Search

LIVRES, eBOOK,
ET LIVRES AUDIO GRATUITS

Le Tabernacle

ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (Ⅰ) 
  • ISBN9788928203345
  • Pages552

Tami 9

ஆசரிப்புக் கூடாரம்: இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு விளக்கமான ஓவியம் (Ⅰ) 

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
முன்னுரை 

1. ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட பாவிகளின் இரட்சிப்பு (யாத்திராகமம் 27:9-21) 
2. நமக்காக துன்பப்பட்ட நமது தேவன் (ஏசாயா 52:13-53:9) 
3. வாழுகின்ற கர்த்தராகிய யாவே (யாத்திராகமம் 34:1-8) 
4. சீனாய் மலைக்கு மேசேயை கர்த்தர் அழைத்ததற்கான காரணம் (யாத்திராகமம் 19:1-6) 
5. ஆசரிப்புக் கூடாரத்திற்கு இஸ்ரவேலர்கள் எப்படி காணிக்கைச் செலுத்த வந்தார்கள்: வரலாற்று பின்னணி (ஆதியாகமம் 15:1-21) 
6. கர்த்தரின் வாக்குத்தத்தம் ஏற்படுத்திய விருத்தசேதன உடன்படிக்கை இன்னமும் நம்மீது ஆற்றல் செலுத்துகிறது (ஆதியாகமம் 17:1-14) 
7. விசுவாசத்திற்கான அத்திவாரத்தை அமைத்த ஆசரிப்புக் கூடாரத்தின் கட்டுமான பொருட்கள் (யாத்திராகமம் 25:1-9) 
8. ஆசரிப்புக் கூடார வாசலின் நிறம் (யாத்திராகமம் 27:9-19) 
9. தகன பலிபீடத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விசுவாசம் (யாத்திராகமம் 27:1-8) 
10. வெண்கலப் பாத்திரத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட விசுவாசம் (யாத்திராகமம் 30:17-21) 
11. இரட்சிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் 
 
பழைய ஏற்பாட்டில், கர்த்தர் தமக்கொரு ஆசரிப்புக்கூடாரத்தை அமைக்க மோசேயிற்கு கட்டளையிட்டதைப் போல், அவர் நமக்குள் வாசஞ் செய்யும்படியாக, நம்மிருதயங்களில் அவருக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கூறுகிறார். நம்மிருதயங்களினுள் அவருக்கு வாசஸ்தலம் அமைக்க உபயோகிக்கவேண்டிய விசுவாசத்தின் பொருட்கள் நற்செய்தி வார்த்தையாகிய நீர் மற்றும் ஆவியே. இப்பொருட்களாலான நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மைக் கழுவி சுத்தஞ் செய்ய வேண்டும். தமக்கொரு வாசஸ்தலத்தை அமைக்குமாறு கர்த்தர் கூறுகையில், நம்மிருதயங்களை வெறுமையாக்கி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்குமாறு கூறுகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நம்மிருதயங்களின் அணைத்துப் பாவங்களையும் கழுவும்போது, அவற்றில் வாசஞ் செய்ய கர்த்தர் வருகிறார். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதின் மூலமே உங்களால் உங்களிருதயங்களில் பரிசுத்த ஆலயத்தைக் கட்ட முடியும். ஆலயத்தை நீங்களே கட்ட முயன்று, இதுவரை, உங்களில் சிலர், இருதயங்களைச் சுத்திகரிக்கும்படி மனம் வருந்தி ஜெபித்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் இந்த தவறான விசுவாசத்தைக் கைவிட்டு, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் மனங்களை புதுப்பிக்க வேண்டிய நேரம் இதுவே.
Téléchargement eBook
PDF EPUB
Livre imprimé gratuity
Ajouter des livres au Panier.
Livre audio
Livre audio

Livres liés à ce titre