(யாத்திராகமம் 26:15-30)
“வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக. ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும். ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது. அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும், வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும். அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடக்கடவாய். இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.”
கர்த்தர் வாசம் செய்த ஆசரிப்புக் கூடாரத்தின் பலகைகள் அனைத்தும் பொன்னினால் மூடப் பட்டிருந்தன. ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பலகையும் நேராக நிற்கும் படியாக, இரண்டு வெள்ளி கழுந்துகளை உருவாக்கும் படி கர்த்தர் மோசேயிடம் கூறினார். வேதாகமத்திலே, பொன் என்பது காலத்தால் மாறாத விசுவாசத்தைக் குறிப்பிடுகிறது. இந்த பொன்னினால் மூடப் பட்ட பலகைகளுக்கு அடியில் வெள்ளி கழுந்துகள் வைக்கப் பட்டன என்பதின் பொருள் நம்முடைய இரட்சிப்பை உறுதி படுத்தும் இரண்டு வரங்களை கர்த்தர் நமக்கு கொடுத்தார் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக நம் இரட்சிப்பை முழுமையாக்கினார் என்று பொருள் படுகிறது.
நாம் கர்த்தருடைய மக்களாக மாறவும் அவருடைய ராஜ்யத்தில் உறுப்பாக மாறவும் நம்மை ஏதுவாக்குகின்ற இந்த தூய்மையான பொன்னைப் போன்ற இந்த விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்ளுவது மிகவும் அவசியமாகும் அது இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிப்பதாக இருக்கிறது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நமக்கு முற்றிலும் அவசியமான விசுவாச வரமாக இருக்கிறது. நாம் அன்றாடம் பாவம் செய்வதையும் நரகம் செல்லுவதையும் நம்மால் தவிர்க்க முடியாது என்பதால், நம்முடைய சொந்த முயற்சியினாலும், பலத்தினாலும், சித்தத்தினாலும் நம் பாவங்களை நம்மால் மறையச் செய்ய முடியாது.
நாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்க வேண்டுமானால், நம்முடைய சொந்த பலத்தை சார்ந்திருப்பதற்கு பதிலாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே நாம் விசுவாசிக்க வேண்டும், அப்போது மட்டுமே நம்மால் நம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட முடியும். தேவன் நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தின் மூலமாக கொடுத்த இரட்சிப்பின் வரத்தினை நன்றியறிதலுடனே விசுவாசிப்பது நமக்கு சரியானதொரு காரியமாக இருக்கிறது. நற்செய்தியின் இந்த இரண்டு காரியங்களையும் உருவாக்கிய இரட்சிப்பின் வரத்தினை நாம் விசுவாசிக்கும் போது, நம்முடைய இந்த விசுவாசத்தைக் காணும் கர்த்தர், நம்மைத் தன்னுடைய முழுமையான மக்களாக மாற்றுவார். ஆகவே, உங்களுடைய இருதயத்திலே இன்னமும் பாவம் இருந்தால், நம்மை இரட்சிப்பதற்காக கர்த்தர் நமக்கு வரமாக கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக நாம் முழுமையாக இரட்சிக்கப் பட வேண்டும்.
இந்த உலகத்திலே வாழுகின்ற அநேக மக்கள் கர்த்தருடைய சொந்த மக்களாக மாற விரும்புகிறார்கள். கர்த்தருடைய மக்களாக மாற வேண்டுமானால், நாம் கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நம்மை நாமே முதலில் ஆராய்ந்து பார்த்து அதன் படியாக நம்மை சோதிக்க வேண்டும். அப்போது, பாவிகளாகிய நாம் நம்முடைய பாவங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டியிருந்தாலும் கூட நாம் போராட எதுவுமில்லை என்பதைக் கண்டு கொள்ளுவோம். நாம் பிரமாணத்திற்கு எதிராக அன்றாடம் பாவம் செய்கிறவர்களாக இருக்கிறோம். அநீதியிலும் பாவத்திலும் ஊறிப்போன நம் வாழ்க்கையையும், நம்முடைய நியாயத்தீர்ப்பிற்காக காத்திருப்பதையும் நம்மால் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலையிலே, நம்மால் எப்படி கர்த்தருடைய சொந்த மக்களாக மாற முடியும்? இப்படியாக நாம் கர்த்தருடைய சொந்த மக்களாக மாறுவதற்காக கர்த்தர் நமக்கு இரண்டு இரட்சிப்பின் வரங்களைக் கொடுத்தார் என்றும் அதனை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொள்ளுகிறோம்.
நம்மைப் பொறுத்த வரையில், தேவன் நம்முடைய இரட்சகர் ஆவார் அவர் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார். யோவான் ஸ்நானனிடமிருந்து இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்தன. இந்த இரண்டு காரியங்களும் நம் இரட்சிப்பிற்கு இன்றியமையாதவை. ஆகவே, இந்த சத்தியத்தை விசுவாசிக்காமல் யாராலும் கர்த்தருடைய மக்களாக மாற முடியாது.
கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த இரண்டு இரட்சிப்பின் வரங்களின் மூலமாகவும், நம்மால் உண்மையாகவே அவருடைய மக்களாக மாற முடியும். நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறினோம் என்பதற்கும் நம்முடைய சொந்த செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டு அவற்றிலிருந்தும் பாவத்திற்கான எல்லா தண்டனையில் இருந்தும் விடுதலையானோம் என்பதும் இயேசுவானவருடைய ஞானஸ்நான செயலின் மூலமாகவும் இரத்தம் சிந்துதலின் மூலமாகவும் முற்றிலும் சாத்தியமாயிற்று. வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறினோம். இந்த இரண்டு கர்த்தருடைய வரங்களையும் பெற்றுக் கொண்டு நாம் உருவாக்கிய நம் விசுவாசம் இந்த பொன்னைப் போல இருக்கிறது.
ஆசரிப்புக் கூடாரத்தை உருவாக்கிய கர்த்தர், ஒவ்வொரு பலகைக்கு அடியிலும் இரண்டு வெள்ளி கழுந்துகளை வைத்தார். இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, யோர்தான் நதியிலே யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, இந்த பாவங்களை சிலுவைக்கு சுமந்து சென்று அங்கே மரித்து பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டார் என்று இந்த சத்தியம் நம்மிடம் கூறுகிறது. இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமும் நிச்சயமான பாவங்களுக்கான மன்னிப்பின் வரங்களாகும்.
இந்த காலத்திலே வாழுகின்ற நீங்களும் நானும் நம்முடைய சொந்த பாவம் நிறைந்த தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு முன்னதாக தம்மைக் குறித்து அறிந்தவர்கள், தேவன் உண்மையாகவே இந்த பூமிக்கு வந்து, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதினாலும், சிலுவையில் மரித்ததினாலும், அவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் தண்டனையிலிருந்தும் இரட்சித்தார் என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்து இப்படியாக பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, நாம் கர்த்தருக்கு முன்னதாக அவருடைய சொந்த பிள்ளைகளாக மாறி விடுகிறோம். தேவன் நம்மைத் தன்னுடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவையின் இரத்தம் ஆகியவற்றால் இரட்சித்ததினால் தான் நாம் பாவத்தில் இருந்து விடுதலை ஆனோம்; அவர் அப்படிச் செய்யவில்லை என்றால், நாமாகவே பாவங்களில் இருந்து நம்மை முழுவதுமாக விடுதலை செய்திருக்க முடியாது. ஆகவே, 100 சதவீதம் கர்த்தருடைய கிருபையினால் தான் நீங்களும் நானும் கர்த்தருடைய மக்களாகவும் நீதிமான்களாகவும் மாறினோம் என்பதை விசுவாசித்து அறிக்கைச் செய்வதை தவிர்க்க முடியாது.
ஆசரிப்புக் கூடாரத்தின் பலகையில் உள்ள வெள்ளி கழுந்துகள் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பானது கர்த்தருடைய வரம் என்பதை நமக்கு காட்டுகின்றது அது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக நிறைவேற்றப் பட்டது. கர்த்தர் நமக்கு இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மூலமாக இரட்சிப்பின் கிருபையை நமக்கு கொடுத்ததினால் தான் நம்மால் விசுவாசத்தின் மூலமாக முழுமையாக இரட்சிக்கப் பட முடிகிறது. ஆவியிலே எளிமையாக இருப்பவர்களால் மட்டுமே, அதாவது தாம் தம்முடைய பாவங்களுக்காக நரகம் செல்வதை தவிர்க்க முடியாதவர்களாக இருப்பதை ஏற்றுக் கொள்ளுகிறவர்களால் மட்டுமே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் கொடுக்கப் படும் கர்த்தருடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவதற்கு தகுதியானவர்களாக இருக்க முடியும். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் மட்டுமே, தம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டு கர்த்தருடைய பிள்ளைகளாக மாற முடியும். தேவனால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரத்தை பெற்றுக் கொள்ளுகிறவர்களால் மட்டுமே கர்த்தருடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். தாம் நரகம் செல்ல வேண்டியவர்கள் என்றும் கர்த்தருடைய கிருபையை கேட்க வேண்டியவர்கள் என்றும் அறிந்தவர்களால் மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தகுதியாக இது இருக்கிறது. இது உண்மையாக இருக்கிறது.
நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டதற்கான காரணம் கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரமேயாகும். இதனால் தான் எபேசியர் 2:8 கூறுகிறது, “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்.” நாம் இந்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்ததினால் தான் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறினோம். இந்த நிலையில், நாம் பெருமை பாராட்ட என்ன இருக்கிறது? பெருமை பாராட்டுவதற்கு பதிலாக, நம்மால் கர்த்தருக்கு துதி செலுத்த மட்டுமே முடியும், நம்மைப் இரட்சித்தது நாமல்ல கர்த்தரே என்று அறிக்கைச் செய்ய முடியும்.
வெளிப்படையாக பேசினால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக கர்த்தர் நம்மை இரட்சித்திராவிட்டால், நம்மால் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டிருக்கவே முடியாது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே அடங்கியுள்ள சத்தியமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமையினால் உருவாகியிருக்கிறது. இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே பிறந்து, யோர்தான் நதியிலே யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது தன் மீது மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்றும் (மத்தேயு 3:13-17), சிலுவையில் மரித்தார் என்றும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார் என்றும் இது வெளிப்படுத்துகிறது. நம்மை இரட்சிக்க கர்த்தர் பயன் படுத்திய கிருபை மிகவும் நேர்த்தியாக இருப்பதினால், பாவத்தினால் நிறைந்து மாமிசத்திலே குறைபாடுடையவர்களாகிய நம்மை, விசுவாசத்தால் முழுமையாக்கவும் கர்த்தருடைய ராஜ்யத்தின் தூண்களாக நம்மை மாற்றவும், அவருடைய ராஜ்யத்தின் மக்களாக நம்மை மாற்றவும் அது போதுமானதாக இருக்கிறது.
நீங்கள் இயேசுவானவரை விசுவாசித்த போதிலும் நீங்கல் யார் என்பது இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?
இந்நாட்களில் கேபிள் அல்லது செய்மதி தொலைகாட்சிகள் நூற்றுக் கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு நாளிலே 24 மணிநேரங்கள் செயல் படும் இந்த சேனல்கள் தம்முடைய சொந்த சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து பார்வையாளர்களை தொடர்ந்து ஆச்சரியப் படுத்தி வருகிறது. இந்த சேனல்களுக்கு நடுவிலே, வியாபாரத்திலே மிகவும் வெற்றி பெற்ற சேனல்கள், வயது வந்தோருக்கான சேனல்களே ஆகும். சேனல்களை மாற்றிக் கொண்டேயிருந்தால் எல்லா வகையான ஆபாச படங்களும் கிடைக்கும் இத்தகைய அநேக சேனல்கள் வந்து கொண்டிருக்கும். இதன் விளைவாக, இந்தகாலத்தில் உள்ள அநேக மக்கள் இத்தகைய ஆபாச படங்களில் தம்மை இழந்து போயுள்ளனர். இத்தகைய மக்கள் தம்முடைய இத்தகைய காமவிகாரச் செயல்கள் பாவங்கள் என்று இப்போது கருத்தில் கொள்ளாதது மிகவும் மோசமான ஒரு நிலையாகும்.
ஆயினும், ஒவ்வொரு மனிதனிடம் இருந்தும் வருகின்ற காம விகாரம், விபசாரம், இச்சைகள் ஆகியவை பாவங்கள் என்று வேதாகமம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது (மாற்கு 7:21-23). அப்படியானால் நாம் அனைவரும் பாவத்தினால் நிறைந்தவர்கள் இல்லையா? நமக்குள்ளாக இருக்கும் பன்புகள் அனைத்தும் பாவம் நிறைந்தவை என்று கர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார், பாவத்தின் சம்பளம் மரணம், இந்த பாவம் முழுமையாக வளரும் போது அது மரணத்தை எடுத்து வருகிறது. ஆனால் நாம் உண்மையாகவே இதனை ஏற்றுக் கொள்ளுகிறோமா? அது எப்படி இருக்கிறது? நமக்குள் இருக்கின்ற பன்புகளில் இருந்து காதுகளை அடைத்துக் கொள்ளுவதாலும் கண்களை மூடுவதாலும் நம்மால் தப்ப முடியுமா? நம்முடைய மனங்களின் கற்பனைகளில் இருந்தும் சிந்தனைகளில் இருந்தும் எல்லா வகையான பாவங்களையும் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. இத்தகைய பாவங்களில் இருந்து நாம் அகன்றுச் செல்ல வேண்டும் என எத்தனையாக நாம் நமக்கு கூறிக் கொண்டாலும், அப்படிச் செய்ய நாம் எத்தனையாக முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் வீனாகப் போகும். குறிப்பாக, எத்தகைய மாமிசத்திற்குரிய பாவத்தையும் செய்யாத முழுமையான பரிசுத்தவான்களாக நாம் மாற முடியாதவர்கள் என்பதுடன், பாவத்தில் இருந்து தொலைவிற்கு செல்ல விருப்பம் இல்லாமல் பாவத்துடன் உறவாடும் விருப்பம் உள்ளதாக நம் மாமிசம் இருக்கிறது. மனிதகுலத்தின் மாமிசமும் இருதயங்களும் எப்போது பரிசுத்தமான காரியங்களில் இருந்து தம்மை தொலைவில் வைத்திருக்கின்றன, அவை பாவத்திற்கு அருகே இருக்க விரும்புவதுடனே கூட, இன்னமும் பெரிதான பாவங்களைச் செய்யவும் விரும்புகின்றன.
நாம் ஒவ்வொருவரும் ஒரு பாவக் குவியலாக இருக்கிறோம். ஆகவே நாம் நம் அடிப்படை பன்பிலே மோசமானவர்களாக இருக்கிறோம். நாம் ஒரு முறை பார்த்த ஆபாச காட்சியானது நம் நினைவில் வெகுகாலத்திற்கு அப்படியே இருக்கிறது, அந்த நினைவுகள் நம் மனங்களை குடைகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் அடிப்படையில் ஒரு பாவக் குவியலாக இருப்பதே இதற்கு காரணமாகும். ஆகவே, நம்முடைய இத்தகைய குறைபாடுகளை நாம் பாவக் குவியல்களாக இருக்கிறோம் என்பதை கர்த்தருக்கு முன்னதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய நீதியின் தீர்ப்பின் மூலமாக நாம் நரகம் செல்ல வேண்டியிருப்பதை அறிந்து கொண்டு நம்முடைய இரட்சிப்பை அவரிடம் கேட்பது புத்திசாலித்தனமான ஒரு காரியமாகும். நெப்போலியன் போனபார்ட் கீழ்வருமாறு கூறவில்லையா, “முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும்”? அநேக கிறிஸ்தவர்கள் தம்முடைய சொந்த நீதியை காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், அவர்களால் தமக்குத் தாமே பாவம் செய்வதை தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால் இது கர்த்தருக்கு முன்னதாக அவரை எதிர்ப்பதாக இருக்கிறது. இத்தகைய பிடிவாதமுள்ள விசுவாசமானது அவர்களை தீமை செய்கிறவர்களாக விட்டு விடுகிறது அவர்கள் கர்த்தருடைய நீதியை பெற்றுக் கொள்ள மறுப்பதுடன் அவர் கொடுத்த இரட்சிப்பின் அன்பையும் கூட நிராகரித்து விடுகிறார்கள்.
நீங்கள் உங்களை நல்லவராக கருதுகிறீர்களா? எத்தகைய ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு வடிவத்திலும், எத்தகைய அநீதியையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்ற உறுதியான நீதியின் மனநிலை உங்களிடம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? அன்றாடம் கர்த்தருடைய கற்பனைகளை நீங்கள் கைக்கொள்ளுவதினாலும் உங்களுடைய வாழ்விலே அவற்றிற்கு கீழ்ப்படிந்து அதன் படிச் செய்ய முயற்சி செய்வதினால், கர்த்தருக்கு முன்னதாக நீங்கள் எப்படியோ நீதிமானாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறீர்களா? கர்த்தர் அவனுக்கு கொடுத்த வரத்தையும் இரட்சிப்பின் கிருபையை ஒருவன் அறிந்து கொள்ளாமல் தன்னுடைய இருதயம் பாவத்தினால் நிறைந்திருந்தாலும் கூட நீதியாக நடிக்க முயற்சி செய்தால், அவன் செய்வதெல்லாம், அழுக்கான மனிதர்களின் நீதியின் மூலமாக நீதிமானாக இருப்பதை போல நடிக்க முயற்சிப்பது மட்டுமேயாகும். இத்தகைய மக்களுடைய நல்லத்தன்மையானது அவர்களை கர்த்தருடைய வீட்டின் தூண்களாக உங்களை ஏதுவாக்காது, அவர்கள் எந்தப் பயனும் அற்ற ஒரு பாவக் குவியலாக மட்டுமே இருக்கிறார்கள்.
கிழக்கு ஆசியாவின் நாடுகளிலே, அநேகர் கன்பூசியசின் போதனைகளை பிறப்பில் இருந்தே கற்கத் தொடங்குகிறார்கள், ஆகவே இந்த போதனைகளை நடைமுறை படுத்த அவர்கள் மிகவும் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மறுபுறம் பார்க்கும் போது, மேற்கிலே, கத்தோலிக்கமும் புரட்டஸ்டனிசமும் அந்த நாடுகளை முழுவதுமாக ஆட்சி செய்கிறது, ஆகவே அநேக மேற்குலக மக்கள் கர்த்தருடைய பிரமாணத்தை கைக்கொள்ள மிகவும் கடுமையாக முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் எங்கே இருந்தாலும், அவர்கள் கிழக்கில் இருந்தாலும் மேற்கில் இருந்தாலும், இவர்கள் அனைவரும் கன்பூசியசின் போதனைகளின் படியோ அல்லதொ கர்த்தருடைய கற்பனைகளின் படியோ வாழ முயற்சி செய்கிறார்கள், ஆனால் அனைவரும் பாவக் குவியல்களாகவும் தீமை செய்கிறவர்களின் வித்துக்களாகவும் மட்டுமே இருக்கிறோம். மனிதர்கள் அனைவரும் அநீதர்கள், களங்கம் நிறைந்தவர்கள், மண்ணினாலும் அழுக்கினாலும் செய்யப் பட்ட பாவக் குவியல்கள். நல்ல காரியங்களைச் செய்த நல்ல மனிதர்கள் தாம் செய்தவைகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பாராமல் தம் நேர்மையான இருதயங்களில் இருந்து செய்திருந்தாலும், தம்முடைய நல்ல செயல்களுக்காக புகழப் படுவதை விரும்பாதவர்களாக இருந்தாலும், அவர்களுடைய அடிப்படை தன்மைகள் கர்த்தருக்கு முன்னதாக வெளிப்படுத்தப் படும் போது, அவர்கள் பாவக் குவியல்களாகவும் தீமை செய்கிறவர்களின் வித்துக்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் இருந்து தப்ப முடியாது. மனித நீதியானது கர்த்தருக்கு முன்னதாக பெரிதான தீமையாக இருப்பதினால், மக்கள் தம்முடைய தண்டனையை அறிந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை, அதாவது, கர்த்தருடைய அன்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களால் தம் பாவங்களுக்கான தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. கர்த்தருக்கு முன்னதாக, மனிதர்களுடைய அனைத்து முயற்சிகளையுமே நம்மால் நல்லதாக மாற்ற முடியாது, மனிதகுலத்தின் சித்தமானது அவருக்கு முன்னதாக அழுக்காக மட்டுமே இருக்கிறது. மனிதகுலத்தின் அடிப்படையான சுபாவமானது அழுக்காகவும், மரமாகவும் வெண்கலமாகவும் மட்டுமே இருக்கிறது. மனிதகுலமானது ஒரு வகையான மரமாகும் அவன் முதலாவதாக பொன்னினால் மூடப் படாவிட்டால் கர்த்தருடைய தேவாலயத்தின் வாசலிலே அவனைப் பயன் படுத்த முடியாது, அவர்கள் நெருப்பின் தண்டனையை பெற்றுக் கொள்ளுவதை தவிர்க்க முடியாத வெண்கலமாக மட்டுமே இருக்கிறார்கள். இரட்சிப்பின் வரத்தை நாம் விசுவாசிக்காவிட்டால், அதாவது கைவைத்தலைப் போன்ற ஒரு முறையின் மூலமாக மேசியாவாகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார் என்றும் மரிக்கும் படியாக இரத்தம் சிந்தினார் என்றும் நாம் விசுவாசிக்காவிட்டால், அப்போது நாம் இன்னமும் பாவிகளாக மட்டுமே இருப்போம். மேலுமாக, கர்த்தருக்கு முன்னதாக தாம் தீமையானவர்களாக இருப்பதை அறியாதவர்களும் இரட்சிக்கப் படும் படியாக கர்த்தருடைய வரத்தை இன்னமும் பெற்றுக் கொள்ளாதவர்களும் உண்மையாகவே பரிதாபமானவர்கள்.
கர்த்தருடைய நீதியைக் குறித்து நாம் அறிந்து கொள்ளுவதற்கு முன்னதாக, நம்முடைய சொந்த நீதியிலே நம்முடைய வாழ்வின் அளவுகோலாக இருந்தது. நானும் கூட, கர்த்தருடைய இரட்சிப்பின் வரத்தைக் குறித்து அறிந்து கொள்ளுவதற்கு முன்னதாகவும் உண்மையான விசுவாசம் இல்லாதவனாக இருந்த நிலையில் அப்படித் தான் இருந்தேன். குறிப்பாக, என்னுடைய சொந்தத்திலே என்னிடம் எந்த நீதியும் இருக்கவில்லை, ஆனால் எனக்கு நானே நான் ஒரு நேர்மையானவன் என்று எண்ணினேன். ஆகவே என்னுடைய சிறு வயதில் இருந்தே, அநீதியை சகித்துக் கொள்ள முடியாதவனாக அநேக நேரங்களில் இருந்திருக்கிறேன் எனக்கு சிறிதும் பொருத்தமில்லாத மக்களுடனே நான் போரிட சென்றிருக்கிறேன். என் வாழ்விலே நான் நீதியுடனும் நியாயத்துடனும் வாழ வேண்டும் என்பதே என் தத்துவமாக இருந்தது, ஏனெனில் நான் ஒரு முறை மட்டுமே பிறந்து ஒருமுறை மட்டுமே மரிக்க வேண்டியவன் என்று எண்ணினேன். என்னுடைய சிந்தனை கீழ்வருமாறு இருந்தது, “புசிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாது, இப்படியாக மதிப்பில்லாத ஒரு வாழ்வை வாழுவதற்கு பதிலாக மரித்துப் போவதே நலமாக இருக்கும். வாழ்வு என்பது இதுவாக இருந்தால், நான் இப்போது மரித்தாலும் இன்னொரு 50 வருடங்களுக்கு வாழ்ந்தாலும் அதில் எந்த வேறுபாடும் இல்லை. இப்படியாக வாழுவது சலிப்பும் களைப்பும் உடையதாக இருக்கிறது. எந்த நோக்கமும் பொருளும் இல்லாது வாழுவதும் வாழ்விலே எத்தகைய பெரிய காரியமும் இல்லாது நீதியான எதனையும் செய்யாமல் வாழுவதே நரக வாழவாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும், நரகம் என்பது என்ன? ஒரு மனிதன் பன்றியைப் போல வாழ்ந்து, தன்னுடைய வயிற்றை நிரப்பும் படியாகவாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் புசிப்பது மட்டுமே தாழ்ச்சியான ஒரு நரகமாக இருக்கிறது.” இப்படியாக, கர்த்தருக்கு முன்னதாக நான் தவறியவனாக என்னைக் கண்டதினால், நான் சுய நீதியினால் முற்றிலும் நிரம்பியவனாக இருந்தேன். ஆகவே என்னை நான் மற்றவர்களை விடவும் சிறந்தவனாக எண்ணி நீதிமானாக வாழ அதிகமாக முயற்சி செய்தேன்.
ஆனால் நான் கர்த்தருடைய நீதிக்கு முன்னதாக வெறும் பாவக் குவியலாக மட்டுமே இருந்தேன் என்பது குறிப்பிடத் தக்கது. பிரமாணத்து 613 கட்டளைகளில் ஒன்றைக் கூட கைக்கொள்ள முடியாத ஒருவனாக நான் இருந்தேன், பத்து கற்பனைகளைக் குறித்து நான் கூற வேண்டியதில்லை. அவற்றைக் கைக்கொள்ள முடியும் என்ற திடசித்தம் என்னிடம் இருந்தது என்பதே கூட அநீதமான ஒரு செயலாகும் அது கீழ்வருமாறு கூறுகின்ற கர்த்தருடைய வார்த்தையை எதிர்த்து நிற்கிறது, “நீ ஒரு பொல்லாதவன் உன்னால் பாவம் செய்வதையும் கர்த்தரை எதிர்த்து நிற்பதையும் தவிர்க்க முடியாது.” மனிதகுலத்தின் அனைத்து நீதிகளும் கர்த்தருக்கு முன்னதாக பாவம் செய்வதாக மட்டுமே மாறிவிடுகிறது. மனிதர்களால் நீதிமான்களாக இருக்க முடியாது என்பதே சத்தியமாக இருக்கிறது. குறிப்பாக, இன்றைய காலமானது கடைசிகாலமாகும் அதன் ஓட்டமானது அழிவும் மோசமும் பாவத்தில் ஊறிப் போன ஒரு கலாச்சாரத்தினால் ஓடிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மாமிசமானது எப்போதும் இத்தகைய பொல்லாத இச்சை நிறைந்த பாவங்களினால் பற்றிக் கொள்ளப் பட்டிருக்கிறது என்றும், நாம் இந்தப் பாவங்களை நம் வாழ்விலே செய்கிறோம் என்றும் இதற்கு பொருள் படுகிறது. உண்மையில், நம்முடைய மாமிசமானது எப்போதும் விவரிக்க முடியாத அழுக்கான பாவங்களினால் எப்போதும் இழுத்துச் செல்லப் படுகிறது, அதிலே எத்தகைய நன்மையையும் நம்மால் காண முடியாது.
நாம் அநீதர்களாகவும் பாவத்தினால் நிறைந்தவர்களாகவும் இருந்தோம், ஆனால் தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்து நம்மைத் தன் சொந்த மக்களாக மாற்றினார்
நாம் அனைவரும் அநீதர்களாக இருந்தோம், ஆனால் இரட்சிப்பின் வரத்தின் மூலமாக, தேவன் நம்மைப் போன்ற இத்தகையவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். பரிசுத்த ஸ்தலத்தின் பலகைகளும், தேவனுடைய வீடும், உயரத்தில் 4.5 மீட்டரும் அகலத்தில் 675 மி.மீ. உடையதாகவும், அதிலே பொன்தகட்டினால் மூடி பரிசுத்த ஸ்தலத்தின் சுவர்களாக கட்டப் பட்டிருந்தது. ஒவ்வொரு பலகைக்கு அடியிலும், இரண்டு வெள்ளி கழுந்துகள் பொறுத்தப் பட்டிருந்தன. உங்களையும் என்னையும் கர்த்தர் முழுமையாக இரட்சித்தார் என்று இந்த இரண்டு வெள்ளி கழுந்துகளும் அறிவிக்கின்றன.
கர்த்தர் தன்னுடைய அன்பினால் நம்மைப் பாவத்தில் இருந்து இரட்சித்தார் என்பதே உண்மையாகும். இந்த அன்பின் மூலமாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ள ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து நம் பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக் கொண்டு, இதன் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லாத் தண்டனைகளில் இருந்தும் நம்மை இரட்சித்தார். அவர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசித்து, நாம் மறுபடியும் பிறந்தோம். இந்த கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் வரமானது பொன்னைப் போல அழிந்து போகாது, ஆகவே அது எப்போதுமே மாறாத ஒன்றாக இருக்கிறது.
தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பானது இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்தினால் உருவானது, அது நம்முடைய எல்லாப் பாவங்களையும் முழுமையாகவும் சுத்தமாகவும் துடைத்தது. தேவன் நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தமையால் தான் உங்களால் என்னாலும் நாம் இதுவரை செய்த எல்லாப் பாவங்களில் இருந்தும் நம் மனங்களில் இருக்கும் பாவங்களிலும், நம் சிந்தனைகளிலும், நம் செயல்களிலும் இருக்கும் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுவதுமாக விடுதலையாக முடிந்தது. நம்முடைய இருதயங்களிலே கர்த்தர் நமக்கு கொடுத்த இரட்சிப்பின் வரத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் அவருடைய விலையேறப்பட்ட பரிசுத்தவான்களாக மாறினோம். ஆசரிப்புக் கூடாரத்தின் தூண்களாகவும் சுவராகவும் இருந்த பலகைகளின் மூலமாக, கர்த்தர் நம்மிடம் நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பைக் குறித்து கூறுகிறார். பலகையில் உள்ள வெண்கல கழுந்துகளின் மூலமாக, அவருடைய கிருபையினாலும் வரத்தினாலும் தான் நாம் அவருடைய பிள்ளைகளாக 100% மாறினோம் என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் இரத்தத்திலிருந்து நம்முடைய விசுவாசத்தை நாம் அகற்றிவிட்டால், நம்மில் எதுவுமே மிச்சம் இருக்காது. நாம் அனைவரும் பாவத்திற்காக தண்டிக்கப் பட வேண்டியவர்களாக மாறி விடுவோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று அறிவிக்கின்ற கர்த்தருடைய பிரமாணத்தின் படியாக நம்முடைய நிச்சயமான மரணத்தை முன்னிட்டு பயந்து நடுங்குகிற வெறும் மனிதர்களாக நாம் இருந்தோம்; நமக்காக காத்திருக்கின்ற நீதியின் தீர்ப்பைக் குறித்து அறிந்து நாம் புலம்பிக் கொண்டிருந்தோம். இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தை விட்டு விட்டால் நாம் ஒன்றும் இல்லாதவர்களாக மாறிவிடுவோம். பாவத்தில் ஊறிப் போன காலத்திலே வாழுகின்ற நாம், நெருப்பினால் கிடைக்கின்ற தண்டனைக்காக காத்திருக்கிறவர்களாக இருக்கிறோம் என்பதை மறந்து போகக் கூடாது. உண்மையாகவே நாம் இப்படி பட்டவர்களாகத் தான் இருந்தோம், ஆனாலும் கிருபை நம்மீது முழுவதுமாக அருளப் பட்டது ஏனெனில் கர்த்தர் நமக்கு நீர் மற்றும் ஆவியின் இரட்சிப்பைக் கொடுத்தார். மேசியா இந்த பூமிக்கு வந்தார், அவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் தன் இரத்தத்தைச் சிந்தி மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து இதன் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும், நம் எல்லா அநீதியில் இருந்தும் நம் எல்லாத் தண்டனையில் இருந்தும் இரட்சித்தார். இந்த முழுமையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, இப்போது நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம், நம்முடைய விசுவாசத்தால் கர்த்தருக்கு நன்றி மட்டுமே கூற முடியும்.
நாம் மாமிசத்தில் குறைபாடுடையவர்களாக இருந்தாலும், நம்முடைய ஊழியர்களும் உடன் ஊழியர்களும், போதகர்களும், நானும் உலகம் முழுவதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கித்து வருகிறோம். இந்த காலமானது இத்தனை மோசமான ஒன்றாக இருந்தாலும், நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினால், நம்மால் முழுமையாக தேவனுக்கு ஊழியம் செய்ய முடிகிறது, எந்த கபடமும் நம்மிடம் இல்லை. நாம் இத்தகைய விதமாக நம் மனதை மாற்றிக் கொண்டமைக்கு காரணம் நம் சொந்த விருப்பம் அல்ல, ஆனால் நமக்கு இரட்சிப்பின் கிருபையைக் கொடுத்து தேவன் நமக்குத் தன் பரிசுத்தத்தைக் கொடுத்ததே அதற்கு காரணமாகும். தேவன் நம்மை பாவத்தில் இருந்தும் தண்டனையில் இருந்தும் முழுமையாக இரட்சித்தமையால் தான் நாம் இந்த இரட்சிப்பின் வல்லமையினால் தரிப்பிக்கப் பட்டோம், இதனால் தான் நம்மால் தேவனுக்கு முழுமையாக ஊழியம் செய்ய முடிகிறது. தேவன் நம்மை நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தமையால், நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் நம்மால் அவருக்கு ஊழியம் செய்ய முடிகிறது என்றும், நாம் நம் பாவங்களினாலும், குறைபாடுகளாலும் தண்டனையினாலும் கட்டப் படவில்லை என்றும் விசுவாசிக்கிறேன்.
உண்மையாகவே தேவனுடைய கிருபை இல்லாவிட்டால், நம்மால் உலகம் முழுமைக்கும் நற்செய்தியை பிரசங்கிக்கவே முடியாது. தேவனுடைய கிருபை இருந்திராவிட்டால், உலகம் முழுவதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதும் இந்த நற்செய்திக்கு முற்றிலுமாக ஊழியம் செய்வதும் சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறியிருக்கும். கர்த்தருடைய இரட்சிப்பின் கிருபையினால் தான் நீங்களும் நானும் 100 சதவீதம் நம் விசுவாச வாழ்வை வாழ்ந்து இந்த உண்மையான நற்செய்தியை பாதுகாத்து ஊழியம் செய்து வருகிறோம். நாம் கர்த்தருடைய ராஜ்யத்தின் தூண்களாகவும் விசுவாசத்தினால் இந்த ராஜ்யத்தின் மக்களாகவும் மாறினோம். உலகமானது பாவத்தினால் மூடப் பட்டிருக்கும் இந்த காலத்திலே, மக்கள் பாவத்தினால் அடித்து செல்லப் படும் இந்த காலத்திலே, அவர்கள் கர்த்தரை மறக்கவும் தேவதூஷனமும் செய்கிறார்கள், நாம் சுத்தமாக மாறுவதற்கு தெளிவான நீரினால் கழுவப் பட்டோம், இதன் விளைவாக நம்மால் தெளிவான நீரை குடித்து ஆவியின் தூய்மையுடனே தேவனுக்கு ஊழியம் செய்ய முடிகிறது. ஆகவே, இந்த ஆசீர்வாதத்திற்காக நான் எத்தனை நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இப்படியாகத் தான் நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக மாறினோம். நம்மால் எப்படி நீதிமான்களாக மாற முடியும்? நம்மிடம் எந்த நன்மையும் இல்லாத நில்லையில் நம்மை நாமே எப்படி நீதிமான்கள் என்று அழைக்க முடியும்? உங்களையும் என்னையும் போன்ற இத்தகைய பாவம் நிறைந்தவர்களால் எப்படி பாவம் இல்லாதவர்களாக மாற முடிந்தது? உங்களுடைய மாமிசத்தின் நீதியினால் பாவம் இல்லாதவர்களாகவும் நீதிமான்களாகவும் உங்களால் மாறியிருக்க முடியுமா? உங்கள் மாமிசத்தின் சிந்தனைகள், உங்கள் சொந்த முயற்சிகள், உங்கள் சொந்த சிந்தனைகள்௮இவை ஏதாவது ஒன்றினாலே உங்களை எந்த பாவமும் இல்லாத நீதிமானாக மாற்றியிருக்க முடியுமா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள உங்கள் விசுவாசத்தால் உங்களால் நீதிமானாக மாற முடிந்ததா? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய இரட்சிப்பின் மீது விசுவாசம் வைப்பதின் மூலமாக உங்களால் நீதிமானாக மாற முடிந்ததா? கர்த்தருடைய வார்த்தையால் வெளிப்படுத்தப் பட்டதும் மேசியாவினால் நிறைவேற்றப் பட்டதுமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக உங்களை இரட்சிப்பை விசுவாசிக்காமல் உங்களால் நீதிமானாக மாற முடிந்ததா? உங்களால் அப்படி மாறியிருக்கவே முடியாது! சுருக்கமாக கூறினால், சிவப்பு நிற நூலை மட்டுமே விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் நீதிமானாக மாறவே முடியாது.
நம்முடைய இரட்சகரும் மேசியாவுமாகிய இயேசு கிறிஸ்து உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்ததினால், யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நம் வாழ்நாள் எல்லாம் செய்த எல்லாப் பாவங்களையும் நம் சார்பாக அவர் ஏற்றுக் கொண்டு துடைத்ததினால், விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாக மாறினோம். பாவிகளோ அல்லது தலைமை ஆசாரியனோ தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது வைக்கும் போது அவர்களின் பாவங்களை அது ஏற்றுக் கொண்டதைப் போல, இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார். இயேசுவானவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:15). இந்த முக்கியமான நேரத்தை அறிவித்து யோவான் ஸ்நானன் கூக்குரலிட்டான், “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). இந்த ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசுவானவர் நம்முடைய இரட்சிப்பிற்காக அடுத்த மூன்று வருடங்களையும் வாழ்ந்து, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தண்டனைகளையும் சிலுவைக்குச் சென்று தன் சரீரத்தை கர்த்தரிடம் ஒப்படைத்ததின் மூலமாக கிரையம் செலுத்தினார், அது மயிர்க் கத்தரிக்கிறவனுக்கு முன்னதாகச் செல்லும் அமைதியான ஆட்டைப் போலிருந்தது, இப்படியாக அவர் நமக்கு புதுவாழ்வைக் கொடுத்தார்.
இயேசு கிறிஸ்து தான் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் மீது ஏற்றுக் கொண்டதினால் தான் அவரால் ரோம போர்ச் சேவகர்களால் சிலுவையிலே கைகளிலும் கால்களிலும் ஆணியால் அறையப் பட்ட போது தன்னை அமைதலாக ஒப்புக்கொடுக்க முடிந்தது. சிலுவையில் தொங்கிய இயேசுவானவரால் தன் இருதயத்தின் எல்லா இரத்தத்தையும் சிந்த முடிந்தது. அவர் நம்முடைய இரட்சிப்பிற்கான ஊழியத்தின் கடைசி நிலையை அடைந்த போது, கீழ்வருமாறு கூறினார், “முடிந்தது!” (யோவான் 19:30). இப்படியாக மரித்த அவர், மூன்று நாட்களிலே மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, பரலோக ராஜ்யத்திற்கு ஏறிச் சென்று, நமக்கு புதுவாழ்வைக் கொடுத்ததின் மூலமாக நம்முடைய இரட்சகராக மாறினார். யோவான் ஸ்நானனிடமிருந்து தன் ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட அவர், தன் சிலுவையினாலும், உயிர்த்தெழுதலினாலும், பரலோகம் ஏறியதாலும், நம்முடைய முழுமையான இரட்சகராக மாறினார்.
சிலுவையின் இரத்தம் மீது மட்டுமே விசுவாசம் வைப்பதும் படிப்படியாக பரிசுத்தமாகும் போதனையும் உங்களையும் என்னையும் பாவங்களில் இருந்து இரட்சிக்கவில்லை
இயேசுவானவருடைய சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலமாக கிறிஸ்தவர்களால் முழுமையாக இரட்சிக்கப் பட முடியாது. மக்கள் தம்முடைய கண்களினாலும் செயல்களினாலும் அன்றாடம் பாவம் செய்வதினால், சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலமாக தம்முடைய பாவங்களைத் துடைக்க முடியாது. மக்களுடைய வாழ்விலே அவர்கள் செய்யக் கூடிய மிகவும் மோசமான பாவம் காம ஒழுங்கின்மையாகும். இந்த உலகத்திலே வெளிப்படையான ஆபாச காம கலாச்சாரம் பரவியிருப்பதால், இந்த குறிப்பிட்ட பாவம் நம் மாமிசத்திலே பதிக்கப் பட்டுள்ளது. விபசாரம் செய்ய வேண்டாம் என்று வேதாகமம் நமக்கு கட்டளை இடுகிறது, ஆனால் இந்த நாளிலே இத்தகைய சூழ்நிலை நம்மை சுற்றிலும் அமைந்திருப்பதினால், மக்கள் இந்தப் பாவத்தை செய்ய விரும்பா விட்டாலும் கூட அவர்கள் இந்தப் பாவத்தை தொடர்ந்தும் செய்கிறார்கள். காம இச்சை நிறைந்த சிந்தனை இருப்பதுவே விபசாரம் செய்ததைப் போல பாவமாக இருக்கிறது என்று கர்த்தர் கூறினார், ஆனாலும் நம் கண்கள் அன்றாடம் காணுகின்ற அனைத்துமே ஆபாச காட்சிகள் ஆகும். ஆகவே மக்கள் இத்தகைய இச்சையான பாவங்களை ஒவ்வொரு நிமிடமும் வினாடியும் செய்கிறார்கள். இது உண்மையான நிலையாக இருக்கும் போது, அவர்களால் எப்படி மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதின் மூலமாக பரிசுத்தமாகி கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும்? அவர்களால் எப்படி நீதிமான்களாக மாற முடியும்? அவர்கள் வயது சென்றவர்களாக மாறும்போது அவர்களுடைய இருதயங்களால் எப்படி நல்லொழுக்கமுடைய நீதிமான்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் மாற முடியும்? அவர்களுடைய பன்புகள் சாந்தமுள்ளதாக மாறுமா? அவர்கள் அதிக பொறுமை உள்ளவர்களாக மாறுவார்களா? அது உண்மை இல்லை! அங்கே நடப்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
மக்கள் வயதானவர்களாக மாறும் போது, அவர்கள் கோபம் அடைகிறவர்களாகவும் பொறுமை இல்லாதவர்களாகவும் மாறுகிறார்கள். வயது அதிகமாகும் போது, ஹார்மோனும் மாறுகிறது, முன்னதாக பொறுமையுடன் இருந்தவர்கள் தம் கோபத்தையும் தவிப்பையும் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதை உணருகிறார்கள். அவர்கள் மற்றவர்களைக் குறித்து எண்ணுவதற்கு முன்னதாக தம்மைக் குறித்தே அதிகமாக எண்ணுகிறார்கள். அவர்களுடைய சரீர செயல்பாடு பாதிக்கப் படுவதால், தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு அவர்களுக்குள் அதிகரிக்கிறது. ஆகவே நாம் வயதானவர்களாக மாறும் போது, நாம் குழந்தைத் தனமானவர்களாக மாறிவிடுகிறோம். ஒரு பழமொழி கூறுவதைப் போல, நாம் குழந்தைகளாக இருக்கும் போது நான்கு கால்களாலும் நடக்கிறோம், இளைஞர்களாக இருக்கும் போது இரண்டு கால்களில் நிற்கிறோம், வயதானவர்களாக மாறும் போது மூன்று கால்களால் நடக்கிறோம் இதுவே மனிதர்களாகும், அனைவருமே இப்படி பட்டவர்களாகவே இருக்கிறோம்.
கிறிஸ்தவ போதனைகளுக்கு நடுவே, “படிப்படியாக பரிசுத்தமாகும் போதனை” என்று அழைக்கப் படும் போதனை வருகிறது. கிறிஸ்தவர்கள் இயேசுவானவருடைய சிலுவை மரணத்தைக் குறித்து வெகுகாலமாக விசுவாசித்து, அன்றாடம் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுத்து, அன்றாடம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, நாம் படிப்படியாக பரிசுத்தமாகிறோம் என்று இந்த போதனை வலியுறுத்துகிறது. நாம் இயேசுவானவரை விசுவாசிக்கத் தொடங்கி அதிகமான காலம் செல்லும் போது, நாம் பாவத்துடன் உறவு அற்றவர்களாகவும் நல்ல செயல்களை மட்டுமே செய்கிறவர்களாகவும் மாறி விடுவோம் என்றும், மரணத்தின் நேரம் வரும் போது, நாம் முற்றிலுமாக பாவம் இல்லாதவர்களாக மாறி விடுவோம் என்றும் இதனால் நாம் முற்றிலும் பாவம் இல்லாதவர்களாக மாறி விடுவோம் என்றும் அது வலியுறுத்துகிறது. நாம் எந்நேரமும் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதினால், நம்முடைய துணிகள் துவைக்கப் படுவதைப் போல, நம்முடைய பாவங்களும் கூட அன்றாடம் கழுவப் படுகிறது என்றும் அது போதிக்கிறது. ஆகவே நாம் கடைசியில் மரிக்கும் போது, நாம் முழுவதும் நீதிமான்களாக மாறியவர்களாக கர்த்தரிடம் செல்லுவோம். இப்படியாக விசுவாசிக்கக் கூடிய அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது மனிதர்களால் உருவாக்கப் பட்ட ஒரு கோட்பாடாக மட்டுமே இருக்க முடியும்.
ரோமர் 5:19 இவ்வாறு கூறுகிறது, “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப் படுவார்கள்.” ஒரு மனிதருடைய கீழ்ப்படிதலினாலே நாம் அனைவரும் பாவம் இல்லாதவர்களாக மாறினோம் என்று இந்த வசனம் கூறுகிறது. உங்களாலும் என்னாலும் செய்ய முடியாததை இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு நேரடியாக வந்தபோது செய்து முடித்தார். உங்களாலும் என்னாலும் நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்து கொள்ள முடியாது என்று நன்றாக அறிந்த இயேசுவானவர், நம் சார்பாக நம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தார், இதனை உங்களாலும் என்னாலும் செய்யவே முடியாது. இந்த பூமிக்கு வந்ததினாலும், ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினாலும், சிலுவையில் அறையப் பட்டதினாலும், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்ததினாலும், அவர் உங்களையும் என்னையும் இரட்சித்து நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக சுத்தமாக்கினார்.
இயேசு கிறிஸ்து தன் பிதாவாகிய கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, நேரடியாக நம்முடைய இரட்சிப்பை நிறைவேற்றினார், அது நம் பாவங்களுக்கான மன்னிப்பு என்றும் அழைக்கப் படுகிறது. மேசியாவாக கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்த இயேசு கிறிஸ்து, தன்னுடைய ஞானஸ்நானம், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலமாக இரட்சிப்பின் கிருபையை நமக்குத் தந்தார். இப்படியாக நமக்கு இரட்சிப்பின் கிருபையைத் தந்த இயேசுவானவர், பாவங்களுக்கான மன்னிப்பை முழுமையாக நிறைவேற்றினார். இப்போது, விசுவாசத்தின் மூலமாக இரட்சிப்பின் கிருபையினால் நாம் தரிப்பிக்கப் பட்டோம், ஏனெனில் தேவன் நம்மை பாவத்தில் இருந்து இரட்சிப்பை முழுமையாக நிறைவேற்றினார் இதனை நம்முடைய சொந்த செயல்களின் மூலமாகவோ அல்லது தகுதிகளின் மூலமாகவோ செய்திருக்க முடியாது.
அநேக மக்கள் இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமல், அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து தம்முடைய சொந்த செயல்களின் மூலமாக பரிசுத்தமாக முயற்சி செய்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டிருந்தும் கூட, மக்கள் இன்னமும் இந்த சத்தியத்தை விசுவாசிப்பதில்லை. இயேசுவானவர் தன்னுடைய பொது ஊழியத்திலே முதன் முதலாக செய்தது யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதே என மத்தேயு அதிகாரம் 3 நம்மிடம் கூறுகிறது. இந்த மறுக்க முடியாத சத்தியத்தை நான்கு நற்செய்திகளும் உறுதியாக கூறுகின்றன.
அனைத்து மனிதர்களுக்கும் பிரதிநிதியாகவும் பெண்களுக்கு பிறந்தவர்களிலேயே சிறந்தவனுமாகிய யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசுவானவர் நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், ஆனாலும் இந்த சத்தியத்தை விசுவாசிக்காமலும் அதனை விசுவாசிக்காமலும் இருக்கின்ற அநேக மக்கள் இருக்கின்றன. இத்தகைய மக்கள் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசிக்காமலேயே அவரை விசுவாசிப்பதுடனே, அவர் சிலுவையில் சிந்திய விலையேறப் பட்ட இரத்தத்தை மட்டுமே வெறியுடன் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இயேசுவானவர் சிலுவையில் மரித்ததிலே அதிகமான ஈடுபாடு உடைய அவர்கள், தம்முடைய உணர்வுகளை உற்சாகப் படுத்தி, தம்முடைய துதியிலே அனைத்து வகையான சொற்களையும் பயன் படுத்தி, கீழ்வருமாறு சத்தமிட்டு பாடுகிறார்கள்,
“♫வல்லமை உண்டு, உண்டு, அற்புத வல்லமை,
இயேசுவின் இரத்தத்தில்;
♫வல்லமை உண்டு, உண்டு, அற்புத வல்லமை,
இயேசுவின் விலையேறப்பட்ட இரத்தத்தில்.” வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் தம்முடைய சொந்த உணர்வுகளினாலும், வெறியினாலும் பலத்தினாலும் உந்தப் பட்டு கர்த்தரிடம் செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் இதனை அதிகமாக செய்யும் போது, அவர்கள் அதிகமான பாவங்களைச் செய்வதுடன் மிகவும் அதிக கபடமானவர்களாகவும் மாறிவிடுவர்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்து வரும் போது, இயேசுவானவருடைய இரண்டு பெரிய ஊழியங்கள் முற்றிலும் அவசியமாகும். அவை என்ன? அவற்றில் ஒன்று, இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார், மற்றது, அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சிலுவைக்கு சுமந்துச் சென்று அங்கே அறையப் பட்டதின் மூலமாக நம் பாவங்களுக்கான கிரையத்தைச் செலுத்தி விட்டார் என்பதாகும். இந்த கிருபையான இயேசுவானவரின் இரண்டு ஊழியங்களையும் முழுமையாக விசுவாசிப்பதின் மூலமாக நம்மால் நிச்சயமாக நீதிமான்களாக மாற முடியும். இரட்சிப்பின் வரத்துடைய இரண்டு அச்சாணிகளான, இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவையின் இரத்தத்தின் மீதுள்ள நம் விசுவாசமானது, கர்த்தருடைய வீட்டிலே நம்மை உண்மையாகவே களங்கம் இல்லாதவர்களாக மாற்றுகிறது. இயேசுவானவரால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, என்றென்றும் மாறாது சுத்தமான பொன்னைப் போல நாம் விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதின் மூலமாக, முழுமையான பாவங்களுக்கான மன்னிப்பாகிய இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம்.
இறையியலின் காலத்திற்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் காலதிற்கும் இடையேயான வேறுபாடு
ஆதிசபையின் காலத்தை விட்டு விட்டால், கி.பி. 313 இலே ரோமின் மிலான் பிரகடனத்திற்கு பிறகு, கிறிஸ்தவமானது இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை விட்டு சிலுவையின் நற்செய்தியைக் குறித்து மட்டுமே பரப்பி வருகிறது. ஆதிசபையின் காலத்தில் இருந்து கி.பி. 313 வரையிலும், கிறிஸ்தவமானது வெறும் ஒரு மதமாக மாறுவதற்கு முன்னதாக, அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வெகு தீவிரமாக பிரசங்கித்து வந்தது, ஆனால் அதன் பிறகு ரோமர் கத்தோலிக்க ஆலயமானது மேற்கு உலகத்தின் மதக் காரியங்களை ஆளத் தொடங்கியது. அப்போதில் இருந்து 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மனித சிந்தனைகளால் உருவாக்கப் பட்ட ஒரு கலாச்சாரம் உருவாகியது அது மனிதத் தன்மையினை சீரமைக்கும் வேலையை இத்தாலி நாட்டில் இருந்து தொடங்கியது. இது புத்துணர்ச்சியின் காலம் என்று அழைக்கப் படுகிறது.
16 ஆம் நூற்றாண்டிலே, இத்தாலியே தொடங்கிய மனித தன்மை கலாச்சாரத்தின் ஓட்டமானது மேற்கு உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது, மனிதர்களால் உருவாக்கப் பட்ட தத்துவமாகிய, மனிதத் தன்மையைக் குறித்த கோட்பாடுகளை படித்த அறிஞர்கள் இறையியலை கற்கத் தொடங்கினர். தம்முடைய சொந்த விவாதங்களாலும் கருத்துக்களாலும் வேதாகமத்தை விளக்கிய அவர்கள், வெவ்வேறு கிறிஸ்தவ போதனைகளை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு சத்தியத்தைக் குறித்து தெரியாததினால், அவர்களால் வேதாகமத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. வேதாகமத்திலே பலவேறு கடினமான வசனங்கள் இருக்கின்றன, இவை அவர்களைத் தம்முடைய சொந்த கிறிஸ்தவ போதனைகளை உருவாக்கும் படி விரட்டி அடித்தது அவர்கள் தம்முடைய உலக அறிவினாலும் தத்துவ புரிந்து கொள்ளுதலினாலும் அவற்றினை உருவாக்கினார்கள். இப்படியாகத் தான், கால்வினிசம், அர்மீனியனிசம், அடிப்படையிசம், விடுதலையிசம், புது இறையியல், முறைசார்பிசம், அறிவிசம், பெரிய விமரிசனம், ரகசிய இறையியல், மதப் பன்மை, விடுதலை இறையியல், கர்த்தருடைய மரண இறையியல் போன்றவைகள் உருவாகின.
கிறிஸ்தவத்தின் வரலாறு மிகவும் நீண்டதாக தெரியக் கூடும், ஆனால் அதன் வரலாறு அத்தனை நீளமான ஒன்றல்ல. ஆதிசபையின் காலத்திற்கு பிறகு 300 வருடங்களாக, மக்களால் வேதாகமத்தை பயில முடிந்தது, ஆனால் அதற்கு பிறகு மத்திய காலம் தொடங்கியது, இது கிறிஸ்தவத்தின் கருமையான காலமாகும். அந்த காலத்திலே, வேதாகமத்தை வாசிப்பதே தலையை வெட்டி கொல்லும் படியான குற்றமாக இருந்தது. 1700 இலே இறையியலின் காற்று வீசத் தொடங்கிய பிறகுத் தான், கிறிஸ்தவமானது 1800 களிலும் 1900 களிலும் இறையியலாக மிகவும் பரபரப்பாக மலரத் தொடங்கியது, ஆனால், இப்போது அநேக மக்கள் தம்முடைய விசுவாசத்திலே மோசமான கூற்றுகளிலே விழுந்து போயினர், அவர்கள் தம் சொந்த வரலாறின் அடிப்படையிலே கர்த்தரை விசுவாசிக்கிறார்கள்.
ஆனால் இது தான் சத்தியமா? நீங்கள் இந்த முறைப்படியாக விசுவாசித்த போது, உங்கள் பாவங்கள் உண்மையாகவே மறைந்து விட்டதா? நீங்கள் அன்றாடம் பாவம் செய்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளினாலும், செயல்களினாலும், குறைபாடுகளினாலும் அன்றாடம் பாவம் செய்கிறீர்கள். இயேசுவானவர் சிலுவையில் தொங்கிய இரத்தத்தை மட்டுமெ விசுவாசித்ததினால் உங்களுடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டனவா? இயேசுவானவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து சிலுவையில் மரித்தார் என்பதே சத்தியமாகும். ஆனாலும் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதினாலும் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதினாலும் மட்டுமே தம் பாவங்கள் தீர்க்கப் பட்டன என அநேக மக்கள் கூறுகின்றனர். மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதினால் உங்கள் இருதயங்களிலும் மனசாட்சியிலும் உள்ள பாவங்கள் சுத்திகரிக்கப் பட்டனவா? இதற்கு சாத்தியமேயில்லை.
நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால், இந்த சத்தியத்தின் இரட்சிப்பை இப்போது நீங்கள் அறிந்து விசுவாசிக்க வேண்டும், இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இந்த அத்தாட்சி உங்களுக்கு முன்னதாக இருந்தாலும் கூட, நீங்கள் இன்னமும் இந்த சத்தியத்தை அலட்சியம் செய்து, அதனை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமலும், விசுவாசியாமலும் இருக்கிறீர்களா? அப்படியானால், இயேசுவானவரை நீங்கள் உங்களுடைய இரட்சகராக விசுவாசிப்பதாக உங்களால் கூற முடியாது. இது உண்மையாக இருந்தால், நீங்கள் இயேசுவானவரை பரியாசம் செய்யும் பாவத்தைச் செய்கிறீர்கள், அவருடைய பெயரை தாழ்த்தி நிந்தனை செய்கிறீர்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் உங்களுடைய சொந்தத்திலே இயேசுவானவருடைய பெயரை தேவதூஷனம் செய்யும் பாவத்தையும் கர்த்தரை பரியாசம் செய்யும் பாவத்தையும் செய்கிறீர்கள். நம்முடைய பாவங்களை மறையச் செய்யும் படியாக இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்தார், அவர் வந்த இந்த நோக்கத்தின் படியாக, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ளும் படியாக ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்து சிலுவையில் அறையப் பட்டு இந்தப் பாவங்களுக்கான தண்டனையை சுமந்தார்.
இந்த பரலோக சத்தியம் இப்படிப் பட்டதாக இருந்தாலும், அநேக மக்கள் இயேசு கிறிஸ்துவின் இந்த இரட்சிப்பை விசுவாசிப்பதில்லை, இதன் விளைவாக அவர்கள் இப்படிப் பட்ட மண்ணிக்க முடியாத பாவத்தை கர்த்தருக்கு முன்னதாக செய்து வருகிறார்கள். இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப் பட்ட இந்த இரட்சிப்பின் திட்டத்தில் இருந்து இயேசுவானவரின் ஞானஸ்நானத்தை விட்டு விடுவதின் மூலமாகவும், பொருத்தமான முறையின் மூலமாக அவரை விசுவாசிப்பதின் மூலமாகவும், அவரால் இரட்சிப்பின் கிருபையால் தரிப்பிக்கப் படவே முடியாது. இந்த சத்தியங்கள் அனைத்தும் இப்படி இருந்தாலும் கூட, இயேசுவானவர் தம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்ற சத்தியத்தை அநேக கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, இதற்கு மாறாக அவர்கள் தம்முடைய சொந்த சிந்தனைகளை பின்பற்றி தாம் விசுவாசிக்க விரும்பும் படியாக சத்தியத்தை திரித்து அதனை விசுவாசிக்கிறார்கள். இந்நாட்களில், மக்களுடைய இருதயங்கள் தம்முடைய தவறான போதனை விசுவாசங்களினால் கடினம் அடைந்துள்ளது, சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிப்பதின் மூலமாக தம்முடைய பாவங்கள் மன்னிக்கப் பட முடியும் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.
ஆனால் கர்த்தரால் திட்டமிடப் பட்ட இரட்சிப்பின் பதில் கீழ்வருமாறு: நித்தியமான பாவ மன்னிப்பானது, இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும், சிலுவையையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் விசுவாசிப்பதினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனாலும் இயேசுவானவர் பெற்றுக் கொண்ட இந்த ஞானஸ்நானத்தை இரட்சிப்பின் சத்தியத்தில் இருந்து அகற்றி விட்டு, கீழ்வரும் சமன்பாட்டை உண்மை என்று தவறாக புரிந்து கொண்டு தவறாக விசுவாசிக்கிறார்கள்: “இயேசுவானவர் மீதுள்ள விசுவாசம் (சிலுவையும் அவருடைய உயிர்த்தெழுதலும்) + மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுத்தலும் + நற்செயல்களும் = பரிசுத்தத்தால் பெற்றுக் கொள்ளப் பட்ட இரட்சிப்பு.” இந்த முறையினை விசுவாசிக்கின்ற அனைவரும் தாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதாக தம் வார்த்தைகளில் மட்டுமே கூறுகிறார்கள், ஆனால் அவர்களின் இருதயங்களோ இன்னமும் தீர்க்கப் படாமல் இருக்கும் பாவக் குவியல்களினால் நிரம்பி இருக்கிறது.
இயேசுவானவருடைய சிலுவையை மட்டுமே விசுவாசிப்பவர்கள் இன்னமும் அதிகப் பாவங்களைச் செய்வார்கள்.இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உங்களுடைய எல்லாப் பாவங்களும் துடைக்கப் பட்டன என்று கூறும் சத்தியத்தை நீங்கள் ஏன் விசுவாசிக்க மாட்டேன் என்கிறீர்கள்; ஆனால் அதற்கு மாறாக, நீங்கள் இயேசுவானவரை விசுவாசிப்பதாக கூறினாலும், மனிதர்களால் உருவாக்கப் பட்ட தவறான போதனைகளை விசுவாசிக்கிறீர்களே? ஆசரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பலகையும் சீத்தீம் மரத்தினால் உருவாக்கப் பட்டு அதிலிருந்து இரண்டு கொம்புகள் வெளி வந்தன, அவற்றின் கீழே இரண்டு வெள்ளிக் கழுந்துகள் வைக்கப் பட்டு அவை அந்த பலகையை தாங்கின என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது (இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் சிலுவையின் இரத்தமும்) முழுமையான சத்தியம் ஆகும்.
ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் வாசலை நாம் திறந்து அந்த பிரகாரத்தின் முற்றத்திலே நாம் நடந்தால், சர்வாங்க தகன பலிபீடத்தையும் அதன் பிறகு வெண்கலப் பாத்திரத்தை நாம் முதலாவதாக காணுவோம். சர்வாங்க தகன பலிபீடம் எத்தகைய ஒரு இடமாக இருக்கிறது? அது சர்வாங்க தகன பலிகளை கொடுக்கின்ற இடமாகும். இந்த இடத்திலே இஸ்ரவேலர்களின் பாவங்களைச் சுமந்த பலி காணிக்கைகள் அவற்றிற்காக தண்டிக்கப் பட்டன. இந்த வெண்கலப் பாத்திரம் எத்தகைய இடமாக இருக்கிறது? இந்த இடமானது சரீரத்தைக் கழுவி சுத்திகரிக்கும் இடமாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், அந்த இடமானது, பாவத்தினால் களங்கப் பட்ட இருதயங்கள் சுத்தமாக கழுவப் பட்ட ஒரு இடமாகும். விசுவாசத்தின் முறைப்படியாக நாம் கடந்து செல்லும் போது தான் ஆசரிப்புக் கூடாரத்தின் திரைச்சீலையைத் திறந்து கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியுமே தவிர அதற்கு முன்னர் அங்கே செல்ல முடியாது.
ஆசரிப்புக் கூடார வாசலின் துணியானது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டிருந்தது. அது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றை நெய்து உருவாக்கப் பட்டிருந்தது. கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க, நாம் இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட இயேசுவானவருடைய ஊழியங்களில் விசுவாசம் வைக்கும் போது மட்டுமே கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலின் நிறைவேறுதலாக மாறினார். இளநீல நூலானது இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை குறிப்பிடுகிறது, இரத்தாம்பர நூலானது இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று நம்மிடம் கூறுகிறது. சிவப்பு நிற நூலானது இயேசுவானவர் தான் சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான ஆக்கினையை பெற்றுக் கொண்டார் என்று கூறுகிறது.
உங்களுடைய இருதயத்திலே மாறாத பாவம் அப்படியே இருக்கிறதா? வேறு வார்த்தைகளில் கூறினால், உங்களுடைய இருதயங்களின் நடுவிலே பாவம் இருக்கிறதா? நீங்கள் இப்போது இயேசுவானவரை விசுவாசித்த போதிலும் கூட உங்கள் இருதயங்களில் பாவம் இருந்தால், அப்போது தெளிவாக, உங்கள் விசுவாசத்திலே மோசமான ஒரு பிரச்சனை இருக்கிறது. இயேசுவானவரை நீங்கள் வெறும் ஒரு மதமாக மட்டுமே விசுவாசிப்பதால் தான் உங்கள் மனசாட்சி தூமை இல்லாததாகவும் இன்னமும் பாவம் உடையதாகவும் இருக்கிறது. ஆனால் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவறால் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, உங்களால் உங்களுடைய மனசாட்சியை தெளிவாக மாற்றிக் கொள்ள முடியும்.
இயேசுவானவரைக் குறித்த தவறுதலான அறிவினை அடிப்படையாக கொண்ட உங்கள் பாவம் நிறைந்த நிலையை உங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது என்பதே அதிர்ஷ்டமான நிலையாகும். ஏன்? தம்மிடம் பாவம் இருப்பதை உண்மையாகவே அறிந்து கொள்ளுகிறவர்கள் இந்தப் பாவத்திற்காக தாம் நரகம் செல்லுவதை தவிர்க்க முடியாது என்பதை உணரும் போது, கடைசியில் ஆவியில் எளிமை உள்ளவர்களாக மாறி உண்மையான இரட்சிப்பின் வார்த்தையை அவர்களால் கேட்க முடியும்.
இப்போது கர்த்தரிடம் இருந்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள நீங்கள் உண்மையாகவே விரும்பினால், உங்களுடைய இருதயங்கள் ஆயத்தம் செய்யப் பட வேண்டும். தம்முடைய இருதயங்கள் ஆயத்தமாக இருப்பவர்கள் கீழ்வருமாறு அவரிடம் ஒப்புக்கொள்ளுவர்: “இயேசுவானவரை நான் வெகுகாலமாக விசுவாசித்தேன், ஆனாலும் என் இருதயத்திலே பாவம் இன்னமும் இருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று இருப்பதினாலே, என்னால் நரகம் செல்லுவதை தவிர்க்க முடியாது. கர்த்தாவே, நான் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்.” இதனைப் போல, அவர்கள் கர்த்தருக்கு முன்னதாக தம்மை முழுவதுமாக பாவம் நிறைந்தவர்களாக அறிந்து கொள்ளுகிறார்கள். கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள், கர்த்தருடைய வார்த்தை அதன் படியாகவே நிச்சயமாக நிறைவேற்றப் பட்டது என்று விசுவாசிக்கிறவர்கள்௮தம்முடைய இருதயங்கள் ஆயத்தமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய மக்கள் இந்த வார்த்தையைக் கேட்டு, வார்த்தையை தம் சொந்த கண்களால் கேட்டு அதனை உறுதி செய்து, இவற்றை செய்வதினால் கீழ்வருமாறு அறிவார்கள், “ஆ, நான் இதுவரையில் தவறாக விசுவாசித்திருக்கிறேன். எண்ணிலடங்காத மக்கள் இப்போதும் இதே தவறினையே செய்துவருகிறார்கள்.” நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, மற்றவர்கள் எதனைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், அவர்கள் தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் மன்னிப்பை தவறாது பெற்றுக் கொள்ளுவார்கள்.
இந்த உலகம் முழுவதும் எத்தனை பேர் தவறாக விசுவாசிக்கிறார்கள் என்று நான் எண்ணும் போது, தவறான பாதையில் எத்தனை பேர் நடக்கிறார்கள் என்று எண்ணும் போது என் இருதயம் பெரிதும் வேதனை படுகிறது. சகோதர சகோதரிகளே, தேவன் நம்மை நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்க பயன் படுத்திய நற்செய்தி இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தினாலும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் நிறைவேற்றப் பட்டது. இயேசுவானவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தினால் ஏற்றுக் கொண்டு, சிலுவையின் இரத்தத்தினால் பாவத்தின் தண்டனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு, இதன் மூலமாக நம்மை இரட்சித்தார். ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தை நமக்கு கொடுத்து கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்று எந்த சந்தேகமும் இன்றி நாம் விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து இப்படியாக உங்களையும் என்னையும் நேரடியாக இரட்சித்தார் என்ற உண்மைக்காக நான் மிகவும் நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நீங்களும் நானும், எப்போதுமே சமாதானத்துடன் இருக்கிறோம், நம் இருதயங்கள் எப்போதும் மாறுவதில்லை.
தம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்ட அனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும்
இந்த உலகமானது தீமையான போதனைகள் நிறைந்ததாக இருக்கிறது ஆகவே மறுபடியும் பிறந்தவர்களின் இருதயங்களும் கூட சோதிக்கப் பட்டு நாசமாகும். இதனால் தான் இயேசு கிறிஸ்து கூறினார், “நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்” (மாற்கு 8:15). இத்தகைய மோசமான போதனைகள் எத்தனை இருக்கின்றன என்றும், அவைகளில் ஒன்றை மக்கள் கேட்கும் போது அவை அவர்களுடைய இருதயங்களை எத்தனையாக மோசமாக்கிறது என்றும் நம்மால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. காம விகாரத்தில் இந்த உலகமானது எத்தனையாக மூழ்கிப் போயிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசத்தை பாதுகாக்க நாம் இப்போது எத்தகைய காலத்திலே வாழுகிறோம் என்பதையும் நாம் துல்லியமாக அறிந்து விசுவாசிக்க வேண்டும். நாம் இத்தகைய பாவம் நிறைந்த உலகத்திலே வாழ்ந்தாலும் கூட, தேவன் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை செய்தார் என்று என்றும் மாறாத சத்தியம் நம் இருதயங்களில் இருக்கிறது. நம்முடைய மாறாத இரட்சிப்பிற்கு சாட்சியாக இருக்கக் கூடிய சாட்சியின் வார்த்தையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஆகும். உலகத்தால் அசையாததும் அதனால் இழுக்கப் படாததுமான சத்தியத்தை நாம் விசுவாசிக்க வேண்டும்.
உலகமானது சத்தியமான ஒன்றல்ல. அதற்கு மாறாக, அது சாத்தானுடைய பொய்யர்களால் நிறைந்திருக்கிறது. ஆயினும், நீதிமான்களால் உலகத்தை மேற்கொள்ள முடியும் என்று கர்த்தர் நம்மிடம் கூறினார். இந்த மாறாத சத்தியத்தின் நற்செய்தியின் மீதுள்ள அவர்களுடைய விசுவாசத்தால் தான் அவர்களால் சாத்தானை மேற்கொண்டு உலகத்தை வெற்றி கொள்ள முடிகிறது. நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும், நம் இருதயங்களும், நம் சிந்தனைகளும், நம் சரீரங்களும் தேவனுடைய வீட்டிலேயே இருக்கின்றன நாம் இன்னமும் இரட்சிப்பின் நற்செய்தியிலே விசுவாசத்தினாலே உறுதியாக நிற்கிறோம். தேவன் நம்மை முழுமையாக இரட்சிக்க பயன் படுத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே நாம் மிகவும் உறுதியாக நிற்கிறோம்.
ஆசரிப்புக் கூடாரத்தின் சுவர்களை அமைக்கும் பலகைகளாகவும் தூண்களாகவும் நிறுவப் பட்ட சீத்தீம் மரத்தின் பலகைகள், பொன்னினால் மூடப் பட்டிருந்தன. பலகைகள் வெள்ளிப் பாதங்களின் மீது நின்றதால், அவை உறுதியாக ஆடாமல் நிறுவப் பட்டிருந்தன. அதனைப் போல, நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த நம்முடைய விசுவாசங்களும் கூட எப்போதுமே மாறாத ஒன்றாக இருக்கின்றன. சீத்தீம் மரத்தின் பலகைகளின் மீது பூசப் பட்ட பொண் எப்போதும் மாறாது என்பதைப் போல, தூய பொன் எப்போதும் மாறாது என்பதைப் போல நம் விசுவாசமும் மாறாது, சீத்தீம் மரத்தின் பலகைகள் நெருப்பினால் எரியக் கூடியவை அல்ல, நீங்களும் நானும், இந்த முறையின் படியாக முழுமையாக இரட்சிக்கப் பட்டோம்.
இதன் காரணமாக, நாம் இத்தனையாக கர்த்தருக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருக்கிறோம். இந்த உலகத்திலே பாவம் எத்தனையாக பெருகியிருந்தாலும், நீதிமான்களாகிய நம்மிடம் உண்மையாகவே களங்கமில்லாத மனசாட்சி இருக்கிறது விசுவாசம் நம் இருதயங்களில் பொன்னைப் போல பிரகாசிக்கிறது. இந்த விசுவாசத்தால் உலகத்தை மேற்கொள்ளுகின்ற ஒரு வாழ்வை நீதிமான்களாகிய நாம் வாழுகிறோம். தேவன் திரும்பி வரும் அந்த நாள் வரையிலும், நாம் அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்த பிறகும் கூட, நாம் அனைவரும் இந்த விசுவாசத்தை துதிப்போம். நம்மை இரட்சித்த தேவனையும் நமக்கு இந்த விசுவாசத்தைக் கொடுத்த கர்த்தரையும் நாம் எப்போதும் துதிப்போம்.
நம்முடைய உண்மையான விசுவாசமானது கற்பாறையின் மீது கட்டப் பட்டதினால் எத்தகைய சூழ்நிலையிலும் அது ஆடிப் போகாது. இந்த நிலையில் இருந்து, தேவனுக்கு முன்னதாக நிற்கும் அந்த நாள் வரையிலும் நாம் இந்த பூமியிலே வாழும் போது என்ன நடந்தாலும் கூட, நாம் விசுவாசத்தால் நம் இருதயங்களை பாதுகாப்போம். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அழிந்து போனாலும் கூட, இந்த உலகமானது பாவத்தினால் மூழ்கிப் போனாலும் கூட, ஆதிகாலத்தில் இருந்த சோதோம் மற்றும் கொமோராவை விடவும் இந்த உலகமானது மோசமாகிப் போனாலும் கூட, நாம் இந்த பின்பற்றாமல், கர்த்தரையே நாம் மனம் மாறாது விசுவாசிப்போம், நாம் அவருடைய நீதியைக் கைக்கொள்ளுவோம், நாம் தொடர்ந்தும் இயேசுவானவருடைய இரண்டு இரட்சிப்பின் ஊழியங்களையும் (இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவையின் மரணம்) பரப்புவோம், அது உண்மையான கர்த்தருடைய கிருபைகளாக இருக்கின்றன.
நாம் எப்படி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கத் தொடங்கினோம் என்பதை எண்ணும் போது, கர்த்தருடைய கிருபையைக் குறித்து நான் பெரிதும் ஆச்சரியப் படுகிறேன். இந்த நற்செய்தியை நாம் எப்படி அறிந்து விசுவாசிக்கிறோம் என்பதைக் காணும் போதும், நாம் எப்படி கர்த்தருடைய நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கினோம் என்பதைக் காணும் போதும் என்னால் அளவில்லாத படி நன்றி கூற மட்டுமே முடிகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்த அவருடைய கிருபையாக இருப்பதினால், நம்மால் தேவனுக்கு கொடுக்க முடிவதெல்லாம் நம் விசுவாசத்தால் அவருக்கு நன்றி கூறி இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தைப் பரப்புவது மட்டுமே.
இந்த சத்தியத்தைக் கொடுத்தமைக்காக கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன்.