(யாத்திராகமம் 25:31-40)
“பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். ஒவ்வொரு கிளையிலே வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.”
இந்த வசனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் விளக்குத்தண்டினை விவரிக்கின்றன. இன்று, பழங்களைக் குறித்தும், பூக்களைக் குறித்தும் விளக்குகளைக் குறித்தும் ஆவிக்குரிய பொருளை விளக்க நான் விரும்புகிறேன். ஒரு பொன் கட்டியிலிருந்து விளக்கிற்கான தண்டினை முதலாவதாக உருவாக்கும் படி கர்த்தர் மோசேயிற்கு கட்டளை இட்டார். ஆகவே முதலாவதாக இந்த தண்டு வார்க்கப் பட்டது, அதன் பிறகு இந்த தண்டிலிருந்து கிளைகள் உருவாக்கப் பட்டன. விளக்குத்தண்டின் பக்கவாட்டில் இருந்து மூன்று கிளைகள் வெளியே வந்தன, ஒவ்வொரு கிளையிலும் வாற்கோதுமை மொக்குகளைப் போல மூன்று குவலைகள் செய்யப் பட்டன, அதன் பிறகு பழங்களும் பூக்களும் உருவாக்கப் பட்டன. இதனைப் போல, கிளைகளின் மீது ஏழு விளக்குகள் வைக்கப் பட்டன. இந்த ஏழு விளக்குகளிலும் எண்ணெய் ஊற்றப் பட்டு அவை எரிக்கப் பட்டன. இப்படியாக விளக்குத்தண்டு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரகாசமாக ஒளிர்ந்து அங்குள்ள பாத்திரங்களையும் ஒளிரச் செய்தது.
உங்களுக்காகவும் எனக்காகவும், பரலோக ராஜ்யத்தின் ராஜா, இந்த பூமிக்கு தாழ்மையான மனித சாயலிலே அவதாரம் எடுத்து வந்தார். இந்த பூமியிலே இயேசுவானவர் இளநீல நூல், இரத்தாம்பர நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் செயலைச் செய்தார். இந்த பூமியிலே பிறந்த இயேசு கிறிஸ்து, யோர்தான் நதியிலே தன் 30 ஆம் வயதிலே ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, அதன் பிறகு சிலுவையில் அறையப் பட்டு இந்த இரட்சிப்பிற்கான செயல்கள் நிறைவேற்றப் பட்டன. ‘இப்படியாக’ கைவைத்தலைப் போன்ற ஒரு முறையின் மூலமாக ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசுவானவர், மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:15). மனிதராக மாறிய இயேசுவானவர், ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அவர் சிலுவையில் அறையப்பட்டு தன் இரத்தத்தைச் சிந்தி, இதன் மூலமாக இளநீல நூல், இரத்தாம்பர நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பிற்கான தன் கடமையைச் செய்தார். இந்த சத்தியத்தின் மீது தான் கர்த்தருடைய சபையானது அதன் அஸ்திபாரத்தை இட்டிருக்கிறது.
நம்முடைய தேவன் சபையுடைய அலங்கார பழமாக மாறினார். பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் இரட்சிப்பின் அஸ்திபாரமாக மாறினார். ஆகவே, ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் செயல்களின் மூலமாக தேவன் நம் அனைவரையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்பதை விசுவாசித்து நீங்களும் நானும் கர்த்தருடைய சபையின் உறுப்பினர்களாக மாறினோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக, நாம் கர்த்தருடைய கிருபையினால் தரிப்பிக்கப் பட்டோம். இதனால் தான் “சபை” என்பது கிரேக்கத்தில் “έκκλησία” (எக்லேசியா) என்று அழைக்கப் படுகிறது, இதன் பொருள் கீழ்வருமாறு “பாவம் நிறைந்த உலகத்தில் இருந்து அழைக்கப் பட்டவர்கள்.”
இந்த உலகத்தின் மக்களை பாவத்திலிருந்து விடுதலைச் செய்து அவர்களை அதிலிருந்து தப்பும் படியாக ஏதுவாக்கியது இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை. அவரே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக வந்து எல்லாப் பாவிகளுடைய மீறுதல்களையும் கழுவிய தேவன் ஆவார். தேவனுடைய ஞானஸ்நானத்தையும் இரத்தம் சிந்துதலையும் விசுவாசித்து, நாம் பாவத்தில் இருந்து இரட்சிக்கப் பட்டு முழுமையாக நீதிமான்களாக மாறினோம். தேவன் இந்த பூமிக்கு வந்து இளநீல நூல், இரத்தாம்பர நூலிலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் செயலை நிறைவேற்றினார் என்ற சத்தியத்தின் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்பதின் மூலமாக தேவன் நம்மை நீதிமான்களாகும் படி ஏதுவாக்கினார். இதுவே இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும்.
இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்த போது யோவானிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:13-17). இந்த சத்தியமும் விசுவாசமும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு உலகத்தின் எல்லாப் பாவங்களுக்குமாக சிலுவையில் தண்டிக்கப் பட்ட பிறகு, அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக துடைத்து விட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர், நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுமந்து, நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை செய்தார். இப்படியாக, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட தன் இரட்சிப்பின் செயல்களின் மூலமாக, உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் தேவன் நம்மை இரட்சித்தார். உண்மையான இரட்சிப்பிற்கான விசுவாசம் என்பதின் சரியான பொருளானது நாம் இந்த சத்தியத்தை சரியாக அறிந்து விசுவாசிக்க வேண்டும் என்பதாகும்.
நாம் அனைவரும் விசுவாசத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட்டதினால், பாவத்திலிருந்து வரும் இரட்சிப்பு கர்த்தரிடமிருந்து வரும் வரமாகும். இதனைப் போல, உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே நம்முடைய இரட்சிப்பானது இயேசு கிறிஸ்துவுக்குள் திட்டமிடப் பட்டது, அது அவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் அவருடைய சிலுவையின் இரத்தமும் ஆகும். இந்த பூமியானது படைக்கப் படுவதற்கும் முன்னதாக, மனிதகுலத்தின் பொதுவான மூதாதையர்களாக மாறிய, ஆதாமிற்கும் ஏவாளும், படைக்கப் படுவதற்கும் முன்னதாக, பிதாவாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக, பாவிகள் தம் மீறுதல்களில் இருந்து இரட்சிப்படைய வேண்டும் என்று கர்த்தர் திட்டமிட்டார்; அதற்கான காலம் வந்த போது, அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தும் படியாக இந்த பூமிக்கு வந்தார். மனிதகுலத்தைப் படைத்த நம் கர்த்தர் தான் மனிதகுலத்திற்கு வாக்குத்தத்தம் செய்தபடியே அவர்களுக்கான பாவமன்னிப்பை அவர் நிறைவேற்றினார். கர்த்தருடைய இந்த வாக்குத்தத்தமானது இயேசு கிறிஸ்து யோவானிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக செய்து முடிக்கப் பட்டது. இதனை விசுவாசிக்கும் அனைவருக்கும் கர்த்தர் இரட்சிப்பின் வரத்தைக் கொடுத்தார் அது அவர்களை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை செய்து அவர்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ளுவதை அனுமதித்தது. இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் கர்த்தரால் தன்னுடைய சொந்த மக்களாக முழுமையாக இரட்சிக்கப் பட்டார்கள். இந்த சத்தியமானது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியமாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது விளக்குத் தண்டின் தண்டாக இருக்கிறது
இயேசுவானவர் இரட்சிப்பின் மூலைக்கல்லாக மாறினார், அவர் மனிதகுலத்தின் இரட்சிப்பிற்கான இன்றியமையத மூலைக்கல். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக, இயேசுவானவர் இரட்சிப்பிற்கான அஸ்திபாரத்தை முழுமை செய்தார். கர்த்தருடைய விளக்குத் தண்டிலே வாற்கோதுமை மொக்குகள், அலங்காரப் பழங்கள் பூக்கள் போன்ற குவளைகள் இருக்கின்றன. அதிலே ஒரு தண்டும் இருக்கிறது. இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் பூவாகவும் மாறினார். இயேசு கிறிஸ்துவுடைய இரட்சிப்பின் சத்தியம் பூவாக இருந்தால், யாரால் அலங்கார பழமாக இருக்க முடியும்? அவர்கள், உண்மையிலே, கர்த்தருடைய ஊழியர்களாகவும் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களாகவும் தான் இருக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், இங்கே பூவானது இயேசு கிறிஸ்துவாகவும் நாம் அலங்கார பழங்களாக இருந்து பூக்கள் முற்றிலும் பூக்க ஆதாரமாகவும் இருக்கிறோம்.
நம்மை நம் பாவங்களில் இருந்து இரட்சித்த நம் தேவன், நம் அனைவரையும் நற்செய்தியின் அலங்கார பழங்களாக படைத்தார். நீங்கள் இந்த சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கிறீர்களா? நம் போதகர்கள், மூப்பர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் அலங்கார பழங்கள் ஆவோம். தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒருவர் அலங்கார பழம் ஆவார். தேவன் முதலாவதாக இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் இரட்சிப்பின் தண்டை உருவாக்கினார். அதன் பிறகு அவர் நம்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இரட்சித்து நற்செய்தியின் பூக்களை ஆதரிக்கும் அலங்கார பழங்களாக நம்மை மாற்றி இதன் மூலமாக அது பூ பூக்குமாறு செய்தார். நாம் அனைவரும் அலங்கார பழங்களாக மாறும் போது தான் பாவிகளால் தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட முடியும். அங்கேயுள்ள வேறுபாடு அளவு மட்டுமே, சில அலங்கார பழங்கள் பெரிதாக இருக்கலாம் வேறு சில சிறியதாக இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் அலங்கார பழங்கள் என்பதும் நற்செய்தி மாறுவதில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது.
சாத்தான் எப்போதும் கர்த்தரை எதிர்த்து நிற்பதினால், அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதை தடுக்க முயற்சிக்கிறான் இதன் மூலமாக நாம் அனைவரும் நம் பாவங்களில் இருந்து விடுதலையாக முடியாது. ஆனால் ஒரு புயல் கடந்து சென்ற பிறகு அழிந்து போன வயல்வெளியிலும் கூட பூக்கள் மலருவதைப் போல, அனைத்து பாவிகளினாலும் இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்டு தன் பாவத்தில் இருந்து விடுதலையாக முடியும், அதன் பெயர், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்பதாகும். இழந்து போன ஆத்துமாக்களை பாவத்தில் இருந்து இரட்சிக்க தேவன் விரும்புகிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், உலகம் முழுவதும் நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை பரப்ப அவர் விரும்புகிறார். ஆகவே, கர்த்தருடைய சபையும் கூட அதே நோக்கத்திற்காகவே செயல் படுகிறது.
போதகர்கள் தாம் தம்முடைய சபைகளின் அலங்கார பழங்களாக இருப்பதாக விசுவாசித்து தம்முடைய சபைகளுக்கு ஊழியம் செய்யா விட்டால், இத்தகைய சபைகளால் எத்தகைய இரட்சிப்பின் கனியையும் கொடுக்க முடியாது. ஆகவே, ஒரு போதகர் தன்னுடைய சபையினருடைய ஊழியத்தை மட்டுமே தேடினால், அவர் அழகிய நற்செய்திக்கு ஆதரவாளராக இருப்பதற்கு பதிலாக நற்செய்தியை எதிர்ப்பவராக மட்டுமே இருக்கிறார்.
சாத்தான் முதலாவதாக வந்தமைக்கான காரணம் நம் ஜீவனை கவர்ந்து நம்மை கொலை செய்யவே ஆகும். ஆனால் நம் தேவன் தன் மந்தைக்கு அளவில்லாத ஜீவனைக் கொடுக்கவே வந்தார் (யோவான் 10:10), அவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவர்களை இரட்சித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதற்கு ஏதாவது ஆதாயமுடையதாக இருந்தால், அது எத்தனைக் கடினமானதாக இருந்தாலும் அதனைச் செய்யத் தயங்க கூடாது. இத்தகைய மனநிலையானது நாம் நற்செய்தியின் அலங்கார பழங்களாக மாறச் செய்கிறது. நற்செய்திக்கு ஊழியம் செய்ய போதகர்கள் தாழ்மையான வேலைகளைச் செய்வதும் கூட சரியானதே, இதனால் தான் நம்முடைய போதகர்கள் சுட்டெரிக்கும் சூரியனுக்கு கீழே கடுமையாக வேலை செய்கிறார்கள். சுட்டெரிக்கும் சூரியனுக்கு அடியில் இருந்து அலங்கார பழங்களின் வேலையை நிறைவு செய்வதின் மூலமாக ஒரு ஆத்துமாவது இரட்சிக்கப் பட்டால், அவர்கள் இதனைத் தம் வாழ்நாள் முழுவதுமாக செய்வர். ஊழியர்களிடம் இத்தகைய விசுவாசம் இருப்பதால் அவர்கள் கர்த்தருடைய நற்செய்தி என்ற பூவை மலரச் செய்வதற்கான எதனையும் செய்ய சித்தம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ற பூ மலருவதற்கு எத்தனை முயற்சியும் தியாகமும் தேவைப் படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்களும் நானும் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற உண்மையே கூட நம்முடைய விசுவாச பிரதிநிதிகள் வேதாகமத்தின் வார்த்தையை பாதுகாப்பதற்காக தம் ஜீவனை விட்டு இரத்த சாட்சிகளாக மரித்ததே காரணம் என்பது சத்தியமாகும்.
ஆசரிப்புக் கூடாரத்தின் ஏழு விளக்குகள் கர்த்தருடைய விலையேறப் பட்ட எண்ணெய் ஊற்றப் பட்ட இடமாக இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசத்தால், நாம் இந்த விலையேறப் பட்ட எண்ணெயைப் பெற்றுக் கொண்டு அதனை அனுபவிக்கிறோம், மேலும் கர்த்தருடைய கிருபையினாலே, நாம் நற்செய்திக்கான அலங்கார பழங்களாகவும் மாறினோம். நாம் நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது, நாம் செய்ய வேண்டிய அநேக காரியங்கள் இருக்கின்றன என அறிந்து கொண்டோம். ஒரு காரியத்தில் இருந்து இன்னொரு காரியத்திற்கு, தேவையான எதனைச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு முடிவே இல்லை. நம்முடைய நற்செய்தி புத்தகங்களை வெளியிடுவது, வார்த்தையை பிரசங்கிக்கவும், ஜெபிக்கவும், அவர்களின் சகோதர சகோதரிகளை வழிநடத்தவும், சகோதர சகோதரிகள் தேவனுக்கு ஊழியம் செய்யும் படியாகவும் அவர்களுக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதும்௮நற்செய்திக்கு ஊழியம் செய்கின்ற அலங்கார பழங்களின் பாத்திரத்தை நிறைவேற்ற நாம் செய்கின்ற காரியங்களாக இருக்கிறது. கர்த்தர் நீதிமான்களாகிய நம்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்ற பூவை மலரச் செய்கின்ற அலங்காரப் பழங்களாக பயன் படுத்துகிறார் என்ற உண்மையை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.
புது விசுவாசிகளை கவனித்துக் கொள்ளுவதும் கூட கர்த்தருடைய வேலையை செய்வதாகவே இருக்கிறது
கர்த்தருடைய சபையிலே அழகாகவும் அதே நேரத்தில் மிகவும் பயங்கரமாகவும் இருப்பவர்கள் அன்மையிலே தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட இளைய சகோதரர்களும் சகோதரிகளுமே ஆவர். அவர்களுக்கு முன்னதாக, போதகர்களும் கூட தம்மை தாழ்த்தி அவர்களுடைய ஆவிக்குரிய புரிந்து கொள்ளுதலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏன்? அவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, அவர்களுடைய நியாயத்தின் அளவுகோல் இன்னமும் தம் மாமிசத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. ஆகவே, முதலாவதாக விசுவாசித்த விசுவாச முன்னோடிகள், தம்மைப் பின்பற்றுகிற இளைய விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிற அலங்கார பழங்களாக இருக்க வேண்டும். அவர்கள் புது விசுவாசிகளுக்கு ஊழியம் செய்ய வேண்டும் இதனால் இந்த புது விசுவாசிகள் தம் விசுவாசத்திலே வளரும் போது, தாம் தம் விசுவாசத்திலே குழந்தைகளாக இருந்த போது தாம் எப்படி வழிநடத்தப் பட்டோம் என்பதை அறிந்து கொள்ளுவார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் அருளப் பட்ட நல்ல அனுபவத்திற்காக அவர்கள் நன்றியறிதல் உடையவர்களாக இருப்பர், அவர்கள் தம்முடைய விசுவாசத்தினாலே தம்முடைய ஆலயத்திற்கு வருகின்ற புதிய பரிசுத்தவான்களுக்கும் இந்த அனுபவத்தை அவர்கள் திரும்ப கொடுப்பர்.
ஆயினும், அவர்களை நீங்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நடத்தக் கூடாது. எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒருவருடன் இதமாக இருப்பது இந்த மனிதரின் ஆத்துமா வளர்ந்து செழிக்கும் என்று பொருள் பட வேண்டும் என்பது அவசியமில்லை. மக்களை ஆவிக்குரிய படியான வளர்ச்சிக்கு ஏதுவாக வழிநடத்துவது கர்த்தருடைய சித்தத்தின் படியாக விசுவாசத்தால் அவர்கள் வாழுவது எப்படி என்று அவர்களை வழிநடத்துவதாக இருக்கிறது. நாம் மாமிசத்தில் மட்டுமே அவர்கள் மீது குருட்டுத் தனமாக நல்லவிதமாக இருந்தால், நாம் அவர்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, நாம் அவர்களை மோசமானவர்களாக மாற்றுவோம். சில சகோதரர்களும் சகோதரிகளும் எதற்காக சபையை விட்டு செல்லுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஆவிக்குரிய படியாக விசுவாசத்தால் வழிநடத்தப் படாததினாலேயே அவர்கள் விட்டுச் செல்லுகிறார்கள். விளக்குத் தண்டானது தூய பொன் கட்டி ஒன்றை அடித்து உருவாக்கப் பட்டதைப் போல, விளக்குத் தண்டாகவும் அலங்காரப் பழங்களாகவும் மாறியவர்கள் தம்முடைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளையும் தம் சொந்த நீதியையும் வெறுத்து, தம்முடைய இருதயங்களை அடித்து கர்த்தருடைய சித்தத்தின் படியாக தம்மை ஒப்புவிக்க வேண்டும். கர்த்தருக்கு ஏற்றபடியாக தம்மை ஒப்புக் கொடுக்கும் படியாக அவர்கள் கர்த்தருடைய சபையின் ஊழியர்களாக மாற வேண்டும்.
சமுதாய ஊழியர்கள் மக்களுக்கு எப்படித் தம்மால் உதவி செய்ய முடியும் என்று யோசிக்கிறார்கள். எது பொறுத்தமான செயலாக இருக்கிறது? பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதா, அல்லது அவர்கள் தமக்குத்தாமே உதவும் படிச் செய்வதா? அடிக்கடி, அநேக மக்கள் அவர்களுக்கு பணத்தையும் உணவையும் கொடுக்கிறார்கள். ஆனால் சமுதாய ஊழியங்களைக் குறித்து நல்ல அறிவு உள்ளவர்கள் பணத்தை மட்டுமே கொடுப்பதில்லை. அது தேவைப் படுகிறவனுக்கு ஊக்கத்தையும் தமக்குத்தாமே உதவுவதையும் விதைக்கும் படியாக ஒரு உதவியை செய்கிறார்கள் இதன் மூலமாக அவர்களால் தம் வாழ்வை தனிப்பட்ட நிலையில் வாழ முடியும். இது தான் உண்மையாகவே அவர்களுக்கு உதவி செய்கிறது. ஆகவே மற்றவர்களுக்கு உதவி செய்வதும் கூட சில உயர்வான தொழில் நுனுக்கங்களை உடையது.
இதனைப் போல, நற்செய்தியை பிரசங்கம் செய்யும் ஊழியம் என்ற காரியமும் கூட கர்த்தருடைய ஒரு வரமாகும், ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையால் ஒருவனுக்கு நீரூற்றி அவர்களுக்கு ஊழியம் செய்வதாக இருக்கிறது, இதனால் அவர்களுடைய மாமிசமும் ஆவியும் ஒத்திசைவுடன் வளரும்.வேறு வார்த்தைகளில் கூறினால், ஊழியர்கள், ஆத்துமாக்களை வழிநடத்தி அவர்களை தேவனிடம் அழைத்து வர வேண்டும், அவர்கள் அவர்களை மாமிசத்தின் காரியங்களிலும் வழிநடத்த வேண்டும் இதனால் அவர்கள் தம் விசுவாச வாழ்விலே வெற்றி பெறுவார்கள். ஊழியர்கள் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நம்முடைய விசுவாச வாழ்வானது அன்றாடம் நாம் அலங்கார பழமாக நம் பாத்திரத்தை நிறைவேற்றுவதாகவும் அதனை வெவ்வேறு இடங்களிலும் நேரங்களிலும் செய்வதாகவும் இருக்கிறது. நாம் தேவனுக்கு முன்னதாக செல்லும் முன்னர் நம் வாழ்நாள் முழுவதும் நற்செய்தியின் அலங்கார பழங்களாக ஊழியம் செய்வது நம் கடமையாக இருக்கிறது.
நம்மை இரட்சித்த கர்த்தர், நம்மை அலங்காரப் பழங்களாக மாற்றி நமக்கு ஏற்ற விதமான கடமைகளை நம்மிடம் ஒப்புவித்தார் இதனால் நம்மால் நற்செய்தியின் பூவானது முழுவதுமாக மலரும் படியாக அதற்கு ஊழியம் செய்ய முடியும். இன்னமும் மறுபடியும் பிறக்காமல் இந்த உலகத்தில் உள்ள மக்கள் அதிகார வெறி உடையவர்களாகவும், நடிப்பவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் மற்ற விசுவாசிகளால் ஊழியம் செய்யப் பட வேண்டுமென எப்போதும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மறுபடியும் பிறந்த சபையிலே ஊழியர்களாக நிறுவப் பட்ட ஊழியர்கள் அவருடைய சித்தத்தைக் குறித்து நன்றாக அறிந்திருப்பதினால் அவர்கள் நற்செய்தியின் அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தின் படியாக உண்மையாக அவர்கள் செயல் படுகிறார்கள். ஊழியர்கள் இந்த அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தினை நிறைவேற்றுவது அவர்களுக்கு மிகவும் முக்கியமாகும். நம் தேவன் கூறினார், “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப்போஸ்தலர் 20:35). இது வெறும் கொள்கைக் கூற்றாக இல்லை, ஆனால் அது உண்மையான வாழ்விற்கான விசுவாச கொள்கையின் வழிகாட்டுதலாகும். வாங்குகிறவர்களைப் பார்க்கிலும் கொடுக்கிறவர்கள் அதிகம் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். இதனை நீங்கள் நேரடியாக அனுபவித்திருக்கிறீர்களா?
நான் உங்களுக்கு ஒரு கதையை கூறுகிறேன். தம்முடைய முதிர்ந்த வயதிலே பிள்ளை ஒன்றை பெற்றெடுத்த அவர்கள், இந்த குழந்தை அன்புடனே வளர வேண்டும் என்று ஜெபித்தனர். அவர்கள் ஜெபித்ததைப் போல, இந்த குழந்தை அன்புடனே வளர்ந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல, அவன் அன்புடனே வளர வேண்டியவன் என்று எண்ணிய அவர்கள், தம்முடைய மகன் சுயநலம் மிக்க மனிதனாகவும் அவன் தன்னைத் தவிர வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை என்பதைக் கண்டனர். அவர்கள் இதுவரை செய்த எதுவும் அந்த மகனுக்கு எந்த ஆதாயத்தையும் அளிக்கவில்லை. அவன் தொடர்ந்தும் அன்பு செலுத்தப் பட்டதினால், அவனுக்கு அதனை எப்படி பெற்றுக் கொள்ளுவது என்பது மட்டுந்தான் புரிந்ததே தவிர, அதனை செலுத்துவது தெரியவில்லை, இது அவனை பேராசையும் சுயநலமும் மிக்க ஒரு குழந்தையாக மாற்றியது. மற்றவர்களை நேசிப்பது எப்படி என தம் மகன் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த வயதான தம்பதியினர் ஜெபித்தனர்.
கொடுப்பது வாங்குவதை விடவும் மிகவும் அழகானதாக இருக்கிறது. தேவனுக்கு ஊழியம் செய்வது எத்தனை வேடிக்கையானது? அது எத்தனை சிறப்பானதாக இருக்கிறது? நான் நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போதெல்லாம் ஒரு ஆத்துமா தன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளவிருந்தால், நான் மகிழ்ச்சியையும் உயர்வையும் உணருவேன். நீதியின் விசுவாசிகள் நற்செய்தியை அநேக ஆத்துமாக்களுக்கு பரப்ப விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். கர்த்தருடைய சபையிலே, நற்செய்தியின் அலங்கார பழங்களின் பாத்திரமானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. அலங்காரப் பழத்தின் எந்த நிலையில் கர்த்தர் உங்களையும் என்னையும் வைத்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அலங்கார பழத்தின் இந்த நிலைகளில் இருந்து, நாம் நம் பாத்திரங்களை விசுவாசத்தால் நிறைவேற்ற வேண்டும். நாம் நற்செய்திக்கு நம் மாமிசத்தின் திறமைகளினாலும் பெருமைகளினாலும் ஊழியம் செய்யாமல், கர்த்தர் மீதுள்ள நம் விசுவாசத்தால் ஊழியம் செய்யும் போது, அவர் இரட்சிப்பின் பூவானது முழுவதுமாக மலரும் படிச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். நற்செய்தியின் பூக்கள் மலரக்கூடிய நற்செய்தியின் அலங்கார பழங்களாக நாம் மாறும் போது, இந்தப் பூக்களின் மூலமாக அநேக மக்கள் ஆசீர்வதிக்கப் படுவர்.
சபையானது இந்த உலகத்தை இரட்சிப்பின் வெளிச்சத்தினால் பிரகாசிக்கச் செய்யும் விளக்குத்தண்டாக இருக்கிறது
நீதிமான்கள் ஒன்றாக சேருவதின் மூலமாக, அவர்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும் நற்செய்தியின் விளக்குத் தண்டாக மாறினார்கள். நீதிமான்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெளிச்சத்தினால் பிரகாசிக்கச் செய்கிறார்கள். விளக்குத்தண்டான ஜீவனாக இருண்ட உலகத்தின் மீது விசுவாசத்தின் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கிறார்கள் இது நம் வாழ்வாக இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட நீதிமான்கள் நற்செய்தியின் அலங்கார பழங்களாக மாறும் போது விசுவாசத்தின் பூக்கள் இந்த உலகத்தில் முழுவதுமாக மலரும், இது இப்படியாக நடக்கும்போது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உலகம் முழுவதும் சாட்சியாக அறிவிக்கப் படும். இந்த அலங்காரப் பழங்கள் இல்லாவிட்டால், அங்கே பூக்களும் இருக்காது விளக்கும் இருக்காது. விளக்குத் தண்டின் கிளையிலே வாற்கோதுமை மொக்குகளைப் போன்ற நான்கு குவளைகள் இருந்தன, அவை ஒவ்வொன்றிலும் அலங்கார பழமும் பூவும் இருந்தன. இத்தகைய அலங்கார பழங்களாக நாம் மாறி நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப் பட்ட பாத்திரத்தை நாம் நிறைவேற்றும் போது தான் கர்த்தருடைய சபை எல்லா இடங்களிலும் உருவாகி அநேக ஆத்துமாக்களால் தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட முடியும். நாம் இந்த விளக்குத் தண்டிமைப் பார்க்கும் போது, ஒரு அலங்கார பழத்திற்கு மேலே இன்னொரு அலங்கார பழம் இருப்பதை நம்மால் காண முடியும், இந்த அலங்கார பழத்திற்கு மேலே இன்னொரு அலங்கார பழம் கிளையுடனே இருக்கிறது. இதனைப் போல, நீங்கள் நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது, நற்செய்தியின் பூக்கள் இதுவரையில் மலர்ந்து கொண்டிருக்கிறது, நற்செய்தியானது முழு உலகமும் பிரசங்கிக்கப் படும். நீங்களும் நானும் இந்த அலங்கார பழங்களாக இருக்கிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கேள்விப் பட்டதிருந்து இந்த நாள் வரையிலும் உலகம் முழுவதும் இந்த நற்செய்தியை பரப்பும் வரையிலும், நாம் எண்ணிலடங்காத செயல்களை அலங்கார பழங்களாக செய்திருக்கிறோம். இப்படியாகத் தான் உங்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு அதனை மற்றவர்களுக்கு பரப்ப முடியும்.
அலங்கார பழங்களாக நம் பாத்திரங்களை நிறைவேற்ற நாம் வெவ்வேறு செயல்களை செய்தோம். உதாரணமாக, நாம் இந்த ஆலயக் கட்டிடத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நம் சீடத்துவ பயிற்சிக்காகவும் ஆவிக்குரிய ஓய்விற்காகவும் கட்டினோம். இந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க நமக்கு ஒருமாதம் பிடித்தது. நாம் இந்த கட்டிடத்தை விசுவாசத்தால் கட்டி முடித்த போது, நாம் இவ்வாறு எண்ணினோம், “நம்முடைய சகோதரர்களும் சகோதரிகளும் ஆவிக்குரிய ஓய்விற்காக இந்த இடத்திற்கு வருவார்கள், அநேக இழந்து போன ஆத்துமாக்கள் நற்செய்தி வகுப்புகளுக்காக வந்து, வார்த்தையைக் கேட்டு, பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவர்.” இந்த கட்டிடத்தைக் கட்டும் போது நாம் அநேக கடினங்களை சந்தித்தாலும் கூட, நாம் எப்போதும் இந்த சிந்தனையை நம் மனங்களில் வைத்திருந்து, இத்தகைய கடினங்களின் ஊடாக ஊழியம் செய்து நம்பிக்கையுடனே வேலை செய்தோம். இப்படியாகத் தான் நாம் இந்த சீடத்துவ பயிற்சி மையத்தைக் கட்டினோம், இதனால் தான் நம்மால் இந்த சூடானதும் வசதியானதுமான இடத்திலே ஆராதனை செய்ய முடிகிறது. ஒவ்வொரு அலங்கார பழத்தின் வேலையையும் ஒவ்வொருவரும் செய்ததினால் தான் இதற்கு சாத்தியம் ஆயிற்று. நீங்களும் நானும் அலங்கார பழங்களாக மாறியதால் தான் நம்மால் இந்த குளிரான காலநிலையிலும் கூட நம்மால் சூடாக ஆராதனை செய்ய முடிகிறது. இந்த அலங்கார பழங்கள் இருந்திரா விட்டால், இந்த வசதியான சூழ்நிலைகள் நமக்கு கிட்டியிருக்காது. இந்த ஆலயம் கட்டி முடிக்கப் படுவதற்கு முன்னதாக, இந்த இடமானது யாருமில்லாத வனாந்தரமாக இருந்தது. இத்தகைய கடினமான இடத்திற்கு கர்த்தருடைய வார்த்தையை கேட்க நாம் ஒன்று கூட வேண்டியிருந்தால், நீங்கள் இங்கே வருவதற்கு விரும்புவீர்களா? ஆராதனைக் கூட்டம் மிகவும் குளிரானதாக இருந்தால், நீங்கள் அநேகமாக வீட்டிற்கு திரும்பிச் சென்றிருப்பீர்கள்.
இந்த அலங்கார பழங்கள் தம்முடைய இடத்தில் இருந்ததினால் தான் நம்மால் இந்த நாள் வரையிலும் நற்செய்தியின் மலரை பூக்கச் செய்ய முடிகிறது, ஆனால் நாம் எதிர்காலத்திலே அதனை தொடர்ந்தும் செய்வோம். “சாமந்திப் பூவிற்கு பின்னே,” என்ற பிரபலமான கொரிய கவிதை ஒன்று இருக்கிறது, அதன் வரிகள் இவ்வாறு,
“ஒரு சாமந்திப் பூ மலர,
ஒரு வானம்பாடி வசந்தத்தில் இருந்து அழ வேண்டும்.
ஒரு சாமந்திப் பூ மலர,
கரு மேகத்தில் இருந்து ஒரு இடி இடிக்க வேண்டும்.”
குறிப்பாக, அநேக கர்த்தருடைய ஊழியர்கள் மற்றும் அநேக பரிசுத்தவான்கள் என்ற அலங்கார பழங்கள் நற்செய்தியின் மரத்திலே வைக்கப் பட்டுள்ளன. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மலரச் செய்ய வேண்டுமானால், இத்தகைய அலங்கார பழங்களின் பாத்திரங்களாக ஊழியம் செய்கின்ற ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்தார்கள். இந்த அழங்கார பழங்களுக்கு கீழே, தேவன் வாற்கோதுமை மொக்குகளைப் போன்ற குவளைகளை வைத்தார் இதனால் நம்மால் அலங்கார பழங்களின் பாத்திரத்தில் இருந்து இன்னமும் சிறப்பாக செயல் பட முடியும். மேலும் கர்த்தரும் கூட தன்னுடைய நேரத்திலே தன் கிருபையை நம்மீது அருளிச் செய்தார், அவர் ஏழு விளக்குகளுக்கான எண்ணெய்யை நமக்குத் தந்தார். நம்முடைய சொந்த பலத்தினால் நம்மால் எதனையும் செய்ய முடியாது என்று அறிந்த நம் தேவன் தன் சபையின் மூலமாக தன் கிருபையினால் நம்மைத் தரிப்பித்தார்,தனால் நாம் நற்செய்திக்கு ஊழியம் செய்கின்ற அலங்கார பழங்களின் பாத்திரத்தை நிறைவேற்ற முடிந்தது. ஆகவே இந்த அலங்கார பழங்களாக மாறுவதின் பொருள் நம்மால் தனியாகவோ அல்லது நம் சொந்த பலத்தினாலோ நற்செய்தியை பரப்ப முடியுமென்று பொருள் படவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, கர்த்தருடைய கிருபையினால் தான் நாம் அனைவரும் இத்தகைய அலங்கார பழங்களாக மாறும் படியாக மகிமைப் படுத்தப் பட்டோம்.
இப்போது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களும் சில காலத்திற்கு முன்னதாக அதனைப் பெற்றுக் கொண்டவர்களும் நற்செய்திக்கு ஊழியம் செய்கின்ற ஒரே மாதிரியான அலங்கார பழங்களே ஆவர். அவர்களுடைய ஆவிக்குரிய நிலையிலே வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் அனைவரும் அலங்கார பழங்கள் என்று அழைக்கப் படுவதேயாகும். நாம் ஒவ்வொருவரும் எந்த விதிவிலக்குமின்றி அலங்கார பழங்களாக இருக்கிறோம். வேறு எந்த வேலையையும் செய்ய ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்காது வார்த்தையை ஆவிக்குரிய படியாக பிரசங்கம் செய்வது சரியான ஆவிக்குரிய வாழ்வாக இருக்க முடியாது. உண்மையாகவே ஆவிக்குரிய படியாக இருப்பவர்கள் நற்செய்திக்கு ஆதாயமான எதனையும் செய்வர். “என்னுடைய சபையின் நிலை இப்படி இருக்கிறது, ஆகவே நான் இந்த காரியங்களை மட்டுமே செய்வேன். நீங்கள் இப்போது பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதினால், நீங்கள் மற்ற காரியங்களை செய்யும் போது நான் என்னுடைய காரியங்களை செய்ய வேண்டுமா?” அது சரி அல்ல. நற்செய்திக்கு ஊழியம் செய்ய வேண்டும் என வரும் போது, யாருக்கு எவரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை. நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும் நற்செய்தியானது மலர நாம் அனைவரும் உரமாக மாற வேண்டும்.
மறுபடியும் பிறந்த பரிசுத்தவான்களால் எப்படி மாமிசத்தைப் பின்பற்ற முடியும்?
“என்னுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டு நான் பாவம் இல்லாதவனாக மாறியதினால் நான் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஆனால் நான் பணக்காரனாக மாறினால் இன்னமும் மகிழ்ச்சி அடைவேன். நான் செல்வத்திலே வாழ்ந்தால் அது மிகவும் நன்றாக இருக்காதா?” தன்னுடைய ஆவிக்குரிய படியான பிரச்சனைகளைத் தீர்த்த ஒருவன் இப்போது தன்னுடைய மாமிசத்தின் படியாகவும் வெற்றியடைய வேண்டும் என்று விரும்புவானா? தேவனை நான் முதலாவதாக சந்தித்த போது, நான் நற்செய்திக்கான முழுமையான அலங்கார பழமாக மாறும் படியாக அவர் என்னை இரட்சித்தார் என்பதை அறியாமலேயே, ஒரு வியாபாரத்தைச் செய்து சிறிது பணம் சம்பாதித்து இந்த பாத்திரத்தை நிறைவேற்ற முடியும் என்று நான் எண்ணினேன். ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் சென்று, ஓய்வுநாள் பாடசாலையில் போதித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை இந்த சிறுவர்களிடம் பரப்பி, சிறிது நேரம் வேலை செய்யும் படியாக ஒரு சிறிய தொழிலை நடத்தி, என்னுடைய அன்றாட வருமானத்தில் இருந்து சபைக்கு என் காணிக்கையை செலுத்தி, இந்த வழியிலே பொருள் உதவியின் மூலமாக ஆலயங்களை உருவாக்க உதவ வேண்டும் என்று நான் எண்ணினேன். உண்மையில், நான் என்னுடைய தொழிலிலே சிறிது நேரத்தை செலவு செய்வதுடனே கூட, மீதியிருக்கும் நேரத்தை தேவனுக்காக செலவிடுவது எனவும் எண்ணினேன். ஆனால் என்னுடைய சிந்தனைகள் எதுவாக இருந்தாலும், அலங்கார பழமாக நான் செய்ய வேண்டியது என்னவென்று தேவனிடம் கேட்ட போது, நான் பணம் சம்பாதித்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.
அந்த நேரத்திலே என் சிந்தனைகள் தவறானவைகளாக இருந்தன. இதனைச் செய்ய தேவன் என்னை அனுமதிக்கவில்லை. ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதற்கான என் ஊழியத்திற்காக என்னை முழுவதுமாக அர்ப்பணம் செய்து சரியானதொரு அலங்கார பழம் என்ற என் பாத்திரத்தை நிறைவேற்றி வருகிறேன். கர்த்தருக்கு எது பிரியமாக இருக்கிறதோ, நாம் அதனைச் செய்ய வேண்டும். ஒரு மலையை அகற்றும் படியாக அவர் நம்மிடம் கூறினால், அப்போது நாம் அதனை அகற்ற வேண்டும். இந்த மலையை அகற்றுவதின் மூலமாக எண்ணிலடங்காத மக்கள் இரட்சிக்கப் பட்டால், நாம் அதனைச் செய்ய மிகவும் ஆயத்தமாக இருக்கிறோம். கொடுக்கப் பட்ட ஒரு வேலை சாத்தியமே இல்லாத ஒன்றாகவோ அல்லது மோசமானதாகவோ இருந்தாலும், விசுவாசத்தால் அதனைச் செய்யும் படியாக கர்த்தர் நம்மிடம் கூறினால், அது ஆவிக்குரிய படி ஆதாயமாக இருந்தால், அது நிச்சயமாக செய்து முடிக்கப் படும் என்று நாம் விசுவாசிக்கிறோம். உளியை வைத்து மலையைத் தோண்டுவது, தொடக்கத்திலே சிறிய அளவினதாக இருக்கலாம், ஆனால் நேரம் செல்லும் போது, நாம் மலையை டைனமைட்டை வைத்து நொருக்கி இயந்தரங்களை வைத்து அந்த துகள்களை சுத்தம் செய்து விடுவோம். அப்போது அந்த மலை அகன்று போய் விடும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிந்தனைகளைப் பின்பற்றாமல் தேவனுடைய சித்தத்தை மட்டுமே பின்பற்றுவதினால், விசுவாசத்தால் நாம் கர்த்தருடைய நற்செய்திக்காக அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தை எப்போதுமே நிறைவேற்றுவோம்.
தேவன் நம்மைத் தன் சபைக்கு உள்ளாக வைத்தார் இதனால் நாம் நற்செய்தியை பரப்புகின்ற அலங்கார பழங்களாக மாறினோம். நாம் எங்கே அலங்கார பழங்களாக வைக்கப் பட்டுள்ளோம் என்பது மட்டுமே இங்குள்ள வேறுபாடாகும், நற்செய்தியை பரப்புவதைக் குறித்து வரும் போது, ஒன்றில் இருந்து இன்னொன்று முக்கியத்துவம் குறைந்தது என்று கூறக் கூடிய இடம் எதுவும் இல்லை. இந்த ஒழுங்கினை நாம் அமைக்க வேண்டும் என்றால், முதலாவது நபர் கடைசி நபருக்கு ஊழியம் செய்ய வேண்டும், தேவனாகிய இயேசுவானவர் இவ்வாறு கூறினார், “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற்கு 9:35). அலங்கார பழங்களின் பாத்திரத்தை நிறைவேற்றும் படியாக தேவன் நம்மை அழைத்த போது, அவர் நம்மை அணிவகுத்து நம்மைக் காட்டும் படியாக விரும்பினார் என்பது உண்மையில்லையா? நாம் அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தை நன்றாக நிறைவேற்றும் போது, நம் தேவனுடைய ஆச்சரியமான காரியங்கள் நடந்தேறும், இது பரிசுத்த ஸ்தலத்தை விளக்குத் தண்டில் இருக்கும் ஏழு விளக்குகள் பிரகாசிப்பதைப் போன்றதாகும்.
இன்றைய வேதாகம வசனத்தில் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது, “அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு” (யாத்திராகமம் 25:38-40). விளக்குத் தண்டின் தளவாடங்களில் திரியைத் தூண்டுகிற கம்பியும் இருந்தது. விளக்குத் தண்டின் மீதிருந்த விளக்குகளிலே திரிகள் வைக்கப் பட்டு அங்கே எண்ணெய் ஊற்றப் பட்டது. இந்த திரிகள் எரியும் போது, நெருப்புத் துளிகள் பறந்தன, இந்த துளிகளை எடுப்பதற்கு திரிகளை சீர் செய்யும் கம்பிகள் பயன் படுத்தப் பட்டன. இந்த திரிகளை சீர் செய்யும் கம்பிகளும் கூட பொன்னினால் செய்யப் பட்டிருந்தன. ஆசாரியர்கள் இந்த எரிந்து போன திரிகளை சீர் செய்யும் கம்பிகளினால் சரி செய்து அவற்றைத் தட்டுகளில் வைத்தனர். இத்தகைய பாத்திரங்கள் மகா பரிசுத்த ஸ்தலத்திலே அடிக்கடி பயன் படுத்தப் பட்டன.
பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகு நாம் அலங்கார பழங்களின் பாத்திரத்தின் படியாக செயல் படும் போது, வெறும் ஒரு வேலையில் மட்டுமே நாம் அதிகமாக ஈடுபட்டு நம்முடைய இருதயங்கள் கடினமாக மாறும் நேரங்கள் இருக்கலாம். ஆகவே நாம் நமக்கு கொடுக்கப் பட்ட செயல்களை வழக்கத்தின் படியாகவோ அல்லது அரைகுறை மனதுடனோ செய்யும் நேரங்கள் இருக்கின்றன. அத்தகைய நேரங்களில், கர்த்தருடைய ஊழியர்கள் விளக்குத் தண்டின் திரிகளை மாற்ற வேண்டும். எரிந்து போன திரிகள் சீர் படுத்தப் பட்டதைப் போல, கர்த்தருடைய ஊழியர்கள் நமக்கு கொடுக்கப் பட்ட வேலையை அடிக்கடி மாற்றுவதின் மூலமாக நம் இருதயங்களை புதிதாக மாற்ற முடியும். நாம் நம்முடைய புதிதாக்கப் பட்ட இருதயங்களுடனே நற்செய்திக்கு ஊழியம் செய்யும் படியாக நம் தேவன் நம் இருதயங்களில் உள்ள புகை மண்டலத்தை அகற்றுகிறார்கள், இவ்வாறு எழுதப் பட்டுள்ளது, “பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). இதன் மூலமாக, ஊழியர்கள் புதிதாக்கப் பட்ட தம் இருதயங்களுடனே நற்செய்திக்கு ஊழியம் செய்யும் படியாக வருகிறார்கள்.
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் தூய்மையான பொன்னைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? விசுவாசத்தினால் நீங்கள் விசுவாசமிக்க அலங்கார பழமாக மாறுவதற்கு, நீங்கள் தேவனுக்கான புதிய வேலைகளை தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் எப்போதும் விசுவாசத்தால் வாழ முடியும். இன்று நாம் விசுவாசத்தால் வாழ வேண்டும், நாளையும் கூட நாம் விசுவாசத்தால் வாழ வேண்டும். விசுவாசத்தினாலே, நாம் ஒவ்வொரு நாளும் அலங்கார பழத்தின் புதிய பாத்திரத்தை இப்போது நிறைவேற்றுகிறோம். கர்த்தருடைய நற்செய்தியின் ஊழியர்களாகிய நாம் திரியை சீர் படுத்தும் கம்பியினால் திரியை சரி செய்து, விளக்குகளை சீர் செய்து, அவற்றை மிகவும் பளபளப்பானதாக வைத்து அவற்றின் வெளிச்சத்தை பிரகாசமாகவும் அனையாததாகவும் செய்ய வேண்டும்.
மகா பரிசுத்த ஸ்தலத்தின் உற்புறம் மகிமையானது. பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்த நற்செய்தியை பரப்புகின்ற விளக்குத் தண்டாக மாறும் படியாக கர்த்தர் நீதிமான்களை கர்த்தருடைய சபைக்குள் அழைத்து அவர்களை ஒன்று சேர்த்தார். அதற்குள், கர்த்தர் தலைவர்களை வைத்தார், நற்செய்திக்கு ஊழியம் செய்யும் படியாக அவர்களை ஏதுவாக்கும் தன் வரங்களை அவர் நீதிமான்களுக்கு கொடுத்தார், நமக்கு கொடுக்கப் பட்ட ஒவ்வொரு இடத்தில் இருந்தும் நற்செய்தியின் மலரை பூக்கச் செய்யும் அலங்கார பழங்களாக மாறி தேவனுக்கு நாம் ஊழியம் செய்ய வேண்டும் என்று அவர் நம்மை அழைத்தார். இப்படியாக உலகம் முழுவதும் அனைத்து பாவிகளுக்கும் நற்செய்தியை பரப்பும் படியாக கர்த்தர் நம்மை இப்படியாக அனுமதித்தார். இதுவே “எக்லேசியா,” என்ற கர்த்தருடைய சபையாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம், கர்த்தருடைய சபையில் உல்ள மக்கள் ஆவோம் இங்கே அழைக்கப் பட்ட இரட்சிக்கப் பட்ட அனைவரும் ஒன்று சேருகிறோம். நம்மை இந்த உலகத்தில் இருந்து அழைத்து நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் மீறுதல்களில் இருந்தும் நம்மை விடுதலையாக்கிய கர்த்தர் நம்மை பாவங்களில் இருந்து இரட்சித்தார். நம் தேவனுடைய இரட்சிப்பின் மூலமாக, இயேசுவானவரை நாம் விசுவாசிப்பதின் மூலமாக கர்த்தர் நம்மை இரட்சித்தார், நாம் ஒருவருடன் ஒருவர் ஐக்கியமாகி நற்செய்திக்கு ஊழியம் செய்யும் படியாக அவர் இந்த சபையை உருவாக்கினார். இந்த சத்தியமே பரிசுத்தவான்களை ஒன்று சேர்ப்பதாக அமைந்தது.
சபை இருப்பதற்கான காரணம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெளிச்சத்தை பரப்புவதற்கே ஆகும்
ஒரு தாலந்து பொன் கட்டியை சுத்தியலினால் அடித்து செய்யப் பட்ட விளக்குத் தண்டு இருப்பதற்கான காரணம் கர்த்தருடைய சபையானது ஒன்று கூடும் படிச் செய்யவும் நற்செய்தியின் பூக்களை மலரச் செய்யும் படியாக மாற்றவுமே ஆகும். விளக்குத் தண்டு கர்த்தருடைய சபையைக் குறிக்கிறது, அனைத்து இருளை வெளிச்சமாக்கும் படியாக அது இருக்கிறது. இதுவே சபை இருப்பதற்கான ஒரே நோக்கமாக இருக்கிறது. நாம் மறுபடியும் பிறக்கும் படியாக நமக்கு ஊழியம் செய்வதற்காக சபையானது முதலில் அலங்கார பழமாக மாற வேண்டும். இப்போது நாம் செயல் பட வேண்டிய நேரமாகும். நானும் நீங்களும், பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட நாம் அனைவரும், இந்த அலங்கார பழங்களாக மாற வேண்டும், நாம் அனைவரும் அலங்கார பழங்களாக நம் கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் நற்செய்தியின் பூக்கள் முழுவதுமாக பூக்கும் படியாக நாம் உரமாக மாற வேண்டும். உலகம் முழுவம் நற்செய்தியின் வெளிச்சத்தை பரப்புவதற்கும் தேவனுக்கு ஊழியம் செய்யவுமான விளக்குத் தண்டின் பாத்திரத்தை நீதிமான்களாகிய நாம் அனைவரும் கர்த்தருடைய சபை அனைத்தும் செய்ய வேண்டும்.
நாம் புதியதொரு மதப் பிரிவை நிறுவ முயற்சி செய்யவில்லை. நாம் நம் பிரிவைக் குறித்து கூறியே ஆக வேண்டுமானால், நம் பிரிவு இயேசுவானவருடைய பிரிவாகும். தேவனுக்கு ஊழியம் செய்யும் படியாக அழைக்கப் பட்ட நீதிமான்கள் நாம் ஆவோம். நாம் விளக்குத் தண்டின் அலங்கார பழங்களாக மாறி தேவனுக்கு ஊழியம் செய்தால், அலங்கார பழங்கள் என்ற நம்முடைய எல்லா தேவைகளையும் அவர் நிரப்புகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் வேறு ஒரு காரியத்தை வைத்து நம் தேவைகளை நிரப்ப முயற்சி செய்யா விட்டாலும் கூட, கர்த்தர் தாமே நம் அனைத்து தேவைகளையும் அளவில்லாது சந்திப்பார். தேவன் கீழ்வருமாறு கூறுவதைப் போல அனைத்துமே நேரத்திற்கு ஏற்றவாறு கொடுக்கப் படுகிறது “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33). நற்செய்திக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு தேவையான அனைத்தையும் தேவன் கொடுக்கிறார். அலங்கார பழங்களாக தம் செயல்களைச் செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் கடினமான நேரங்களைச் சந்திக்கும் போது, தேவன் அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறார், அவர் கூறுகிறார், “மகிழ்ச்சியாக இரு! நான் எப்போதும் உன்னுடனே இருக்கிறேன்.” அலங்கார பழங்கள் நம்பிக்கையை இழக்கும் போது, அவர் அவர்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறார், அவர் கூறுகிறார், “உறுதியான விசுவாசத்தை பெற்றுக் கொள்! உன்னை பலப் படுத்துகிற என் மூலமாக உன்னால் அனைத்தையும் செய்ய முடியும்.” தேவன் அவர்களுக்கு தன் கிருபையை அருளிச் செய்கிறார். அப்போது தேவன் அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறார், அவர் கூறுகிறார், “என் அலங்கார பழமே, உனக்கு இது உண்மையாகவே தேவைப் படுகிறது. நான் இந்த பிரச்சனையை உனக்கு தீர்த்து வைப்பேன்.” அவருடைய நீதியின் செயலைச் செய்ய அலங்கார பழங்களாக நம்மை பயன் படுத்த, அலங்கார பழங்களாக மாறிய நீதிமான்களாகிய நம்மை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.
நீதிமான்களாகிய நாம் எதனைச் செய்தாலும், நற்செய்தி மலருவதற்கான அலங்கார பழங்களாக நாம் ஊழியம் செய்யும் படி அவற்றைச் செய்ய வேண்டும். நம்முடைய மாணவர்களும் கூட நற்செய்தியின் அலங்கார பழங்களாக தம் பாடசாலை வாழ்வை விசுவாசமாக வாழ வேண்டும். நம்முடைய சாதாரன விசுவாசிகள் தாம் வேலை செய்யும் இடங்களில் சம்பாதிக்க, அவர்களும் கூட நற்செய்தியின் அலங்கார பழங்களாக தம் வேலையை செய்ய வேண்டும். நாம் எதனைச் செய்தாலும், தேவனுடைய நற்செய்திக்கான அலங்கார பழங்களாக மாறும் படியாக நாம் அனைவரும் செயல் பட வேண்டும். நற்செய்தியின் அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தை செய்வதற்காக நீதிமான்களாகிய நாம் அனைவரும் இருக்க வேண்டும், இப்படியாகத் தான் நம்முடைய விசுவாச வாழ்வை வாழ வேண்டும் என்பதே சத்தியமாகும். அலங்கார பழங்கள் நற்செய்தியின் பழங்கள் மலருவதற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
நாம் பூக்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். நற்செய்தியின் மலர் இயேசுவானவர் ஆகும். உண்மையான வெளிச்சமும் கூட இயேசுவானவரே. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே இந்த இயேசு கிறிஸ்துவைக் குறித்து நாம் உலகம் முழுவதும் பிரசங்கித்து வருகிறோம். 1 கொரிந்தியர் 10:31 இல் இவ்வாறு எழுதப் பட்டுள்ளது, “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” அலங்கார பழங்கள் என்ற பாத்திரத்தை விசுவாசத்துடன் நிறைவேற்றுவதின் மூலமாக இந்த நற்செய்தியை பரப்புவதில் நாம் வாழ்வு ஒரே நோக்கம் உடையதாக இருக்கிறது.
மக்கள் தம்முடைய இளமையிலே மிகவும் அதிகமாக கவலைப் படுவது தம் எதிர்காலத்தைக் குறித்தே ஆகும். அவர்கள் இவ்வாறு ஆச்சரியப் படுகிறார்கள், “என்னுடைய எதிர்காலம் எப்படிப் பட்டதாக இருக்கும்? என்னுடைய வருங்கால துனைவர் எங்கே இருக்கிறார் அவர் என்ன செய்கிறார்?” என்னுடைய வருங்கால துனைவர் எங்கே இருக்கிறார்? அவர் கர்த்தருடைய சபையிலே இருக்கிறார், அது இயேசு கிறிஸ்துவே ஆகும். அப்படியானால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்கிறார். அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வெளிச்சமாக இருக்கிறார். அவர் தான் தேவன், நீங்கள் அனைவரும் கிறிஸ்துவின் மணவாட்டிகளாக இருக்கிறீர்கள். தேவன் உங்களைத் தன் சபைக்கு வரும் படியாக கூறுகிறார், வார்த்தையின் மூலமாகத் தன் சபையிலே உங்களை சந்திப்பதாக அவர் கூறுகிறார்.இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்டச் சத்தியத்தை முழு இருதயத்துடனும் விசுவாசித்து நீங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும் போது அவர் உங்களை சந்திப்பதாக தேவன் கூறுகிறார். நீங்கள் அவரை விசுவாசிக்கும் போது அவர் உங்களிடம் வந்து அவர் உங்களை சந்திப்பார் என்று அவர் உங்களிடம் கூறினார்.
நீதிமான்கள் எப்போதும் தம் சிந்தனைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நீங்கள் உங்களுடைய இருதயங்களை நிரப்பும் போது, பரிசுத்த ஆவியானவர் உங்களை எப்போதும் விழிப்புடன் வைத்திருப்பார். நீதிமான்கள் செய்ய வேண்டியதெல்லாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினை பரப்பும் படியாக பரிசுத்த ஆவியானவர் கூறும் படியாக தம் வாழ்வை வாழுவது மட்டுமே. நாம் அப்படிச் செய்யும் போது, நம்மால் மாமிசத்திற்குரிய சிந்தனைகளில் இருந்து ஆவிக்குரிய படியான சிந்தனைகளை பிரித்துணர முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
முன்னதாக நீங்கள் வெங்காயத்தை, ஒவ்வொரு அடுக்காக உரித்திருக்க கூடும். அங்கே வெளிப் புறத்திலே ஒரு தோல் இருக்கிறது, அதனை நீங்கள் உரித்தவுடன், இன்னொரு அடுக்கு தோன்றுகிறது, அது சிறிது பச்சை நிறமாக இருக்கிறது. நீங்கள் இந்த பச்சை நிறத் தோலை உரிக்கும் போது, வெள்ளை நிற அடுக்கு ஒன்று வெளிப்படுத்தப் படுகிறது. நீங்கள் இந்த ஒன்றை உரிக்கும் போது, அங்கே இன்னொரு வெள்ளை நிறத் தோல் இருக்கிறது, அது முன்னதாக இருந்ததைப் போலவே இருக்கிறது. முழு வெங்காயமும் ஒவ்வொரு அடுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது. அது உரிக்கப் பட்டு அதன் உட்புற தோல் வெளிப்படுத்தப் படும் போது, இப்படி வெளிப்படுத்தப் பட்ட அடுக்கு சிறிது நேரத்தில் மஞ்சள் நிறமாக மாறி விடுகிறது. ஆனால் இந்த தோலை உரித்து விட்ட பிறகு, வெள்ளை நிற உட்புற தோல் மீண்டுமாக வெளிப்படுத்தப் படுகிறது. சிறிது நேரம் சென்ற பிறகு, உட்புற தோல் மீண்டுமாக வெளிப்புற தோலாக மாறி விடுகிறது, ஆகவே நீங்கள் இன்னொரு அடுக்கை காண வேண்டுமானால் மீண்டுமாக உரிக்க வேண்டும்.
நம்முடைய மாமிசமானது இந்த வெங்காயத்தைப் போன்ற அடுக்குகளை உடையது, ஆகவே நாம் நம்முடைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளை ஒவ்வொரு நாளும் உரிக்க வேண்டும். இப்போது நீங்கள் இப்படி எண்ணக் கூடும், “நான் இரட்சிக்கப் பட்ட போது என்னையே வெறுத்தேன், ஆனால் நான் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகும் கூட மீண்டும் மீண்டுமாக என்னை வெறுக்க வேண்டுமா? கடந்த வருடத்தில் நான் என்னை எத்தனை முறைகள் வெறுத்தேன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? என்னுடைய இருதயத்தை வளைப்பது மிகவும் கடினமாகும், ஆனால் அதனை நான் மீண்டும் செய்ய வேண்டுமா? அது மிகவும் கடினமானது!” ஆனால், சகோதர சகோதரிகளே, இத்தகைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளை நீங்கள் அகற்றுவது உங்களுக்கு ஏற்றதொரு காரியமாக இருக்கிறது. நாம் வெங்காயத்தின் தோலை உரிப்பதைப் போல மாமிசத்திற்குரிய சிந்தனைகளை நாம் உரித்துப் போடுவது சரியான வழியாகவும் சரியான கொள்கையாகவும் இருக்கிறது என தேவன் நம்மிடம் கூறுகிறார்.
எழுதப் பட்ட வார்த்தையின் மூலமாக நம்மை சந்திக்க தேவன் விரும்புகிறார். அப்பத்தின் மேசையிலும், விளக்குத் தண்டிலும், தூப பீடத்திலும், கிருபாசனத்திற்கு முன்னதாகவும் அவர் நம்மை சந்திக்க விரும்புகிறார். நீங்கள் உங்களை வெறுக்கும் படியாக நீங்களே உங்களை வலியுறுத்த வேண்டும் என்றோ அல்லது உங்களிடம் விசுவாசம் இல்லாத போது உங்களிடம் விசுவாசம் இருப்பதை போல நடிக்க வேண்டும் என்றோ நான் கூறவில்லை, ஆனால் உங்களுடைய சொந்த இருதயங்களை உங்கள் விசுவாசத்தால் வெறுக்க வேண்டும். இதனை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா? நீங்கள் உங்களை வெறுப்பது உங்களுக்கு நல்லது என்று மட்டுமே தேவன் ஆலோசனை கூறாமால், நீங்கள் அதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். நீங்கள் உங்கள் இருதயங்களில் உங்களையே வெறுக்க வேண்டும் என உங்கள் மனதிலே எழுதும் போது, சுய வெறுப்பு தானாகவே உருவாகி விடுகிறது. நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே அதனை நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள், “ஆ, இப்படியாகத் தான் நான் என்னை வெறுக்க வேண்டும்.” ஆனால் அடிப்படைத் தத்துவங்கள் போதிக்கப் படாமல் தம்முடைய விருப்பங்களை உடைக்கும் படி மக்கள் வற்புறுத்தப் படும் போது, அதனை செய்வது அவர்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்று மட்டுமல்ல, ஆனால் அவர்கள் தம் விசுவாசத்தையும் இழந்து போவார்கள்.
நாம் நம்முடைய இருதயங்களை ஒப்புக் கொடுக்கும் படியாக அதனை அடக்கும் போது தேவன் அதனால் பிரியப் படுகிறார். அது உங்களுக்கு பிரியமாக இருந்தால், நாம் நம்முடைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளை ஒப்புக் கொடுக்க வேண்டும். உண்மையாக, நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது என்று தோன்றுகிற சில காரியங்கள் இருக்கலாம், ஆனால் நாம் அவற்றை பெற்றுக் கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறோம். இது உண்மை இல்லையா? தேவன் நம்மை இரட்சித்து தன்னுடைய ஊழியர்களாக மாற்றியதால், நாம் செய்ய வேண்டியது எதுவுமேயில்லை, அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறினான், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13). அதற்கு மேலும், நற்செய்தியின் மலரை நீங்கள் பூ பூக்கும் படி செய்யும் போது, நாம் அலங்கார பழத்திலே மிகவும் சிறியதாக இருந்தாலும் கூட, அந்த மலர் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. அப்படியானால் நம்மால் செய்ய முடியாத எந்த காரியம் இருக்கிறது? நாம் மிகவும் சிறிய அலங்கார பழங்களாக மாறினால் தேவன் நற்செய்தியின் பூக்கள் மலரும்படிச் செய்து ஆத்துமாக்களை இரட்சிக்கும் போது, நாம் அலங்கார பழங்களாக மாறவே மாட்டோமா? நம்மால் முடியும் என்பது உண்மையே.
நம்முடைய இருதயங்களில் இருக்கும் நம் விசுவாசத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியானதை சரியானதாக ஏற்றுக் கொள்ளுவது மட்டுமே, நாம் இவ்வாறு கூற வேண்டும், “ஆமாம், அது சரியானது,” மேலும் எது தவறோ அதனை தவறு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும், நாம் இவ்வாறு கூற வேண்டும், “இல்லை, என் சிந்தனைகள் தவறானவை. நான் தவறு செய்தேன்.” இதுவே தேவைப் பின்பற்றுவதாகவும், சுயத்தை வெறுப்பதாகவும், தன் சொந்த விருப்பத்தை அடக்குவதாகவும் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த மாமிசத்தின் விருப்பங்களை இப்படியாக விட்டு விடும் போது, தேவன் நம்மை மாற்றுவார். ஆயினும், நம்மால் நம்மை மாற்றவே முடியாது. ஆவிக்குரிய படியான ஒரு நபராக மாறுவது நம் சொந்த முயற்சியின் மூலமாக செய்யக் கூடிய ஒன்றல்ல. நாம் சரியாக இருக்கிறோமா அல்லது தவறாக இருக்கிறோமா என்பதை அறிய கர்த்தருடைய வார்த்தையை நாம் அலசிப் பார்க்க வேண்டும், நாம் தவறு செய்கிறவர்களாக இருந்தால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ளுவது மட்டுமே, நாம் கூற வேண்டும், “ஆமாம், தேவனே! நீர் மட்டுமே சரியானவர், தவறானவன் நானே.” நான் இதனை செய்த உடனேயே, நம்முடைய இருதயங்களில் இருக்கும் இருள் அகற்றப் படுகிறது. அப்போது தேவன் நம்மிடம் இவ்வாறு கூறுவார், “உன்னைப் போன்ற இத்தகைய படைப்பிற்கும் கூட, நான் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டிருக்கிறேன், நான் உங்களை வெளிச்சமாக மாற்றினேன்.” நம் தேவன் நம்மிடம் இவ்வாறு கூறுகிறார், “அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது” (எபேசியர் 5:13).
நம்முடைய விருப்பத்தின் படியாக நாம் செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே விசுவாசத்துடன் வாழுவது மட்டுமே. இப்படியாக நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே விசுவாசத்துடன் வாழும் போது, தேவன் நம்மில் செயல் படுவார். நம்மை இன்னமும் மதிப்பு மிக்க அலங்கார பழங்களாக மாற்ற, கர்த்தர் நமக்கு இன்னமும் அதிக கிருபையையும் அதிக ஆசீர்வாதங்களையும் கொடுப்பார். நம் மூலமாக கர்த்தர் உண்மையாகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதற்கு விரும்புவதினால், நமக்கு அதிகமான ஆசீர்வாதங்களைக் கொடுப்பதை அவரால் தவிர்க்க முடியாது. நீங்கள் அனைவரும் இந்த சத்தியத்தை விசுவாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை முழுமையாக விசுவாசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த கேள்வி கேட்கப் படும் போதெல்லாம் “ஆமாம்” என்று நீங்கள் பதில் கூறினால், அப்போது உங்கள் விசுவாசம் வளரும். விசுவாசத்தின் ஆளுகை எப்படி இருக்கிறது என்றால், யாராலும் எதனையும் தனக்குத் தானே கற்றுக் கொள்ள முடியாது.
ஊழியர்கள் அலங்கார பழங்களாக இருக்கிறார்கள், அப்படியே நம் எல்லா சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள். “நீங்கள் அசிங்கமான அலங்கார பழம். ஆனால் நான் ஒரு அழகான பழம்.” உங்களில் யாரும் உண்மையாகவே இப்படி எண்ணுவதில்லை என்று எனக்கு தெரியும், ஆனால் இத்தகைய சிந்தனைகள் உங்களுக்குள் தோன்றும் போது, நீங்கள் முற்றிலுமாக திரும்ப வேண்டும், நீங்கள் கர்த்தருடைய சிந்தனைக்கு எதிரான திசையில் சென்று கொண்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு பரிசிற்காக எந்த பொருளும் இல்லாத அழகிப் போடியில் நாம் ஒவ்வொரு பரிசுத்தவானுடனும் போட்டியிட்டு அலங்கார பழங்களாக மாறினால் அதனால் என்ன பயன் ஏற்படும்? சில அலங்கார பழங்கள் எத்தனை அழகாக தெரிந்தாலும் கூட, அவர்களில் யாராவது ஒருவரால் பூவை விடவும் மிகவும் அழகாக இருக்க முடியுமா? அலங்கார பழங்கள் பூவை விடவும் கவர்ச்சியாக தெரிந்தால், அந்த பூவானது பயனற்றதும் கவர்ச்சி இல்லாததுமான ஒரு காரியமாக மாறிவிடும். ஒரு சுவரைக் கட்டுவதற்கு பெரிய செங்கல்லும் சிறிய செங்கல்லும் தேவைப் படுவதைப் போல, அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், தேவனுடைய நற்செய்தியின் மலரானது மலர வேண்டுமானால் நம் அனைவருக்கும் அலங்கார பழங்கள் தேவை.
ஆகவே, நாம் நம் மூர்க்கத் தனத்திலே ஒருவரை ஒருவர் அலட்சியம் செய்யாதிருப்போம். அதற்கு மாறாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளுவோம், நாம் விலையேறப் பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளுவோம். அனைவரும் விலையேறப் பட்டவர்கள். அனைவரும் தேவைப் படுகிறவர்கள். ஒரு தாலந்து தூய பொன்னைத் தட்டி விளக்குத் தண்டை செய்யும் படியாக கர்த்தர் மோசேயிற்கு கட்டளை இட்டதைப் போல, இரட்சிப்பின் பிரமாணத்தின் மூலமாக அவர் நீதிமான்களாகிய நம்மை அலங்கார பழங்களாக மாற்றி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நாம் ஊழியம் செய்யும் படிச் செய்தார். ஆகவே கர்த்தர் நம்மூலமாக தன் நற்செய்தியை பரப்புவதில் பிரியப் படுகிறார். இப்போதும் கூட, கர்த்தர் தன் சபையின் மூலமாக எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்பி வருகிறார். இந்த நற்செய்தியையும் அதன் அலங்கார பழங்களையும் பரப்புவதின் மூலமாக, கர்த்தர் தன் சத்தியத்தின் அன்பினால் இந்த உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.
அல்லேலூயா!