• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Sermons

தலைப்பு 11 : ஆசரிப்புக்கூடாரம்

[11-22] ஆசரிப்புக் கூடார மூடுதிரைகளில் மறைந்துள்ள நான்கு இரகசியங்கள் (யாத்திராகமம் 26:1-14)

2021.04.24 38
(யாத்திராகமம் 26:1-14)
“மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பர நூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய். ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும். ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக. காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக, அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும். வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும். ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப் போடுவாயாக. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி, ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக. கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தின் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும். சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.”
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகள்
 
ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புவோமாக. ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரையானது நான்கு அடுக்குகளால் ஆனது. ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி கர்த்தர் மோசேயிடம் கூறியபோது விளக்கமான செய்முறைகளையும் கூறினார். வித்தியாசமாக, முதலாவது மூடுதிரையை உள்ளிருந்து மட்டுமே காணமுடியும், ஆசரிப்புக் கூடாரத்தின் பலகைகளையும் உள்ளிருந்த பாத்திரங்களையும் அது மூடிக்கொண்டிருந்தது. இந்த மூடுதிரைகள் ஆசரிப்புக் கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் ஆகியவற்றின் அடிவரை பலகைகளின் மீது விரிக்கப்பட்டிருந்தன. மேலும் அவை இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் செய்யப்பட்டு, கேருபீன்களின் அழகிய சித்திரங்கள் அதில் நெய்யப்பட்டிருந்தன.
முதல் மூடுதிரையானது இரன்டு முக்கிய திரைச்சீலைகளை இணைத்து செய்யப்பட்டிருந்தன, அவை ஐந்து சிறிய திரைச்சீலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து செய்யப் பட்டிருந்தன. இந்த இரண்டு முக்கிய திரைச்சீலைகளை இணைக்க ஐம்பது இள நீல நூல் காதுகள் உபயோகிக்கப் பட்டு, திரைச்சீலைகளின் முனைகள் இணைக்கப்பட்டன. இந்த இள நீல நூல் காதுகளில் பொன் கொக்கிகள் பொருத்தப்பட்டு, இரண்டு முக்கிய திரைச்சீலைகளை ஒன்றாக மாற்றின.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரை பத்து திரைச்சீலைகளால் ஆனது, அவை இரண்டு அகலமான திரைச்சீலைகளாக இணைக்கப் பட்டன. அதனுடைய நீளம் 28 முளமாகும். ஒரு முளமானது 45 செ.மீ. (1.5 அடிகள்) ஆகும், ஆகவே இன்றைய அளவுகளின் படி அதன் நீளம் 12.6 மீட்டர்கள் (41.6 அடிகள்) ஆகும், அதே நேரத்தில் ஒவ்வொரு திரைச்சீலையின் அகலமும் நான்கு முளமாகும், அதாவது 1.8மீ. (5.9 அடிகள்) ஐந்து சிறிய திரைச்சீலைகள் இணைக்கப்பட்டு இரண்டு முக்கிய திரைச்சீலைகள் தயாரிக்கப் பட்டன, அதன் பிறகு இந்த இரண்டு திரைச்சீலைகளும் ஐம்பது இள நீல நூலினால் தயாரிக்கப்பட்ட காதுகளாலும், ஐம்பது பொன் கொக்கிகளாலும் இணைக்கப் பட்டன. இப்படியாக ஆசரிப்புக் கூடாரத்தின் முதல் மூடுதிரை செய்யப்பட்டது. ஆனால் அங்கே இன்னமும் மூன்று மூடுதிரைகள் உள்ளன. ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரை கேரூபீன்களின் சித்திரவேலைப்பாடுகளுடன் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் அமைந்திருந்தது.
பரலோக ராஜ்யத்தின் வழியைக் காட்டுவதற்காக இது ஏற்படுத்தப் பட்டது. உதாரணமாக, ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையில் பயன்படுத்தப்பட்ட இளநீல நிற நூலானது உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு ஏற்றுக் கொள்வதற்காக அவர் பெற்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது. ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு சுமந்தார் (மத்தேயு 3:15). தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு தன்மீது ஏற்றுக் கொண்டதால், இந்த ஞானஸ்நானம் இரட்சிப்பிற்கு ஒப்பானதாயிற்று (1 பேதுரு 3:21).
ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரை ஆட்டின் மயிரினால் உருவாயிற்று (யாத்திராகமம் 26:7). அதனுடைய நீளமானது முதலாவது மூடுதிரையை விட 90 செ.மீ (3 அடிகள்) அதிக நீளமுடையதாயிருந்தது. 30 முளம் நீளம் அதாவது 13.5 மீ. (45 அடிகள்) மற்றும் 4 முளம் அகலம் அதாவது 1.8மீ (5.9 அடிகள்) உடையதாயிருந்தது. இந்த மூடுதிரையானது பதினோரு திரைச்சீலைகளினால் ஆனது, அவை இரண்டு முக்கிய திரைச்சீலைகளாக இணைக்கப் பட்டன, அவற்றில் ஒன்று ஐந்து சிறிய திரைச்சீலைகளாலும், மற்றது ஆறு சிறிய திரைச்சீலைகளினாலும் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இந்த இரண்டு முக்கிய திரைச்சீலைகளும் பித்தளை கொக்கிகளால் இணைக்கப்பட்டன.
இயேசு கர்த்தரின் நீதியினால் நம்மை பரிசுத்தமாக்கினார் என ஆட்டின் மயிரினால் தயாரிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரை நம்மிடம் கூறுகிறது. இந்த பூமிக்கு வந்து, நமது தேவனுக்கு 30 வயதான போது, தானாகவே முன் வந்து யோவானிடம் அவர் ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக, உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இதன் பலனாக தேவன் உலகின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு எடுத்துச் சென்றார், அங்கே அவர் சிலுவையில் அறையப்பட்டு நமது எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து இதன் மூலமாக நம் இரட்சகரானார். ஆகவே ஆட்டின் மயிரினால் ஆன இரண்டாவது மூடுதிரையானது, போக்காடாகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தினாலும் இரத்தத்தினாலும் நம்மை பாவமற்றவர்களாக்கினார் என நம்மிடம் கூறுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூன்றாவது மூடுதிரையானது சிவப்பு நிறம் பூசப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலினால் தயாரிக்கப் பட்டது, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் இயேசு நம் பாவங்களைத் தன் மீது ஏற்றுக் கொண்டதையும், அவற்றை சிலுவைக்குச் சுமந்து சென்றதையும், தனது இரத்தத்தைச் சிந்தி ஆக்கினைக்குள்ளானதையும் அதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையானோம் எனவும் அது கூறுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தின் நான்காவது மூடுதிரையானது தகசுத் தோலினால் செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை வெளியில் இருந்து பார்க்கும்போது அவருடைய தோற்றத்தில் எதுவும் விரும்பப்படத்தக்கதாக இருக்கவில்லை என்பது தகசுத் தோலின் பொருளாகும். ஆனால் அவரே கர்த்தராவார். நம்மை உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதர்காக இயேசு கிறிஸ்து தன்னை மனிதர்கள் அளவிற்குத் தாழ்த்தினார் என அவரைக் குறித்த சித்திரத்தை தகசுத் தோல் நமக்கு காட்டுகிறது.
ஆசரிப்புக் கூடாரத்தின் இந்த நான்கு மூடுதிரைகளையும் விரிவாக நாம் ஆராய்வோம்.
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையின் ஆவிக்குரிய விளக்கம்
 
நான்கு மூடுதிரைகளின் முதலாவது மூடுதிரையில் பயன்படுத்தப் பட்ட பொருள்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவையாகும். ஆசரிப்புக் கூடாரத்தின் உட்புறமாக இருந்து தெளிவாக அதனைக் காணுமாறு அது அமைக்கப் பட்டிருந்தது. கேரூபீன்களின் ஓவியங்களும் அதில் நெய்யப்பட்டிருந்தன, ஆகவே அவை ஆசரிப்புக் கூடார கூரையிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. இந்த நான்கு நூல்களிலும் உள்ள ஆவிக்குரிய பொருள்கள் கீழ்வருமாறு.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதல் மூடுதிரையில் பயன்படுத்தப் பட்ட பொருட்களின் இளநீல நூல் அறிவித்த இரகசியம் யாதெனில், மேசியா தனது ஞானஸ்நானத்தின் மூலம் முழு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார் என்பதாகும். அவர் இப்பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானம் பெற்று, பழைய ஏற்பாட்டில் கைவைக்கப்படுதலின் மூலம் பலி காணிக்கைகள் பாவிகளின் மீறுதல்களையெல்லாம் தம்மீது ஏற்றுக் கொண்டதைப் போல, உலகின் எல்லாப் பாவங்களையும் அப்போது ஏற்றுக் கொண்டார். இந்த எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினைகளையும் கூட ஒரே தரமாக பெற்றுக் கொண்டதின் மூலமாக இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்பதையும் இது கூறுகிறது.
மறுபுறம் பார்க்கையில், இந்த உலகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவும் முழுமையான கர்த்தராகவும் இருக்கிறார் என இரத்தாம்பர நூல் நமக்குத் தெரிவிக்கிறது. சாராம்சத்தில் இயேசுவே கர்த்தர் என இது நமக்குக் கூறுகிறது. யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட இயேசுவானவர் சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தி, நமது சார்பாக நமது பாவங்களுக்கான தண்டனையைப் பெற்ற பலி காணிக்கையானார் என்பதை ஆசரிப்புக் கூடாரத்தில் அறிவிக்கப் பட்ட இரத்தாம்பர நூலானது நமக்குத் தெரிவிக்கிறது.
இயேசுவின் ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பலி காணிக்கை முறையைப் போன்றதேயாகும், இங்கே கைவைத்தலின் மூலம் பாவிகளின் அக்கிரமங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட களங்கமில்லாத பலி காணிக்கையானது இந்த பாவங்களுக்கான ஆக்கினையாக மரிக்கும் படியாக இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. இதைப் போலவே, புதிய ஏற்பாட்டிலும் கூட, இயேசு ஞானஸ்நானம் பெற்று, சிலுவைக்குச் சென், தனது இரத்தத்தைச் சிந்தி அதிலே மரித்தார்.
இயேசு கிறிஸ்துவைப் பலி காணிக்கையாக வேதாகமம் கூறுகிறது. அவருடைய பெயர் “இயேசு” என்பதாகும், “ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21). கிறிஸ்து என்ற பெயரின் பொருள் “அபிஷேகிக்கப் பட்டவர்” என்பதாகும். பழைய ஏற்பாட்டைப் பொருத்தவர மூன்று விதமான மனிதர்கள் அபிஷேகிக்கப் பட வேண்டியவர்கள்; ராஜாக்கள், தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள். ஆகவே “இயேசு கிறிஸ்து” என்ற பெயரானது அவரே இரட்சகர் என்றும், கர்த்தர் என்றும், பரலோக ராஜ்யத்தின் தலைமை ஆசாரியன் என்றும், நித்தியமான சத்தியத்தின் தேவன் என்பதையும் காட்டுகிறது. இப் பூமிக்கு வந்ததின் மூலமும், யோவானால ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், தன்னுடைய இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும், அவர் நம்முடைய உண்மையான இரட்சகரானார்.
இதைப் போல, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் மேசியா வருவார் என்றும், அதன் மூலமாக அவரை விசுவாசிப்பவர்களை அவர்களின் பாவங்களில் இருந்தும் ஆக்கினையில் இருந்தும் இரட்சிப்பார் என்றும் ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையானது வெளிப்படுத்துகிறது. இந்த ஊழியங்கள் இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் தவிர வேறில்லை. நாலு நிறங்களையுடைய முதலாவது மூடுதிரையினால் அறிவிக்கப்பட்ட இரட்சிப்பின் இரகசியமானது, மேசியா இவ்வுலகிற்கு வந்தார் என்றும், ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்றும், மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் பட்டார் என்றும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்றும் இது கூறுகிறது.
இந்த ஊழியங்களின் மூலமாக, தன்னை விசுவாசிப்பவர்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர் இரட்சித்து அவர்களை கர்த்தரின் மக்களாக்கினார். இயேசு கிறிஸ்துவே ராஜாதி ராஜாவும், பலி காணிக்கையும் ஆனார், அவர் பாவிகளின் மீறுதல்களைத் துடைத்து, விசுவாசிப்பவர்கள அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஆக்கினைகளிலிருந்தும் விடுவித்தார்.
 
 
ஆசரிப்புக் கூடார இரண்டாம் மூடுதிரையின் ஆவிக்குரிய பொருள்
 
ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரையில் பயன் படுத்தப்பட்ட பொருளானது ஆட்டின் மயிராகும். வரப் போகிற மேசியா, மனிதகுலத்தை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அப்பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்தும் விடுவிப்பதின் மூலமாக, அவர்களை நீதிமான்களாக்குவார் என இது நம்மிடம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரின் நீதியை மனிதர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிப்பது அத்தியாவசியமானது என்பதை இது நமக்குக் காட்டுகிறது. கர்த்தரின் நீதியானது நம் இருதயங்களை பனியைப் போல வென்மையாக கழுவியது, அதன் மூலம் நமது பாவங்களுக்கான பாவமன்னிப்பைப் பெற நம்மை ஏதுவாக்கியது.
 
 
ஆசரிப்புக் கூடார மூன்றாம் மூடுதிரையின் ஆவிக்குரிய பொருள்
 
ஆசரிப்புக் கூடார மூன்றாம் மூடுதிரையில் உபயோகப் படுத்தப் பட்ட பொருள்கள் சிவப்பு நிறம் பூசப்பட்ட ஆட்டுக் கடாக்களின் தோலாகும். மேசிய உலகிற்கு வருவார் என்றும், ஞானஸ்நானம் பெறுவதின் மூலம் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமப்பார் என்றும், சிலுவையில் அறையப் பட்டு தன் மக்களின் பாவங்களுக்காக பலி காணிக்கையாவார் என்றும் இது அறிவிக்கின்றது. சிலுவையில் இயேசு சிந்திய இரத்தமானது உலகின் எல்லாப் பாவங்களுக்கும் கிரயமான மரணக் கிரயத்தைக் கொடுத்துத் தீர்த்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்துவே பலி காணிக்கையானார் என்பதையும் இதன் மூலமாக அவர் தன் மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்தார் என்பதையும் இது நமக்குக் கூறுகிறது (லேவியராகமம் 16).
பாவநிவாரண நாளில், இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு பலி காணிக்கை ஆடுகள் ஆயத்தம் செய்யப் பட்டன. அவற்றில் ஒன்று தம் பாவங்களுக்காக அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் பாவநிவாரண பலி காணிக்கையாகும். அந்நேரத்தில், தலைமை ஆசாரியன் முதலாவது பலி காணிக்கை ஆட்டின் தலைமீது தன் கைகளை வைத்து, தன் மக்களின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது ஒரேதரமாக செலுத்தினான். அதன் பிறகு அவன் அதன் இரத்தத்தை எடுத்து கிருபாசனத்தின் மீது ஏழு முறையும் கிருபாசனத்திற்கு கிழக்குப் பக்கத்திலும் தெளித்தான். இப்படியாகவே இஸ்ரவேல் மக்களின் பாவநிவாரண பலி கர்த்தருக்கு கொடுக்கப் பட்டது.
பிறகு, ஆசரிப்புக் கூடாரத்தை சுற்றியுள்ள இஸ்ரவேல் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், தலைமை ஆசாரியன் தனது கைகளை மற்ற போக்காட்டின் மீது வைத்து, இஸ்ரவேல் மக்கள் செய்த ஒரு வருட பாவங்களை அதன் மீது செலுத்தினான். தலைமை ஆசாரியன் கைவைத்ததின் மூலமாக இஸ்ரவேல் மக்கள் கடந்த ஒரு வருடங்களாக செய்த எல்லாப் பாவங்களும் இதன் மூலமாக மறைந்தன என அவர்கள் நிச்சயித்துக் கொள்ள இப்படிச் செய்யப்பட்டது. அவர்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்த இந்த போக்காடானது, மரிக்கும் படியாக வனாந்தரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது (வேவியராகமம் 16:21-22). மேசியா இந்த பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளுவதின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு (மத்தேயு 11:11-13, 3:13-17), தன்னுடைய விருப்பத்துடனே சிலுவையில் அறையப் பட்டு இந்த பாவங்களுக்கான ஆக்கினையை ஏற்றுக் கொண்டு, இதன் மூலமாக தன்னுடைய மக்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பார் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தமாக இருந்தது.
 
 
ஆசரிப்புக் கூடார மூன்றாம் மூடுதிரையின் ஆவிக்குரிய பொருள்
 
தகசுத் தோல் நமது சாயலைக் காட்டுகிறது, மேலும் தேவன் இப்பூமிக்கு வந்தபோது அவரின் சாயலையும் கூட இது காட்டுகிறது. பாவிகளிடம் சென்று அவர்களை நீதிமானாக்குவதற்கு நம் தேவன் இப்பூமிக்கு மனித மாமிசத்தில் வந்தார். இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்தபோது அவர் தன்னைத் தானே உயர்த்தவில்லை என்பதையும், அதற்கு மாறாக, தாழ்மையான பிறப்புடையவராகத் தன்னைத் தாழ்த்தியதை தகசுத் தோல் நம்மிடம் கூறுகிறது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மேசியா வந்து இந்த பூமியின் பாவிகளை அவர்களின் மீறுதல்களிலிருந்து விடுவிப்பார் என்று கர்த்தர் தனது தீர்க்கதரிசிகளின் மூலமாக கூறினார். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலமாகவும், அவருடைய சிலுவை இரத்தத்தின் மூலமாகவும், தனது ஊழியர்களின் மூலமாக கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கர்த்தர் நிறவேற்றியதை நாம் காணலாம். மேசியாவானவர் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை சுமப்பது மட்டுமின்றி, இந்த உலகத்தில் உள்ள எல்லோரினதும் பாவங்களையும் அதற்கான ஆக்கினைகளையும் சுமப்பதோடு, அவர் தன் எல்லா விசுவாசிகளையும் இரட்சித்து அவர்களைத் தனது சொந்த மக்களாக்குவார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்தமானது, உடன்படிகையின் வார்த்தையாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்ட பயன்படுத்திய பொருட்களைக் குறித்து யாத்திராகமம் 25 கூறுகிறது. இந்தப் பொருட்களில், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்புநூல், மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல், ஆட்டின் மயிர், சிவப்பு நிறம் பூசப்பட்ட ஆட்டுக்கடாவின் தோல், தகசுத் தோல், பொன், வெள்ளி, வென்கலம், தூபவர்க்கம், எண்ணெய், மற்றும் விலையேறப்பட்ட கற்கள் ஆகியவையாகும். மேசியா இப்பூமிக்கு வந்து தனது ஞானஸ்நானத்தினாலும் இரத்தம் சிந்துதலினாலும், தனது மக்களை அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிப்பார் என இந்த பொருட்கள் அனைத்தும் அறிவித்தன. மேலும், கர்த்தர் தனது மக்கள அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்காக கர்த்தரின் இரட்சிப்பின் திட்டங்களான இவற்றை ஆசரிப்புக் கூடார மூடுதிரைகள் மறைவாக வைத்திருந்தன.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகளின் ஆக்கப் பொருட்களாக இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றை உபயோகப் படுத்தும்படி கர்த்தர் ஏன் கட்டளையிட்டார்? ஆட்டின் மயிரையும், ஆட்டுக் கடாவின் தோலையும், தகசுத் தோலையும் உபயோகப் படுத்தும்படி அவர் ஏன் கட்டளையிட்டார்? உலகின் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்க கர்த்தர் செய்த திட்டங்களை நாம் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். இயேசு தனது மக்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சித்து கர்த்தரின் மக்களாக மாற்றுவதற்கு, இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் அவர் செய்த ஊழியங்களை நாம் விசுவாசிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆசரிப்புக் கூடார மூடுதிரைகளில் அறிவிக்கப்பட்ட கர்த்தரின் திட்டங்களை நாமறிந்து அதனை விசுவாசிக்க வேன்டும்.
 
 
நான்கு முறைகளின் மூலமாக
 
கர்த்தர் எப்படி நம்மை நம்முடையப் பாவங்களிலிருந்து விடுதலையாக்கினார் என்பதை ஆசரிப்புக் கூடாரத்தின் நான்கு மூடுதிரைகளும் விளக்கமாக கூறுகின்றன: மனித மாமிசத்தில் மேசியா இப்பூமிக்கு வந்து, யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, இந்த பாவங்களுக்குத் தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டு, தனது மக்களின் பாவங்களுக்கு கிரயம் செலுத்தி தனது சொந்த இரத்தத்தினால் அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை இரட்சித்தார். ஆயினும், மேசியாவைத் தமது இரட்சகராக ஏற்றுக் கொள்வோருக்கு மட்டுமே இந்த இரட்சிப்பு நிறைவேற்றப் பட்டது. ஆசரிப்புக் கூடார மூடுதிரைகளில் உள்ள பொருட்களினால் அறிவிக்கப்பட்டதைப் போல, இயேசு கிறிஸ்து தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவையினாலும் வந்து, நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரேதரமாக நம்மை இரட்சித்தார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
ஆசரிப்புக் கூடார மூடுதிரையில் அறிவிக்கப்பட்ட இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் தீர்க்கதரிசனத்திற்கு ஏற்றவாறு, புதிய ஏற்பாட்டு காலத்தில் நமது பலி காணிக்கையாக தேவகுமாரர் நம்மிடம் வந்து, ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தினார். இதற்கு மேலும், ஆசரிப்புக் கூடார மூடுதிரையில் வெளிப்படுத்தப் பட்ட மேசியாவை விசுவாசிப்பதின் மூலமாக நம்மை இரட்சிக்கும் விசுவாச காணிக்கையைக் கர்த்தருக்கு நம்மால் கொடுக்கமுடியும்.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் அறிவிக்கப்பட்ட இயேசுவின் ஊழியத்தை விசுவாசித்து விசுவாச காணிக்கையைக் கொடுக்க யாராவது தவறி கர்த்தருக்கு முன்னால் வரத்தவறினால், அவன்/அவள் நிச்சயமாக அவனின்/அவளின் பாவங்களுக்காக அழிந்து போவர். ஆனால் இந்த சத்தியத்தை ஒருவர் விசுவாசித்தால், அவனின்/அவளின் இரட்சிப்பின் விசுவாசத்தினால், அவனால்/அவளால் எந்நேரத்திலும் கர்த்தரின் பிள்ளையாக அவர் முன் செல்லமுடியும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்டவரும் பலி காணிக்கையானவருமாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத யாராலும், கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது என ஆசரிப்புக் கூடாரம் நமக்கு காட்டுகிறது.
ஆசரிப்புக் கூடார மூடுதிரையானது இப்படியாக பரலோகதின் வழியை நமக்குக் காட்டுகிறது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து பரலோக ராஜ்யத்திற்குள் செல்லும் வழியை நாம் கண்டு பிடிக்க வேண்டும். பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல விரும்பும் யாவரும் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து அவனின்/அவளின் பாவப் பிரச்சினையை தீர்க்கவேண்டும். மேலும், இந்த சத்தியத்தை மக்கள் விசுவாசித்து கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசிக்கிறார்களா அல்லது அதனை விசுவாசிக்காததினால் கர்த்தரால் தள்ளிவிடப் படுவார்களா என்பது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவாகும்.
ஆசரிப்புக் கூடார மூடுதிரையில் வெளிப்படுத்தப்பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கிறோமா அல்லது விசுவாசிக்கவில்லையா என்பது நமது மனசாட்சியைப் பொறுத்தது. ஆனால் இந்த சத்தியத்தை ஒருவர் விசுவாசிக்காவிட்டால் பேரழிவு ஏற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேன்டும். ஆயினும். கர்த்தரின் பிரகாசிக்கும் வீட்டிற்குள் அவரின் சித்தப்படி நாம் பிரவேசிக்க வேண்டுமானால், யோவானிடமிருந்து நமது மேசியா பெற்ற ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து நமது பாவங்களிலிருந்து நித்தியமாக இரட்சிக்கப் படவேன்டும். மேசியாவின் இந்த ஞானஸ்நானமும் அவரின் சிலுவை மரணமும் அவர்களின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தன என்பதை எல்லோரும் தமது இருதயங்களில் ஏற்றுக் கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும். அவர்கள் அப்படியாக விசுவாசிக்கும்போது மட்டுமே நித்திய பாவமன்னிப்பைப் பெற்று கர்த்தரின் மகிமைக்குள் நம்மால் பிரவேசிக்கமுடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதல் மூடுதிரையானது நான்கு நிற நூல்களினால் நெய்யப்பட்டது, அது ஆட்டின் மயிரினால் செய்யப் பட்ட இரண்டாவது மூடுதிரைக்கு கீழே வைக்கப் பட்டது. இயேசுவின் ஊழியங்களின் அடிப்படையில் நம்மால் பாவமன்னிப்பு பெற முடியும் என்பதை இது நமக்கு காட்டுகிறது: அது அவருடைய ஞானஸ்நானமும் அவரின் சொந்த இரத்தமுமாகும். எதுவாயினும், கர்த்தரின் நீதியை விசுவாசித்து நாம் பெற்றுக் கொண்ட பாவமன்னிப்பானது, முதலாவது மூடுதிரையில் வெளிப்படுத்தப்பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றிலுள்ள நமது விசுவாசத்தின அடிப்படையில் அமைந்தது. இந்த குறிப்பு எத்தனை நிச்சயமானது என்பதை அறிந்து கொள்ள வேதாகமத்தின் கீழ்க்கண்ட வார்த்தையைப் பார்ப்போமாக.
ஏசாயா 53:6 கூறுகிறது, “கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.” எபிரெயர் 9:28 அறிவிக்கிறது, “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு.” மேலும் 2 கொரிந்தியர் 5:21 கூறுகிறது, “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” ஆசரிப்புக் கூடார முதலாவது மூடுதிரையில் பயன்படுத்தப்பட்ட இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் இரட்சிப்பிற்கான ஊழியங்களின் அடிப்படையில் நம் இரட்சிப்பு நிறைவேறியது என இந்த எல்லா வசனங்களும் நம்மிடம் கூறுகின்றன. கிறிஸ்து தாமே சிலுவையில் தொங்கி நமது பாவங்களுக்காக ஆக்கினைகளைத் தனது சரீரத்தில் நமக்காகப் பெற்றது, யோவான் அவருக்கு கொடுத்த ஞானஸ்நானத்தின் மூலம் அவர் நம்முடைய பாவங்களை தன்மீது ஏற்றுக் கொண்டதினாலேயே சாத்தியமாயிற்று, சிலுவையினால் மட்டுமே அவர் உலகின் பாவங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஞானஸ்நானத்தைப் இயேசுவானவர் பெற்றுக் கொண்டதின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு சிலுவையின் கொடிய தண்டனைகளை அனுபவித்த போது, அவர் அதற்காக பயப்படவில்லை. அவர் மகிழ்ந்தார்! ஏன்? ஏனெனில் அந்த நொடிப் பொழுதே “எல்லா நீதியையும் நிறைவேற்றும்” (மத்தேயு 3:15) நேரமாக இருந்தது. நம்முடைய நம்முடைய பாவங்களில் இருந்து விடுதலைச் செய்வதற்காக, இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார். அவர் நம்மை நேசித்ததினால் அப்படிச் செய்தார். இதனால்தான் அவர் இந்த பூமிக்கு வந்து, யோவானிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, பலிகாணிக்கை என்ற பாத்திரத்திலிருந்து சித்தத்துடனே பானம் பண்ணினார். தேவன் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களையும் களங்கங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அவரால் தன் இரத்தத்தை கல்வாரியில் சிந்தி நம்முடைய சொந்தப் பாவங்களுக்கான ஆக்கினையை நம் சார்பாக பெற்றுக் கொள்ள முடிந்தது.
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையை இணைத்த கொக்கிகள் பொன்னாலானவை
 
ஐந்து திரைச்சீலைகளைக் கொண்டு ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரை உருவாக்கப்பட்டு, பொன் கொக்கிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டன. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமே பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியுமென இது நமக்கு காட்டுகிறது. ஐந்து திரைச்சீலைகளைக் கொண்டு ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரை உருவாக்கப்பட்டு, பொன் கொக்கிகளால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டதானது அவருடைய இரட்சிப்பில் விசுவாசம் வைப்பதின் மூலமே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் படமுடியும் என்பதைக் காட்டுகிறது. கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கும் உண்மையான விசுவாசமானது பொன் என்று வேதாகமத்தில் குறிப்பிடப் படுகிறது.
மேலும், நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் வார்த்தையை நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும். குறிப்பாக இளநீல நிற நூல் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிபது நமக்கு முக்கியமானது. இயேசுவின் சிலுவை மரணத்தில் மட்டும், அதன் மூலமாகவே, நமது இரட்சிப்பிற்கு எந்த வல்லமையும் இல்லை. ஏன்? ஏனெனில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் படுவதற்கு முன்னர் அவர் மீது பாவிகள் தம் பாவங்களைச் சுமத்த ஞானஸ்நானம் தேவைப் படுகிறது. இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் உலகின் எல்லாப் பாவங்களையும் சுமக்கும் படி பிதாவாகிய கர்த்தர் செய்தார் என்பதை நாம் விசுவாசிக்கும்போது மட்டுமே நமது இரட்சிப்பிற்கு சிலுவை பயன் படுகிறது.
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் நம்மிடம் கூறுவதென்ன?
 
கர்த்தர் தன்னுடைய விரிவான சத்திய வார்த்தையின் மூலமாக நம் மத்தியில் செயலாற்றினார் என்பத இது நம்மிடம் தெரிவிக்கிறது. மேசியா இந்த உலகத்திற்கு வந்து யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவையின் இரத்தத்தின் மூலமும் நமது பாவங்களையும் ஆக்கினைகளையும் சுமந்தார். அவர் தனது வார்த்தையின் மூலமாக வாக்குத்தத்தம் செய்ததின் மூலம் அவரின் இரட்சிப்பு ஏற்கனவே நிறைவேற்றப் பட்டது என இது நம்மிடம் கூறுகிறது.
புதிய ஏற்பாட்டின் காலத்தில், நம் தேவன் இப்பூமிக்கு வந்து, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமும், மரிக்கும் படியாக இரத்தத்தைச் சிந்தியதாலும், நமது பாவங்களுக்கான எல்லாப் ஆக்கினைகளையும் ஏற்றுக் கொண்டு, இதன் மூலமாக இரட்சிப்பின் எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றினார். யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதின் மூலமும், சிலுவையில் அறையப்பட்டதின் மூலமும், பிதாவின் சித்தத்தை நம் தேவன் நிறைவேற்றினார். கர்த்தர் தனது இஸ்ரவேல் மக்களிடம் உடன்படிக்கைச் செய்த உடன்படிக்கையானது அவரின் குமாரராகிய இயேசுவின் மூலமாக நிறைவேறியது.
அப்படியானால் இந்த சத்தியத்திற்கு நெருங்கிய கவனத்தைச் செலுத்த வேண்டியது யார்? அப்படிச் செய்ய வேண்டியது இஸ்ரவேல் மக்கள் மட்டுமா? அல்லது நீங்களும் நானுமா?
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரை ஐம்பது பொன் கொக்கிகளால் இணைக்கப் பட்டிருப்பது நம்மிடமிருந்து உண்மையான விசுவாசத்தை எதிர்பார்க்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையில் பயன்படுத்தப் பட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஊழியத்தின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் அவர் கழுவி விட்டார் என்பதை அறிந்து விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே, நம்மால் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்று, இது நம்மிடம் காட்டுகிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால், சத்தியத்தின் வார்த்தையை விசுவாசிப்பதின் மூலமே பாவமன்னிப்பு நமக்கு கிட்டுகிறது என்பதை அது நமக்குக் காட்டுகிறது. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வார்த்தையின் மூலமாக, ஆசரிப்புக் கூடார மூடுதிரையின் மூலமாக வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் சிலுவை இரத்தம் ஆகியவை நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தன என்பதை விசுவாசிப்பதின் மூலமே உண்மையான இரட்சிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள் முடியும் என்பதை கர்த்தர் விளக்கமாக நமக்குக் காட்டுகிறார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையின் இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் கழுவி பனியைப் போல வென்மையாக்க கர்த்தர் நம்மை ஏதுவாக்கினார். இந்த விசுவாசத்தை உடையவர்களை மட்டுமே தனது ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க கர்த்தர் நம்மை அனுமதித்தார். ஆசரிப்புக் கூடார மூடுதிரையை இஸ்ரவேல் அறிந்து அதனை நாம் விசுவாசிக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் ஊழியங்களின் மூலம் வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிபதின் மூலமாக, கர்த்தரின் பிள்ளைகள் என்ற தகுதியை நாம் பெற்று அவரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் மகிமையையும் பெறுவோம்.
இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட தனது செயல்களின் மூலமாக மேசியா நம்மை நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்திருக்கும் போது, கர்த்தரின் மிகப் பெரிய மகத்தான அன்பை விசுவாசிக்காமல் அதனை எப்படி புறம்பேத் தள்ளுவோம்? விசுவாசத்தினால் மட்டுமே பெறக்கூடிய நமது பாவமன்னிப்பையும் பரலோக ராஜ்யத்தையும் நம்மால் எப்படி நிராகரிக்க முடியும்? தனது ஞானஸ்நானத்தினாலும் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக நாம் விசுவாசிக்க வேண்டும். அப்போது மட்டுமே கர்த்தரின் பிள்ளைகளாக நம்மால் மாற முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையின் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்காதவர்கள் தமது பாவங்களை விசுவாசத்தினால் கழுவ முடியாதவர்களாக இருக்கின்றனர். இந்த சத்தியத்தை விசுவாசிக்காதவர்களால் கர்த்தரின் பிள்ளைகளாக முடியாது. இதனால் தான் ஆசரிப்புக் கூடார மூடுதிரையின் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை நாம் விசுவாசித்து அதன் மூலமாக நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
 
ஆட்டின் மயிரினால் உருவான மூடுதிரையானது ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையை விட பெரிதாக தயாரிக்கப் பட்டது
 
ஆட்டின் மயிரினால் உருவான இரண்டாவது மூடுதிரையானது ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையை விட பெரிதானது. கர்த்தருக்கு எதிராக நிற்பவர்களால் ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தைக் காணமுடியாது என இது பொருள்படுகிறது. ஆசரிப்புக் கூடார முதலாவது மூடுதிரையின் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட பாவமன்னிப்பின் இரகசியத்தை மறைக்க வேண்டியிருந்தது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஊழியங்களை விசுவாசித்து தன்னை மதித்து, பயப்படுகிறவர்களை மட்டுமே கர்த்தர் பரலோகத்தில் அனுமதிப்பார் என்பதே இதற்கான காரணமாகும்.
பாவத்திற்குள் விழுந்த மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிய பிறகு, அத்தோட்டத்தின் கிழக்குப் பக்கத்தில் கேரூபீன்களை கர்த்தர் நிறுத்தி வைத்ததற்கும், ஜீவ விருட்சத்தைக் காக்க எந்நேரமும் சுழன்றுக் கொண்டிருக்கும் கத்தியை வைத்ததிற்கும் இதுவே காரணமாகும் (ஆதியாகமம் 3:24). பரலோக ராஜ்யம் செல்லுவதற்கு ஏதுவாக்கும் சத்தியத்தை முதலாவது கர்த்தரை விசுவாசிக்காமல் காணமுடியாது. இதனால் தான் ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையை விட இரண்டாவது மூடுதிரையை கர்த்தர் பெரிதாக உருவாக்கினார்.
முதலாவது மூடுதிரையில் வெளிப்படுத்தப்பட்ட பாவமன்னிப்பை நாம் பெற்றபிறகே நம்மால் நீதிமானாக முடியும் என்பதை ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரை நமக்கு காட்டுகிறது. வேறுவகையில் கூறினால், கர்த்தர் தனது வார்த்தையை பயத்துடனும் மரியாதையுடனும் விசுவாசிப்பவர்களை மட்டுமே சத்திய நற்செய்தியை பெற்றுக் கொள்ளவும், தனது மக்களாவதையும் அவர் அனுமதித்தார். இது இப்படித் தானிருக்க வேண்டும் என்று கர்த்தர் முடிவு செய்துள்ள படியால், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட பாவமன்னிப்பின் சத்தியத்தை விசுவாசிக்காமல் யாரும் தன் பிள்ளைகளாவதை அவர் அனுமதிப்பதில்லை. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகிய இரகசியத்தின் ஒரு சிறிய அளவைக் கூட தீய இருதயங்களை உடையவர்களால் உணரமுடியாது என்பது கர்த்தரின் சித்தமாகும்.
 
 
ஆசரிப்புக் கூடாரத்தின் இரண்டாவது மூடுதிரை ஆட்டின் மயிரினாலும், அதன் கொக்கிகள் வெண்கலத்தாலும் செய்யப் பட்டிருந்தது
 
வெண்கல கொக்கிகளின் ஆவிக்குரிய பொருள் மக்களின் பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. எல்லாப் பாவங்களுக்கும் அவற்றிற்கான பாவக் கிரயம் தேவைப் படுகிறது என்பதை வெண்கல கொக்கிகள் குறிக்கின்றன. மேலும், மேசியா இவ்வுலகிற்கு வந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக தன்மீது ஏற்றுக் கொண்டதால், அவர் தனது இரத்தத்தைச் சிலுவையில் சிந்த வேண்டியிருந்தது என்ற சத்தியத்தை வெண்கல கொக்கிகள் உள்ளடக்கியுள்ளன. யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தினால் நம்முடைய உலகத்தின் எல்லாப் பாவங்களையும் மேசியா முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததால், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களுக்கும் ஆக்கினையை ஏற்றுக் கொள்ள முடிந்தது.
வெண்கல கொக்கிகளின் மூலமாக, பாவத்தின் சம்பளம் எனக் கூறும் கர்த்தரின் சட்டத்தை நம்மால் கன்டு கொள்ள முடியும் (ரோமர் 6:23). ஆகவே மேசியாவின் மூலமாக நமது பாவங்களுக்காக நியாயத் தீர்ப்பைக் கர்த்தர் நிறைவேற்றினார் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதாலும் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததாலும், மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களுக்குமான நியாயதீர்ப்பு முற்றிலுமாக முழுமை அடைந்தது.
நாம் கர்த்தருக்கு முன்னதாக செல்லும் போது, சத்தியமானது என்னவென்று நீங்களும் நானும் முதலாவது நமது மனசாட்சிக்குள் எண்ணிப் பார்க்கவேண்டும். நமது இருதயங்களாலும், சிந்தனைகளினாலும், செய்கைகளினாலும், அன்றாடம் பாவம் செய்தவாறு நாம் இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். ஆயினும் கூட, நாம் அன்றாடம் செய்யும் இந்தப் பாவங்களைக் கூட மேசியா ஏற்றுக் கொண்டு, அதற்கான கிரயத்தை தனது சொந்த ஜீவனின் மூலமாக செலுத்தி நமக்காக நம்முடைய இரட்சிப்பை நிறைவாக்கினார். இந்த சத்தியத்தில் நமக்கு விசுவாசம் இல்லாவிட்டால், கர்த்தருக்கு முன்னதாக நமது மனசாட்சி உதிர்ந்து அழிந்து போய்விடும். ஆகவே, இந்த சத்தியத்தை நாமனைவரும் விசுவாசிக்க வேண்டும், இதன்மூலமாக நமது மரித்துப் போகும் ஆத்துமாக்களினால் இரட்சிக்கப்பட்டு மீண்டும் வாழ முடியும்.
இந்த வெண்கல கொக்கிகளால் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்க நமது இருதயங்கள் வாஞ்சிக்கின்றனவா? வெண்கல கொக்கிகள் நம்மிடம் கூறும் சத்தியம் என்னவெனில், நமது பாவங்களுக்காக ஆக்கினைக்குள்ளாவதை நம்மால் தவிர்க்க முடியாத நிலையில், ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் மேசியா இந்தப் பாவங்களை ஏற்றுக்கொண்டு, நமது சார்பாக இந்த எல்லாப் பாவங்களுக்குமாக அவர் ஆக்கினைக்குள்ளாகினார். இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலமும் சிலுவையின் இரத்தத்தின் மூலமும் பாவங்களுக்கான எல்லாத் தண்டனையையும் ஒரேதரமாக சுமந்தார். இப்படிச் செய்ததினால், நாம் கர்த்தரின் ராஜ்யத்திற்கு செல்வதை ஏதுவாக்கும் விசுவாசத்தை அவர் நமக்கு அளித்தார்.
கர்த்தருக்கு முன்னதாக யாரிடமாவது அவனின்/அவளின் இருதயத்தில் பாவமிருந்தால், அவன்/அவள் நரகத்திற்குச் செல்ல வேண்டும். நாம் பாவிகளாயிருப்பதினாலே நமக்கு கிட்ட வேன்டியதெல்லாம் நித்திய மரணம் மட்டுமே. ஆனால் நமது பாவங்களுக்காக மேசியா நமக்கான பலி காணிக்கையானதினாலே, அவற்றிற்கான ஆக்கினைகளிலிருந்து அவர் நம்மை இரட்சித்தார். நமது பாவங்களுக்காக நாம் நரகத்தில் தண்டிக்கப் படவேண்டியவர்கள், ஆயினும், நமக்கு பதிலாக மேசியா தண்டிக்கப் பட்டார் என்பதை விசுவாசிப்பதின் மூலமாக, இப்போது நம்மால் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
இந்த சத்தியத்தை நமது இருதயங்களினால் விசுவாசிப்பதின் மூலமாக நமது உலகின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்து நமது பாவங்களுக்கான ஆக்கினையிலிருந்து தப்பிக்க வேண்டும். இரட்சிப்பிற்கான இந்த செயல்களைச் செய்வதற்காகவே, யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாக மேசியா உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, இந்த உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். இந்த சத்தியத்தை அறிந்து விசுவாசிப்பதின் மூலமாக, பாவமன்னிப்பை மட்டும் நாம் பெற்றுக் கொள்ளாமல், பாவங்களுக்கான தண்டனையிலிருந்தும் இரட்சிக்கப் படவேன்டும்.
மேசியா இப்பூமிக்கு வந்து கைவைப்பதைப் போன்ற தனது ஞானஸ்நானத்தைப் முதன் முதலாகப் பெற்றதாலேயே, நமது பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு இப்பாவங்களுக்கான ஆக்கினையை சுமக்க முடிந்தது என்பதை நாம் விசுவாசித்தேயாக வேண்டும். யோவானிடமிருந்து தான் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் மேசிய பெற்றிருந்து, இப்பாவங்களுக்காக கிரயம் செலுத்துவதற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தால் அதனை நாம் அப்படியே தான் விசுவாசிக்க வேண்டும். இப்படியாக யார் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு கர்த்தர் புதிய வாழ்வை அளிக்கிறார்.
நமது பாவங்களுக்காக நாம் நரகம் செல்ல வேண்டியிருப்பதால், மேசியா நமது பாவங்களை ஏற்றுக் கொண்டு நமது இடத்திலிருந்து மரித்தார், இதன் மூலமாக நமது சொந்தப் பாவங்களுக்கான ஆக்கினைகளை சுமந்தார். நமது பாவங்களுக்கு ஆக்கினையாக மரிக்க வேண்டியவர்கள் நாமே, ஆனால் நமக்காக நம் தேவன் ஆக்கினைகளை அனுபவித்தார். நமது பாவங்களின் தீர்ப்பிலிருந்து நம்மை இரட்சிக்க நமது தேவன் மரிக்கும் படியாக சிலுவையில் அறையப்பட்டிருந்தால் அதனை நாம் அப்படியே விசுவாசிக்க வேண்டும்.
தேவனின் இரட்சிப்பை நமது இருதயங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதனை நமது இருதயங்களின் ஆழத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும், நமது மாமிசத்திற்குரிய செயல்களினால் அல்லாமல் அவரின் வார்த்தையில் உள்ள ஆவிக்குரிய விசுவாசத்தில் அப்படிச் செய்ய வேண்டும். இந்த செய்தியைக் கேட்ட நீங்கள் ஒவ்வொருவரும், இந்த சத்தியத்தை உங்கள் இருதயங்களினால் விசுவாசிக்க வேண்டும். மேசியா தனது ஞானஸ்நானத்தினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நம்மை இரட்சித்திருப்பதால், அதனை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப் படுவர்.
தாம் நரகத்திற்கு செல்லவேண்டியவர்கள் என்பதை மக்கள் விசுவாசிக்காவிட்டால், அப்போது அவர்கள் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வந்த மேசியாவை விசுவாசித்து இரட்சிக்கப் படவேண்டியதில்லை. ஆனால் தாம் நரகம் செல்லவேண்டியவர்கள் என்பதை மக்கள் விசுவாசித்தால், அவர்கள் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வந்த மேசியாவை விசுவாசித்து இரட்சிக்கப் படவேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொள்வர். இதனால் தான் இயேசு கூறினார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” (மாற்கு 2:17). அவர்கள் தம் இருதயத்தினால் இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் போது, அவர்கள் பாவமன்னிப்பை தமது இருதயங்களுக்குள் பெற்றுக் கொள்வார்கள்.
கர்த்தருக்கு முன்னதாக சட்டத்தின் படி நம்மை அளந்து பார்த்தோமானால், நாம் மிகுந்த பாவிகள் என்பதை நம்மால் மறுக்க முடியாது, நான் நமது பாவங்களுக்காக என்றென்றும் சபிக்கப் பட வேண்டியவர்கள் என்பதை அறிந்துகொள்வோம். நமது பாவங்களுக்காக நாம் நரகம் செல்லவேண்டியவர்கள் என்பதை மட்டும் நாம் ஒத்துக்கொள்ளாமல், அத்தகைய ஆக்கினையைத் தவிர்ப்பதற்கான நேர்மையான விருப்பமும் நம்மிடம் இருக்கவேண்டும், ஆகவே இந்த செய்தியை விசுவாசிப்பதின் மூலம் நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் கழுவப் படமுடியும். நமது எல்லாப் பாவங்களுக்குமான சரியான ஆக்கினையிலிருந்து விசுவாசத்தினால் நிலைத்திருப்பதற்கான ஒரே வழி இதுவேயாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையில் பயன்படுத்தப்பட்ட இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகிய இயேசுவின் ஊழியத்தில் விசுவாசமில்லாவிட்டால் மிகவும் நிச்சயமாக நரகத்தை நாம் சந்திப்போம். மேசியா பெற்ற ஞானஸ்நானமும் சிலுவையில் அவர் சிந்திய இரத்தமும் நமது ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்கு நெருங்கியத் தொடர்புடையவை.
நாம் ஆதாமின் சந்ததியினராக பிறந்தோம், ஆகவே நாம் பாவம் நிறைந்தவர்களாயிருப்பதினாலே, நாம் நரகம் செல்ல வேண்டியவர்கள். ஆகவே நாம் பாவிகள் என்பதையும் நாம் நரகத்திற்கு செல்லவேண்டியவர்கள் என்பதையும் கர்த்தருக்கு முன்பாக ஏற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலமாகவும், இரத்தம் சிந்தி மரித்ததின் மூலமாகவும், நமது தேவன் நம்மை இரட்சிப்பதற்கான செயல்களை நிறைவாக்கினார். அடிப்படையில் நாம் நரகம் செல்லவேண்டியவர்களாக இல்லா விட்டால், இந்த இரட்சிப்பிற்கான செயல்களைச் செய்ய தேவனுக்கு அவசியமில்லை. ஆனால், மறுபடியும் பிறந்தவர்களாகிய நமது இருதயங்களில் இப்போது பாவங்கள் இல்லாவிட்டாலும், நாமும் கூட முன்னால் பாவம் நிறைந்தவர்களாகவே இருந்தோம்.
பாவம் நிறைந்த எதுவும் நரகம் செல்லவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணமாகும். பாவிகள் நிச்சயமாக நரகத்திற்குள் வீசப்படுவார்கள் என்று இது பொருள்படும். ஆனால் விசுவாசத்தின் மூலம் நமது தேவனாகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பாவமன்னிப்பின் பரிசைக் பெற்றுக் கொள்வதின் மூலம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்களும் நானும் மேசியாவாகிய இயேசுவை நமது இரட்சகராக விசுவாசிக்கும்போது, அவரின் அன்பினாலே நம்மை நமது பாவங்களுக்கான எல்லாப் ஆக்கினைகளிலிருந்தும் இரட்சித்தார்! அல்லேலூயா!
 
 
நாம் நம்மை சோதித்து தேவனால் கொடுக்கப்பட்ட உண்மையான விசுவாசம் நம்மிருதயங்களில் இருக்கிறதா என காணவேண்டும்
 
நம்மை நாமே ஒருமுறை பார்ப்போமாக. நானும் நீங்களும் கர்த்தரின் வார்த்தையின் சட்டத்தின்படி விசுவாசித்தோமா? அப்படியானால், கர்த்தருக்கு முன்னதாக நமக்கு என்னவாகும்? நமது பாவங்களுக்காக கர்த்தரால் நாம் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டோமா? பாவம் நிறைந்தவர்களை தண்டிக்காத அளவிற்கு நமது கர்த்தர் நீதியில்லாதவரில்லை. கர்த்தர் பரிசுத்தவானாயும் நீதிபரராயும் இருப்பதால், பாவிகளை அவர் பொறுத்துக் கொள்வதில்லை. விசுவாசிக்காததினால் அவருக்கு முன்னால் பாவம் நிறைந்தவர்களாயிருக்கும் அனைவரையும் நரகத்திற்குள் வீசுவதாக கர்த்தர் நம்மிடம் கூறினார்.
புழுக்கள் கூட செத்துப் போகாத, அக்கினியும் கந்தகமும் பற்றி எரிகிற, பயங்கரமான நரகத்தில் அவர்களை வீசி விடுவதாக கர்த்தர் நம்மிடம் கூறினார். தாமாகவே தம் எல்லாப் பாவங்களையும் கழுவ முயற்சித்து தம் இருதயங்களைத் திருப்தி படுத்த முயற்சி செய்யும் அனைவரையும் கர்த்தர் நரகத்திற்குள் எறிவார். இதனால் தான் அத்தகைய மக்களைப் பார்த்து கர்த்தர் கூறினார், “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்!” (மத்தேயு 7:23)
மேலும், மேசியாவை நாம் விசுவாசிக்க வேண்டும், மேலும் அவர் இப்பூமிக்கு வந்தபோது அவர் பெற்ற ஞானஸ்நானத்தையும், சிலுவையின் இரத்தத்தையும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததையும் விசுவாசிக்க வேண்டும். ஏன்? அடிப்படையாகப் பேசினால், கர்த்தருக்கு முன்னதாக நாமெல்லோரும் பாவிகளாகவும் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். இதனால் தான் மேசியா இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் ஆகியவற்றால் வந்து, தனது சொந்த சரீரத்தின் மூலமாக இரட்சிப்பிற்கான பலி காணிக்கையாக தம்மையே கொடுத்து, அதன் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார். ஆகவே தேவன் நமக்காக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு பலி காணிக்கையானார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் அனைவரும் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், தேவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆயினும், அநேக மக்கள், தம் பாவங்களுக்காக தாம் நரகத்தில் நாசமாக வேண்டியவர்கள் என்பதை நினைப்பதில்லை. அவர்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டாத அளவு நலமுடன் இருப்பதாக எண்ணுகிறார்கள். இத்தகைய மக்கள் இயேசுவை நல்ல அமைதியான மனிதராகவும், மதிப்பு மிக்கவராகவும் ஆசிரியராகவும் மட்டும் கருதுவதுடன், தாம் மிகவும் நல்லவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அவரை விசுவாசிப்பதாக காட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய மக்களைக் குறித்து நமது தேவன் கூறுகிறார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” (மத்தேயு 9:12). இந்நேரத்தில் வேதாகமம் என்ன கூறுகிறது என்பதின் மூலம் தம் இருதயங்களை முற்றிலுமாக சோதித்து அறிய வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் நரகம் செல்லுவர்.
இவரை நாம் மேசியா என விசுவாசிப்பதற்கான காரணம், அவரை நம் இரட்சகராக விசுவாசித்து நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்கேயாகும். மேசியாவை நாம் விசுவாசிக்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டு, நமது நல்லொழுக்கத்தை வளர்ப்பதற்காக அல்ல. மாறாக, நமது பாவங்களின் பொருட்டு நீங்களும் நானும் மேசியாவை விசுவாசிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் தான் நாம் விசுவாசிக்கிறோம்: மேசியாவாகிய இயேசு இப்பூமியில் பிறந்தார்; 30 ஆம் வயதிலே யோவானால் அவர் ஞானஸ்நானம் பண்ணப் பட்டார்; அதனால் அவர் உலகத்தின் பாவங்களைச் சுமந்து தனது சிலுவைப் பாடுகளின் மூலமாக இரத்தத்தைச் சிந்தினார்; மேலும் மூன்று நாட்களில் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார்; பிறகு பரலோகம் ஏறினார்; இப்போது அவர் பிதாவாகிய கர்த்தருக்கு வலது பாரிசத்தில் வீட்டிருக்கிறார் - இவை எல்லாம் நம் பாவமன்னிப்புக்கு சாட்சிகளாயிருக்கின்றன. நம்மை நமது பாவங்களில் இருந்து இரட்சித்த இரட்சகரின் செயல்களாக இவை அனைத்தும் இருப்பதினாலே, ஒன்றைக் கூட விட்டு விடாமல் அனைத்தையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
தடிமனான நூலினால் ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரையை நெய்வது நம்முடைய சிந்தனைகளின்படி சரியானதாக நமக்குத் தோன்றலாம், ஆனால் அவை எப்படிச் செய்யப்பட வேண்டும், கொக்கிகள் எப்படி பொன்னாலும் மற்றவை வெண்கலத்தினாலும் செய்யப்பட வேண்டும் என்ற விளக்கமான திட்டங்களைக் கர்த்தர் வேதாகமத்தில் மிகவும் தெளிவாக கூறினார். கர்த்தர் அப்படிக் கட்டளையிட்டதற்கு காரணம் என்னவென்று எண்ணுகிறீர்கள்? இவை எல்லாம் அவற்றின் ஆவிக்குரிய முக்கியத்துவத்தை நமக்கு தெரிவிக்கவே அவர் அப்படிக் கட்டளையிட்டார். இதனால் தான் நாம் அவற்றைச் சாதாரணமாக கருதக் கூடாது.
 
 
மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் நாம் நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும்
 
நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் நரகத்திற்குள் வீசப்பட வேண்டியவர்கள், ஆனால் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து இப் பூமிக்கு வந்து நம்மை நம் பாவங்களிலிருந்து இரட்சித்தார். இயேசு ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு தனது இரத்தத்தைச் சிந்தினார். இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என முதலிலும், அவர் சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தினார் என இரண்டாவதாகவும் விசுவாசிக்காமல் நாம் பாவமற்றவர்கள் என அறிவிப்பது அக்கிரமச் செய்கையாகும். மேசியாவாகிய இயேசு நம்மை இரட்சிப்பதற்காக இப்பூமிக்கு வந்து, தனது ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டு, நமது ஆக்கினைகளைத் தன்மீது ஏற்றுக் கொண்டு மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, நமது உண்மையான, நித்தியமான இரட்சகராயினார். இப்படியாகவே இயேசு நம்மை இரட்சித்தார், ஏனெனில் இதன் மூலமாக மட்டுமே இந்த இயேசுவை நம்மால் விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்திக்க முடியும்.
இரட்சிப்பின் செய்கைகளை நிறைவேற்ற, யோவான் ஸ்நானனால் மேசியா ஞானஸ்நானம் பண்ணப்பட்டு சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது. தொடக்கம் முதலே நம் பாவங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பது இதன் பொருளாகும். ஆனால், நாம் இனிமேலும் இந்த ஆக்கினையைச் சுமக்க வேண்டியதில்லை. ஏன்? பாவமற்ற மேசியாவானவர் தண்டிக்கப படவேன்டியவராக இல்லாவிட்டாலும் கூட, நமது எல்லாப் பாவங்களையும் தன்மீது சுமத்த அனுமதித்ததுடன், நமது எல்லாப் பாவங்களுக்கும் நம்மிடத்திலிருந்து ஆக்கினைக்குள்ளானார். ஆகவே, இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் முழு இருதயத்துடனே விசுவாசித்ததின் மூலமாக, நமது பாவங்களுக்கான எல்லா ஆக்கினைகளிலிருந்தும் விடுவிக்கப் பட்டோம்.
“இயேசு உன்னை நேசிக்கிறார்!” என்ற ஸ்டிக்கர்களை கார்களின் பின்புற கண்ணாடிகளில் ஒட்டியிருப்பதை நம்மால் காண முடியும். இதனை மட்டுமே நீங்கள் அறிந்து கொள்ள வேன்டுமென இயேசு விரும்புகிறாரா? இத்தகைய வார்த்தைகளால் மட்டுமே நமது தேவனின் இரட்சிப்பு உருவாக்கப் படவில்லை. “நான் உன்னை வெகுவாக இரட்சித்தேன். ஆகவே, நான் உன் பாவங்களை இரட்சித்தேன். என்னை விசுவாசி, நான் உன்னை எனது பிள்ளையாக்குவேன்.” என நீங்கள் அறிந்து கொள்வதை அவர் விரும்புகிறார். நம்மையெல்லாம் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலையாக்குவதற்காக மேசியாவானவர், ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு, தனது இரத்தத்தைச் சிந்தி மரித்தார். நமக்காக காத்திருக்கும் நியாயத் தீர்ப்பிலிருந்து தேவன் நம்மை இரட்சித்து விடுதலையாக்கினார்.
நமது பாவ நோயைக் குணமாக்கும் மருத்துவராக நம் தேவன் வந்தார். இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதன் மூலமாக நம் பாவங்களைத் தனது சரீரத்தில் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படி இரத்தம் சிந்தி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, இதன் மூலமாக நம்மை இரட்சித்தார். நம்முடைய பாவங்களுக்காக நாம் நிச்சயமாக நரகத்திற்கு செல்ல வேண்டியிருந்தாலும், நமது எல்லாப் பாவங்களின் நோயையும் நம் தேவன் ஏற்கனவே குணமாக்கினார். சரியான விசுவாசத்தின் மூலமாக நாம் நம் பாவங்களிலிருந்து குணமானோம்.
மக்கள் பாவம் நிறைந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் நரகத்திற்குள் தள்ளப்படவில்லை என்றால், மேசியா இவ்வுலகிற்கு வந்து தனது இரத்தத்தைச் சிந்த வேன்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. மக்கள் ஏன் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்றால், அவர்களை நரகத்தை நோக்கி வழிநடத்தும் பயங்கரமான பாவ நோய் அவர்களிடம் இருக்கிறது. குறிப்பாக, பயங்கரமான பாவ நோய் தம்மிடம் இருப்பவர்களால் தாம் நரகத்திற்குள் வீசப்படுவதைத் தவிர்க்க முடியாது, ஆகவே மேசியாவாகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் இரத்தத்தையும் கேள்விகேட்காது விசுவாசிக்கவேண்டும்.
தம்முடைய இருதயத்தில் பாவம் உள்ள அனைவரும் நரகத் தண்டனையை நிச்சயமாக பெற்றுக் கொள்ளவேண்டும், ஏனெனில், கர்த்தரின் சட்டத்தைப் பொறுத்தவரை, அனைவருக்கும் பாவத்தின் சம்பளம் மரணம். எளிமையாக கூறினால், அவனின்/அவளின் இருதயத்தில் சிறிதளவு பாவமிருந்தாலும் அவன்/அவள் நரகத்தினுள் வீசப்படுவார். இதனால் தாம் இயேசு நம்மிடம் வர வேண்டியிருந்தது. ஆகவே நமது எல்லாப் பாவங்களையும் நன்கு துடைத்துவிட்ட மேசியாவை நாம் உண்மையாக விசுவாசிக்கும் போது, நம்மால் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் பட முடியும். இயேசுவை நமது இரட்சகராக விசுவாசிக்க வேண்டும், அவர் நமக்காக செய்த அனைத்தையும் அப்படியே நாம் விசுவாசிக்க வேண்டும்.
இயேசுவே கர்த்தருமாவார். அவரே நம்மைப் படைத்தவர். ஆனால் அவர் தனது தெய்வீக மகிமையை எல்லாம் உதறித் தள்ளி விட்டு, சிறிது காலத்திற்கு மனித சரீரத்தில் வாழ்ந்தார், அவர் அதிகமாய் நேசித்த உங்களையும் என்னையும், பாவத்திற்கான பயங்கரமான நரக தண்டனையிலிருந்தும், அழிவிலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுவிக்கவே அப்படி செய்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடெழும்பி, பரலோகத்திற்கு ஏகினார். இதுவே சத்தியமாகும். இதனை ஏதோ நகைச்சுவைப் போல எண்ணி இந்த சத்தியத்தை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது. இந்த உண்மையான சத்தியம் வேண்டா வெறுப்பாக விசுவாசிக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த உண்மையான சத்தியத்தை நிச்சயமாக நம்மிருதயங்களில் விசுவாசித்து, அதனை நன்கு அறிந்து கொள்ளவேன்டும்.
பலி காணிக்கையாக பயன் படுத்தப் பட்ட ஆட்டுக் குட்டிகளிடமும் ஆடுகளிடமும் பாவங்கள் இருந்தனவா? பாவன் என்றால் என்ன என்பதைக் குறித்து எந்த மிருகத்திற்கும் தெரியாது. ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், கைவைப்பதின் மூலம் இஸ்ரவேல் மக்களின் எல்லாப் பாவங்களையும் இவை ஏற்றுக் கொண்டதால், அவர்களுக்கு பதிலாக இந்த பலி காணிக்கை மிருகங்கள் மரிக்கவேண்டியிருந்தது. ஏன்? பாவத்தின் சம்பளம் மரணம் என்றிருப்பதினாலே, கர்த்தர் முடிவு செய்தது இதுவேயாகும். ஆகவே பாவநிவாரண நாளில் இஸ்ரவேல் மக்களில் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட பலி காணிக்கையானது நிச்சயமாக மரிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே இயேசு கிறிஸ்துவும் மரிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் தனது ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டிருந்தார்.
யாருக்காக இச்செயல்களெல்லாம் செய்யப்பட்டன? உங்களுக்காகவும் எனக்காகவுமே இச்செயல்களெல்லாம் செய்யப்பட்டன. அப்படியானால், இது நாம் விசுவாசிக்க அல்லது விசுவாசிக்கத் தேவையில்லாத ஒன்றா? மக்கள் விசுவாசிப்பதில்லை, ஏனெனில் தமது பாவநோய் எத்தனை ஆபத்தானது என்பதைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. சிறிதளவு பாவம் தம்மிடம் இருந்தாலும் அதற்காகத் தாம் நரகத்திற்குள் வீசப்படுவோம் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏதோ சாதாரணமாக அவர்களால் எடுத்துக் கொள்ள முடியாது, எந்த விளைவுகளும் இல்லாமல் அதனை விசுவாசியாமலிருக்கவோ அல்லது விசுவாசிக்கவோ முடியாது.
கடுகளவு சிறிதான பாவமானது மக்களிடம் இருந்தால் அவர்கள் நரகத்தினுள் வீசப்படுவர். அவர்கள் அழிந்து போவர். அவர்கள் இந்த பூமியில் செய்த அனைத்தும் நித்திய சாபத்தினால் முடிந்து போகும். தம்மிடம் பாவம் இருந்தாலும் அது பரவாயில்லை என எண்ணுபவர்கள் மாயையில் வாழ்கிறார்கள். பாவத்தின் விளைவு மரணம் என்பதை கேள்வி கேட்க முடியாது. அநேக மக்களின் இருதயங்களில் பாவங்கள் இருந்தாலும் கூட அவர்கள் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழுபவர்களைப் போல தெரிகிறது. இளைஞர்கள் பிரபலமானவர்களைத் தாம் எப்போதாவது சந்திப்போம் என்ற கனவில் வாழுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மகத்தான வாழ்வு நீடித்திருக்குமா? அவர்களிம் பதினைந்து நிமிட பிரபலம் மறைந்தவுடனேயே அவர்களில் அநேகர் துவண்டு போகின்றனர்.
சில மக்களுக்குத் தாம் செய்யும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து விடுகிறது. தேவனை சந்திக்கும் முன், நீங்களும் கூட இப்படிப்பட்ட நிலையில் இருந்திருக்கலாம், அப்போது நீங்கள் எப்படி நடக்க வேண்டும் என எண்ணினீர்களோ அதன் படி நடக்காதிருந்திருக்கலாம். நீங்கள் சபிக்கப் பட்ட வாழ்வை வாழ்வதைப் போன்று, இந்த வாழ்வு மாறுவதில்லை என நீங்கள் முடிவு செய்திருக்கலாம், நல்லதாக நடக்கிறது என நீங்கள் எண்ணியவைகள் கூட முடிவில் நொருங்கிப் போயிருக்கலாம். பெரிதான ஒன்றை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள், ஆனால் அது நனவாகியிருக்காது, அக்கனவு சிறிதாகி சிறிதாகி முடிவில் மறைந்து போயிருக்கும். உங்களுடைய சிறிய கனவு கூட நனவாகாததைக் காண்கையில் உங்கள் கனவுகள் கலைந்து போகின்றன.
இது ஏன் இப்படியாயிற்று? உங்கள் இருதயங்களில் உள்ள பாவங்களே அதற்கான காரணம். தமது இருதயங்களில் பாவம் உள்ளவர்களால் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியாது. அவர்கள் எத்தனைக் கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பதேயில்லை. அநேக மக்களின் இருதயங்களில் பாவங்கள் இருந்தாலும் கூட அவர்கள் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழுபவர்களைப் போலத் தெரிந்தாலும், கர்த்தர் அவர்களைக் கைவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேன்டும். அவர்களுடைய தற்போதைய வாழ்க்கை வெற்றிகரமானதாகத் தெரிந்தாலும், அவர்களை நரகத்தில் வீசும்படியாக கர்த்தர் அவர்களை விட்டு வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பாவமில்லாதவர்களால் இந்த உலகம் நிறைந்திருந்தால், நரகம் இருப்பதற்கான தேவை எதுவும் இல்லை. ஆனால் கர்த்தர் உண்மையாகவே நரகத்தைப் படைத்தார், தமது இருதயங்களில் பாவம் உள்ளவர்களுக்காகவே அதனை உருவாக்கினார்.
நமது இருதயங்களுக்கு பாவமன்னிப்பைக் கொடுப்பதற்காக ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மூடுதிரையை இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்டார். புதிய ஏற்பாட்டின் காலம் வருகையிலே, யோவானால் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் இயேசு கிறிஸ்து உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, இப்பாவங்களுக்குத் தண்டனையாக மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் படுவார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நமது தேவன் பாவிகளின் இரட்சகராயினார்.
இதனால் தான் அவர் தனது செய்கைகளாகிய இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் பாவமன்னிப்பை பாவிகளுக்கு கொடுத்தார். இதனை இப்போது உணருகிறீர்களா? நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளுவதற்காக இயேசு கிறிஸ்து யோர்தான் நதியில் ஞானஸ்நானத்தைப் பெற்றார், இப் பாவங்களுக்கான கிரயத்தைக் கொடுப்பதற்காக அவர் சிலுவையில் அறையப் பட்டு தனது இரத்தத்தைச் சிந்தினார். அதாவது நமது பாவங்களைச் சுமப்பதற்காக அவர் ஞானஸ்நானம் பெற்றார். யோவானிடமிருந்து பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாக முதலாவது நம் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டதாலேயே இயேசு சிலுவையில் மரித்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
 
 
நமது மாமிசத்தில், நீங்களும் நானும் தகசுத் தோலைப் போல இருந்தோம்
 
நான்காவது மூடுதிரையானது தகசுத் தோலினால் உருவாக்கப் பட்டது. இந்த “தகசு” என்பது பழைய ஏற்பாட்டில் ஒரு பாலூட்டியாக மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. அது வெவ்வேறு வகையான பாலூட்டியாகவும் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது - உதாரணமாக, “கடல் பசு” (புதிய சர்வதேச வெளியீடு), “சீல்” (அமெரிக்க வேதாகமம்), “மெல்லிய ஆட்டுத் தோல்” (என்எல்டி), மற்றும் “பார்பாய்ஸ்” (என்ஏஎஸ்பி). டூந்த பாலூட்டி எதுவென்று சரியாக நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. வேதாகம சொற்களைப் பற்றிய அறிஞர்கள் “தகசு” என்பது வேற்று நாட்டுச் சொல்லாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். எப்படியாயினும் ஆசரிப்புக் கூடார நான்காவது மூடுதிரையை உருவாக்க “தகசு” என்ற மிருகத்தின் தோல் பயன் படுத்தப் பட்டது. இந்த மூடுதிரை அழகானதாகவோ அல்லது கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்ததாகவோ இருக்கவில்லை என்பதை நாம் அறியலாம்.
இந்த தகசுத் தோலினால் உருவாக்கப் பட்ட நான்காவது மூடுதிரையானது இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு மனித மாமிசத்தில் வந்ததைக் காட்டுகிறது. மேலும், அவரின் தோற்றம் கவரக் கூடியதாக இருக்கவில்லை. அவரைக் குறித்து வேதாகமம் இவ்வாறு விவரிக்கிறது. “இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (ஏசாயா 53:2).
நம்முடைய மரண நாள் வரையிலும் வெட்கக்கேடான வாழ்வைத் தவிர்க்க முடியாத நம் அனைவரையும் இரட்சிக்கவே தேவ குமாரர் சாதாரண பிறப்பிற்குரியவராய் மனித மாமிசத்தில் இப்பூமிக்கு இறங்கி வந்தார். ஆதாமின் சந்ததியினராகிய நம்மை கர்த்தர் பார்க்கும்போது, இந்த மூடுதிரையைப் போன்றும் நாமும் விரும்பத்தகாதவர்களாயிருப்பதைக் அவர் காண்கிறார். மேலும், பாவம் செய்யவே நாம் விரும்புகிறோம். அழுக்கான தகசு மிருகத்தைப் போன்று, பிறப்பிலிருந்து மரணம் வரையில் நமது வயிற்றை நிரப்ப மட்டுமே நாம் முயற்சி செய்கிறோம். இதுவே இயேசு மனித சரீரத்தில் வந்து பாடுகளை அனுபவித்ததற்கான உண்மையான காரணமாகும்.
தமது பாவசுபாவத்தின் தீவிரத்தை அறிந்தவர்களால் மட்டுமே மேசியாவை விசுவாசித்து அவர்களின் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் இரட்சிக்கப் படமுடியும். மேலும் தமது சொந்தப் பாவங்களைக் குறித்தும் அவர்களின் பாவங்களுக்கான தண்டனையைக் குறித்தும் விசுவாசம் இல்லாதவர்களால் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை. அத்தகைய மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார் (சங்கீதம் 49:20).
நாம் கர்த்தருடைய சாயலாக படைக்கப் பட்டிருந்தாலும், கர்த்தரின் அன்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை. கர்த்தரின் இரட்சிப்பின் திட்டங்களை விசுவாசிக்காதவர்களால் பாவமன்னிப்பைத் தமது இருதயங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியாது, ஆகவே அழிந்து போகும் மிருகங்களைப் போல இவர்களும் மறைந்துபோவர். மனித குலத்தின் மீது கர்த்தரிடம் ஒரு திட்டம் இருந்ததினாலேயே, அவர்களை அவர் தனது சாயலாக படைத்தார்.
எல்லோரும் என்ன செய்கிறார்கள் அல்லது எதனை எண்ணுகிறார்கள் என நெருக்கமாக பாருங்கள். நாம் உங்களி மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, முழுமனித குலத்தையும் குறித்து கூறுகிறேன். அநேக மக்களுக்குத் தம்மைப் படைத்த சிருஷ்டிக் கர்த்தரைத் தெரியாது. மேலும், தாம் பாவமே செய்வதில்லை என்றும், தாம் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்றும் அவர்களில் பலர் கூறுகின்றனர். மனிதர்கள் எத்தனை கயவர்களாயும் முட்டாள்களாகவும் இருக்கிறார்கள்? கர்த்தரை அறியாதவர்கள் முற்றிலும் மூர்க்கர்களாய் இருக்கிறார்கள். நாம் நம்மை இன்னொருவருடன் ஒப்பிடுகையில், எத்தகைய வேறுபாடுகளைக் காணமுடியும்? நாம் எத்தனைச் சிறந்தவர்களாக அல்லது மோசமானவர்களாக இருக்கிறோம்? ஆயினும், நமது சொந்த சுயநலங்களுக்காக மற்ற மக்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறோம் - இது எத்தனைத் தவறானது?
தமது வாழ்நாளில் கர்த்தருக்கு எதிராக ஒவ்வொருவரும் எத்தனைப் பாவங்களைச் செய்கிறார்கள் என்று நம்மால் நினைத்து பார்க்க முடியாது. மனித பன்பாடுகளை இழிவு படுத்துவதற்காக இதனை நான் கூறவில்லை, ஆனால் இதனை நான் இங்கு கூருவதற்கான காரணம், கர்த்தர் மனிதனை மிக உயர்ந்தவனாக படைத்திருந்தாலும், தமது பாவங்களுக்காக தாம் உண்மையிலேயே அழிய வேண்டியவர்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டியவர்களாய் இருக்கின்றனர். தமது ஆத்துமாக்களை எப்படி வைத்துக் கொள்வது என்பது மக்களுக்குத் தெரியாது; அவர்களுக்குத் தாமாகவே எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளத் தெரியாது; அவர்கள் கர்த்தரின் வார்த்தையை அங்கீகரிப்பதில்லை; அவர்களுக்குத் தம்முடைய நித்திய அழிவைத் தவிர்ப்பதற்கு வேறுவழிகள் இல்லை என்றாலும், அவர்கள் அவரை விசுவாசிக்க விரும்புவதில்லை. அழிந்து போகும் மிருகங்களை விட எவ்விதத்திலும் சிறந்தவர்களாய் இல்லாதிருப்பது இம்மனிதர்களே.
 
 
நாம் அழிந்து போகும் படி கர்த்தர் விட்டு விடவில்லை
 
நம்மை நமது பாவங்களில் இருந்து இரட்சிப்பதற்காக, இயேசு இப்பூமிக்கு வந்து, நமது எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடெழுந்தார். இதன் மூலம் தேவன் நம்முடைய உண்மையான இரட்சகரானார். இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு வேதாகம் அறிவு குறைவாக இருப்பதாலும், உங்கள் அறிவின்மையாலும், “இங்கே பெரிதாக என்னவிருக்கிறது? இயேசுவை எப்படியோ நாம் விசுவாசித்தால் நம் எல்லோரும் பரலோகம் போவோம்” என இப்படி கூறுகிறீர்களா? “நாம் சிலுவை இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தால், பரலோகம் நம்முடையதாகும்” என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய விசுவாசம் சரியானதா?
நமது கர்த்தர் சத்தியத்தின் கர்த்தராவார். தமது திட்டத்தைக் குறித்து நம்மிடம் பேசியவர் அவரே, தனது வார்த்தையின் படி அப்படியே இரட்சிப்பின் செயல்களைச் செய்தவர் அவரே, நமக்கு பாவமன்னிப்பைக் கொடுத்டவரும் அவரே, இந்த சத்தியத்தின் மூலம் நம்மைத் தொடுபவரும் அவரே. கர்த்தர் உயிரோடிருக்கிறார். கர்த்தர் இங்கே நம் ஒவ்வொருவருடமும் இப்போது இருக்கிறார். தமது இருதயங்களில் பாவம் உள்ளவர்கள் கர்த்தரை வஞ்சிக்க முயலக் கூடாது. மக்கள் தமது இருதயங்களில் பாவம் உள்ளவர்களாயும் தமது மனசாட்சியில் காயம் உள்ளவர்களாகவும் இருந்தால், இயேசு பெற்ற ஞானஸ்நானத்தையும் அவர் சிந்திய இரத்தத்தையும் விசுவாசித்து தமது பிரச்சினையைத் தீர்க்க வேன்டும். பாவம் நிறைந்தவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டியிருந்தமையால், தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவை இரத்தத்தினாலும் தேவன் அவர்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்பதை அவர்கள் விசுவாசிக்க வேண்டும்.
நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தமது பாவப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாதவர்கள் இந்த உலகத்தில் யாருமில்லை. நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் தேவன் நம்மை இரட்சித்திருந்தும் (1 யோவான் 5:6-8), நாம் இதனை அங்கீகரித்து, இந்தக் குறிப்பை விசுவாசிக்கா விட்டால், அதனால் நாம் அழிந்து போவோம், இந்த விளைவிற்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர்கள் நாமே. கர்த்தருக்கு முன்னதாக நாமனைவரும் அறிக்கைச் செய்யவேண்டும், “நான் பாவம் நிறைந்தவனாயிருபதினால் நரகம் செல்ல வேண்டியவன். ஆனால் நற்செய்தியாகிய நீர், இரத்தம் மற்றும் ஆவியை நான் விசுவாசிக்கிறேன்.” நம்மிடம் இத்தகைய விசுவாசம் இருக்க வேண்டும். நீரினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் தேவன் நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்தார் என்பதை நமது இருதயங்களில் நாம் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய நேர்மையான இருதயங்களாலும் விசுவாசத்தாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்துடன் நாம் ஐக்கியமாக வேண்டும். அப்போது மட்டுமே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மால் இரட்சிக்கப் படமுடியும்.
 மேலும், நாம் இவைகளை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும், இந்த சத்தியத்தை நாம் விசுவாசிக்கவும் வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்திலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலும் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை அறியாமலேயே சில மக்கள் விசுவாசிக்கின்றனர், “நான் விசுவாசிப்பதால், என்னிடம் பாவங்கள் இருந்தாலும் நான் பரலோகத்திற்குச் செல்லுகிறேன்.” ஆனால் பாவமிருக்கும் எல்லோரும் நரகத்தினுள் வீசப்படுவார்கள் என கர்த்தர் கூறினார்; அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதால் அவர்களிடம் பாவங்கள் இருந்தாலும் அவர்களை நரகத்தில் வீசப் போவதில்லை என்று அவர் கூறவில்லை. மிகப் பெரிய முட்டாள் தனத்திற்கு இது ஒத்துள்ளது. இயேசுவை எப்படியோ விசுவாசிப்பதால் தாம் பரலோகம் போவதாக கூறுவது, அவர்கள் விரும்படியெல்லாம் விசுவாசிப்பதால் உண்டானதாகும், அது அவர்களின் முட்டாள்தனம், அறியாமை ஆகியவற்றால் உருவான் முற்றிலும் குருட்டுத்தனமான விசுவாசமாகும்.
வேறு சிலர் கூறுவர், “நரகத்திற்குள் வீசப்பட்ட ஒரு மனிதரைக் கூட நான் கணடதுமில்லை, பரலோகத்திற்குள் பிரவேசித்த ஒருவரையும் நான் கண்டதில்லை. நியாயத்தீர்ப்பு நாள் வரும் வரையில் நாம் அதனைக் காணப் போவதில்லை.” ஆனால் பரலோகமும் நரகமும் உண்மையாகவே இருக்கின்றன. நமது கண்களினால் பார்க்கக் கூடியவை மட்டுமே இங்கே இருக்கின்றனவா? உங்கள் கண்களால் காற்றைப் பார்க்க முடியுமா? நாம் கானாத மறைபொருள் நிச்சயமாய் இருக்கிறது. எல்லாப் பாவிகளாலும் கர்த்தரை விசுவாசிக்க முடியாது, ஏனெனில் அழிந்து போகும் மிருகங்களைப் போல அவர்களால் அவரைக் காண முடியாது.
மேலும், தம்முடைய இருதயங்களில் இன்னமும் பாவம் இருந்தால் அவர்கள் அழிந்துபோவர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், ஆகவே கர்த்தரின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்ப, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்க வேண்டும். தம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் தாம் எத் தவறையும் செய்யவில்லை என்றாலும், கர்த்தருக்கு எதிராக தாம் பல பாவங்களைச் செய்ததை கண்டுகொள்பவனே அறிவாளியாவான், ஆகவே அவருக்கு முன்னால் நிற்கையில் தாம் நிச்சயமாகவே தீர்க்கப் படுவோம் என்பதை அவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
நாம் நமது அறியாமையினால் கர்த்தரையும் அவருடைய நியாயத்தீர்ப்பையும் அலட்சியம் செய்து அழிந்து போகக் கூடாது. நரகத்தின் நித்திய அக்கினியில் எல்லாப் பாவிகளையும் அவர் நிச்சயமாக ஆக்கினைக்குட்படுத்துவார். கேட்டும் கூட, ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்காமல் மக்கள் அழிந்து போனால், அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகவே இருப்பார்கள். நாம் பாவமன்னிப்பைப் பெறவும், பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கவும் நம்மை ஏதுவாக்கும் விசுவாசம் நம்மிடம் இருப்பதை மேசியா நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
 
 
கர்த்தர் பொம்மைகளாக நம்மைப் படைக்கவில்லை
 
மனிதர்களாகிய நம்மைக் கர்த்தர் படைத்தபோது, பாவத்தினால் நாம் துன்புறாமல், கர்த்தரின் பிள்ளைகளாக, நித்திய ஜீவனை என்றென்றும் அனுபவித்து, மாட்சிமையையும், கர்த்தருடைய மகிமையையும் பெற்றவர்களாய் வாழ்வதை ஏதுவாக்குவதே அவரின் நோக்கமாயிருந்தது. நம்மை நரகத்திற்கு அனுப்பக் கூடாது என்பதற்காக மேசியா ஞானஸ்நானம் பெற்று, உலகின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தினார், மேலும் இதன் மூலம் நமது எல்லாப் பாவங்களையும் அவர் கழுவினார். கர்த்தர் நம்மை இத்தனையாய் நேசித்திருக்கையில், நாம் இந்த அன்பை ஏற்றுக் கொள்ளாமல், அரை மனதுடன் அவர் நமக்குக் கொடுத்த இரட்சிப்பை விசுவாசித்தால், கர்த்தரின் கோபாக்கினையிலிருந்து நம்மால் நிச்சயமாக தப்பிக்க முடியாது.
தனது சொந்தக் குமாரரையே பலி காணிக்கையாக்கு நம்மை நமது பாவங்களிலிருந்து கர்த்தர் விடுதலையாக்கினார். நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொள்வதற்காக மேசியா ஞானஸ்நானம் பெற்று நமது பாவங்களுக்கான பலி காணிக்கையாக தன்னையே கொடுத்ததினால், உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார். நமது பாவங்களினிமித்தம் நாம் நரகம் செல்ல வேண்டியிருந்ததால் நம் தேவன் நம்மீது கிருபையைச் செலுத்தினார், மேலும், இதற்காகவே அவர் ஞானஸ்நானம் பெற்று, மரிக்கும் படியாக இரத்தம் சிந்தி, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, அதன் மூலமாக நம்மை எம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சித்து, கர்த்தரின் பிள்ளைகளாக நம்மை மாற்றினார். கர்த்தர் பொம்மைகளாக நம்மைப் படைக்கவில்லை.
சில காலங்களுக்கு முன்னதாக, எனது ஆலயத்திற்கு வரும் ஒரு சகோதரி தன் கல்லூரியில் இருந்தார், அவருடைய பட்டம் சம்பந்தப் பட்ட பொருட்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அந்த, ஓவியக் கூடத்தில், வெவ்வேறு ஓவியங்களை பார்த்தேன். அந்த பட்ட வகுப்பின் ஓவியங்களில் இருந்த ஒரு படைப்பு, ஆதாமும் ஏவாளும் நன்மைத் தீமை அறியத்தக்க மரத்திலிருந்து கனியைச் சாப்பிடுவதைச் சித்தரித்தது, அதன் தலைப்பு, “கர்த்தர் பொம்மைகளாக நம்மைப் படைத்தாரா?” என்பதாகும். யாரோ இந்த கேள்விக்கான பதிலை, அந்த ஓவியத்திற்கு கீழே எழுதியிருதார்கள், “கர்த்தருக்கு பொழுது போகவில்லை, அதனால் நம்மை அவரின் பொம்மைகளாக அவர் படைத்தார்.”
இந்த பதிலைத் தவிர தவறானது வேறெதுவும் இருக்க முடியாது. அப்படியானால், நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தைப் படைத்து, ஆதாமையும் ஏவாளையும் அதின் கனிகளைச் சாப்பிட வேண்டாம் என கர்த்தர் ஏன் கூறவேண்டும்? அவர்களி அக்கனியைச் சாப்பிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும், ஆயினும் கூட அவர் அதனைப் படைத்து அதின் கனிகளைச் சாப்பிட வேண்டாம் என அவர்களிடம் கூறினார். அவர்கள் சாப்பிட்டபோது, அவர்கள் பாவத்திற்குள் விழுந்து போனதால் ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களை அவர் விரட்டி விட்டார். பாவம் நிறைந்தவர்கள் நேரடியாக நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் அப்போது கூறினார். கர்த்தர் ஏன் இதனைச் செய்ய வேண்டும்? கர்த்தரிடம் பொம்மைகள் இல்லாததினாலும், அவருக்கு பொழுது போகாததினாலுமா அவர் நம்மைப் படைத்தார்? அவருக்கு பொழுது போகாததினாலும், இதற்கும் மேல் தாங்கமுடியாது என்பதாலுமா அவர் மனிதகுலத்தைப் படைத்தார்? அப்படி இல்லை!
சகோதர சகோதரிகளே, நம்மை தனது சொந்தப் பிள்ளைகளாக்கி, அழிவிலிருந்து நம்மை நீக்கி, நித்தியமாக நம்முடன் மகிழ்ச்சியுடன் வாழவே கர்த்தர் இவற்றை எல்லாம் செய்தார். மனிதர்களுக்கு இதனையெல்லாம் அளித்த கர்த்தரின் அருளானது, நம்மை அழிவில்லாதவர்களாக்கி மாட்சிமையுடனும் மகிமையுடனும், அவரின் மகிமையுடையவர்களாய் நம்மை நித்தியமாக வாழச்செய்வதேயாகும். இப்படியாக நீங்களும் நானும் சாத்தானால் வஞ்சிக்கப் பட்டபோது, பாவத்திற்கு விழுந்து போனவர்களாய், நரகத்திற்கு செல்லுபவர்களானோம், அப்போது நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தர் தன்னுடைய ஒரேபேறான குமாரரை இப்பூமிக்கு அனுப்பினார். குமாரர் ஞானஸ்நானம் பெற்று, உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, தனது இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து எழுந்ததின் மூலம், கர்த்தர் நம்மை சாத்தானிடமிருந்து இரட்சித்தார்.
ஆயினும், பொழுது போகாததினால் கர்த்தர் நம்மை பொம்மைகளாகப் படைத்தார் என்ற மோசமான ஆபத்தான சிந்தனை எண்ணிலடங்காத மக்களிடம் உள்ளது. இயேசுவை விசுவாசிப்பதை நிறுத்திவிட்டவர்களும், தொடக்கத்திலிருந்தே அவரை விசுவாசிக்காதவர்களும், கர்த்தர் மீதுள்ள தமது கசப்பால், “கர்த்தர் ஏன் என்னைப் படைத்து என்னை பாடு படச்செய்தார்? நான் விசுவாசிக்கவேண்டும் என அவர் ஏன் வலியுறுத்துகிறார்? நான் விசுவாசித்தால் இரட்சிப்பைத் தருவதாகவும், விசுவாசிக்காவிட்டால் தரமாட்டேன் என்றும் அவர் ஏன் கூறுகிறார்?” என்று கூறுகின்றனர். கர்த்தர் மனித குலத்திற்கு கொடுத்த இரட்சிப்பின் அருளைக் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாததால், அவர்கள் அப்படிக் கூறுகின்றனர்.
மேசியாவின் இந்த அருளானது நம்மைக் கர்த்தரின் மக்களாக ஏற்றுக் கொள்ளுவதற்காகவும், அதன் மூலமாக நம்மைத் தனது சொந்த பிள்ளைகளாக்கவும், பரலோகத்தின் மாட்சிமைகளையும் அதன் மகிமையையும் அவருடைய குடும்பமாக அனுபவிக்கவும் கொடுக்கப்பட்டது. மனிதர்களைக் கர்த்தர் படைத்தமைக்கான நோக்கம் இதுவேயாகும். நீர் மற்றும் ஆவியால் நாம் மறுபடியும் பிறக்கும் வரை இந்த சத்தியத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பாவமன்னிப்பைப் பெற்று மறுபடியும் பிறந்த பிறகு இதனைக் குறித்து நான் அறிந்து கொண்டேன், “ஆ! இதற்காகத்தான் கர்த்தர் என்னைப் படைத்தார்!”
2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக நமது மேசியா இப்பூமிக்கு வந்த போது நமது பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொள்ளுவதற்கு அவர் எதனைப் பெற்றார்? நமது பாவங்களைச் சுமக்க அவர் என்ன செய்தார்? அவர் ஞானஸ்நானத்தைப் பெற்று தனது இரத்தத்தைச் சிந்தினார்! இவை எல்லாம் நமது பாவங்கலைக் கழுவுவதற்கு தேவையான நீதியின் செயல்களும் நீதியின் பலி காணிக்கையுமாகும்.
கர்த்தரை நாம் ஏன் விசுவாசிக்க வேண்டும் என்பதற்கும், இயேசு கிறிஸ்துவை நாம் ஏன் இரட்சகராகிய கர்த்தர் என விசுவாசிக்க வேண்டும் என்பதற்கும் இங்கே காரணம் இருக்கிறது. நீங்களும் நானும் நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாய் இருந்தோம், ஆகவே நம்மை இரட்சிக்க கர்த்தர் தாமெ இந்த உலகத்திற்கு வரவேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு யோவானிடம் ஞானஸ்நானம் பெற்று, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப வேண்டியிருந்தது. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட பாவமன்னிப்பை நாம் ஏன் விசுவாசிக்கிறோம் என்றால், அவற்றின் மூலமாக நமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்திக்க முடியும் என்பதேயாகும். கர்த்தருடை நம்மீதான அருளை நிறைவானதாக்க நம்மிடம் விசுவாசம் இருக்க வேண்டும். நாம் தேவனுடைய இரட்சிப்பை விசுவாசிக்கும்போது, அதனை மற்றவர்களின் ஆதாயத்திற்காக செய்யாமல், நமது சொந்த லாபத்திற்காகவே செய்கிறோம்.
 
 
கர்த்தரின் இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பதற்கான நேரம் இதுவே
 
கீழ்க்கண்டவாறு யாராவது உணர்ந்து கொள்ள வேண்டுமானால், அந்நபர் அவனுடைய/அவளுடைய சொந்த தவறான விசுவாசத்தை இந்நொடியே எறிந்து விட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தன்னிருதயத்திலே விசுவாசிக்க வேண்டும். “நாம் நரகத்திற்கு செல்லவேண்டியவன் என்பது எனக்குத் தெரியாது. இயேசு எனது பாவத்தைத் துடைத்தார் என யாரோ கூறக் கேட்டதினால் நான் விசுவாசித்தேன். ஆனால் எனது விசுவாசமெல்லாம் தவறான புரிந்துகொள்ளுதலினால் உண்டானவை! எது சரியானது என்பதை இப்போது நான் அறிந்து கொள்ளவேண்டும், அந்த சரியான அறிவில் எனது விசுவாசத்தை வைக்கவேண்டும். இது வரை, நான் தவறாக விசுவாசித்தேன், ஆனால் இன்னமும் காலதாமதமாகவில்லை. நான் இனிமேல் உணரவேன்டியதெல்லாம், நான் எனது பாவங்களுக்காக நரகம் செல்லவேண்டியவன் என்பதையும், மேசியா தனது ஞானஸ்நானத்தினாலும் இரத்தம் சிந்துதலினாலும் என்னை இரட்சித்தார் என்பதையும் விசுவாசித்து எனது பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதேயாகும். ஆக்வே நான் நரகம் செல்ல வேண்டியவனாயிருந்தேன்!”
ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே அவர்கள் விசுவாசிக்கத் தொடங்கியபோது சரியான விசுவாசமாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கும் கூட, இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் அறையப் பட்டு மரித்தார் என்பதை விசுவாசிக்க, நான் ஒரு முழு கிறிஸ்தவனாக மாறி ஏறத்தாழ 10 வருடங்கள் பிடித்தன, மேலும் அப்போது நான் மீண்டுமாக இயேசுவை எனது சொந்த இரட்சகராக விசுவாசித்து உண்மையாகவே இரட்சிக்கப்பட்டேன். மேலும் கிறிஸ்தவனாகி 10 வருடங்களுக்குப் பிறகே, நான் எனது தவறான விசுவாசத்தை எறிந்து விட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெளிவாக அறிந்தவனாக அதனை சரியாக விசுவாசிக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்கோ, இந்த சத்தியத்தை அறிந்து மறுபடியும் விசுவாசிப்பதற்கு இன்னமும் 20 வருடங்கள் பிடிக்கலாம்.
இத்தகைய மக்கள் 20 வருடங்களுக்குப் பிறகு இதனைக் குறித்து அறிந்து கொண்டாலும், நீர் மற்றும் ஆவியினால் அவர்களை இரட்சிக்க தேவன் திட்டமிட்டதால், இயேசு அவர்களின் பாவங்களுக்காக ஞானஸ்நானம் பெற்று சிலுவையில் அறயப்பட்டார் என்பதை விசுவாசிக்க வேண்டும். சத்தியத்தை அறிந்து அதனை விசுவாசிக்காததே, கர்த்தருக்கு முன் செய்யய் படும் மிகவும் மோசமான பாவமாகும். ஆனால் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இப்போது விசுவாசிக்க வேண்டுமானால், அவர்கள் 10, அல்லது 20 வருடங்களுக்கு கிறிஸ்தவர்களாக இருந்த பிறகு, அப்படிச் செய்தால் அது மோசமானதா? அப்படி இல்லை! இதில் எவ்வித தவறோ அல்லது வெட்கமோ இல்லை. இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட பாவமன்னிப்பை அறிந்து அதனை விசுவாசித்தால், அப்பொழுது அவர்கள் இரட்சிக்கப் படுவர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமே கர்த்தரைப் பிரியப் படுத்துகிறது. சிறப்பாக சாதிக்கப்பட்ட இந்த இரட்சிப்பை நீங்கள் விசுவாசிப்பீர்கள் என நம்புகிறேன், அதன் நிறைவானது இள்நீலம் மற்றும் சிவப்பு நிறநூலினால் வந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரையானது விளக்கமாக தயாரிக்கப் பட்டது. சிவப்பு நிறம் பூசப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலினால் தயாரிக்கப்பட்ட மூடுதிரையின் மீது, ஆட்டின் மயிரினால் தயாரிக்கப் பட்ட மூடுதிரையைப் போட்டு, அதற்கு மேலே தகசுத் தோலினால் தயாரிக்கப் பட்ட மூடுதிரையைப் போட்டிருப்பதைப் பார்க்கையில், நாம் அனைவரும் நரகத்திற்குச் செல்லவேண்டியிருப்பவர்கள் என்பதையும், நம்தேவன் இப்பூமிக்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தனது இரத்தத்தைச் சிந்தி நமது பாவங்களுக்காக பலி காணிக்கையான வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நாம் தெளிவாக காணலாம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அனைவரும் விசுவாசிக்க வேன்டும். டூளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் செயல்களின் மூலமாக நமது தேவன் நம்மை இரட்சித்தார். ஆசரிப்புக் கூடார மூடுதிரைகள் அடக்கியுள்ளது இரட்சிப்பைக் குறித்த இரகசியமே.
வேதாகமத்தை வெறுமனே வாசிப்பது மட்டும் முக்கியமானதல்ல. வாசிப்பது மட்டுமல்ல, அதனை விசுவாசிப்பதே கர்த்தரைப் பிரியப் படுத்துகிறது - அதாவது இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் செயல்களின் மூலமாக கர்த்தர் நம்மை இரட்சிக்கத் திட்டமிட்டார் என வேதாகமம் கூறினால், நீங்களும் நானும் அதனை நமது இருதயத்தில் ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கவேண்டும். இப்படியாகவே கர்த்தரை நம்மால் பிரியப் படுத்த முடியும். நமது இருதயங்களில் கர்த்தரின் வார்த்தையை நாம் கேட்டோமானால், நமது சொந்தப் பாவங்களை அறிந்து கொண்டு, தேவனின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்தால், நமது பாவங்களுக்கான பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தேவனால் கொடுக்கப் பட்ட பாவமன்னிப்பை நாம் விசுவாசிக்காமல், அவரை வெறும் ஏட்டுத்தனமாக மட்டுமே விசுவாசித்தால், குற்ற உணர்ச்சி உள்ள மனசாட்சியால் நாம் துன்பப்படுவோம்.
நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நமது சொந்தப் பாவங்களைக் குறித்த பிரச்சினைகளை நாம் தீர்க்கவில்லை என்றால், இந்த குற்ற உணர்ச்சி உள்ள மனசாட்சி நமது இருதயத்தை அரித்துவிடும். ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்தால் இந்த குற்ற உணர்ச்சி உள்ள மனசாட்சியிடமிருந்து விடுவிக்கப்படுவோம், ஏனென்றால், நிறைவான பாவமன்னிப்பைப் பெற்று, நாம் பாவமன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ளமுடியும் போது, அந்தப் பாவத்தால் நாம் எப்படித் துன்பமடைவோம்? இப்படித்தான் நாம் விசுவாசிக்க வேண்டும்.நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களையும் குறித்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியவர்கள் பாவக்கட்டில் தொடர்ந்து வாழவேண்டியது தான்.
வாழ்க்கையானது மிகவும் குறுகியதாகவும் பாடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. மனிதர்கள் பாடுபடுவதை கர்த்தர் அனுமதிக்கிறார். நமக்கு கர்த்தர் பாடுகளை அனுமதிப்பது ஏன்? பாவங்களுக்காக நாம் துன்பப்படுவதின் மூலம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மதிப்பை நாம் அறிந்து கொள்ளவே அவர் அப்படிச் செய்கிறார், மேலும் இதன் மூலமாக பாவமற்றவர்கள் ஆகிறோம். உங்களுக்கு கர்த்தர் பாடுகளை அளித்ததின் மூலமாக, மேசியா தனது ஞானஸ்நானத்தினாலும், சிலுவையின் இரத்தத்தினாலும் உங்கள் எல்லாப் பாவங்களையும் கழுவினார் என்பதை நீங்கள் உங்கள் இருதயத்தினால் விசுவாசிக்கச் செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சத்தியமாக விசுவாசிக்காதது மிகவும் முட்டாள்தனமான செய்கையாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசிப்பதின் மூலமாக மனிதகுலத்தின் பாவங்கள் முற்றிலுமாக கழுவப்பட்டன.
இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசித்து நமது பாவப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஆகவே உண்மையான இரட்சகராகிய இயேசுவை நாம் விசுவாசிக்க வேண்டும். நீங்களும் கூட, இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக உங்கள் இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும். கர்த்தருக்கு முன்னதாக உங்கள் பாவங்களை ஒத்துக் கொள்ளவேண்டும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, அதன் மூலமாக இரட்சிக்கப் படவேண்டும். இரட்சகராகிய இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரின் சிலுவை இரத்தத்தையும் உங்கள் இருதயங்களால் விசுவாசிக்கும் போது, உங்கள் பாவங்கள் அனைத்தை நிவர்த்தி செய்தவர்களாவீர்கள். இயேசுவின் ஞானஸ்நானத்தையும், அவரின் சிலுவை இரத்தத்தையும் சத்தியமாக விசுவாசிக்கும் போதே நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் படமுடியும்.
 
 
மூடுதிரையின் வரிசையானது, நமது இரட்சிப்பின் வரிசையுடன் சரியாக பொருந்துகிறது
 
நமது இரட்சிப்பின் வரிசை வரும் போது, நாம் இந்த உலகத்தில் பிறந்த நொடியில் இருந்தே, அழிந்து போகும் மிருகங்களான தகசுவைப் போல, நாமனைவரும் பாவம் நிறைந்தவர்களாய் இருந்தோம் எனவும் நேர்மையாக நாம் முதலில் ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும், நமது பாவங்களுக்காக நாம் நிச்சயமாக மரித்து நரகத்தினுள் வீசப்படவேண்டும் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும். அதற்கு மேலும், நாம் நமது பாவங்களிலிருந்து விடுதலையாக வேண்டுமானால், நமக்கொரு பலி காணிக்கை வேண்டுமென்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும், இதற்காக, மேசியா வந்து தனது ஞானஸ்நானத்தின் மூலம் நம் பாவங்களைச் சுமந்தார். நமது இரட்சகர் மனிதர் அல்லவென்றும், அவரே கர்த்தர் என்ம் நாம் விசுவாசிக்க வேன்டும். மேலும் இரட்சகராகிய இயேசு தனது ஞானஸ்நானத்தாலும் சிலுவையாலும் நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை இரட்சித்தார் என்பதையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
இது பொருத்தமானதாக இல்லாவிட்டால், ஆசரிப்புக் கூடாரத்தின் மீது இரண்டு மூடுதிரைகளை மட்டுமே கர்த்தர் அமைத்திருப்பார். இயேசுவின் ஞானஸ்நானத்தை விட்டுவிட்டு இரட்சிப்பைப் பெற வேண்டுமானால், ஆசரிப்புக் கூடார மூடுதிரையை நான் பாகமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கர்த்தர் அதனைத் தகசுத் தோலினாலும் ஆட்டுக்கடாவின் தோலினாலும் மட்டுமே அமைத்திருப்பார். ஆனால் இந்த இரண்டு மூடுதிரைகள் மட்டும் தான் பயன்படுத்தப் பட்டதா? இல்லை! ஆசரிப்புக் கூடாரமானது நான்கு மூடுதிரைகளால் மூடப்பட வேண்டியிருந்தது; இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றாலான திரைச்சீலை; ஆட்டின் மயிரினால் தயாரிக்கப் பட்ட இன்னொரு திரைச்சீலை; அதன் பிறகு ஆட்டுக்கடாவின் தோலினால் தயாரிக்கப் பட்ட இன்னொரு திரைச்சீலை; கடைசியான மூடுதிரை தகசுத் தோலினால் தயாரிக்கப் பட்டது.
நாம் சத்தியத்தை அப்படியே விசுவாசிக்க வேன்டும் ௭ அதாவது, ஞானஸ்நானம் பெற்றதின் மூலம் இயேசு நமது எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, நமது அழுக்கான பரிதாபமான, பாவங்களுக்காக நரகம் செல்லவேன்டி இருந்த ஆத்துமாக்களை இரட்சித்து, கர்த்தரின் சொந்தப் பிள்ளைகளாக்கினார். ஆசரிப்புக் கூடாரத்தின் நான்கு மூடுதிரைகளில் மறைந்திருக்கும் இரகசியம் இதுவேயாகும், மேலும் இந்த நான்கு மூடுதிரைகளும் ஆசரிப்புக் கூடாரத்தில் எப்படிப் பொறுத்தப்பட்டுள்ளதோ, அது நமது இரட்சிப்பிற்கான நிலைகளைத் தவிர வேறில்லை.
ஆசரிப்புக் கூடாரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மூடுதிரைகளை ஒன்றாக இணைக்க பொன் மற்றும் வெண்கல கொக்கிகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மூடுதிரையையும் உருவாக்கிய இரண்டு திரைச்சீலைகளின் ஓரங்களில், இளநீல நிற காதுகள் செய்யப் பட்டன. ஆனால் இயேசுவின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பவர்களுக்கு, இளநீல நிற காதுகளில் பொருத்தப்பட்ட பொன் மற்றும் வெண்கல கொக்கிகள் இங்கே பொருத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு சாத்தியமேயில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே, இந்த நான்கு மூடுதிரைகளிலும் உள்ள சத்தியத்தை அறிந்து விசுவாசிக்க முடியும்.
இளநீல நிற காதுகள் இயேசு யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கின்றன. ஆனால் உலத்தின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொள்ளச் செய்த இயேசுவின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்காது சிலுவையின் இரத்தத்தை மட்டுமே ஏன் மக்கள் விசுவாசிக்கின்றனர்? கர்த்தரின் வார்த்தையை அப்படியே விசுவாசிக்காததே அதற்கான காரணமாகும். இயேசுவை நாம் விசுவாசிப்பதாக கூறும்போது, கர்த்தருடைய வார்த்தையுடன் எதையும் சேர்த்தோ அல்லது எதனையும் கழித்தோ விசுவாசிக்கக் கூடாது. “ஆம்” என்பதுடன், கர்த்தரின் வார்த்தையை அப்படியே நாம் விசுவாசிக்க வேண்டும்.
இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக் கொள்ளும் மக்களில் அநேகர், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கின்றனர், அவர் பெற்ற ஞானஸ்நானத்தை அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் தான் ஆசரிப்புக் கூடார மூடுதிரைகளில் வெளிப்படுத்தப் பட்ட இரகசியத்தை அநேக கிறிஸ்தவர்களால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. இதனால் தான் மேசியா நிறைவாக நிறைவேற்றிய உண்மையான பாவமன்னிப்பை இன்றைய கிறிஸ்தவர்களால் விசுவாசிக்க முடியாமலிருக்கிறது. அவர்கள் இயேசுவை ஏனோதானோவென்று, உலகின் மதங்களில் ஒன்றை நிறுவியவர் என வீனில் விசுவாசிக்கிறார்கள். மேலும், அநேக கிறிஸ்தவர்கள் தவறான பாதையில் நடக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பாவம் செய்கிறார்கள், ஆயினும் அன்றாடம் மனம் வருந்தி ஜெபிப்பதால் தம்மால் பரலோகம் செல்ல முடியும் எனக் கூறுகிறார்கள். உலகின் மற்ற மக்கள் கிறிஸ்தவர்களை ஏன் கொடுமைப் படுத்துகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.
“எத்தகைய விசுவாசத்தால், உங்களின் பாவ பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்?” என்று கிறிஸ்தவர்களை நாம் கேட்கும் போது, அவர்களில் அநேகர், “இயேசுவின் சிலுவை இரத்தத்தை விசுவாசித்தவாறு, அன்றாடம் மனம் வருந்து ஜெபிப்பதின் மூலம் அதனைத் தீர்க்கலாம்” என்று அவர்களில் அநேகர் கூறுவர். மீண்டுமாக நாம் அவர்களிடம் “உங்களின் இருதயத்தில் உள்ள பாவங்களை அவை நிச்சயமாகவே தீர்த்து விட்டனவா?” எனக் கேட்டால், அவர்கள் பதிலளிப்பர், “எனது இருதயத்தில் இன்னமும் பாவங்கள் உள்ளன.” தமது இருதயத்தில் இன்னமும் பாவங்கள் உள்ள மனிதர்கள் கர்த்தரின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு புறம்பானவர்களாயுள்ளனர். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சீக்கிரமாக விசுவாசித்து இயேசு கிறிஸ்துவினுள் அவர்கள் அவர் வரவேண்டும்.
நமது தேவன் எந்த முறையின் படி நமது எல்லாப் பாவங்களையும் துடைத்தார் என்பதை, அப்படியே, விளக்கமாக தெரிந்து கொள்ளவேண்டும். யோவானிடம் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம உலகின் எல்லாப் பாவங்களையும் சுமந்து சிலுவைக்குச் சென்று, அங்கே தனது இரத்தத்தைச் சிந்தியதின் மூலம், நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார். கர்த்தரின் சன்னிதானத்திற்குள் நாம் பிரவேசிக்க வேண்டுமானால், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நெய்யப் பட்ட நமது இரட்சிப்பை விசுவாசித்தவர்களாய் பிரவேசிக்க வேண்டும். ஒருவர் எத்தனைத் தீவிரமாக கர்த்தரை விசுவாசித்திருந்தாலும், முழுநேரமும் அவன்/அவள் தவறாக புரிந்து கொண்டு, தவறாக விசுவாசிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நாம் பரலோக ராஜ்யத்தினுள் பிரவேசிக்க வேண்டுமானால், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப் பட்ட இரட்சிப்பை நாம் விசுவாசிக்க வேண்டும், இவற்றின் மூலமாகவே மேசியா நமது எல்லாப் பாவங்களையும் துடைத்தார், இதனை சத்தியமாக விசுவாசிக்க வேண்டும்.
கர்த்தருக்கு முன்னதாக நமது விசுவாசம் தவறானதாக இருந்தால், எத்தனை முறையானாலு, அதனைச் சரி செய்து, சரியாக அதனை விசுவாசிக்க வேண்டும். தேவன் நமது பாவங்களை ஞானஸ்நானத்தின் மூலம் பெற்று அவற்றைக் கழுவினார் என்பதை சத்தியமாக, இரட்சிப்பை நாம் விசுவாசிக்க வேண்டும். தனது ஞானஸ்நானத்தின் மூலமாக நமது தேவன் நம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக சுமந்தார் எனவும், சிலுவையின் இரத்தத்தின் மூலமாக நமது பாவங்களின் எல்லா ஆக்கினைகளையும் சுமந்தார் எனவும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவின் ஊழியத்தின் மீதுள்ள உண்மையான விசுவாசித்தினால மேசியாவை நம்மால் சந்திக்க முடியும். ஆசரிப்புக் கூடாரத்தின் மூலமாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, மிகவும் தெளிவாக நம்மால் பற்றிக் கொள்ள முடியும், மேலும், இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தில் அதன் விசுவாசம் காணப் படுவைதையும் அறிந்து கொள்ளலாம். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் உருவான சத்தியத்தை இருதயத்தால் விசுவாசிப்பது நமக்கு முன்னால் இருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாயிருக்கிறது.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றால் உருவான ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள சத்தியத்தை அறிந்து அதனை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மேசியா நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார், இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட அவரின் ஊழியத்தின் மூலம் நமது எல்லாப் பாவங்களும் ஏற்கனவே நிவர்த்திக்கப் பட்டன.
உங்கள் முழு இருதயத்துடனும் இந்தச் சத்தியத்தை விசுவாசிக்கும்படி கர்த்தர் உங்களுக்கு புத்திமதி கூறுகிறார். உங்கள் இருதயத்தில் இன்னமும் பாவமிருக்கிறதா? அப்படியானால் உங்கள் இருதயம் எத்தனை இருளாகவும் பாவதினால் அழுக்காகவும் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்டு, அதனை அறிக்கையிட்டு, இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து, உங்கள் எல்லாப் பாவங்களுக்குமான, பாவ மன்னிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். இயேசு உங்கள் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்து விட்டார் என்பதை நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கும் போது, உங்கள் இருதயத்தில் காணப்படும் எல்லாப் பாவங்களையும் அவர்மீது சுமத்தி விட்டு, நிறைவான பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
கர்த்தர் நமக்காகத் திட்டமிட்ட இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் பாவமன்னிப்பினை நாம் அனைவரும் நமது இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகிய இயேசுவின் அதிசயிக்கத் தக்க ஊழியங்களை உள்ளடக்கிய நற்செய்தியை கர்த்தர் நமக்குக் கொடுத்தார், இதன் மூலமாக பாவமன்னிப்பை பெற நம்மை ஏதுவாக்கி, அவரின் சொந்த பிள்ளைகளாக அதிகாரத்தையும் வல்லமையையும் வழங்கினார். இளநீல நிற, இரத்தாம்பர நிற மற்றும் சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட, நமக்குக் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் செயல்களையும் விசுவாசித்து நமது எல்லாப் பாவங்களிலிருந்தும் ஆக்கினைகளிலிருந்தும் இரட்சிக்கப்படவும், தேவன் நம்மை ஏதுவாக்கினார்.
இளநீலம், இரத்தாம்பரம், சிகப்புநூல் மற்றும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப்பட்ட நூல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து இரட்சிக்கப் படுவதை ஏதுவாக்கிய தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நமது எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்து, விசுவாசத்தினால் பரலோக் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கலாம். அல்லேலூயா!