(யாத்திராகமம் 27:9-19)
“வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டு பண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறு முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும். அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும். சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும். வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும். குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக. ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.”
இந்த வசனமானது ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் உள்ள தூண்களைக் குறித்தும், திரைச்சீலையினால் உருவாக்கப் பட்ட வாசல், மெல்லிய பஞ்சு நூலினால் தயாரிக்கப் பட்ட துணிகள், பட்டைகள், அலங்காரங்கள், வென்கள் பூண்கள், வெண்கல ஆணிகள் ஆகியவற்றைக் குறித்து விவரிக்கிறது. ஆசரிப்புக் கூடாரமானது கர்த்தர் வாசஞ் செய்த ஒரு இடமாகும். செவ்வக வடிவத்திலான பிரகாரமானது 45 மீட்டர் (வடக்கிலிருந்து தெற்கு பக்கமாக) நீளமும் 22.5 மீட்டர் (அதன் கிழக்கு மேற்கான பக்கமாக) இருந்தது. ஆசரிப்புக் கூடாரமே கூட நான்கு வகையான அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு சிறிய கட்டிடமாக இருந்தது. அதற்கு மாறாக, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலானது, மிகப் பெரும் திறந்தவெளியைப் போல பெரிதாக இருந்தது.
பிரகாரத்தின் தூண்களின் உயரம் 2.25 மீட்டராக இருந்தது, அதனைச் சுற்றிலும் அமைக்கப் பட்டிருந்த வேலியானது மொத்தமாக 60 மரப் பலகைகளை வைத்து வாசலைத் தவிர மற்ற இடங்கள் அனைத்தையும் வெள்ளை நிற பஞ்சு துணியால் மூடப் பட்டு அமைக்கப் பட்டிருந்தது. வேலியானது இந்த மரத் தூண்களினாலும், வெள்ளி மகுடங்களினாலும் உருவாக்கப் பட்டு மூடப் பட்டிருந்தது, அங்கே வென்கள் பூண்களும் இருந்தன. வெள்ளி மகுடங்களில் வெள்ளியால் ஆன இரண்டு ஆணிகள் இருந்தன, இந்த தூண்கள் ஒன்றை ஒரு தாங்கும் படியாக இந்த ஆணிகளினால் நீளமான வெண்கல பட்டிகள் கட்டப் பட்டிருந்தன. நிலத்திலே இந்த வெள்ளிப் பட்டிகள் வெண்கல திமில்களில் இணைக்கப் பட்டு, இந்த தூண்களை பத்திரமாக வைத்தது.
ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களின் மூலமகா வெளிப்படுத்தப் பட்ட ஆவிக்குரிய பொருள் என்ன?
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் தூண்கள் நம்மிடம் கூறுவது என்ன? உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இயேசு கிறிஸ்து நம்மை எப்படி இரட்சித்தார் என்று அவை நம்மிடம் தெளிவாக கூறுகின்றன. ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் மரத் தூண்கள், மறுபடியும் பிறந்த அனைத்து பரிசுத்தவான்களையும், அதாவது உங்களையும் என்னையும் குறிக்கிறது. அப்படியானால் இந்த மரத் தூண்களுக்கு கீழேயிருக்கும் வெண்கல பூண்கள் நமக்கு கூறுவது என்ன? நாம் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொள்ளுவதை தவிர்க்க முடியாது எனவும், ஆனாலும் கூட கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்றும் அவை நம்மிடம் கூறுகின்றன.
மறுபுறம் பார்க்கையில், மரத்தூண்களில் மகுடங்களாக வைக்கப் பட்டிருந்த வெள்ளி மகுடங்கள், கர்த்தர் நம்மை இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக எல்லாப் பாவிகளையும் இரட்சிக்கின்ற இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார் என்று நம்மிடம் கூறுகின்றன. இந்த வெள்ளி மகுடங்களில் வெள்ளி ஆணிகள் வைக்கப் பட்டு, இந்த ஆணிகளிலே வெள்ளிப் பட்டைகளும் வெண்கலப் பூண்கள் நிலத்திலே அறையப் பட்டு இணைக்கப் பட்டிருந்தன என்பது, நாம் நம்முடைய பாவங்களுக்காக மரணத்தை தவிர்க்க முடியாதவர்களாக இருந்தாலும் கூட, நம் தேவன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய சத்தியத்தின் மூலமாக, அதாவது, இரட்சிப்பின் சத்தியம் மூலமாக நமக்கு பாவங்களுக்கான மன்னிப்பு என்ற வரத்தைக் கொடுத்தார் என்று நம்மிடம் கூறுகிறது.
இந்த முறையின் படியாக, நம் தேவன் இந்த பூமிக்கு வந்து, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய விலையேறப் பட்ட இரத்தத்தை சிலுவையில் சிந்தி தன்னையே பலியாக்கி நம்மை இரட்சித்தார் என்ற சத்தியத்தை ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்திலுள்ள தூண்கள் நமக்கு காட்டுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், தேவன் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்து நம்மை கர்த்தருடைய மக்களாக மாற்றினார் என்ற, பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்த வரத்தை நமக்கு காட்டுகிறது. ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ள வேலியில் இருக்கின்ற இந்த மரத் தூண்கள், நம் தேவன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய ஊழியத்தின் மூலமாக, அதாவது ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி எல்லாப் பாவிகளையும் உலகத்தின் பாவங்களில் இருந்து ஒரேதரமாக இரட்சித்து விட்டார் என்று நம்மிடம் கூறுகின்றன. இந்த சத்தியம் மிகவும் நிச்சயமானதாக இருப்பதினால், இதனை என்னால் உலகம் முழுவதும் பரப்புவதை தவிர்க்க இயல முடியாத ஒன்றாக இருக்கிறது.
தூண்களுக்கு கீழே இருக்கும் வெண்கலப் பூண்கள்
இந்த வேலியில் இருக்கின்ற பூண்கள் வெண்கலத்தினால் தயாரிக்கப் பட்டிருந்தன, ஆனால் இந்த தூண்களின் மகுடங்களும், அவற்றின் ஆணிகளும், அவற்றின் பட்டிகளும் வெள்ளியினால் தயாரிக்கப் பட்டிருந்தன.
மாற்கு 7:21-22 கூறுகிறது, “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.” நாம் ஒவ்வொருவரும் நம் இருதயங்களிலே இந்த பொல்லாத பாவங்களுடனே பிறந்திருக்கிறோம். இதனால் தான் நாம் மரிக்கும் வரையிலும் இந்தப் பாவங்களிலேயே நாம் வாழ வேண்டியவர்கள் என்றும், இந்தப் பாவம் நிறைந்த வழியியில் வாழுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்றும் கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். இந்த வார்த்தையை நாம் அப்படியே ஏற்றுக் கொண்டால், நம்முடைய அடிப்படை சுபாவம் பாவம் நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் நம் பாவங்களுக்காக நம்மால் நியாயத்தீர்ப்பை பெற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அறிக்கைச் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது.
ஆனாலும் கூட, நம்மைப் போன்ற நிர்ப்பந்தமான மனிதர்களை நம் தேவன் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலினால் இரட்சித்தார். நம்முடைய தேவன் நம் எல்லாப் பாவங்களையும் தான் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டதினால், அவரால் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு சுமந்து சென்று இந்தப் பாவங்களுக்கான தண்டனையை சுமக்க முடிந்தது. இப்படியாகத் தான் இயேசுவானவர் நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார்.
இதற்காக நம்மால் கர்த்தருக்கு போதுமான நன்றிகளைக் கூற முடியாது! நாம் அனைவரும் நரகம் செல்ல வேண்டிய நிலையில் கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்பதே மிகவும் விலையேறப் பட்டதாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும், முழு உலகத்திற்குமான மிகவும் உயர்வான வரமாகவும் இருக்கிறது. தேவனுக்கு முன்னதாக நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் நம்மை இரட்சித்த இந்த நற்செய்தியை விசுவாசித்து இதற்காக தேவனுக்கு நன்றி கூறுவதைத் தவிர நம்மால் வேறு எதனையும் செய்ய முடியாது. ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் தூணிலே பயன் படுத்தப் பட்ட பொருட்களின் மூலமாக, தேவனுடைய இரட்சிப்பானது எவ்வித குறையும் இல்லாத முழுமையான சத்தியமாக இருக்கிறது என்பதை கர்த்தர் நம்மிடம் காட்டுகிறார்.
ஆசரிப்புக் கூடாரத்திலே பயன் படுத்தப் பட்ட பொருட்களின் அனைத்து இரகசியங்களும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் அகற்றப் பட்டன. நற்செய்தியான இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை இல்லாம இரட்சிப்பின் இரகசியத்தை அகற்றவே முடியாது. ஆசரிப்புக் கூடாரத்தின் அனைத்து குறிப்புகளும், அதன் பலிகாணிக்கை முறையின் இரகசியமும், இந்த இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் மறைந்திருக்கிறது.
அடிப்படையாக பேசும் போது, குறிப்பாக, நீங்களும் நானும் நம்முடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்னதாக நரகத்திற்கு செல்லுவதை தவிர்க்க இயலாதவர்களாக இருந்தோம். வெளிப்படையாக பேசினால், இப்போதும் கூட நாம் தொடர்ந்து பாவம் செய்கிறோம், ஆனால் அப்படி இருந்தாலும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் தேவன் நமக்கு முழுமையான பாவங்களுக்கான மன்னிப்பை கொடுத்தார், இந்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் இந்த பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம். கர்த்தர் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்து நம்மைத் தன் பிள்ளைகளாக மாற்றியதால் தான் நம்மால் அவருடைய வாரிசுகளாக மாறி அவருடைய ராஜ்யத்தின் மகிமையையும் மாட்சிமையையும் நம்மால் அனுபவிக்க முடிகிறது. கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பை விட்டு விட்டால், அவருடைய மறுபடியும் பிறந்த பிள்ளைகளாக மாறுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை. நம் தேவன் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்ததினால் தான் நாம் அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
நாம் அடிப்படையிலே எத்தகைய மக்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து இதுவரை அறிந்து கொள்ளாதவர்களாக இருந்தோம், நாம் நம்முடைய அளவுகோலின் படியாக மட்டுமே நம் பாவங்களின் தீவிரத்தை அளந்தோம். ஆனால் நாம் ஏதோ ஒருவகையான பாவங்களைச் செய்கிறோமா இல்லையா என்பது முக்கியம் அல்லவா, ஏனெனில் நாம் எத்தகைய செயல்களைச் செய்திருந்தாலும் கூட நரகத்திற்கு செல்ல வேண்டிய கொடுமையான பாவிகளாக மட்டும் தானே இருக்கிறோம். ஆனாலும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக, நம்மைப் போன்ற இத்தகைய மக்களை நம் தேவன் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். பழைய ஏற்பாட்டிலே தேவன் வாக்குத்தத்தம் செய்த படியாக, அவர் புதிய ஏற்பாட்டு காலத்திலே நம்மிடம் உண்மையாகவே வந்தார், இந்த வாக்குத்தத்த வார்த்தையின் படியாக நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, இந்தப் பாவங்களை சிலுவைக்கு சுமந்து சென்று, தன்னை அங்கே பலியாக்கி தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம் பாவங்களுக்கான கிரையத்தைச் செலுத்தி, நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்து இந்த இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்தார். இப்படியாகத் தான் நீங்களும் நானும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களுக்குமான இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுக் கொண்டோம்.
ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத் தூணின் மீது எதற்காக மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப் பட்ட துணி தொங்கவிடப் பட்டிருந்தது?
ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் மொத்தமாக 60 தூண்கள் வைக்கப் பட்டிருந்தன, அவை அனைத்தும் மெல்லிய பஞ்சினால் தயாரிக்கப் பட்ட துணிகளினால் மறைக்கப் பட்டிருந்தன. நாம் அனைவரும் நம் பாவங்களினால் கறைபடிந்த அசுதமானவர்கள் என்றாலும் கூட, இதற்காக நாம் நரகத்திலே வீசப் பட்டு இந்தப் பாவங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டும் என்றாலும் கூட, நம் தேவன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக நம்மை இரட்சித்தார் என்று இந்த துணிகள் நமக்கு கூறுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால் நம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவி விட்டார் என்று இந்த துணிகள் நமக்கு கூறுகின்றன.
இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது, உலகத்தின் பாவங்கள் அனைத்தும் அவர் மீது சுமத்தப் பட்டன. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் இப்படியாக தன் மீது ஏற்றுக் கொண்ட இயேசுவானவர், சிலுவையில் அறையப் பட்டு பாவங்களுக்கான தண்டனை ஏற்றுக் கொள்ளும் படியாக தன் இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுப்பப் பட்ட அவர் இப்போது நம் உயிரோடிருக்கும் இரட்சகராக இருக்கிறார். இதுவே நம் தேவன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய தன் ஊழியத்தின் மூலமாக நிறைவேற்றிய இரட்சிப்பின் வரமாக இருக்கிறது; இதுவே நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை சுத்தம் செய்து, கர்த்தருடைய பிள்ளைகளாக மாறும் படியாக எந்த குறையும் களங்கமும் இல்லாதவர்களாக மாற்றிய தேவனுடைய அன்பாக இருக்கிறது. இந்த இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்த நம் தேவன், இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவரையும் கர்த்தருடைய சொந்த மக்களாக மாற்றினார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களிலே தொங்க விடப் பட்டிருந்த வெள்ளைத் துணியானது கர்த்தருடைய பரிசுத்தத்தை நமக்கு தெரிவிக்கிறது, மேலும் அது நம் பரிசுத்தத்தைக் குறித்து, உண்மையான விசுவாசிகளாகிய நம் பரிசுத்தத்தைக் குறித்தும் கூறுகிறது. ஆகவே, நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக மாற வேண்டுமானால், நாமும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் என்ற இயேசுவானவரின் ஊழியத்தை விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் சுத்திகரிக்கப் பட்டு பரிசுத்தமானவர்களாக மாற வேண்டும். கர்த்தர் நம்மிடம் இப்படியாக கூறுகிறார், “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவியராகமம் 11:45), இப்படியிருக்கும் போது நம் செயல்களினால் நம்மால் எப்படி பரிசுத்தமாக இருக்க முடியும்? நாம் எத்தனையாக முயற்சி செய்தாலும் கூட நம்மால் பாவம் செய்வதை தவிர்க்க முடியாது என்பதால், நம் சொந்த முயற்சிகளினால் நம்மால் பரிசுத்தமாக இருக்க முடியாது. ஆனால் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக, உங்களையும் என்னையும் போன்றவர்களை நம் தேவன் முழுமையாக சுத்திகரித்தார். இப்படியாகத் தான் நீங்களும் நானும் முழுமையாக கர்த்தருடைய சொந்த மக்களாக மாறினோம். கர்த்தருடைய நீதியை விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களையும் சுத்தம் செய்து பரிசுத்தமாவதைத் தவிர நமக்கு வேறு எந்த வழியும் இல்லை.
வெண்கல பூண்களும் வெண்கல பாதங்களும்
வெள்ளி மகுடங்கள் தூண்களுக்கு மேலாக இணைக்கப் பட்டிருந்தன. வெள்ளி ஆணிகளும் வெள்ளிப் பட்டைகளும் ஒவ்வொரு தூண்களும் விழுந்து விடாத படியாக ஒன்றை ஒன்று இணைத்தன. ஒவ்வொரு தூணும் கூட ஒரு வெண்கல பூணிலே இணைக்கப் பட்டிருந்தது. ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வேலியில் இருந்த ஒவ்வொரு தூணும் இரண்டு வெண்கல பாதங்களிலே நிலத்திலே இருக்கமாக கட்டப் பட்டிருந்தன.
நாம் நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் பட்டு நரகத்தி வீசப் படும் படியாக தண்டிக்கப் பட்டிருக்கிறோம் என்றாலும் கூட, நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை செய்த இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்து நம்மை பரிசுத்தமான மக்களாக மாற்றினார் என்பதை இது காட்டுகிறது. இந்த இரட்சிப்பின் கிருபையினால் கர்த்தர் நம்மைத் தன் பரிசுத்தமான மக்களாக மாற்றியதால், கர்த்தருடைய கிருபைக்காக அவரைத் துதித்து நன்றி கூறுவதை நம்மால் தவிர்க்க முடியாது. இந்த இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய வார்த்தையின் மூலமாக கர்த்தரை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, நாம் கர்த்தரைத் துதிப்பதுடனே கூட, இந்த வார்த்தையை பரப்புவதையும் கூட நம்மால் தவிர்க்க முடியாது.
நாம் பாவம் செய்யாமல் இருந்த ஒரு நாளாவது இருக்கிறதா? அங்கே ஒன்றுமே இல்லை! கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து அவருடைய கிருபையின் மூலமாக மறுபடியும் பிறந்த நாமும் கூட ஒவ்வொரு நாளும் பாவம் செய்கிறோம். யாராவது ஒருவர் நம்மை எதிர்த்தாலோ அல்லது நட்புடன் இல்லாதிருந்தாலோ, உடனடியாக நாம் இந்த நபரை ஏசவும் சபிக்கவும் செய்கிறோம். நீங்கள் சாலையிலே அமைதியாக காரை ஓட்டிச் செல்லும் போது திடீரென உங்கள் காரை உரசிக் கொண்டு யாராவது ஒருவர் தன் காரை ஓட்டிச் சென்றால், அந்த கவனமில்லாத ஓட்டுனரைக் குறித்து கோபப் பட மாட்டீர்களா? கோபம் அடைவோம்! என்னுடைய சத்தமிடும் ஹாரனை வைத்து அத்தை மூர்க்க ஓட்டுனரை நான் சபித்திருப்பேன். ஆனால் அது உண்மையாகவே நாம் செய்யக் கூடிய காரியமாக இருக்கிறதா? அது நாம் செய்யக் கூடிய காரியம் அல்ல என்பது உண்மை தான், ஆனால் நாம் எல்லா வேளைகளிலும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்பதே பிரச்சனையாக இருக்கிறது.
நாம் நம்முடைய குறைபாடுகளுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆயினும் கீழ்வருமாறு கூறப் பட்டுள்ளது, கர்த்தர் நமக்கு “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்” (எபிரெயர் 10:20). இது முழுவதுமாக கர்த்தருடைய வரமாக இருக்கிறது இது பிதாவாகிய கர்த்தருடைய சித்தத்தின் படியாக இயேசு கிறிஸ்துவினால் முழுமையாக்கப் பட்டது.
கர்த்தர் நமக்கு எத்தகைய இரட்சிப்பின் வரத்தை நமக்கு கொடுத்தார்? அவர் நம் பாவங்களுக்கான இரட்சிப்பை வரமாக கொடுத்தார், அது ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய நூல்களின் மூலமாக நிறைவேற்றப் பட்டது. அப்படியானால் நம்மால் எப்படி கர்த்தரை துதிக்காமல் இருக்க முடியும்? நாம் உண்மையான இந்த இரட்சிப்பை பெற்றுக் கொண்ட நிலையிலே, உண்மையான சமாதானம் எப்படி நம் இருதயங்களில் இல்லாதிருக்க முடியும்? பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து நம் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது, அல்லது அது காலையிலே மறைந்து போகும் பனியைப் போல மறையக் கூடிய ஒன்றும் அல்ல, ஆனால் நாம் நித்தியமாகவும் முழுமையாகவும் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். கர்த்தர் பாவிகளை மிகவும் அதிகமாக நேசித்ததினால் அவர் அவர்களுக்கு இரட்சிப்பின் கிருபையை இலவச பரிசாக வழங்கினார், இந்த பரிசின் மூலமாக விசுவாசிகளாகிய நம்மைத் தன் நீதியினால் தரிப்பித்தார்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வேலியில் இருந்த பொருட்களிலே, நிலத்தினைத் தொட்ட அனைத்து பூண்களும் ஆணிகளும் வெண்கலத்தில் இருந்து தயாரிக்கப் பட்டன. ஆனால் தூண்களுக்கு மேலே வைக்கப் பட்டிருந்த மகுடம் வெள்ளியினால் தயாரிக்கப் பட்டது. நாம் அனைவரும் அடிப்படையிலே நரகம் செல்ல வேண்டியவர்களாக இருந்தாலும் கூட, தேவனால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்து கர்த்தருடைய பிள்ளைகளாக மாறினோம் என்பதை இவை அனைத்தும் நமக்கு காட்டுகின்றன. நாம் ஒவ்வொருவரும் அவருடைய வார்த்தையை இந்த வரத்தைப் பெற்றுக் கொண்டோம். இந்த நிலையில், நாம் பெற்றுக் கொண்ட இந்த பாவங்களில் இருந்து கிட்டிய இரட்சிப்பைக் குறித்து நாம் எத்தனை உறுதியாக இருக்கிறோம்? இது கர்த்தர் நமக்கு அருளிச் செய்த வரமாகும், நம்முடைய நிச்சயமான இரட்சிப்பையும் ஆசீர்வாதத்தையும் நம்மால் மாற்றவே முடியாது. நமக்கு இவை தெரிந்திருப்பதினால் நம்மால் போதுமான அளவிற்கு கர்த்தருக்கு நன்றி கூற முடியாது.
நீங்களும் நானும் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம் என்பது கர்த்தருடைய வரம் என்பது நிச்சயம். நம்முடைய இரட்சிப்பானது குறை உள்ள ஒன்றல்ல அது நம்முடைய குறைபாடுகள் வெளிப்படுத்தப் படும் போது மறைந்து போய் விடுவதில்லை. உங்களையும் என்னையும் போன்ற இத்தகைய மோசமான பாவிகளுக்காக, நம் தேவன் இந்த பூமிக்கு வந்து இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை மூலமாக நமக்கு இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார். மேலுமாக, இந்த சத்தியத்தை விசுவாசிக்கின்ற அனைவரும் தம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நித்தியமாக இரட்சிக்கப் பட்டனர். பாவிகளுக்கான தேவனுடைய இரட்சிப்பு மிகவும் முழுமையானதாக இருப்பதினாலும், அவர் நம்முடைய மாமிசத்தின் குறைபாடுகளையும், பலவீனங்களையும், களங்கங்களையும் எடுத்துப் போட்டு விட்டதினால், அவர் நம்மை முழுமையாக்கினார், இதனால் நமக்கும் பாவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாதிருக்கிறது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை தெளிவாக அறிந்து விசுவாசிப்பவர்கள் நித்தியமாக முற்றிலும் இரட்சிக்கப் பட்டவர்கள் ஆவர்.
இத்தகைய நிலையில், கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த இரட்சிப்பின் வரமானது எத்தனை விலையேறப் பட்டதாகவும் மதிப்புடையதாகவும் இருக்கிறது? இந்த இரட்சிப்பின் வரத்திற்காக நான் உண்மையிலேயே நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன், ஏனெனில் அது நம் இருதயங்களுக்கு அதிகமான ஓய்வை எடுத்து வந்ததுடன் நம்மை அதிகமாக ஆறுதல் படுத்தி ஆசீர்வதிக்கவும் செய்தது. நம் தேவன் நம் இருதயங்களுக்கு ஓய்வை எடுத்து வருகிறார். இதனால் தான் அவர் கீழ்வருமாறு கூறினார், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” (மத்தேயு 11:28). என்னுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இந்த விடுதலையின் வரத்தைக் கொடுத்தமைக்காக கர்த்தருக்கு நான் நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன்.
நான் மட்டும் அல்ல நீங்கள் அனைவரும் கூட கர்த்தருக்கு மிகவும் விலையேறப் பட்டவர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தர் உங்களையும் என்னையும் நற்செய்தியாகிய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் இரட்சித்தார். இந்த வார்த்தையை விசுவாசிக்கும் அனைவருக்கும் அவர் இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார் என கர்த்தர் கூறுகிறார், அவர் கூறுவதை நான் விசுவாசிப்பதால், நீங்கள் அனைவரும் கூட கர்த்தருக்கு மிகவும் முக்கியமானவர்களே என நான் எண்ணி விசுவாசிக்கிறேன்.
இப்போது, நம்முடைய பலத்திற்கும் அப்பாற்பட்டு கர்த்தருடைய வேலையை கடினமாக செய்வதினால், நாம் மிகவும் களைப்படையும் நேரங்கள் இருக்கின்றன. ஆகவே, என் உடன் ஊழியர்களுடன் ஒன்று சேர்ந்து அப்பத்தை புசிப்பது போன்ற மாமிசத்திற்கான காரியங்களில் அவர்களை ஆறுதல் படுத்தி ஊக்குவிக்கிறேன். ஆனால் மாமிசத்தை ஆறுதல் படுத்துவதின் மூலமாக நம்மால் உண்மையாகவே திருப்தி அடைய முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மாறாக தேவன் நமக்கு கொடுத்த நம்முடைய இரட்சிப்பைக் குறித்த வரத்தை நாம் நினைவு கூறுவதின் மூலமாக நம்மால் ஊக்கப் படுத்தப் பட முடியும். கர்த்தர் ஏற்கனவே நம் இருதயங்களுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினால் நாம் ஆறுதல் அடைந்து திருப்தியானோம். கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த இரட்சிப்பின் வரத்தின் மூலமாக இத்தகைய பெரிதான வரங்களையும் ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக் கொண்டதினால், நம்முடைய இருதயங்களில் சமாதானமும் ஆசீர்வாதங்களும் இருக்கின்றன, அவை இந்த உலகத்தினால் அறியப் படாதவையாக இருக்கின்றன.
உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் நிறைவான இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்திருக்கிறார், இந்த பெரிதான வரமானது இந்த உலகத்திற்கு இதுவரை தெரியாத ஒன்றாக இருக்கிறது. சில மக்கள் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய சத்தியத்தை அறிந்திராத போதிலும் அவற்றை விசுவாசிக்காத போதிலும், தம்முடைய மத அர்ப்பணிப்பின் மூலமாக பாவம் இல்லாதவர்களாக இருப்பதாக வலியுறுத்துகிறார்கள், ஆனால் அவர்களுடைய மத அர்ப்பணிப்பினால் உருவான உணர்ச்சி சிறிது நேரத்திலேயே மறைந்து விடும். தம்முடைய சொந்த சிந்தனைகளினால் கிடைத்த சமாதானமானது அவர்கள் சிறிதளவு கடினத்தை அனுபவித்தாலேயே காலையின் பனியைப் போல மறைந்து போய் விடும்.
ஆனால் தேவனால் கொடுக்கப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிப்பவர்கள், அதிகமான கடினங்களை சந்திக்கும் போது, அவர்களின் மன சமாதானம் இன்னமும் அதிக பிரகாசமாக ஒளிரும். நாம் மிதிக்கப் பட்டாலும், காயப் பட்டாலும், கவலையுடன் இருந்தாலும், தேவனால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரம் நம் இருதயங்களில் இருப்பதினால் முழுமையும் நன்றியறிதலும் நம் மனங்களில் இருந்து வழிந்தோடுகிறது. நாம் முழுமையாக இரட்சிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம், நம்மால் எகிப்து நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது, மீண்டுமாக நம் பாவங்களையோ தண்டனையையோ சந்திக்கப் போவதும் இல்லை. கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கும் நம்மை கர்த்தர் ஆசீர்வதித்தார் இதனால் நாம் அவருக்கு நம் விசுவாசத்தால் முழுவதுமாக நன்றி கூற முடியும். இதனால் தான் நாம் நம்முடைய விசுவாசத்தால் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலின் நிச்சயமான இரட்சிப்பை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடிவதாலும், கர்த்தர் என்னை நேசிப்பதாலும், அவர் என்னை பெரிதாக ஆசீர்வதித்ததினாலும், இந்த விலையேறப் பட்ட நற்செய்தியை பிரசங்கிக்கச் செய்ததினாலும், போதுமான அளவு கர்த்தருக்கு என்னால் நன்றி கூற முடியாது, ஏனெனில் அவற்றை பெற நான் தகுதி இல்லாதவன் என்பது எனக்குத் தெரியும். தேவனுக்கு நான் அன்றாடம் நன்றி கூறினாலும் கூட, நற்செய்திக்காக மட்டுமே என்னை வாழச் செய்தமைக்காக அவருக்கு என்னால் போதுமான அளவு நன்றி கூற முடியாது. கர்த்தர் எனக்கு கொடுத்த பெரிதான இரட்சிப்பின் வரத்திற்காக அவருக்கு நான் நன்றி கூறும் போது, நான் என்னுடைய நன்றி நிறைந்த இருதயத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யும் போது, என்னுடைய சொற்களும் சொற்றொடர்களும் எத்தனை குறைபாடானவை என்பதை நான் அறிந்து கொள்ளுகிறேன்.
நாம் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் நற்செய்தியிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பை விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம். உங்களுக்காக, இயேசுவானவர் இந்த பூமியிலே பிறந்து, தன்னுடைய 30 ஆம் வயதிலே யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உங்கள் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, இந்தப் பாவங்களை சிலுவைக்கு சுமந்து சென்று, தன் இரத்தத்தை அங்கே சிந்தி அதிலே மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இப்போது பிதாவாகிய கர்த்தருடைய சிங்காசனத்திற்கு வலது பக்கத்திலே அமர்ந்திருக்கிறார். முழுமையான இரட்சிப்பின் வரத்தினை விசுவாசத்தினால் பெற்றுக் கொண்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து அதனைக் கொடுத்தார். நாம் இந்த விசுவாசத்தை மறுதலிக்காத நிலையில், ஒரு முறை நாம் பெற்றுக் கொண்ட இந்த இரட்சிப்பானது மீண்டும் அழிந்து போவதேயில்லை. நம்மிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் பரவாயில்லை, நாம் எத்தகைய தவறுகளை செய்தாலும் பரவாயில்லை, நாம் அனைவரும் முழுமையான இரட்சிப்பின் வரத்தை அணிந்து கொண்ட அவருடைய சொந்த மக்களாக மாறி விட்டோம்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் தூண்களில் தொங்கவிடப் பட்ட மெல்லிய பஞ்சின் துணி
மெல்லிய பஞ்சின் துணி ஒன்றை சிறிது நேரத்திற்கு தொங்க விட்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். மெல்லிய பஞ்சின் துணியானது நைலான் நூலினால் தயாரிக்கப் பட்ட ஒன்றல்ல, அது மெல்லிய பஞ்சின் நூலினால் தயாரிக்கப் பட்டிருந்தது. ஒரு பாலை வனத்திலே இத்தகைய மெல்லிய பஞ்சின் துணியை போட்டால், சிறிது நேரத்திலேயே அவை அழுக்கடைந்து விடும். அவை சிறிது நேரத்திலேயே அழுக்காகி விடும் என்று தெரியாமலேயே, இத்தகைய வெள்ளைத் துணியை கர்த்தர் அங்கே வைத்தாரா? கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரத்தைக் காட்டுவதற்காக மெல்லிய பஞ்சின் துணியை அங்கே வைக்கும் படியாக அவர் இஸ்ரவேலரிடம் கூறினார், இந்த வரத்தை நாம் விசுவாசத்தால் பெற்றுக் கொண்டோம். நம்மை முழுமையாகவும் சுத்தமாகவும் நம் அழுக்கான பாவங்களில் இருந்து நம்மை இப்படியாக இரட்சித்து விட்டார் என்பதை நம் இருதயங்களில் தெளிவாக பதிவு செய்யவும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளவும் அவர் இப்படிச் செய்தார்.
இஸ்ரவேல் மக்கள் இந்த மெல்லிய பஞ்சின் துணியை தொங்கவிடும் படி கர்த்தர் செய்தார். வெள்ளைத் துணியிலே வெளிப்படுத்தப் பட்ட அவருடைய முழுமையான இரட்சிப்பைக் கண்டு விசுவாசித்து அவருக்கு நாம் எப்போதும் உண்மையாகவே நன்றி கூறி துதிக்க வேண்டும் என்று இது குறிப்பிடுகிறது. இந்த மெல்லிய பஞ்சின் துணியை தொங்கவிட்டதின் மூலமாக, கர்த்தர் நமக்கு இரட்சிப்பின் வரத்தினை முழுமையாகத் தந்தார். அவரால் கொடுக்கப் பட்ட நம்முடைய இரட்சிப்பானது இந்த மெல்லிய பஞ்சின் துணியைப் போன்றது.
நாம் உண்மையாகவே அழுக்கும் மோசமுமானவர்கள், நம்முடைய பாவங்களுக்காக நரகம் செல்லுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஒரு நாளில் மட்டுமே நாம் நம்முடைய மனதின் ஆடைகளை பல முறைகள் கழுவ வேண்டும். ஆனாலும் நம்முடைய இருதயங்களை கர்த்தர் முழுமையாக வெள்ளையாக்கினார். வேறு வார்த்தைகளில் கூறினால், நம்முடைய தேவன் நம்மைப் போன்ற மக்களை முழுமையாக மாற்றினார். மிகவும் மோசமான, அழுக்கான, எளிதில் அழுக்கடையும், நம்மைப் போன்ற இத்தகைய மக்களைத் தன்னுடைய பரிசுத்தமான மக்களாக மாற்றக் கூடிய கர்த்தருடைய வல்லமை மிகவும் பெரியதும் சிறப்பானதுமாக இருக்கிறது.
இன்று நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களாகிய நாம் கர்த்தரிடமிருந்து முழுமையான இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுக் கொண்டவர்களாக இருக்கிறோம். நாம் நம்முடைய இருதயத்தின் எல்லாப் பாவங்களும் முற்றிலுமாக கழுவப் பட்டவர்களாக இருக்கிறோம், நாம் இப்போது பனியைப் போல வென்மையானோம்.
இன்னமும் உங்களுடைய இருதயங்களில் ஏதாவது பாவம் இருக்கிறதா? அப்படி இல்லை! உங்களுடைய இருதயங்களே வென்மையாக மாறியது, அது ஆசரிப்புக் கூடார வேலியிலே தொங்க விடப் பட்டிருந்த சுத்தமான துணியைப் போன்றது. நீங்களும் நானும் இப்படியாக முற்றிலும் சுத்தமாக மாறினோம். நாம் நம்முடைய பாவங்களுக்காக அடிப்படையிலே தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்ற நிலை இருந்தாலும் கூட, நாம் இப்போது இரட்சிக்கப் பட்டோம். இந்த இரட்சிப்பானது நம்முடைய சொந்த நன்மையினாலோ அல்லது விசுவாசத்தினாலோ வரவில்லை, ஆனால் கர்த்தருடைய கிருபையானது நம்மை அவருடைய வல்லமையினால் தரிப்பித்தது, அது ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களில் உள்ள வெண்கலப் பாதங்களையும் அதன் மீது வெள்ளி மகுடங்கள் ஒன்றுடன் ஒன்று வெள்ளிப் பட்டையால இணைக்கப் பட்டதைப் போன்று இருக்கிறது. நாம் அனைவரும் உண்மையாகவே நரகத்தினாலும் தண்டனையினாலும் கட்டப் பட்டிருந்தாலும் கூட, கர்த்தர் நம்மைத் தன்னுடைய இரட்சிப்பின் வரத்தினால் தரிப்பித்தார் என்று விசுவாசிப்பதின் மூலமாக, நாம் அனைவரும் அவருடைய இரட்சிக்கப் பட்ட மக்களாக மாறினோம். இதுவே ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகார வேலியிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள 60 தூண்களும், உண்மையான விசுவாசிகளாகிய நம்மையே குறிப்பிடுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த தூண்களில் ஒவ்வொன்றும், நம் ஒவ்வொருவரையும் குறிப்பிடுகிறது. நாம் கர்த்தருடைய மக்களாகவும் இருக்கவில்லை அவருடைய வீட்டிற்குள் பிரவேசிக்கிறவர்களாகவும் இருக்கவில்லை, ஆனாலும் கூட இத்தகைய மதிப்பெதுவும் இல்லாத மக்களுக்கு கர்த்தர் தன் இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார். அவர் இந்த பூமிக்கு வந்து, இரட்சிப்பின் கிருபையை முழுமையாக்கி, இந்த சத்தியத்தின் வரத்தினைக் கொடுத்தார், நாம் இந்த சத்தியத்தை அறிந்து விசுவாசிப்பதினால், அவர் நம்மைத் தன்னுடைய சொந்த மக்களாக மாற்றினார் ஆகவே நாம் முழுமையாக இரட்சிக்கப் பட்டோம், நாம் மீண்டுமாக சபிக்கப் படுவதேயில்லை.
இது எத்தனை ஆச்சரியமான ஆசீர்வாதமாக இருக்கிறது? ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களைப் போல, நம்மால் தனியாக நேராக நிற்க முடியாமல் விழுந்து போவோம். ஆனால் நாம் நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப் பட்ட பிறகு நாம் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கான ஒரே காரணம், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிக்கின்ற நாம் அவருடைய கிருபையை விசுவாசித்து அந்த கிருபையிலே ஒன்றாக இருப்பதே ஆகும். நாம் நரகம் செல்லுவத தவிர்க்க முடியாத எந்த மதிப்பும் இல்லாத மக்களாக இருந்தோம் என்பதை முதலாவதாக விசுவாசிக்க வேண்டும், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய வார்த்தையின் மூலமாக, தேவன் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்து, அவற்றிற்கான தண்டனையை அவரே நேரடியாக ஏற்றுக் கொண்டு இதன் மூலமாக நம் அனைவரையும் முழுமையாக இரட்சித்தார். இந்த விசுவாசத்தினால் தான் நம்மால் எப்போதும் கர்த்தருக்கு முன்னதாக நின்று, அவரைத் துதித்து, அவருடைய செயல்களுக்கு ஊழியம் செய்து, இந்த இரட்சிப்பின் வரத்திற்காக எப்போதும் அவருக்கு நன்றி கூற முடியும்.
நம்முடைய மாமிசத்தின் பலவீனத்தினால் தடுக்கி விழக் கூடிய சில நேரங்கள் இருக்கின்றன. நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் தண்டனையில் இருந்தும் இரட்சிக்கப் பட்டதாக நாம் விசுவாசித்தாலும் கூட, நாம் களைப்பும் சலிப்பும் அடையும் நேரங்கள் நம் இரட்சிப்பிற்கு பின்னரும் வரும், நாம் இத்தகைய வழியில் எதற்காக வாழ வேண்டும் என்றும் ஆச்சரியப் படுகிறோம். சில நேரங்களில் இத்தகைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளினால் நாம் துன்புறுத்தப் படுகிறோம், இரட்சிப்பிற்கு பிறகு நாம் கர்த்தரிடம் இருந்து விலகிச் செல்லாமலேயே விசுவாச வாழ்வை நாம் தொடர்ந்தும் வாழுவதற்கான காரணம், முன்னதாக நாம் என்ன நிலையில் இருந்தோம் என்று எண்ணிப் பார்க்கையில், கர்த்தர் நமக்கு கொடுத்த விடுதலையின் கிருபைக்கும் இரட்சிப்பின் வரத்திற்கும் நாம் இன்னமும் அதிகப் படியான நன்றியறிதலுடன் இருப்போம்.
இதனால் தான் நம்மால் நம் விசுவாசத்திலே இன்னமும் அதிக உறுதியுடன் இருக்க முடிகிறது. நம்மால் நம்முடைய எல்லாத் துன்பங்களில் இருந்தும் விசுவாசத்தினால் எழுந்திருக்க முடிவதற்கான காரணம் உண்மையான நற்செய்தியே ஆகும். நாம் எப்போதும் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட, கர்த்தருடைய முழுமையான இரட்சிப்பிற்காக நம்மால் அவருக்கு நன்றி மட்டுமே கூற முடியும். நம்மால் எப்போதும் பெருமைப் பாராட்டவே முடியாது, சிறிதளவும் முடியாது, இரட்சிப்பின் வரத்தின் மூலமாக அவர் நம்மைத் தன் பிள்ளைகளாக மாற்றியதற்காக அவருக்கு நன்றி கூறி, அவருக்கு முன்னதாக உறுதியுடன் நின்று, ஆசாரியர்களுக்கான கடமைகளை நாம் உண்மையாகவே செய்கிறோம். கர்த்தர் நமக்கு கொடுத்த மிகப் பெரும் இரட்சிப்பின் வரத்தினாலும் கிருபையினாலும் தான் நாம் நம்முடைய விசுவாசத்திலே இத்தனை உறுதியுடனும் விடாமலும் அப்படியே இருக்கிறோம். நம்முடைய அடிப்படைச் சுபாவத்தை நாம் அப்படியே அறிந்திருந்தால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் வார்த்தை மூலமாக கர்த்தர் நமக்கு கொடுத்த பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதையும், தேவனுக்கு ஊழியம் செய்வதையும் நம்மால் தவிர்க்க முடியாது.
நாம் இதற்காக எத்தனை நன்றியறிதல் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று அறிந்து அதனை நம் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் போது, நம்முடைய விசுவாசம் எப்போதும் அசையாது. அது மிகவும் நிலையானதாக மாறும். மக்கள் நம்மீது எத்தனை காரியங்களை கூறினாலும், கூட, அவர்கள் சிலுவையின் விலையேறப் பட்ட இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து தாம் மரித்து இப்போது முழுமையானதாக மாறி விட்டதாக கூறி அத்தகைய பிதற்றல்களை அறிவித்தாலும் கூட, நம்முடைய விசுவாசத்தை அசைக்கவே முடியாது. நம்முடைய அடிப்படை சுபாவம் மிகவும் தீமையானதாக இருந்தாலும் கூட, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக தேவன் நம்மை இரட்சித்தார் என்ற குறிப்பிட்ட உண்மையை விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் இத்தகைய பொய்களுடன் துனிச்சலுடன் போரிட்டு நம் விசுவாசத்திலே உறுதியாக நிற்க முடியும்.
இந்த வழியில், கீழ்வரும் பொய்களுடன் நம்மால் போரிட முடியும், நாம் கூறவேண்டும், “என்ன? நாம் சிலுவையின் விலையேறப் பட்ட இரத்தத்தினால் மட்டும் தான் இரட்சிக்கப் பட்டோமா? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் ஒரு காரியத்தை நாம் விட்டு விட்டாலும் கூட, நாம் பெருமைப் பாராட்டுவதற்கு அங்கு ஒன்றுமேயில்லை. இது எத்தனைப் பிதற்றலாக இருக்கிறது?”
ஆனால் கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் கிருபையை விட்டு நாம் அகன்றுச் சென்றால், நாம் எப்படி இருக்கிறோம் என்று நம்மால் பார்க்க முடியாது, இதன் விளைவாக, நாம் சுய நம்பிக்கையும் பெருமையும் உள்ளவர்களாக மாறி, தீமையானவர்களாக மாறி விடுவோம். நம்மை நாமே கவனித்து பார்ப்பதின் மூலமாகத் தான் கர்த்தருடைய கிருபையின் இரட்சிப்பை இன்னமும் பெரிய அளவில் நம்மால் காண முடியும். இப்படியாகத் தான் கீழ்வரும் வசனத்திற்கு நம்மால் கீழ்ப்படிய முடியும், “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
கர்த்தருக்கு முன்னதாக நம்மால் உண்மையாகவே உறுதியாக நிற்க முடிகிறது என்பதற்கான காரணம் தேவன் நம்முடைய எல்லா சாபங்களையும் நமக்காக சுமந்தார் என்பதேயாகும், அது ஒவ்வொரு தூணும் வெண்கல ஆணிகளிலே வெள்ளிப் பட்டிகளினால் இணைக்கப் பட்டதைப் போன்றதாகும். மேலுமாக, நாம் தடுக்கி விழும் போது கூட, நம்மை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் வெள்ளிப் பட்டியினால் மீண்டும் உறுதியுடன் நிற்க முடியும். ஒவ்வொரு வெள்ளிப் பட்டியும் தூண்களின் ஆணியிலும் பாதங்களிலும் இணைக்கப் பட்டு அதனை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கின்றன, ஏனெனில் நம் இருதயங்கள் நாம் யார் என்பதை அறிந்து கொள்ளுகிறது, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக நம்மை இரட்சித்த கர்த்தருடைய கிருபை இங்கே இருப்பதினால், நாம் உடைந்து போவதில்லை. இதன் காரணமாக, நாம் நேராக நிற்கிறோம், நாம் வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ அசைவதில்லை.
கர்த்தர் நமக்கு கொடுத்த முழுமையான இரட்சிப்பின் வரத்தினாலும், கர்த்தருடைய நீதியின் காரணத்தினாலும், நாம் நம்முடைய முகத்திலும் விழுவதில்லை பின்னாகவும் விழுவதில்லை பக்கவாட்டிலும் விழுவதில்லை, ஆனால் வெண்கலப் பூண்களிலே நாம் உறுதியாக நிற்கிறோம். நாம் உண்மையில் நரகத்தில் அழிந்து போகிறவர்களாக இருந்தோம் என்பதை வெண்கல பூண்கள் சுட்டிக் காட்டுகின்றன. தவிர்க்க முடியாத ஆக்கினையின் இடத்தில் இருந்து நாம் இரட்சிக்கப் பட்டோம் என்று நமக்கு நினைவு படுத்தி, எப்போதும் நம்மால் கர்த்தருக்கு நன்றி செலுத்த முடியும், உறுதியாக நிற்பதுடன் விசுவாசத்தால் பாதுகாப்பாக இருக்கவும் முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது ஆச்சரியமான இரட்சிப்பின் சத்தியமாகும். அதனை இந்த உலகத்தின் எண்ணிலடங்காத இறையியல் கல்லூரிகளில் இருந்தும் பாடசாலைகளில் இருந்தும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. இதுவே விசுவாச அடிப்படையின் அஸ்திபாரமாக இருக்கிறது; ஆகவே இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை அறியாத இறையியலானது மணலின் மீது கட்டப் பட்ட வீட்டைப் போலிருக்கிறது கடைசியிலே அது கீழே விழுந்து உடைந்து நொறுங்கிப் போகிறது. உங்களுடைய உண்மையான விசுவாசத்தின் அஸ்திபாரமானது மிகப் பெரிய கற்பாறையைப் போல உறுதியானதாக இருக்க வேண்டும்.
இறையியல் என்பது என்ன?
பகிரங்கமாக பேசினால், இறையியலை பிரிக்கும் இரண்டு காரியங்கள் இருக்கின்றன: அது கர்த்தரை அடிப்படையாக கொண்ட இறையியல் மற்றும் மனிதனை அடிப்படையாக கொண்ட இறையியல் என்பதாகும், அல்லது அவை இரண்டும் ஆகும் இவை வேதாகம கல்லூரிகளில் போதிக்கப் படுகின்றன. எளிமையாக கூறினால், வார்த்தையின் அடிப்படையில் உருவான விசுவாசம் கர்த்தரை அடிப்படையாக கொண்ட இறையியல் ஆகும், ஆனால் வார்த்தையிலே மனிதனுடைய சிந்தனைகளை அனுமதிக்கும் விசுவாசம் மனிதனை அடிப்படையாக கொண்ட இறையியல் ஆகும். மனிதனை அடிப்படையாக கொண்ட இறையியலாளர்கள் வேதாகமம் என்ன கூறுகிறது என்பதை பொருட் படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் ஞானத்தின் நிலையானது அவர்கள் எதனைப் பின்பற்றுகிறார்கள் என்று மற்ற அறிஞர்கள் கூறுவதை வைத்து பலப் படுத்தப் படுகிறது அல்லது விமரிசிக்கப் படுகிறது. ஆகவே மனிதனை அடிப்படையாக கொண்ட இறையியலை நம்மால் சரியான இறையியல் என்று கருத முடியாது.
பொதுவாக, இறையியலைப் படிக்கின்ற மக்கள் தம்முடைய சொந்த இறையியல் கருத்து மட்டுமே சரியானது என்று வாதம் செய்வர். உதாரணமாக, ஓய்வு நாளுக்கு மட்டுமே அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்ற ஏழாம் நாள் ஓய்வு ஆலயத்திற்கு அதிகமான மக்கள் இப்போதும் கூட சென்று கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் பார்க்கையில், பிரஸ்பைட்டீரியன் சபையானது கால்வினிசத்தின் ஐந்து கருத்துக்கள் என “அழைக்கப் படும்” கருத்தை மட்டுமே பொருள் படுத்துகிறது. இன்னொரு உதாரணமாக, அர்மீனியனிசத்தை கூறலாம், அது கர்த்தர் நம்மை இரட்சித்தாலும் கூட, மனிதர்கள் அதன் சித்தத்தை விசுவாசிக்க வேண்டும் என்று வாதம் செய்கிறது. சில வழிகளில் பார்த்தால், அர்மீனியனிசத்தைப் பார்த்தால் அது வேதாகமத்தை மனித சிந்தனைகளின் அடிப்படையில் விளக்கும் படியாக செல்லுவதாக கருத முடியும்.
அதற்கு மாறாக, நாம் கால்வினிசத்தின் ஐந்து கருத்துக்களைப் பார்க்கும் போது, அதன் விசுவாசம் கர்த்தரை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அதிக தவறானது என்பதை நம்மால் காண முடியும். ஏன்? ஏனெனில் கால்வினிச ஆதரவாளர்கள் முன்குறித்தல் மற்றும் தெரிந்தெடுக்கப் படுதல் ஆகிய போதனைகளை சத்தியமாக கருதுகிறார்கள், அவர்கள் கூறுகிறார்கள், “நீங்கள் பிறப்பதற்கு முன்னர், உங்களில் சிலர் கர்த்தரால் அவருடைய மக்களாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள், மற்றவர்களோ அவரால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. கர்த்தருடைய தனிப்பட்ட தேர்வு மட்டுமே இருக்கிறது.” இத்தகைய தீமையான கூற்றுக்களை கர்த்தருடைய வார்த்தையால அங்கீகரிக்க முடியாது.
ஆகவே இந்த மரபு சார்ந்த கிறிஸ்தவ போதனைகளை கர்த்தருடைய வார்த்தையுடனே நாம் ஒப்பிட்டு பார்க்கையில், அவைகள் சத்தியத்தில் இருந்து மிகவும் வேறுபட்டிருப்பதை நம்மாக் காண முடியும். உண்மையில், சில காரியங்களைப் பொறுத்தவரையில், அவை சத்தியத்திற்கு அருகில் வருகின்றன, ஆனால் அநேக பிரிவுகளுடைய கிறிஸ்தவ போதனைகள் வேதாகம சத்தியங்களுக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. உண்மையில், அவர்களுடைய போதனைகளுடன் சில வேதாகம சத்தியங்கள் பொருந்தி வருகின்றன, ஆனால் கர்த்தருடைய வார்த்தைக்கு அருகில் வரமுடியாத அளவிற்கு அவர்களுடைய முக்கியமான போதனைகள் தவறானவையாக இருக்கின்றன. இதனால் தான் இத்தகைய தவறான போதனைகளை படிப்பதை நாம் விட்டு விட வேண்டும்.
நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பு முழுவதுமாக கர்த்தர் அளித்த வரமாகும்
உண்மையாகவே கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பவர்களுக்கு கர்த்தர் இரட்சிப்பை அவர்களுக்கான வரமாக கொடுத்தார்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வேலியானது 60 மரத் தூண்களினால் கட்டப் பட்டது. இந்த தூண்களுக்கு மேலே, வெள்ளி மகுடங்கள் பொருத்தப் பட்டன, அவற்றின் அடியிலே வெண்கலப் பாதங்கள் இணைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு தூணும் ஒன்றுடன் ஒன்று வெள்ளிப் பட்டிகளால் இணைக்கப் பட்டு நிலத்திலே அறையப் பட்டிருந்த வெண்கல ஆணிகளிலே கட்டப் பட்டிருந்தன. இந்த மரத் தூண்கள் ஒவ்வொரு 5 முழத்திற்கும் அல்லது 2.25 மீட்டர் தொலைவிலே இணைக்கப் பட்டிருந்தது, இந்த தூண்களிலே மெல்லிய பஞ்சு நூலின் துணியானது தொங்கவிடப் பட்டிருந்தது.
தூண்கள் இந்த வெண்கல ஆணிகளிலே உறுதியாக கட்டப் பட்டிருப்பதினாலும், அவை ஒன்றுடன் ஒன்று வெள்ளிப் பட்டிகளினால் உறுதியாக இணைக்கப் பட்டிருப்பதினாலும், மெல்லிய பஞ்சு நூலின் துணியை அதிலிருந்து அகற்ற முடியாது. உறுதியாக நடப்பட்டிருந்த மரத் தூண்களிலே இந்த மெல்லிய பஞ்சு நூலின் துணி இணைக்கப் பட்டிருந்ததினால், அவைகள் உறுதியாகவும் அசையாமலும் இருந்தன ஏனெனில் அவை ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கமாக இணைக்கப் பட்டிருந்தன.
மெல்லிய பஞ்சு நூலின் துணி என்பது கர்த்தருடைய பரிசுத்தத்தையும் நீதியையும் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தருடைய நீதியானது மக்களை மீண்டுமாக அசைக்க முடியாத ஒரு உறுதியான விசுவாசத்தை அவர்களுக்கு அளித்துள்ளது, ஏனெனில் அவருடைய இரட்சிப்பின் மீதுள்ள நம் விசுவாசம் தவறாத கர்த்தருடைய கிருபையிலே இணைக்கப் பட்டுள்ளது. கர்த்தர் நமக்கு இந்த நிறைவான இரட்சிப்பை அவருடைய வரமாக நமக்குத் தந்தார். நாம் எத்தனை நன்றியறிதல் உடையவர்களாக இருக்கிறோம்! இப்படியாகத் தான் நீங்களும் நானும் விசுவாசத்தால் இரட்சிக்கப் பட்டவர்களாக மாறினோம்.
அதற்கு மாறாக, நான் உலகம் முழுவதும் உள்ள இன்றைய கிறிஸ்தவர்களை பார்க்கும் போது, அவர்கள் முட்டாள்களாகவும், கேலிக்குரியவர்களாகவும், மனம் வருந்தத் தக்கவர்களாகவும் இருக்கிறோம். நான் அவர்களினால் கவலையும் துன்பமும் அடைகிறோம் ஏனெனில் உண்மையான கிறிஸ்தவத்தின் மிகவும் அடிப்படையான கருத்துக்களைக் குறித்த சரியான அறிவும் கூட இல்லாதவர்களாக காண்கிறேன், அவர்கள் கர்த்தரை விசுவாசிப்பதாகவும் அவருடைய வார்த்தையை பரப்புவதாகவும் கூறியும் பயனில்லை.
அன்மையில், நம்முடைய மேல் நிலை பாடசாலை மாணவர்கள் தம்முடைய பாடங்களின் அடிப்படையில் பலவீனமாக இருப்பதாக அநேக கவலைப் படுகிறார்கள். உண்மையில், தம்முடைய அடிப்படையில் கல்வியை அலட்சியம் செய்யக் கூடிய மாணவர்களால் தம்முடைய அறிவை அதிகமாக வளர்க்க முடியாது. ஆகவே, கல்லூரி மாணவர்கள் தம்முடைய தொழில் கல்வியைப் பயின்று தாம் வேலை செய்யும் இடங்களில் வேலை செய்ய பயிற்சி அளிக்க, பல்கலைக் கழகங்கள் முதலாவதாக அடிப்படைக் கல்வியின் காரியங்களை முதலாவதாக அவர்களுக்கு போதித்து அதன் பிறகு அவர்களுக்கு உயர் நிலை பாடங்களை அறிமுகம் செய்கின்றன. ஆனாலும் கூட, இந்த முயற்சிகள் எப்போதுமே வெற்றி அளிப்பதாக நமக்குத் தெரியவில்லை.
ஞானத்தின் அடிப்படையைக் குறித்து நன்றாக அறிந்து கொள்ளாமல் இருந்தால் அந்த அறிவிலே எந்த முன்னேற்றமும் இருக்காது என்று விளக்குகின்ற இந்த கதையை உங்களிடம் எடுத்து வந்த காரணம், கர்த்தர் மீதுள்ள விசுவாசமும் கூட உறுதியான அஸ்திபாரம் இல்லாவிட்டால் நொறுங்கி விடக் கூடியது எனக் கூறவேயாகும். உண்மையான விசுவாசம் என்பது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிப்பதாக இருக்கிறது. இந்த அடிப்படை விசுவாசம் இல்லாவிட்டால், வேறு எதற்கும் எந்த பொருளும் இருக்காது. மக்கள் மகிழ்ந்து முதலாவதாக கர்த்தருக்கு அர்ப்பணம் செய்கிறவர்களாக இருந்தாலும் கூட, தாம் இயேசுவானவரை விசுவாசித்து பாவம் இல்லாதவர்களாக மாறிவிட்டதாக கூறினாலும் கூட, நேரம் சிறிது சென்று விட்ட நிலையில், சீக்கிரமாகவே அவர்கள் தம் சொந்த நீதியை இழந்து போவார்கள், அவர்களின் மகிழ்ச்சி காற்றிலே மறைந்து போகும், அவர்கள் தம் எல்லா பலத்தையும் இழ்ந்து போவார்கள், கடைசியில் அவர்கள் கர்த்தர் மீதுள்ள தம் விசுவாசத்தை கைவிடுவார்கள் ஏனெனில் அவர்களின் பாவங்கள் இன்னமும் அவர்களின் இருதயங்களில் அப்படியே இருக்கிறது. இந்த காரியங்கள் அனைத்தும் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையை அவர்கள் அறிந்து கொள்ளாததினாலேயே வெளியில் வந்தன.
உங்களுக்கு நடுவே உடல் ஊணமுள்ள யாராவது இருக்கிறீர்களா? தம்முடைய கால்களிலே பிரச்சனை உள்ளவர்களுக்கு படியில் ஏறுவது மிகுந்த கடினமாக இருக்கிறது. அவர்கள் படியில் ஏற முயற்சி செய்யும் போது, யாராவது அவர்களுக்கு உதவி செய்து ஒத்தாசை செய்தால் அது சிறந்த ஒரு சேவையாக இருக்காதா? ஆனாலும் கூட சில ஊணமுற்றவர்கள் மிகுந்த கோபம் அடைந்து கீழ்வருமாறு கூறுவார்கள், “என்னை விட்டுப் போங்கள். இதனை என்னால் செய்ய முடியும்.” பொதுவாக, உடல் ஊணமுற்றவர்களுக்கு சுய மரியாதை பெரிய அளவில் இருக்கிறது சில நேரங்களில் அவர்கள் மிகவும் பிடிவாதத்துடன் இருப்பர். இதன் விளைவாக, அவர்களின் இருதயங்கள் சில நேரங்களில் தாழ்ந்த மனப்பான்மையினாலும், தோல்வி மனப்பான்மையினாலும், குறைபாடுள்ள உணர்வினாலும் இருக்கம் அடையும். இதனால் தான் சிலர் மற்றவர்களுடைய இதமான சேவையை அப்படியே எடுத்துக் கொள்ளுவது இல்லை, மாறாக அதன் தன்மையை குலைக்கிறார்கள்.
உண்மையில் பார்க்கும் போது அவர்கள் தம்முடைய உடல் ஊணத்திற்காக மனத்தாழ்மை அடைய வேண்டியதேயில்லை. அது அவர்களுக்கு வசதியாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவை அவர்களிடம் இருப்பது ஒரு பாவம் அல்ல. ஆனால் அவர்கள் தம்முடைய ஊணத்தின் மூலமாக உருவாகக் கூடிய அனைத்து வகையான சிந்தனைகளிலும் வாசம் செய்து இந்த மோசமான உணர்வுகள் எண்ணிலடங்காத தாழ்வு மனப்பான்மைகளை உருவாக்கினால், அப்போது அவர்கள் தம் இருதயங்களிலும் கூட உண்மையாகவே ஊணமுற்றவர்களாக மாறி விடுவர். நீங்கள் ஊணமுற்ற ஒரு மனிதராக இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் யாரென்பதை அறிந்து, உங்களுக்கு உதவி தேவைப் படும் போது அதனைக் கேட்க வேண்டும், உங்களால் முடிந்த போது உங்களுடைய சொந்த காலிலே உறுதியாக நிற்க வேண்டும்.
எனக்குத் தெரியாத ஒரு காரியமோ அல்லது சில உதவியோ எனக்குத் தேவைப் படும் போது, நான் மற்றவர்களிடம் கேட்டு அவர்களின் உதவியை வேண்டுவேன். என்னுடைய குறைபாடினால் மற்றவர்களின் உதவியைக் கேட்பதை என்னால் தவிர்க்க முடியாது. அதனைக் குறித்த நன்றாக அறிந்த சிலர் அதனை எனக்கு விளக்கி உதவி செய்யும் போது, அப்போது நான் அந்த நபருக்கு நன்றி கூறுகிறேன். நம்முடைய மாமிசத்திலே நமக்கு குறைபாடுகள் இருந்தாலும் கூட, நாம் நம்முடைய இருதயங்களிலும் கூட ஊணமுற்றவர்களாக இருக்கிறோம் என்று அவர்கள் கருத வேண்டியதில்லை. ஆகவே, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய குறைபாடுகளை உணர்ந்து, நம் தேவனுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, அதாவது, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும், அவை நம்முடைய இந்த குறைபாடுகளை முழுமையாக்கும் அப்போது நாம் இந்த நற்செய்திக்கு சிறப்பாக ஊழியம் செய்ய வேண்டும். நம்முடைய தேவனுடைய இந்த நற்செய்திக்குள்ளாக நம்மால் பெருமை கொண்டு நம் நன்றிகளைத் தெரிவிக்க முடியும். கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரத்தினை நம் விசுவாசத்தால் நாம் பெற்றுக் கொண்டதினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்கு நன்றி கூறுவது மட்டுமே. இந்த இரட்சிப்பின் வரத்திற்குள் நம்மால் ஓய்வெடுக்க முடியும், ஒருவரை ஒருவர் நேசிக்க முடியும், ஒருவருடன் ஒருவர் ஐக்கியமாக இருக்க முடியும்.
இன்றைய கிறிஸ்தவர்களில் அநேகர் தம்முடைய விசுவாசத்தின் அடிப்படையில் பலவீனர்களாக இருப்பதினால் தான் அவர்களுடைய விசுவாசங்கள் எல்லா திசைகளிலும் ஆடுகின்றன. நம் தேவன் தன்னுடைய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக உங்களையும் என்னையும் இரட்சித்தார். இதனை அறிந்து விசுவாசித்ததின் மூலமாக மட்டுமே நாம் இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுக் கொண்டு முழுமையாக மாறினோம். முதலில் நாம் அனைவரும் நரகம் செல்ல வேண்டியவர்களாக இருந்தோம், ஆனாலும் முழுமையான இரட்சிப்பின் வரத்தினை கர்த்தர் நமக்கு கொடுத்து நம்மை முழுமையாக இரட்சித்ததினால், நாம் அவருடைய முழுமையான பிள்ளைகளாக மாறினோம். நாம் நம்முடைய விசுவாசத்தினால் ஏற்கனவே இரட்சிப்பின் வரத்தினை பெற்றுக் கொண்டதினால், நாம் கர்த்தருடைய மக்கள் என்று விசுவாசித்து நம் வாழ்வை வாழ்ந்தால், இந்த விசுவாசத்தின் எல்லைகளுக்கு உள்ளே, தேவனுடனே கூட நம் விசுவாச வாழ்வை வெற்றிகரமாக வாழ முடியும்.
நான் உண்மையாகவே மறுபடியும் பிறந்த பிறகு, இரண்டு மாறுதல்கள் என் இருதயத்திற்குள் வந்தது, அதில் ஒன்றை கூட நான் முன்னதாக அனுபவிக்கவில்லை. முன்னதாக, மற்றவர்களின் மீதான என் அன்பு கபடமானதாக இருக்கும், அவர்களை உண்மையிலேயே நான் என் இருதயத்தில் வெறுத்தாலும் எந்த நிபந்தனையும் இல்லாது அவர்களை நேசிப்பதைப் போல நடிப்பேன். ஆனால் இப்போது, என்னுடைய முழு இருதயத்தினாலும் மற்றவர்களை உண்மையாகவே நேசிக்கிறேன். கர்த்தர் நமக்கு தன்னுடைய முழுமையான இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்ததாலும், இந்த நற்செய்தி மிகவும் விலையேறப் பட்டதாக இருப்பதாலும், இதனை விசுவாசிக்கும் அனைவரும் என்னுடைய கண்களுக்கு சிறப்பானவர்களாக தெரிகிறார்கள். அவர்களை நான் நேசிக்காமல் இருக்க முயற்சி செய்தாலும் கூட அவர்களை நேசிப்பதை தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவது மாறுதல் முன்பைப் போலில்லாமல், மற்றவர்களுடைய உணர்வுகளை இப்போது மதிக்கத் தொடங்கினேன். முன்னதாக, என்னால் சகிக்க முடியாத எதையாவது யாராவது செய்தால், அந்த நபர் யாராக இருந்தாலும் கூட, அவரைக் கண்டிப்பதில் நான் குருட்டுத் தனமாக இருந்தேன். ஆனால் இப்போது அனைவருடைய பலவீனங்களையும் நான் பார்க்க வேண்டியிருப்பதை அறிந்து கொண்டேன், அவர்களுடனே பழகுவதில் மிகவும் கவனமாக இருந்தேன், அவர்களை பாதுகாக்க வேண்டிய நேரத்தில் பாதுகாத்தேன் கண்டிக்க வேண்டிய நேரத்தில் அவர்களை கண்டித்தேன். பலவீனங்களும் குறைபாடுகளும் இருக்கிறவர்களால் தம் இருதயங்களை எளிதாக கடினமுள்ளதாக மாற்ற முடியும், ஆகவே அவர்களின் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் கவனமுள்ளவனாக இருக்கிறேன், ஏனெனில் சில நேரங்களில் அவர்களுக்கு நான் இரகசியமாக உதவி செய்ய வேண்டியிருக்கிறது, என்னுடைய உதவி அவர்களுக்கு அவசியமாக தேவைப் படுகிறது என்று எனக்குத் தெரிந்தாலும் கூட சில வேலைகளில் நான் அவர்களுக்கு உதவி செய்வதில்லை. நான் இந்த காரியங்களைக் குறித்து கவனமாக இருக்கிறேன் ஏனெனில் மக்கள் இத்தகைய பலவீனர்களாக இருக்கிறார்கள், ஆனால் எப்போதுமே, நான் என்னுடைய விசுவாசத்தில் உறுதியாகவும் தைரியமாகவும் இருக்கிறேன்.
மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களை கண்டிக்க கூடாத சில நேரங்களும் இருக்கின்றன, ஆனால் அவர்களை சகித்துக் கொள்ளுவதற்கு மாறாக உறுதியாக அவர்களை சபிக்க வேண்டிய சில நேரங்களும் இருக்கின்றன. இதனால் தான் நாம் அவர்களின் தேவைகளை கவனிக்கும், ஆனால் நாம் விசுவாசத்திலே பர்க்கும் போது; அவர்களுக்காக நம் அன்பு நிச்சயமாகவும், நிறைவாகவும், சரியாகவும், உறுதியாகவும் இருக்கிறது. மாமிசத்தின் அடிப்படையில் நம் சூழ்நிலைகளை நாம் பார்த்தால், நாம் காணுவது எல்லாம் கவலைப் படக் கூடிய காரியங்களை காணுவது மட்டுமே. முதலாவதாக நாம் இத்தனை பலவீனர்களாகவும் குறைபாடுடையவர்களாகவும் இருப்பதினால், நாம் நம்முடைய பலவீனமான மாமிசத்தைக் குறித்து கவலைப் படத் தொடங்கினால், ஒரு நாள் கூட கவலையோ கண்ணீரோ இன்றி செல்லாது. ஆனால் கர்த்தர் நமக்கு கொடுத்த முழுமையான விசுவாசத்திலே நாம் நிற்கும் போது, நம்முடைய கவலையும் கண்ணீரும் மறைந்து போகும், ஏனெனில் இயேசுவானவர் நம்மைப் போன்ற குறைபாடும் களங்கமும் நிறைந்தவர்களை இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக இரட்சித்து அவருடைய நற்செயல்களுக்கான பாத்திரங்களாக நம்மை மாற்றினார், இந்த விசுவாசத்தினை ஊக்குவிப்பது, வேறு எதனை விடவும் நம்மை பலப் படுத்துகிறது.
நம்முடைய இருதயங்களின் ஊக்கமானது தேவனால் நம் இருதயங்களுக்குள் கொடுக்கப் பட்ட முழுமையான இரட்சிப்பின் வரத்தில் இருந்து வருகிறது; நம்முடைய மாமிசத்தின் தகுதிகளில் இருந்து வருகின்ற ஊக்கங்கள் அனைத்தும் மாறக் கூடியவை ஆகும். உண்மையில், நாம் நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் சில நேரங்களில் சரீரப் படியாகவும் ஆறுதல் படுத்த வேண்டியிருந்தாலும் கூட அந்த மாமிசத்திற்குரிய ஆறுதல் போதுமானதல்ல என்று பொருள் படாது.
ஆயினும், இங்கே தெளிவாக இருப்பது, நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதும், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து நம்மை முழுமையாக இரட்சித்தார் என்பதுமேயாகும். லாசரு மரித்த போது, இயேசுவானவர் மரியாளும் மார்த்தாளும், அயலகத்தாரும் அழுவதைப் பார்த்த போது, கண்ணீர் விட்டார் என்று வேதாகமம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர் மக்கள் தம்முடைய பாவங்களுக்காக மரிப்பது எத்தனை நிர்ப்பந்தமானது என்பதைக் கண்டபோது அவர்கள் மீது மனதிரங்கினார். ஆனால் தேவன் பிதாவுடைய சித்தத்தின் படியாக வந்ததினால், அவர் கீழ்வருமாறு கூறினார், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 11:25), இப்படிக் கூறிய அவர் தம் பாவங்களுக்காக மரித்த அனைவரையும் இரட்சித்தார். அவர் நம்மை ஆவிக்குரிய படியும் சரீரப் படியும் ஆறுதல் படுத்தினார்.
உங்களுக்கும் எனக்கும் கூட ஆவி மற்றும் சரீரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஆகவே நாம் மாமிசத்திலே மிகவும் கடினமான நேரத்திற்கு ஊடாகச் செல்லும் போது, நாம் மாமிசத்திலே ஆறுதல் படுத்தப் பட வேண்டும், மேலும் ஆவிக்குரிய படியும் கூட, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை மீது இந்த விசுவாசத்தை வைக்க வேண்டும். இதனைப் போல, கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரத்தின் மீதுள்ள விசுவாசத்தை அறிந்து மகிழ வேண்டும், இந்த இரட்சிப்பின் வரத்தை பாதுகாக்க வேண்டும், நாம் தாம் இந்த வரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் என்று நமக்கு நாமே மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த வேண்டும், அப்போது நம் இருதயங்கள் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சி அடைய முடியும். இப்படியாகத் தான் நாம் கர்த்தருக்கு மகிமை அளிக்கிறோம்.
ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களைப் போல, கர்த்தர் நம்மை விசுவாசத்திலே உறுதியாக நட்டார், நம்மை விசுவாசத்தால் வாழும் படியாகவும் அவர் நம்மிடம் கேட்டார். ஆகவே ஒவ்வொரு நாளும் நம் மாமிசத்திலே அநேக குறைபாடுகள் இருந்தாலும் கூட, கர்த்தருடைய இரட்சிப்பு எத்தனை விலையேறப் பட்டது என்று நம் இருதயங்களில் ஆழத்திலே உணர முடியும், நாம் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் கூட இப்போது ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகார வேலியில் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது நீங்களும் கூட கிழக்கு பக்கத்திலே இருக்கும் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தின் வாசலைத் திறந்து அதற்குள்ளே இப்போது பிரவேசிக்க முடியும். நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகார வாசலைத் திறந்து அதற்குள் பிரவேசிக்கும் போது, முதலாவதாக அங்கே நீங்கள் காணக் கூடிய ஒரு காரியம் இருக்கிறது. இது என்னவாக இருக்கிறது? அது சர்வாங்க தகன பலிபீடமாக இருக்கிறது.
நீங்கள் விசுவாசத்தினால் சர்வாங்க தகன பலிபீடத்தை கடந்து செல்லும் போது, அங்கே வெண்கலப் பாத்திரம் இருக்கிறது, நீங்கள் இந்த பாத்திரத்தை கடந்து சென்றால், கடைசியாக நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்குள் பிரவேசிப்பீர்கள், அது ஆசரிப்புக் கூடாரமாக இருக்கிறது. இதனை நாம் விசுவாசத்துடனே பார்க்கும் போது, இந்த காரியங்கள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். ஆசரிப்புக் கூடாரத்தின் வார்த்தையானது முதலாவதாக குழப்பமாக தோன்றினாலும் கூட, உண்மையில் அதனை உங்களாலும் என்னாலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம் உறுதியாக இருக்கிறது, நம்மிடம் ஏற்கனவே இருக்கும் விசுவாசத்தின் கொள்கை சரியாக இருக்கிறது. கர்த்தருடைய இரட்சிப்பு இத்தனை மதிப்புடையதாக இருப்பதினால், ஆசரிப்புக் கூடார அமைப்பின் மூலமாக ஒருவன் அதனை எளிதாக புரிந்து கொள்ளும் படிச் செய்தார். ஆனால் ஒருவன் தன்னுடைய சொந்த சிந்தனைகளினால் ஆசரிப்புக் கூடாரத்தின் வார்த்தையை விளக்குவதை தவிர்க்கும் படியாக, இன்னமும் மறுபடியும் பிறக்காதவர்களின் கண்களுக்கு அவை காணாத படிக்குச் செய்தார். ஆகவே, இறையியலாளர்களுக்கும் கூட, அவர்களிடம் சரியான அடிப்படை விசுவாசம் இல்லாவிட்டால், அவர்கள் ஒருவராலும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் உருவாக்கப் பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுடைய சரியான ஆவிக்குரிய பொருளை கூற முடியாது, ஏனெனில் இத்தகைய பொய்யர்களிடம் இருந்து கர்த்தர் இந்த சத்தியத்தை மறைத்து வைத்தார்.
இளநீல நூலானது இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை குறிக்கிறது. கைவைத்தலைப் போன்ற ஒரு முறையினால் அவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக, நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக் கொண்டார். சிவப்பு நிற நூலானது அவருடைய பலிசெலுத்திய மரணத்தைக் குறிக்கிறது இயேசு கிறிஸ்து நம் எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார். இரத்தாம்பர நிற நூலானது இயேசுவானவரே கர்த்தர் என்பதை அறிவிக்கிறது. மெல்லிய பஞ்சு நூலானது இரட்சிப்பின் வார்த்தையாகும் அதன் மூலமாக, கர்த்தராகிய அவர், முழு மனிதகுலத்திற்கும் வாக்குத்தத்தம் செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இன்னமும் மறுபடியும் பிறக்காதவர்களினால் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தர் வெளிப்படுத்திய சத்தியத்தை முழுமையாக அப்படியே பேச முடியாது.
கர்த்தர் மனிதகுலத்தின் தொடக்கத்திலேயே வாக்குத்தத்தம் செய்தார், அதாவது, ஆதாம் ஏவால் மற்றும் அவருடைய ஊழியர்களிடம் இவ்வாறு கூறினார், “உங்களை இரட்சிக்க, நான் உங்களிடம் நீர், இரத்தம், மற்றும் ஆவியின் மூலமாக வருவேன், அதன் மூலமாக நான் உங்களை இரட்சிப்பேன்.” இந்த வார்த்தையின் படியாக, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தி மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்மை இரட்சித்தார். மெல்லிய பஞ்சு நூலானது கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தையாகும், அது வார்த்தையின் நிறைவேற்றுதலாகவும் இருக்கிறது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவை இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைக் குறித்தும், அவர் நம் கர்த்தர் எனவும், அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்து தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி நம் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையையும் ஏற்றுக் கொண்டார் என்றும் நம்மிடம் கூறுகின்றன. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து நம்மை இரட்சித்தார் என்றும் அவை நம்மிடம் கூறுகின்றன. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவை நித்தியமான இரட்சிப்பின் சத்தியமாகும் அங்கே வேறு எந்த கருத்துக்களையும் அனுமதிக்க முடியாது.
உங்களுக்கு எனக்கும், கர்த்தர் இந்த இரட்சிப்பின் கிருபையைக் கொடுத்தார். தூண்களின் மேற்பகுதியில் வெள்ளி மகுடங்கள் பொருத்தப் பட்டிருந்தன. நாம் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பின் கிருபையை பெற்றுக் கொண்டவர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த வரத்தை நாம் பெற்றுக் கொள்ளுவதின் மூலமாகவே நம்மால் நீதிமான்களாகவும், பாவம் இல்லாதவர்களாகவும், கர்த்தருடைய மக்களாகவும் மாற முடிந்தது, கர்த்தருடைய இந்த வரம் இல்லை என்றால் வேறு எதனை முன்னிட்டும் நம்மால் பெருமை பாராட்ட முடியாது. நாம் பெருமை பாராட்டக் கூடிய ஒரு காரியம் ஒன்று இருக்குமானால், அது நாம் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை மீது விசுவாசம் வைத்து கர்த்தருடைய மக்களாக மாறினோம் என்பதனால் மட்டுமேயாகும். ஒரே ஒரு நல்லதும் விலையேறப்பட்டதுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இயேசு கிறிஸ்து நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்ததினாலேயே இதற்கு சாத்தியமாயிற்று. ஆகவே, நாம் இந்த விசுவாசத்தினால் வாழ வேண்டும், கர்த்தர் நமக்கு இரட்சிப்பின் வரத்தினைக் கொடுத்ததினால் தான் நாம் முழுமையானோம் என்று விசுவாசிக்க வேண்டும் மேலும் நாம் இந்த வரத்தின் மூலமாகத் தான் கர்த்தருடைய சொந்த மக்களாக மாறினோம். இன்றும் நாளையும், எப்போதும் இந்த விசுவாசத்தினாலே நாம் வாழுவோம்.
ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த வார்த்தையை பரப்புவதற்கான சரியான நேரம் இதுவே என்று நான் விசுவாசிக்கிறேன். எந்த ஒரு பொருளும் இல்லாத உபத்திரவத்திற்கு முந்தைய எடுத்துக் கொள்ளப் படுதல் என்ற போதனையினால் அநேக மக்கள் குழப்பத்துடன் இருந்த காலம் உண்டு, ஆனால் இந்த காலத்திற்கு ஏற்றபடி கர்த்தர் நம்மை உருவாக்கி, வெளிப்படுத்தின விசேஷத்தின் வார்த்தையை பிரசங்கித்து இதன் மூலமாக அநேக மக்கள் தம்முடைய தவறான விசுவாசத்தை விட்டு விட்டு சரியான விசுவாசத்தை பெற்றுக் கொள்ளும் படி அவர்களை ஏதுவாக்கினார். இதனைப் போல, இன்றைய காலத்திலே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றைக் குறித்த விசுவாசத்தை நாம் பிரசங்கம் செய்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.
நாம் கர்த்தரிடமிருந்து இரட்சிப்பின் வரத்தைப் பெற்றுக் கொண்டதினால், இந்த நிச்சயமான இரட்சிப்பின் வரத்தை பரப்புவது தான் நாம் செய்யக் கூடிய மகிழ்ச்சியான காரியம் என்று நான் விசுவாசிக்கிறேன்.
நான் என்னுடைய எல்லா நன்றிகளையும் கர்த்தருக்கு கொடுக்கிறேன்.