(யாத்திராகமம் 25:10-22)
“சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதன் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி, அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப்; பெட்டியிலே வைப்பாயாக. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீழமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.”
ஆசரிப்புக் கூடாரத்தின் உட்பக்கம் இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது: அது பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் ஆகியவை ஆகும். ஒரு திரைசீலை அவைகளுக்கு நடுவே தொங்க விடப் பட்டிருந்தது, உடன் படிக்கையின் பேழையானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் திரைசீலைக்கு பின்னால் இருந்தது. பேழையை மூடியிருந்த மூடியானது கிருபாசனம் என்று அழைக்கப் படுகிறது.
கிருபாசனமானது 2.5 முழம் நீளம் உடையது
வேதாகமத்திலே, ஒரு முழம் என்பது முழங்கையில் இருந்து நுனி விரல் வரை உள்ள நீளமாகும். ஆகவே, பழைய ஏற்பாட்டிலே ஒரு முழ நீளம் என்பது இன்றைய அளவுகோலின் படியாக 500 மிமீ நீளம் உள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில், இரண்டரை முழ நீளம் எனும் போது, கிருபாசனத்தின் நீளமானது இன்றைய அளவுகோலின் படியாக 1.0 மீட்டர் ஆகும்; அதனுடைய அகலமும் நீளமும், ஒன்றரை முழ நீளம் உடையதாக இருந்தது, அது 750 மிமீ ஆக இருக்கிறது. இந்த கிருபாசனத்திற்கு கீழே உடன்படிக்கையின் பேழை இருந்தது, இந்த பேழையானது சீத்தீம் மரத்தினால் தயாரிக்கப் பட்டு தூய பொன்னினால் மூடப் பட்டிருந்தது. கிருபாசனத்தின் இரண்டு பக்கங்களிலும், இரண்டு செருபீம்கள் தம்முடைய சிறகுகளை விரித்து வைத்திருந்தன, அவை தம் சிறகுகளால் கிருபாசனத்தை மூடி வைத்திருந்தன, அவற்றின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கி ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன. கிருபாசனம் என்பது, அதன் பெயர் குறிப்பிடுவதைப் போல, அது கர்த்தர் தன் கிருபையை அளித்த இடமாக இருக்கிறது.
கிருபாசனத்திற்கு அருகிலே நம்மை சந்திப்பதாக கர்த்தர் நம்மிடம் இங்கே கூறினார். உடன்படிக்கை பேழைக்கு உள்ளே, ஆரோனுடைய தளிர்த்த கோலும், மன்னாவை வைத்திருக்கும் பொன் பாத்திரமும், பத்துக் கற்பனைகள் பொறிக்கப் பட்ட இரண்டு கற்பலகைகளும் இருக்கின்றன. கிருபாசனத்தின் நான்கு மூலைகளிலும், நான்கு வளையங்கள் பொருத்தப் பட்டிருந்தன இதனால் உடன்படிக்கைப் பேழையை நம்மால் சுமந்து செல்ல முடியும். சீத்தீம் மரத்தினால் செய்யப் பட்டதும் பொன்னினால் மூடப் பட்டதுமான இரண்டு கம்புகள், இந்த பேழையை சுமந்து செல்லும் படியாக அந்த வளையங்களின் ஊடாக தினிக்கப் பட்டிருந்தன.
வருடத்திற்கு ஒரு முறை, தலைமை ஆசாரியன் பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்து வந்து அதனை கிருபாசனத்திற்கு மேலாகத் தெளித்தான். இஸ்ரவேலர்கள் ஒரு வருடமாக செய்த எல்லாப் பாவங்களையும் அவன் தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் மீது வைப்பதின் மூலமாக அதன் மீது சுமத்தியதினாலேயே அவன் இதனைச் செய்தான். இதனால் தான் நம் தேவன் இவ்வாறு கூறினார், “கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” (யாத்திராகமம் 25:22). அனைத்து மனிதர்களுக்கும் பாவங்களுக்கான மன்னிப்பை எடுத்து வருவதாக கூறிய தேவனுடைய வாக்குத்தத்தம் இதுவேயாகும். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதாக நாம் அறிவித்த போது, பழைய ஏற்பாட்டின் பலிகாணிக்கையைக் குறித்த விவரமான அறிவு நம்மிடம் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.
ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பேழையினை எடுத்துச் சென்ற போதெல்லாம், அவர்கள் பேழையின் இரண்டு கம்புகளினாலும் தூக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். இது எதனைக் குறிக்கிறது? கர்த்தர் தன்னுடைய இரட்சிப்பின் சத்தியத்தை நம் சரீரங்களினாலும் இருதயங்களினாலும் பிரசங்கித்து ஊழியம் செய்ய வேண்டுமென விரும்புகிறார் என்று இதற்கு பொருள் படுகிறது. நாம் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு பதிலாக ஐக்கியமாக ஊழியம் செய்ய வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார் என்றும் இதற்கு பொருள் படுகிறது. இதனால் தான் கிருபாசனம் மட்டுமின்றி, அப்பத்தின் மேசையும் தூப பீடமும் கூட அதிலே இணைக்கப் பட்டிருந்த வளையங்களின் மூலமாக தூக்கிச் செல்லப் பட வேண்டும் என கர்த்தர் கட்டளை இட்டிருந்தார். கர்த்தருடைய நற்செய்தியை பரப்புவதற்கு நாம் நம்முடைய எல்லா சரீரங்களையும் இருதயங்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று இதற்கு பொருள் படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இரட்சிப்பின் சத்தியத்தை பரப்பவும், நம் தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டு நம்மை முற்றிலும் நீதிமானாக மாற்றி விட்டார் என்று அனைவருக்கும் பிரசங்கிக்கும் படியாக நாம் நம்முடைய சரீரங்களையும் இருதயங்களையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் இங்கே நமக்கு கட்டளை இடுகிறார். இதனால் தான் உடன்படிக்கப் பேழையை இந்த கம்புகளின் மூலமாக தூக்கிச் செல்லும் படியாக கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் நம் இருதயங்களில் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம். உடன்படிக்கைப் பேழைக்கு உள்ளே மன்னாவை வைத்திருந்த பொன் குவளை ஒன்று இருந்தது. ஆவிக்குரிய படி பேசினால், மன்னா என்பதின் பொருள் கர்த்தருடைய வார்த்தை என்பதாகும். இந்தப் பேழையிலே ஆரோனுடைய தளிர்த்த கோலும் இருந்தது. ஆரோனுடைய தளிர்த்த கோலானது இயேசுவானவருடைய உயிர்த்தெழுதலைக் குறிப்பிடுகிறது, அவர் ஜீவனின் தேவன் ஆவார். கடைசியாக, இந்தப் பேழையிலே கர்த்தருடைய பத்துக் கற்பனைகள் பொறிக்கப் பட்ட உடன் படிக்கை இருந்த இரண்டு கற்பலகைகளும் இருந்தன. நாம் நம்முடைய முழு இருதயங்களுடனும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று இது நமக்கு காட்டுகிறது.
கிருபாசனத்திற்கு அருகிலே நம்மைச் சந்திப்பதாக தேவன் கூறினார்
ஆவிக்குரிய படியாக பேசினால், கிருபாசனம் என்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை குறிக்கிறது, அங்கே நம் தேவன் நம்மை சந்திக்கிறார். செருபீமிற்கும் கிருபாசனத்திற்கும் இடையே நம்மைக் காணும் தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து நம்மிடம் பேசுகிறார். இந்த கிருபாசனமானது பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்து நம்மிடம் ஆவிக்குரிய படி கூறுகிறது. நம் தேவன் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். இதனால் தான் கர்த்தர் நமக்குத் தன் இரட்சிப்பின் கிருபை அளிக்கும் ஒரு இடமாக கிருபாசனத்தை நம்மால் அழைக்க முடிகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், கிருபாசனம் நம் பாவ நிவாரணத்தை சுட்டிக் காட்டுகிறது, நம் தேவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து விட்டார் என்று அது நம்மிடம் காட்டுகிறது.
அப்படியானால் இஸ்ரவேல் மக்களைக் குறித்து என்ன? அவர்களுடைய பாவங்களை தேவன் எப்படித் துடைத்தார்? கிருபாசனத்தின் தெளிக்கப் பட்ட இரத்தத்தின் மூலமாக அவர் அப்படிச் செய்தார், ஏனெனில் அது இஸ்ரவேல் மக்களுடைய ஒருவருடத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்ட பலிகாணிக்கை மிருகத்தினால் சிந்தப் பட்ட இரத்தமாகும். பாவ நிவாரண நாளிலே, தலைமை ஆசாரியன் தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது வைத்து இஸ்ரவேல் மக்களின் ஒருவருடத்தின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தி, அதன் இரத்தத்தை எடுக்கும் படியாக அதன் கழுத்தை வெட்டினான். அதன் பிறகு இஸ்ரவேல் மக்கள் அனைவரும் ஒரு வருடம் முழுவதும் செய்த பாவங்களை நிவர்த்தி செய்யும் படியாக இந்த இரத்தம் கிருபாசனத்தின் மீது தெளிக்கப் பட்டது. பழைய ஏற்பாட்டின் காலத்திலே கைக்கொள்ளப் பட்ட இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் முறையானது புதிய ஏற்பாட்டுக் காலத்திலே நிறைவேற்றப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பேசுகிறது. பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தையே மனிதகுலத்தின் கிருபாதார பலியாக ஒப்புகொடுத்து நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார்.
ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பிரகார வாசலைப் போல, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலாகிய திரைச்சீலையும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினாலேயே உருவாக்கப் பட்டிருந்தது. இங்கே பயன் படுத்தப் பட்ட இளநீல நூலின் ஆவிக்குரிய பொருளானது, இயேசுவானவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார் என்பதையே கூறுகிறது. இயேசு கிறிஸ்து தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினாலேயே அவரால் மனிதகுலம் முழுமையினதும் எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையில் அறையப் பட்டு தண்டிக்கப் பட முடிந்தது. இதுவே ஆசரிப்புக் கூடாரத்திலே மறைந்திருக்கும் ரகசியத்தின் சத்தியமாகும். நம் தேவன் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு அவை அனைத்திற்குமான தண்டனையை சிலுவையில் ஏற்றுக் கொண்டார். ஆகவே, இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்ற சத்தியத்தை அனைவரும் முழு இருதயத்துடனும் இப்போது விசுவாசிக்க வேண்டும் என்று பிதாவாகிய கர்த்தர் விரும்புகிறார். தன்னுடைய சொந்த மக்களாக மாறிய அனைத்து பரிசுத்தவான்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்ய வேண்டுமென கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருடைய இந்த சித்தத்தை நாம் அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும். இப்போது நாம் நீதிமான்களாக மாறிவிட்டோம், ஆகவே கர்த்தர் நம் அனைவரிடம் இருந்தும் எதனை எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே பயன் படுத்தப் பட்ட இரத்தாம்பர நூலானது இயேசுவானவர் ராஜாதி ராஜா என்பதை சுட்டிக் காட்டுகிறது
இயேசு கிறிஸ்து கர்த்தராகவும் நித்திய ஜீவனின் தேவனாகவும் இருக்கிறார் (1 யோவான் 5:20). வேறு வார்த்தைகளில் கூறினால், நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை செய்ய கர்த்தர் தாமே மனிதனாக பிறந்தார். கர்த்தர் இதனை ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக வாக்குத்தத்தம் செய்தார், அவர் கூறினார், “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (மத்தேயு 1:23, ஏசாயா 7:14). பாவிகளாகிய நம் அனைவரையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க, இயேசு கிறிஸ்து பரலோகத்தின் மகிமையான சிங்காசனத்தை விட்டு இறங்கி கன்னி மரியாளின் சரீரத்தின் மூலமாக இந்த பூமிக்கு வந்தார், அது தேவன் உண்மையாகவே இந்த பூமியிலே பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்னதாக ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக வாக்குத்தத்தம் செய்யப் பட்டது. கர்த்தர் இப்படியாக மனிதராக மாறி ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக ஒவ்வொரு பாவியுடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து, இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம் அனைவரையும் தன் நீதியினால் தரிப்பித்தார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே பயன் படுத்தப் பட்ட சிவப்பு நிற நூலானது இயேசுவானவர் தன்னுடைய பலியின் மூலமாக நமக்கு எடுத்து வந்த புதுவாழ்வைக் குறிக்கிறது
யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்ட இயேசுவானவர், நமக்காக சிலுவையில் அறையப் பட்டார். அவர் தன்னுடைய கைகளிலும் கால்களிலும் ஆணியால் அறையப் பட்டார், தேவன் அனுபவித்த தண்டனையானது உங்களையும் என்னையும் போன்ற அனைத்து பாவியும் அனுபவிக்க வேண்டிய தண்டனையாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், தேவன் தாமே நமக்காக சிலுவையில் அறையப் பட்டு இதன் மூலமாக அவர் நம்முடைய இடத்தில் இருந்து நம் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையையும் சுமந்தார். ஆசரிப்புக் கூடார வாசலின், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் கூறப் பட்ட இந்த மூன்று இரட்சிப்பின் ஊழியங்களின் மூலமாகவும், நம்மால் உண்மையான இரட்சிப்பின் செயலை சரியாக புரிந்து கொள்ள முடியும். இயேசுவானவர் தன்னுடைய இரட்சிப்பின் செயலின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக சுமந்ததை நம்மால் காண முடியும், மேலும் அவர் இந்த பாவங்களுக்காகவும் தண்டனையை அனுபவித்தார். இதனால் தான் இந்த அழகிய நற்செய்தியை உலகம் முழுவதில் உள்ள அனைவருக்கும் பிரசங்கம் செய்யும் படியாக தேவன் நம் அனைவருக்கும் கட்டளை இடுகிறார்.
ஆசரிப்புக் கூடாரத்தின் உடன்படிக்கை பேழையானது கிருபாசனத்தினாலே மூடப் பட்டிருந்தது. உடன்படிக்கைப் பேழையை மூடியிருக்கின்ற இந்த கிருபாசனத்தின் மீதிருந்து கர்த்தர் யாரை சந்திக்கப் போகிறார்? தம்முடைய எல்லாப் பாவங்களும் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவானவரின் மீது சுமத்தப் பட்டது என்றும் இந்த எல்லாப் பாவங்களுக்குமாக அவர் தண்டிக்கப் பட்டார் என்று விசுவாசிக்கிறவர்களை மட்டுமே அவர் சந்திக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆவிக்குரிய படியாக பேசினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை மட்டுமே கர்த்தர் சந்திக்கிறார். பாவ நிவாரண நாள் வரும் போது, தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களுடைய ஒருவருடத்திற்கான எல்லாப் பாவங்களையும் இரண்டு ஆடுகளில் ஒன்றின் தலையிலே தன் கைகளை வைத்து இஸ்ரவேல் மக்களுடைய எல்லாப் பாவங்களையும் அவர்களின் சார்பாக அறிக்கைச் செய்து அதன் மீது சுமந்தினான். இப்படியாக ஒவ்வொரு இஸ்ரவேல் மக்களுடைய வருடாந்தர பாவங்கள் அனைத்தையும் இந்த பலிகாணிக்கை ஆட்டின் தலைமீது தன் கைகளை வைத்து சுமத்திய தலைமை ஆசாரியன், அதன் இரத்தத்தைப் பிடித்து, இந்த இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்துச் சென்று, அதனை கர்த்தருடைய உடன்படிக்கைப் பேழையின் மீது ஏழுதரம் தெளித்தான்.
இப்படியாகத் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை பழைய ஏற்பாட்டின் காலத்தின் போது சந்தித்தார். இப்போது கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை சந்தித்து வருகிறார், இயேசுவானவர் நமக்காக யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்தார் என்று இது நம்மிடம் அறிவிக்கிறது. ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களிடம் தேவன் இவ்வாறு கூறுகிறார், “உங்களிடம் பாவம் இல்லை. நான் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டேன். நான் உங்களுடைய ஒவ்வொரு பாவத்தில் இருந்தும் உங்களை இரட்சித்தேன்.” வேறு வகையாகக் கூறினால், கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களின் மீது தேவன் கர்த்தருடைய கிருபையை அருளிச் செய்தார். கர்த்தருடைய கிருபை அவருடைய வரத்தைக் குறிக்கிறது. பிதாவாகிய கர்த்தர் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருடைய பாவங்களையும் தன் சொந்த குமாரரின் மீது சுமத்தினார் என்ற சத்தியத்தை அது குறிப்பிடுகிறது. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்தவராக இயேசுவானவர் சிலுவையில் அறையப் பட்டார் என்றும், அவர் நம்முடைய இடத்தில் இருந்து நம் பாவங்களுக்கான எல்லாத் தண்டனையையும் சுமந்தார் என்றும் அதற்கு பொருள் படுகிறது. இதுவே கிருபாசனத்திலே வெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய அன்பாக இருக்கிறது.
நம் தேவனாகிய, தேவ குமாரர், மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்து, தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, நம் இடத்தில் இருந்து சிலுவையில் மரித்து, மூன்று நாட்களி மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, பிதாவாகிய கர்த்தருடைய சிங்காசனத்திற்கு வலது பக்கத்திலே அமரும் படியாக பரலோகம் ஏறிச் சென்றார். கர்த்தர் நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்பது கர்த்தருடைய நீதியாக இருக்கிறது, இந்த கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பவர்களின் மீது கர்த்தருடைய கிருபை அருளப் படுகிறது. கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் நம் அனைவரிடம் அவர் இவ்வாறு கூறுகிறார், “நீங்கள் என்னுடைய மக்கள். நீங்கள் இனிமேலும் பாவிகள் அல்ல. நான் உங்கள் அனைவரையும் இரட்சித்தேன். நான் உங்கள் மீது வைத்த அன்பு மிகவும் பெரிதாகையால் நான் என்னுடைய சொந்த விருப்பத்திலே எந்த நிபந்தனையும் இன்றி உங்களை இரட்சித்தேன். நான் உங்களை விசுவாசிப்பது மட்டுமல்லாமல், உங்களுடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து உங்களுக்காக என் உயிரை விட்டதின் மூலமாக என் அன்பை விளக்கிக் கூறினேன். இதுவே என் அன்பிற்கான அத்தாட்சியாக இருக்கிறது, இதனை நான் உங்கள் அனைவருக்கும் காட்டினேன்.”
கர்த்தர் தன் வார்த்தையின் மூலமாக நமக்கு காட்டியது என்ன?
கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் திரும்பும் போது, கர்த்தர் நம்முடைய பாவங்களைக் குறித்து கூறினாலும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அவர் நம்மை எப்படி நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்பதைக் குறித்தும் அவர் அதிகமாக பேசுகிறார். நம்முடைய இரட்சிப்பை வாக்குத்தத்தம் செய்த கர்த்தர், தான் வாக்குத்தத்தம் செய்த படியே நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து விட்டார், இந்த நிறைவேற்றுதலின் விளைவு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாக இருக்கிறது. இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது வேதாகமத்திலே எழுதப் பட்ட நம் இரட்சிப்பிற்கான அத்தாட்சியாக இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தினால் தான் நாம் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டோம். ஆகவே, நாம் நம் பரிசுத்தமான தேவனுடைய சந்நிதானத்திற்கு முன்னதாக வரும் போதெல்லாம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக அவரை சந்திக்க முடியும், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே இருக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட அவருடைய இரட்சிப்பை விசுவாசிக்க வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது தேவன் நமக்கு கொடுத்த வரமாகும், நாம் இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசிக்கும் போது, நம் தேவன் நம்மை சந்திப்பார். தேவன் தம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பதற்காக இந்த பூமிக்கு வந்தார் என்றும், அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, தம்முடைய இடத்தில் இருந்து சிலுவையில் தண்டிக்கப் பட்டு, தமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார் என்று விசுவாசிப்பவர்களை மட்டுமே தேவன் சந்திக்கிறார் என்று இதற்கு பொருள் படுகிறது. ஆகவே கர்த்தர் தன்னுடைய நீதியை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே தன் கிருபையை அளிக்கிறார். கர்த்தர் நம்மிடம் இவ்வாறு கூறுகிறார், “நீங்கள் வெறும் படைப்புகளாக மட்டுமே இருந்தாலும் கூட, நான் உங்களை என் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் தத்தெடுத்தேன். இப்போது நீங்கள் என்னுடைய சொந்த பிள்ளைகள். நீங்கள் இனிமேலும் சாத்தானின் பிள்ளைகள் அல்ல, அல்லது வெறும் படைப்புகளும் அல்ல. நீங்கள் என்னுடைய சொந்த பிள்ளைகள். என் குமாரராகிய இயேசுவானவருடைய நீதியின் மூலமாக உங்களுடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தேன். ஆகவே நான் உங்களை என் சொந்த குடும்பத்திற்குள் தத்தெடுத்து, உங்களுடைய விசுவாசத்தை முன்னிட்டு, இப்போது நீங்கள் என்னுடைய சொந்தப் பிள்ளையாக மாறினீர்கள்.” இதனைப் போல, கர்த்தர் தன்னுடைய கிருபையுன் இரட்சிப்பை நம் அனைவருக்கும் அருளிச் செய்தார்.
கிருபாசனத்தின் வளையங்களின் ஊடாக செருகப் பட்டுள்ள கம்புகளை வெளியே எடுக்க கூடாது
கிருபாசனத்தை சுமந்து செல்லும் படியாக அதன் இருபக்கத்திலும் இரண்டு கம்புகள் இருந்ததை நாம் நினைவில் வைத்திருப்பது நமக்கு மிகவும் முக்கியமாகும். அவற்றை பேழையில் இருந்து எப்போதுமே அகற்றக் கூடாது. ஒவ்வொரு விசுவாசியும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள தன் விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அதனை அவன் தன் சரீரத்தாலும் இருதயத்தாலும் ஊழியம் செய்ய வேண்டும் என்றும் இது சுட்டிக் காட்டுகிறது. ஆயினும், இன்று இருக்கின்ற அநேக கிறிஸ்தவர்கள் தம் இருதயங்களாலும் சரீரங்களாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்வதை மறுப்பது மட்டுமில்லாமல், இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதுமில்லை. இயேசுவானவரை விசுவாசிப்பதாக எண்ணிலடங்காத கிறிஸ்தவர்கள் அறிக்கைச் செய்தாலும் கூட அவர்களில் அநேகர் தாம் மறுபடியும் பிறந்ததாக கூறினாலும் கூட, அவர்கள் தம்மை அதிமேதாவிகளாக எண்ணி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க விரும்புவதும் இல்லை. இத்தகைய தவறான கிறிஸ்தவர்கள் அனைவரையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் படியாக கர்த்தர் புத்திமதி கூறுகிறார்.
யாத்திராகமம் 25:15 கூறுகிறது, “அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.” நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அப்படியே பிரசங்கிக்க வேண்டும் என்று இந்த வசனம் நமக்கு போதிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே வெளிப்படுத்தப் பட்ட ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலுள்ள இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் ரகசியத்தை ஒவ்வொரு பாவிக்கும் பிரசங்கிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மோசேயுக்கு காட்டப் பட்ட படியாக ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும் படியாக கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டார், கர்த்தருடைய வார்த்தையின் படியாக நாம் இயேசுவானவரை அப்படியே விசுவாசிக்க வேண்டும் என்று இதற்கு பொருள் படுகிறது. ஆயினும், அப்படி இருந்தாலும் கூட, இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவானவரைத் தம் சொந்த வழிகளிலே விசுவாசிப்பதாக கூறுகிறார்கள், அவர்கள் தம் விசுவாசத்தில் இருந்து அவருடைய ஞானஸ்நானத்தை விட்டு விடுகிறார்கள்.
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் உருவாக்கப் பட்டது. இந்த வாசல் தேவனால் ஆயத்தம் செய்யப் பட்ட இரட்சிப்பின் வாசலை சுட்டிக் காட்டுகிறது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மட்டுமே விசுவாசித்து நாம் அனைவரும் அதனுள்ளே பிரவேசிக்க வேண்டும். இங்கே மெல்லிய பஞ்சு நூல் என்பது கர்த்தருடைய வார்த்தையை குறிப்பிடுகிறது. கர்த்தருடைய வார்த்தையானது அவருடைய ஊழியர்களில் 40 பேரிடம் கூறப் பட்டது. கர்த்தர் தன்னுடைய இந்த தீர்க்கதரிசன வார்த்தையை 1,500 வருடங்களுக்கு முன்னதாக தன் ஊழியர்களிடம் கூறி நேரம் வரும் போது தன் சரீரத்தின் மூலமாக ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் நிறைவேற்றினார். வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நம் தேவன் நம் இரட்சிப்பை ஒரேதரமாக நிறைவேற்றினார்.
ஆயினும், கவலை தரும் விதமாக, இந்த உலகத்தில் உள்ள அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதுமில்லை அல்லது அதனை அப்படியே பிரசங்கம் செய்வதும் இல்லை. அப்படியானால் உங்களைக் குறித்து என்ன? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டீர்களா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டிருந்தால், இந்த நற்செய்தியை கர்த்தருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ளபடி அப்படியே நீங்கள் பிரசங்கிக்க வேண்டும்.
நம் தேவன் நமக்கு கொடுத்த கிருபையின் இரட்சிப்பானது நம்முடைய அனைத்து மீறுதல்களை விடவும் மிகவும் பெரிது
ஒரு மனிதனுடைய பாவத்தினால் அனைவரும் பாவிகளாக மாறியதாகவும், ஒரே ஒரு மனிதராகிய நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அநேகர் நீதிமான்களாக மாறியதாகவும் வேதாகமம் கூறுகிறது. ஆதாம் என்ற ஒரு மனிதனுடைய பாவத்தினால், நீங்கள் ஒரு பாவியாக மாறினீர்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் ஆதாமுடைய ஒரு சந்ததியினனாக பிறந்ததினால் தானாகவே ஒரு பாவியாக மாறி விட்டீர்கள். ஆதாமும் ஏவாளும் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்ததினால், நாம் அனைவரும் இயற்கையாகவே பாவிகளாக மாறி விட்டோம்.
ஆயினும், இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த கர்த்தருடைய கிருபையானது நாம் செய்த எல்லாப் பாவங்களையும் விடவும் மிகவும் பெரியதாக இருக்கிறது. நாம் மரிக்கும் அந்த நாள் வரையிலும் நாம் இந்த பூமியிலே எண்ணிலடங்காத பாவங்களைச் செய்து வந்தாலும் தொடர்ந்தும் நாம் பாவம் செய்தாலும், தேவன் முழுமையாக நிறைவேற்ற கர்த்தருடைய நீதியின் மூலமாக இந்த எல்லாப் பாவங்களையும் கூட முழுமையாக துடைத்து விட்டார். பரலோகத்தின் மகிமையான சிங்காசனத்தை விட்டு விட்டு, நம் தேவன் இந்த பூமிக்கு மனித மாமிசத்திலே அவதாரம் எடுத்து வந்தார்; அவர் யோவான் ஸ்நானனமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சும்ந்தார்; அவர் நம்முடைய இடத்தில் இருந்து தன் சொந்த இரத்தத்தைச் சிந்தினார்; இந்த இரட்சிப்பின் செயலின் மூலமாக, நாம் செய்த எல்லாப் பாவங்களையும் நாம் செய்யப் போகின்ற எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்து விட்டார். நம்மால் கற்பனை செய்து பார்க்கக் கூடிய அனைத்து பாவங்களை அவர் அழித்து விட்டார், இன்னமும் இந்த உலகத்தில் பிறக்காதவர்களின் பாவங்களையும் இன்னமும் செய்யப் படாத எண்ணிலடங்காத பாவங்களையும் அவர் மன்னித்து அழித்து விட்டார். நம் தேவன் இந்த பூமிக்கு வந்ததின் மூலமாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலுள்ள இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவறிலே வெளிப்படுத்தப் பட்ட தன் இரட்சிப்பினால் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி நம்மை முழுமையாக மாற்றினார். ஆகவே, நம்முடைய எல்லாப் பாவங்களையும் இந்த பூமியிலே துடைத்து இயேசு கிறிஸ்து நமக்கு எடுத்து வந்த இந்த இரட்சிப்பானது, ஒரு மனிதனுடைய பாவத்தினால் நாம் செய்து வருகின்றதும் செய்யப் போகின்றதுமான நம்முடைய எல்லாப் பாவங்களையும் விடவும் மீறுதல்களை விடவும் மிகவும் பெரிதானதாக இருக்கிறது. இதனால் தான் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீதிமான்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தின் மூலமாக நாம் முழுவதுமாக பாவம் இல்லாதவர்களாக மாறினோம்.
கிருபாசனத்திலே நம்மை சந்திப்பதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார்
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருந்த உடன் படிக்கை பேழையிலே இரண்டு தேவதூதர்கள் தம் இறக்கைகளை விரித்து கிருபாசனத்தை நோக்கி ஒருவரின் முகத்தை ஒருவர் பார்ப்பதை போல அமைக்கப் பட்டிருந்தது. அங்கே நம்மால் எதனை பார்க்க முடியும்? நம்மால் இரத்தத்தைப் பார்க்க முடியும். இது யாருடைய இரத்தம்? பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, அது பலிகாணிக்கை மிருகத்தின் நிவர்த்திக்கும் இரத்தமாக இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்திலே, அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், கிருபாசனத்திலே நாம் காணக் கூடிய இரத்தமானது பிதாவாகிய கர்த்தருடைய குமாரரின் இரத்தமாகும். இது இயேசுவானவர் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் சுமந்த பிறகு சிலுவையிலே சிந்திய இரத்தமாகும். இந்த பலிகாணிக்கையின் மூலமாக, தேவ குமாரருடைய ஞானஸ்நானத்தையும் அவருடைய இரத்தத்தையும் விசுவாசிக்கிற அனைவரும் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவர். அவர் அவர்களைத் தன் சொந்த மக்களாகவும் மாற்றுகிறார். இதுவே கிருபாசனத்திலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும்.
நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கும் போதெல்லாம், வேதாகமத்தில் எழுதப் பட்டுள்ளதைப் போல அதனை துல்லியமாக பிரசங்கிக்க வேண்டும். நம்மில் யாரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு தவறான முறையிலே பிரசங்கிக்கவோ ஊழியம் செய்யவோ கூடாது. நம்மால் பிரசங்கிக்கப் படும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேட்டு அதனைத் தம் முழு இருதயங்களாலும் விசுவாசித்தால் அவர்களால் இரட்சிக்கப் பட முடியும். ஆயினும், அப்படி இருந்தாலும் கூட, சில கிறிஸ்தவர்கள் நம்மை கண்டிக்கிறார்கள், இயேசுவானவரை எப்படி விசுவாசித்தாலும் அவர்கள் பாவம் இல்லாதவர்களாக இருப்பதாக கூறுகிறார்கள். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எப்படியோ இயேசுவானவருடைய பெயரை விசுவாசித்ததின் மூலமாக யாராவது ஒருவர் பாவம் இல்லாதவராக மாறியிருக்கிறாரா? இயேசுவானவர் உங்களுடைய இடத்தில் இருந்து சிலுவையில் அறையப் பட்டு மரண தண்டனையைப் பெற்றுக் கொண்டார் என்று குருட்டுத்தனமாக விசுவாசிப்பதின் மூலமாக உங்களுடைய பாவங்கள் உண்மையாகவே மறைந்து விட்டதா? இல்லை, அப்படி மறையவில்லை! ஆனாலும் இந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவானவரை இப்படி குருட்டுத் தனமாக விசுவாசிக்கிறார்கள், ஏனெனில் தாம் பாவமில்லாதவர்கள் என்று கூறப் படுவதைக் கேட்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் ஆயினும் இது உண்மை அல்ல. அநேக கிறிஸ்தவர்கள் ஏன் இத்தகைய பாதுகாப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள கூடியதே; எப்படிப் பார்த்தாலும், நீங்கள் சிறைச்சாலையில் இருக்கும் போது அரசு உங்களுக்கு மன்னிப்பு வழங்கினால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆயினும், இந்த மன்னிப்பு, உண்மையிலேயே ஒரு மன்னிப்பு இல்லை.
வேதாகமம் தெளிவாக கூறுகிறது “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). மனிதகுலத்தின் பாவங்கள் நிவர்த்திக்கப் படுவதற்கான வழி என்ன? அவர்களால் எப்படி நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை, அதாவது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே அவர்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனையும் அடைய முடியும். இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பவர்களால் மட்டுமே கர்த்தருடைய பிள்ளைகளாக மாற முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தருடைய நற்செய்தியாக இருக்கிறது, இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசத்தால் பிரசங்கித்து பரப்புகின்ற கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இப்போது நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து ஆவிக்குரிய படியான இஸ்ரவேலர்களாக மாறினோம். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது குறைந்தது இரண்டு பேராலோ அல்லது அதிகமானோராலோ ஐக்கியமாக ஊழியம் செய்யப் படவேண்டியது ஆகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கிக்கும் போதெல்லாம், ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே வெளிப்படுத்தப் பட்டுள்ள இரட்சிப்பின் சத்தியத்தை நாம் பிரசங்கிக்க வேண்டும். தேவன் நமக்கு வாக்குத்தத்தம் செய்த படியாக கர்த்தருடைய நீதியை முழுமையாக நிறைவேற்றினார். இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, பரலோகத்திற்கு ஏறிச் சென்றதின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து தன் விசுவாசிகளாகிய நம்மை இரட்சித்தார் என்பது இந்த நீதியாகும். நாம் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அப்படியே பிரசங்கம் செய்ய வேண்டும், இந்த நற்செய்தியை கேட்பவர்கள் தம் இரட்சிப்பை அடைய அதனை அப்படியே விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கம் செய்வது எத்தனை முக்கியமானது என்பதை என்னால் போதுமான அளவிற்கு வலியுறுத்த முடியவில்லை. நாம் இந்த உண்மையான நற்செய்தியை பிரசங்கிக்கும் போது அவற்றைக் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பை எடுத்து வருகிறார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம்முடைய இரட்சிப்பாகும். அது நம்முடைய பாவநிவாரணம் ஆகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினாலே கர்த்தர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து விட்டார். நாம் செய்த ஒவ்வொரு பாவங்களும் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் மீது சுமத்தப் பட்டது, இப்படியாகத் தான் நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான நிவாரணம் செய்யப் பட்டது. அதற்கு மேலும், நம்முடைய தேவன் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்தது மட்டுமின்றி, அவர் நம்முடைய இடத்தில் இருந்து சிலுவையிலும் அறையப் பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தி, நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய சாபங்களை எல்லாம் அவரே ஏற்றுக் கொண்டார். இப்படியாகத் தான் இயேசுவானவர் நம் ஒவ்வொருவரையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் சாபங்களில் இருந்தும் இரட்சித்தார். இதுவே தேவன் நமக்கு எடுத்து வந்த இரட்சிப்பாக இருக்கிறது, இது அவருடைய அன்பாகவும் இருக்கிறது. ஆகவே நீங்கள் இந்த இரட்சிப்பின் சத்தியத்தை அப்படியே விசுவாசித்து அதனை விசுவாசத்தால் பிரசங்கிக்க வேண்டும்.
நம்முடைய தேவன் தன்னுடைய நீதியை விசுவாசிக்கும் அனைவருக்கும் இரட்சகராக இருக்கிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தால் தான் நம்மால் கர்த்தருடைய சந்நிதானத்திற்குள் வரமுடிகிறது. நாம் கிருபாசனத்திற்கு முன்னதாக நின்று நம் தேவனாகிய கர்த்தருக்கு பலிகாணிக்கையைக் கொடுக்கும் போது, நாம் விசுவாசத்தால் அவரை அனுக வேண்டியதிருக்கிறது, நாம் அவரிடம் கூற வேண்டும், “கர்த்தாவே, உம்முடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னை என் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தது.” அப்போது தான் கர்த்தர் கூறுவார், “ஆமாம், நான் உன்னை இரட்சித்தது உண்மைதான். நான் உன்மீது வைத்த அன்பு மிகவும் பெரியதாக இருப்பதினால் நானே உன்னை இரட்சித்தேன்.” தேவன் நம்முடைய இரட்சகர். கர்த்தருடைய நீதியிலே தம் விசுவாசத்தை வைத்து அவரை அனுகும் அனைவருக்கும் கர்த்தர் தன் சந்நிதானத்தை அருளிச் செய்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தம் இருதயங்களில் ஏற்றுக் கொண்ட நமக்கும் மற்ற அனைவருக்கும் கர்த்தருடைய சொந்தப் பிள்ளைகளாக மாறக் கூடிய உரிமையை அவர் கொடுத்தார். கர்த்தர் நம்மை நம்முடைய எல்லாப் சாபங்களில் இருந்தும், எல்லா தண்டனைகளில் இருந்தும், நம்முடைய அழிவிலிருந்தும் விடுதலைச் செய்தார். தன்னை விசுவாசிக்கும் விசுவாசிகளை அவர் முற்றிலும் பாவம் இல்லாதவர்களாக மாற்றினார். அவர் நமக்கு நித்தியமான மகிழ்ச்சியைத் தந்தார். இதுவே கிருபாசனத்திலே வெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய கிருபையாக இருக்கிறது.
இந்த கிருபாசனத்தின் மீது வீற்றிருந்தே கர்த்தர் தன் இரட்சிப்பின் கிருபையை நமக்குத் தந்தார். ஆகவே நாம் அனைவரும் கிருபையின் சிங்காசனத்திற்கு முன்னதாக கர்த்தருடைய நீதியை விசுவாசித்து வர வேண்டும். நீங்கள் எத்தனை பாவம் நிறைந்தவராக இருந்தாலும் மோசமான நிலையில் இருந்தாலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் இருக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை, அதாவது இயேசுவானவருடைய ஞானஸ்நானம், அவருடைய இரத்தம், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவற்றை விசுவாசித்து உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும். இப்படிப் பட்ட விசுவாசத்துடனே நீங்கள் கர்த்தருடைய சந்நிதானத்திற்கு முன்னே வர வேண்டும், இதுவே கர்த்தர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நிறுவிய இரட்சிப்பின் பிரமாணமாக இருக்கிறது. நீங்கள் கர்த்தருடைய நீதியை விசுவாசித்து அவருக்கு முன்னதாக வர வேண்டும். எல்லாப் பாவிகளையும் இரட்சிப்பதற்காக தேவன் இந்த பூமிக்கு வந்தார் என்றும், அவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்தர் என்றும், அவர் உங்களுடைய இடத்தில் இருந்து உங்கள் எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையில் மரித்து தண்டனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் நீங்கள் விசுவாசித்து கர்த்தருடைய இந்த நீதியை விசுவாசிப்பதின் மூலமாக நீங்கள் அவருக்கு முன்னே வர வேண்டும். தேவன் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக எடுத்துப் போட்டார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும், நீங்கள் கர்த்தரிடம் கூற வேண்டும், “தேவனே, நீர் என்னை என் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க செய்த அனைத்து காரியங்களையும் நான் விசுவாசிக்கிறேன்!” இந்த விசுவாசத்தால் நீங்கள் கர்த்தரிடம் வரும் போது மட்டுமே உங்களால் இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
தேவனுடைய நீதியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் சரியாக அறிந்து விசுவாசித்தால் மட்டுமே உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இதற்கான காரணமாகும். தேவனை நீங்கள் சந்தித்து அவருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், உண்மையாகவே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமானால், நீங்கள் கர்த்தரிடம் திரும்பி வந்து அவருடைய அன்பிற்குரிய படைப்பாக அவருடனே வாழ வேண்டுமானால், தேவன் உங்களை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிப்பதற்காக, யோவான் ஸ்நானனிடமிருந்து அவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்றும், இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் தோளிலே சுமந்த அவர் மரிக்கும் படியாக சிலுவையில் அறையப் பட்டார் என்றும், இதன் மூலமாக அவர் உங்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலைச் செய்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்க வேண்டியதிருக்கிறது. நீங்கள் இந்த இரட்சிப்பின் சத்தியத்தின் மீது விசுவாசம் வைத்து கர்த்தருடைய இரட்சிப்பை ஏற்றுக் கொண்டால், நிச்சயமாகவே நீங்கள் விடுவிக்கப் படுவீர்கள். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கும் போதெல்லாம் இந்த கருத்தை நினைவில் வைத்திருப்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே வேதாகமத்தில் எழுதப் பட்ட ஒரே உண்மையான நற்செய்தியாக இருக்கிறது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கும் அப்பத்தின் மேசையை ஒரு முறை பாருங்கள். அப்பத்தின் மேசையானது கர்த்தருடைய வார்த்தையை குறிப்பிடுகிறது. இதனைப் போல, கர்த்தருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயம் விசுவாசம் வைக்கும் போது தான், உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
அப்படியிருந்தும், இன்றைய “பிரபலமான ஊழியர்கள்” என்று அழைக்கப் படுகிறவர்கள் இரட்சிப்பை எப்படி போதிக்கிறார்கள்? ஒருவன் இயேசுவானவரை எப்படியோ தன்னுடைய இரட்சகராக விசுவாசித்தால் அவனால் இரட்சிக்கப் பட முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆயினும், நீங்கள் இயேசுவானவரை இப்படி குருட்டுத்தனமாக விசுவாசித்தால், நீங்கள் உங்களுடைய வாழ்விலே செய்த எந்தப் பாவங்களும் மறைந்து போகாது. இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோரிடம் அவர்களுடைய இருதயங்களில் அவர்களுடைய எல்லாப் பாவங்களும் அப்படியே இருக்கின்றன. இந்த தவறுதலாக வழிநடத்தப் பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விட்டு விட்டு அவரை குருட்டுத்தனமாக விசுவாசிப்பதினால், அவர்களுடைய இருதயங்கள் முற்றிலும் பாவம் இல்லாததாக இருப்பது இயலாத காரியமாகும். அவர்கள் தம்முடைய எல்லாப் பாவங்களையும் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தாததே அதற்கு காரணமாகும். அவர்கள் இயேசுவானவரை எத்தனை தீவிரமாக விசுவாசித்தாலும் கூட, அவர்களால் தம் இருதயங்களின் பாவங்களைத் துடைக்கவே முடியாது. அவர்கள் அனைவரும் தாம் இயேசுவானவருடைய சிலுவையின் இரத்தத்தை விசுவாசிப்பதாக அறிவித்தாலும் கூட, அவர்களுடைய ஆவிக்குரிய நிலையானது முன்பைப் போலவே அப்படியே இருக்கிறது, ஏனெனில் அவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நிற நூல் வெளிப்படுத்திய இரட்சிப்பின் சத்தியத்தைக் குறித்து எதுவும் தெரியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த தவறுதலாக வழிநடத்தப் பட்ட கிறிஸ்தவர்களுக்கு இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் பொருள் தெரியாததினாலே, அவர்களுடைய பாவங்கள் இன்னமும் அவர்களுடைய இருதயங்களில் அப்படியே இருக்கின்றன, ஆகவே அவர்கள் தொடர்ந்தும் பாவிகளாகவே இருக்கிறார்கள்.
நீர், இரத்தம், மற்றும் ஆவியாலே கர்த்தர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்தமாக துடைத்து விட்டார் (1 யோவான் 5:6-8). கர்த்தருடைய வாக்குத்தத்த வார்த்தையை அவருடைய தூய்மையான சத்திய வார்த்தையினால் நிறைவு செய்த இயேசுவானவர், நம்மைத் தவறாது சந்தேகம் இன்றி இரட்சித்தார். வேறு வகையாகக் கூறினால், ஆசரிப்புக் கூடாரத்தின் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட தன் நீர், இரத்தம், மற்றும் ஆவியினாலே இயேசுவானவர் நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சித்தார். பரிசுத்த ஆவியானவர் நம் கர்த்தராக இருக்கிறார். உண்மையான கர்த்தராகிய இயேசுவானவர் மனிதராக மாறி, யோவான் ஸ்நானனிடமிருந்து தன் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, நம்முடைய இடத்தில் இருந்து நம் பாவங்களுக்காக தண்டிக்கப் படும் பொருட்டு தன் சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தினார் என்பதை பரிசுத்த ஆவியானவர் சாட்சியாக கூறுகிறார். அவர் நம்மை இப்படியாக இரட்சித்தார். ஆனால், இயேசுவானவர் நம் அனைவரையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இரட்சித்தார் என்று இருந்தாலும் கூட, எண்ணிலடங்காத கிறிஸ்தவர்கள் இன்னமும் பாவிகளாக அப்படியே இருக்கிறார்கள், அவர்கள் இயேசுவானவரைத் தம் இரட்சகராக எத்தனையாக விசுவாசித்தும் பயனில்லை, இதற்கு காரணம் அவர்கள் தேவனை குருட்டுத்தனமாக விசுவாசிப்பதேயாகும் அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விட்டு விடுகிறார்கள்.
ஆகவே நாம் அனைவரும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் படியாக மட்டுமே இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது நம் அனைவருக்கும் முற்றிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது, மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் செய்ததைப் போலவே, அனைவருக்கும் விசுவாசத்தின் மூலமாக வேதாகமத்தில் எழுதப் பட்டதையும் பிரசங்கிக்க வேண்டும். பவுல் 1 கொரிந்தியர் 15:3-4 இல் இவ்வாறு கூறினான்: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து.” இங்கே பவுல் “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து” என்று கூறும் போது, “வேதவாக்கியங்களின்படி” என்ற வார்த்தைகள் பழைய ஏற்பாட்டைக் குறிக்கின்றன ஏனெனில் அந்த நேரத்திலே புதிய ஏற்பாடு முற்றிலுமாக எழுதப் படவில்லை. ஆகவே, பழைய ஏற்பாட்டின் பலிகாணிக்கை முறையின் படியாக இயேசு கிறிஸ்து உலகத்தின் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தார் என்றே பவுல் இங்கே கூறுகிறான். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால் தான் அவர் தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.
தேவன் தன்னுடைய ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் தான் அவர் சிலுவையில் அறையப் பட்டார், அவருடைய இந்த சிலுவை மரணம் நம் தண்டனைகளை ஏற்றுக் கொள்ளவேயாகும். இப்படியாகத் தான் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததின் மூலமாக நம்முடைய இரட்சகராக மாறினார். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவர் மீதும் கர்த்தருடைய பாவங்களுக்கான மன்னிப்பு இறங்கும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் அனைவரின் மீதும் நித்தியமான இரட்சிப்பு ஏற்கனவே வந்து விட்டது.
அல்லேலூயா!