Search

বিনামূল্যে মুদ্রিত বই এবং
ই-বুক ও অডিও বুক

জল ও আত্মার সুসমাচার

நீங்கள் உண்மையாகவே ஜலத்தினால் மற்றும் பரிசுத்த ஆவியானவராலே மறுபடியும் பிறந்தவரா? [புதிய திருத்தப்பட்ட பதிப்பு]
  • ISBN9788928261642
  • পৃষ্টা587

তামিল 1

நீங்கள் உண்மையாகவே ஜலத்தினால் மற்றும் பரிசுத்த ஆவியானவராலே மறுபடியும் பிறந்தவரா? [புதிய திருத்தப்பட்ட பதிப்பு]

Rev. Paul C. Jong

பொருளடக்கம்
 
பகுதி ஒன்று—பிரசங்கங்கள்
1. மீட்பட நாம், முதலில் நமது பாவங்களை அறிந்திருக்க வேண்டும் (மாற்கு 7:8-9, 7:20-23) — 23
2. மனிதர்கள் பாவிகளாக பிறக்கிறார்கள் (மாற்கு 7:20-23) — 51
3. நியாயப்பிரமாணத்தின் மூலம் நாம் செயலில் இறங்கினால், அது நம்மைக் காப்பாற்ற முடியுமா? (லூக்கா 10:25-30) — 71
4. நித்திய மீட்பு (யோவான் 8:1-12) — 109
5. இயேசுவின் ஞானஸ்நானமும் பாவத்திற்கான பாவநிவிர்த்தியும் (மத்தேயு 3:13-17) — 161
6. இயேசு கிறிஸ்து ஜலத்தினாலும், இரத்தத்தினாலும், ஆவியினாலும் வந்தார் (1 யோவான் 5:1-12) — 247
7. இயேசுவின் ஞானஸ்நானம் பாவிகளுக்கான இரட்சிப்பின் சின்னமாக இருக்கிறது (1 பேதுரு 3:20-22) — 305
8. ஏராளமான பாவநிவிர்த்தியின் சுவிசேஷம் (யோவான் 13:1-17) — 335
 
பகுதி இரண்டு—பின்னிணைப்பு
1. இரட்சிப்பின் சாட்சியங்கள் — 447
2. துணை விளக்கம் — 477
3. கேள்விகளும் பதில்களும் — 529
 
 
இந்த புத்தகத்தின் முக்கிய பொருள் “ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறப்பது” ஆகும். இந்த புத்தகம் இந்த தலைப்பில் அசல் தன்மையைக் கொண்டுள்ளது. அதாவது, மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதையும், வேதாகமத்தின்படி ஜலத்தினாலும் ஆவியினாலும் எவ்வாறு மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதையும் இந்த புத்தகம் தெளிவாகக் கூறுகிறது. ஜலம் யோர்தான் நதியில் இயேசு பெற்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது, மேலும் யோவான் ஸ்நானகனால் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நமது பாவங்கள் அனைத்தும் இயேசுவுக்குக் கடத்தப்பட்டன என்று வேதாகமம் கூறுகிறது. யோவான் அனைத்து மனிதகுலத்தின் பிரதிநிதியாகவும், பிரதான ஆசாரியனான ஆரோனின் வம்சாவளியினராகவும் இருந்தார். பாவநிவாரணநாளில் ஆரோன் பாவநிவர்த்தி செய்யும் பாவநிவாரண வெள்ளாட்டின் தலையில் கைகளை வைத்து இஸ்ரவேலரின் ஒரு வருட பாவங்கள் அனைத்தையும் அதன் மீது கடத்தினார். இது வரவிருக்கும் நல்ல விஷயங்களின் நிழல். இயேசுவின் ஞானஸ்நானம் கைகளை வைப்பதன் சின்னமாக இருக்கிறது.
இயேசு யோர்தானில் கைகளை வைக்கும் வடிவத்தில் ஞானஸ்நானம் பெற்றார். எனவே இயேசு தனது ஞானஸ்நானத்தின் மூலம் உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் சுமந்து, அந்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேசு ஏன் யோர்தானில் யோவான் ஸ்நானகனிடம் ஞானஸ்நானம் பெற்றார் என்பதை அறியவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் இந்த புத்தகத்தின் முக்கிய சொல்லாகவும், ஜலத்தினாலும் ஆவியினாலுமான சுவிசேஷத்தின் இன்றியமையாத பகுதியாகவும் உள்ளது. இயேசுவின் ஞானஸ்நானத்தையும் அவரது சிலுவையையும் விசுவாசிப்பதன் மூலமே நாம் மறுபடியும் பிறக்க முடியும்.
ই-বুক ডাউনলোড
PDF EPUB
অডিও বুক
অডিও বুক