(யாத்திராகமம் 28:1-43)
“உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள். அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும். பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக. அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும். இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய். பொன்னினால் வளையங்களைப் பண்ணி, சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக. நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. அது சதுரமும் இரட்டையும், ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாய் இருக்கவேண்டும். அதிலே நாலு பத்தி இரத்தினக் கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும். மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி, அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து, பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி, அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக. நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து, வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து, மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய். தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலையான ஒரு நாடா சுற்றிலும் இருக்கவும் வேண்டும்; அது கிழியாதபடிக்கு மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஒத்ததாக இருக்கவேண்டும். அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும். அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக. ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும். பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி, அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும். மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக. ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக. உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக. ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.”
தலைமை ஆசாரியனுடைய ஆடை
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் மறைந்திருக்கும் ஆவிக்குரிய பொருளை நாம் இன்று கவனித்து பார்ப்போமாக. இந்த ஆடைகளை ஆரோனும் அவனுடைய குமாரர்களும் அணிய வேண்டும். தலைமை ஆசாரியனுடைய ஆடைகளின் மூலமாக நம்மைப் பாவத்தில் இருந்து இரட்சித்த கர்த்தருடைய திட்டத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
கர்த்தர் மோசேயின் சகோதரனாகிய ஆரோனுக்கும் அவனுடைய குமாரர்களுக்கும் பரிசுத்தத்தை ஏற்படுத்தி கர்த்தருக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யச் செய்யும் படியாக மோசேயிற்கு கட்டளை இட்டார். கர்த்தர் மோசேயிற்கு காட்டிய வடிவத்தின் படியாக அவர்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் படியாக கர்த்தர் அவனுக்கு கட்டளையிட்டார்.
வசனம் 4 இல், கர்த்தர் கூறினார், “அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.”
முதலாவதாக, தலைமை ஆசாரியன் தன்னுடைய நிர்வாணத்தை மறைப்பதற்காக தன் அங்கியையும் காற்சட்டையையும் அணிய வேண்டும். இந்த ஆடைகள் மெல்லிய பஞ்சு நூலினாலே தயாரிக்கப் பட்டன இதனால் நல்ல காற்றோட்டம் இருப்பதினால் அது அவன் வியர்ப்பதை தவிர்க்கும். தலைமை ஆசாரியன் தன்னுடைய மாமிசத்திற்குரிய முயற்சிகளை விட்டு விட்டு, அவனுக்கு அவர் ஏற்கனவே கொடுத்த விசுவாசத்தின் படியும் கிருபையின் படியும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பது அதன் ஆவிக்குரிய பொருளாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தருடைய சித்தமானது, தலைமை ஆசாரியன் தன்னுடைய சொந்த சிந்தனைகளையும் மாமிசத்திற்கான தன் அர்ப்பணத்தையும் விட்டு விட்டு கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக விசுவாசத்துடனே பாவநிவாரண பலியைக் கொடுத்தால் மட்டுமே கர்த்தருடைய சித்தம் நிறைவேற்றப் படும். இந்த ஒரு நோக்கத்துடனே தான் கர்த்தர் தலைமை ஆசாரியனுக்கான அங்கியையும் காற்சட்டையையும் தயாரித்து அவற்றின் மூலமாக அவனுக்குத் தரிப்பித்தார்.
தலைமை ஆசாரியனுடைய இந்த ஆடைகளுக்கு மேலாக கர்த்தர் ஒரு இளநீல அங்கியால் அவனைத் தரிப்பித்தார். இந்த இளநீல அங்கியின் மீது, அவன் தன் ஏபோதை அணிந்து, அதிலே தன் மார்ப்பதக்கத்தை அணிந்தான். தலைமை ஆசாரியனுடைய மார்பிலே வைக்கப் பட்டிருந்த மார்ப் பதக்கமானது இரண்டாக மடிக்கப் பட்ட ஒரு தடிமனான துணியிலே பொன்னினால் செய்யப் பட்ட நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பட்டு, அது நீள அகலம் உடைய ஒரு அளவினதாக தயாரிக்கப் பட்டது. இந்த மார்ப்பதகத்திலே பன்னிரண்டு வகையான விலையேறப் பட்ட கற்கள் பொருத்தப் பட்டிருந்தன, இந்த விலையேறப் பட்ட கற்களிலே இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரின் பெயர்களும் பொறிக்கப் பட்டிருந்தன.
அவனுடைய தலைச்சீரா மெல்லிய பஞ்சு நூலில் இருந்து தயாரிக்கப் பட்டது. “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்ற வார்த்தைகள் பொறிக்கப் பட்டிருக்கும், தூய பொன்னினால் செய்யப் பட்ட ஒரு பட்டையானது ஒரு நீல நிற நூலினால் தலைச்சீராவிற்கு முன்னதாக இணைக்கப் பட்டிருந்தது. இவையே தலைமை ஆசாரியன் அணிந்த ஆடைகள், தலைச்சீரா பொன் பட்டி ஆகியவற்றைக் குறித்த சுருக்கமான விவரங்கள் ஆகும்.
தலைமை ஆசாரியனுடைய ஆடையின் அநேக பாகங்கள், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் உருவாக்கப் பட்டிருந்தன. இப்படியாகவே தலைமை ஆசாரியனுடைய மார்ப்பதக்கமும் உருவாக்கப் பட்டிருந்தது. இந்த மார்ப் பதக்கத்திலே, பன்னிரண்டு விலையேறப் பட்ட கற்கள் பதிக்கப் பட்டிருந்தன, இந்த கற்களிலே இஸ்ரவேல் மக்களுடைய பன்னிரண்டு கோத்திரத்தாரின் பெயர்களும் பொறிக்கப் பட்டிருந்தன.
தலைமை ஆசாரியனுக்கு கொடுக்கப் பட்ட வேலைகள் கீழ்வருமாறு: அவன் இஸ்ரவேல் மக்களிடம் இருந்து அவர்களுடைய பலிகாணிக்கைகளை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு பிரதிநிதியாக இருந்து தன் கைகளை அதன் தலையின் மீது வைத்து இந்த பாவங்களை அதன் மீது சுமத்தி, அதனைக் கொன்று, இந்த பலிகாணிக்கை மிருகத்தின் இரத்தத்தை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், தலைமை ஆசாரியன் கர்த்தருடைய பிரமாணத்தின் படியாக காணிக்கையைச் செலுத்தி தன் மக்களுடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தான். இஸ்ரவேல் மக்களின் சார்பாக, தலைமை ஆசாரியன் தன் கைகளை கர்த்தருக்கு முன்னதாக பலி காணிக்கை மிருகத்தின் தலையின் மீது வைத்து, அதன் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தை பிடித்து, இந்த இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தில் இருந்த கொம்புகளில் ஊற்றினான். அதன் பிறகு அவன் அதன் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்து கிருபாசனத்திற்கு முன்னதாக அதனைத் தெளித்தான். அதன் பிறகு பலிகாணிக்கையின் மாமிசமானது கூடாரத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப் பட்டு முற்றிலுமாக எரிக்கப் பட்டது (லேவியராகம் 16:3-28). இப்படியாகத் தான் தலைமை ஆசாரியன் பலிகாணிக்கையைச் செலுத்தினான். இம்முறையின் படியாக, கர்த்தரைப் பிரியப் படுத்தும் காணிக்கையை செலுத்திய தலைமை ஆசாரியன், கர்த்தருடைய கோபாக்கினையைத் தணிக்கும் தன் பாத்திரத்தை நிறைவேற்றினான். வேறு வார்த்தைகளில் கூறினால், தலைமை ஆசாரியன் கர்த்தருக்கும் தன் மக்களுக்கும் இடையேயான மத்தியஸ்தம் செய்கிற தன் கடமையை நிறைவேற்றினான்.
இதனைப் போல, மேசியாவாகிய இயேசுவானவர் பரலோக ராஜ்யத்தின் தலைமை ஆசாரியராக மாறினார், அவர் கர்த்தருக்கும் மனிதகுலத்திற்கும் மத்தியஸ்தம் செய்கிறார். அவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தில் ஏற்றுக் கொண்டு, தன் சரீரத்தை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்து பலிகாணிக்கையாக மரித்து, மனிதகுலம் முழுவதையும் பாவத்தில் இருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சித்து மேசியாவாகினார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே, தலைமை ஆசாரியன் தன்னுடைய மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்த காணிக்கையைக் கொடுத்தான், ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலே, இயேசுவானவர் என்ற பெயரிலே வந்த மேசியா நித்தியமான தலைமை ஆசாரியரின் ஊழியத்தை நிறைவேற்றியதின் மூலமாக மனிதகுலம் முழுவதின் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் (எபிரெயர், அதிகாரம் 7-9).
புதிய ஏற்பாட்டு காலத்திலேயும் கூட, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் மறைந்துள்ள சத்தியத்தின் மூலமாக அவர்களின் எல்லாப் பாவங்களையும் கழுவும் படியான தலைமை ஆசாரியனுடைய ஊழியத்தை கர்த்தர் இப்போது நீதிமான்களிடம் கொடுத்திருக்கிறார். இதனால் தான் தலைமை ஆசாரியனுடைய தலைச்சீராவின் பொன் பட்டியில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்ற எழுத்து பொறிக்கப் பட்டிருந்தது. இதனைப் போல, தலைமை ஆசாரியன் அணிந்த ஆடையானது மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவிய நற்செய்தியை விளக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறது.
தலைமை ஆசாரியனுடைய அங்கியானது இளநீல நூலால் நெய்யப் பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இளநீல நூலானது இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்துடன் தொடர்புடையது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் பொன் நூல் ஆகியவற்றினால் செய்யப் பட்ட ஆடையை தலைமை ஆசாரியன் அணிந்த போது, அந்த ஆடைகள் மிகவும் சிறந்ததாக இருந்திருக்க வேண்டும் அதிலே நான்கு நிறங்களும் தெளிவாக அறிவிக்கப் பட்டது. இளநீல அங்கியின் ஓரத்திலே, மாதுளம் பழங்களைப் போன்ற சித்திரங்களும் அவற்றிலே பொன் மணிகளும் இணைக்கப் பட்டு நெய்யப் பட்டிருந்தன. இன்றைய வேதாகம வசனத்திலே வசனம் 33 இவ்வாறு கூறுகிறது, “அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.” ஆகவே தலைமை ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் தன் மக்களுக்கான காணிக்கையை கொடுக்க செல்லும் போது, வெளியே நின்றிருக்கும் இஸ்ரவேல் மக்களுக்கு இந்த மணியின் ஒலியைக் கேட்டு தம் காணிக்கை கொடுக்கப் பட்டது தெரிய வரும்.
இவை அனைத்தும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்திற்கு தொடர்பு உடையவை, அது ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகிறது. தலைமை ஆசாரியன் செய்த காரியம் என்னவென்றால் மக்களுடைய பாவங்களை அவன் கழுவினான், அவனை இத்தகைய ஆடைகளால் அணிவிப்பதும் அவன் இந்த கடமையை நிறைவேற்றச் செய்வதும் கர்த்தருடைய சித்தம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யவும் அவன் இப்படிச் செய்தான். புதிய ஏற்பாட்டின் காலத்திலே, இன்றைய ஆசாரியர்களாகிய கர்த்தருடைய மக்கள் தம்முடைய பாவங்களைத் துடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த செயலை அவர்கள் செய்ய வேண்டுமானால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து முதலாவது தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனைப் போல, தலைமை ஆசாரியனுடைய ஆடைகள் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்ட நற்செய்தியை நமக்கு தெளிவாக காட்டுகின்றன.
இரண்டாவதாக இந்த காலத்திலே, நீதிமான்களாகிய நாம் மக்களுடைய மனதிலே இருக்கும் பாவங்களைக் கழுவி அவர்களுக்கு பரிசுத்தத்தைக் கொடுக்கும் நம் ஆசாரிய ஊழியத்தைச் செய்ய வேண்டும். இதனால் தான் தலைமை ஆசாரியனுடைய ஆடையிலே ஒரு பொன் தகடு பொருத்தப் பட்டு அதிலே “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்ற வார்த்தை பொறிக்கப் பட்டது.
“கர்த்தருடைய பரிசுத்தம்” என்ற வார்த்தை பொறிக்கப் பட்ட பொன் தகடானது தலைமை ஆசாரியன் தன் தலையிலே அணியும் தலைசீராவிலே ஒரு நீல நிற நூலினால் இணைக்கப் பட்டது. மக்களால் முதல் பார்வையிலேயே தலைமை ஆசாரியனை பிரித்துணர முடிந்தது; அவனுடைய தலையைப் பார்த்த அவர்களால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் செய்யப் பட்ட அழகான ஆடைகளுடனே கூட அந்த பொன் தகடையும் நீல நிற நூலையும் தெளிவாக காண முடிந்தது. தலைமை ஆசாரியன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக பாவத்தை சுத்திகரிக்கும் செயலை எப்போதும் செய்தான் என்பதை இது நமக்கு காட்டுகிறது.
கர்த்தருடைய ஊழியர்களுடைய நியாயத் தீர்ப்பிற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்
தலைமை ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும் போது அவன் இஸ்ரவேல் மக்களுடைய பெயர்களைத் தன் இருதயத்தின் மீதிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்தின் மீது பொறிக்க வேண்டும். இதனைப் போல கர்த்தரை பெற்றுக் கொண்ட விரும்புகின்ற உலகம் முழுவதும் இருக்கின்ற பாவிகளுடைய ஆத்துமாக்களை நாம் நம்முடைய இருதயங்களிலே சுமந்து, அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். இரண்டு விலையேறப் பட்ட கற்களாகிய, ஊரீம் தும்மீம் என்பவைகளை, தலைமை ஆசாரியன் அணிந்த மார்ப்பதக்கத்திலே வைக்கும் படியாக கர்த்தர் மோசேயிற்கு கட்டளையிட்டார். இன்றைய வேதாகம வசனத்தின் வசனம் 30 இவ்வாறு கூறுகிறது, “நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.”
ஊரீம் தும்மீம் என்ற இந்த விலையேறப் பெற்ற கற்களுடைய சரியான பொருள் “வெளிச்சம் மற்றும் முழுமை” என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இஸ்ரவேல் மக்களை நீதியுடனும் நியாயத்துடனும் தீர்க்கும் படியாக கர்த்தர் தலைமை ஆசாரியனுக்கு பிரகாசமான இருதயத்தைக் கொடுத்தார். கர்த்தர் தலைமை ஆசாரியனுக்கு அதிகாரத்தையும் ஞானத்தையும் கொடுத்தார் ஆகவே அவன் தன்னுடைய மக்களை எது சரியானது என்றும் எது தவறானது என்றும் தீர்மானித்தான். இஸ்ரவேலர்களுடைய ஆவிக்குரிய வாழ்விலே எது சரியானது என்றும் எது தவறானது என்றும் தீர்மானிக்கும் கடமை தலைமை ஆசாரியனிடம் இருந்தது.
இந்த காலத்திலும் கூட, எது சரியானது என்றும் எது தவறானது என்றும் தீர்மானிக்கும் திறமையையும் ஒருவன் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டானா இல்லையா என்று பிரித்துணரும் திறமையையும் கர்த்தர் தன் ஒவ்வொரு ஊழியனுக்கும் கொடுத்தார். கர்த்தரால் கொடுக்கப் பட்ட திறமையின் படி, அவருடைய ஊழியர்கள் எது உண்மையான நற்செய்தி என்றும், எது உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பு என்றும், கர்த்தருடைய பிள்ளைகள் வாழ வேண்டிய நீதியின் வழி எதுவென்றும், ஒருவன் மறுபடியும் பிறந்துள்ளானா இல்லையா என்றும் சரியான தீர்மானத்தை செய்ய வேண்டும். ஆகவே, கர்த்தருடைய மக்கள் அனைவரும் அவனுடைய நியாயத்தீர்ப்பிற்கும் தலைமைக்கும் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தருடைய ஊழியர்களின் சரியான நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பது கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய தலைமை ஆசாரியர்களாக, கர்த்தருடைய ஊழியர்களை கருதி இஸ்ரவேல் மக்கள் அவர்களுடைய தீர்ப்புகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
இதனைப் போல, இந்த காலத்திலும் கூட, “சரியான மற்றும் தவறான” காரியங்களை நியாயந் தீர்க்கும் கடமையை கர்த்தர் தன் சீடர்களிடம் ஒப்புவித்தார். மேலுமாக, கர்த்தருடைய சபையின் தலைவர்கள் செய்வதை மதித்து அவர்களின் செயல்களுடனே நம் இருதயங்களை ஐக்கியமாக்க வேண்டும். அவர்களுடைய சரியான தீர்ப்புகளையும் தலைமையையும் நம் இருதயங்களின் ஆழத்தில் இருந்து விசுவாசத்தின் மூலமாக பின்பற்றுவது மிகவும் சரியானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வருமாறு நாம் எண்ணக் கூடாது, “அவர் தலைமை ஆசாரியராக அறிவிக்கப் பட்டதால் தான் அவர் அப்படிச் செய்கிறார், ஆனால் எப்படி பார்த்தாலும் அவர் நம்மைப் போன்றவராகத் தான் இருக்கிறார்.” சில மக்கள் கீழ்வருமாறு எண்ணக் கூடும், “என்னுடைய போதகரின் நடத்தையை நான் விரும்புவதில்லை! அவருடைய தன்மை மிகவும் கொடுமையாக இருக்கிறது; அவருடைய தீர்மானங்கள் கடினமானவை. ஆகவே அவர் பிரசங்கிக்கும் நற்செய்தியை நான் விசுவாசித்தாலும் கூட, அவர் எண்ணுகின்ற படியாக செய்யும் தீர்மானங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடைய நோக்கத்தில் இருந்து என்னால் விலகி செயல் பட முடியும்.” மக்களால் தம்முடைய மாமிசத்திற்குரிய பார்வையில் இருந்து தலைமை ஆசாரியர்களைப் பார்ப்பதின் மூலமாக தவறான முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் இத்தகைய தவறான தீர்ப்புகளை தவிர்க்க வேண்டும்.
நாம் கர்த்தருக்கு கீழ்ப்படியும் போது தம்முடைய இரட்சிப்பாக இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் கர்த்தருடைய ஊழியர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். ஏன்? அவர்களுடைய தீர்ப்பானது அவர்களின் சொந்த சிந்தனைகளின் அடிப்படையில் செய்யப் பட்டதல்ல என்பதும், அது கர்த்தருக்கு பிரியமான அவர்களின் விசுவாசத்தின் அடிப்படையில் செய்யப் பட்டது என்பதுமே இதற்கு காரணமாகும். வேறு வகையாகக் கூறினால், இன்றைய தலைமை ஆசாரியர்களுடைய தீர்ப்பானது கர்த்தருடைய வெளிச்சத்தாலும் சத்தியத்தாலும் செய்யப் பட்டதே இதற்கு காரணமாகும். அவர்களுடைய சொந்த சிறிய சிந்தனைகளின் தாக்கம் எதுவும் இல்லாது அவர்களுடைய தீர்மானங்கள் எடுக்கப் பட்டதாகவும், அது அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது வைத்திருக்கும் விசுவாசத்தின் படியாக கர்த்தருடைய வார்த்தையின் மீது முழுவதுமாக அடிப்படையைக் கொண்டதாகவும் இருந்தால், அப்போது அவர்கள் எடுத்த தீர்மானம் சரியானதாகும். இத்தகைய தீர்மானங்கள் கர்த்தருடைய வார்த்தையில் இருந்தும் அவருடைய சித்தத்தில் இருந்தும் விலகாதிருந்தால், நாம் அவர்களுடைய தீர்மானங்களை கர்த்தருடைய தீர்மானங்களாகவே விசுவாசிக்க வேண்டும்.
இதனைப் போல, தலைமை ஆசாரியனுடைய கடமையானது மக்களுக்கு மிகவும் முக்கியமாகும். இந்த காலத்திலே பழைய ஏற்பாட்டு காலத்திலே இருந்ததைப் போலவே, கர்த்தருடைய மக்களை வழிநடத்துகிற ஒருவன் தலைமை ஆசாரியனைத் தவிர வேறு யாரும் இல்லை. இஸ்ரவேலில், தலைமை ஆசாரியனைத் தவிர வேறு எந்த ராஜாவாலும் அந்த மக்களை வழிநடத்த முடியவில்லை. இஸ்ரவேல் நாட்டின் அரசிய அமைப்பு கர்த்தரின் அடிப்படையில் அமைந்திருந்ததால், அதன் மக்கள் அனைவரும் தலைமை ஆசாரியர்களுடைய தீர்மானங்களைப் பின்பற்றினர். இப்போது ஆவிக்குரிய காரியங்களிலும் கூட, கர்த்தருடைய மக்கள் கர்த்தருடைய ஊழியர்களின் வழிகாட்டுதலை விசுவாசிக்க வேண்டும் அவர்களைக் கர்த்தர் தன்னுடைய சபையிலே நியமித்ததினால் அவர்களின் வழிகாட்டுதலை கர்த்தருடைய வார்த்தையாக கருதி அதனைப் பின்பற்ற வேண்டும். மேலும் தலைமை ஆசாரியர்கள் அனைத்து காரியங்களையும் கர்த்தருடைய சித்தத்தின் படியாகவும், அவருடைய வார்த்தையின் அடிப்படையிலும் அவருடைய அருளின் படியும் தீர்மானிக்க வேண்டும்.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகள் நமக்கு அநேக பாடங்களை கற்றுக் கொடுக்கின்றன என்பது உண்மையே. அவற்றை தயாரிக்க பயன்படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் பொன் நூல் ஆகியவற்றின் ஆவிக்குரிய பொருளை நாம் முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலும் அதனை விசுவாசிக்கின்ற விசுவாசம் எத்தனை முக்கியமானது என்றும் கூட, தலைமை ஆசாரியனுடைய ஆடைகளின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறினார். இந்த நூல்கள் மக்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்து கூறுகின்ற அவசியமான பொருட்கள் ஆகும். தேவன் இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய இரத்தத்தைச் சிந்தியதும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் மட்டுமே வெளிப்படுத்தப் பட்டுள்ளது அது உலகம் முழுவதும் உள்ள அனைவருடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்கிறது. நமக்கு முழுமையான பாவ நிவர்த்தியை அளிக்கின்ற, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவை நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே சத்தியம் என்பதை நமக்கு போதித்த நிலையில், நாம் அனைவரும் அதனைக் குறித்து சரியான அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை நாம் உண்மையாகவே அறிந்து அதனை விசுவாசித்தால், நாம் நித்தியமாகவே நம் பாவங்களில் இருந்து சுத்திகரிக்கப் பட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவோம். ஆகவே, நற்செய்தியாகிய நீர், இரத்தம், மற்றும் ஆவியினால் நிறைவேற்றப் பட்ட இந்த மிகவும் தெளிவான சத்தியத்தை விசுவாசிக்கின்ற விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மீதுள்ள நம் விசுவாசத்தை நாம் பாதுகாக்க வேண்டும்
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றைக் குறித்த சரியான அறிவும் போதுமான விசுவாசமும் நம்மிடம் உண்மையாகவே இல்லாவிட்டால், நம்மால் உண்மையான நற்செய்தியை பாதுகாக்க முடியாது, மேலும், அதிலும் மோசமாக, இந்த நற்செய்தி நாசமடையவும் கூடும். இந்த உலகத்தில் உள்ள மதங்களினால் நேரம் செல்லும் போது மாறுதல் அடையக் கூடும். ஆனால் தலைமை ஆசாரியனுடைய ஆடைகளின் நிறங்களின் மூலமாக, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற ஆகியவற்றின் முற்றிலும் மாறாத சத்தியத்தை கர்த்தர் நம்மிடம் காட்டினார். தலைமை ஆசாரியனுடைய ஆடைகளின் மூலமாகவும், ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே காணப் படும் அனைத்து பாத்திரங்களின் மூலமாகவும், ஆசரிப்புக் கூடாரத்திலே கொடுக்கப் பட்ட காணிக்கைகளின் அமைப்புகளின் மூலமாகவும், கர்த்தர் தன்னுடைய அன்பு மற்றும் திட்டத்தினை நமக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறார். மேலுமாக, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் நற்செய்தியாக வந்த இந்த நித்தியமான சத்தியத்தின் மீதுள்ள நம்முடைய விசுவாசத்தை நாம் விட்டுவிடாது பாதுகாக்க வேண்டும். காலம் மாறினாலும் கூட இங்கே மாறாமல் இருப்பது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள நம் விசுவாசம் மட்டுமேயாகும். இந்த விசுவாசமானது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப் பட்ட நித்தியமான இரட்சிப்பாகும்.
நாம் விசுவாசிக்கக் கூடிய நற்செய்தியாகிய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை எப்படி மாற முடியும்? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை மூலமாக நம்மை இரட்சித்ததாக கர்த்தர் கூறினால், அப்போது இதுவே சத்தியமாகும். பழைய ஏற்பாட்டிலே, கர்த்தர் பாவிகளின் மீறுதல்களை கைவைத்தலின் மூலமாகவும் இரத்தம் சிந்துதலின் மூலமாகவும் துடைத்து விட்டார், மேலும் இன்று, இந்த காலத்திலும் கூட, இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பரிசுத்த பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாகவும் (மத்தேயு 3:15) அவருடைய சிலுவையின் மரணம் மூலமாகவும் நமக்கான பாவங்களுக்கான மன்னிப்பை முழுமையாக நிறைவேற்றினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக கர்த்தர் உலகம் முழுவதும் இருக்கின்ற எல்லாப் பாவிகளுடைய அனைத்துப் பாவங்களையும் துடைத்து விட்டார்.
இது எத்தனை உறுதி அளிப்பதாக இருக்கிறது! வேதாகமத்திலே பொன் “விசுவாசத்தை” சுட்டிக் காட்டுகிறது. ஆகவே, தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலே இருக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் பொன் நூலானது நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது வைத்திருக்கும் நம் விசுவாசத்தை சுட்டி காட்டுகிறது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்கின்ற முறையை கர்த்தர் உருவாக்கி அது மாற்றம் அடைவதை அவர் அனுமதிக்காததினால், நாம் சில நேரங்களிலே கடினங்களை அனுபவித்தாலும் கூட, இன்னமும் நாம் சமாதானத்துடனேயே இருக்கிறோம். இதற்கு காரணம் கர்த்தர் நமக்கு காட்டிய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமும் ஆகும்.
தலைமை ஆசாரியனுடைய இடைப்பட்டி
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலே இடைக்கச்சையும் இருந்தது. தன்னுடைய ஏபோதிலே தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட இந்த பட்டியானது, பொன் நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் உருவாக்கப் பட்டிருந்தது. வேதாகமம் இவ்வாறு கூறுகிறது, “சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்,” (எபேசியர் 6:14) தலைமை ஆசாரியனுடைய இடைப் பட்டியானது சத்தியத்தின் நற்செய்தியில் வைத்திருக்கும் விசுவாசத்தின் வல்லமையைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்கின்ற விசுவாசமானது நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட நம்மை ஏதுவாக்குகிறது என்று நம்மிடம் கூறுகிறது. ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் படாத மற்ற அனைத்து கள்ள நற்செய்திகளையும் விசுவாசிப்பது நமக்கு ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தும்.
தம்முடைய மாமிசத்திலே குறைபாடுடையவர்களும் கூட தேவனால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் சுத்தமாக கழுவப் பட முடியும், ஏனெனில் உலகத்தின் எல்லாப் பாவங்களும் கர்த்தரால் நிறைவேற்றப் பட்ட பாவ மன்னிப்பின் சத்தியத்தின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டு விட்டது (மத்தேயு 3:15; லேவியராகமம் 16:1-22). ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்டுள்ள இயேசுவானவருடைய செயல்களை விசுவாசித்து தம்மை இரட்சித்துக் கொண்டவர்களால் தம் மாமிசமும் சித்தமும் பலவீனமாக இருந்தாலும் கூட மீண்டும் உறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே வாசம் செய்யும் போது, யாரால் நம்மை கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியும்? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை நாம் விசுவாசிக்கும் போது தான் அவருடைய முழுமையான இரட்சிப்பு நம்முடையதாகும்.
ஆசாரியர்கள் தம்முடைய ஆசாரிய ஊழியங்களைச் செய்ய வேண்டுமானால், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் காட்டப் பட்ட பலிகாணிக்கை முறையினைத் தவிர வேறு எந்த மனிதர்களால் உருவாக்கப் பட்ட போதனைகளையும் பின்பற்றக் கூடாது. அதனைப் போல, இழந்து போன ஆத்துமாக்களிலே வேரூன்றுகிற உண்மையான நற்செய்தியில் இருந்து விலகிச் செல்லுகின்ற வேறு நற்செய்திகளை கர்த்தருடைய இன்றைய ஊழியர்கள் அனுமதிக்க கூடாது (கலாத்தியர் 1:6, 9). இத்தகைய கள்ள நற்செய்திகளை பிரசங்கம் செய்கிறவர்களால், அவர்கள் தம் பிரசங்கங்களை எத்தனை நன்றாகச் செய்தாலும் கூட, அவர்களால் இழந்து போன ஆத்துமாக்களுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது ஏனெனில் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்திற்கு சரியானபடி சாட்சி பகருவதில்லை. அவர்கள் சுரண்டல் பேர்வழிகளாகவும் கள்ளப் போதகர்களாகவும் இருக்கிறார்கள். பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம் இரட்சகராக விசுவாசிக்கும் போது, ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட கைவைத்தல் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகிய பலிகாணிக்கை முறையினை நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. இந்த உலகத்திலே அநேக கள்ள நற்செய்திகள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலுமாக, யார் நற்செய்தியை பிரசங்கம் செய்தாலும் கூட, கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையிலே யாராவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை பிரசங்கம் செய்தால், நாம் அதனைக் கேட்டு சரியாக விசுவாசிக்க வேண்டும்.
இன்றைய கிறிஸ்தவத்திலே இத்தனை அநேக பிரச்சனைகள் இருப்பதற்கான காரணம் இப்போது இருக்கின்ற அநேக ஆவிக்குரிய சுரண்டல் பேர்வழிகள் தமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாவிட்டாலும் கூட தாம் ஆசாரிய கடமைகளை செய்து வருவதாக கூறுவதேயாகும். கர்த்தருக்கு முன்னதாக உண்மையான ஆசாரியர்களாக மாறுவதற்கான முதலாவது அடியானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதேயாகும். இத்தகைய விசுவாசம் உள்ளவர்களால் மட்டுமே கர்த்தருக்கு சரியான காணிக்கைகளைச் செலுத்த முடியும். இதனைப் போல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிப்பவர்களால் உண்மையாகவே அனைவர் மீதும் அன்பு செலுத்த முடியும். கர்த்தருடைய சபை எதற்காக இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பாவிகளுக்கு பரப்பவே கர்த்தருடைய சபை இருக்கிறது என்று என்னால் உங்களுக்கு கூற முடியும்.
வேதாகமத்திலே வெளிப்படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் சத்தியத்தை நாம் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கும் போது, நாம் நம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டு பாவம் இல்லாதவர்களாக மாறுவோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, நம் இருதயங்களில் உண்மையான சமாதானம் வருகிறது, நாம் இந்த சமாதானத்துடனே வாழுவதினால், நாம் கர்த்தரிடம் இருந்து விலகிச் செல்லுவதில்லை. நாம் முழுமையான நற்செய்தியை விசுவாசிக்கிறோம், விசுவாசத்தால் வாழுகிறோம், நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்து அதிலே வாழுவோம். நம் தேவன் நம்மை சமாதானத்தை நோக்கி வழிநடத்தினார், உலகத்தின் எல்லா மக்களையும் கர்த்தரிடம் வழிநடத்த வேண்டும், இது தலைமை ஆசாரியனுடைய தலைச்சீராவிற்கு முன்னால் இருந்த பொன் தகட்டிலே “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்று பொறிக்கப் பட்ட படியாகும், அவர் அவர்களை உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பு என்ற உண்மையின் மூலமாக அவர்களை பிரகாசிக்கச் செய்கிறார். மற்றவர்களையும் கூட தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள ஏதுவாக்கும் வேலையை கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்தார். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் நற்செய்தியை விசுவாசிக்கும் நம்மிடம் பழைய ஏற்பாட்டின் ஆசாரியர்கள் செய்த அதே கடமையை கர்த்தர் ஒப்படைத்தார்.
அவருடைய முழுமையான வெளிச்சத்தின் சத்தியத்திலே இத்தகைய விலையேறப் பட்ட செயல்களைச் செய்ய நம்மை அனுமதித்த கர்த்தருக்கு நாம் நன்றி கூற வேண்டும். கர்த்தரிடம் இருந்து இந்த நற்செய்தியின் வார்த்தையை நான் முதலாவதாக கேட்ட போது மகிழ்ச்சியால் பூரித்துப் போனேன். நான் வேதாகமத்தை வாசித்த போது, இந்த நற்செய்தியை தெளிவாக வந்தது. அதன் பிறகு என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறந்து, பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வந்து கர்த்தருடைய வார்த்தையை விளக்கமாக போதித்தார். வேதாகமத்தில் உள்ள அனைத்து வசனங்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே கர்த்தர் நமக்கு கொடுத்த ஒரே உண்மையான நற்செய்தி என்று தெளிவாக சாட்சி கூறுகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். பழைய ஏற்பாட்டின் காலத்திலே, இந்த நற்செய்தியானது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவையால் வெளிப்படுத்தப் பட்டது. புதிய ஏற்பாட்டிலும் கூட, அப்போஸ்தலர்களும் வேதாகமத்தை எழுதியவர்களும் இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தி நம்மைப் பாவத்தில் இருந்து முழுமையாக இரட்சித்தார் என்று நம்மிடம் கூறினர். நாம் இரட்சிப்பின் ஆடையை அணிந்து கொள்ள வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிக்க வேண்டும்; மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதினால் நாம் தேவனிடமிருந்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதில்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி மட்டுமே ஒரே உண்மையானதும் முழுமையானதுமான நற்செய்தியாகும்.
கர்த்தர் கட்டளையிட்டபடியே தயாரிக்கப் பட்ட ஆடைகளை தலைமை ஆசாரியன் அணிய வேண்டி இருந்தது. தலைமை ஆசாரியன் குளிர்ந்த காற்றைக் குறித்து கவலைப் பட்டு, கர்த்தர் தனக்காக ஆயத்தம் செய்த ஆடையைத் தான் அணிய வேண்டியதில்லை என்று எண்ணி இன்னொரு தடிமனான ஆடையை அவன் அணிந்தால், அவன் உடனடியாக மரணத்தை சந்திக்க வேண்டியதிருந்தது. வெறும் மெல்லிய பஞ்சினால் மட்டுமே தயாரிக்கப் பட்ட ஆடையை மட்டுமே அணிந்து தலைமை ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தால், அப்போது அவனும் கூட கொல்லப் படுவான். அவன் நீல நிற அங்கியையும், பொன்னினாலும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலினாலும் நெய்யப் பட்ட ஏபோதையும் அணிய வேண்டும்.
கர்த்தர் திட்டமிட்ட பாதையை நாம் துல்லியமாக பின்பற்றினால், தேவன் நமக்கு முன்னே நடந்து, நம்மை வழிநடத்தி, நம் வாழ்விலே அனைத்தையும் செய்கிறார். கர்த்தர் நமக்காக மேசியாவை அனுப்ப திட்டமிட்டு தன்னுடைய இந்த திட்டத்தை நமக்கு வெளிப்படுத்தினார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசித்து கர்த்தருடைய திட்டத்தைப் பின்பற்றினால், அவர் நம் வாழ்விலே செயல் படுவார். இதனால் தான் நாம் நம் பங்கிற்கு எதனையாவது செய்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லாமல், தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட பொன் நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய இரட்சிப்பின் திட்டத்தை விசுவாசித்து நாம் நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தர் நமக்காக செய்தவைகளை நாம் விசுவாசித்து அதன் படியாக அதனைப் பின்பற்றுவதே கர்த்தருடைய ஆசாரியர்களாகிய நாம் செய்ய வேண்டிய காரியமாக இருக்கிறது. இது உண்மையான விசுவாசமாகும். நம்முடைய சொந்தத்திலே அனைத்து வகையான திட்டங்களையும் உருவாக்கி கர்த்தருக்கு ஊழியம் செய்வது கர்த்தர் மீதான சரியான விசுவாசம் இல்லை. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை வெளிநாடுகளில் பரப்புகின்ற முயற்சியில் நாம் ஈடுபடும் போது, இதுவும் கூட நம்முடைய மனிதர்களினால் உருவாக்கப் பட்ட திட்டங்களினாலும் கருவிகளினாலும் இவற்றைச் செய்வதில்லை, ஆனால் அது அவருடைய மக்களுக்கு அவர் கொடுத்த விசுவாசத்தின் மூலமான உதவியினால் செய்து முடிக்கப் படுகிறது. இதுவே கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது. நாம் ஒரு காரியத்தை விசுவாசத்தின் மூலமாக செய்யும் போது, மீதி காரியங்களை கர்த்தர் பொறுப்பேற்றுக் கொள்ளுகிறார். கர்த்தருடைய சித்தத்தை நாம் அறிந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்பும் போது, நம்முடைய புத்தகங்களை வாசிப்பவர்களுடைய இருதயங்களை கர்த்தர் தொட்டு, அவர்களுக்கு ஞானத்தை உண்டு பண்ணி, இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் விசுவாசிக்கும் படிச் செய்து, அவர்கள் சரியாக விசுவாசிக்கும் படியாக அவர்களின் தவறான சிந்தனைகளை சரி பண்ணுகிறார்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பரப்ப வேண்டுமானால், அதனை நாம் முதலாவதாக முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டும்
ஏதோ ஒன்றை எப்படியோ செய்வதின் மூலமாக உண்மையான நற்செய்தியை நம்மால் பரப்ப முடியாது, ஆனால் கர்த்தருடைய சித்தத்துடனே நாம் ஐக்கியமாகி அந்த விசுவாசத்துடனே ஊழியம் செய்யும் போது அது செய்து முடிக்கப் படுகிறது. நம்முடைய சொந்த முயற்சிகளினாலும் அர்ப்பணத்தினாலும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப் படுவதில்லை, ஆனால் நாம் அவருடைய செயல்களையும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையும் விசுவாசித்து கர்த்தருடைய சித்தத்தை தேடும் போது மட்டுமே கர்த்தருடைய அருளானது நிறைவு செய்யப் படுகிறது. இந்த காலத்திலும் கூட, பழைய ஏற்பாட்டின் காலத்தைப் போன்ற அதேவிதமான விசுவாசம் நமக்குத் தேவைப் படுகிறது. முன்பைப் போலவே, இந்த காலத்திலும் கூட, கர்த்தருடைய பிள்ளைகள் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலின் விசுவாசத்தை பரப்ப வேண்டும்.
நாம் சிவப்பு நிற நூல் மற்றும் இரத்தாம்பர நூலினை விசுவாசிக்க வேண்டும், ஆனால் இள நீல நூலிலே என்ன கூறப் பட்டுள்ளது என்பதை௮அதாவது, மேசியாவாகிய இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இழந்து போனவர்களிடம் இளநீல நிற நூலுன் சத்தியத்தை நாம் பரப்பும் போது, அவர்கள் சத்தியத்தை எளிதாக முழுமையாக புரிந்து கொண்டு அதனை உறுதியுடன் விசுவாசிப்பார்கள் என்பதை நம்மால் காண முடியும். ஏன்? மேசியாவாகிய இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன் சரீரத்திலே மனிதகுலம் முழுவதின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதே இதற்கு காரணமாகும். மக்கள் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசித்து, அவர் தம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார் என்று அறிந்து கொள்ளும் போது, தாமும் கூட தம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான கிரையத்தைச் செலுத்த சிலுவையில் மரித்து போனதை தவறாது ஏற்றுக் கொள்ளுவார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீல நிற நூலின் உண்மையான பொருளாகிய மேசியாவாகிய இயேசுவானவர், யோவான் ஸ்நானனிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் இரகசியத்தை அறிந்து விசுவாசிக்கும் போது மட்டுமே, மக்கள் இரத்தாம்பர நிற நூல் மற்றும் சிவப்பு நிற நூல் ஆகியவற்றை விசுவாசிப்பார்கள். அவர்கள் உண்மையாகவே கீழ்வருமாறு அறிந்து கொள்ளுகிறார்கள். “ஆ, அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இயேசு கிறிஸ்துவே உண்மையான கர்த்தராகவும் அனைத்து மனிதர்களுடைய இரட்சகராகவும் இருக்கிறார். இதுவே உண்மையாக இருக்கிறது!”
அநேக மக்களைப் பொறுத்தவரையில், இயேசுவானவர் கர்த்தர் என்ற, இரத்தாம்பர நூலின் மீதான விசுவாசம் பின்னால் தான் புரிந்து கொள்ளப் படுகிறது. இயேசுவானவரை நம் இரட்சகராக விசுவாசிக்கத் தொடங்கிய அந்த நொடியில் இருந்தே, நாம் இவ்வாறு அறிக்கைச் செய்ய வேண்டும், “இயேசுவானவரே முழுமையான கர்த்தர்,” ஆனால் இது வெறும் கற்பனையான கருத்து மட்டுமே. நம்முடைய இருதயங்களில் இத்தகைய உறுதியான விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்ளும் போது மட்டுமே அப்படியாகிறது. இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும் இரத்தத்தையும் விசுவாசித்து நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, உயிரோடிருப்பவரும் நம் வாழ்விலே உதவிகளைச் செய்து நம்மீது செயல்படுகிற அவர் மீதான நம் விசுவாசம், சிறிது சிறிதாக வளரும். மேலுமாக, மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அவர்கள் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும்.
இன்றைய ஆசாரியர்கள் எதற்கு ஊழியம் செய்ய வேண்டும்?
தலைமை ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் செய்வது என்ன? பலிகாணிக்கை முறையின் மூலமாக அவர்கள் வெளிப்படுத்துவது என்ன? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக மேசியா நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைப்பார் என்ற சத்தியத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த காலத்தில் இருக்கும் கர்த்தருடைய ஊழியர்களும் கூட இத்தகைய கடமையிலும் ஊழியத்திலும் வெற்றி பெற வேண்டும். அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக மக்களுடைய பாவங்களைத் துடைக்கிறார்கள்.
எண்ணிலடங்காத மக்கள் தம்முடைய சொந்த நற்செய்தியை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய நற்செய்தியானது வேதாகமத்தின் படியாக சரியாகவும் இருக்காது, யாரையும் இரட்சிக்கவும் செய்யாது. அவர்கள் மனிதர்களால் உருவாக்கப் பட்ட போதனைகளை அங்கிருந்தும் இங்கிருந்தும் எடுத்து அதனை ஒன்று சேர்ப்பதில் நிபுனர்கள். ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது வெவ்வேறு கிறிஸ்தவ போதனைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்ட ஒன்றல்ல.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக மக்கள் தவறாமல் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், வார்த்தையானது இரட்சிப்பின் அடையாளமாக மட்டுமே இருக்கிறது. மக்களுடைய பாவங்களைக் கழுவுவது கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட அளவுகோலின் படியாக மட்டுமே பெற்றுக் கொள்ளப் படுகிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது அந்த அளவுகோலாக இருக்கிறது. உண்மையான இரட்சிப்பின் நற்செய்திக்கு வெளியிலே யாராலும் தன் பாவங்களை நிவர்த்தி செய்யவும் முடியாது பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ளவும் முடியாது. கர்த்தருக்குமுன்னதாக எல்லாப் பாவங்களில் இருந்தும் கழுவப் பட்டு பரிசுத்தத்தைப் பெற்றுக் கொள்ளுவது யோர்தான் நதியில் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தினாலும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலும் வந்த இயேசுவானவரை இரட்சகராக விசுவாசிப்பதினால் மட்டுமே வருகிறது. மக்கள் தம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டுமானால், அவர்கள் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் வந்த இயேசு கிறிஸ்துவை இரட்சகராக அப்படியே விசுவாசிக்க வேண்டும். அவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேறு வழியில்லை.
கர்த்தருடைய ஆசாரியர்களாக மாறி அவருடைய ஊழியர்கள் பொன் நூலாலும், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூலாலும் தயாரிக்கப் பட்ட தலைமை ஆசாரியனுடைய ஆடையின் உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். அவர்கள் இந்த சத்தியத்தை விசுவாசிக்காவிட்டால், அவர்களால் அவருடைய ஊழியர்களாக தகுதி அடைய முடியாது. அவர்கள் இந்த உலகத்தின் வெறும் மதவாதிகளாக மட்டுமே இருக்கிறார்கள். உலகத்தின் எண்ணிலடங்காத மதங்களுக்கு நடுவே, அவர்கள் இயேசுவானவருடைய பெயரை எடுத்துக் கொண்டு தாம் உருவாக்கிய தம் சொந்த மதத்திற்கு மட்டுமே ஊழியம் செய்து வருகிறார்கள். நீர், இரத்தம், மற்றும் ஆவியினால் வந்த இயேசு கிறிஸ்துவைத் தம் இரட்சகராக விசுவாசிக்கின்ற விசுவாசத்தை உண்மையான கர்த்தருடைய ஊழியர்கள் பெற்றிருக்க வேண்டும். ஆகவே, அவர்கள் தம் விசுவாசத்தை சரியாக அறிவிக்கும் படியாக அவருடைய ஞானஸ்நானத்தை சாட்சி கூறி கர்த்தருடைய சத்தியத்தின் வெளிச்சத்தை தெளிவாக பிரகாசிக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறவர்கள் மட்டுமே கர்த்தருடைய ஊழியர்களாக இருக்கிறார்கள் அவர்கள் அவருக்கு முன்னதாக இரட்சிக்கப் பட்டவர்களும் ஆவர்.
இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும், அவருடைய சிலுவையையும், அவர் கர்த்தர் என்ற உண்மையையும் விட்டு விடுகிறவர்களும், இத்தகைய ஞானத்தை எந்த விசுவாசமும் இல்லாது வெறும் கொள்கையாக மட்டுமே பிரசங்கம் செய்கிறவர்களும், பிசாசுடைய ஊழியர்கள் ஆவர் அவர்களுக்கும் கர்த்தருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இன்று, இந்த உலகத்திலே “நற்செய்தியாளர்கள்” என்று அழைக்கப் படும் எண்ணிலடங்காத மக்கள் இருக்கிறார்கள். இயேசுவானவரை விசுவாசிக்கும் அனைவரும் விசுவாசத்தால் தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் சுத்திகரிக்கப் பட்டு, இப்படியாக பாவமில்லாதவர்களாக மாறுகின்றனர் என அவர்கள் கூறுகின்றனர். முதலாவதாக, அவர்களும் கூட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் சத்தியத்தைத் தான் பிரசங்கம் செய்கிறார்கள் என்று நான் எண்ணினேன், ஆனால் நேரம் செல்லும் போது இது உண்மை அல்ல என்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கம் செய்வதில்லை, தம்முடைய சொந்த சிந்தனைகளினால் உருவாக்கிய போதனைகளே உண்மையான நற்செய்தி என்று அவர்கள் எண்ணி விசுவாசிக்கிறார்கள். அவர்கள் தம்மை “நற்செய்தியாளர்கள்” என்று அழைத்தாலும் கூட, அவர்கள் தம்முடைய சொந்த சுயநலமிக்க பூலோக நலத்தை மட்டுமே விரும்புகிறார்கள், அவர்களுடைய ஒரே நோக்கமானது தம்முடைய சொந்த விருப்பங்களை திருப்தி செய்வதாக மட்டுமே இருக்கிறது.
இப்போதும் கூட இந்த பூமியிலே ஆசாரியர்கள் என்று அழைக்கப் படும் அநேகர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை உண்மையாகவே பரிசுத்தமாக்கும் உண்மையான நற்செய்தியை ஏற்றுக் கொள்ள அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்? அடிப்படைவாதிகள் தாம் வார்த்தையில் உறுதியாக இருப்பதாக பெருமைப் பாராட்டுகிறார்கள். ஆனால் இத்தகைய மக்களும் கூட முறைசார்ந்தவர்கள் அல்ல என்பதே உண்மையாக இருக்கிறது. வார்த்தையானது தெளிவாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிவுக்கும் போது, அவர்கள் ஏன் தம் விசுவாசத்தில் இருந்து இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை விட்டு விடுகிறார்கள்? தேவனாகிய கர்த்தருக்கு முன்னதாக களங்கமான அக்கினியை செலுத்தியதற்காக நாதாபும் அபிகூவும் மரித்ததை நினைவு படுத்துங்கள். கர்த்தர் ஏற்படுத்திய முறையின் படியாக இந்த ஆசாரியர்கள் காணிக்கை செலுத்தாத போது, கர்த்தரிடமிருந்து வந்த அக்கினியானது அவர்களை மரிக்கும் படியாக எரித்து விட்டது (எண்ணாகமம் 26:61).
கர்த்தரால் கொடுக்கப் பட்ட ஆடையை அணியாவிட்டால் தலைமை ஆசாரியனும் கூட மரிக்க வேண்டியிருந்தது (வசனம் 43). பாவிகள் தம்முடைய பலிகாணிக்கைகளின் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் எத்தனை பக்தியுடன் எடுத்து வந்தாலும் கூட, அவர்கள் தம் கைகளை அந்த மிருகங்களின் தலையில் வைக்காவிட்டால் அதற்கு எந்த பொருளுமில்லை. கைவைப்பதை விசுவாசிக்கும் இந்த விசுவாசம் இல்லாமல், அவர்களால் தம் மீறுதல்களை அறிக்கைச் செய்து அவற்றை இந்த காணிக்கைகளின் மீது சுமத்தாவிட்டால், அவர்கள் அதன் இரத்தத்தை எத்தனை தீவிரமாக விசுவாசித்திருந்தாலும் கூட அவர்களுடைய விசுவாசம் தவறானதாகவே இருக்கும். தலைமை ஆசாரியர்கள் இரத்தத்தை எத்தனை முறை எடுத்து வந்து, திரைச்சீலையை அகற்றி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து, இரத்தத்தை அங்குள்ள கிருபாசனத்தின் மீது தெளித்தாலும் கூட, அவர்கள் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட “இளநீல” ஆடையை அணியாமல் வந்தால், அவர்கள் மரிக்க வேண்டியதாக இருந்தது. ஆகவே, இத்தகைய பிரிவினைவாதிகள் அனைவரும் தம்முடைய பழைய விசுவாச முறைகளை வீசி விட்டு தம்மை “ஓளியும் முழுமையுமான” அதாவது, “ஊரீம் தும்மீம்” (யாத்திராகமம் 28:30) ஆகியவற்றை நோக்கி வழிநடத்தும் உண்மையான நற்செய்தியை நோக்கி திரும்ப வேண்டும்.
குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட, தன்னுடைய வார்த்தையையும் தன்னுடைய சித்தத்தையும் விசுவாசித்து பின்பற்றுகிறவர்கள் மீது கர்த்தர் பிரியமாக இருக்கிறார். இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்மை கர்த்தர் அழைத்தார். கர்த்தர் நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் கொடுத்தார். நாம் ஒன்றாக ஐக்கியமாகி விசுவாசத்தால் நற்செய்தியை பரப்பும் போது, கர்த்தர் ஆச்சரியமான காரியங்களை நாம் செய்ய அனுமதிக்கிறார்.
கர்த்தருடைய அருளானது சீக்கிரமாக முழுமையாக நிறைவேற்றப் படும் என்று நாம் விசுவாசிக்கிறோம். உண்மையாக, நாம் கர்த்தருக்கு முன்னதாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நம் மாமிசத்திலே, நம்மிடம் அநேக குறைபாடுகள் இருக்கின்றன. எல்லோரிலும் தாழ்ந்தவன் என்று நான் எண்ணுகிறேன். உங்களுக்கு முன்னதாக என்னைக் குறித்து வெளிப்படையாக அறிக்கைச் செய்தால், என்னுடைய முகம் சிவந்து விடும் ஏனெனில் என்னுடைய மாமிசத்திலே அநேக குறைபாடுகள் இருக்கின்றன. என்னுடைய குறைபாடுகள் தற்காலிகமானவை அல்ல. நேரம் செல்லச் செல்ல, நான் அதிகமாக நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது, கர்த்தருக்கு முன்னதாக நான் எத்தனைக் குறைபாடுடையவன் என்பதை அதிகமாக நான் அறிந்து கொள்ளுவேன். நம்முடைய உடன் ஊழியர்களை நான் பார்க்கும் போது, அவர்களும் கூட என்னைப் போலவே குறைபாடுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் காண்கிறேன், ஆனால் கர்த்தருடைய கிருபையினால் இன்னமும் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம். கர்த்தர் நம்மில் செயல் படுகிறார் என்று விசுவாசிக்கச் செய்தார், இதன் மூலமாக நம்மால் கர்த்தருடைய நற்செய்தியையும் அவருடைய திட்டங்களையும் விசுவாசித்து அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பின்பற்ற முடியும்.
குறைபாடுகள் நிறைந்த நம்மூலமாகத் தான், நம் தேவன் மகிமைப் படுகிறார். அதிகமாக நாம் குறைபாடுடையவர்களாக இருக்கும் போது, அதிகமான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது நம் இருதயங்களில் பிரகாசிக்கிறது ௭ இந்த காரியத்தினால் தான் கர்த்தர் மகிமைப் படுகிறார். நாம் களங்கமில்லாதவர்கள் என்று அறிந்து கொள்ளும் போது நாம் அதிக பெருமை உடையவர்களாக மாறுவோம், ஆகவே கர்த்தர் விருப்பம் இல்லாதவராக உணரத் தொடங்குகிறார். இதுவே கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது, குறைபாடு நிறைந்த நம்மூலமாக துதிக்கப் படுவதை அவர் விரும்புகிறார்.
நீங்களும் நானும் கூட குறைபாடு நிறைந்தவர்கள். நாம் எத்தனைக் குறைபாடு நிறைந்தவர்களாக இருக்கிறோம்? எதன் மூலமாகவும் விவரிக்க முடியாது! ஆயினும், ஒருவன் தன்னுடைய குறைபாட்டை வேறுவிதமாகவே உணருகிறான், கடலின் ஆழமும் ஆற்றின் ஆழமும், கைக்கழுவும் பாத்திரத்தின் ஆழமும் வெவ்வேறானதாக இருப்பதைப் போன்றதாக இது இருக்கிறது. அளவிட முடியாத குறைபாடுடைய தாம் தேவனை அதிகமாக விசுவாசிப்பதாக உண்மையாகவே அறிந்திருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தாம் தேவனிடம் மிகப் பெரிய அளவிற்கு கடன் பட்டிருப்பது தெரியும். தம்முடைய குறைபாடுகளைக் குறித்து நன்றாக தெரிந்து தம்முடைய அளவில்லாத கடன்கள் எல்லாம் கொடுக்கப் பட்டு விட்டன என்பதை விசுவாசிக்கிறவர்கள் கர்த்தரை மிகவும் அதிகமாக விசுவாசிப்பவர்களாக மாறுவர். இதனால் தான் அவர்கள் தேவனுடைய நற்செய்தியை அதிகமாக பாதுகாக்கிறார்கள், இதனால் தான் அவர்கள் அதனைக் குறித்து பெரிதும் §பெருமைப் பாராட்டி அதனை அதிகமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் தம்முடைய சொந்த குறைபாடுகளைக் குறித்து எதுவும் தெரியாதவர்கள் தேவனை குறைவாக நேசிக்கிறார்கள், ஏனெனில் தேவன் மன்னித்து விட்ட கடன்கள் மிகவும் குறைவானதாக இருந்த போதிலும் அவர் இந்த சிறிய கடன்களுக்காக மிகவும் அதிக அளவு தம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதாக எண்ணுகிறார்கள்.
தம்முடைய குறைபாடுகளைக் குறித்து மிகவும் குறைந்த அளவு மட்டுமே அறிந்திருக்கும் இந்த மக்களால் எப்படி தம்முடைய குறைபாடுகள் உண்மையிலேயே பெரிதாக இருக்கின்றன என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? இதனை அவர்கள் மீது தினிக்க முடியாது. ஆனால் தாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட நற்செய்திக்காக ஊழியம் செய்வது கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது என்று விசுவாசித்து நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது, அவர்களுடைய குறைபாடுகள் நேரம் செல்லும் போது அதிகமாக வெளிப்படுத்தப் படும், அவை அதிகமாக வெளிப்படுத்தப் படும் போது, கர்த்தர் மீதான அவர்களுடைய அன்பு மிகவும் ஆழமாகும்.
கொள்கையின் படியாக மட்டுமே நாம் நம்முடைய குறைபாடுகளை அறிந்திருப்பதினால் எந்த பயனும் இல்லை. உண்மையாக நற்செய்திக்கு ஊழியம் செய்ய முயற்சிக்கும் போது நாம் கடினமான நேரங்களை சந்திக்கும் போது மட்டுமே நம்மால் நம் குறைபாடுகளை அறிந்து கொள்ள முடியும். இதனால் தான் நாம் அதிகமாக தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, அவர் நமக்கு மிகவும் விலையேறப் பட்டவராக மாறி விடுகிறார். தேவனால் தான் நம்மால் துனிச்சலாக இருக்க முடியும், அவரால் தான் நாம் மகிமைப் படுத்தப் படுகிறோம். தேவனுக்காக நம்மால் விசுவாசத்தால் வாழ்ந்து நம்மை ஆசீர்வாதமான செயல்களுக்கு அர்ப்பணம் செய்ய முடியும். தேவன் இல்லாவிட்டால், நீங்களும் நானும் ஒன்றுமில்லாதவர்கள்.
யோவான் ஸ்நானன் கூறினான், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (யோவான் 3:30). கர்த்தர் நமக்கு பாவ மன்னிப்பையும் இந்த நற்செய்திக்கு ஊழியம் செய்ய ஆசீர்வதிக்கப் பட்ட சந்தர்ப்பங்களையும் கொடுத்தார். நாம் இருப்பது நற்செய்தியை பரப்புவதற்கான கருவிகளாக பயன் படுத்தப் பட மட்டுமே, தேவன் மட்டுமே மகிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவராக இருக்கிறார். தேவன் நம்மை இத்தகைய கருவிகளாக பயன் படுத்துகிறார் என்ற உண்மைக்காக நாம் மிகவும் நன்றியறிதல் உடையவர்களாக இருக்க வேண்டும்.
தலைமை ஆசாரியன் என்ற நம்முடைய கடமையை செய்யும் படியான இந்த ஆசீர்வாதத்தைக் கொடுத்தமைக்காக நாம் நம் நன்றிகளை கர்த்தருக்கு கொடுக்கிறோம். இயேசுவானவர் நமக்கான பரலோகத்தின் தலைமை ஆசாரியராகவும் பிரதான மேய்ப்பராகவும் இருக்கிறார். அவருடைய ஊழியர்கள் சிறிய மேய்ப்பர்கள். பிரதான மேய்ப்பர் நமக்காக செய்ததைப் பின்பற்றியதால் நீங்களும் நானும் சிறிய மேய்ப்பர்களாக மாறினோம். நீங்களும் நானும் கர்த்தருடைய வார்த்தையை அப்படியே விசுவாசிக்க வேண்டும், எழுதப் பட்டுள்ள படியே அதனைப் பின்பற்ற வேண்டும். தேவன் செய்த படியாக நாம் அப்படியே ஊழியம் செய்ய வேண்டும். தேவன் செய்தபடியே நாமும் செய்ய வேண்டும், அதன் படியாக அவரை நாம் விசுவாசித்து பின்பற்ற வேண்டும். அவர் நமக்கு கட்டளையிட்டபடியும் திட்டமிட்டபடியும் விசுவாசித்து பின்பற்றுவதும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்புவதுமே நாம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. கர்த்தருக்கு முன்னதாக நம்முடைய சரியான விசுவாசம் அவருடைய வார்த்தையை தூய்மையுடன் ஏற்றுக் கொண்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதனை பிரசங்கம் செய்வதாக இருக்கிறது.
நம்முடைய சொந்த தலைமை ஆசாரியராக மாறிய நம் தேவனுக்கு நம் முழு இருதயத்தினாலும் நன்றி கூறுகிறோம்.