(யாத்திராகமம் 29:1-14)
“அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக. புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி, அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி, அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி, அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து, அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக. பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக. காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள். பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு, காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்; இது பாவநிவாரணபலி.”
இன்று நாம் தலைமை ஆசாரியனை தூய்மைப் படுத்துவதைக் குறித்து பார்ப்போம். இங்கே ஆரோனையும் அவன் குமாரர்களையும் எப்படி தூய்மைப் படுத்துவது என்று கர்த்தர் மோசேயிற்கு விளக்கமாக கட்டளையிடுகிறார். வசனம் 9 இல் “தூய்மைப் படுத்துவது” என்ற வார்த்தையின் பொருள், பரிசுத்தமாக்குதல், பிரதிருஷ்டை செய்தல், மரியாதை செய்தல், அல்லது அதனை தூய்மையாக கருதுதல் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், “தலைமை ஆசாரியனாக தூய்மைப் படுத்தப் பட்டான்,” என்பதின் பொருள் “தலைமை ஆசாரியனுடைய அதிகாரத்தையும் கடமையையும் கொடுக்க பிரிக்கப் படுதல்,” என்பதாகும். கர்த்தர் ஆரோனுக்கும் அவனுடைய குமாரர்களுக்கும் தலைமை ஆசாரியனாகும் உரிமையையும் ஆசாரியத்தையும் கொடுத்தார், இது அவர்கள் தன் மக்களுக்கு பாவங்களுக்கான மன்னிப்பை அளிக்கும் படியாக அவர்களை ஏதுவாக்கியது.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளை ஆரோனுக்கு உடுத்துவித்து அவன் தலையில் தலைச்சீராவை அணிவித்து, அவன் குமாரர்களை அங்கிகளால் தரிப்பிக்கும் படி கர்த்தர் மோசேயிற்கு கட்டளை இட்டார். அதன் பிறகு ஆரோனை தலைமை ஆசாரியனாகவும் அவன் குமாரர்களை ஆசாரியர்களாகவும் தூய்மைப் படுத்த, அவர்கள் ஒரு காளை மாட்டையும் இரண்டு களங்கமில்லாத செம்மறி ஆடுகளையும் எடுத்து வர வேண்டியிருந்தது. இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குமான பாவங்களுக்கான மன்னிப்பிற்காக பாவ பலிகாணிக்கையை செலுத்துவதே தலைமை ஆசாரியனுடைய மிகவும் முக்கியமான கடமையாக இருந்தது. அதனை அப்படிச் செய்ய, ஆரோனும் அவனுடைய குமாரர்களும் முதலாவதாக தம்முடைய சொந்த பாவங்களில் இருந்து சுத்திகரிக்கப் பட வேண்டியிருந்தது, இதனால் தான் தூய்மைப் படுத்த வேண்டிய நாளிலே தனக்காக முதலிலே பாவ காணிக்கையை செலுத்த வேண்டியிருந்தது.
தலைமை ஆசாரியனும் கூட பலிகாணிக்கை மிருகங்களை கொன்று கர்த்தருக்கு அதன் இரத்தத்தை காணிக்கையாக்குவதற்கு முன்னதாக, கர்த்தர் நிறுவிய பலிகாணிக்கை முறையின் படியாக அதன் தலையின் மீது கைவைக்க வேண்டியிருந்தது என்பதை இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு, தலைமை ஆசாரியன் பாவ பலிகாணிக்கையுடனும் சர்வாங்க தகன பலியுடனும், சமாதான பலிகாணிக்கையையும், மன்னிப்பிற்கான காணிக்கையையும் தன்னை தூய்மைப் படுத்துவதற்காக கொடுக்க வேண்டியிருந்தது.
தலைமை ஆசாரியனுக்காகவும் அவனுடைய வீட்டாருக்காகவும் பலிகாணிக்கை கொடுக்கப் பட்டதை போலவே, இஸ்ரவேல் மக்களுடைய பாவங்களையும் கூட அவன் பலிகாணிக்கை மிருகங்களைக் கொல்லுவதற்கு முன்னதாக அவற்றின் தலை மீது தன் கைகளை வைத்து, அதன் இரத்தத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. தலைமை ஆசாரியனாக இருந்து கர்த்தருக்கு ஊழியம் செய்யும் தன் கடமையாக, அவன் மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள எப்படியாக பலிகாணிக்கை செலுத்த வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த பாவங்களை கழுவ தலைமை ஆசாரியன் பலிகாணிக்கையை செலுத்தினான் என்பதின் பொருள் அவன் தன் மக்களுக்கு காணிக்கை கொடுக்க எப்படி பயிற்சி பெற்றான் என்பதாகும்௮அதாவது, அவன் தன் கைகளை பலிகாணிக்கையின் தலைகளின் மீது வைத்து, அதன் இரத்தத்தைப் பிடித்து இந்த இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது ஊற்றி, மீதி இரத்தத்தை தரையில் ஊற்றினான் என்பதாகும்.
இங்கே, தலைமை ஆசாரியன் தன்னுடைய பாவங்களையும் தன் மக்களுடைய பாவங்களையும் சுமத்த வேண்டுமானால்; அவன் தன் கைகளை பலிகாணிக்கையின் தலையின் மீது வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். யாத்திராகமம் 29:10-12 கூறுகிறது, “காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள். பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி.”
தலைமை ஆசாரியனும் அவனுடைய குமாரர்களும், தம் பலிகாணிக்கை மிருகமாகிய காளையின் தலையின் மீது தம் கைகளை தவறாது வைக்க வேண்டும் என்று கட்டளையிடப் பட்டனர். தலைமை ஆசாரியனாகிய ஆரோனும் அவனுடைய குமாரர்களும் பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது தம் கைகளை வைத்த போது, அவர்களின் எல்லாப் பாவங்களும் அதன் மீது சுமத்தப் பட்டன. தலைமை ஆசாரியனும் அவனுடைய குமாரர்களும் தம் கைகளை வைத்ததினால் இந்த பலிகாணிக்கை மிருகங்கள் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டதினால், அது இரத்தம் சிந்தி மரிக்க வேண்டியிருந்தது. இதன் பிறகு, தலைமை ஆசாரியன் தன் இரத்தத்தைப் பிடித்து, சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் அதனை ஊற்றி, மீதி இருக்கும் இரத்தத்தை நிலத்திலே ஊற்றினான். குடலைச் சுற்றியிருக்கும் கொழுப்பை அவன் அகற்ற வேண்டும், ஈரலைச் சுற்றியிருக்கும் கொழுப்பு படலத்தை அவன் அகற்ற வேண்டும், இரண்டு சிறுநீரகங்களையும் அதன் கொழுப்பையும் அகற்ற வேண்டும், அதன் பிறகு அவற்றை பீடத்திலே எரிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு நடுவிலே யாராவது ஒருவன் அறியாமல் பாவம் செய்திருந்தால் அந்தப் பாவத்திற்கான நிவாரணப் பலியாக, அவன் வெள்ளாட்டுக் குட்டியையும், ஒரு களங்கமில்லாத பெண் ஆட்டையும், தான் செய்த பாவத்திற்கான பலிகாணிக்கையாக எடுத்து வர வேண்டும். “பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன். அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்” (லேவியராகமம் 4:29-31).
இப்படி கைகளை வைப்பதும் காணிக்கை இரத்தம் சிந்துவதும் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையின் தவிர்க்க முடியாத காரியமாகும். உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே மறைந்திருக்கும் சத்தியத்தின் மூலமாக இயேசு கிறிஸ்து நம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்யும் திட்டத்தை கர்த்தர் ஏற்படுத்தினார். இஸ்ரவேல் மக்கள் சர்வாங்க தகன பலி கொடுக்கும் போதெல்லாம் அவர்களைச் சந்திப்பதாக கர்த்தர் அவர்களிடம் கூறினார். யாத்திரகாமம் 29:42 கூறுகிறது, “உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.” ஆசாரியர்கள் காலையிலும் மாலையிலும் கொடுத்த சர்வாங்க தகன பலி காணிக்கையானது நாம் உட்பட அனைத்து தலைமுறையாலும் கொடுக்கப் பட வேண்டிய காணிக்கையாகும், அது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஆவிக்குரிய இஸ்ரவேல் மக்களாகிய நமக்கு பொருந்துகிறது. இந்த காணிக்கைகளின் மூலமாக நம்மைச் சந்திப்பதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்.
தலைமை ஆசாரியனால் கொடுக்கப் பட்ட சர்வாங்க தகன பலி காணிக்கை என்பதின் பொருள் என்ன?
பலிகாணிக்கை மிருகமானது தன் தலையில் கைவைத்த அனைத்து பாவிகளுடைய எல்லா மீறுதல்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், அது அவர்களுடைய இடத்தில் இருந்து மரித்து எரிக்கப் பட்டு தண்டனையைப் பெற்றுக் கொண்டது. பலிகாணிக்கை முறையின் பலி காணிக்கையின் மூலமாக கர்த்தர் நம்மிடம் இருந்து விரும்புவது கீழ்வருமாறு அறிக்கைச் செய்வதையே ஆகும், “நான் கர்த்தருக்கு முன்னதாக இத்தகைய பாவங்களைச் செய்ததினால், நான் இத்தகைய பாவத்திற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.” கர்த்தருடைய இரட்சிப்பின் பிரமாணத்தின் படியாக, நாம் நம் பாவங்களைக் கழுவ வேண்டுமானால், நாம் பலிகாணிக்கை மிருகத்தின் தலையிலே நம் கைகளை வைத்து, அதன் இரத்தத்தைப் பிடித்து, இந்த இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளில் ஊற்றி, மீதி இருக்கும் இரத்தத்தை தரையிலே ஊற்றி, அதன் மாமிசத்தை சர்வாங்க தகன பலிபீடத்திலே எரித்து, கர்த்தருடைய நீதியின் கிருபையின் படியாக பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, நாம் நம் இருதயங்களாலும் செயல்களினாலும் செய்த எல்லாப் பாவங்களையும் கர்த்தருக்கு முன்னதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பாவங்களுக்காக நாம் தண்டிக்கப் படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் கர்த்தருடைய முழுமையான இரட்சிப்பிற்காக அவருக்கு போதுமான அளவு நன்றி கூற முடியாது. கர்த்தர் நம்மை இத்தனையாக நேசித்ததினால் அவர் தன் ஒரே பேறான குமாரரையே கொடுத்தார். இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு அந்தப் பாவங்களை தன் மரணத்தினால் நிவர்த்தி செய்தார் இதனால் அவரை விசுவாசிக்கிற யாரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுவர்.
காணிக்கையானது கைவைக்கப் படுவதாலும் இரத்தம் சிந்துவதாலும் கொடுக்கப் பட வேண்டும் என்பது பலிகாணிக்கை முறையின் அமைப்பாகும். நம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்யும் விசுவாசத்தின் அத்தாட்சியை இது குறிக்கிறது, ஆகவே நாம் அதனை விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு பாவியும் பலிகாணிக்கை மிருகத்தின் தலையில் தன் கையை வைத்தான் என்பதின் பொருள் அவன் தன் பாவங்களை அதன் மீது சுமத்தினான் என்பதாகும். தலைமை ஆசாரியனும் கூட ஒரு பலிகாணிக்கையை செலுத்தும் போது இவ்வாறு அறிக்கைச் செய்ய வேண்டும், “என்னிடம் கர்த்தருக்கு முன்னதாக இத்தகைய பாவங்கள் இருக்கின்றன, ஆகவே நான் மரிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.” ஆனால் நம்மை பாவத்தில் இருந்து விடுதலையாக்க கர்த்தர் நமக்கு பாவ நிவாரண காணிக்கையை கொடுத்தார் என்றும், இந்த காணிக்கையை விசுவாசித்து நாம் பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ள நம்மை ஏதுவாக்கினார் என்றும் விசுவாசித்து, நம்மால் இரட்சிக்கப் பட முடியும்.
கர்த்தர் கூறினார், “நான் உங்களை அங்கே சந்திப்பேன்.” அவர் இதனை தலைமை ஆசாரியனுக்கு மட்டுமே கூறாமல், ஒவ்வொரு சாதாரன மக்களிடமும் கூறினார், இதன் பொருள் கர்த்தர் நம் அனைவருக்கும் பாவங்களுக்கான மன்னிப்பைக் கொடுத்து நம்மைத் தன் சொந்த மக்களாக மாற்றுவார் என்பதாகும். அப்படியானால் கர்த்தர் நம்மை எப்படி சந்திக்கிறார்? நம்முடைய இரட்சிப்பிற்கான திட்டம் கர்த்தரிடம் இருப்பதினால், அவரால் நிறுவப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக தம் பலி காணிக்கைகளைக் கொடுப்பவர்களை மட்டுமே அவர் நிச்சயமாக சந்திப்பார். மனிதர்கள் பிறவிப் பாவிகள் என்றும் அவர்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் என்றும் கர்த்தருக்கு நன்றாக தெரியும் என்பதால், அவருடைய இரட்சிப்பிற்காக பலிகாணிக்கை முறையில் வெளிப்படுத்தப் பட்ட அவருடைய கிருபையின் படியாக நம் எல்லாப் பாவங்களையும் கழுவி விடவும், இதன் மூலமாக நம்மைத் தன் சொந்தப் பிள்ளைகளாக மாற்றவும் விரும்பினார். இதனால் தான் கர்த்தர் பலிகாணிக்கை முறையினை நிறுவினார் இதன் மூலமாக எண்ணிலடங்காத இஸ்ரவேல் மக்கள் பலிகாணிக்கை மிருகத்தின் தலையில் தம் கைகளை வைத்து தம் பாவங்களை அவற்றின் மீது சுமத்த முடிந்தது.
இஸ்ரவேல் மக்கள் தம்முடைய எல்லாப் பாவங்களையும் பலிகாணிக்கை மிருகங்களின் மீது சுமத்தியது, இப்படிப் பட்ட “கை வைத்தலின்” முறையின் மூலமாகவே ஆகும். இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பிரமாணத்தை எண்ணிலடங்காத முறை உடைத்து எல்லா வகையான பாவங்களையும் செய்தனர். ஆனால் அவர்கள் தம் எல்லா மீறுதல்களையும் “கை வைத்தல்” என்ற முறையின் மூலமாக பலிகாணிக்கையின் மீது சுமத்த முடிவதால், அவர்களால் தம் எல்லாப் பாவங்களையும் கழுவ முடிந்தது. இதன் மூலமாகத் தான் கர்த்தரால் தன்னை விசுவாசிக்கும் இஸ்ரவேலர்களுடனே வாசம் செய்து, அவர்களுடைய கர்த்தராக மாறி, அவர்களைத் தன் சொந்த மக்களாக மாற்றி, அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கு பரலோகத்தின் ஆசீர்வாதங்களையும் இந்த பூமியின் செழுமையான ஆசீர்வாதங்களையும் அவரால் கொடுக்க முடிந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் பலிகாணிக்கை முறையில் உள்ள அவர்களுடைய விசுவாசத்தின் மூலமாக இவை அனைத்தும் உண்மையாக முடிந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தின் பலிகாணிக்கை முறையின் இத்தகைய எல்லா அமைப்புகளும் கர்த்தரால் முன்னதாகவே ஏற்படுத்தப் பட்டது, இதனால் இஸ்ரவேல் மக்களால் தம் எல்லாப் பாவங்களையும் தம்முடைய பலிகாணிக்கையின் தலை மீது தம் கைகளை வைத்து கழுவி கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட இந்த முறையின் படியாக அவற்றை எல்லாம் அதன் மீது சுமத்த முடிந்தது. கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட கை வைத்தல் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றின் வல்லமையை விசுவாசிப்பதின் மூலமாக தன்னிடம் வந்த அனைவரும் தம் பாவங்களில் இருந்து கழுவப் பட அவர்களை ஏதுவாக்கினார், இந்த சத்தியத்தை விசுவாசிப்பவர்களால் பரிசுத்தமான கர்த்தருடனே நடக்க முடிந்தது. கை வைத்தலும் இரத்தம் சிந்துதலும் இல்லாமல் கொடுக்கப் பட்ட காணிக்கையின் மூலமாக, கர்த்தரால் இஸ்ரவேல் மக்களுக்கு நடுவே வாசம் செய்ய முடியாது. இஸ்ரவேல் மக்கள் எத்தனை குறைபாடுடையவர்களாக இருந்தாலும் அவர்கள் எத்தனை பாவங்களைச் செய்திருந்தாலும், கர்த்தரால் அவர்களுடனே வாசம் செய்ய முடிந்தது ஏனெனில் இந்த கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பின் பிரமானமானது நியதியின் படியான பலிகாணிக்கையாக இருந்தது௮அது பலிகாணிக்கை மிருகத்தின் தலையில் கை வைப்பதாகவும் அதன் இரத்தம் சிந்துதலாகவும் இருக்கிறது. ஆகவே, கர்த்தரால் அனுமதிகப் பட்ட பாவத்திலிருந்து இரட்சிப்பு என்பது பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது கை வைப்பதாகவும் அதன் இரத்தம் சிந்துதலாகவும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து விசுவாசிக்க வேண்டும்.
ஆசாரியர்கள் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் சர்வாங்க தகன பலிகளை கொடுக்க வேண்டி இருந்தது. தம்முடைய பாவங்களுக்காக காலையிலே ஒரு சர்வாங்க தகன பலியைக் கொடுத்த பிறகு, பகல் வேளையில் தொடர்ந்தும் அநேக பாவங்களைச் செய்ததே இதற்கு காரணமாகும், ஆகவே மாலையிலே இன்னொரு பலிகாணிக்கையை செலுத்தி தம் பாவங்களைச் சுமத்தி அவற்றைக் கழுவுவது அவர்களுக்கு அவசியமாகும். ஒவ்வொரு நாளும் கொடுக்கப் பட்ட சர்வாங்க தகன பலிகள் விசுவாச இஸ்ரவேலர்களுக்கு கீழ்வரும் காரியத்தை, இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, முழு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைத்து விடுவார் என்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதை அது நினைவு படுத்தியது. இதனைப் போல, நாம் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் விசுவாச காணிக்கையை செலுத்த வேண்டும், ஏனெனில் நாம் நாள் முழுவதும் இடைவிடாது பாவம் செய்து கொண்டேயிருக்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கொடுக்கப் பட்ட இந்த விசுவாச காணிக்கையானது புதிய ஏற்பாட்டுக் காலத்திலே இருதயத்தின் எல்லா அசுத்தங்களும், இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தையும் அவருடைய சிலுவை இரத்தத்தையும் விசுவாசித்து கழுவுவதற்கு சமமாக இருக்கிறது.
நம்முடைய இரட்சகராகிய இயேசுவானவர் நம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்து விட்டார் என்று விசுவாசிக்கும் விசுவாசத்தை பிதாவாகிய கர்த்தர் நம் இருதயங்களில் காணும் போது அவர் நம்மை சந்திக்கிறார். பழைய ஏற்பாட்டின் பலிகாணிக்கை முறையின் படியாக, இயேசு கிறிஸ்து தன்னுடைய நேரத்தில் இந்த பூமிக்கு வந்து புதிய ஏற்பாட்டு காலத்தின் தொடக்கத்திலே யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டார் (மத்தேயு 3:15). இதனால் தான் இயேசுவானவர் இப்படி கூறினார், “ஆட்டைப் பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான்” (மத்தேயு 11:12). இந்த சத்தியத்தின் நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாக நாம் நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாகி அவற்றில் இருந்து முற்றிலுமாக கழுவப் பட முடியும்.
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த போதிலும் கூட, மக்கள் எண்ணில் அடங்காத பாவங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள், கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட, இயேசு கிறிஸ்துவை அறிவதற்கு முன்னதாகவும் பின்னதாகவும், அநேக பாவங்களை தொடர்ந்தும் செய்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார், அவர் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தின் மூலமாகவும் சிலுவையில் சிந்திய இரத்தம் மூலமாகவும், உலகத்தின் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார். ஆகவே, சர்வாங்க தகன பலியின் மூலமாக இஸ்ரவேல் மக்களை சந்திக்கப் போவதாக கர்த்தர் கூறிய போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களை கர்த்தர் சந்திப்பார் என்று அதற்கு பொருள் படுகிறது. இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றினால் கர்த்தர் தம்முடைய எல்லாப் பாவங்களையும் அழித்து விட்டார் என்று உண்மையாகவே விசுவாசிப்பவர்களை அவர் நேசிக்கிறார். ஆனால் இந்த சத்தியத்தை நிராகரிப்பவர்களை அவர் நிச்சயமாக நேசிப்பதில்லை.
புதிய ஏற்பாட்டின் இந்த காலத்திலே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்தே நம்மால் கர்த்தரை சந்திக்க முடியும். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசித்து ஒருவனால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடிந்தது. கைகளை வைப்பதும் இரத்தம் சிந்துவதுமான௮இந்த இரண்டு காரியங்களும் ஒரு முழுமையான நற்செய்தியை உருவாக்குகின்றன. பழைய ஏற்பாடு கர்த்தருடைய முழுமையான இரட்சிப்பை விளக்கமாக தீர்க்கதரிசனம் கூறியது, புதிய ஏற்பாடு அந்த தீர்க்கதரிசனங்களில் நிறைவேறுதலாகவும் வாக்குத்தத்தம் செய்யப் பட்ட நற்செய்தியின் முழுமையாகவும் இருக்கின்றன. ஆகவே எபிரெயர் 1:1-2 கூறுகிறது, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.”
இயேசுவானவர் மகத்துவம் நிறைந்த கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறார், ஆனால் இந்த கர்த்தர் மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் கழுவி பாவத்தின் எல்லாத் தண்டனையில் இருந்தும் நம்மை இரட்சித்தார். கர்த்தர் நம்மை நீதிமான்களாக மாற்றிய இந்த நற்செய்தியை விசுவாசித்து, நம்மால் முழுமையானவர்களாக மாற முடியும். இப்போது நம்மால் நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவது சாத்தியமாயிற்று, இதனை நாம் மிகவும் சிரத்தையாக தேடிக் கொண்டிருந்தோம். நாம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவ வேண்டும் என்ற பரிதவிப்புடன் இருந்தோம், கை வைத்தல் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகிய பலிகாணிக்கை முறையின் மூலமாக கர்த்தர் அவற்றை எல்லாம் ஒரேதரமாக நிவர்த்தி செய்து விட்டார்௮அதாவது, இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவையில் இரத்தம் சிந்துதலின் மூலமாக நிவர்த்தி செய்தார், அதுவே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் முக்கிய சாராம்சமாக இருக்கிறது (1 யோவான் 5:6-8). கர்த்தர் நம்மை முழுமையாக நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் நிவர்த்தி செய்தார் என்று நாம் விசுவாசிக்கும் போது தான் அவர் நம்மைத் தன் சொந்த மக்களாக மாற்றி நம்மை சந்திக்கிறார்.
கை வைத்தலின் முக்கியத்துவம்
லேவியராகமம் 1:1-4 கூறுகிறது, “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்கதகன பலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து.”
கீழ்வருமாறு கூறும் வசனம் 4 ஐ கவனமாக பாருங்கள், “அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து.” வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு பாவி தன் கைகளை சர்வாங்க தகன பலியின் தலை மீது வைத்து அதனை கொடுத்திருந்தால் கர்த்தர் அந்த காணிக்கையை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டிருப்பார். யாருடைய தலையிலே பாவியுடைய கைகள் வைக்கப் பட வேண்டும்? அது பலி காணிக்கை மிருகத்தின் தலையாகும். இந்த முறையின் மூலமாக மட்டுமே, இஸ்ரவேல் மக்களுடைய பாவங்களை துடைக்க கர்த்தர் வாக்குத்தத்தம் செய்தார். ஆகவே பழைய ஏற்பாட்டிலே பலிகாணிக்கையின் தலையில் தான் கைகள் வைக்கப் பட்டன, அப்படியானால் புதிய ஏற்பாட்டின் நிலமை எப்படிப் பட்டதாக இருக்கிறது? புதிய ஏற்பாட்டுக் காலத்திலே உண்மையான பலி காணிக்கையாக மாறியது யார்? இது மனிதகுலம் முழுவதிற்குமான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை. இயேசு கிறிஸ்துவே மனித குலம் முழுவதுடைய பாவங்களையும் துடைத்து விட்ட ஒரே பலிகாணிக்கை ஆவார். ஒரு மனிதனுடைய பாவத்தால் அனைவரும் பாவிகளானார்கள், இயேசு கிறிஸ்துவினால் தான் அனைத்து மனிதர்களாலும் கூட தம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் சுத்திகரிக்கப் பட்டு நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
விசுவாசத்தின் மூலமாக, நாம் நம் கைகளை இயேசுவானவருடைய தலையின் மீது வைத்து நம் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் நம் கைகளை உண்மையான விசுவாசத்தின் மூலமாக அவர் தலையில் சுமத்த வேண்டியிருக்கிறது இதனால் கர்த்தர் இந்த பலிகாணிக்கையை விருப்பத்துடனே ஏற்றுக் கொள்ளுவார். மட்தேயு 11:12 இல் பலவந்தம் பண்ணுகிறவர்களாலேயே தன் ராஜ்யத்தைப் பிடித்துக் கொள்ள முடியும் என்று இயேசுவானவர் கூறினார். கை வைத்தலானது நம்முடைய எல்லாப் பாவங்களையும் பலிகாணிக்கையின் மீது சுமத்த நம்மை ஏதுவாக்குவதினால், கர்த்தர் இந்த விசுவாசத்தின் பலிகாணிக்கையை மகிழ்ச்சியுடனே ஏற்றுக் கொள்ளுகிறார். யோவான் ஸ்நானன் தன் கைகளை இயேசு கிறிஸ்துவின் தலை மீது வைத்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியதினால், மனிதகுலமானது அவருடைய ஞானஸ்நானம் மற்றும் நமக்காக அவர் சிலுவையில் மரித்தது ஆகியவற்றை முழு இருதயத்துடனே நாம் விசுவாசிக்கும் போது அவர்கள் பாவத்தில் இருந்து கழுவப் பட்டு பாவத்திற்கான தண்டனையில் இருந்தும் விடுவிக்கப் படுகிறார்கள். இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை விசுவாசிப்பதின் மூலமாகத் தான் நம்மால் நம் எல்லாப் பாவங்களையும் அவர்மீது சுமத்த முடியும்.
கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு பலிகாணிக்கை முறையினைக் கொடுத்தார், அது இயேசு கிறிஸ்து தன் சொந்த சரீரத்தினால் கொடுத்த நித்திய பலிக்கு முன்னோட்டமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், பலிகாணிக்கை முறையிலே வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்த இரட்சிப்பின் பிரமாணத்தை இயேசு கிறிஸ்து தன் ஞானஸ்நானம் மற்றும் தன் சிலுவையின் இரத்தம் ஆகியவற்றின் மூலமாக நிறைவு செய்தார். கர்த்தர் நம்மீது வைத்த அளவில்லாத அன்பினாலே, அவர் தன் ஒரே பேறான குமாரராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு கொடுத்து நம்மை இரட்சித்தார். இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் ஆகியவற்றை விசுவாசித்து ஒருவன் இரட்சிக்கப் படுவதற்கான நேரம் இதுவேயாகும்.
எங்கும் வியாபித்திருக்கும் கர்த்தர் படைப்பிற்கு முன்னதாகவே பாவிகளுடைய முழுமையான இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டார், மேலும் இந்த நிகழ்ச்சிநிரலின் படியாக அதனை சரியாக நிறைவேற்றினார். இந்த இரட்சிப்பின் திட்டத்தின் படியாகத் தான் யோவான் ஸ்நானன் இயேசுவானவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக பிறந்தான். மனிதர்களிலேயே மிகவும் சிறந்தவன் யோவான் ஸ்நானன் ஆவான். இயேசுவானவர் தாமே இவ்வாறு கூறினார், “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத்தேயு 11:11), வேறு வார்த்தைகளில் கூறினால், யோவான் ஸ்நானன், மனிதகுலத்தின் பிரதிநிதியாவான். யோவான் ஸ்நானன் கர்த்தருடைய ஊழியன் ஆவான், அவன் மோசே, எலியா, ஏசாயா தீர்க்கதரிசி ஆகியோரை விடவும் மிகவும் பெரியவன். யோவான் ஸ்நானன் வனாந்தரத்திலே ஒரு சந்நியாச வாழ்வை வாழ்ந்த ஒருவன் என்று மட்டுமே அநேக மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் அவன் மனிதர்கள் அனைவருக்கும் பிரதிநிதியாக இருக்கும் படியாக கர்த்தரால் அனுப்பப் பட்டான். உண்மையிலேயே யோவான் ஸ்நானன் உலக மனிதர்கள் அனைவரிலும் மிகவும் சிறந்தவன் ஆவான். அவன் தலைமை ஆசாரியனாகிய ஆரோனுடைய குடும்பத்தில் இருந்து வந்தான் (லூக்கா 1:5-7). அரசர்கள் அரச குடும்பத்தில் இருந்து பிறப்பதைப் போல, கடைசி தலைமை ஆசாரியனாகிய, யோவான் ஸ்நானனும் கூட, முதலாவது தலைமை ஆசாரியனாகிய ஆரோனுடைய குடும்பத்தில் இருந்து பிறந்தான், மனிதகுலத்தின் பிரதிநிதியாகிய அவன், மனிதகுலத்தின் பாவங்களை இயேசுவானவர் மீது சுமத்த யோர்தான் நதியிலே அவருக்கு ஞானஸ்நானம் செய்வித்தான். யோவான் ஸ்நானன் இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட மிகவும் பெரியவன். ஆனால் இதனைக் குறித்து கேள்வி எழுப்பும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் விசுவாசிக்க கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்கள், இவ்வாறு கேட்கிறார்கள், “வேதாகமத்திலே எங்கே யோவான் ஸ்நானன் தலைமை ஆசாரியன் என்று கூறப்பட்டிருக்கிறது?”
யோவான் ஸ்நானன் மனிதகுலத்தின் பிரதிநிதி என்றும் அவன் தலைமை ஆசாரியன் என்றும் விளக்குவதின் மூலமாக அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன், ஏனெனில் இதுதான் கர்த்தருடைய வார்த்தையில் எழுதப் பட்டுள்ளது: “நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்” (மத்தேயு 11:13-14). எலியாவை அனுப்பப் போவதாக கர்த்தர் மல்கியா 4:5 இல் வாக்குத்தத்தம் செய்தார். இப்படி வரப்போகிற எலியா யோவான் ஸ்நானனைத் தவிர வேறு யாருமில்லை என்று இயேசுவானவர் தாமே கூறினார். யோவான் ஸ்நானன் ஆரோனுடைய சந்ததியினனாக பிறந்ததினால் தான் அவன் தலைமை ஆசாரியன் என்ற தன் பாத்திரத்தை நிறைவு செய்தான்.
பழைய ஏற்பாட்டிலே, ஒரு பாவி பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது தன் கைகளை வைத்து தன் பாவங்களை சுமத்திய போது, அந்த காணிக்கையானது தன் இரத்தத்தைச் சிந்தி மரித்து நெருப்பினால் எரிக்கப் பட்டது. தன்னுடைய பாவங்களில் இருந்து மன்னிக்கப் பட வேண்டும் என்று விரும்புகிற ஒருவன் தன் பாவங்களை பலிகாணிக்கை மிருகத்தின் மீது சுமத்த வேண்டுமானால் அவன் தன் கைகளை அதன் தலையின் மீது வைக்க வேண்டும். மக்கள் தம் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது வைக்கும் போது, அவர்களின் பாவங்கள் அதன் மீது சுமத்தப் பட்டது என்று அதற்கு பொருள் படுகிறது. மேலும், பாவ நிவாரண நாளின் போது, தலைமை ஆசாரியனாகிய ஆரோன் தன் கைகளை போக்காட்டின் தலையின் மீது வைத்து இஸ்ரவேலர்களின் ஒருவருட பாவங்களை எல்லாம் அதன் மீது சுமத்த வேண்டும். இங்கும் கூட, கைவைத்தல் என்பது தவிர்க்க முடியாதது, ஆவிக்குரிய படியாக பேசினால், அதன் பொருள் பாவங்களை சுமத்துதல் ஆகும். யோவான் ஸ்நானன் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம் எல்லாப் பாவங்களையும் இயேசுவானவரின் மீது சுமத்தினான், மேலும் இந்த ஞானஸ்நானத்தின் மூலமாக இயேசுவானவர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு இதனால் தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார். யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டதின் மூலமாகவும் இதன் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினாலும், தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தியதினாலும் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்ததினாலும், இயேசு கிறிஸ்து நம் முழுமையான இரட்சகராக மாறினார்.
இஸ்ரவேல் மக்களும் கூட இந்த முறையின் படியாகவே பலிகாணிக்கையின் தலையில் தம் கைகளை வைத்து தம் காணிக்கையை செலுத்தினர். இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்து இதன் மூலமாக பாவிகளாக மாறிய போது, அவர்கள் தம் கைகளை மிருகங்களின் தலைமீது வைத்து தம் பாவங்களை அவற்றின் மீது சுமத்தி கர்த்தருக்கு சரியான முறையில் தம் பலிகாணிக்கையை செலுத்த வேண்டியிருந்தது. இத்தகைய கைகள் தம் தலையில் வைக்கப் பட்டு கொல்லப் பட்டு நெருப்பினால் எரிக்கப் பட்ட பிரமாணத்தின் படியான காணிக்கையை கர்த்தர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இஸ்ரவேல் மக்கள் கைவைத்தலின் மூலமாக தம் பாவங்களை பலிகாணிக்கையின் மீது சுமத்தி இந்த பிரமாணத்தின் படியாக காணிக்கை செலுத்தியதால் கர்த்தர் அவர்களைச் சந்தித்தார். பலிகாணிக்கையானது அவர்களுடைய பாவங்களை கைவைத்தலின் மூலமாக தன்மீது ஏற்றுக் கொண்டு அவர்களின் பாவங்களுக்காக அது தண்டிக்கப் பட்டதினாலே இந்த காணிக்கையின் மூலமாகவெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய கிருபையை விசுவாசித்து அவருக்கு முன்னே வருகிறவர்களை கர்த்தர் சந்தித்தார். இதனால் தான் இத்தகைய பலிகாணிக்கை மிருகங்களை ஏற்றுக் கொள்ளுவதில் கர்த்தர் இத்தனையாக மகிழ்ந்தார். அவர் மிகவும் கிருபை நிறைந்தவராக இருப்பதினால் யாரும் நரகம் அனுப்பப் படுவதை அவரால் தாங்கி கொள்ள முடியாது.
இதனைப் போல, நம்மை நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் சுத்திகரிப்பது இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானமும் அவர் சிலுவையில் சிந்திய இரத்தமுமேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைப்பதற்காக இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனிடம் இருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் தான் அவரால் சிலுவையில் மரித்து நம் பாவங்களுக்கான நீதியான தண்டனையை பெற்றுக் கொள்ள முடிந்தது. நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு சிலுவையின் நியாயமான தண்டனையை ஏற்றுக் கொண்டால் தான் அவரால் நம்மை பாவத்தில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்பதே இதற்கு காரணமாகும். ஆகவே, அவருடைய ஞானஸ்நானத்தை விசுவாசித்து அவருடைய இரத்தம் சிந்துதலின் பலிகாணிக்கை விசுவாசித்தால், இப்போது நம்மால் நீதிமானாக மறுபடியும் பிறந்து இயேசு கிறிஸ்துவை சந்திக்க முடியும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமாக, சுருக்கமாக, இயேசுவானவருடைய நீதியின் செயல்களை விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் பரிசுத்தமான கர்த்தரை சந்திக்க முடியும். இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து நித்தியமான இரட்சகராக மாறிவிட்டார்.
நாம் பரிசுத்தமான கர்த்தரை சந்திக்க வேண்டும் என்பது உண்மையே. இளநீல நூல், இரத்தாம்பர நூல், ஆகியவற்றால் வந்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக, நம்மால் கர்த்தரை சந்திக்க முடியும். கர்த்தரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு கர்த்தரால் கொடுக்கப் பட்ட பலிகாணிக்கை முறையினை விசுவாசிக்க வேண்டும் அதிலே கைவைக்கப் படுதலும் இரத்தம் சிந்துதலும் இருக்கிறது. அவர்களால் தம்முடைய சொந்த மாமிச சிந்தனைகளின் மூலமாக அதனை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் இதனைக் குறித்து சிறிது சந்தேகம் அவர்களிடம் இருதாலும், அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை திறந்து தமக்குத் தாமே இதனை உறுதி செய்ய வேண்டும். கர்த்தருடைய வார்த்தை கூறுவது சரியானது என்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும்.
நாம் நம்முடைய சொந்த சிந்தனைகளின் மூலமாக கர்த்தரை விசுவாசிக்க கூடாது. அதற்கு மாறாக, கர்த்தருடைய சத்திய வார்த்தையில் நாம் உறுதியாக நிற்க வேண்டும், இந்த வார்த்தையின் அடிப்படையில், இந்த உண்மையான நற்செய்தியில் இருந்து மற்ற நற்செய்திகளை பிரித்துணர வேண்டும். நாம் சொந்த புரிந்து கொள்ளுதலையும் அறிவையும் சார்ந்து நம்முடைய சொந்த சிந்தனைகளை மட்டுமே வலியுறுத்தக் கூடாது. உங்களுடைய சொந்த சிந்தனைகளில் எதுவுமே சரியாக இருக்க முடியாது. மனிதர்கள் மிகவும் பலவீனமானவர்கள், மிகவும் பிடிவாதமுள்ளவர்கள், ஆகவே அவர்கள் கர்த்தருக்கு முன்னதாக கடினமாக இருக்கிறார்கள் ஆகவே அவர்கள் தம் சொந்த நீதியையும் சிந்தனைகளையும் முன் வைத்து கர்த்தருடைய வார்த்தையை பினால் வைக்கிறார்கள். கர்த்தருக்கு முன்னதாக நம்முடைய இருதயங்களை திறப்பதும் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதும் உண்மையான வாழ்வாகவும் ஆசீர்வாதங்களாகவும் இருக்கிறது.
தூய்மைப் படுத்தப் படும் படியாக தலைமை ஆசாரியன் ஒரு காளையைத் தன் பலிகாணிக்கையாக செலுத்திய போது, அதன் குடலை மூடிக் கொண்டிருந்த அனைத்து கொழுப்பையும், அதன் ஈரலிலே ஒட்டிக் கொண்டிருந்த கொழுப்பையும், இரண்டு நீரகங்களையும் அதன் மீதிருந்த கொழுப்பையும் தனியாக எடுத்து, அதனை பீடத்திலே எரிக்க வேண்டும் என்றும், காளையின் மாமிசத்தை, அதன் தோல் மற்றும் மாமிசத்துடனே, ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே எரிக்கும் படியாக அவனிடம் கர்த்தர் கூறினார். கர்த்தர் மோசேயிற்கு கட்டளை இட்டபடியே தலைமை ஆசாரியன் பலிகாணிக்கையை செலுத்தினான். சர்வாங்க தகன பலி கொடுக்கப் பட்டபோது, தலைமை ஆசாரியன் களங்கமில்லாத ஒரு ஆட்டை பலிகாணிக்கை மிருகமாக எடுத்து வந்து தன் கைகளை அதன் தலையின் மீது வைத்தான். அவனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும், காலையிலும் மாலையிலும் தலைமை ஆசாரியனும் அவனுடைய குமாரர்களும் இத்தகைய பலியின் தலை மீது தம் கைகளை வைத்து, அதன் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தைப் பிடித்து, அதன் இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளிலே ஊற்றினார்கள். அவர்கள் அதன் பிறகு அதன் குடலைப் போன்ற அசுத்தமான பாகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே எரித்தார்கள், ஆனால் துண்டுதுண்டாக வெட்டப் பட்ட மாமிசமானது சர்வாங்க தகன பலிபீடத்தில் எரிக்கப் பட்டது. தலைமை ஆசாரியனுடைய தூய்மைப் படுத்தும் போது கொடுக்கப் பட்ட சர்வாங்க தகன பலியானதும் கூட இந்த முறையின் படியாகவே காணிக்கை கொடுக்கப் பட்டது.
குறிப்பாக, தலைமை ஆசாரியனை தூய்மைப் படுத்தும் போது, பலிகாணிக்கையின் அனைத்து கொழுப்பும் கர்த்தருக்காக எரிக்கப் பட வேண்டும். பலிகாணிக்கை மிருகத்தின் கொழுப்புடைய வாசனையினால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்தார் என்பது கர்த்தர் தன்னுடைய வார்த்தையின் படியாகவும் அவரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கையின் முறையினாலும் நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிறார் என வெளிப்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இங்கே கொழுப்பு என்பது, பரிசுத்த ஆவியானவரை குறிப்பிடுகிறது. கர்த்தர் நமக்கு பலிகாணிக்கை முறையினைக் கொடுத்தார், அவர் நம்மை பலிகாணிக்கை முறையின் படியாக படைத்தார்; பலிகாணிக்கை மிருகத்தின் தலையில் நம் கைகளை வைத்து, அதனைக் கொன்று, சர்வாங்க தகன பலிபீடத்திலே அதன் மாமிசத்தை எரித்து அதனை அவருக்கு கொடுக்க வேண்டும். இதனைப் போல கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக பலிகாணிக்கையை நாம் செலுத்தி அவர் மீது விசுவாசத்தை வைக்கும் போது மட்டுமே கர்த்தர் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுகிறார்.
யாத்திராகமம் 29:10 கூறுகிறது, “அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.” இது கர்த்தருடைய கட்டளையாக இருந்தது. அதற்கு மேலும், இந்த தூய்மைப் படுத்தலின் போது தலைமை ஆசாரியன் அணிந்த ஆடைகளிலும், ஏபோதிலும், தவறாது ஐந்து வகையான நூல்களும் இருந்தன௮அதாவது, அது பொன் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் நெய்யப் பட வேண்டியிருந்தது. இங்கே கூறப் பட்ட பொன் நூலானது விசுவாசத்தைக் குறித்து பேசுகிறது. இளநீல நூலானது இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, அது பழைய ஏற்பாட்டின் கைவைத்தலுக்கு ஏற்றதாக இருக்கிறது; இரத்தாம்பர நூலானது இயேசுவானவர் தேவனுடைய குமாரர் என்பதையும், அவரே கர்த்தர் மற்றும் இரட்சகர் என்பதையும் குறிக்கிறது; சிவப்பு நிற நூலானது இயேசு கிறிஸ்து கொடுத்த பலியைக் குறிக்கிறது; மெல்லிய பஞ்சு நூலானது நம்மை பாவம் இல்லாதவர்களாக மாற்றிய கர்த்தருடைய வார்த்தையைக் குறிக்கிறது. பொன் நூலானது கர்த்தர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்து நம்முடைய இருதயங்களை பனியைப் போல வென்மையாக்கினார் என்று விசுவாசிக்கும் விசுவாசத்தை குறிப்பிடுகிறது. நம்மிடம் இந்த விசுவாசம் இருக்க வேண்டும், இயேசுவானவருடைய ஞானஸ்நானத்தினாலும் சிலுவையின் இரத்தத்தாலும் கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் நம்மிடம் கூறியபடியாக, அவர் நம்மை எப்படி எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார் என்று, இயேசு கிறிஸ்துவை நாம் அப்படியே விசுவாசிக்க வேண்டும். கர்த்தர் எப்படி இரட்சிப்பிற்கான பலிகாணிக்கை முறையினை ஏற்படுத்தினார் என்றும், பலிகாணிக்கை முறையினை முழுமையாக்கிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் எப்படி நம் எல்லாப் பாவங்களையும் துடைத்தார் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
அநேக மக்கள் கூறுகிறார்கள், “நீங்கள் ஏன் இதனைப் போல அவரை விசுவாசிக்கக் கூடாது? நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? நீங்கள் விளக்கத்தை விரும்புகிற தன்மையுடையவராகவும் எப்போதும் நிச்சயத்துடன் இருக்க வேண்டும் என்பவராகவும் இருக்கலாம், ஆனால் தன்மை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆகவே இரண்டு முரன்பாடு நிறைந்த கருத்துக்களையும் ஒரே நேரத்திலே நான் விசுவாசிப்பேன். உங்களைப் போலவே விசுவாசிக்கும் மக்களை மட்டும் தான் கர்த்தர் ஏற்றுக் கொள்ளுகிறாரா? நான் எப்படியோ கர்த்தரை விசுவாசிக்கிறேன் என்று கூறினால், இந்த விசுவாசம் போதுமானதாக இருக்காதா?” நீங்கள் இப்படியாக விசுவாசித்தால், கர்த்தர் உங்கள் மீது பிரியமாக இருக்க மாட்டார். அவர் சத்தியத்தின் கர்த்தர் ஆவார். கர்த்தர் நம்மை இப்படிப் பட்ட குழப்பமும் சந்தேகமும் நிறைந்த முறையில் நம்மை இரட்சிக்கவில்லை. கர்த்தர் மிகவும் பிரகாசமான வெளிச்சம் அவருடைய வார்த்தை கூர்மையான, இரண்டு பக்கங்களை உடைய பட்டையமாக இருக்கிறது. அவர் ஊரீம் மற்றும் தும்மீம் ஆல் இரட்சிக்கிறார், அவர் நம்மை வெளிச்சத்தாலும் முழுமையாலும் இரட்சித்தார் என்று இதற்கு பொருள் படுகிறது.
கர்த்தர் மிகவும் சிறந்த நுன்னோக்கியை விடவும் மிகவும் துல்லியமானவர் ஆவர் அவரால் ஒன்றில் இருந்து ஒன்றை மிகவும் துல்லியமாக பிரித்துணர முடியும். நாம் விரும்பும் படியாகவெல்லாம் விசுவாசிக்கும் போது அவர் நம் இரட்சிப்பை அங்கிகரிக்கும் ஒருவர் அல்ல. கர்த்தர் சத்தியமாக இருப்பதினால், அவருக்கு அனைத்தும் தெரியும், நம்முடைய மறைவான சிந்தனைகளில் இருந்து நம் தற்காலிக உணர்வுகள் வரையிலும், நம்முடைய இருதயங்களில் இருக்கும் பாவங்களில் இருந்து நம் செயல்கள் வரையிலும், நாம் முன்னர் செய்த பாவங்களில் இருந்து இப்போது செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மற்றும் எதிர்காலத்திலே நாம் செய்யப் போகும் பாவங்களும், வெளிப்படுத்தப் பட்ட வெளிப்படுத்தப் படாத பாவங்களும் அடங்கும். இதனால் தான் பலிகாணிக்கையின் மீது கைவைத்தல் மற்றும் அதன் இரத்தம் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்ய தீர்மானித்தார், இதனால் தான் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக கர்த்தருடைய இரட்சிப்பை நாம் நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும்.
நம்முடைய கைகளை பலிகாணிக்கையின் தலையில் வைக்க வேண்டும் என்றும், அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுவார் என்றும் தேவன் கூறினார். ஒரு பாவி தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலையின் மீது வைக்கும் போது, அவன் இந்த பலியைக் கொன்று அதன் இரத்தத்தை சர்வாங்க தகன பலிபீடத்தின் கொம்புகளின் மீது ஊற்ற வேண்டும். இங்கே, பலிகாணிக்கையின் இரத்தத்தை கொம்புகளில் ஊற்றுவது நியாயத்தீர்ப்பின் புத்தகத்திலே பதியப் பட்டுள்ள பாவங்களை துடைப்பதைக் குறித்து கூறுகிறது (வெளி 20:12-15). இதன் பிறகு, மீதி இருக்கும் இரத்தம் தரையிலே ஊற்றப் படும். அவனுடைய இருதயம் பாவத்தில் இருந்து கழுவப் பட்டது என இதற்கு பொருள் படுகிறது.
உங்களுக்காகவும் எனக்காகவும், இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம் அனைவரையும் இரட்சித்தார். தலைமை ஆசாரியனிடமும் நம்முடைய விசுவாசமே இருந்தது. இந்த காலத்திலே உங்களிடமும் என்னிடம் இருக்கும் விசுவாசத்திற்கும் தலைமை ஆசாரியனிடம் இருந்து விசுவாசத்திற்கும் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. தலைமை ஆசாரியனுக்கும் கூட, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தில் அவன் வைத்த விசுவாசத்தால் தான், அவனால் தன் ஆசாரிய கடமைகளைச் செய்ய முடிந்தது, இதே விசுவாசத்தால் தான் நீங்களும் நானும் கூட நீதிமான்களாக மாறினோம். கர்த்தரால் கொடுக்கப் பட்ட இரட்சிப்பினை விசுவாசிக்கும் விசுவாசத்தால் நாம் நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதினால் தான் இப்போது நம்மால் அவரைச் சந்தித்து, அவருடைய உதவியைக் கேட்டு, அவருடைய சொந்த மக்களாக நம் வாழ்வை வாழ்ந்து, நாம் நம் ஆசாரிய ஊழியங்களை நிறைவேற்ற நற்செய்தியை பாவிகளிடம் பரப்புகிறோம்.
உலகப் படியான தலைமை ஆசாரியர்களும் பலிகாணிக்கை முறையும் கர்த்தரால் ஏற்படுத்தப் பட்டது
தலைமை ஆசாரியன் மற்றும் பலிகாணிக்கை முறை ஆகியவை கர்த்தரால் ஏற்படுத்தப் பட்டன. ஆகவே, பூமியின் தலைமை ஆசாரியன் கர்த்தர் அவனுக்கு கொடுத்த கட்டளையின் படி செய்தான், அப்படிச் செய்ததின் மூலமாக அவன் தன் மக்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்யும் தன் ஆசாரிய கடமைகளை நிறைவேற்றினான். அப்படியானால் பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய தேவ குமாரராகிய இயேசு கிறிஸ்து எப்படி நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார்? உலகப் படியான பலிகாணிக்கையை பயன் படுத்துவதற்கு பதிலாக, அவர் தன் சொந்த களங்கமில்லாத சரீரத்தை பலி காணிக்கையாக செலுத்தி நம்முடைய எல்லாப் பாவங்களையும் அதன் மீது சுமத்தினார். இயேசுவானவர் யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் பாவங்களைத் தன்மீது ஏற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக நம்மை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். இந்த அன்பு எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது, இந்த இரட்சிப்பு எத்தனை சிறந்தது!
உங்களால் இதனைச் செய்ய முடியுமா? யாரோ ஒருவருக்காக, உங்களால் அவருடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு அவருடைய இடத்தில் இருந்து சிலுவையில் அறையப் பட்டு மரிக்க முடியுமா? சாத்தியமே இல்லை! அதற்கு மேலும், உங்களுடைய சரீரத்தால் பிரமாணத்திற்கு ஏதுவான பலியாகவும் இருக்க முடியாது, ஏனெனில் அது களங்கம் இல்லாதது அல்ல. தம்முடைய நலத்தை விடவும் பெரிதான நலன்களுக்காக நீதியான காரியங்களைச் செய்த அநேக மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே, உதாரணமாக நாட்டிற்காக தம்மை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரால் இதனைச் செய்ய முடியும் என்றாலும், மனிதர்களால் செய்யப் பட்ட அனைத்தும் பயனற்றவையே, ஏனெனில் அவர்களால் தம்முடைய சொந்தப் பாவங்களின் பிரச்சனைகளையே தீர்க்கக் கூடாதவர்களாக இருக்கிறார்கள், இந்த நிலையில் அவர்களால் மற்றவர்களை பாவத்தில் இருந்து இரட்சிக்க முடியாது. கர்த்தருடைய பரிசுத்தமான குமாரராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர மனிதகுலத்தை பாவத்தில் இருந்து இரட்சிக்க கூடிய வேறு யாரும் இல்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர வானத்திற்கு கீழே நம்மை இரட்சிக்கக் கூடிய வேறு யாரும் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது (அப்போஸ்தலர் 4:12).
ஏதேனும் காரணம் பற்றி, மிகுந்த திட சித்தம் உள்ள உங்களில் யாராவது, கீழ்வருமாறு என்ணுகிறீர்களா, “அதனை என்னால் செய்ய முடியும். என்னை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்க முடியும், என்னை மற்றவர்களுக்காகவும் தியாகம் செய்ய முடியும்”? இத்தகைய தியாகங்களும் அர்ப்பணங்களும் மனிதர்களால் பாராட்டப் படக் கூடும், ஆனால் நேரம் செல்லும் போது ஒவ்வொன்றும் முன்னேறும் போது, இத்தகைய நல்லொழுக்கம் உள்ள செயல்கள் அனைத்தும் மறந்து போகும். எபிரெயர் 13:9 நம்மிடம் கூறுகிறது, “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லையே.” கர்த்தரிடம் இருந்து நம்முடைய இருதயங்கள் எத்தகைய போஜன பதார்த்தங்களையும் ஆதாயங்களையும் பெற்றுக் கொள்ளுகின்றன? கர்த்தருடைய இரட்சிப்பின் அன்பே நம் இருதயங்களை அவருடைய கிருபையினாலே மூழ்கடிக்கச் செய்து அதனை நிரப்புகிறது. இன்னொரு மனிதனால் நாம் சரீரப்படியாக உதவப் படுவது நம் நித்திய ஜீவனுக்கு எந்த பயனும் இல்லாதது. நாம் மீண்டும் ஒருமுறை வசதியாகும் போது, இத்தகைய உதவியை மறந்து போகக் கூடியவர்களாக இருக்கிறோம்.
சாக்ரட்டீசு, கன்பூசியசு, சித்தார்த்தர் ஆகியோர் உலகத்தின் மிகச் சிறந்த மகான்களாக கருதப் படுகின்றனர். ஆயினும், இந்த மகான்களால் உங்களுடைய இரட்சகராக மாற முடியுமா? சித்தார்தரால் உங்கள் பாவங்களை சுத்திகரிக்க முடியுமா? அவர்கள் யாராலும் முடியாது. எப்படி முயன்றும் கூட ஒரு மனிதனால் தன்னுடைய சொந்த பாவங்களில் ஒன்றைக் கூட தீர்க்க முடியாத நிலையில், உலகத்தின் இரட்சகராக எப்படி மாற முடியும்? தலைமை ஆசாரியனாலும் கூட தன் மக்களுடைய பாவங்களைத் தன் சொந்த காரியங்களின் மூலமாக துடைக்க முடியவில்லை. கர்த்தரால் கொடுக்கப் பட்ட பலிகாணிக்கை முறையின் மீது விசுவாசம் வைத்து இந்த பலிகாணிக்கை முறையின் மூலமாக அவருக்குத் தம் காணிக்கைகளைக் கொடுக்கும் போது மட்டுமே இஸ்ரவேல் மக்களால் தம் பாவங்களைக் கழுவ முடியும்௮அதாவது, அவர்கள் தம் கைகளை அதன் தலையின் மீது வைத்து பாவங்களை அதன் மீது சுமத்தி, சர்வாங்க தகன பலிபீடத்திலுள்ள கொம்புகளில் அதன் இரத்தத்தை ஊற்றி மீதி இருக்கும் இரத்தத்தை நிலத்திலே கொட்டி, அதன் கொழுப்பை சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது எரிக்க வேண்டும்.
ஒரு வருடம் முழுவதும் செய்யப் பட்ட பாவங்களை நிவர்த்தி செய்ய, ஏழாம் மாதத்தின் 10 ஆம் திகதியிலே, தலைமை ஆசாரியன் தன் கைகளை கர்த்தருக்கு முன்னதாக பலிகாணிக்கை மிருகத்தின் தலையின் மீது வைத்து இதன் மூலமாக தம் பாவங்களை அதன் மீது சுமத்தி, அதன் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எடுத்துச் சென்று, அதனை கிருபாசனத்தின் கிழக்கு பக்கத்திலே தெளிக்க வேண்டும்௮அதாவது, அவன் பிரவேசித்த பக்கத்தை நோக்கி தெளிக்க வேண்டும். அவன் இரத்தத்தை ஏழு முறை தெளித்த போது, அவனுடைய நீல நிற அங்கியின் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொன் மணிகள் ஒலி எழுப்பின. (இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் நெய்யப் பட்ட மாதுளைப் பழங்களுக்கு நடுவே இந்த பொன் மணிகள் தொங்கின.) அவன் நடந்த போதும் இரத்தத்தை தெளித்த போதும் இந்த பொன் மணிகள் அழகாக ஒலி எழுப்பின. இது நற்செய்தியைத் தவிர வேறில்லை. இந்த சத்தம் நற்செய்தியை குறிக்கிறது, அது நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்ட வல்லமையான நற்செய்தியாகும். தலைமை ஆசாரியன் தன்னுடைய சொந்த விருப்பத்தின் படியாக ஏதாவது ஒரு காணிக்கையை செலுத்தாமல் கர்த்தர் நிறுவிய விதிகளின் படியாக மட்டுமே காணிக்கையை செலுத்தி தன் மக்களுக்கு பாவங்களுக்கான மன்னிப்பை எடுத்து வர முடிந்ததைப் போலவே, புதிய ஏற்பாட்டின் காலத்திலே, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்ததின் மூலமாகவே உங்களையும் என்னையும் நம் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார், இதனை எல்லாம் அதே பிரமாணத்தின் படியாகவே செய்தார். இயேசு கிறிஸ்து தான் நிறுவிய இரட்சிப்பின் பிரமாணத்தின் படியாக தன் செயல்களை நிறைவேற்றிய போது தான் அவரால் நம்மை நீதிமான்களாக மாற்ற முடிந்தது.
உண்மையாகவே மறுபடியும் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களாக் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும், இதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளுகிறவர்களாகவும், திறந்த ஒரு மனதுடனே கர்த்தருடைய வார்த்தையை கேட்பதிலே மகிழ்கிறவர்களாக, அதாவது, ஆவியில் ‘எளிமை’ உடையவர்களாக இருக்க வேண்டும். ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை எத்தனை முறை பிரசங்கம் செய்தாலும் கூட அவர்களால் இந்த சத்தியத்தை விசுவாசிக்கவும் முடியாது தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் முடியாது; அவர்கள் அடி முட்டாள்களாக இருக்கிறார்கள். கர்த்தரால் கூறப் பட்ட வார்த்தையை ஒருவனால் எப்படி விசுவாசிக்காது இருக்க முடியும்? மனித அறிவினால் எத்தனையாக புரிந்து கொள்ள முடியும்? கர்த்தருடைய வார்த்தையின் ஞானத்திற்கு அது மிகவும் தாழ்மையானதாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட, அவர்கள் தம் சொந்த சாதனைகளைக் குறித்து பெருமைப் பாராட்டி கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்க மறுக்கிறார்கள். இந்த மக்களைப் போன்ற முட்டாள்களைக் காணுவது மிகவும் கடினமாகும்.
சகோதர சகோதரிகளே, உலகமானது வெகு வேகமாக மாறுகிறது. தொழிநுட்பங்களும் வெகு வேகமாக வளருவதினால் மனிதர்களின் பிரதிகளை உருவாக்குவது இப்போது சாத்தியமான ஒன்றாக இருக்கிறது. நாத்திகமும் கூட பரவி இருக்கிறது, மதங்களின் காலம் இப்போது மறைகிறது. ஆயினும், இந்த உலகம் அதிகமாக குழப்பமும் கடுமையும் நிறைந்ததாக மாறினாலும் கூட, மறுபடியும் பிறந்தவர்களாகிய நம்மால் கர்த்தருடைய ராஜரீக ஆசாரியர்களாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்வதை நம்மால் தவிர்க்க முடியாது. இப்போது, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது, தெய்வீகம் இல்லாதவை அலையாக வந்தாலும் அது பொருட்டல்ல. நாம் காலங்களின் ஓட்டத்திற்கு எதிராக செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.
கர்த்தரால் கொடுக்கப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியான இரட்சிப்பாகிய, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது, வருங்காலத்திலே உலகம் முழுவதும் இன்னமும் அதிக அளவில் பரவி மலரும் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்றைய ஆசாரியர்களான நாம் நமக்காகவும் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து ஆத்துமாக்களுக்காகவும் ஜெபித்து இந்த நற்செய்திக்கு சாட்சி கூறி நம் வாழ்வை வாழ வேண்டும். நாம் விசுவாசத்தால் வாழும் போது, நாம் கர்த்தருடனே நடக்கிறவர்களாக மாறி நற்செய்தியை பரப்புகின்ற செயல்களை பெரிதாக செய்து முடிப்போம் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த கடைசி காலங்களிலே கர்த்தருக்கு பிரியமான இத்தகைய செயல்களை நாம் தேடி அதனைச் செய்யும் போது, இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நற்செய்தியானது முன்னேறும் என்று நான் விசுவாசிக்கிறேன், இது மெல்லிய காற்றிலே பூக்களின் நறுமணம் பரவுவதைப் போன்றதாக இருக்கும்.
அவருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியர்களாக நம்மை தூய்மைப் படுத்தியமைக்காகவும் அவருடைய ஊழியத்தை நம்மிடம் ஒப்படைத்தமைக்காகவும் நான் என் எல்லா நன்றிகளையும் அவருக்கு கொடுக்கிறேன்.