(யாத்திராகமம் 30:1-10)
“தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக. அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும். அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி, அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக. அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய். சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய். ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும். உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின் மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.”
நாம் தேவனுடைய வீடாகிய, பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தோம் என்றால், முதலாவதாக நாம் விளக்குத் தண்டையும், அப்பத்தின் மேஜையையும், தூப பீடத்தையும் பார்ர்போம். தூப பீடமானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்னதாக வைக்கப் பட்டிருந்தது, அங்கே கிருபாசனம் உள்ளே வைக்கப் பட்டிருந்தது, அதற்கு முன்னதாக விளக்குத் தண்டும் அப்பத்தின் மேஜையும் இருந்தன. தூப பீடத்தின் அகலமும் நீளமும் பக்கத்திற்கு ஒரு முழமாக இருந்தது, அது உயரம் இரண்டு முழமாக இருந்தது. வேதாகமத்திலே, ஒரு முழம் என்பது இன்றைய அளவீட்டின் படி 45-50 செ.மீ. நீளமுடையதாக இருக்கிறது. ஆகவே தூப பீடமானது 50 செ.மீ. நீளமுள்ளதும் 100 செ.மீ. உயரமுள்ளதுமான சிறிய சதுரவடிவ அமைப்பில் இருந்தது. சர்வாங்க தகன பலிபீடத்தைப் போலவே தூபபீடத்திலும் கூட ஒவ்வொரு மூலையிலும் கொம்புகளை உடையதாக இருந்தது. சீத்தீம் மரத்தினால் தயாரிக்கப் பட்ட, தூப பீடமானது முழுமையாக பொன்னினால் மூடப் பட்டிருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த தூப பீடத்திலே நான்கு கொம்புகள் இருந்தன
வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளிலே தலைமை ஆசாரியன் பாவ நிவாரண நாளுக்கான பலிகாணிக்கையை செலுத்திய போது, அவன் இஸ்ரவேல் மக்களின் வருடாந்தர பாவங்களைச் சுமந்த பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரத்திலே இருந்த சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளிலே ஊற்ற வேண்டியிருந்தது. அதே போல, தலைமை ஆசாரியனும் கூட இந்த இரத்தத்தை தூப பீடத்தின் கொம்புகளிலே ஊற்ற வேண்டியிருந்தது. இந்த இரத்தம் கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப் பட்ட போது, இஸ்ரவேல் மக்களை கர்த்தரிடமிருந்து தடுத்த பாவப் பிரச்சனையை அது தீர்த்து வைத்தது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் அனைவரும் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம், இந்த புதிய ஏற்பாட்டின் காலத்திலே, நம்முடைய இந்த விசுவாசமானது ஜெபிக்கும் படியாக நாம் கர்த்தருடைய சந்நிதானத்திற்கு முன்னதாக வரும் போது அது நம் எல்லாத் தடைகளையும் அகற்ற நம்மை ஏதுவாக்குகிறது. நீதிமானும் கூட இந்த உலகத்திலே வாழும் போது பாவம் செய்கிறான். ஆயினும், நாம் இயேசுவானவரின் ஞானஸ்நானத்தையும் பழைய ஏற்பாட்டின் பலிகாணிக்கை முறையிலே கூறப் பட்ட பலிகாணிக்கையின் இரத்தத்தையும் விசுவாசிப்பதால், இன்னமும் நம்மால் கர்த்தருக்கு முன்னதாக வந்து அவரிடம் தைரியமாக ஜெபிக்க முடிகிறது.
நீதிமான்களும் கூட இந்த உலகத்திலே பாவங்களைச் செய்வதினால் கர்த்தருடைய சந்நிதானத்திற்கு முன்னே வருவதற்கு தயக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் இத்தகைய நேரங்களில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இன்னமும் அவர்களால் கர்த்தருக்கு முன்னதாக தைரியமாக வர முடிகிறது. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதால், நம்மால் கர்த்தருக்கு முன்னதாக தைரியமாக வர முடிகிறது நம்முடைய சரீரங்களும் மனங்களும் பலவீனமாக இருந்தாலும் பரவாயில்லை. இதற்கு காரணம் நாம் ஏற்கனவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீதிமான்களாக மாறியதேயாகும், தேவன் நம்மை நம்முடைய எல்லா மீறுதல்களில் இருந்தும் ஒரே தரமாக ஏற்கனவே விடுதலை செய்து விட்டார் இதனை அவர் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற ஆகியவற்றின் சத்தியத்தை பயன் படுத்தினார். ஆகவே நாம் எப்போதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தியானம் செய்ய வேண்டும். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றின் மூலமாக நம் இரட்சிப்பை முழுமையாக நிறைவேற்றினார், ஆகவே இந்த இரட்சிப்பை விசுவாசிப்பவர்களுக்கும் அதனை விசுவாசிக்காதவர்களுக்கும் அடிப்படை விசுவாசத்திலே ஒரு வேறுபாடு இருக்கிறது. நீதிமான்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்கள். இதனால் தான் அவர்கள் எத்தகைய தயக்கமும் இல்லாது கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் இயேசுவானவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக தம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தன் இரத்தத்தைச் சிந்தினார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆகவே இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்பதையும், அவர் தன்னுடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தியதின் மூலமாக தம் எல்லாப் பாவங்களுக்குமாக தண்டிக்கப் பட்டார் என்பதையும் விசுவாசிக்க வேண்டும். அப்போது மட்டுமே ஒருவன் விசுவாச ஆசாரியனாக மாறி கர்த்தருக்கு முன்னதாக தனக்காகவும் மற்ற பாவிகளுக்காகவும் ஜெபிக்க முடியும். கர்த்தர் நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்று விசுவாசிப்பதே உண்மையான கிறிஸ்தவ விசுவாசமாக இருக்கிறது, இந்த விசுவாசத்திற்கான அடிப்படை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக, நம் அனைவராலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலுள்ள இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் சத்தியத்தை கண்டு கொள்ள முடியும். இந்த நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசித்து நம் அனைவராலும் கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். ஆகவே இயேசு கிறிஸ்துவின் நீதியே உங்களுடைய இரட்சிப்பு என்று விசுவாசிக்கும் படியும், அது உங்கள் எல்லாப் பாவங்களையும் சுமந்தது என்றும், அவர் உங்கள் எல்லாப் பாவங்களுக்காகவும் சிலுவையில் தண்டிக்கப் பட்டார் என்றும் விசுவாசிக்கும் படி உங்களிடம் கேட்கிறேன். அப்போது நீங்கள் உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நித்தியமாக விடுதலை ஆவீர்கள். கர்த்தருடைய உடன்படிக்கையின் நற்செய்தியை, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையை விசுவாசிப்பதினால் மட்டுமே, உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு, நீதியின் பரிசுத்தவானாக மாறி, சரியான விசுவாசம் உடையவர்களாக கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்களை இரட்சிப்பை நீங்கள் பெற்றுக் கொண்டால், முதலாவதாக நீங்கள் செய்ய வேண்டியது அவருடைய இரட்சிப்பின் செயலுக்காக அவரிடம் ஜெபிப்பதேயாகும், அதாவது, உலகம் முழுவதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப நாம் ஜெபிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கின்ற நீதியின் விசுவாசிகள் இப்படியாக ஜெபிப்பதின் மூலமாக அவர்கள் கர்த்தருடைய சபையின் மூலமாக இந்த உலகத்திலே நற்செய்தியின் வெளிச்சத்தை மிகவும் பிரகாசமாக ஒளிரச் செய்வர், அவர்கள் கர்த்தருடைய மகா பரிசுத்த ஸ்தலத்திலே இருக்கின்ற விளக்குத் தண்டாவர். கர்த்தருடைய சபையிலே ஊழியத்தை ஆதரிக்கவும் உலகம் முழுவதும் நற்செய்தியை பரவச் செய்யவும் விசுவாசமே நமக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. கர்த்தருடைய ஊழியர்களினால் பிரசங்கிக்கப் படும் விலையேறப் பட்ட கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதனை விசுவாசிப்பதின் மூலமாகவே முழு உலகத்திலும் இருக்கும் அனைவராலும் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு விசுவாசத்திலே வளர முடியும்.
இயேசுவானவரை உங்கள் இரட்சகராக விசுவாசிக்கும் விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே இருக்க வேண்டும். உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்ட நீதியின் பரிசுத்தவானாகிய நீங்கள், தூப பீடத்திற்கு முன்னதாக வந்து நின்று பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் கிருபாசனத்திற்கு முன்னதாக நிற்க வேண்டும். இது ஏன் இத்தனை அவசியமானது? கர்த்தருடைய கிருபை உங்களுக்கு தொடர்ச்சியாக வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும். தூப பீடமானது நாம் கர்த்தரிடம் ஜெபிக்கின்ற ஒரு இடமாக இருக்கிறது, தூப வர்க்கம் என்பது பரிசுத்தவான்களின் ஜெபத்தைக் குறிப்பிடுகிறது (வெளி 5:8). நாம் தூப பீடத்திற்கு அருகே வந்து கர்த்தரிடம் ஜெபிக்கும்போதெல்லாம் அவருடைய கிருபையை அணிந்து கொள்ளுகிறோம். பரிசுத்த ஸ்தலத்திலே இருக்கும் தூப பீடமானது விசுவாசத்தால் நாம் கர்த்தரிடம் ஜெபிப்பதே கர்த்தருடைய கிருபையை நாம் தேடுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது என்று நமக்கு காட்டுகிறது. இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் தொடர்ந்து தூப பீடத்திற்கு வருகைத் தந்து விசுவாசத்தின் மூலமாக இடைவிடாது கர்த்தரை நோக்கி ஜெபிக்க வேண்டும், இதனால் நாம் ஒவ்வொரு நேரமும் கர்த்தருடைய கிருபையை அணிந்து கொள்ள முடியும்.
தூப பீடமானது நாம் கர்த்தருடைய உதவியைக் கேட்கின்ற ஒரு இடமாக இருக்கிறது
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டாலும் கூட, நம்முடைய மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதும் நமக்கு கர்த்தருடைய கிருபை தேவைப் படுகிறது. கர்த்தருடைய சபையிலே நாம் ஐக்கியமாகி இந்த உலகத்தின் வெளிச்சம் என்ற ஆவிக்குரிய கனியைக் கொடுக்கும் போது, கர்த்தருடைய கிருபை எப்போதும் நம்மிடம் இருக்கிறது. ஆகவே இடைவிடாது நாம் கர்த்தரிடம் ஜெபிப்பது நமக்கு மிகவும் முக்கியமாகும், அவரிடம் கேட்க வேண்டும், “தேவனே, தயவு செய்து எனக்கு உதவும். என்னை உறுதியாக நிலைநிறுத்தும். எனக்கு விசுவாசத்தைத் தாரும். சரீரப்படியாகவும் ஆவிக்குரிய படியாகவும் என்னை பலப் படுத்தும். எப்போதும் மாறாத படியாக என்னுடைய விசுவாசத்தை பலப் படுத்தும். உலகத்தைப் பின்பற்றும் விருப்பங்களை என் இருதயத்தில் இருந்து துண்டித்துப் போடும். என்னுடைய அனைத்து அருவெறுப்பான விருப்பங்களையும் அகற்றும்.” நீதிமான்களாகிய நாம் தூப பீடத்திற்கு அருகில் வந்து, அதற்கு முன்னதாக முழங்கால் படியிட்டு, இப்படியாக அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார், இதனால் நாம் எல்லா காரியங்களிலும் அவருடைய கிருபையைக் கண்டு சரீரப் படியாகவும் ஆவிக்குரிய படியாகவும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவோம். இதனால் தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒவ்வொரு நீதியின் பரிசுத்தவானும் தொடர்ந்தும் தூப பீடத்திற்கு அருகிலே ஜெபம் நிறைந்த வாழ்வை வாழ்வது முக்கியமானதாக இருக்கிறது.
நீதிமான்களாகிய நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டு மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தாலும் கூட, நம்முடைய அன்றாட வாழ்விலே தன்னுடைய கிருபையை அருளிச் செய்யும் படியாக கர்த்தரிடம் நாம் ஜெபிப்பது நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு காரணம் நீதிமான்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்தும் கர்த்தருடைய கிருபையினால் தரிப்பிக்கப் படவில்லை என்றால், நாம் நடக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிற குறுகலான பாதையில் நம்மால் நடக்க முடியாது. நீதிமான்கள் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது மட்டுமே அவர் அவர்களுக்கு மென்மேலும் கிருபையை அருளிச் செய்கிறார். கர்த்தருடைய சபையில் நாம் வாசம்செய்து அவருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியும் போது மட்டுமே இது நமக்கு சாத்தியமாகும். வேறு வகையாகக் கூறினால், நீதிமான்கள் கர்த்தருடைய சபையிலே ஐக்கியமாகி நல்ல செயல்களைச் செய்யும் போது அவருடைய கிருபையை தரித்துக் கொள்ளுகிறார்கள். மேலே கூறப் பட்டுள்ளதைப் போல, தலைமை ஆசாரியன் வருடத்திற்கு ஒரு முறை பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தத்தை தூப பீடத்திற்கு மேல் இருக்கும் கொம்பின் மீது ஊற்றினான். நீதிமான்களாகிய நாம் கர்த்தருக்கு முன்னதாக வரும் போது, நாம் நம்முடைய விசுவாசத்தை அறிக்கைச் செய்து கீழ்வருமாறு அவரிடம் கூற வேண்டும் என்று அது தெரிவிக்கிறது, “தேவனே, நீர் என் இரட்சகர். நீர் உம்முடைய தெய்வீக மகிமையை விட்டு விட்டு மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்தீர்; ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு என்னுடைய எல்லாப் பாவங்களையும் சுமந்தீர்; என்னுடைய இடத்தில் இருந்து நீர் உம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தினீர், என்னை இரட்சிக்கவே இவற்றைச் செய்தீர்.” கர்த்தர் நம்முடைய சொந்த கர்த்தர் என்றும் இரட்சகர் என்றும் இத்தகைய மாறாத விசுவாசம் நம்மிடம் இருக்கும் போதே நம்மால் அவருடைய அளவில்லாத கிருபையை தரித்துக் கொள்ள முடியும். நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் கூட, இயேசு கிறிஸ்து இன்னமும் நம்முடைய கர்த்தராகவும் நம்முடைய இரட்சகராகவுமே இருக்கிறார். நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் நம் எல்லாத் தண்டனைகளில் இருந்தும் நம்மை இரட்சித்த கர்த்தரும் அவரேயாகும். இந்த மாறாத விசுவாசத்துடனே நாம் கர்த்தரிடம் ஜெபிக்கும்போது மட்டுமே நாம் கர்த்தருடைய கிருபையை அணிந்து கொள்ளுகிறோம்.
நம்முடைய ஒவ்வொரு ஜெபத்திலும் மீண்டுமாக நம் இரட்சிப்பை உறுதி செய்ய முடியும்
நம்முடைய ஜெபத்தின் மூலமாகத் தான் நம்மால் மீண்டும் ஒருமுறை கர்த்தர் நம்முடைய கர்த்தர் என்று உறுதி படுத்த முடியும். இந்த விசுவாசம் தான் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நமக்கு எடுத்து வருகிறது. வேறு வகையாகக் கூறினால், நாம் கர்த்தருடைய கிருபாசனத்திற்கு முன்னதாக முழங்கால் படியிட வேண்டும் ஏனெனில் கர்த்தர் நிச்சயமாக நம்மை ஆசீர்வதிப்பார் என்று முழுமையாக உணர்ந்திருக்கிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்முடைய விசுவாசம், நாம் கர்த்தரிடம் எப்போது ஜெபித்தாலும் ஒவ்வொரு ஜெபத்திற்கும் கர்த்தர் நிச்சயமாக பதில் அளிப்பார் என்ற உறுதியை நமக்கு அளித்திருக்கிறது. கர்த்தர் ஒவ்வொரு நீதிமானின் ஜெபத்தையும் கேட்டு அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறார். ஆகவே, நாம் கர்த்தரிடம் ஜெபிக்கும் போதெல்லாம், முதலாவதாக அவருடைய கிருபையை கீழ்வருமாறு நாம் தியானம் செய்ய வேண்டும்: “தேவனே, நான் உம்முடைய நீதியை விசுவாசிக்கிறேன். என்னுடைய வாழ்வு குறைபாடுகள் நிறைந்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். உம்முடைய சித்தத்தின் படியாக வாழ நான் விரும்பினாலும் கூட, என்னிடம் அநேக குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் தேவனே, நீர் இந்த பூமிக்கு மனித மாமிசத்திலே வந்து, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக என்னுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, என்னுடைய இடத்தில் இருந்து மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் பட்டு, இதன் மூலமாக என்னுடைய இரட்சகராக மாறினீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீர் என்னுடைய மேசியாவாகவும் என் இரட்சிப்பின் கர்த்தராகவும் இருக்கிறீர். ஆகவே நீர் உம்முடைய கிருபையை எனக்குத் தருவீர் என்று என் முழு இருதயத்தாலும் விசுவாசிக்கிறேன், ஏனெனில் நீர் என்னுடைய தேவனாக இருக்கிறீர்.”
இதனைப் போல, தன்னுடைய கிருபையை நமக்கு அருளும் படியாக கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும் போதெல்லாம், முதலாவதாக நாம் இந்த கர்த்தருடைய கிருபையை தியானம் செய்து நம்முடைய எல்லா நம்பிக்கையையும் அதில் வைக்க வேண்டும். அப்போது நம்முடைய எல்லாத் தேவைகளையும் கர்த்தரிடம் கேட்கக் கூடிய தைரியம் நமக்கு கிடைக்கும், அப்போது அவர் நம்மிடம் கூறுவார், “ஆமாம், உண்மையில் நீ என்னுடைய சொந்தப் பிள்ளை. உன்னுடைய விசுவாசம் மாறாததாக இருப்பதினால், நான் உண்மையாகவே உன்னுடைய கர்த்தராக இருக்கிறேன் நீ என்னுடைய சொந்தப் பிள்ளைகளில் ஒருவன். ஆகவே நான் உன் ஜெபத்திற்கு பதில் அளித்து உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பேன். நான் உன்னை கிருபாசனத்திலே சந்திப்பேன். என் மீது நீ வைத்திருக்கும் விசுவாசம் மாறாத ஒன்று என்பதை உன் ஜெபத்திலிருந்து என்னால் காண முடிகிறது, நீ என் மீது மட்டுமே எல்லா விசுவாசத்தையும் வைத்திருக்கிறாய், நான் உன்னுடைய கர்த்தர் என்பதை நீ முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறாய். ஆகவே நான் உன்னுடைய கர்த்தராக இருக்கிறேன் என்பதை இந்த உலகத்தின் அனைத்து மக்களும் அறியும் படியாக உன் ஜெபத்திற்கு நான் பதில் அளிப்பேன்.
இதனைப் போல, நம் தேவனுடைய இரட்சிப்பின் சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது தான் கர்த்தர் நம்மைத் தன் கிருபையினால் தரிப்பித்து தன்னுடைய ஆசீர்வாதங்களை நம்மீது பொழிகிறார். நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம் என்பது ஒரு கதையின் முடிவு அல்ல; அதற்கு மாறாக, நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையானது உண்மையானால், கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் தொடங்கி விட்டன என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆகவே கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நாம் அன்றாடம் அவருடைய கிருபையைத் தரித்துக் கொள்ளுகிறோம். அப்போது மட்டுமே நம்மால் தெய்வீக வாழ்வை வாழ முடியும். இதனால் தான் நம்முடைய மனதிற்கு கவலையளிக்கும் காரியத்தைக் குறித்து நாம் கர்த்தரிடம் ஜெபிக்கிறோம், நாம் கூறுகிறோம், “தேவனே, தயவு செய்து எங்களுக்கு உதவும். உம்முடைய ஆலயத்திற்கு தயவு செய்து உதவும். இப்போது உம்முடைய ஊழியத்தைச் செய்வதற்கு உம்முடைய ஆலயத்திற்கு உம் உதவி மிகவும் தேவை.” உலகப் படியான காரியங்களாக இருந்தாலும் கூட, நம்முடைய மனங்களிலே எத்தகைய கவலைகளோ அல்லது ஜெப குறிப்புகளோ வந்தாலும் கூட, நாம் தூப பீடத்திற்கு முன்னதாக வந்து விசுவாசத்தினால் கிருபாசனத்திற்கு முன்னதாக நாம் வந்து ஜெபிக்க வேண்டும். அப்போது நாம் தேவன் நம்மைத் தன் கிருபையினால் அனைத்து காரியங்களிலும் தரிப்பிப்பதை நம்மால் காண முடியும்.
தூப பீடமே நாம் கர்த்தருடைய கிருபையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு இடம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். கர்த்தருடைய கிருபையை அணிந்து கொள்ளுவதைத் தவிர வேறு காரியங்களுக்காகவும் பரிசுத்தவான்களாகிய நாம் ஜெபிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவே நாம் அவரிடம் ஜெபிக்கிறோம். இப்போது நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம், கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தையை விசுவாசித்து நம் மீதியிருக்கும் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்து அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக் கொள்ள விரும்பினால் இடைவிடாது நாம் கர்த்தரிடம் ஜெபிப்பது நமக்கு முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதனைப் போல, கர்த்தருடைய கிருபையை நாம் தரித்துக் கொள்ள தூப பீடம் அங்கே இருக்கிறது.
கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும் போது நாம் சந்திக்கும் மிகப் பெரியத் தடை பாவமாக இருக்கிறது. குறையில்லாத வாழ்வை வாழக் கூடிய யாருமே இந்த உலகத்திலே இல்லை. ஆகவே, நாம் கர்த்தரிடம் வந்து அவரிடம் ஜெபிக்க முயற்சி செய்யும் போது, நம்முடைய தயக்கத்திற்கான முதல் காரணம் நம் பாவங்களே. இதனால் தான் இரட்சிப்பின் சத்தியத்தை மீண்டும் மீண்டும் தியானம் செய்து நம் தேவன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்ற விசுவாசத்தை புதிதாக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்த பூமிக்கு நம் இரட்சகராக வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து, இந்த எல்லாப் பாவங்களுக்காகவும் தண்டிக்கப் பட்டார் என்று எவ்வித மாற்றமும் இல்லாமல் விசுவாசிக்க வேண்டும்; நம்முடைய கர்த்தராகிய இரட்சகருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும், ஏனெனில் நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப் பட்டு விட்டோம். இந்த விசுவாசம் நம்மிடம் இருக்கும் போது மட்டுமே நம்மால் கர்த்தருடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் கேட்க முடியும். அப்போது மட்டுமே நம்மை ஆசீர்வதிக்கும் படியாக கர்த்தரிடம் நம்மால் ஜெபிக்க முடியும். இந்த போதனையை நமக்கு போதிக்கவும், தேவனுடைய இரட்சிப்பின் செயலை நமக்கு நினைவு படுத்தவும், வருடத்திற்கு ஒருமுறை தூப பீடத்தின் கொம்பின் மீது பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தம் ஊற்றப் பட்டது.
தன்னுடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட நிச்சயமுள்ள ஒருவனால் தான் கர்த்தரிடம் தைரியமாக ஜெபிக்க முடியும்
கர்த்தரிடம் நாம் ஜெபிக்கும் போது, எவ்வித தயக்கமும் இல்லாமல் நம்முடைய எல்லாத் தேவைகளையும் அவரிடம் கேட்க முடியும், அவரை நம் பிதா என்றும் இரட்சகர் என்றும் நம்மால் அழைக்க முடியும். கர்த்தர் நம்முடைய பிதாவாகவும், நம் தேவனாகவும், நம் இரட்சகராகவும் இருப்பதினால் அவரை நம்மால் இப்படியாக அழைக்க முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தரை வெவ்வேறு தலைப்புகளில் அழைத்து அவரிடம் ஜெபிக்க நாம் தயங்க வேண்டியதில்லை ஏனெனில் அவர் நம்மைப் படைத்தவராக மட்டுமே இல்லாது நம் இரட்சகராகவும் இருக்கிறார்.
நாம் அனைவரும் கீழ்வருமாறு தேவனிடம் ஜெபிக்க வேண்டும்: “தேவனே, என்னை என்னுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தமைக்காக உமக்கு நன்றி. உம்முடைய ஆசீர்வாதங்களும் உம் உதவியும் எனக்கு உண்மையாகவே தேவைப் படுகிறது. ஆகவே என் தேவனே எனக்கு உதவி என்னுடைய வழியின் ஒவ்வொரு அடியையும் பாதுகாத்தருளும். நான் சில காரியங்களை நல்லபடியாக செய்திருக்கிறேன், ஆனால் நான் அநேக தவறுகளையும் செய்திருக்கிறேன், என்னிடமும் இன்னமும் சில கவலைகள் இருக்கின்றன. தேவனே, அவை அனைத்தையும் நான் உம்மிடம் ஒப்புவிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் வழிகளில் நடத்தும் படியாக உம்மிடம் வேண்டுகிறேன். இழந்து போன ஆத்துமாக்களிடம் என்னை வழிநடத்தும் இதனால் நான் அவர்களுக்கு உம்முடைய நற்செய்தியை பிரசங்கித்து உமக்கு அநேக ஆவிக்குரிய கனியைக் கொடுப்பேன். அவர்களுடைய இருதயங்களைத் திறந்து அவர்களுடைய இருதயங்களை பன்படுத்தும் இதனால் அவர்கள் மீது நான் நற்செய்தியின் விதையை விதைக்க முடியும். உம்முடைய ஆலயத்தை உறுதியாக நிலைநிறுத்தி உம் ஊழியர்களை கவனிக்கும் படியும் உம்மிடம் வேண்டுகிறேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உண்மையுடனே பிரசங்கிக்கப் படும் படியாக அவர்கள் அனைவரையும் நீர் ஆசீர்வதியும். இந்த நற்செய்தியானது பூமியின் எல்லா இடங்களுக்கும் பரவட்டும். உம்முடைய ஊழியர்களுக்கு உம்முடைய பாதுகாப்பு தேவை, ஆகவே அவர்களை உம்முடைய பார்வையில் வைத்திருக்கும் படியாக உம்மிடம் நான் வேண்டுகிறேன். தேவனே என்னை ஆசீர்வதியும், என் குடும்பத்தாரை ஆசீர்வதியும். என்னுடைய குழந்தைகளை ஆசீர்வதியும். பரிசுத்தவான்களையும் கூட ஆசீர்வதியும். கிறிஸ்துவுக்குள்ளான என் உடன் சகோதர சகோதரிகளையும் ஆசீர்வதியும். உம்முடைய ஆசீர்வாதங்கள் அளவில்லாமல் இருக்கட்டும் இதனால் உம்முடைய ஆலயத்திற்கு வெளியில் நிற்கின்ற அவிசுவாசிகளும் கூட இரட்சிக்கப் படுவார்கள்.” இப்படியாக நாம் நம்முடைய எல்லா நம்பிக்கைகளையும் கனவுகளையும் கர்த்தரிடம் ஒப்படைக்கும் போது, அவர் நிச்சயமாக நம் ஜெபங்களுக்கு பதில் அளித்து நம்மை ஆசீர்வதிப்பார். இப்படியாகத் தான் நம் அனைவராலும் ஜெபத்தின் மூலமாக கர்த்தருடைய அளவில்லாத ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்படியாகத் தான் நம்மால் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டுமாக கிருபையை அடைய முடியும்.
கர்த்தர் தன்னுடைய நீதியை விசுவாசிக்கின்றவர்களின் கர்த்தராக இருக்கிறார். அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிலை மாறாது விசுவாசிப்பவர்களின் கர்த்தராக இருக்கிறார். ஆகவே கர்த்தர் தன்னுடைய கிருபாசனத்தை தைரியமாக அனுகும் தன் எல்லா விசுவாசிகளுக்கும் தன் கிருபையை அளிக்கத் தவறுவதேயில்லை, அவர்கள் தம் அலைமாறாத விசுவாசத்துடனே அவருடைய கிருபையையும் ஆசீர்வாதங்களையும் கீழ்வருமாறு கேட்கிறார்கள், “தேவனே, நீ என்னுடைய கர்த்தர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நீர் என்னுடைய இரட்சகர் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனே, எனக்கு உதவி செய்யும்!”
என்னுடைய உடன் விசுவாசிகளே, நாம் உலகத்தின் பாவங்களில் இருந்து பெற்றுக் கொண்ட இரட்சிப்பானது இந்த கதையின் முடிவல்ல என்பதை நாம் அனைவரும் அறிந்து கொண்டு, இடைவிடாது தேவனுக்கு ஜெபிக்க வேண்டும் என்பதை போதுமான அளவு என்னால் வலியுறுத்த முடியாது. உங்களுடைய ஜெபம் தேவனால் பதில் அளிக்கப் படாமலோ அல்லது உங்களுக்கு எப்படி ஜெபிப்பது என்று தெரியாமலோ இருந்தால், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தை படிப்படியாக ஆராய்ந்து பார்த்து தேவன் உண்மையாகவே உங்களுக்கு யார் என்பதைக் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும். தேவனுடனான உங்கள் உறவைக் குறித்த உங்களின் புரிந்து கொள்ளுதல் முற்றிலும் இன்றியமையாதது. வேறு வார்த்தைகளில் கூறினால், உங்களுடைய விசுவாசம் சரியான இடத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டும், தேவனே வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் என்பதை முழு இருதயத்துடனும் அறிந்து விசுவாசிக்க வேண்டும்; உங்களை இரட்சிக்கவே அவர் மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்தார்; அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உங்கள் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார்; அவர் உங்களுடைய இடத்தில் இருந்து சிலுவையில் அறையப் பட்டார்; அவர் மூன்று நாட்களிலே மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார்; அவர் இன்னமும் உங்களுடைய உயிரோடிருக்கும் இரட்சகராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இப்போது நீங்கள் இரட்சிக்கப் பட்டீர்கள், தேவன் உங்களுடைய இரட்சகராக மாறினார் நீங்கள் அவருடைய மந்தை. ஆகவே நீங்கள் தேவனிடம் எப்போது எத்தகைய உதவியைக் கேட்டாலும் தேவன் அவற்றிற்கு பதில் அளிப்பாரா என்று சிறிதளவும் சந்தேகிக்க வேண்டாம்.
நாம் இரவும் பகலும் ஜெபிக்க வேண்டும்
விசுவாசத்தினால் தேவனைத் தம் இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களாகிய நாம், அவருடைய அளவில்லாத கிருபையையும் ஆசீர்வாதங்களையும் இந்த உலகத்திலே நாம் வாழுகின்ற அனைத்து காலங்களிலும் பெற்றுக் கொள்ள இரவும் பகலுமாக கர்த்தரிடம் விசுவாசத்துடனே ஜெபிக்கிறோம். அதற்கு மாறாக, எந்த காரணத்தை முன்னிட்டும் முழுமையாக ஜெபிக்காதவர்களாகிய நம்மைப் பொறுத்த வரையில், அது நாம் தேவனிடம் ஜெபிக்கா விட்டாலும் கூட அவர் நமக்கு தேவையானதை எல்லாம் கொடுப்பார் என்று நாம் பெருமையாக நினைத்தாலோ, அல்லது கர்த்தருடைய வார்த்தையின் மீது அவர்களுக்கு விசுவாசம் இல்லாவிட்டாலோ, கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில் தூப பீடமானது அவர்களுடைய விசுவாசத்தில் இல்லாதிருக்கிறது. கர்த்தர் நீங்கள் உங்களுடைய கர்த்தராக விசுவாசிப்பதினாலே நீங்கள் ஜெபிக்கா விட்டாலும் கூட அவர் நீங்கள் கேட்கும் அனைத்தையும் கொடுப்பார் என்று நீங்கள் எண்ணினால், உங்களுடைய விசுவாசம் தவறான விசுவாசமாக இருக்கிறது. இது உண்மையானதாக இருந்தால், பரிசுத்த ஸ்தலத்திலே தூப பீடம் இருந்திருக்க வேண்டியதில்லை. நம்மை சலிப்படையச் செய்ய கர்த்தர் தூப பீடத்தை உருவாக்கினார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை, அப்படி இல்லை! தலைமை ஆசாரியனாகிய ஆரோன் தூப பீடத்திலே ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் நான்கு வகையான தூபங்களை ஏற்றினான். அங்கே எரிகின்ற தூபவர்க்கத்தின் நறுமனத்தினால் அந்த மகா பரிசுத்த ஸ்தலம் முழுமையாக நிரம்பியது. இது உண்மையாகவே நாம் கர்த்தருக்கு முன்னதாக தைரியமாக வருவதற்கு நம்மை ஏதுவாக்குகிறது. இந்த தூபவர்க்கம் கர்த்தருக்கு முன்னதாக நம்முடைய குறைபாடுகளை மூடுவதற்கும் உதவி செய்கிறது. உதாரணமாக, தலைமை ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வருடத்திற்கு ஒரு முறை பிரவேசிக்கும் முன்னர் அதனை நறுமனத்தினால் நிரப்ப வேண்டியிருந்தது, உடன் படிக்கையின் பேழையின் மீதி மூடியாக இருந்த கிருபாசனத்தை அந்த மேகம் மூட வேண்டியிருந்தது, அல்லது அவன் மரிக்க வேண்டி இருக்கும் (லேவியராகமம் 16:12-13).
என்னுடைய உடன் விசுவாசிகளே, நாம் கர்த்தரை அனுகும் போதெல்லாம், நாம் ஏற்கனவே பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம் என்ற முழுமையான உணர்த்துதலும், கர்த்தர் இப்போது நம்முடைய கர்த்தராக இருக்கிறார் என்றும் நாம் அவரிடம் ஜெபிக்கும் போதெல்லால் அவர் தன் கிருபையை நமக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த அலைபாயாத விசுவாசத்தின் மூலமாக கர்த்தருடைய சந்நிதானத்திற்குள் வந்து அவருடைய கிருபாசனத்திற்கு முன்னதாக தைரியமாக நின்றால், நாம் எந்த தண்டனையையும் அனுபவிக்க மாட்டோம் என்பதுடனே, நாம் கர்த்தருடைய கிருபையையும் அணிந்து கொள்ளுவோம். கர்த்தர் கிருபையின் கர்த்தராக இருக்கிறார் அவருடைய அளவில்லாத கிருபை நம் அனைவருக்கும் அருளப் பட்டது.
தூப பீடத்தில் இணைக்கப் பட்டிருந்த வளையங்கள் பொன்னினால் உருவாக்கப் பட்டிருந்தது
கர்த்தருடைய ஸ்தலத்தில் இருந்த தூப பீடமானது செவ்வக வடிவமான பெட்டியாகும் (அது ஆறு பக்கங்களை உடைய ஒரு அமைப்பு) அதன் நீளத்திலும் அகலத்திலும் 50 செ.மீ. உம் அதன் உயரத்திலே 100 செ.மீ. உம் இருந்தது, இந்த பீடத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஜோடி பொன் வளையங்கள் பொறுத்தப் பட்டிருந்தன. இந்த பொன் வளையங்களின் ஊடாக இரண்டு கம்புகள் நுழைக்கப் பட்டிருந்தன. இந்த கம்புகளும் கூட சீத்தீம் மரத்தினால் உருவாக்கப் பட்டு பொன்னினால் மூடப் பட்டிருந்தது. தூப பீடத்தின் அளவு ஓரளவுக்கு சிறியதாக இருந்தாலும் கூட, அது இரண்டு மனிதர்களால் தூக்கப் பட வேண்டியிருந்தது. அதன் நீளமும் அகலமும் 50 செ.மீ ஆகவும் அதன் உயரம் 100 செ.மீ உம் இருந்ததினால், அதனை ஒரு மனிதனால் எளிதாக தூக்கிச் செல்ல முடியும், ஆனால் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மற்ற பாத்திரங்களைப் போலவே, இது அனுமதிக்கப் படவில்லை. நீதிமான்களாகிய நாம் கர்த்தரிடம் ஐக்கியமாக ஜெபிக்க வேண்டும் என்று இது கூறுகிறது தேவனாகிய இயேசுவானவர் இப்படி கூறினார், “அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:19).
தூப பீடத்தில் இருந்த இந்த கம்புகளும் கூட மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் நம் ஜெபங்களினால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று நமக்கு காட்டுகின்றன. நம்முடைய விசுவாச ஜெபமும் கூட தேவனுக்கு ஊழியம் செய்வதற்கான ஒரு வழியாகும். இப்போது நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் மறுபடியும் பிறந்து விட்ட நிலையில், நம்மால் கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் வெவ்வேறு வழிகளில் ஊழியம் செய்ய முடியும், அது ஜெபிப்பதாகவும் இருக்கலாம் அல்லது வேலை செய்வதாகவும் இருக்கலாம். நாம் கர்த்தரிடம் ஜெபிக்கும் போது, நாம் நமக்காக மட்டுமே ஜெபிப்பதில்லை, ஆனால் நாம் கர்த்தருடைய வேலைக்காகவும், அவருடைய சபைக்காகவும், அதன் உறுப்பினர்களுக்காகவும், குறிப்பாக நற்செய்தியை பரப்புவதற்காகவும் ஜெபிக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறினால், நம்முடைய ஜெபங்கள் நாம் கர்த்தருடைய கிருபாசனத்திற்கு முன்னதாக நின்று அவருடைய கிருபையை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்காமல், கர்த்தருடைய நீதிக்கான ஊழியத்தைச் செய்யும் படியாகவும் நம்மை ஏதுவாக்குகிறது. ஐக்கியமாக நாம் ஜெபிப்பதின் மூலமாகத் தான் நம்மால் கர்த்தருடைய ராஜ்யத்திற்கு ஊழியம் செய்ய முடியும். நாம் நம்முடைய உடன் சகோதரர்களுக்காகவும் சகோதரிகளுக்காகவும், சபைக்காகவும், இழந்து போன ஆத்துமாக்களுக்காகவும், கர்த்தருடைய ராஜ்யம் விரிவு படுத்தப் பட வேண்டும் என்பதற்காகவும், கர்த்தருடைய நீதிக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் நாம் ஜெபிக்கும் போது, நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். இதனால் தான் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள தூப பீடத்திலே கர்த்தருக்கு ஊழியம் செய்கிற ஆசாரியர்களின் கடமையை நாம் அறிந்து கொள்ளுவது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விசுவாசத்தினால் நாம் கர்த்தரிடம் சிரத்தையுடன் ஜெபிக்க வேண்டும். கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் ஊழியம் செய்வதற்காக கர்த்தருடைய வார்த்தையை நாம் பிரசங்கிக்கிறோம், இதனால் கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் ஊழியம் செய்ய வேண்டும் என்று அவரிடம் நாம் ஜெபிக்கிறோம். முடிந்த அனைத்து வழிகளிலும் கர்த்தருக்கு ஊழியம் செய்கின்ற கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.
தெய்வீகமான கிறிஸ்தவ வாழ்வை நீங்கள் வாழ்ந்து கர்த்தருடைய சித்தத்திற்கு ஊழியம் செய்ய வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான காரியம் கர்த்தர் மீதும் அவருடைய நீதியின் மீதும் விசுவாசம் வைப்பது மட்டுமே. விசுவாசத்தால் மட்டுமே உங்களால் கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கித்து, அவரிடம் ஜெபித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்பி, கர்த்தருக்கும் அவருடைய நீதிக்கும் ஊழியம் செய்ய முடியும். கர்த்தருக்கு ஊழியம் செய்ய நாம் செய்கின்ற அனைத்தும் விசுவாசத்தினாலேயே செய்யப் படுகின்றன. கர்த்தருடைய சித்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் உங்களால் தெய்வீகமான விசுவாச வாழ்வை வாழ முடியாது. எப்போதெல்லாம் பரிசுத்தவான்கள் தம் ஆலயங்களிலே ஒன்று கூடுகிறார்களோ, நம்முடைய சகோதரர்களும் நம் சகோதரிகளும் நம் ஓய்வுநாள் பாடசாலை சிறுவர்களும் கூடும் போது, முதலாவதாக அவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். கர்த்தருடைய வார்த்தை என்ற அப்பத்தை பகிர்ந்து கொள்ள நாம் ஒன்று கூட வேண்டும். நாம் கர்த்தருடைய நீதிக்கும் ஊழியம் செய்ய வேண்டும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் ஒன்றாக சேர்ந்து கீழ்வருமாறு ஜெபிக்கும் போது அது கர்த்தருக்கான சுகந்தமாக அவரிடம் எழுந்து செல்லுகிறது, “தேவனே, எங்களை நிலை நிறுத்தி உம்முடைய ஆலயத்தையும், உம்முடைய ஊழியர்களையும், உலகம் முழுவதுமுள்ள ஆலயங்களிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களையும் ஆசீர்வதியும். அவர்களுடைய ஆத்துமாக்களையும் இருதயங்களையும் ஆசீர்வதியும், அவர்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்ட விசுவாசத்தைத் தாரும். இன்னமும் இழந்து போனதாக இருக்கும் அனைத்து ஆத்துமாக்களையும் இரட்சியும்.” இந்த சுகந்தமான ஜெபத்தை அனுபவிக்கும் கர்த்தர் நமக்கு பதில் அளித்து நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்முடைய ஜெபங்களில் நாம் கேட்கும் அனைத்திற்கும் அவர் பதில் அளிக்கிறார். ஜெபத்தினால் கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதின் பொருள் இதுவேயாகும், உங்களுடைய சொந்த தேவைகளுக்காக மட்டுமே ஜெபிக்காமல் கர்த்தருடைய ஊழியத்தை உங்கள் ஜெபங்களில் நினைவு கூறும் படியாக நான் உங்களுக்கு புத்திமதி கூறுகிறேன்.
ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவானும் ஜெபிக்க வேண்டும் என்றிருந்தாலும், எந்த காரணத்தைப் பற்றியாவது உங்களால் அதிக நேரத்தை செலவிட முடிந்தால், அது நீங்கள் களைப்பாக இருப்பதாலோ அல்லது நோயாக இருப்பதாலோ அமைந்தால், நீங்கள் கர்த்தருடைய சபைக்காகவும், அவருடைய ஊழியர்களுக்காகவும், அவருடைய பரிசுத்தவான்களுக்காகவும் இன்னமும் அதிகமாக ஜெபிக்க வேண்டும். இது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமாகும். பணம் இல்லாததினால் நம்மால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியவில்லை என்பது சரியல்ல. எந்தப் பணமும் இல்லாவிட்டாலும் கூட உங்களால் தேவனுக்கு நன்றாக ஊழியம் செய்ய முடியும். உங்கள் விசுவாசத்தால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நீங்கள் விரும்பும் அளவிற்கு ஊழியம் செய்ய முடியும். இரண்டு மனிதர்கள் தம்முடைய தோள்களிலே வைத்து சுமந்து செல்லும் படியாக தூப பீடத்திலே இரண்டு வளையங்களின் ஊடாக இரண்டு கம்புகள் இணைக்கப் பட்டிருப்பதைப் போல, ஏழ்மையாக இருப்பவர்களாலும் கூட கர்த்தருடைய சபையுடனே ஐக்கியமாக இருந்து தம் விசுவாச ஜெபங்களின் மூலமாக தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும். ஐசுவரியவான்களால் தம் பொருள் உடமைகளை வைத்து தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும். கீழ்வருமாறு கூற வேண்டாம், “நான் என்னுடைய வேலையில் அதிக பளுவுடன் இருப்பதால் தேவனுக்கு ஊழியம் செய்யும் படியாக என்னால் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. என்னிடம் எத்தகைய நேரமும் இல்லை.” ஒவ்வொரு நீதியின் பரிசுத்தவானாலும் தேவனுக்கும் அவருடைய சித்தத்திற்கும் விசுவாசத்தினால் ஊழியம் செய்ய முடியும், அது அவர்களுடைய காணிக்கைகளாகவோ, ஜெபங்களாகவோ, அல்லது நற்செய்தி பிரசங்கங்களாகவோ இருக்கலாம். தேவனுடைய சித்தத்திற்கு ஊழியம் செய்யும் படியான விருப்பம் நம்மிடம் இருந்தால் நம்மால் அப்படி நிச்சயமாக செய்ய முடியும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் அதனை விரும்பினால் மட்டுமே கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்
தேவன் நம் மேய்ப்பராக இருக்கிறார். தேவன் உடனான நம் உறவு மிகவும் நெருக்கமாக இருப்பதினால் அவரிடம் இருந்து யாராலும் எதனாலும் நம்மை பிரிக்க முடியாது.
இப்போது நாம் மத்தேயு 26:26-28 ஐப் பார்ப்போம்: “அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.”
“இயேசுவானவர்” என்ற பெயரின் பொருள் இரட்சகர் அல்லது மேசியா என்பதாகும், அவர் நம்முடைய கர்த்தராகவும் எஜமானராகவும் இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்ட அவரை நம் தேவன் என்றும் நாம் அழைக்கிறோம். நம் அனைவரையும் விடுவிக்க நம் தேவனாகிய இயேசுவானவர் இந்த பூமிக்கு நம்முடைய சொந்த இரட்சகராக வந்தார். கர்த்தர் தாமே மனித சரீரத்தில் அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்தார். அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன்னதாக, நம் தேவன் கடைசி ராப்போஜனத்தை ஆயத்தம் செய்து, தன்னுடைய சீடர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு அப்பத்தையும் ரசத்தையும் கொடுத்து, கீழ்வருமாறு அவர்களிடம் கூறினார், “இந்த அப்பத்தை எடுத்து புசியுங்கள்; இது என்னுடைய சரீரமாகும். இந்த பாத்திரத்தை எடுத்து பானம் பண்ணுங்கள். இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாகும், இது அநேகர் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் படியாக சிந்தப் படுகிறது.” கர்த்தர் இந்த பூமிக்கு நம்முடைய சொந்த இரட்சகராக வந்து நேரடியாக நீர் மற்றும் ஆவியினால், பழைய ஏற்பாட்டிலே தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்ட படியே வாக்குத்தத்த வார்த்தையை நிறைவேற்றி நம்மை இரட்சித்தார். இப்படியாக நம்முடைய இரட்சகராக இந்த பூமிக்குவந்த நம் தேவன் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் யோர்தான் நதியிலே யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக தன்மீது ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் தன்னுடைய சரீரத்தை சிலுவையிலே ஒப்புக் கொடுத்து, இதன் மூலமாக இந்த உலகத்திலுள்ள அனைவருடைய தண்டனைகளையும் சுமந்தார். அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து நமக்கு புதுவாழ்வைக் கொடுத்தார்.
பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தம் தூப பீடத்தின் மீது ஊற்றப் பட்டது என்பதின் பொருள் இயேசு கிறிஸ்துவின் சரீரப் படியான மரணத்தைக் குறிக்கிறது. அதே போல, இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்த பிறகு, தன்னை பலி செலுத்தி நமக்காக தன் சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தினார். இந்த பலிகாணிக்கையினால் நாம் இரட்சிக்கப் பட்டோம். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தினாலே நாம் நம்முடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம். குருட்டுத் தனமான விசுவாசத்தினாலே நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் படவில்லை, ஆனால் கர்த்தராகிய இயேசுவானவர், இந்த பூமிக்கு நம்முடைய இரட்சகராக வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் சொந்த சரீரத்திலே சுமந்து, நம் அனைவருக்காகவும் தன் விலையேறப் பட்ட இரத்தத்தைச் சிந்தினார்.
இப்படியாகத் தான் கர்த்தர் நம்முடைய இரட்சிப்பை செய்து முடித்தார், இது ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே கூறப் பட்டிருக்கிறது. இங்கே இரத்தாம்பர நூலானது மனிதனாக மாறிய ராஜாதி ராஜாவைக் குறிப்பிடுகிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு நம் இடத்தில் இருந்து தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக அவற்றிற்கான கிரையத்தைச் செலுத்தினார் என்று இது நமக்கு போதிக்கிறது. இப்படியாகத் தான் தேவன் நம்முடைய சொந்த இரட்சகராக மாறினார். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசமே நாம் பரிசுத்த நற்கருனையில் பங்கேற்கும் படியாக நம்மை ஏதுவாக்குகிறது. இயேசுவானவர் கடைசி ராப்போஜனத்தை ஆயத்தம் செய்த போது, அவர் வெறும் அப்பத்தையும் ரசத்தையும் மட்டுமே ஆயத்தம் செய்யவில்லை; அவர் அவைகள் இரண்டையும் தன் சீடர்களிடம் குடிக்கும் படியாக கூறினார். இங்கே அப்பம் என்பது இயேசுவானவரின் சரீரத்தைக் குறிப்பிடுகிறது, பாவிகளாகிய நம்மை இரட்சிக்க கர்த்தர் தாமே மனிதனாக மாறினார் என்று அது நமக்கு கூறுகிறது. யோர்தான் நதியிலே ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக இயேசுவானவர் நம் எல்லாப் பாவங்களையும் தன் சொந்த சரீரத்திலே ஏற்றுக் கொண்டார் என்று அப்பம் குறிப்பிடுகிறது. மறு புறம் பார்க்கையில், ரசமானது, இயேசுவானவர் நம்முடைய இடத்தில் இருந்து சிலுவையில் சிந்திய ஜீவன் இரட்சிப்பு ஆகியவற்றிற்கான இரத்தத்தைக் குறிப்பிடுகிறது.
ஆகவே, நாம் பரிசுத்த நற்கருனையில் பங்கேற்கும்போதெல்லாம், கர்த்தர் தாமே நம்மை இரட்சிப்பதற்காக இந்த பூமிக்கு மனித மாமிசத்திலே அவதாரம் எடுத்து வந்தார் என்றும், அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்னுடைய சொந்த சரீரத்திலே ஏற்றுக் கொண்டார் என்றும், அவர் நம்முடைய இடத்தில் இருந்து சிலுவையிலே தண்டிக்கப் பட்டார் என்றும், இதன் மூலமாக அவர் நம்மை இரட்சித்து நம் சொந்த இரட்சகராக மாறினார் என்றும் மாறாத விசுவாசம் வைப்பது நம் அனைவருக்கும் முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆயினும், கவலைத் தரும் விதமாக, அநேக கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து ஏன் இந்த பரிசுத்த நற்கருனையைத் ஏற்படுத்தி தான் திரும்பி வரும் வரை அதனை கடை பிடிக்கும் படியாக நம்மிடம் ஏன் கூறினார் என்றும் அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் உங்களுடைய விசுவாச வாழ்வை எளிதானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இயேசுவானவர் உங்களுடைய இரட்சகர் என்பதில் இன்னமும் நீங்கள் நிச்சயமில்லாதவர்களாக இருந்தால், பரிசுத்த நற்கருனையிலே இயேசுவானவருடைய அப்பத்தையும் ரசத்தையும் எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னர் உங்கள் விசுவாசத்தைக் குறித்து நன்றாக எண்ணிப் பாருங்கள். உணர்ச்சி வசப் படுவதற்கு மாறாக, தேவன் உங்களுடைய தேவனா இல்லையா என்பதை நீங்கள் உங்களுக்கே கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களுக்கும் எனக்குமான கர்த்தர். உங்களுடைய மூதாதையர்களையும் என்னுடைய மூதாதையர்களையும் படைத்தது அவரே. நாம் இந்த பூமியில் பிறப்பதை அவர் அனுமதித்தார். இது கர்த்தர் இயேசுவானவரே ஆகும். கர்த்தராகிய இயேசுவானவர், இந்த பூமிக்கு நம்முடைய சொந்த இரட்சகராக வந்தார். நம்மை இரட்சிப்பதற்காக இந்த பூமிக்கு நம் இரட்சகராக வந்த அவர், தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்திலே ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் நம்முடைய ஒவ்வொரு பாவங்களையும் சிலுவையில் எடுத்துச் சென்று, அதில் ஒன்றை கூட விட்டு விடாமல், சிலுவையில் தண்டனையை ஏற்றுக் கொண்டார் அது சபிக்கப் பட்டவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தது, இதனால் நாம் நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் படுவதில்லை. இப்படியாகத் தான் தேவன் நம்மை நம்முடைய எல்லாத் தண்டனைகளில் இருந்தும் இரட்சித்தார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து ஒரு நொடிப் பொழுது நீங்கள் எண்ணிப் பார்த்தாலும் கூட இரட்சிப்பின் சத்தியத்தைக் குறித்து உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயத்திலே ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய நீர் மற்றும் இரத்தத்தின் மூலமாக என்னை இரட்சித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய இரட்சிப்பிற்காக நான் எதனையுமே செய்யவில்லை. இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்த போது, அவர் பெத்லகேமில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, நான் அங்கே இருக்கவில்லை, நான் எந்த வடிவத்திலும் அங்கே தலையிடவில்லை, என்னை இரட்சிக்கும் படியாக கர்த்தரிடம் கேட்கவும் இல்லை. ஆனால் என்னுடைய விருப்பங்கள் எதுவாக இருந்தாலும் தேவன் இந்த பூமிக்கு மனித மாமிசத்திலே வந்து, என்னை இரட்சித்தார். என்னை இரட்சிக்கவே இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்பதை நாம் முற்றிலுமாக உணர்ந்திருக்கிறேன்.
பிதாவாகிய கர்த்தர் உலகத்தை மிகவும் அதிகமாக நேசித்ததினால் அவர் தன் ஒரே பேறான குமாரரையே கொடுத்தார். ஒவ்வொரு மனிதர்களையும் இரட்சிக்ககர்த்தர் தாமே இந்த பூமிக்கு வந்தார். அவர் உங்களையும் என்னையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்து, உங்களுக்கும் எனக்கும் இரட்சகராக மாறினார் என்பது உண்மையே. நாம் நம்முடைய இரட்சிப்பை அடைய செய்ய வேண்டியதெல்லாம், கர்த்தராக இருக்கும், இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் நமக்காக செய்த இரட்சிப்பின் செயல்களை நம் இருதயங்களுக்குள் ஏற்றுக் கொள்ளுவது மட்டுமேயாகும். தம்முடைய சொந்த பலத்தை முற்றிலுமாக இழந்து போனவர்களும், எந்தப் பயனும் இல்லாததை உணர்ந்து தம்முடைய சொந்த முயற்சிகளை விட்டு விட்டவர்களும், பாவங்களுக்கான மன்னிப்பை முற்றிலுமாக கர்த்தரிடம் ஒப்புக் கொடுத்து விட்டவர்களுமாகிய - இத்தகைய மக்களால் மட்டுமே கர்த்தரிடமிருந்து கிருபையை பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய சிந்தனைகளுக்கு இது புரிந்து கொள்ள முடியாததாக இருந்தாலும், நம் அனைவரையும் விடுவிக்க கர்த்தர் தாமே நம் இரட்சிப்பை முழுமையாக நிறைவேற்றினார். ஆகவே கர்த்தருடைய இரட்சிப்பின் செயலை விசுவாசிப்பதைத் தவிர நாம் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை.
உங்களை கர்த்தருக்கு முற்றிலுமாக ஒப்புக் கொடுங்கள்
உங்களை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பது முற்றிலும் இன்றியமையாத ஒன்றாகும். கர்த்தர் உங்களுக்காக என்ன செய்தார் என்று எண்ணிப் பாருங்கள். கர்த்தர் தாமே ஒரு மனிதராக மாறினார். உங்களையும் என்னையும் இரட்சிக்கவே கர்த்தர் இதனைச் செய்தார். அதற்கு மேலும், கர்த்தராகிய இயேசுவானவர், நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்க அவற்றை தன்மீது ஏற்றுக் கொள்ளுவதற்காக ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார். இயேசுவானவரும் கூட மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் பட்டு, நமக்காக சிலுவையில் தன் விலையேறப் பட்ட இரத்தத்தைச் சிந்தினார். இப்படியாக அவர் நம் இடத்தில் இருந்து தண்டிக்கப் பட்டார், நம்முடைய ஒவ்வொரு பாவங்களுக்கும் கிரையம் செலுத்தினார், நம் தண்டனையில் இருந்து நம்மை விடுதலை செய்தார், நம்முடைய நியாயத் தீர்ப்பிலிருந்து நாம் தப்புவதை சாத்தியமாக்கினார். அதன் பிறகு அவர் உங்களையும் என்னையும் புதிதான நித்திய ஜீவனுக்கு எடுத்து வரும் படியாக மூன்று நாட்களிலே மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார்.
இப்போது அவர், பிதாவாகிய கர்த்தருடைய சிங்காசனத்திற்கு வலது பக்கத்திலே அமர்ந்து நம் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தரும் இரட்சகருமாகிய அவர், தன்னுடைய அனைத்து காரியங்களையும் தனக்குத் தரப் போவது யார் என்றும், தன்னை முழு இருதயத்துடனும் விசுவாசிப்பது யார் என்றும் பார்க்கிறார். இயேசுவானவரை பெற்றுக் கொண்டவர்கள் தம்முடைய அனைத்தையும் கர்த்தருக்கு கொடுத்தவர்களாக இருக்கிறார்கள். தேவன் தம்மை முழுமையாக இரட்சித்ததாக அவர்கள் விசுவாசிக்கிறார்கள். தம்முடைய இரட்சிப்பிற்காக தம்முடைய சொந்தத்திலே செய்ய வேண்டிய எதுவும் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். கர்த்தர் தன்னுடைய அன்பினாலேயே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருந்த இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தின் மூலமாக நம்மை இரட்சித்தார். கர்த்தருக்கு தம்மை முழுமையாக ஒப்படைத்த இத்தகைய மக்கள் அனைவருக்கும், கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் தம்முடைய இருதயங்களில் ஏற்றுக் கொண்டவர்களுக்கும், கர்த்தர் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளாக மாறும் உரிமையைக் கொடுத்தார்.
ஆகவே பரிசுத்த நற்கருனையில் பங்கேற்பதற்கு முன்னதாக இந்த இரட்சிப்பின் சத்தியத்தை தெளிவாக புரிந்து கொள்ளும் படியாக நான் உங்கள் அனைவரிடமும் கேட்கிறேன். இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமானது நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து அவற்றை நிவர்த்தி செய்வதாகும். இயேசுவானவர் அனுபவித்த சரீரப் படியான மரணமானது உங்களையும் என்னையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் காப்பாற்றவேயாகும். இப்படியாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்த இயேசுவானவர், மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் பட்டு, நம் இடத்தில் இருந்து தன் இரத்தத்தைச் சிந்தி, இப்படியாக தண்டிக்கப் பட்டு நம்மை பாவத்திற்கான நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலை செய்து நம்மை நீதிமான்களாக மாற்றினார்.
பரிசுத்த ஸ்தலத்திலே வாசம் செய்து ஜெபிக்கும் நம் அனைவருக்கும், கர்த்தர் தன்னுடைய கிருபையால் தரிப்பிக்கும் படியாக தூப பீடத்தை நமக்குத் தந்தார். இங்கே தான் நம்மால் கர்த்தரிடம் இருந்து கிருபையை காண முடியும். ஆகவே தேவனிடம் உங்களை முற்றிலுமாக ஒப்படைக்கும் படியாக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் அறிவுரை கூறுகிறேன்.
அல்லேலூயா!