(யாத்திராகமம் 28:36-43)
“பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி, அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும். மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக. ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக. உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக. ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.”
யாத்திராகமம் 28:36 கூறுகிறது, “பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி.” இந்த பட்டமானது விழுந்து விடாமல் இருக்கும் படியாக தலைச்சீராவுடனே ஒரு நீலநிற நூலினால் கட்டப் பட்டது.
தலைமை ஆசாரியனுடைய இந்த தலைச்சீராவின் மூலமாக கர்த்தர் நமக்கு காட்டுவது என்ன? இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக அவர் நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்து விட்டார் என்று தலைச்சீராவும் அதிலுள்ள ஆபரனங்களும் சுட்டிக் காட்டுகின்றன.
கர்த்தருக்கு முன்னதாக நாம் விசுவாச வாழ்வை வாழ, முதலாவதாக, அவர் மீது நாம் உண்மையான விசுவாசம் வைக்க வேண்டும். இந்த சத்தியத்தில் விசுவாசம் வைக்க, சத்தியத்தைக் குறித்த சரியான ஞானம் நம்மிடம் இருக்க வேண்டும். நம் தேவன் நம் அனைவரிடமும் கூறினார், “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). கர்த்தரை விசுவாசிப்பது என்பது உணர்வுகளினால் மட்டுமே செய்யப் படும் ஒன்றல்ல. இதனால் தான் நம் விசுவாசமானது சத்தியத்தின் மீதுள்ள ஞானத்தில் இருக்க வேண்டும், அதன் பிறகு அது உணர்வுகளினால் பின்பற்றப் பட வேண்டும், அதன் பின்னர் நம் திடசித்தம் வருகிறது. அப்படிச் செய்ய வேண்டுமானால், தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட பொருட்களில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை தெளிவாக அறிந்து விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும்.
தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட தலைச்சீராவில், ஒரு பொன் பட்டை தொங்க விடப் பட்டது அது ஒரு நீல நிற நூலினால் இணைக்கப் பட்டிருந்தது. நம் தேவன் இந்த பூமிக்கு வந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்ற சத்தியத்தை இது நமக்கு தெளிவாக காட்டுகிறது. இதனால் தான் மேற்கண்ட வேதாகம வசனம் இவ்வாறு கூறுகிறது, “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக” (யாத்திராகமம் 28:38). தலைமை ஆசாரியனுடைய தலைச்சீராவின் முன்னால் வைக்கப் பட்டிருந்த பொன் தகட்டிலும் அந்த தகட்டை இணைத்திருக்கும் நீல நிற நூலும் இஸ்ரவேலர்களால் பாவப் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன.
அனைத்து மனிதர்களுடைய இரட்சிப்பிற்கும் இயேசுவானவருடைய ஞானஸ்நானம் அவசியமாகிறது
நீல நிற நூலின் மூலமாக பொன் பட்டை ஒன்று இணைக்கப் பட்ட தலைச்சீராவை தன் நெற்றியில் அணிந்த தலைமை ஆசாரியனைப் போல, நீங்கள் உண்மையாகவே இன்றைய ஆவிக்குரிய ஆசாரியர்களாக இருந்தால், அப்போது நீங்கள் தேவன் இந்த பூமிக்கு வந்து, பழைய ஏற்பாட்டின் பலி காணிக்கை முறையின் கைவைத்தலைப் போன்றிருக்கும் யோவான் ஸ்நானனுடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, இதன் மூலமாக உங்களுடைய எல்லாப் பாவங்களையும் சுத்தம் செய்தார் என்பதை நீங்கள் அறிந்து விசுவாசிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டின் காலத்திலே, பலிகாணிக்கை முறையின் மூலமாக கொடுக்கப் பட்ட பலிகாணிக்கையினால் தான் ஒவ்வொரு பாவமும் துடைக்கப் பட்டன என்பதை தலைமை ஆசாரியன் அறிந்திருக்க வேண்டும். மறுபுறம் பார்க்கையில், புதிய ஏற்பாட்டின் காலத்திலே வாழுகின்ற நீங்களும் நானும், தேவன் இந்த பூமிக்கு வந்த போது யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக, நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால், நம்முடைய எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தப் பட்டது அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார்.
இந்த ஞானஸ்நானத்தின் மூலமாக, இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுடைய எல்லாப் பாவங்களும் எந்த விதிவிலக்கும் இல்லாது இயேசுவானவர் மீது சுமத்தப் பட்டது. கடைசி தலைமை ஆசாரியனும் அனைத்து மனிதர்களின் பிரதிநிதியுமான யோவான் ஸ்நானனுடைய பாவங்களும் கூட, உலகத்தின் எல்லா மக்களுடைய பாவங்களையும் போன்று, இயேசுவானவரின் மீது சுமத்தப் பட்டது.
அப்படியானால் கர்த்தருக்கு முன்னதாக நம்மிடம் எத்தகைய விசுவாசம் இருக்க வேண்டும்? இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலமாக உண்மையாகவே எல்லா மக்களுடைய பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்று விசுவாசிக்கும் உண்மையான விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். சத்தியத்தைக் குறித்த ஞானத்துடனே, இந்த சத்தியத்தை நம் இருதயங்களினால் விசுவாசிக்கும் விசுவாசமும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தால் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்து அதனை பரப்பும் போது, மக்கள் அதனைக் கேட்டு தம் இருதயங்களினால் அதனை விசுவாசித்து, பனியைப் போல் வென்மையாக தம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவப் பெற்றுக் கொள்ளுவர். இந்த சத்தியத்தை முழு இருதயத்துடனும் விசுவாசிக்கும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பைக் கொடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒரு விசுவாசம் இன்றைய ஆவிக்குரிய ஆசாரியர்களிடம் இருக்க வேண்டும். இந்த சத்தியத்தைக் குறித்த அறிவில்லாமலும் விசுவாசம் இல்லாமலும் இருந்தால், நம்மால் ஆவிக்குரிய ஆசாரியத்துவத்தின் கடமைகளை நிறைவு செய்ய முடியாது. வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை மீது௮அதாவது, பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்த உண்மையான சத்தியத்தின் மீது௮விசுவாசம் உடையவர்களால் மட்டுமே, தம்முடைய ஆசாரியத்துவ ஆவிக்குரிய கடமைகளை செய்ய முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசித்து தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களால் மட்டுமே நற்செய்தியை பரப்புகின்ற தம் கடமைகளை நிறைவேற்ற முடியும். இதனைப் போல, இந்த சத்தியத்தின் மீது சரியான ஞானம் இருப்பது ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசாரியருக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இதனால் தான் வேதாகமம் தெளிவாக கூறுகிறது, “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” (ஓசியா 4:6).
பாவ நிவாரண நாளிலே தலைமை ஆசாரியன் கர்த்தருக்கு முன்னதாக வந்த போது, தன் தலைச்சீராவை அணியாமல் அவனால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன் வரக் கூடாததாக இருந்தது. கர்த்தர் ஏற்படுத்திய படி, மெல்லிய பஞ்சு நூலினால் தயாரிக்கப் பட்ட தலைச்சீராவின் முன் பக்கத்திலே பொன் பட்டத்தை நீல நிற நூலினால் கட்டி அதனை தலைமை ஆசாரியன் அணிய வேண்டும். நீங்கள் ஏற்கனவே உறுதி செய்ததைப் போல, நீல நிறை நூலானது இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை இளநீல நிற நூல் சாட்சி கூறுகிறது (மத்தேயு 3:15; 1 பேதுரு 3:21).
அன்றாடம் பாவம் செய்வதை ஒருவனால் தவிர்க்க முடியாது. ஆகவே ஒருவன் தண்டிக்கப் பட்டு, மரித்து, தம்முடைய பாவங்களுக்காக நித்தியமாக அழிந்து போவதை அவனால் தவிர்க்க முடியாது. ஆனால் தேவன் இந்த பூமிக்கு வந்து, அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டார். இயேசுவானவர் மத்தேயு 3:15 இல் இவ்வாறு கூறினார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது,” இந்த ஞானஸ்நானத்தின் மூலமாக உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்த பிதாவாகிய கர்த்தர் விரும்பி, இது இப்படி நடக்கும் படியாக அவர் அனுமதித்தார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது யோவான் ஸ்நானனின் மூலமாக அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஒரேதரமாக ஏற்றுக் கொண்டார் என்று பொருள் படுகிறது. ஆகவே, உங்களின் பாவங்களும் என் பாவங்களும் அந்த நேரத்திலே இயேசுவானவரின் மீது சுமத்தப் பட்டு விட்டன.
அனைவரும் பாவம் செய்ததினால், அனைவரும் கர்த்தருடைய மகிமை அற்றுப் போயினர் (ரோமர் 3:23). வேதாகமம் இவ்வாறு கூறுகிறது, “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல” (ரோமர் 5:19). பாவம் செய்யாத யாராவது இருக்கிறார்களா? இல்லை, முற்றிலும் இல்லை! அப்படியானால் நம்முடைய நிலை என்ன? நம்மிடம் ஏதாவது பாவம் இருந்தால், அது எப்படிச் செய்யப் பட்டதாக இருந்தாலும், அதனை செயலில் செய்திருந்தாலும், இருதயங்களிலோ அல்லது சிந்தனைகளிலோ செய்திருந்தாலும், நாம் அழிந்து போவோம் என்று கர்த்தர் கூறினார். “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்று கர்த்தர் கூறியதால், கடுகு விதையைப் போன்ற சிறியதொரு பாவம் இருந்தாலும் கூட, நாம் தவறாது இந்தப் பாவத்தை கழுவ வேண்டும். மனிதகுலம் முழுவதும் கர்த்தருக்கு முன்னதாக பாவம் செய்தது, இதன் காரணமாக அவர்கள் அனைவராலும் தம் பாவங்களுக்காக தண்டிக்கப் படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும், “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று கர்த்தர் கூறிய போது, அவர் தன் குமாரர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் அறையப் படுவதை அனுமதித்தார். பாவத்தின் சம்பளம் மரணமாகும். இங்கே மரணம் என்பதின் பொருள் என்ன? மரணம் என்பதின் பொருள் நரகம் என்பதாகும்
எபிரெயர் 9:27 கூறுகிறது, “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே.” நாம் மரிக்கும் போது நியாயத்தீர்ப்பு நமக்காக காத்திருக்கிறது என்று கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். நீதிமான்களாக இருந்தாலும் பாவிகளாக இருந்தாலும், அனைத்து மக்களும், அதாவது தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களும், பெற்றுக் கொள்ளாதவர்களும், தம்முடைய சரீர மரணத்திற்கு பிறகும் கூட நித்தியமாக வாழுவார்கள். கர்த்தர் நித்தியமாக வாழுவதினால், ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் நித்தியமாக வாழுவான் என்று மனிதன் கர்த்தருடைய சொந்த சாயலிலே படைக்கப் பட்டான் என்பது நம்மிடம் கூறுகிறது. ஆனால் இரண்டு வகையான நித்திய ஜீவன் இருப்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்: ஒன்று பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வதிக்கப் பட்ட நித்திய ஜீவனாகும், மற்றது நரகத்திலே வாழ வேண்டிய சபிக்கப் பட்ட வாழ்வாகும்.
இயேசு கிறிஸ்து பரலோகத்தின் நித்தியமான தலைமை ஆசாரியர் ஆவார். அவர் இந்த பூமிக்கு பரலோக ராஜ்யத்தின் தலைமை ஆசாரியராக வந்தார், அவர் பூலோகத்தின் அப்டியான பலியைக் கிடுத்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் துடைக்கவில்லை, ஆனால் அவர் தன் சொந்த சரீரத்தையே கொடுத்து அப்படிச் செய்தார் (எபிரெயர் 7:21, 8:11-12, 10:10). கர்த்தரே இந்த பூமிக்கு வந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார், உங்களையும் என்னையும் உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கவே அப்படிச் செய்தார். பரலோக ராஜ்யத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து, மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு இறங்கி வந்து தன் ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்திலே ஏற்றுக் கொண்டார். இதன் மூலமாக, உங்களுடைய எல்லாப் பாவங்களும் இயேசு கிறிஸ்துவின் மீது ஒரேதரமாக சுமத்தப் பட்டுவிட்டது. இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டதினால், அவரால் சிலுவைக்குச் சென்று, அங்கே அறையப் பட்டு, தன் இரத்தத்தை மரிக்கும் படி சிந்த முடிந்தது.
இதனால் தான் தலைமை ஆசாரியன் “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்று எழுதப் பட்ட பொன் தகட்டை தன் தலைச்சீராவின் முன்பக்கத்திலே இளநீல நிற நூலினால் அது விழுந்து விடாத படியாக கட்டி அதனை அணிய வேண்டும் என்ற சட்டத்தை கர்த்தர் உருவாக்கினார். இயேசுவானவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டதினாலே, தம்முடைய இருதயங்களிலே பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களால் கர்த்தருக்கு முன்னதாக வர முடியும் என்று இது நம்மிடம் கூறுகிறது.
பொன் தகடு தலைச்சீராவிற்கு முன்பக்கத்தில் இருக்க வேண்டும்
யாத்திராகமம் 28:37 கூறுகிறது, “அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.” அவருடைய ஞானஸ்நானத்தின் மீது நாம் விசுவாசம் வைக்க வேண்டும் என்பது இந்த வசனத்தின் பொருளாகும். உலகத்தின் பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டது என்பதை அறிந்து விசுவாசித்தால், நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவோம். இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது தவறா? மக்கள் ஏன் அழிந்து போகிறார்கள்? நீங்களும் நானும் பாவம் செய்ததினால் நாம் கர்த்தரால் கைவிடப் பட்டு அழிந்து போகிறோம் என்பது சரியல்ல. மிகவும் தெளிவான சத்தியத்தை அவர்கள் விசுவாசிக்காததினால் இன்னமும் அவர்களிடம் பாவம் இருப்பதினால் அவர்கள் அழிந்து போகிறார்கள். இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினாலும், நம்முடைய பாவங்கள் அவர் மீது சுமத்தப் பட்டதினாலும், நம் தேவன் நமக்காக தண்டிக்கப் பட்டார். இதனை நாம் நம்முடைய தலைகளினால் அறிந்து நம் இருதயங்களினால் விசுவாசிக்க வேண்டும். அப்போது மட்டுமே நம்முடைய விசுவாசமாக இயேசுவானவருடைய ஞானஸ்நானம் நம் இருதயங்களில் நடப் பட முடியும். வேதாகமத்திலே பொன் விசுவாசத்தைக் குறிக்கிறது. உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதினால் தான் நம்மால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மதங்களும் தம்மைப் பின்பற்றுகிறவர்கள் சுய ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என போதிக்கின்றன. உதாரணமாக, புத்தமதமானது தன் விசுவாசிகள் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து நிர்வானத்தை அடைந்து தம் இருதயங்களை சுத்தம் செய்ய வேண்டும் என போதிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், புத்தமதத்தின் நோக்கமானது, மாயையான காரியங்களை எல்லாம் வீசி எறிந்து விட்டு, தியானத்தின் ஈடுபடுவதின் மூலமாக வழக்கமான சிந்தனைகளை விட்டு விட்டு தன்னுடைய சொந்தத்திலே தெய்வமாக மாறுவதாக இருக்கிறது. ஆனால் யாராலும் இதனை செய்து முடிக்க முடியாது. சில மதவாதிகள் தம்மை மலைகளில் மறைத்துக் கொள்ளுவதின் மூலமாக தம் சொந்தத்திலே தெய்வமாக மாற முயற்சி செய்கிறார்கள். உதாரணமாக, ஆதி சபையின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவத்திலும் கூட, சுய பரிசுத்தத்தைத் தேடுகின்ற அநேக கிறிஸ்தவ மடங்கள் உருவாக்கப் பட்டன. ஆனால் ஒருவன் தன்னை மலையில் ஒளித்துக் கொள்ளுவதின் மூலமாக அருவருப்பான சிந்தனைகள் அவனிடம் வராது என்று இதற்கு பொருள் படாது. நாம் நம்மை உலகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டு மற்ற மனிதர்களிடம் எந்த உறவும் வைத்து கொள்ளாவிட்டால், நம்மால் எல்லா இச்சைகளில் இருந்தும் உணர்ச்சிகளில் இருந்தும் விடுதலையாக முடியும் என்று என்ணுவது மிகப் பெரிய தவறாகும். அதற்கு மாறாக, நம்முடைய சரீரமானது அதிகமாக நாம் நம்மை பிரித்துக் கொள்ளும் போது, நாம் அதிகமாக இந்த உலகத்தின் இச்சைகளிலும் உல்லாசங்களிலும் மனதளவில் ஈடுபடுவோம். நம்முடைய இருதயங்களில் இத்தகைய பாவங்கள் இருப்பதினால், நாம் எத்தனையாக இத்தகைய பாவங்களில் இருந்து தூரமாக இருக்க விரும்பினாலும் கூட அப்படிச் செய்ய நம்மால் முடியாது. இதனால் தான் இயேசுவானவர் கூறினார், “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.” நம்முடைய தேவன் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கான ஒரே வழியாவார். அவரே சத்தியமாக இருக்கிறார். அவரே ஜீவனாக இருக்கிறார். இயேசுவானவர் ஜீவனுக்கான தேவன்.
மக்கள் விரும்புவதெல்லாம் பரலோகத்திற்குச் செல்லுவதற்கான வழியைத் தேடுவது மட்டுமே. பரலோக ராஜ்யத்திற்கு அவர்களை வழிநடத்தும் இந்த பாதையை அவர்கள் அறிந்து கொள்ள, அவர்கள் சத்தியத்தை முழுவதுமாக அறிந்து விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் தாமே இந்த உலகத்திற்கு மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து வந்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சத்தியமாகும்; அவர் மனிதகுலம் முழுவதின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். நாம் அனைவரும் இந்த சத்தியத்தை அறிந்து நம்முடைய எல்லாப் பாவங்களும் இயேசுவானவரின் மீது சுமத்தப் பட்டது என்பதை விசுவாசித்து கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
அதற்கு மாறாக, நம்முடைய சொந்த தகுதிகளினால், வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் செய்யும் நம்முடைய நல்ல செயல்களால், பரலோகத்திற்குள் பிரவேசிப்பது நமக்கு சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏன்? நாம் எத்தனை நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் கூட, நாம் கர்த்தருடைய பிரமாணத்தின் ஒரு விதியை உடைத்திருந்தாலும் கூட, நாம் கர்த்தருடைய வார்த்தை அனைத்தையும் கைக்கொள்ள தவறினோம் என்று மட்டுமே இதற்கு பொருள் படும். கர்த்தருடைய பிரமாணத்தில் ஒன்றை உடைப்பதும் கூட ஒருவன் கர்த்தருக்கு முன்னால் பாவியாக இருக்கிறான் என்று பொருள் படுவதினால், இத்தகைய நபர் தன் செயல்களின் மூலமாக பரலோகத்திற்குச் செல்லுவது இயலாத காரியமாகும். நாம் இந்த சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும், இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் நம்முடைய பாவங்களை அவர் மீது சுமத்த வேண்டும். உங்களுடைய பாவங்கள் உட்பட மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் இயேசுவானவர் தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டார். ஆகவே உங்களுடைய பாவங்களை இயேசுவானவரின் மீது சுமத்தியதினால் உங்களுடைய எல்லாப் பாவங்களும் தெளிவாக கழுவப் பட்டன.
இதனை செய்து முடிக்க, உங்களுடைய இருதயத்தில் பாவம் இருக்கிறதா இல்லையா என்று முதலாவதாக நீங்கள் உங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும், உங்களிடம் பாவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்போது, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட பாவங்களுக்கான மன்னிப்பை நீங்கள் விசுவாசித்து, இதன் மூலமாக உங்கள் விசுவாசம் கர்த்தரால் அங்கீகரிக்கப் பட வேண்டும். கிறிஸ்துவின் சரீரப் படியான பலிகாணிக்கையை விசுவாசிப்பதின் மூலமாகத் தான் எல்லாப் பாவங்களில் இருந்தும் ஒரேதரமாக இரட்சிக்கப் பட்ட பின்னர் நம்மால் பரலோகத்திற்குச் செல்ல முடியும். மக்கள் பாவங்களைச் செய்ததினால் அவர்களால் பரலோகம் செல்ல முடியவில்லை என்பது சரியல்ல, ஆனால் அவர்கள் உண்மை சத்தியமாகிய, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியை அறிந்து விசுவாசிக்காமல் போனதால் தான், அவர்களால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை. நாம் நம்முடைய அறியாமையினாலும் கர்த்தருடைய வார்த்தையில் இருந்து தொலைவில் இருப்பதினாலும் அறிவில்லாமல் இருக்கிறோம் என்று நாம் கூறக் கூடாது, ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்டு இரட்சிப்பதின் மூலமாக நாம் இரட்சிக்கப் பட வேண்டும்.
தன்னுடைய மக்களை பரிசுத்தமாக்க விசுவாசத்தால் தலைமை ஆசாரியன் கர்த்தருக்கு பலிகாணிக்கையை கொடுத்ததைப் போல, நாமும், இன்றைய ராஜரீக ஆசாரியர்களாக, தெளிவான சத்தியத்தை நம் தலைகளினால் அறிந்து கர்த்தருடைய பரிசுத்தத்தை நம் இருதயங்களில் தழுவ வேண்டும். தமக்காக ஆத்துமாக்கள் எங்கே, எப்போது, எப்படியாக விசுவாசத்தின் பலிகாணிக்கையைச் செலுத்தும் படியாக நம்மிடம் கூறினாலும், முதலாவதாக நாம் கர்த்தருடைய பரிசுத்தத்தினால் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். ‘கர்த்தருக்கு பரிசுத்தம்’ என்ற வார்த்தை எழுதப் பட்ட பொன் தகடானது, இன்றைய தலைமை ஆசாரியர்களாகிய நம் நெற்றிகளின் மீது, எப்போதும் இருக்கும்.
உண்மையானதும் தெளிவானதுமான பாவங்களுக்கான மன்னிப்பின் சத்தியமானது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப் பட்ட சத்தியமாகும். இந்த நற்செய்தியை நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்திகரித்து நம்மை பாவம் இல்லாதவர்களாகவும், பரிசுத்தமாகவும், புனிதமாகவும் மாற்றியது. இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டது என்பது மிகவும் தெளிவாகும். ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டதினால் அவரை விசுவாசிக்கும் நம்மால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு நம் விசுவாச வாழ்வை வாழ முடியும். அதற்கு மேலும், பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகு நாம் தொடர்ந்தும் நம் விசுவாச வாழ்வை வாழுவதினால், இந்த நற்செய்தி எத்தனை முக்கியமானதும் அவசியமானதுமாக இருக்கிறது என்பதை ஆழமாக தியானித்து அதனை விசுவாசிக்க வேண்டும், இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் நற்செய்தியானது நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் இருந்து எத்தனையாக எதிர்பார்க்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையானது எப்போதும் நம் இருதயங்களில் வாசம் செய்ய வேண்டும். ஏன்? நாம் எப்போதும் பாவம் செய்வதும் அன்றாடம் பாவம் செய்வதுமே இதற்கு காரணமாகும். என்னுடைய புத்தகங்களை வாசிப்பவர்களில், இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் அறையப் பட்டதினால் நம் பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொண்டார் என்பதை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆயினும், இந்த சத்தியத்தை நாம் வெறும் அறிவாக மட்டுமே கருதினால் இதனால் எந்த பயனும் ஏற்படாது. நாம் எத்தனையாக முடியுமோ அத்தனையாக அவருடைய ஞானஸ்நானத்தை தியானம் செய்ய வேண்டும், ஏனெனில் நாம் அன்றாடம் பாவத்தினால் கறைபடுகிறவர்களாக இருக்கிறோம். இந்த விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளுவது ஒரு களஞ்சியத்தில் இருந்து தானியங்களை எடுத்து வந்து நம் அன்றாட உணவை உண்ணுவதைப் போன்று இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை விசுவாசிப்பது நம் ஆத்துமாக்களுக்கான ஆவிக்குரிய படியான உணவாகும். இதனால் தான் இயேசுவானவர் கீழ்வருமாறு கூறினார், “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” (யோவான் 6:53-54).
இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தின் மீதுள்ள நம் விசுவாசத்தை அன்றாடம் நாம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆசாரியர்களுக்கும், இந்த விசுவாசம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அவர்களிடம் இந்த தெளிவான தீர்மானமிக்க விசுவாசம் இருக்கும் போது தான் அவர்களால் தம் இரட்சிப்பை பராமரிக்க முடியும். இது உண்மை இல்லையா? அது உண்மையே! இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் விசுவாசமும், நம்முடைய எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையை இயேசுவானவர் பெற்றுக் கொண்டார் என்று விசுவாசிக்கும் விசுவாசமும் நம்மிடம் அன்றாடம் இருக்க வேண்டும்
தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட தலைச்சீராவை இந்த உலகத்திலே காண முடியாது. பொன் தகடு நீல நிற நூலினாலே கட்டப் பட்ட தலைச்சீரா இந்த உலகத்திலே எங்காவது இருக்கிறதா? இங்கே ஒரே ஒரு தலைச்சீரா மட்டுமே இருக்கிறது, அது தலைமை ஆசாரியனுடைய தலைச்சீராவாகும். இது நமக்கு முழுமையான ஒரு சத்தியத்தை நம்மிடம் பேசுகிறது; அது இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தின் மீது ராஜரீக ஆசாரியர்கள் உறுதியான விசுவாசத்துடன் இருக்க வேண்டும். இந்த சத்தியத்திலே நாம் உறுதியான விசுவாசத்துடன் இருக்கும் போது மட்டுமே நம்மால் நம் ஆசாரிய கடமைகளை நிறைவேற்ற முடியும் என்று இது நம்மிடம் கூறுகிறது.
இயேசுவானவர் மீதுள்ள நம் விசுவாசம் ஒவ்வொரு நாளும் தெளிவாகவும் துல்லியமாகவும் மாற வேண்டும். இயேசுவானவர் நம்முடைய பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் அவர் சிலுவையில் மரித்தார். அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது நம் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், சிலுவையில் மரிப்பதற்கு சிறிது முன்னால், “முடிந்தது” (யோவான் 19:30) என்று அவரால் கூற முடிந்தது. அதன் பிறகு அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து வந்தார். இந்த நீதியின் செயல்களைச் செய்த இயேசுவானவர், நம்முடைய எல்லாப் பாவங்களையும் முழுமையாக துடைத்து விட்டு அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்தியமான இரட்சகராக மாறினார்.
அன்றாடம் நாம் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏன்? நம்முடைய வாழ்வு முழுவதும் தவறுகளாலும் களங்கங்களினாலும் நிறைந்திருப்பதே இதற்கு காரணம். நீங்கள் குறைபாடுடையவர்களாக இருக்கிறீர்களா இல்லையா? அதிகமான நேரம் செல்லும் போது, நம்முடைய குறைபாடுடையதும் பலவீனமானதுமான தன்மைகளை நம்மால் காண முடியும். இன்னமும் நீங்கள் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும் சிலுவையின் இரத்தத்தையும் விசுவாசிக்காமல் இருக்கிறீர்களா?
“கர்த்தருக்கு பரிசுத்தம்” என்று பொறிக்கப் பட்ட பொன் தகடு
நாம் பாவமில்லாதவர்களாகவும் பரிசுத்தமாகவும் மாற நம்மை ஏதுவாக்கும் விசுவாசம் எத்தகைய விசுவாசமாக இருக்கிறது? இளநீல நிற நூலின் விசுவாசமே இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாகவே அவர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால் தான் நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர்மீது சுமத்தப் பட்டது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொள்ளுவதற்காகவே இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார் என்று நாம் விசுவாசிக்கும் போது மட்டுமே, நம்முடைய விசுவாசத்தால் நம் எல்லாப் பாவங்களும் துடைக்கப் பட்டது என்ற ஆச்சரியமான அனுபவத்தை இத்தகைய விசுவாசம் நமக்கு கொடுக்கிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது, மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப் பட்டது. ஆகவே ஒருவனுடைய எல்லாப் பாவங்களும் இயேசுவானவரின் மீது சுமத்தப் பட்டதினால், இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் அனைவரும் தம்முடைய எல்லாப் பாவங்களையும் ஒரேதரமாக கழுவிக் கொண்டனர். அவர்களுடைய பாவங்கள் விசுவாசத்தால் சுத்திகரிக்கப் பட்டன. இப்படி பாவம் கழுவப் பட்டது ஆசரிப்புக் கூடார அமைப்பின் இளநீல நிற நூலினால் சுட்டிக் காட்டப் படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் அவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசித்து, “ஆ, என் பாவங்களும், உங்கள் பாவங்களும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுடைய பாவங்களும் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டன,” என்று அறிக்கைச் செய்யும் போது உங்களுடைய இருதயங்களின் எல்லாப் பாவங்களும் விசுவாசத்தால் துடைக்கப் பட்டன. இந்த விசுவாசம் உங்களிடம் இருந்தால் உங்களுடைய பாவங்களும் கூட முழுமையாக கழுவப் படும்.
இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட இந்த ஞானஸ்நானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளுவதற்கு முன்னர் உங்கள் இருதயங்கள் பாவம் இருந்தது தெளிவு. இந்த சத்தியத்தை அறிந்து கொள்ளுவதற்கு முன்னர் பாவம் இல்லாதவர் என்று அங்கீகரிக்கப் பட்ட ஒருவர் கூட இந்த பூமியில் இல்லை. அனைவரிடமும் பாவம் இருக்கிறது, ஆகவே அவர்கள் நரகம் செல்ல வேண்டியவர்கள். ஆனால் நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்க, இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமானது பழைய ஏற்பாட்டு காலத்தின் பலிகாணிக்கை முறையிலே கைவைத்தலைப் போன்ற ஒரு முறையாக இருக்கிறது; இஸ்ரவேல் மக்களுடைய பாவங்கள் அவர்கள் தம் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலையின் மீது வைப்பதின் மூலமாக அதன் மீது சுமத்தப் பட்டது. இப்படியாக, நாம் பழைய ஏற்பாட்டின் அநேக இடங்களில், குறிப்பாக லேவியராகமத்தில் ‘அவன் (அல்லது அவர்கள்) தன் கையை வைத்தான்’ என்று குறிப்பிடுவதை காண முடியும்.
இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உங்களுடைய பாவங்கள் அவர் மீது சுமத்தப் பட்டதா? இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது, இவ்வாறு கூறினார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” (மத்தேயு 3:15). இங்கே “இப்படி” என்பது கிரேக்கத்தில் “ஹூட்டோஸ்” என்று அழைக்கப் படுகிறது, இதன் பொருள் ‘இந்த வழியாக,’ ‘மிகவும் பொருத்தமான,’ அல்லது ‘இதனைத் தவிர வேறு வழியில்லை,’ என்பதாக இருக்கிறது. இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாக மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்று இந்த வார்த்தை காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திலே இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், இந்த நொடிப் பொழுதை என்னால் மறக்கவே முடியாது. மூலப் புத்தகத்திலும் கூட தெளிவாக எழுதப் பட்டிருக்கும் இந்த வார்த்தையை நீங்கள் உங்கள் மூளையில் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை ஒவ்வொரு நாளும் நீங்கள் தியானம் செய்வதின் மூலமாக, நீங்கள் உங்கள் இருதயங்களில் விசுவாசிக்க வேண்டும்.
இயேசுவானவர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு அவற்றைக் கழுவி விட்டார் என்று நம் இருதயங்களில் விசுவாசித்தால் நம்மால் பாவமில்லாதவர்களாக மாறி பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். வேறு எந்த முறையினாலும் நம்மால் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியுமா? நீங்கள் வயதானவராக மாறும் போது சாந்தமாகவும் ஒழுங்குடையவர்களாகவும் மாறி விடுவீர்கள் என்று எண்ணக் கூடும், ஆனால் நீங்கள் வயதானவர்களாக மாறும் போது, மிகவும் மோசமாக மாறிவிடுவதை காணுவீர்கள். நேரம் செல்லும் போது நீங்கள் சாந்தகுனம் உடையவராகவும் சுய கட்டுப்பாடு உடையவராகவும் மாறக்கூடும் என நீங்கள் எண்ணினால், நீங்கள் இப்படி மாறக் கூடிய ஒருவர் அல்ல என்பதை சீக்கிரமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் வயதானவர்களாக மாறும் போது, நாம் இன்னமும் அதிக பொறுமை இல்லாதவர்களாக மாறி நம்முடைய கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாதவர்களாக மாறிவிடுவோம். இதனைச் செய்யும் திறமை நம்மிடம் இருந்தால், நம்முடைய செயல்களில் பிரமாணத்தைக் கடைப்பிடித்து பரலோக ராஜ்யத்திற்குள் நம்மால் பிரவேசிக்க முடியும். ஆனால் நம்மிடம் இத்தகைய திறமைகள் இல்லாதிருப்பதால், பாவம், தீமை, மற்றும் கோபம் ஆகியவை மட்டுமே நம்மிடம் இருந்து வருகிறது.
இரட்சிப்பை செயலின் அடைய முடியாது என்றும், அதனை விசுவாசத்தினால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நான் இங்கே கூற முயற்சி செய்கிறேன். எபிரெயர் 11:1 கூறுகிறது, “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” கர்த்தரை நாம் பார்க்காவிட்டாலும் கூட, அவர் இருக்கிறார், இந்த கர்த்தர் உயிரோடு இருப்பதினால், அவர் நம் வாழ்விலே செயல் படுகிறார். நம்மால் காணக் கூடாத இந்த பிரபஞ்சத்தை கர்த்தர் படைத்தார், அவர் தன் வார்த்தையின் மூலமாக இரட்சிப்பின் சத்தியத்தை நம்மிடம் காட்டினார். நம்முடைய இருதயங்களில் இந்த இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் நம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட்டு நம் இருதயங்களில் இருக்கும் எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்க முடியும். இது இன்னமும் செயல் படக் கூடியதாகவே இருக்கிறது. ஆகவே, பாவிகள் இந்த சத்தியத்தை தம் இருதயங்களில் விசுவாசித்து இரட்சிக்கப் பட வேண்டும், அவர்கள் தம்முடைய நற்செயல்களின் மூலமாக தம் பாவங்களில் இருந்து இரட்சிக்கப் பட முயற்சி செய்யக் கூடாது.
தலைமை ஆசாரியனுடைய தலைச்சீராவின் முன்னால் பொன் தகடு ஒன்று நீலநிற நூலினால் கட்டப் பட்டிருக்கிறது என்ற உண்மையின் பொருள் என்ன? நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து அதனை விசுவாசிக்க வேண்டும் என்று அதற்கு பொருள் படுகிறது. இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக, உங்களுடைய பாவங்களையும் என்னுடைய பாவங்களையும் அவர் தன்மீது ஏற்றுக் கொண்டார். மகத்துவமான இயேசுவானவர் இப்படியாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார். இதனை நாம் அறிந்து விசுவாசிக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தையை நாம் நம் காதுகளினால் கேட்கும் போதும், அதனை நம் தலைகளினால் அறிந்து கொள்ளும் போது, அதனை நம் இருதயங்களினால் விசுவாசிக்கும் போது நம் இருதயங்கள் சுத்திகரிக்கப் படுகின்றன. நாம் முன்னதாக பாவம் செய்ததினாலும் இப்போதும் எதிர்காலத்திலும் பாவம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது என்பதாலும், நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க, தேவன் இந்த பூமிக்கு வந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார்.
இயேசுவானவர் மனிதகுலத்தின் பாவங்களை ஏற்றுக் கொண்டு அவை அனைத்தையும் கழுவி விட்டதினால், உங்களுடைய பாவங்களும் கூட அவர் மீது சுமத்தப் பட்டு விட்டது. இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, உங்களுடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய முடியும். நீர் மற்றும் ஆவியினால் வந்த இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை நாம் விசுவாசிக்கும் போது, உங்களாலும் என்னாலும் நம்முடைய இருதயங்களில் உள்ள எல்லாப் பாவங்களையும் கழுவ முடியும், அந்த இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்கான தண்டனையையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்று விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் கர்த்தருடைய சொந்த பிள்ளைகளாக மாற முடியும். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தால் தான் நம்மால் மறுபடியும் பிறந்து கர்த்தருடைய மக்களாக மாற முடியும். நம் தேவன் நமக்கு இத்தகைய விசுவாசத்தைக் கொடுத்தார்.
தலைமை ஆசாரியனுடைய பஞ்சுநூல் காற்சட்டை
தலைமை ஆசாரியனுக்கு பஞ்சு நூல் காற்சட்டையை தயாரித்து அதனால் உடுத்துவிக்கும் படியாக கர்த்தர் மோசேயிற்கு கட்டளையிட்டார். அது இடுப்பிலிருந்து தொடை வரையில் உடுத்தப் பட்டு ஆசாரியர்களுடைய நிர்வானத்தை மறைக்க வேண்டும். ஆரோனும் அவனுடைய குமாரர்களும் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வரும் போதோ அல்லது ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளே இருக்கும் பீடத்திலே ஊழியம் செய்யும் படியாக அதனை அனுகும் போதோ மரணத்தை தவிர்க்க வேண்டுமானால், அவர்கள் அதனை அணிய வேண்டும் என்று கர்த்தர் கூறினார், மேலும் இது ஆரோனுக்கும் அவனைப் பின்பற்றும் அவனுடைய சந்ததியினருக்கும் நித்தியமான பிரமாணமாக இருக்கட்டும் என்றும் கூறினார்.
அவை ஆசாரியர்கள் தம் நிர்வாணத்தை மறைப்பதற்கு அணிந்து கொண்ட உள்ளாடைகள் ஆகும். கர்த்தருக்கு முன்னதாக நிர்வாணத்தை காட்டுவது அவருக்கு முன்னதாக அசுத்தத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது, ஆகவே கர்த்தருக்கு முன்னதாக யாருடைய பாவங்கள் வெளிப்படுத்தப் படுகிறதோ அவர்கள் மரணத்தை அடைந்தார்கள். இதனால் தான் தன் ஆசாரியர்கள் தம் நிர்வாணத்தை மறைக்க வேண்டும் என்று கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் நம்முடைய பாவங்களையும் நம் அசுத்தங்களையும், அவருடைய நீதியைக் குறித்த முழுமையான நற்செய்தியை விசுவாசிக்கும் விசுவாசத்தால் மறைக்கும் படியாக கூறினார்.
அப்படியானால், தலைமை ஆசாரியனுடைய வெள்ளைப் பஞ்சுநூலின் காற்சட்டைகள் என்ன? அது கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கின்ற விசுவாசமாக இருக்கிறது. கர்த்தர் நம்மை பாவமில்லாதவராக மாற்றினார் என்ற முழுமையான இரட்சிப்பைக் குறித்த சத்தியம் அதுவாகும். கர்த்தராகிய (இரத்தாம்பர நூல்) இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் (இளநீல நூல்) பெற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து (சிவப்பு நூல்), மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம் இரட்சிப்பை முழுமையாக நிறைவு செய்தார். கர்த்தர் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டு இந்தப் பாவங்களுக்கான கிரையத்தைச் செலுத்துவதற்காக தண்டிக்கப் பட்டார் என்று விசுவாசிப்பது நம்முடைய இருதயங்களிலே பஞ்சு நூலின் இரட்சிப்பிற்கான காற்சட்டையை அணிவதாக இருக்கிறது. நம்முடைய இருதயங்களால் விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நம்மால் பாவத்தில் இருந்து முழுமையாக இரட்சிக்கப் பட முடியும் மேலும் நம்மால் கர்த்தருடைய பிள்ளைகளாக மாறி அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
நம்முடைய இருதயங்களின் எல்லா அழுக்குகளையும் சுத்திகரிப்பதற்கான ஒரே வழியானது இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவை இரத்தத்தையும் விசுவாசிப்பதேயாகும். குறிப்பாக, இளநீல நிற நூலின் விசுவாசம், அதாவது இயேசுவானவர் நம் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக ஏற்றுக் கொண்டார் என்பதே, நம் இரட்சிப்பிற்கான முக்கியமான சத்தியமாக இருக்கிறது, இதனை விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே நம்மால் எல்லா அசுத்தங்களையும் மறைக்க முடியும். நாம் குறைபாடுடையவர்களாகவும் மீறுதல் செய்தவர்களாக இருந்த போதிலும் கூட நம்மால் எப்படி கர்த்தருக்கு முன்னதாக தயக்கம் எதுவுமின்றி வர முடியும்? நம்முடைய அனைத்து அழுக்குகளையும் முழுமையாக மூடும் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் போது மட்டுமே அதற்கு சாத்தியமாகும். நீர் மற்றும் ஆவியினால், அதாவது, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் கர்த்தர் நம்மை இரட்சித்தார் என்று விசுவாசிக்கும் விசுவாசத்தால், நம்மால் நம்முடைய எல்லா அசுத்தங்களையும் மூட முடியும். இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, தன்னுடைய நீதியின் செயல்களினால் நம்மை முழுமையான நீதிமான்களாக மாற்றி, இதன் மூலமாக நம்முடைய நித்திய இரட்சிப்பிற்கான தேவனாக மாறினார். இதனை விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நம்மால் ஒரு பாவம் இல்லாத நிலையை அடைய முடியும். கர்த்தருடைய நீதியின் செயல்களை அதாவது அவர் நம்மை நேசித்து நம்மை பாவமில்லாமல் மாற்றச் செய்த செயல்களை விசுவாசிப்பதின் மூலமாகத் தான், நம்மால் பாவத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். கர்த்தருடைய இந்த இரட்சிப்பை நம் இருதயங்களில் விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நம்மால் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாம் அன்றாடம் பாவம் செய்கிறோம். ஆகவே நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் துடைத்த இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகிய கர்த்தருடைய இரட்சிப்பின் பஞ்சு நூல் காற்சட்டையை அணியாமல் யாராவது வந்தால், அந்த நபர் மரிக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தருக்கு முன்னதாக நாம் வரும் போது நம்மை மரிக்காமல் இருக்கச் செய்யும் விசுவாசமானது அவருடைய நீதியை விசுவாசிக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கும் இந்த விசுவாசமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது. இத்தகைய வெள்ளை பஞ்சுநூல் காற்சட்டையை அணியும் படியாக கர்த்தர் நம்மிடம் கூறியதால், இதனை நாம் பெற்றுக் கொண்டு விசுவாசத்தால் உண்மையான பாவ மன்னிப்பின் காற்சட்டையை நம் இருதயங்களில் அணிய வேண்டும்.
இந்த விசுவாசத்துடனே நாம் கர்த்தருக்கு முன்னதாக வரும் போது, நாம் மரித்துப் போக மாட்டோம். மேலுமாக, தலைமை ஆசாரியனுடைய இந்த ஆடைகளில் வெளிப்படுத்தப் பட்டது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியமாகவே இருக்கிறது. தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் எதுவுமே ஆவிக்குரிய பொருள் அற்றதாக இல்லை. இன்றைய தலைமை ஆசாரியராகிய நம்மால், கர்த்தர் அணியும் படியாக கூறிய ஆடைகளை அணியாமல் இருக்க முடியாது. தலைமை ஆசாரியன் பஞ்சு நூல் காற்சட்டையை அணியாமல் மற்ற அனைத்து ஆடைகளையும் அணிந்தால் அவனுடைய நிலை என்னவாகும்? நாம் நிச்சயமாக மரித்துப் போவோம். சாதாரன மக்கள் இந்த பஞ்சுநூல் காற்சட்டையை அணிவதும் அணியாததும் அவர்களுடைய தேர்வாகும், ஆனால் தலைமை ஆசாரியன் அதனை அணியா விட்டால், அவர்களுடைய வெட்கக் கேடான நிர்வாணத்திற்காக௮அதாவது, அவர்களின் பாவங்களுக்காகவும் அசுத்தங்களுக்காகவும்௮அவைகள் முற்றிலுமாக மூடி மறைக்கப் படாததினால் அவர்கள் கொல்லப் படுவார்கள்.
அவருடைய முழுமையான இரட்சிப்பை கர்த்தருக்கு முன்னதாக நம் முழு இருதயங்களாலும் விசுவாசிக்கும் விசுவாசம் இல்லாவிட்டால் நமக்கு என்ன நடக்கும்? கர்த்தர் நம்மை பாவம் இல்லாதவர்களாக மாற்றினார் என்று நம் இருதயங்களில் விசுவாசிக்காமல், அதாவது இரட்சிப்பின் ஆடைகளை நம் இருதயங்களில் விசுவாசிக்காமல் கர்த்தருக்கு முன் நாம் வந்தால் நமக்கு என்ன நடக்கும்? நாம் பாவிகளாகவே இருப்போம். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்றிருப்பதாலே, தம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாத பாவிகள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள், கொல்லப் பட வேண்டியவர்கள், நித்தியமான நரகத்தின் அக்கினியில் வீசப் பட வேண்டியவர்கள். இதனால் தான் கர்த்தர் உங்களுக்காக உருவாக்கிய இரட்சிப்பின் ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நம்மால் கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடிகிறது.
இதனால் தான், எல்லா உலோகங்களிலும் துரு பிடிக்காத உலோகமாகிய, பொன்னானது ‘விசுவாசத்தை’ குறிக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது. வேதாகமத்திலே, பொன் விசுவாசத்தைக் குறிக்கிறது, வெண்கலம் தண்டனையை குறிக்கிறது. தலைமை ஆசாரியனுடைய ஆடைகளைத் தயாரிக்கையில் பொன் அடிக்கடி பயன் படுத்தப் படுகிறது என்ற உண்மையை நம்மால் காண முடியும். நாம் எப்போதும் இந்த முழுமையான இரட்சிப்பின் நற்செய்தியின் மீது உறுதியான விசுவாசத்தை வைத்திருக்க வேண்டும் என்று இது குறிக்கிறது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசியுங்கள். நாம் என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டிய பிரமாணமாக இது இருக்க வேண்டும் என கர்த்தர் கூறினார்.
நம்முடைய மனங்களிலும் இருதயங்களிலும், நீங்களும் நானும் இந்த சத்தியத்தை தவறாது விசுவாசிக்க வேண்டும். உண்மையான விசுவாசம் உண்மையான ஞானம், உணர்ச்சி, செயல்கள் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும். உங்களிடம் இத்தகைய விசுவாசமும் சத்தியமும் இருக்கிறதா? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை உங்கள் முழு இருதயங்களினாலும் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்றும், அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாகவும், தன் இரத்தத்தைச் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்ததின் மூலமாக உங்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிப்பது உண்மையானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களையும் ஆத்துமாக்களையும் இரட்சிப்பின் ஆடைகளினால் உடுத்துவித்தீர்கள் என்று பொருள் படுகிறது.
கர்த்தர் அப்போஸ்தலனாகிய பவுலின் மூலமாக இஸ்ரவேல் மக்களை கடிந்து கொண்டார், “எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்” (ரோமர் 10:3). வெளிப்படையான நற்செயல்களின் மூலமாக தம்முடைய சொந்த நீதியை நிறுவி அதனைக் குறித்து பெருமை பாராட்ட முயற்சி செய்கிறவர்களை கர்த்தர் விரும்புவதில்லை. கர்த்தர் நமக்காக தன் அன்பின் மூலமாக செய்த நல்ல செயல்களை விசுவாசிக்காத அனைவரும் அழிந்து போவோம். நீங்கள் எதனை விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் கர்த்தருடைய நீதியை விசுவாசிக்கிறீர்களா அல்லது உங்களுடைய சொந்த நீதியை விசுவாசிக்கிறீர்களா? கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்றும் அவர் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தினாலும் அவருடைய சிலுவையின் இரத்தத்தினாலும் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இந்த சத்தியத்தை விசுவாசித்து, உங்களை இதற்காக ஒப்பு கொடுக்கிறீர்களா? இந்த சத்தியத்தை நீங்கள் உண்மையாகவே உங்கள் இருதயங்களில் பற்றிக் கொண்டு அதனை விசுவாசிக்கிறீர்களா? அல்லது நீங்கள் உங்களுடைய சொந்தத்திலே உங்கள் வாழ்வை நேர்மையாக நடத்த முயற்சி செய்து உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கிறீர்களா?
நீங்கள் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பது, உண்மையே. நீங்கள் மறுபடியும் பிறந்த பிறகு, இன்னமும் அதிக நேர்மையுடன் வாழ வேண்டும். ஆயினும், பரிசுத்த ஆவியானவருக்குள், நல்லொழுக்கம் உடைய வாழ்வு இன்னதென்று முதலாவதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். வேதாகமம் இவ்வாறு கூறுகிறது, “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9). கர்த்தருடைய இன்றைய ஆசாரிகள் நேர்மையாக வாழ வேண்டும் என்பதின் பொருள் அவர்கள் உண்மையான நற்செய்திக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதாகும்.
நற்செய்தியையும் நம்மீதான கர்த்தருடைய அன்பையும் விசுவாசிக்காதவர்கள் எத்தனை பரிதாபமானவர்கள், இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய சிலுவையின் இரத்தம் ஆகியவற்றின் மூலமாக கர்த்தர் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை!
எல்லையில்லாத் கடலிலே புயலினாலும் அலையினாலும் 10 நாட்களுக்கும் மேலாக பாடுகளை அனுபவித்த ஒரு மீனவர் குழு ஒன்று அமேசான் நதியின் முகத்துவாரத்தை மிகவும் கடினத்துடன் சென்றடைந்தது. அவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக நீரை அருந்தாததினால் களைத்துப் போயிருந்தனர். கடைசியாக, அவர்கள் நல்ல நீர் இருக்கும் இடத்தை வந்து அடைந்தனர். ஆயினும், அந்த ஆற்றின் முகத்துவாரமானது மிகவும் பெரிதாக இருந்ததினால் அவர்கள் குடிக்க கூடிய நீருக்கு மேலாக மிதந்து கொண்டிருக்கும் ஆச்சரியமான உண்மையை அறிந்து கொள்ளவில்லை. இதன் விளைவாக, அவர்கள் தூய நீரின் மீதிருந்தாலும் களைத்து போய், கடைசியில் மரித்துப் போயினர். அவர்கள் எத்தனை பரிதாபமானவர்கள்! இதனை ஆவிக்குரிய படியாக நாம் பார்க்கும் போது, இந்த தலைமுறையின் அனைத்து மக்களும் கூட, இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவையில் அவர் சிந்திய இரத்தம் ஆகியவற்றின் மூலமாக அவர்களுடைய எல்லாப் பாவங்களும் ஏற்கனவே துடைக்கப் பட்டிருந்தும் கூட அதனை இது வரை அறிந்து கொள்ளாததினாலே, ஆவிக்குரிய படியாக களைப்படைந்து தம் பாவங்களினால் மிகவும் கடினமான பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தர் உங்களையும் என்னையும் நேசிப்பதினால் நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைக்கு நீதியின் செயலை அவர் செய்து விட்டார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக நம்மால் கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும். இந்த விசுவாசம் நாம் மறுபடியும் பிறப்பதை ஏதுவாக்கியது. மறுபடியும் பிறப்பது என்பதின் பொருள் கர்த்தருடைய பிள்ளைகளாக மறுபடியும் பிறப்பது என்று பொருள் படுகிறது; நாம் ஒருமுறை பாவிகளாக பிறந்தாலும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதாக அறிக்கைச் செய்யும் போது நாம் பரிசுத்த ஆவியானவருடைய செயலினால் மீண்டுமாக நீதிமான்களாக மாறினோம். இப்படியாக நாம் பாவம் இல்லாதவர்களாக மறுபடியும் பிறந்ததினால் நம்மால் கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடிகிறது.
கர்த்தருடைய நல்லதும் நீதியான இரட்சிப்பின் ஆடைகளினால் நீங்கள் உங்கள் ஆத்துமாக்களை உடுத்துவித்தீர்களா? நீங்கள் இந்த நற்செய்தியை உண்மையாகவே உங்கள் ஆத்துமாக்கள் விசுவாசிக்கும் படிச் செய்தீர்களா? இந்த உண்மையான நற்செய்தியை நீங்கள் உங்களுடைய இருதயங்களில் விசுவாசித்தீர்களா இல்லையா என்பதே எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. உங்களுடைய சொந்தத்தில் சத்தியத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்யவோ அல்லது இந்த உலகத்தின் போதனைகளை உறுதியாக பற்றிக் கொள்ளவோ முயற்சி செய்வதற்கு பதிலாக, உங்களுக்கு முன்னதாக தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்கள் போதிக்கின்ற கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். உண்மையான நற்செய்தியானது நீங்கள் உங்களுடைய தலைகளினால் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல, ஆனால் அது உங்கள் இருதயங்களினால் உண்மையாகவே விசுவாசிக்க வேண்டிய ஒரு காரியமாக இருக்கிறது. நீங்கள் அதனை உண்மையாக விசுவாசித்து பரலோகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். சகோதர சகோதரிகளே, கர்த்தர் தன் குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு அருளிய ஆசீர்வாதம் என்ன? கர்த்தர் தன் ஒரேபேறான குமாரருடைய பலியினால் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து, நம்மைத் தன் சொந்த பிள்ளைகளாக மாற்றினார்.
இந்த உலகத்தின் மக்கள் நீதியான காரியங்களைச் செய்ய விரும்புகிறார்கள் சரியான காரியங்களைச் செய்கிறவர்களையும் அவர்கள் மதிக்கிறார்கள். முழு மனிதகுலத்திற்காகவும் தன்னை பலியாக செலுத்திய இயேசுவானவருடைய செயல்கள் அதிக நீதியுடையவை இல்லையா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது மனிதகுலத்தினால் உருவாக்கப் பட்டதல்ல. அது கர்த்தர் நமக்காக மட்டுமே நிறைவேற்றிய மிகவும் ஒழுக்கமும் நீதியும் உடைய செயலாக இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் இயேசுவானவர் தாமே ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு தன்னை பலியாக்கியதால், அவரை நாம் நம்முடைய உண்மையான இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறோம். எங்கு எப்போது என்பது பொருட்டல்ல, இங்கு இருப்பது ஒரே ஒரு நீதிமான் மட்டுமே அது இயேசு கிறிஸ்து மட்டுமே. இயேசு கிறிஸ்துவின் மூலமாக அல்லாது தனக்குத் தானே நீதிமானாக மாறிய ஒருவன் கூட இந்த பூமியிலே இல்லை.
நீங்கள் நீதிமானாக விரும்புகிறீர்களா? கர்த்தர் உங்களுக்காக செய்த நீதியின் செயலை விசுவாசித்து, உங்கள் அனைவராலும் கூட நீதியின் மக்களாக மாற முடியும். கர்த்தர் செய்த நீதியின் செயல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த நீதியின் செயலைச் செய்த இயேசுவானவரை விசுவாசியுங்கள். கர்த்தர் நம்மை நேசித்ததினால் அவர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார். நாம் இந்த சத்தியத்தின் அன்பினை விசுவாசத்தால் ஏற்றுக் கொள்ளும் போது, நாமும் கூட கர்த்தரைப் போலவே, பரிசுத்தராக மாறுகிறோம். கர்த்தர் இவ்வாறு கூறினார், “நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவியராகமம் 11:45). நம்முடைய விசுவாச வாழ்வை விசுவாசத்தால் வாழும் படியாக கர்த்தர் நம்மிடம் கூறினார். உங்களை உங்களுடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்த நீதியின் செயலை நீங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய தேவனுடைய நித்தியமான பலிகாணிக்கையின் மூலமாக இந்த உலகத்திலே ஏற்கனவே நிறைவேற்றப் பட்ட நீதியான செயலே மிகவும் பெரியது என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானம், அவருடைய சிலுவையின் இரத்தம், அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தது ஆகியவற்றின் மூலமாகவே அவை அனைத்தும் நிறைவேறியது என்று நான் விசுவாசிக்கிறேன்.
கர்த்தர் தன் சத்தியத்தின் வார்த்தை மூலமாக எனக்கு கொடுத்த விசுவாசத்திற்காக அவருக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.