(யாத்திராகமம் 28:1-14)
“உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள். அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.பின்னும் நீ இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக. அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும். இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய். பொன்னினால் வளையங்களைப் பண்ணி, சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.”
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட பொருட்களின் மீது நாம் நம்முடைய கவனத்தை செலுத்துவோம். ஏபோது என்பது தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட ஆடைகளில் மிகவும் சிறப்பானதாகும். இந்த ஏபோது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் நெய்யப் பட்டது. தலைமை ஆசாரியனுடைய இந்த பரிசுத்தமான ஆடையானது சித்திர வேலையாக ஐந்து நூற்களையும் வைத்து அலங்காரமாக நெய்யப் பட்டது.
இங்கே வேதாகமத்திலே கூறப் பட்ட பொன் நூலானது உண்மையான விசுவாசத்தைக் குறித்து கூறுகிறது. தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலே பயன் படுத்தப் பட்ட இளநீல நூலானது இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொள்ளுவதற்காக பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தைக் குறிப்பிடுகிறது (மத்தேயு 3:15). இரத்தாம்பர நூலானது ராஜாதி ராஜாவைக் குறிப்பிடுகிறது, சிவப்பு நிற நூலானது மனிதகுலத்தின் பாவங்களுக்கான தண்டனையை இயேசு கிறிஸ்து பெற்றுக் கொண்ட போது அவர் செய்த தியாகத்தைக் குறித்து பேசுகிறது. தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட மெல்லிய பஞ்சு நூலானது கர்த்தர் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் கர்த்தர் ஒருவனுடைய பாவங்களை துடைத்தார் என்று கூறுகிறது.
தலைமை ஆசாரியனுடைய கடமைகளுக்கு நடுவே மிகவும் முக்கியமான ஒன்று கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கும் கடமையாகும். ஆசரிப்புக் கூடாரத்தின் முறையின் படியாக கர்த்தருக்கு பலி காணிக்கை செலுத்தும் இந்த கடமையை நிறைவேற்றிய தலைமை ஆசாரியன், கர்த்தருக்கு மட்டுமே ஊழியம் செய்யவில்லை, ஆனால் அவன் இஸ்ரவேல் மக்கள் தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாக உதவி செய்தான் என்றும் பொருள் படுகிறது. தலைமை ஆசாரியனுடைய கடமைகளிலே முதலாவதும் முக்கியமானதுமான கடமையானது கர்த்தருக்கு ஆராதனை செய்ய அவருக்கு ஊழியம் செய்ய காணிக்கை செலுத்துவதேயாகும்.
இந்த கருத்தை நிரூபிக்க, யாத்திராகமம் 32 இல் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியை கூற வேண்டும். பத்துக் கற்பனைகளை பெற்றுக் கொள்ள மோசே சீனாய் மலைக்கு சென்ற போது, அவன் திரும்பி வர தாமதமாவதைக் கண்ட இஸ்ரவேல் மக்கள், ஆரோனிடம் இவ்வாறு கூறினார்கள், “எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்” (யாத்திராகமம் 32:1). அப்போது ஆரோன் இஸ்ரவேல் மக்களுடைய வளையல்களையும், காதணிகளையும், சங்கிலிகளையும் வாங்கி, அவற்றை உருக்கு ஒரு பொன் கன்றுக் குட்டியை செய்தான். அப்போது இஸ்ரவேல் மக்கள் கூறினர், “இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்” (யாத்திராகமம் 32:4). இதனைக் கண்ட ஆரோன், இந்த கன்று குட்டிக்கு முன்னதாக ஒரு பீடத்தைக் கட்டி யெகோவா கர்த்தருக்கு விருந்து என அறிவித்தான்.
அடுத்த நாள் வந்த போது, இஸ்ரவேல் மக்கள் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகாணிக்கையையும் எடுத்து வந்தார்கள்; அப்போது அவர்கள் அமர்ந்து புசித்து குடித்து, எழுந்து விளையாடினார்கள். இது கர்த்தருக்கு முன்னதாக மிகப் பெரும் பாவமாகும், அது இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பயங்கரமாக தீர்க்கும் படி செய்தது. நாம் இந்த நிகழ்ச்சியை நம் மனதிலே வைத்திருக்க வேண்டும். தலைமை ஆசாரியனாகிய ஆரோனிடமும் கூட ஒரு பலவீனமான பக்கம் இருந்தது, இது உண்மையே, ஆனால் அப்படி இருந்தாலும் கூட அவன் கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது, தலைமை ஆசாரியனாக கர்த்தருக்கு ஊழியம் செய்வது அவனுடைய முக்கியமான கடமை என்பதை அவன் மறந்து போகக் கூடாது. ஆனால் ஆரோன் தலைமை ஆசாரியன் என்ற தன் கடமைகளை உண்மையுடன் செய்யத் தவறினான். தலைமை ஆசாரியனுடைய கடமைகளைச் செய்ய, அவன் தகன பலிகளைக் கொடுத்து கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக சமாதான பலிகளை எடுத்து வர வேண்டும், அவனுடைய மக்கள் தன்னை பின்பற்றுவதும் பின்பற்றாததும் ஒரு பொருட்டேயல்ல.
சுருக்கமாக கூறினால், தலைமை ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருக்கு மட்டுமே ஊழியம் செய்திருக்க வேண்டும். இதனைப் போல, இந்த நாட்களில் போதகர்கள் மக்களுக்காகத் தான் அதிகமாக ஊழியம் செய்கிறார்களே தவிர, கர்த்தருக்காக ஊழியம் செய்யவில்லை. இன்றைய ஆசாரியர்களில் அநேகர் இத்தகைய தவறான சிந்தனைகளை பரப்புவதைக் குறித்து எண்ணும் போது அது என்னை ஆழமாக கவலைப் படச் செய்கிறது. இருந்தாலும் அது என்னை மிக ஆழமாக கவலைப் படச் செய்யவில்லை, ஏனெனில் சரியான ஆசாரியர்கள் இன்னமும் அவர்களுக்கு நடுவே இருக்க கூடும். மக்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்ய, பலிகாணிக்கை முறையின் படியாக கர்த்தருக்கு காணிக்கை செலுத்தும் தம் கடமையை ஆசாரியர்கள் நிறைவேற்ற வேண்டும்.
கீழ்வருமாறு கர்த்தர் மோசேயிடம் கூறும் வசனத்தைக் குறித்து சிறப்பாக கவனிக்க வேண்டும், “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக” (யாத்திராகமம் 28:1). கர்த்தர் ஆரோனை தலைமை ஆசாரியனுக்கான ஆடைகளினால் உடுத்துவித்தார் அது அவன் கர்த்தரை முதலும் முக்கியமாகவும் ஊழியம் செய்யும் படியாக அவனுக்காக உருவாக்கப் பட்டது. ஊழியம் செய்யும் அனைத்து ஆசாரியர்களும் இதனை மறக்க கூடாது: தலைமை ஆசாரியனுடைய ஆடைகள், பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியற்றினால் செய்யப் பட்டது.
தலைமை ஆசாரியனுடைய கடமைகளை நிறைவேற்ற
பாவ நிவாரண நாளிலே, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு வருட பாவங்களை நிவர்த்தி செய்ய, தலைமை ஆசாரியன் அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது தன் கைகளை வைத்து அதன் மீது சுமத்தி, அதன் இரத்தத்தைப் பிடித்து, அதனை சர்வாங்க தகன பலிபீடத்தின் மீது ஊற்றி அதனை கிருபாசனத்தின் மீதும் அதற்கு முன்னரும் தெளிக்க வேண்டும். அதனைப் போல, நம்முடைய உண்மையான பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய, இயேசுவானவர், இந்த பூமிக்கு வந்து, ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் பாவங்களைத் தன்மீது பெற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தி சிலுவையில் மரித்து, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, இதன் மூலமாக விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பின் வெற்றியை அளித்தார்.
கர்த்தருக்கு தலைமை ஆசாரியனாக ஆரோன் ஊழியம் செய்யும் போது, ஆரோன் “ஏபோது” என்று அழைக்கப் பட்ட ஒரு வித்தியாசமான ஆடையை அணிய வேண்டியிருந்தது, அது பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றால் தயாரிக்கப் பட்டிருந்தது. தலைமை ஆசாரியனுடைய இந்த ஆடையின் மூலமாக, நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதற்கான காணிக்கையை எப்படி கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்கு போதிக்கிறார். தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் அடங்கியிருக்கும் ஆழமான பொருளை அறிந்து கொள்ள, கர்த்தருடைய நீதியாலும் அவருடைய அன்பினாலும் நிறைவேற்றப் பட்ட பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட ஐந்து நூல்களின் மூலமாக, உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே கர்த்தர் நித்தியமான பாவங்களுக்கான மன்னிப்பை நிறுவி விட்டார் என்பதை அவர் காட்டினார் (எபேசியர் 1:4). ஆகவே, ஆகவே நாம் நம் ஆசாரிய கடமைகளை சரியாகச் செய்ய வேண்டுமானால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே கூறப் பட்டுள்ள பாவத்தைக் கழுவுவதைக் குறித்த இரகசியத்தை முதலாவதாக புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும். இதுவே பிதாவாகிய கர்த்தர் நமக்காக இயேசு கிறிஸ்துவுக்குள் ஏற்படுத்திய முன்குறிப்பிடப் பட்ட இரட்சிப்பிற்கான அருளாகும்.
தலைமை ஆசாரியன் தன்னுடைய ஆசாரிய கடமைகளை நன்றாக செய்ய வேண்டுமானால் அவன் கர்த்தருக்கு சரியான முறையிலே காணிக்கை செலுத்த வேண்டும்௮அதாவது, மக்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பிற்காக, அவன் தன் கைகளை பலிகாணிக்கையின் தலை மீது வைத்து தம்முடைய பாவங்களை பலிகாணிக்கை முறையின் படியாக சரியான படி சுமத்த வேண்டும். பாவ நிவாரண நாளிலே, தலைமை ஆசாரியன் தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலை மீது வைத்து அதன் இரத்தத்தைப் பிடிக்க அதன் கழுத்தை அறுத்தான். இந்த கைவைத்தலின் மூலமாக, இஸ்ரவேலர்களுடைய அனைத்து வருடாந்தர பாவங்களும் பலிகாணிக்கை மிருகத்தின் மீது சுமத்தப் பட்டது. அதன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக, அவர்களுடைய எல்லாப் பாவங்களும் நிவர்த்திக்கப் பட்டது. அதன் பிறகு அவன் அதன் இரத்தத்தை தெளித்து இந்த காணிக்கையை முழுமையாக்க அதன் மாமிசத்தை எரித்தான். இப்படியாக அவன் இந்த காணிக்கையை தன் மக்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பிற்காக செலுத்தினான்.
இங்கே இந்த கருத்தை நாம் கவனித்து பார்க்க வேண்டும்: பலி காணிக்கை மிருகமானது நெருப்பினால் எரிக்கப் படுவதற்கு முன்னதாக மக்களுடைய எல்லாப் பாவங்களும் அதன் மீது சுமத்தப் பட்டன என்றும், அவர்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பு இந்த காணிகையின் மீது கைகளை வைத்ததின் மூலமாகவும் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாகவும் நிறைவேற்றப் பட்டது என்றும் தலைமை ஆசாரியன் அவர்களுக்கு போதிக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு தலைமை ஆசாரியனுடைய மிகப் பெரிய கடமையாக இருந்தது. தலைமை ஆசாரியன் இந்த சத்தியத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், அவன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் உண்மையான பாதுகாவலனாக இருக்க வேண்டியிருந்தது. தலைமை ஆசாரியனும் கூட சாதாரன இஸ்ரவேல் மக்களைப் போலவே பலவீனமான மனிதனாக இருந்தாலும் கூட, பலிகாணிக்கை முறையிலே வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாகவும் அவர்களுக்காக கர்த்தருக்கு பலிகாணிக்கை செலுத்துவதின் மூலமாகவும், அவன் தன் மக்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதை ஏதுவாக்கினான். இதே முறையின் படியாக, நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும் கூட, பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்தவைகளை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு, நம்மால் கர்த்தருடன் நடக்க முடிகிறது.
ஆசரிப்புக் கூடார முறையிலே வெளிப்படுத்தப் பட்ட இந்த பலிகாணிக்கை முறையானது கர்த்தரிடம் இருந்து வந்த இரட்சிப்பின் ஞானமாக இருக்கிறது. நம்மை பாவத்தில் இருந்து இரட்சித்த கர்த்தருடைய ஞானமானது தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலே பயன் படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. தலைமை ஆசாரியன் தன் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமானால், கர்த்தரால் நிறுவப் பட்ட பலிகாணிக்கை முறையின் மூலமாகத் தான் மனிதகுலத்தை பாவங்கள் இல்லாததாக மாற்ற முடியும் என்ற சரியான வழியை அவன் போதிக்க வேண்டும். இன்றைய ராஜரீக ஆசாரியர்களாகிய நாம் (1 பேதுரு 2:9), இயேசுவானவர் இந்த பூமிக்கு வந்து, நம்முடைய உலகத்தின் எல்லாப் பாவங்களையும் ஞானஸ்நானத்தின் மூலமாக தன்மீது ஏற்றுக் கொண்டு, நம்முடைய இடத்தில் இருந்து தன் இரத்தத்தைச் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப் பட்டு நமக்காக மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார் என்ற உண்மைக்கு எப்போதும் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
மனிதர்களால் தம்முடைய சொந்த பாவங்களைத் துடைக்க முடியுமா? இந்த உலகத்தின் மதங்களால் மனிதகுலத்தின் பாவங்களை மறையச் செய்ய முடியுமா? நம்முடைய பாவங்கள் மறைந்தது தலைமை ஆசாரியன் நமக்கு போதிக்கும் இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் உருவாக்கிய இரட்சிப்பின் சத்தியத்தால் மட்டுமே சாத்தியமாயிற்று. கர்த்தரால் ஏற்படுத்தப் பட்ட இரட்சிப்பின் நற்செய்தியின் மூலமாக மட்டுமே நம்மால் நம் எல்லாப் பாவங்களுக்குமான மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும். மனிதகுலத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வது இயேசு கிறிஸ்துவால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்றாக இருக்கிறது, அவரே பரலோக ராஜ்யத்தின் நித்தியமான தலைமை ஆசாரியர் ஆவார். வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனித சரீரத்திலே அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்து யோவான் ஸ்நானனிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால், பாவிகளாகிய நம்முடைய அனைத்து மீறுதல்களையும் கழுவ தன் இரத்தத்தைச் சிலுவையில் சிந்த முடிந்தது. தேவன் தன் ஞானஸ்நானத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் தான் அவர் சிலுவையில் அறையப் பட்டு, தன் இரத்தத்தைச் சிந்தி, சிலுவையில் மரித்து நம் எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையையும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் இந்த நீதியின் செயலினால் மனிதகுலத்தின் இரட்சிப்பை முழுமையாக்கினார் (ரோமர் 5:18). இயேசுவானவர் நமக்காக செய்தவைகள் இல்லாவிட்டால், நம்மால் எப்போதுமே இரட்சிக்கப் பட முடியாது. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தின் மூலமாக நம்முடைய எல்லாப் பாவங்களையும் முழுவதுமாக துடைத்து விட்ட பரலோகத்தின் தலைமை ஆசாரியர் நம்மை பரிசுத்தமான கர்த்தருடைய பிள்ளைகளாக மாற்றினார், அது இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமில்லை.
பரலோகத்தின் ஆவிக்குரிய தலைமை ஆசாரியருக்கு பிதாவுடைய இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்து அனைத்தும் தெரியும் அது நம் பாவங்களுக்கான மன்னிப்பை முன்குறித்தது. இதனால் தான் தேவன் கூறினார், “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளி 22:13). தொடக்கத்தையும் முடிவையும் குறித்த தன் முழுமையான ஞானத்துடனே, பலிகாணிக்கை முறையில் தேவன் வாக்குத்தத்தம் செய்த நம் இரட்சிப்பை அவர் முழுமையாக்கினார். நாம் நம்முடைய பாவங்களுக்காகவும் பலவீனங்களுக்காகவும் தண்டிக்கப் படாமலும் அழிந்து போகாமல் இருக்கும் படியாகவும் அவர் செய்தார். பரலோகத்தின் தலைமை ஆசாரியர் நமக்காக என்ன செய்தார்௮அதாவது, அவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக் கொண்டு தன் இரத்தத்தைச் சிந்தி அதனைத் துடைத்தார், இப்படியாக அவர் நமக்காக முழுமையான இரட்சிப்பை நிறைவேற்றினார். கர்த்தருடைய ஞானமானது மனிதர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கான இரட்சிப்பை அளிக்கிறது. அது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் நிறைவேற்றப் பட்டது. இயேசு கிறிஸ்துவுக்குள், பிதாவாகிய கர்த்தர் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் மறைந்திருக்கும் சத்தியமாகிய நித்தியமான பாவங்களுக்கான மன்னிப்பை திட்டமிட்டார், இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம் அனைவருக்கும், அவர் இந்த முழுமையான இரட்சிப்பை அனுமதித்தார்.
தலைமை ஆசாரியனுக்கான ஏபோதின் பட்டி
தலைமை ஆசாரியனுடைய ஆடையில் பயன் படுத்தப் பட்ட பொருட்களில் ஏபோதிற்கான ஒரு பட்டி இருந்தது. தலைமை ஆசாரியனால் அவனுடைய ஏபோதில் இடுப்புப் பட்டையாக பயன் படுத்தப் பட்ட, இந்த பட்டியும் கூட, பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினாலேயே உருவாக்கப் பட்டிருந்தது. ஒரு பட்டி வழக்கமாக “பலத்தைக்” குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், நம்மை நம் பாவங்களில் இருந்து இரட்சிக்கும் பலம், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிற்கு இருக்கிறது என்றும் இதன் மூலமாக இரட்சிப்பை விசுவாசிக்கும் விசுவாசம் வருகிறது என்றும் அது நம்மிடம் கூறுகிறது. இந்த உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிடம் மட்டுமே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரையும் இரட்சிக்கும் கர்த்தருடைய பலம் இருக்கிறது (ரோமர் 1:16). ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தவற்றைத் தவிர வேறு எந்த நற்செய்தியை விசுவாசிப்பதும் தவறான செய்கையாகும்.
அநேக குறைபாடுடையவர்களாலும் கூட தேவனால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் முழுமையாக கழுவப் பட முடியும், ஏனெனில் உலகத்தின் பாவங்கள் எல்லாம் கர்த்தரால் நிறைவேற்றப் பட்ட இந்த பாவங்களுக்கான மன்னிப்பு என்ற உண்மையால் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப் பட்டு விட்டன (மத்தேயு 3:15-17; லேவியராகமம் 16:1-22). ஆகவே, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட இயேசுவானவருடைய நீதியின் செயல்கள் தம்மை இரட்சித்தன என்பதை விசுவாசிப்பவர்கள் தம்முடைய மாமிசம் வெகு பலவீனமாக இருந்தாலும் கூட அதனைக் குறித்து உறுதி படைத்தவர்களாக இருக்க கூடும். பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் நாம் வாசம் செய்யும் போது, இங்கே எதனால் நம்மை கர்த்தருடைய அன்பில் இருந்து நம்மை துண்டிக்க முடியும்? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்கும் நம் விசுவாசத்தில் கர்த்தருடைய இரட்சிப்பின் மீதான நம் விசுவாசம் முழுமையாக்கப் பட்டது.
ஆசாரியர்கள் தம்முடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்யும் போது, அவர்களால் ஆசரிப்புக் கூடாரத்தில் தெளிவாக காட்டப் பட்ட பலிகாணிக்கை முறைக்கு கீழ்ப்படியாத எத்தகைய தவறான நற்செய்தியையும் சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய தவறான நற்செய்திகளை பிரசங்கம் செய்கிறவர்கள், தம் பிரசங்கங்களை எத்தனை அழகாகச் செய்தாலும் கூட, அவர்களால் யாருக்கும் உதவ முடியாது ஏனெனில் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்ட கர்த்தருடைய உண்மையான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு சாட்சி அளிப்பதில்லை. ஆகவே, அவர்கள் சுரண்டுகிறவர்களாகவும் கூலியாட்களாகவுமே இருக்கிறார்கள். பரலோகத்தின் தலைமை ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராக விசுவாசிக்கும் போது, பலிகாணிக்கை முறையில் வெளிப்படுத்தப் பட்ட கைவைத்தல் மற்றும் இரத்தம் சிந்துதல் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுவதை நம்மால் தவிர்க்க முடியாது. இந்த உலகத்திலே அநேக தவறான-நற்செய்திகள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், பிரசங்கம் செய்வது யாராக இருந்தாலும் கூட, இந்த பிரசங்கிப்பவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் சத்தியத்தை பிரசங்கம் செய்தால், நாம் அவருடைய எல்லாப் போதனைகளையும் கேட்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏபோதில் பயன் படுத்தப் பட்ட ஐந்து பொருட்களும் நம்முடைய உண்மையான இரட்சிப்பை சுட்டிக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டிலே கர்த்தரால் கொடுக்கப் பட்ட பலிகாணிக்கை முறையின் படியாக காணிக்கை கொடுக்கப் படும் போது பாவிகளுக்கு பாவங்களுக்கான மன்னிப்பை கொடுத்த பலிகாணிக்கையை வெளிப்படுத்திய பொருட்கள் அவைகளே, இதில் கைவைத்தலும் இரத்தம் சிந்துதலும் மட்டுமே இருந்தன. இந்த பொருட்கள் புதிய ஏற்பாட்டிலே தம்மை வெளிப்படுத்தின, அது இயேசுவானவருடைய ஞானஸ்நானம் மற்றும் அவருடைய இரத்தம் சிந்துதல் ஆகியவையாகும்; இப்படியாக இயேசுவானவர் விசுவாசிக்கும் அனைவருக்கும் பாவங்களுக்கான மன்னிப்பின் இரட்சிப்பை எடுத்து வந்தார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை முழு இருதயத்துடனும் விசுவாசிப்பவர்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ளுவார்கள். இந்த சத்தியமானது உண்மையாகவே மறுபடியும் பிறந்த அனைவருக்குமாக பேசப் பட்டது அவர்களுக்கு இன்றைய தலைமை ஆசாரியனின் கடமைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
பூமியின் தலைமை ஆசாரியன் மக்களுடைய எல்லாப் பாவங்களையும் பலிகாணிக்கையின் தலையின் மீது தன் கைகளை வைத்து அதன் மீது சுமத்தினான்; அதன் பிறகு அவன் அதன் கழுத்தை வெட்டி அதன் இரத்தத்தைப் பிடித்து, அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மீது தெளித்து, இதன் மூலமாக கர்த்தருக்கு முன்னதாக உண்மையான நற்செய்தியை பாதுகாக்கும் தன் ஆசாரிய கடமைகளை நிறைவேற்றினான். ஆனால் பரலோகத்தின் தலைமை ஆசாரியர் உலகத்தின் எல்லாப் பாவங்களையும் தன் சொந்த சரீரத்தின் மீது ஏற்றுக் கொள்ள ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டவர் ஆவார்; அவர் தன்னுடைய சரீரத்தைக் கொடுத்து, தன் இரத்தத்தை சிலுவையில் சிந்தி, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்து, தன் மக்களுடைய எல்லாப் பாவங்களையும் முழுமையாகத் துடைத்து விட்டார். இப்படிச் செய்ததின் மூலமாக, அவர் தன் மக்கள் தம் பாவங்களை நிவர்த்தி செய்ய அவர்களை ஏதுவாக்கி கர்த்தருடைய அருளை அதன் முழுமைக்கு எடுத்து வந்தார். இன்று, இயேசுவானவருடைய சீடர்கள் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் எல்லாப் பாவங்களையும் அழித்து விட்டார் என்ற இந்த நற்செய்தியை பரப்பும் போது தான் அவர்களால் தம் ஆசாரிய ஊழியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எடுத்துச் செல்ல முடியும்.
இன்றைய கிறிஸ்தவத்திலே இத்தனை பிரச்சனைகள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று அதன் சமுதாயங்களில் அநேக ஆவிக்குரிய சுரண்டல் பேர்வழிகள் இருப்பதேயாகும் அவர்களுக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் கூட தம் ஆசாரிய கடமைகளைச் செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். கர்த்தருக்கு முன்னதாக உண்மையான ஆசாரியர்களாக மாறுவதற்கான ஒரே வழி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதேயாகும். இந்த விசுவாசம் இருப்பவர்களால் மட்டுமே சரியான பலி காணிக்கையை கர்த்தருக்கு கொடுத்து உண்மையாகவே மற்ற மக்களை நேசிக்கவும் முடியும். கர்த்தருடைய சபை எதற்காக இருக்கிறது என நீங்கள் எண்ணுகிறீர்கள்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை பாவிகளுக்கு பரப்புவதற்காகவே கர்த்தருடைய சபையானது இருக்கிறது என என்னால் உங்களிடம்கூற முடியும். இப்படியாகவே கர்த்தருக்கு ஊழியம் செய்து அவருடைய சாயலாக படைக்கப் பட்ட அனைத்து ஆத்துமாக்களையும் நேசிக்க முடியும்.
இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரிய வேண்டும்
உலகம் முழுவதும் இருக்கின்ற இன்றைய கிறிஸ்தவமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நம் தேவன் கூறினார், “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்... நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:13-14). நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நாம் உண்மையான வெளிச்சமாகவும் உலகத்தின் ஆவிக்குரிய உப்பாகவும் இருக்கிறீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அறிந்து விசுவாசிப்பவர்களே ஆவிக்குரிய படியான ஆசாரியர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுவதை ஏதுவாக்குகிறார்கள். ஆனால், மறுபுறம் பார்க்கையில், தமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து தெரியாது என்றாலும் கூட தம்முடைய ஆசாரிய ஊழியங்களை நிறைவேற்றுவதாக கூறுக் கொள்ளும் போதகர்கள் வெறும் கூலியாட்களாக மட்டுமே இருக்கிறார்கள். தம்முடைய ஆசாரிய ஊழியங்களை வெறும் கூலிக்காக மட்டுமே செய்கிறவர்களால் மக்களை சாதார கிறிஸ்தவர்களாக மாற்ற முடியும், ஆனால் அவர்களைப் பின்பற்றுகிற அனைவருடைய பாவங்களையும் அவர்களால் கழுவ முடியாது.
உண்மையான ஆசாரியர்கள் தம்முடைய பாவங்கள் நிவர்த்திக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தருக்கு முன்னதாக பாவம் இல்லாதவர்களாக நிற்கிறார்கள். அவர்களுக்கு ஆசாரிய ஊழியங்களைச் செய்து நியாயப் பிரமாணத்தின் படியான பலிகாணிக்கையை கொடுக்கும் போது தான் அவருடைய மக்களின் எல்லாப் பாவங்களும் சுத்திகரிக்கப் படுகிறது இதனால் கர்த்தர் அனைவரும் தம் பாவங்களில் இருந்து கழுவப் படுவதை சாத்தியமாக்குவார். இத்தகைய ஆசாரியர்களின் மூலமாகத் தான் கர்த்தர் மனிதகுலம் அவருடைய இரட்சிப்பின் செயல்களை அறிந்து, அவற்றை விசுவாசித்து, அவற்றின் மூலமாக அவரிடம் திரும்பி நீதியான வாழ்வை வாழச் செய்தார். அனைவரும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் ரகசியத்தை அறியச் செய்வதும், இந்த சத்தியத்தை பரப்புவதும் ஆசாரியர்களின் கடமையாகவும் செயலாகவும் இருக்கிறது. ஆகவே, ஆவிக்குரிய ஆசாரியத்துவமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் போலவே மிகவும் முக்கியமானது.
கர்த்தர் நமக்கு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வார்த்தையைத் தந்தார் இதன் மூலமாக நம்மால் ஆவிக்குரிய ஆசாரியத்துவத்தை வல்லமையுடன் நிறைவேற்ற முடியும். இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட உண்மையான நற்செய்தியை விசுவாசிக்கும் இந்த விசுவாசத்தை (பொன் நூல்) நமக்கு கொடுத்தமைக்காக நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும். தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட ஆடைகளைக் குறித்து நாம் ஆராய்ந்தால், மனிதகுலத்தின் பாவ மன்னிப்பு எப்படி நிறைவேற்றப் பட்டது என்று நம்மால் காண முடியும். தலைமை ஆசாரியனுடைய ஆடைகளை நாம் நெருக்கமாக ஆராய்ந்தால், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது பளிங்கைப் போலத் தெளிவாகும். பொய்யர்களினால் பரப்பப் படும் தவறான நற்செய்திகளின் மூலமாக கர்த்தர் மனிதகுலத்தை உலகத்தின் பாவங்களில் இருந்து இரட்சிக்கவில்லை. அதற்கு மாறாக, கர்த்தர் நம்முடைய பாவங்களில் இருந்து இரட்சிப்பை உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே இயேசு கிறிஸ்துவுக்குள் திட்டமிட்டு, அவர் இந்த திட்டத்தை இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் சிந்துதலின் மூலமாக துல்லியமாக நிறைவேற்றினார்.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகளுக்கு நடுவே, சித்திரவேலையாக நெய்யப் பட்ட அங்கியும் மெல்லிய பஞ்சினால் செய்யப் பட்ட காற்சட்டையும் இருந்தன. நாமும் கூட உள்ளாடைகளை அணிகிறோம், ஆனால் தலைமை ஆசாரியன் அணியும் இந்த ஆடைகள் நாம் அணியும் உள்ளாடைகளில் இருந்து வேறுபட்டது. தலைமை ஆசாரியனுடைய அங்கியானது முழங்கால் வரை மூடியிருக்கும் மிகவும் நீளமான ஆடையாகும். அது மெலிய பஞ்சு நூலினால் நெய்யப் பட்டதால், காற்று நன்றாக சென்று வர முடியும். ஆசாரியர்கள் சர்வாங்க தகன பலிகளை செலுத்திய போது, அவர்கள் பலிகாணிக்கையின் மாமிசத் துண்டுகளை சர்வாங்க தகன பலிபீடத்திற்கு எடுத்து வந்து அவற்றை எரிக்க வேண்டும். இந்த பீடம் உயரமாக அமைக்கப் பட்டது, இதனால் தலைமை ஆசாரியனுடைய சரீரத்தின் அடிப்பாகமானது மக்கள் சர்வாங்க தகன பலிபீடத்திற்கு அருகே வரும் போது மற்றவர்களுக்குத் தெரியக் கூடும். ஆகவே, தலைமை ஆசாரியனுடைய அடிப் பகுதி மூடியிருக்கும் படியாக ஒரு அங்கியையும் பஞ்சி காற்சட்டையையும் தயாரிக்கும் படி கர்த்தர் மோசேயிற்கு கட்டளையிட்டார் இதனால் அவன் சரீரம் முழுமையாக மூடப் பட்டது இல்லாவிட்டால் அவன் பாவம் செய்து மரிக்க வேண்டும்.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகள் எத்தனை அழகானவை? அவனுடைய மார்பிலே வைக்கப் பட்டிருந்த மார்ப்பதக்கம் அதிலே பொருத்தப் பட்டிருந்த பன்னிரண்டு விலையேறப் பட்ட கற்களினால் அவன் மார்பிலே பிரகாசித்தது, அவனுடைய தோல் பட்டைகளும் கூட விலையேறப் பட்ட கற்கள் உடையதாக இருந்தது. இந்த மார்ப்பதக்கமானது தோல் பட்டைகளுடன் பசும் பொன்னினால் செய்யப் பட்ட இரண்டு சங்கிலிகளினால் இணைக்கப் பட்டிருந்தது, மேலும் அது ஏபோதின் பட்டையுடன் இணைக்கப் பட்டிருந்தது ஆகவே அதனால் ஏபோதில் இருந்து கழன்று வர முடியாது. ஆகவே தலைமை ஆசாரியன் நடந்து செல்லும் போது, பசும் பொன்னினால் தயாரிக்கப் பட்ட இந்த முத்துப் போன்ற சங்கிலிகள் முன்னும் பின்னும் ஆடி ஒளியெழுப்பின. அதற்கு மேலும், மார்ப்பதக்கத்தில் இருந்த பன்னிரண்டு வகையான விலையேறப் பட்ட கற்களும் கூட பிரகாசித்தன, இரண்டு தோல் பட்டைகளிலும் வைக்கப் பட்டிருந்த பெரிய விலையேறப் பட்ட கற்களும் கூட ஒளிர்ந்தன, மெல்லிய பஞ்சினால் உருவாக்கப் பட்ட தலைச்சீராவில் இணைக்கப் பட்டிருந்த பொன் தகடானது நெற்றில் இருந்து ஒளிர்ந்தது.
ஆசரிப்புக் கூடாரத்திலே இருந்த பொன்னின் அளவு என்ன? அனைத்து பலகைகளும் பொன்னினால் மூடப் பட்டிருந்தன, கிருபாசனம், விளக்குத்தண்டு, அப்பத்தின் மேசை, மற்றும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த மற்ற தளவாடங்கள் அனைத்தும் பொன்னினால் உருவாக்கப் பட்டிருந்தன. இதனைப் போல, நாம் இயேசு கிறிஸ்துவின் ஆளுகைக்குள் பிரவேசிக்கும் போது, இந்த ஆளுகை எத்தனை மாட்சிமையானது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். வெளியே இருந்து பார்க்கும் போது, ஆசரிப்புக் கூடாரமானது அழகானதாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் அங்கே பயன் படுத்தப் பட்ட பொன்னைக் குறித்து அறிந்தவர்களுக்கு அதன் எடை ஒரு டன்னிற்கும் அதிகமாக இருந்தது என்பது தெரியும். ஆசரிப்புக் கூடாரத்தில் பயன் படுத்தப் பட்ட மொத்த பொன்னின் எடை இருபத்தி ஒன்பது தாலந்துகளும் எழுநூற்று முப்பது சேக்கல்களுமாகும் (யாத்திராகமம் 38:24) மேலும் நாம் இன்றைய எடைகளுடன் அதனை ஒப்பிடும் போது அதன் எடை ஒரு டன்னிற்கும் மேற்பட்டதாக இருக்கும், ஏனெனில் ஒரு தாலந்து அல்லது கிக்கார் என்பது (= 3000 சேக்கல்கள்) 42 கிலோவாக இருக்கிறது.
இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் மூலமாக உருவாக்கப் பட்டிருந்த விசுவாசத்தின் ஆடைகளை நீங்கள் ஆயத்தம் செய்து விட்டீர்களா? இங்கே பொன் நூல் என்பது விசுவாசத்தை குறிப்பிடுகிறது; இளநீல நிற நூல் என்பது இயேசுவானவர் பெற்றுக் கொண்ட ஞானஸ்நானத்தை குறிப்பிடுகிறது; இரத்தாம்பர நூலானது இயேசுவானவர் கர்த்தர் என்ற அவருடைய தெய்வீகத்தை குறிப்பிடுகிறது; இயேசு கிறிஸ்து நம்முடைய எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலமாகத் தன்மீது ஏற்றுக் கொண்டதினால் அவர் தன் விலையேறப் பட்ட இரத்தத்தை சிலுவையில் சிந்த வேண்டியிருந்தது என்பதை சிவப்பு நிற நூலானது நம்மிடம் கூறுகிறது; மெல்லிய பஞ்சு நூலானது கர்த்தருடைய நீதியை வெளிப்படுத்துகிற கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து பேசுகிறது. இதனைப் போல ஆசரிப்புக் கூடாரத்திலும் தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலும் பயன் படுத்தப் பட்ட இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவை கர்த்தர் நம் எல்லாப் பாவங்களையும் துடைத்து விட்டார் என்று நம்மிடம் கூறுகின்றன.
இந்த சத்தியத்தின் மீது விசுவாசம் வைத்து கர்த்தருக்கு முன்னதாக நாம் வரும் போது, நம் எல்லாப் பாவங்களுக்குமான மன்னிப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்
கர்த்தருக்கு முன்னதாக நாம் வரும் போது, தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலும் இருந்த இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றிலே காணப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். தலைமை ஆசாரியன் பாவநிவாரண நாளிலே பலி செலுத்திய போது, அவன் தன் கைகளை பலிகாணிக்கை மிருகத்தின் தலையின் மீது வைத்து அதன் பிறகு அதன் கழுத்தை அறுத்து அதன் இரத்தத்தை பிடித்தான். இந்த கைவைத்தலின் மூலமாக, அவருடைய மக்களுடைய எல்லாப் பாவங்களும் பலிகாணிக்கை மிருகத்தின் மீது சுமத்தப் பட்டது, இந்த இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக அந்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டன. இந்த விசுவாசம் இல்லாத யாராலும் கர்த்தரிடம் செல்ல முடியாது. இந்த விசுவாசம் இல்லாமல் கர்த்தருக்கு காணிக்கை செலுத்த முயற்சி செய்வது முற்றிலும் பிதற்றலாகும். பலிகாணிக்கை முறையும் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசத்துடன் தொடர்புடையவை ஆகும். கர்த்தரால் கூறப் பட்ட வார்த்தையில் வைத்த விசுவாசத்தினால் தான் தலைமை ஆசாரியனால் கர்த்தருக்கு முன்னதாக வந்து தன்னுடைய ஆசாரிய ஊழியங்களைச் செய்ய முடிந்தது இதற்காக அவன் தன் மக்களுக்கு பலி செலுத்தி அவர்களுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்தான்.
அப்படியானால், நம்முடைய விசுவாசம் எப்படிப் பட்டதாக இருக்கிறது? இந்த காலத்திலே, நீங்களும் நானும் இந்த சத்தியத்தை அறிந்து விசுவாசித்து கர்த்தருக்கு முன்னதாக விசுவாசத்தால் வாழுகிறோம் ஆகவே நாம் அனைவரும் அவருடைய ராஜரீக ஆசாரியர்கள் ஆவோம் (1 பேதுரு 2:9). உங்களுடைய விசுவாசம் பழைய ஏற்பாட்டிலே வெளிப்படுத்தப் பட்ட பலிகாணிக்கையை விசுவாசிக்கும் அதே விசுவாசமாக இருக்கிறதா? உண்மையான விசுவாசமானது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலே கூறப் பட்ட உண்மையான விசுவாசத்தை விசுவாசிக்கும் விசுவாசமாக இருக்கிறது. வெளியரங்கமான விசுவாசம் ஒவ்வொரு நேரமும் மாறிக் கொண்டேயிருக்க கூடும், ஆனால் உண்மையான சத்தியத்தின் காரியம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. கர்த்தரால் அங்கீகரிக்கப் பட்ட தலைமை ஆசாரியன் தம் காணிக்கைகளை பலிகாணிக்கை முறையின் படியாக கொடுத்த காணிக்கையாக இருக்கிறது.
ஏபோது “சித்திர வேலையாகச் செய்யப் பட்டது,” என வேதாகமம் கூறும் போது அது துல்லியமாக நெய்யப் பட்டது என பொருள் படுகிறது. தலைமை ஆசாரியன் முழுமையாக நெய்யப் பட்ட ஏபோதை அணிய வேண்டும், அதிலே குறிப்பிட்ட ஐந்து நூல்களில் இருந்து எதுவும் இல்லாதிருக்க கூடாது. இதனைப் போல, இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை உண்மையாகவே விசுவாசிக்கும் விசுவாசத்தால் தான் ஆசாரியர்களாக மாறியவர்களால் தம் பரிசுத்தத்திலே தரிப்பிக்கப் பட முடியும், அப்போது மட்டுமே அவர்களால் கர்த்தருக்கு முன்னதாக வந்து, அவர்களுடைய பாவ மன்னிப்பிற்கான காணிக்கையை மற்றவர்களுக்காக செலுத்த முடியும்.
அப்படியானால் உங்களுடைய விசுவாசம் எப்படிப் பட்டதாக இருக்கிறது? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை சரியாக அறிந்து நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப் பட்ட சத்தியத்தை விசுவாசிக்கும் பழைய ஏற்பாட்டின் ஆசாரியர்களுடைய விசுவாசமானது புதிய ஏற்பாட்டிலே நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசிகளுடைய அதே விசுவாசமாகவே இருக்கிறது. இந்த விசுவாசமானது யாராலும் மாற்ற முடியாத முழுமையான இரட்சிப்பின் சத்தியமாகும். இந்த விசுவாசம் இல்லாமல், யாராலும் கர்த்தருக்கு முன்னதாகவும் வர முடியாது, அல்லது அவருடைய பரிசுத்தமான நற்செய்தியை பரப்பவும் முடியாது. கடைசியில், இந்த உண்மையான நற்செய்தியின் மூலமாக தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளாதவர்களால் மற்றவர்களுக்கான தம் ஆசாரிய ஊழியங்களைச் செய்ய முடியாது என்று இதற்கு பொருள் படுகிறது.
நம்முடைய இணைய தளத்தின் மூலமாக, அநேக நாடுகளின் செய்திகளை நாம் கேட்கிறோம். உலகம் முழுவதும் இருந்து நாம் கேட்கிறோம், பெருவில் இருந்து சீனா வரையிலும் உகாண்டாவில் இருந்து ஹாலந்து வரையிலும், நம்முடைய இலவச கிறிஸ்தவ புத்தகங்களை வாசிப்பதின் மூலமாக மக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுகிறார்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அடக்கியுள்ள இந்த புத்தகங்களின் மூலமாக, இன்னமும் நாம் சந்திக்காத மக்களும் கூட தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களும் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு நம்முடைய உடன் ஊழியர்களாக நற்செய்தியை பரப்பினால், எத்தனை வேலைகள் செய்து முடிக்கப் படும்? நம்முடைய இலவச கிறிஸ்தவ புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சென்றால், உலகம் முழுவதும் உள்ள அநேக மக்களால் உண்மையாகவே மறுபடியும் பிறப்பது கடினமான ஒன்றல்ல. நம்முடைய புத்தகங்களை வாசித்து உலகம் முழுவதும் உள்ள அநேக ஆத்துமாக்கள் தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டுள்ளனர். ஆகவே நாம் தொடர்ந்தும் நம் ஆசாரிய கடமைகளைத் தொடர்ந்தும் செய்து ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட இரட்சிப்பின் சத்தியத்தை நாம் விசுவாசத்தால் பரப்ப வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது.
என்னுடைய உடன் விசுவாசிகளே, நீங்கள் பாவம் இல்லாதவர்களாகவும் பரிசுத்தமாகவும் மாறும் போது தான் உண்மையான நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பரப்பு முடியும், அதற்கு முன்னர் அப்படிச் செய்ய முடியாது. நாம் ஆசாரியர்களாக மாற வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்திலே வெளிப்படுத்தப் பட்ட நான்கு சத்தியங்களையும் விசுவாசிக்கும் விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும். உண்மையான கர்த்தராகிய நம் தேவன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் நம் எல்லாப் பாவங்களையும் நிவர்த்தி செய்தார். இந்த பூமிக்கு வந்ததினாலும், ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு, தன் இரத்தத்தைச் சிந்தியதின் மூலமாக, நம் தேவன் நம் எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார், நம்முடைய இடத்தில் இருந்து இந்த எல்லாப் பாவங்களுக்குமான தண்டனையை நம் சார்பாக ஏற்றுக் கொண்ட அவர், விசுவாசிக்கும் அனைவரையும் அவர்களின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சித்தார். நம்மை நீதிமான்களாகவும் பாவம் இல்லாதவர்களாகவும் மாற்றுகிற நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் யாராலும் இந்த பரிசுத்தமான ஆடைகளை அணிய முடியும். இந்த ஆடைகளை அணிந்து, கர்த்தருக்கு முன் வந்து, அவரிடம் ஜெபித்து, அவருடைய உதவியைக் கேட்டு, அவருக்கு ஊழியம் செய்யும் போது, இந்த நற்செய்தியை பரப்புகின்ற நம் ஆசாரிய ஊழியங்களை நம்மால் நிறைவேற்ற முடியும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நீங்கள் உங்களுடைய எல்லாப் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டீர்களா? பொன் நூலைப் போன்ற இந்த விசுவாசம் உங்கள் இருதயங்களில் இருக்கிறதா? இந்த நற்செய்தியை நமக்கு நாமே அறிந்து கொள்ளுவது மட்டுமே போதுமானது அல்ல, ஆனால் அதனை முழு இருதயத்துடனும் விசுவாசிக்க வேண்டும். தலைமை ஆசாரியனுடைய ஆடைகளிலும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலும் பயன் படுத்தப் பட்ட நான்கு நூல்களில் காணப் படும் இந்த சத்தியங்களில் ஒன்றைக் கூட நாம் விட்டு விடக் கூடாது; இவற்றில் ஒவ்வொன்று நம் விசுவாசத்தில் காணப் படுகிறது. இன்று தவறான விசுவாசிகளாக இருப்பது யார்? சில காரியங்கள் ஒரே மாதிரியாக தெரிந்தாலும் கூட அதன் உட்புறம் வேறு வகையாக இருந்தால், இதனை போலி என்று நாம் அழைக்கிறோம். தவறான நற்செய்திகளும் கூட இப்படிப் பட்டவையாக இல்லையா? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்காமல் தவறான நற்செய்திகளை விசுவாசிக்கிறவர்கள் போலியான விசுவாசத்தை உடைய மக்களாகவே இருக்கிறார்கள்.
ஆவிக்குரிய போர்ச் சேவகர்களாக உங்கள் விசுவாசத்தை பாதுகாத்து போராடுங்கள்
சில காலத்திற்கு, உண்மையான பத்திரிகையாளர்களைப் போல நடிக்கும் அநேக அரைகுறை நிருபர்கள் மக்களிடம் இருந்து பணத்தை சூறையாடினார்கள். இந்த போலி நிருபங்கள் தம் தகுதிகளை ஏற்படுத்தி உண்மையான நிருபர்களைப் போல நடிப்பதில் தேர்ந்தார்கள், அவர்களால் அநேக மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று, உண்மையான நற்செய்தியைப் போல காணப் படும் தவறான நற்செய்திகளை அநேக மக்கள் பரப்பி வருகின்றனர், ஆனால் இங்கே காணப் படும் உண்மையானது, அவைகள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இருந்து மாறு பட்டவை அல்ல. ஆகவே, எந்த நற்செய்தியையும் விசுவாசிப்பதற்கு முன்னர், அதனை நாம் நெருக்கமாக ஆராய வேண்டும் அவை ஒவ்வொன்றிலும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் ஒன்றாவது விடப் பட்டுள்ளதா இல்லையா என்று கவனிக்க வேண்டும், இவை ஒவ்வொன்றும் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்க வேண்டும். எந்த ஒரு நூலையும் விட்டு விடாது சித்திர வேலையாக தலைமை ஆசாரியனுடைய ஆடைகளைத் தயாரிக்கும் படியாக கர்த்தர் மோசேயிற்கு கட்டளை இட்டார்; இன்றைய ஆசாரியர்கள் தம்முடைய விசுவாசத்தைக் குறித்து வரும் போது அதில் இருந்து எந்த காரியத்தையும் விட்டு விடக் கூடாது என்று இதற்குப் பொருள் படுகிறது. இந்த நான்கு நூல்களினாலும்௮அதாவது இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் கர்த்தர் நம் இரட்சிப்பை நிறைவேற்றினார் என்று நாம் விசுவாசிக்காவிட்டால்௮நம்மால் கர்த்தரிடம் இருந்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.
ஒருவனுடைய விசுவாசம் போலியானது என நம்மால் எப்படி பிரித்துணர முடியும்? தலைமை ஆசாரியனால் அணியப் பட்ட ஆடைகளின் நிறத்தை நாம் பார்க்கையில், இன்று நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் மட்டுமே முழுமையானவர்கள் என்று, நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மக்களைப் போல சிலர் உண்மையான நற்செய்தியை விசுவாசித்தால், இந்த நபர் தன்னுடைய எல்லாப் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட ஒருவன் என்று உங்களால் கருத முடியும். தம்முடைய விசுவாசம் முழுமையானது என எண்ணும் அநேக மக்கள் இருக்கின்றனர், அவர்கள் இயேசுவானவருடைய ஞானஸ்நானம் என்ற இளநீல நிறத்தின் சத்தியத்தை விசுவாசிப்பதில்லை, அவர்கள் சிலுவையின் இரத்தத்தை மட்டுமே விசுவாசிக்கிறார்கள். இத்தகைய மக்கள் முழுமையான நற்செய்தியை விசுவாசிக்கிறவர்கள் அல்ல. கர்த்தருக்கு முன்னதாக முழுமையான விசுவாசத்தைக் குறித்து இந்த மக்களுக்குத் தெரியாததினால், அவர்களால் ஆவிக்குரிய பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்து பிரசங்கிக்க முடியாது.
என்னுடைய உடன் விசுவாசிகளே, தவறான நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தை உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பவர்களின் விசுவாசத்தில் இருந்து உங்களால் பிரித்துணர முடிய வேண்டும். இத்தகைய தவறான நற்செய்திகளை விசுவாசிக்கும் எண்ணிலடங்காத போதகர்கள் இந்த பூமியிலே இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டிலே, தலைமை ஆசாரியனுடைய ஆடைகள் ஐந்து வகையான பொருட்களினால் தயாரிக்கப் பட்டன, இந்த விசுவாசத்தை நாம் வைத்திருப்பதினால் தான் நம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டோம். இதனால் தான் நாம் சாத்தானுக்கு எதிராக நம் ஆவிக்குரிய போர்களை நடத்துகிறோம்.
இந்த காரியத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் புத்தகத்திலே பேசுகிறான். எபேசியர் 6:10-18 ஐ நாம் இங்கே பார்ப்போம்: “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.”
அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே நம்மிடம் “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்,” என்றும், “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” ஆயத்தமாக, “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்,” என்றும் கூறினான். இந்த சர்வாயுதவர்க்கம் என்பது என்ன? அது கர்த்தருடைய வார்த்தையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பவுல் நம்மிடம் கூறுகிறான், கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து, அதனை அணிந்து அதனைப் பற்றிக் கொண்டு இந்த தவறான விசுவாசங்களை எதிர்த்துப் போராட வேண்டும். இதனால் தான் அவன் இவ்வாறு கூறினான், “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இந்த காலத்தை ஆளுகிறவர்களுடனும், இந்த உலகத்தோடு இருப்பவர்கள் உடனும், பிசாசுடைய பொல்லாத ஆவிகளுடன் போராடும் படியாக அவன் நமக்கு ஆலோசனை கூறுகிறான்.
பவுல் நம்மிடம் கூறுகிறான், “ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” இவற்றை எல்லாம் செய்த பவுல், நாம் அனைவரும் கர்த்தருக்கு முன்னதாக நிற்கும் படியாக நம்மிடம் இதனைக் கூறுகிறான். கர்த்தருக்கு முன்னதாக நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதினால், நாம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அவருடனே கூட அனுபவிப்போம்.
நாம் அனைவரும் நம் மாமிசத்திலே பலவீனமானவர்களாக இருக்கிறோம். ஆகவே நாம் அனைவரும் விசுவாசத்தால் கவசம் தரிக்க வேண்டும். நீதியின் மார்ப்பதக்கத்தை அணியும் படியாக நம்மிடம் கூறிய பவுல், இந்த நற்செய்தியை நாம் நம் முழு இருதயத்தினாலும் விசுவாசிக்க வேண்டும் என கூறுகிறான். தலைமை ஆசாரியன் தன்னுடைய மார்புக்கு மேலே அணிந்த மார்ப்பதக்கத்தில் பன்னிரண்டு வகையான கற்களை அணிந்த போது அந்த கற்கள் ஒவ்வொன்றின் மீதும் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன, இதன் மூலமாக நாம் அனைவரும் எல்லா மக்களையும் நம் இருதயங்களில் அரவணைத்து அவர்களை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்த வேண்டும் என கூறுகிறார். தலைமை ஆசாரியன் இந்த பன்னிரண்டு விலையேறப் பட்ட கற்களும் பதிக்கப் பட்டிருந்த மார்ப்பதக்கத்தை அணிந்து அதனைத் தன் நெஞ்சிலே சுமந்தான் என்பதின் பொருள் அவன் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் தன் சரீரத்தில் சுமந்தான் என்று பொருள் படுகிறது.
“சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே கூறிய போது, நம்மிடம் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் விசுவாசம் நிச்சயமாக இருக்க வேண்டும். நாம் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பயப் படாமல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றின் மீதுள்ள நம் விசுவாசத்தை பற்றிக் கொண்டால், நம் இருதயங்கள் பலப் படுத்தப் படும். இந்த விசுவாசத்தினால் தான் நாம் நம்முடைய அலை மாறாத விசுவாசத்தால் உறுதியாக நிற்க முடிகிறது. ஆகவே, நாம் நீதியின் மார்ப்பதக்கத்தை அணிந்து நம் மனங்களிலும் நம் இருதயங்களிலும் அதனை விசுவாசிக்க வேண்டும். நம்முடைய தலைகளில் மட்டுமே இந்த உண்மையான நற்செய்தியை அறிந்து கொள்ளுவது போதுமானதல்ல, ஆனால் அதனை நாம் நம்முடைய இருதயங்களாலும் விசுவாசிக்க வேண்டும்.
சமாதானத்து நற்செய்தியை ஆயத்தம் செய்ய நற்செய்தியை பரப்புவது என்ற காலணிகளையும் தரிப்பிக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக, கர்த்தர் நமக்கு சமாதானத்தைத் தந்தார். நமக்கு சமாதானத்தை எடுத்து வந்த இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இந்த நற்செய்திக்கு ஊழியம் செய்து நம் வாழ்வை வாழும் படியாக கர்த்தர் நம்மிடம் கூறினார்.
“பொல்லாங்கன் எய்யும் அக்கினி அஸ்திரங்களை அவித்துப் போட,” “விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாய்” இருங்கள் என்று கர்த்தர் நம்மிடம் கூறினார். பழைய காலங்களிலே, அக்கினி அஸ்திரங்கள் போர்களிலே முதலாவதாக பயன் படுத்தப் படும் ஆயுதமாக இருந்தது. சாத்தான் நம்மை இப்படியாக தாக்குகிறான் என்று பவுல் நம்மிடம் கூறுகிறான். பிசாசு நம்முடைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் குறிபார்த்து அவற்றைத் தாக்குகிறான், அவன் கூறுகிறான், “நீ உன்னை யாரென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்? உன்னுடைய இருதயங்களில் இருந்து தோன்றுகிற சிந்தனைகளும் செயல்களும் அழுக்கானவையாக இருக்கின்றன, ஆனாலும் கூட நற்செய்தியை பரப்புவதில் தீவிரமாக இருக்கிறாய்? இது எத்தனை பிதற்றலாக இருக்கிறது? நீ பெருமைப் பாராட்டுகிறவனாக இருப்பதாக எண்ணவில்லையா? நீ ஏன் உன்னை முதலாவதாக சரி செய்து கொள்ளக் கூடாது?” இந்த அக்கினி அஸ்திரங்களினால் தாக்கப் பட்ட நாம், அதற்கு கீழ்ப்படிந்து கீழ்வருமாறு கூறினால், “நீ கூறுவது சரியானது. என்னை நானே சரி பண்ண முடியாத நான் எத்தகைய ஆசாரியனாக இருக்க முடியும்,” இத்தகைய ஒரு நிலையில் நம் இருதயங்கள் மரித்துப் போகின்றன. இதனால் தான் எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசத்தின் கேடகத்தை எடுத்துக் கொள்ளுமாறு அப்போஸ்தலனாகிய பவுல் நம்மிடம் கூறினான். நம்மை நம் பலவீனங்களில் விழுந்து போகும் படியாகச் செய்ய நம் இருதயங்களிலே சாத்தான் நட விரும்பும் இத்தகைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளில் இருந்து நம்மை பாதுகாப்பது எது? இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றை விசுவாசிக்கும் உறுதியான விசுவாசமே அதுவாகும். இதுவே விசுவாசத்தின் கேடயமாக இருக்கிறது.
அக்கின் அஸ்திரங்கள் நம்மீது எல்லாப் பக்கங்களில் இருந்தும் விழும் போது, கீழ்வரும் விசுவாசத்தின் மூலமாக அவற்றை விரட்டும் படியாக நம் தேவன் நம்மிடம் கூறினார், “தேவன் என்னை இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் நீதிமானாக மாற்றினார். இதனை நான் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறேன்.” இத்தகைய விசுவாசத்தால் தான் நம்மால் இந்த பயங்கரமான அக்கினி அஸ்திரங்களையும் சாத்தானுடைய திட்டங்களையும் தாக்குதல்களையும் எதிர்க்க முடியும்.
நீங்கள் குறைபாடுடையவர்களாக இருக்கிறீர்களா? உங்கள் மாமிசம் நிச்சயமாக குறைபாடுடையது. இந்த நிலையில், கர்த்தருடைய அருளிலும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலும் விசுவாசிக்கும் விசுவாசத்தின் மூலமாக நீங்கள் அனைத்து காரியங்களையும் சமாளிக்க வேண்டும். பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட பிறகு, உங்களால் விசுவாசத்தின் மூலமாக சிறிய காரியங்களை சமாளிக்க கூடும், ஆனால் அதன் பிறகு, வேறு எந்த முறையினாலும் உண்மையாகவே சமாளிக்க முடியாத ஆனால் விசுவாசத்தினால் மட்டுமே சமாளிக்க கூடிய உங்கள் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும் வேறு அநேக கடினங்களும் இருக்கின்றன. தொடக்க காலத்திலே, உங்கள் பலவீனங்கள் சிறிது அளவு தான் காணப் படும், ஆனால் நேரம் செல்லும் போது, இத்தகைய பலவீனங்கள் இன்னமும் அதிக அளவிலே மிகவும் மோசமான அளவிற்கு வெளிப்படுத்தப் படும். இதன் விளைவாக, நீங்கள் அநேக பலவீனங்களினால் தாக்கப் படுவீர்கள் ஆகவே நீங்கள் உங்களையே சுருட்டிக் கொள்ளுவீர்கள்.
இத்தகைய நேரங்களிலே, நீங்கள் உண்மையாகவே பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டீர்களா இல்லையா என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றும் போதே, சாத்தான் தன்னுடைய கடும் தாக்குதல்களை உங்கள் மீது தொடுக்கிறான். ஆகவே, உங்கள் விசுவாசத்தின் மூலமாக, உங்களால் உங்களுடைய பலவீனங்களையும் கூட கவனித்துக் கொள்ள முடியும். வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் உங்களுடைய பலவீனங்களினால் அழிந்து போகச் செய்யும் இத்தகைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். விசுவாச கேடயத்தைப் பிடித்தவர்களாக, நீங்கள் சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்து சத்தமிட வேண்டும், “எனக்குப் பின்னால் போ, சாத்தானே! ரோமர் 1:17, “விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்,” என்று கூறப் பட்டிருப்பதைப் போல, கர்த்தருடைய நீதியை விசுவாசித்து இன்னமும் நான் நீதிமானாகவே இருக்கிறேன் என்னிடம் எத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும் பொருட்டல்ல.” நீதிமான்கள் விசுவாசத்தால் வாழ வேண்டும்.
இந்த உலகத்திலே உங்களைக் குறித்து பெருமைப் பாராட்டக் கூடிய ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? உலகப் படியாக பெருமைப் பாராட்டும் படியாக நம்மிடம் எதுவும் இல்லை, ஆனாலும் நம்மால் இந்த உலகத்தின் மக்களிடம் மனவுறுதியுடன் பேசமுடியும். இந்த உலகத்தின் மக்கள் உங்களிடம் இவ்வாறு கூறலாம், “நீங்கள் நீதிமான்களாக இருந்தால், நானும் கூட நீதிமான் ஆவேன். அப்போது நீங்கள் அவர்களிடம் பதில் கூற வேண்டும், ‘கேளுங்கள், நீங்கள் நீதிமானாக இருந்தால், நான் எல்லா நீதிகளுக்கும் தாயாக இருப்பேன்.’” எதனையும் புரிந்து கொள்ளாமல் நம்முடைய குறைபாடுகளை மட்டுமே சுட்டிக் காட்டி நம்மைத் தாக்கக் கூடிய அநேக மக்கள் இருக்கிறார்கள். “நீ நல்லதொரு மாணவன் அல்ல. உன்னால் இதனைச் செய்ய முடியாது, அதனையும் கூட உன்னால் செய்ய முடியாது.” அவர்கள் நம்மை இப்படித் தாக்கினாலும் கூட, இதனைக் குறித்து நாம் கருத்தில் கொள்ள எந்த காரணமும் இல்லை. உங்களால் இப்படி பதில் கூற முடியும், “நீங்கள் கூறுவது சரிதான். நான் அதனைச் செய்வதில் நல்லவன் அல்ல. அப்படி இருந்தாலும் கூட, நான் இந்த உண்மையான நற்செய்தியை விசுவாசிக்கிறேன். இந்த நற்செய்தி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இளநீல நூல் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இரத்தாம்பர நூல் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவப்பு நூல் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மெல்லிய பஞ்சு நூல் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மூல புத்தகத்தைப் பாருங்கள். அவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்ள குறைந்த ஒரு மாத கால விடுமுறையாவது உங்களுக்குத் தேவைப் படும். இல்லை, உண்மையாக, ஒரு வருடத்திற்கு பிறகு அதன் ரகசியத்தை நீங்கள் கண்டு கொண்டால் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவராக இருப்பீர்கள். அவற்றை நீங்கள் புரிந்து கொள்ள தொடங்குவதற்கு முன்னர் 500 தலைமுறையாவது பிடிக்கும். பொன் நூல் என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நல்லது, உங்களைப் போல அல்லாமல், நான் இந்த காரியங்களை எல்லாம் அறிந்து விசுவாசிக்கிறேன்.” இதனைப் போல, உங்களுடைய விசுவாசத்தால் நீங்கள் சாத்தானுடைய தாக்குதல்களை எல்லாம் வெற்றி கொள்ள வேண்டும். உங்களிடம் பலமான விசுவாசம் இருக்க வேண்டும், இந்த விசுவாசத்தின் மூலமாக நீங்கள் அவனை விரட்டியடிக்க வேண்டும்.
“நான் குறைபாடுடையவனாக இருந்தாலும் கூட, இன்னமும் நான் கர்த்தருடைய நற்செய்திக்கு ஊழியம் செய்கிறேன். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்வது கர்த்தருக்கு ஊழியம் செய்வதாக இருக்கிறது. நான் குறைபாடுடையவனாக இருந்தாலும், இன்னமும் நான் கர்த்தருடைய ராஜ்யத்திலே ராஜாவாக இருக்கிறேன். நான் ராஜாவைப் போன்று இருக்கும் ஒரு ராஜரீக ஆசாரியன் ஆவேன். நற்செய்தியை நான் பரப்பாவிட்டால், நீங்கள் அனைவரும் நரகம் செல்லுவீர்கள்.” சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரிடமும் இத்தகைய துனிச்சலான விசுவாசம் இருக்க வேண்டும். இந்த விசுவாசம் பலத்தினால் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல, ஆனால் அது கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஒன்றாகும், ஆகவே நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் அதனை விசுவாசத்தால் பெற்றுக் கொள்ளுவது மட்டுமேயாகும். விசுவாசித்து இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?
எபேசியர் 6:17 இல் அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஆலோசனைக் கூறுகிறான், “இரட்சணியமென்னும் தலைச்சீராவையும்.” தலைச்சீரா என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும், சரியா? மத்திய காலத்தில் இருந்த வீரர்களை நினைவு கூறுங்கள். அவர்கள் உலோகத்தால் செய்யப் பட்ட தலைச்சீராவை அணிந்து மிகவும் நீளமான ஈட்டிகளைப் பிடித்து குதிரையில் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் போரிட்டனர். அவர்கள் இந்த தலைச்சீராவை அணிந்த போது அவர்களின் முகங்கள் மூடப் பட்டன, அவர்கள் படும் காயங்கள் கண்ணில் ஊடுருவப் பட்டதாக இல்லாவிட்டால் அது அவர்களை கொல்லக் கூடியதாக இருக்காது. இத்தகைய கூர்மையான ஈட்டிகளில் இருந்து அவர்களைப் பாதுகாத்தது எதுவென்றால் இப்படிச் சிறப்பாக செய்யப் பட்ட தலைச்சீராக்கள் மட்டுமே. இதனைப் போல, இரட்சிப்பின் தலைச்சீராவும் கூட நம்மை பாதுகாக்கிறது.
இதனைப் போல, நம் தலைகளிலும் கூட, சத்தியத்தின் மீதான நம் ஞானம் முழுமையாக இருக்க வேண்டும். நற்செய்தியின் சத்தியம் நம் ஞானத்தின் படியாகவும் கூட சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டதாக இருக்க வேண்டும். “இது உண்மையா இல்லையா? இது சரியா அல்லது தவறா?”௮நம்முடைய இத்தகைய குழப்பங்களில் நாம் கரைந்து போவதற்கு பதிலாக, நம்முடைய தலைகளில் தெளிவாக ஒழுங்கு படுத்தப் பட்ட புரிந்து கொள்ளுதல் இருக்க வேண்டும்: “தேவன் என்னை இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் ஆகியவற்றால் முழுமையாக நீதிமானாக மாற்றினார். இதனை நான் விசுவாசிக்கிறேன்.” இதனை நாம் செய்யும் போது தான் எந்த ஓட்டையும் இருக்காது இதன் மூலமாக சாத்தானால் உள்ளே வர முயற்சி செய்ய முடியாது. இது நம்மை இரட்சிப்பின் தலைச்சீராவினால் தரித்துக் கொள்ளுவதாக இருக்காது. நாம் சத்தியத்தைக் குறித்த சரியான ஞானத்தை விசுவாசிக்க வேண்டும்.
ஆவியின் பட்டயத்தை எடுங்கள் என்றும் கூட பவுல் கூறினான். ஆவியின் பட்டயம் கர்த்தருடைய வார்த்தையாக இருக்கிறது, ஆகவே நாம் வார்த்தையைக் கற்று, அறிந்து கொள்ளும் போது, அது மிகப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொள்ளுவதாக இருக்கிறது. மற்ற மக்களின் மூலமாகவும், பணத்தின் மூலமாகவும், எதிர்பாலினத்தாலும், உங்கள் பலவீனங்களினாலும் சாத்தான் மிகவும் தீவிரமாகத் தாக்குகிறான், ஆனால் கர்த்தருடைய வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து அவர்கள் அனைவரையும் நம்மால் எதிர்க்க முடியும்.
எபேசியரிலே, தலைமை ஆசாரியனுடைய ஆடைகளை உவமானமாக கூறிய அப்போஸ்தலனாகிய பவுல், கீழ்வருமாறு உண்மையான விசுவாசத்தைக் குறித்து நமக்கு விளக்கினான்: “நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்.” வேறு வார்த்தைகளில் கூறினால், கர்த்தர் நம்மை நீதிமானாக மாற்றினார் என்ற சத்தியத்தின் மார்ப்பதக்கத்தை நாம் அணியும் படியாக அவர் நம்மிடம் கூறுகிறார். மேலும் பவுல் நம்மை “இரட்சிப்பின் தலைச்சீராவையும் ஆவியின் பட்டயத்தையும் எடுக்கும் படியாகவும்,” கூறினான். இந்த உதாரனங்களைப் பயன் படுத்திய அவன், சத்தியத்தைக் குறித்த முழுமையான ஞானத்தினாலும் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிப்பதின் மூலமாகவும் சாத்தானை எதிர்த்து போராடி, அவனைத் தாக்கி, வெற்றி கொள்ளும் படியாக நம்மிடம் கூறினான். நம்முடைய விசுவாசத்தை தாக்குகின்ற எல்லா பொல்லாத தடைகளையும் எந்த தயக்கமும் இன்றி கொன்று போடும் படியாக அவன் நம்மிடம் கூறுகிறான். தவறான நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் தாம் ஒரு பகுதியை மட்டுமே விசுவாசித்தாலும் கூட தம்முடைய எல்லாப் பாவங்களும் கழுவப் பட்டுவிட்டதாக வலியுறுத்துகிறார்கள், அதாவது, அவர்கள் இயேசுவானவருடைய சிலுவை இரத்தத்தையும் அவர் தேவ குமாரர் என்ற தெய்வீக பன்புகளையும் மட்டுமே விசுவாசிக்கிறார்கள். நாம் நிராகரிக்க வேண்டியதும் வீசி விட வேண்டியதுமானது இத்தகைய போலியான விசுவாசத்தை மட்டுமே.
இளநீல நிற நூலின் ஊழியம் இல்லாமல் இயேசுவானவரை விசுவாசிக்கும் விசுவாசமானது தலைமை ஆசாரியன் போலியான ஆடைகளை அணிவதைப் போன்றது. ஆனாலும் இந்த உலகத்திலே, அநேக போலி கிறிஸ்தவர்கள் தம்முடைய விசுவாசத்தில் இருந்து இளநீல நிற நூலை விட்டு விடுகிறார்கள், அவர்களின் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட முடியாது. ஆயினும், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் புத்தகங்களில் எழுதி நாம் விசுவாசிக்கும் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் வந்த இந்த நற்செய்திக்கு சாட்சி கூறி வருகிறோம். மக்கள் இதனை விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும், அவர்களுக்கு வாசிப்பதற்கும், அறிவதற்கும், சத்தியத்தை விசுவாசிப்பதற்கும் ஒரு வாய்ப்பையாவது கொடுக்க வேண்டும், ஆகவே நாம் நம்முடைய புத்தகங்கள் சரியான கர்த்தருடைய வார்த்தையை கொண்டிருக்குமாறு செய்கிறோம். இயேசுவானவர் கர்த்தர் என்று மட்டுமே விசுவாசிப்பவர்கள் அதாவது அவர் சிலுவையில் சிந்திய தன் இரத்தத்தினால் மட்டுமே தம்முடைய எல்லாப் பாவங்களையும் கழுவி விட்டார் என்று விசுவாசிக்கிறவர்கள் தம்முடைய விசுவாசத்தை உணர்வுகளின் மீது மட்டுமே வைக்கிறார்கள், இதற்காக அவர்கள் மற்றவர்களையும் தம்மையும் வஞ்சிக்கிறார்கள். ஆனால் சத்தியத்தை விசுவாசிக்கும் நாம், கர்த்தராகிய இயேசுவானவர் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டு சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்ததின் மூலமாக மட்டுமே நம்மை முழுமையாக இரட்சித்தார் என அறிந்து விசுவாசித்து, அதனை பிரசங்கம் செய்கிறோம்.
தலைமை ஆசாரியனுடைய ஆடைகள் பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் நெய்யப் பட்டன என நீங்கள் இப்போது விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்தத்தினால் முழுமையாக தரிப்பிக்கப் பட்டவர்கள் இந்த ஐந்து வகையான நூல்களினால் தயாரிக்கப் பட்ட ஆடைகளை அணிகிறவர்களாக இருக்கிறார்கள். பொன் நூல், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றினால் வந்த பாவங்களுக்கான மன்னிப்பை தம் இருதயங்களினால் விசுவாசிக்கிறவர்கள் உண்மையான விசுவாச மக்களாகவும் ஆவிக்குரிய படியான ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள் அவர்கள் தம் எல்லாப் பாவங்களில் இருந்தும் உண்மையாகவே இரட்சிக்கப் பட்டதாக விசுவாசிக்கிறார்கள்.
இப்போது ஆவிக்குரிய ஆசாரியர்களாக மாறியவர்கள் மறந்து போக கூடாத காரியங்கள் இருக்கின்றன. அது உண்மை நற்செய்தியின் நிழலாகிய இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் விளைவாகும். இந்த ஐந்து வகையான விசுவாசங்களினால் தான் நாம் பாவங்களுக்கான மன்னிப்பின் பரிசுத்தமான ஆடைகளைத் தயாரித்து, அவற்றை விசுவாசத்தால் அணிந்து, கர்த்தருக்கு முன்னதாக வருகிறோம். இது நம் உண்மையான விசுவாசத்தைக் குறித்து பேசுகிறது. இந்த சத்தியத்தை விசுவாசிக்கும் நம் விசுவாசத்தின் மூலமாக, பழைய ஏற்பாட்டிலே தலைமை ஆசாரியனுக்கு செய்ததைப் போலவே, கர்த்தர் நம் இருதயங்களை பரிசுத்தமாக்கினார். இந்த சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் அனைவரும் கர்த்தருக்கு முன்னதாக ஆசாரியர்களாக மாறினோம். கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ராஜரீக ஆசாரியர்கள் நாமாவோம்.
சகோதர சகோதரிகளே, இந்த சத்தியத்தை விசுவாசிக்கின்ற விசுவாசத்தை பெற்றுக் கொள்ளும் படியாக நான் உங்களிடம் கேட்கிறேன், இந்த விசுவாசத்தின் மூலமாக சாத்தானுடன் போராடி உங்கள் ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்றுங்கள். இப்படிச் செய்வதின் மூலமாக, நீங்கள் அனைவரும் உங்களுடைய ஆசாரிய ஊழியங்களை நித்தியமாக செய்வீர்கள் என்ற விசுவாசத்துடன் நான் ஜெபிக்கிறேன். நீங்கள் இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிகப்பு நிற நூல் மற்றும் மெல்லிய பஞ்சு நூல் ஆகியவற்றின் நற்செய்தியை விசுவாசிப்பதை நிறுத்தி விட்டால், உங்களுடைய ஆசாரியத்துவம் உங்களிடம் இருந்து அகற்றப் படும். நீங்கள் அனைவரும் இன்னமும் பெரிய விசுவாசம் நிறைந்த ஆசாரியர்களாக மாறுவீர்கள் என்றும் உண்மையான நற்செய்தியின் மீது வைத்திருக்கும் உங்கள் விசுவாசத்தால் கர்த்தரைப் பிரியப் படுத்துவீர்கள் என்றும் நான் ஜெபிக்கிறேன். கடைசி வரையில் நீங்கள் உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பீர்கள் என்பது என் நம்பிக்கையாகும், இதனால் நீங்கள் நித்திய ஜீவனுக்கான நற்செய்தியை இழந்து போகாமல், உங்கள் விசுவாசத்தை பாதுகாத்து, உங்கள் ஆசாரிய கடமைகளை நித்தியமாக செய்வீர்கள்.