Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தைக் குறித்து நீங்கள் அறிந்து விசுவாசிக்க வேண்டும் (மாற்கு 1:1-2)
2. யோவான் ஸ்நானனின் நோக்கம் நிறைவேறாமல் போகவில்லை (மத்தேயு 11:1-14)
3. நீதியின் வழிக்கு வந்த யோவான் ஸ்நானன் (மத்தேயு 17:1-13)
4. யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தைக் கவனித்துப் பாருங்கள் (லூக்கா 1:17-23)
5. கர்த்தருடைய மகிமையை நாம் மகிழ்ச்சியுடனே அனுபவிப்போம் (யோவான் 1:1-14)
6. கர்த்தரின் இரு ஊழியர்களுடைய ஊழியங்களைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? (யோவான் 1:30-36)
7. இயேசு எதற்காக ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? (யோவான் 3:22-36)
8. உண்மையான நற்செய்தியையும் இயேசுவின் நீதியின் செயலையும் பரப்புங்கள் (மத்தேயு 3:1-17)
9. யோவான் ஸ்நானனுடைய செயலுக்கும் நம்முடைய பாவநிவாரணத்தைக் குறித்த நற்செய்திக்கும் உள்ள தொடர்பு (மத்தேயு 21:32)
10. உங்கள் பாவங்களைத் துடைப்பதற்காக வந்த இயேசு (மத்தேயு 3:13-17)
11. “இதோ, என்னுடைய தூதனை அனுப்புகிறேன்” (மாற்கு 1:1-5)
12. யோவான் ஸ்நானனைக் குறித்த புரிந்து கொள்ளுதலுடன் இயேசுவை விசுவாசிப்போமாக (லூக்கா 1:1-17)
யோவான் ஸ்நானனுடைய ஊழியம் அவசியமான ஒன்று அல்லது அது தேவையில்லாத ஒன்று என்பது பொருட்டேயல்ல என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய வார்த்தையின் படியாக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் என்பதின் அடிப்படையிலே யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தை புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் ஸ்நானன், மல்கியா புத்தகத்தின் அதிகாரம் 4, வசனங்கள் 4-5 இன் படியாக பூமிக்கு அனுப்பி வைக்கப் போவதாக வாக்குத்தத்தம் செய்யப் பட்ட எலியா தீர்க்கதரிசியாவான். வரப்போகிற எலியா தீர்க்கதரிசியாகிய, யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக பிறந்தான், அவன் முப்பது வயதிலே யோர்தான் நதியில் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியவனாவான். இப்படியாக, யோவான் ஸ்நானனுட்டைய ஊழியத்தை அறிந்து இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும்.