(யாத்திராகமம் 38:1-7)
“தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது. அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி, அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான். வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து, அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து, அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி, பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.”
ஒவ்வொரு பாவியும் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு ஒரு பலிகாணிக்கை மிருகத்தை எடுத்து வர வேண்டும்
இஸ்ரவேல் மக்களுக்கு நடுவில் உள்ள பாவிகள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஒரு பலிகாணிக்கையை எடுத்து வந்து, அதன் தலை மீது தன் கைகளை வைத்து தன் பாவங்களை சுமத்தி, அதன் இரத்தத்தை எடுத்து, அதனை ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அப்போது அங்கே தன் ஆசாரிய கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆசாரியன் இந்த பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்பிலே ஊற்றி, அதன் மாமிசத்தையும் கொழுப்பையும் பீடத்திலே வைத்து, தேவனாகிய கர்த்தருக்கு சுகந்த வாசனையாக அதனை நெருப்பினால் எரிக்க வேண்டும். தலைமை ஆசாரியனும் கூட தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள சர்வாங்க தகன பலிபீடத்திற்கு முன்னதாக அந்த பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது தன் கைகளை வைத்து அவனுடைய பாவங்களை அதன் மீது சுமத்த வேண்டும். சீத்தீம் மரத்தினால் செய்யப் பட்டு வெண்கலத்தினால் மூடப் பட்ட சர்வாங்க தகன பலிபீடத்திற்கு முன்னதாக கொடுக்கப் பட்ட இந்த பலி பாவநிவாரண பலியாகும், இந்த பாவங்களுக்கான மன்னிப்பின் பலிகாணிக்கையானது கைவைத்தலினாலும் இரத்தம் சிந்துதலினாலும் காணிக்கையாக கொடுக்கப் படுகிறது.
உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே, கைவைத்தலின் மூலமாகவும் இரத்தத்தைச் சிந்துவதின் மூலமாகவும் ஒருவனை அவனுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பதற்கான ஒரு வழியை கர்த்தர் திட்டமிட்டிருந்தார். நம்முடைய இரட்சிப்பை திட்டமிட்ட பிதாவாகிய கர்த்தர், தன்னுடைய ஒரேபேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பி, அவரை யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளச் செய்து, தன்னுடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தும் படியாக செய்தார். இதனால் தான் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக அனைத்து பாவிகளுடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், அது பழைய ஏற்பாட்டின் கைவைத்தலுக்கு ஒப்பானதாக இருக்கிறது. உலகத்தின் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையை தன்மீது ஏற்றுக் கொள்ள, இயேசுவானவர் இந்த எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு நம் இடத்தில் இருந்து சிலுவையிலே தன் சொந்த இரத்தத்தைச் சிந்தினார்.
வெண்கலத்தினால் மூடப்பட்ட சர்வாங்க தகன பலிபீடமானது ஒவ்வொரு மனித இருதயத்தின் பலகையிலும் எழுதப் பட்டிருக்கும் ஒவ்வொரு பாவத்திற்கும் கர்த்தர் தண்டனை அளிப்பார் என்பதை நமக்கு போதிக்கிறது. ஆகவே ஒவ்வொரு பாவியும் தன் பாவங்களை பலிகாணிக்கை மிருகத்தின் தலையின் மீது தன் கைகளை வைப்பதின் மூலமாக அதன் மீது சுமத்தின் அதன் பிறகு அதன் கழுத்தை அறுத்து, அதன் இரத்தத்தைப் பிடிக்க வேண்டும், அதன் பிறகு ஆசாரியன் அந்த மிருகத்தின் இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்திலுள்ள கொம்பிலெ ஊற்ற வேண்டும். இதனைப் போல, வெண்கலத்தினால் மூடப் பட்ட சர்வாங்க தகன பலிபீடமானது இயேசுவானவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்தார் என்பதையும் நம்முடைய இடத்தில் இருந்து இந்த எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையிலே ஆக்கினைக்கு உள்ளானார் என்பதையும் நாம் அறியும் படிச் செய்கிறது.
சர்வாங்க தகன பலிபீடத்தின் முக்கியத்துவம்
ஒரு பலிகாணிக்கை மிருகமானது கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்கப் படும் போது, அதன் மாமிசம் துண்டு துண்டாக வெட்டப் பட்டு சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது கர்த்தருக்கு சுகந்த வாசனையாக கொடுக்கப் படும் படியாக வைக்கப் படுகிறது. பிதாவாகிய கர்த்தர் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையில் அறையப் பட்டதைக் கண்டபோது பெரிதும் மகிழ்ந்தார். எவ்வித களங்கமும் இல்லாத இயேசுவானவர் அனைத்துப் பாவிகளுக்குமான நித்திய கிருபாதாரபலியாக தன்னை பலியாக்கியதினால் பிதாவாகிய கர்த்தர் பெரிதும் மகிழ்ந்தார்.
சர்வாங்க தகன பலிபீடத்திலே காணிக்கை செலுத்தப் பட்ட பலிகாணிக்கைகள் கர்த்தர் எப்படி ஒரு பாவியை அவனுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்று காட்டுகிறது, கர்த்தர் எப்படி ஒவ்வொரு பாவத்தையும் தண்டிக்கிறார் என்பதையும் அது காட்டுகிறது. வேறு வகையாகக் கூறினால், சர்வாங்க தகன பலிபீடமானது மனிதகுலம் அதன் பாவங்களில் இருந்தும் ஆக்கினையிலிருந்தும் இரட்சிக்கப் பட்டதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பாவியும் நெருப்புக் கடலிலும் நரகத்திலும் வீசப் பட வேண்டும் என்பதை அது காட்டுகிறது; ஒவ்வொரு பாவியும் அவனுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் எப்படியாக விடுவிக்கப் பட முடியும் என்பதையும் கூட அது காட்டுகிறது. இதனைப் போல, தன்னிடம் பாவம் உள்ள அனைவரும் நரகத்தின் நெருப்பிலே வீசப் பட வேண்டும், ஆகவே எல்லாப் பாவிகளும் தவறாது கர்த்தருடைய கிருபையைக் காண வேண்டும்.
சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது இடப் பட்ட ஒவ்வொரு பலிகாணிக்கை மிருகமும் ஒரு பாவியின் பாவங்களை தன்மீது ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தண்டிக்கப் பட்டது. வேறு வார்த்தைகளில் கூறினால், பலிகாணிக்கை மிருகமானது ஒருவன் தன் கைகளை வைத்ததினால் அவன் பாவங்களை ஏற்றுக் கொண்டு அவன் இடத்தில் இருந்து தன் இரத்தத்தைச் சிந்தியது. ஒரு பாவி சந்திக்க வேண்டிய பாவத்திற்கான தண்டனையை அது ஏற்றுக் கொண்டது. ஆசரிப்புக் கூடாரத்திலே பலிகாணிக்கை செலுத்தப் பட்ட தகன பலியானது இயேசுவானவர் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக ஏற்றுக் கொண்டு நம் இடத்தில் இருந்து தன் இரத்தத்தைச் சிந்தினார் என்று போதிக்கிறது.
ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள ஒவ்வொரு பாத்திரமும் கர்த்தர் நமக்காக பாவங்களுக்கான மன்னிப்பை எப்படி நிறைவேற்றினார் என்று காட்டுகிறது. ஆகவே, நீங்கள் உங்கள் இரட்சிப்பிற்கான தெளிவான வரையறை செய்ய வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்தின் பாத்திரங்கள் வெளிப்படுத்திய சத்தியத்தின் மீது சரியான விசுவாசம் வைக்க வேண்டும். அப்படியானால் உங்கள் இரட்சிப்பைக் குறித்து எப்படி அடிக்கோடு இடுவீர்கள்? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் மறைந்திருக்கும் இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசித்து நீங்கள் உங்கள் இரட்சிப்பைக் குறித்த அடிக்கோட்டை இட வேண்டும். இத்தகைய விசுவாசத்தை உடையவர்களால் மட்டுமே உண்மையாகவே கர்த்தருடைய நீதியை அறிந்து தம் விசுவாச வாழ்வை சரியாக வாழ முடியும்.
பாவிகளுடைய பாவங்களை நிவர்த்திக்க கூடிய பலிகாணிக்கை ஒன்றை கர்த்தர் ஆயத்தம் செய்ததினால் அவர்களால் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வர முடிந்தது. தலைமை ஆசாரியன் பாவிகளின் சார்பாக பாவநிவாரண பலியை ஏறெடுத்து அவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தான். இரட்சிப்பைக் குறித்த வாக்குத்தத்தை கர்த்தர் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நிறைவேற்றினார். ஆகவே நாம் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் விசுவாச வாழ்வை வாழ வேண்டும். உங்களுடைய விசுவாசம் இப்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே வைக்கப் பட்டுள்ளதா? நீங்கள் உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டும். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தை மீது நீங்கள் விசுவாசம் வைத்தால் மட்டுமே உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, பழைய ஏற்பாட்டின் ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட உண்மையானது புதிய ஏற்பாட்டிலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக எழுந்து நிற்கிறீர்களா? அல்லது சிலுவையின் இரத்தத்தை மட்டுமே வலியுறுத்துகின்ற நற்செய்தியை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நமக்காக தன் இரத்தத்தைச் சிந்தினார் என்று கூறும் நற்செய்தியை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, ஆசரிப்புக் கூடாரத்தின் பலிகாணிக்கை முறையானது கர்த்தருடைய இரட்சிப்பின் வாக்குத்தத்தமாக இருந்தது, அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சிப்பார் என்று அது வாக்குத்தத்தம் செய்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே பயன் படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக கர்த்தர் தன்னுடைய இரட்சிப்பின் விரிவான திட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த வாசலின் மூலமாக செல்ல விரும்புகின்ற அனைவரும் இந்த பொருட்களில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். இதனைப் போல, ஆசரிப்புக் கூடாரத்தின் பலிகாணிக்கையின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் தம் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் மீது வைத்து தம் எல்லாப் பாவங்களையும் விசுவாசத்தின் மூலமாக அதன் மீது சுமத்தி, அதன் இரத்தத்தை கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்துவதின் மூலமாக அவர்கள் தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் படுவதை அனுமதித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதற்கான அளவுகோலாக இருக்கிறது, ஆகவே இந்த நற்செய்தியை சரியாக புரிந்து கொண்டு அதனை விசுவாசிப்பவர்கள் மட்டுமே கர்த்தருடைய சொந்த மக்களாக இருக்கிறார்கள், அதே நேரம் மற்ற அனைவரும் கர்த்தருடைய மக்களில் ஒருவராக மாற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகார வாசலிலே பயன் படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியமானது புதிய ஏற்பாட்டின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
நம் தேவன் யோவானின் அதிகாரம் 3 இல் நிக்கொதேமுவிடம் இவ்வாறு கூறினார், “ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறவாவிட்டால், கர்த்தருடைய ராஜ்யத்தில் அவன் பிரவேசிக்க மாட்டான்.” இங்கே நீர் என்று கூறப் படுவது இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறித்து கூறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளுவது மிகவும் முக்கியமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே விசுவாசத்தின் மூலமாக நம்மால் கர்த்தருடைய கரங்களுக்குள் வர முடியும்.
ஒருவன் தன் பாவங்களுக்காக நிச்சயமாக தண்டிக்கப் படுவான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
மாற்கு 7:21 இன் தொடர்ச்சியாக விவரிக்கப் பட்டுள்ளதைப் போல, ஒருவனின் இருதயத்தில் இருந்து புறப்படும் பன்னிரு வகையான பாவங்கள் அனைவரிடமும் இருக்கின்றன. முதலாவதாக, ஒருவனுடைய பொல்லாத சிந்தனைகள் கர்த்தருக்கு முன்னதாக பாவமாக இருக்கிறது. கொலை, விபசாரம், களவு, இச்சை, கபடம், பெருமை, முட்டாள்தனம் ஆகியவையும் கூட பாவங்களேயாகும். மக்களுடைய இருதயங்களில் இருக்கும் பொல்லாத சிந்தனைகள் பாவத்தின் உண்மையான தோற்றுவாய்களாகும் அது கர்த்தருடைய பரிசுத்தத்தை தாக்குகிறது. கர்த்தர் ஆதாமை தன்னுடைய சொந்த சாயலிலே நித்தியமான படைப்பாக படைத்த போதிலும் கூட, ஆதாம் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான், இதன் விளைவாக, ஆதாமிம் சந்ததியினரான நாம் அனைவரும் கூட பாவிகளாகவே பிறந்ததினால், நம்மால் கர்த்தருடைய தண்டனையில் இருந்து தப்ப முடியாதிருக்கிறது. நாம் அனைவரும் முதல் மனிதனாகிய ஆதாமின் சந்ததியினராக பிறந்ததினால், பாவம் செய்து கர்த்தருடைய பரிசுத்ததத்தை தாக்குவது நமக்குள் இருக்கும் சுபாவமாக இருக்கிறது, நம் சிந்தனைகளினாலும் செயல்களினாலும் அப்படிச் செய்கிறோம்; ஆகவே நாம் மரிக்கும் அந்த நாள் வரையிலும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாது. குறிப்பாக, அனைத்து மனிதர்களும், இயற்கையாகவே தம் சிந்தனைகளில் பொல்லாதவர்களாக இருக்கின்றனர், அவர்கள் சாத்தானால் எளிதாக முறியடிக்கப் பட்டு கர்த்தருடைய பரிசுத்தத்தை தொடர்ந்தும் சவால் விடும் படியான பலவீனர்களாக இருக்கின்றனர்.
மனித இருதயத்தில் இருந்து பொல்லாத சிந்தனைகள் மட்டுமே புறப்பட்டு வருகின்றன என்று கர்த்தர் கூறினார். ஒவ்வொரு மனிதனும் மாற்கு 7 ஆம் அதிகாரத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பன்னிரு வகையான பாவங்களினால் நிரப்பப் பட்ட பாவிகளாகவே இருக்கின்றனர், கொலையில் இருந்து விபசாரம், களவும், இச்சை, காமவிகாரம், முட்டாள்தனம் போன்றவை அவையாகும். ஒருவனுடைய அடிப்படை சுபாவமானது பொல்லாத சிந்தனைகளினால் நிறைந்திருக்கிறது. எண்ணிலடங்காத மக்கள் தம்முடைய சொந்த மத பக்தியின் மூலமாக கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு சவால் விடுகிறார்கள். ஆகவே நாம் நம்முடைய பாவங்களுக்காக தவறாமல் கர்த்தரால் சபிக்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனால் தான் ஆசரிப்புக் கூடாரத்தின் சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக பலிகாணிக்கை மிருகங்கள் எரிக்கப் பட்டன. ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரமானது எரிகின்ற மாமிசத்தினாலும் விறகிலிருந்து வரும் புகையாலும் நிரப்பப் பட்டிருந்தது.
வெண்கலப் பாத்திரத்தில் இருக்கும் நீரினால் நம் அழுக்கை நாம் கழுவ வேண்டும்
பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் அருவெறுப்பான மாமிசம் எரியும் வாசனையையும் கருமையான புகையையும் அன்றாடம் தம்மைச் சுற்றிலும் சகிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களுடைய முகங்கள் புகையினால் கருமை அடைந்து தம்முடைய சரீரங்கள் அழுக்கினால் மறைந்திருக்கும் நிலையில் தம்மை சுத்தமாக வைத்திருப்பது அவர்களுக்கு இயலாத ஒன்றாக இருந்தது. இதனால் தான் வெண்கலப் பாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்திலே வைக்கப் பட்டிருந்தது, இதனால் அவர்களால் தம்மை கழுவிக் கொள்ள முடிந்தது. ஆசாரியர்கள் தம்மீதுள்ள அழுக்கினை வெண்கலப் பாத்திரத்தில் உள்ள நீரினால் அன்றாடம் கழுவ வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்த இந்த வெண்கலப் பாத்திரமானது புதிய ஏற்பாட்டு காலத்திலே இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார் என்பதை குறிப்பிடுகிறது. பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வெண்கலப் பாத்திரத்திலுள்ள நீரினால் தம்முடைய சரீரங்களை கழுவினார்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைக் குறிப்பிடுகிறது, அது அவருடைய இரட்சிப்பின் செயலிலே அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்திற்கு சமமான முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமானது நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவுவதற்கான முற்றிலும் இன்றியமையாத ஒரு வழியாக இருக்கிறது, இது இல்லாவிட்டால் யாராலும் சுத்திகரிக்கப் பட முடியாது. குறிப்பாக, ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள வெண்கலப் பாத்திரத்திற்கு சென்று அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே ஊழியம் செய்யும் போது சேர்ந்த அழுக்குகளை கழுவிக் கொள்ளுவதினால் தான் அவர்களால் தம் பரிசுத்தத்தை பராமரிக்க முடிந்தது.
வெண்கலப் பாத்திரத்திலே ஆசாரியர்களினால் தம் அழுக்கை கழுவிக் கொள்ள முடிகிறது என்பது, ஒருவன் தன் பாவம் நிறைந்த தன்மையை ஒப்புக் கொண்டு அவன் தன் பாவங்களுக்காக கர்த்தரால் தண்டிக்கப் பட்டு அழிக்கப் படுவான் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது. நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக தண்டிக்கப் பட்டு நரகத்தின் நெருப்பிலே வீசப்பட்டு நித்தியமாக பாடுபடுவீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது இரட்சிப்பின் வழியானது திறக்கப் படுகிறது. கர்த்தருடைய சந்நிதானத்திற்கு நீங்கள் வருவதற்கான ஒரே வழியானது நீங்கள் உங்களுடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்காக இயேசுவானவர் நிறைவேற்றிய இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பதேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களையும் என்னையும் இரட்சிப்பதற்காக மேசியா இந்த பூமிக்கு வந்தார்; அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தார்; அவர் நம்முடைய இடத்தில் இருந்து சிலுவையில் தண்டிக்கப் பட்டார். இதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியமாக இருக்கிறது, மேலும் அது நாம் விசுவாசிக்க வேண்டிய முற்றிலும் இன்றியமையாத இரட்சிப்பின் சத்தியமாக இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தீய சிந்தனைகளுடனே இருக்கிறான், ஆகவே மற்றவர்களை துன்புறுத்த வேண்டும், அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்த வேண்டும், அவர்களை கொலை செய்ய வேண்டுமென்ற கபடமான சிந்தனையும் இருக்கிறது. மனிதர்கள் எத்தனை தீமையானவர்கள் என்றும் மோசமானவர்கள் என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் மனிதர்கள் ஏன் இத்தனை கொடுமையானவர்களாக இருக்கிறார்கள்? அவர்கள் இயற்கையாகவே தீமை செய்கிறவர்களின் வித்தாக இருப்பதே இதற்கு காரணமாகும், அவர்கள் எப்போதும் கபடமான சிந்தனையுடனே எப்போதும் பாவம் செய்து வருகிறார்கள். மனிதர்கள் எப்போதும் பன்னிரு வகையான பாவங்களைச் செய்து வருவதினால், அவர்கள் எந்நேரத்திலும் வெடித்துச் சிதறக் கூடிய வெடிகுண்டைப் போல இருக்கிறார்கள். குறிப்பாக, அவர்கள் எப்போதும் கபடத்தை கடைபிடிக்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து பொய் கூறுகிறார்கள், ஒருவரிடம் இருந்து ஒருவர் திருடுகிறார்கள், விபசாரத்திலும் காமவிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள், கர்த்தருடைய மகிமையை தேவதூஷனம் செய்கிறார்கள், முட்டாள்தனத்தையும் பைத்தியத்தையும் நேசிக்கிறார்கள். இயற்கையாகவே தீமை செய்கிறவர்களின் வித்தாக இருக்கின்ற மனிதர்கள் எப்போதும் பொல்லாத சிந்தனைகளுடனே தம் வாழ்வு முழுவதும் கர்த்தருடைய பரிசுத்தத்தை எதிர்த்து வருகிறார்கள்.
கர்த்தருடைய பார்வையிலே நாம் எத்தனை தீமை நிறைந்தவர்களாக இருக்கிறோம்?
சுயநலத்துடன் இருப்பது ஒருவனுடைய மனித சுபாவமாக இருக்கிறது. ஒரு மனிதனிடம் நூறு டிரில்லியன் செல்கள் இருப்பதாகவும், இந்த செல்களின் ஒவ்வொரு செல்லும் மிகவும் சுயநலமிக்கதாக இருப்பதினால் அது இன்னொரு செல்லுடன் இணங்குவதே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இதனால் தான் மனிதர்கள் முழுவதுமாக சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அனைவரும் இப்படியாக சுயநலத்துடன் இருக்கும் படியாக மரபின் படியாக திட்டமிடப் பட்டுள்ளதால், ஒருவனுடைய நடத்தையை கட்டுப்படுத்த சமுதாய சட்டங்களும் திட்டங்களும் இல்லாவிட்டால் இந்த உலகத்திலே யாராலும் பிழைத்திருக்க முடியாது. மனிதர்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருப்பதினால் இந்த சட்டங்கள் இல்லாவிட்டால், அவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வர். அவர்கள் ஒவ்வொருவரும் பிழைத்திருக்க வேண்டும் என்பதினாலேயே சட்டதிட்டங்களை உருவாக்கியிருக்கின்றனர். இப்படியாகத் தான் சமுதாய சட்டங்களும் விதிகளும் உருவாகின. சமுதாய சட்டங்கள் மனிதனுடைய அழிக்கும் தன்மையை மட்டுப் படுத்தி அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சாதகமாக இருப்பதற்காக உருவாக்கப் பட்டது. சுருக்கமாக கூறினால், மனிதர்கள் மிகுந்த தீமையானவர்களாகவும் கபடமானவர்களாகவும் இருப்பதினால் அவர்களுடைய நடத்தையை ஆளுகைச் செய்யவும் அவர்களின் கொடுமையான போக்கினை மட்டுப்படுத்தவும் சமுதாய சட்டங்களையும் விதிகளையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியமாக மாறியது. இந்த உலகத்திலே கபட்டுத்தனம் மிகவும் அதிக அளவிற்கு மாறும் போது, அதிக அளவு சமுதாய திட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப் படுவது அவசியமாகிறது.
இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே நீங்கள் உங்களுடைய இரட்சகராக விசுவாசித்து பிதாவாகிய கர்த்தருடைய சந்நிதானத்திற்குள் வர விரும்பினால், நீங்கள் இயற்கையாக அடிப்படையிலே தீமையானவர்களாக இருக்கிறீர்கள் என்பதை தவறாது அறிந்து கொண்டு, நீங்கள் நரகம் செல்ல வேண்டு மோசமான பாவி என்பதை ஒப்புக் கொண்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நீதியை விசுவாசித்து இப்படியாக உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தர் பரிசுத்தவானாக இருந்தாலும் கூட, மனிதர்கள் முற்றிலும் தீமையானவர்களாக இருக்கிறார்கள், ஆகவே அவர்களால் எல்லா நேரங்களிலும் பாவம் செய்வதை தவிர்க்க முடியாது. அவர்கள் கர்த்தருடைய சாயலிலே படைக்கப் பட்டிருந்த போதிலும் கூட, அவர்கள் அவருடைய பரிசுத்தத்தை தேவதூஷனம் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இதனால் தான் மனிதகுலத்தினால் இயேசு கிறிஸ்துவினால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு இருதயத்துடனும் விசுவாசிப்பதினால் மட்டுமே இரட்சிக்கப் பட முடியும். இயேசு கிறிஸ்துவின் நீதியைத் தேடி, அதனை புரிந்து கொண்டு, அதனை விசுவாசித்தால் மட்டுமே உங்களால் இரட்சிப்பை அடைய முடியும். நீங்கள் கர்த்தருடைய நீதியைத் தேடி அவருடைய கிருபையை விசுவாசித்து, கீழ்வருமாறு கூற வேண்டும், “தேவனே, நான் எப்போதுமே கபடனாக இருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். நான் எப்போதுமே குறைபாடுடையவனாக இருக்கிறேன். நான் எப்போதுமே பாவம் செய்கிறேன், ஆகவே நான் நரகத்திலே தண்டிக்கப் பட வேண்டியவன். இதனால் நீர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக எனக்கு கொடுக்கும் இரட்சிப்பானது முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நீர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக என்னை இரட்சித்தீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.” தம்முடைய பலவீனத்தையும் கபடத்தையும் ஏற்றுக் கொள்ளுகிறவனால் மட்டுமே இயேசு கிறிஸ்துவின் நீதியை விசுவாசிக்க முடியும்.
“உன்னை அறிந்து கொள்!” என்று கூறப் பட்ட, ஒரு குளியலறையின் சுவரில் எழுதப் பட்டிருந்த சொற்றொடரை சாக்கிரட்டீஸ் வாசித்த போது அதனால் அவன் உந்தப் பட்டான். இந்த எளிமையான கூற்றானது சாக்கிரட்டீசின் மனதிலே அழிக்க முடியாத ஒரு பதிவை உருவாக்கியது. ஆகவே, சுய நீதியுடன் இருப்பதாகவும் நல்லொழுக்கமும் அறிவும் உடையவனாகவும் யாராவது ஒருவன் தன்னைக் காட்டிக் கொண்டால், சாக்கிரட்டீஸ் அவனிடம் “முதலாவது உன்னை அறிந்து கொள்!” என்று கூறுவதுண்டு. இந்த எளிமையான கூற்றானது இதுநாள் வரையிலும் நாம் நினைவில் வைத்திருக்கும் படியான ஒரு பெரிய தத்துவஞானியாக சாக்கிரட்டீசை மாற்றியது.
உங்களுடைய பாவத் தன்மையை நீங்கள் அறிந்து கொண்டு, இந்தப் பாவங்களுக்காக நீங்கள் நரகத்திலே வீசப்படுவீர்கள் என்பதையும் அறிந்து, இதனை உங்கள் இருதயத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை என்னால் போதுமான அளவு வலியுறுத்த முடியாது. நீங்கள் கர்த்தருக்கு முன்னதாக எத்தனை மோசமான பாவியாக இருக்கிறீர்கள் என்பதையும் எப்படியாக நீங்கள் நேரடியாக நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால் கர்த்தருடைய நீதியை உங்களால் உண்மையாகவே புரிந்து கொள்ள முடியாது. இதனைப் போலவே, ஒருவன் தன்னுடைய சொந்தப் பாவங்களுக்கான விளைவை முதலாவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சர்வாங்க தகன பலிபீடமானது சீத்தீம் மரத்தினால் செய்யப் பட்டு, அதன் வெளிப்பக்கமானது வெண்கலத்தினால் மூடப் பட்டிருந்தது. ஒருவன் தன் பாவங்களுக்காக தண்டிக்கப் படுவான் என்பதும் தன் நரகத்தின் வழியிலிருந்து அவனால் தப்ப முடியாது என்றும் இது சுட்டிக் காட்டுகிறது. ஆனால் தம்முடைய சொந்தத்திலே எதனையுமே செய்ய முடியாது என்பதை அறிந்து கொண்டவர்கள் இயேசுவானவரின் நீதியை மரித்து அவருடைய அன்பை விசுவாசிப்பார்கள்.
இங்கே நாம் லூக்கா 18:10-14 ஐ வாசிப்போம்: “இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும் படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.”
இயேசுவானவரின் காலத்தில் இருந்த பரிசேயர் வெளியரங்கமாக பக்தி நிறைந்தவர்களாக இருந்தனர், நல்லொழுக்கத்துடன் வாழும் படி அனைவரிடமும் கூறினர். ஆனால் அவர்கள் திருட்டோ விபசாரமோ செய்யாமல் இருந்தார்களா? இல்லை, அப்படி இல்லை! வெளியரங்கமாக பரிசேயர்கள் தெய்வீகமாக நடித்தாலும் கூட, அவர்களை யாரும் பார்க்காத போது, மற்றவர்களை விடவும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்தனர். ஆனால் அப்படி இருந்தாலும் கூட, தாம் பாவம் அற்றவர்கள் என்று விசுவாசிக்கும் படியாக தம்மைத் தாமே வசியம் செய்து கொண்டார்கள், மேலும் அவர்கள் தம்மைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கு தாம் தெய்வீகமானவர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். இத்தகைய மக்களே மிகவும் மோசமான பாவிகளாக இருக்கிறார்கள் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு சவால் விடுகிறார்கள்.
வரி வசூலிப்பவனின் ஜெபமானது பரிசேயனின் ஜெபத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்டதாக இருந்தது. வரி வசூலிப்பவன் பாவி என்பது அனைவருக்கும் தெளிவான ஒன்றாகும். குறிப்பாக, அவன் கர்த்தருக்கு முன்னதாக வந்த போது, அவனால் கர்த்தரை நோக்கி தன் தலையை நிமிர்த்து வானத்தை அன்னாந்து பார்க்கவும் கூடாதிருந்தது, அவன் தன் நெஞ்சிலே அடித்துக் கொண்டு கீழ்வருமாறு அறிக்கைச் செய்தான், “கர்த்தாவே, எனக்கு இரங்கும், ஏனெனில் நான் பாவியாக இருக்கிறேன்!” கர்த்தர் அப்போது வரி வசூலிப்பவன் தன் கிருபையை வேண்டுவதை செவிமடுத்து, நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை அவன் விசுவாசித்ததினால் அவனை அவனுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். அதற்கு மாறாக, பரிசேயன் கர்த்தருடைய பார்வையிலே தீமை செய்கிறவனாக வெளிப்படுத்தப் பட்டான். பரிசேயன் அல்ல வரி வசூலிப்பவனே கர்த்தரால் அவருடைய நீதியால் அங்கீகரிக்கப் பட்டான்.
கர்த்தருடைய நீதியை நம் இருதயங்களினால் விசுவாசித்ததினால் மட்டுமே நாம் நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோமே தவிர நம் சொந்த செயல்களை சார்ந்திருப்பதினால் அல்ல. நம்முடைய செயல்கள் கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு ஏற்றதாக இல்லாதிருப்பதினால், எப்போதும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது, ஆகவே நாம் அனைவரும் நம் பாவங்களுக்காக நெருப்பினால் தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறோம், அது இஸ்ரவேல் மக்கள் தம்முடைய பாவங்களுக்காக சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது பலிகாணிக்கை மிருகங்களைக் கொன்று அவற்றை எரித்ததைப் போல் இருக்கிறது. ஆகவே நாம் எத்தனை பாவம் நிறைந்தவர்கள் என்பதை கர்த்தரிடம் அறிக்கைச் செய்து இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நம் பாவங்களில் இருந்தும் ஆக்கினைகளில் இருந்தும் இரட்சிக்கப் பட வேண்டும்.
வெண்கலத்தினால் மூடப் பட்டிருக்கும் சர்வாங்க தகன பலிபீடத்திலிருந்து நெருப்பும் புகையும் வருவதை நாம் பார்த்த போது, அதனை நம்மால் கர்த்தருடைய பார்வையில் இருந்து காண முடியும், நாம் நம்முடைய பாவங்களுக்காக நரகத்தின் நெருப்பிலே தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருந்தோம். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய பலிகாணிக்கையான இரத்தத்தையும் விசுவாசித்து உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லாத் தண்டனையில் இருந்தும் விடுதலையாக முடியும். இயேசு கிறிஸ்து உங்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களுக்கு இரட்சிப்பை கொடுக்கிறார், ஆனால் நீங்கள் முதலிலே ஒரு தீமையானவன் என்பதையும், உங்களுடைய பாவங்களுக்காக தண்டிக்கப் படுவதை உங்களால் தவிர்க்க முடியாது என்பதையும் கர்த்தரிடம் ஒப்புக் கொள்ளாவிட்டால் இரட்சிப்பை நேர்மையுடனே தேட முடியாது. இந்த இரட்சிப்பின் சத்தியத்தை நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தாலும் விசுவாசிக்கும் போது மட்டுமே உங்களால் உங்களுடைய இரட்சிப்பை அடைந்து, உங்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் அவற்றிற்கான தண்டனையில் இருந்தும் தப்பி, கர்த்தருடைய அன்பினை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மேலே கூறப் பட்டதைப் போல, நீங்கள் இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பதற்கு முன்னதாக, நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மையை அறிந்து கொண்டு கர்த்தருக்கு முன்னதாக உங்கள் பாவம் நிறைந்த சுபாவத்தையும் குறைபாட்டையும் ஒப்புக் கொள்ள வேண்டும். தன்னுடைய பாவம் நிறைந்த தன்மையை ஏற்றுக் கொள்ளுகிற ஒருவனால் தான் கர்த்தருடைய பரிசுத்தத்தையும் அவருடைய நீதியையும் உண்மையாகவே அறிந்து கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் முழுமையாக நீதியும், நேர்மையும், உண்மையும் உள்ளவராக இருக்கும் போது, நீங்கள் முற்றிலுமாக அநீதியும், அழுக்கும், அவருடைய பார்வையில் தீமையாகவும் இருப்பதை ஒப்புக் கொண்டால் மட்டுமே இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் விசுவாசித்து உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
கர்த்தருடைய முன்னதாக தான் மிகுந்த நல்லொழுக்கமுடையவனாக தன்னைக் கருதிய பரிசேயனைப் போல நீங்கள் சுய நீதி மிக்கவராக இருந்தால், நீங்கள் மெல்லிய தகடான பனிக்கட்டியின் மீது நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை இங்கே அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருடைய கிருபையை கண்டு கொள்ளுவதற்கு முற்றிலும் மாறாக, நீங்கள் கர்த்தரால் கைவிடப் படுவீர்கள். அதற்கு மாறாக, நீங்கள் வரி வசூலிப்பவனைப் போல இருந்தால், நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக நரகத்திற்குச் செல்ல வேண்டிய பாவி என்பதை உங்களால் ஒப்புக் கொண்டு, இந்த தாழ்மையான ஒப்புக்கொடுத்தலின் மூலமாக கர்த்தரிடமிருந்து கிருபையைக் காண முடியும். குறிப்பாக, வரி வசூலிப்பவனைப் போல தாழ்மையாக இருக்கும் அனைவருடைய எல்லாப் பாவங்களையும் பிதாவாகிய கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக துடைத்து விட்டார் இதற்காக அவர் தன் ஒரேபேறான குமாரராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி அவர்களை இரட்சித்தார்.
இந்த உலகத்திலே எண்ணில் அடங்காத மக்கள் இருந்தாலும் கூட, அவர்களை இரண்டு குறிப்பிட்ட வகையான மக்களாக பிரிக்கலாம்: தம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்கள் இன்னமும் பெற்றுக் கொள்ளாதவர்கள். முன்னதாக கூறப் பட்டவர்கள் தம்முடைய இயலாமையை ஏற்றுக் கொண்டு தம் நரகம் செல்லும் நிலையை ஒப்புக் கொண்டவர்கள் ஆவர், இதன் விளைவாக, அவர்கள் கர்த்தருடைய கிருபையைத் தேடுகிறார்கள். இத்தகைய மக்கள் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசித்து தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்கள் கர்த்தரை நேர்மையாக ஏற்றுக் கொண்டு அவருடைய பரிசுத்தத்தையும், நீதியையும், உண்மையையும் விசுவாசிக்கிறார்கள். அதற்கு மாறாக, பின்னால் கூறப் பட்டவர்கள் தம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதை மறுப்பதுடனே கர்த்தரையும் எதிர்த்து நிற்கிறார்கள், ஏனெனில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை தம் இரட்சகராகவும் விசுவாசிக்கவில்லை தம்மை பாவிகள் என்றும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகிய சத்தியத்தின் மூலமாக கர்த்தர் உங்கள் எல்லாப் பாவங்களையும் முற்றிலுமாக கழுவி விட்டார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இந்த குழப்பமில்லாத விசுவாசம் உடையவர்கள் மட்டுமே தம் இரட்சிப்பை அடைந்தார்கள்.
வெண்கலத்தினால் மூடப் பட்டிருக்கும் சர்வாங்க தகன பலிபீடமானது, நாம் நம்முடைய பாவங்களுக்காக கர்த்தரால் தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருந்தாலும் கூட நம் தேவனுடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவை மரணத்தையும் விசுவாசிப்பதின் மூலமாக நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் கழுவப் பட்டோம் என்பதை நமக்கு காட்டுகிறது. ஆனால் நீங்கள் இயேசுவானவர் உங்களுடைய இரட்சகர் என்று அறிவித்து உங்கள் விசுவாசத்தை அறிக்கைச் செய்வதற்கு முன்னதாக, நீங்கள் செய்த எண்ணில் அடங்காத பாவங்களுக்காக கர்த்தரால் நீங்கள் தண்டிக்கப் பட வேண்டியவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது வெண்கலத்தினால் மூடப் பட்ட சர்வாங்க தகன பலிபீடதின் மீது எரிக்கப் பட்ட பலிகாணிக்கை மிருகங்களைப் போலிருக்கிறது. நீங்கள் உங்களுடைய பாவம் நிறைந்த தன்மையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உங்களால் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் உங்கள் இரட்சிப்பாக புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க முடியும், அப்போது மட்டுமே உங்களால் கர்த்தருடைய மக்களில் ஒருவராக மாற முடியும்.
இயேசுவானவருடைய இரத்தத்தை விசுவாசிப்பது மட்டுமே போதுமானதல்ல
உங்களில் சிலர் கீழ்வருமாறு எண்ணக் கூடும், “நான் ஏற்கனவே இயேசுவானவருடைய இரத்தத்தை விசுவாசிக்கும் போது, என்னுடைய பாவம் நிறைந்த தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதற்காக ஆயர் ஜோங் தொடர்ந்து கூறுகிறார்? என்னிடம் சில களங்கங்கள் இருப்பது உண்மையே, ஆனால் என்னுடைய பாவங்களுக்காக கர்த்தரால் தண்டிக்கப் படும் அளவிற்கு நான் பாவம் நிறைந்தவன் அல்ல. என்னுடைய ஒவ்வொரு சிந்தனையும், ஒவ்வொரு நோக்கமும், ஒவ்வொரு செயலும் பாவம் நிறைந்ததாக இருப்பதினால் நான் தண்டிக்கப் பட வேண்டியவன் என்று நான் எண்ணவில்லை.” இப்போது இதனை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால், நீங்கள் பரிசேயரைப் போல தவறானவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பொதுவான நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய தவறை நீங்கள் செய்து வருகிறீர்கள்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. கர்த்தருடைய பார்வையிலே, அனைத்து பாவங்களும் ஒரே மாதிரியானவையே, அது பெரிதாக இருந்தாலும் சரி சிறிதாக இருந்தாலும் சரி. கர்த்தருடைய பார்வையிலே ஒருவனிடம் ஏதாவது பாவம் இருந்தால் அது பாவங்களிலேயே சிறிதாக இருந்தாலும் கூட, நா, இந்த பாவத்திற்காக தண்டிக்கப் பட்டு நரகத்தின் நெருப்பிலே வீசி எறியப் படுவோம். உங்கள் பாவங்கள் எத்தனை பெரிதானதாக இருக்கிறது சிறியதாக இருக்கிறது என்பது பொருட்டேயல்ல; உங்களிடம் ஏதாவது பாவம் இருந்தால், நீங்கள் பரிசுத்தமான கர்த்தருடைய பார்வையிலே மற்ற பாவியைப் போலவே இருக்கிறீர்கள்.
இது ஏன் இப்படி இருக்கிறது? கர்த்தர் தாமே பரிசுத்தராக இருப்பதினால், உங்களுடைய பாவங்கள் எத்தனை கொடுமையானதாக இருக்கிறது என்றோ அல்லது அது ஒன்றுமில்லாதது என்றோ நீங்கள் எண்ணினாலும் அதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அனைத்து பாவத்தையும் எந்த விதிவிலக்கும் இன்றி அவர் தண்டிப்பதே இதற்கு காரணமாகும்.
கர்த்தருக்கு முன்னதாக நாம் நம் வாழ்வை பார்க்கும் போது, நம் யாராலும் நாம் சிறிதளவு பாவங்களை மட்டுமே செய்திருக்கிறோம் என்று கூற முடியாது. நீங்கள் வெறும் சில பாவங்களை மட்டுமே செய்ததாக கூறி, நீங்கள் நல்லொழுக்கம் உள்ளவர்கள் என்று கருதினால், அது இந்த உலகத்தின் அளவுகோலின் படியாக சரியாக இருக்கும். ஆனால் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பும் பாவத்திற்கான தண்டனையும் தவறானவை என்று நீங்கள் கருதுவதால் தான் அப்படி கூறுகிறீர்கள், ஏனெனில் கர்த்தர் எத்தனை கண்டிப்பானவர் என்பதைக் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் உங்களுடைய சொந்த அளவுகோலின் படியாகவும் சுய புரிந்து கொள்ளுதலின் படியாகவும் தான் உங்களை நீங்களே அளக்கிறீர்கள், இதனால் தான் மிகவும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் கர்த்தருடைய பிரமாணத்திற்கு முன்னதாக உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும், கீழ்வருமாறு கேட்க வேண்டும், “கர்த்தருடைய பார்வையில் நான் எப்படி இருக்கிறேன்? கர்த்தர் என்னைப் பார்க்கும் போது, நான் தண்டிக்கப் பட வேண்டிய ஒருவனாக இருக்கிறேனா? நான் அவ்வப்போது செய்து வந்த எண்ணிலடங்காத பாவங்கள் என்னை நிச்சயமாக நரகத்திற்கு அனுப்பி வைக்காதா?” இதனைப் போல, நீங்கள் உங்களை உள்ளபடியே கர்த்தருக்கு முன்னாதாக ஆராய்ந்து பார்த்து, நீங்கள் உங்களுடைய பாவங்களுக்கான கிரையமாக நரகத்தின் நெருப்பிலே வீசப் படுவதற்கு ஏதுவானவர் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
விசுவாசத்தின் மூலமாக செய்யப் படாத எதுவும் கர்த்தருக்கு முன்னதாக பாவமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் முக்கியமானதாக இருக்கிறது (ரோமர் 14:23), நீங்கள் இத்தகைய பாவங்களை எப்போதும் செய்கிறீர்கள், இந்தப் பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப் படுவீர்கள். இதன் பிறகு தான் உங்களால் இரட்சிப்பின் சத்தியத்தை அறிந்து கொண்டு உங்களைப் போன்ற இத்தகைய மோசமான பாவியை இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக தேவன் இரட்சித்தார் என்பதை பற்றிக்கொள்ள முடியும், இந்த நொடிப் பொழுதிலே உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்து விளக்கமாக கூறும் கர்த்தருடைய வார்த்தையை நாம் பார்க்கும் போது, கீழ்வருமாறு அறிக்கைச் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது: “தேவனே, நாம் அனைவரும் நம் பாவங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறோம், ஏனெனில் எப்போதும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. அப்படி இருந்தாலும் கூட, நம்மை இரட்சிப்பதற்காக ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு இரத்தத்தைச் சிந்தி நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் முற்றிலும் விடுதலை செய்தீர். உம்முடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை விசுவாசித்து, நாம் அனைவரும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் தண்டனையிலிருந்தும் இரட்சிக்கப் பட்டோம். நாம் அனைவரும் நரகத்திலே வீசப் பட வேண்டியவர்களாக இருந்தோம் என்பது உண்மையாகும். ஆனால் உமக்கு நன்றிகள், உம்மால் நிறுவப் பட்ட பலிகாணிக்கை முறையினை விசுவாசித்து நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம். இதுவே நீர் எங்களுக்கு கொடுத்த இரட்சிப்பின் வரமாக இருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். இத்தகைய ஆச்சரியமான கிருபைக்கு முன்னதாக நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்முடைய எல்லா நன்றிகளையும் உமக்கு கொடுப்பது மட்டுமே.”
இன்னமும் கிறிஸ்துவுடைய நீதிக்குள் வராத எண்ணில் அடங்காத மக்கள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள். அநேக மக்கள் இரட்சிப்பின் சத்தியத்தைக் குறித்து இன்னமும் அறியாமையுடன் இருக்கிறார்கள், தேவன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் ஒவ்வொரு பாவியையும் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். தாம் எத்தனை தீமையானவர்கள் என்பதைக் குறித்தும், இந்த பாவங்களுக்காக அவர்கள் தண்டிக்கப் பட்டு அழிய வேண்டி இருப்பதைக் குறித்தும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எல்லா நேரங்களிலும் என்ணிலடங்காத பாவங்களைச் செய்து வருவதினால் அவர்கள் இந்தப் பாவங்களுக்காக தண்டிக்கப் பட்டாலும் கூட, தாம் இத்தகைய மோசமான பாவிகள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளுவதில்லை, அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். அதற்கு மேலும், தாம் கர்த்தருக்கு முன்னதாக நல்ல காரியங்களைச் செய்து வருவதாக தவறுதலாக எண்ணி வருகிறார்கள், அவர்கள் தம் சொந்த நல்லொழுக்கத்தை காட்டுவதில் மிகவும் ஆர்வத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரிடம் செல்லும் போது, அவர்கள் கர்த்தருடைய நீதியை அவரிடம் எடுத்து வராமல் தம்முடைய சொந்த நீதியை மட்டுமே எடுத்து வர தயங்குவதில்லை. அவர்கள் தம்முடைய சுய நீதி என்ற மூர்க்கத்தனத்தினால், தம்மிடம் பாவம் இருந்தாலும் கூட தாம் நரகத்திற்குச் செல்லுவதில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள். தம்மிடம் சிறிதளவு பாவம் மட்டுமே இருப்பதினால் இந்தப் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளத் தேவை இல்லை என்று அவர்கள் தமக்குத் தாமே எண்ணிக் கொள்ளுகிறார்கள்.
தாம் இயேசுவானவரை விசுவாசித்தாலும் கூட, இன்னமும் தம்மிடம் சிறிது பாவங்கள் இருப்பதாகவும், இந்தப் பாவங்களை மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதின் மூலமாக எளிதாக கழுவ முடியும் என்று உலகம் முழுவதும் உள்ள அநேக கிறிஸ்தவர்கள் எண்ணுகிறார்கள்; எப்படியோ தம்மால் பரிசுத்தமாக முடியும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்; தாம் அனைவரும் கடைசியில் பரலோக ராஜ்யத்திலே பிரவேசிப்போம் என்றும் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். தாம் பாவம் நிறைந்தவர்களாக இருந்தாலும் கூட, தாம் இயேசுவானவரை விசுவாசிப்பதினால் கர்த்தர் தம்மை நியாயந்தீர்ப்பதில்லை என்று அவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். ஆனால் எத்தனை மக்கள் இதனைக் குறித்து உறுதியாக இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரும் நரகத்தின் எரியும் நெருப்பிலே வீசப் படுவார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் இரகசியத்தைக் குறித்து நீங்கள் உண்மையாக அறிந்திராவிட்டாலும், அல்லது இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைக் குறித்து அறிந்து விசுவாசிக்காமல் அவர் உங்களுக்காக சிலுவையில் அறையப் பட்டார் என்று விசுவாசித்தால் நீங்கள் நரகத்திற்குச் செல்ல மாட்டீர்கள் என்று எண்ணினால், உங்களுடைய விசுவாசமானது பிழையானதாகவும் குறையுள்ளதாகவும் இருக்கிறது. இதனைப் போல, உங்கள் இருதயம் பாவம் நிறைந்ததாக இருந்த போதிலும் கூட நீங்கள் நரகத்திற்குச் செல்லப் போவதில்லை என்று எண்ணினால், நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக எப்படியோ விசுவாசிப்பதாக கூறினால், நீங்கள் கர்த்தருடைய பரிசுத்தத்தை எதிர்க்கிறீர்கள். தாம் கர்த்தருடைய தண்டனையை அனுபவிப்பதை விசுவாசிக்காத இத்தகைய மூர்க்கத்தனமுள்ள மக்களுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு இடம் நரகமாகும்.
அநேக பாவிகள் மிகவும் முட்டாள்களாக இருந்து தாம் நேரடியாக நரகத்தை நோக்கி செல்லுகிறோம் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பது மிகப் பெரிய பரிதாபம் ஆகும். ஆனால் வேதாகமம் கீழ்வருமாறு கூறுகிறது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23), இதனைப் போல அனைவரும் நரகத்தில் வீசப் பட வேண்டியவர்கள், ஏனெனில் அனைவரும் பாவத்தினால் நிறைந்தவர்கள். கர்த்தருடைய மகிமை என்பது இயேசு கிறிஸ்துவே ஆகும், அவர் நீர் மற்றும் ஆவியினால் வந்தவர். எண்ணிலடங்காத கிறிஸ்தவர்கள் தாம் இயேசுவானவரை விசுவாசிப்பதாக அறிவித்தாலும் கூட, அவர்களில் அநேகர் இரட்சிக்கப் படாதவர்களாகவே இருக்கிறார்கள் ஏனெனில் அவர்கள் இயேசுவானவர் நீர், இரத்தம், மற்றும் ஆவியால் வந்தவர் என்பதை உண்மையாகவே புரிந்து கொள்ளவில்லை. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் வந்த இந்த இயேசு கிறிஸ்துவை நீங்கள் அறிந்து விசுவாசிக்காவிட்டால், இன்னமும் நீங்கள் உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் கழுவப் படாதவர் ஆவீர்கள், ஆகவே உங்களால் கர்த்தருடைய மகிமையான வீட்டிற்குள் பிரவேசிக்க முடியாது. கர்த்தருடைய வீட்டிற்குள் உங்களால் பிரவேசிக்க முடியாது என்றால், நீங்கள் கர்த்தருடைய ராஜ்யத்திலே பங்கேற்பதற்கு மாறாக, நீங்கள் கடைசியிலே நரகத்திலே வீசப் படுவீர்கள் என்று மட்டுமே பொருள் படுகிறது.
ஆகவே, நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக விசுவாசிப்பதாக அறிவிக்கின்ற கிறிஸ்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் உண்மையாகவே மறுபடியும் பிறக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களுக்காக நரகத்திற்குச் செல்ல வேண்டியவர் என்பதை ஏற்றுக் கொண்டு இந்த நொடியில் இருந்து இயேசு கிறிஸ்துவை சரியாக விசுவாசிக்க வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கர்த்தருடைய பிரமாணம் தெளிவாக கூறுகிறது, நீங்கள் இந்த தெய்வீக பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு எந்த எதிர்ப்பையும் காட்டாது அதனை விசுவாசிக்க வேண்டும். உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் நேரடியாக நரகத்திற்குச் செல்லுகிறீர்கள் என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே உங்களால் கர்த்தரால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க முடியும். கர்த்தருடைய இரட்சிப்பின் வரமானது பாவங்களுக்கான மன்னிப்பாகும், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம், அவருடைய சிலுவை மரணம், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த வரம் கொடுக்கப் படுகிறது.
நம்முடைய இரட்சிப்பும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் கிட்டிய விடுதலையும் நம்மிடம் இருந்து வரவில்லை, ஆனால் அது கர்த்தர் நமக்கு கொடுத்த வரமாக இருக்கிறது. நம்மில் ஒருவர் கூட நம்முடைய சொந்த விருப்பத்தினால் இந்த உலகத்திலே பிறக்கவில்லை, ஆனால் நம்மைத் தன்னுடைய சொந்த பிள்ளைகளாக மாற்றுவதற்காக கர்த்தர் நாம் இந்த பூமியிலே பிறப்பதை அனுமதித்தார். இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவை மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் நாம் விசுவாசத்தால் மட்டுமே இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் படி கர்த்தர் நம்மை அனுமதித்தார் என்பதை அறிந்து கொண்டு, நம்மில் ஒவ்வொருவரும் இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று கூறுகின்ற தன் பிரமாணத்தை நிறுவிய கர்த்தர், நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவனை நமக்காக திட்டமிட்டு நமக்கு அதனைக் கொடுத்தார். சீத்தீம் மரத்தினால் சர்வாங்க தகன பலிபீடத்தை தயாரித்து, அதனை வெண்கலத்தினால் மூடி, அதிலே நெருப்பு மூட்டும் படி கர்த்தர் கட்டளையிட்டார். பாவத்தின் சம்பளம் மரணம் என்று இதற்கு பொருள் படுகிறது, ஒவ்வொரு பாவமும் நித்தியமாக தண்டிக்கப் பட வேண்டியதாக இருக்கிறது. இத்தகைய கர்த்தரால் நிறுவப் பட்ட பிரமாணத்தை உடைக்கவும் முடியாது நம்மால் மாற்றவும் முடியாது. இதனால் தான் நாம் எந்த ஆதரவும் இல்லாத பாவிகள் என்று ஏற்றுக் கொண்டு விசுவாசத்தால் நம் இருதயங்களில் இரட்சிப்பின் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்காக நிறுவியதும் நிறைவேற்றியதுமான ஒவ்வொரு பிரமாணத்தையும் நாம் ஏற்றுக் கொண்டு அதனை விசுவாசிப்பது நம் அனைவருக்கும் முற்றிலும் முக்கியமானதாக இருக்கிறது.
ஆசரிப்புக் கூடாரத்தைக் குறித்த தெளிவான புரிந்து கொள்ளுதலும் சரியான விசுவாசமும் உங்களிடம் இருந்தால், அப்போது கர்த்தர் உங்களை உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இந்தப் பாவங்களுக்கான தண்டனையில் இருந்தும் இரட்சிப்பதுடனே, தன்னுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் கூட உங்களுக்குத் தருவார். ஆயினும், நீங்கள் உங்களுடைய பாவங்களை ஒருமுறையாவது கருத்தில் கொள்ளாமல், உங்களிடம் எந்தப் பாவங்களும் இல்லை என்றும், நீங்கள் எத்தகைய பெரிதான பாவங்களையும் செய்யவில்லை என்றும் பிடிவாதத்துடனே எண்ணினால், அல்லது நீங்கள் செய்த நல்ல காரியங்களுடன் ஒப்பிடும் போது உங்களுடைய சில பாவங்கள் ஒன்றும் இல்லாதவை என்று எண்ணினால், உங்களுடைய ஆத்துமா கர்த்தருடைய கோபாக்கினையின் பிரமாணத்தின் அடியில் இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவானர் கர்த்தரும் கூட, இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராகவும் தேவனால் நிறைவேற்றப் பட்ட கர்த்தருடைய நீதியையும் விசுவாசித்தால் உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் உங்களால் விடுதலையாக முடியும்; நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீங்கள் உங்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாகி விட்டால், நீங்கள் நித்தியமாக கர்த்தருக்குள் வாசம் செய்வது நிச்சயம்.
ஆசரிப்புக் கூடாரத்தின் பலிகாணிக்கை முறையிலே மறைந்துள்ள இரட்சிப்பின் சத்தியத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் மரணத்தில் இருந்தும் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவிற்கு என் எல்லா நன்றிகளையும் நான் தெரிவிக்கிறேன்.