ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (II) - மனிதனின் வீழ்ச்சியும் கர்த்தருடைய நிறைவான இரட்சிப்பும்
Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 2 1. கர்த்தர் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்கள் (ஆதியாகமம் 2:1-3) 2. மனிதர்களுடைய சிந்தனைகள் பனியைப் போன்றவை (ஆதியாகமம் 2:4-6) 3. நம்முடைய மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை நாம் சந்தித்தோம் (ஆதியாகமம் 2:21-25)
அத்தியாயம் 3 1. எத்தனை மக்கள் சத்தியத்தை மறுதலித்தாலும் அந்த சத்தியம் மாறுவதில்லை (ஆதியாகமம் 3:1-4) 2. பாவம் இந்த உலகத்திற்குள் பிரவேசித்தது (ஆதியாகமம் 3:1-6) 3. நம்முடைய விசுவாசத்தை எதன் அடிப்படையில் வைக்க வேண்டும்? (ஆதியாகமம் 3:1-7) 4. கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தின் வல்லமை (ஆதியாகமம் 3:1-7) 5. உண்மையான விசுவாசத்தின் மூலமாக மட்டுமே சாத்தானை நம்மால் மேற்கொள்ள முடியும் (ஆதியாகமம் 3:1-7) 6. உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாக சாத்தானுடைய திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் (ஆதியாகமம் 3:1-7) 7. கர்த்தருடைய ஆதாயத்தை மட்டுமே எப்போதும் நாடுங்கள் (ஆதியாகமம் 3:1-24) 8. உண்மையான நற்செய்தியை விசுவாசிப்பதின் மூலமாக நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டு விட்டன (ஆதியாகமம் 3:8-10) 9. பரிசுத்த ஆவியானவருடைய விருப்பங்களுக்கு ஏற்றபடியாக நாம் வாழ வேண்டும் (ஆதியாகமம் 3:8-17) 10. உண்மையான நல்லது எது, உண்மையான தீமை எது? (ஆதியாகமம் 3:10-24) 11. கர்த்தருடைய அருள் (ஆதியாகமம் 3:13-24) 12. யாருக்காக நாம் வாழவேண்டும்? (ஆதியாகமம் 3:17-21)
ஆதியாகமப் புத்தகத்தில், கர்த்தர் நம்மை எதற்காக படைத்தார் என்ற நோக்கம் அடங்கியிருக்கிறது. கட்டிடக் கலைஞர்கள் ஒரு கட்டிடத்தை வடிவமைக்கும் போது அல்லது ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரையும் போது, அவர்கள் தம்முடைய திட்டத்திற்கான செயலில் இறங்குவதற்கு முன்னால் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து தம்முடைய மனதில் அவற்றை முதலாவதாக உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதனைப் போலவே, கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைப்பதற்கு முன்னால் மனிதகுலத்தின் இரட்சிப்பைக் குறித்து அவருடைய மனதில் இருந்தது, இந்த நோக்கத்தை தன் மனதில் வைத்து ஆதாமையும் ஏவாளையும் அவர் படைத்தார். பரலோகத்தின் ஆளுகையை கர்த்தர் நமக்கு விவரிக்க வேண்டியதிருந்தது, அதனை நம்முடைய மாமிசத்தின் கண்களால் காண முடியாது என்பதால், நம்மால் கண்டு புரிந்து கொள்ளக் கூடிய பூமியின் ஆளுகையை உதாரணமாகக் காட்டுகிறார்.