(யாத்திராகமம் 28:15-30)
“நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. அது சதுரமும் இரட்டையும், ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாய் இருக்கவேண்டும். அதிலே நாலு பத்தி இரத்தினக் கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும். மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி, அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து, பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி, அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்த்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக. நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து, வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து, மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.”
தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களை நியாயந்தீர்க்க பயன் படுத்திய மார்ப்பதக்கத்தைக் குறித்து இப்போது நாம் பார்ப்போம். நியாயவிதி மார்ப்பதக்கமானது அகலமும் நீளமுமான ஒரு துணியை இரண்டாக மடித்து அதினாலே உருவாக்கப் பட்டது என்று மேற்கண்ட வசனம் நம்மிடம் கூறுகிறது. இந்த துணியானது சித்திர வேலைப்பாட்டுடனே, பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் நெய்யப் பட்டது. இந்த துணியில், பன்னிரண்டு விலையேறப் பட்ட கற்கள் பதிக்கப் பட்டிருந்தன, நான்கு வரிசையாக வரிசைக்கு மூன்று கற்கள் வீதம் பொருத்தப் பட்டிருந்தன. ஊரீம் மற்றும் தும்மீம் ஆகியவற்றையும் கூட நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைக்கும் படியாக கர்த்தர் கூறினார். ஊரீம் மற்றும் தும்மீம் என்பவைகள் ‘வெளிச்சம் மற்றும் முழுமை’ என்று இங்கே பொருள் படுகிறது.
தலைமை ஆசாரியனுடைய நியாயவிதியின் அளவுகோல்
நாம் அறிந்த படியாக, ஒரு பிரச்சனையை அதற்குரிய தகுதிகளினாலும் பிரமாணங்களினாலும் ஒழுங்குகளினாலும் ஆராய்ந்து அதற்கு ஏற்றபடியாக நியாயத்தீர்ப்பு வழங்கப் படுகிறது. அப்படியானால், எந்த ஒழுங்கின் அடிப்படையிலே தலைமை ஆசாரியன் தன்னுடைய மக்களை நியாயந்தீர்ப்பான்? அவன் தன்னுடைய மார்ப்பதக்கத்தில் இருக்கும் ஊரீம் மற்றும் தும்மீம், அதாவது, “வெளிச்சம் மற்றும் முழுமை” ஆகியவற்றின் மூலமாக தன் மக்கள் நியாயந்தீர்ப்பான். நியாயவிதியின் மார்ப்பதக்கம் உருவாக்க பயன் படுத்தப் பட்ட ஐந்து நூல்களில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் மீதுள்ள அவனுடைய விசுவாசமே அவன் சரியாக நியாயம் தீர்க்க அவனை ஏதுவாக்கிய அடிப்படை விசுவாசமாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் உருவான சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தின் அடிப்படையிலே தலைமை ஆசாரியன் இஸ்ரவேல் மக்களுக்கான நியாயத்தீர்ப்பை வழங்கினான்.
வேறு வகையாகக் கூறினால், தலைமை ஆசாரியனுடைய நியாயத்தீர்ப்பின் அளவுகோல் சத்தியமாகும், அது ‘வெளிச்சமாகவும் முழுமையாகவும்’ இருந்து மார்ப்பதக்கத்தை உருவாக்கப் பயன்படுத்திய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்டது. இந்த ஐந்து நூல்களிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து, தலைமை ஆசாரியனால் இஸ்ரவேல் மக்களுக்கான தன் அதிகாரப் பூர்வமான நியாயத்தீர்ப்பை வழங்க முடிந்தது; அவர்கள் ஆவிக்குரிய படி சரியா தவறா என்று கூற முடிந்தது.
மார்ப்பதக்கமானது ஒவ்வொரு தலைமை ஆசாரியனுடைய இருதயத்திற்கு மேலாகவும் வைக்கப் பட்டது, ஊரீம் மற்றும் தும்மீம் அதற்கு உள்ளே வைக்கப் பட்டது. தலைமை ஆசாரியனுடைய இருதயத்தினுள், வெளிச்சம் மற்றும் முழுமை மிகவும் உறுதியாக நிறுவப் பட்டதினால் அவனால் எப்போது இஸ்ரவேல் மக்கள் செய்வது அவர்களுக்கான விசுவாசமா இல்லையா என்றும், அவர்கள் கர்த்தருடைய பலிகாணிக்கை முறையின் படி சரியாக காணிக்கை செலுத்தினார்களா இல்லையா என்றும், அவர்கள் கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றினார்களா இல்லையா என்றும் நியாயந்தீர்த்து அவர்களை சரியாக வழிநடத்த முடிந்தது.
இன்று, கர்த்தருடைய ராஜரீக ஆசாரியர்களாகிய நாமும் கூட, அதே அளவுகோலை கொண்டு இந்த காலத்தில் இருக்கும் மக்களை நியாயந்தீர்க்க வேண்டும். மக்கள் மார்ப்பதக்கத்திலே பயன் படுத்தப் பட்ட ஐந்து நூல்களிலும் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்தால், அவர்களாலும் கூட கர்த்தருக்கு முன்னதாக உலகத்தின் வெளிச்சமாக முடியும் என்றும், அவர்கள் அப்படி விசுவாசிக்காவிட்டால், அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற அதே முடிவை நம்மாலும் கூட எடுக்க முடியும்.
ஒரு மலை உச்சியை அடைய அநேக வழிகள் இருக்கின்றன எனக் கூறி சிலர் இந்த வார்த்தையுடன் ஒத்துப் போக மாட்டார்கள். மலை ஏறுகிறவர்கள் இவ்வாறு கூறலாம், “நீங்கள் சென்ற முறை எளிதான பாதையில் சென்றீர்கள், ஆனால் நான் கிழக்கு பக்கத்தில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்தேன், அது இந்த மலையை வெற்றிக் கொள்ளுவதற்கான கடினமான பாதையாகும்.” நிச்சயமாக, மலையில் ஏற வேண்டி வரும் போது, இத்தகைய வேறு வழியானது மிகுந்த சாத்தியமுள்ள ஒன்றாக இருக்கிறது. ஆயினும், அது ஆவிக்குரிய படியான உலகத்திற்கு வரும்போது, அங்கே சந்தேகமோ அல்லது விட்டுக்கொடுத்தலோ இருக்க முடியாது. அங்கே இருக்கும் அளவுகோல் கர்த்தர் நிறுவியது மட்டுமே. கர்த்தருக்கு முன்னதாக நாம் வெளிச்சமாக மாற வேண்டுமானால், நம்மிடம் அநேக முறைகள் இல்லை, ஆனால் ஒரு வழி மட்டுமே இருக்கிறது; இது பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை அறிந்து விசுவாசிப்பதில் இருக்கிறது, இவை மார்ப்பதக்கம் மற்றும் ஏபோதிலே பயன்படுத்தப் பட்ட பொருட்கள் ஆகும், இதன் மூலமாக அவர்களால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு கர்த்தருடைய சொந்த பிள்ளைகளாக மாற முடியும்.
உலகத்தின் வெளிச்சமாக மாற வேறு எந்த வழியும் இல்லை ஆனால் கர்த்தர் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் துடைத்து நம்மை நீதிமானாக மாற்றினார் என்று விசுவாசிப்பது மட்டுமே ஒரேவழியாக இருக்கிறது. தலைமை ஆசாரியனால் பயன்படுத்தப் பட்ட ஆடையில் உள்ள பொருட்களின் சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே பாவிகளால் நீதிமான்களாக மாற முடியும் குறைபாடு உடையவர்களால் முழுமையானவர்களாக மாற முடியும். இதனைப் போல, நாம் கர்த்தருக்கு முன்னதாக இரட்சிக்கப் பட்டோமா இல்லையா என்று தீர்க்கப் படும் போது, நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையின் அடிப்படையில் தீர்க்கப் படுவோம் அது சத்தியத்தின் பிரகாசிக்கும் வெளிச்சமாக மாறியது.
நாம் நரகம் செல்ல வேண்டுமா அல்லது பரலோகம் செல்ல வேண்டுமா என கர்த்தருக்கு முன்னர் சரியாக நியாயந்தீர்க்கப் பட வேண்டுமானால், நியாயவிதி மார்ப்பதக்கத்தை உருவாக்க பயன்படுத்திய பொருட்களை அறிந்து விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். நாம் மற்றவர்களைப் பார்க்கவும் அவர்கள் சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறார்களா இல்லை என்றும் பார்க்கவும், முதலாவதாக நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்திருக்க வேண்டும். பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியமே பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்த சரியான நியாயத்தீர்ப்பை நாம் பெற்றுக் கொள்ள நம்மை ஏதுவாக்குகிறது என்றும், இதுவே சரியான நியாயத்தீர்ப்பிற்கு சாட்சி கொடுக்கும் சத்தியம் என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதனை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
அப்படியானால் இன்று பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்து சரியான நியாயத்தீர்ப்பைக் கொடுக்க முதலில் இருப்பது யார்? அது பரலோகத்தின் நித்திய தலைமை ஆசாரியராகிய, இயேசு கிறிஸ்து ஆகும். இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக தன் சரீரத்திலே ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் அவர் நம்மை நித்தியமாக விடுதலைச் செய்தார். ஆகவே, இந்த சத்தியத்தின் மூலமாக யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அவர்களால் ராஜரீக ஆசாரியர்களாக மாறி மக்களை சரியாக நியாயந்தீர்க்கும் உரிமையை பெற்றுக் கொள்ளுவார்கள். இப்போது, கர்த்தரால் கொடுக்கப் பட்ட அளவுகோலாகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக இரட்சிக்கப் படாதவர்களை நியாயந்தீர்க்கும் கடமை மறுபடியும் பிறந்தவர்களாகிய நமக்கு இருக்கிறது. உச்ச நீதிபதியாகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்னதாக நாம் இந்த கடமையை உண்மையுடனே செய்ய வேண்டும்.
ஆவிக்குரிய ஆசாரியர்களினால் கொடுக்கப் பட்ட தீர்ப்பினை விரும்பாத சில மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை எதிர்த்து இவ்வாறு கூறுகிறார்கள், “நீங்கள் கர்த்தர் அல்ல! நீங்களும் என்னைப் போன்ற குறைபாடுடைய மனிதர் தான், இந்நிலையில் நான் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டேனா இல்லையா என்று உங்களால் எப்படி தீர்மானிக்க முடியும்? பாவிகளுக்கான சரியான நியாயத்தீர்ப்பு கர்த்தரால் மட்டுமே கொடுக்கப் படுகிறது! நீங்கள் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் இரட்சிக்கப் பட்டிருக்கிறேனா இல்லையா என்று நியாயந்தீர்க்கும் படி எத்தனை துனிச்சல் உங்களிடம் இருக்கிறது? கர்த்தருக்கு மட்டுமே இது தெரியும். நீங்கள் கர்த்தரா? மற்றவர்களை விடவும் நீங்கள் சிறந்தவர் என்று என்ணுகிறீர்களா?”
ஆனால் ஆவிக்குரிய ஆசாரியர்களின் தீர்ப்புகள் எதனால் பிழையில்லாமல் இருக்கின்ற என்றால் அதற்கு காரணம் அவர்களுக்கு இத்தகைய ஒரு உரிமை தேவனிடம் இருந்து கொடுக்கப் பட்டிருப்பதேயாகும். கர்த்தருடைய ஆசாரியர்கள் எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் போது, நாம் இந்த நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும், ஏனெனில் அது சரியான தீர்ப்பாக இருக்கிறது. மருத்துவர்களால் தான் தம் நோயாளிகளின் நோயை அறிந்து கொள்ள முடியும் என்பதைப் போல, ஆவிக்குரிய ஆசாரியர்களினால் தான் இன்னமும் அவர்கள் பாவிகளாக இருக்கிறார்களா அல்லது நீதிமான்களாக இருக்கிறார்களா என்று ஆத்துமாக்களை சோதனை செய்ய முடியும்.
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் விசுவாசத்தால் தான் நம்மால் இத்தகைய ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாற முடிந்தது. இத்தகைய ஆவிக்குரிய ஆசாரியர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசித்து கர்த்தரிடம் இருந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக ஆசாரியர்களாக மாறியவர்களால் பாவிகளிடமிருந்து நீதிமான்களை பிரித்துணர முடியும். நாம் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியை விசுவாசித்து நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதினால், இப்போது நம்மால் பாவிகளை சுகமாக்கி அவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்த முடிகிறது.
மக்கள் உங்களுடைய ஆசாரியத்துவத்தைக் எதிர்க்கும் போது நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்
பாவிகள், தம்முடைய சொந்த சிந்தனைகளில், நீதிமான்கள் அளித்த நியாயத்தீர்ப்பின் வல்லமையை குறைக்கவும் முயற்சி செய்கின்றனர். ஆயினும், அதிலும் மோசமானது என்னவென்றால், நாம் ஏற்கனவே மறுபடியும் பிறந்திருந்தாலும் கூட நாம் நம்முடைய சொந்த ஆசாரியத்துவத்தைக் குறித்து அறிந்திராததேயாகும். மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்கும் போது, கீழ்வருமாறு எண்ணுவது சாத்தியமே, “நான் ஏதேனும் காரணம் பற்றி மூர்க்கனாக இருக்கிறேனா? இங்கே நான் எந்த தவறையும் செய்யவில்லையா?” ஆனால் இங்கே எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஆவிக்குரிய படியாக கர்த்தருடைய ஆசாரியர்களாக மாறியவர்களால் மட்டுமே இந்த ஆவிக்குரிய தீர்ப்பினை சரியாகச் செய்ய முடியும். ஆகவே, பாவிகள் தம்மை நியாயந்தீர்க்க கூடாது என்று நம்மிடம் சவால் விடும் போது மறுபடியும் பிறந்தவர்களாகிய நாம் தைரியமாக செயல் பட வேண்டும். இயேசுவானவர் தன் சீடர்களுக்கு அத்தகைய உரிமையைக் கொடுத்தார், அவர் கூறினார், “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்” (யோவான் 20:23). ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாறியவர்களால் தாம் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள ஏதுவாக்கிய நற்செய்தியை நோக்கி மற்றவர்களை வழிநடத்த முடியும்.
உலகம் முழுவதிலும், நம்முடைய கிறிஸ்தவ புத்தக ஊழியத்தின் மூலமாக தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட அநேக பரிசுத்தவான்கள் இருக்கிறார்கள். இந்த பாவங்களுக்கான மன்னிப்புடனே கூட, கர்த்தர் அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் கொடுத்தார் இதனால் மற்றவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டார்களா இல்லையா என்று ஆவிக்குரிய படி பிரித்துணர முடியும். பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவை என்ன கூறுகின்றன என அறிந்து விசுவாசிப்பவர்கள் தமக்கு மற்றவர்களை விசுவாசத்தினால் நியாயந்தீர்க்கும் அதிகாரம் இருக்கிறது என்று அவர்களிடம் கூறுகின்றனர். இந்த ஆசாரியர்களின் மூலமாக, கர்த்தர் மக்களை அவர்களின் பாவங்களில் இருந்தும் தண்டனையில் இருந்தும் இரட்சித்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தான் நாம் ஆவிக்குரிய படி கர்த்தருடைய மக்களாக மாறினோம்.
கர்த்தருடைய மக்களாக மாறிய பிறகு, நாம் ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாறினோம், ஆகவே பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்கும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது. பாவிகள் தம்முடைய பாவங்களுக்காக நேரடியாக நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என நாம் அவர்களிடம் கூற வேண்டும். நாம் நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறந்த நம்முடைய உடன் விசுவாசிகளையும் கூட நியாயந்தீர்த்து, அவர்களை சரியான பாதையிலே வழிநடத்த வேண்டும்.
ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாறிய நாம், பாவிகள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டார்களா இல்லையா என்று நியாயந்தீர்ப்பது தவறு என்று நாம் எண்ண கூடாது. வேறு வார்த்தைகளில் கூறினால், இத்தகைய மக்களை பாவிகளாக பிரித்துணருவது மூர்க்கத்தனமென்று நீங்கள் எண்ணக் கூடாது. அதற்கு மாறாக, நாம் அனைவரும் ஆவிக்குரிய ஆசாரியர்களாக நம் நெஞ்சிலே நியாயவிதி மார்ப்பதக்கத்தை எப்போதும் அணிந்து கொண்டிருப்பதால், நாம் நம் கடமைகளை இன்னமும் நம் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். மற்ற எல்லா காரியங்களையும் விட்டு விட்டு, கர்த்தரின் சார்பாக, இந்தப் பாவிகள் நரகத்திலே அழிந்து போகும் படியாக அவர்களை நாம் தண்டிக்க வேண்டும். அப்போது இந்த பாவிகள் ஆவிக்குரிய ஆசாரியர்களின் நியாயத்தீர்ப்புகள் கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் என்று அறிந்து கொண்டு, இந்த நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் வெளிப்படுத்தப் பட்ட பாவத்தைக் கழுவும் கர்த்தருடைய கிருபையை விசுவாசித்து, இதன் மூலமாக அவர்களை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்க வேண்டும்.
அப்படியானால், எந்த அடிப்படையில் மற்றவர்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டார்களா இல்லையா என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும்? பொன் நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் இதனை நம்மால் அறிந்து கொள்ள முடியும். வேறு வகையாகக் கூறினால், ராஜரீக ஆசாரியர்களாகிய நம்மால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அடிப்படையில் மற்றவர்களை நியாயந்தீர்க்க முடியும்; தேவனுடைய குமாரராகிய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப் பட்டு மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி இந்தப் பாவங்களுக்கான எல்லாத் தண்டனையையும் சுமந்தார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள், இப்படியாக விசுவாசிக்காதவர்கள் பாவிகள் என்று தீர்ப்பு வழங்கப் பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நீதிமான்களுடைய நியாயந்தீர்ப்பதற்கான அளவுகோல்௮அதாவது, அவர்கள் ஆவிக்குரிய படி சரியான வாழ்வை வாழுகிறார்களா இல்லையா என்பதற்கான அளவுகோல்௮அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு எத்தனை நன்றாக ஊழியம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது. இதன் இடையில், அனைத்து தீர்ப்புகளுக்கும், ஒருவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறானா இல்லையா என்பது மிகவும் முக்கியமான ஒரு அளவுகோலை உருவாக்குகிறது. கர்த்தருக்கு முன்னதாக இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசிக்காத ஒருவன் இன்னமும் பாவியாகவே இருப்பான். பழைய ஏற்பாட்டில் உள்ள நான்கு நூல்களில்௮அதாவது, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில்௮ஒன்றை தன்னுடைய விசுவாசத்தில் இருந்து விட்டு விட்டாலும் கூட, அவன் தன் பாவத்தில் இருந்து இரட்சிக்கப் படாதவனாகவே இருப்பான், ஏனெனில் கர்த்தருடைய இரட்சிப்பிற்கு இந்த நான் நூல்களின் மீதான விசுவாசமும் தேவைப் படுகிறது.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு நடுவிலே, சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து தாம் மறுபடியும் பிறந்ததாக கூறுகின்ற அநேகர் இருக்கிறார்கள். சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கின்ற இந்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை நியாயந்தீர்க்கும்போது, அவர்களுடைய விசுவாசம் குறையுடையது என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியிருக்கிறது, ஏனெனில் அவர்களின் விசுவாசம் இளநீலை நிற நூலை (இயேசுவானவருடைய விசுவாசம்), விட்டு விட்டு உருவாக்கப் பட்ட விசுவாசமாக இருக்கிறது. இயேசுவானவர் சிலுவையில் மரித்த போது அவரால் மனிதகுலத்தின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா? இயேசுவானவர் சிலுவையில் அறையப் பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தி, சிலுவையில் மரிக்க முடிந்தமைக்கான காரணம், அவர் யோர்தான் நதியிலே முன்னதாகவே யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டிருந்ததேயாகும். இயேசுவானவர் யோவானிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டிராவிட்டால், உலகத்தின் பாவங்கள் அவர் மீது எப்படி சுமத்தப் பட்டிருக்கும்? இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களும் அவர் சரீரத்தின் மீது சுமத்தப் பட்டதினால் தான் கிறிஸ்துவால் இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, சிலுவையில் அறையப் பட்டு, நம் இரட்சிப்பை முழுமையாக மரிக்கும் படியாக தன் இரத்தத்தைச் சிந்த முடிந்தது.
இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் அவர் சிலுவையில் அறையப் பட்டார். அவருடைய ஞானஸ்நானம் இல்லாவிட்டால், அவரால் எப்படி நம் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? பிதாவாகிய கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற வேறு யாரை அவரால் சிலுவையில் தொங்க விட்டிருக்க முடியும்? வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டிராவிட்டால், அவரால் எப்படி சிலுவையில் மரித்திருக்க முடியும்? இது உண்மை இல்லையா? இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டிராவிட்டால், உங்களுடைய எல்லாப் பாவங்களும் உங்கள் இருதயத்திலே அப்படியே இருந்திருக்கும். இயேசு கிறிஸ்துவின் சரீரம் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டிராவிட்டால், நம்முடைய இடத்தில் இருந்து அவர் சிலுவையில் மரித்தமைக்கான காரணம் என்ன?
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த அறியாமையில் இருந்து எழும்பிய கேள்விகள்
கீழ்வருமாறு கேட்க கூடிய சில மக்கள் இருக்கிறார்கள், “இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் என்பது உண்மையானால், இயேசுவானவர் மீது பாவங்கள் இருந்தன என்று இதற்கு பொருள் படுகிறது, இது உண்மையாக இருந்தால், பாவம் நிறைந்த இயேசுவானவரால் எப்படி பாவிகளின் இரட்சகராக மாற முடிந்தது?”
இது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த முற்றிலும் அறியாமையில் இருந்து எழும்புகிற கவலைத் தரும் ஒரு கேள்வியாகும். இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது அவர் மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன் மாமிசத்திலே ஏற்றுக் கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் தன் ஆவியின் மீது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட இயேசுவானவருடைய தெய்வீகம் அப்படியே பரிசுத்தமாக இருந்தது. அவர் தன் மாமிசத்தில் மட்டுமே ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார், ஆகவே அவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்திலே ஏற்றுக் கொண்டார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால் தான் அவரால் சிலுவையில் அறையப் பட்டு, அங்கே தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து எல்லாப் பாவங்களுக்குமாக தண்டிக்கப் பட முடிந்தது. இயேசுவானவர் இந்த உலகத்திலே எந்தப் பாவத்தையும் செய்யவில்லை (2 கொரிந்தியர் 5:21). ஆனால் இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், இந்த உலகத்தின் பாவங்கள் அனைத்தும் அவருடைய சொந்த சரீரத்திலே சுமத்தப் பட்டன. இது உண்மையாக இல்லாவிட்டால், இயேசு கிறிஸ்துவால் நம்முடைய இரட்சகராக மாறியிருக்க முடியாது.
இத்தகைய அறிவில்லாத மக்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், இயேசுவானவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் சிலுவையில் வைத்து தன்மீது ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நான் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கூறட்டும்: “இயேசுவானவர் சிலுவையில் மரித்தமைக்கான காரணம் அவர் யோர்தான் நதியிலே யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்ட போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதேயாகும்.” இது உண்மையாக இல்லாவிட்டால், உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ள இயேசுவானவருக்கு வேறொரு சந்தர்ப்பம் கிடைக்காது போயிருக்கும். இயேசுவானவர் எல்லாப் பாவிகளுக்குமான பலியாட்டுக் குட்டியாக மாறினாலும் கூட, அடிப்படையில் பேசும் போது, அவருடைய இருதயத்திலே எந்தப் பாவமும் இருக்கவில்லை. இயேசுவானவரிடம் அவருடைய பிறப்பில் இருந்தே பாவம் இருக்கவில்லை, அதற்கு மாறாக, அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதினால், தன் சரீரத்தின் மீது சுமத்தப் பட்ட உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். இப்படியாகத் தான் இயேசுவானவர் உலகத்தின் எல்லாப் பாவங்களுக்குமாக பிரமாணத்தின் படியான காணிக்கையாக மாறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அவர் தன் இரத்தத்தைச் சிந்தி, சிலுவையில் மரிக்க வேண்டியிருந்தது. எப்படிப் பார்த்தாலும், அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார், இதன் மூலமாக அவர் நம் உண்மையான இரட்சகராக மாறினார். அப்படிச் செய்ததின் மூலமாக, அவர் பாவத்திற்கான எல்லா தண்டனையையும் ஏற்றுக் கொண்டார். ஆகவே, உங்களுடைய இருதயத்தில் இன்னமும் பாவம் இருந்தால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்தால், உங்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கப் பட வேண்டும்.
மோசமான கிறிஸ்தவத்தின் வரலாறு
ஆதிசபையின் காலத்திலே, இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தையும் சிலுவையின் இரத்தத்தையும் மட்டுமே விசுவாசித்து பவுல் மற்றும் பேதுரு போன்ற அப்போஸ்தலர்களினாலும் ஆதி பரிசுத்தவான்களாலும் ஆவிக்குரிய ஆசாரியர்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய முடிந்தது. வரலாற்றின் படியாக பேசினால், ஆதிசபையின் காலமும் ஆலயத் தந்தைகளின் காலமும் சென்று விட்ட பிறகு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியமானது மோசமாகத் தொடங்கியது, கி.பி.313 இன் மிலான் பிரகடனமானது இப்படி மோசமாவதை வேகமாக்கியது. இத்தகைய மோசத்தில் இருந்து தான் இன்றை கிறிஸ்தவ பாவிகள் உருவானார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்போதில் இருந்து, மிகப் பெரிய சாதாரன கிறிஸ்தவர்களின் கூட்டம் ஒன்று உருவானது, அவர்கள் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தாலும் கூட தாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதாக வலியுறுத்துகிறார்கள். அப்போதில் இருந்து இன்று வரையிலும், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியானது அறிவிக்கப் படாமல் மறைவாக வைக்கப் பட்டிருந்தது. அது மிகவும் கவலைத் தரும் உண்மை, கிறிஸ்தவத்தை இந்த உலகத்தின் மதங்களில் ஒன்றாக மட்டுமே கருதக் கூடிய அநேக கிறிஸ்தவ பாவிகள் உருவாகினார்கள்.
நம்மை ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாற்றிய விசுவாசத்தின் அடிப்படையிலே இன்றைய கிறிஸ்தவர்களை நாம் நியாயந்தீர்த்தால், அவர்களில் அநேகர் தவறாக புரிந்து கொண்டு அவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளச் செய்யும் இரட்சிப்பை தவறாக கருத்தில் வைத்திருக்கிறார்கள். இன்றைய கிறிஸ்தவத்தின் எல்லாப் பிரிவுகளின் விசுவாச அறிக்கையை நாம் பார்த்தால் அது ஒன்றுக்கு ஒன்று ஒரேமாதிரியாக இருப்பதை நம்மால் காண முடியும். அவர்கள் தம் மதப் பிரிவின் பெயரில் மட்டுமே வேறுபடுகிறார்கள்; அவர்களுடைய விசுவாசங்களைக் குறித்து வரும் போது, அவர்கள் தாம் அனைவரும் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்து பாவத்தில் இருந்து விடுதலையாகியதாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் இருதயங்கள் உண்மையாக பாவத்தில் இருந்து நிவர்த்திக்கப் படவில்லை. அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறியாதவர்களாகவே இருந்தாலும் கூட, அவர்கள் தம்மை நல்ல கிறிஸ்தவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் இயேசுவானவரைத் தம் இரட்சகராகவும் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசித்தாலும் கூட, அவர்கள் தம் மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதில் மட்டுமே வெறியுடன் இருக்கிறார்கள், இதற்கு காரணம் இன்னமும் அவர்களுக்குத் தம் எல்லாப் பாவங்களையும் கழுவும் சத்தியத்தைக் குறித்து எதுவும் தெரியாததேயாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமை இன்னமும் மறைவாக இருக்கின்ற மக்கள் தம் பாவங்களை கழுவ இன்னமும் முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
இதனால் தான் நாம் இந்த உண்மையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் மீண்டுமாக நாம் இப்போது பரப்பி வருகிறோம். உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறித்த அறிவில்லாமல் இருப்பதே இதற்கு காரணம், ஆசரிப்புக் கூடாரத்தில் பயன் படுத்தப் பட்ட பொருட்களில் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என நாம் உணர்ந்தோம். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அவர் சிலுவையில் அறையப் பட்டு மரித்து நம் பாவங்களுக்கான தண்டனையை பெற்றுக் கொண்டார் என்று நாம் அனைவரும் உலகத்தின் மக்களுக்கு பிரசங்கித்து வருகிறோம். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறியாத மக்களுக்கு இந்த நற்செய்தியை பரப்ப ஒரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக அவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். ஆகவே அவர்கள் விசுவாசிக்கும் படியாக இந்த உண்மையான நற்செய்தியைக் கேட்கும் படியான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நாம் உணர்ந்து கொண்டோம்.
சில நாடுகளில், கிறிஸ்தவத்தின் வரலாறு 1,000 வருடங்களாகவோ அல்லது 2,000 வருடங்களாகவோ இருக்கிறது. ஆனால் அநேக கிறிஸ்தவர்களுக்கு இன்னமும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த எந்த புரிந்து கொள்ளுதலும் இல்லை என்பது மிகவும் தெளிவு. ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் நற்செய்தியின் அடிப்படையில் நாம் அவர்களை நியாயந்தீர்க்கும் போது, அவர்களில் அநேக இயேசுவானவரை மீண்டும் புதிதாக விசுவாசிக்க வேண்டியிருக்கிறது. இங்கே நான் கூற முயற்சி செய்வது என்னவெனில் அவர்கள் இயேசுவானவரை எத்தனை வருடங்களாக விசுவாசித்து வந்தாலும் கூட, அவர்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாவிட்டால், அவர்கள் இயேசுவானவரை சரியாக விசுவாசிக்கும் படியாக வழிநடத்த வேண்டும். அவர்களுக்கு நாம் வேகமாக நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து போதிக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலும் கூட நம்மைப் போன்ற மனதுடனேயே இருந்தான், அவன் கூறினான், “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!” (1 கொரிந்தியர் 9:16).
எல்லாப் பாவிகளையும் இரட்சிக்க மனித சரீரத்தில் வந்த இயேசு கிறிஸ்து கர்த்தர் ஆவார்
இயேசுவானவர் தேவனுடைய குமாரர் என்றும் தம் இரட்சகர் என்றும் சில மக்கள் எண்ணினாலும் கூட, அவர்கள் இயேசுவானவரே கர்த்தர் என்பதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவுடைய இரத்தாம்பர ஊழியத்தை விசுவாசிப்பதில்லை. இந்த மக்கள் உண்மையிலேயே அழிந்து போவார்கள், ஏனெனில் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட முழுமையான சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசம் அவர்களுடைய இருதயங்களில் இல்லை ஆகவே அவர்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளவில்லை. தம்முடைய எல்லாப் பாவங்களையும் தேவன் துடைத்து விட்டார் என்று தம் இருதயங்களில் உண்மையாகவே விசுவாசிக்காதவர்களிடம் தம் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் இருப்பதில்லை ஏனெனில் அவர்களுடைய பாவங்களைக் கழுவும் சாட்சியும் வார்த்தை அவர்களிடம் இல்லை.
இயேசுவானவரை நாம் நம்முடைய “தேவன்” என்று அழைக்கும் போது, இங்கே “தேவன்” என்ற வார்த்தை எஜமானர் என்று பொருள் படுகிறது, இயேசுவானவர் கர்த்தர் என்று நாம் விசுவாசிக்கிறோம் என்று இதற்கு பொருள் படுகிறது. இதனை விளக்குவதற்கு, நான் அடிக்கடி கீழ்வரும் உதாரணத்தைக் கூறுவது உண்டு. மனிதர்கள் கருத்தரிக்கும் போது அவர்கள் இன்னொரு மனிதரை பெற்றெடுக்கிறார்கள். நாய்கள் பிறப்பிக்கும் போது, அவைகள் நாய்க்குட்டிகளை பெற்றெடுக்கின்றன. பறவைகள் பறவைகளைப் பெற்றெடுக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், வெவ்வெறு வகையான உயிரினங்கள் இருப்பதைப் போல, பிதாவாகிய கர்த்தர் ஒரே ஒரு குமாரரைத்தான் பெற்றெடுத்தார், ஆகவே அவரும் கர்த்தர் ஆவார் (சங்கீதம் 2:7). அவர் தன்னுடைய சாராம்சத்தில் கர்த்தருக்கு சமமானவராகவே இருந்தார் (பிலிப்பியர் 2:6), ஆனால் அவர் தன்னைத் தானே வெறுமையாக்கி நம்மைப் போன்ற மனிதரானார். நம்மைப் பாவத்தில் இருந்து இரட்சிக்க, அவர் இந்த உலகத்திற்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இப்படியாக, நம்முடைய உண்மையான இரட்சகராக மாறி, இதன் மூலமாக நமக்கு உண்மையான இரட்சிப்பின் சத்தியத்தைத் தந்தார்.
ஆயினும், இயேசுவானவர் கர்த்தர் என்பதை மறுக்க கூடிய அநேக மக்கள் இருக்கிறார்கள். பாடசாலைகளிலே, ஆதிசாலையிலே தோன்றிய நான்கு மகான்களிலே இயேசுவானவரும் ஒருவர் என்று அவர்கள் வெளிப்படையாக போதிக்கிறார்கள். இத்தகைய ஒரு கூற்று ஆலயத் தந்தைகளிடம் இருந்தும் கூட கிளம்பியது. அவர்கள் தம்முடைய விசுவாசத் தந்தைகளிடம் இருந்து உண்மையான நற்செய்தியைக் கேட்டாலும் கூட, அவர்கள் இரத்தசாட்சியாக மரித்ததின் மூலமாக தம்முடைய விசுவாசத்தை அறிக்கைச் செய்யும் படியான உறுதியான விசுவாசமாக இருந்தாலும் கூட, மற்றவர்களோ இயேசுவானவருடைய தெய்வீகத்தை வெறுத்தார்கள். சில ஆலயத் தந்தைகள் இயேசுவானவர் தேவனுடைய குமாரர் என்றும் அவர் கர்த்தர் அல்ல என்றும் கூறுகின்ற புத்தகங்களை எழுதினார்கள்.
அன்மையில், அநேக இறையியலாளர்கள் மதப் பன்மையை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவத்தைத் தவிர மக்கள் மற்ற மதங்களை விசுவாசித்தாலும் கூட அவர்களால் தம் பாவங்களில் இருந்து இரட்சிப்படைந்து பரலோகத்திற்குச் செல்ல முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். கத்தோலிக்க மதம் இத்தகைய ஒரு கொள்கையை முதலாவது வெளிப்படையாக அறிவித்தது. இயேசுவானவர் கர்த்தர் என்றும் நம்மைப் படைத்தவர் என்றும் சாதாரன கிறிஸ்தவர்கள் விசுவாசிக்காததினாலேயே அவர்கள் இத்தகைய ஒரு நிலையை ஆதரிக்கிறார்கள். வார்த்தை பேசுவதைப் போல அவர் அவரை விசுவாசிக்க விரும்புகிறார்கள், ஆனால் இத்தகைய ஒரு தவறான போதனையினால் அவர்களால் இந்த உண்மையான சத்தியத்தை உருவாக்க முடியாது. அவர்கள் மணலிலே தம் வீட்டைக் கட்டிய முட்டாள் தனமான மக்களாக இருக்கிறார்கள் (மத்தேயு 7:26). மற்ற மதங்களில் இருந்து அனைத்தையும் கற்றுக் கொள்ளுவதை அவர்கள் விரும்புகிறார்கள். உதாரணமாக, மேற்கத்திய ஆலயங்கள் வாரத்தில் ஒருநாள் புத்த மதத்தின் தியான நிகழ்ச்சிகளில் தம்மை ஈடுபடுத்துகிறார்கள். மனித நிலையில் இருந்தும் பார்க்கும் போது, இத்தகைய ஒரு நிகழ்ச்சியானது அழகானதாகவும் முன்னேறுவதாகவும் இருக்கிறது. ஆனால் இயேசுவானவர் கர்த்தர் என்று விசுவாசிக்காத ஒருவனால் தன் பாவத்தில் இருந்து இரட்சிக்கப் பட முடியாது.
அப்படியானால் உங்களைக் குறித்து என்ன? ஆதியாகமம் 1:1-3 கூறுகிறது, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.” ஆதியிலே கர்த்தர் தன் வார்த்தையினால் வானத்தையும் பூமியையும் படைத்தார். இந்த வார்த்தை தொடக்கத்தில் இருந்தே இருந்தது, இந்த வார்த்தை கர்த்தராகவே இருந்தது. ஆகவே, உலகமானது இயேசு கிறிஸ்துவின் மூலமாக உருவாக்கப் பட்டது, அவர் வார்த்தையின் அவதாரம் ஆவார் (1 யோவான் 1:1, யோவான் 1:10). இதன் பொருள் இயேசு கிறிஸ்து கர்த்தராகவே இருக்கிறார், அவர் வார்த்தையின் கர்த்தர். இயேசு கிறிஸ்துவே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த படைப்பாளி அவர் நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்த இரட்சகரும் கூட. கர்த்தராகிய இந்த இயேசு கிறிஸ்து பரலோகத்தின் மகிமையின் சிங்காசனத்தை உதறிவிட்டு மனித மாமிசத்திலே இந்த பூமிக்கு நேரடியாக வந்தார் என்று நாம் விசுவாசிப்பது மிகவும் சரியாக இருக்கிறது.
கர்த்தர் தன்னுடைய ஊழியர்களின் மூலமாக, மேசியாவின் வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறினார், இந்த தீர்க்கதரிசனங்களின் படியாக இரட்சகர் கன்னி மரியாளின் சரீரத்திலே கர்ப்பந்தரித்து மனித சரீரத்திலே அவதாரம் எடுத்தார். அதாவது, ஒரு மனித சரீரத்தின் மூலமாக கர்ப்பந்தரிக்கப் பட்டு பிறந்த அவர் கர்த்தராகவே இருக்கிறார். அவருடைய வயது 30 ஆக மாறும் போது, பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய அவர், ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாக மனிதகுலம் முழுவதுடைய எல்லாப் பாவங்களையும் தன் சொந்த சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்மை நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக இரட்சித்தார். வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவானவர் நம்முடைய உண்மையானதும் நித்தியமானதுமான இரட்சகராக மாறினார்.
இயேசுவானவர் தன்னுடைய சாராம்சத்திலே, கர்த்தராகவும் பிதாவாகிய கர்த்தருக்கு சமமாகவும் இருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையில், அடிப்படையிலே பிதாவாகிய கர்த்தருக்கு சமமான இந்த இயேசுவானவர் அதே கர்த்தர் ஆவார். ஏன்? உலகமானது அவர் மூலமாக படைக்கப் பட்டதினால், நாம் அவர் மூலமாக மனிதர்களாக உருவாக்கப் பட்டோம். கர்த்தர் ஆதியாகமம் 1:26 இல் கூறினார், “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.” கர்த்தர் மனிதனை தன் சாயலாக படைத்த போது, இயேசு கிறிஸ்து அங்கே இருந்தார். நம்மைப் படைத்தவர் அவர் தான். நம்மைப் படைத்தவரும் அவர்தான் நம்மைப் பாவத்தில் இருந்து இரட்சித்ததும் அவர்தான். நம்மை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து நம்முடைய உண்மையான இரட்சகர் ஆவார். இயேசு கிறிஸ்து நமக்கு இரட்சிப்பைக் கொடுத்ததினாலும், அவர் தாமே கர்த்தராகவும் இருப்பதினாலும், அவரை நாம் நம்முடைய இரட்சிப்பின் தேவனாக விசுவாசிக்கிறோம். மேலுமாக, நீங்களும் நானும் நம்முடைய குழப்பத்திலே அலைந்து கொண்டிருக்காமல், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக வந்த தேவனாகிய கர்த்தரை நம் இரட்சகராக நம் இருதயங்களிலே விசுவாசிக்க வேண்டும்.
சில மக்களுடைய இருதயங்கள் பாவம் நிறைந்ததாக இருந்தாலும் கூட அவர்கள் தம்மை கர்த்தருடைய பிள்ளைகள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களுடைய இருதயங்களில் பாவம் இருந்தாலும் கூட அவர்களால் உண்மையாகவே கர்த்தருடைய மக்களாக இருக்க முடியுமா? அவர்களுடைய இருதயங்கள் பாவம் நிறைந்ததாக இருந்தாலும் கூட அவர்களால் பரலோகம் செல்ல முடியுமா? அப்படி முடியாது! அவர்கள் கிறிஸ்தவர்களா இல்லையா என்பது பொருட்டேயல்ல; அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து கொள்ளாமல் இருப்பதினாம் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாவிட்டால், அவர்களில் ஒருவராலும் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆனாலும் கூட இந்த உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயங்களில், இத்தகைய விசுவாசம் உடைய அநேக மக்கள் இருக்கிறார்கள்.
அப்படியானால் இத்தகைய மக்களுக்கு யாரால் உண்மையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பரப்ப முடியும்? நாம்௮அதாவது, நீங்களும் நானும்௮அவர்களை சரியாக நியாயந்தீர்த்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியானது ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமே பிரசங்கம் செய்யப் படாமல் முழுவதுமாக பிரசங்கிக்கப் பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இந்த உண்மை இரட்சிப்பின் சத்தியமானது தேவன் திரும்பி வரும் அந்த நாள் வரையில் தொடர்ந்து பரப்பப் பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
உங்களை பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் படி ஏதுவாக்கும் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? மக்களிடம் பாவம் இருந்தால், அவர்கள் கர்த்தருடைய மக்களாக இருக்க முடியாது. ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களாக பயன் படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றிலே வெளிப்படுத்தப் பட்ட நற்செய்தியின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசம் அவர்களிடம் இருக்க வேண்டும். உலகத்தின் முடிவு பரியந்தம் வரையிலும் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிப்பதில் நாம் மிகுந்த தயக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? பழைய நாட்களிலே, “வெளியே சென்று தொடர்ந்தும் தீர்க்கதரிசனம் கூறுங்கள்,” என்று கர்த்தர் தன் ஊழியர்களிடம் கூறிய போது, அவர்கள் தொடர்ந்து அப்படியே செய்தார்கள், கர்த்தர் ஏசாயாவிடம், “நிர்வாணமாக சென்று தீர்க்கதரிசனம் கூறு,” என்று கூறிய போது, அவன் நிர்வாணமாக சென்று தீர்க்கதரிசனம் கூறினான் (ஏசாயா 20:2-5). ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அனைத்து மக்களுக்கும் நாம் பிரசங்கிக்கும் போது தான் அவர்களால் கர்த்தருடைய கோபாக்கினையில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் தான் நாம் தொடர்ந்தும் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும்.
உங்களைக் குறித்து என்ன? உங்களுக்கு உண்மையான இரட்சிப்பை எடுத்து வரும் விசுவாச வார்த்தை உங்கள் இருதயங்களில் இருப்பது உண்மையா? உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் பாவங்களுக்கான மன்னிப்பின் வார்த்தை இல்லாமல் இன்னமும் சாத்தானுக்கு சொந்தமானவர்களாக இருந்தால், எப்படி உங்களால் எதனையும் செய்யாமல் அமர்ந்திருக்க முடியும்? உங்களால் வெறுமனே அமர்ந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் நம்முடைய பங்காளர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பாவங்களுக்கான மன்னிப்பின் நற்செய்தியாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை தெளிவாக விசுவாசிக்கிறார்கள். அவர்களில் சிலர் தம்முடன் வேலை செய்கிறவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கூறிய போது தாம் துன்புறுத்தப் பட்டதாக அறிக்கைச் செய்தார்கள். அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எதிர்ப்பவர்களை எதிர்த்துநிற்கும் படி துனிந்தார்கள், அவர்கள் கூறினர், “உங்கள் இருதயங்களில் இன்னமும் பாவம் இருப்பதினால் இன்னமும் நீங்கள் கர்த்தருடைய மக்கள் அல்ல. நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காததினால் உங்கள் அழுக்கு நிறைந்த பாவங்களுக்காக நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னை ‘என் சகோதரன்’ என்று அழைத்தாலும் கூட, என்னால் உங்களை ‘சகோதரன்’ என்று அழைக்க முடியாது, ஏனெனில் நான் உங்களைப் போன்ற ஒரு பாவி அல்ல.”
அப்படி செயல் படும் படியாக நாம் அவர்களிடம் கூறவில்லை, ஆனால் அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். நீங்கள் எதற்கும் வற்புறுத்தப் பட வேண்டியதில்லை, ஏனெனில் உங்கள் இருதயங்களிலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது இருக்கிறது அது ஒரு அளவுகோலை உருவாக்குகிறது, அந்த அளவுகோலின் படியாக நம்மால் மற்றவர்களை நியாயந்தீர்க்க முடிகிறது. மற்றவர்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பை சரியாக பிரித்துணரக் கூடிய இந்த திறமையானது, ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பதினால் உங்களிடம் அதிகமாகியது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் சத்தியத்தின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் கர்த்தருக்கு முன்னதாக நிற்க வேண்டும், தேவன் நம்மை எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்து நம்மை நீதிமான்களாக மாற்றினார்.
நாம் சரியான இரட்சிப்பின் அளவுகோலை பயன் படுத்துவோமாக
நாம் கர்த்தருடைய வார்த்தையை ‘கேனன்’ என்றழைக்கிறோம். ‘கேனன்’ என்ற வார்த்தையானது எபிரெய வார்த்தையான கானே மற்றும் கிரேக்க வார்த்தையானது கானோன் என்பதில் இருந்து வந்தது, அவை இரண்டும் அளவுகோலை குறிப்பிடுகின்றன. நாம் ஒன்றை அளக்க வேண்டியிருக்கும் போது, அதனை சரியாக அளக்க நாம் ஒரு அளவுகோலை பயன் படுத்தி அதனை சரியாக அளக்க வேண்டும். இதனைப் போல, நாம் ஒருவனுடைய ஆவிக்குரிய நிலையை பிரித்துணர்வதற்கு, அதாவது, ஒரு மனிதன் மறுபடியும் பிறந்தவனா இல்லையா என்று பிரித்துணர்வதற்கு, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் அளவுகோலினால் அந்த நபரை ஆராய்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னுடைய வாடிக்கையாளர்களில் அளவை அளக்க ஒரு தையல் கடைக்காரர் அளவுகோலைப் பயன் படுத்துவதைப் போல, ஒரு நபர் தன் பாவத்தில் இருந்து இரட்சிக்கப் பட்டானா இல்லையா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதனை செய்வதற்கான ஒரே வழி இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் சத்தியமேயாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில், அந்த நபருடைய விசுவாசத்தின் ஒவ்வொரு காரியத்தையும் நாம் தேர்ந்தெடுத்து அதன் அளவில் எது தாழ்வாக இருக்கிறது என்றும் எது அதிகமாக இருக்கிறது என்றும் நாம் தெளிவாக பிரித்துணர வேண்டும்.
குறிப்பாக, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகிய அளவுகோலினால், அதாவது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நாம் நம் விசுவாசத்தை முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒருவன் இரத்தாம்பர மற்றும் சிவப்பு நிற நூலின் மூலமாக மட்டுமே இயேசுவானவரை விசுவாசித்தால், அவர்களுடைய இரட்சிப்பானது கர்த்தருடைய சபையில் உள்ள ராஜாரீக ஆசாரியர்களுடையதைப் போல அங்கீகரிக்கப் படாது. தன் பாவங்களில் இருந்து மன்னிக்கப் பட விரும்பும் யாவரும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை முழுமையாக விசுவாசிக்க வேண்டும். மனிதகுலம் முழுவதையும் பாவத்தில் இருந்து இரட்சிக்க இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்தார் என்றும், ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் என்றும், சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்முடைய உண்மையான இரட்சகராக மாறினார் என்றும் நாம் அனைவரும் விசுவாசிக்க வேண்டும். நம் அனைவரிடமும் இந்த சரியான நியாயத்தீர்ப்பின் அளவுகோல் இருக்க வேண்டும். அது கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் இதனால் மக்கள் பாவிகளாக நீதிமான்களா என்று நம்மால் தீர்மானிக்க முடியும். இதனை நம் சொந்த ஞானத்தினாலும் உணர்ச்சியினாலும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது. ஆவிக்குரிய ஆசாரியர்கள் தம் மக்களுக்கான பாவ காணிக்கையை கொடுக்கும் கடமையை செய்வது அவர்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
இப்போது இந்த காலத்திலே, நீங்களும் நானும் இத்தகைய ஒரு சரியான அளவுகோலினால் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் நியாயந்தீர்க்க வேண்டும். இந்த அளவுகோல் அனைவருக்கும், நம் பிள்ளைகளுக்கும், மணைவிகளுக்கும், கணவர்களுக்கும், தகப்பன்களுக்கும் தாய்மார்களுக்கும், சம்பந்திகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சமமாக பொருந்துகிறது. ஆசாரியர்களாக மாறியவர்கள் தம் நியாயத்தீர்ப்பின் அளவுகோலை அனைவருடைய இருதயத்திலும் வைக்க வேண்டும். “நீங்கள் இயேசுவானவருடைய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இப்படியாக விசுவாசித்தால், நீங்கள் இரட்சிக்கப் படுவீர்கள், ஆனால் அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் இரட்சிக்கப் பட மாட்டீர்கள்.” இப்படியாக ஒரு சரியான நியாயத்தீர்ப்பை அளிப்பது தான் நாம் செய்ய வேண்டிய சரியான காரியமாகும்.
தலைமை ஆசாரியன் இதனை தான் முன்னதாக செய்திருந்தான் என்றால், இன்றைய ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாறிய நீங்களும் நானும் கூட இதனை தவறாமல் செய்ய வேண்டும். அவருடைய ஆசாரியர்களாக நாம் செய்ய வேண்டியதை நாம் செய்யாவிட்டால், நாம் கர்த்தரால் கண்டிக்கப் படுவதை தவிர்க்க முடியாது. சில மக்கள் இவ்வாறு கூறுகிறார்கள், “இது ஒருவனுக்கு நற்செய்தியை அறிவிக்கும் ஒரு முறையல்ல. இப்படியாகத் தான் நீங்கள் நற்செய்தியை அறிவிக்கிறீர்கள்! நாங்கள் அனைவரும் உங்களைப் போல நற்செய்தியை அறிவித்தால், இயேசுவானவரை விசுவாசிக்கப் போவது யார்?”
இறையியலில், ‘நற்செய்தியை அறிவிக்கும் கலை’ என்ற ஒரு பயிற்சி வகுப்பு இருக்கிறது. நற்செய்தியை அறிவிப்பதற்கான ஒரு வழிமுறையை அது அளிக்கிறது. இந்த துறையில் இருக்கும் ஒவ்வொரு பிரசங்கியாரின் உதட்டிலும் ‘நட்பு நற்செய்தி அறிவித்தல்’ என்ற சொற்றொடர் இருந்தது. மக்களுக்கு நாம் நற்செய்தியை அறிவிக்க முயற்சி செய்யும் போது, முதலாவதாக நாம் அவர்களுடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு அவர்களை மெதுவாக ஆலயத்தை நோக்கி வழிநடத்த வேண்டும் என்றும் அதன் ஆதரவாளர்கள் இன்னமும் போதிக்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியானதே. தம்முடைய நற்செய்தி முயற்சிகளின் மூலமாக அந்த நபர் இயேசுவானவரை விசுவாசிக்க முயற்சி செய்யும் போது, அவர்கள் இயேசுவானவரை பெற்றுக் கொள்ளும் ஜெபத்தை செய்யும் படிச் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர், இதனால் கிறிஸ்து அந்த நபருடைய இருதயத்திற்குள் வருவதினால் அவன் இரட்சிக்கப் படுவான் என அறிவிக்கின்றனர்.
ஆனால் இந்த அனுகுமுறையின் கடைசி விளைவு என்ன? இப்படிப் பட்ட புதிய கிறிஸ்தவர்களுடைய இருதயங்களில் இருந்து பாவங்கள் மறைந்து விடுமா? இது உண்மை அல்ல. அவர்கள் சபைக்குச் செல்லுகிறார்கள், ஆனால் இன்னமும் அவர்களிடம் பாவம் இருக்கிறது௮வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த புதிய கிறிஸ்தவர்கள் இன்னொரு கிறிஸ்தவத்தின் மதத்தை கடைப் பிடிப்பவர்களாக மட்டுமே மாறியிருக்கிறார்கள். இத்தகைய மக்கள் இயேசுவானவரை விசுவாசிக்கும் படிச் செய்து, அவர்கள் தசம பாகத்தையும் ஸ்தோத்திர காணிக்கையையும் கொடுக்கும் படியாகச் செய்கிறார்கள். கடைசியிலே, அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலும் கூட, அவர்களால் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது, ஏனெனில் இன்னமும் அவர்களிடம் பாவம் இருக்கிறது.
நாம் நற்செய்தியை பரப்புகின்ற முறை தவறானது என்று அவர்கள் கூறுகிறார்கள், “நீங்கள் இப்போது தான் அவர்களைச் சந்தித்துள்ள நிலையில் அவர்களிடம் பாவம் இருக்கிறதா இல்லையா என்று எப்படி கேட்க்க முடியும்? இரட்சிப்பின் பிரச்சனையை உங்களால் எப்படி இத்தனை சீக்கிரமாக கேட்டு, அவர்களைக் குறித்து எதுவும் அறியாத நிலையில், அவர்கள் இரட்சிக்கப் பட்டவர்களா இல்லையா என்று உங்களால் எப்படி தீர்க்க முடியும்?” அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் குறித்து நாம் சிறிது கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது, நாம் இரட்சிக்க விரும்பும் ஆத்துமாவிற்கு என்று ஒரு மனம் இருப்பதினால் அது நம் உதடுகளினால் எளிதாக காயமடையும். ஆனால் சீக்கிரமாகவோ தாமதமாகவோ, நாம் தொடர்பு வைத்திருக்கும் அவிசுவாசிகளுக்கு இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும். நாம் அவர்களுடன் எத்தனை நெருக்கமாக இருந்தாலும் கூட, அவர்களுக்கு நாம் சீக்கிரமாகவோ தாமதமாகவோ நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியிருப்பதால், விசுவாசத்தால் நற்செய்தியை பிரசங்கிக்க கிடைத்த ஒரு வாய்ப்பை நாம் தவற விடக் கூடாது. ஏன்? இந்த சத்தியத்தைக் குறித்து முழுமையாக நாம் அவர்களிடம் கூறாவிட்டால், நாம் சரியாக நற்செய்தியை பரப்ப முடியாமல் போய்விடாது.
ஆகவே, நாம் அனைத்து மக்களிடமும், நற்செய்தியை அறிவிக்கும் உறையாடலின் தொடக்கத்திலோ அல்லது கடைசியிலோ இவ்வாறு கேட்க வேண்டும், “உங்கள் இருதயத்தில் பாவம் இருக்கிறதா?” அதற்கான பதில் ஆமாம் என்றிருந்தால், நாம் அவர்களிடம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். நாம் தீவிரமாக இருப்பதைக் கண்டு அவர்களால் கண்டிக்கப் படக் கூடும். ஆனால் நாம் ஆவிக்குரிய ஆசாரியர்களாக இருப்பதினால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் எக்காளத்தை அனைத்து மக்களுக்கும் தெளிவாக கூறும் கடமை நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ஒரே தேவன், ஒரே ஞானஸ்நானம், ஒரே கர்த்தர்
நாம் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம், நம்முடைய வாழ்விற்கான நோக்கம் உலகம் முழுவதும் நற்செய்தியை பரப்புவதாக மட்டுமே இருக்கிறது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பிரசங்கிக்கும் நற்செய்தியாளரின் கடமை நமக்கு கொடுக்கப் பட்டிருப்பதால், நாம் ஒன்றாக செயல் படுகிறோம். நாம் ஏன் இதனைச் செய்கிறோம்? நாம் அதே கர்த்தரை விசுவாசிப்பதினால், நாம் அதே நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டோம், அதே மகிமையை நாம் அனுபவிப்போம். நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டவர்களாக இருக்கிறோம், நமக்கான சொந்த தன்மைகளும் பன்புகளும் இருக்கின்றன, ஆனால் நாம் ஒருவரை இருவர் அகற்றி ஒருவருடன் ஒருவர் ஐக்கியமாக இருப்பதற்கான காரணம் நம்முடைய வாழ்வை கர்த்தருக்காக மட்டுமே வாழுவதாகும்.
இன்றைய ஆசாரியர்களாக மாறியவர்களின் இருதயங்களின் மீது கர்த்தர் நியாயவிதியின் மார்ப்பதக்கத்தை அணிவித்தார். மார்ப்பதக்கம் இவ்வாறு கட்டப் படவேண்டும் “மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்” (யாத்திராகமம் 28:28). நாம் செய்யும் ஒவ்வொரு நியாயத்தீர்ப்பிலும் இயேசுவானவருடைய ஞானஸ்நானம் எத்தனை இன்றியமையாதது என்று இந்த வசனம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. ஆகவே, அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அறிவிக்கிறான், அவன் கூறுகிறான், “உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” (எபேசியர் 4:4-5).
மக்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறார்களா இல்லையா என்பதை வைத்து அவர்களுடைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப் பட்டதா இல்லையா என நியாயந்தீர்க்கும் கடமை நம்மிடம் இருக்கிறது. இன்னமும் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு, நாம் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும், பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களைப் பொறுத்தவரையில், நாம் அவர்களை அங்கீகரித்து அவர்களுடைய விசுவாசத்தில் வளர நாம் உதவி செய்ய வேண்டும். நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட நிலையில், நியாயவிதி மார்ப்பதக்கத்தை ஆவிக்குரிய படி நாம் அணிந்து கொள்ளுவது சரியான அல்லது தவறா? வேறு வகையாகக் கூறினால், சரியான இரட்சிப்பின் தீர்ப்பினை ஒருவனுக்கு கூறுவதை தவிர்ப்பது சரியாகுமா? இது சரி அல்ல. இன்னமும் இரட்சிக்கப் படாத உலகத்தில் உள்ள அனைவருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பரப்ப வேண்டும்.
அப்படியனால், நாம் நம் மாமிசத்தில் முழுமையாக இருக்கிறோமா?
நாம் பாவிகளை நியாயந்தீர்க்கும் போது, அவர்களுடைய செயல்களை நாம் நியாயந்தீர்ப்பதில்லை. அதற்கு மாறாக, இந்த உண்மையான நற்செய்தியின் வெளிச்சத்தாலும் கர்த்தருடைய நீதியினாலும் அவற்றை நாம் பிரித்துணருகிறோம். அவர்களுக்கான உண்மையான வெளிச்சம் என்ன? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தருடைய பிள்ளைகளாக மாறுவதே அவர்களுக்கான இந்த வெளிச்சமாக இருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகள் இந்த உலகத்திற்கான வெளிச்சமாக இருக்கிறார்கள். முழுவதுமாக தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்கள் தம் செயல்களில் முழுமையானவர்களாக இருக்கிறார்கள் என்று இதற்கு பொருள் படுகிறதா? உண்மையில், அவர்கள் தம் இருதயங்களில், முழுமையாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தம் சரீரத்திலே, மிகவும் குறைபாடுடையவர்களாக இருக்கிறார்கள்.
நம்முடைய மாமிசத்திலே, நாம் சுயநலமும், தீமையும், குறைபாடும் பலவீனமானவர்களாகவும் இருக்கிறோம், ஆனா கர்த்தருக்கு முன்னதாக நாம் அவருடைய முழுமையான மக்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுடைய செயல்கள் குறைபாடுகள் நிறைந்ததாக இருந்தாலும் கூட அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளா இல்லையா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் ஆவோம் நம்முடைய இரட்சிப்பு ஆவிக்குரிய படி முழுமையானது. வேறு வார்த்தைகளில் கூறினால், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றை விசுவாசித்து தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களின் செயல்கள் முழுமையானவை அல்ல, ஆனால் அவர்களுடைய இரட்சிப்பு முழுமையானது. நம்மை இரட்சித்த நம் விசுவாசம் முழுமையாக இருப்பதினால், கர்த்தருடைய கிருபையினால் நம்மால் ஒருவருடன் ஒருவர் உறவாட முடியும். மேலும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் சத்தியத்திற்குள் நாம் நம் தீர்மானங்களை எடுப்பதினால், நம்முடைய விசுவாசமும் நம் நியாயத்தீர்ப்பும் களங்கமில்லாதவை ஆகும்.
ஆசாரியர்களுடைய இருதயங்களின் மீது இந்த நியாயத்தீர்ப்பின் அளவுகோலை எப்போதும் வைத்திருக்குமாறு கர்த்தர் நம்மிடம் கூறினார். இந்த உலகத்தின் எல்லாப் பாவங்களையும் நம்முடைய இருதயங்களினால் நாம் தழுவ வேண்டும். நாம் அவர்களுடைய ஆத்துமாக்களைத் தழுவி, அவர்களுக்காக ஜெபித்து, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்கு பரப்ப வேண்டும். இதனால் தான் நம்மிடம் எப்போதும் நியாயவிதி மார்ப்பதக்கம் எப்போதும் நம் இருதயங்களில் இருக்க வேண்டும். இன்றும் நாளையும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பாவிகளிடம் பிரசங்கிக்க அவர்களை எப்போதும் பாவிகள் என்றே நியாயந்தீர்க்க வேண்டும்.
இந்த விசுவாசத்தின் சத்தியம் உங்கள் இருதயங்களில் காணப் பட வேண்டும் என்பது என் நேர்மையான விருப்பமாகும். இந்த சத்தியம் உங்கள் இருதயங்களில் இருந்தால், அவர்களை நியாயந்தீர்க்கும் உரிமை உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்றே அதற்கு பொருள் படுகிறது. இந்த சத்தியத்தின் வார்த்தையை விசுவாசியுங்கள். உங்களுடைய நியாயத்தீர்ப்பை இப்படியாக கர்த்தருடைய வார்த்தையின் அடிப்படையில் செய்யுங்கள், எல்லா நேரங்களிலும் உங்கள் முழு இருதயத்தாலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதனை பரப்புங்கள்.
ஒவ்வொரு நாளும், இந்த நியாயவிதி மார்ப்பதக்கத்தை நான் என் இருதயத்தில் நினைவு கூர்ந்து, எல்லாவற்றையும் கர்த்தருக்கு முன்னதாக நியாயந்தீர்த்து, இந்த நற்செய்தியை தொடர்ந்தும் பரப்பி வருகிறேன். உண்மையில், மீண்டும் மீண்டும் கூறுவது, நற்செய்தியை பரப்புவதற்கான ஒரு சிறந்த முறையாகும். நாம் எத்தனை ஞாபக மறதி உடையவர்களாக இருக்கிறோம்! மனப் பாடம் செய்வதே கல்வி அறிவிற்கான பாரம்பரியமானதும் சிறந்ததுமான வழி என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரு குழந்தை ஒரு சொல்லை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் கூறுவதின் மூலமாக அதனால் சரியாக உச்சரிக்க முடியும் என்று ஒரு மொழியியலாளர் ஒருமுறை கூறினார். இதனைப் போல, நாம் தொடர்ந்தும் வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை மீண்டும் மீண்டும் பரப்பும் போது, அது நம் இருதயங்களில் பொறிக்கப் பட்டு விடுகிறது. நான் இந்த நற்செய்தியின் சத்தியத்தை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன், இதனால் மக்கள் இந்த புத்தகங்களை வாசிக்கும் போது அவர்கள் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் சத்தியத்தை தெளிவாக புரிந்து கொண்டு, அதனை விசுவாசிக்க முடியும். இதனால் தான் நாம் தொடர்ந்தும் நற்செய்தியின் சத்தியத்தை பிரசங்கம் செய்கிறோம்.
சகோதர சகோதரிகளே, பரிசுத்தவான்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் நம் விசுவாசத்தை அறிக்கைச் செய்ய வேண்டும். நாம் நம் விசுவாசத்தையும் கர்த்தருடைய கிருபையையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் போது, நம்முடைய இருதயங்களால் ஒருவருடன் ஒருவர் உண்மையாகவே தொடர்பு கொள்ள முடியும், நம்மிடம் இருக்கின்ற தவறான ஞானமோ அல்லது தவறான புரிந்து கொள்ளுதலோ சரிபடுத்தப் பட்டு சீர்ப்படுத்தப் பட முடியும். இதன் மூலமாகத் தான் நம்மால் ஆவிக்குரிய படியாக வளர முடியும். நம்முடைய விசுவாசம் வளரும் போது, நம்முடைய விசுவாச வாழ்வும்கூட முன்னேறும். எத்தனைத் தடவை நாம் தவறு என்ன எண்ணியிருக்கிறோம்? நம்முடைய முந்தைய ஞானம் எத்தனை முறை தவறாகியிருக்கிறது? அது எத்தனை முறை உண்மையிலே ஏட்டளவில் மட்டுமே இருந்திருக்கிறது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அறிந்து கொள்ளுவதற்கு முன்னர் இருந்த அனைத்து விசுவாசங்கள் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.
அப்போஸ்தலனாகிய பவுலிடம் இருந்த நற்செய்தியைத் தவிர வேறெந்த நற்செய்தியையும் பிரசங்கிக்கும் ஒருவன் சபிக்கப் பட்டவனாக இருப்பான் என்று அவன் கூறினான் (கலாத்தியர் 1:9). கர்த்தருடைய சத்தியத்தைத் தவிர தனக்குத் தெரிந்த அனைத்து காரியங்களும் குப்பைகள் என்றும் பவுல் கூறினான். ஆயினும், இன்றைய கிறிஸ்தவத்திலே, தம்முடைய சொந்த குப்பையான மத ஞானத்தைக் குறித்து மட்டுமே பெருமை பாராட்டுகிறவர்கள் வல்லமை உடையவர்களாக மாறிவிடுகிறார்கள்.
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக இரட்சிக்கப் பட்ட நம்மால் ஒருவருடன் ஒருவர் உறவாட முடியும் என்பதால், நம்மால் நம் இருதயங்களில் ஐக்கியமாக முடியும். நாம் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து வெட்கப் படவில்லை, ஏனெனில் இந்த சத்தியம் நம்மை நித்தியமான நரகத்தின் தண்டனையில் இருந்து நம்மை விடுதலை செய்தது. அதற்கு மாறாக, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் மறைந்திருக்கும் நற்செய்தியின் சத்தியத்தை உலகத்தின் கடைசி வரையிலும் எவ்வித தயக்கமும் இன்றி பிரசங்கிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. நாம் மிகவும் வேகமாக செய்ய வேண்டிய காரியம் இதுவேயாகும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே ஒரே சத்தியம் என்று முதன் முதலாக நான் அறிந்து கொண்ட போது, நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். “ஆ, அவ்வளவு தான்! இது அவ்வளவு தான் ஆனாலும் இதனை இதுவரையில் நான் அறிந்திருக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இதனைத் தெரியுமா? இறையியலாளர்கள் இதனைக் குறித்து பேசுகிறார்களா?” இந்த சத்தியத்தை அறிந்து அதனைக் குறித்து பேசுகின்ற யாராவது இறையியலாளர்களுக்கு நடுவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த ஏதாவது ஒரு சிறிய தடயமாவது இருக்குமா என்று காணுவதற்கு கிறிஸ்தவத்தின் அனைத்து இறையியல் பிரிவுகளையும் நான் ஆராய்ந்தேன், ஆனால் அது அனைத்தும் வீன்.
ஆகவே இந்த நற்செய்தியின் சத்தியத்தை நான் அறிந்து கொண்ட பிறகு செய்த முதலாவது ஜெபம் இதுவேயாகும்: “தேவனே, நான் இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கிறேன். நீர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, என்னுடைய எல்லாப் பாவங்களையும் உம்மீது ஏற்றுக் கொண்டு, இப்போது என்னை நீர் இரட்சித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவனே, இந்த உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இன்னமும் இந்த சத்தியத்தைக் குறித்து தெரியாது. உலகம் முழுவதும் நாம் இந்த சத்தியத்தை பரப்பட்டும். உம்முடைய மூல நற்செய்தியை அப்படியே பிரசங்கம் செய்ய எனக்கு அனுமதி தாரும்.”
என்னுடைய உடன் ஊழியர்களே, உங்களை நான் சந்தித்தது ஆச்சரியமான ஆசீர்வாதமாகும். கர்த்தரைத் தேடுகிற உண்மையைத் தேடுகிற சிலரை சந்தித்து, அவர்களுடன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகிய சத்தியத்தை பிரசங்கம் செய்வதும், அவரை விசுவாசிப்பதும் இப்படியாக அவர்களுடன் ஒன்றுகூடி ஊழியம் செய்வதும் மிகவும் நன்றாக இருக்கிறது, கர்த்தருடைய வார்த்தையை கேட்காமலும் விசுவாசிக்காமலும் இருக்கும் ஆயிரம் பேரை சந்தித்து அவர்களுக்கு போதிப்பதை விட இது சிறந்தது. கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் அனைவரும் விசுவாசிப்பதால் நான் அவருக்கு நன்றியறிதல் உடையவனாக இருக்கிறேன்.
உண்மையாக, இந்த உலகத்தில் உள்ள சிலர் உங்களையும் என்னையும் போல மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்த உலகத்திலே நம்மைப் போல உண்மையான சகோதர சகோதரிகளுடன் இருப்பது யார்? இந்த காரியங்கள் அனைத்தும் உண்மையாக சத்தியத்தின் கர்த்தரிடம் இருந்தே வந்தன. இத்தகைய விலையேறப்பட்ட ஆசீர்வாதங்களை கர்த்தர் நமக்கு கொடுத்த போது, இத்தகைய விலையேறப்பட்ட இரட்சிப்பை கர்த்தர் நமக்கு கொடுத்த போது, இத்தகைய விலையேறப்பட்ட ஆசாரியத்துவத்தை கர்த்தர் நமக்கு கொடுத்த போது, நம்மால் எப்படி அவருடைய நற்செய்திக்காக வேலை செய்யாதிருக்க முடியும், நம்மால் எப்படி பாவிகளை நியாயந்தீர்க்க முடியாமல் போயிருக்கும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை எப்படி நம்மால் பரப்ப முடியாது போயிருக்கும்? நற்செய்தியை நாம் பரப்பும் போது, பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டவர்களையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் நம்மால் எப்படி பிரிக்க முடியும்? கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்த போது நீதிமான்களை பாவிகளிடம் இஉந்து பிரித்ததைப் போல, நாமும் கூட நீதிமான்களை பாவிகளிடம் இருந்து தெளிவாக பிரிக்கிறோம். நாம் சத்தியத்தை பொய்யுடன் கலக்கும் போது கர்த்தர் அதனால் பிரியப் படுவதில்லை. ஆகவே அவர் இவ்வாறு கூறுகிறார், “உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக. ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக” (உபாகமம் 22:9-11). இதனால் தான் நாம் பாவிகளை பிரித்து, அவர்களுக்கான நியாயத்தீர்ப்பை தெளிவாக கூற வேண்டும்.
இதனால் தான் கர்த்தருடைய வார்த்தையானது தம்முடைய விருப்பங்களுக்கு பொருந்தா விட்டாலும் கூட அதனைக் கேட்பவர்கள் அதனை சத்தியமாக விசுவாசிக்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பவர்கள் அவருடைய கிருபையினால் உலகத்தின் வெளிச்சமாக மாறுகிறார்கள், ஆனால் விசுவாசிக்காதவர்களினால் இருளில் இருந்து தப்பிக்க முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் விசுவாசிப்பதினால் தான் நாம் ஊரீம் ஆகவும் தும்மீம் ஆகவும், அதாவது, ‘வெளிச்சம் மற்றும் முழுமை’ ஆக மாறினோம். நாம் கர்த்தருக்குள் பாவத்தில் இருந்து முழுமையாக இரட்சிக்கப் பட்டவர்களாக மாறி விட்டோம்.
நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து முழுமையான கர்த்தருடைய பிள்ளைகளாக மாறிவிட்டீர்களா? நாம் இப்போது ராஜரீக ஆசாரியத்துவத்தின் வேலைகளைச் செய்து நாம் வாழ்வை நடத்துகிறோம் இதற்கு காரணம் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் ராஜாதி ராஜாவாக மாறியதே ஆகும். இந்த இரட்சிப்பின் நற்செய்தியை நமக்கு கொடுத்தமைக்காக கர்த்தருக்கு நான் நன்றி கூறுகிறேன். நாம் இந்த பூமியிலே தொடர்ந்து வாழும் போது ராஜரீக ஆசாரியத்துவத்தின் கடமைகளை நாம் வெற்றிகரமாகச் செய்ய கர்த்தர் நம்மை ஏதுவாக்க வேண்டும் என நான் ஜெபிக்கிறேன்.
அல்லேலூயா! நான் நம் கர்த்தரை என்றென்றும் துதிக்கிறேன்.