ஆதியாகமத்தைக் குறித்த பிரசங்கம் (IV) - இப்போது ஒழுங்கின்மையும், வெறுமையும் இருளும் இல்லை (Ⅱ)
Rev. Paul C. Jong
பொருளடக்கம்
முன்னுரை 1. தேவன் இருளை வெளிச்சமாக்கினார் (ஆதியாகமம் 1:1-5) 2. நாம் கர்த்தருடைய செயலை விசுவாசிக்க வேண்டும் (ஆதியாகமம் 2:1-3) 3. நம்முடைய சொந்த தீர்ப்பு சரியா, அல்லது உண்மை சரியா? (ஆதியாகமம் 2:1-25) 4. பனிமூட்டம் ஒரு பொல்லாத சிந்தனை ஆகும் அது மாமிசத்தின் விருப்பத்தை தேடுகிறது (ஆதியாகமம் 2:4-6) 5. கர்த்தரால் நிறுவப் பட்ட சபை (ஆதியாகமம் 2:18-25) 6. “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல” (ஆதியாகமம் 2:18-25) 7. மத நம்பிக்கையில் இருந்து தப்பி, உண்மையான இரட்சிப்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் (ஆதியாகமம் 3:1-10) 8. இரட்சிப்பின் அடையாளம் இயேசுவானவரின் ஞானஸ்நானமாக இருக்கிறது (ஆதியாகமம் 3:1-24) 9. கர்த்தருடைய நீதியை விசுவாசிப்பதின் மூலமாக மட்டுமே பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியும் (ஆதியாகமம் 3:1-24) 10. உன்னதமான கர்த்தரை எதிர்த்து நிற்பவர்கள் நிச்சயமாகவே நரகத்திற்குள் வீசப் படுவார்கள் (ஆதியாகமம் 3:1-24) 11. உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் (ஆதியாகமம் 3:1-24) 12. உண்மையான பாவங்களுக்கான மன்னிப்பு இப்படிப் பட்டதாக இருக்கிறதா? (ஆதியாகமம் 3:1-24)
வல்லமையற்றவர்களாக இருந்தாலும் கூட கர்த்தருடைய வார்த்தையில் வல்லமை இருப்பதால், வார்த்தை நிலத்தில் விழும் போது அது தவறாமல் கனி கொடுக்கிறது. மேலும், கர்த்தருடைய வார்த்தை உயிருடன் இருப்பதால் அது இன்றும் நாளையும், என்றென்றும் மாறாது இருப்பதை நாமே நேரடியாக காண்கிறோம். மனிதர்களின் வார்த்தைகளைப் போலில்லாமல், கர்த்தருடைய வார்த்தையை என்றுமே மாறாது, ஏனெனில் அது உண்மையுள்ளதாக இருக்கிறது. கர்த்தர் பேசும் போது, அவர் தன்னுடைய வார்த்தைகளின் படியாக அப்படியே நிறைவேற்றுகிறார்.
கர்த்தருடைய வார்த்தைக்கு வல்லமை இருப்பதால், “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று கர்த்தர் கூறிய போது அங்கே வெளிச்சம் உண்டாயிற்று, மேலும் “அவர் பெரிய ஜோதியும் சிறிய ஜோதியும் உண்டாகக் கடவது,” என்று கூறிய போது அவர் கூறியபடியே அது நிறைவேறியது.