிருக்கக் கூடாது, அவர் ஏன் சிலுவையில் அறையப் படவேண்டும் என்பதை நாம் காணவேன்டும், இதற்கான காரணம் அவர் பெற்ற ஞானஸ்நானத்தில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய பாவங்கள் எங்கு எப்படி கழுவப்பட்டன என்பதை நீங்களும் நானும் தெளிவாக கண்டு அதனை விசுவாசிக்க வேண்டுமானால், யோர்தான் நதியில் யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தப் போது நமது பாவங்கள் எல்லாம் அவர்மீது சுமத்தப் பட்டதினாலேயே நமது எல்லாப் பாவங்களும் விசுவாசத்தினால் கழுவப் பட்டன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிப்பதின் மூலமாக நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் படமுடியும்
நான் இதுவரை உங்களிடம் கூறிக் கொண்டிருந்தது வேதாகமம் கூறும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் விளக்கமாகும். உலகம் படைக்கப் படுவதற்கு முன்னரேயே திட்டமிடப்பட்ட இரட்சிப்பின் நற்செய்தி இதுவேயாகும், இந்த இரட்சிப்பானது, ஆசரிப்புக் கூடார வாசலில் காணப்படும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. என்னுடைய உடன் ஊழியர்களுடன் சேர்ந்து, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை இவ்வுலகிலுள்ள எண்ணிலடங்காத மக்களுக்கு நான் போதித்து வருகிறேன். இந்த நொடியிலும் கூட, நமது புத்தகங்களின் மூலமாக, இந்த நற்செய்தியானது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆயினும் கூட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறியாவிட்டாலும், தான் இயேசுவை விசுவாசிப்பதாக அறிவிக்கிறார்கள். நான் அவர்களை முட்டாள்கள் என துனிச்சலாக அழைக்கிறேன், ஏனெனில், இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றப் பட்ட உண்மையான பலி காணிக்கை முறையை நமக்கு கூறும் கருப் பொருளாயிருக்கிறது, இது ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பிற்கு நிழலாயிருக்கிறது. இப்போது உங்கள் நேரமாகும். உண்மையான சத்தியத்தை அறியாது விசுவாசித்திருந்தீர்களானால், நீங்கள் மனம் திரும்புவதற்கான நேரம் இதுவேயாகும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவருடைய சிலுவை மரணமும் உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே வாக்குத்தத்தம் செய்யப் பட்டது, அது இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலமும் வெளிப்படுத்தப் பட்டது. இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவும், உங்களையும் என்னையும் பாவங்களில் இருந்து இரட்சிக்கவும், இயேசு ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, இப்போது பிதாவாகிய கர்த்தரின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். சத்தியத்தை அறியாமல், உங்களுடைய சொந்த அனுபவங்களையும், உணர்வுகளையும் பின்பற்றி, இயேசுவை விசுவாசிக்க இன்னமும் முயற்சி செய்கிறீர்களா? இத்தகைய அநேக மக்கள் உலகில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தம்மமுடைய தவரான விசுவாசத்திலிருந்து மனம் திரும்பி ஆசரிப்புக் கூடார வாசலின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றில் மறைந்துள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டும்.
எபிரெயர் 10:19-20 கூறுகிறது “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்” இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று உலகின் பாவங்களை ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்ட போது, தேவாலயத்தின் திரைச்சீலைக் கிழிந்தது, மேலும் மனித குலத்தின் பாவங்கள் யாவும் இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் கழுவப் பட்டுவிட்டன. அதன் நான்கு முனைகளிலும் குதிரைகளைக் கட்டி இழுத்தாலும் அது கிழிந்து போகாத அளவு பலமுடையதாயிருந்த, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டிருந்த தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்தது.
இந்த உறுதி வாய்ந்த திரைச்சீலையானது, யாராலும் தொடப் படாத போதிலும், மேலிருந்து கீழ் வரையில் கிழிந்தது என்பது, இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தை முடித்த அந்நொடியே, பரலோகத்தின் வாசல்கள் அகலமாக திறந்ததைக் காட்டுகிறது. தேவாலய திரைச்சீலை மேலிருந்து கீழ் வரையில் கிழிந்தது என்பது பாவத்தின் எல்லாச் சுவர்களும் உடைந்து நொறுங்கியது என காட்டுகிறது, இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்தப் பாவச் சுவற்றை கர்த்தர் உடைத்தார் என்பதை இது குறிக்கிறது.
அப்படியானால், பாவத்தின் எல்லாச் சுவர்களும் உடைந்து நொறுங்கியது என்பதின் பொருள் என்ன? இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து யாராலும் எல்லாப் பாவங்களையும் நிவர்த்திக்க முடியும் என்பது இதன் பொருளாகும். ஆசரிப்புக் கூடார வாசலின் மூலமாக, மனித குலத்தின் இரட்சிப்பு நிறைவேற்றப்பட்டது என்பதை அறிவிக்க கர்த்தர் விரும்பினார், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவை காட்டிய இயேசுவின் ஊழியங்கள் அதனை நிறைவேற்றின. நம் அனைவருக்கும் கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப் பட்ட நித்திய பாவநிவர்த்தி நிறைவேறியதாலே, மகா பரிசுத்த ஸ்தலத்தின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் ஆன திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது, இவை மனித கரங்களால் கிழிக்கப் படவில்லை, ஆனால் கர்த்தரின் கரங்களால் கிழிக்கப் பட்டது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களாகிய நம்மை, மனித குலத்தின் நித்திய பலி காணிக்கையாகிய இயேசு கிறிஸ்து நிறைவாக இரட்சித்தார் என்பதை இது வெளிப் படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களால் பாவமன்னிப்பைப் பெற்று அவரின் சந்நிதானத்தில் நிற்க முடியும். நீங்கள் இந்த சத்தியத்தை விசுவாசிக்கிறீர்களா இல்லையா?
கர்த்தர் உங்களை நேசித்ததைப் போலவே, தேவகுமாரராகிய இயேசு கிறிஸ்துவும் உங்களை நேசிக்கிறார், அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும் சிலுவையில் அறையப் பட்டதின் மூலமாகவும் உங்களுக்கு நித்திய இரட்சிப்பைக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்குக் கொடுக்கப் பட்ட கர்த்தரின் அன்பைப் பெற்று, கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதை ஏதுவாக்கும் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாகவும், நம் எல்லாப் பாவங்களும் மறைந்து போயின. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக நம்முடைய சொந்தப் பாவங்களும் கூட மறைந்து போயின, ஏனெனில் நமது எல்லாப் பாவங்களும் ஆக்கினைகளும் இயேசுவின் ஞானஸ்நானத்தினாலும் அவரின் சிலுவை இரத்தத்தினாலும் கழுவப் பட்டு விட்டன.
எபிரெயர் 10:22 கூறுகிறது, “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” பாவத்தைக் கழுவியதைக் குறித்து வேதாகமம் தொடர்ந்து கூறுகிறது. இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் நம் மாமிசத்தினால் செய்த எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்ற சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் நாம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படலாம். பலி காணிக்கை கொடுத்தப் பிறகு தலைமை ஆசாரியனும் கூட தன்னுடைய அழுக்கை வெண்கலப் பாத்திரத்தில் கழுவினான் அதைப் போலவே, இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவிய பிறகும் கூட, இந்த விசுவாசத்தை அன்றாடம் நினைவு கூறவேண்டும். தலைமை ஆசாரியனே தன்னை வெண்கலப் பாத்திரத்தில் கழுவியதைப் போல, இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்ததை அன்றாடம் விசுவாசித்து நமது சொந்தப் பாவங்களைக் கழுவ வேண்டும், ஏனெனில், நாம் இந்த உலகத்தில் வாழுகையில், அதன் அசுத்தத்திற்கு ஆளாகும் நேரங்கள் அதிகமாகும்.
எல்லாப் பாவங்களும், அதனை சரீரத்தினாலோ, இருதயத்தாலோ, அல்லது நினைவுகளினாலோ செய்தாலும் அவை, உலகின் பாவங்களில் அடங்கும். அப்படியானால் எந்த விசுவாசத்தால் உலகின் பாவங்களைக் கழுவ முடியும்? இயேசு பெற்ற ஞானஸ்நானட்தின் மூலம் மட்டுமே அவற்றை எல்லாம் கழுவ முடியும். இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசித்து சுத்தமாகியவர்கள் தம்முடைய இருதயங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அவர்கள் பாவம் செய்யும் போதெல்லாம், அவற்றை விசுவாசத்தினால் மீண்டும் கழுவ வேண்டும். இயேசுவின் ஞானஸ்நானத்தை அன்றாடம் நினைத்து தம் செய்கைகளின் ஆடையை விசுவாசத்தால் கழுவுபவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். யோவானிடமிருந்து இயேசு கிறிஸ்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டு விட்டதால், இந்த சத்தியத்தை அசை போடுவதாலும் அதனை அன்றாடம் விசுவாசிப்பதாலும், எல்லாப் பாவங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுதலை அடைய முடியும்.
நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும், அதாவது இயேசு கிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டது. இந்த நற்செய்தியை விசுவாசித்து நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை, ஏனெனில் சர்வ வல்லமை மிக்க கர்த்தர் உலகத்தோற்றத்திற்கு முன்னரேயே, பழைய ஏற்பாட்டின் காலத்திற்கு முன்னரேயே அதனைத் திட்டமிட்டார். யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உங்கள் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக்கொண்டு, சிலுவைக்குச் சென்றதன் மூலமாக உங்கள் பாவங்களுக்கான தண்டனையைப் பெற்றார் என்ற சத்தியமானது கர்த்தரின் நீதியையும் உங்கள் இரட்சிப்பையும் பெற்றுக் கொள்ள உங்களை ஏதுவாக்கியது. சத்தியமானது ராஜாதி ராஜாவாகிய இயேசு உங்களை பாவங்களில் இருந்து நித்தியமாக இரட்சித்தார் என்பதை புரிந்து கொள்ள உங்களை ஏதுவாக்கியது, அது உங்கள் இருதயத்திலிருந்த தீய மனசாட்சியை அகற்றி, உங்கள் சரீரங்களை தூய நீரினால் கழுவியதி, இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உங்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத வார்த்தையாகும், மேலும் நீங்கள் விசுவாசிக்கையில் அது இன்னமும் அதிகமாக பிரகாசிக்கிறது.
இயேசுவானவரின் 3 வருட ஊழிய வாழ்க்கையில், அவர் செய்த முதலாவது காரியம் முழு மனித குலத்தையும் பாவத்திலிருந்து இரட்சிக்க ஞானஸ்நானம் பெற்றதுவேயாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, அப்படி செய்வதற்கு, அவர் யோவனிடம் சென்று ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது. ஆகவே, நான்கு நற்செய்தி புத்தகங்களும் இந்த முக்கியமான நிகழ்ச்சியுடனேயே தொடங்குகின்றன.
நீங்களும் நானும் மரிக்க வேண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடந்தது என்ன? நம் தேவன் இப்பூமிக்கு வந்தார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நம் பாவங்களைப் ஏற்றுக் கொண்டார், தேவாட்டுக் குட்டியானார், உலகின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு சுமந்து சென்றார், நம்முடைய பாவங்களுக்காக தன்னுடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் அடிக்கப் பட்டார், தன்னுடைய் இருதயத்திலிருந்த எல்லா இரத்தத்தையும் சிந்தி மரித்தார், மேலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். இதனால்தான் இயேசு தனது கடைசி மூச்சை சிலுவையிலிருந்து விடும் போது, “முடிந்தது” என யோவான் 19:30 என்றார்.
இயேசு கூறிய, செய்த அனைத்தும் உண்மையே. நம்மை இரட்சிப்பதற்காக இயேசு பலி காணிக்கையானார், மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பின், தனது உயிர்த்தெழுதலை 40 நாட்களுக்கு சாட்சியாக அறிவித்து, பரலோகம் ஏறி, இப்போது தனது பிதாவின் சிங்காசனத்திற்கு வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். நம்மை எடுத்துக் கொள்வதற்காக இதே இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவார். இயேசு முதலாவதாக இப்பூமிக்கு வந்த போது இரட்சகராக வந்தார், ஆனால் மீண்டுமாக இரண்டாவது முறை வரும் போது, விசுவாசிக்காத அனைவருக்கும் ஆக்கினை அளிக்கும் நியாயாதிபதியாக வருவார். நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு திரும்ப வருவார் என்பதை நீங்கள் இப்போது உணர வேண்டும், அவர் இந்த பூமியில் 33 வருடங்களாக வாழ்ந்தபோது நிறைவேற்றிய, நீர், இரத்தம், மற்றும் ஆவி ஆகியவற்றின் இரட்சிப்பை விசுவாசித்தவர்களை கர்த்தரின் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளவும், ஆயிர வருட அரசாட்சியிலும், நித்திய பரலோகத்திலும் நாம் வாழ்வதை ஏதுவாக்கவும், நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவி ஆகியவற்றை விசுவாசிக்காமல், கர்த்தரின் அன்பை நிராகரித்தவர்களை நியாயம் தீர்க்கவும் அவர் வருகிறார்.
இப்போது, உங்களால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அலட்சியம் செய்து, அதனை நீங்கள் அறியவில்லை என்பதைப் போல நடிக்க முடியாது, ஆனால் நீங்கள் இந்த இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். மேலும் ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாகவும் பலி காணிக்கை முறையின் மூலமாகவும் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்ததைப் போலவே, இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து, கைவைத்தலைப் போன்ற ஞானஸ்நானத்தைப் பெற்று, முழு உலகிலும் உள்ள எல்லா நாட்டவரையும் இரட்சித்தார் என்பத நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த சத்தியத்தை உங்கல் முழு இருதயத்தாலும் விசுவாசித்து பாவ மன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள வேன்டும்.
அப்படியிருந்தும் கூட, இஸ்ரவேல் நாடானது சத்தியத்தை மறுத்து இன்னொரு மேசியாவிற்காக காத்திருக்கிறது. ஆனால் இயேசுவைத் தவிர இன்னொரு மேசியாவிற்காக எத்தனைத் தீவிரமாக இஸ்ரவேல் மக்கள் காத்திருந்தாலும், இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறொரு மேசியா வரப் போவதில்லை. இயேசுவைத் தவிர வேறொரு மேசியா இப்பூமியில் இல்லை என்பது அத்தாட்சியுள்ள சத்தியமாகும், இந்த சத்தியத்தைப் பொருத்தவரை இஸ்ரவேல் மக்களுக்கும் எந்த விதிவிலக்குமில்லை, மற்றும் அவர்களுக்கு வேறு இரட்சகரும் இல்லை. இயேசு கிறிஸ்துவை தேவகுமாரனாக விசுவாசிக்காத பாவத்திற்காக இஸ்ரவேல் மக்கள் மனம் வருந்த வேண்டும், மேலும் இயேசு கிறிஸ்துவே அவர்களின் உண்மையான மேசியா என்பதை விசுவாசித்து இதனை சத்தியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். வரப்போகிற இரட்சகர் இயேசு கிறிஸ்துவே என்பதை மீண்டுமாக உறுதி செய்து அதனை விசுவாசிப்பதின் மூலமாக, இஸ்ரவேல் நாடானது, உண்மையான ஆவிக்குரிய கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாகிவிடும்.
இப்போதும் கூட, தம்மை இவ்வுலகின் பாடுகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் இரட்சிக்கக் கூடிய மகத்தான, திறமையுள்ள, வல்லமை நிறைந்த மேசியாவிற்காக இஸ்ரவேல் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாம் மேசியாவான இயேசு கிறிஸ்து ஏற்கனவே மனித சரீரத்தில் இப்பூமிக்கு வந்து, அவர்களை இரட்சித்தார், அவர்களால் தம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் தண்டனையாக நெருப்பில் எரிவதையும் தவிர்க்க இயலாது இருந்தது. மேலும் அவர்கள் இந்த சத்தியத்தை ஒத்துக் கொண்டு அதனை விசுவாசிக்க வேன்டும். அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக, பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்த பாவ பலி காணிக்கையாக இயேசு தாமே இப்பூமிக்கு வந்து, அவர்களிம் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களை நித்தியமாக இரட்சித்து, அவர்களை கர்த்தரின் சொந்த மக்களாக்கினார்.
இரட்சகராக வந்த இயேசு கிறிஸ்து, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமான, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் நம் அனைவரையும் இரட்சித்தார். மேலும் இதனை விசுவாசிக்கும் நம் அனைவரையும் ஆயிர வருட அரசாட்சியில் அவருடனே கூட ஆளுவதற்கு ஏதுவாக்குவார். இதன் பிறகு, என்றென்றைக்கும் இருக்கும் கர்த்தரின் ராஜ்யத்தில் நாம் பங்கேற்பதை அனுமதிப்பார், மேலும் கர்த்தராகிய அவருடனே மகிழ்ச்சியுடனும் மகிமையுடனும் நித்தியமாக வாழலாம். மேலும், நாம் இந்த உலகத்தில் இருக்கும் போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நம் முழு இருதயங்களாலும் விசுவாசித்து அவருடைய சொந்தப் பிள்ளைகளாக வேண்டும். இந்த சத்திய நற்செய்தியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தரின் பாவமற்ற பிள்ளைகளாக முடியும் மேலும் அவர்களுக்கு மற்ற உலகத்திலே எல்லா ஆசீர்வாதங்களும் காத்திருக்கின்றன என்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
அல்லேலூயா! பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் நமக்குக் கொடுத்தமைக்காக என் விசுவாசத்துடனே தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். தான் சீக்கிரம் திரும்பி வருவதாக நம் தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்; அப்படியே ஆகட்டும், வாரும், தேவனே!