1. ஆவியுடனும் உண்மையுடனும் ஆராதிப்பது யார்? (யோவான் 4:1-24) 2. உண்மையாகவே மறுபடியும் பிறத்தல் என்பதின் பொருள் என்ன? (யோவான் 4:1-19) 3. உங்களுடைய சொந்த சிந்தனைகளை வெறுங்க்கள் (2 ராஜாக்கள் 5:15-19) 4. உங்கள் சொந்தத் தன்மையும் தேவனுடைய அன்பும் (யோவான் 3:16) 5. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் (யோவான் 3:1-5) 6. இந்த உலகத்தை மேற்கொள்ளும் விசுவாசம் (யோவான் 15:1-9) 7. கர்த்தருடைய செயலை விசுவாசிப்பது கர்த்தருடைய செயலை செய்வதாகும் (யோவான் 6:16-29) 8. இயேசுவானவர் பேதுருவின் கால்களைக் கழுவியதைப் போல நம் கால்களையும் கழுவினார் (யோவான் 13:1-11) 9. நம்மிடம் அநேக குறைபாடுகள் இருந்தாலும் கூட தன்னைப் பின்பற்றும் படியாக கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார் (யோவான் 21:15-19) 10. கிறிஸ்துவுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கான உண்மையான நிபந்தனைகள் (1 யோவான் 1:1-10) 11. கர்த்தரில் நிலைத்திருக்கிறவர்கள் பாவம் செய்வதில்லை என்று வேதாகமம் கூறுவதின் பொருள் என்ன? (1 யோவான் 3:1-10) 12. உங்களுடைய விசுவாசம் பேதுருவின் விசுவாசத்தைப் போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (மத்தேயு 16:13-20) 13. எப்போதும் பாவம் செய்து கொண்டிருக்கும் நமக்கு தேவனுடைய நீதி முற்றிலும் தேவை (மத்தேயு 9:9-13)
இன்றைய கிறிஸ்தவர்கள் தம் சிந்தனைகளை மாற்ற வேண்டும். கர்த்தரால் கொடுக்கப் பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்கள் தம்முடைய சொந்த இரட்சிப்பாக விசுவாசிக்க வேண்டும். இந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நமக்கு கொடுத்தமைக்காக தேவனுக்கு நாம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு மாறாக உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை இரட்சித்த தேவனுடைய இரட்சிப்பின் செயலிலே தவறு இருக்கிறது என்று நம்மால் எப்படிக் கூற முடியும்? நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த இந்த புத்தகத்தின் மூலமாக, தேவன் ஒரேதரமாக நிறைவேற்றிய இரட்சிப்பை விசுவாசித்து இப்போது மறுபடியும் பிறக்க வேண்டும். இதனைக் குறித்து இன்னமும் நீங்கள் நிச்சயமில்லாதவர்களாக இருந்தால், தேவன் உங்களுக்கு கொடுத்த கர்த்தருடைய நீதியை நீங்கள் ஆழமாக மீண்டும் ஒருமுறை தியாணம் செய்ய வேண்டும்.