ஆசரிப்புக்கூடாரம் (Ⅲ) : நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த முன்னோட்டம்
Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை
1. ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப்பட்ட பாவிகளின் இரட்சிப்பு (யாத்திராகமம் 27:9-21) 2. ஆசரிப்புக் கூடார பிரகாரத்தின் தூண்கள் (யாத்திராகமம் 27:9-19) 3. சர்வாங்க தகன பலிபீடம் சீத்தீம் மரத்தினால் உருவாக்கப்பட்டு, வெண்கலத்தால் மூடப் பட்டது (யாத்திராகமம் 38:1-7) 4. தூப பீடமானது கர்த்தர் தன் கிருபையை அருளிச் செய்யும் ஒரு இடமாக இருக்கிறது (யாத்திராகமம் 30:1-10) 5. ஆசரிப்புக் கூடாரத்திலே பயன் படுத்தப் பட்ட வெள்ளிக் கழுந்துகளின் ஆவிக்குரிய பொருள் (யாத்திராகமம் 26:15-30) 6. கிருபாசனம் (யாத்திராகமம் 25:10-22) 7. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கான அலங்காரப் பழங்கள் (யாத்திராகமம் 25:31-40) 8. தலைமை ஆசாரியனுடைய ஆடையிலே மறைந்திருக்கும் ஆவிக்குரிய பொருள் (யாத்திராகமம் 28:1-43) 9. கர்த்தருக்குப் பரிசுத்தம் (யாத்திராகமம் 28:36-43) 10. நியாயவிதி மார்ப்பதக்கம் (யாத்திராகமம் 28:15-30) 11. தலைமை ஆசாரியனை புனிதமாக்கும் பாவ காணிக்கை (யாத்திராகமம் 29:1-14) 12. பாவநிவாரண நாளில் பலிகாணிக்கைச் செலுத்திய தலைமை ஆசாரியன் (லேவியராகமம் 16:1-34) 13. தலைமை ஆசாரியனுடைய ஆடைகளில் பயன் படுத்தப் பட்ட பொருட்கள் (யாத்திராகமம் 28:1-14)
அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் பழைய ஏற்பாட்டிலே எழுதப் பட்டுள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ள வெளிப்பாடுகளில் இருந்து நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை புரிந்து கொள்ளுவார்கள். விசுவாசத்தால் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்டதைக் குறித்தும் அவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். நீங்கள் இன்னமும் இத்தகைய விசுவாசத்தை பெற்றுக் கொண்டிராவிட்டால், அதனை நீங்கள் கூடிய சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ள பாடுபடவேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய இருதயத்தில் தரித்திருக்க வேண்டுமானால் நீங்கள் முதலாவதாக பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய, தேவனால் நிறைவேற்றப் பட்ட கர்த்தருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தை நீங்கள் தரித்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தில் வாசம் செய்வதற்கான ஒரே வழி இதுவேயாகும்.